Jump to content

44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி - சென்னை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

Picture1.png

சென்னை மாமல்லபுரத்தில், உலகின் 188 நாடுகளிலிருந்து பல்வேறு வீரர்கள் கலந்துகொள்ளும் 44வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை மிக பிரமாண்டமாக நடைபெறவிருக்கிறது. 

இதற்காக தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சதுரங்க விளையாட்டினை கற்பித்து மாநில அளவிலும், தேசிய அளவிலும், உலக அளவிலும் நம் தமிழக மாணவர்கள் வெற்றி பெற்று பதக்கங்களை வெல்லும் நோக்கத்துடன் சதுரங்கம் தொடர்பான பல்வேறு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. 

அதற்கான வரவேற்பு காணொளி தற்பொழுது வெளியாகியுள்ளது.

 

 

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ராசவன்னியன் said:

சென்னை மாமல்லபுரத்தில், உலகின் 188 நாடுகளிலிருந்து பல்வேறு வீரர்கள் கலந்துகொள்ளும் 44வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை மிக பிரமாண்டமாக நடைபெறவிருக்கிறது. 

 என்னதான் தமிழ் நாட்டில் ஆடம்பரமாக தங்களைத் தாங்களே  வெண்மையில் விளம்பரப்படுத்தி சர்வதேச சதுரங்க போட்டி நடத்தினாலும்......

உலக வீரன் ஆனந்த் பிரக்ஞானந்தாவிற்கு உரிய பாராட்டு விழாவும் மதிப்பும் மரியாதையும் கொடுக்கவில்லை என்பது எனது கருத்து.
ஒரு வேளை வீபூதி தடையாக இருந்திருக்குமோ?

Rameshbabu Praggnanandhaa Age, Family, Biography & More » StarsUnfolded

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செஸ் ஒலிம்பியாட்: தென்னிந்தியா சதுரங்கத்தில் முன்னோடியாகத் திகழ்வது ஏன்?

  • விஷ்ணு ஸ்வரூப்
  • பிபிசி தமிழ்
9 மணி நேரங்களுக்கு முன்னர்
 

சதுரங்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

44வது செஸ் ஒலிம்பியாட் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை சென்னையில் நடக்கிறது.

மாமல்லபுரத்தில் 7ம் நூற்றாண்டு குகைக் கோயில்களுக்கும் சிற்பங்களுக்கும் நடுவே வேட்டி கட்டிய ஒரு குதிரையின் உருவமும் தென்படுகிறது.

இவன்தான் 'தம்பி'. 44வது செஸ் ஒலிம்பியாட் சின்னம்.

இந்த சர்வதேச சதுரங்கப் போட்டி சென்னைக்கு அடுத்த மாமல்லபுரத்தில் இன்று ஜூலை 28 தொடங்கி, ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறுகிறது.

 

ஒலிம்பியாட் இணையதளத்தில் இது தொடர்பாக உள்ள சில சுவாரஸ்யமான தகவல்கள்:இந்தியாவில் முதல் முறையாக ஒலிம்பியாட் நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்காகப் பதிவு செய்துகொண்டோர், இதுவரை நடந்த போட்டிகளில் பதிவு செய்துகொண்டவர்களைவிட அதிகம். சென்னை 'இந்திய சதுரங்க விளையாட்டின் புனிதத் தலம்' என்றழைக்கப்படுகிறது.

பல தசாப்தங்களாக சென்னையும் தென்னிந்தியாவும் சதுரங்கத்தில் முன்னோடிகளாக விளங்குகின்றன.

குறிப்பாக, இந்தியா சுதந்திரம் அடைந்த ஆண்டில் இந்திய சதுரங்க சங்கம் இங்கே தொடங்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சதுரங்க அமைப்புகள் இயங்குகின்றன. இது தவிர, பல கிராண்ட்மாஸ்டர்களை உருவாக்கியிருக்கிறது தமிழ்நாடு.

 

செஸ் ஒலிம்பியாட் சுடர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

டெல்லியில் நடந்த செஸ் ஒலிம்பியாட் சுடர் அனுப்பும் நிகழ்வு.

முன்னோடியான தமிழ்நாடு

இந்தியாவைச் சேர்ந்த 74 சதுரங்க கிராண்ட் மாஸ்டர்களில் 41 பேர் தென்னிந்தியர்கள். அவர்களிலும் 26 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

சதுரங்க வல்லுநர்கள் இதற்கு முக்கியமான சில காரணங்களைக் கூறுகிறார்கள்.

1961ல் இந்தியாவின் முதல் சர்வதேச மாஸ்டர் ஆன மானுவல் ஆரோன் தமிழ்நாட்டில் வளர்ந்தவர். ஒரு வகையில் அவர்தான் தமிழ்நாட்டில் சதுரங்க விளையாட்டு வளர்வதற்கான களத்தை அமைத்தவர். இவர் 1972ம் ஆண்டு மைக்கேல் டால் (Michael Tal) சதுரங்க சங்கத்தை நிறுவினார். பல இளம் வீரர்கள் இங்கு பயின்றவர்களே. விஸ்வநாதன் ஆனந்த் உட்பட. சோவியத் ஆதரவுடன் நடத்தப்பட்ட இந்த சங்கம், சோவியத் யூனியன் உடையும் வரை நடந்தது.

இதுபோன்ற சங்கங்கள் தமிழ்நாட்டில் செஸ் விளையாட்டின் வளர்சிக்கான முக்கியமானதொரு விஷயத்தை ஏற்படுத்திக் கொடுத்தன — வீரர்கள் ஒன்றுகூடி, விளையாடி, உரையாடக்கூடிய இடங்கள்.

