Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் அமைப்புகள் மீதான... தடையை நீக்கியது, அரசாங்கம்.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, goshan_che said:

பந்தயம் கட்டுறன்.

ஜேர்மன் தமிழ் ஆக்கள் சும்மா வாய் மட்டும்தான்🤣

Slc gips on Make a GIF

இருந்து பாருங்கள். ஆள்... அம்பிட்டார் என்றால்,
"மாவு கட்டு"  போட்டுக் கொண்டுதான்... ஊருக்கு போவார். 😜  😂 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, தமிழ் சிறி said:

Slc gips on Make a GIF

இருந்து பாருங்கள். ஆள்... அம்பிட்டார் என்றால்,
"மாவு கட்டு"  போட்டுக் கொண்டுதான்... ஊருக்கு போவார். 😜  😂 

இது தமிழ் சிறி அண்ணையின் படம் இல்லை தானே?.   

  • கருத்துக்கள உறவுகள்+

புலம்பெயர் தமிழரின் உதவியை எதிர்பார்த்தே தடையை நீக்குகிறோம்

 

Dinesh.jpg

 

“புலம்பெயர் தமிழர்களையும் அவர்களது அமைப்புக்களையும் தடைப்பட்டியலில் வைத்துக்கொண்டு, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அவர்களின் உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியாது. எனவே, அவர்களின் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக முதற்கட்டமாக சில அமைப்புக்கள் மீதான தடைகளை நீக்கியுள்ளோம்.”

– இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பொருளாதார நெருக்கடியால் வீழ்ச்சியடைந்த எமது நாட்டை மீளக் கட்டியெழுப்ப வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களின் உதவிகளைப் பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ஆற்றிய கொள்கை விளக்கவுரையில் இதனை அவர் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புலம்பெயர் அமைப்புக்கள் மீதும் தனிநபர்கள் மீதும் தடையை வைத்துக்கொண்டு வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் உதவிகளை எதிர்பார்க்க முடியாது. இதைக் கருத்தில்கொண்டே முதற்கட்டமாகச் சில புலம்பெயர் அமைப்புக்கள் மீதும், தனிநபர்கள் சிலர் மீதும் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க அரசு முடிவெடுத்துள்ளது.

தொடர்ந்து தடையில் உள்ள ஏனைய புலம்பெயர் அமைப்புக்கள் குறித்தும், தனிநபர்கள் தொடர்பிலும் அரசு அவதானம் செலுத்தும்” – என்றார்.

 

https://viligal.com/?p=12703

 

----------------------------

---------------------------

வெக்கம் கெட்ட சிங்களவர்🤣🤣🤣

 

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nochchi said:

ஆம், அப்படித்தான் தகவல். டோட்முன்ட் பகுதியில் உள்ள ஒரு தமிழ் யேர்மனிய அரசியல்வாதியின் அனுசரனையோடுதான் வந்துள்ளதாக அறிந்தேன். 

சுமத்திரன் புகுந்த வீடும் ஆமை புகுந்த வீடும் உருப்படாது இங்கு லண்டனில் ஈஸ்ட்காம் பகுதியில் சும் பவுன்சர் பாதுகாப்புடன்  கூட்டம் போட்ட கொட்டல் இப்ப பேய் குடியிருக்கும் விடுதியாக மாறி விட்டது .

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நன்னிச் சோழன் said:

புலம்பெயர் தமிழர்களையும் அவர்களது அமைப்புக்களையும் தடைப்பட்டியலில் வைத்துக்கொண்டு, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அவர்களின் உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியாது. எனவே, அவர்களின் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக முதற்கட்டமாக சில அமைப்புக்கள் மீதான தடைகளை நீக்கியுள்ளோம்.”

– இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

முதலில் புலம்பெயர் இலங்கையர் உதவி செய்யணும் என்று கேட்டு பார்த்தார்கள் காரியம் ஆகலை  இப்ப நேரடியாகவே புலம்பெயர் தமிழர்களின் காலில் விழுந்து விட்டனர் முதலில் அவசரகால தடை சட்டம் அரசியல் கைதிகள் விடுவிப்பு வலிந்து காணமல் ஆக்கபட்டவ்ர்களுக்கு தீர்வு தமிழர்களின் காணி விடுவிப்பு போன்ற முக்கிய விடயங்கள் இருக்க எங்கேயோ இருக்கும் புலம்பெயர் அமைப்பை தடை பட்டியலில் எடுப்பது சிங்களம் மாறவில்லை என்பதையே காட்டுகிறது .

இந்தகாலம் வரும் என்று காத்து இருந்தோம்  இப்படி ஒரு காலம் வரபோவது தெரிந்து   இங்கு கருத்து எழுத பயந்து குழுவாய் கொஞ்சபேர் ஓடினவை ஒளித்து இருந்து பார்ப்பதை விட்டு மேடைக்கு வரவும் .

2 hours ago, Kandiah57 said:

இது தமிழ் சிறி அண்ணையின் படம் இல்லை தானே?.   

இல்லை சும் கனடாவில் இருந்து தமிழர்களினால்  துரத்துபட்டு தடக்கி விழுந்து காலில் மாவு கட்டு போட்டுகொண்டு ரகசியமாய் திரிந்த போது எடுக்கபட்ட ரகசிய வீடியோ உங்களுக்கு கிடைக்கவில்லையா ?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஆறு தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட்டது அரசின் தந்திரமா?

