Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேதகு 2 மறைத்த உண்மைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மேதகு 2 பற்றி TN Media 24 எனது கருத்து. பாருங்கோ மக்களே. 

இதற்கு பின்னால் ஒரு அரசியலும் இல்லை என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்+
14 hours ago, shanthy said:

மேதகு 2 பற்றி TN Media 24 எனது கருத்து. பாருங்கோ மக்களே. 

இதற்கு பின்னால் ஒரு அரசியலும் இல்லை என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

அந்தக் கைதிகள் பிடிபட்டது ஒரு வரலாற்று நிகழ்வு. 

தமிழீழ வரலாற்றில் சிங்களப் படையினர் கைதிகளாக சிறைப்படுத்தப்பட்டது அதுவே முதல்முறை. அந்தக் கைதிகளைப் பிடித்தது தவிபுவின் முதலாவது மகளீர் அணி பெண் போராளிகளே.

அங்கு சிறை பிடிக்கப்பட்ட கைதிகள் - இரு படையினர் - தங்க நகைகள் எல்லாம் அணிவிக்கப்பட்டு அப்படியேயே சிங்களப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனராம், முல்லைத்தீவின் தென்பகுதியில், ஓமந்தை / அதற்கு கிட்டவான ஒரு இடத்தில். 

- எனது உறவினர் வழங்கிய தகவல். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நன்னிச் சோழன் said:

நீங்கள் சொல்லும் தரவு உண்மை. 

  • கருத்துக்கள உறவுகள்
On 7/9/2022 at 18:15, shanthy said:

மேதகு 2 பற்றி TN Media 24 எனது கருத்து. பாருங்கோ மக்களே. 

இதற்கு பின்னால் ஒரு அரசியலும் இல்லை என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

On 8/9/2022 at 09:23, நன்னிச் சோழன் said:

அந்தக் கைதிகள் பிடிபட்டது ஒரு வரலாற்று நிகழ்வு. 

தமிழீழ வரலாற்றில் சிங்களப் படையினர் கைதிகளாக சிறைப்படுத்தப்பட்டது அதுவே முதல்முறை. அந்தக் கைதிகளைப் பிடித்தது தவிபுவின் முதலாவது மகளீர் அணி பெண் போராளிகளே.

அங்கு சிறை பிடிக்கப்பட்ட கைதிகள் - இரு படையினர் - தங்க நகைகள் எல்லாம் அணிவிக்கப்பட்டு அப்படியேயே சிங்களப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனராம், முல்லைத்தீவின் தென்பகுதியில், ஓமந்தை / அதற்கு கிட்டவான ஒரு இடத்தில். 

- எனது உறவினர் வழங்கிய தகவல். 

On 8/9/2022 at 18:18, shanthy said:

நீங்கள் சொல்லும் தரவு உண்மை. 

சில நேரங்களில் உண்மைகள்; கற்பனைகளைவிட வித்தியாசமானது (Truth is stranger than fiction).

சிங்களப்படைவீரர்கள் தமது தோட்டாக்கள் முழுவதுமாக முடித்த பின்னர் ( இரவை கூண்டில் 2 தோட்டாக்கள் மட்டுமே  மிகுதியாக இருந்த நிலையில்) நெருங்கி வந்த புலிகளை (ஆண் புலிகள்) கண்டவுடன் சிங்களப்படையினர் கைகளை உயர்த்தியவாறு எழுந்தனர், அப்போது ஒரு போராளி எதேச்சையாக ஒரு சிப்பாயின் காலில் சுட்டார் அவருடன் இருந்த போராளி (ஐயர்) அந்த போராளி சுடுவதை தடுத்து சரணடைபவர்களுக்கு எந்த தீங்கும் விளைவிக்கக்கூடாது என அந்த போராளிக்கு குறிப்பிட்டதாகவே நான் கேள்விப்பட்டேன்.

சம்பவம் நடந்த இடம் மன்னார், முல்லைதீவு இல்லை.

எமக்குக்கூட ஒரு வரலாற்றினை முழுமையாகத்தெரியவில்லை ( நான் கூறுவதுதான் சரியேன கூறவில்லை), இந்த நிலையில் தமிழகத்தில் இருப்பவர்களுக்கு எப்படி சரியான வரலாறு தெரியும்.

எமது போராட்ட வரளாற்றை எடுக்கக்கூடாது என சொல்ல எமக்கு எந்த உரிமையும் இருப்பதாகத்தெரியவில்லை.

முக்கியமாக, யாரையும் புண்படுத்துவதாக நினைக்கவேண்டாம், இந்த யாழ்கள உறவுகள் அனைவரிடமும் மதிப்பும் மரியாதையும் எப்போதும் உண்டு.

