Jump to content

T20 2022 உலகக் கிண்ணப் போட்டி - செய்திகள்


Recommended Posts

4 hours ago, ஏராளன் said:

வீரர்களுக்கு ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இருக்கிறது.

ஐபிஎல்க்கு மேல் இந்தியா லாயக்கில்லை. இந்தியா எப்போ பந்து வீச்சை வலுவானதாக்குகிறதோ அன்று தான் உலக தரமான கிறிக்கட்டை விளையாட முடியும். சிம்பாவே அணியின் பந்து வீச்சு அணி இந்திய பந்து வீட்சணியை விட பலமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, nedukkalapoovan said:

அரை இறுதியில் ஹிந்தியா தோற்று பாகிஸ்தான் வென்றது ரசிக்கத்தக்க விடயம். ஹிந்தியர்களின் கிரிக்கெட் வெறியாட்டம் அடங்க வேண்டும். 

இந்திய அணி சிறப்பான துடுப்பாட்டம், சிறப்பான பந்து வீச்சு என ஒரு மிகவும் சமசீரான சிறந்த அணியாக இருந்தது, ஆனால் அவர்களது ஆட்டம் மிகவும் மோசமாக இருந்தது.

மறுவளமாக இங்கிலாந்து அணியிடம் சிறந்த பந்து வீச்சாளர்கள் கூட இல்லை பென் டொக் பந்து வீச்சை ஆரம்பிகின்றார், 2 லெக் சுழற்பந்து வீச்சாளர்கள் முழுக்க முழுக்க வலது கை ஆட்டக்காரர்கள் கொண்ட அணியினை எதிர்த்து குறைந்த அகலம் கொண்ட ஆடுகளத்தில் சிறப்பாக இந்திய அணியினரை கட்டுப்படுத்தினர்,மோசமான முதுகெலும்பற்ற துடுப்பாட்டம் என கருதுகிறேன்.

இங்கிலாந்து துடுப்பாட்டத்தில் பட்லர் பந்து சுவிங் ஆவதை எதிர்கொள்வதற்காக மைதானத்தில் இறங்கி வந்து ஆட முற்பட பண்ட் விக்கெட்டிற்கு  அருகில் களத்தடுப்பில் ஈடுபட்டார், ஆனால் பந்து வீச்சாளர்கள் அளவு குறைந்த பந்துகளை வீசவேயில்லை (புல் லெந்த்), நியூசிலாந்தினை போலவே முதுகெலும்பில்லாமல் பந்து வீசினர் என கருதுகிறேன்.

மொத்தத்தில் ஒரு சிறந்த அணி தேவையே இல்லாமல் மோசமாக சொதப்பி, இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்தினை அனுப்பி ஆட்டத்தினை ஒரு பக்க ஆட்டமாக்கிவிட்டனர் (பாகிஸ்தான் சார்பு) இந்த இந்திய அணியினர்.

பாகிஸ்தான் இறுதிப்போட்டியில் இந்த பல்லில்லாத இங்கிலாந்தினை இலகுவாக வென்றுவிடுவர்.

 

14 minutes ago, nunavilan said:

ஐபிஎல்க்கு மேல் இந்தியா லாயக்கில்லை. இந்தியா எப்போ பந்து வீச்சை வலுவானதாக்குகிறதோ அன்று தான் உலக தரமான கிறிக்கட்டை விளையாட முடியும். சிம்பாவே அணியின் பந்து வீச்சு அணி இந்திய பந்து வீட்சணியை விட பலமானது.

இந்தியணி சிறந்த பந்துவீச்சணி ஆனால் ஆடுகளம் பயன்படுத்தப்பட்ட ஆடுகளம், ஆரம்பத்தில் பந்து திரும்பாது எனும் மனநிலையுடனேயே எவ்வாறு மோசமாக நியுசிலாந்து பந்து வீசியதோ அதே போல் இந்திய அணியும் பந்து வீசியிருந்தது.

இந்திய அணி வென்றிருந்தால் இறுதியாட்டம் மிகவும் சுவாரசியமாக இருந்திருக்கும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20221111-105854.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டி20 அலெக்ஸ் ஹேல்ஸ்: ஊக்கமருந்து சோதனையில் தோற்றவர், இரு உலக கோப்பை வாய்ப்பிழந்தவர்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,பராக் பாதக்
  • பதவி,பிபிசி மராத்தி
  • 10 நவம்பர் 2022
 

அலெக்ஸ் ஹேல்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

அலெக்ஸ் ஹேல்ஸ்

தனது தொழில்முறை வாழ்க்கையில் ரோலர் கோஸ்டர் சவாரிகளை அனுபவித்த அலெக்ஸ் ஹேல்ஸுக்கு இந்த உலக கோப்பை மிகவும் முக்கியமானது. ஏனென்றால், களத்திற்கு வெளியே கடைப்பிடித்த செயல்பாடுகள் காரணமாக இதற்கு முன்பு இரண்டு உலக கோப்பைகளிலும் பங்கேற்க முடியாத நிலையை அவர் அனுபவித்தார்.

“இது எனக்கு ஒரு பெரிய தருணம், உலக கோப்பை அரையிறுதியில் அணியின் வெற்றிக்கு பங்களித்த இன்னிங்ஸ். நான் விளையாடிய விதம் எனக்கு வசதியாக இருந்தது. அடிலெய்டு உலகின் சிறந்த பேட்டிங் மைதானங்களில் ஒன்றாகும்.

இரு திசைகளிலும் உள்ள எல்லைகள் குறுகியவை, அடிப்பதை வேடிக்கையாக ஆக்குகிறது. இந்த மைதானத்தில் விளையாடியதில் எனக்கு பல இனிமையான நினைவுகள் உள்ளன.

மீண்டும் உலக கோப்பையில் விளையாட முடியும் என்று நான் நினைக்கவில்லை. இந்த உலக கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைத்ததற்கும், அரையிறுதி போன்ற முக்கியமான போட்டியில் பெரிய இன்னிங்ஸ் ஆட முடிந்ததற்கும் திருப்தி அடைகிறேன்.

 

ஆஸ்திரேலியாவில் விளையாடுவது மகிழ்ச்சியாக உள்ளது” என்கிறார் ஹேல்ஸ்.

இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட அலெக்ஸ் ஹேல்ஸின் உணர்வுகள் இவை.

 

டி20 உலக கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஹேல்ஸ் தனது ஆக்ரோஷமான செயலாற்றலுக்கு பெயர் பெற்றவர். அலெக்ஸின் தந்தையும் கிரிக்கெட் விளையாடினார்.

பல பந்து வீச்சாளர்கள் உள்ளூர் போட்டிகளில் ஹேல்ஸின் மட்டை வீச்சு தாக்கத்தை அனுபவித்தனர்.

ஹேல்ஸ் முதன்முதலில் 2005இல் ஒரு ஓவரில் 55 ரன்களை அடித்தபோது செய்திகளில் இடம்பிடித்தார். அந்த ஓவரில் ஹேல்ஸ் 8 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார். அதில் மூன்று நோ பால்களும் அடங்கும். நாட்டிங்ஹாம்ஷயர் அணிக்காக விளையாடும் போது ஹேல்ஸின் நிலையான ஆட்டங்கள் இங்கிலாந்தின் தேர்வுக் குழுவின் கவனத்தைப் பெற்றன.

2015ல் இங்கிலாந்தில் நடந்த உள்நாட்டு இருபதுக்கு 20 போட்டியில் இரண்டு ஓவர்களில் 6 சிக்ஸர்கள் உட்பட 86 ரன்கள் எடுத்தார் ஹேல்ஸ். 2017 இல், ஹேல்ஸ் 30 பந்துகளில் 95 ரன்கள் எடுத்தார். ஹேல்ஸ் 2011 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்காக டுவென்டி 20 அறிமுகமானார். இரண்டாவது போட்டியில் ஹேல்ஸ் ஆட்டமிழக்காமல் 62 ரன்கள் எடுத்தார்.

ஐந்தாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக விளையாடும் போது ஹேல்ஸ் ஒரு ரன் வித்தியாசத்தில் சதத்தை தவறவிட்டார்.

சட்டோகிராமில் இலங்கைக்கு எதிராக ஹேல்ஸ் 64 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 116 ரன்கள் எடுத்தார். ஹேல்ஸ் இந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்காக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். ஹேல்ஸ் அந்த ஆண்டு சம அளவில் செயல்படவில்லை. ஆனால் 2015ல் அபுதாபியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஹேல்ஸ் 109 ரன்களில் சதம் அடித்தார்.

ஆரம்பத்தில் டி20 வடிவத்திற்கு மட்டுமே பொருத்தமானவர் என்று கருதப்பட்ட ஹேல்ஸ், ஒருநாள் போட்டிகளிலும் தனது பேட்டிங் திறமையை எதிரணியினரிடம் காட்டினார்.

 

டி20 உலக கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

அவரது தொழில்முறை திறன்கள் பெரிதாக ஈர்க்கப்படவில்லை என்றாலும், ஒரு சில ஓவர்களில் போட்டியின் காட்சியை மாற்றும் திறன் ஹேல்ஸுக்கு உள்ளது.

எனவே அவர் ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் சேர்க்கப்பட்டார்.

ஆனால் அவரால் இரு அணிகளின் ஒருங்கிணைந்த அங்கமாக மாற முடியவில்லை. 2019 உலக கோப்பை இங்கிலாந்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இங்கிலாந்து அணியில் யார் இடம் பெறுவார்கள் என்ற ஆர்வம் இயல்பாகவே இருந்தது.

அணி அறிவிக்கப்பட்டபோது அலெக்ஸ் ஹேல்ஸுக்கு தொடக்க ஆட்டக்காரராக வாய்ப்பு கிடைத்தது. ஆனால் வெறும் 2 நாட்களில், உள்நாட்டு கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் விளையாட முடியாது என்று ஹேல்ஸ் அறிவித்தார். ஹேல்ஸ் எப்போது திரும்புவார் என்பதை நாட்டிங்காம்ஷயர் தரப்பு தெளிவாக தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் போதைப்பொருள் சோதனையில் ஹேல்ஸ் குற்றவாளி என்பது சில நாட்களுக்குள் தெரிந்தது.

 

இந்தியா, இங்கிலாந்து, டுவென்டி 20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

உலக கோப்பை அணி வீரர்கள் இவ்வாறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் நெறிமுறைகள் கடுமையாக்கப்பட்டன.

இதனால் ஹேல்சுக்கு 21 நாட்கள் தடை விதிக்கப்பட்டது. உலக கோப்பை அணியில் இருந்து ஹேல்ஸை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நீக்கியது. இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கனுக்கும் ஹேல்ஸுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின.

ஹேல்ஸ் அணியின் நம்பிக்கையை இழந்துவிட்டார் என்று மோர்கன் கூறினார். ஹேல்ஸ் போன்ற ஒரு அதிரடியான தொடக்க ஆட்டக்காரரை இழந்தது இங்கிலாந்து வியூகத்தை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஹேல்ஸுக்குப் பதிலாக ஜேசன் ராய் சேர்க்கப்பட்டார். ஹேல்ஸுக்கு துரதிருஷ்டத்தின் சுழற்சி தொடர்ந்தது மற்றும் 2021 ட20 உலகக் கோப்பைக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்படவில்லை. டி20 உலக கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்த சுற்றுப்பயணத்திற்கான அணியில் ஹேல்ஸை இணைத்து தேர்வுக் குழு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஜானி பேர்ஸ்டோவின் காயம் காரணமாக ஹேல்ஸின் பெயர் பரிசீலிக்கப்பட்டது. மோர்கன் ஓய்வு பெற்ற பிறகு, இங்கிலாந்து கேப்டன் பதவி ஜோஸ் பட்லரிடம் ஒப்படைக்கப்பட்டது. பட்லர் காயம் அடைந்ததால் மொயீன் அலி அணிக்கு கேப்டனாக இருந்தார்.

புதிய கேப்டன், புதிய பயிற்சியாளர் மற்றும் புதிய மனநிலையின் கீழ், பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் ஹேல்ஸுக்கும் இறுதி பதினொன்றில் வாய்ப்பு வழங்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அணிக்குத் திரும்பிய ஹேல்ஸ், முதல் போட்டியில் அரைசதம் அடித்து அணியின் நம்பிக்கையை நியாயப்படுத்தினார்.

இந்தத் தொடரின் 6 போட்டிகளில் ஹேல்ஸ் 130 ரன்கள் எடுத்தார். ஆனால் இந்த ஆட்டத்தில் அவரை உலக கோப்பைக்கு தேர்வு செய்வது சாத்தியமில்லை.

தற்செயல் வாய்ப்பு

 

இந்தியா, இங்கிலாந்து, டுவென்டி 20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த ஆண்டு உலக கோப்பைக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்ட பிறகு விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ, கோல்ஃப் மைதானத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார்.

மாற்று தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் திருப்திகரமாக செயல்படாததால் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதையடுத்து இறுதியாக தேர்வுக் குழு ஹேல்ஸின் பெயரைச் சேர்த்தது. தற்செயலாக ஒரு வாய்ப்பைப் பெற்ற ஹேல்ஸ் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார். ஹேல்ஸால் ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்துக்கு எதிராக பெரிய இன்னிங்ஸ் செய்ய முடியவில்லை ஆனால் இங்கிலாந்து தேர்வாளர்கள் ஹேல்ஸை நம்பினர்.

நியூசிலாந்துக்கு எதிராக ஹேல்ஸ் 52 ரன்கள் எடுத்து இந்த நம்பிக்கையை நியாயப்படுத்தினார். இலங்கைக்கு எதிரான தனது அரைசதத்தை மூன்று ரன்களில் தவறவிட்டார்.

இந்தியாவுக்கு எதிராக, ஹேல்ஸ் 47 பந்துகளில் 4 பவுண்டரிகள், 7 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் 86 ரன்கள் குவித்தார். ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் கூட பாகிஸ்தான் அணிக்கு ஹெல்ஸ் தலைவலியாக இருக்கலாம்.

பிக் பாஷில் விளையாடுவது பலன் தரும்

போதைப்பொருள் சோதனையின் காரணமாக இங்கிலாந்து தேர்வுத் திட்டங்களில் இருந்து ஹேல்ஸ் வெளியேறினாலும், உலகெங்கிலும் உள்ள டி20 லீக்குகளில் தொடர்ந்து விளையாடி வந்தார்.

ஐபிஎல் முறையில் பிக் பாஷ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

மெல்போர்ன் ரெனிகேட்ஸ், அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், ஹோபர்ட் ஹரிகேன்ஸ், சிட்னி தண்டர் ஆகிய நான்கு அணிகளுக்காக ஹேல்ஸ் விளையாடியுள்ளார்.

