Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீர்ப்பு

37 நிமிடங்களுக்கு முன்னர்
 

சவுக்கு சங்கர்

பட மூலாதாரம்,SAVUKKU SHANKAR

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விமர்சகர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஒருவரை சந்தித்த பிறகுதான் யூடியூபர் மாரிதாசுக்கு எதிரான வழக்கில் சாதகமான தீர்ப்பு வந்ததாக அவர் ட்விட்டரில் இட்ட பதிவை மேற்கோள்காட்டி ஜூலை மாதம் மதுரை உயர் நீதிமன்றம் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது.

இதையடுத்து ஒரு யுடியூப் சேனலில் பேசிய சங்கர், மேல் மட்ட நீதித்துறை முழுவதிலும் ஊழல் படிந்திருப்பதாக விமர்சித்தார். இதையடுத்து அவர் மீது இரண்டாவது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.

நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்ய உயர் நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட்டது. மேலும் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.கடந்த ஒன்றாம் தேதி மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான சவுக்கு சங்கர், தன் மீது தொடரப்பட்ட வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அதேபோல் , தன் மீது நீதிமன்றம் அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்கு காரணமாக கூறும் வீடியோ பதிவுகளையும், சமூக வலைதளப் பதிவுகளும் தனக்கு வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இதனை அடுத்து நீதிமன்ற பதிவாளரிடம் அதன் நகல்களை சவுக்கு சங்கரிடம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

நீதிமன்றத்தில் அடுத்த பதில் மனு தாக்கல் செய்ய குறைந்தது 6 வார கால அவகாசம் வேண்டுமென சவுக்கு சங்கர் தரப்பில் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை வைத்தனர். அதற்கு நீதிமன்றம் இவ்வழக்கு தொடர்பாக இனி எவ்வித பதிவையும் எங்கேயும் குறிப்பாக சமூக வலைத்தள பக்கங்களில் பதிய மாட்டேன் என எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் கொடுத்தால் பதில் மனு தாக்கல் செய்ய கேட்ட கால அவகாசம் வழங்க பரிசீலனை செய்யப்படும் என நீதிமன்றம் கூறியது.

ஆனால், அதற்கு சவுக்கு சங்கர் தரப்பில், உறுதி வழங்க இயலாது என தெரிவிக்கப்பட்டது. இதனால் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.சவுக்கு சங்கரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். இதைத் தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக நீதிபதிகள் சவுக்கு சங்கருக்கு ஆறு மாத கால சிறை தண்டனை அளித்து உத்தரவிட்டனர். மேலும், சவுக்கு சங்கரால் நீதிமன்றம் குறித்து அவதூறாக பதிவு செய்யப்பட்டிருந்த பதிவுகள் அனைத்தையும் சமூகவலைத்தள பக்கங்களில் இருந்து உடனடியாக நீக்க தொழில்நுட்பத் துறைக்கு உத்தரவிட்டனர். தீர்ப்பின் நகல் சவுக்கு சங்கருக்கு கிடைக்கப்பெற்ற உடன் அவர் சிறையில் அடைக்கப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.

 

कोरोना वायरस

யார் இந்த சவுக்கு சங்கர்?

சவுக்கு சங்கர் என அறியப்படும் ஆச்சிமுத்து சங்கர், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றியவர்.

2008ம் ஆண்டு இரண்டு அதிகாரிகளுக்கு இடையிலான தொலைபேசி உரையாடலின் குரல் பதிவை ஊடகங்களுக்கு கசியவிட்ட விவகாரத்தில் பணியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார்.

2010ஆம் ஆண்டு சவுக்கு என்கிற தமிழ் செய்தி இணையதளத்ததை நிறுவி, தீவிரமான சர்ச்சைக்கு இடமான கட்டுரைகளை வெளியிட்டு வந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் நடத்திய வந்த சவுக்கு நெட் என்ற இணையதளத்தில் பிறரை புண்படுத்தும் உள்ளடக்கங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.டி. செல்வம் அதற்கு தடை விதித்தார்.

