Jump to content

குறுந்தூர் மலையில் விகாரைகட்ட சாணக்கியனும் சுமந்திரனும் பாரிய தடை – புலம்பும் தேரர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் குறுந்தூர் மலையில் விகாரைகட்டுவதற்கு பாரிய தடையாக இருப்பதாக தேரர் ஒருவர் விசனம் தெரிவிக்கும் காணொளி இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

குறித்த காணொளியில், “தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு  விடுதலை புலிகள் அமைப்பின் கொள்கையினை அடிப்படையாக கொண்டுள்ளது.

வடக்கில் சிங்களவர்கள் இருக்க கூடாது, அவர்களுக்கு உரிமையில்லை என்றே இவர்கள் குறிப்பிடுகிறார்கள். இருப்பினும் துரதிஷ்டவசமாக அனைவரும் நாடாளுமன்றில் அழகாக உரையாற்றுகிறார்கள். அனைவரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும் எனவும் குறிப்பிடுகிறார்கள்.

போராட்டகாரர்களுடன் சுமந்திரன், சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோர் பேச்சுவார்த்தையினை மேற்கொண்டுள்ளார்கள். நாட்டை முன்னேற்றவும், ஊழல் மோசடியை ஒழிக்க வேண்டும் எனவும் மனிதாபிமானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிடுகிறார்கள்.

மனிதாபிமானத்துடன் கருத்துரைக்கும் நபர்கள் வடக்கில் உள்ள தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்க அவதானம் செலுத்தவில்லை.

தெற்கில் உள்ள தொல்பொருள் சின்னங்களினால் மக்கள் பொருளாதார ரீதியில் பயனடைகிறார்கள். வடக்கில் பெரும்பாலான தொல்பொருள் சின்னங்கள் உள்ளன.

600 தொல்பொருள் சின்னங்கள் இதுவரை அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. வடக்கில் தொல்பொருள் சின்னங்கள் அபிவிருத்தி செய்தால் வடக்கு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடையும்.

இதற்கு ஏன் தமிழ் தலைமைகள் என குறிப்பிட்டுக்கொள்கிறவர்கள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை. தெற்கில் ஒரு நாடு - ஒரு சட்டம் தொடர்பில் கருத்துரைக்கிறார்கள், வடக்கில் தனி ஈழம் தொடர்பில் கருத்துரைத்து பிரச்சினைகளை தோற்றுவிக்கிறார்கள்.“ எனக் அந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து இரா.சாணக்கியன் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

‘நாங்கள் இருவரும் வடக்கு, கிழக்கில் சட்டவிரோதமான முறையில் இடம்பெறும் பல்வேறு விடயங்களுக்கு கடுமையான முறையில் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றோம்.

குறிப்பாக குறுந்தூர் மலையில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விகாரை தொடர்பிலும் நடவடிக்கை எடுத்துள்ளோம். எனவேதான் எங்களுக்கு எதிராக சேறு பூசும் நடவடிக்கையினை இந்த தேரர் முன்னெடுத்துள்ளார்.

தற்போது இலங்கையில் அனைத்து இனங்களும் ஒற்றுமையாக ஒருமித்து பயணிக்கும் நிலையில் இவ்வாறான சிலரின் செயற்பாடுகளினால் இன நல்லிணக்கம் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுகின்றது.

இதன்காரணமாகவே இவ்வாறான இனவாதிகளின் செயற்பாடுகளுக்கு நாம் தடைகளை ஏற்படுத்துகின்றோம்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

குறுந்தூர் மலையில் விகாரைகட்ட சாணக்கியனும் சுமந்திரனும் பாரிய தடை – புலம்பும் தேரர் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் : நீதிமன்றத்தின் கட்டளையை  நடைமுறைப் படுத்துவதில் சிக்கல் : பொலிஸார் நகர்தல் பத்திரம் தாக்கல்

கே .குமணன் 

 

முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட குருந்தூர் மலையில் சட்டவிரோதமாக நிறுவப்பட்டுள்ள அனைத்துக் கட்டுமானங்களையும் அகற்றுமாறு முல்லைத்தீவு நீதவான்  நீதிமன்றம் 14 ஆம் திகதி வியாழக்கிழமை அன்று கட்டளை பிறப்பித்திருந்தது.

