Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆசியக் கிண்ணம்: இன்றைய தொடக்கப் போட்டியில் ஆப்கானை எதிர்கொள்ளும் இலங்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆசியக் கிண்ணம்: இன்றைய தொடக்கப் போட்டியில் ஆப்கானை எதிர்கொள்ளும் இலங்கை

Digital News Team 2022-08-27T11:18:53 

-சி.எல்.சிசில்-

டுபாயில் இன்று இரவு நடைபெறும்  ஆசியக் கிண்ண தொடக்கப் போட்டியில் இலங்கை அணி  ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

Asian-300x212.jpg
இப்போட்டியில் வனிந்து ஹசரங்க மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகிய இரு முக்கிய சுழற்பந்து வீச்சாளர்களாக களமிறங்குவா் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாமிக்க கருணாரத்ன சகலதுறை வீரராக விளையாடவுள்ளார்.

இலங்கை (சாத்தியம்) அணி விபரம்:

1 பத்தும் நிஸங்க 2 தனுஷ்க குணதிலக்க, 3 சரித் அசலங்க, 4 குசல் மெண்டிஸ் (WK), 5 பானுக ராஜபக்ஷ , 6 தசுன் ஷானக (கப்டன்), 7 வனிந்து ஹசரங்க, 8 சாமிக்க கருணாரத்ன, 9 மஹேஷ் தீக்ஷன, 10 மதீஷ பத்திரன/அசித பெர்னாண்டோ/டில்ஷான் மதுஷங்க. https://thinakkural.lk/article/203525

  • Replies 65
  • Views 2.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆசியக் கிண்ண வரலாற்றில் 5 தடவைகள் சம்பியனான இலங்கை இன்று ஆப்கானை எதிர்கொள்கிறது !

27 AUG, 2022 | 07:07 AM
image

 

 

(நெவில் அன்தனி)

ஆசிய கிண்ண  50 ஓவர்  கிரிக்கெட் வரலாற்றில் 5 தடவைகள் சம்பியனான இலங்கை, 8 வருடங்களின் பின்னர் மீண்டும் கிண்ணத்தை சுவீகரிப்பதற்கான மிகப்பெரிய சவாலை வெற்றி கொள்ளும் குறிக்கோளுடன் துபாய் விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை (27) இரவு நடைபெறவுள்ள ஆரம்பப் போட்டியில் ஆப்கானிஸ்தனை எதிர்கொள்ள உள்ளது.

பொருளாதார நெருக்கடி மற்றும் அமைதி ஆர்ப்பாட்டங்கள் காரணமாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் கட்டுப்பாட்டை மீறி ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை ஆசிய கிரிக்கெட் பேரவை இடம் மாற்றிய போதிலும் அப்போட்டியை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடு என்று உரிமை இலங்கையை விட்டு விலகவில்லை.

asian_cup_mohammed_nabi_dasun_shanaka.jp

இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளும் தத்தமது சொந்த நாட்டில் நிலவும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை எதிர்கொள்கின்றன.

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இம்முறை முதல் சுற்று, சுப்பர் 4 சுற்று என்ற இரண்டு சுற்றுகளாக நடைபெறுவதால் முதல் சுற்றில் 2 போட்டிகளிலும் வெற்றிபெறுவதைக் குறியாகக் கொண்டு தசுன் ஷானக்க தலைமையிலான இலங்கை களம் இறங்கவுள்ளது.

முதல் சுற்று நிறைவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகளுக்கு மாத்திரமே சுப்பர் 4 சுற்றில் விளையாட தகுதி பெற முடியும் என்பதால் மிகவும் கடுமையான பி குழுவில் இடம்பெறும் இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு பலத்த சவால் காத்திருக்கிறது.

asia_cup_sri_lanka_team.jpg

இலங்கைக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான  ஆரம்பப் போட்டி  கிட்டத்தட்ட நொக் அவுட்டுக்கு ஒப்பானதாகவே அமையப்போகிறது. எனவே இரண்டு அணிகளும் ஒன்றையொன்று வெற்றிகொள்ள கடுமையாக முயற்சிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

மேலும் இந்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் சுப்பர் 12 சுற்றுக்குள் நுழைவதற்கு முன்னர் தகுதிகாண் சுற்றில் விளையாடவேண்டிய இக்கட்டான நிலையில் இலங்கை இருக்கிறது. எனவே அதனையும் கருத்திக்கொண்டு ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் அதிசிறந்த ஆற்றல்களை இலங்கை அணி வெளிப்படுத்த வேண்டிவரும்.

இலங்கையும் ஆப்கானிஸ்தானும் ஒரே ஒரு தடவை இருபது 20 கிரிக்கெட் போட்டியில் விளையாடியபோது இலங்கை வெற்றிபெற்றிருந்தது. 2016ஆம் ஆண்டு நடைபெற்ற இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியிலேயே ஆப்கானிஸ்தானை 6 விக்கெட்களால் இலங்கை வெற்றி கொண்டிருந்தது.

எவ்வாறாயினும் இலங்கையின் அண்மைக்கால இருபது 20 கிரிக்கெட் பெறுபேறுகள் திருப்திகரமாக இல்லை. இந்த வருடம் விளையாடிய 11 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் 2 வெற்றிகளை மாத்திரம் ஈட்டிய இலங்கை மற்றொரு போட்டியை சமநிலையில் முடித்துக்கொண்டது. இந்த 3 போட்டிகளும் அவுஸ்திரேலியாவுடன் சம்பந்தப்பட்டவையாகும்.

எவ்வாறாயினும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை தனது அணி நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் என இங்கிருந்து துபாய்க்கு புறப்படுவதற்கு முன்னர் தசுன் ஷானக்க தெரிவித்திருந்தார்.

இதேவேளை, 'ஆசிய கிண்ணத்தை வென்றெடுத்து ஐக்கிய இராச்சியத்துக்கு நாங்கள் வந்த நோக்கத்தை நிறைவேற்றுவோம்' என பானுக்க ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

asia_cup_afghanistan.jpg

இலங்கை அணியில் 8ஆம் இலக்கம்வரை துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கக்கூடிய வீரர்கள் இடம்பெறுவது அணிக்கு சாதகமாகும்.

தனுஷ்க குணதிலக்க, பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், சரித் அசலன்க, பானுக்கு ராஜபக்ஷ, தசுன் ஷானக்க, வனிந்து ஹசரங்க டி சில்வா, சாமர கருணாரட்ன ஆகியோர் முதல் 8 இடங்களில் துடுப்பெடுத்தாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் அனைவருமே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர்கள். அதேவேளை, விக்கெட்களுக்கு இடையில் ஓடும் வேகத்தை இவர்கள் அதிகரித்து ஒற்றைகளை இரண்டாகவும் இரட்டைகளை மூன்றாகவும் ஆக்க முயற்சிக்க வேண்டும்.

துடுப்பாட்டத்தை மேலும் பலப்படுத்த வெண்டுமானால் தனஞ்சய டி சில்வா அல்லது அஷேன் பண்டாரவை இறுதி அணியில் சேர்க்க  அணி  முகாமைத்துவம் முன்வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

6 துடுப்பாட்ட வீரர்கள் அணியில் இடமபெறும் பட்சத்தில் வேகபந்துவீச்சாளர் டில்ஷான் மதுஷன்கவும் சுழபந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷனவும் இறுதி அணியில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை 5 துடுப்பாட்ட வீரர்களுடன் களம் இறங்கினால் ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப மேலதிக வேகப்பந்துவீச்சாளர் அல்லது சுழல்பந்துவிச்சாளர் இணைத்துக்கொள்ளப்பட வாய்ப்பு உள்ளது.

மறுபுறத்தில் ஆப்கானிஸ்தான் தனது அதிசிறந்த வீரர்களுடன் இலங்கையுடனான போட்டியை எதிர்கொள்ளும் என்பது நிச்சயம்.

இலங்கையைப் போன்றே ஆப்கானிஸ்தான் அணியிலும் சகலதுறை வீரர்கள் தாராளமாக இடம்பெறுவதுடன் துடுப்பாட்ட வரிசையும் நிண்டதாக இருக்கிறது.

ஹஸரத்துல்லா ஸஸாய், ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், நஜிபுல்லா ஸத்ரான், அணித் தலைவர் மொஹமத் நபி, அஸ்மத்துல்லா ஓமர்ஸாய், ராஷித் கான், கரிம் ஜனத், நவீன் உல் ஹக், முஜீப் உர் ரஹ்மான், பரீத் அஹ்மத் ஆகியோர் இலங்கைக்கு எதிரான போட்டியில் விளையாடுவார்கள் என அனுமானிக்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் இந்த வருடம் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த பெறுபேறுகளை ஈட்டியுள்ளதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.

ஆப்கானிஸ்தான் இந்த வருடம் விளையாடிய 10 போட்டிகளில் 6இல் வெற்றிபெற்றுள்ளது. https://www.virakesari.lk/article/134472

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
SL FlagSL
105
AFG FlagAFG
(10.1/20 ov, T:106) 106/2

Afghanistan won by 8 wickets (with 59 balls remaining)

இலங்கை அணி 8விக்கெட்டுகளால் படுதோல்வி.

  • கருத்துக்கள உறவுகள்

சாம்பியன் அணி 8 ஓவரில் தோற்றிருக்கவேணும்...கிரக மாற்றம் தப்பியிட்டுது..

  • கருத்துக்கள உறவுகள்

இன்னா அடி.

  • கருத்துக்கள உறவுகள்

எட்டு ஓவரில முடியும் எண்டு பாத்தன் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

IND VS PAK : இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் பலப்பரீட்சை – ஆடுகளமும் வீரர்களும் எப்படி?

31 நிமிடங்களுக்கு முன்னர்
 

கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், உலகையே மெய்சிலிர்க்க வைக்கும், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான, பரபரப்பான இந்தப் போட்டி ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் வகையில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக, இந்த இரண்டு அண்டிகளும் மோதுகின்ற சிறப்புமிக்க போட்டிக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

கடந்த 10 மாதங்களுக்குள் இரண்டாவது முறையாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மீண்டும் இவை மோதுகின்றன. கடந்த அக்டோபரில் துபாயில் நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியின்போது, பாகிஸ்தான், 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

டி20 உலகத் தர வரிசையில் இந்தியா முதலிடத்திலும் பாகிஸ்தான் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

 

இந்தியாவும் பாகிஸ்தானும் 1984 முதல் இதுவரை 14 முறை ஆசிய கோப்பையில் மோதியுள்ளன. அதில் இந்தியா 8 முறையும் பாகிஸ்தான் 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 1997ஆம் ஆண்டு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. அதில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மூன்றாவது முறையாக இரண்டு நாடுகளும் ஆசிய கோப்பையில் மோதுகின்றன.

இரு நாட்டு கிரிக்கெட் வீரர்களுடைய கனிவான அணுகுமுறை வைரலாகி வருகிறது. முந்தைய ஆட்டத்தில் விளையாடிய ஹாஹீன் ஷா அப்ஃரிடியின் உடல்நிலை குறித்து இந்திய வீரர்கள் அக்கறை காட்டுவது குறித்த வீடியோ வைரலானது.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

அதேபோன்று, விராட் கோலி, பாபர் ஆசாம் இருவரும் ஒருவரையொருவர் குறித்து நம்பிக்கை தெரிவித்திருந்தனர். இவர்கள் இருவருமே உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களாக கருதப்படுகின்றனர். சமீபகாலமாக விராட் கோலி தடுமாறிய நிலையில் அவருக்கு ஆதரவாக பாபர் ஆசாம் கருத்து தெரிவித்திருந்தார். அதேபோன்று, பாபர் ஆசாமும் சிறந்த பேட்ஸ்மேன் என்று புகழாரம் சூட்டியிருக்கிறார். இருவரும் நேர்த்தியான பேட்ஸ்மேன்கள் என்பதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிக்கக்கூடும்.