  • ரஞ்சன் அருண் பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக
9 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ரணில் விக்கிரமசிங்கே

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கைக்குள் தடை செய்யப்பட்ட 6 தமிழ் அமைப்புக்களின் தடையை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது. ஆனால், இது இலங்கை அரசின் ஏமாற்று நாடகம் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை, உலக திராவிட ஒருங்கிணைப்புக் குழு, திராவிட ஈழ மக்கள் கூட்டமைப்பு, கனடியத் தமிழர் பேரவை மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை ஆகிய 6 அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிபந்தனைகளின் 1373 கீழ், இலங்கைக்குள் 577 நபர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 18 அமைப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது.

 

இதன்படி, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிபந்தனைகளின் 1373 கீழ், 316 பேருக்கான தடை நீக்கப்பட்டுள்ளதுடன், 6 அமைப்புக்கள் மீதான தடையும் நீக்கப்பட்டுள்ளது.

316 பேரில் ஒரே பெயரை கொண்ட 7 பேரின் பெயர்கள் உள்ளடங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது.

 

1px transparent line

 

1px transparent line

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிபந்தனைகளின் 1373 கீழ், புதிதாக 55 பேரையும் 3 அமைப்புக்களையும் தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் இலங்கைக்குள் 316 பேருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், 15 அமைப்புக்களுக்கு நாட்டிற்குள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தடை செய்யப்பட்ட அமைப்பிற்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் அடங்குகின்றது.

அதேபோன்று, ஈஸ்டர் தாக்குதலின் பின்னரான காலப் பகுதியில் தடை செய்யப்பட்ட தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் மீதான தடையும் அமலில் உள்ளது.

இலங்கை பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு சர்வதேச ரீதியிலுள்ள தமிழர்களின் பங்களிப்பு அவசியம் என கடந்த காலங்களில் தமிழர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில் தமிழ் அமைப்புக்கள் மற்றும் நபர்கள் மீதான தடை நீக்கம், ரணிலின் ஒரு தந்திர நடவடிக்கை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்து பேசிய அவர், ''ஏற்கனவே இந்த தடை நீக்கப்பட்டிருந்தது. 2015, 2019ம் ஆண்டு காலப் பகுதிகளில் ரணில் - மைத்திரி அரசாங்கத்தினால் இந்த தடை நீக்கப்பட்டிருந்தது. மீண்டும் கோட்டாபய ஆட்சிக்கு வந்ததன் பின்னர், அதே தடை விதிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் அந்த தடை நீக்கப்பட்டதாக ரணில் விக்ரமசிங்க அறிவிக்கின்றார். தடை இருந்த காலத்திலேயே மங்கள சமரவீர, ரணில் விக்ரமசிங்க போன்றவர்கள் 2003ம் ஆண்டு சிங்கப்பூரிலும், 2015 மற்றும் அதற்கு இடைப்பட்ட காலத்தில் கொழும்பிலும் தடை செய்யப்பட்ட அமைப்புக்களுடன் பேசியிருக்கின்றார்கள்.

நாடு கடந்த தமிழீழ அரசு, கனடா மக்கள் அவை, ஒவ்வொரு நாடுகளிலும் இருக்கின்ற மக்கள் அவைகளும், அதாவது புலம்பெயர் நாடுகளில் மக்கள் பலமுள்ள அமைப்புக்கள் இன்றும் தடை பட்டியலுக்குள் தான் இருக்கின்றது. 100 வீதமான தடையும் விதிக்கப்பட்டதாகவே இருக்கின்றது.

இந்த தடை நீக்குகின்றமையினால், ஒரு பெரிய மாற்றங்கள் ஏற்பட போவதில்லை. ஆனால் வெளிநாடுகளிலுள்ள 65 முதல் 70 சதவீத மக்களின் செல்வாக்கை கொண்ட கனடா மக்கள் அவை, நாடு கடந்த தமிழீழ அரசு, பிரான்ஸ் ஒன்றியம், சுவிஸ் ஒன்றியம் போன்ற மக்களின் செல்வாக்கை கொண்ட அமைப்புக்கள் இப்போதும் தடையில் தான் இருக்கின்றது.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன்

பட மூலாதாரம்,SHIRIDARAN

இந்த தடை நீக்கமானது, ஒட்டு மொத்த புலம்பெயர் தமிழர்கள் மீதான தடை நீக்கியதாக கருதப்படாது. தமிழீழத்தை கைவிட்டோம் என்று கூறுவோரின் மீதான தடையையே அரசாங்கம் நீக்கியுள்ளது. இது வெளிப்படையான தார்மீகமான தடை நீக்கம் என்று கருத முடியாது. இதுவொரு சரியான தடை நீக்கம் என்றால், நாடு கடந்த தமிழீழ அரசு உள்ளிட்ட அனைத்து அமைப்புக்கள் மீதான தடையை நீக்கியிருக்க வேண்டும்.

உலக நாடுகளிடம் ஏமாற்று வித்தையொன்றை காண்பிக்கும் இலங்கை அரசாங்கத்தின் வழமையான ஏமாற்று நாடகத்தின் ஒரு கட்டம், ரணிலுடைய தந்திரத்தின் ஒரு பாதையே இது. ஆகவே இந்த தடை நீக்கத்தை மகிழ்ச்சி அடையகூடிய ஒன்றாக பார்க்கவில்லை" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/sri-lanka-62539335

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.