பிக் பாஷ் போட்டியில் தொடர்ந்து விளையாடியதால் ஹேல்ஸுக்கு ஆஸ்திரேலியாவில் விளையாடிய அனுபவம் நிறைய இருந்தது. ஹேல்ஸ் அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள ஆடுகளங்களின் வடிவம் மற்றும் சூழல் பற்றிய ஹேல்ஸின் ஆழமான புரிதல் அவரது விளையாட்டில் உணரப்பட்டது.

 

டி20 உலக கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ஹெல்ஸ் பிக் பாஷ் போட்டியின் போது

மோர்கனுக்கு செயலால் எதிர்வினை

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் ஹேல்ஸை நம்பவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.

சில நாட்களுக்கு முன்பு போட்டி முடிந்து நிவேதிகா, ஹேல்ஸ், மோர்கன் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர்.

மோர்கன் ஹேல்ஸுக்கு அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது கேள்விக்குப் பதிலளித்த ஹேல்ஸ், மோர்கனை ஒருமுறை கூட பார்க்கவில்லை.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ஹேல்ஸ் வெளிப்படையான விமர்சனத்திலிருந்து வெட்கப்படாமல், மோர்கனுக்கு வெளிப்படையாகவே பதிலளித்தார்.

உலக கோப்பை அரையிறுதியில் முக்கியமான 86 ரன்களை எடுத்ததன் மூலம் மோர்கன் மற்றும் நேர்மாறான விமர்சகர்களுக்கு ஹேல்ஸ் கடுமையாகவ பதிலளித்தார்.

https://www.bbc.com/tamil/articles/cydqde3l1d4o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் தோல்விக்குக் காரணமான ‘பழைய உத்தி’; இதை மாற்ற முடியுமா?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,எம் மணிகண்டன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ரோஹித் ஷர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

டி20 கிரிக்கெட்டில் ஆட்டத்தின் பாணி எவ்வளவோ மாறிவிட்ட பிறகும் இந்தியா இன்னும் பழைய பாணியிலேயே ஆடிக் கொண்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மிக மோசமாகத் தோல்வி அடைந்ததற்கு இந்தப் பழைய பாணி ஆட்டமே காரணம் என்றும் விமர்சிக்கப்படுகிறது.

“இந்தியா இன்னும் பாரம்பரிய முறையிலான கிரிக்கெட்டை ஆடிக் கொண்டிருக்கிறது. கடைசி 10 ஓவர்கள் எப்படியும் காப்பாற்றிவிடும் என்று நம்பினார்கள். ஆனால் உலகக் கோப்பையில் அது போதவில்லை ” என்று கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே குறிப்பிடுகிறார்.

இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் முதல் 10 ஓவர்களில் மிகவும் மெதுவாக ரன் குவிக்கும் வழக்கம்தான் இப்போது விமர்சிக்கப்படுகிறது. இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் இதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

“முதல் 15 ஓவரில் 15 முதல் 20 ரன்கள் குறைவாக இருப்பதாக நாங்கள் நினைத்தோம். ஆனால் கடைசியில் 15-20 ரன்களையும் விடக் குறைவாகவே ரன் பெற்றது போலத் தெரிந்தது. இந்த மைதானத்தில் குறைந்தது 180 முதல் 185 ரன்களை எடுத்திருக்கலாம்” என்று ராகுல் டிராவிட் குறிப்பிட்டுள்ளார்.

 

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா முதல் 10 ஓவர்களில் இந்திய அணி 62 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அப்போது இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் கே.எல். ராகுல் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்திருந்தது.

தொடக்க ஓவர்களிலேயே இந்தியா விக்கெட்டை இழந்துவிட்டதால், விராட் கோலி மிக மெதுவாகவே ரன்களைச் சேகரிக்கத் தொடங்கினார். 10 ஓவர்களில் ரன்ரேட் குறைவாக இருந்ததால், சூர்ய குமார் யாதவ் அதிரடியாக ஆட முயன்று அவுட் ஆகி வெளியேறினார்.

இந்திய அணி வழக்கமாக அடித்து ஆடத் தொடங்கும் 12-ஆவது ஓவரில் வெறும் 3 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 13-ஆவது ஓவரிலும் மூன்று ரன்கள்தான். 13 மூன்று ஓவர்கள் முடிந்திருந்தபோது இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. தற்காலத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில்கூட இந்த ரன்கள் குறைவானதாகவே கருதப்படுகிறது. 

இந்தியா நம்பியது என்ன?

இந்த உலகக் கோப்பை தொடரில் இந்தியா தொடக்கம் முதலே மிக மெதுவாகத் தொடங்கி அதிரடியாக முடிப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தது.

இந்தியாவின் பவர்பிளே ரன்கள் மற்ற அணிகளை விடக் குறைவாக இருந்த நிலையில், டெத் ஓவர்களாகக் கருதப்படும் கடைசி 4 ஓவர்களில் மற்ற அனைத்து அணிகளின் சராசரியைவிட இந்திய அணியின் சராசரி அதிகமாகவே இருந்தது. 

இந்த உத்தியைத்தான் இந்திய அணி இந்தத் தொடர் முழுவதும் கடைப்பிடித்து வந்தது. இது இந்திய அணிக்கு லீக் போட்டிகளில் பலன் அளித்ததையும் பார்க்க முடிந்தது. 

 

 

டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதேபோல் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் முதல் 6 ஓவர்களில் இந்திய அணி ஒரு விக்கெட்டை இழந்து 37 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. 12 ஓவர்களில் 101 ரன்களை எட்டியிருந்தது. ஆனால் இன்னிங்ஸ் முடியும்போது 184 ரன்களைக் குவித்திருந்தது. 

உலகக் கோப்பை தொடரில் மற்ற எல்லா அணிகளும் பவர் பிளே ஓவர்களில் சிறப்பாக ரன் குவித்த நிலையில்,  இந்தியாவின் ரன்கள் மிகவும் மோசம். ஜிம்ப்பாவேக்கு எதிராக 31 ரன்கள், பாகிஸ்தானுக்கு எதிராக 31 ரன்களை, நெதர்லாந்துக்கு எதிராக 33 ரன்கள், வங்கதேசத்துக்கு எதிராக 37 ரன்கள், இங்கிலாந்துக்கு எதிராக 38 ரன்கள். இவைதான் இந்தியா முதல் 6 ஓவர்களில் குவித்த ரன்கள். 

இப்படி தொடக்கத்தில் மெதுவாகவும் கடைசியில் அதிரடியாகவும் ஆடும் இந்த உத்தியை ராகுல் டிராவிட்டும் பாராட்டி இருக்கிறார். ஏன் போட்டிகளில் வெற்றிபெறும்போதெல்லாம் இது ஒரு புதிய கண்டுபிடிப்பு போல மிகவும் சிலாகித்துப் பேசப்பட்டது. ஆனால் அதுவே இன்று விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இதைச் சரியாகச் செயல்படுத்த முடியாமல் போயிருக்கிறது என்பதை ராகுல் டிராவிட்டும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இது மெச்சத்தக்க உத்தியா இல்லை தூக்கி எறிந்துவிட்டு புதிய பாணியைக் கொண்டுவருவதா என்று முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணியைத் தள்ளியிருக்கிறது இங்கிலாந்து அணியுடனான படுதோல்வி.

 

டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

வேறு குழப்பங்கள் என்னென்ன?

இந்தியாவின் டி20 கிரிக்கெட் இப்போது 10 விக்கெட் தோல்விகளாலேயே விமர்சிக்கப்படுகிறது. ஒன்று ஆசியக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான தோல்வி,  இரண்டாவது இங்கிலாந்து எதிரான தோல்வி. இந்த இரு இன்னிங்ஸ்களிலும் இந்தியா விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் போனதற்கு பந்துவீச்சில் ஏற்பட்ட குழப்பங்களே காரணம் என்ற விமர்சனங்களும் இப்போது எழுந்திருக்கின்றன. 

இந்தத் தொடரில் இந்தியாவின் வேகப் பந்துவீச்சாளர் பும்ரா இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம். அதே நேரத்தில் அஷ்வினா, சாஹலா என்ற கேள்வியிலேயே இந்திய அணி கடைசிவரை ஆடி முடித்திருக்கிறது. அதேபோல விக்கெட் கீப்பராக ரிஷப் பண்டை களமிறக்குவதா, தினேஷ் கார்த்திக்கை இறக்குவதா என்ற குழப்பம் இருந்ததை அணித் தேர்விலேயே காண முடிந்தது.

இன்னும் ஒரு வாரத்திலேயே அடுத்த டி20 தொடர் தொடங்க இருக்கும் நிலையில் இந்தியா என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

https://www.bbc.com/tamil/articles/cq545zevy11o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • 2
 

டி20 உலக கோப்பை

பட மூலாதாரம்,SHOAIB AKTHAR

 

படக்குறிப்பு,

சோயிப் அக்தர்

இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. ஜாஸ் பட்லர் - அலெக்ஸ் ஹேலின் அபாரமான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் 10 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.

‘மோசமாக ஆடிய இந்தியா’

இந்திய அணியின் தோல்வி குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், “இந்தியாவுக்கு இது ஒரு மோசமான தோல்வி. அவர்கள் மிகவும் மோசமாக விளையாடினார்கள். அவர்கள் இறுதிப்போட்டிக்குள் நுழைவதற்கான தகுதியை இழந்து விட்டார்கள்.

இந்தியா மோசமாக தோற்கடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வேகப்பந்து வீச்சு அம்பலமாகிவிட்டது. இந்த ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு உதவும் என்றாலும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் வீசுவதற்கு இந்திய அணியில் யாரும் இல்லை” என கூறியுள்ளார்.

 
Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

“இந்தியா பேட்டிங்கில் கடுமையாக தடுமாறியது. ரோஹித், கே.எல் ராகுல் இருவராலும் முதல் 6 ஓவர்களில் அதிரடி காட்ட இயலவில்லை. டி20 போன்ற ஆட்டங்களில் அதிரடியாக ஆடுவது அவசியம்” என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வாட்சனும் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல, “இந்திய அணியை ஹர்திக் தூக்கி நிறுத்தினாலும், 6 - 8 ஓவர்கள் முன்கூட்டியே அந்த அதிரடி நிகழ்ந்திருக்க வேண்டும். பெரிய ஆட்டங்களில் ரோஹித் - ராகுல் இருவராலும் சரியாக விளையாட முடியாதது விராட் கோலிக்கும் - சூர்யகுமாருக்கும் நெருக்கடி அளிக்கிறது. எத்தனை முறைதான் அவர்களே ரன் குவிக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியும்,” என்கிறார் முன்னாள் இந்திய வீரரும் அணித் தேர்வருமான சரந்தீப் சிங்

‘இந்தியாவின் மோசமான பேட்டிங் பவர்பிளே’

 

டி20 உலக கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய கிரிக்கெட் விமர்சகர் கிஷோர் வைத்தியநாதன், இந்தியா செய்த தவறுகளில் ஒன்று பேட்டிங் பவர்பிளேவை சரியாக பயன்படுத்தாதது என குறிப்பிட்டார்.

“ஆடுகளத்தில் பவுண்டரி விளாசுவதற்கான தொலைவு குறைவாக இருந்தபோதும் தொடக்கத்தில் இந்தியா மிகவும் மெதுவாக பேட்டிங் ஆடியது. பவர் பிளேவை இந்தியா பயன்படுத்தியிருக்க வேண்டும். முதல் 6 ஓவர்களில் 60 ரன்கள் வரை குவித்திருக்க வேண்டும். 2வது பாதியில் அதிக ரன்கள குவிக்கலாம் என வீரர்கள் நினைத்தனர்.

அதுதான் நடந்தது என்றாலும் வெற்றிக்கு அது போதியளவில் உதவவில்லை. அதேசமயம், இங்கிலாந்து அணி பவர்பிளேயில் எப்படி ஆட வேண்டும் என்பதை காட்டியது.

முதல் 6 ஓவர்களில் கணிசமான ரன்களை சேர்த்தது. சிறிய அணிகளுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் பவர் பிளேயில் ரன்களை சேர்த்து ஓரளவு சமாளித்தாலும், இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பேட்ஸ்மேன்களின் தடுமாற்றம் வெளிப்பட்டுவிட்டது," என்கிறார் கிஷோர் வைத்தியநாதன்.

"முதல் 6 ஓவர்களில் கணிசமான ரன்களை சேர்த்தது. சிறிய அணிகளுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் பவர் பிளேயில் ரன்களை சேர்த்து ஓரளவு சமாளித்தாலும், இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பேட்ஸ்மேன்களின் தடுமாற்றம் வெளிப்பட்டுவிட்டது, என்கிறார் கிஷோர் வைத்தியநாதன்.

‘சாஹலை பயன்படுத்த தவறியது’

“டி20 உலக கோப்பை தொடர் முழுவதும் இந்திய அணி பந்துவீச்சாளர்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. குறிப்பாக சாஹல் ஒரு ஆட்டத்தில் கூட களமிறங்காதது ஆச்சரியம் அளிக்கிறது.

ஆஸ்திரேலியா போன்ற பெரிய ஆடுகளங்களில் சாஹல் பந்துவீச்சில் பெரிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. விரிஸ்ட் ஸ்பின்னர்களை ஒப்பிடும்போது, ஃபிங்கர் ஸ்பின்னர்ஸ் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் அவ்வளவாக சோபித்ததில்லை.

மற்ற அணிகளில் ஒன்றுக்கு இரண்டு விரிஸ்ட் ஸ்பின்னர்களை பயன்படுத்தினர். ஆனால் இந்தியா பயன்படுத்தாது ஆச்சரியம் அளிக்கிறது. டி20 போட்டிகளில் விக்கெட் டேக்கர் அணியில் இருப்பது மிகவும் அவசியம்.

பும்ரா இல்லாத இடத்தில், சாஹல் முக்கிய பங்கு வகித்திருக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை," என்கிறார் கிரிக்கெட் விமர்சகர் கிஷோர் வைத்தியநாதன்

‘பொறுப்பற்ற ஆட்டமே தோல்விக்கு காரணம்’

 

டி20 உலக கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணியின் தோல்விக்கு வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டமே காரணம் என குறிப்பிட்டுள்ளார் கிரிக்கெட் பயிற்சியாளர் ஹாரிங்டன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “இங்கிலாந்து போன்ற ஒரு தலைசிறந்த அணியை எதிர்கொள்ள இந்திய அணியிடம் சரியான திட்டமிடல் இல்லை. மெல்போர்னை விட சிறிய மைதானத்தில் ஆடும் போது குறைந்தது 190 ரன்களாவது தேவை.

முதல் 4 பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடினாலே போதுமானது. கே.எல்.ராகுல் - ரோஹித் சர்மாவிடம் அரையிறுதியில் விளையாடுகிறோம் என்கிற பொறுப்புணர்வு இல்லை.