IMG_4239.jpg

ஆனால் தற்போது குருந்தூர் மலையில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த கட்டுமானங்களை அகற்றுவது   தொடர்பில் சிக்கல் நிலை இருப்பதாகவும் இந்த விவகாரம் தொடர்பில் தென்பகுதியில் கொந்தளிப்பு நிலை தோன்றியுள்ளதாகவும் இந்த கட்டளையை  நடைமுறை படுத்தினால் இனங்களுக்குள்ளே பிணக்குகள் ஏற்படலாம் என தெரிவித்து முல்லைத்தீவு பொலிஸார் 18 ஆம் திகதி திங்கட்கிழமை நீதிமன்றில் நகர்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்த நிலையில் இன்றையதினம் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

IMG_4241.jpg

தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜென்ரல் மற்றும்   பிரதிநிதிகள் நீதிமன்றில் இந்த வழக்குவிசாரணைக்காக  முன்னிலையாகியுள்ளனர்.

IMG_4240.jpg
 

 

https://www.virakesari.lk/article/131792

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா என்னமா நகர்த்துறாங்க நகர்த்தல் பத்திரம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, கிருபன் said:

இந்த விவகாரம் தொடர்பில் தென்பகுதியில் கொந்தளிப்பு நிலை தோன்றியுள்ளதாகவும் இந்த கட்டளையை  நடைமுறை படுத்தினால் இனங்களுக்குள்ளே பிணக்குகள் ஏற்படலாம் என தெரிவித்து முல்லைத்தீவு பொலிஸார் 18 ஆம் திகதி திங்கட்கிழமை நீதிமன்றில் நகர்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்த நிலையில்

தென்பகுதியில் கோத்தா கோ கம, ரணில் கோ கம கொந்தளிப்பை பொலிஸார் திசைதிருப்பி  இனங்களுக்கிடையில் முரண்பாட்டை உருவாக்க முனைகிறார்கள் என்கிற குற்றச்சாட்டை போலீசார் மேல் சுமத்த வேண்டும். ஆதாரமாக போராட்டக்காரர் கூற்று "அரசாங்கமே இன, மத, மொழி முரண்பாட்டை வளர்த்து இனங்களை பிரித்து வைத்ததாக போராட்டக்காரர் கூறியிருக்கிறார்கள். அதோடு அத்தகைய முரண்பாடுகளுக்கு தாம் இனிமேல் இடமளிக்கப்போவதில்லை என்றும் கூறியிருக்கிறார்கள். பொலிஸார் பொய்யான குற்றச்சாட்டை வைப்பதாக அறிவுறுத்த வேண்டும். தமிழர் பிரதேசத்தில் விகாரை கட்டினால் தென்பகுதி கொந்தளிக்குதாம், வடக்கில் தங்கள் நிலத்தில், தங்கள் வழிபாட்டுத் தலத்தை அழித்து, வழிபட விடாமல் தடுத்தால் அவர்கள் கொந்தளிக்க மாட்டார்களா? எது நீதி? இதை, விகாரையை அழித்து தமிழர் ஆலயம் அமைத்தால் தென்பகுதி சும்மா இருக்குமா? தென்பகுதி நீதிமன்றங்கள் என்ன தீர்ப்பு கொடுக்கும்?  அடுத்தமுறை இத்தனைக்கும் விடையோடு வாருங்கள் என்று பொலீசாரை திருப்பி அனுப்பிவிட வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருந்தூர் மலையில் பௌத்த கட்டுமானங்களை அமைக்கவில்லை : புனர்நிர்மாணமே நடைபெறுகிது : தொல்லியல் திணைக்களம் நீதிமன்றில் தெரிவிப்பு

Published by Vishnu on 2022-07-19 17:33:29

 
 

கே .குமணன் 

குருந்தூர் மலையில் புதிய பௌத்த கட்டுமானங்கள் எவையும் அமைக்கப்படவில்லை எனவும் மாறாக தொல்லியல் திணைக்கள சட்டத்துக்குட்பட்டு புராதன சின்னங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளே முன்னெடுக்கப்படுவதாகவும் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலையான சட்டமா அதிபர் திணைகள பிரதி சொலிசிட ஜெனரல் தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே கடந்த 14 ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்று குறுந்தூர்மலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய பௌத்த கட்டுமானங்களை அகற்றுமாறும் அதனை அகற்றியபின்னர் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் தொல்லியல் சின்னங்களை உரியவாறு பாதுகாக்குமாறும் பொலிஸாருக்கு கட்டளை பிறப்பித்திருந்தது. 

