Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 15/4/2023 at 22:59, ரஞ்சித் said:

சட்டர்டே ரிவியூ

சிறு வயதில் இந்த பத்திரிகையினை எனது தந்தையார் வாசிப்பதை பார்த்திருக்கிறேன், சரியாக நினைவில்லை யாழ்ப்பாணத்தில் வெளியான ஆங்கில பத்திரிகை என நினைக்கிறேன். விக்டர் ஐவன் என்பவர் ஆசிரியராக இருந்தவர் என்பதாக ஒரு நினைவுள்ளது (ஆங்கிலம் தெரியாது எனது தந்தையாரின் மூலம் அறிந்திருப்பேன்) என நினைக்கிறேன் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவராக இருக்கலாம் (எனது கருத்து தவறாக இருக்கலாம்).

இந்ததொடரினை ஆரம்பத்தில் ஒரு பக்க சார்பான வரலாற்று ஆவணமாக இருக்கும் என்ற எண்ணத்தில் கடந்து போய்விட்டேன், தற்செயலாக வாசிக்க ஆரம்பித்த பின்னர்தான உணருக்றேன் இது ஒரு சிறப்பான ஒரு முக்கியமான தொடர் என்பதினை.

பல தெரியாத வரலாற்றினை எந்தவித சமரசமின்றி பதிந்துள்ளார் ஆசிரியர். பொதுவாக வென்றவர்களின் வரலாற்றினை கூறும் வரலாற்றில் இந்த வரலாறு மட்டும் தனித்து நிற்பதாக உணருகிறேன்.

அதற்காக மற்ற வரலாற்று ஆவணங்கள் குறைந்தவை அல்ல, அவையும் சிறந்த ஆவணங்களே.

  • Replies 619
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

பிரபாகரன் தமிழ்த் தேசிய அரசியலினைப் பின் தொடர்ந்து பல தாசாப்த்தங்களாக ஆய்வுகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டுவந்த மூத்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான த. சபாரட்ணம் அவர்கள் எமது தேசியத் தலை

ரஞ்சித்

அறிமுகம் 1950 களின் பாராளுமன்றத்தில் தமிழருக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய ஆசனங்களின் எண்ணிக்கைக்கான கோரிக்கையிலிருந்து ஆரம்பித்து இன்று நிகழ்ந்துவரும் உள்நாட்டு யுத்தம் வரையான தமிழர்களின் நீதிக்க

ரஞ்சித்

உள்நாட்டிலும், இந்தியாவிலும் தனது இனவாத நடவடிக்கைகளுக்காக எழுந்துவந்த எதிர்ப்பினைச் சமாளிப்பதற்காக இருவேறு கைங்கரியங்களை டி எஸ் சேனநாயக்கா கைக்கொண்டிருந்தார். ஒருங்கிணைந்த தமிழ் எதிர்ப்பினைச் சிதைப்பத

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, vasee said:

சிறு வயதில் இந்த பத்திரிகையினை எனது தந்தையார் வாசிப்பதை பார்த்திருக்கிறேன், சரியாக நினைவில்லை யாழ்ப்பாணத்தில் வெளியான ஆங்கில பத்திரிகை என நினைக்கிறேன். விக்டர் ஐவன் என்பவர் ஆசிரியராக இருந்தவர் என்பதாக ஒரு நினைவுள்ளது (ஆங்கிலம் தெரியாது எனது தந்தையாரின் மூலம் அறிந்திருப்பேன்) என நினைக்கிறேன் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவராக இருக்கலாம் (எனது கருத்து தவறாக இருக்கலாம்).

இந்ததொடரினை ஆரம்பத்தில் ஒரு பக்க சார்பான வரலாற்று ஆவணமாக இருக்கும் என்ற எண்ணத்தில் கடந்து போய்விட்டேன், தற்செயலாக வாசிக்க ஆரம்பித்த பின்னர்தான உணருக்றேன் இது ஒரு சிறப்பான ஒரு முக்கியமான தொடர் என்பதினை.