"மற்ற மாநிலத்தின் சதுரங்க வீரர்களும் இச்சங்கங்களில் விளையாட அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வந்தனர்," என்கிறார் தமிழ்நாட்டில் உருவான கிராண்ட்மாஸ்டர்களில் ஒருவரான ஆர் பி ரமேஷ். இவர் ஒலிம்பியாடில் விளையாடும் ஆண்கள் அணிகளில் ஒன்றுக்கு பயிற்சியாளராகவும் இருக்கிறார்.

தலைநகர் சென்னையில் மட்டுமல்ல, சிவகாசி, மதுரை, பழனி, கோவை போன்ற சிறு நகரங்களிலும் சதுரங்க சங்கங்கள் செயல்பட்டன. இவை போட்டிகளும் நடத்தின.

சில தனிநபர்களின் ஆர்வத்தாலும் முனைப்பாலும் இவை நிகழ்ந்தன. அவர்கள் போட்டிக்கு வந்த வீரர்களுக்கு உணவு தங்குமிடம் மற்றும் பரிசாக நல்ல தொகைகளையும் வழங்கினர், என்கிறார் தமிழ்நாடு சதுரங்கச் சங்கத்தின் துணைத் தலைவர் ஆர் அனந்தராம்.

"1979ம் ஆண்டிலேயே சிவகாசியில் ஆசிய ஜூனியர் சதுரங்கப் போட்டிகளை நடத்தினோம். அதேபோல பழனியில் ஆர் குருசாமி நினைவு சதுரங்கப் போட்டிகள், மதுரையில் மாப்பிள்ளை விநாயகர் சதுரங்கப் போட்டிகள் போன்றவையும் சிறப்பாக நடைபெற்றன," என்கிறார் அனந்தராம்.

இவை, பல இளம் வீரர்கள் உருவாகி மெருகேறி வர பெரிதும் உதவின.

 

தம்பி - செஸ் ஒலிம்பியாட் சின்னம்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆரோனுக்கு அடுத்து இத்தகைய ஆரோக்கிய சூழலிலிருந்து வளர்ந்து வந்தவர்தான் விஸ்வநாதன் ஆனந்த்தும், அவருக்குப் பிறகு வந்த சதுரங்க வீரர்களும். ஆனந்த் மிக இளம் வயதிலேயே சர்வதேச மாஸ்டர் ஆகிவிட்டார். 1988 அவர் கிராண்ட்மாஸ்டர் ஆகி, சர்வதேச தரவரிசையில், முதல் 10ம் இடங்களுக்குள் நுழைந்தார். இன்று அவர் இந்திய சதுரங்கத்தின் சர்வதேச முகம்.

அவரது வெற்றியைத் தொடர்ந்து பல குழந்தைகள் சதுரங்கத்தின் பக்கம் திரும்பினர். அவர்களது பெற்றோருக்கு தங்கள் குழந்தைகளை கிராண்ட்மாஸ்டர்களாகப் பார்ப்பது ஒரு கனவாக மாறியது.

பிபிசிக்கு அளித்த பேட்டியொன்றில், விஸ்வநாதன் ஆனந்த், தான் சதுரங்கத்தில் ஆர்வம் தெரிவித்த்போது, தமது தாயார் உடனடியாகத் தம்மை ஒரு சதுரங்க சங்கத்தில் சேர்த்ததாகக் கூறியிருக்கிறார்.

அதேபொல், 1990களில், இணையதளத்தின் ஆதிக்கத்திற்கு முன்னர், சென்னை அடையாறில் இருந்த 'செஸ் மேட்' என்ற ஒரு கடை, சதுரங்க வீரர்களுக்கான போக்கிடமாக இருந்தது. சதுரங்கம் தொடர்பான புத்தகங்கள், சதுரங்கப் பலகைகள், காய்கள் போன்ற அனத்திற்கும் வீரர்கள் இக்கடையை நாடினர். இதை மானுவல் ஆரோனின் மகன் அர்விந்த் நடத்தினார்.

"அந்நாட்களில், இந்தியர்கள் யாரும் செஸ் தொடர்பான நூல்களை எழுதவில்லை. அக்கடையில் இறக்குமதி செய்யப்பட்ட செஸ் தொடர்பான பல நூல்கள் கிடைத்தன," என்கிறார் ரமேஷ்.

இன்று பல முக்கியமான இளம் வீரர்கள் தென்னிந்தியர்கள். முக்கியமான சர்வதேச வீரரான மேக்னஸ் கார்ல்சனை இருமுறை வீழ்த்திய 16-வயது பிரக்ஞானந்தா, பலராலும் அடுத்த சர்வதேச சதுரங்க முகமாகப் பார்க்கப்படுபவர். இவரைப்போலவே, 19-வயதன பி இனியன், 16-வயதான டி குகேஷ் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 18-வயது நிஹல் சரீன் கேரளாவைச் சேர்ந்தவர்.

இவர்கள் இந்திய சதுரங்கத்தை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்வர் என ஆர்வலகள் கூறுகின்றனர். ஒலிம்பியாடில் இரண்டாவது இந்திய ஆடவர் அணி முழுக்க இந்த இளைய வீரர்களால் ஆனது.

"நாங்கள் நால்வரும் முதன்முறை ஒலிம்பியாடில் விளையாடுகிறோம். நாங்கள் அனைவரும் பதின்வயதினர்," என்கிறார் பிரக்ஞானந்தா.