ராகுலுக்கு பதிலாக ஷிகர் தவானையாவது அணியில் எடுத்திருக்கலாம். அணியில் பும்ரா, ஜடேஜா இல்லாதது பெரும் பின்னடைவை தந்திருக்கிறது. பெரிய தொடரில் பங்கேற்பதற்கு முன் குறிப்பிட்ட வீரர்களுக்கு முறையாக ஓய்வளிக்க வேண்டும்.

பணம் கொழிக்கும் பிசிசிஐ போன்ற கிரிக்கெட் வாரியம் உள்ள நாட்டில், வீரர்கள் ஐபிஎல்-ல் ஆடுவதற்கு அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். நாட்டிற்காக விளையாட வேண்டிய முக்கிய போட்டிகளில் கோட்டைவிட்டுவிடுகிறார்கள்” என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் கிரிக்கெட் பயிற்சியாளர் ஹாரிங்டன்.

"ரிஷப் பண்ட்-ஐ களமிறக்காமல், தினேஷ் கார்த்திக்கை மட்டும் வைத்து போட்டியை எதிர்கொண்டிருக்க வேண்டும் எனக்கூறிய ஹாரிங்டன், "போட்டியை தோற்றாலும் சர்வதேச டி20 ஆட்டங்களில் 4,000 ரன்களை கடந்த விராட் கோலி பாராட்டப்பட வேண்டியவர்," என தெரிவித்தார்.

‘இந்தியா பாடம் பயில வேண்டும்’

 

டி20 உலக கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

“டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி விராட் கோலி, சூர்யகுமார் இருவரின் ஆட்டத்தை மட்டுமே நம்பியிருந்தது. இருவருக்கும் அதிகப்படியான அழுத்தங்களை வழங்குவது தவறு. விராட் கோலியை போன்று எதிர்காலத்தில் சிறந்த பேட்ஸ்மேன்களை இந்திய அணி உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.

பாகிஸ்தானை போன்ற வேகப்பந்துவீச்சு இந்தியாவிடம் இல்லை என்பது உண்மை. ஐபிஎல் போன்ற தொடர்களில் துல்லியமாக வீசும் வேகப்பந்து வீச்சாளர்கள் அடையாளம் காணப்பட்டாலும் அவர்களுக்கு முறையான பயிற்சியுடன் வாய்ப்பு வழங்க வேண்டும்.

இந்தியாவின் தோல்வி விமர்சிக்கப்பட்டாலும் அதில் இருந்து பாடம் பயில வேண்டும். இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி ஒரு சிறந்த கிரிக்கெட்டை ஆடியிருக்கிறது.

இறுதிப்போட்டியில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதுவதற்கு அத்தனை தகுதிகளும் உள்ளன” என பிபிசி தமிழிடம் தெரிவித்தார் கிரிக்கெட் பயிற்சியாளர் ஹாரிங்டன்.

வரும் ஞாயிறுக்கிழமை ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கான இறுதி யுத்தத்தில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணி, இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு பலப்பரிட்சை நடத்துகின்றன.

https://www.bbc.com/tamil/articles/cle1enxdjd5o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஏராளன் said:
  • "போட்டியை தோற்றாலும் சர்வதேச டி20 ஆட்டங்களில் 4,000 ரன்களை கடந்த விராட் கோலி பாராட்டப்பட வேண்டியவர்," என தெரிவித்தார்.

இவர்கள் திருந்த வாய்ப்பே இல்லை, இன்னொரு இந்திய விமர்சகர் விராட்டின் கவர் ட்ரைவை கண்ணில் ஒற்றிக்கொள்ளவேணும் என மெச்சுகிறார்.

இந்தியாவின் தோல்விக்கு விராட்டும்தான் காரணம் என்பதை இவர்கள் புரிந்து கொள்ளவில்லையா?

இந்தியர்கள் போல வேறு எந்த நாட்டினரும் இப்படி நட்சத்திரங்களை கொண்டாடுவதில்லை, போட்டியில் வெற்றி தோல்வி சகயம்தான் ஆனால் தோல்வி வந்தவுடன் இப்படியாவது மனதை தேற்றிகொள்வோம் எனும் சின்னப்பிள்ளைதனத்தை எப்போது கைவிடப்போகிறார்களோ தெரியவில்லை.

அடுத்த வகையினர் (இந்தியர்கள்) அரையிறுதியில் இந்தியா தோற்ற பின்னர் எதோ சாக கொடுத்தவர்கள் போல இருக்கிறார்கள், அவர்களுக்கு ஆறுதல் கொடுக்கும் செய்திகளில் ஒன்றாக இலங்கை அணி வீரர் குணத்திலக்கவின் விவகாரம் உள்ளது.

அவுஸ்ரேலியா கிரிகெட்டில் கோலோச்சிய காலத்தில்தான் இந்தியணியில் ஒரு துடுப்பாட்டக்காரர் இருந்தார், துடுப்பாட்டத்தில் இரண்டாவது வரிசையில் மட்டுமே விளையாடுவேன் என அடம்பிடிக்கும் ஒருவர்.

தொடக்க ஆட்டக்காரராக இறங்கினால் வேகப்பந்து வீச்சாளர்களின் சுவிங்கில் சிக்கி சிதறி விடலாம் இரண்டாவதாக இறங்கினால் நீண்ட ஒரு ஆட்டத்தினை ஆடி தனது சொந்த சாதனைகளை நிறைவேற்றலாம் எனும் அடிப்படையில், அவருக்கு கிடைத்த பெருமயினை நாட்டிற்கு கிடைத்த பெருமையாக  இன்னமும் இந்தியர்கள் நினைக்கிறார்கள், அதே நேரத்தில் அவுஸ்ரேலியா பல வெற்றிகளை குவிக்க இந்திய அணி போட்டிகளில் தோற்றுக்கொண்டிருந்தது.

இந்த மாதிரியான நிலமையே அணியின் தோல்விக்கு காரணமாக அமைகிறது.

தேவைக்கு உதாவத பொருளை பொதுவாக குப்பையில் போட்டுவிடுவார்கள், அது தேவையில்லாமல் வெறும் இடத்தினை பிடித்து கொண்டிருக்கும், அதை விட்டு அது, இது என பெருமை பேசும் முட்டாள்தனத்தினை இவர்கள் கைவிடாவிட்டால் தோல்வி தொடர்கதையாவதை தவிர்க்க முடியாது.

நட்சத்திர வீரர்கள் கொண்ட இந்தியணியின் நிலை சத்திர சிகிச்சை வெற்றி ஆனால் நோயாளி இறந்து விட்டார் நிலைதான். 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேத்யூ ஹேடன்: பாகிஸ்தானின் வெற்றிக்கு நம்பிக்கையளித்தவர் - செய்தது என்ன?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,எம். மணிகண்டன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நியூஸிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் திடீரென் வீறு கொண்ட பாகிஸ்தான் அணி மிக எளிதாக வென்றது. இதில் பாபர் ஆஸமும் ரிஸ்வானும் மிகச் சிறப்பாக ஆடினார்கள். சாஹீன் ஷா அப்ரிடி உள்ளிட்டோர் பந்தவீச்சால் திணறடித்தார்கள். இவர்கள் அனைவரும் வெகுவாகப் பாராட்டப்பட்டார்கள்.

இவர்களுக்கு இடையே மற்றொருவரும் பாகிஸ்தானின் வெற்றிக்காக முன்னிறுத்தப்படுகிறார். அவர் மேத்யூ ஹேடன். பாகிஸ்தான் அணியின் ஆலோசகர்.

“மேத்யூ ஹேடனின் கீழ் பாகிஸ்தான் அணி சிறப்பாகச் செயல்பட்டிருப்பது ஒன்றும் வியப்புக்குரியதல்ல” என்று கூறியிருக்கிறார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ.

என்ன செய்தார் மேத்யூ ஹேடன்?

 

நியூஸிலாந்துக்கு எதிரான போட்டி முடிந்ததும் பாபர் ஆஸம் உள்ளிட்ட பாகிஸ்தான் அணி வீரர்கள் மேத்யூ ஹேடனை கட்டித் தழுவிய புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவின. உணர்ச்சிப்பூர்வமான தருணமாக அது இருந்தது.

அந்த உணர்ச்சிப் பெருக்குக்கு காரணம் உண்டு. தொடர் முழுவதுமே சரியாக ஆடாமல் இருந்த பாபர் ஆஸமை நியூஸிலாந்து போட்டிக்கு முன்னதாக உற்சாகப் படுத்தும் வகையில் பேசியிருந்தார் மேத்யூ ஹேடன்.  

“பாபர் போன்ற சிறப்பான ஆட்டக்காரர்கள் நீண்ட காலம் மோசான நிலையில் இருக்க மாட்டார்கள்” என்று அப்போது அவர் கூறியிருந்தார். ரிஸ்வானும் பாபரும்தான் உலகின் நம்பர் 1 தொடக்க ஆட்டக்காரர்கள் என்றும் அப்போது அவர் கூறினார்.

ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்டுடன் பாபர் ஆஸமை ஒப்பிட்ட மேத்யூ ஹேடன்,  2007-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கில்கிறிஸ்ட் ஆடியதைப் போல வரும் போட்டிகளில் பாபர் சிறப்பாகச் செயல்படுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். 

நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் அதுதான் நடந்தது. ரிஸ்வானும் பாபரும் அரைச் சதங்களை அடித்து அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தனர். 12.4 ஓவர்களில் அவர்கள் 105 ரன்களை எடுத்தனர். அதன்  பிறகுதான் தங்கள் மீது நம்பிக்கை வைத்த மேத்யூ ஹேடனை அவர்கள் ஆரத் தழுவினர்.

“மேத்யூ ஹேடன் எப்போதுமே ஒரு தலைவர். இதயத்தில் இருந்து பேசக்கூடியவர். ஏதாவது தவறாகப் பட்டால் உடனடியாக அதைச் சுட்டிக்காட்டக் கூடியவர்” என்று கூறுகிறார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ.

“அவருடைய வேட்கையும் அர்ப்பணிப்பும் தெளிவாகத் தெரியக்கூடியது” என்று பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் மேத்யூ ஹேடனின் மற்றொரு சகாவான ஆடம் கில் கிறிஸ்ட்.

 

பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மேத்யூ ஹேடனுக்கு இப்போது 51 வயது. 1993-ஆம் ஆண்டில் இருந்து 2007-ஆம் ஆண்டு வரை அவர் ஆஸ்திரேலியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் ஆடியிருக்கிறார். ஆஸ்திரேலியாவின் மிகச் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவர் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

உலகக் கோப்பை டி20 தொடரின் தொடக்கப் போட்டிகளில் பாபர் தலைமையிலான பாகிஸ்தான் அணி தடுமாறியது.  இந்தியாவுடனும் ஜிம்பாப்வே அணியுடனும் தோல்வியைத் தழுவியதால் அந்த அணி அரையிறுதிக்குச் செல்ல முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. 

ஆனால் அதற்கு அடுத்த மூன்று போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. கடைசி நாளில் தென்னாப்பிரிக்க அணி நெதர்லாந்து அணியுடன் தோற்றுப் போனதால் அரையிறுதி வாய்ப்பு பாகிஸ்தானுக்கு கிடைத்தது.

ஆயினும் தொடக்கப் போட்டிகளில் தடுமாறிய அணி பலமான நியூஸிலாந்து அணியை வெல்ல முடியுமா என்ற சந்தேகம் இருந்தபோது, மிக எளிதாக அந்த அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துவிட்டது. 1992-ஆம் ஆண்டு எங்கோ காணாமல் இருந்த அணி கடைசியில் கோப்பையை வென்றது போல இன்னொரு முறை இறுதிப் போட்டிக்குள் நுழைந்துவிட்டதாக பாகிஸ்தான் ரசிகர்கள் பெருமிதம் அடைந்து வருகிறார்கள்.

“போராட்டத்தை விரும்புவேன்”

பாகிஸ்தான் அணிக்கு நேரடியான பயிற்சியாளராக மேத்யூ ஹேடன் நியமிக்கப்படவில்லை. அவர் அணியின் ஆலோசகர் மாத்திரமே. ஆனால் அவரை அணியை வழிநடத்தக்கூடியவராகச் செயல்படுவதை மைதானத்தில் காண முடிகிறது. 

 

பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

“நான் உண்மையிலேயே போராட்டத்தை விரும்புவேன். போராட்டம்தான் வளர்வதற்கான வாய்ப்பை வழங்கும். ஒரு அணியாக உருவெடுக்க வைக்கும்” என்று கூறுகிறார் மேத்யூ ஹேடன்.

பாகிஸ்தான் ஆடும் போட்டிகளில் இடைவேளைகளின்போது அவரை மைதானத்துக்குள் காண முடியும். மற்ற தருணங்களில் அவர் வீரர்களுக்கு ஆலோசனை வழங்குவதையும் காணலாம். ஆலோசகராக இருக்கும் அவரை பயிற்சியாளராக மாற்ற வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் கோரிக்கை விடுக்கத் தொடங்கிவிட்டார்கள்.

பாகிஸ்தான் - இங்கிலாந்து போட்டி எப்படி?

பாகிஸ்தானும் இங்கிலாந்தும் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமையன்று மோத இருக்கின்றன. மெல்போர்ன் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. 

அரையிறுதிப் போட்டியில் எளிதாக வென்ற உற்சாகத்தில் இரு அணிகளும் இறுதிப் போட்டிக்குத் தயாராக இருக்கின்றன. பாகிஸ்தான் அணி கடந்த 4 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றிருக்கிறது. இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் வென்றிருக்கிறது.

 

பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாகிஸ்தானின் பாபர் ஆஸம், ரிஸ்வான் இணையைப் போல, இங்கிலாந்தின் பட்லர், ஹேல்ஸ் இணை சிறப்பான துவக்கத்தை அளிக்கத் தொடங்கியிருக்கிறது. பாகிஸ்தானுக்கு சாஹீன் ஷா அப்ரிடி என்றால் இங்கிலாந்துக்கு சாம் கரன். இரு தரப்புமே இப்போதைக்கு சமமான பலத்தைக் கொண்டிருப்பதாகவே கருதப்படுகிறது.

பாகிஸ்தான் அணியில் எந்த மாற்றமும் இருக்காது என்றே நம்பலாம். எனினும் இங்கிலாந்து அணியின் மார்க் வுட், மலான் ஆகியோர் சேர்க்கப்படுவார்களா என்பது பற்றிய அறிவிப்பு இன்னும் வரவில்லை.

மெல்போர்ன் மைதானம் எப்படி?

