Jump to content

T20 2022 உலகக் கிண்ணப் போட்டி - செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஸ்கொட்லாந்தை தோற்கடித்து அடுத்த சுற்றிற்கு முன்னேறியது சிம்பாப்வே

By RAJEEBAN

21 OCT, 2022 | 05:33 PM
image

ஸ்கொட்லாந்தை ஐந்து விக்கெட்களால் தோற்கடித்து சிம்பாப்வே அடுத்த சுற்றிற்கு முன்னேறியுள்ளது.

zimbawe_win.jpg

ஹோபார்ட்டில் இன்று இடம்பெற்ற முதல்சுற்றின் 12 வது போட்டியில் சிம்பாப்வே  ஐந்துவிக்கெட்களால் வெற்றிபெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி 20 ஓவர்களில் 132 ஓட்டங்களை பெற்றது 

Fflv0sbXwAIBbGb.jpg

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 18.3 ஓவர்களில் தனது இலக்கை எட்டியது

சிம்பாப்வே அணியின் சார்பில் கிரெய்க் எர்வெய்ன் 58 ஓட்டங்களை பெற்றார்

FflyGDaXEAMBHYi.jpg

Fflwa35VIAIQcAe.png

சிம்பாப்வே அணி ரி20 உலககிண்ண வரலாற்றில் இரண்டாவது சுற்றில் முதல்தடவைநுழைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

சிம்பாப்வே அடுத்த சுற்றில் இந்தியா பாக்கிஸ்தான் தென்னாபிரிக்கா பங்களாதேஸ் நெதர்லாந்து ஆகிய அணிகளை எதிர்கொள்கின்றது.

https://www.virakesari.lk/article/138168

  • Replies 167
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தலையில் பந்து தாக்கியது - மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் பாக் வீரர்

By RAJEEBAN

21 OCT, 2022 | 02:52 PM
image

பாகிஸ்தான் துடுப்பாட்ட ஷான் மசூட் வீரர் தலையில் பந்து தாக்கியதன் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்

பாக்கிஸ்தான் உலக கிண்ண அணி வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தவேளை ஷான் மசூட்டின் தலையின் வலது பக்கத்தில் பந்து பட்டதை தொடர்ந்து அவர் நிலை தடுமாறி விழுந்துள்ளார்

FfkXdDDXEAAzznQ.jpg

lxoQiLKc.jpg

இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/138149

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐ.சி.சி.இருபது - 20 உலகக் கிண்ண கிரிக்கெட் திருவிழா ! சுப்பர் 12 சுற்றுடன் நாளை ஆரம்பம்

21 OCT, 2022 | 08:30 PM
image

(நெவில் அன்தனி)

அகிலம் முழுவதும் மிகவும் ஆவலுடன்  எதிர்பார்க்கப்படும் ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் திருவிழா, பிரதான  சுப்பர் 12 சுற்றுடன் சனிக்கிழமை (22) ஆரம்பமாகவுள்ளது.

கடந்த வருடம் 7ஆவது ஐ.சி.சி. இருபது 20 உலகக் கிண்ண அத்தியாயத்தை இறுதிப் போட்டியுடன் முடித்துவைத்த நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவும் இரண்டாம் இடத்தைப் பெற்ற நியூஸிலாந்தும் எட்டாவது அத்தியாயத்தை ஆரம்பிக்கவுள்ளமை விசேட அம்சமாகும்.

சுப்பர் 12 சுற்றில் குழு 1 க்கான இந்தப் போட்டி சிட்னி விளையாட்டரங்கில் சனிக்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ளது.

12 அணிகள் இரண்டு குழுக்களில் தலா 6 அணிகள் வீதம் பங்குபற்றும் சுப்பர் 12 சுற்றில் மொத்தம் 30 போட்டிகள் நடைபெறவுள்ளன. சுப்பர் 12 சுற்று போட்டிகள் நவம்பர் 6ஆம் திகதியுடன் நிறைவுபெறும்.

சுப்பர் 12 சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் 4 அணிகள்  அரை இறுதிகளில் விளையாட தகுதிபெறும்.

முதலாவது அரை இறுதிப் போட்டி சிட்னியில் நவம்பர் 9ஆம் திகதியும் இரண்டாவது அரை இறுதிப் போட்டி அடிலெய்டில் நவம்பர் 10ஆம் திகதியும் நடைபெறும்.

உலக சம்பயினைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி மெல்பர்னில் நவம்பர் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த மாபெரும் இறுதிப் போட்டியில் விளையாடுவதை குறிக்கோளாகாக் கொண்டு 12 அணிகள் களம் இறங்குகின்றன. அவற்றில் 8 அணிகள் இரண்டு குழுக்களில் சுப்பர் 12 சுற்றில் நேரடியாக விளையாட தகுதி பெற்றிருந்தன.

இதற்கு முன்னோடியாக மெல்பர்ன், ஜீலோங்கிலும் ஹோர்பாட்டிலும் இரண்டு குழுக்களில் நடைபெற்ற முதல் சுற்றில் (தகுதிகாண்) எட்டு அணிகள் பங்குபற்றின.

நெதர்லாந்து, நமிபியா, இலங்கை, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியன பங்குபற்றிய ஏ குழுவிலிருந்து இலங்கையும் நெதர்லாந்தும் சுப்பர் 12 சுற்றில் விளையாட தகுதிபெற்றன.

இக் குழுவில் ஆரம்பப் போட்டியில் நமிபியாவிடம் முற்றிலும் எதிர்பாராத வகையில் தோல்வி அடைந்த இலங்கை அதன் பின்னர் வீறுநடைபோட்டு ஐக்கிய அரபு இராச்சியத்தையும் நெதர்லாந்தையும் வெற்றிகொண்டு உலகக் கிண்ணப் போட்டியில் நிலைத்திருப்பதை உறுதிசெய்துகொண்டது.

அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, மேற்கிந்தியத் தீவுகள், சிம்பாப்வே ஆகியன பங்குபற்றிய பி குழுவிலிருந்து ஸிம்பாப்வேயும் அயர்லாந்தும் சுப்பர் 12 சுற்றுக்கு முன்னேறின.

இரண்டு தடவைகள் உலக சம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் முற்றிலும் எதிர்பாராத விதமாக முதல் சுற்றுடன் வெளியேறியது.

பி குழுவில் ஸ்கொட்லாந்து, அயார்லாந்து ஆகிய அணிகளிடம் தோல்வி அடைந்ததால் மேற்கிந்தியத் தீவுகளின் சுப்பர் 12 சுற்று வாய்ப்பு அற்றுப் போனது.

முதல் சுற்று போட்டிகள் நிறைவடைந்ததை அடுத்து நடைபெறவுள்ள சுப்பர் 12 சுற்றில் விளையாடும் அணிகள் வருமாறு:

குழு 1: ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, இலங்கை, அயர்லாந்து.

குழு 2: பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா, ஸிம்பாப்வே, நெதர்லாந்து.

https://www.virakesari.lk/article/138172

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 18.10.2022 at 21:45, vasee said:

இலங்கை அணி தகுதிகாண் போட்டியில் தோல்வியடைந்து போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாகவே நாடு திரும்பினால் எப்படியிருக்கும்?

இலங்கை அணி நெதர்லண்ட் அணியினை இலகுவாக வென்றுவிடும் என்பதால் அது நிகழ்வதற்கு வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது.

ஆனால் ஏனோ இந்த இலங்கை அணியினை பார்த்து இந்தியர்கள் கவலைப்படுகிறார்கள் (தமக்கு அச்சுறுத்தலாக) என்பதுதான் விளங்கவில்லை? 

இப்போது உள்ள‌ இல‌ங்கை அணியின் ப‌ல‌மே சுழ‌ல் ப‌ந்து வீச்சு

அண்ணா

 

வ‌ஸ்ம‌ன்க‌ள் சுத‌ப்பினா ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் அதை ச‌ரி செய்து அணிக்கு வெற்றிய‌ தேடி கொடுக்கின‌ம் 🤗

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீண்டகால வைரியான நியூஸிலாந்துடன் தனது சொந்த மண்ணில் மோதுகிறது அவுஸ்திரேலியா

By DIGITAL DESK 5

22 OCT, 2022 | 11:04 AM
image

(நெவில் அன்தனி)

கிரிக்கெட் அரங்கில் தனது நீண்டகால வைரியான நியூஸிலாந்துடனான இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று ஈட்டிய சம்பியன் பட்டத்துடன் கடந்த வருட உலகக் கிண்ண அத்தியாயத்தை முடித்துவைத்த அவுஸ்திரேலியா, 8ஆவது அத்தியாயத்தில் குழு 1க்கான சுப்பர் 12 சுற்றை தனது சொந்த மண்ணில் அதே அணியுடனான போட்டியுடன் இன்று ஆரம்பித்துவைக்கவுள்ளது.

இந்த இரண்டு அணிகளுகடன் குழு 1 இல் ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, அயர்லாந்து, இலங்கை ஆகிய அணிகளும் இடம்பெறுகின்றன.

சிட்னி விளையாட்டங்கில் நடைபெறும் சுப்பர் 12 சுற்று ஆரம்பப் போட்டியில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவும் நியூஸிலாந்தும் ஒன்றையொன்று வீழ்த்தி வெற்றிபெற முயற்சிக்கவுள்ளன.

உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இந்த இரண்டு அணிகளும் இதற்கு முன்னர் 2 தடவைகள் சந்தித்தித்திருந்தன. அவற்றில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியை ஈட்டியுள்ளன.

துபாய் விளையாட்டரங்கில் கடந்த வருடம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கேன் வில்லியம்சன் பெற்ற 85 ஓட்டங்களின் உதவியுடன் நியூஸிலாந்து 4 விக்கெட்களை இழந்து 172 ஓட்டங்களைக் குவித்தது.

ஆனால், மிச்செல் மார்ஷ் பெற்ற ஆட்டமிழக்காத 77 ஓட்டங்கள், டேவிட் வோர்னர் பெற்ற 53 ஓட்டங்கள் மொத்த எண்ணிக்கையை 2 விக்கெட் இழப்புக்கு 173 ஓட்டங்களாக உயர்த்த அவுஸ்திரேலியா 8 விக்கெட்களால் வெற்றிபெற்று உலக சம்பியனானது.

அந்த இறுதிப் போட்டியில் விளையாடிய வீரர்கள் இந்த வருடமும் இரண்டு அணிகளிலும் இடம்பெறுவதால் இன்றைய போட்டி பரபரப்வை ஏற்படுத்துவதாக அமையும்.

இந்த இரண்டு அணிகளும் இருபது 20 கிரிக்கெட்டில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட 15 சந்தர்ப்பங்களில் அவுஸ்திரேலியா 10 - 5 என முன்னிலையில் இருக்கிறது.

அதேவேளை, 2011க்குப் பின்னர் அவுஸ்திரேலிய மண்ணில் நியூஸிலாந்து வெற்றிபெற்றதில்லை. எவ்வாறாயினும் அதில் மாற்றத்தை ஏற்படுத்தி வெற்றிபெற நியூஸிலாந்து முயற்சிக்கவுள்ளது.

நியூஸிலாந்தின் அண்மைக்கால இருபது 20 கிரிக்கெட் பெறுபேறுகள் (12-3) சிறப்பாக இருப்பதால் அவுஸ்திரேலியா பெரும் சவாலை எதிர்கொள்ளும் என கருதலாம்.

இரண்டு அணிகளிலும் அதிரடிகளுக்கு பெயர்பெற்றவர்களும் மிகத் துல்லியமாக பந்துவீசுக்கூடியவர்களும் இடம்பெறுவதால் இன்றைய போட்டி கடைசிவரை மிகவும் விறுவிறுப்பை தோற்றுவிக்கும் என எதிர்பார்க்கலாம்.

அணிகள்

Cricket Australia Donates $50,000 To Help India Fight Covid-19 Pandemic |  Cricket News

அவுஸ்திரேலியா: டேவிட் வோர்னர், ஆரோன் பின்ச் (தலைவர்), மிச்செல் மார்ஷ், க்லென் மெக்ஸ்வெல், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், டிம் டேவிட், மெத்யூ வேட், பெட் கமின்ஸ், மிச்செல் ஸ்டார்க், அடம் ஸம்ப்பா, ஜொஷ் ஹேஸ்ல்வூட்.

Why New Zealand's little big guys are most impressive team in the world

நியூஸிலாந்து: மார்ட்டின் கப்டில், பின் அலன், டெவன் கொன்வே, கேன் வில்லியம்சன் (தலைவர்), க்லென் பிலிப்ஸ், மிச்செல் ப்றேஸ்வெல், ஜிம்மி நீஷாம், மிச்செல் சென்ட்னர், டிம் சௌதீ, ட்ரென்ட் போல்ட, அடம் மில்னே.

