Jump to content

எக்ஸ்யூஸ் மீ உதவி செய்ய முடியுமா?


Recommended Posts

பதியப்பட்டது

அப்பத்தான் அவன் ஏற வேண்டிய பஸ் பஸ் நிலையத்தை விட்டு கிளம்பியது. நகர்ந்து கொண்டிருந்தாலும் பின்னால் ஓடி தொங்கி புட்போர்ட்டில் ஏற முயன்றான். முடியவில்லை இவனுக்கு பேப்பே காட்டி விட்டு தூரத்தில் போய் கொண்டிருந்தது.

அந்த டவுன் பஸ் நிலையத்தில்.. மற்ற இடங்களுக்கு போக வேண்டிய பிரிவுகளில் எல்லாம் கியூ நிரம்பி வழிந்தது. ஆக்களை இறக்கிய சுமைகளினால் ஆறுதல் எடுக்கும் பஸ்களுமாயும். சுமை தாங்க முடியாமால்

http://sinnakuddy.blogspot.com/2007/08/blog-post_14.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்க கதை அழகு சின்னக்குட்டி .

இப்படி ஏமாத்துறதுக்கு நிறைய பேர் இருக்கிறாங்க

(அந்த பஸ்சில் போய் நோட்டை கொடுத்தது நீங்களா?)

Posted

வணக்கம் கறுப்பி ..கதையை வாசித்து கருத்து சொன்னதுக்கு நன்றி

//(அந்த பஸ்சில் போய் நோட்டை கொடுத்தது நீங்களா?) //

நான் அவனில்லை :D

Posted

அட பாவமே இபப்டியும் பெண்களா?

நல்லாக எழுதி இருக்கிறீங்க சின்னக்குட்டி.

உந்த நாகரீகப்பொண்ணுக்கு கொடுத்ததை அந்த பிச்சைக்காரி ( குழந்தையை நுள்ளி நுள்ளி அழ வைத்துக்கொண்டு இடுப்பில் வைத்து ஒரு பிச்சைக்காரி) ம்ம் அவளுக்கு கொடுத்திருக்கலாம்.

உப்படியும் ஆண்கள். ம்ம்ம் எல்லாம் காலம் பா

Posted

ரெஸ்டோரண்டிலும் டிப்ஸ் என்ற பெயரில் பிச்சை போடுவார்கள். நல்ல அழகிய பெண்களை கண்டால் டிப்ஸ் அந்தமாதிரி பேணியில் விழும்... யாராவது ஆம்பளைகள் இருந்தால் அப்படி கிடைக்காது.. வார்த்தை, தோற்றத்திற்கு எப்பவும் டிமாண்ட் இருக்கு... நான் ஒரு காலத்தில் பிச்சை எடுக்க வேண்டிய நிலை வந்தால் பொம்பிளை வேசத்துடன் தான் தெருவில் இறங்குவேன்..

Posted

சின்னக்குட்டி யதார்த்தத்தை நல்லா எழுதி இருக்கிறியள் வாழ்த்துக்கள்

ரெஸ்டோரண்டிலும் டிப்ஸ் என்ற பெயரில் பிச்சை போடுவார்கள். நல்ல அழகிய பெண்களை கண்டால் டிப்ஸ் அந்தமாதிரி பேணியில் விழும்... யாராவது ஆம்பளைகள் இருந்தால் அப்படி கிடைக்காது.. வார்த்தை, தோற்றத்திற்கு எப்பவும் டிமாண்ட் இருக்கு... நான் ஒரு காலத்தில் பிச்சை எடுக்க வேண்டிய நிலை வந்தால் பொம்பிளை வேசத்துடன் தான் தெருவில் இறங்குவேன்..
ஐயோ கலைஞன் ஆள் மாறாட்டம் செய்த எண்டு கேஸ் போட்டு விடுவினம் கவனம் :D:D:)
Posted