மெல்போர்னில் நாளை காலநிலை மோசமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் முடிவு கிடைக்கும் வகையில் போட்டியை ஆடுவதற்கு நேரம் கிடைக்கலாம்.  இந்த மைதானத்தில் ஏற்கெனவே ஆடப்பட்ட போட்டிகளை வைத்துப் பார்க்கும் போது 160 ரன்களுக்கு அதிகமாக எடுத்தால் இரண்டாவது ஆடும் அணிக்கு அது சவாலானதாக இருக்கும்.

https://www.bbc.com/tamil/articles/cjl867p5d3xo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

T20 WC | பாகிஸ்தான் - இங்கிலாந்து இறுதியும், 10 விதமான ரசிக மனநிலைகளும் - ஓர் உளவியல் பார்வை

895943.jpg  
 

இந்தியா - பாகிஸ்தான் இறுதிப் போட்டி இந்த டி20 உலகக் கோப்பையை அலங்கரிக்கும் ஓர் இறுதியாக இருக்கும் என்று இந்திய - பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் காத்திருந்த நேரத்தில், இங்கிலாந்திடம் இந்திய அணி தோற்று ரசிகர்கள் பலரது இதயத்தை நொறுக்கிவிட்டது. இந்நிலையில் இங்கிலாந்து - பாகிஸ்தான் இறுதிப் போட்டி 1992-க்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் ரிபீட் ஆகியுள்ளது.

இது பற்றிய கருத்துகள் வலம் வந்தபடி இருக்கின்றன. அப்போது இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது. அதேபோல் இப்போதும் பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தை வீழ்த்தி உலகக் கோப்பையை வெல்லும் என்பது பாகிஸ்தான் ரசிகர்களின் நினைவு ஏக்க ஆசையாக இருந்து வருகிறது. இந்த ஆசையை பலவிதங்களில் அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்திய மனநிலைகளில் ஒரு சில தரப்பு ஆறுதல் படுவது ‘நல்ல வேளை இந்தியா - பாகிஸ்தான் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்பதற்குப் பதிலாக இங்கிலாந்திடம் தோற்றதே நல்லது’ என்ற ட்ரெண்ட்தான் இப்போது ஓடிக்கொண்டிருக்கிறது.

16682501083078.jpg

ஆனால், இந்திய ரசிகர்கள் பலவிதம்... ஒவ்வொருவரும் ஒரு விதம். இந்த இறுதிப் போட்டி குறித்த இந்திய ரசிகர்களின் பல்வேறு மனநிலைகளை வரிசைப்படுத்துவோம்:

  1. இந்தியாவோ இறுதிக்கு வரவில்லை, எனவே இங்கிலாந்து - பாகிஸ்தான் இறுதிப் போட்டியை டென்ஷன் இன்றி பார்க்கலாம்.
  2. பாகிஸ்தான் நம் எதிரி நாடு, எனவே இறுதியில் அந்த அணி கோப்பையை வென்று விடக் கூடாது. இங்கிலாந்துதான் வெல்ல வேண்டும்.
  3. இங்கிலாந்து நம்மை மிக மோசமாகத் தோற்கடித்து விட்டனர், ஆகவே, பாகிஸ்தான் வென்றாலும் வெல்லலாமே தவிர, இங்கிலாந்து ஒருபோதும் வெல்லவே கூடாது.
  4. பட்லருக்காகவாவது இங்கிலாந்துதான் வெல்ல வேண்டும்.
  5. பாபர் அசாம் இப்போதுதான் கேப்டனாகியுள்ளார், கோலியினால் வெல்ல முடியாத ஐசிசி கோப்பையை பாபர் அசாம் தலைமையில் அதற்குள் பாகிஸ்தான் வெல்லக் கூடாது.
  6. இந்தியா, ஜிம்பாப்வேயிடம் தோற்ற பாகிஸ்தான் கோப்பையை வெல்ல தகுதிபெற்ற அணியல்ல.
  7. அயர்லாந்திடம் தோல்வியடைந்து இலங்கையிடம் தண்ணி குடித்து கடைசி ஓவர் வரை வந்து 140 ரன்கள் இலக்கை எடுத்து வென்ற இங்கிலாந்து கோப்பையை வெல்ல லாயக்கற்றது.
  8. ‘என் தலைவன் கோலி’ ஆடாத இறுதிப் போட்டியில் யார் வென்றால் என்ன?
  9. தோனி போனவுடனேயே கிரிக்கெட் போயிடுச்சு சார்! யார் ஜெயிச்சா என்ன? தோற்றால் என்ன?
  10. கிரிக்கெட்டை கிரிக்கெட்டா பாருங்க ப்ரோ!

அமெரிக்கக் கவி வாலஸ் ஸ்டீவன்ஸ் Thirteen Ways of Looking at a Blackbird என்ற கவிதையை எழுதினார். அந்த பிளாக் பேர்டு போல் இங்கிலாந்து - பாகிஸ்தான் இறுதிப் போட்டியை ஒரு பொருளாகக் கண்டால் 10 விதங்களில், 10 கோணங்களில் இந்திய ரசிகர்கள் அதைக் காண்கின்றனர் என்று கூற முடியும். (விடுபட்ட கோணங்களை கருத்துப் பகுதியில் பகிரலாம்) இவையெல்லாம் பல்வேறு மனநிலைகள். மனநிலைகளின் பன்மை என்று கூறலாம்.

16682501813078.jpg

ஆனால், இவையெல்லாமே ஏதோ ஒருவிதத்தில் ஒருதலைப் பட்சமான பார்வையே. ‘கிரிக்கெட்டை கிரிக்கெட்டா பாருங்க ப்ரோ’ ரக மனநிலை கொண்டவர்கள் மத்தியிலும் கூட இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாத ஒரு வெறுப்பு மனநிலையில் இத்தகைய நிலைப்பாடு கொண்டவர்கள் இருப்பார்கள்.

இவையெல்லாம் ஏதோ ஒருவிதத்தில் இந்தியா - பாகிஸ்தான் அரசியல் பதற்றம் சார்ந்த பார்வைகளில் மையம் கொண்டதாகவே இருக்கலாம். இந்த மனநிலைகளுக்கு மாற்றாக அழகியல் பார்வையை வலியுறுத்தலாம்.

அதாவது, பாபர் அசாமின் அந்த கவர் ட்ரைவ், ஆன் ட்ரைவ், மிட்விக்கெட் ட்ரைவ், கட்ஷாட்களின் அழகை ரசிப்பது. ரிஸ்வானின் புல்ஷாட் அழகை ரசிப்பது. அல்லது இப்திகாரின் மிடில் ஓவர் ஆட்டத்திறனையும் அவரது சிக்சர்களையும் இடைவெளியில் அடிக்கும் திறமையையும் விதந்தோதி கிரிக்கெட் நுணுக்கங்களுடன் ரசிப்பது.

அல்லது பட்லர், ஹேல்ஸின் அட்டகாசமான ஷாட் செலக்‌ஷனை ரசிப்பது, ஆதில் ரஷீத் அன்று திட்டம் தீட்டி சூரியகுமார் யாதவை வீழ்த்தியது போல் பாகிஸ்தானின் முக்கியமான வீரர்களை எப்படி வீழ்த்துகிறார் என்பது போன்ற நுணுக்கங்களைப் பாராட்டுவது. வெற்றி - தோல்விகளுக்கு அப்பால், கிரிக்கெட்டின் நுட்பங்களையும் அந்த ஆட்டத்திற்குரிய அழகியல்களை ரசிப்பது என்பது நடுநிலையான பார்வை.

வெறுப்பரசியலால் தூண்டப்பட்ட கிரிக்கெட் வெறி மனோபாவத்தை விட கிரிக்கெட் ரசனையை மேம்படுத்துமாறு போட்டியை ரசிப்பது என்பது உடல்/மன ஆரோக்கியத்திற்கு நல்லது. பார்ப்பவர்களின் தன்னுணர்வுடன் கூடிய எதார்த்த உலகிற்கும் தொலைக்காட்சியில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி எனும் புனைவுலகத்திற்கும் இடையே ஒரு தொலைவை கடைப்பிடிப்பது, தூரத்தைக் கடைப்பிடிப்பது aesthetic distance என்று அழைக்கப்படுகிறது.

16682502263078.jpg

ஏனெனில் இப்போதெல்லாம் ஒரு போட்டிக்கு முன்பாக, குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் போன்ற போட்டிகளுக்கு முன்பாக மேற்கொள்ளப்படும் போட்டி குறித்த விளம்பரங்கள், டிஜிட்டல், சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட ஊடகங்கள் இந்த அழகியல் தொலைவு என்பதை அனுமதிக்காது ரசிகர்களை உணர்வுபூர்வமாக போட்டியைப் பார்க்க தூண்டுகிறது.

இந்த நெரிசலான ஓர் ஊடக இடையீடுகள் ஏற்படுத்தும் ஓர் உணர்ச்சிகரமான கொதிநிலை மனோபாவங்களிலிருந்து விடுபட அழகியல் தொலைவுபடுத்திக் கொள்ளுதல் என்ற கோட்பாடு பெரிதும் உதவும். ஜெர்மானிய தத்துவ ஞானியான இம்மானுயேல் காண்ட் என்பார் தன்னுடைய Critique of Judgement என்ற நூலில் தன்னலமற்ற, சுயத்தின் தன்மைகள் அற்ற ஒரு மகிழ்ச்சி நிலை பற்றி கூறுகிறார். இதில் ஒரு குறிப்பிட்ட பொருள் மீதான ஆசை அல்லது பற்றுதல் கூடாது, நம் சூழலில் கிரிக்கெட் போட்டி குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் உள்ளிட்ட போட்டிகள் என்று வைத்துக் கொள்வோம். இதனை ஒரு பொருள் அல்லது பண்டமாகவே ஒளிபரப்பு ஊடகங்கள் மாற்றி வைத்துள்ளன. எனவே, பண்டமாக்கப்பட்ட பொருள் மீதான ஆசையைத் துறந்து, அந்தக் குறிப்பிட்ட பொருளின் அல்லது ஆட்டத்தின் அல்லது படைப்பின் உள்ளார்ந்த அழகு உள்ளிட்ட குணாம்சங்களைக் கண்டு மகிழ்தல், ரசித்தல் என்பதுதான் இம்மானுயேல் காண்ட் கூறுவது.

அதாவது, நம் சுயத்தின் உருவாக்கப்பட்ட கோரிக்கைகள், அந்த ஆட்டத்தைப் பற்றிய நம் மனப்போக்குகள், திணிகக்ப்பட்ட எண்ணங்களை தற்காலிகமாகவேனும் ஒத்தி வைத்துவிட்டு ஆட்டத்தின் உள்ளார்ந்த அழகில் கவனம் செலுத்தி ரசித்து மகிழ்வது என்பது நல்ல ஆரோக்கியமான, அழகியல் மனநிலைக்கு உதாரணம்.

இத்தகைய அழகியல் பார்வை குறுகிய எண்ணங்களிலிருந்து நம்மை விடுவித்து மேன்மைப்படுத்தும் ஒரு வழிமுறை என்றே உளவியல்கள் கூறுகின்றன. கிரிக்கெட்டை மட்டுமல்ல, எந்த ஒரு படைப்பையுமே நாம் இப்படிப்பட்ட பார்வைக்குட்படுத்திக் கொண்டு விட்டால் அது நம் சுயத்தை ஏற்கெனவே இருக்கும் தளைகளிலிருந்து விடுவித்து வேறு சுயத்தை வடிவமைத்துக் கொள்ளச் செய்யும்.

https://www.hindutamil.in/news/sports/895943-pakistan-and-england-t20-world-cup-final-held-tomorrow-here-fans-mindset-4.html

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகக்கோப்பை இறுதிப்போட்டி: ஐசிசி அறிவித்த அதிரடி மாற்றம்!

christopherNov 12, 2022 14:46PM
melbourn-rain-3.jpg

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஐசிசி ஆட்ட விதிகளில் முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் கடந்த ஒரு மாதமாக கொண்டாடப்பட்டு வரும் டி20 உலகக்கோப்பை திருவிழா நாளை (நவம்பர் 13) நடக்க இருக்கும் பாகிஸ்தான் – இங்கிலாந்து இறுதிப்போட்டியுடன் நிறைவு பெற இருக்கிறது.

பயம் காட்டும் மழை!

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நாளை (இந்திய நேரப்படி மதியம் 1.30 மணி) நடக்க இருக்கும் இந்த மாபெரும் யுத்தத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது மழை தான். அங்கு 80 சதவீதம் அளவிற்கு நாளை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலிய வானிலை மையம் அறிவித்துள்ளது.

ஐசிசியின் முதல் திட்டம்!

இதற்கு முன்கூட்டியே திட்டங்களை தீட்டி வைத்திருந்த ஐசிசி, ஒருவேளை போட்டியன்று மழை குறுக்கீடு செய்து ஆட்டம் தடைபட்டால், அதற்கு மறுநாள் ரிசர்வ் நாளாக அறிவிக்கப்பட்டு, ஆட்டம் கைவிடப்பட்ட இடத்தில் இருந்து மீண்டும் துவங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் அன்றும் இடியுடன் கூடிய 80 சதவீத மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

இதனையடுத்து திங்கள்கிழமையும் (நவம்பர் 14) மழை பெய்து ஆட்டம் கைவிடப்படும் பட்சத்தில், உலகக்கோப்பையானது இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் என்று ஐசிசி முன்னதாக கூறியிருந்தது.

icc changed its plan

திட்டத்தை மாற்றிய ஐசிசி!

இந்நிலையில் இறுதிப்போட்டியில் எப்படியாவது முடிவு கிடைக்க வைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக உள்ள ஐசிசி, தற்போது ஒரு மிகப்பெரும் மாற்றத்தினை கொண்டுவந்துள்ளது.

அதன்படி, ரிசர்வ் நாளில் அதாவது திங்கள் கிழமையன்று விளையாடும் நேரத்தை இரண்டு மணிநேரத்தில் இருந்து நான்கு மணி நேரமாக அதிகரிக்க ஐசிசி முடிவு செய்துள்ளது.

லீக் சுற்றுகளில் மழை பெய்தால் டக் வொர்த் லீவிஸ் முறைப்படி ஆட்டத்தின் முடிவை அறிவிப்பதற்கு 5 ஓவர்கள் வீசப்பட்டிருப்பது அவசியம். ஆனால், நாக் அவுட் போட்டிகளில் அவ்வாறு முடிவு அறிவிப்பதற்கு 10 ஓவர்கள் தேவைப்படுகிறது.

எனவே இறுதிப்போட்டியானது ரிசர்வ் நாளில் நடைபெறும் பட்சத்தில் ஐசிசி நிபந்தனைகள் (பிரிவு 13.7.3) படி, விளையாடும் நேரம் நான்கு மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

அதேவேளையில் லேசான மழை என்றால், தேவையான ஓவர்களைக் குறைத்து, திட்டமிடப்பட்ட போட்டி நாளில் அதாவது ஞாயிற்றுக்கிழமையன்று போட்டியை முடிக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்.

மேலும் ரிசர்வ் நாளுக்கு ஆட்டம் மாற்றப்படுகிறது எனில், போட்டியானது, இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு, நிறுத்தப்பட்ட ஆட்டத்தின் தொடர்ச்சியாக நடைபெறும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

 

 

https://minnambalam.com/sports/icc-changed-its-plan-on-t20-worlcup-final-in-pakvseng/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

pak vs eng t20: மெல்பர்னில் மீண்டும் நிகழுமா 1992 அதிசயம்?