இந்தியா, பாகிஸ்தான் அணி விவரங்கள்

இந்தியா கடந்த ஆண்டில் இருந்த முதன்மையான ஏழு பேருடனே போட்டிக்குச் செல்வது வியக்கத்தக்கது. ஆனால், இன்னமும் முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்தையும் அச்சுறுத்தலையும் இது கொண்டுள்ளது. அவர்கள் கோலியின் அந்தஸ்தை கொண்ட ஒரு வீரரை அணியில் சேர்த்துக்கொண்டு, அவரை வெறுமனே உட்கார வைத்திருப்பது சாத்தியமில்லை. இதனால், ரிஷப் பன்ட், தினேஷ் கார்த்திக் இருவரில் ஒருவரைத் தான் பயன்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரிஷப் பன்ட், தினேஷ் கார்த்திக் இருவருமே விக்கெட் கீப்பிங்கில் சிறந்து விளங்குகின்றனர். பன்ட் ஓர் ஆல் ரவுண்ட் பேட்ஸ்மேனாக முதல் ஆறு இடங்களுக்குள் இருக்கும் ஒரேயொரு இடது கை ஆட்டக்காரர். கார்த்திக் ஒரு சிறப்பான ஃபினிஷர். இந்நிலையில், இவர்களில் யாரை உட்கார வைப்பது, யாரை உள்ளே இறக்குவது என்ற கடினமான தேர்வைச் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

மேலும், வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார், சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரை மட்டுமே வைத்துப் பார்க்கையில் இந்திய அணியின் பந்து வீச்சு வலிமையாக இருப்பதைப் போல் தெரியவில்லை. உலக்க் கோப்பைக்கான ஒரே இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் களமிறங்க வேண்டும்.

இந்திய அணியில், கேப்டன் ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷாப் பன்ட்/தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்கள்), ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், ஆர்.அஷ்வின்/அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் உள்ளனர்.

 

விராட் கோலி - பாபர் ஆசாம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாகிஸ்தான் அணியில், கேப்டன் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஃபகார் ஜமான், ஆசிஃப் அலி, இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, ஷதாப் கான், முகமது நவாஸ்/உஸ்மான் காதர், ஷாநவாஸ் தஹானி/முகமது ஹஸ்னைன், ஹரிஸ் ரவுஃப், நசீம் ஷா ஆகியோர் உள்ளனர்.

ஆடுகள நிலவரம்

இந்தப் போட்டி, துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில், இந்திய நேரப்படி மாலை 7:30 மணிக்கு நடைபெறுகிறது.

கடந்த ஆண்டு உலகக் கோப்பை போட்டிகள் மற்றும் ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றபோது, மாலை 6 மணிக்குத் தொடங்கின. துபாய் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்குச் சாதகமாக துபாய் சூழல் இருப்பதைக் குறிக்கின்றன. இதுமட்டுமின்றி, இரவு நேரத்திலும்கூட அங்கு வெப்பநிலை 35 டிகிரி செல்ஷியஸ் இருக்கும்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விளையாடிய 17 போட்டிகளில் பாகிஸ்தான் ஒரே ஒருமுறை தான் தோல்வியடைந்துள்ளது. 2021ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடியபோது தோல்வியடைந்தது.

விராட் கோலிக்கு இது 100வது டி20 போட்டி. இதன்மூலம் ராஸ் டெய்லருக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வகையான ஆட்டங்களிலும் 100 போட்டிகளில் ஆடிய வீரராகிறார் கோலி.

இந்தியா-பாகிஸ்தான் அரசியல் உறவும் கிரிக்கெட் போட்டிகளும்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அரசியல் உறவுகள், ஆசிய கோப்பையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. 1990ஆம் ஆண்டில், நான்காவது ஆசிய கோப்பை போட்டியை இந்தியா நடத்தியது. ஆனால், அந்த நேரத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மிக மோசமாக இருந்தது. ஆகையால், பாகிஸ்தான் இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை.

 

கிரிக்கெட்

பட மூலாதாரம்,THARAKA BASNAYAKA/NURPHOTO VIA GETTY IMAGES

1993ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டதால் ஆசிய கோப்பை போட்டியை நடத்த முடியாமல் போனது.

2018ஆம் ஆண்டு போட்டிகள் இந்தியாவுக்குப் பதிலாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்பட்டபோது, இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் உறவுகள் மீண்டும் முன்னுரிமை பெற்றன. அப்போதைய பிசிசிஐ செயலாளர் அனுராக் தாக்கூர் அதை இந்தியாவில் ஏற்பாடு செய்வதாக அறிவித்தார். ஆனால், நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்தப் போட்டிகள் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலால் துபாய் மற்றும் அபுதாபிக்கு மாற்றப்பட்டது.

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் உறுப்பு நாடுகளில், இலங்கையும் வங்கதேசமும் இந்தியாவுடன் நெருக்கமாக இருப்பதாகக் கருதப்படுகின்றன. ஆனால், ஒரு முக்கியமான உறுப்பினராகக் கருதப்படும் பாகிஸ்தான் இந்தியாவுக்கு இதுபோன்ற சுதந்திரத்தை வழங்கவில்லை.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அரங்கில் பாகிஸ்தானின் பங்கு மிக முக்கியமானது. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நல்லுறவு இருந்த காலமும் கராச்சியில் தற்கொலைப்படைத் தாக்குதலுக்குப் பிறகு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நியூசிலாந்து கிரிக்கெட் அணி தாயகம் திரும்பிய காலமும் நினைவில் கொள்ளப்பட வேண்டும்.

அந்த நேரத்தில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் சார்பாக ஜக்மோகன் டால்மியா, ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் டோகிர் ஜியாவுக்கு ஆதரவாக இருந்தார். பாகிஸ்தானுக்கு வந்து விளையாடவில்லை என்றால், ஆசிய அணிகளும் அவர்கள் நாடுகளில் விளையாடாது என்று நியூசிலாந்து மற்றும் பிற வெள்ளையர் நாடுகளிடம் அவர் கூறினார்.

இந்தியாவை யார் தான் பகைத்துக்கொள்ள முடியும். எனவே நியூசிலாந்து அணி ஓராண்டுக்குப் பிறகு ஒரு நாள் தொடரை விளையாட பாகிஸ்தானுக்கு வந்தது. https://www.bbc.com/tamil/india-62706072

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
PAK FlagPAK
(3/20 ov) 19/1

India chose to field.

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் ஜிந்தாபாத்!😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
PAK FlagPAK
(19.5/20 ov) 147
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
PAK FlagPAK
147
(0.2/20 ov, T:148) 1/1

India need 147 runs in 118 balls.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

IND VS PAK: இந்தியா - பாகிஸ்தான் - 10 விக்கெட்களையும் இழந்த பாகிஸ்தான் அணி - இந்திய அணியின் இலக்கு 148

28 ஆகஸ்ட் 2022, 11:55 GMT
புதுப்பிக்கப்பட்டது 25 நிமிடங்களுக்கு முன்னர்
 

இந்தியா - பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியா டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. ரிஷாப் பன்ட், தினேஷ் கார்த்திக் இருவரில் தினேஷ் கார்த்திக்கை களத்தில் இறக்க இந்திய அணி முடிவு செய்தது. 19 ஓவர்களின் இறுதியில் பாகிஸ்தான் 9 விக்கெட்களை இழந்து 136 ரன்களை பெற்றுள்ளது.

புவனேஷவ்ர் குமார் வீசிய முதல் ஓவர் இறுதியில், பாகிஸ்தான் தரப்பில் களமிறங்கிய முகமது ரிஸ்வான் ஒரு பவுண்டரி அடித்து ஐந்து ரன்களோடும் முகமது ரிஸ்வான் ஒரு ரன்னோடும் ஆடி வந்தனர்.

மூன்றாவது ஓவரின் நான்காது பந்தில், புவனேஷவர் குமாரின் பந்துவீச்சில் பாபர் ஆஸம் அவுட் ஆனார். இந்த ஆட்டத்தின் முதல் விக்கெட்டை இந்தியா வீழ்த்தியது. பாபர் ஆஸம் 9 பந்துகளில் 10 ரன்களோடு வெளியேறினார். தற்போது நான்காவது ஓவரின் இறுதியில் முகமது ரிஸ்வான் மற்றும் ஃபகார் ஸாமன் பேட்டிங் செய்கின்றனர். பாகிஸ்தான் ஒரு விக்கெட்டை இழந்து, 23 ரன்களோடு ஆடியது.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

ஆறாவது ஓவரின் 5வது பந்தில், ஃபகார் ஜாமன் விக்கெட்டை ஆவேஷ் கான் வீழ்த்தியுள்ளார். எட்டாவது ஓவர் இறுதியில் முகமது ரிஸ்வான் மற்றும் இஃப்திகார் அகமது பேட்டிங்கில் பாகிஸ்தான் இரண்டு விக்கெட்களை இழந்து, 59 ரன்களோடு ஆடிக் கொண்டிருந்தது.

 

பத்தாவது ஓவர் இறுதியில், பாகிஸ்தான் அணியில் முகமது ரிஸ்வான் மற்றும் இஃப்திகார் அகமது களத்தில் இருந்தனர். பாகிஸ்தான், இரண்டு விக்கெட்களை இழந்து 68 ரன்களை பெற்றிருந்தது. ஜடேஜாவும் சாஹலும் பாகிஸ்தான் அதிக ரன்களை எடுத்துவிடாமல் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பதைப் போல் தெரிவதாகச் சொல்லப்படுகிறது.

இருப்பினும், 11வது ஓவரின் தொடக்கத்திலேயே ஜடேஜாவின் பந்துவீச்சில் ரிஸ்வான் பவுண்டரிக்கு பந்தை தட்டிவிட்டார். ஆரம்பத்தில் பாபர் உடன் விளையாடிக் கொண்டிருந்தபோது இருந்ததைவிட, சிறிது சிறிதாக ரிஸ்வான் தனது ஆட்டத்தில் வேகம் காட்டுவதைப் போல் தெரிகிறது.

 

இந்தியா - பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பன்னிரண்டாவது ஓவரில் யுஸ்வேந்திர சாஹல் வீசிய நான்காவது பந்தில் இஃப்திகார் சிக்ஸ் அடித்தார். அதற்கு அடுத்த ஓவரின் தொடக்கத்திலேயே ஹர்திக் பாண்டியாவின் பந்துவிச்சில் இஃப்திகாரின் விக்கெட் விழுந்தது. அவரைத் தொடர்ந்து முகமது ரிஸ்வானுடன் குஷ்தில் ஷா விளையாடுகிறார். 14வது ஓவர் இறுதியில், முகமது ரிஸ்வான் 41 பந்துகளில் 43 ரன்களோடு தனது ஆட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.

பதினைந்தாவது ஓவரின் முதல் பந்திலேயே பாகிஸ்தான் அணியின் நான்காவது விக்கெட்டாக முகமது ரிஸ்வானை ஹர்திக் பாண்டியா அவுட் ஆக்கினார். அதைத் தொடர்ந்து அதே ஓவரின் மூன்றாவது பந்தில் குஷ்தில் ஷாவையும் அவுட் ஆக்கினார். அந்த ஓவரின் இறுதியில் பாகிஸ்தான் ஐந்து விக்கெட்களை இழந்து, 103 ரன்களோடு விளையாடி வருகிறது. இப்போது ஷதாப் கான் மற்றும் ஆசிஃப் அலி பேட்டிங் செய்கின்றன.

 

சிவப்புக் கோடு

ஹாட்ரிக் சாம்பியன்ஷிப் எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்கள்

இந்தியா கடைசி இரண்டு முறை ஆசிய கோப்பையை வென்றுள்ளது. மூன்றாவது முறையாக இப்போதும் வென்று ஹாட்ரிக் அடிக்குமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

பாகிஸ்தான் விளையாடிய கடைசி ஐந்து டி20 போட்டிகளில் நான்கு போட்டிகளில் வென்றுள்ளது. பாகிஸ்தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விளையாடிய 17 போட்டிகளில் 16 போட்டிகளில் வென்றுள்ளது. 2021ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடியபோது தோல்வியடைந்தது.