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்+
4 hours ago, vasee said:

ஓம் நீங்கள் சொல்வது சரியே... எனது உறவினர் வழங்கிய தகவலில் நகை அணியப்பட்டது தவிர ஏனைய அனைத்தும் தவறானவை. உறுதிப்படுத்தாமல் வரலாற்றுச் சம்பவத்தை தவறாக பதிவிட்டமைக்கு வருந்துகிறேன்.

உறுதிப்படுத்தப்பட்ட உண்மை யாதெனில், நீங்கள் கூறியது போக, அச்சமர் நடைபெற்ற இடம் அடம்பன், மன்னார் ஆகும். அவர்களைப் பிடித்தவர்கள் ஆண் போராளிகளே. ஆனால் தகவலானது பெண் போராளிகள் பிடித்ததாகவே மக்களிடம் பரவியது. அவ்வாறு பிடிக்கப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் கொணரப்பட்டு, மெய்யாகவே நகை அணியப்பட்டு, நல்லூரிற்கு அண்மையாக கோட்டையாக இருக்கலாம் என்றார் - வைத்து கேணல் கிட்டு தலைமையில் சிங்களப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இது இந்தியப் படையினருக்கு முன்னதாக நடந்தேறிய சம்பவம் ஆகும். இதுவே சிங்களப் படையினர் முதன் முதலில் உயிருடன் பிடிக்கப்பட்ட சம்பவம் ஆகும். மேலும் இந்த நிகழ்படத்தில் கூறப்பட்டுள்ளது போலல்லாமல் - 1987 இல் கைது நடந்தாக கூறப்பட்டுள்ளது - சம்பவம் நடந்தது 1986 ஆம் ஆண்டு ஆகும். 

இரண்டாவது பிடிப்புச் சம்பவம் பலாலியில் நடந்தது. ஒரு சமரிற்குப் பின்னர் ஓரிடத்தில் ஒளித்திருந்த சிங்களப் படையினன் தட்டந்தனியாக பெண் போராளியொருவரால் பிடிக்கப்பட்டதே அதுவாகும்.

- தமிழீழ விடுதலைப் போராட்டப் போராளி 

------------------------------------------------------------

"சம்பவம் நடந்த இடம்" முல்லைத்தீவு என நான் எங்குமே குறிப்பிடவில்லை. மாறாக அவர்கள் "ஒப்படைக்கப்பட்ட இடமே" முல்லைத்தீவு என்றிருந்தேன். நீங்கள் தவறாக வாசித்துள்ளீர்கள் ஐயனே!

எல்லோருக்கும் எல்லாத் தகவலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஐயனே. மேலும் தகவலை எனக்கு வழங்கியவர் ஒரு பொதுமகன், போராளியல்ல. தான் அறிந்ததையே என்னிடம் கூறினார், இந்த நிகழ்படத்தைப் பார்த்து விட்டு. நானும் உறுதிப்படுத்தாமல் பதிவிட்டமையும் தவறென்பதை ஒத்துக்கொள்கிறேன். இனிமேல் இவ்வாறு செய்யமாட்டேன். 

நாங்கள் இங்கே சாதாரணமாக ஒரு திரியில் வாதாடுகிறோம். ஆனால் அங்கே நடந்தேறியதோ பல பெரியோரிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒரு வரலாற்றுத் திரைப்படத்தில் வேண்டுமென்றே செய்யப்பட்ட வரலாற்றுத் திரிபுகள் மற்றும் இருட்டடிப்புகள் ஆகும். சாதாரண பொதுமக்களுக்கு விடையங்கள் தெரிவதும் தெரியாமல் போவதும் சாதாரண விடையம். ஆனால் நாங்கள் ஒரு வரலாற்றை ஆவணத் திரைப்படமாக எடுக்கப்போகிறோம் என்று அறிவித்துவிட்டு - அது தமிழீழமோ அல்லது தமிழ்நாடோ எதுவாயினும் - தேவையான விடையங்களை, அதிலும் நன்கு பரவலறியானவற்றை, வேண்டுமென்றே மறைப்பது வரலாற்று இருட்டடிப்பாகும். ஒரு வரலாற்றை நேர்மையாக திரைப்படமாக எடுக்கும் போது வரலாற்றை வாசித்தறிந்துவிட்டோ அல்லது அது தொடர்பானவர்களோடோ கேட்டறிந்துவிட்டோ படமெடுக்க வேண்டும். இல்லையென்றால் எடுக்காமலிருப்பதே மேலானது; திரிப்பதற்கு ஒன்றும் செய்யாமலிருப்பதே நல்லம், என்னைப் பொறுத்தவரை. 