பிரபல யூடியூப் பக்கங்களிலும் அவர் தொடர்ந்து அளித்து வந்த பேட்டிகள் சர்ச்சையையும் விவாதத்தையும் தூண்டின.

https://www.bbc.com/tamil/global-62917481

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆள்… விடுதலைப் புலிகள் பற்றி, மணி என்ற கிறுக்குப் பயலுடன்…
பேட்டி என்ற பெயரில், உண்மைக்கு புறம்பான… விசமத்தனமான செய்திகளை,
வீடியோ பதிவின் மூலம் வெளியிட்டவன்.
இந்தப் பயலுக்கு, ஆறு மாசம்… கடூழியச் சிறை கொடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பாவம்

வாய்க்கொழுப்பால்  மாட்டிக்கொண்டார்

அங்க  கடிச்சு இங்க  கடிச்சு

கடைசியில்???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சவுக்கு சங்கர் விவகாரம்: "பேசிய கருத்துக்காக ஒருவரைத் தண்டிக்க முடியுமா?" - நீதிபதி ஹரி பரந்தாமன் பேட்டி

  • முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
16 செப்டெம்பர் 2022
 

சவுக்கு சங்கர்

பட மூலாதாரம்,SAVUKKU SHANKAR

சவுக்கு சங்கர் நீதிமன்றம் குறித்தும் நீதிபதிகள் குறித்தும் வெளிப்படுத்திய கருத்துகளுக்காக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அவருக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்துள்ளது. ஆனால், ஒருவர் பேசுவதற்காக சிறை தண்டனை விதிக்க முடியுமா என்ற கேள்வியை எழுப்புகிறார், சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விமர்சகர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்தது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஒருவரை சந்தித்த பிறகுதான் யூடியூபர் மாரிதாசுக்கு எதிரான வழக்கில் சாதகமான தீர்ப்பு வந்ததாக அவர் ட்விட்டரில் பதிவிட்ட இடுகையை மேற்கோள்காட்டி, ஜூலை மாதம் மதுரை உயர் நீதிமன்ற கிளை அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில்தான் அவருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இது தொடர்பாக, பிபிசி தமிழிடம் பேசிய சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன், "இந்திய அரசியல் சாசனம் எழுதப்பட்ட காலத்தில் இருந்த நிலை வேறு. தற்போது உள்ள நிலை வேறு. ஆகவே, பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்து சொல்லும் உரிமைக்காக தண்டனை கொடுப்பதை ஒழிக்க வேண்டும். நீதிமன்றம் ஒரு உத்தரவை அரசாங்க அதிகாரிக்கு இடுகிறது. அதனை அவர் அமல்படுத்தவில்லையென்றால், அதற்காக நடவடிக்கை எடுப்பதென்பது வேறு. நீதிமன்றம் குறித்துப் பேசியதற்காக நடவடிக்கை எடுப்பதென்பது வேறு.

 

சவுக்கு சங்கரின் பேச்சில் உடன்பாடு இல்லாவிட்டால் கூட நான் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க மாட்டேன். சென்னை உயர் நீதிமன்றம் குறித்துப் பேசிய ஹெச். ராஜா மீது கூட நடவடிக்கை எடுக்கக்கூடாது.

இந்தியாவை பிரிட்டிஷார் ஆண்டபோது 'நீதிமன்ற அவமதிப்பு' ஒரு குற்றமாக இருந்தது. இன்று வளர்ந்த நாடுகள் அனைத்திலும் அந்தப் பிரிவு நீக்கப்பட்டு விட்டது. அதற்காக ஒருவர் என்ன வேண்டுமானாலும் பேசலாமா? கூடாது. அப்படி ஒரு தனி நபரைப் பற்றி அவதூறாகப் பேசினால் அவர்கள் இழப்பீடு கோரி வழக்குத் தொடரலாம்.

தொடர்ந்து ஒரு பத்திரிகை இது போன்ற செய்திகளை வெளியிட்டால், அந்த செய்திகளைத் தொடர்ந்து வெளியிடக்கூடாது என ஆணையிடலாம். மாறாக ஒருவர் பேசியதற்காக சிறையில் அடைக்க உத்தரவிடலாமா என்பதுதான் இப்போது உள்ள கேள்வி.

நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் தண்டிக்கும் அதிகாரம் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 19(2)ல் இருந்து கிடைக்கிறது. அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 19(1) குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகளையும் 19(1A) என்பது பேச்சுரிமை, எழுத்துரிமை போன்றவற்றைப் பற்றியும் பேசுகிறது. இதில் இருக்க வேண்டிய கட்டுப்பாடுகளை (Reasonable restrictions) பற்றி அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 19(2) பேசுகிறது.

 

ஹரி பரந்தாமன்

பட மூலாதாரம்,FACEBOOK

 

படக்குறிப்பு,

ஹரி பரந்தாமன்

இந்தப் பிரிவைப் பொறுத்தவரை, நீதிமன்ற மாண்பைக் குலைக்கும் வகையில் பேசுதல், பொது ஒழுங்கைக் குலைத்தல், நட்பு நாடுகளுடனான உறவை சீர்குலைக்கும் வகையில் பேசுதல், தேச ஒற்றுமைக்கு எதிராகப் பேசுதல் போன்ற ஏழெட்டு கட்டுப்பாடுகளை விதிக்கிறது.

இன்றைய காலகட்டத்தில் இந்தக் கட்டுப்பாடுகள் எல்லாமே நீக்கப்பட வேண்டும். குறிப்பாக நீதிமன்ற மாண்பை குலைக்கும் வகையில் பேசுவதற்கு தண்டிப்பது என்பதை கண்டிப்பது என்பதை நீக்க வேண்டும். அதுதான் எல்லாவற்றுக்கும் ஊற்றுக்கண்.

இந்தப் பிரிவின் அடிப்படையில்தான் பெரியார், பிரசாந்த் பூஷண், அருந்ததி ராய் ஆகியோர் தண்டிக்கப்பட்டார்கள். இதில் பெரியாரைத் தவிர்த்த அனைவரும் உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார்கள். பெரியார் சென்னை உயர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார்.

பெரியார் விவகாரத்தை எடுத்துக்கொள்வோம். மலையப்பன் என்பவர் தொடர்பான வழக்கு அது. இந்த வழக்கு நடக்கும்போது பெரியாருக்கு கிட்டத்தட்ட எழுபது வயதிற்கு மேல் ஆகிவிட்டது. இதில் குறிப்பிடப்படும் மலையப்பன் என்பவர் ஒரு மாவட்ட ஆட்சியர். "எனக்கு மலையப்பன் யார் என்பது தெரியாது. அவர் கறுப்பா, சிவப்பா என்பது தெரியாது. ஆனால், மலையப்பன் என்பவர் ஒரு சூத்திரன் என்பது தெரியும். அவர் நிலம் தொடர்பாக ஒரு உத்தரவிடுகிறார்.

பெரியார் தண்டிக்கப்பட்டார்

அந்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்கிறது. அந்த அதிகாரம் உயர் நீதிமன்றத்திற்கு இருக்கிறதா என்பது தெரியாது. ஆனால், அதனை ரத்து செய்துவிட்டு, மலையப்பனுக்கு இனிமேல் பதவி உயர்வு தரக்கூடாது என எழுதுகிறீர்கள். ஏன் எழுதுகிறீர்கள் என்றால், அவர் சூத்திரன், நீங்கள் பிராமணர்" என்று எழுதினார். இதற்காக பெரியார் தண்டிக்கப்பட்டார்.

 

பெரியார்

அடுத்ததாக ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் வழக்கு. அவர் முதலமைச்சராக இருக்கும்போது நீதிமன்ற அவமதிப்பிற்காக தண்டிக்கப்பட்டார்.