 

பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

55 நிமிடங்களுக்கு முன்னர்

30 ஆண்டுகளுக்கு முன்பு இதே மெர்பர்ன் மைதானத்தில் இதே போன்ற ஓர் இரவில் இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி உலகச் சாம்பியன் ஆனது. அதே இரவை மீண்டும் எதிர்நோக்கி காத்திருக்கிறது பாகிஸ்தான். 

பாகிஸ்தான் அணி எப்போதும் அதிசயத்தை நிகழ்த்தக்கூடியது என்று அந்நாட்டு ரசிகர்கள் நம்புகிறார்கள். ஜிம்பாப்வேயுடன் தோற்ற அந்த அணி பலமான தென்னாப்பிரிக்காவையும் நியூசிலாந்தையும் வீழ்த்தியதை சுட்டிக்காட்டுகிறார்கள்.

1992-ஆம் ஆண்டு நடந்ததை போன்று மீண்டும் நடக்கும் என்ற விவாதம் குறித்துக் கேட்டபோது, “நடப்பது எல்லாம் அல்லாவால் நடக்கிறது. அல்லா எங்களுக்கு வாய்ப்பளிக்கிறார். ஆனால் முயற்சி எங்கள் கைகளில்தான் இருக்கிறது. ஆனால் முடிவு அல்லாவின் கையில். இறுதிப் போட்டியிலும் அல்லா எங்களை வெற்றி பெற வைப்பார்” என்று கூறினார் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம்.

உலகக் கோப்பை டி20 தொடரின் தொடக்கப் போட்டிகளில் பாபர் தலைமையிலான பாகிஸ்தான் அணி தடுமாறியது.  இந்தியாவுடனும் ஜிம்பாப்வே அணியுடனும் தோல்வியைத் தழுவியதால் அந்த அணி அரையிறுதிக்குச் செல்ல முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. 

 

ஆனால் அதற்கு அடுத்த மூன்று போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. கடைசி நாளில் தென்னாப்பிரிக்க அணி நெதர்லாந்து அணியுடன் தோற்றுப் போனதால் அரையிறுதி வாய்ப்பு பாகிஸ்தானுக்கு கிடைத்தது.

ஆயினும் தொடக்கப் போட்டிகளில் தடுமாறிய அணி பலமான நியூசிலாந்து அணியை வெல்ல முடியுமா என்ற சந்தேகம் இருந்தபோது, மிக எளிதாக அந்த அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துவிட்டது.

1992-ஆம் ஆண்டு எங்கோ காணாமல் இருந்த அணி கடைசியில் கோப்பையை வென்றது போல இன்னொரு முறை இறுதிப் போட்டிக்குள் நுழைந்துவிட்டதாக பாகிஸ்தான் ரசிகர்கள் பெருமிதம் அடைந்து வருகிறார்கள்.

பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் எப்படி?

பாகிஸ்தானும் இங்கிலாந்தும் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமையன்று மோத இருக்கின்றன. மெல்போர்ன் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. 

அரையிறுதிப் போட்டியில் எளிதாக வென்ற உற்சாகத்தில் இரு அணிகளும் இறுதிப் போட்டிக்குத் தயாராக இருக்கின்றன. பாகிஸ்தான் அணி கடந்த 4 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றிருக்கிறது. இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் வென்றிருக்கிறது.

பாகிஸ்தானின் பாபர் ஆஸம், ரிஸ்வான் இணையைப் போல, இங்கிலாந்தின் பட்லர், ஹேல்ஸ் இணை சிறப்பான துவக்கத்தை அளிக்கத் தொடங்கியிருக்கிறது. பாகிஸ்தானுக்கு சாஹீன் ஷா அப்ரிடி என்றால் இங்கிலாந்துக்கு சாம் கரன். இரு தரப்புமே இப்போதைக்கு சமமான பலத்தைக் கொண்டிருப்பதாகவே கருதப்படுகிறது.

பாகிஸ்தான் அணியில் எந்த மாற்றமும் இருக்காது என்றே நம்பலாம். எனினும் இங்கிலாந்து அணியின் மார்க் வுட், மலான் ஆகியோர் சேர்க்கப்படுவார்களா என்பது பற்றிய அறிவிப்பு இன்னும் வரவில்லை.

 

பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மெல்பர்ன் மைதானம் எப்படி?

மெல்பர்னில் காலநிலை மோசமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் முடிவு கிடைக்கும் வகையில் போட்டியை ஆடுவதற்கு நேரம் கிடைக்கலாம்.  இந்த மைதானத்தில் ஏற்கெனவே ஆடப்பட்ட போட்டிகளை வைத்துப் பார்க்கும் போது 160 ரன்களுக்கு அதிகமாக எடுத்தால் இரண்டாவது ஆடும் அணிக்கு அது சவாலானதாக இருக்கும்.

டி20 உலகக் கோப்பை தொடரில் மெல்போர்னில் திட்டமிடப்பட்ட 12 போட்டிகளில் 3 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டிருக்கின்றன. இந்த மைதானம் மட்டும்தான் இங்கிலாந்து அணிக்கு தடுமாற்றத்தை தந்திருக்கிறது. மெல்போர்னில் நடந்த ஒரு போட்டியில் தோல்வியடைந்த இங்கிலாந்து, மற்றொரு போட்டி ரத்தானதால் பாதிக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கும் இதேபோன்ற நிலைதான். இந்தியாவுடனான போட்டியில் தோல்வியடைந்தது இந்த மைதானத்தில்தான்.

1992-இல் என்ன நடந்தது?

1992-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் ஆடிய முதல் 5 போட்டிகளை எடுத்துப் பார்த்தால் மூன்று வெற்றிகளும் ஒரு தோல்வியும், மழையால் ரத்து செய்யப்பட்ட ஓர் ஆட்டமும்தான் இருக்கும். 

முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் தோல்வி அடைந்தது. 

அடுத்ததாக இங்கிலாந்து அணியுடனான போட்டி. வெறும் 74 ரன்களுக்குச் சுருண்டது பாகிஸ்தான். தோல்வி உறுதி என்ற நிலையில் மழை குறுக்கிட்டு ஆட்டம் ரத்தானது. இரு அணிகளுக்கும் ஒரு புள்ளிகள் கிடைத்தன. இது இங்கிலாந்துக்கு ஏமாற்றமாகவும் பாகிஸ்தானுக்கு சாதகமாகவும் போனது.

 

 

பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அடுத்ததாக இந்தியாவை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி மற்றொரு தோல்வியைச் சந்தித்து. டெண்டுல்கர், அசாருதீன் ஆகியோரின் கணிசமான ரன் குவிப்பால் இந்திய அணி 216 ரன்களை எடுத்தது. ஆனால் 173 ரன்களுக்குச் சுருண்டு தோல்வியடைந்தது பாகிஸ்தான்.

முதல் 5 போட்டிகளில் ஜிம்பாப்வே அணியை மட்டும் பாகிஸ்தானால் வீழ்த்த முடிந்தது.  அடுத்ததாக பலமான ஆஸ்திரேலியாவையும், நியூலாந்தையும் எதிர்கொள்ள வேண்டும்.  இலங்கையுடனான மற்றொரு போட்டியும் இருந்தது.

அந்தச் சூழ்நிலையில் பாகிஸ்தான் அரையிறுதிக்குச் செல்வது பற்றி யாருமே கணித்திருக்க மாட்டார்கள்.  ஆனால் வியக்கத்தக்க வகையில் ஆஸ்திரேலியாவை வென்ற பாகிஸ்தான் அடுத்ததாக இலங்கையையும் வீழ்த்தியது. 

கடைசியாக நியூசிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் மோதியது. மொத்தமாக 8 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் அதுவரை ஒரு போட்டியில் கூட நியூசிலாந்து தோற்கவில்லை. அப்படிப்பட்ட அணியை  166 ரன்களுக்குச் சுருட்டியது பாகிஸ்தான். அரைச் சதமும், சதமும் அடித்துக் கொண்டிருந்த கேப்டன் மார்ட்டின் க்ரோவ் அந்தப் போட்டியில் 20 பந்துகளைச் சந்தித்து 3 ரன்களை எடுத்தார். 

ஆஸ்திரேலிய அணி அரையிறுதிப் போட்டிக்கு வரக்கூடாது என்பதற்காக பாகிஸ்தானுக்கு நியூசிலாந்து விட்டுக் கொடுத்ததாகவும் அப்போது பரவலாகப் பேசப்பட்டது. ஏனென்றால் அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்துவது எளிது என நியூசிலாந்து அணி கணித்திருக்கலாம் என்று கருதப்பட்டது.

ஆனால் ஆக்லாந்து மைதானத்தில் நடந்த அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி வீரர்கள் தங்களது வேறு முகங்களைக் காட்டினார்கள். கேப்டன் இம்ரான் கான், மியான் தத், ரமீஸ் ராஜா, இன்சமாம் உல் ஹக் என அனைத்து வீரர்களும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்கள். 37 பந்துகளில் 60 ரன்களைக் குவித்த இன்சமாம் தனது அதிரடியை உலகுக்கு நிரூபித்த தருணங்களுள் முக்கியமானது அது.

 

பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அந்தப் போட்டியில் வென்ற பாகிஸ்தான், இறுதிப் போட்டியில் இங்கிலாந்தையும் வீழ்த்தியது. ஒன்றை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். லீக் போட்டியில் வெறும் 74 ரன்களுக்குச் சுருண்ட அதே பாகிஸ்தான் அணிதான் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வெறுங்கையுடன் வெளியேற்றியது. பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் மிரட்டிய வாசிம் அக்ரம், கோப்பையைக் கைப்பற்றுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தார்.

பாகிஸ்தான் அணியின் இத்தகைய விஸ்வரூப மாற்றத்தைத்தான் அந்த நாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். நியூசிலாந்துடனான போட்டியில் அதுவே நடந்திருக்கிறது. அதுவே இறுதிப் போட்டியிலும் நடக்கும் என பாகிஸ்தான் ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

https://www.bbc.com/tamil/articles/c72z47xezz7o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகக் கிண்ணத்தை யார் கைப்பற்றுவது ? இயற்கை கைகொடுக்குமா ? இங்கிலாந்து - பாகிஸ்தான் இன்று மோதல் ! 

13 NOV, 2022 | 07:18 AM
image

 

(நெவில் அன்தனி)

முதல் சுற்றிலிருந்து அரை இறதிவரை எதிர்பார்த்த மற்றும் எதிர்பாராத  அற்புதமான ஆற்றல்களை கடந்த நான்கு வாரங்களாக வழங்கிவந்த எட்டாவது ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண அத்தியாயத்தின் சம்பியனைத் தீர்மானிக்கும் இங்கிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மாபெரும் இறுதிப் போட்டி மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று நடைபெறவுள்ளது.

இலங்கை நேரப்படி இந்த இறுதிப் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

 

ஏறத்தாழ ஒரே மாதிரியான பெறுபேறுகள்

1211_eng_vs_pak_t20_wc_final.png

இறுதி ஆட்டத்தை நோக்கிய இங்கிலாந்தினதும் பாகிஸ்தானினதும் பயணம் அதாவது அவற்றின் பெறுபேறுகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்ததுடன் இரண்டு அணிகளுக்கும் அரை இறுதி வாய்ப்புகளும் மிக சொற்பமாகவே இருந்தன.

இரண்டு அணிகளும் தத்தமது குழுக்களில் கடைசி சுப்பர் 12 சுற்று போட்டிகளில் வெற்றிபெற்று இரண்டாம் இடங்களைப் பெற்று அரை இறதிகளில் விளையாட தகுதிபெற்றன.

குழு 1இல் நியூஸிலாந்தும் குழு 2இல் இந்தியாவும் முதலாம் இடங்களைப் பெற்றபோது அந்த இரண்டு அணிகளும் அரை இறுதிகளில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குள் நுழையும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

0911_pak_vs_nz_celebrations.jpg

ஆனால், முதலாவது அரை இறுதியில் நியூஸிலாந்தை பாகிஸ்தான் 7 விக்கெட்களாலும் 2ஆவது அரை இறுதியில் இந்தியாவை இங்கிலாந்து 10 விக்கெட்களாலும் மிக இலகுவாக வெற்றிபெற்று இறுதிப் போட்டியில் விளையாட தகதிபெற்றன.

இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் 2009இல் சம்பியனான பாகிஸ்தான் மூன்றவாது தடவையாகவும் 2010இல் சம்பியனான இங்கிலாந்து இரண்டாவது தடவையாகவும் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றுள்ளன.

 

30 வருடங்களின் பின்னர் மீண்டும் இங்கிலாலந்து - பாகிஸ்தான்

 

1992 உலகக் கிண்ண (50 ஓவர்) இறுதிப் போட்டியில் விளையாடிய அதே நாடுகளின் அணிகள் 3 தசாப்தங்களுக்குப் பின்னர் அதே அரங்கில் ரி 20 வகையான உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளமை விசேட அம்சமாகும்.

இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் 30 வருடங்களுக்கு முன்னர் மெல்பர்னில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கிறஹாம் கூச் தலைமையிலான இங்கிலாந்தை 22 ஓட்டங்களால் வெற்றிகொண்டு 50 ஓவர் கிரிக்கெட்டில் உலக சம்பியனாகியிருந்தது.

இப்போது ஜொஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்தும் பாபர் அஸாம் தலைமையிலான பாகிஸ்தானும் இம்முறை சம்பியன் பட்டத்துக்கு குறிவைத்து அதே அரங்கில் மோதவுள்ளன.

இன்றைய போட்டியில் வெற்றிபெற்று சம்பியனாகும் அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்கு அடுத்ததாக இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில்   இரண்டு தடவைகள் சம்பியனான இரண்டாவது அணி என்ற பெருமையைப் பெறும்.

இரண்டாவது தடவையாக உலக சம்பியனாக வேண்டும் என்ற வேட்கையுடன் இரண்டு அணிகளும் இன்றைய இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளதால் இப் போட்டி கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

 

இங்கிலாந்தின் துடுப்பாட்டத்திற்கும் பாகிஸ்தானின் பந்துவிச்சுக்கும் இடையே இடம்பெறப்போகும் போட்டி

 

இந்த இறுதிப் போட்டி இங்கிலாந்தின் துடுப்பாட்டத்திற்கும் பாகிஸ்தானின் பந்தவீச்சிற்கும் இடையிலான போட்டியாக அமையும என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து வீரர்கள் ஆக்ரோஷத்துடனும் துணிச்சலுடனும் துடுப்பெடுத்தாடக்கூடியவர்கள் மடடுமல்லாமல் அவ்வணியின் துடுப்பாட்ட வரிசை நீளமானது.