இந்த நிலையில் நீதிமன்று வழங்கிய கட்டளையை நடைமுறைபடுத்துவதில் சிக்கல் இருப்பதாகவும் இதனை நடைமுறை படுத்தினால் இனங்களுக்கிடையில் குழப்ப நிலை தோன்றும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்து முல்லைத்தீவு பொலிஸார் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நகர்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து 19 ஆம் திகதி குறித்த வழக்கு மீண்டும் விளக்கத்துக்கு வந்த நிலையில் இந்த வழக்கில் சட்டமா அதிபர் திணைக்கள பிரதி சொலிசிட ஜெனரல் மற்றும் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் உள்ளிட்டவர்கள் மன்றில் முன்னிலையாகியிருந்தனர். 

கௌரவ நீதவான் ரி .சரவணராஜா முன்னிலையில் நடைபெற்றுவரும்  இன்றைய வழக்கு விசாரணையில் தொல்லியல் திணைக்களம் சார்பில் பிரதி சொலிசிட ஜெனரல் ஆஜராகியிருந்தார் . அய்யனார் ஆலய நிர்வாகம் சார்பில் மூத்த சட்டதரணி அன்டன் புனிதநாயகம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட சட்டதரணிகள் சங்கத்தை சேர்ந்த சட்ட தரணிகள் ஆஜராகியிருந்தனர்.  

இதன்போது வாதிட்ட பிரதி சொலிசிட ஜெனரல் குருந்தூர்மலை ஒரு பௌத்த தொல்லியல் இடம் எனவும் அங்கே புதிய கட்டுமானங்கள் எவையும் இடம்பெறவில்லை எனவும் மாறாக தொல்லியல் சட்டங்களுக்கு உட்பட்டு தொல்லியல் சின்னங்களை பராமரித்து பாதுகாக்கும் செயற்பாடே முன்னெடுக்கப்படுவதாகவும் . அய்யனார் ஆலயம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றை தவறாக வழிநடத்தி இந்த தீர்ப்பை பெற்றுள்ளதாகவும் இந்த ஆலய விவகாரம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் இன்னொரு வழக்கு தாக்கல் செய்யப்ட்டுள்ளதாகவும் அந்த வழக்கு தொடர்பில் மன்றின் கவனத்துக்கு கொண்டுவராது அய்யனார் ஆலய  நிர்வாகம் சார்பில் வாதிட்ட சட்ட தரணிகள் நடந்துகொண்டுள்ளதாகவும் மன்றில் தெரிவித்தார். 

அய்யனார் ஆலயம் சார்பில் வாதிட்ட மூத்த சட்டதரணி அன்ரன் புனிதநாயகம் உள்ளிட்ட சட்ட தரணிகள் குருந்தூர்மலையில் அமைக்கப்பட்டுவருவது புதிய கட்டுமானங்கள் தான் எனவும் தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கின்றோம் என்ற போர்வையில் புதிய கட்டுமானங்களை அமைத்துள்ளதாகவும் அதற்க்கான ஆதாரங்களை ஏற்கனவே மன்றின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளதாகவும் அத்தோடு இந்த கட்டுமானங்கள் ஏற்கனவே மன்று  2018 இல் வழங்கிய கட்டளையை மீறி அமைக்கபட்டுள்ளதாகவும் மன்றில் சுட்டிகாட்டியதோடு குருந்தூர் மலைக்கு நேரடியாக சென்று இடம்பெற்றுவரும் புதிய கட்டுமானத்தை பார்க்க முடியும் எனவும் எனவே கௌரவ மன்று மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் இதனை நேரில் சென்று பார்க்க வேண்டும் என கேட்டு கொண்டதற்கு இணங்க வழக்கு விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டு நீதவான் மற்றும் சட்டமா திணைக்கள அதிகாரிகள் சட்டதரணிகள் கட்டுமானம் இடம்பெற்றுவரும் குருந்தூர் மலைக்கு தற்போது கள விஜயம் மேற்கொண்டுள்ளனர்.-

குருந்தூர் மலையில் பௌத்த கட்டுமானங்களை அமைக்கவில்லை : புனர்நிர்மாணமே நடைபெறுகிது : தொல்லியல் திணைக்களம் நீதிமன்றில் தெரிவிப்பு : உண்மையை ஆராய நீதிபதிகள் குருந்தூர் மலைக்கு விஜயம் | Virakesari.lk