"இது வர்க்கரீதியான சமூகம். அரசாங்கத்தின் எல்லா பிரிவுகளுமே சுரண்டும் வர்க்கத்திற்கு ஆதரவாக இருக்கின்றனவே தவிர, சுரண்டப்படும் வர்க்கத்திற்கு ஆதரவாக இல்லை. நீதித் துறையும் இதற்கு விலக்கல்ல என்கிறார் கார்ல் மார்க்ஸ்" என்று 1967ல் ஒரு செய்தியாளர் சந்திப்பில் சொன்னார் ஈ.எம்.எஸ். இதற்கு கேரள உயர் நீதி மன்றம் தண்டனை அளித்தது. அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஈ.எம்.எஸ். இந்த தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றார். அங்கு அவருக்கு அபராதம் குறைக்கப்பட்டது. ஆனால், தண்டனை உறுதிசெய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இதயத்துல்லா, ஈ.எம்.எஸ்ஸிற்கு சட்டம் தெரியவில்லை என்று கூறியிருக்கலாம். மாறாக, அவர் ஈ.எம்.எஸ். கார்ல் மார்க்ஸை சரியாகப் படிக்கவில்லை என்றார்.

பிரசாந்த் பூஷண் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் யார், யார் ஊழல்வாதி என எழுதி அதனை சீலிட்ட கவரில் நீதிமன்றத்திற்குக் கொடுத்தார். இப்போதுவரை அதன் விவரத்தை அவர் வெளியிடவில்லை. இருந்தபோதும் நீதிமன்ற அவமதிப்பிற்காக அவர் தண்டிக்கப்பட்டார். இத்தனைக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த வர்மா, முகர்ஜி போன்றவர்களே, அங்கு நிலவும் ஊழல் பற்றிப் பேசியிருக்கிறார்கள்.

இந்த டிஜிட்டல் யுகத்தில் கருத்துகள் ஏகத்திற்கு வந்து குவிகின்றன. அதில் சில கருத்துகளுக்காக இப்படி தண்டிப்பதென்பதை ஏற்க முடியாது. பல ஆண்டுகளுக்கு முன்பே மேலை நாடுகள் இந்தப் பிரிவுகளை நீக்கிவிட்டன. இப்போதாவது நாம் அதைச் செய்ய வேண்டும். இதற்கான நல்ல வாய்ப்பை உச்ச நீதிமன்றம் தவறவிட்டுவிட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்பாக ராகுல் காந்தி, அரவிந்த் கேஜ்ரிவால், சுப்பிரமணியன் சுவாமி, விஜயகாந்த் ஆகியோர் கிரிமினல் அவதூறு என்ற பிரிவை நீக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். அரசியல்சாசன ரீதியாக அது சரியா என்று கேள்வி எழுப்பினார்கள். இந்த வழக்கை தீபக் மிஸ்ரா அமர்வு விசாரித்தது. ஆனால், அவதூறான வார்த்தைகள் மனதைத் துன்புறுத்தக்கூடியவை என்று கூறி அந்த பிரிவை நீக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

 

உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இப்போது பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்களை என்ன வேண்டுமானாலும் சொல்ல முடிகிறது. அதிகபட்சம், அவர்கள் இழப்பீடு கேட்டு வழக்குத் தொடர்வார்கள். ஆனால், சிறைக்கு அனுப்ப மாட்டார்கள். ஆனால், கிரிமினல் அவதூறு வழக்குத் தொடர்ந்தால், சிறைக்கு அனுப்ப முடியும். என்னைப் பொறுத்தவரை, கிரிமினல் அவமதிப்பு பிரிவை நீக்கிவிட்டால், கிரிமினல் அவதூறு பிரிவும் நீங்கிவிடும்.

நீதிமன்றத்திற்குள் சென்று ஒரு நீதிபதியைச் செயல்பட விடாமல் தடுத்தால், அது தண்டனைக்குரிய குற்றம். ஒரு அரசு அதிகாரியைச் செயல்படவிடாமல் தடுத்த குற்றத்தின் கீழ் அந்த செயல்பாடு வரும். நீதியரசர் மார்கண்டேய கட்ஜு முன்பாக ஒரு வழக்கு வந்தது.

