Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்களவையில் கொந்தளித்த நிர்மலா - 'கல்லறை கட்டுவதற்குத்தான் ஜிஎஸ்டி; தகனம், இறுதிச் சடங்குக்கு வரியில்லை'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மக்களவையில் கொந்தளித்த நிர்மலா - 'கல்லறை கட்டுவதற்குத்தான் ஜிஎஸ்டி; தகனம், இறுதிச் சடங்குக்கு வரியில்லை'

1 ஆகஸ்ட் 2022
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம்,SANSAD TV - LOK SABHA

 

படக்குறிப்பு,

மக்களவையில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பொதுமக்கள் பயன்படுத்தும் பால், தயிர், மோர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி தொடர்பாக மக்களவையில் திங்கட்கிழமை திமுக எம்பி கனிமொழி எழுப்பிய கேள்விகளுக்கு தமிழில் பதிலளித்த இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிர்ணயித்த வரியை விட அதிக வரிச்சுமையை மக்கள் மீது திணித்தது திமுக அரசுதான் என்று குற்றம்சாட்டினார். அவரது பேச்சுக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி எம்பிக்கள் ஆட்சேபம் தெரிவித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். என்ன நடந்தது?

மக்களவையில் விலைவாசி உயர்வு தொடர்பாக அவை விதி 193இன் கீழ் நடந்த விவாதத்தில் உறுப்பினர்கள் பதிவு செய்த கருத்துக்களுக்கு நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அப்போது ஜிஎஸ்டி வரி விவகாரத்தில் அவருக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணி உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் விவரம்:

நிர்மலா சீதாராமன் பேசும்போது, "உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா தற்போதுள்ள நிலையில் இருப்பதற்கு மக்கள்தான் ஒரே காரணம். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இன்றும் நாம்தான் வேகமாக வளரும் பொருளாதாரம். இதை உலக வங்கி போன்ற பெரிய அமைப்புகள் கூறியுள்ளன," என்று தெரிவித்தார்.

"இன்றைய விவாதத்தில் பங்கெடுத்தவர்கள் தரவுகள் அடிப்படையில் விவாதத்தில் கருத்துக்களை பதிவு செய்யாமல் அரசியல் சார்ந்த கருத்துக்களையே பதிவு செய்தனர்."

 

"ஜிஎஸ்டி கவுன்சிலில் எடுக்கப்படும் எல்லா முடிவுகளும் ஜிஎஸ்டி குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பு மாநிலங்களால் எடுக்கப்படுகின்றன. மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் மாநிலங்களுக்கும் ஒரு பங்கு வாக்களிக்கும் உரிமை மத்திய அரசுக்கும் உள்ளது. ஒருமித்த கருத்து அடிப்படையிலும் முடிவுகள் எடுக்கப்படும்," என்று நிர்மலா கூறினார்.

முன்னதாக, விவாதத்தில் பங்கேற்ற திமுக எம்.பி கனிமொழி உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி பென்சில் விலை உயர்ந்தது தொடர்பாக பிரதமருக்கு எழுதிய கடிதம் குறித்து பேசினார்.

அதற்கு பதிலளித்த நிர்மலா, "பென்சில் விலையில் எந்த மாற்றமும் கிடையாது என்று கூறினார். ஒரு சிறுமி பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். ஏன் எழுதுகிறார். நாட்டின் பிரதமருக்கு தன் மனதில் உள்ளதை எழுதினால் அது அவரை சென்றடையும். பிறகு அவர் ஏதாவது செய்வார் என்ற எண்ணத்தில் எழுதுகிறார்," என்று தெரிவித்தார்.

கனிமொழி குறுக்கீடு

அப்போது கனிமொழி எழுந்து சில கேள்விகளை எழுப்பினார்.

அதுவரை இந்தி, ஆங்கிலத்திலேயே பேசி வந்த நிர்மலா சீதாராமன், மிகவும் ஆர்வத்துடன் கனிமொழி சில பிரச்னைகளை எழுப்புகிறார். அதனால் கண்டிப்பாக நான் அவருக்கு தமிழிலேயே பதில் அளிக்கப் போகிறேன் என்று கூறி தமிழிலேயே விளக்கத்தைத் தொடர்ந்தார்.