 

சிவப்புக் கோடு

ஆசிஃப் அலி களமிறங்கி 6 பந்துகளில் 9 ரன்களை அடித்திருந்த நிலையில், 17வது ஓவரில் புவனேஷ்வரின் பந்துவீச்சில் அவுட் ஆனார். பாகிஸ்தானின் 6வது விக்கெட்டும் விழுந்த நிலையில், 150 ரன்களை அடிப்பதே சிரமம் என்ற நிலையில் ஆடிக் கொண்டிருந்தது. ஆனால், 18வது ஓவரின் முதல் பந்திலேயே மீண்டும் முகமது நவாஸின் விக்கெட் வீழ்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து 19வது ஓவரில், மீண்டும் ஷதாப் கான், நசீம் ஷா ஆகியோரின் விக்கெட்களும் வீழ்த்தப்பட்டன. 19 ஓவர்களின் இறுதியில் பாகிஸ்தான் 9 விக்கெட்களை இழந்து 136 ரன்களை பெற்றுள்ளது.

இருபதாவது ஓவரின் ஐந்தாவது பந்தில் பாகிஸ்தான் அணியின் கடைசி விக்கெட்டாக ஷாநவாஸ் தஹானியை அஷ்தீப் சிங் அவுட் ஆக்கினார். பாகிஸ்தான் அணியின் பேட்டிங் 10 விக்கெட்களையும் இழந்து 147 ரன்களோடு முடிவடைந்தது.

 

இந்தியா - பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணி டாஸ் வென்ற பிறகு, "டாஸ் அவ்வளவு முக்கியமானது என்று நான் நினைக்கவில்லை. சில ஆண்டுகளாக இங்கு விளையாடி வருவதால், எங்கள் முன்பாக ஒரு ஸ்கோரை வைத்துக்கொண்டு விளையாடுவது நல்ல தேர்வாக இருக்கும் என்று நினைத்தேன். துரதிர்ஷ்டவசமாக ரிஷப் பன்ட் வெளியேற வேண்டியிருந்தது. நாங்கள் கார்த்திக்கை களமிறக்குகிறோம்," என்று ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

"நாங்கள் முதலில் பவுலிங் ஆட வேண்டுமென்று நினைத்தோம். ஆனால், அது எங்கள் கையில் இல்லை," என்று பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆஸம் தெரிவித்தார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், உலகையே மெய்சிலிர்க்க வைக்கும், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான, பரபரப்பான இந்தப் போட்டி ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் வகையில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக, இந்த இரண்டு அணிகளும் மோதுகின்ற சிறப்புமிக்க போட்டிக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

 

சிவப்புக் கோடு

கறுப்பு பேண்ட் அணிந்த பாகிஸ்தான் வீரர்கள்

பாகிஸ்தான் வீரர்கள் தங்கள் கையில் கறுப்பு பேண்ட் அணிந்துள்ளனர். தங்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சேதங்களைக் குறிக்கும் விதமாக இதை அவர்கள் அணிந்துள்ளதாக இஎஸ்பிஎன் குறிப்பிட்டுள்ளது.

பாகிஸ்தானில் பருவமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் கடந்த 24 மணிநேரங்களில் 119 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

 

சிவப்புக் கோடு

கடந்த 10 மாதங்களுக்குள் இரண்டாவது முறையாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மீண்டும் இவை மோதுகின்றன. கடந்த அக்டோபரில் துபாயில் நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியின்போது, பாகிஸ்தான், 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

டி20 உலகத் தர வரிசையில் இந்தியா முதலிடத்திலும் பாகிஸ்தான் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

இந்தியாவும் பாகிஸ்தானும் 1984 முதல் இதுவரை 14 முறை ஆசிய கோப்பையில் மோதியுள்ளன. அதில் இந்தியா 8 முறையும் பாகிஸ்தான் 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 1997ஆம் ஆண்டு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. அதில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மூன்றாவது முறையாக இரண்டு நாடுகளும் ஆசிய கோப்பையில் மோதுகின்றன.

விராட் கோலி, பாபர் ஆஸம் இருவரும் ஒருவரையொருவர் குறித்து நம்பிக்கை தெரிவித்திருந்தனர். இவர்கள் இருவருமே உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களாக கருதப்படுகின்றனர். சமீபகாலமாக விராட் கோலி தடுமாறிய நிலையில் அவருக்கு ஆதரவாக பாபர் ஆஸம் கருத்து தெரிவித்திருந்தார். அதேபோன்று, பாபர் ஆஸமும் சிறந்த பேட்ஸ்மேன் என்று புகழாரம் சூட்டியிருக்கிறார் விராட் கோலி. இருவரும் நேர்த்தியான பேட்ஸ்மேன்கள் என்பதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிக்கக்கூடும்.

https://www.bbc.com/tamil/india-62706072

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம்: 'வெற்றி அடையாமல் போனதற்கு வெட்கப்படுகிறேன்'

3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

இந்தியா-பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

'ஆட்டத்தை வெற்றியுடன் முடிக்காததற்கு வெட்கப்படுகிறேன்' என்று இந்தியாவுடனான ஆசிய கோப்பை டி20 போட்டி தோல்விக்குப் பிறகு பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் கூறினார். கடைசி ஓவர் வரை நீடித்த போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தி்ல் வெற்றி பெற்றது.

கடைசி ஓவரில் இந்தியா வெற்றிபெற 7 ரன்கள் தேவைப்பட்டன. பாகிஸ்தான் வீரர் நவாஸ் வீசிய பந்து ஜடேஜாவின் பேட்டையும் கடந்து ஸ்டம்ப்களை பதம் பார்த்தது. ஆடுகளத்தில் பரபரப்பு கூடியது.

அடுத்து வந்த அனுபவம் வாய்ந்த தினேஷ் கார்த்திக் சிங்கிள் எடுத்து ஸ்டிரைக்கை ஹர்திக் பாண்டியா வசம் வழங்கினார். 3வது பந்து டாட் பாலாக மாறியது.மீதமுள்ள 3 பந்துகளில் இந்தியா 6 ரன்கள் எடுத்தாக வேண்டும். ஜடேஜாவின் ஆட்டமிழப்பும் ஒரு டாட் பந்தும் ஹர்திக் பாண்டியாவுக்கு நெருக்கடியை அளிக்கும் என கணிக்கப்பட்டிருந்தாலும் எதையும் பொருட்படுத்தாது தனக்கே உரிய பாணியில் 4வது பந்தை லாங்-ஆனில் சிக்சருக்கு பறக்கவிட்டு வெற்றியை தேடித் தந்தார்.

இரண்டு பந்துகளை மீதம் வைத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி.

 

இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் என்ன நடந்தது?

ஆசிய கோப்பை டி20 போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஞாயிற்றுக்கிழமை பலப்பரிட்சை நடத்தின. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய வீரர்களின் துல்லியமான பந்து வீச்சால் பாகிஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து, 147 ரன்களில் ஆல் அவுட்டானது.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் 43 ரன்கள் எடுத்தார். சிறப்பாகப் பந்து வீசிய புவனேஸ்வர் குமார் 26 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றினார். இதுவே பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டிகளில் இந்தியாவின் சிறப்பான பந்து வீச்சு. இதேபோல ஹர்திக் பாண்டியா தனது பங்கிற்கு 3 முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார்.

 

சிவப்புக் கோடு

  • சர்வதேச டி20 போட்டியில் அதிக ரன்கள் (3499) குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் ரோஹித் ஷர்மா. நியூசிலாந்தின் மார்டின் கப்தில் (3497) ரன்கள் எடுத்து 2ம் இடம் வகிக்கிறார்.
  • பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் மூலம் விராட் கோலி தனது 100வது சர்வதேச டி20 போட்டியில் விளையாடிய பெருமையைப் பெற்றார்.
  • தான் ஆடியுள்ள 53 டி20 ஆட்டங்களில் கே.எல்.ராகுல் 2வது முறையாக கோல்டன் டக் ஆகிறார். முன்னதாக 2016இல் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கோல்டன் டக்கானார் ராகுல்.
 

சிவப்புக் கோடு

தொடக்கத்தில் தடுமாறிய இந்தியா

148 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. நசீம் வீசிய முதல் ஓவரின் 2வது பந்தை எதிர்கொண்ட கே.எல்.ராகுல் டக் அவுட்டாகி பெவிலியன் திரும்ப, ரோஹித் ஷர்மா 12 ரன்களில் ஆட்டமிந்தார். 100வது டி20 போட்டியில் களமிறங்கிய கோலி தொடக்கத்தில் தடுமாறினாலும் பின்னர் பொறுப்புடன் ஆடி, 35 ரன்கள் எடுத்து விடைபெற்றார். 10 ஓவர்களில் இந்தியா 3 முக்கிய விக்கெட்களை இழந்து 62 ரன்கள் மட்டுமே சேர்த்து தடுமாறியது. சூர்யகுமார் 18 ரன்களில் வெளியேறினார். ஆட்டம் மெல்ல மெல்ல பாகிஸ்தான் வசம் நகர்ந்தது.

 

இந்தியா-பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

முடித்துக் கொடுத்த ஹர்திக் பாண்டியா

இதையடுத்து ஜடேஜாவும் ஹர்திக் பாண்டியாவும் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி ரன்களை உயர்த்தினர். 29 பந்துகளில் ஜடேஜா 35 ரன்களும் 17 பந்துகளில் ஹர்திக் பாண்டியா 33 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர். இருவரும் இணைந்து 52 ரன்கள் சேர்த்ததே பாகிஸ்தானுக்கு எதிராக 5வது விக்கெட்டிற்கு ஒரு ஜோடி எடுத்த அதிகபட்ச ரன்னாக அமைந்தது. முன்னதாக 2007இல் தோனியும் உத்தப்பாவும் 46 ரன்கள் சேர்த்திருந்தனர்.

2021 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் விளைவாக கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானார் ஹர்திக் பாண்டியா. பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஆட்டங்களின்போது முக்கியமான தருணங்களில் விக்கெட்களை பறிகொடுத்தார். அதே துபாய் மைதானத்தில் இப்போது தன்னை நிரூபித்திருக்கிறார், ஹர்திக். பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்த ஹர்திக் பாண்டியா ஆட்ட நாயகனாகவும் தேர்வானார்.

 

சிவப்புக் கோடு

  • துபாயில் நடந்த கடைசி 16 டி20 போட்டிகளில் 15 ஆட்டங்கள் 2வது பேட் செய்த அணியே வெற்றிபெற்றிருக்கிறது.
  • டி20-இல் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராக புவனேஸ்வர் குமார் திகழ்கிறார் (9 விக்கெட்).
  • முதல்முறையாக டி20-இல் 10 விக்கெட்களையும் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.
 

சிவப்புக் கோடு

ஹர்திக்கை பாராட்டிய பாகிஸ்தான் கேப்டன்

வெற்றிக்குப் பிறகு பேசிய ஹர்திக், "இறுதியில் நவாஸ் பந்துவீச வருவார் என்பதை அறிந்திருந்தேன். எங்களுக்கு 7 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. ஒருவேளை 15 ரன்கள் தேவைப்பட்டிருந்தாலும் அதை முடித்துக் கொடுத்திருப்பேன். பவுலர்கள் என்னைவிட அதிக அழுத்தத்தில் இருப்பதாக உணர்ந்தேன். இறுதி ஓவரில் எனக்கு ஒரேயொரு சிக்சர் மட்டும்தான் தேவைப்பட்டது. மற்ற அனைத்தையும் எளிமையாக அணுக விரும்பினேன்," என்றார்.

 

இந்தியா-பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"சில நேரங்களில் நாங்கள் சவால்களை எதிர்கொண்டோம். ஆனால் அனைத்தையும் சமாளித்து முன்னோக்கிச் செல்கிறோம். ஹர்திக் அணிக்குத் திரும்பியதில் இருந்து திறமையாகச் செயல்படுகிறார். அவருக்கு ஐபிஎல் தொடரும் சிறப்பாகவே அமைந்தது," என்று கேப்டன் ரோஹித் சர்மா புகழாம் சூட்டினார்.