அப்போது வாதாடிய வழக்கறிஞர், "இந்த வழக்கை நீங்கள் விசாரிக்கக்கூடாது. வளர்ச்சி என்ற போர்வையில் நாட்டின் வளங்கள் அழிக்கப்படுவது குறித்து உங்களுக்குக் கவலையில்லை. இதற்கு மேல் நான் ஏதாவது குறிப்பிட்டால் நீதின்ற அவமதிப்பு வழக்கு என்மேல் பாயலாம்" என்று கூறினார்.

அதற்குப் பதிலளித்த கட்ஜு, "நீங்கள் என் மேஜைக்கு அருகில் வந்து கட்டுகளைப் பறிக்காதவரை, உங்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்க மாட்டேன். நீங்கள் வாதாடுங்கள்" என்று கூறினார்.

ஆகவே, நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் இருப்பது அல்லது நேரடியாக வந்து நீதிமன்ற நடவடிக்கையைத் தடுப்பது ஆகியவற்றுக்குத்தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடுக்க வேண்டும். கருத்தைத் தெரிவித்ததற்காக ஒருவரைத் தண்டிப்பது என்பது கூடாது என்கிறார் முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன்.

https://www.bbc.com/tamil/india-62925303

  • கருத்துக்கள உறவுகள்

நீதிபதிகளை துக்ளக் குருமூர்த்தி இழிவாத்தானே பேசுனார்- சவுக்கு சங்கருக்கு மட்டும் சிறை? சீமான் கேள்வி

spacer.png

அந்த அடிப்படையில், சனநாயகத்தின் மிக முக்கிய அங்கங்களுள் ஒன்றான நீதித்துறையின் மீது எழுப்பப்பட்டக் கேள்விகளுக்காகத் தம்பி சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறைத்தண்டனை என்பது அதிகப்படியானது என்றே எண்ணுகிறேன். சவுக்கு சங்கரின் கருத்துகளில் தவறு இருப்பதாக நீதிமன்றம் கருதினால், அது தனக்குண்டான கட்டற்ற அதிகாரத்தை உணர்ந்து, கண்டனத்தோடும், எச்சரிக்கைசெய்தும்கூட இவ்வழக்கைக் கையாண்டிருக்கலாம். கடந்த காலங்களில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி அவர்கள், 'தகுதியின் அடிப்படையில் நீதிபதிகள் வரவில்லை; அடுத்தவர் காலை பிடித்தே வந்திருக்கிறார்கள்' என மிக இழிவாகவும், பல அரசியல் உள்காரணங்களோடும் கருத்துதிர்த்தபோது அவமதிப்புக்குள்ளாகாத நீதிபதிகளும், நீதித்துறையும், தம்பி சவுக்கு சங்கர் கூறிய கருத்துகளினால் எப்படி மாண்பிழந்து போவார்கள்? என்பதை அறிய முடியவில்லை!

சனநாயகத்தில், இந்த இடத்தில் விமர்சனத்திற்கு உட்பட்டவர், இந்த இடத்தில் இருப்பவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்று எந்த வரையறையும் கிடையாது. இந்த நாட்டில் நீதிமன்றங்கள் இதுவரை பிழையே இழைத்ததில்லை என்று யாராவது கூறமுடியுமா? நீதிமன்றத்திற்கு நீதிமன்றம் நீதி மாறுபடும்போது, ஒரு நீதிபதியால் வழங்கப்படும் நீதி, மற்றொரு நீதிபதியால் மாற்றப்படும்போது, நீதித்துறை எப்படி விமர்சனத்திற்கு ஆளாகாமல் இருக்க முடியும்? இன்றைய நீதிபதிகள், வழக்கறிஞர்களாக இருந்த கடந்த காலங்களில், 'நீதிபதிகள் ஒன்றும் கடவுள்கள் அல்லர்' என்று விமர்சித்த வரலாற்றை மறுக்க முடியுமா? நீதிதவறினால் உடனே உயிரை மாய்த்துக்கொள்ள இன்றைக்கு நீதித்துறையில் உள்ளவர்கள் அனைவரும் நீதி வழுவா பாண்டிய நெடுஞ்செழியர்களா? அல்லது மகன் மீது தேரேற்றி மாட்டுக்கு நீதி சொன்ன மனுநீதிச்சோழர்களா? என்கின்ற கேள்வி மக்கள் மனதில் எழுகிறது. ஆகவே, தம்பி சவுக்கு சங்கரின் அடிப்படையான நோக்கத்தையும், தனி நபர் சனநாயக உரிமையைக் கருத்தில கொண்டும் அவருக்கு வழங்கப்பட்ட ஆறுமாத சிறைத்தண்டனையை, மாண்புமிகு உயர்நீதிமன்றம் மறுபரிசீலனை செய்து அவரை விடுவிக்க வேண்டுமெனக் கோருகிறேன். இவ்வாறு சீமான் கூறினார்.