"2021, நவம்பர் 3ஆம் தேதி பெட்ரோல் மீதான வரியை ரூ. 5, டீசல் மீதான வரி ரூ. 10 என்ற வகையில் மோதி குறைத்தார். அதேபோல, 2022, மே மாதம் மத்திய அரசு திரும்பவும் பெட்ரோல் மீதான வரியை ரூ. 9.50 காசுகளும் டீசல் மீது ரூ. 7 என்ற வகையிலும் விலை குறைக்கப்பட்டது. எல்பிஜி உஜ்வாலா வாடிக்கையாளர்களுக்கு ரூ. 200 மானியம் தருவதாக அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் தேர்தலுக்கு முன்பு திமுக அதன் தேர்தல் அறிக்கையில் தேர்தலில் நாங்கள் வென்று ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ. 5, டீசல் விலையில் லிட்டருக்கு ரூ. 4 குறைப்போம் என்றனர். அதைத் தவிர, மாநில அரசு எல்பிஜி மானியம் ரூ. 100 தருவோம் என்று கூறியது," என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே திமுக உறுப்பினர்கள் இடைமறித்து, "கருப்புப் பணத்தை திருப்பிக் கொண்டு வருவோம் என நீங்கள் கூட சொன்னீர்கள். அந்த கருப்புப்பணம் எங்கே?" என்று கேட்டனர்.

இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. ஆனாலும், தமது உரையை தமிழிலேயே நிர்மலா சீதாராமன் தொடர்ந்தார்.

திமுக உறுப்பினர்கள் கனிமொழி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சு. வெங்கடேசன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் நிர்மலா சீதாராமனின் உரைக்கு ஆட்சேபம் தெரிவித்தனர்.

வெளிநடப்பு செய்த எதிர்கட்சியினர்

 

மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம்,SANSAD TV - LOK SABHA

இதனால் கோபம் அடைந்த நிர்மலா சீதாராமன், "நீங்கள் பேசும்போது நான் அமைதியாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள். பிறகு நான் பேசும்போது நீங்கள் ஏன் கேட்க மாட்டேன் என்கிறீர்கள். நான் பேசுவதை நீங்கள் கேட்டுத்தான் ஆக வேண்டும்," என்று கூறினார்.

அவரை சமாதானப்படுத்த சபாநாயகர் ஓம் பிர்லா முயன்றார்.

ஆனால், தமது பேச்சுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எதிர்கட்சியினர் செயல்படுவதாக நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார்.

அவையில் உங்களுக்கு எப்படி பேசுவதென்றே தெரியவில்லை என்று திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் கூறினர். ஒரு சில உறுப்பினர்கள் நீங்கள் அடாவடித்தனமாக நடந்து கொள்கிறீர்கள் என்று கூறினர்.

இதைத்தொடர்ந்து திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அவர்கள் வெளிநடப்பு செய்த பிறகும் தமது உரையை தமிழிலேயே தொடர்ந்த நிர்மலா சீதாராமன், மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான விலையை ஒருமுறை அல்ல இரண்டு முறை குறைத்து விட்டது. ஆனால், உங்களுடைய அரசாங்கம் (திமுக அரசு) மாநிலத்தில் ஏன் விலையைக் குறைக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

செய்வது நீங்கள், பாவம் எங்களுடையதா?

 

மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம்,SANSAD TV - LOK SABHA

இந்த கேள்வியை மாநிலத்தில் உள்ள திமுக அமைச்சரிடம் (பிடிஆர் தியாகராஜன்) செய்தியாளர்கள் கேட்டபோது "நாங்கள் தேதியையா சொன்னோம். சொன்னோம் அவ்வளவுதான்," என்று பதிலளித்தார். ஆனால் எதிர்கட்சியினர் என்னைப் பார்த்து அடாவடித்தனமாக நடந்து கொள்வதாக கூறுகிறார்கள்.

மத்திய அரசு விலையை குறைக்கும். ஆனால், நாங்கள் குறைக்க மாட்டோம் என்று கூறி முதலைக்கண்ணீர் வடிக்கும் கதை இது. மேலும், பேரவையில் அவர்கள் பேசும்போது டீசல் விலையை குறைக்கலாம்தான். ஆனால், அதை எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள் என்ற தரவு எங்களிடம் இல்லை என்று அவர்கள் கூறினர்.