ஐ.சி.சி.இருபது - 20 உலகக் கிண்ண கிரிக்கெட் திருவிழா ! சுப்பர் 12 சுற்றுடன் ஆரம்பம்

https://www.virakesari.lk/article/138187

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவை அபார வெற்றிகொண்டது நியூசிலாந்து 

22 OCT, 2022 | 06:00 PM
image

(நெவில் அன்தனி)

சிட்னி விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை (22) நடைபெற்ற நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சகலதுறைகளிலும் அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்திய நியூஸிலாந்து, ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டின் 8 ஆவது அத்தியாயத்தை வெற்றியுடன் ஆரம்பித்தது.

குழு 1 க்கான சுப்பர்  12  சுற்றின் இந்த ஆரம்பப் போட்டியில் நியூஸிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 201 ஓட்டங்களை  வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா மிக மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 111 ஓட்டங்களுக்கு சுருண்டு 89 ஓட்டங்களால் படுதோல்வி அடைந்தது.

Australia_-Twenty20-World-Cup-Cricket_-N

பின் அலன், டெவன் கொவன் ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டங்கள், டிம் சௌதீயின் மிகவும் துல்லியமான பந்துவீச்சு, அணியின் மிகத் திறமையான களத்தடுப்பு என்பன நியூஸிலாந்தை இலகுவாக வெற்றி அடைய வைத்தன.

இதன் மூலம் அவுஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் 11 வருடங்களின் பின்னர் நியூஸிலாந்து வெற்றிகொண்டது.

நியூஸிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 201 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 17.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 111 ஓட்டங்களை மட்டும் பெற்று தோல்வி அடைந்தது.

அவுஸ்திரேலியாவின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. 2ஆவது ஓவரில் டிம் சௌதீ விசிய முதலாவது பந்தை விசுக்கி அடிக்க முயற்சித்த டேவிட் வோர்னர் (5) துரதிர்ஷ்டவசமாக போல்ட் ஆனார். அவர் அடித்த பந்து அவரது தொடையில் பட்டு மேலெழுந்தபோது   பந்து மீண்டும் துடுப்பில் பட்டு விக்கெட்டைப் பதம்பார்த்தது. (5-1 விக்.)

Australia_-Twenty20-World-Cup-Cricket_-N

மொத்த எண்ணிக்கை 30 ஓட்டங்களாக இருந்தபோது மிச்செல் சென்ட்னரின் பந்துவீச்சில் கேன் வில்லியம்சனிடம் இலகுவான பிடிகொடுத்த அணித் தலைவர் ஆரொன் பின்ச் (13)  வெளியேறினார்.

அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்தன. கடந்த வருட இறுதி ஆட்டநாயகன் மிச்செல் மார்ஷ் (16), மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் (7), டிம் டேவிட் (11), மெத்யூ வேட் (2), க்லென் மெக்ஸ்வெல் (28), மிச்செல் ஸ்டார்க் (4), அடம் ஸம்ப்பா (0), பெட் கமின்ஸ் (21) ஆகிய அனைவரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர்.

அவுஸ்திரேலியா துடுப்பெடுத்தாடியபோது மார்க்கஸ் ஸ்டொய்னிஸின் பிடியை க்லென் பிலிப்ஸ் எடுத்த விதம் அரங்கில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான இரசிகர்களை மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தொலைக்காட்சியில் கண்டுகளித்த கோடிக்கணக்கான இரசிகர்களையும் பிரமிக்க வைத்தது.

ஸ்டொய்னிஸ் உயர்த்தி அடித்த பந்தை நோக்கி வலப்புறமாக சுமார் 25 யார் தூரம் ஓடிய பிலிப்ஸ், சுமார் 3 அடி தாவி பந்தை பிடித்து அனைவரினதும் பாராட்டைப் பெற்றார்.

நியூஸிலாந்து  பந்துவீச்சில் 2.1 ஓவர்களை மாத்திரம் வீசிய டிம் சௌதீ 6 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மிச்செல் சென்ட்னர் 4 ஓவர்களில் 31 ஒட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ட்ரென்ட் போல்ட் 4 ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Australia_-Twenty20-World-Cup-Cricket_-N

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நியூஸிலாந்து 20 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 200 ஓட்டங்களைக் குவித்தது.

ஆரம்ப வீரர்களான பின்  அலன், டெவன் கொன்வே ஆகிய இருவரும் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்து 25 பந்துகளில் 56 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

பின் அலன் 16 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 42 ஓட்டங்களைக் குவித்தார். இதன்மூலம் சிரேஷ்ட வீரர் மார்ட்டின் கப்டிலுக்கு பதிலாக இன்றைய போட்டிக்கு தனக்கு வாய்ப்பு கொடுத்தது மிகச் சரியான தீர்மானம் என்பதை பின் அலன் நிரூபித்தார்.

தொடர்ந்து டெவன் கொன்வேயும் கேன் வில்லியம்சனும் 2ஆவது விக்கெட்டில் 53 பந்துகளில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மேலும் பலப்படுத்தினர். கேன் வில்லியம்சன் 23 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரைத் தொடர்ந்து க்லென் பிலிப்ஸ் 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தபோது மொத்த எண்ணிக்கை 16 ஓவர்களில் 152 ஓட்டங்களாக இருந்தது.

அதன் பின்னர் டெவன் கொன்வேயும் ஜெம்ஸ் நீஷாமும் 24 பந்துகளில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 200 ஓட்டங்களாக உயர்த்தினர்.

கடைசிவரை துடுப்பெடுத்தாடிய  டெவன் கொன்வே 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 92 ஓட்டங்களைக் குவித்தார். ஜேம்ஸ் நீஷாம் 13 பந்துகளில் 2 சிக்ஸ்களுடன் 26 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காமிலிருந்தார்.

பந்துவீச்சில் ஜொஷ் ஹேஸ்ல்வூட் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகன்: டெவன் கொன்வே.

https://www.virakesari.lk/article/138226

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விராட் கோலியின் பங்களிப்பு எப்படி இருக்கும்?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஐசிசியின் டி20 கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கியிருக்கும் நிலையில், இத்தொடரின் மிகப்பெரிய போட்டியான இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மோதல் மெல்போர்ன் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.

இது, இந்தத் தொடரில் இரு அணிகளுக்கும் முதல்போட்டி. இப்போட்டிக்கான டிக்கெட்டுகள் ஒரு மாதத்திற்கு முன்பே வெறும் 10 நிமிடங்களில் இணையத்தில் விற்றுத் தீர்ந்தன.

இந்த மைதானத்தில் 90,000 பார்வையாளர்கள் அமர முடியும். இவ்வளவு வேகத்தில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தது மைதானத்தில் பணியாற்றும் நபர்களுக்கே அதிர்ச்சியைக் கொடுத்தது.

இரு அணிகளின் செயல்பாடு எப்படி?

 

இந்தியாவின் இரு முக்கிய வீரர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக இந்தத் தொடரில் விளையாடவில்லை. டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் இந்தாண்டு செயல்பாடு சிறப்பாகவே உள்ளது.

இந்தாண்டில் 32 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா, 23 போட்டிகளில் வெற்றியும் 7 போட்டிகளில் தோல்வியும் கண்டுள்ளது.

பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை, அந்த அணி கடந்த மூன்று ஆண்டுகளாக பாபர் ஆசம் தலைமையில் சிறப்பாக செயல்பட்டுவருகிறது. டி20 போட்டிகளில் அந்த அணியின் வெற்றி-தோல்வி அளவு 36-18 என்ற கணக்கில் உள்ளது.

இரு அணிகளும் ஆஸ்திரேலிய மண்ணில் கடைசியாக 2015ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் நடந்த 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் எதிர்கொண்டன. அந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 107 ரன்கள் குவித்தார். இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்களைக் குவித்தது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

ஆனால், இரு அணிகளும் இந்தாண்டு இரண்டு டி20 போட்டிகளில் மோதின. அதில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றன.

இந்திய அணியின் பலம் என்ன?

இந்தியாவின் பலம் பேட்டிங் வரிசைதான் என்கிறார் முன்னாள் கிரிக்கெட் வீராங்கனையும் விமர்சகருமான சாரதா.

"கே.எல். ராகுல் பயிற்சிப் போட்டிகளில் சிறப்பாக ஆடி இருக்கிறார். சூர்ய குமார் யாதவும் விராட் கோலியும் பார்மில் இருப்பது இந்தியாவுக்குச் சாதகமான அம்சம். சூர்ய குமார் யாதவின் ஸ்ட்ரைக் ரேட் குறைந்தது 140-க்கும் அதிகமாவே இருக்கிறது. ஆட்டத்தை முடித்துக் கொடுக்கும் ஃபினிஷர் பணியை தினேஷ் கார்த்திக்கும், ஹர்திக் பாண்ட்யாவும் கச்சிதமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள் "

 

கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

விராட் கோலியின் பங்களிப்பு எப்படி இருக்கும்?

ஆசியக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு பெரும் தோல்வி ஏற்பட்டிருந்தாலும். நீண்ட காலக் காத்திருப்புக்குப் பிறகு விராட் கோலி சதம் அடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அது அவர் பார்முக்குத் திரும்பியதை உணர்த்தும் விதமாகவும் அமைந்திருக்கிறது. உலகக் கோப்பை போட்டிகளிலும் விராட் கோலியின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

"விராட் கோலி இரட்டைப் பங்களிப்பைச் செய்ய வேண்டியிருக்கும். ஒன்று அதிரடி ஆட்டம், மற்றொன்று பாதுகாப்பு ஆட்டம். அவர் ஆட்டத்தின் எந்த ஓவரில் களமிறங்குகிறார் என்பதைப் பொறுத்து அந்தப் பங்களிப்பைத் தீர்மானிக்கலாம். பேட்டிங் நுட்பத்தில் தேர்ந்தவர் என்பதால் இந்த வகையில் அவர் இந்தியாவுக்கு உதவுவார்" என்கிறார் சாரதா.

 

கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணியின் பலவீனம் என்ன?

இந்திய அணியைப் பொறுத்தவரை தற்போதைய புள்ளி விவரங்களின் அடிப்படையில் பாகிஸ்தானை விட பலமான அணியாகவே கருதப்பட்டாலும். சில பலவீனங்களையும் கொண்டிருக்கிறது.

பும்ரா இந்திய அணியில் இல்லாதது மிகப் பெரிய குறை என்கிறார் சாரதா. "ஷமி பயிற்சிப் போட்டிகளில் சிறப்பாகப் பந்துவீசினாலும். வரும் போட்டிகளில் டெத் ஓவர்களில் எப்படிப் பந்துவீசுவார் என்பது முடிவைத் தீர்மானிப்பதில் முக்கியத்துவம் பெறும் "

ஆஸ்திரேலிய மைதானங்களில் ஸ்விங் பந்துவீச்சு பலனளிக்கவில்லை என்று இதுவரை நடந்திருக்கும் போட்டிகளைக் கொண்டு தீர்மானத்துக்கு வரமுடிகிறது. அதனால் இந்தியா ஸ்விங் பந்துவீச்சை மட்டுமே நம்பியிருக்க முடியாது

 

Sharada

பட மூலாதாரம்,SHARADA

 

படக்குறிப்பு,

கிரிக்கெட் விமர்சகர் சாரதா

"புவனேஸ்வர் குமார் ஸ்விங்கை அதிகம் பயன்படுத்தக்கூடியவர் என்பவர். அவரை இந்திய அணி கவனமாகப் பயன்படுத்த வேண்டியிருக்கும்"

பாகிஸ்தான் அணியின் பலம் என்ன?

பாகிஸ்தான் அணியின் இப்போதைய பலம் அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள்தான். காயத்தில் இருந்து அணிக்குத் திரும்பியிருக்கும் ஷாகின் ஷா அப்ரிடி அந்த அணிக்கு பெருமளவு உதவுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"ஆஸ்திரேலிய விக்கெட்டுகளில் ஸ்விங் பந்துவீச்சு பயன்படவில்லை என்றாலும் வேகப் பந்துவீச்சில் பவுன்சர்கள் மூலமாக திணறடிக்க முடியும். இது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்" சாரதா.

 

ஷமி

பட மூலாதாரம்,GETTY IMAGES

மழைக்கு வாய்ப்பு

ஆனால், ஆஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு மையம், ஞாயிற்றுக்கிழமை கனமழைக்கு 90 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ளதால் இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

மெல்போர்ன் நகரில் வெள்ளிக்கிழமை இரவு முதல் விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது. இன்று காலையும் அதே நிலை தொடர்கிறது.