போட்டியை பாண்டியா அற்புதமாக முடித்ததாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸமும் பாராட்டு தெரிவித்தார். அவர், "நாங்கள் ஒரு 10 -15 ரன்கள் குறைவாக எடுத்திருந்தோம். இருந்தாலும் எங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தஹானி சேர்த்த சில ரன்கள் எங்களுக்கு உதவியது. இருந்தாலும் ஆட்டத்தை வெற்றியுடன் முடிக்காததற்கு வெட்கப்படுகிறேன்," எனக் குறிப்பிட்டார்.

பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் விளையாட்டு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்திய வீரர்கள் சறுக்கியது எங்கே?

இந்தியாவை பொறுத்தவரை முதல் 7 வீரர்களுமே பேட்டிங் ஆடக்கூடியவர்கள். ஆனால் பேட்டிங்கில் மட்டுமே பங்களிக்கக்கூடிய வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அவ்வளவாக சோபிக்கவில்லை. பாகிஸ்தான் 160+ ரன் சேர்த்திருந்தால் அது நிச்சயம் இந்தியாவுக்கு நெருக்கடியை அளித்திருக்கும்.

காரணம் ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல் பார்ட்னர்ஷிப் 3 பந்துகளைக்கூட தாண்டவில்லை. இருவருமே அடுத்தடுத்து விக்கெடைகளை இழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்ய குமார் யாதவ் 18 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே சேர்த்தார். 3 பேட்ஸ்மேன்களின் தடுமாற்றம், ஆல்ரவுண்டர்களுக்கு அழுத்தத்தையும் கொடுத்தது. எதிர்வரும் ஆட்டங்களில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் களத்தில் நங்கூரமிட்டால் மட்டுமே அதிக ரன்களை குவிக்க முடியும்.

விராட் கோலி தடுமாறினாரா?

 

கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

42 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு முக்கியமான கிரிக்கெட் போட்டியில் களமிறங்கினார் விராட் கோலி. அவர் எதிர்கொண்ட 2வது பந்தே எட்ஜில் பட்டது. கேட்சை பிடிக்க முயன்ற ஃபாகர் சமானுக்கு முடியாமல் போனது. ஒருவேளை விராட் கோலி அந்த பந்தில் விக்கெட்டை இழந்திருந்தால் நிலைமையே வேறு. அதேபோன்று இரு முறை இன்சைட் எட்ஜாகி பந்து தப்பிச் சென்றது. தொடக்கத்தில் விராட் கோலி சற்று தடுமாறவே செய்தார். சமீபத்தில் மன நெருக்கடி குறித்து கோலி மனம் திறந்து பேசியிருந்தார். இருப்பினும் பந்துகளை நிதானமாக எதிர்கொண்டு 34 பந்துகளில் 35 ரன்கள் பதிவு செய்தார். இதில் ஒரு சிக்சர், 3 பவுன்டர்கள் அடக்கம்.

ரிஷப் பண்ட் vs தினேஷ் கார்த்திக்: யார் பெஸ்ட்?

 

ஆசிய கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரிஷப் பண்டிற்கு பதில் மூத்த வீரர் தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட்டது பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. இருப்பினும் இதைச் சிறந்த முடிவாகக் கருதுகிறார் பயிற்சியாளர் ராகுல் டிராவிட். ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் பண்ட் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்து வந்தாலும் சமீபத்தில் நடந்த டி20 போட்டிகளில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அவரது ஆட்டம் அமைந்திருக்கவில்லை. கடைசி 10 டி20 போட்டிகளில் பண்ட் சேர்த்தது மொத்தம் 171 ரன்கள் மட்டுமே. சராசரியாக 17.1.

"டி20 போட்டியை முடித்துக் கொடுப்பதில் பண்டை விட தினேஷ் கார்த்திக்கிற்கு அனுபவம் அதிகம். சமீபத்திய டி20 போட்டிகளில் தினேஷ் கார்த்திக் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார். இருப்பினும் ஜடேஜாவை தவிர்த்து இந்தியாவுக்கு ஒரேயொரு இடது கை பேட்ஸ்மேன் மட்டுமே விளையாடுவது இந்தியாவுக்கு சற்று பின்னடைவாக இருக்கலாம்," என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் கூறியுள்ளார்.

https://www.bbc.com/tamil/india-62710761

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுப்பர் 4 வாய்ப்பை குறிவைத்து பங்களாதேஷுடன் நாளை மோதுகிறது ஆப்கானிஸ்தான்

By VISHNU

29 AUG, 2022 | 07:23 PM
image

(நெவில் அன்தனி)

துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் ஆரம்பப் போட்டியில் முன்னாள் சம்பியன் இலங்கையை துவம்சம் செய்த ஆப்கானிஸ்தான் மற்றொரு வெற்றியையும் சுப்பர் 4 வாய்ப்பையும் குறிவைத்து ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் நாளை (30) இரவு நடைபெறவுள்ள பங்களாதேஷுடனான போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.

இந்தப் போட்டி சர்வதேச இருபது 20 கிரிக்கெட் அரங்கில் அதிகூடிய விக்கெட்களை வீழ்த்தியோர் வரிசையில் முதல் மூன்று இடங்களுக்குள்   இருக்கும் ஷக்கிப் அல் ஹசனுக்கும் ராஷித் கானுக்கும் இடையிலான போட்டியாக அமையும் என கருதப்படுப்படுகிறது.

ஆரம்பப் போட்டியில் இலங்கையை 5 விக்கெட்களால் வெற்றிகொண்ட ஆப்கானிஸ்தான், இன்றைய போட்டியிலும் வெற்றி பெறுவதற்கு அனுகூலமான அணியாக காணப்படுகிறது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நேற்றைய தினம் கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்திய போட்டியைப் போன்று ஆப்கானிஸ்தானுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான இன்றைய போட்டியும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேகப்பந்துவீச்சாளர்களான பஸால்ஹக் பாறூக்கி, நவீன் உல் ஹக் ஆகிய இருவரும் மிகத் திறமையாக பந்துவீசி இலங்கையின் முதல் 3 துடுப்பாட்ட வீரர்களை 5 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து ஆப்கானிஸ்தானுக்கு நம்பிக்கை ஊட்டியிருந்தனர்.

இந்த வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கு பெரிதும் தடுமாறிய இலங்கையை இறுதியில் 8 விக்கெட்களால் ஆப்கானிஸ்தான் இலகுவாக வெற்றிகொண்டிருந்தது.

அப் போட்டியில் ஆரம்ப வீரர்களான ஹஸரத்துல்லா ஸஸாய் , ரஹமானுல்லா குர்பாஸ் ஆகிய இருவரும் பவர் ப்ளே ஓவர்களில் 83 ஓட்டங்களைக் குவித்து ஆப்கானிஸ்தானுக்கு அதிரடி ஆரம்பத்தை இட்டுக்கொடுத்து வெற்றியை இலகுபடுத்தியிருந்தனர்.

அதேபோன்றதொரு வெற்றியை பங்களாதேஷுக்கு எதிரான போட்டியிலும் ஆப்கானிஸ்தான் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபுறத்தில் பங்களாதேஷின் அண்மைக்கால பெறுபெறுகள் திருப்திகரமாக இல்லை. இந்த வருடம் விளையாடியுள்ள 8 இருபது 20 போட்டிகளில் 2இல் மாத்திரமே பங்களாதேஷ் வெற்றியீட்டியுள்ளது.

அத்துடன் ஆப்பகானிஸ்தானுக்கு எதிராக இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் பங்களாதேஷ் 3இலும் ஆப்கானிஸ்தான் 5 இலும்  வெற்யீட்டியுள்ளன.

இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறும் ஷார்ஜா ஆடுகளும் பொதுவாக சுழல்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதை எடுத்துக்காட்டுவதால் இன்றைய போட்டி சுழல்பந்துவீச்சாளர்களுக்கு இடையிலான போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக சர்வதேச இருபது 20 கிரிக்கெட் அரங்கில் அதிக விக்கெட்களை வீழ்த்தியுள்ளோர் வரிசையில் 121 விக்கெட்களுடன் முதலிடத்தில் இருக்கும் பங்களாதேஷ் அணித் தலைவர் ஷக்கிப் அல் ஹசனுக்கும் 112 விக்கெட்களுடன் 3 ஆம் இடத்தில் இருக்கும் ராஷித் கானுக்கும் இடையிலான போட்டியாக இந்தப் போட்டி அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

அணிகள் (பெரும்பாலும்)

ஆப்கானிஸ்தான்: ஹஸ்ரத்துல்லா ஸஸாய், ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், நஜிபுல்லா ஸத்ரான், கரிம் ஜனத், மொஹம்மத் நபி (தலைவர்), ராஷித் கான், அஸமத்துல்லா ஓமர்ஸாய், நவீன் உல் ஹக், முஜீப் உர் ரஹ்மான், பஸால்ஹக் பாறூக்கி.

பங்களாதேஷ்: மொஹம்மத் நய்ம், அனாமுல் ஹக், ஷக்கிப் அல் ஹசன் (தலைவர்), அபிப் ஹொசெய்ன், முஷ்பிக்குர் ரஹ்மான், மஹ்முதுல்லா, ஷபிர் ரஹ்மான், மெஹெதி ஹசன், மொஹம்மத் சபியுதின், நசும் அஹ்மத், முஷ்தாபிஸுர் ரஹ்மான்.

https://www.virakesari.lk/article/134625

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பங்களாதேஷை 7 விக்கெட்டுகளால் அபார வெற்றி கொண்டது ஆப்கான்

31 AUG, 2022 | 06:22 AM
image

 

(நெவில் அன்தனி)

பங்களாதேஷுக்கு எதிராக ஷார்ஜா விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்ற பி குழுவுக்கான முதலாம் சுற்று ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்களால் ஆப்கானிஸ்தான் அபார வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் தனது இரண்டாவது நேரடி வெற்றியை ஈட்டிய ஆப்கானிஸ்தான், சுப்பர் 4 சுற்றில் விளையாட முதலாவது அணியாக தகுதிபெற்றுக்கொண்டது.

Mushfiqur-Rahim-stumps-Rahmanullah-Gurba

128 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 18.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 131 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.

இந்த வெற்றியில்  முஜிப் உர் ரஹ்மான், ராஷித் கான் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளும்   நஜிபுல்லா ஸத்ரானின் அதிரடி துடுப்பாட்டமும் இப்ராஹிம் ஸத்ரானின் நிதானமான துடுப்பாட்டமும் முக்கிய பங்காற்றின.

அதிரடியாக ஓட்டங்களைக் குவித்த நஜிபுல்லா ஸத்ரான் 17 பந்துகளில் 6 சிக்ஸ்கள், ஒரு பவுண்டறி அடங்கலாக 43 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

Rashid-Khan-reacts-after-a-close-call_-A

மறுபக்கத்தில் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய இப்ராஹிம் ஸத்ரான் 41 பந்துகளில் 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 33 பந்துகளில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆப்கானிஸ்தானின் வெற்றியை இலகுவாக்கினர்.

பங்காதேஷைப் போன்றே ஆப்கானிஸ்தானுக்கும் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

ஆமைவேகத்தில் ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டிருந்த ஆப்கானிஸ்தானின் முதலாவது விக்கெட் 5ஆவது ஓவரின் முதல் பந்தில் வீழ்ந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை 15 ஓட்டங்களாக இருந்தது.

இலங்கைக்கு எதிரான ஆரம்பப் போட்டியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ரஹ்மானுல்லா குர்பாஸ் இப் போட்டியில் 11 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

ஹஸரத்துல்லா ஸஸாய், இப்ராஹிம் ஸத்ரான் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 30 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைக் கட்டியெழுப்ப முயற்சித்தனர்.

Mohammad-Naim-is-bowled_-Afghanistan-vs-

ஆனால், ஹஸரத்துல்லா ஸஸாய் 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததுடன் சொற்ப நேரத்தில் அணித் தலைவர் மொஹமத் நபி 8 ஓட்டங்களுடன் களம் விட்டு வெளியேறினார்.

அதன் பின்னர் ஓட்டங்கள் பெறுவதில் சிரமத்தை எதிர்கொண்ட ஆப்கானிஸ்தான், 16 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்களை இழந்து 85 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.