நிர்மலா சீதாராமன் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போது தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளை கலந்து பேசினார். அப்போது குறுக்கிட்ட மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, திமுக எம்பிக்களுக்காக நீங்கள் பதிலளிப்பதாக இருந்தால் அவர்களுடைய மாநில மொழியிலேயே தெரிவியுங்கள் என்று அனுமதி அளித்தார்.

"அதிக விலை நிர்ணயித்தது தமிழ்நாடுதான்"

 

மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம்,SANSAD TV - LOK SABHA

பால் விலையை அதிகரித்து விட்டீர்கள் என்று திமுக தலைவர்கள் கூறினர். ஆனால், நாங்கள் மிகத் தெளிவாக கூறியிருக்கிறோம். பிராண்ட்டட் பால் வகை மீதான வரியைத்தான் கூட்டினோமே தவிர சாதாரண கறந்த பாலுக்கோ லூஸ் ஆக வாங்கும் பாலுக்கோ எவ்வித வரியும் விதிக்கப்படவில்லை.

ஜிஎஸ்டி கவுன்சிலில் உங்களுடைய அமைச்சரும்தான் இருக்கிறார். அதில்தான் பிராண்ட்டட் ஐட்டங்கள் மீது மட்டும்தான் வரி போட வேண்டும் என ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்தது. அதை உயர்த்தியது நானோ மோதியோ கிடையாது.

ஒரு கிலோ தயிர் வாங்கினால் அதற்கு முன்பிருந்த பழைய விலை ரூ. 100. அதற்கு மேல் வரி போட்ட பிறகு அது ரூ. 105 ஆகும். ஆனால், நீங்கள் என்ன விலைக்கு விற்கிறீர்கள்? ரூ. 120க்கு விற்கிறீர்கள். ஜிஎஸ்டி கவுன்சில் ஐந்து சதவீதம்தான் வரி விதிக்கச்சொல்லியது. ஆனால், நீங்கள் போட்ட விலை என்ன?

இனிப்பாக இருக்கக் கூடிய மோர் அல்லது லஸ்ஸி மீது ஐந்து சதவீத வரி போட்ட பிறகு அது ரூ. 28.35 காசுகளாக இருக்க வேண்டும். ஆனால், நீங்கள் ரூ. 30க்கு விற்கிறீர்கள். ஜிஎஸ்டி மீது பழி போட்டு விட்டு நீங்கள் மக்களிடம் அதிக விலைக்கு விற்கிறீர்கள், பாரத்தை சுமத்துகிறீர்கள்.

அதுபோலவே, ரூ. 10க்கு விற்க வேண்டிய மோர் மீது ஐந்து சதவீத வரி விதிக்கப்பட்டால் அது ரூ. 10.50 காசுகளாக இருக்க வேண்டும். ஆனால், நீங்கள் ரூ. 12க்கு விற்கிறீர்கள். இது எப்படி நியாயமாகும்?

விலையை உயர்த்தியதற்காக ஜிஎஸ்டியை காரணம் காட்டும் நீங்கள், பழியை ஜிஎஸ்டி கவுன்சில் மீது போட்டு விட்டு அதிக விலைக்கு பொருட்களை விதிக்கிறீர்கள். ஆனால், ஜிஎஸ்டி என்பது மத்திய அரசாங்கம் கிடையாது. அதில் அங்கமாக இருப்பது உங்களுடைய அமைச்சரும்தான். அவரும்தான் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். ஏகமனதாக எல்லோரும் ஒருமித்த அடிப்படையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது. அதில் ஏழைகளை பாதிக்கக் கூடிய வகையில் எதுவும் செய்யவில்லை என்று நிர்மலா சீதாராமன் பேசினார். மாறாக நீங்கள்தான் ஜிஎஸ்டி நிர்ணயித்த வரியை விட அதிக வரியை போட்டிருக்கிறீர்கள்.

தகனம், சுடுகாட்டுக்கு சேவைக்கு ஜிஎஸ்டி இல்லை

 

தகனம், இறுதிச் சடங்கு, அடக்கம் அல்லது சவக்கிடங்கு சேவைகள் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது என்றும் அவர் கூறினார்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

தகனம், இறுதிச் சடங்கு, அடக்கம் அல்லது சவக்கிடங்கு சேவைகள் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது என்று கூறியுள்ளார் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

முன்னதாக, ஜிஎஸ்டி வசூல் தொடர்பாக ஜிஎஸ்டி மற்றும் மேக்ரோ தரவுகளை மேற்கோள்காட்டிப் பேசினார் நிர்மலா சீதாராமன்.