1211_butler_and_hales.png

ஆனால், நடந்து முடிந்த போட்டிகளில் இங்கிலாந்து சார்பாக இருவர் மாத்திரமே சிறப்பாக துடுப்பெடுத்தாடியுள்ளனர்.

இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ் 5 போட்டிகளில் 2 அரைச் சதங்களுடன் மொத்தமாக 211 ஓட்டங்களைப் பெற்றதுடன்  ஜொஸ் பட்லர் 5 பொட்டிகளில் 2 அரைச் சதங்களுடன் 199 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இவர்கள் இருவரைவிட வெறு எவரும் 60 மொத்த ஓட்டங்களைப் பெறவில்லை.

0911_babar_azam_mhd_rizwan_vs_nz.jpg

பந்துவீச்சில் சாம் கரன் (5 போட்டிகளில்  10 விக்கெட்கள்), உபாதைக்குள்ளாகி இருக்கும் மார்க் வூட் (4 போட்டிகளில்  9 விக்கெட்கள்) ஆகிய இருவரே சிறப்பாக செயற்பட்டுள்ளனர். மார்க் வூட் இன்றைய போட்டியில் விளையாடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானின் பலம் அதன் பந்துவீச்சில் தங்கியிருப்பதுடன் அதன் ஆரம்ப வேகப்பந்துவீச்சாளர்கள் திறமையாக பந்தவீசியுள்ளனர். அவ்வணியின் சுழல்பந்துவீச்சும் சிறப்பாகவே அமைந்துள்ளது.

பாகிஸ்தான் அணியில் மொஹமத் ரிஸ்வான் 6 போட்டிகளில் ஒரு அரைச் சதத்துடன் 160 ஓட்டங்களையும் ஷான் மசூத் 6 போட்டிகளில் ஒரு அரைச் சதத்துடன் 137 ஓட்டங்களையும் இப்திகார் அஹ்மத் (6 போட்டிகளில் 2 அரைச் சதங்களுடன் 114 ஓட்டங்களையும் பெற்று துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

0911_pak_vs_nz.jpg

ஷஹீன் ஷா அப்றிடி (6 போட்டிகளில் 10 விக்கெட்கள்), ஷதாப் கான் (6 போட்டிகளில் 10 விக்கெட்கள்) ஆகியோர் பந்துவீச்சில் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

பாபர் அஸாம் 6 போட்டிகளில் ஒரு அரைச் சதத்துடன் 92 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுள்ளார். அவர் இறுதிப் போட்டியில் முழுத் திறமையுடன் துடுப்பெடுத்தாடி கணிசமான ஓட்டங்களைப் பெறுவார் என நம்பப்படுகிறது.

இது இவ்வாறிருக்க, இரண்டு அணிகளினதும் வெற்றிகளில் களத்தடுப்புகளும் முக்கிய பங்காற்றியிருந்தன.

ஒட்டுமொத்தத்தல் இரண்டு அணிகளும் சிரமமான ஆரம்பங்களின் பின்னர் அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்தி முக்கிய வெற்றிகளை ஈட்டி இன்றைய இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளன. இந் நிலையில் இன்றைய இறுதிப் போட்டிகளில் எந்த அணி மிகச் சிறந்த நுட்பத்திறன்களுடனும் புத்திசாதுரியத்துடனும் விளையாடுகின்றதோ அந்த அணிக்கே ச்ம்பியன் பட்டத்தை சுவீகரிக்கும்.

 

அணிகள் கடந்துவந்த பாதை

 

இங்கிலாந்து

 

சுப்பர் 12

எதிர் ஆப்கானிஸ்தான் 5 விக்கெட்களால் வெற்றி

எதிர் அயர்லாந்து - DLS முறைமை 5 விக்கெட்களால் தோல்வி

எதிர் அவுஸ்திரேலியா - மழையினால் ஆட்டம் கைவிடப்பட்டது

எதிர் நியூஸிலாந்து - 20 ஓட்டங்களால் வெற்றி

எதிர் இலங்கை - 4 விக்கெட்களால் வெற்றி

அரை இறுதி

எதிர் இந்தியா - 10 விக்கெட்களால் வெற்றி

 

பாகிஸ்தான்

 

சுப்பர் 12 சுற்று

எதிர் இந்தியா - 4 விக்கெட்களால் தோல்வி

எதிர் ஸிம்பாப்வே - ஒரு ஓட்டத்தால் தோல்வி

எதிர் நெதர்லாந்து - 6 விக்கெட்களால் வெற்றி

எதிர் தென் ஆபிரிக்கா - DLS முறைமை 33 ஓட்டங்களால் வெற்றி

எதிர் பங்களாதேஷ் - 5 விக்கெட்களால் வெற்றி

அரை இறுதி

எதிர் நியூஸிலாந்து - 7 விக்கெட்களால் வெற்றி

 

இங்கிலாந்து முன்னிலை

 

இங்கிலாந்தும் பாகிஸ்தானும் இரண்டு தடவைகள் மாத்தரமே இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றையொன்று எதிர்த்தாடியுள்ளன.

லண்டன் ஓவலில் 2009இல் இரண்டு அணிகளும் மோதிக்கொண்டபோது இங்கிலாந்து 48 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது.

england...jpg

பிறிஜ்டவுனில் 2010இலும் பாகிஸ்தானுடனான போட்டியில் 6 விக்கெட்களால் இங்கிலாந்து வெற்றிபெற்றிருந்தது.

சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியிலும் இங்கிலாந்து முன்னிலையிலேயே இருக்கிறது.

இரண்டு அணிகளும் மோதிக்கொண்ட 28 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் 17 - 9 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கிறது. சமநிலையில் முடிவடைந்த பொடடியில் சுப்பர் ஓவரில் இங்கிலாந்து வெற்றிபெற்றது. மற்றொரு போட்டியில் முடிவு கிட்டவில்லை.

 

சீரற்ற காலநிலை நிலவினால்...

 

இங்கிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மெல்பர்னில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ரீ 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டி மழையினால் தடைப்படலாம் என அஞசப்படுகிறது.

ஒருவேளை ஞாயிற்றுக்கிழமை மழை குறுக்கிட்டு ஆட்டம் தடைப்பட்டால் ஒதுக்கப்பட்டுள்ள நாளான திங்களன்று போட்டியை நடத்த சர்வதேச கிரிக்கெட் பேரவை எண்ணியுள்ளது.

ஆனால், திங்களன்றும் சீரற்ற காலநிலை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டால் உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் முதல் தடவையாக இரண்டு நாடுகள் இணை சம்பியன்களாக பிரகடனப்படுத்தப்படும்.

சுப்பர் 12 சுற்றில் போட்டி முடிவுக்கு குறைந்தது 5 ஓவர்கள் பூர்த்தி செய்யப்பட்டிருக்கவேண்டும். ஆனால், இறுதிப் போட்டியில் முடிவைத் தீர்மானிக்க குறைந்தது 10 ஓவர்கள் வீதம் விசப்பட்டிருக்கவேண்டும்.

ஞாயிறன்று ஆட்டம் ஆரம்பமாகி மழையினால் தடைப்பட்டால் விடப்பட்ட இடத்திலிருந்து திங்களன்று ஆட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அணிகள்

 

இங்கிலாந்து: ஜொஸ் பட்லர் (தலைவர்), அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மாலன் அல்லது ஃபில் சோல்ட், பென் ஸ்டோக்ஸ், லியாம் லிவிங்ஸ்டன், ஹெரி ப்றூக், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், சாம் கரன், ஆதில் ராஷித், மார்க் வூட் அல்லது கிறிஸ் ஜோர்டன்.

england_team.png

பாகிஸ்தான்: பாபர் அஸாம் (தலைவர்), மொஹமத் ரிஸ்வான், ஷான் மசூத், மொஹமத் ஹரிஸ், இப்திகார் அஹ்மத், ஷதாப் கான், மொஹமத் நவாஸ், ஹரிஸ் ரவூப், மொஹமத் வசிம், நசீம் ஷா, ஷஹீன் ஷா அப்றிடி.

pakistan_team.jpg

https://www.virakesari.lk/article/139835

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கிலாந்துக்கு 138 ஓட்டங்கள் வெற்றி இலக்கு : கட்டுப்படுத்துமா பாகிஸ்தான் ?

13 NOV, 2022 | 03:22 PM
image

(நெவில் அன்தனி)

எட்டாவது ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு 138 ஓட்டங்களை வெற்றி இலக்காக பாகிஸ்தான் நிர்ணயித்துள்ளது.

மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்றுவரும் இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றது.

களத்தடுப்பில் ஈடுபட்ட இங்கிலாந்துக்கு ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் ஆகிய இருவரும் தத்தமது ஓவர்களை முறையே நோபோல் மற்றும் வைட்டுடன் ஆரம்பித்தனர்.

எவ்வாறாயினும் மூன்றாவது பந்துவீச்சாளர் சாம் கரன் தனது 2 ஆவது ஓவரில் மொஹமத் ரிஸ்வானின் விக்கெட்டைப் பதம் பார்க்க இங்கிலாந்து சிறு ஆறுதல் அடைந்தது. ரிஸ்வான் 15 ஓட்டங்களைப் பெற்றார்.

பவர் பிளே நிறைவில் பாகிஸ்தான் ஒரு விக்கெட்டை இழந்து 39 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

7 ஆவது ஓவரில் பந்துவீச்சில் அறிமுகமான ஆதில் ராஷித் வீசிய முதல் பந்திலேயே மொஹமத் ஹாரிஸ் (8) ஆட்டமிழக்க பாகிஸ்தான் நெருக்கடியை எதிர்கொண்டது. (45 - 2 விக்.)

ஆதில் ராஷித் ஒரு ஓட்டமற்ற விக்கெட் ஓவர் உட்பட 4 ஓவர்களைத் தொடர்ச்சியாக நிறைவுசெய்து 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

அணித் தலைவர் பாபர் அஸாம், ஷான் மசூத் ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி அணியைக் கட்டியெழுப்ப முயற்சித்தனர். ஆனால் அவர்கள் இருவரும் 3ஆவது விக்கெட்டில் 39 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ராஷித்தின் பந்துவீச்சில் அவரிடமே பிடிகொடுத்து 32 ஓட்டங்களுடன் பாபர் அஸாம் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து இப்திகார் அஹ்மத் ஓட்டம் பெறாமல் களம் விட்டகன்றார். (85 - 4 விக்.)

ஷான் மசூத் (38), ஷதாப் கான் (20) ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 36 ஓட்டங்களைப் பகிர்ந்த பின்னர் பாகிஸ்தானின் விக்கெட்கள் சீரான இடைவெளியில் விழத் தொடங்கின.

20 ஓவர்கள் நிறைவில் பாகிஸ்தான் 8 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

சிறப்பாக பந்துவீசிய சாம் கரன் 4 ஓவர்களில் 12 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். கிறிஸ் ஜொர்டன் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/139902

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலக கோப்பை: பாகிஸ்தானை தோற்கடித்து இங்கிலாந்து சாம்பியன்

 

பென் ஸ்டோக்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

13 நவம்பர் 2022, 11:49 GMT
புதுப்பிக்கப்பட்டது 21 நிமிடங்களுக்கு முன்னர்

ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதிய இங்கிலாந்து வெற்றி பெற்று சாம்பியன் ஆகியுள்ளது.

முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 137 ரன்கள் எடுத்து, இங்கிலாந்து வெற்றி பெற 138 ரன் இலக்கு நிர்ணயித்தது.

இரண்டாவதாக பேட்டிங் தொடங்கிய இங்கிலாந்து ஆரம்பத்திலேயே விக்கெட்டை இழந்தாலும், சமாளித்து விளையாடி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டி உலகக் கோப்பையை வென்றது.

6 பந்துகள் மீதமிருந்த நிலையில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்த வெற்றியைப் பெற்றது இங்கிலாந்து.

 

இங்கிலாந்து அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் 49 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆடிக்கொண்டிருந்தார்.

19வது ஓவரின் 5வது பந்தில் 4 ரன்கள் அடித்து ஸ்கோரை சமன் செய்த ஸ்டோக்ஸ், அடுத்த பந்தில் வெற்றிக்குத் தேவைப்பட்ட ஒரு ரன்னை எடுத்தார்.

போட்டியில் என்ன நடந்தது?

டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அரையிறுதிப் போட்டியில் சிறப்பாக ஆடிய பாபர் ஆஸமும் முகமது ரிஸ்வானும் ஆட்டத்தைத் தொடங்கினார்கள். ஆனால் நியூஸிலாந்துடனான போட்டியைப் போல இந்தப் போட்டியில் அந்த இணை நீடித்து நிற்கவில்லை.

முதல் ஓவரிலேயே முகமது ரிஸ்வான் ஒரு ரன் அவுட்டில் இருந்து நூலிழையில் தப்பினார். ஸ்டோக்ஸ் வீசிய பந்தை மிட் ஆன் திசையில் அடித்த ரிஸ்வான் வேகமாக ரன் எடுக்க ஓடியபோது கிறிஸ் ஜோர்டான் எறிந்த பந்து ஸ்டம்பை விட்டு சற்று விலகிச் சென்றதால் ரிஸ்வான் தப்பினார். பவர் பிளே ஓவர்களில் பாகிஸ்தான் அணியின் ரன் எடுக்கும் வேகம் குறைவாகவே இருந்தது.

5 ஆவது ஓவரில் சாம் கரன் பந்துவீச்சில் ரிஸ்வான் போல்டாகி ஆட்டமிழந்தார். மிகவும் நம்பிக்கையாக கருதப்பட்ட ரிஸ்வான் 15 ரன்களை மட்டுமே எடுத்தார். அதன் பிறகு அதிரடியாக ஆடும் முகமது ஹாரிஸ் களமிறங்கினார். அணியின் ரன் எடுக்கும் வேகம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. எனினும் 6 ஓவர் பவர் பிளே முடிவில் பாகிஸ்தான் அணி 39 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

8-ஆவது ஓவரில் சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷீத் வந்தார். அவரது முதல் பந்திலேயே முகமது ஹாரிஸ் முன்னே இறங்கி லாங் ஆன் திசையில் தூக்கி அடித்த பந்தை ஸ்டோக்ஸ் எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் பிடித்தார். ஹாரிஸ் 12 பந்துகளில் 8 ரன்களை எடுத்து வெளியேறினார்.

முதல் பத்து ஓவர்களில் பாகிஸ்தான் அணி குறைந்த வேகத்திலேயே ரன்களை எடுத்தது. தொடர்ச்சியான பவுண்டரிகளை அந்த அணியால் அடிக்க முடியவில்லை. 10 ஓவர் முடிந்த போது 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 68 ரன்களை பாகிஸ்தான் அணி எடுத்திருந்தது.