தற்போது, சதுரங்கத்தின் மெக்கா எனும் தம் பெயருக்கு ஏற்ப, சென்னை 44வது செஸ் ஒலிம்பியாடை நிகழ்த்துகிறது. ரஷ்யாவில் நிகழ இருந்த இப்போட்டி யுக்ரேன் போரின் காரணமாக இடம் மாற்றம் செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோது சென்னை அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டது.

தமிழ்நாடு அரசு இப்போட்டியை நிகழ்த்த 92கோடி ரூபாய் செலவிடுகிறது.

இவ்வனைத்தையும் 'தம்பி' ஒரு புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருக்கிறான்.

https://www.bbc.com/tamil/sport-62329466

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காணொளியை நேரமிருந்தால் முழுவதும் பாருங்கள்..😌

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செஸ் ஒலிம்பியாட்: "தமிழ்நாட்டிற்கு சதுரங்கத்துடன் வலுவான கலாசார தொடர்பு உள்ளது" - நரேந்திர மோதி

28 ஜூலை 2022
புதுப்பிக்கப்பட்டது 29 ஜூலை 2022
 

செஸ் ஒலிம்பியாட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தமிழ்நாட்டில் நடைபெறும் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் நிகழ்வுக்கான தொடக்க விழா நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

தொடக்க விழாவில் கலந்து கொள்ள இந்திய பிரதமர் மோதி சென்னைக்கு வருகை தந்துள்ளார்.

தொடக்க விழா மேடையில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், மத்திய அமைச்சர் எல். முருகன் ஆகியோர் அமர்ந்துள்ளனர்.

நிகழ்ச்சி தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.

 

வரவேற்புரைக்கு பிறகு நடிகர் கமல் ஹாசனின் குரலில் தமிழ் வரலாறு குறித்த 3டி நிகழ்ச்சி அரங்கேறியது.

முன்னதாக இந்த தொடக்க விழாவில் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்காக இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்த பாடல் ஒலிக்கப்பட்டது.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் இந்திய பிரதமர் மோதி ஆகியோரின் மணல் ஓவியங்களை வரைந்தார் சர்வம் பட்டேல். பின் போட்டியில் பங்கு பெறும் நாடுகளின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. அதன்பின் பரதநாட்டியம் உட்பட இந்தியாவின் 8 பாரம்பரிய நடன நிகழ்ச்சி அரங்கேறியது.

லிடியன் நாதஸ்வரத்தின் இசை நிகழ்ச்சியும் தொடக்க விழாவில் இடம் பெற்றது. லிடியன் நாதஸ்வரம் கண்ணைக் கட்டி கொண்டு பியானோ வாசித்ததை கண்ட பார்வையாளர்கள் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தினர்.

விஸ்வநாதன் ஆனந்த், நடிகர் ரஜினிகாந்த், திமுக எம்.பி. கனிமொழி, மூத்த பத்திரிகையாளர் என். ராம், நடிகர் கார்த்தி, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

'நான்கே மாதங்களில் நடந்த ஏற்பாடுகள்'

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் 4 மாதங்களில் சர்வதேச போட்டிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருப்பது குறித்து பெருமை கொள்வதாக தெரிவித்தார்.

மேலும் அவர், "இதற்கு முன் செஸ் ஒலிம்பியாட் இந்தியாவில் நடைபெற்றதில்லை. முதன்முறையாக தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கான வாய்ப்பு தமிழ்நாட்டிற்கு கிடைத்தது குறித்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

 

ஸ்டாலின்

பிரதமர் மோதிக்கு இது இந்தியாவின் பெருமைக்குரிய தருணம் என்று தெரியும் அதனால்தான் அவரே இதை தொடங்கி வைக்க இங்கு வந்துள்ளார்.

தொடக்க விழாவிற்கு கொரோனா காரணமாக நேரில் சென்று அவரை அழைக்க முடியவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த என்னை நலம் விசாரிக்க பிரதமர் தொடர்பு கொண்டார். அவரிடம் எனது நிலையை விளக்கினேன். நீங்கள் ஓய்வு எடுத்து கொள்ளுங்கள் நான் நிச்சயம் கலந்து கொள்வேன் என்று மோதி தெரிவித்தார்.

இது இந்தியாவிற்கே பெருமை தரக்கூடிய விழா என்று மோதி தெரிவித்தார்.

இது முதலில் ரஷ்யாவில் தான் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பின் கொரோனா மற்றும் பிற சூழலால் அங்கு இந்த போட்டி நடைபெறவில்லை.

இந்தியாவில் நடைபெறும் வாய்ப்பு வருமானால் தமிழ்நாட்டில் அதை நடத்த வேண்டும் என அமைச்சர்களுக்கு நான் உத்தரவிட்டேன். கடந்த மார்ச் மாதம் இதற்கான முறையான அறிவிப்பை வெளியிட்டேன்.

இந்த ஏற்பாடுகளை கவனிக்க 18 துணை குழுக்களை தமிழ்நாடு உருவாக்கியது.

4 மாதங்களில் பன்னாட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு சிறப்பாக செய்திருக்கிறது என்பதை நான் பெருமையுடன் தெரிவிக்கிறேன்.

இதன் மூலம் விளையாட்டுத் துறை மட்டுமல்ல சுற்றுலாத் துறையும் தொழில் துறையும் பெரும் அளவில் உயரும்.

இந்தியாவில் உள்ள 73 கிராண்ட மாஸ்டர்களில் 26 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.