இந்திய பொருளாதாரம் மேலும் வலுவடைந்து வருவதாகக் கூறிய அவர், ஜிஎஸ்டி வசூல் மற்றும் பிஎம்ஐ குறியீடு, இந்திய பொருளாதாரம் மேலும் வலுவடைந்து வருவதைக் குறிக்கிறது என்றார்.

கடந்த ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 28 சதவீதம் உயர்ந்து இரண்டாவது அதிகபட்சமான ரூ.1.49 லட்சம் கோடியைத் தொட்டது என்றும் 2017, ஜூலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி, 2022ஆம் ஆண்டு ஏப்ரலில் ரூ. 1.68 லட்சம் கோடியை எட்டியது என்றும் கூறினார்.

தகனம், இறுதிச் சடங்கு, அடக்கம் அல்லது சவக்கிடங்கு சேவைகள் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது என்றும் அவர் தெரிவித்தார். இவற்றுக்கு ஜிஎஸ்டியில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சுடுகாடு கட்டுமானம் மீது நிலையான ஜிஎஸ்டி விகிதங்கள் விதிக்கப்படும். 2022ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான காலகட்டம்வரை மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்றும் ஜூன் மாத நிலுவைத் தொகை மட்டுமே நிலுவையில் உள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/india-62384308

  • கருத்துக்கள உறவுகள்

கொண்டோம் க்குத்தான் வரி கட்டோணும். பிறக்கிற பிள்ளைக்கில்ல...சரிங்களா ? 

(இறுதித் தகனத்திற்கு வரி கட்டோணுமெண்டா, இருதிச் சடங்கை மேற்கொள்ளும் ஐயர்வாள் எல்லோரும் அரசுக்கு கணக்கு காட்ட வேண்டி வருமெல்லோ.....🤣)

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

 கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்கள் வரி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளில் குண்டுமணி வாங்கினாலும் சரி குண்டூசி வாங்கினாலும் சரி வரி கட்டித்தானே வாங்கவேண்டும். :cool:

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளில் குண்டுமணி வாங்கினாலும் சரி குண்டூசி வாங்கினாலும் சரி வரி கட்டித்தானே வாங்கவேண்டும். :cool:

கக்கூஸ் கூட… அரசாங்கம்தான் கட்டித் தரவேண்டும் என்று எதிர்பார்க்கும் மக்கள் வசிக்கும் நாடு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
40 minutes ago, தமிழ் சிறி said:

கக்கூஸ் கூட… அரசாங்கம்தான் கட்டித் தரவேண்டும் என்று எதிர்பார்க்கும் மக்கள் வசிக்கும் நாடு.

 நல்ல காலம் குழந்தை ஊக்குவிப்பு பணம்(கிண்டர் கெல்ட்)  கேக்காமல் விட்டுட்டாங்கள்...🤣

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, குமாரசாமி said:

 நல்ல காலம் குழந்தை ஊக்குவிப்பு பணம்(கிண்டர் கெல்ட்)  கேக்காமல் விட்டுட்டாங்கள்...🤣

ஜேர்மனியில் குழந்தைகள் வளர்ப்புக்கான  உதவி பணம் கொடுத்தும் குழந்தைகள் பெறும் வீதம் குறைவு......இந்தியாவில் கொடுக்க முடியுமா? ...அப்படி கொடுக்கப்படுமயின்.  இந்தியா தான் உலகம் ஆகி விடும் 😆

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

ஜேர்மனியில் குழந்தைகள் வளர்ப்புக்கான  உதவி பணம் கொடுத்தும் குழந்தைகள் பெறும் வீதம் குறைவு......இந்தியாவில் கொடுக்க முடியுமா? ...அப்படி கொடுக்கப்படுமயின்.  இந்தியா தான் உலகம் ஆகி விடும் 😆

அதில்லை விடயம்.

இந்தியாவில் உடலியல், பாலியல் பாடம் இல்லை. பலருக்கு கல்வியறிவும் இல்லை.

அதனால், பெண் மாதவிடாய் சுழற்சி, கருவுறுதல் காலம், கருத்தடை, கருவகற்றல் காலம் பற்றிய அறிவு மிகவும் குறைவு.