எமதின வரலாற்றை திரிவுக்குட்படுத்தி தமிழ்நாட்டில் படமெடுப்பது இதுவொன்றும் முதல்தடவையன்று. இதற்கு முன்னரும் நடந்துள்ளது. ஆனால் இம்முறை வந்தது கொஞ்சம் வேறுபட்ட வடிவிலானது. அவ்வளவுதான். 

மேலும், இவர்களுக்கு வழிகாட்டிகளாக இருந்தோர் எம்மவரே. அவர்களும் துணைபோயிருப்பது நல்லதாகத் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நன்னிச் சோழன் said:

"சம்பவம் நடந்த இடம்" முல்லைத்தீவு என நான் எங்குமே குறிப்பிடவில்லை. மாறாக அவர்கள் "ஒப்படைக்கப்பட்ட இடமே" முல்லைத்தீவு என்றிருந்தேன். நீங்கள் தவறாக வாசித்துள்ளீர்கள் ஐயனே!

தவறை சுட்டிக்காட்டிய்மைக்கு நன்றி,

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளைத் தவிர, உண்மையிலேயே நடந்த சம்பவங்களை யாரும் முழுதுமாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. 

ஆகவே, ஈழத்தமிழர்கள் இந்தச் சம்பவங்கள் தொடர்பாக அறிந்து வைத்திருப்பது முழுமையாகாது. அதேபோல, போர்க்களத்திற்கு வெளியே இருந்து, செய்திகள் மூலம் மட்டுமே நிகழ்வுகளை அறிந்துகொள்ளும் தமிழக நண்பர்களுக்கு இச்சம்பவங்களின் உண்மைத்தன்மை பெரிதாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இதனாலேயே ஆளாளுக்கு தமக்குத் தெரிந்த விதத்தில் எமது கதையினைக் கூறுகிறார்கள். ஆகவேதான் இவை எதுவுமே யதார்த்திற்கு அருகிலும் செல்வதில்லை என்று நான் நினைக்கிறேன்.

ஆனால், எமது போராட்டத்தைக் கொச்சைப்படுத்தாமலும், எமக்கு ஆதரவாகவும், அபத்தமின்றியும் எடுக்கப்படும் படைப்புக்களைப் பாராட்டலாம், தவறில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
On 7/9/2022 at 10:15, shanthy said:

இதற்கு பின்னால் ஒரு அரசியலும் இல்லை என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

நானும்  பார்த்தேன் பின்னால் பூசாடி தான் இருக்கிறது 😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விளங்க நினைப்பவன் said:

நானும்  பார்த்தேன் பின்னால் பூசாடி தான் இருக்கிறது 😄

பலருக்கு அது புரியவில்லையே😀bro. 

  • கருத்துக்கள உறவுகள்
On 16/9/2022 at 10:28, ரஞ்சித் said:

புலிகளைத் தவிர, உண்மையிலேயே நடந்த சம்பவங்களை யாரும் முழுதுமாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. 

ஆகவே, ஈழத்தமிழர்கள் இந்தச் சம்பவங்கள் தொடர்பாக அறிந்து வைத்திருப்பது முழுமையாகாது. அதேபோல, போர்க்களத்திற்கு வெளியே இருந்து, செய்திகள் மூலம் மட்டுமே நிகழ்வுகளை அறிந்துகொள்ளும் தமிழக நண்பர்களுக்கு இச்சம்பவங்களின் உண்மைத்தன்மை பெரிதாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இதனாலேயே ஆளாளுக்கு தமக்குத் தெரிந்த விதத்தில் எமது கதையினைக் கூறுகிறார்கள். ஆகவேதான் இவை எதுவுமே யதார்த்திற்கு அருகிலும் செல்வதில்லை என்று நான் நினைக்கிறேன்.

ஆனால், எமது போராட்டத்தைக் கொச்சைப்படுத்தாமலும், எமக்கு ஆதரவாகவும், அபத்தமின்றியும் எடுக்கப்படும் படைப்புக்களைப் பாராட்டலாம், தவறில்லை. 

உண்மைதான் ரஞ்சித். சில விடயங்களை வரலாறு தெரிந்தவர்கள் சுட்டிக்காட்டும்போது விமர்சனங்களை ஏற்று குறிப்புகளையாவது வெளியிடவேண்டும். இயக்க வரலாறை தலைவரை மைய்யப்படுத்தி மட்டும் எடுத்துவிடமுடியாது.  வரலாறில் சில விடயங்களை அப்படியே கடந்துவிட முடியாது.