தமிழ்நாடு செஸ் விளையாட்டில் சிறந்து விளங்குகிறது என்பதில் எனக்கு பெருமை.

பல்லாயிரம் ஆண்டு வரலாறு பெற்ற கீழடியில் இரு வகையான ஆட்டக் காய்கள் கிடைத்துள்ளன.

அது சதுரங்கம் போன்ற விளையாட்டுகளில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

போர் மரபிற்கும் தமிழர்களுக்கும் தொடர்பு உண்டு என்று கீழடி நமக்கு சொல்கிறது." என்று பேசினார்.

வரலாற்று தொடர்பு

பின்னர் பேசிய பிரதமர் மோதி, "தமிழகத்திற்கு சதுரங்கத்துடன் வலுவான வரலாற்று தொடர்பு உள்ளது. இந்த ஒலிம்பியாட் நடைபெறுவதற்கு தமிழ்நாடு ஒரு சிறந்த தேர்வு" என்று தெரிவித்தார்.

மேலும் அவர், "சதுரங்கத்தின் மிகுந்த மரியாதைக்குரிய போட்டி இந்தியாவிற்கு வந்துள்ளது. இந்தியா 75ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை அனுசரிக்கும் இந்த வருடம் இந்த போட்டி இந்தியாவிற்கு வந்துள்ளது.

குறைந்த காலத்தில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஒலிம்பியாட் போட்டியில் பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. இந்த போட்டியில் அதிக அளவிலான அணிகள் பங்கு பெறுகின்றன.

தமிழ்நாட்டில் பல அழகான சிற்பங்கள் கொண்ட கோயில்கள் உள்ளன. அதில் பல விளையாட்டை குறிக்கும் சிற்பங்களும் உள்ளன. தமிழ்நாட்டிற்கு சதுரங்கத்துடன் வலுவான கலாசார தொடர்பு உள்ளது." என்று பேசினார்.

தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட்

 

thambi

தமிழ்நாட்டில் நடைபெறும் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் நிகழ்வு, அதிக எண்ணிக்கையிலான நாடுகள் மற்றும் அணிகள் பங்கேற்கும் செஸ் ஒலிம்பியாட் என்கிற சிறப்பை நிகழ்த்த உள்ளது.

பொதுவாக இந்த நிகழ்ச்சியின் திட்டங்கள் மற்றும் ஏற்பாடுகள் செய்ய ஒவ்வொரு நாட்டுக்கும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கிடைக்கும்.

ஆனால் கடைசி நேரத்தில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டுக்கு பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு நான்கு மாதங்களில் அனைத்தையும் தயார் செய்துள்ளது.

இந்நிலையில் இந்த நிகழ்வில் அதிக எண்ணிக்கையிலான நாடுகள் மற்றும் அணிகள் பங்கேற்கும் சாதனையை நிகழ்த்த இருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

https://www.bbc.com/tamil/india-62336506

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று… நடந்த போட்டிகளில் எல்லாம்,
தமிழக வீரர்கள் வெற்றி பெற்றதாக, ஒரு செய்திக் குறிப்பு பார்த்தேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people, people standing, chess, indoor and text that says 'PI IGRO H H'

 
இதை எழுதும்போதே "உடலெல்லாம் சிலிர்க்கிறது"...
 
பல வருடங்களாக செஸ் சதுரங்க விளையாட்டில் ஆதிக்கம் செலுத்தி நம் இந்தியாவை GRAND MASTER 2013 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் நம் தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்தை தோற்கடித்து நம் இந்தியாவின்‌ ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தார் நார்வே நாட்டைச் சேர்ந்த "மேக்னஸ் கார்ல்சன்". பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பின் உலகத் தரவரிசையில் முதலிடம் பிடித்த இவர் நிகழ்த்திய சாதனைகள் ஏராளம். உலக சதுரங்க மாஸ்டர்களில் மிகப்பிரபலமான இவர் ஐந்து முறை உலகச் சதுரங்க வீரர் என்ற பட்டத்தையும், மூன்றுமுறை அதிவேக சதுரங்க வீரர் என்ற பட்டத்தையும் ஐந்துமுறை உலக பிளிட் சதுரங்க வீரராகவும் வலம் வந்தவர்.!
 
இவ்வளவு பெரிய GRAND MASTER, மறுபடியும் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் நம் தமிழக மாணவனால் தோற்கடிக்கப்படுவார் என்று யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டோம். அவ்வளவு ஏன் "மேக்னஸ் கார்ல்சன்" கூட அந்த போட்டிக்கு முன்புவரை நினைத்திருக்கமாட்டார். அதுவும் 2022 பிப்ரவரி 22, 2022 மே 20 ஆகிய இரு தினங்களில் நடைபெற்ற போட்டியில் இரண்டுமுறை மேக்னஸ் கார்ல்சனை வென்ற முதல் இளம் வயதுகொண்ட வீரன் என்ற பெருமையைப் பெற்றான் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்யானந்தா. இவனது இந்த வெற்றி உலக நாடுகளிடம் இந்தியாவின் ஆதிக்க கொடி மறுபடியும் பறக்க காரணமாகிறது...
 