பல தெரியாத வரலாற்றினை எந்தவித சமரசமின்றி பதிந்துள்ளார் ஆசிரியர். பொதுவாக வென்றவர்களின் வரலாற்றினை கூறும் வரலாற்றில் இந்த வரலாறு மட்டும் தனித்து நிற்பதாக உணருகிறேன்.

அதற்காக மற்ற வரலாற்று ஆவணங்கள் குறைந்தவை அல்ல, அவையும் சிறந்த ஆவணங்களே.

முதலில் உங்களின் கருத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் வசி,

நான் இத்தொடரைத் தொடர்ந்தும் எழுத ஊக்குவித்துவரும் எனக்குத் தெரிந்த சிலரில் நீங்களும் ஒருவர். மற்றையவர்கள் ஈழப்பிரியன் அண்ணா, புங்கையூரான், இணையவன்..இப்படி ஒரு சிறிய வாசகர் வட்டம்.

சட்டர்டே ரிவியூ எனது தந்தையார் அடிக்கடி அலுவலகத்திலிருந்து எடுத்துவரும் ஒரு பத்திரிக்கை. ஆங்கிலம் என்கிறபடியினால், அது அரசு சார்புப் பத்திரிக்கையாக இருக்கும் என்றே எண்ணிவந்தேன். மேலும், போராட்ட இயக்கங்களுக்கெதிரான, அரசுக்குச் சார்பான எனது தந்தையாரின் மனோநிலையும் நான் இந்த முடிவிற்கு வர இன்னுமொரு காரணம். நீங்கள் கூறியபடி விக்டர் ஐவன் ஒரு சிங்கள இடதுசாரிப் பத்திரிக்கையாளர். தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்த புரிதலைக் கொண்டவர். 

இந்த ஆவணம் எப்படியிருக்கப்போகிறது என்பது எனக்குத் தெரியாது. தலைவர் பற்றி எழுதப்படுவதால் எதையுமே யோசிக்காது ஆரம்பித்து விட்டேன். ஆனால், தொடர்ந்தும் எழுதும்போதே, இது தலைவர் பற்றி மட்டுமல்ல, அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த ஏனைய அரசியல்த் தலைவர்கள், அன்றிருந்த சூழ்நிலைகள் , அரச அடக்குமுறை பற்றியும் பேசுகிறது. ஆகவே, தொடர்ந்தும் எழுதுகிறேன்.

உங்களின் அரசியல் ஆர்வமும், பொருளியல்த்துறையில் நீங்கள் கொண்டிருக்கும் அறிவும் அற்புதமானது. 

தொடர்ந்திருங்கள். ஒவ்வொரு வாரவிடுமுறை நாளிலும் குறைந்தது ஒரு சிறிய பகுதியையாவது எழுதிவிட முயல்கிறேன். பார்க்கலாம்.

மீண்டும் உங்களின் ஊக்கம்தரும் கருத்திற்கு நன்றி !

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, ரஞ்சித் said:

தொடர்ந்திருங்கள். ஒவ்வொரு வாரவிடுமுறை நாளிலும் குறைந்தது ஒரு சிறிய பகுதியையாவது எழுதிவிட முயல்கிறேன். பார்க்கலாம்.

உண்மையில் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது இந்த முயற்சிக்காக ஏற்படும் நேரவிரயம், சிலநேரங்களில் சங்கடமாக உணர்வதுண்டு மற்றவர்களின் நேரத்தினை நாங்கள் உப்யோகிக்கிறோம் ஆனால் பதிலுபகாரமாக எதுவும் செய்யாமலே என்பதால், அதே வேளை எங்கே பாதியில் நிறுத்திவிடுவீர்களே என்ற ஒரு பயமும் உள்ளது, பாதியில் நிறுத்தினாலும் அதனை புரிந்து கொள்வோம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, vasee said:

உண்மையில் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது இந்த முயற்சிக்காக ஏற்படும் நேரவிரயம், சிலநேரங்களில் சங்கடமாக உணர்வதுண்டு மற்றவர்களின் நேரத்தினை நாங்கள் உப்யோகிக்கிறோம் ஆனால் பதிலுபகாரமாக எதுவும் செய்யாமலே என்பதால், அதே வேளை எங்கே பாதியில் நிறுத்திவிடுவீர்களே என்ற ஒரு பயமும் உள்ளது, பாதியில் நிறுத்தினாலும் அதனை புரிந்து கொள்வோம்.