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தென் ஆபிரிக்கா அல்ல‌து இந்தியா இந்த‌ இர‌ண்டு அணிக‌ளுக்கு ந‌ல்ல‌ ச‌ர்ந்த‌ப்ப‌ம்   தென் ஆபிரிக்கா கோப்பை தூக்கினால் இர‌ட்டை ம‌கிழ்ச்சி   இந்தியாவை பிடிக்காது புள்ளிக்காக‌ இந்திய‌ அணிய‌ தெரிவு செய்தேன்   அவுஸ்ரேலியா இன்று இந்தியாவிட‌ம் தோக்க‌ கூடும்   மிஸ்சில் ஸ்ராக் இர‌ண்டு விளையாட்டில் விளையாட‌ வில்லை காய‌ம் போல‌............................
    • வணக்கம் சுண்டல், வாங்கோ, மீண்டும் க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி👍
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • "திருந்தாத உள்ளம்"     "திருந்தாத முழுமூடர் இந்த நாட்டில் தீமைபல புரிகின்றார், எனவே அன்பே உருவான பெண்டிரெல்லாம்அடிமை யாகி உறைக் கிணறு செய்கின்றார் கண்ணீராலே!"   எங்கேயோ நான் கேட்ட வார்த்தை இது. என் முன்னைய உயர் வகுப்பு ஆசிரியையை தற்செயலாக நான் லண்டனில் கண்ட பொழுது என் மனதில் அது மீண்டும் எதிரொலித்தது. அவர் பெயர் நகுலா, படித்தவர், பட்டம் பெற்றவர், தமிழ் ஆசிரியை. சைவ சமயத்தில் முழு ஈடுபாடுடன், ஆலய வழிபாடு முதல் விரதங்கள் வரை, ஒவ்வொன்றுக்கும் விளக்கங்கள் கொடுத்து, அவ்வற்றை அந்ததந்த முறைகளின் படி ஒழுகுவதில் அவருக்கு அவளே நிகர்.   நான் சமயத்தில் பெரிய ஈடுபாடு இல்லாவிட்டாலும் என் ஆசிரியரின் ஒழுங்கு முறை கடைப்பிடிப்பதை கண்டு ஆச்சரியப் பட்டுள்ளேன். நான் பல்கலைக்கழகம் போனபின், ஒரு முறை என் நண்பனுடன் கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா ஒன்றுக்கு சென்ற பொழுது, என் ஆசிரியரை அங்கு தம்பதியர்களாக ஒரு பெண் குழந்தையுடன், கிருஸ்தவ மத கோலத்தில் கண்டு திடுக்கிட்டேன். அதை அவரும் உணர்ந்திருக்கவேண்டும். என்றாலும் அதை சமாளித்தபடி. ' என் கணவர் பிரான்சிஸ், மத்திய கிழக்கில் வேலைசெய்கிறார்' என அறிமுகப் படுத்தினார். நான் அதன் பின் என் கொழும்பு நண்பரிடம் விசாரித்ததில், பிரான்சிஸ் என்பவர் பெரிதாகப் படிக்கவில்லை என்றும், ஆனால் வசதியான குடும்பத்தில் கொஞ்சம் துடி துடிப்பான இளைஞராக, மும்மொழியும் தாராளமாக பேசுவதால், பெண்களுடன் இலகுவில் பழகக் கூடியவர் என்றும், அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில், ஆசிரியைக்கும் இவருக்கும் எதிர்பாராதவிதமாக தொடர்பு வந்து, கிறிஸ்தவ முறைப்படி கல்யாணத்தில் முடிந்ததாக கேள்விப்பட்டேன். அதில் எந்த தவறும் இல்லை. தன் நிலைக்கு தக்கதாக, கணவருடன் விட்டுக்கொடுத்து வாழ்வதையிட்டு, நான் உண்மையில், என் ஆசிரியர் பற்றி பெருமை கொண்டேன்!   அதன் பின் பல ஆண்டுகள் கழித்து, மீண்டும் அவரை லண்டனில் இரண்டு வளர்ந்த பிள்ளைகளுடன், ஆசைக்கு ஒரு பெண்ணும் ஆஸ்திக்கு ஒரு பிள்ளையுமாக லண்டன் ஈலிங் துர்க்கை அம்மன் இந்து ஆலயத்தில் நெற்றியில் திருநீறுடன், சந்தனப் பொட்டு பளபளக்க கண்டேன். அப்பொழுது அங்கு கணவரைக் காணவில்லை. பிரான்ஸிஸை நான் ஒரு முறைதான் கண்டாலும், அவர் இலகுவில் மனதில் பதிந்துவிட்டார். கலகலப்பாய் அன்னியோன்னியமாக அந்த கொஞ்ச நேரத்துக்குள் கதைத்தது இன்னும் நினைவில் உண்டு. அவ்வளவு விரைவாக அடுத்தவர்களை கவர்ந்து விடுகிறார். ஆகவே ஆசிரியையை கவர்ந்தது அன்று எனக்கு அதிசயமாக இருக்கவில்லை.   