சதுரங்கத்தை உலகிற்கே கற்றுத்தந்தவர்கள் நாங்கள்தான் என்று கர்வத்தோடு மார்தட்டிச் சொல்வதற்குக் காரணமாகியுள்ளான் பிரக்யானந்தா. இது ஒன்றும் அவ்வளவு எளிதாகக் கடந்து செல்லும் அளவுக்கு அவ்வளவு எளிதான காரியமில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.". ஏனெனில் அத்தகு மகத்தான சாதனைக்குச் சொந்தக்காரன் பிரக்யானந்தா. இவனை நமது மத்திய, மாநில அரசுகள் எப்படி கையாள்கின்றன, எந்த அளவுக்கு நிதி உதவிகள், பாராட்டுகள் செய்துள்ளன என்பதை நான் அறியேன். எனினும் இவன் கொண்டாடப் படவேண்டியவன் என்பதில் யாதொரு மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.!
 
சதுர் + அங்கம் = சதுரங்கம் நான்கு பக்கங்களைக் கொண்ட ஒரு பலகையில் விளையாடப்படும் இந்த விளையாட்டானது போரை அடிப்படையாகக்கொண்ட ஒரு போர் விளையாட்டாகும்.! தென் தமிழகத்தை எடுத்துக்கொண்டால் "வல் என் கிளவி தொழிற்பெயர் இயற்றே" என்ற தொல்காப்பிய வரிகளில் வரும் "வல்" என்ற சொல்லானது இன்றைய சதுரங்கத்தின் சங்ககாலப் பெயராகும். மேலும் "கவை மனத்து இருத்தும் வல்லு வனப்பு அழிய" என்ற அகநானூற்றின் வரிகள் சங்ககாலத்தில் இவ்விளையாட்டு நிலைபெற்றிருந்ததைத் தெளிவாக உணர்த்துகிறது. மேலும் "வல்லுப் பலகை" என்ற பெயர் கலித்தொகையில் வருவதால் பலகை போன்ற அமைப்பு செய்யப்பட்டு அதன்மீது இவ்விளையாட்டை விளையாடியுள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது..!
 
SPAIN நாட்டைச் சேர்ந்த “லூயிஸ் ராமிரேஸ்” என்பவர் (CHESS) சதுரங்கம் எப்படி விளையாட வேண்டும் என்று “Repetition of Love and the Art of Playing Chess” என்ற நூலை எழுதியபோது இந்த விளையாட்டு ஆரம்பித்த இடம் பாரததேசம் என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை 2019 ஆம் ஆண்டு “குஜராத்தின் லோதல்” பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சதுரங்கப்பலகை சிந்துசமவெளி நாகரிக காலத்தை சேர்ந்து என்று அறிஞர்கள் குறிப்பிடுவதையும், கீழடியில் கிடைத்த சதுரங்க காய்களைக் கொண்டும் இந்த விளையாட்டு குறைந்தபட்சம் இன்றிலிருந்து 4500 ஆண்டுகளுக்கு முன்பே முக்கியமாக நம் தமிழ் மண்ணில் விளையாடப்பட்டது என்பதை உறுதி செய்யலாம்.!
 
சங்கப்புலவன் குன்றம்பூதனார் எழுதிய "வல்லுப்போர் வல்லாய்” என்ற பரிபாடல் வரிகள் முருகனை வல்லாட்டத்தில் சிறந்தவனே என்று புகழ்கிறது. "வல்லு" என்பது போரை மையமாகக்கொண்டு சங்ககாலத்தில் விளையாடப்பட்ட ஒரு விளையாட்டு என்பது இதன்மூலம் உறுதியாகிறது. இந்த வல்லு விளையாட்டுதான் இன்று சதுரங்கம் என்ற பெயரில் உலகம் முழுவதும் விளையாடப்படுகிறது. இதுவே கீழடியிலும், சிந்துசமவெளி நாகரிக காலங்களிலும் விளையாடப்பட்டு இவ்விளையாட்டின் பிறப்பிடமாக "பாரதமே" முன் நிற்கிறது.
உலகமே உற்றுநோக்கும் விதமாக 44 ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நேற்று நேரு மைதானத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கப்பட்டது. இந்நன்னாளில் உலகம் போற்றும் இவ்விளையாட்டை உலகிற்கு அறிமுகம் செய்தது "பாரதவாசிகளாகிய" நாம்தான் என்பதில் பெருமை கொள்வோம்.!
 
Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செஸ் ஒலிம்பியாட் பி பிரிவில் பிரக்ஞானந்தா வெற்றி - "இன்னும் பெரிசா செய்வோம்": உதயநிதி

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

செஸ் ஒலிம்பியாட்

பட மூலாதாரம்,@FIDE_CHESS

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியின் நிறைவு விழாவை மிகப் பெரிய அளவில் செய்யப் போகிறோம் என்று கூறியிருக்கிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மகனும் திமுக எம்எல்ஏவுமான உதயநிதி.

இந்த நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் இரண்டாம் சுற்று பி பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றுள்ளார். எஸ்டோனியா வீரரை எதிர்கொண்ட ஆட்டத்தில் கறுப்பு நிற காய்களுடன் 41ஆவது காய் நகர்த்தலில் அவர் வென்றார்.

மகளிர் ஏ பிரிவில் அர்ஜென்டீனா வீராங்கனையை எதிர்கொண்ட இந்தியாவின் தான்யா, வெள்ளை காய்களுடன் 31ஆவது நகர்த்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

முன்னதாக, நாற்பத்தி நான்காவது உலகளாவிய செஸ் ஒலிம்பியாட் ஜூலை 28 அன்று ஒரு பெரிய தொடக்க விழாவுடன் தொடங்கியது.

 

இந்த விழாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோதி துவக்கி வைத்தார்.