வணக்கம் வெண்ணிலா,கலைஞன்,ரசிகை பதிவை பார்வை இட்டு கருத்து கூறியமைக்கு மிக்க நன்றிகள்

ரசிகைக்காக இந்த திருமண வரவேற்பு பாடல்

http://www.raaga.com/playerV31/index.asp?p...mp;bhcp=1"]Visit My Website[/url

Posted

நல்ல ஒரு கதை சின்னகுட்டி அதில பிச்சைகாரிக்கு காசு போடாம அவள் ஏசுறதும் இவன் தன்னை மற்றவர்கள் பார்கிறார்கள் என்று யோசிப்பதும் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகளை சிறந்த முறையில் கதையாக தந்து இருகிறீர்கள் வாழ்த்துகள் சின்னகுட்டி.............. :lol:

Posted

நல்ல ஒரு கதை சின்னகுட்டி அதில பிச்சைகாரிக்கு காசு போடாம அவள் ஏசுறதும் இவன் தன்னை மற்றவர்கள் பார்கிறார்கள் என்று யோசிப்பதும் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகளை சிறந்த முறையில் கதையாக தந்து இருகிறீர்கள் வாழ்த்துகள் சின்னகுட்டி.............. :D

ஜம்மு அனுபவமா? :P :lol:

Posted

ரசிகைக்காக இந்த திருமண வரவேற்பு பாடல்

http://www.raaga.com/playerV31/index.asp?p...mp;bhcp=1"]Visit My Website[/url

திருமண வரவேற்புப் பாடலுக்கு நன்றி ஆனால் என்ன பாட்டைக் கேக்க முடியலை அந்த இணைப்பு வேலை செய்து இல்லை. :lol:

Posted

பாட்டு சூப்பர் சின்னக்குட்டி இணைப்புக்கு நன்றி

Posted

என்ன ரசிகை இன்னும் மணமகள் எண்டு நினைபோ? :lol: கலியாணம் முடிஞ்சு ஒரு மாதம் ஆகப்போகிது... சின்னக்குட்டி உந்த பாட்டு ரசிகைக்கு டூ லேட்.. ஹாஹா... :D:D

மணி, ரசிகைக்காக நான் ஒரு பாட்டை போடுறன்... எல்லாரும் கேளுங்கோ....

http://www.raaga.com/playerV31/index.asp?p...1267&bhcp=1

ஹிஹி.. :D

பி/கு: ரசிகைக்கு இந்த பழைய பாட்டு பிடிக்காட்டி சொல்லுங்கோ. புதுப்பாட்டா போடுறன்...

Posted

என்ன ரசிகை இன்னும் மணமகள் எண்டு நினைபோ? :lol: கலியாணம் முடிஞ்சு ஒரு மாதம் ஆகப்போகிது... சின்னக்குட்டி உந்த பாட்டு ரசிகைக்கு டூ லேட்.. ஹாஹா... :D:D

மணி, ரசிகைக்காக நான் ஒரு பாட்டை போடுறன்... எல்லாரும் கேளுங்கோ....

http://www.raaga.com/playerV31/index.asp?p...1267&bhcp=1

ஹிஹி.. :D

பி/கு: ரசிகைக்கு இந்த பழைய பாட்டு பிடிக்காட்டி சொல்லுங்கோ. புதுப்பாட்டா போடுறன்...

ஹாஹா .. கலியாணம் முடிஞ்சு ஒரு மாதம் ஆனாலும் நான் களத்துக்கு திருமணம் முடிந்து இப்போ வந்ததால் அவர் மணகளே மருமகளே வருக எண்டு பாடினவர். :D:D ;)

உங்கட பழைய பாட்டு அருமையான ஒரு பாடல் ஆனால் இப்ப அது இந்த சூழ்நிலைக்கு பொருத்தம் இல்லை. :P :P இருந்தாலும் இணைப்புக்கு நன்றி

Posted

ஜம்மு அனுபவமா? :P :lol:

இல்லை நிலா அக்கா.................சிட்னியில பிச்சைகாரன் எல்லாம் டிரேயினிற்குள்ள வரமாட்டாங்க...........ஆனா பாருங்கோ டிரெயினிற்குள்ள யாரும் வடிவான ஆட்கள் ஏறினா ஏதோ நம்மளை பார்கிற மாதிரி ஒரு பீலிங் அதை சொன்னேன்................ :P :P

Posted

அருமையான கதை.... பாராட்டுக்கள்

கதை நடை கையைப்பிடித்து சம்பவ இடத்துக்கு கூட்டிச்சென்றமாதிரி இருந்திச்சு ....

ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர் இருக்கத்தான் செய்வார்கள்...... ரவுன் பஸ்ராண்டில் மட்டுமல்ல எல்ல இடங்களிலும்..... <_<

Posted

வணக்கம் ஜமுனா, கெளரிபாலன் பதிவை பார்த்து கருத்து கூறி பாராட்டியதுக்கு இந்த சின்னக்குட்டியின் மனமார்ந்த நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அழகாகக் கதையினை சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

ஈழத்தில் இன்னல் படும் எம்மவர்களுக்கு உதவி செய்ய நிதி திரட்ட நடாத்தும் நிகழ்ச்சி என்றால் நுளைவுச்சீட்டு குடும்பத்துக்கு 50 வெள்ளிகள் , விலை அதிகம் என்று சொல்லும் சிட்னியில் வாழும் சிலரைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இவர்கள், தென்னிந்தியாப்பாடகர்கள், நடிகர்களின் நிகழ்ச்சிகளுக்கு விலை அதிகம் என்று பார்க்காமல் தனியொருவருக்கு நுளைவுச்சீட்டு 100 வெள்ளிகள் கொடுத்து நிகழ்ச்சிகளைப் பார்க்கிறார்கள். இவர்களுக்கும் சின்னக்குட்டியின் கதையில் வந்த நாயகனுக்கும் வித்தியாசமில்லை.

Posted

மிக நல்ல கரு சின்னக்குட்டி. நன்றாக எழுதியுள்ளீர்கள்.

இலண்டனில் நான் வசிக்கும் காலத்தில் எனக்குத் தெரிந்த ஒருவர், உணவகங்களில் உணவு பரிமாறியவர் ஆண் என்றால் மேலதிகமாக பணம் குடுக்கமாட்டார். ஆனால் உணவு பரிமாறியவர் அழகான பெண்கள் என்றால் மேலதிகமாகப் பணம்(டிப்ஸ்) குடுப்பார். அவ்வாறே பெண்கள் நடாத்தும் சிகை அலங்கார நிலையத்தில் செல்வதுண்டு. அங்கேயும் முடி வெட்டியபின்பு , வெட்டிய பெண் அழகானவர் என்றால் டிப்ஸ் கொடுப்பார். அவருடைய நண்பர்கள் அவரின் இந்த அற்ப ஆசையினைச் சொல்லிச் சொல்லி நகைப்பது வழக்கம்.

Posted

சின்ன குட்டி நேற்று தான் உங்கள் கதையை படித்தேன். ஊரில் படிக்கும் காலத்தில் நண்பர்கள் பொதுவாக ஒருவரை ஒருவர் இனி உங்களிட்டை காரியம் ஆக வேணூமெண்டா சட்டை போட்டு கொண்டு வந்து தான் ஏதும் கேக்க வேணும் எண்டு.

பெரும் பாலும் குறிப்பிட்ட வயதில் எல்லாரும் அப்பிடி தான் இருப்பார்களோ?.

:rolleyes:

Posted

வணக்கம் கந்தப்பு ,அரவிந்தன்,குளம்.. பதிவை வாசித்து பதிவோடு ஒட்டிய கருத்துக்களை கூறியதுக்கு மிக்க நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.