ஆனால், அடுத்த 2 ஓவர்களில் முறையே 17 ஓட்டங்களையும் 22 ஓட்டங்களையும் குவித்த ஆப்கானிஸ்தான், 19ஆவது ஓவரின் 3ஆவது பந்தில் வெற்றி இலக்கை அடைந்தது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 127 ஓட்டங்களைப் பெற்றது.

6ஆம், 7ஆம் விக்கெட்களில் ஏற்படுத்தப்பட்ட சிறப்பான இணைப்பாட்டங்களே பங்களாதேஷ் சுமாரான மொத்த எண்ணிக்கையைப் பெற உதவியது.

பங்களாதேஷின் முன்வரிசை துடுப்பாட்டம் சிறப்பாக அமையாததுடன் பவர் ப்ளே பூர்த்திசெய்யப்பட்டபோது அவ்வணி 3 விக்கெட்களை இழந்து 23 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.

10 ஓவர்கள் நிறைவில் பங்களாதேஷின் மொத்த எண்ணிக்கை வெறும் 50 ஓட்டங்களாக இருந்ததுடன் 4 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டிருந்தது. மொஹம்மத் நய்ம் (6), அனாமுள் ஹக் (5), அணித் தலைவர் ஷக்கிப் அல் ஹசன் (11), முஷ்பிக்குர் ரஹிம் (1) ஆகிய நால்வரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர்.

11ஆவது ஓவரில் அபிவ் ஹொசெய்ன் 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தபோது மொத்த எண்ணிக்கை 53 ஓட்டங்களாக இருந்தது.

ஆனால், 6ஆவது விக்கெட்ல் மஹ்முதுல்லாவுடன் 36 ஓட்டங்களையும் 7ஆவது விக்கெட்டில் மெஹெதி ஹசனுடன் 38 ஓட்டங்களையும் மொஸாடெக் ஹொசெய்ன் பகிர்ந்து பங்களாதேஷை கௌரவமான நிலையில் இட்டார்.

மஹ்முதுல்லா 25 ஓட்டங்களையும் மெஹெதி ஹசன் 14 ஓட்டங்களையும் பெற்றதுடன் மொசாடெக் ஹொசெய்ன் 31 பந்துகளில் 48 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் முஜீப் உர் ரஹ்மான் 4 ஓவர்களில் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ராஷித் கான் 4 ஓவர்களில் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/134718

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கான் ஒரு முடிவோட தான் வந்திருக்கு.இப்படியே தொடர வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சூர்யகுமார் யாதவ் - விராட் கோலி அதிரடியில் வென்ற இந்தியா: ஆவேசமாக ஆடி அசத்திய ஹாங்காங் - ஆசிய கோப்பை கிரிக்கெட்

  • அஸ்ஃபாக்
  • பிபிசி தமிழ்
1 செப்டெம்பர் 2022, 03:21 GMT
புதுப்பிக்கப்பட்டது 54 நிமிடங்களுக்கு முன்னர்
 

இந்தியா - ஹாங்காங் அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

துபாயில் நேற்று நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் இந்தியா - ஹாங்காங் அணிகள் இடையிலான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

அனுபவமும், திறமையும் மிக்க இந்திய அணி வெற்றி பெற்றதில் வியப்பு இல்லை. ஆனால், ஒப்பீட்டளவில் அனுபவம் அற்ற அணியான ஹாங்காங் தோல்வியைத் தழுவினாலும் அசத்தலாகப் போராடி பார்வையாளர்களை வியக்கவைத்தது.

அதே நேரம் வெற்றி பெற்ற இந்திய அணி ஆட்டத்தில் ஏராளமான தவறுகள் செய்து சொதப்பியது. இந்திய அணியின் பேட்டிங்கில் சூர்ய குமார் யாதவ் - விராட் கோலி இருவரும் இணைந்து 45 பந்துகளில் 98 ரன்கள் சேர்த்தது விறுவிறுப்பு ஊட்டுவதாக இருந்தது.

பந்துவீச்சில் ஆவேஷ் கான் - அர்ஷ்தீப் சிங் ஜோடி 97 ரன்களை விட்டுக்கொடுத்தது.

 

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங்கை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றிருந்தாலும் பந்துவீச்சை மேலும் கூர்தீட்டுவது அவசியம் என்பதை கேப்டன் ரோஹித் சர்மா நிச்சயம் உணர்ந்திருக்கக்கூடும்.

 

कोरोना वायरस

யார் இந்த சூர்யகுமார் யாதவ்?

 

சூர்யகுமார் யாதவ் - விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

சூர்யகுமார் யாதவ் - விராட் கோலி

மும்பையை பூர்விகமாகக் கொண்ட சூர்யகுமார் யாதவ், கடந்த ஆண்டு (2021) மார்ச் 14ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான டி20 ஆட்டத்தின் மூலம் இந்திய அணிக்கு அறிமுகமானார்

இதுவரை 25 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 6 அரை சதம் ஒரு சதம் அடித்துள்ளார்.

2018 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடிய சூர்ய குமார் அந்த தொடரில் 512 ரன்கள் சேர்த்தார்.

2018 ஐபிஎல்லில் மும்பை அணியின் டாப் ஸ்கோரராக திகழ்ந்த சூர்யகுமார் பலரது கவனத்தையும் ஈர்த்தார். இதன் மூலம் இந்திய அணியில் இடம்பெறும் வாய்ப்பும் பிரகாசமானது

ஹாங்காங்கிற்கு எதிரான போட்டியில் 22 பந்துகளில் அரைசதம் விளாசியதன் மூலம் குறைந்த பந்துகளில் அரைசதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா, ஷிகர் தவானின் சாதனையை சமன் செய்துள்ளார் சூர்யகுமார்.

சூர்யகுமாரின் நேற்றைய ஆட்டத்தை ரசித்த விராட் கோலி, போட்டி முடிந்ததும் அவருக்கு தலைவணங்கினார்.

 

कोरोना वायरस

இந்தியா vs ஹாங்காங்: என்ன நடந்தது?

 

இந்தியா - ஹாங்காங் அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளித்துவிட்டு அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். முதல் 2 ஓவர்களில் இந்தியா வெறும் 6 ரன்களை மட்டுமே சேர்த்தது. 3வது ஓவரில் அதிரடியை தொடங்கிய ரோஹித் சர்மா 2 சிக்சர், 1 பவுன்டரியை விளாசினார். 21 ரன்களில் அவர் விடைபெற, கே.எல்.ராகுல் 39 பந்துகளை எதிர்கொண்டு 36 ரன்கள் மட்டுமே சேர்த்தார். 2 சிக்சர்களை அவர் விளாசியிருந்தாலும் 1 பவுண்டரி கூட அவரது பேட்டில் இருந்து கிடைக்கவில்லை.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

கோலியின் அரைசதம்: கொண்டாடிய ரசிகர்கள்

13 ஓவர்கள் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதையடுத்து விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ், ஹாங்காங் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். டி20 போட்டியில் கோலி தனது 31வது அரை சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து கோலியின் ஆட்டம் விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், பாகிஸ்தான், ஹாங்காங் உடனான ஆட்டத்தில் அவரது செய்ல்பாடு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உள்ளிட்ட ஐபிஎல் அணிகள் கோலியின் ஆட்டத்தை வெகுவாக பாராட்டியுள்ளன. 44 பந்துகளில் கோலி 59 ரன்களும் சூர்ய குமார் 26 பந்துகளில் 6 சிக்சர் 6 பவுன்டரி என 68 ரன்களும் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் சேர்த்தது. ஹாங்காங் அணி 20 ஓவர்கள் முடிவில் 152 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியைத் தழுவியது. அதிகபட்சமாக பாபர் ஹயாத் 41 ரன்களும் கின்சித் 30 ரன்களும் விளாசினர்.

பந்துவீசிய விராட் கோலி

 

இந்தியா - ஹாங்காங் அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

பந்துவீச்சில் இந்தியா தடுமாறிய நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு விராட் கோலி ஹாங்காங்கிற்கு எதிரான ஆட்டத்தில் 17வது ஓவரை வீசினார். ஒரேயொரு ஓவர் வீசி 6 ரன்கள் மட்டுமே அவர் விட்டுக்கொடுத்தார். 6 ஆண்டுகள் கழித்து டி20 போட்டியில் கோலி பந்துவீசியது கவனிக்கத்தக்கது. இதனிடையே, ஆசிய கோப்பை தகுதிச்சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாங்காங் அணி, இந்தியாவுடனான போட்டியிலும் முழு திறனை வெளிப்படுத்தியது. அனுபவம் வாய்ந்த அணிக்கு எதிராக 152 ரன்கள் வரை சேர்த்தது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. தோல்விக்குப் பின்னர் பேசிய ஹாங்காங் கேப்டன் நிசாகத் கான், " 13வது ஓவர் வரை பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம்; அதற்கு பின்னர் சூர்ய குமார் யாதவ் நல்லதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் பேட்டிங் செய்த விதம் பார்ப்பதற்கு அருமையாக இருந்தது. டெத் ஓவர்களில் நாங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எங்கள் அணியை நினைத்து பெருமைப்படுகிறேன்" என குறிப்பிட்டார்

என்ன தவறு செய்தது இந்தியா?

இந்திய அணி பந்துவீச்சில் அதிக ரன்களை வாரி வழங்கியது. குறிப்பாக ஆவேஷ் கான் 4 ஓவர்களை வீசி 53 ரன்களையும் அர்ஷ்தீப் சிங் 44 ரன்களையும் விட்டுக் கொடுத்தனர்.

இந்தியா தனது பவர்பிளேயில் 44 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில், ஹாங்காங் அணியோ 51 ரன்களை குவித்தது. அதேபோன்று பேட்டிங்கில் சூர்யகுமார் களத்திற்கு வரும்வரை இந்திய அணியின் ரன் ரேட் வெறும் 7 மட்டுமே இருந்தது.

 

இந்தியா - ஹாங்காங் அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் என இருவரையும் ஆடும் வெலனில் தேர்வு செய்த ரோஹித் சர்மாவின் முடிவை முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் விமர்சித்துள்ளார். "ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளித்தது நல்ல விஷயம்தான் என்றாலும் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக தீபக் ஹூடாவை களமிறக்கியிருக்கலாம். தீபக் ஹூடா பேட்டிங் பவுலிங் என இரண்டையும் செய்திருப்பார்" என கவுதம் கம்பீர் கூறியுள்ளார். இதேபோல "இந்திய அணியின் பந்துவீச்சு போதுமான அளவுக்கு எதிரணியை பயமுறுத்தும் வகையில் இல்லை" என மூத்த கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் ஆட்டங்களில் இந்தியாவின் ஆடும் லெவனில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

https://www.bbc.com/tamil/sport-62747607

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பங்களாதேஷை விரட்டியடித்த இலங்கை சுப்பர் - 4 சுற்றுக்குள் நுழைந்தது

02 SEP, 2022 | 12:00 AM
image

 

(நெவில் அன்தனி)

பங்களாதேஷிற்கு எதிராக துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (01) கடைசிவரை மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய தீர்மானம் மிக்க பி குழு ஆசிய கிண்ண முதல் சுற்றுப் போட்டியில் 4 பந்துகள் மீதமிருக்க 2 விக்கெட்களால் வெற்றியீட்டிய இலங்கை, 3ஆவது அணியாக சுப்பர் 4 சுற்றில் விளையாட தகுதிபெற்றது.

ஆப்கானிஸ்தான், இந்தியா ஆகிய அணிகள் ஏற்கனவே சுப்பர் 4 சுற்றில் விளையாட தகுதி பெற்றிருந்தன.

Asitha-Fernando-celebrates-the-dismissal

பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 184 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 19.2 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இலங்கை இன்னிங்ஸில் 7ஆவது ஓவரில் மெஹெதி ஹசனின் பந்துவீச்சில் விக்கெட் காப்பாளர் முஷ்பிக்குர் ரஹிமிடம் பிடிகொடுத்த குசல் மெண்டிஸ், சற்று நேரத்தில் அப் பந்து நோபோல் என அறிவிக்கப்பட்டதால் துடுப்பாட்டத்தை தொடரும் வாய்ப்பை பெற்றார். அது இலங்கைக்கு திருப்புமுனையாகவும் அதிர்ஷ்டமாகவும்    அமைந்தது.