எனினும், வெள்ளிக்கிழமை பிற்பகல் மழை இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தாலும் சிறுதூரல் மட்டுமே இருந்தது. அதனால், இரு அணி வீரர்களுமே வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.

விராட் கோலி மற்றும் தினேஷ் கார்த்திக் நீண்ட நேரம் வலைப்பயிற்சியில் ஈடுபடுவதை பயிற்சியாளர் ட்ராவிட் மேற்பார்வை செய்தார். மாலை நேரத்தில் பயிற்சியைத் தொடங்கிய பாகிஸ்தான் வீரர்கள், தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டனர்.

 

கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கூடுதல் நாள் இல்லை

தொடரின் லீக் போட்டிகள் பாதிக்கப்பட்டால் அந்தப் போட்டியை மற்றொரு நாளில் நடத்த கூடுதல் நாட்கள் திட்டமிடப்படவில்லை. அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளுக்கு மட்டுமே அந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளபடி, ஞாயிறு பிற்பகல் முதல் 10 முதல் 25 மில்லிமீட்டர் மழை தொடர்ந்து பெய்தால், இரு அணிகளும் ஐந்து ஓவர்கள்கூட பந்து வீசுவது கடினம். எனவே போட்டி ரத்து செய்யப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்.

போட்டியில் வென்றால் இரு புள்ளிகள் கிடைக்கும் என்பதால், இது இரு அணிகளுக்குமே பாதிப்பான விஷயம். மேலும், பி பிரிவில் உள்ள பிற அணிகளுக்கு இது சாதகமாக அமைந்துவிடும்.

பாகிஸ்தான் தவிர்த்து, தென்ஆப்ரிக்கா. பங்களாதேஷ், ஜிம்பாவே ஆகிய அணிகளுடன் இந்தியா மோதவுள்ளது.

தொடரின் முதல் சுற்றிலேயே முன்னாள் சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணியை அயர்லாந்து அணி வீழ்த்தியது.

(மெல்பர்ன் நகரில் இருந்து செய்தியாளர் ஸ்ரீவஸ்தவா வழங்கிய தகவல்களுடன்)

https://www.bbc.com/tamil/sport-63356469

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாம் கரன் 5 விக்கெட்டுளை கைப்பற்றிய போதிலும் ஆப்கானை போராடி வென்றது இங்கிலாந்து !

22 OCT, 2022 | 09:02 PM
image

 

(நெவில் அன்தனி)

அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் 8 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் சாம் கரன் முதலாவது 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்த போதிலும் ஆப்பகானிஸ்தானுக்கு எதிரான குழு 1 சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் மிகவும் சிரமத்துக்கு மத்தியிலேயே இங்கிலாந்து 5 விக்கெட்களால் வெற்றிபெற்றது.

பேர்த் விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 112 ஓட்டங்களைப் பெற்றது.

ஓட்டங்களைப் பெறுவதில் ஆரம்பம் முதல் சிரமத்தை எதிர்கொண்ட ஆப்கானிஸ்தான் 14 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 82 ஓட்டங்களைப் பெற்று   ஓரளவு நல்ல நிலையில் இருந்தது. கடைசி 6 ஓவர்களில் ஓட்டங்கள் குவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும் ஓட்டங்களுக்கு பதிலாக விக்கெட்கள் சரிந்தன.

இப்ராஹிம் ஸ்த்ரான் (32), உஸ்மான் கானி (30) ஆகிய இருவரே திறமையாக துடுப்பெடுத்தாடினர்.

ஏனையவர்களில் நஜிபுல்லா ஸத்ரான் (13), ரஹ்மானுல்லா குர்பாஸ் (10) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

இங்கிலாந்து பந்துவீச்சில் சாம் கரன் 3.4 ஓவர்கள் பந்துவீசி 10 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். இந்த பந்துவீச்சுப் பெறுதி இந்த வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியாக பதிவானது. அத்துடன் சாம் கரனின் அதிசிறந்த தனிப்பட்ட பந்துவீச்சு பெறுதியாகவும் அமைந்தது.

அவரை விட பென் ஸ்டோக்ஸ் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மார்க் வூட் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

சுமாரான மொத்த எண்ணிக்கையான 113 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 18.1 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து குறிப்பிட்ட வெற்றி இலக்கை அடைந்தது.

இங்கிலாந்தும் மந்தகதியிலேயே ஓட்டங்களைப் பெற்றது.

லியாம் லிவிங்ஸ்டன் ஆட்டமிழக்காமல் 29 ஓட்டங்களையும் அலெக்ஸ் ஹேல்ஸ் 19 ஓட்டங்களையும் அணித் தலைவர் ஜொஸ் பட்லர், டேவிட் மாலன் ஆகிய இருவரும் தலா 18 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஆப்கன் பந்துவீச்சில் பஸால்ஹக் பாறூக்கி, முஜீப் உர் ரஹ்மான், ராஷித் கான், பரீத் அஹ்மத், மொஹமத் நபி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/138227

large.353121112_t20pt22-10.JPG.1272506e7

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அயர்லாந்தை ஒன்பது விக்கெட்களால் தோற்கடித்தது இலங்கை

By RAJEEBAN

23 OCT, 2022 | 01:18 PM
image

அயர்லாந்துக்கு எதிராக ஹோபார்ட் பெலேரிவ் ஒவல் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற குழு 1 க்கான ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட்களால் இலங்கை மிக இலகுவாக வெற்றிபெற்றது.  

கட்டுப்பாடான பந்துவீச்சு, திறமையான களத்தடுப்பு, சிறப்பான துடுப்பாட்டம் என்பன இலங்கையின் வெற்றியை இலகுபடுத்தின.

ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்க, வேகப்பந்துவீச்சாளர் ப்ரமோத் மதுஷான் ஆகிய பிரதான வீரர்கள் இருவர் உபாதைக்குள்ளாகி இருப்பதால் இலங்கை நெருக்கடியை எதிர்கொண்டது.

ஆனால், பெத்தும் நிஸ்ஸன்கவுக்கு பதிலாக ஆரமப வீரராக களம் இறங்கிய தனஞ்சய டி சில்வா திறமையாகத் துடுப்பெடுத்தாடி இலங்கைக்கு இருந்த நெருக்கடியை நீக்கினார்.

நிஸ்ஸன்கவுக்கு பதிலாக அஷேன் பண்டார அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.

அப் போட்;டியில் அயர்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 128 ஓட்டங்களை வெற்றி இலக்காகக்கொண்ட பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 16 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 133 ஓட்டங்களைப் பெற்று சுப்பர் 12 சுற்றில் வெற்றிக் கணக்கை தொடங்கியது.

குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 50 பந்துகளில் 63 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

25 பந்துகளை எதிர்கொண்ட தனஞ்சய டி சில்வா 2 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 31 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து திறமையாக துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிஸ், சரித் அசலன்க ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்;து இலங்கை வெற்றி அடைவதை உறுதி செய்தனர்.

குசல் மெண்டிஸ் 43 பந்தகளில் 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 68 ஓட்டங்களையும் 22 பந்துகளை எதிர்கொண்ட சரித் அசலன்க 2 பவுண்டறிகள் உட்பட ஆட்டமிழக்காமல் 31 ஒட்டங்களையும் பெற்றனர்.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மமானித்தஅயர்லாந்து 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றது.

பந்துவீச்சில் ஈடுபடுத்தப்பட்ட இலங்கை பந்துவீச்சாளர்கள் 6 பேரும் மிகத் திறமையாக பந்துவீசி குறைந்தது ஒரு விக்கெட்டைக் கைப்பற்றி அயர்லாந்தை கட்டுப்படுத்தினர்.

சிரேஷ்ட வீரரும் முன்னாள் அணித் தலைவருமான போல் ஸ்டேர்லிங், இளம் வீரர் ஹெரி டக்டர் ஆகிய இருவரே திறமையாக துடுப்பெடுத்தாடி 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

 லஹிரு குமாரவின் பந்துவீச்சில் முதல் விக்கெட்டை 2ஆவது ஓவரில்  இழந்த அயர்லாந்து, வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கு கடும் பிரயத்தனம் எடுத்தது.

 ஹெரி டெக்டர், ஜோர்ஜ் டொக்ரெல் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 47 ஓட்டங்களைப் பகிர்ந்;து அணியைப் பலப்படுத்த முயற்சித்தனர்.

ஆனால் டொக்ரெலின் ஆட்டமிழப்புடன் 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 4 விக்கெட்கள் சரிந்ததால் அயர்லாந்தினால் பலமான நிலையை அடைய முடியவில்லை.

துடுப்பாட்டத்தில் ஹெரி டெக்டர் 45 ஓட்டங்களையும் போல் ஸ்டேர்லிங் 34 ஓட்டங்களையும் ஜோர்ஜ் டொக்ரெல் 14 ஓட்டங்களையும் லோர்க்கன் டக்கர் 10 ஓட்டங்களையும் பெற்றனர்.  

இலங்கை பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 19 ஒட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க டி சில்வா 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பினுர பெர்னாண்டோ, லஹிரு குமார, சாமிக்க கருணாரட்ன, தனஞ்சய டி சில்வா ஆகியொர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.  

FfvJcqBWAAAojD_.png

https://www.virakesari.lk/article/138249

  • கருத்துக்கள உறவுகள்
Posted

90 ஆயிரம் இரசிகர்கள் மத்தியில் இறுதிப் பந்துவரை பரபரப்பு : விராட்டின் அதிரடியில் பாகிஸ்தானை வெற்றிகொண்டது இந்தியா

23 OCT, 2022 | 06:11 PM
image

(நெவில் அன்தனி)

 

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மெல்பர்ன் விளையாட்டரங்கில் 90,000 இரசிகர்கள் முன்னிலையில் கடைசி பந்து வரை பரபரப்பை ஏற்படுத்திய குழு 2 க்கான ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுப்பர் 12 சுற்று போட்டியில் இந்தியா 4 விக்கெட்களால் அதிசயிக்கதக்க வகையில் வெற்றி ஈட்டியது.

விராத் கோஹ்லி, ஹார்திக் பாண்டியா ஆகியோரின் அபார துடுப்பாட்டங்கள் இந்தியாவை வெற்றிபெறச் செய்தன.

பாகிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட சற்று கடினமான 160 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

7ஆவது ஓவரில் இந்தியா 4ஆவது விக்கெட்டை ழந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை வெறும் 31 ஓட்டங்களாக இருந்தது. இதன் காரணமாக இந்தியா தோல்வி அடையலாம் என பரவலாக கருதப்பட்டது.

ஆனால், தோல்விப் பாதையில் இருந்த இந்தியாவை விராத் கோஹ்லியும் ஹார்திக் பாண்டியாவும் ஜோடி சேர்ந்து 5ஆவது விக்கெட்;டில் 113 ஓட்டங்களைப் பகிர்ந்து மீட்டெடுத்து அபார வெற்றிபெற வைத்தனர்.

கடைசி  ஓவரில் பாகிஸ்தான் சுழல்பந்துவீச்சாளர் மொஹமத் நவாஸ் இழைத்த தவறுகளும் இந்தியாவுக்கு பரபரப்பான வெற்றிக்கு வழிவகுத்தது.

கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 16 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் நவாஸ் முதல் பந்தில் ஹார்திக்  பாண்டியாவின் விக்கெட்டை கைப்பற்றி பாகிஸ்தானுக்கு நம்பிக்கை ஊட்டினார்.

அடுத்த பந்தில் தினேஷ் கார்த்திக் ஒரு ஓட்டத்தை எடுத்து விராத் கோஹ்லிக்கு வாய்ப்பு கொடுத்தார்.

அடுத்த பந்தில் அவசரமான இரட்டையைப் பெற்ற விராத் கோஹ்லி, இடுப்புக்கு மேலாக வந்த 4ஆவது பந்தை சிக்ஸாக விளாசினார். அத்துடன் நோபோலுக்கான கேள்வியையும் எழுப்பினார். அதனை மத்தியஸ்தர் நோபாலாக அறிவிக்க, பாகிஸ்தான் வீரர்கள் மத்தியஸ்தர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், இறுதியில் மத்தியஸ்தர்களின் தீர்ப்பை ஏற்று தொடர்ந்து விளையாடினர்.

ஆனால் அடுத்த பந்து வைடானதால் தொடர்ந்து ப்றீ ஹிட் அமுலில் இருந்தது.

