Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆடி அமாவாசையை... முன்னிட்டு, கீரிமலை கடற்கரையில்... விசேட வழிபாடு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆடி அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள் | Dinamalar  Tamil News

ஆடி அமாவாசையை... முன்னிட்டு, கீரிமலை கடற்கரையில்... விசேட வழிபாடு!

தந்தையை இழந்தவர்களுக்கு பிரதிர்க்கடன் செலுத்தும் விரதாமான ஆடி அமாவாசை விரதத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம், கீரிமலை கடற்கரையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

தந்தையை இழந்தவர்கள் தமது பிதிர்க்கடன்களை செலுத்தி கடலில் நீராடினார்கள்.

அதேவேளை, மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவமும் இன்றைய தினம் கீரிமலை கடற்கரையில் நடைபெற்றது.

அதன் போதும் ஏராளமானான பக்தர்கள் கலந்து கொண்டு முருக பெருமானை வழிபட்டு தீர்த்தமாடினர்.
ஆடி அமாவாசை விரதமானது இந்து சமயத்தைச் சேர்ந்த அனைவராலும் பக்தியுடன் அனுட்டிக்கப்படும் விரதமாகும்.

இந்நாளில் இந்துக்கள் சமுத்திரத்தில் அல்லது புண்ணிய நதிகளில் தீர்த்தமாடி தம் மூதாதையர்களை முக்கியமாக பெற்ற தந்தையை நினைவு கூர்ந்து விரதமிருந்து பிதிர்க்கடன் செய்யும் நாள் ஆகும்.

சூரியனும், சந்திரனும் ஒன்றுபட்டுப் பூமிக்கு ஒரே திசையில் நேர்படும் நாட்கள் தந்தை வழி முன்னோர்களை நினைந்து வழிபட ஏற்ற நாட்களாக அமாவாசை நாள் இந்த ஆடி அமாவாசை திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1292723

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/permalink.php?story_fbid=pfbid0x6hE8H26a13DuMouwBrADa5WdNVprogaBZ1sE1Rkfp6bfNbYUtfzhEV7e3J5wjJdl&id=100009870542216

ஆடி அமாவாசையை வீதியிலேயே முடித்துக் கொண்டவர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

https://www.facebook.com/permalink.php?story_fbid=pfbid0x6hE8H26a13DuMouwBrADa5WdNVprogaBZ1sE1Rkfp6bfNbYUtfzhEV7e3J5wjJdl&id=100009870542216

ஆடி அமாவாசையை வீதியிலேயே முடித்துக் கொண்டவர்.

வாழை இலையில்... காத்தோட்டி காய் பொரியலும் இருக்குது. 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

வாழை இலையில்... காத்தோட்டி காய் பொரியலும் இருக்குது. 

ஆடி அமாவாசை ஸ்பெசல் அல்லவா?

சிறிய வயதில் அடி வாங்கித் தான் சாப்பிடுவது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of 3 people and text that says '*Appa MONKEY MEMES காகம் சாப்பிட முதல் பசிக்குதுன்னு சோத்துல கை வச்ச TAMTL-MTMTS wTE முதல் டெட் பாடி நீ தான்டா'

May be an image of text that says 'பெத்தவங்க உயிரோடு இருக்கும்போது சோறு போட மாட்டீங்க இறந்த பிறகு 火 எங்களுக்கு சோறு போட்டு சாவடிக்கிறீங்க என்னடா உலகம் இது'

May be a meme of 4 people, beard and text that says 'MONKEY MEMIES மத்த நாளுல சூ சூ ன்னு கலைக்க வேண்டியது இன்னைக்கு மட்டும் கா கா ன்னா காகம் எப்பிடி வரும்'

May be an image of 5 people and text that says 'MONKEY CC MIEMES காகத்துக்கு சாப்பாடு வைக்க கா கா'ன்னு கூப்பிடுறேன் பசில் பசில்ன்னு கத்துறான்டி உன் புள்ள'

காகத்துக்கு  சாப்பாடு வைக்க,  கா.. கா..  கூப்பிடுறன்...
பசில், பசில்ன்னு  கத்துறாண்டி... உன் பிள்ளை.  😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் தமிழருக்கு இது மிகவும் முக்கியமான - சந்ததி பிணைப்பு நாள்.

முறையாக செய்தால்  சந்ததி தொடரும். 

ஒருவரின் தந்தை வழி  என்று  மட்டுமில்லாமல், எல்லா முற்சந்ததி  உறவுகளையும், நினைவு கூர  வேண்டிய நாள்.