29 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த குசல் மெண்டிஸ் 60 ஒட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டமிழந்தார்.

 

அத்துடன் பங்களாதேஷ் அணி அநாவசியமாக நோ-போல்கள் (4) மற்றும் வைட்களை (8) விசியமை, பிடிக்கான மீளாய்வு ஒன்றைத் தவறவிட்டமை, கடைசி ஓவர்களை வீச அனுபம்வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இல்லாமல் போனமை,  என்பன அவ்வணியின் தோல்விக்கு மற்றைய காரணிகளாக அமைந்தன.

முதல் 3 ஓவர்களில் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 13 ஓட்டங்களைப் பெற்றிருந்த இலங்கை, அடுத்த 2 ஓவர்களில் ஓட்ட வெகத்தை அதிகரித்து 21 ஓட்டங்களை விளாசியது.

Dasun-Shanaka-plays-the-pull-shot_-Bangl

ஆனால், ஈபாடொட் ஹொசெய்னின் அடுத்த ஓவரில் பெத்தும் நிஸ்ஸன்க (20), சரித் அசலன்க (1) ஆகிய இருவரும் ஆட்டமிழக்க இலங்கை அணி அழுத்தத்தை எதிர்கொண்டது.

மொத்த எண்ணிக்கை 59 ஓட்டங்களாக இருந்தபோது மெஹெதி ஹசனின் பந்துவீச்சில் குசல் மெண்டிஸ் விக்கெட் காப்பாளர் முஷ்பிக்குர் ரஹிமிடம் பிடிகொடுத்து ஆடுகளத்தை விட்டு வெளியேற ஆரம்பித்தார்.

ஆனால் அந்தப் பந்து நோபோல் என அறிவிக்கப்பட்டதால் குசல் மெண்டிஸ் 29 ஓட்டங்களிலிருந்து தனது துடுப்பாட்டத்தைத் தொடர்ந்தார்.

எவ்வாறாயினும் அடுத்த ஓவரில் தனுஷ்க குணதிலக்க 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தபோது மொத்த எண்ணிக்கை 67 ஓட்டங்களாக இருந்தது.

மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 10 ஓட்டங்கள் செர்ந்தபோது பானுக்க ராஜபக்ஷ வெறும் 2 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

ஆனால், அதன் பின்னர் குசல் மெண்டிஸ், அணித் தலைவர் தசுன் ஷானக்க ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 34 பந்துகளில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்த முயற்சித்தனர். ஆனால்,குசல் மெண்டிஸ் தவறான அடி தெரிவின் மூலம் ஆட்டமிழந்தார். (131 - 5 விக்.)

அவர் 37 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 60 ஓட்டங்களைக் குவித்தார்.

அடுத்து களம் நுழைந்த வனிந்து ஹசரங்க டி சில்வா வந்த வேகத்திலேயே 2 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த தசுன் ஷானக்க 33 பந்துகளில் 3 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் அடங்கலாக 45 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்ததும் இலங்கை பெரும் நெருக்கடிக்குள்ளானது. (159 - 7 விக்.)

சாமிக்க கருணாரட்ன திறமையாகத் துடுப்பெடுத்தாடிய போதிலும் அதிகப்பிரசங்கித்தனம் காரணமாக இல்லாத ஒரு ஓட்டத்துக்கு ஆசைப்பட்டு 10 ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆனார்.

எனினும் அடுத்து களம் நுழைந்த அசித்த பெர்னாண்டோ என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை என்ற நோக்கில் துடுப்பை விசுக்கி அடித்து 3 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 10 ஓட்டங்ளைப் பெற்று இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தார்.

பங்களாதேஷ் பந்துவீச்சில் ஈபாதொத் ஹொசெய்ன் 51 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் தஸ்கின் அஹ்மத் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முன்னதாக அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பங்களாதேஷ் மிகவும் திறமையாகவும் சாதுரியமாகவும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 183 ஓட்டங்களைக் குவித்தது.

எவ்வாறாயினும் பங்களாதேஷின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

ஆரம்ப வீரர்களில் ஒருவரான சபிர் ரஹ்மான் 3ஆவது ஓவரில் 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தபோது மொத்த எண்ணிக்கை 19 ஓட்டங்களாக இருந்தது.

தொடர்ந்து மற்றைய ஆரம்ப விரர் மெஹிதி ஹசன் மிராஸுடன் 2ஆவது விக்கெட்டில் இணைந்த அணித் தலைவர் ஷக்கிப் அல் ஹசன் 39 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது மெஹிதி ஹசன் 38 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து அனுபவசாலியான முஷ்பிக்குர் ரஹிம் 4 ஓட்டங்களுடன் வெளியேற பங்களாதேஷ் சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டது. (63 - 3 விக்.)

மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 24 ஓட்டங்கள் சேர்ந்தபோது ஷக்கிப் அல் ஹசன் 24 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார். (10.3 ஓவர்களில் 87 - 4 விக்.)

ஆனால், அதன் பின்னர் இலங்கை பந்துவிச்சாளர்களை பங்களாதேஷ் துடுப்பாட்ட வீரர்கள் இலகுவாக பதம் பார்த்தனர்.

குறிப்பாக அபிப் ஹொசெய்னும் முன்னாள் அணித் தலைவர் மஹ்முதுல்லாவும் 5ஆவது விக்கெட்டில் 37 பந்தகளில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்திககொண்டிருந்தபோது அபிப் ஹொசெய்ன் 39 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். (144 - 5 விக்.)

மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 3 ஓட்டங்கள் மாத்திரம் செர்ந்தபோது மஹ்முதுல்லா 24 ஓட்டங்களுடனும் மொத்த எண்ணக்கை 159 ஓடட்டங்களாக இருந்தபோது மெஹெதி ஹசன் 1 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர்.

ஆனால், மொசாடெக் ஹொசெய்ன், தஸ்கின் அஹ்மத் ஆகிய இருவரும் கடைசி 11 பந்துகளில் 24 ஓட்டங்களை விளாசி மொத்த எண்ணிக்கையை 183 ஓட்டங்களாக உயர்த்தினர். கடைசி ஓவரில் மாத்திரம் 17 ஓட்டங்கள் பெறப்பட்டது.

மொசாடெக் ஹொசெய்ன் 9 பந்துகளில் 4 பவுண்ட்றிகள் அடங்கலாக 24 ஓட்டங்களுடனும் தமிம் இக்பால் 6 பந்துகளில் ஒரு சிக்ஸ் அடங்கலாக 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இலங்கை பந்துவீச்சில் சாமிக்க கருணாரட்ன 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க டி சில்வா 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். அவர்களை விட கட்டுப்பாட்டுடன் பந்துவீசிய மஹீஷ் தீக்ஷன 4 ஓவர்களில் 23 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டையும் டில்ஷான் மதுஷன்க 4 ஓவர்களில் 26 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். https://www.virakesari.lk/article/134858

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
RESULT
6th Match, Group A (N), Sharjah, September 02, 2022, Asia Cup
 
 
PAK FlagPAK
193/2
HKG FlagHKG
(10.4/20 ov, T:194) 38

Pakistan won by 155 runs

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹொங்கொங்கை பந்தாடி சுப்பர் - 4 க்குள் நுழைந்தது பாகிஸ்தான்

By DIGITAL DESK 5

03 SEP, 2022 | 09:34 AM
image

(என்.வீ.ஏ.)   

ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் நிறைவுபெற்ற ஏ குழுவுக்கான ஆசிய கிண்ண கடைசி லீக் போட்டியில் ஹொங்கொங்கை 155 ஓட்டங்களால் மிக இலகுவாக வெற்றி கொண்ட பாகிஸ்தான், சுப்பர் 4 சுற்றில் பங்குபற்ற 4ஆவது அணியாக தகுதிபெற்றது.

ஒரு பக்க சார்பாக நடைபெற்ற இப் போட்டியில் சகலதுறைகளிலும்   திறமையை வெளிப்படுத்திய பாகிஸ்தான்  அமோக வெற்றியீட்டியது.

மொஹம்மத் ரிஸ்வான், பக்கார் ஸமான், குஷ்தில் ஷா ஆகியோரது திறமையான துடுப்பாட்டங்களும் ஷதாப் கான், மொஹம்மத் நவாஸ், நசீம் ஷா ஆகியோரின் துல்லியமான பந்துவிச்சுகளும் பாகிஸ்தானின் வெற்றியை சுலபமாக்கின.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 20 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 193 ஓட்டங்களைக் குவித்தது.

3ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 13 ஓட்டங்களாக இருந்தபோது அணித் தலைவர் பாபர் அஸாம் 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததும் ஹொங்கொங் பெரு மகிழ்ச்சி அடைந்தது.

Fakhar Zaman, like the other Pakistan top-order batters, found the big shots tough to play, Hong Kong vs Pakistan, Asia Cup, Sharjah, September 2, 2022

ஆனால், அதன் பின்னர் ஆரம்ப வீரர் மொஹம்மத் ரிஸ்வான், பக்கார் ஸமான் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 80 பந்துகளில் 116 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

41 பந்துகளை எதிர்கொண்ட  பக்கார் ஸமான்  3 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் அடங்கலாக 53 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து ரிஸ்வான், குஷ்தில் ஷா ஆகிய இருவரும் 23 பந்துகளில் 64 ஓட்டங்களைக் குவித்து இருபது 20 ஆசிய கிண்ணக் கிரிக்கெட்டில் சாதனைமிகு மொத்த எண்ணிக்கையை பாகிஸ்தான் குவிப்பதற்கு உதவினர்.

மொஹம்மத் ரிஸ்வான் 57 பந்துகளில் 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் ஆட்டம் இழக்காமல் 78 ஓட்டங்களையும் குஷ்தில் ஷா 15 பந்துகளில் 5 சிக்ஸ்களுடன் ஆட்டமிழக்காமல் 35 ஓட்டங்களையும் குவித்தனர்.

Mohammad Rizwan plays a funky shot on one knee, Hong Kong vs Pakistan, Men's T20 Asia Cup, Sharjah, September 2, 2022

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஹொங்கொங் 10.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 38 ஓட்டங்களை மாத்திரம் பெற்று மோசமான தோல்வியைத் தழுவியது.

சர்வதேச இருபது 20 கிரக்கெட் போட்டியில் ஹொங் கொங் பெற்ற மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கை இதுவாகும்.

ஹொங்கொங்கின் மொத்த எண்ணிக்கையில் 10 உதிரிகளே அதிகூடிய எண்ணிக்கையாக இருந்தது. துடுப்பாட்டத்தில் ஒரு வீரரும் இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெறவில்லை. அணித் தலைவர் நிஸாகத் கான் அதிகபட்சமாக 8 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் ஷதாப் கான் 8 ஓட்டங்களுக்கு 4  விக்கெட்களையும்  மொஹம்மத் நவாஸ் 5 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நசீம் ஷா 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/134943

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானுக்கு பதிலடி கொடுத்த இலங்கை 4 விக்கெட்டுகளால் அபார வெற்றி

03 SEP, 2022 | 11:48 PM
image

 

(நெவில் அன்தனி)

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஆசிய கிண்ண சுப்பர் 4 சுற்றின் ஆரம்பப் போட்டியில் துடுப்பாட்டத்தில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய இலங்கை 4 விக்கெட்களால் மகத்தான வெற்றியீட்டியது.

Chamika-Karunaratne-gets-a-bit-of-love-f

ஆப்கானிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 176 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 19.1 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 179 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் முதல் சுற்றில் ஆப்கானிஸ்தானிடம் அடைந்த தோல்விக்கு இலங்கை உரிய பதிலடி கொடுத்தது.

பங்களாதேஷ் அணியுடனான தீர்மானம் மிக்க ஏ குழுவுக்கான முதல் சுற்று போட்டியில் அதிர்ஷ்டத்துக்கும் கடும் சவாலுக்கும் மத்தியில் வெற்றியீட்டிய இலங்கை, ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் மிகத் திறமையாக விளையாடி வெற்றியீட்டியது.