இதையொட்டி சென்னை ஜவாஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற கோலாகலமான தொடக்க விழாவில் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், நடிகர் ரஜினிகாந்த் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவின் சிறப்பம்சமாக இசைக்கலைஞர்கள் மற்றும் தாள கலைஞர்களின் சிறப்பான நிகழ்ச்சிகள் இருந்தன.தமிழ்நாட்டில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த முடிவெடுக்கப்பட்டதில் இருந்தே அதில் தீவிர அக்கறை காட்டி வருகிறார் உதயநிதி. சமீபத்தில், தொடக்க விழாவின் கலை அம்ச ஏற்பாடுகளை செய்திருந்த கலைக் குழுவினருக்கு உதயநிதி நன்றி தெரிவித்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இந்த விளையாட்டை விளம்பரப்படுத்தும் விதமாக சென்னை நகரம் முழுவதும் டிஜிட்டல் ஃபிளக்ஸ் பேனர்கள், தொலைக்காட்சி, வானொலி விளம்பரங்கள், நாளிதழ் விளம்பரங்கள் என ஏற்பாடுகள் களைகட்டின.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

இந்த நிலையில், பிரமாண்டமான முறையில் நடந்து முடிந்த துவக்க விழா தொடர்பான மகிழ்ச்சியை அதில் பங்கெடுத்த கலைஞர்கள், தொகுப்பாளர்கள் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக, கலை நிகழ்ச்சியை திரைப்பட இயக்குநரும் எழுத்தாளருமான விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார்.

அவருக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவிக்க, அதற்கு பதில் கூறும் விதமாக, நினைவில் கொள்ள ஓர் நிகழ்ச்சி. நிகழ்ச்சி முடிந்ததுமே என்னை நேரிலும் பிறகு போனிலும் அழைத்து வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்துக்கு நன்றி. அந்த நிகழ்வில் நீங்கள் பங்கேற்றது, எனது நாளை சிறப்பித்தது என்று விக்னேஷ் சிவன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 3

Twitter பதிவின் முடிவு, 3

Twitter பதிவை கடந்து செல்ல, 4

Twitter பதிவின் முடிவு, 4

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சின்னத்திரை புகழ் பாவனா பாலகிருஷ்ணன், ஒட்டுமொத்த குழுவின் இடைவிடாத உழைப்பால் இந்த அளவுக்கு நிகழ்ச்சி நடந்தேறியதாக தமது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.

அவருக்கு நன்றி கூறும் விதமாக, எல்லா சுமையையும் தோளில் போட்டுக் கொண்டு முழு நிகழ்ச்சியையும் அழகாக உங்களுடைய நம்பிக்கை மிக்க குரல் வளத்தால் கொண்டு சென்றீர்கள். உங்களுடைய தொகுப்பாற்றும் திறனே உங்களுடைய ஆற்றலைப் பேசும் என்று விக்னேஷ் சிவன் கூறியிருந்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 5

Twitter பதிவின் முடிவு, 5

ஆனால், இவர்களின் ட்வீட் உரையாடல் இத்துடன் நிற்கவில்லை.

உதயநிதி ஸ்டாலின் பதிவிட்ட ட்வீட்டில், நேற்றைய #ChennaiChess2022 தொடக்க நிகழ்வின் பின்னணியில் இருந்த படைப்பாற்றல் குழுவிற்கு நன்றி என்று கூறி தமிழ்நாடு முதல்வர், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், விக்னேஷ் சிவன், அதிதி சங்கர் மற்றும் குழுவுக்கு நன்றி என குறிப்பிட்டிருந்தார். இத்துடன் நிறைவு விழா இதை விட மிகப்பெரியதாகவும் சிறப்பாகவும் இருக்கப் போகிறது. விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்கள் என்று உதயநிதி கூறியுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 6

Twitter பதிவின் முடிவு, 6

முன்னதாக, செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்கமாக ஒரு இசை காணொளி வெளியிடப்பட்டது. 'வணக்கம் செஸ் சென்னை' என்று தலைப்பிடப்பட்டுள்ள அந்த காணொளியை விக்னேஷ் சிவன் இயக்கினார். இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து அதில் பாடலையும் அவரே பாடியிருந்தார். தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை வலுவாக விளக்கும் வகையில் அந்த காணொளி இருந்ததாக நெட்டிசன்கள் பாராட்டை வெளிப்படுத்தினர்.

 

ஒலிம்பியாட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

செஸ் ஒலிம்பியாட் போட்டியை முதல் முறையாக இணையத்தில் நேரலையாக காண ஏற்பாடு செய்திருக்கிறது நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழு.

நாற்பத்தி நான்காவது உலகளாவிய செஸ் ஒலிம்பியாட், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள பூஞ்சேரி கிராமத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறுகிறது. FIDE செஸ் ஒலிம்பியாட்டின் இந்த பதிப்பில் திறந்தவெளி மற்றும் மகளிர் பிரிவுகளில் பல்வேறு குழுக்கள் போட்டியிடுகின்றன.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

இந்தியா, ஸ்பெயின், போலாந்து, அஜர்பைஜான், நெதர்லாந்து, யுக்ரேன், ஜெர்மனி, இங்கிலாந்து, இந்தியா2, ஆர்மேனியா, இரான், உஸ்பெகிஸ்தான், இந்தியா-3, குரோஷியா ஆகிய அணிகள் முதல் சுற்றில் 4-0 என்ற கணக்கில் சுத்தமாக வெற்றி பெற்றன.