பிள்ளைகள் இருவரும் தங்கள் மற்ற நண்பர்களுடன் ஆங்கில மொழியில் கதைத்த படி, வெளியில் ஒரு இடத்தில் போய் அமர்ந்து விட்டார்கள். ஆசிரியை இன்னும் அதே முன்னைய பார்வையிலேயே, அழகாக, அதே மற்றவர்களை கவரும் சிரிப்புடன் காணப்பட்டார். அவர் என்னை விட ஏழு, எட்டு வயது கூடவென்றாலும், தோற்றத்துக்கு அப்படி இல்லை! ஒருவேளை அவரை முன்பின் தெரியாது என்றால், நானே சிலவேளை பெண் நண்பி அழைப்பு கேட்டிருக்கலாம்?   ஆசிரியை ' நீங்க பிஸியா?' என்று கேட்டார். நான் இல்லை என்றதும், 'நான் இன்று 12 மணிக்குள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி பாயாசம் வெண்பொங்கல் நைவேத்யம் படைக்க வேண்டும். இன்று வெள்ளிக்கு கிழமை தானே , அதுதான்!, கொஞ்சம் நில்லுங்கள், நான் வந்து கதைக்கிறேன்' என்று கூறிவிட்டு, ஆனால் இரு கண்களிலும் கண்ணீர் மெல்ல சுரக்க விடை பெற்று சென்றார்.   நான் உண்மையில் லண்டன் வந்தது இடம் சுற்றி பார்க்கவும், தமிழர்களின் வாழ்வு அங்கு எப்படி என பொதுவாக அறியவே. ஆகவே அவர் ஆலயம் சுற்றி கும்பிட்டு வரும் வரை, நான் ஆலயத்தின் முக்கிய இடங்களை படம் பிடிப்பதுடன், அங்கு வந்திருந்த சில அடியார்களுடன் கதைப்பதிலும் பொழுது போக்கினேன். அப்படி சந்தர்ப்பத்தில் நான் என்னுடன் பல்கலைக்கழகத்தில் ஒன்றாய் படித்த குமரநாயகம், அவரின் குடும்பம், அதே போல யாழ் மத்திய கல்லூரியில் என்னுடன் படித்த வாமதேவ அவரின் குடும்பம் இப்படி சில முன்னைய நண்பர்களையும் காணக் கூடியதாக இருந்தது. அங்கு மாலை கட்டி தொண்டுகள் செய்துகொண்டு இருந்த ஒரு அம்மாவுடன் கதைத்தபொழுது தான் எனக்கு புரிந்தது, தீர்க்க முடியாத துன்பங்கள் தீரவும் மற்றும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகரிக்கவுமே இன்றைய காலை வழிபாடு முக்கியமாக கருதப் படுகிறது என்று. இது மற்றும் ஆசிரியரின் கண்ணீரும், அவர் திருமண உறவில் குழம்பி இருக்கிறார் என மேலோட்டமாக எனக்கு கூறியது!   'என்ன செய்கிறாயடா?, இப்ப எந்த நாடு?. தனியவா வந்தது ? மனைவி பிள்ளைகள்?' ஆசிரியை என்ற அதிகாரம் அப்படியே இருந்தது. அதில் மாற்றம் இல்லை. ஆனால் ... அந்தக் கண்ணீர் ? நான் ' பிரான்சிஸ் சார் எங்கே?, வரவில்லையா மேடம் ?' கதையை ஆரம்பித்தேன். அவர் கண்கள் மீண்டும் மழை பொழியத் தொடங்கியது. தன் கதையை ஒவ்வொன்றாக பிரான்ஸிஸை சந்தித்ததில் இருந்து சொல்லத் தொடங்கினார்.   தான் முதல் ஆசிரியர் உத்தியோகமாக யாழ் மத்திய கல்லூரியில் நகரில் ஆரம்பித்தாலும், ஓர் சில ஆண்டுகளின் பின் 4000 மாணவர்களும் 300 ஆசிரியர்களும் கொண்ட, ஒரு தேசியத் தமிழ்ப் பாடசாலையான. கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றதாகவும், அப்பொழுது தான் தற்காலிகமாக இருந்த வீட்டுக்காரியுடன், சிலவேளை காலிமுக திடலுக்கு அல்லது மவுண்ட் லாவினியா [கல்கிசை] கடற்கரைக்கு போவதாகவும், அப்படியான ஒரு சந்தர்ப்பத்திலேயே பிரான்ஸிஸை சந்தித்ததாக கூறினார்.   