பாபர் ஆஸம் அவுட்

12 ஆவது ஓவரின் முதல் பந்தில் பாபர் ஆஸம் அவுட் ஆனார். ரஷீத் வீசிய கூக்ளியை அடிக்க முயன்றபோது மட்டையின் வெளிப்புறம் பட்ட பந்தை ரஷீத்தை நோக்கிச் சென்றது. அதை பாய்ந்து பிடித்து பாபரை வெளியேற்றினார் ரஷீத். இந்தக் கட்டம் போட்டியின் முக்கியத் திருப்பமாக அமைந்தது. அப்போது பாகிஸ்தான் அணி 84 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அந்த ஓவரில் அடுத்த 5 பந்துகளிலும் ரன் எதுவும் எடுக்கப்படவில்லை.

அடுத்த ஓவரிலேயே ஸ்டோக்ஸ் பந்தில் கீப்பரிடம் பிடிகொடுத்து இஃப்திகார் அகமது அவுட் ஆனார்.

அதன் பிறகு பாகிஸ்தான் அணியால் ரன் குவிப்பை வேகப்படுத்த முடியவில்லை. ஒன்றும் இரண்டுமாகவே ரன்கள் வந்தன. பவுண்டரிக்கு பந்து செல்வது அபூர்வமானது. எனினும் ஒரு முனையில் இருந்த ஷான் மசூதும், மற்றொரு முனையில் ஷதாப் கானும் ஓரளவு கணிசமான ரன்களை எடுத்துக் கொண்டிருந்தனர்.

டெத் ஓவர்கள் தொடங்கியதும் தொடங்கியதும் களத்தில் இருந்த ஷான் மசூத் அதிரடியாக ஆட முற்பட்டு சாம் கரன் பந்தில் மிட் விக்கெட் திசையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 28 பந்துகளில் 38 ரன்களை எடுத்து பாகிஸ்தான் அணிக்கு பெரிதும் உதவினார்.

அடுத்த ஓவரிலேயே ஷதாப் கானும் ஆட்டமிழந்ததால் பாகிஸ்தான் அணி 123 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடைசி இரண்டு ஓவர்களிலும் பாகிஸ்தான் அணியால் பெரிய அளவில் ரன்களை எடுக்க முடியவில்லை. 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி 137 ரன்களை எடுத்தது.

இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு என இரண்டுமே பாகிஸ்தானே திணறடித்தன. 4 ஓவர்களை வீசிய சாம் கரன், வெறும் 12 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆதில் ரஷீத் வீசிய ஒரு ஓவரில் ரன்கள் எதுவும் எடுக்கப்படவில்லை. அவர் வீசிய 4 ஓவர்களில் 22 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதேபோல் கிறிஸ் ஜோர்டன் 27 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் ஆடிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கம் முதலே பாகிஸ்தானிய பந்துவீச்சாளர்கள் மிரட்டினார்கள். இந்தியாவுடனான போட்டியில் சிறப்பாக ஆடி வெற்றிக்கு உதவிய இங்கிலாந்தின் தொடக்க ஆட்டகாரர் ஹேல்ஸ் சாஹீன் ஷா அப்ரிடியின் முதல் பந்திலேயே ஸ்டம்பை பறிகொடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும் நசீம் ஷாவின் இரண்டாவது ஓவரில் 14 ரன்களை எடுத்தது இங்கிலாந்து.

4-ஓவரில் ஃபில் சால்ட் ஆட்டமிழந்ததால், இங்கிலாந்து அணிக்கு தடுமாற்றம் ஏற்பட்டது. ரன் குவிக்கும் வேகமும் உடனடியாகக் குறைந்தது. அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த ஜோஸ் பட்லர் 6-ஆவதி ஓவரில் விக்கெட் கீப்பர் ரிஸ்வானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 17 பந்துகளில் 26 ரன்களை எடுத்திருந்தார்.

10 ஓவர்கள் முடிந்திருந்த போது 3 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்களை எடுத்திருந்தது இங்கிலாந்து. 60 பந்துகளில் 61 ரன்களை எடுக்க வேண்டும், 7 விக்கெட்டுகள் கைவசம் இருக்கின்றன என்ற நிலையில் இங்கிலாந்து அணியின் கட்டுப்பாட்டிலேயே போட்டி இருந்தது.

தேவையான ரன்ரேட் குறைவாக இருந்ததால் அப்போது களத்தில் இருந்து ஹேரி ப்ரூக்கும், பென் ஸ்டோக்ஸும் மெதுவாக்வே ஆடத் தொடங்கினார்கள். 11 ஓவரில் 2 ரன்களும் 12-ஆவது ஓவரில் 3 ரன்களையும் மாத்திரமே அவர்கள் எடுத்தார்கள். விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருந்தார்கள். ஆனால் 13-ஆவது ஓவரில் ஷதாப் வீசிய பந்தில் ஷாஹீன் ஷா அப்ரிடியிடம் பிடிகொடுத்து ப்ரூக் ஆட்டமிழந்தார். அதன் பிறகு இங்கிலாந்து வீரர்கள் ரன்களை எடுக்கத் தடுமாறினார்கள். 14-ஆவது ஓவரில் 2 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டன.

ஆனால் மொயின் அலியும் பென் ஸ்டோக்ஸும் விக்கெட்டை இழக்காமல் ஆடிக் கொண்டிருந்தனர். 16-ஆவது ஓவரில் பென் ஸ்டோக்ஸ் ஒரு சிக்சரும் பவுண்டரியும் அடித்து நம்பிக்கையை ஏற்படுத்தினார். 17-ஆவது ஓவரில் மொயின் அலி 3 பவுண்டரிகளை விளாசினார். அதனால் இங்கிலாந்து அணி வெற்றியை நோக்கி எளிதாக முன்னேறியது.

19-ஆவது ஓவரின் கடைசிப் பந்தில் பென் ஸ்டோக்ஸ் வெற்றிக்கான ரன்னை எடுத்தார். இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 49 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த ஸ்டோக்ஸ் இறுதிவரை ஆட்டமிழக்கவில்லை.

https://www.bbc.com/tamil/articles/c514yw0gy01o

Edited by ஏராளன்
bbc link add
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோப்பையை பறிகொடுத்த பாகிஸ்தானை 'கர்மா' என சீண்டிய இந்திய வீரர் முகமது ஷமி: என்ன தகராறு?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,அஸ்ஃபாக்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 13 நவம்பர் 2022, 14:14 GMT
    புதுப்பிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர்
 

ஷமி

பட மூலாதாரம்,GETTY IMAGES

டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்த நிலையில், இணையத்தில் கர்மா என்கிற வார்த்தை ட்ரெண்டாகி வருகிறது. அதற்கு முக்கிய காரணம் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

‘கர்மா’ ட்ரெண்டாவது ஏன்?

உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததும், அந்நாட்டின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தமது ட்விட்டர் பக்கத்தில் உடைந்த இதயம் போன்ற எமோஜியை பதிவிட்டிருந்தார். அதனை ரீ-ட்வீட் செய்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ‘மன்னிக்க வேண்டும் சகோதரா, இதற்குப் பெயர்தான் கர்மா’ என குறிப்பிட்டுள்ளார்.

முகமது ஷமியின் இந்த செயலுக்கு பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இங்கிலாந்துடனான அரையிறுதி ஆட்டத்தை சுட்டிக்காட்டி, ‘ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாத உங்களின் ஆட்டத்திற்கு பாகிஸ்தான் இன்று ஆடிய விதம் எவ்வளவோ பரவாயில்லை’ என ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

ஷமி குறித்து அக்தர் பேசியது என்ன?

Twitter பதிவை கடந்து செல்ல, 3
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 3

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. அந்த ஆட்டத்தில் இந்திய அணியின் பந்துவீச்சு கடுமையான விமர்சனத்திற்கு வழிவகுத்தது. இந்திய அணியின் தோல்வியை விமர்சித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

 

அதில் பேசிய அவர், “இந்தியாவுக்கு இது ஒரு மோசமான தோல்வி. இந்திய வீரர்கள் மிகவும் மோசமாக விளையாடினார்கள். அவர்கள் இறுதிப்போட்டிக்குள் நுழைவதற்கான தகுதியை இழந்து விட்டார்கள். இந்தியாவின் வேகப்பந்து வீச்சு அம்பலமாகிவிட்டது.

இந்த ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு உதவும் என்றாலும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் வீசுவதற்கு இந்திய அணியில் ஒருவர் கூட இல்லை. பந்துவீச்சில் எந்தவித ஆக்ரோஷமும் இல்லை. அணி நிர்வாகம் தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும்.

ஏன் திடீரென உலக கோப்பை இந்திய அணியில் முகமது சமி சேர்க்கப்பட்டார்? அவர் நல்ல பந்துவீச்சாளர்தான். ஆனால் அவர் அணியில் இப்போது இடம்பெற தகுதியானவர் இல்லை.” என கடுமையாக விமர்சித்திருந்தார். இது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளானது.

2021 டி20 உலககோப்பையில் ஷமிக்கு என்ன நடந்தது?

‘கர்மா’ என, அக்தரின் ட்வீட்டிற்கு முகமது ஷமி எதிர்வினையாற்றிய நிலையில் பாகிஸ்தான் ரசிகர்கள் ஷமி கடுமையாக விமர்சிக்கப்பட்டபோது தங்கள் நாட்டு கிரிக்கெட் வீரர் முகமது ரிஸ்வான் குரல் கொடுத்திருந்ததை சுட்டிக்காட்டி இதுதான் இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையிலான வித்தியாசம் என குறிப்பிட்டு இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 4
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 4

2021 டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியில் பந்துவீசிய முகமது ஷமி 3.5 ஓவர்கள் வீசி 43 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

 

பாகிஸ்தானின் வெற்றிக்கு இந்திய வீரர் முகமது ஷமியின் மோசமான பந்துவீச்சே காரணம் என சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

முகமது ஷமிக்கு ஆதரவாக இந்திய கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் வீரர்கள் மட்டுமின்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ரிஸ்வானும் குரல் கொடுத்திருந்தார்.

தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்ட அவர், “பல்வேறு அழுத்தங்கள், நெருக்கடிகள், தியாகங்களை கடந்துதான் ஒரு வீரர் நாட்டிற்காக விளையாடுகிறார். முகமது ஷமி ஒரு நட்சத்திர கிரிக்கெட் வீரர் மட்டுமின்றி உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளரும் கூட. உங்கள் நட்சத்திரங்களை மதியுங்கள். இந்த விளையாட்டு மக்களிடையே ஒற்றுமையை கொண்டு வர வேண்டுமே தவிர பிரிவை ஏற்படுத்தக்கூடாது” என குறிப்பிட்டார்.

நடப்பு தொடரில் முகமது ஷமியின் பங்களிப்பு

நடப்பு டி20 தொடரில் இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது முகமது ஷமி அணியில் இடம்பெறவில்லை. காயம் காரணமாக பும்ரா விலகியதை அடுத்து அணியில் சேர்க்கப்பட்டார். இந்திய அணியில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் ஷமி விளையாடினார். 6 போட்டிகளில் விளையாடிய ஷமி 143 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை கைப்பற்றினார். இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 3 ஓவர்களை வீசிய முகமது ஷமி 39 ரன்களை வழங்கியது கவனிக்கத்தக்கது.

1992-ஐ எதிர்பார்த்த பாக்., ரசிகர்கள்.

1992 உலக கோப்பை தொடரில் நம்ப முடியாத திருப்பங்களோடு பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதிபெற்று, இறுதி போட்டியையும் வென்று உலக கோப்பையை கைப்பற்றியது.

அதே பாணியில் 2022 டி 20 உலக கோப்பையிலும் பாகிஸ்தானுக்கு பல திருப்பங்கள் அமைந்தன. சூப்பர் 12 சுற்றில் கடைசி நாளில் 1 புள்ளி வித்தியாசத்தில் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

நியூசிலாந்தை அரையிறுதியில் வீழ்த்தி பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இறுதிப்போட்டியில் 1992-ஐ போன்றே இங்கிலாந்தை எதிர்த்து மெல்போர்னில் பலப்பரிட்சை நடத்தியது. 1992-ஐ போன்று இந்த முறையும் பாகிஸ்தான் கோப்பையை வெல்லும் என அந்நாட்டு ரசிகர்கள் நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால்., அந்த நம்பிக்கை பலன் தரவில்லை.

https://www.bbc.com/tamil/articles/crgd5yv5np6o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து தனது வளங்களைக்கொண்டு சிறப்பாக விளையாடியிருந்தது, அந்த பெருமை அணித்தலைவர் பட்லரை சாரும், ஒப்பீட்டளவில் பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர்களின் பல்லை ஆரம்பத்திலேயே இங்கிலாந்து பிடுங்கிவிட்டது.

அதன் பின் முதல் 6 ஓவர்களை தமது ஓட்ட குவிப்பிற்கு முடிந்தளவு பயன்படுத்தியிருந்தது, பாகிஸ்தான் தோல்வி உறுதியாகி விட்டது ஆனாலும் சாகின் அப்ரிடி காயம் பாகிஸ்தானின் சிறப்பான பதிலடியினை பாதித்து விட்டது, ஆனால் ஆறுதல் தரும் விடயம் இந்தியா போல் போராடாமல் தோல்வியினை பாகிஸ்தான் தழுவவில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பென் ஸ்டோக்ஸ்: பாகிஸ்தானை சோதித்த இங்கிலாந்தின் ‘நிதானம்’

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,எம். மணிகண்டன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

பென் ஸ்டோக்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

“அவர் மன வலிமையில் ஓர் அரக்கன்” என்கின்றனர். “தோல்வியில் இருந்து மீண்டு வரும் திறன் படைத்தவர்” என்கின்றனர்.  “இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த வீரர்களுள் ஒருவர் அவர்” என்கிறார் அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர்.

இரு உலகக் கோப்பைகளை இங்கிலாந்து பெறக் காரணமாக இருந்தவர் என்று பென் ஸ்டோக்ஸை கொண்டாடிக் கொண்டிருக்கிறது கிரிக்கெட் உலகம்.

ஆனால் எப்போதும் பென் ஸ்டோக்ஸின் கிரிக்கெட் வாழ்க்கை இப்படியே இருந்ததில்லை. 2016-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் கடைசி ஓவரில் வெற்றியை நழுவ விட்டதற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டவர், கேலி செய்யப்பட்டவர் அவர்.  இப்போது இங்கிலாந்துக்கு இன்னொரு உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்ததன் மூலம் மீண்டு வந்துவிட்டதை அழுத்தமாக அறிவித்திருக்கிறார்.

பென் ஸ்டோக்ஸின் இந்த அவதாரத்தை ஸ்டோக்ஸ் 2.0 என்று பரவலாக அழைக்கிறார்கள்.

 

 

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி பென் ஸ்டோக்ஸின் நிதானமான அதே நேரத்தில் உறுதியான ஆட்டம் இல்லாமல் இங்கிலாந்துக்கு வசமாகி இருக்காது.  ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்ட சாம் கரனும், கேப்டன் ஜோஸ் பட்டலரும் இதைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

2019-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியிலும் அவரது ஆட்டமே இங்கிலாந்துக்கு கோப்பையைப் பெற்றுத் தந்தது. நியூஸிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் அவர் 84 ரன்களைக் குவித்தார்.

