Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முடியாட்சிக்கு எதிராக அவுஸ்திரேலியாவின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முடியாட்சிக்கு எதிராக அவுஸ்திரேலியாவின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டம்

By RAJEEBAN

22 SEP, 2022 | 03:07 PM
image

அவுஸ்திரேலியாவின் பல நகரங்களில் முடியாட்சியை நீக்கவேண்டும் என கோரும் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

ad1bf5c2b188bbdf5f0cfa49482aeb38.jpg

இரண்டாவது எலிசபெத் மகாராணியை நினைவுகூறும் தேசிய நினைவு நிகழ்வு அவுஸ்திரேலியாவில் இடம்பெற்று சில மணித்தியாலங்களின் பின்னர் முடியாட்சியை நீக்கவேண்டும் என கோரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

பிரிஸ்பேர்ன், சிட்னி, மெல்பேர்ன் மற்றும் கான்பெரா ஆகிய நகரங்களில் முடியாட்சிக்கு எதிரானவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

a346d69691b571b953449eb777d7cbf2.jpg

சிலர் அவுஸ்திரேலிய கொடியை எரித்துள்ளனர்.

b9e8823d364e6c501374bb83244e53fc.jpg

பிரிஸ்பேர்ன் சிபிடியில் நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் உரைகளின் பின்னர் செய்திதாளொன்றை கொழுத்தி அதனை பயன்படுத்தி தேசியக்கொடிக்கு தீயிட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய தினத்தை ஒழியுங்கள் எனதெரிவிக்கும் ஆடைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிந்திருந்தனர்.

5bdff722cdb6bca64badecba8f38e25b.jpg

மன்னர் இல்லை பொலிஸ் இல்லை முதலாளித்துவாதிகள் இல்லை மாற்று சோசலிஸ்ட்கள் என்ற பதாகைகளையும் காணமுடிந்தது.

அவுஸ்திரேலியா எப்போதும் அபோர்ஜினிய மக்களின் பூமியாகவேயிருக்கும் என அவர்கள் கோசமிட்டுள்ளனர்.

இதேவேளை முடியாட்சியை ஒழிக்கவேண்டும் என்ற கோசத்துடன் சிட்னியின் நகரமண்டபத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

d9fa7218cc4a06d9b4480968f69eec06.jpg

டவுன்ஹோலின் படியிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் உரையாற்றியவேளை பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தனர்.

இறையாண்மை ஒருபோதும் கைவிடப்படவில்லை, பிரிட்டனின் ஈவிரக்கமற்ற காலனித்துவம் தொடர்கின்றது எனது மன்னரும் மகாராணியும் கறுப்பானவர்கள் போன்ற  வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் அபோர்ஜினிய மக்களின் படங்களையும் ஆர்ப்பாட்டத்தில்காணமுடிந்தது.

கடும் வெயில் ஒருநாள் பொதுவிடுமுறைக்கு மத்தியிலும் நூற்றுக்கணக்கானவர்கள் மெல்பேர்னின் சிபிடியில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

c7dd95e12e912415bc732f9eeee4f1a1.jpg

ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு தலைமை வகித்த செனெட்டர் லின்டா தனதுகையை சிவப்பு பெயின்டிற்குள் வைத்த பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்களின் முன்னிலையில் உரையாற்றுகையில் முடிக்குரியவர்களின் கரங்களில் இரத்தக்கறை என தெரிவித்தார்.

ஒவ்வொரு நாளும் எங்கள் மக்கள் இறக்கின்றனர் முடியின் கால் எங்கள் கழுத்தில் இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மண்ணின் முதல் பிரஜைகள் என்ற அடிப்படையில் நாங்கள் இங்கு போராடவந்துள்ளோம்,நாங்கள் ஒருபோதும் எங்கள் இறைமையை விட்டுக்கொடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

48c2c4eaccf4629d1c3c2ba3b30b9ce3.jpg

எரிக்கப்பட்ட அவுஸ்திரேலிய கொடியின் முன்னாள் அவுஸ்திரேலியாவின் பூர்வீககுடியை சேர்ந்த செனெட்டர் உரையாற்றியவேளை மக்கள் கைதட்டி ஆர்ப்பரித்துள்ளனர்.