'அதைப்பற்றி இனி பேசிப் பிரயோசனம் இல்லை, உண்மையில் காதலோ காமமோ வரவில்லை. பிரான்சிஸ், எதிர்பாராத நேரத்தில் உடலை தீண்டியதால், அந்த வீட்டுக்கார அம்மா இவன் சரி இல்லாதவன் எனக் எடுத்துக்கூறியும், இவன் இனி என் கணவன் என்று - கண்ணகி. சீதை .... இப்படியான சரித்திர பாத்திரங்களை விரும்பியவள், நானும் என்னை அவர்களைப் போல் எண்ணியவள் என்பதால் - பட்டிக்காட்டாய் முடிவெடுத்தேன். இவனை, இவன் உள்ளத்தை என்னால், என் உண்மையான அன்பால், என் இளமை அழகால், கவர்ச்சியால் என்னுடனே அவன் வாழ்வு இனி தொடரத் செய்ய முடியும் என்று எண்ணினேன்' என்று கண்ணை துடைத்துக்கொண்டு கூறி ' கடுமையான சட்டங்கள் பிரான்ஸிஸால் போடப்பட்டு, கிருஸ்தவ முறைப்படி திருமணம் செய்தேன்' என்றார்.   'இலங்கையில் இருக்கும் மட்டும் சிற்சில சம்பவங்களில் வேறு பெண்களுடன் பிரான்சிஸ் தொடர்பு கொண்டாலும், எல்லை மீறினாலும் இரு பக்க பெற்றோர்களின் கவனிப்பால் அது பெரிதாக குடும்ப வாழ்வை பாதிக்கவில்லை, மற்றும் அவரின் தொடர்புகள் சிங்கள, பரங்கி பெண்களாக இருந்ததால், அது, அந்த செய்திகள் எம் சமூகத்துக்குள், பரவவும் இல்லை. நானும் இந்தக் காலத்தில் இவை கொஞ்சம் சகயம் தானே என கண்டும் காணாததாகவும் இருந்துவிட்டேன்' என்று தொடர்ந்தவர்,   'ஆனால் லண்டனுக்கு வந்தபின், தமிழ் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில், சமயம் பரப்புவதிலும் மற்றும் பொதுவாக. ஆண்கள் வேலைக்கு போவதால், பகல் நேரத்தில் பெண்களை தேவாலயத்துக்கு ஏற்றி இறக்கும் தொண்டு வேலையும் செய்யத் தொடங்கினார். இது அவருக்கு மீண்டும் பெண்களுடனான காதல் / காமம் தொடர்புகளுக்கு வழிவகுத்தது' என்று அழுது கொண்டு சொன்னார்.   'அவரை மட்டும் பிழை சொல்ல முடியாது - திருந்தாத உள்ளம் என்று எதுவும் இல்லை மாறாக திருந்தவிடாமல் அழுத்தும் அழுக்கு உள்ளங்களே அதிகம்' என்று தன் கதையை முடித்தார்.   'அவர் பிரிவதும் வேறு பெண்களுடன் வாழ்க்கை நடத்துவதும், நானும் விடாமல் அவரை துரத்தி வீடு கொண்டுவருவதும் ஒரு தொடர்கதையாக போய்விட்டது' பெருமூச்சுக்கு இடையில் தொடர்ந்தார். 'நான் இதற்கிடையில், மனநிலை பாதிப்பு அடைந்து ஒரு மனநல மருத்துவமனையில் நீண்ட பல பரிசோதனைகள் செய்து, இறுதியாக அங்கு மூன்று மாதம் தங்கி சிகிச்சையும் செய்தேன்.   அப்பொழுது, அதை கேள்விப்பட்டு பிரான்சிஸ் என்னைப் பார்க்க அங்கு வந்தார். தான் இனி பிரியமாடேன் என்று சபதமும் செய்தார். ஆனால் பிள்ளைகளுக்கு அவரின் போக்கு அறவே பிடிக்கவில்லை. எனவே மகனுக்கும் பிரான்ஸிஸுக்கும் நடந்த வாக்கு வாதத்தில் அவர் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறினார். மீண்டும் வேதாளம் முருங்கையில் ஏறிய கதைதான்.   