30 ஆண்டுகளுக்கு முன்பு 1992 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு மிக முக்கியமான ஆல் ரவுண்டர் இருந்தார். அவர் வாசிம் அக்ரம். கடைசி நேரத்தில் 18 பந்துகளுக்கு 33 ரன்களை எடுத்து பாகிஸ்தான் அணி கணிசமான ஸ்கோரை எட்டுவதற்கு உதவினார். அன்றைய போட்டியில் அவர்தான் ஆட்ட நாயகன். அதே போன்றதொரு பணியைச் இப்போது செய்திருக்கிறார் பென் ஸ்டோக்ஸ்.

பவர் பிளேயில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து அணியை அவர் வெற்றிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் 49 பந்துகளில் 52 ரன்கள் எடுத்திருக்கிறார். உண்மையில் இதுபோன்ற டி20 ஆட்டம் நெருக்கடி இல்லாத தருணத்தில் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கக்கூடும். 

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரமான வீரேந்திர சேவக் இதைத்தான் குறிப்பிடுகிறார். அரையிறுதியில் இங்கிலாந்து அணியுடன் விராத் கோலி அடித்த 50 ரன்களுடன் ஸ்டோக்ஸின் இன்னிங்ஸை ஒப்பிடும் அவர், இந்தியா தோற்றதால் அது கண்டுகொள்ளப்படவில்லை என்கிறார்.

 

 

ஸ்டோக்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பென் ஸ்டோக்ஸை பற்றி புகழும்  இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் “அது ஓர் அற்புதமான கதை” என்கிறார். “முக்கியான தருணங்களில் திறமையை வெளிப்படுத்தக்கூடியவர்” என்று புகழ்கிறார்.

பென் ஸ்டோக்ஸை வீழ்த்திய போட்டி

2016-ஆம் ஆண்டு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளும் இங்கிலாந்தும் மோதின. போட்டியின்  கடைசி ஓவர் தொடங்கும்போது இங்கிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாகவே இருந்தது. 

ஏனெனில் கடைசி ஓவரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 19 ரன்களை எடுத்தால்தான் வெற்றி பெற முடியும். பென் ஸ்டோக்ஸ் கடைசி ஓவரை வீசினார்.  ஆனால் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பிராத்வைட் அடுத்தடுத்து நான்கு சிக்சர்களை அடித்து கோப்பையை பறித்துச் சென்றார்.

கையில் இருந்த உலகக் கோப்பையைப் பறிகொடுத்ததாக பென் ஸ்டோக்ஸ் மீது கடுமையான விமர்சனம் அப்போது எழுந்தது. ஒட்டுமொத்தப் பழியையும் அவரே ஏற்க வேண்டியிருந்தது. 

 

“பென் ஸ்டோக்ஸ் எதையும் கற்றுக் கொள்ளாத பதற்றமான ஆள்” என்று அப்போது  போட்டி முடிந்த பிறகான பேட்டியில் அவரை விமர்சித்திருந்தார் ஆட்ட நாயகன் விருது பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சாமுவேல்ஸ்.

 

அந்தப் போட்டிக்குப் பிறகு மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டவரானார். அதற்காக அவர் சிகிச்சை எடுத்துக் கொள்ளக்கூடிய நிலை ஏற்பட்டது. அதில் இருந்து மீண்டு வருவதற்கு சில காலம் பிடித்தது.

 

இங்கிலாந்து பேட்டிங் வரிசையில் ஸ்டோக்ஸுக்கான இடம் எப்போதும் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. ஏற்கெனவே பேட்ஸ்மேன்களும் ஆல்ரவுண்டர்களும் நிறைந்திருக்கும் அணியில் அவரது தேவை அவ்வப்போது கேள்விக்குறியானதுண்டு. 

 

 

ஸ்டோக்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பென் ஸ்டோக்ஸ் தோல்விகளில் இருந்து கற்றுக் கொள்ளக்கூடியவர். 2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியும், தற்போதைய டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியும் அதை வெளிப்படுத்துகின்றன. இந்த வெற்றிக்காக அயர்லாந்துக்கு நன்றி கூறியிருக்கும் ஸ்டோக்ஸ், தவறுகளை திருத்திக் கொள்ள அது உதவியதாகக் குறிப்பிட்டிருக்கிறார். 

31 வயதான ஸ்டோக்ஸ் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் ஆதிக்கம் செலுத்தியவர். டெஸ்ட் போட்டிகளில் அவர் 10 சதங்களை அடித்திருக்கிறார்.  192 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்புதான் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உலகுக்கு அதிர்ச்சியளித்தார். 

வெற்றிக்குக் கைகொடுத்த ஸ்டோக்ஸின் நிதானம்

 

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 138 ரன்கள்தான் இலக்கு என்ற போதிலும் பவர் பிளேயிலேயே இங்கிலாந்து அணி தடுமாறத் தொடங்கிவிட்டது.  தொடக்கம் முதலே பாகிஸ்தானிய பந்துவீச்சாளர்கள் மிரட்டினார்கள். இந்தியாவுடனான போட்டியில் சிறப்பாக ஆடி வெற்றிக்கு உதவிய இங்கிலாந்தின் தொடக்க ஆட்டகாரர் ஹேல்ஸ் சாஹீன் ஷா அப்ரிடியின் முதல் பந்திலேயே ஸ்டம்பை பறிகொடுத்து ஆட்டமிழந்தார்.  அடுத்ததாக ஸ்டோக்ஸ் களமிறங்கினார்.

4-ஓவரில் ஃபில் சால்ட் ஆட்டமிழந்ததால், இங்கிலாந்து அணிக்கு தடுமாற்றம் ஏற்பட்டது. ரன் குவிக்கும் வேகமும் உடனடியாகக் குறைந்தது. அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த ஜோஸ் பட்லர் 6-ஆவது ஓவரில் விக்கெட் கீப்பர் ரிஸ்வானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

 

ஸ்டோக்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறு முனையில் பென் ஸ்டோக்ஸ் நங்கூரமிட்டிருந்தார். 

10 ஓவர்கள் முடிந்திருந்த போது 3 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்களை எடுத்திருந்தது இங்கிலாந்து. 60 பந்துகளில் 61 ரன்களை எடுக்க வேண்டும், 7 விக்கெட்டுகள் கைவசம் இருக்கின்றன என்ற நிலையில் இங்கிலாந்து அணியின் கட்டுப்பாட்டிலேயே போட்டி இருந்தது. 

தேவையான ரன்ரேட் குறைவாக இருந்ததால் அப்போது களத்தில் இருந்து ஹேரி ப்ரூக்கும், பென் ஸ்டோக்ஸும் மெதுவாக்வே ஆடத் தொடங்கினார்கள். 11 ஓவரில் 2 ரன்களும் 12-ஆவது ஓவரில் 3 ரன்களையும் மாத்திரமே அவர்கள் எடுத்தார்கள். விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருந்தார்கள். 

அதே நேரத்தில் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தினார் ஸ்டோக்ஸ்.  16-ஆவது ஓவரில் ஒரு சிக்சரும் பவுண்டரியும் அடித்து நம்பிக்கையை ஏற்படுத்தினார். அதன் பிறகு வெற்றி கடினமாக இருக்கவில்லை.

https://www.bbc.com/tamil/articles/c2vq7p280wxo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாம் கரன்: வேகத்தால் உலகை மிரட்டிய சிஎஸ்கேயின் ‘சுட்டிக் குழந்தை’

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,எம்.மணிகண்டன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 13 நவம்பர் 2022
 

சாம் கரன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினரும் ரசிகர்களும் இவரை சுட்டிக் குழந்தை என்பார்கள். 24 வயதான இந்தக் ‘குழந்தை' வேகமும் குறி தவறாத துல்லியத் தன்மை கொண்ட தனது பந்துவீச்சால உலக கிரிக்கெட் அணிகளை மிரட்டியிருக்கிறது.

டி20 உலகக் கோப்பை போட்டி வரலாற்றில் பந்துவீச்சாளர் ஒருவர் தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்படுவது இதுதான் முதல்முறை. வார்னர்களும் கோலிகளும் மட்டுமே இந்தப் பெருமையைப் பெறுவார்கள் என்ற பழைய வரலாற்றை உடைத்துப் போட்டிருக்கிறார் சாம் கரன்.

இதற்கு முன் இதை வென்றவர்கள் அனைவருமே பேட்ஸ்மேன்கள்தான். இந்தத் தொடரிலும் பட்லர், ஹேல்ஸ், சூர்யகுமார் யாதவ் விராட் கோலி உள்ளிட்ட 8 பேர் சாம் கரனுக்கு போட்டியாக இருந்தார்கள். ஆனால் டெத் ஓவரில் மிரட்டி பாகிஸ்தானை சுருட்டிய  மாயாஜாலத்தால் மற்ற அனைவரையும் ஓரங்கட்டினார் சாம் கரன்.

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் தொடர் நாயகன் விருதையும் இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் வென்றிருக்கும் முதல் வீரரும் இவர்தான். இது மட்டும் இல்லை. டி20 உலகக் கோப்பைத் தொடர் நாயகன் விருதை வென்ற இளம் வீரரும் இவர்தான்.

 

“மிகவும் புத்திசாலித்தனமான, கட்டுப்பாடான பந்துவீச்சாளர்” என்று கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே சாம் கரனுக்கு புகழாரம் சூட்டுகிறார்.

‘ஆட்டத்தின் போக்கை மாற்றியவர்’ என்று ஐசிசி கூறுகிறது.

ஒருவேளை இந்தப் போட்டி சூப்பர் ஓவருக்குச் சென்றால் அப்போது சாம் கரன்தான் பந்துவீச வேண்டும் என்று தேர்ந்தெடுப்பேன் என்று கூறியுள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன்.

பேட்டுக்கும் காலுக்கும் இடையேயுள்ள ஒரு சிறிய இடைவெளியில் ஸ்டம்புகளைக் குறிவைத்து யார்க்கர்களை வீசுவதில் வல்லவர் சாம் கரன் என்று அவர் கூறுகிறார்.

சாம் கரன் அப்படி என்ன செய்துவிட்டார் என்றா கேட்கிறீர்கள்? இடது கை வேகத்தில் தொடர் முழுவதும் மிரட்டிய அவர் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். 

 

சாம் கரன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதும் இதில் அடங்கும். இறுதிப் போட்டி மாத்திரமல்லாமல் தொடர் முழுவதுமே அவர் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உதவியிருக்கிறார் அவர். குரூப்-1 பிரிவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வெறும் 10 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

 

நியூஸிலாந்துடனான போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது 26 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இலங்கையுடன் 27 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை எடுத்தார். அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் மட்டும்தான் அவரது பந்துவீச்சு எடுபடவில்லை. 4 ஓவர்களில் 42 ரன்களை வாரிக்கொடுத்தார்.

 

இறுதிப் போட்டியில் பந்துவீச்சு முழுவதுமே அவரது தாக்கத்தைக் காண முடிந்தது.  4 ஓவர்களில் அவர் 12 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார். 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். தொடக்க ஆட்டக்காரரான ரிஸ்வானின் விக்கெட்டும் இதில் அடங்கும். டெத் ஓவர்களில் இவருடைய பந்துகளைத் தொட முடியவில்லை. இவர் வீசிய 24 பந்துகளில் 15 பந்துகளில் ரன்கள் எடுக்கப்படவில்லை. ஒரு பவுண்டரியும் சிக்சரும்கூடக் கிடையாது. 

 

இந்தப் போட்டியில் மூன்றாவது ஓவரிலேயே அவருக்கு பந்துவீச வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த ஓவரில் அவர் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அவரது அடுத்த ஓவரில் பெரிதும் நம்பப்பட்ட ரிஸ்வானின் விக்கெட்டை வீழ்த்தினார். ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை குறுக்காக ஆட முயன்றபோது பந்து பேட்டில் பட்டு ஸ்டம்பை தகர்த்தது. அந்த ஓவரில் சாம் கரன் கொடுத்து ஒரேயொரு ரன் மட்டுமே. 

 

சாம் கரன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

டெத் ஓவர் தொடங்கும் 17-ஆவது ஓவரை வீசுவதற்கு மீண்டும் வந்த சாம் கரன், மசூத்தின் விக்கெட்டை வீழ்த்தினார். அந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டன. 19-ஆவது ஓவரில் மீண்டும் ஒரு விக்கெட். டெத் ஓவர்களில் பாகிஸ்தானை திணறடித்துவிட்டது அவரது பந்துவீச்சு.

 

கடந்த டி20 உலகக் கோப்பை போட்டியை காயம் காரணமாக தவறவிட்ட சாம் கரன், இந்தத் தொடரில் அந்த வாய்ப்பை  அற்புதமாகப் பயன்படுத்தியிருக்கிறார். இப்போதே சாம் கரனுக்கு ஐபிஎல்லில் விலை அதிகமாகிவிடும் என்ற கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கிவிட்டன.

 

இத்தனை பெருமைக்குரிய சாம் கரன் ஆட்ட நாயகன் விருதைப் பெறும்போது என்ன சொன்னார் தெரியுமா?

 

“என்னை விட பென் ஸ்டோக்ஸே இதற்குத் தகுதியானவர்”

 

இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

இரட்டை சாம்பியனான இங்கிலாந்து

டி20 உலகக் கோப்பையில் 1992-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியைப் போல அதிசயத்தை நிகழ்த்த வேண்டும் என்ற வேட்கையுடன் இறுதிப் போட்டியில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் நம்பிக்கையை இங்கிலாந்து அணி தனது மிரட்டலான பந்துவீச்சால் தகர்த்தது. 20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 137 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

மெல்போர்ன் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இன்றைய போட்டியில் தனது உறுதியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். 

இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சும், சுழற் பந்துவீச்சும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்தன. பாகிஸ்தான் பேட்ஸ் மேன்களை எந்த வகையிலும் நிலைத்து நின்று ஆட முடியாதபடி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தும் வகையில் இங்கிலாந்தின் பந்துவீச்சு இருந்தது.

சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷித், வேகப் பந்துவீச்சாளர் சாம் கரன் ஆகியோரின் பந்துவீச்சு பாகிஸ்தானை ரன் எடுக்க விடாமல் கட்டுப்படுத்தியதுடன் நிலைத்து நின்று ஆட முடியாதபடியும் செய்தன. 

இந்த வெற்றியின் மூலம் ஒரே நேரத்தில் 50 ஓவர் போட்டியிலும் 20 ஓவர் போட்டியிலும் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் அணி என்ற பெருமையை இங்கிலாந்து அணி பெற்றிருக்கிறது.

https://www.bbc.com/tamil/articles/cxev28617g7o

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.