உங்களிற்கு தெரியுமா உங்களிற்கு தெரியாது ஏனென்றால் ஊடகங்கள் அதனை தெரிவிப்பது இல்லை, நாங்கள் நாளாந்தம் பொலிஸாரின் பிடியில் எத்தனை உயிர்களை இழக்கின்றோம் தெரியுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

2022 இல் 20000 அபோர்ஜினிய குழந்தைகள் சிறுவர்கள் களவாடப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அவர் எங்கள் மக்கள் துயரத்தையும் இனப்படுகொலையையும் அனுபவிக்க காரணமானவருக்கு நீங்கள் அஞ்சலி செலுத்துகின்றீர்களா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். https://www.virakesari.lk/article/136195

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ஏராளன் said:

மன்னர் இல்லை பொலிஸ் இல்லை முதலாளித்துவாதிகள் இல்லை மாற்று சோசலிஸ்ட்கள் என்ற பதாகைகளையும் காணமுடிந்தது.

அவுஸ்திரேலியா எப்போதும் அபோர்ஜினிய மக்களின் பூமியாகவேயிருக்கும் என அவர்கள் கோசமிட்டுள்ளனர்.

இதேவேளை முடியாட்சியை ஒழிக்கவேண்டும் என்ற கோசத்துடன் சிட்னியின் நகரமண்டபத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

b9e8823d364e6c501374bb83244e53fc.jpg

இனி இது எல்லா முடியரசு நாடுகளுக்கும் பரவும். முடியரசு பெரிய பிரித்தானியாவுக்குள் மட்டும் கட்டிப்பிடிச்சுக்கொண்டு இருக்க வேண்டியதுதான்....🤪

சூரியன் அஸ்தமிக்காத இராச்சியத்திற்கு சூரியனே இல்லாமல் போகப்போகின்றது.😎

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் இராச விசுவாசிகளின் நிலைதான் கவலைக்கிடமானது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் கூட 32% எதிர்ப்பு தான். முதலாவது சார்ல்ஸ் மன்னர் சேட்டை தாங்காமல் தல வெட்டின பிறகு ஒழுங்கா இருக்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலிய தினம் என கொண்டாடப்படும் தினம் பூர்வீக குடிமக்களை கொன்று ஆக்கிரமிப்பின் அடையாளமாக கொண்ட்டாடப்படும் தினம்.

மேற்குலகில் இவ்வாறான ஒரு தினம் கொண்ட்டாடபடுவது ஏன் என்பது புரியவில்லை, இலங்கையில் முள்ளிவாய்கால் படுகொலையினை மேற்கொண்ட தினத்தினை சிங்களம் தமது வெற்றி தினமாக கொண்டாடுவது ஒரு பெரிய விடயமில்லை.

ஆனால் அவுஸ்ரேலியாவில் இந்த அவுஸ்ரேலிய தினம் கொண்ட்டாடப்படுவது என்பது அவுஸ்ரேலியா இலங்கைக்கு அதிக தொலைவில் இல்லை என்பதையே காட்டுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Nathamuni said:

பிரித்தானியாவில் கூட 32% எதிர்ப்பு தான். முதலாவது சார்ல்ஸ் மன்னர் சேட்டை தாங்காமல் தல வெட்டின பிறகு ஒழுங்கா இருக்கினம்.

இருக்கிற பழசுகள்(பழமைவாதிகள்) போய்ச்சேர றோயல் பமிலியும் கத்தரிக்காயும் எண்ட நிலை வரலாம்.....

அது சரி உவன் ஹரியன் இப்பவும் உங்கை தான் நிக்கிறானே? 😁

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

அது சரி உவன் ஹரியன் இப்பவும் உங்கை தான் நிக்கிறானே? 😁

உங்கை தான் நிக்குதாள்....

தேப்பன் ராசா எல்லோ.... இனி.... ஒரு வீட்டையும், பதவியையும் கொடுத்து கையோட வச்சிருப்பார்....

உங்கட ஊரிலை மகிந்த எண்டொருத்தர், தன்ற இரண்டாவது மோனை, தனது ஆலோசகர் எண்டு வைச்சிருந்து, அரசாங்கத்திடம் காசு பறிச்சுக் கொண்டிருந்த விசயம் மறக்கேல்ல தானே. 😁

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

இருக்கிற பழசுகள்(பழமைவாதிகள்) போய்ச்சேர றோயல் பமிலியும் கத்தரிக்காயும் எண்ட நிலை வரலாம்.....

அது சரி உவன் ஹரியன் இப்பவும் உங்கை தான் நிக்கிறானே? 😁

 

இதுக்குத்தான் பிரெஞ்சுக்காறர்கள்  அப்பவே தலையை  வெட்டி  எடுத்து விட்டார்கள்

(இனி  தம்பி  வரப்போறார். என்ன தலையை  எடுக்கிறதிலேயே கண்ணா  இருக்கிறீர்கள்  என்று?🤣)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.