நினைவு கூரும் பொது, நேரம் எடுத்து அவர்கள் யார் என்று விளங்கம் அளித்து, அவர்களுடன் உங்கள் தனிப்பட்ட அனுபவங்களையும் பகிர வேண்டிய நாள். படம் இருந்தால் உங்களின் சந்ததியின் இன்னும் ஆழமாக மனதில் பதியும். 

மற்றைய திரியில் நன் குறிப்பிடும் முதியவர்கள், உறவினர்கள் கதைத்து, சொன்னது போன்றவை இவ்வாறான நாட்களில் ( சித்ரா பௌர்ணமி, மகா மாளயம், அவரவரின் ஆண்டு திதிகள்) பகிரப்பட்டவை. ஆனால், இந்த நாட்கள் மட்டும் என்று இல்லை. 

அநேகமான (இலங்கை) தமிழருக்கு, தந்தி தந்தை  / தாய், பேரன் / பேத்தி க்கு முதல் தெரியாது. ஏன்?  

அவர்களால் தான் நாம் இப்பொது சந்ததியாக உள்ளளோம் என்பதை கூட நினைவு கூராத, சுயநலக் காரர்கள் ஆகி விட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

https://www.facebook.com/permalink.php?story_fbid=pfbid0x6hE8H26a13DuMouwBrADa5WdNVprogaBZ1sE1Rkfp6bfNbYUtfzhEV7e3J5wjJdl&id=100009870542216

ஆடி அமாவாசையை வீதியிலேயே முடித்துக் கொண்டவர்.

ஆடி அமாவாசை விரதம் வீதியில் – சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்

77.jpg?resize=640%2C644

எரிபொருள் வரிசையில் காத்திருந்தவர்  ஆடி அமாவாசை விரதத்தை வீதியில் முடித்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. 

தந்தையை இழந்தவர்கள் ஆடி அமாவாசையான இன்றைய தினம் வியாழக்கிழமை தந்தைக்காக விரதம் இருந்து , மதியம் காலமான தந்தைக்கு படையல் செய்து , அந்த உணவை சாப்பிட்டு தமது விரதத்தை முடித்துக்கொள்வார்கள். 

இந்நிலையில் இன்றைய தினம் எரிபொருள் பெற்றுக்கொள்ள வரிசையில் காத்திருந்த ஒருவர் தமது விரதத்தை வீதியில் முடித்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

76-1.jpg?resize=498%2C1024

ஆடி அமாவாசை விரதம் வீதியில் - சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம் - Global Tamil News

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Kadancha said:

புலம் பெயர் தமிழருக்கு இது மிகவும் முக்கியமான - சந்ததி பிணைப்பு நாள்.

முறையாக செய்தால்  சந்ததி தொடரும். 

ஒருவரின் தந்தை வழி  என்று  மட்டுமில்லாமல், எல்லா முற்சந்ததி  உறவுகளையும், நினைவு கூர  வேண்டிய நாள்.

நினைவு கூரும் பொது, நேரம் எடுத்து அவர்கள் யார் என்று விளங்கம் அளித்து, அவர்களுடன் உங்கள் தனிப்பட்ட அனுபவங்களையும் பகிர வேண்டிய நாள். படம் இருந்தால் உங்களின் சந்ததியின் இன்னும் ஆழமாக மனதில் பதியும். 

மற்றைய திரியில் நன் குறிப்பிடும் முதியவர்கள், உறவினர்கள் கதைத்து, சொன்னது போன்றவை இவ்வாறான நாட்களில் ( சித்ரா பௌர்ணமி, மகா மாளயம், அவரவரின் ஆண்டு திதிகள்) பகிரப்பட்டவை. ஆனால், இந்த நாட்கள் மட்டும் என்று இல்லை. 

அநேகமான (இலங்கை) தமிழருக்கு, தந்தி தந்தை  / தாய், பேரன் / பேத்தி க்கு முதல் தெரியாது. ஏன்?  

அவர்களால் தான் நாம் இப்பொது சந்ததியாக உள்ளளோம் என்பதை கூட நினைவு கூராத, சுயநலக் காரர்கள் ஆகி விட்டோம்.

இன்றைய அவசரமான யுகத்தில் எல்லாவற்றையும் மறந்தது பாதி, விட்டது பாதி என்று போய்கொண்டிருக்கிறோம்.  இது கொஞ்சம் மனவருத்தம்தான்.......!   😢

நன்றி கடைஞ்சா ......! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.