நவாஸின் 4ஆவது பந்து விக்கெட்டைப் பதம்பார்த்தபோதிலும் பந்து தேர்ட் மேன் திசையை நோக்கிச் செல்ல 3 உதிரி ஓட்டங்களை இந்தியா பெற்றது.

 

ஆனால், அடுத்த பந்தில் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்க போட்டியில் பரபரப்பு அதிகரித்தது.

அடுத்தப் பந்து லெக் சைடில் வீசப்பட ரவிச்சந்திரன் அஷ்வின் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க மத்தியஸ்தர் வைட் என அறிவித்தார்.

கடைசிப் பந்தில் இந்தியாவின் வெற்றிக்கு ஒரு ஓட்டம் தேவைப்பட பாகிஸ்தான் களத்தடுப்பாளர்கள் 30 யார் வட்டத்திற்குள் நிறுத்தப்பட்டனர். ஆனால் கடைசிப் பந்தை அஷ்வின் நிதானத்துடன் உயர்தி அடித்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.

விராத் கோஹ்லி 53 பந்துகளில் 6 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 83 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். ஹார்த்திக் பாண்டியா 37 பந்துகளில் ஒரு பவுண்டறி, 2 சிக்ஸ்களுடன் 40 ஓட்டங்களைப் பெற்றார்.

பாகிஸ்தானைப் போன்றே இந்தியாவின் ஆரம்பமும் சிறப்பாக அமையவில்லை.

அணித் தலைவர் ரோஹித் ஷர்மா (4) 2ஆவது ஓவரில் ஹரிஸ் ரவூபின் பந்துவீச்சிலும் கே. எல். ராகுல் (4) 4ஆவது ஓவரில் நசீம் ஷாவின் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து துடுப்பாட்டத்தை சிறப்பாக ஆரம்பித்த சூரியகுமார் யாதவ் 15 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது ஹரிஸ் ரவூபின் பந்துவீச்சில் ஆட்மிழந்தார். இது இந்திய அணிக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தது.

துடுப்பாட்ட வரிசையில் அக்சார் பட்டேல் 5ஆம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாட அனுப்பப்பட்டார். ஆனால், அவர் இல்லாத ஓர் ஓட்டத்தை அவசரப்பட்டு எடுக்கு முயற்சித்து வீணாக விக்கெட்டை தாரை வார்த்தார். (31 - 4 விக்.)

இதன் காரணமாக இந்தியா படுதோல்வி அடையுமோ என்ற சந்தேகம் எழுந்தது.

ஆனால், விராத் கோஹ்லியும் ஹார்த்திக் பாண்டியாவும் 5ஆவது விக்கெட்டில் அதிரடியாக 113 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றனர்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் ஹாரிஸ் ரவூப் 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மொஹமத் நவாஸ் 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடி 20 ஓவரகளில் 5 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களைக் குவித்தது.

அணித் தலைவர் பாபர் அஸாம் (0) 2ஆவது ஓவரிலும் மொஹமத் ரிஸ்வான் (4) 4ஆவது ஓவரிலும் அர்ஷ்தீப் சிங்கின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். (15 - 2 விக்.)

ஆனால். அதனைத் தொடர்ந்து ஷான் மசூத், இப்திகார் அஹ்மத் ஆகிய இருவரும் பொறுப்பாகவும் வேகமாகவும் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 50 பந்துகளில் 76 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானைப் பலப்படுத்தினர்.

இப்திகார் அஹ்மத் 34 பந்துகளில் 4 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 52 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மொஹமத் ஷமியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் சீரான இடைவெளியில் ஹார்திக் பாண்டியா 3 விக்கெட்களையும் அர்ஷ்தீப் சிங் ஒரு விக்கெட்கடையும் வீழ்ந்தினர். (120 - 7 விக்.)

எனினும் திறமையாக துடுப்பெடுத்தாடிய ஷான் மசூதுடன் 8ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த ஷஹீன் ஷா அப்றிடி 31 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டார். ஷஹீன் ஷா அப்றிடி 16 ஓடட்ங்களைப் பெற்றிருந்தபோது கடைசி ஓவரில் புவ்ணேஷ்வர் குமாரின் பந்துவீச்சில் அவரிடமே இலகுவான பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

ஷான் மசூத் 42 பந்தகளை எதிர்கொண்டு 5 பவுண்ட்றிகளுடன் 52 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காதிருந்தார்.

ஹரிஸ் ரவூப் ஆட்டமிழக்காமல் 6 ஓட்டங்களைப் பெற்றார்.

இந்திய பந்துவீச்சில் ஹார்திக் பாண்டியா 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அர்ஷ்தீப் சிங் 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

https://www.virakesari.lk/article/138279

large.1445451291_t20pt23-10.JPG.feba0fea

  • கருத்துக்கள உறவுகள்
Posted

large.t20mr.JPG.791c14cca140f4722917f4bc

large.t20mw.JPG.0aad00df7aec5b2c03f646aa

இன்றைய 23/10/2022 அதிக ஓட்டம், அதிக விக்கெட் வீழ்த்திய முதல் 10 வீரர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விராட் கோலி: வெற்றியின் முகவராக மீண்டும் உயிர்த்தெழுந்த நாயகன்

  • அ.தா.பாலசுப்ரமணியன் & அஸ்ஃபாக் அகமது
  • பிபிசி தமிழ்
23 அக்டோபர் 2022, 14:28 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

கோலி

பட மூலாதாரம்,QUINN ROONEY/GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ஆட்ட நாயகன் கோலி.

சில கிரிக்கெட் வீரர்கள் ஸ்கோர் செய்வதில் கெட்டிக்காரர்கள். சோதனைகள் ஏதுமற்ற நிதானமான களத்தில் அற்புதமான ஷாட்களை செதுக்கி அவர்கள் தங்கள் சாதனை வரலாற்றை எழுதுவார்கள். ஆனால், விராட் கோலிகள், மகேந்திர சிங் தோனிகள், யுவராஜ் சிங்குகள் வேறு வகை உயிரினங்கள்.

களம் கொதித்துக்கொண்டிருந்தாலும், அணி படுகுழியில் இருந்தாலும் நிதானம் தவறாமல், பதறாமல் ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து, உடன் நிற்கும் வீரரின் தோளைத் தட்டிக் கொடுத்து, புலியின் வாய்க்குள் சென்றுவிட்ட ஆட்டின் தலையை உயிரோடு மீட்பது போல அழகாக வெற்றியை மீட்டுவிடும் அசகாய சூரர்கள் இவர்கள்.

இந்த வகை வீரரான விராட் கோலி, நீண்ட நாள்களாக ஃபார்மில் இல்லாமல் இருந்தது அவருக்கும், அணிக்கும் கவலையளிக்கும் விஷயமாக இருந்துவந்தது.

சமீபத்தில் நடந்த ஆசியக் கோப்பை டி20 போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்து தான் ஃபார்முக்கு மீண்டுவிட்ட செய்தியை கூறிவிட்டார் விராட் கோலி.

 

ஆனால், அது சாதாரண அறிவிப்பு. இப்போது ஆஸ்திரேலியாவில் அவர் செய்திருப்பது பிரகடனம்.

டி20 உலகக் கோப்பை தொடர். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம். ஆஸ்திரேலிய ஆடுகளம். அணி கடும் சோதனையில் சோதனையில் சிக்கிய தருணம். ஃபார்முக்குத் திரும்பியதை ஒருவர் பிரகடனம் செய்வதற்கு இதைவிட பொருத்தமான நேரம் எது?

விக்கெட்டுகள் உதிர்ந்துகொண்டிருந்த நிலையில், ஒரு முனையில் நிதானமாக நின்று அணியை தோல்வியின் புதைகுழியில் இருந்து மீட்டு, தன்னையும் ஃபார்முக்கு மீட்டுக்கொண்ட விராட் கோலி, இந்த வெற்றியை கண்ணீரோடு கொண்டாடியதில் என்ன வியப்பு இருக்க முடியும்?

 

சிவப்புக் கோடு

ஆம் இந்த நாள் இந்தியக் கிரிக்கெட்டின் வரலாற்றிலும், கோலியின் வாழ்க்கையிலும் மறக்கமுடியாத நாளாகத்தான் இருக்கப் போகிறது.

விராட் கோலிக்கு மட்டுமல்ல, அவரை உயிர் மூச்சாக பின்தொடரும் அவரது ரசிகர்களின் கன்னங்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தோடியிருக்கும்.

காணொளிக் குறிப்பு,

தடுமாறிய இந்திய அணியை தூக்கி நிறுத்தி ஃபார்முக்குத் திரும்பிய விராட் கோலி

உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு நிகரான எதிர்பார்ப்புடன் நடைபெற்ற பாகிஸ்தானுடனான சூப்பர் 12 ஆட்டத்தில், விராட் கோலி செய்த பங்களிப்பு கிரிக்கெட் வரலாற்றின் ஒளிமயமான பக்கங்களில் ஒன்று.

கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின், சேவாக், ஹர்ஷா போக்லே உள்ளிட்ட பலரும் இன்றைய போட்டியை கிரிக்கெட் வரலாற்றின் சிறந்ததொரு ஆட்டமாக வர்ணித்துள்ளனர்.

'அவர் அழுததைப் பார்த்ததில்லை'

அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறிக்கொண்டிருந்த இந்தியாவை தனது அதிரடியான ஷாட்களால் மீட்டெடுத்திருக்கிறார் கோலி. 4 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் என 53 பந்துகளில் 82 ரன்கள் விளாசி வெற்றிக்கு வித்திட்ட ஆட்டநாயகனை, ரோஹித் சர்மா தனது தோளில் தூக்கி வைத்து கொண்டாடியது ரசிகர்களை உணர்ச்சிவயப்படுத்தியது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

ஆட்டம் முடிந்ததும் தனக்கே உரிய பாணியில் தரையில் ஓங்கி அடித்து உணர்ச்சிவசப்பட்டதோடு கோலியின் கண்களும் கலங்கியிருந்தன. கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்ட விராட் கோலிக்கு இந்த பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டம் ஓர் உற்சாக டானிக்.

 

விராட் கோலி

பட மூலாதாரம்,QUINN ROONEY/GETTY IMAGES

 

படக்குறிப்பு,

விராட் கோலி

"இது மாயம் போல இருந்தது. எனக்கு சொற்களே இல்லை. அது எப்படி நடந்தது என்றே தெரியவில்லை. எனக்கு உண்மையில் சொற்களே வரவில்லை. இறுதிவரை களத்தில் நின்றால் நம்மால் முடியும் என ஹர்திக் நம்பினார். ஷாஹின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடிவு செய்தோம். ஹாரிஸ் பாகிஸ்தானின் முதன்மையான பந்துவீச்சாளர். அவரது ஓவரில் இரண்டு சிக்சர்கள் அடித்தேன். கணக்கு ரொம்ப சிம்பிள். நவாஸ் பந்துவீச மீதம் ஒரு ஓவர் இருந்தது. ஹாரிஸ் ஓவரை பிளந்துகட்டினால், அவர்கள் பயந்துவிடுவார்கள். அதைதான் நானும் செய்தேன். இதுநாள் வரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மொஹாலியில் ஆடியது மறக்க முடியாததாக இருந்தது. ஆனால் அதைவிட ஒருபடி மேல் இன்றைய ஆட்டம் அமைந்தது" என்றார் விராட் கோலி.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

வெல்லவே முடியாது என்கிற சூழலிலும் நம்பிக்கையை துளிர்விடச் செய்து ஆட்டத்தை முடித்துக் கொடுத்த விராட் கோலி, கிரிக்கெட் ரசிகர்களுக்கு உண்மையிலேயே மிகச்சிறப்பான விருந்தை படைத்திருக்கிறார்.

விராட் கோலியை பல ஆண்டுகளாக பார்த்து வருகிறேன்.. நான் ஒருபோதும் அவர் அழுததை கண்டதில்லை. நான் இன்று அதை பார்த்தேன். இது மறக்க முடியாத ஒன்று என குறிப்பிட்டுள்ளார் கிரிக்கெட் வர்ணணையாளர் ஹர்ஷா போக்லே.

உங்கள் வாழ்க்கையிலேயே இதுதான் மறக்க முடியாத ஆட்டம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. நீங்கள் விளையாடிய விதம் எங்களுக்கு விருந்தாக அமைந்தது. முக்கியமாக ரவுஃப் வீசிய 19வது ஓவரில் பேக் ஃபூட்டில் நீங்கள் அடித்த அந்த சிக்ஸ், கண்கொள்ளா காட்சியாக அமைந்தது என சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டினார்.