Twitter பதிவை கடந்து செல்ல, 7

Twitter பதிவின் முடிவு, 7

முதல் சுற்றில், முதல்நிலை அமெரிக்க மற்றும் மூன்றாம் நிலை நார்வே அணிகள் 3.5-0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்றன. இதைத்தொடர்ந்து சனிக்கிழமை இரண்டாம் சுற்று போட்டிகள் நடைபெற்றன.FIDE செஸ் ஒலிம்பியாட் - பார்ப்பது எப்படி?44வது FIDE செஸ் ஒலிம்பியாட் மற்றும் FIDE மகளிர் செஸ் ஒலிம்பியாட் ஆகியவற்றை Chess.com/TV என்ற இணைய சேனலில் நேரலையில் பார்க்கலாம் அல்லது YouTube.com/ChesscomLive இல் இடம்பெற்ற நேரலை பக்கத்தில் பார்க்கலாம்.

https://www.bbc.com/tamil/sport-62362809

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நயன்தாரா திருமணத்தின் போது.... 👩‍❤️‍👨
பின்னாலை  கமெராவை தூக்கிக் கொண்டு, 🎥
படுக்கை அறை வரை  ஓடிய  பத்திரிகையாளர்கள்... 😂
இந்த சதுரங்கப் போட்டிக்கு... அவ்வளவு முக்கியத்துவம் 
கொடுக்கவில்லைப்  போல் தெரிகிறது. 🤣

tenor.gif?itemid=22687268&fbclid=IwAR02pHRG-_YXN5flPMFgyyNrbSi6prYvuMsx9ZcNwL8EoRqaKX9JJNDeLsI

Edited by தமிழ் சிறி
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்த "சென்னை ஒலிம்பியாட் 2022" நிகழ்ச்சிக்கு தமிழக அரசின் சார்பில் அனைத்து வீரர்கள், விருந்தினர்களுக்கு வரவேற்பு பொதி ஒன்று பரிசாக கொடுக்கப்பட்டது.

அதில் தமிழ் நாட்டின் சிறப்பு பற்றிய வண்ணப் படங்களுடனான புத்தகம் மிக அருமை.

 

 

காணொளியில் 03:26 வினாடியிலிருந்து பாருங்கள் புரியும். 👌

  • Like 1
Link to comment
Share on other sites

18 minutes ago, ராசவன்னியன் said:

அதில் தமிழ் நாட்டின் சிறப்பு பற்றிய வண்ணப் படங்களுடனான புத்தகம் மிக அருமை.

 

காணொளியில் 03:26 வினாடியிலிருந்து பாருங்கள் புரியும். 👌

இந்தப் புத்தகத்தை எங்கவது வாங்க முடியுமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, இணையவன் said:

இந்தப் புத்தகத்தை எங்கவது வாங்க முடியுமா ?

இணையத்தில் தேடினேன், கிடைக்கவில்லை.

சென்னையில் தமிழ் நாடு சுற்றுலா துறை அலுவலகத்தில் கிடைக்கலாம். முன்பு எத்திராஜ் கல்லூரி(ஸ்பென்சர்ஸ் பின்புறம்) அருகே இதன் அலுவலகத்தை பார்த்துள்ளேன்.

புத்தகத்தின் முகப்பு அட்டைப்படம் இப்படித்தான் இருக்கும்.

b91cb06a_21269_P_4_mr.jpg?auto=format,co

"சென்னை ஒலிம்பியாட் 2022" துவக்க விழாவில், இரு தேசிய கீதங்கள் பாடப்பட்டன.💐

பாடியதில், ஒவ்வொரு நாட்டின் தலைவர்களும், தங்கள் நாட்டின் தேசிய கீதத்தை மெல்லிதாக பாடுவதை ரசிக்கலாம்.  🤗👌

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழ்நாடு சுற்றுலா துறை இணைய முகவரி கீழே..!

அருமையான படங்கள், விவரங்கள் இருக்கின்றன.

https://www.tamilnadutourism.tn.gov.in/

https://www.tamilnadutourism.tn.gov.in/img/ebrochure/Chennai-Ebrochure.pdf

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரிசுப்பொதியினுள் என்னென்ன வழங்கப்பட்டன?

"தமிழ் நாட்டின் செல்வங்கள்" புத்தகமும் காண்பிக்கப்பட்டுள்ளது.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டி 2022 நிறைவு விழா காணொளி..நல்ல முறையில் நிறைவுற்றது.

ஈ.பி.எஸ் முதல்வராக இருந்திருந்தால், நிச்சயம் இவ்விழா சென்னையில் நடந்திருக்க வாய்ப்பே இல்லை.

 

 

தமிழக முதல்வருக்கு பாராட்டுகள்..! 💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Gold King Chess Facing Silver King Stock Photo 793524667 | Shutterstock

👉   https://www.facebook.com/100014972132021/videos/1132711160661602  👈

சதுரங்க விளையாட்டில் உள்ள ராஜா தலையில்... சிலுவை, இருப்பதற்கு, 
தமிழ்நாட்டு  பா. ஜ. க. மூத்த  நிர்வாகி எதிர்ப்பு. 😂 

(ஒறிஜினல் சங்கி.)  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

Gold King Chess Facing Silver King Stock Photo 793524667 | Shutterstock

👉   https://www.facebook.com/100014972132021/videos/1132711160661602  👈

சதுரங்க விளையாட்டில் உள்ள ராஜா தலையில்... சிலுவை, இருப்பதற்கு, 
தமிழ்நாட்டு  பா. ஜ. க. மூத்த  நிர்வாகி எதிர்ப்பு. 😂 

(ஒறிஜினல் சங்கி.)  🤣

 

எத்தனுக்கு எத்தன்.. 👇

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ராசவன்னியன் said:

ஈ.பி.எஸ் முதல்வராக இருந்திருந்தால், நிச்சயம் இவ்விழா சென்னையில் நடந்திருக்க வாய்ப்பே இல்லை.