இலங்கையில், பிரீத்தி என்னும் ஆணுறை எண்பதுகளின் பின்னே வந்து, விளம்பரம் செய்தார்கள் என்பர். அதுக்கு முன்னர் பன்னிரண்டு, பதின்மூன்று பிள்ளைகள் பெறுவது சாதாரணம்.

இதன் காரணமாக சிறிய தீவின் சனத்தொகை இரண்டு கோடியாகியது. ஒப்பீட்டளவில், மிக அதிகம். மிகப்பெரிய அவுஸ்திரேலியா சனத்தொகை இரண்டரைக் கோடி.....

வலிந்து கருத்தடை செய்தால் ஜந்நூறு ரூபா காசு், பத்து கிலோ அரசியும் கொடுக்கப்பட்ட காலமும் இருந்தது.

சீனாவில், ஒரு பிள்ளைக்கு மேல் பெற முடியாது என்று சட்டமே இருந்தது.

ஆக, சொல்வது எண்னெண்டா மிஸ்டர் கந்தையர்..... இந்தியா போகமுன்னம், நம்ம இலங்கை பக்கம் தாராளமா போலாம்.. 😁😜

பொறுங்கோ, இன்னும் ஒரு விசயம்..... கவலைப்படாதீங்க.....

சிரியாவில இருந்து ஒரு மில்லியன் இறக்கியிருக்கு...... அவயள் கருத்தடை நிணைச்சே பார்க்கப்படாது எண்டு நம்பிற ஆட்கள்.

இனி ஜேர்மன் கலகலக்கப் போகுது....😁🤪

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

வரி விதிப்பின் ஒருநோக்கம் வருமானத்தினை மீள விநியோகம் செய்தல் ஆனால் இந்த ஜி ஸ் ரியினால் அத்தியாவசியப்பொருளின் விலை அதிகரிப்பு அடிமட்ட மக்களையே அதிகம் பாதிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vasee said:

வரி விதிப்பின் ஒருநோக்கம் வருமானத்தினை மீள விநியோகம் செய்தல் ஆனால் இந்த ஜி ஸ் ரியினால் அத்தியாவசியப்பொருளின் விலை அதிகரிப்பு அடிமட்ட மக்களையே அதிகம் பாதிக்கிறது.

உண்மை  வரி விதிப்பதை  மாநில அரசும் சேர்ந்து செய்கிறது ....அத்துடன் கூடிய விலைக்கும். மாநில அரசு விற்கிறது   பிறகும் பாராளுமன்றத்தில் கனிமொழி ஏன்கத்தவேண்டும்    இந்த விடயத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சொல்வது சரி என்று நம்புகிறேன் உங்கள் கருத்துகள் என்ன? 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kandiah57 said:

உண்மை  வரி விதிப்பதை  மாநில அரசும் சேர்ந்து செய்கிறது ....அத்துடன் கூடிய விலைக்கும். மாநில அரசு விற்கிறது   பிறகும் பாராளுமன்றத்தில் கனிமொழி ஏன்கத்தவேண்டும்    இந்த விடயத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சொல்வது சரி என்று நம்புகிறேன் உங்கள் கருத்துகள் என்ன? 

நிர்மலா அக்கா, தவறு மட்டுமல்ல, வாய்க்கொழுப்பு, திமிர் பேச்சு.

மத்திய அரசு, வரி விதித்து பணத்தினை கொண்டு போய் வைத்துக்கொண்டு, அதனை உடனடியாக திருப்பித்தராமல், இழுத்தடிப்பதால், மாநில அரசு மேலதிகமாக வரி விதித்து தனது மாநில தேவைகளுக்கு எடுத்துக் கொள்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
On 3/8/2022 at 12:47, Kandiah57 said:

உண்மை  வரி விதிப்பதை  மாநில அரசும் சேர்ந்து செய்கிறது ....அத்துடன் கூடிய விலைக்கும். மாநில அரசு விற்கிறது   பிறகும் பாராளுமன்றத்தில் கனிமொழி ஏன்கத்தவேண்டும்    இந்த விடயத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சொல்வது சரி என்று நம்புகிறேன் உங்கள் கருத்துகள் என்ன? 

மன்னிக்கவும் உடன் பதிலழிக்கமுடியவில்லை,

மானில அரசுக்கு பொருள்கள், சேவைகளில் வரி விதிப்பதில் அதிகாரமில்லை என நினைக்கிறேன்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.