Danushka-Gunathilaka-loses-his-stumps-to

சம அளவில் மோதிக்கொள்ளப்பட்ட இந்தப் போட்டியில் பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ். தனுஷ்க குணதிலக்க, பானுக்க ராஜபக்ஷ ஆகியோரது திறமையான துடுப்பாட்டங்கள் இலங்கையை வெற்றி அடையச் செய்தன.

பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி 39 பந்துகளில் 62 ஓட்டங்களைக் குவித்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

Rashid-Khan-appeals-for-the-wicket-of-Da

முதலாவதாக ஆட்டமிழந்த குசல் மெண்டிஸ் 19 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்ட்றிகளுடன் 36 ஓட்டங்களைப் பெற்றார்.

மொத்த எண்ணிக்கை 80 ஓட்டங்களாக இருந்தபோது பெத்தும் நிஸ்ஸன்க 35 ஓட்டங்களுடன் களம் விட்டு வெளியேறினார்.

இந்த சுற்றுப் போட்டியில் 3ஆவது தடவையாக துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிய சரித் அசலன்க 8 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார்.

துடுப்பாட்ட வரிசையில் தன்னை உயர்த்திக்கொண்ட அணித் தலைவர் தசுன் ஷானக்க நீண்ட நேரம் தாக்குப்பிடிக்காமல் 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

Pathum-Nissanka-fell-caught-behind-to-Ra

தனுஷ்க குணதிலக்கவும் பானுக்க ராஜபக்ஷவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 15 பந்துகளில் 32 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு பலம் சேர்த்தனர்.

தனுஷ்க குணதிலக்க 20 பந்துகளில் 2 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 33 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து வெற்றி இலக்குக்கு 2 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் பானுக்க ராஜபகஷ அவசரத் துடுக்கை காரணமாக ஆட்டமிழந்தார். 14 பந்துகளை எதிர்கொண்ட அவர் 4 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 31 ஓட்டங்களைப் பெற்றார்.

Asitha-Fernando-removed-Rahmanullah-Gurb

வனிந்து ஹசரங்க ஆட்டமிழக்காமல் 16 ஓட்டங்களையும் சாமிக்க கருணாரட்ன ஆட்டமிழக்காமல் 5 ஓட்டங்களையும் பெற்று இலங்கையை வெற்றி அடையச் செய்தனர்.

ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் முஜீப் உர் ரஹ்மான் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நவீன் உல் ஹக் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்களைக் குவித்தது.

முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் தங்களாலான அதிகபட்ச பங்களிப்பை வழங்கி அணியின் மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்த்தனர்.

Rahmanullah-Gurbaz-and-Ibrahim-Zadran-ad

குறிப்பாக ரஹ்மானுல்லா குர்பாஸ் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 45 பந்துகளில் 6 சிக்ஸ்கள், 4 பவுண்டறிகள் அடங்கலாக 84 ஓட்டங்களைப் பெற்றார்.

13 ஓட்டங்களைப் பெற்ற ஹஸ்ரத்துல்லா ஸஸாயுடன் ஆரம்ப விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்த குர்பாஸ் 2ஆவது விக்கெட்டில் இப்ராஹிம் ஸத்ரானுடன் மேலும் 93 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

இப்ராஹிம் ஸத்ரான் 40 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர்களைவிட நஜிபுல்லா ஸத்ரான் 17 ஓட்டங்களைப் பெற்றார்.

இலங்கை பந்துவீச்சில் டில்ஷான் மதுஷன்க 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஆரம்ப பந்து வீச்சாளராக பயன்படுத்தப்பட்ட சுழல்பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷன 4 ஓவர்களில் 29 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

சுப்பர் 4 சுற்றில் இன்னும் ஒரு வெற்றியை சிறப்பான ஓட்ட வேகத்துடன் இலங்கை ஈட்டுமாக இருந்தால் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான அதன் வாய்ப்பு அதிகரிக்கும்.

சுப்பர் 4 சுற்றில் இந்தியாவை 6ஆம் திகதியும் பாகிஸ்தானை 9அம் திகதியும் இலங்கை எதிர்த்தாடவுள்ளது.

இந்தியாவும் பாகிஸ்தானும் நாளை நடைபெறவுள்ள சுப்பர் 4 போட்டியில் மோதவுள்ளன. https://www.virakesari.lk/article/135001

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா - பாகிஸ்தான்: தோல்விக்கு பதிலடி தருமா பாகிஸ்தான்?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

இந்தியா பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா பாகிஸ்தான் விளையாடினால் ரசிகர்கள் மத்தியில் அதற்கு எப்போதும் தனி இடம் உண்டு. அந்த வரிசையில் இன்று இரவு நடைபெற இருக்கும் ஆசியா கோப்பை டி20 போட்டியும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச்செய்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆசிய கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் இரு அணிகளும் லீக் சுற்றில் விளையாடிய நிலையில், இந்திய அணி பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்யாசத்தில் வென்ற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.

பின்னர் பாகிஸ்தான் - ஹாங்காங் இரு அணிகளும் விளையாடியபோது பாகிஸ்தான் அணி வென்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.

மீண்டும் விளையாடும் இந்தியா பாகிஸ்தான்

தற்போது சூப்பர் 4 சுற்றில் மீண்டும் இன்று இந்தியாவுடன் விளையாடுகிறது பாகிஸ்தான். இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு, துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்த ஆட்டம் தொடங்க உள்ளது.

 

கடைசி ஓவர் வரை நீண்ட கடந்த ஆட்டத்தைப் போலவே, இந்த ஆட்டத்திலும் இன்னும் விறுவிறுப்பான அம்சங்கள் நிறைய இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மைதானம் எப்படி?

இன்று போட்டி நடக்கும் மைதானத்தில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் போட்டி தொடங்கும் நேரத்தில் வெப்பநிலை குறையலாம். ஆயினும் வெப்பம் என்பது ஆட்டத்தின் போக்கைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கை வகிக்கும்.

அணிகளில் என்னென்ன மாற்றங்கள்?

இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஆவேஷ் கான் காய்ச்சல் காரணமாக இந்தப் போட்டியில் ஆடுவது சந்தேகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரவீந்திர ஜடேஜாவுக்கு பதில் அக்ஸர் படேல் களமிறங்குவார். ஹர்திக் பாண்டியாவும் இந்தப் போட்டியில் ஆடுவார் என்று என்று நம்பப் படுகிறது. எனினும் தினேஷ் கார்த்திக்கா, ரிஷப் பண்டா என்ற கேள்வி இன்னும் தொடருகிறது.

பாகிஸ்தானில் அணியின் ஷானவாஸ் தஹானி காயம் காரணமாக இந்தப் போட்டியில் ஆடமாட்டார். அவருக்குப் பதிலாக ஹசன் அலி அல்லது முகமது ஹஸ்னைன் இடம்பெறக்கூடும்.

இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் என்ன நடந்தது?

ஆசிய கோப்பை டி20 போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஞாயிற்றுக்கிழமை பலப்பரிட்சை நடத்தின. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய வீரர்களின் துல்லியமான பந்து வீச்சால் பாகிஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து, 147 ரன்களில் ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் 43 ரன்கள் எடுத்தார். சிறப்பாகப் பந்து வீசிய புவனேஸ்வர் குமார் 26 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றினார். இதுவே பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டிகளில் இந்தியாவின் சிறப்பான பந்து வீச்சு. இதேபோல ஹர்திக் பாண்டியா தனது பங்கிற்கு 3 முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார்.

148 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கியது இந்தியா. ஜடேஜாவும் ஹர்திக் பாண்டியாவும் ஜோடி சேர்ந்து விளையாடி ரன்களை உயர்த்தினர். 29 பந்துகளில் ஜடேஜா 35 ரன்களும் 17 பந்துகளில் ஹர்திக் பாண்டியா 33 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர்.

 

இந்தியா பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தப் போட்டியை ஹர்திக் பாண்டியா அற்புதமாக முடித்ததாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸாம் பாராட்டு தெரிவித்தார். அவர், "நாங்கள் ஒரு 10 -15 ரன்கள் குறைவாக எடுத்திருந்தோம். இருந்தாலும் எங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தஹானி சேர்த்த சில ரன்கள் எங்களுக்கு உதவியது. இருந்தாலும் ஆட்டத்தை வெற்றியுடன் முடிக்காததற்கு வெட்கப்படுகிறேன்," எனக் குறிப்பிட்டார்.

இப்படியாக முடிந்தது இந்தியா பாகிஸ்தான் இடையிலான லீக் போட்டி. இந்த நிலையில், இன்று மீண்டும் இரு அணிகளும் விளையாட உள்ளன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
(20 ov) 181/7
PAK FlagPAK

Pakistan chose to field.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றதற்கான மூன்று காரணங்கள்

4 செப்டெம்பர் 2022, 18:43 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

இந்தியா பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பேட்டிங், பவுலிங் என இரு துறைகளிலும் இந்திய அணியின் பலவீனங்கள் வெளிப்பட்டன.

முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை எடுத்தது. விராட் கோலி 60 ரன்களை எடுத்திருந்தார். ஆட்டத்தில் எந்தக் கட்டத்தில் உறுதியான ரன்குவிப்பு இல்லை.

அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி 1 பந்து மீதம் இருக்கையில் 182 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது லீக் ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு இதன் மூலம் பாகிஸ்தான் அணி பதிலடி கொடுத்திருக்கிறது.

பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் மற்றும் முகமது நவாஸ் ஆகியோரின் அதிரடியான ஆட்டம் அந்த அணியின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது. கடைசி ஓவரில் இந்தியா வெற்றிபெறக்கூடும் என்ற ஒரு எதிர்பார்ப்பு எழுந்தது.

 

4 பந்துகளில் இரண்டு ரன்கள் தேவை என்ற நிலையில் அர்ஷ்தீப் சிங் வீசிய ஒரு பந்தில் ரன் எடுக்கப்படவில்லை. அடுத்த பந்தில் விக்கெட் விழுந்தது. எனினும் அடுத்த பந்தில் இரண்டு ரன்களை எடுத்து பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

முகமது நவாஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

போட்டியின் முடிவில் பேசிய ரோஹித் ஷர்மா பாகிஸ்தான் போட்டியில் பாடம் கற்றுக் கொண்டதாகக் கூறினார். கோலி அற்புதமாக ஆடியதாகவும் அவர் பேசினார்.

இந்தியாவின் ஆட்டம் எப்படி இருந்தது?

முதலில் பேட் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் ஷர்மாவாவும் கே.எல். ராகுலும் சீராக ரன்களைக் குவித்தனர். முதல் ஓவரிலேயே மிட்விக்கெட் திசையில் சிக்சரை அடித்து ரோஹித் ஷர்மா ரன் குவிப்பை வேகப்படுத்தினார்.

பதிலுக்கு மூன்றாவது ஓவரில் ராகுல் இரண்டு சிக்சர்களை அடித்தார். ரோஹித் ஷர்மா 28 ரன்களை எடுத்திருந்தபோது ஹேரிஸ் ராஃப் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன் பிறகு வந்த விராட் கோலி மிக மெதுவாகவே ரன்களை எடுக்கத் தொடங்கினார்.

ஆறாவது ஓவரில் ஷதாப் கான் பந்துவீச்சில் கே.எல்.ராகுல் வெளியேறியதால் இந்தியா இரண்டு விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்து சற்று தடுமாறியது. அடுத்து வந்த சூர்ய குமார் யாதவும் 13 ரன்களுக்கு வெளியேறினார்.

 

இந்தியா பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

10 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்களை எடுத்திருந்தது. கோலியும் ரிஷப் பண்ட்டும் ஆடிக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் ரன் குவிப்பு வேகம் குறைந்திருந்தது. 14-ஆவது ஓவரில் ஷதாப் கானின் பந்துவீச்சில் ரிஷ்ப் பண்ட் ஆட்டமிழந்தார்.

தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட அவர் வெறும் 14 ரன்களை மட்டுமே எடுத்தார்.