தலை வணங்கிய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்

The KING is back . Take a bow, Virat Kohli (அரசர் மீண்டும் வந்தார். தலைவணக்கத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் விராட் கோலி) என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், தனது ட்விட்டர் பக்கத்தில், விராட் கோலியின் புகைப்படத்தை பதிவிட்டு தலை வணங்கியுள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 3

Twitter பதிவின் முடிவு, 3

டி20 இன்னிங்ஸில் நான் பார்த்ததிலேயே இதுதான் ஒரு சிறந்த இன்னிங்ஸ் என முன்னாள் அதிரடி வீரர் சேவாக் பாராட்டியுள்ளார். கோலி நெருக்கடியை சந்தித்த சமயங்களில் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசமும், விராட் கோலியை வெகுவாக பாராட்டியுள்ளார். கோலியின் இன்றைய ஆட்டம், form is temporary and class is permanent என்பதற்கான ஒரு நினைவூட்டலாக அமைந்திருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விராட் கோலி ஆடிய விதத்திற்கு ஹேட்ஸ் ஆஃப். இந்தியாவுக்காக அவர் விளையாடியதில் இது மிகவும் சிறப்பான ஆட்டம். பார்ப்பதற்கே நன்றாக இருந்தது என இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/sport-63366505

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அடுத்த மாட்சில்

IMG-20221024-075904.jpg

இவர்கள் இருவரும்

IMG-20221024-075816.jpg

உருண்டு உருண்டு , பிரண்டு பிரண்டு , குப்புற கவுண்டு கவுண்டு அடிப்பினம்.. ஏதோ ஒரு கொமடி பீஸு சிக்க போகுது..😢

  • கருத்துக்கள உறவுகள்
Posted

T20 WorldCup 2022 : ”என் வாழ்க்கையின் சிறந்த போட்டி இதுதான்!” – விராட் கோலி

christopherOct 23, 2022 20:03PM
virat-kohli-6.jpg

”உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த போட்டி தான் எனது வாழ்க்கையின் சிறந்த இன்னிங்ஸ்” என்று ஆட்டநாயகன் விருது பெற்ற விராட் கோலி கூறியுள்ளார்.

உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மெல்போர்ன் மைதானத்தில் மோதின.

முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 160 ரன்களை குவித்து த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

வெற்றியை உறுதி செய்த கோலி – ஹர்திக் ஜோடி!

எளிதாக வென்று விடலாம் என்று எதிர்பார்த்து களமிறங்கிய இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான கே.எல்.ராகுல் (4), ரோகித் சர்மா (4), சூர்யகுமார் யாதவ் (15) மற்றும் அக்‌ஷர் பட்டேல் (2) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 31 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

virat-kohli-2-1.jpg

இந்நிலையில் தான் விராட்கோலி-ஹர்திக் பாண்டியா கூட்டணி இந்திய அணியை தோல்வியின் பிடியில் இருந்து மீட்டது. அபாரமாக விளையாடிய விராட் கோலி 53 பந்துகளில் 82 ரன்களையும், ஹர்திக் பாண்ட்யா 37 பந்துகளில் 40 ரன்களையும் குவித்தனர்.

இந்த ஜோடி 100 ரன்களுக்கும் மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், இந்திய அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. 

அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு, இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்த விராட் கோலி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

virat-kohli1.jpg

நம்பிக்கை கொடுத்த பாண்டியா!

அப்போது தனக்கும் பாண்டியாவுக்கும் இடையேயான நம்பிக்கையை வெளிப்படுத்தினார். அவர் கூறுகையில், “இது நம்ப முடியாத சூழலாக இருக்கிறது. பேசுவதற்கு என்னிடம் வார்த்தைகளே இல்லை. இது எப்படி நடந்தது என்பதே எனக்கு இன்னும் தெரியவில்லை. இந்தியா 4 விக்கெட்களை இழந்தவுடன் என்ன செய்வது என்பதே புரியவில்லை. அப்போது ஹர்திக் பாண்ட்யாதான் எனக்கு பக்க பலமாய் இருந்தார்.

என்னிடம் தொடர்ச்சியாக, ’விராட், நாம் கடைசி வரை நின்று விளையாடினால் நிச்சயம் நம்மால் வெற்றி பெற முடியும்’ என கூறிக் கொண்டே இருந்தார். அதற்கேற்றார் போலவே ஒவ்வொரு ஓவரிலும் தனி தனியாக திட்டமிட்டு விளையாடினோம். நம்பிக்கை இல்லாத எனக்கு ஹர்திக்கின் வார்த்தைகள் மாற்றத்தை கொடுத்தது.

virat-kohli-3.jpg

சிறந்த இன்னிங்ஸ் இதுதான்!

எங்களது கணக்கீடு எளிமையாக இருந்தது. பெவிலியன் முடிவில் இருந்து ஷாஹீன் அப்ரிடி பந்துவீசியபோது, அவரை வீழ்த்த முடிவு செய்தோம். நவாஸ் பந்து வீச ஒரு ஓவர் இருந்தது. 

ஹரிஸ் அவர்களின் முதன்மை பந்துவீச்சாளர். அவர் ஓவரில் அடித்துவிட்டால் அவர்கள் பீதியடைவார்கள் என்று தெரியும். அதன்படியே அவர் வீசிய 19வது ஓவரில் இரண்டு சிக்ஸர்களை அடித்தேன். நினைத்தது மாதிரியே நடந்தது.

இன்று வரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மொஹாலி தான் எனது சிறந்த இன்னிங்ஸ். ஆனால் இன்றைய ஆட்டத்தை அதைவிடவும் மேலாக நான் உணர்கிறேன். 

மெல்போர்ன் ஸ்டேடியத்தில் இந்திய ரசிகர்களின் கூட்டம் அமோகமாக இருந்தது. நீங்கள் (ரசிகர்கள்) தொடர்ந்து என்னை ஆதரித்தீர்கள், உங்கள் ஆதரவிற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.” என்று தெரிவித்தார்.

 

https://minnambalam.com/sports/this-is-my-best-innings-in-my-lifetime-virat-kohli/

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உண்மை தான் இது ஒரு மஜிக் வெற்றி.கோலி கப்றினாக இருந்த போது அவரைப் பிடிக்காது.ஆனால் நேற்று நிலமை வேறு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பரபரப்பான போட்டியில் நெதர்லாந்தை 9 ஓட்டங்களால் தோற்கடித்தது பங்களாதேஷ்

By DIGITAL DESK 5

24 OCT, 2022 | 02:46 PM
image

(நெவில் அன்தனி)

பங்களாதேஷுக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் ஹோபார்ட். பெலேரிவ் ஓவல் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (24) கடைசிவரை விறுவிறுப்பை தோற்றுவித்த ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்று  குழு 2  கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் 9 ஓட்டங்களால் வெற்றியை ஈட்டியது

பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 145 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தெநர்லாந்து கடைவரை போராடி தோல்வியைத் தழுவியது.

Colin Ackermann got his first fifty at a T20 World Cup, Bangladesh vs Netherlands, ICC Men's T20 World Cup 2022, Hobart, October 24, 2022

கொலின் அக்கர்மன் பெற்ற அரைச் சதமும் 11ஆம் இலக்க வீரர் போல் வென் மீக்கெரெனின் முயற்சியும் வீண்போயின.

நெதர்லாந்தின் முதல் இரண்டு விக்கெட்கள் தஸ்கின் அஹ்மதின் முதலாவது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் வீழ்த்தப்பட அவ்வணி பெரும் அழுத்தத்தை எதிர்கொண்டது.

தஸ்கின் அஹ்மத் வீசிய 4ஆவது ஓவரில் மேலும் 2 விக்கெட்கள் சரிய மொத்த எண்ணிக்கை 15 ஓட்டங்களாக இருந்தது.

Taskin Ahmed tries to get an LBW decision going his way, Bangladesh vs Netherlands, ICC Men's T20 World Cup 2022, Hobart, October 24, 2022

அதன் பின்னர் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து மிக மேதுவாக ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டிருந்தது. அணித் தலைவர் ஸ்கொட் எட்வேர்ட்ஸ் 16 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ரிவேர்ஸ் சுவீப் அடிக்க முயற்சித்து ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்துக்கொண்டிருக்க கொலின் அல்டர்மன் பொறுமையுடனும் அதேவேளை அவ்வப்போது அதிரடியாகவும் துடுப்பெடுத்தாடி நெதர்லாந்துக்கு நம்பிக்கை ஊட்டிக்கொண்டிருந்தார்.

இந்திய வீரர் கோஹ்லி போன்று அக்கர்மன் அதிசயம் நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரிடம் கோஹ்லி போன்று வீராவேசம் இருக்கவில்லை. அவர் 48 பந்துகளில் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 62 ஓட்டங்களைப் பெற்று 9ஆவதாக ஆட்டமிழக்க (101 - 9 விக்.) நெதர்லாந்தின் வெற்றிக்கான எதிர்பார்ப்பு தகர்ந்துபோனது.

11ஆம் இலக்க வீரர் போல் வென் மீக்கெரென் 14 பந்துகளை எதிர்கொண்டு 3 சிக்ஸ்கள், 1 சிக்ஸுடன் 24 ஓட்டங்களைப் பெற்றபோதிலும் பங்களாதேஷின் வெற்றியை அவரால் தடுக்க முடியவில்லை.

கடைசி விக்கெட்டில் ப்ரெட் க்ளாசெனுடன் 34 ஓட்டங்களைப் பகிர்ந்த மீக்கெரென் கடைசிப் பந்தில் ஆட்டமிழக்க பங்களாதேஷ் 9 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

மிகவும் துல்லியமாக பந்துவீசிய தஸ்கின் அஹ்மத் 25 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஹசன் மஹ்முத் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பங்களாதேஷ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 144 ஓட்டங்களைப் பெற்றது.

Nurul Hasan swoops in to break the stumps and run Tom Cooper out for a diamond duck, ICC Men's T20 World Cup 2022, Hobart, October 24, 2022

நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ, சௌம்யா சர்க்கார் ஆகிய இருவரும் 5.1 ஓவர்களில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

அவர்கள் இருவரும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழக்க முதல் 5 விக்கெட்கள் 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தன.

நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 25 ஓட்டங்களையும் சௌம்யா சர்க்கார் 14 ஓட்டங்களையும் பெற்றனர்.

லிட்டன் தாஸ் (9), அணித் தலைவர் ஷக்கிப் அல் ஹசன் (7), யாசிர் அலி (3) ஆகிய மூவரும் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளுடன் வெளியேறினர்.

Afif Hossain added impetus to Bangladesh's innings, Bangladesh vs Netherlands, ICC Men's T20 World Cup 2022, Hobart, October 24, 2022

எனினும் அபிப் ஹொசெயன், நூருல் ஹசன் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 44 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 120 ஓட்டங்களாக உயர்த்தினர்.

நூருள் ஹசன் 13 ஓட்டங்களையும் அபிப் ஹொசெய்ன் 38 ஓட்டங்களையும் பெற்றனர்.

யாசிர் அலி (3), தஸ்கின் அஹ்மத் (0) ஆகிய இருவரும் வந்தவேகத்தில் ஆட்டமிழந்து சென்றனர்.

Two in two: Taskin Ahmed sent back two Dutch batters off the first two balls of the chase, Bangladesh vs Netherlands, ICC Men's T20 World Cup 2022, Hobart, October 24, 2022

மொசாடெக் ஹொசெய்ன் 12 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 20 ஒட்டங்களைப் பெற்று பங்களாதேஷின் மொத்த எண்ணிக்கையை 144 ஓட்டங்களாக உயர்த்தினார்.

நெதர்லாந்து பந்துவீச்சில் போல் வென் மீக்கெரென் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பாஸ் டி லீட் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/138334

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தென்னாபிரிக்கா - சிம்பாப்வே போட்டியில் மழையின் ஆட்டம் : போட்டி கைவிடப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளி

24 OCT, 2022 | 07:38 PM
image

 

(நெவில் அன்தனி)

தென் ஆபிரிக்காவுக்கும் ஸிம்பாப்வேக்கும் இடையில் 9 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 2 க்கான சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டி, மூன்றாவது தடவையாக மழையினால் தடைப்பட்டபோது  ஆட்டம்  கைவிடப்பட்டு இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

ஸிம்பாப்வேயினால் நிர்ணயிக்கப்பட்ட 80 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு பின்னர் 7 ஓவர்களில் 64 ஓட்டங்களாக திருத்தப்பட்ட நிலையில் தென் ஆபிரிக்கா 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 51 ஓட்டங்களைக் குவித்திருந்தபோது மழையினால் ஆட்டம் கைவிடப்பட்டது.