 

https://tamil.oneindia.com/news/chennai/naam-tamilar-seeman-urges-to-release-savukku-shankar/articlecontent-pf763361-476027.html?ref_source=articlepage&refப்_medium=amp&ref_campaign=similar-topic-slider

  • கருத்துக்கள உறவுகள்
On 15/9/2022 at 18:51, தமிழ் சிறி said:

இந்த ஆள்… விடுதலைப் புலிகள் பற்றி, மணி என்ற கிறுக்குப் பயலுடன்…
பேட்டி என்ற பெயரில், உண்மைக்கு புறம்பான… விசமத்தனமான செய்திகளை,
வீடியோ பதிவின் மூலம் வெளியிட்டவன்.
இந்தப் பயலுக்கு, ஆறு மாசம்… கடூழியச் சிறை கொடுக்க வேண்டும்.

உண்மை, இவரொரு உளறல்வாதியாகிவிட்டார். எப்படியும் பணமும் புகழும் தேடலாம் என்ற சிந்தனையின் விளைவு. 

  • கருத்துக்கள உறவுகள்

சவுக்கு சங்கர் டிஸ்மிஸ்: சிறைக்குச் சென்ற நோட்டீஸ்!

PrakashSep 24, 2022 15:59PM
a123.jpg

அரசுப் பணியில் இருந்து சவுக்கு சங்கர் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அவரை நிரந்தரமாக பணி நீக்கம் (டிஸ்மிஸ்) செய்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையில் பணியாற்றி வந்தவர் சங்கர். இவர், அரசு ஆவணங்களை கசியவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, கடந்த 2008ம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், அரசு, அவருக்கு மாதந்தோறும் அவருடைய சம்பளத்தில் பாதியை இதுநாள் வரை வழங்கி வந்தது.

இந்த நிலையில், தனியார் யுடியுப் சேனல்களில் அரசிற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். இதில், கடந்த ஜூலை 22ம் தேதி, ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்திருக்கிறது என்று யுடியுப் சேனலில் சவுக்கு சங்கர் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவுசெய்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி சிறப்பு அமர்வு முன்பு கடந்த செப்டம்பர் 15ம் தேதி மீண்டும் விசாரணை தொடங்கியது. அப்போது அவருக்கு, நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்துக்காக 6 மாத சிறை தண்டனை அளித்து உத்தரவிடப்பட்டது. அதனை தொடர்ந்து கடலூர் மத்திய சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 24) கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர், சிறையில் உள்ள சவுக்கு சங்கருக்கு பணி நீக்கம் செய்வதற்கான Show cause நோட்டீசை வழங்கச் சென்றனர். சிறை அதிகாரியுடன் சவுக்கு சங்கருக்கு வழங்க முயன்றபோது அவர் அதனை வாங்க மறுத்துவிட்டார்.

இதையடுத்து, அந்த நோட்டீஸ், அவர் அடைக்கப்பட்டிருக்கும் சிறையின் அறை வாசலில் ஒட்டப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி சவுக்கு சங்கருக்கு முதற்கட்டமாக Show cause நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனையடுத்து அவர் பணி நீக்கம் செய்யப்படுவார். இதனால், அவருக்கு அரசு வழங்கிவந்த பாதி சம்பளமும் இனி வர வாய்ப்பில்லை என்கிறார்கள் காவல்துறை தரப்பில்.
 

https://minnambalam.com/tamil-nadu/savukku-shankar-permanently-removed-from-government-service/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.