இதற்கு முன் பாகிஸ்தானுடனான ஆட்டத்தில் கடைசி ஓவரில் சிக்சர் அடித்து வெற்றிக்கு உதவிய ஹர்திக் பாண்ட்யா இந்தப் போட்டியில் சந்தித்த இரண்டாவது பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அது ஆட்டத்தின் முக்கியமான திருப்பு முனையாக அமைந்தது.

தீபக் ஹோடாவும் விராட் கோலியும் 16 மற்றும் 17-ஆவது ஓவர்களில் மிக மெதுவாகவே ரன்களை எடுத்தார்கள். 18-ஆவது ஓவரில் சிக்சர் அடித்து தனது அரைச்சதத்தை கடந்தார் விராட் கோலி. அதைத் தவிர கடைசி 5 ஓவர்களில் சிக்சர் எதுவும் அடிக்கப்படவில்லை.

 

இந்தியா பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடைசி ஓவரில் கோலி சந்தித்த முதல் மூன்று பந்துகளில் ஒரு வைட் தவிர வேறு ரன்கள் எதுவும் எடுக்கப்படவில்லை. நான்காவது பந்தில் இரண்டாவது ரன்னுக்கு முயன்ற கோலி ரன் அவுட் ஆனார். 44 பந்துகளில் ஒரு சிக்சர் 4 பவுன்டரிகள் உள்பட 60 ரன்களை அவர் எடுத்திருந்தார்.

அடுத்த இரு பந்துகளையும் ரவி பிஷ்னோய் பவுண்டரிக்கு விரட்டியதன் மூலம் இந்திய அணி 181 ரன்களை எடுக்க முடிந்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷதாப் கான் இந்தியாவின் ராகுல், பண்ட் ஆகிய இரு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பாகிஸ்தான் ஆட்டம் எப்படி இருந்தது?

இரண்டாவதாக பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் இந்திய அணியைவிட நிதானமாக ஆடியது. இரண்டாவது ஓவரில் அந்த அணி வெறும் இரண்டு ரன்களை மட்டுமே எடுத்தது. நான்காவது ஓவரில் கேப்டன் பாபர் ஆஸம் பிஷ்னோய் பந்துவீச்சில் வெளியேறியதால் அந்த அணி தடுமாறியது.

ஆனால் அடுத்த ஓவரிலேயே ரிஷ்வானும் ஃபக்கர் ஷமானும் அதிரடியாக ஆடத் தொடங்கினர். 9-ஆவது ஓவரில் ஃபக்கர் ஷமான் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு பாகிஸ்தானின் ரன்குவிப்பு வேகம் கணிசமாக அதிகரித்தது. நவாஸும் ரிஸ்வானும் சேர்ந்து பாகிஸ்தான் அணியின் ரன் குவிப்பை துரிதப்படுத்தினர்.

 

இந்தியா பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

16-ஆவது ஓவரில் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் முகமது நவாஸ் ஆட்டமிழந்தார். 20 பந்துகளில் 2 சிக்சர்கள் 6 பவுண்டர்கள் உள்பட 42 ரன்களை அவர் குவித்தார். பாகிஸ்தானின் ரன் குவிப்பில் அவரது பங்களிப்பு முக்கிய இடம் பிடித்தது. அவர் ஆட்டமிழக்கும் நேரத்தில் 27 பந்துகளில் 46 ரன்களை எடுத்தால் பாகிஸ்தான் அணி வெற்றி பெறலாம் என்ற நிலை இருந்தது.

இறுதியில் 5 விக்கெட் இழப்பு பாகிஸ்தான் அணி இலக்கை எட்டியது.

ஏமாற்றிய ஹர்திக் பாண்ட்யா

பாகிஸ்தானுடனான கடந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு ஹர்திக் பாண்ட்யாவின் ஆட்டம் அடிப்படையாக அமைந்தது. பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் அவர் சிறப்பாகச் செயல்பட்டார். ஆனால் இந்தப் போட்டியில் அவரால் இரண்டு துறைகளிலுமே சற்றும் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை. இரண்டாவது பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார்.

பந்து வீச்சில் 4 ஓவர்களை வீசி 44 ரன்களை வழங்கினார். இவற்றில் ஆறு பவுடன்டரிகள் அடங்கும். எனினும் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ரிஸ்வானின் விக்கெட்டை வீழ்தியது மட்டுமே அவருக்கு ஆறுதலாக அமைந்திருக்கும்.

கைநழுவிய 19-ஆவது ஓவர்

பாகிஸ்தான் அணி போட்டியின் முக்கியமான தருணங்களில் ஆதிக்கம் செலுத்தினாலும் கடைசி இரண்டு ஓவர்களில் 26 ரன்களை எடுக்க வேண்டும் என்ற நிலையில் இந்திய அணிக்கு கணிசமான வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால் 19-ஆவது ஓவரை புவனேஸ்வர் குமார் 19 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

 

இந்தியா பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதில் இரண்டு பவுண்டரிகள் ஒரு சிக்சர் ஒரு வைட் ஆகியவை அடங்கும். அதனால் கடைசி ஓவரில் 7 ரன்களை மட்டுமே எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற எளிமையா இலக்கில் பாகிஸ்தான் ஆடும் வாய்ப்பு பாகிஸ்தான் வீரர்களுக்குக் கிடைத்தது.

சரிந்த மிடில் ஆர்டர்

இந்தியாவின் இன்னிங்ஸில் விராட் கோலியை தவிர வேறு யாரும் நிலையாக நின்று ஆடவில்லை. விராட் கோலியும் கடைசி ஓவரில் ரன்களை எடுக்கத் தடுமாறினார். ரிஷப் பண்ட், சூர்ய குமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் சொற்பமான ரன்களில் ஆட்டமிழந்தது இந்திய அணிக்கு பலவீனமாக அமைந்தது. போட்டியின் முடிவில் பேட்டியளித்த ரோஹித் ஷர்மா இதைக் குறிப்பிட்டார்.

https://www.bbc.com/tamil/sport-62790305

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை முன்னேறுமா ? இந்தியா தக்கவைக்குமா ? இன்று முக்கிய போட்டி !

By VISHNU

06 SEP, 2022 | 10:40 AM
image

(நெவில் அன்தனி)

ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆசிய கிண்ண (இருபது 20) கிரிக்கெட் இறுதிப் போட்டியில் விளையாட இலங்கை தகுதி பெறுமா என்பதையும் நடப்பு சம்பியன் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்கவைக்குமா என்பதையும் தீர்மானிக்கும் இரண்டு அணிகளுக்கும் இடையிலான சுப்பர் 4 போட்டி இன்று செவ்வாய்க்கிழமை (06) நடைபெறவுள்ளது.

இப் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்தப் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றால் இறுதிப் போட்டி வாய்ப்பை உறுதி செய்துகொள்ளும். இந்தியா வெற்றிபெற்றால் எஞ்சிய போட்டி முடிவுகளே இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும் அணிகளைத் தீர்மானிக்கும்.

மீள் எழுச்சி பெற்று கடந்த இரண்டு போட்டிகளில் பங்களாதேஷ் (முதல் சுற்று), ஆப்கானிஸ்தான் (சுப்பர் 4) ஆகிய அணிகளினால் நிர்ணயிக்கப்பட்ட கணிசமான மொத்த எண்ணிக்கைகளை விரட்டிக் கடந்து வெற்றியீட்டிய இலங்கை, இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதாக இருந்தால் இந்தியாவுடனான போட்டியில் முழுத் திறமையை சகல துறைகளிலும் வெளிப்படுத்தி வெற்றி பெறுவது அவசியமாகும்.

மறுபுறத்தில் சுப்பர் 4 ஆரம்பப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்த இந்தியாவின் இறுதிப் போட்டி வாய்ப்பு ஊசலாடிக்கொண்டிருப்பதால் இலங்கையுடனான இன்றைய போட்டியில்   என்ன விலைகொடுத்தேனும் வெற்றி பெற முயற்சிக்கும்.

எனவே, இன்றயை போட்டி முடிவு இரண்டு அணிகளுக்கும் தீர்மானம் மிக்கவை என்பதால் இரண்டு அணிகளும் ஒன்றையொன்று வீழ்த்த முயற்சிக்கும். அதேவேளை, நாணய சுழற்சியும் இப் போட்டி முடிவை தீர்மானிக்கக்கூடியதாக இருக்கும்.

கடந்த இரண்டு வருடங்களில் இந்த மைதானத்தல் நடைபெற்ற 18 போட்டிகளில் 16இல் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடிய அணிகளே வெற்றிபெற்றுள்ளன.

 துபாயில் கடும் உஷ்ணம் நிலவுவதாலும் இரவு வேளையில் பனி பொழிவதாலும் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும் அணிகளுக்கு சாதகமான பெறுபேறுகள் கிடைப்பதாலும் நாணய சுழற்சி இன்றைய போட்டியில் முக்கிய பங்காற்றும் என கருதப்படுகிறது.

எனவே நாணய சுழற்சியில் வெற்றிபெற்றால் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்யவுள்ளதாக இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானக்க தெரிவித்தார்.

'துபாய் ஆடுகளத்தில் எந்தவொரு பலம் வாய்ந்த அணியினாலும் நிர்ணயிக்கப்படும் மொத்த எண்ணிக்கையை எங்களால் கடந்து   வெற்றிபெற முடியும் என நான் நம்புகிறேன்.

 இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடும் போது ஆடுகளத்தின் தன்மையை நன்கு புரிந்து சிறந்த வியூகங்களுடன் விளையாடக்கூடியதாக இருக்கும். கடைசியாக நடைபெற்ற போட்டிகளில் நாங்கள் வெற்றிபெற்றதற்கு இதுவே காரணம்' என தசுன் ஷானக்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

'இந்தியா ஒரு திறமைவாய்ந்த, பலம்வாய்ந்த அணி என்பதை நாம் அறிவோம். அந்த அணியில் மிகச் சிறந்த துடுபாட்ட வீரர்கள் இடம்பெறுவதை சகலரும் அறிவர். ஆனால் எமது அணியும் அவர்களைக் கட்டுப்படுத்தக்கூடிய வியூகங்களுடன் விளையாடக்கூடிய ஆற்றல் மிக்கதாகும். எமது நோக்கம் எல்லாம் இந்தியாவை வெற்றிகொண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதாகும்' என்றார் அவர்.

இலங்கையும் இந்தியாவும் ஒன்றையொன்று 25 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் எதிர்த்தாடியுள்ளன. அவற்றில் 17 போட்டிகளில் இந்தியாவும் 7 போட்டிகளில் இலங்கையும் வெற்றிபெற்றுள்ளன.

ஒரு போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது. 

இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இரண்டு அணிகளும் சந்தித்துக்கொண்ட 19 சந்தர்ப்பங்களில் இலங்கை 10 - 9 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது.

நடப்பு ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் மூன்றாவது தொடர்ச்சியான வெற்றிக்கு குறிவைத்துள்ள இலங்கை, கடைசியாக இரண்டு போட்டிகளில் விளையாடிய அதே வீரர்களை களம் இறக்க எண்ணியுள்ளது.

எனினும் மாற்றம் இடம்பெறுவதாக இருந்தால் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறியுள்ள சரித் அசலன்கவுக்கு பதிலாக தனஞ்சய டி சில்வா அல்லது அஷேன் பண்டார இணைக்கப்பட வாய்ப்புள்ளது.

அணிகள்

இலங்கை: பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், சரித் அசலன் அல்லது தனஞ்சய டி சில்வா அல்லது அஷேன் பண்டார, தனுஷ்க குணதிலக்க, பானுக்க ராஜபக்ஷ, தசுன் ஷானக்க (தலைவர்), வனிந்து ஹசரங்க டி சில்வா, சாமிக்க கருணாரட்ன, மஹீஷ் தீக்ஷன, அசித்த பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷன்க.

இந்தியா: ரோஹித் ஷர்மா (தலைவர்), கே. எல். ராகுல், விராத் கோஹ்லி, சூரியகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷாப் பன்ட், ஹார்திக் பாண்டியா, அக்சார் பட்டேல், புவ்ணேஷ்வர் குமார், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்த்ர சஹால்.

https://www.virakesari.lk/article/135117

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.