ஹொபார்ட், பெலேரிவ் விளையாட்டரங்கில் இன்று மாலை பெய்த மழை காரணமாக அவுஸ்திரேலிய நேரப்படி இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாக வேண்டிய போட்டி இரண்டரை மணித்தியாலங்கள் தாமதித்து இரவு 9.35 மணிக்கு ஆரம்பமானது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத்   தீர்மானித்த ஸிம்பாப்வேயினால் நிர்ணயிக்கப்பட்ட 80 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 24 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மீண்டும் மழை குறுக்கிடவே ஆட்டம் தடைப்பட்டது. குவின்டன் டி கொக் 7  பந்துகளில் 23 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். 2ஆவது ஓவரில் வீசப்பட்ட முதலாவது பந்து நோ-போலாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்தே ஆட்டம் தடைப்பட்டது.

ஆட்டம் தொடர்ந்தபோது தென் ஆபிரிக்காவின் வெற்றி இலக்கு டக்வேர்த் லூயிஸ் முறைமைப்படி 7 ஓவர்களில் 64 ஓட்டங்கள் என திருத்தி அமைக்கப்பட்டது.

எவ்வாறாயினும் தென் ஆபிரிக்கா 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 51 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது.

2 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழந்பின்றி 40 ஓட்டங்களைக் குவித்திருந்த தென் ஆபிரிக்கா அடுத்த ஓவரில் நிதானத்தைக் கடைப்பிடித்து 11 ஓட்டங்களைப் பெற்றதால்  அதன் வெற்றி அற்றுப்போனது.

குவின்டன் டி கொக் 18 பந்துகளில் 8 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் அடங்கலாக 47 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். அணித் தலைவர் டெம்பா பவுமா 2 பந்துகளில் 2 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காதிருந்தார்.

கிரிக்கெட் வரலாற்றில் தென் ஆபிரிக்காவைத் தொடரும் துரதிர்ஷ்டம் விட்டபாடில்லை என்பதை  இது  உணர்த்துவதாக அமைந்தது.

 

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஸிம்பாப்வே 9 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 79 ஓட்டங்களைப் பெற்றது.

அதிரடியாக ஓட்டங்களைக் குவிக்க முயற்சித்த ஸிம்பாப்வேயின் முதல் 3 வீரர்கள் ஆடுகளம் நுழைந்த வேகத்தில் பிடிகொடுத்து ஆட்டமிழந்து சென்றதுடன் மற்றொரு வீரர் ரன் அவுட் ஆனார்.

அணித் தலைவர் க்ரெய்க் ஏர்வின் (2), ரெஜிஸ் சக்கப்வா (8), சிக்கந்தர் ராஸா (0), சோன் வில்லியமஸ் (1) ஆகியோரே அவசரத் துடுகையால் ஆட்டமிழந்தனர். அவர்கள் நால்வரும் களம் விட்டகன்றிருந்தபோது 3.4 ஓவர்களில் மொத்த எண்ணிக்கை 19 ஓட்டங்களாக இருந்தது.

அதனைத் தொடர்ந்து வெஸ்லி மதேவியர், மில்டன் ஷும்பா ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து 32 பந்துகளில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கையை 79 ஓட்டங்களாக உயர்த்தினர்.

பந்துவீச்சில் லுங்கி நிகிடி 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வெய்ன் பார்னல் 6 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் அன்ரிச் நோக்கியா 10 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/138352

large.1912397920_t20pt24-10.JPG.df600ee9

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையை 7 விக்கெட்டுகளால் வெற்றிகொண்டது அவுஸ்திரேலியா

25 OCT, 2022 | 09:23 PM
image

 

இலங்கை அணி நிர்ணயித்த 157 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை அடைய 3 விக்கெட்டுகளை மாத்திரம் பறிகொடுத்த அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் இலங்கை அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது.

பேர்த், ஒப்டஸ் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 1 சுப்பர் 12 கிரிக்கெட்: போடடியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றது.

இந்நிலையில், அவுஸ்திரேலிய அணிக்கு 158 ஓட்டங்களை இலங்கை அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 16.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 158 ஓட்டங்களைப் பெற்று 7 விக்கெட்டுளால் வெற்றி பெற்றது.

https://www.virakesari.lk/article/138417

large.1692195356_t20pt25-10.JPG.dfe1dce9

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இயற்கையின் தயவால் இங்கிலாந்தை வெற்றிகொண்டது அயர்லாந்து 

26 OCT, 2022 | 02:44 PM
image

(நெவில் அன்தனி)

முன்னாள் உலக சம்பியன் இங்கிலாந்துக்கு எதிராக மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 1 சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் இயற்கை அன்னையின் தயவால்  அயர்லாந்து அதிர்ஷ்டகரமான வெற்றியை ஈட்டியது.

அப் போட்டியில் அயர்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 158 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 14.3 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 105 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

அந்த சந்தர்ப்பத்தில் சாரலுடன் மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது. போட்டி இரண்டாவது தடவையாக மழையினால் தடைப்பட்டதால் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர மத்தியஸ்தர்கள் தீர்மானித்தனர்.

அப்போது டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் இங்கிலாந்து 5 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்தது.   எனவே, அயர்லாந்து 5 ஓட்டங்களால் அதிர்ஷ்டவசமாக வெற்றிபெற்றது.

ஒருவேளை கெரத் டிலேனி வீசிய 15ஆவது ஓவர் பூர்த்தி செய்யப்பட்டிருந்தால் போட்டி முடிவு வேறு விதமாக அமைந்திருக்கும். ஏனெனில் அந்த ஓவரின் முதல் 3 பந்துகளில் மொயீன் அலி 12 ஓட்டங்களை விளாசியிருந்தார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அயர்லாந்து 19.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றது.

முன்வரிசை வீரர்களான அணித் தலைவர் அண்டி பெல்பேர்னி, லோர்க்கன் டக்கர் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 82 ஓட்டங்கள் அயர்லாந்து அணி கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெற வழிவகுத்தது.

பெல்பேர்னி 47 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டறிகள், 2 சிக்ஸ்க சிக்ஸ்கள் உட்பட  62 ஓட்டங்களைக் குவித்ததுடன் லோர்க்கன் டக்கர் 27 பந்துகளில் 34 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர்களைவிட கேர்ட்டிஸ் கெம்ஃபர் 17 ஓட்டங்களையும் போல் ஸ்டேர்லிங் 14 ஓட்டங்களையும் பெற்றனர்.

இங்கிலாந்து பந்துவீச்சில் லியாம் லிவிங்ஸ்டோன் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மார்க் வூட் 34 ஒட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

158 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 14.3 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 105 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழையினால் ஆட்டம் தடைப்பட போட்டி முடிவு டக்வேர்த் லூயிஸ் முறைமையில் தீர்மானிக்கப்பட்டது.

இங்கிலாந்தின் துடுப்பாட்டம் சிறப்பாக அமையவில்லை.

முதல் ஓவரிலேயே அணித் தலைவர் ஜொஸ் பட்லர் ஓட்டம் பெறாமல் ஆட்டமிழந்ததுடன் 3ஆவது ஓவரில் அலெக்ஸ் ஹேல்ஸ் 7 ஓட்டங்களுடன் களம்விட்டகன்றார்.

பென் ஸ்டோக்ஸ் 6 ஓட்டங்களுடன் 6ஆவது ஓவரில் ஆட்டமிழக்க இங்கிலாந்தின் நிலைமை மேலும் மோசம் அடைந்தது.

இதனை அடுத்து டேவிட் மாலன் (35), ஹெரி ப்றூக் (18) ஆகிய இருவரும் அணியை மீட்டெடுக்க கடும் பிரயத்தனம் எடுத்தனர்.

ஆனால், மொத்த எண்ணிக்கை 67 ஓட்டங்களாக இருந்தபோது ஹெரி ப்றூக் ஆட்டமிழந்ததுடன் மேலும் 19 ஓட்டங்கள் மொத்த எண்ணிக்கைக்கு 19 ஓட்டங்கள் சேர்ந்தபோது டேவிட் மாலன் வெளியேறினார்.

அடுத்து களம் நுழைந்த டக்வேர்த் லூயிஸ் முறைமை நினைவில் கொண்டு அதிரடியில் இறங்கிய மொயீன் அலி 12 பந்துகளில் 3 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 24 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை குறுக்கிடவே அவரது முயற்சி வீண்போனதுடன் அயர்லாந்துக்கு அதிர்ஷ்டகரமான வெற்றி கிடைத்தது.

அயர்லாந்து பந்துவீச்சில் ஜொஷ் லிட்ல் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/138459

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குழு 1 அணிகள் நிலையில் இலங்கை 2 ஆம் இடத்திற்கு முன்னேற்றம்

By VISHNU

26 OCT, 2022 | 08:40 PM
image

(என்.வீ.ஏ.)

நியூஸிலாந்துக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று (26) நடைபெறவிருந்த ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 1 சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டி மழையினால் கைவிடப்பட்டது.

Untitled-1_copy.jpg

ஆட்டம் முழுமையாகக் கைவிடப்பட்டதால் இரண்டு அணிகளும் 2 புள்ளிகளைப் பகிர்ந்துகொண்டன.

இந்தப் போட்டியுடன் குழு 1இல் இடம்பெறும் 6 அணிகளும் சுப்பர் 12 சுற்றில் இரண்டாம் கட்டப் போட்டிகளை நிறைவுசெய்துள்ளன.

இதற்கு அமைய குழு 1க்கான அணிகள் நிலையில் நியூஸிலாந்து 3 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் இருக்கிறது.

அதேவேளை, அயர்லாந்துடனான போட்டியில் இங்கிலாந்து தோல்வி அடைந்ததை அடுத்து அணிகள் நிலையில் இலங்கை 2ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அணிகள் நிலையில் தற்போது முறையே முதல் 3 இடங்களில் உள்ள நியூஸிலாந்து, இலங்கை, இங்கிலாந்து மற்றும் 5ஆம் இடத்திலுள்ள அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் அரை இறுதிகளுக்கு முன்னேறு வாய்ப்புகளை அதிகரித்துக்கொள்ளக்கூடிய தீர்மானம் மிக்க போட்டிகள் வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் நடைபெறவுள்ளன.

அத்தடன் அணிகள்   நிலையில்   4ஆம் இடத்திலுள்ள அயர்லாந்துக்கும் கடைநிலையில் உள்ள ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான போட்டி வெள்ளிக்கிழமையும் நடைபெறவுள்ளன.

குழு 1 அணிகள் நிலை (26-10-2022 வரை)

https://www.virakesari.lk/article/138483

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நெதர்லாந்தை தோற்கடித்த்து இந்தியா !

27 OCT, 2022 | 05:17 PM
image

(நெவில் அன்தனி)

 

நெதர்லாந்துக்கு எதிராக சிட்னி கிரிக்கெட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 2 சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் இந்தியா 56 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இருபது 20 உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியா இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது.

விராத் கொஹ்லி, அணித் தலைவர் ரோஹித் ஷர்மா, சூரியகுமார் யாதவ் ஆகியோர் குவித்த அரைச் சதங்களும் அணியின் கட்டுப்பாட்டான பந்துவீச்சும் இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தன.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட விரும்பிய இந்தியா 20 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 179 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்ப வீரர் கே. எல். ராகுல் 9 ஓட்டங்களுடன் 3ஆவது ஓவரில் ஆட்டமிழந்தபோதிலும் அதன் பின்னர் 3 துடுப்பாட்ட வீரர்கள் அரைச் சதங்களைக் குவித்து இந்திய அணியைப் பலப்படுத்தினர்.

அணித் தலைவர் ரோஹித் ஷர்மா 39 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 53 ஓட்டங்களைப் பெற்றார்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி இந்தியாவின் வெற்றியில் பிரதான பங்காற்றிய விராத் கோஹ்லி மீண்டும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 2ஆவது தொடர்ச்சியான தடவையாக ஆட்டமிழக்காமல் அரைச் சதத்தைக் குவித்தார்.

ரோஹித் ஷர்மாவுடன் 2ஆவது விக்கெட்டில் 73  ஓட்டங்களைப்   பகிர்ந்த விராத் கோஹ்லி, பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் சூரியகுமார் யாதவ்வுடன் 48 பந்துகளில் மேலும் 95 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

44 பந்துகளை எதிர்கொண்ட விராத் கோஹ்லி 3 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 62 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

சூரியகுமார் யாதவ் 25 பந்துகளில் 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களைப் பெற்றார்.