இப்படியான சர்வதேச போட்டிகள் நடைபெறும் இடங்களையெல்லாம் பல வருடங்களுக்கு முதலே முடிவு செய்திருப்பார்கள் இல்லையா?

முன்னெடுத்த முதல்வருக்கு பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரை பதவி நீக்கியதால் அங்கும் கட்சிக்குள் குழப்பம் உண்டு.
    • இதைத் தான் நானும் யோசித்தேன். அவர்கள் பார்வையில் எல்லோரும் இந்தியர்களே. இந்தியருக்கு தானே அடி விழுகுது என்று அசட்டையாக இருக்காதீங்க.
    • ஓரம்போ, ஓரம்போ, பிரேக் இல்லாத பஸ்சு வருது…. ஓரம்போ, ஓரம்போ, பிரேக் இல்லாத பஸ்சு வருது….🤣 ————————— கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)ஆம்   2. சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)இல்லை 3. வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி)இல்லை 4. டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி)ஆம்  5. ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி)ஆம்  6. செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)இல்லை  7. சுமந்திரன்( தமிழரசு கட்சி)ஆம்  8. அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி)இல்லை  9. முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) இல்லை 10. ஐங்கரநேசன்( சுயேட்சை குழு இல்லை   11. நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி)இல்லை 12. சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 13. சரவணபவன் ( சுயேட்சை குழு இல்லை   14. அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) ஆம் 15. தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)ஆம்   16. எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி)இல்லை 17. சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)இல்லை   18. சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு இல்லை  19. ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)ஆம் 20. மனோ கணேசன் (கொழும்பு மாவட்டம்)ஆம் 21. ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு)ஆம்   22. விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி)இல்லை   23. சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு,  தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி) ஆம் 24. சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு)ஆம் 25. செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி)ஆம்   26. குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) ஆம்.    வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்)   27. யாழ் மாவட்டம் - ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 1 28. வன்னி - ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 1   29. மட்டக்களப்பு -தமிழரசு கட்சி2  30. திருமலை - ஐக்கிய மக்கள் சக்தி 1   31. அம்பாறை தேசிய மக்கள் சக்தி 3  32. நுவரெலியா தேசிய மக்கள் சக்தி 3 33. அம்பாந்தோட்டை தேசிய மக்கள் சக்தி 5 34. கொழும்பு தேசிய மக்கள் சக்தி 12   35. திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 2   36. அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 0   37. யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) சிறிதரன்   வினா 38 - 48 வரை  பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்).    38. மானிப்பாய் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி   39. உடுப்பிட்டி தமிழரசு கட்சி   40. ஊர்காவற்றுறை ஈழமக்கள் ஜனநாயக கட்சி   41. கிளிநொச்சி தமிழரசு கட்சி 42. மன்னர் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி   43. முல்லைத்தீவு தமிழரசு கட்சி 44. வவுனியா தமிழரசு கட்சி   45. மட்டக்களப்பு தமிழரசு கட்சி 46. பட்டிருப்பு தமிழரசு கட்சி 47. திருகோணமலை தமிழரசு கட்சி 48. அம்பாறை தேசிய மக்கள் சக்தி 49. எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) தேசிய மக்கள் சக்தி 50. எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி   51  - 52 வரை  வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51. ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 3 52. தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 5 53 - 60 வரை  பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்?    53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள்  1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும்.    53. தமிழ் தேசிய மக்கள் முன்னணி 1 54. தமிழரசு கட்சி 6 55. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 2 56. தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 0 57. இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 1   58. ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 61   59. தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 131   60. புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 13    பலர் தேர்தல் தொகுதி, தேர்தல் மாவட்டம் இடையான வேறுபாட்டை உணரவில்லை என நினைக்கிறேன். பியதாசவுக்கு விழும் வாக்குகள் அனைத்தும் எமது வெற்றியை மேலும் உறுதிசெய்யும் என்ற சுமந்திரனின் அரசியல் கோட்பாட்டின் அடிப்படையில் நானும் அமைதி காக்கிறேன்🤣. 
    • உயிர் போற நேரத்திலை கொள்கை ஆவது, Hair ஆவது. 😂 ஆபத்துக்கு... பாவம் இல்லை என்று ஸ்ரீலங்கன் என்று சொல்லி தப்பிக்க வேண்டியதுதான்.  🤣
    • இது இவர்களின் பிறவி குணம்   தேர்தல் நெருங்கும். நேரம்   இப்படி அடிபட்டு  பழையபடி   தனத்தனி  கட்சிகளாக.   பிரிந்து   தேர்தலில் போட்டு போடுவார்கள்    ஒற்றுமையாக  ஒன்றாக சேர்ந்து  இருந்தால்    எப்படி தேர்தலை சந்திக்க முடியும்??     ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லை என்றால்     இரண்டு பிரதான கட்சிகள் கூட கூட்டணி வைக்கும்    உலகில் எங்கும் இப்படி நடப்பதில்லை     🙏  தமிழ் சிறி. குமாரசாமி அண்ணைக்கு    இதைப்பற்றி நன்கு தெரியும் அவர்கள் விரிவாய் எழுதுவார்கள்    
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.