யாரோ ஒரு பெண்ணுடன் குடும்ப வாழ்வு நடத்த தொடங்கினார். ஆனால் 2 வருடத்தில் பிரிந்து இருக்க இடம் இல்லாமல் அலைந்தார். அதைக் கேள்விப்பட்ட நான் திருந்துவார் என்று மீண்டும் சந்தர்ப்பம் கொடுத்து, பிள்ளைகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், என்னுடன் சேர்த்துக்கொண்டேன். எவ்வளவு நான் முட்டாள் என்பதை பின்பு தான் அறிந்தேன்' என்று ஆசிரியர் என் முகத்தை பார்க்க முடியாமல், ஆலயத்தின் மூலஸ்தானத்தில் அமர்ந்து இருந்த அம்மனை பார்த்து சொன்னார்.   இதற்கு மேல் அவரின் கதையை நான் கேட்கவில்லை.     "திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்? வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்? இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்! இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்! கண் போன போக்கிலே கால் போகலாமா? கால் போன போக்கிலே மனம் போகலாமா?"   நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • வடக்கு, கிழக்கிலுள்ள இந்து ஆலயங்களில் சைவமக்கள் சுதந்திரமாக வழிபாடு செய்வதை உறுதிப்படுத்துங்கள் - அமைச்சர் விதுரவிடம் நல்லை ஆதீனம் கோரிக்கை Published By: DIGITAL DESK 3 24 JUN, 2024 | 04:01 PM (எம்.நியூட்டன்) நல்லை ஆதீனத்துக்கு வருகை தந்த புத்தசாசன மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்காவிடம் சைவமக்கள் சுதந்திரமாக குருந்தூர்மலை மற்றும் வெடுக்குநாறி சிவன் ஆலயங்களில் வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யவேண்டும் என வேண்டுதல் விடப்பட்டதுடன், திருக்கோணேமலை திருக்கோணேஸ்வரம் ஆலயம் அருகே பாதை இருமருங்கிலும் அமைக்கப்பட்டுள்ள பெட்டிக்கடைகளை அப்புறப்படுத்தி புனித தலத்தின் மேன்மையைப் பேண வழிசெய்ய வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டது. காங்கேசன்துறையில் தல்செவன ஹோட்டல் அமைந்துள்ள பகுதியானது சைவமக்களின் பாவனையில் உள்ள சத்திரம் இருந்த நிலம். அது இதுவரை ஒப்படைக்கப்படவில்லை. அதனை உடன் வழங்க ஏற்பாடு செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.  இவற்றுக்கு பதில் கூறிய அமைச்சர் குருந்தூர்மலை வெடுக்கு நாறி பகுதியில் சுதந்திரமாக வழிபாடு செய்யலாம் என்றும் அப்பகுதி தொல்லியல் திணைகளத்தின் கட்டுப்பாட்டிலுள்ளது என்றும் திருக்கோணேஸ்வர பெட்டிக்கடை அகற்றுவது தொடர்பாக மாற்று ஏற்பாடு விரைவில் செய்யப்படும் என தெரிவித்தார். மேலும், காங்கேசன்துறை தல்செவன ஹோட்டல் காணி விடயமாக நடவடிக்கை எடுப்பதாக  தெரிவித்தார். இன்று திங்கட்கிழமை (24) நடைபெற்ற இந்த  சந்திப்பில் ஆதீன சுவாமிகள், கலாநிதி ஆறு திருமுருகன், ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள், இந்துகலாசார திணக்களப் பணிப்பாளர் அநுருத்தன்  கலந்து கொண்டார்கள். https://www.virakesari.lk/article/186825
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.