180 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நொக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 123 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இந்திய பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் நெதர்லாந்து துடுப்பாட்ட வீரர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

டிம் ப்ரிங்ள் (20), கொலின் அக்கர்மன் (17), மெக்ஸ் ஓ'டவ்ட் (16), பாஸ் டி லீட் (16), ஷரிஸ் அஹ்மத் (16), போல் வென் மீக்கெரென் (14 ஆ.இ.) ஆகியோர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றபோதிலும் அவர்களால் கணிசமான ஓட்டங்ளைப் பெரும் அளவிற்கு துடுப்பாட்டத்தில் தாக்குப்பிடிக்கமுடியவில்லை.

பொறுப்பற்ற மற்றும் தவறான அடி தெரிவுகள் என்பனவே அவர்களது ஆட்டமிழப்புகளுக்கு காரணமாகின.

இந்திய பந்துவீச்சில் புவ்ணேஷ்வர் குமார் 2 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

அவரைவிட அக்ஸார் பட்டேல் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரவிச்சந்திரன் அஷ்வின் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அர்ஷ்தீப் சிங் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: சூரியகுமார் யாதவ்.

இந்தப் போட்டி முடிவுடன் குழு 2க்கான அணிகள் நிலையில் 2 வெற்றிகளுடன் இந்தியா +1.425 என்ற நிகர ஓட்ட வேகத்துடன் 4 புள்ளிகளைப் பெற்று   முதலிடத்தில் இருக்கிறது.

தென் ஆபிரிக்கா ஒரு வெற்றி, ஒரு வெற்றிதோல்வியற்ற முடிவு என்ற பெறுபேறுகளுடன்  3 புள்ளிகளைப் பெற்று 2ஆம் இடத்தில் இருக்கிறது. அதன் நிகர ஓட்ட வேகம் +5.200ஆக இருக்கிறது.

https://www.virakesari.lk/article/138548

Posted
On 23/10/2022 at 22:36, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அடுத்த மாட்சில்

IMG-20221024-075904.jpg

இவர்கள் இருவரும்

IMG-20221024-075816.jpg

உருண்டு உருண்டு , பிரண்டு பிரண்டு , குப்புற கவுண்டு கவுண்டு அடிப்பினம்.. ஏதோ ஒரு கொமடி பீஸு சிக்க போகுது..😢

நியூசிலாந்து 200 ஓட்டங்களை அவுஸ்திரேலியா மண்ணில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடி வென்று விட்டு அமைதியாக அடுத்த போட்டிக்கு தயாராகிறார்கள்.  கிந்திய குழு ஏதோ ஒரு போட்டியை வென்று விட்டு வாய் வீரத்துக்கு மட்டும் ஒரு குறைவும் இல்லை. அதற்குள் பிபிசியின் துதிபாடல் சொல்லவே தேவை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

8 ஆவது இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் முதல் சதத்தை பதிவுசெய்த ரில்லி ரூசோ

By NANTHINI

27 OCT, 2022 | 05:11 PM
image

(எம்.எம். சில்வெஸ்டர்)

வுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ஐ.சி.சி.யின் 8ஆவது உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதலாவது சதத்‍தை தென் ஆபிரிக்காவின் ரில்லி ரூசோ அடித்து அசத்தினார்.

மேலும், உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் வரலாற்றில் பதிவான 10ஆவது சதமும் இதுவாகும்.

இதற்கு முன்னர், மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெய்ல் (117 & 100) இரண்டு சதங்களும்,  இந்தியாவின் சுரேஷ் ரெய்னா (101), இலங்கையின் மஹல ஜயவர்தன (100), நியூஸிலாந்தின் பிரெண்டன் மெக்கலம் (123), இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் (116), பாகிஸ்தானின் அஹமட் ஷேஷாட் (111), பங்களாதேஷின் தமீம் இக்பால் (103), இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் (101) ஆகியோர் உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் வரலாற்றில் சதம் குவித்த வீரர்களாக உள்ளனர். 

இந்நிலையில், இப்போட்டித் தொடரின் 22ஆவது போட்டியில் பங்களாதேஷ் அணியை தென் ஆபிரிக்கா அணி ‍எதிர்கொண்டது. சிட்னியில் இன்று (ஒக் 27) நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து, 205 ஓட்டங்களை குவித்தது.

துடுப்பாட்டத்தில் ரில்லி ரூசோ 56 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கலாக 109 ஓட்டங்களை விளாசினார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 101 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழக்கவே, தென் ஆபிரிக்க அணி 104 ஓட்டங்களால் இமாலய வெற்றியை ஈட்டியது.

https://www.virakesari.lk/article/138533

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாகிஸ்தானை ஒரு ஓட்டத்தால் திரில் வெற்றிபெற்ற ஸிம்பாப்வே

27 OCT, 2022 | 09:23 PM
image

 

(நெவில் அன்தனி)

பேர்த், மேற்கு அவுஸ்திரேலியா கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (27) கடைசிவரை விறுவிறுப்பைத் தோற்றுவித்த ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 2 சுப்பர் 12 போட்டியில் பாகிஸ்தானை கடைசிப் பந்தில் ஒரு ஓட்டத்தால் வெற்றிகொண்ட  ஸிம்பாப்வே, இந்த வருட உலகக் கிண்ணத்தில் மிகப் பெரிய தலைகீழ் வெற்றியைப் பதிவு செய்து வரலாறு படைத்தது.

 

சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் இந்த இரண்டு அணிகளும் ஒன்றையொன்று எதிர்த்தாடிய  முதல் சந்தர்ப்பத்திலேயே ஸிம்பாப்வே வெற்றிபெற்று பெருமை தேடிக்கொண்டது.

அத்துடன் எட்டாவது இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் பாகிஸ்தான் அடுத்தடுத்த போட்டிகளில் கடைசிப் பந்தில் தோல்வி அடைந்து பெரும் ஏமாற்றம் அடைந்தது.

மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தப் போட்டியின் கடைசிக் கட்டத்தில் ஸிம்பாப்வே பந்துவீச்சாளர்கள் கட்டுப்பாட்டுடன் பந்துவீசி தமது அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.

ஸிம்பாப்வேயினால் நிர்ணயிக்கப்பட்ட 131 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்று  முற்றிலும் எதிர்பாராத தோல்வியைத் 

ஸிம்பாப்வேயைப் போன்று பாகிஸ்தானின் ஆரம்பமும் சிறப்பாக அமையவில்லை.

அணித் தலைவர் பாபர் அஸாம் (4), மொஹமத் ரிஸ்வான் (14), இப்திகார் அஹ்மத் (5) ஆகியோர் ஆட்டமிழக்க 8அவது ஓவரில் பாகிஸ்தானின் மொத்த எண்ணிக்கை 36 ஓட்டங்களாக இருந்தது.

தொடர்ந்து 14ஆவது ஓவரில் ஷதாப் கான் (17), ஹய்தர் அலி (0) ஆகிய இவரும் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்தனர்.

மறுபக்கத்தில் மிகவும் திறமையாக துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த ஷான் மசூத் 44 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க பாகிஸ்தான் பெரும் நெருக்கடிக்குள்ளானது. (94 - 6 விக்.)

கடைசி 3 ஓவர்களில் பாகிஸ்தானின் வெற்றிக்கு மேலும் 32 ஓட்டங்கள் தேவைப்பட்டதுடன் 4 விக்கெட்கள் மீதமிருந்தது.

இங்கராவா வீசிய 17ஆவது ஓவரில் 3 ஓட்டங்களும் முஸராபனி வீசிய 18ஆவது ஓவரில் 7 ஓட்டங்களும் பெறப்பட்டன. ஆனால் இங்கராவா வீசிய 19ஆவது ஓவரில் 11 ஓட்டங்கள் பெறப்பட கடைசி ஓவரில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 11 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

ப்றெட் இவான்ஸ் வீசிய அந்த ஓவரின் முதல் 3 பந்துகளில் 2, 4, 1 என ஓட்டங்கள் பெறப்பபட்டது  . ஆனால், 4ஆவது பந்தில் ஓட்டம் பெறப்படவில்லை. கடைசி 2 பந்துகளில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 3 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அதுவரை திறமையாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த மொஹமத் நவாஸ், 5ஆவது பந்தை மிட் ஒவ் நிலைக்கு மேலாக அடிக்க முயற்சித்து ஏர்வினிடம் பிடிகொடுத்து 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.  

அதுவே ஸிம்பாப்வே அணிக்கு திருப்பு முனையாக அமைந்தது. 

கடைசிப் பந்தில் மொத்த எண்ணிக்கையை சமப்படுத்தும் நோக்கில் 2ஆவது ஓட்டத்தை எடுக்க முயற்சித்த ஷஹீன் ஷா அப்ரிடி, ரன் அவுட் ஆக, ஒரு ஓட்டத்தால் பாகிஸ்தான் தொல்வி அடைந்தது.

ஸிம்பாப்வே பந்துவீச்சில் சிக்கந்தர் ராஸா 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்றெட் இவான்ஸ் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடுவதைத் தெரிவு செய்த ஸிம்பாப்வே 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 130 ஓட்டங்களைப் பெற்றது.

மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய வெஸ்லி மெதேவியர் (17), அணித் தலைவர் க்ரெய்க் ஏர்வின் (19) ஆகிய இருவரும் 5 ஓவர்களில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

அவர்கள் இருவரும் ஒரு  ஓட்ட வித்தியாசத்தில் ஆட்டமிழந்த பின்னர் மொத்த எண்ணக்கை 64 ஓட்டங்களாக இருந்தபோது மில்டன் ஷும்பா 8 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து சோன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராஸா ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 31 ஓட்டங்களைப் பகிர்ந்து 14ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கையை 95 ஓட்டங்களாக உயர்த்தினர்.

ஆனால் அதே மொத்த எண்ணிக்கையில் நான்கு விக்கெட்கள் அடுத்தடுத்த ஓவர்களில் சரிந்தன.

13ஆவது ஓவரின் கடைசி 2 பந்துகளில் 2 விக்கெட்களையும் 14ஆவது ஓவரில் 3ஆவது, 4ஆவது பந்தகளில் 2 விக்கெட்களையும் இழந்ததால் ஸிம்பாப்வே பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது.

சோன் வில்லியம்ஸ் (31), ரெஜிஸ் சக்கப்வா (0), சிக்கந்தர் ராஸா (9), லூக் ஜொஹ்வே (0) ஆகியோரே அடுத்தடுத்து ஆட்டமிழந்தவர்களாவர். (95 - 7 விக்.)

இந் நிலையில் ரெயான் பியூரி (10 ஆ.இ.), ப்றட் இவான்ஸ் (19) ஆகிய இருவரும் 8ஆவது விக்கெட்டில் 31 ஓட்டங்களைப் பகிர்ந்து வீழ்ச்சியைத் தடுத்தனர்.

ரிச்சர்ட் இங்கராவா 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் மொஹமத் வசிம் 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஷதாப் கான் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/138550

large.1640499340_t20pt27-10.JPG.decc9bb6

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பலசாலிகளை அசத்திய அயர்லாந்தை ஆப்கானிஸ்தான் இன்று சந்திக்கிறது

By DIGITAL DESK 5

28 OCT, 2022 | 09:52 AM
image

(என்.வீ.ஏ.)

 

இங்கிலாந்துக்கு எதிராக மெல்பர்னில் ஈட்டிய மகத்தான வெற்றியைத் தொடர்ந்து ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 1 சுப்பர் 12 சுற்றில் மேலும் ஓர் ஆச்சரியத்தை ஏற்படுத்தி அக்குழுவில் முன்னேறுவதற்கான வாய்ப்பு அயர்லாந்துக்கு உருவாகியுள்ளது.

ஆனால், ஆற்றல்களை வெளிப்படுத்தக்கூடிய ஆப்கானிஸ்தானுடான இன்றைய போட்டியில் அயர்லர்நது வெற்றிபெறத் தவறினால் அந்த வாய்ப்பு அற்றுப்போகும்.

இந்த இரண்டு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் விளையாடியபோது அந்தத் தொடர் மிகவும் பரபரப்வை தோற்றுவித்ததுடன் தீர்மானம் மிக்க கடைசிப் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமையில் வெற்றிபெற்ற அயர்லாந்து தொடரை 3 - 2 என தனதாக்கிக்கொண்டிருந்தது.

சர்வதேச இருபது 20 கிரிக்கெட் அரங்கில் இரண்டு அணிகளும் மோதிக்கொண்ட 23 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் 16 - 6 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது. சமநிலையில் முடிவுற்ற போட்டியிலும் சுப்பர் ஓவரில் அயர்லாந்துக்கு தோல்வியே கிடைத்தது.

இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்த இரண்டு அணிகளும் சந்திப்பது இதுவே முதல் தடவையாகும். எனவே, மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இப் போட்டியில் இரண்டு அணிகளும் ஒன்றையொன்று வெற்றிகொள்ள கடுமையாக முயற்சிக்கும்.

இந்த விளையாட்டரங்கில் ஆப்கானிஸ்தானின் அதிசிறந்த சுழ்பந்துவிச்சாளர்கள் (ராஷித் கான், மொஹமத் நபி, முஜீப் உர் ரஹ்மான்) மூவரும் அயர்லாந்துக்கு பெரும் சவால் விடுப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், அவர்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு அவசியமான வியூகங்களை அயர்லாந்து பிரயோகிக்கும் என்பது உறுதி.

ஒட்டுமொத்தத்தில் இந்தப் போட்டியில் எந்த அணி தவறுகள் இழைக்காமல் மிகச் சிறப்பாக விளையாடுகின்றதோ அந்த அணிக்கே வெற்றிவாய்ப்பு கிடைக்கும்.

அணிகள்

Live Cricket Score - Afghanistan vs Ireland, Super 12, T20 World Cup 2022 |  Cricbuzz.com

ஆப்கானிஸ்தான்: ஹஸ்ரத்துல்லா ஸஸாய், ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், உஸ்மான் கானி, நஜிபுல்லா ஸத்ரான், மொஹமத் நபி (தலைவர்), அஸ்மத்துல்லா ஓமர்ஸாய், ராஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், பரீத் அஹ்மத் மாலிக், பஸால்ஹக் பாறூக்கி.

Afghanistan vs Ireland Dream11 Prediction, Fantasy Cricket Tips, Dream11  Team, Playing XI, Pitch Report, Injury Update- ICC Men's T20 World Cup 2022

அயர்லாந்து: போல் ஸ்டேர்லிங், அண்ட்றூ பெல்பேர்னி (தலைவர்), லொர்க்கன் டக்கர், ஹெரி டக்கர், ஜோர்ஜ் டொக்ரெல், கேர்ட்டிஸ் கெம்ஃபர், கெரத் டிலேனி, மார்க் அடயார், சிமி சிங், பெறி மெக்கார்த்தி, ஜொஸ் லிட்ல்.

https://www.virakesari.lk/article/138556

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லை – அம்பிகா சற்குணநாதன் December 23, 2024   ‘தூய்மையான இலங்கை’ கருத்திட்டத்துக்கான ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் புதிய செயலணிக்கு மிகப்பரந்துபட்ட ஆணையும், அதிகாரங்களும் வழங்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன், இந்நடவடிக்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாறுபட்ட விதத்தில் செயற்படுவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை எனத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆலோசனைக்கமைய ‘தூய்மையான இலங்கை’ கருத்திட்டத்தை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக அரசியலமைப்பின் 33 ஆவது உறுப்புரையின் பிரகாரம் 18 உறுப்பினர்களைக்கொண்ட ஜனாதிபதி செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அம்பிகா சற்குணநாதன், ‘தூய்மையான இலங்கை’ கருத்திட்டத்துக்கென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டிருக்கும் செயலணி பல்வேறு விதத்திலும் பிரச்சினைக்குரியதாகக் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் இச்செயலணி அவருக்கு (ஜனாதிபதிக்கு) மாத்திரமே பொறுப்புக்கூறவேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும், எமக்கு மற்றுமொரு செயலணியோ அல்லது ஆணைக்குழுவோ அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ‘இச்செயலணிக்கு மிகப்பரந்துபட்ட அளவிலான ஆணையும், அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. உதாரணமாக இந்த ஜனாதிபதி செயலணிக்கு சட்டங்களைத் தயாரிப்பதற்கும், அச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான கட்டமைப்பினை நிறுவுவதற்கும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஏனைய அரச கட்டமைப்புக்களுக்கான அறிவுறுத்தல்களை வழங்குவதற்கு இச்செயலணிக்கு அதிகாரம் உண்டு’ என்றும் அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை இந்த செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகள் உள்வாங்கப்படாத போதிலும், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் பலர் இணைத்துக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார். ‘இவ்வாறான செயற்பாடுகளே முன்னைய ஜனாதிபதியினாலும் முன்னெடுக்கப்பட்ட நிலையில், தற்போதைய ஜனாதிபதி அவற்றிலிருந்து மாறுபட்ட விதத்தில் செயற்படுவார் என்ற நம்பிக்கையை இத்தீர்மானம் ஏற்படுத்தவில்லை. அத்தோடு இப்புதிய செயலணியில் சிறுபான்மையினப் பிரதிநிதித்துவமின்றி, இராணுவ அதிகாரிகள் உள்வாங்கப்பட்டிருப்பதானது பெரும்பான்மைவாத அரசு மற்றும் இராணுவமயமாக்கல் தொடர்பில் அச்சத்தை ஏற்படுத்துகிறது: எனவும் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.   https://www.ilakku.org/ஜனாதிபதி-மீது-நம்பிக்கைய/
    • அங்குரார்ப்பண 19 இன்கீழ் மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் இந்தியா சம்பியனானது Published By: VISHNU   22 DEC, 2024 | 06:41 PM (நெவில் அன்தனி) மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றுவந்த 6 நாடுகளுக்கு இடையிலான அங்குரார்ப்பண 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.  இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகியன ஒரு குழுவிலும் இலங்கை, பங்களாதேஷ், மலேசியா ஆகியன மந்றைய குழுவிலும் மோதின. முதல் சுற்று முடிவில் ஒரு குழுவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் மற்றைய குழுவில் முதலிரண்டு பெற்ற அணிகளை இரண்டாம் சுற்றில் எதிர்த்தாடின. இரண்டாம் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன. இரண்டாம் சுற்றில் இந்தியாவிடம் இலங்கை தோல்வி அடைந்தது. நேபாளத்துடனான போட்டி மழையினால் கைவிடப்பட்டதால் அத்துடன் இலங்கை வெளியேறியது. கோலாலம்பூர் பேயுமாஸ் கிரிக்கெட் ஓவல் விளையாட்டரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணிக்கு எதிரான  இறுதிப் போட்டியில் 41 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இந்தியா சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட 19 வயதுக்குட்பட்ட இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 117 ஓட்டங்களைப் பெற்றது. ட்ரிஷா, அணித் தலைவி நிக்கி ப்ரசாத் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். திறமையாகத் துடுப்பெடுத்தாடிய கொங்காடி ட்ரிஷா 52 ஓட்டங்களைப் பெற்றார். நிக்கி ப்ரசாத் 12 ஓட்டங்களையும் மத்திய வரிசையில் வினோத் மிதிலா 17 ஓட்டங்களையும் ஆயுஷி ஷுக்லா 10 ஓட்டங்களையும் பெற்றனர். பங்களாதேஷ் பந்துவீச்சில் முஸ்தபா பர்ஜானா ஈஸ்மின் 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் நிஷிட்டா அக்தர் நிஷி 23  ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 118 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் மகளிர் அணி 18.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 76 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பங்களாதேஷ் துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீராங்கனை பஹோமிடா ச்சோயா 18 ஓட்டங்களையும் 4ஆம் இலக்க வீராங்கனை ஜுவாரியா பிர்தௌஸ் 22 ஓட்டங்களையும் பெற்றனர். மற்றைய வீராங்கனைகள் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளையே பெற்றனர். இந்திய பந்துவீச்சில் ஆயுஷி ஷுக்லா 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சொணம் யாதவ் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பாருணிக்கா சிசோடியா 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகி, தொடர் நாயகி ஆகிய இரண்டு விருதுகளையும் கொங்காடி ட்ரிஷா வென்றெடுத்தார். https://www.virakesari.lk/article/201909
    • மண் அகழ்வுக்கு எதிராக தென்மராட்சியில் போராட்டம் December 22, 2024  09:34 pm யாழ்ப்பாணம் - தென்மராட்சி  - கரம்பகம் பிரதேசத்திலுள்ள வீதியில் மண் அகழ்வு   இடம்பெற்றுள்ளமையை  கண்டித்து  பிரதேச மக்கள் இன்று(22) போரட்டத்தில் ஈடுபட்டனர். கரம்பகத்திலுள்ள விடத்தற்பளை - கரம்பகப் பிள்ளையார் இணைப்பு வீதியிலேயே இந்த மண் அகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த விவசாய வீதி நெடுங்காலமாக மணல் வீதியாகவே இருந்து வந்துள்ளது. பிரதேச விவசாயிகள் தங்களது விவசாய உற்பத்தி பொருட்களை எடுத்துச் செல்வதற்கு சிறந்த வீதியாக இதனையே பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், மண் அகழும் இயந்திரத்தின் உதவி கொண்டு  25க்கும் மேற்பட்ட டிப்பர் கனவளவு மண் அகழப்பட்டுள்ளதாக  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிற போதிலும், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.   https://tamil.adaderana.lk/news.php?nid=197695  
    • சிரியாவை ஆப்கானாக மாற்றப்போவதில்லை – பெண்கள் கல்விகற்கவேண்டும் என விரும்புகின்றேன் - சிரிய கிளர்ச்சி குழுவின் தலைவர் 22 DEC, 2024 | 11:45 AM   சிரியாவால் அதன் அயல்நாடுகளிற்கோ அல்லது மேற்குலகிற்கோ பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் உருவாகாது என சிரியாவின் கிளர்ச்சிக்குழுவின் தலைவர் அஹமட் அல் சரா தெரிவித்துள்ளார். பிபிசிக்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர் சிரியா மீதான தடைகளை மேற்குலகம் நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தடைகள் முன்னயை அரசாங்கத்தை இலக்காக கொண்டவை என தெரிவித்துள்ள அவர் ஒடுக்குமுறையாளனையும் பாதிக்கப்பட்டவர்களையும் ஒரே மாதிரி நடத்தக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார். இரண்டு வாரங்களிற்கு முன்னர் பசார் அல் அசாத்தின் அரசாங்கத்தை கவிழ்த்த தாக்குதல்களிற்கு அஹமட் அல் சரா தலைமை தாங்கியிருந்தார். ஹயட் தஹ்ரிர் அல் சலாம் அமைப்பின் தலைவரான இவர் முன்னர் அபு முகமட் அல் ஜொலானி என அழைக்கப்பட்டார். தனது அமைப்பினை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் தனது அமைப்பு பயங்கரவாத அமைப்பில்லை என தெரிவித்துள்ளார். எச்டிஎஸ் அமைப்பினை ஐநா அமெரிக்க பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நாங்கள் பொதுமக்களின் இலக்குகளை தாக்கவில்லை பொதுமக்களை தாக்கவில்லை மாறாக நாங்கள் அசாத் அரசாங்கத்தின் கொடுமைகளிற்கு பலியானவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். தான் சிரியாவை ஆப்கானிஸ்தானாக மாற்ற முயல்வதாக தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள சிரியாவின் பிரதான கிளர்ச்சிக்குழுவின் தலைவர்  எங்கள் நாட்டிற்கும் ஆப்கானிஸ்தானிற்கும் வித்தியாசங்கள் உள்ளன பாரம்பரியங்கள் வித்தியாசமானவை ஆப்கானிஸ்தான் ஒரு பழங்குடி சமூகம் சிரியா வேறுவிதமான மனோநிலையை கொண்டது என அவர் தெரிவித்துள்ளார். பெண்கள் கல்விகற்கவேண்டும் என நான் நம்புகின்றேன் இட்லிப் எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்டவேளை அங்கு பல்கலைகழகங்கள் இயங்கின அங்கு கல்வி கற்றவர்களில் 60 வீதமானவர்கள் பெண்கள்  என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/201859
    • முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு - முப்படையினர் நீக்கம் December 23, 2024  08:36 am முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரையும் இன்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற பாராளுமன்றக் அமர்வில், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரை நீக்கும் தீர்மானம் தொடர்பில்  பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால விளக்கினார். இதன்படி இன்று முதல் பொலிஸ் அதிகாரிகள் மாத்திரமே முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர். தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸாரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளதுடன், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக போதியளவு பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு 6 மாதங்களுக்கு ஒருமுறை மீளாய்வு செய்யப்படும் எனவும், அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும் எனவும் அரசாங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது. முப்படையினர் நீக்கப்பட்ட போதிலும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பில் எவ்வித பிரச்சினையும் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் அதிக செலவு காரணமாக அவர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.   https://tamil.adaderana.lk/news.php?nid=197702  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.