பொன்னமான் கேடில்ஸ் நாவற்குழி தாக்குதல்.
குமுதினி படுகொலை
செல்லக்கிளி அம்மான் மாடு விற்று வாங்கிய ஆயுதங்கள்

கப்டன் பண்டிதரின் தீரமிகு சுற்றிவளைப்பு

மேஜர் கணேஷின் மூதூர் தாக்குதல்
விக்ரர் அண்ணையின் நேரடித்தாக்குதல்
தலைவரின் திருமணம்.
ராதா அண்ணையின் தலைமையில் பெண்கள் படைப்பிரிவு
மன்னார் அடம்பனில் இரு இராணுவ வீரர்களின் கைது 
கைதிப்பரிமாற்றம்
தலைவரின் உண்ணாவிரதப்போராட்டம்
திம்பு பேச்சுவார்த்தை
மாற்று இயக்கங்கள் மீதான தாக்குதல்கள் /  தடை
புலிகளின் கொடியில் இருக்கும் சன்னங்களின் எண்ணிக்கை
ஒப்பரேசன் லிபரேசன்
மில்லரின் கரும்புலித்தாக்குதல்
இன்னும் பல எல்லாம் சாதாரண பொருளாதார பற்றாக்குறையில் கடந்துவிட முடியாது. (இன்னும் பல பாகங்கள் வர இருக்கையில்)

சீலன் (சாள்ஸ் அன்ரனி) கொடியில் வைத்தது பொஸ்பரஸ் இல்லை பொற்றாசியம். அது காற்றில் பட்டவுடன் எரிபற்றுநிலையை அடைந்து எரியக்கூடியது.

நவீனரக கைத்துப்பாக்கிகள் தானியங்கிகளை வைத்து ஆரம்ப தாக்குதல்கள்

சாவகச்சேரி காவல் நிலையத்தாக்குதலுக்கு பயன்படும் நவீனரக வாகனம் போன்றவற்றையாவது தவிர்த்திருக்கலாம்.

தலைவரை பேனை பிடிக்கும் விதம், அவர் எழுத்துக்களை சரித்து எழுதும் விடயங்களையாவது கவனத்தில் எடுங்கள்.

அவசரமாக சுதுமலை பிரகடனம் வரை இரண்டாம் பாகத்தை கொண்டுவந்திருக்கத்தேவை இல்லை. தலைவரின் வரலாறு மெதுவாகவே ஆழமாகவே நகரட்டும் என்பதே என் அவா.

வரலாறை தலைவர்தான் முழுமையாக சொல்லமுடியும் என்றாலும் அவர் தமிழீழ தேசிய தொலைகாட்சிக்கு வரலாறாக சொன்னவற்றில் இருந்தாவது முக்கியமானவற்றை வெளிப்படுத்துங்கள். 

இன்னும் பொன்னம்மானிடம் பயிற்சி எடுத்து கடைசிவரை களத்தில் நின்றவர்களும் உயிருடன் தான் இருக்கிறார்கள் என்பதை கதை வழங்கிகள் தெரிந்துகொண்டால் நல்லது.

Edited by முதல்வன்

  • கருத்துக்கள உறவுகள்
On 16/9/2022 at 04:28, ரஞ்சித் said:

புலிகளைத் தவிர, உண்மையிலேயே நடந்த சம்பவங்களை யாரும் முழுதுமாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. 

ஆகவே, ஈழத்தமிழர்கள் இந்தச் சம்பவங்கள் தொடர்பாக அறிந்து வைத்திருப்பது முழுமையாகாது. அதேபோல, போர்க்களத்திற்கு வெளியே இருந்து, செய்திகள் மூலம் மட்டுமே நிகழ்வுகளை அறிந்துகொள்ளும் தமிழக நண்பர்களுக்கு இச்சம்பவங்களின் உண்மைத்தன்மை பெரிதாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இதனாலேயே ஆளாளுக்கு தமக்குத் தெரிந்த விதத்தில் எமது கதையினைக் கூறுகிறார்கள். ஆகவேதான் இவை எதுவுமே யதார்த்திற்கு அருகிலும் செல்வதில்லை என்று நான் நினைக்கிறேன்.

ஆனால், எமது போராட்டத்தைக் கொச்சைப்படுத்தாமலும், எமக்கு ஆதரவாகவும், அபத்தமின்றியும் எடுக்கப்படும் படைப்புக்களைப் பாராட்டலாம், தவறில்லை. 

இது தான் உண்மை ரஞ்சித்.

புலிகள் பலமாக இருந்த காலத்திலேயே ஏதாவது தாக்குதல் கொஞ்சம் பிசகினால் சீ அப்படி போய் அடித்திருக்கலாம்.இப்படி போய் அடித்திருக்கலாம்.அது இது என்று வெளிநாடுகளில் இருந்தபடியே தளபதிகளுக்கும் தலைவருக்கும் வகுப்பெடுத்தவர்கள் நம்மவர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.