 

நிறுத்திவிடும் எண்ணமில்லை வசி.

எனக்கிருக்கும் கவலை இத்தொடரினை சபாரட்ணம் அவர்கள் முழுமையாக எழுதமுன்னரே அவரும் இறையடி சேர்ந்ததும், எமது போராட்டமும் முற்றாக அழிக்கப்பட்டதும்தான். 

அதற்காக, நடந்தவற்றை பதிவிடாமல் இருக்கமுடியுமா? ஆகவே, நிச்சயம் அவர் எழுதிச் சென்றதை இங்கு பதிவேன். நேரம் ஒரு பிரச்சினைதான், ஆனால் செய்யாமலும் இருக்க முடியவில்லை. 

மீண்டும் எனது நன்றி வசி!

  • Like 2
  • Thanks 1
Posted
20 minutes ago, ரஞ்சித் said:

முதலில் உங்களின் கருத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் வசி,

நான் இத்தொடரைத் தொடர்ந்தும் எழுத ஊக்குவித்துவரும் எனக்குத் தெரிந்த சிலரில் நீங்களும் ஒருவர். மற்றையவர்கள் ஈழப்பிரியன் அண்ணா, புங்கையூரான், இணையவன்..இப்படி ஒரு சிறிய வாசகர் வட்டம்.

சட்டர்டே ரிவியூ எனது தந்தையார் அடிக்கடி அலுவலகத்திலிருந்து எடுத்துவரும் ஒரு பத்திரிக்கை. ஆங்கிலம் என்கிறபடியினால், அது அரசு சார்புப் பத்திரிக்கையாக இருக்கும் என்றே எண்ணிவந்தேன். மேலும், போராட்ட இயக்கங்களுக்கெதிரான, அரசுக்குச் சார்பான எனது தந்தையாரின் மனோநிலையும் நான் இந்த முடிவிற்கு வர இன்னுமொரு காரணம். நீங்கள் கூறியபடி விக்டர் ஐவன் ஒரு சிங்கள இடதுசாரிப் பத்திரிக்கையாளர். தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்த புரிதலைக் கொண்டவர். 

இந்த ஆவணம் எப்படியிருக்கப்போகிறது என்பது எனக்குத் தெரியாது. தலைவர் பற்றி எழுதப்படுவதால் எதையுமே யோசிக்காது ஆரம்பித்து விட்டேன். ஆனால், தொடர்ந்தும் எழுதும்போதே, இது தலைவர் பற்றி மட்டுமல்ல, அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த ஏனைய அரசியல்த் தலைவர்கள், அன்றிருந்த சூழ்நிலைகள் , அரச அடக்குமுறை பற்றியும் பேசுகிறது. ஆகவே, தொடர்ந்தும் எழுதுகிறேன்.

உங்களின் அரசியல் ஆர்வமும், பொருளியல்த்துறையில் நீங்கள் கொண்டிருக்கும் அறிவும் அற்புதமானது. 

தொடர்ந்திருங்கள். ஒவ்வொரு வாரவிடுமுறை நாளிலும் குறைந்தது ஒரு சிறிய பகுதியையாவது எழுதிவிட முயல்கிறேன். பார்க்கலாம்.

மீண்டும் உங்களின் ஊக்கம்தரும் கருத்திற்கு நன்றி !

ரகு,

Silent reader ஆக நானும் இருக்கின்றேன்.

நேரப் பிரச்சினைகளால் பல வாரங்கள் வாசிக்காமல் ஒரே நாளில் வாசித்து விருப்பும் தெரிவித்துவிட்டு சென்று விடுவேன்.

இன்னும் மிக முக்கியமான ஒரு விடயம்

யாழை பூட்டாமல் தொடர்ந்து கொண்டு செல்ல உங்களின் இந்தப் தொடர் மற்றும் உங்கள் பதிவுகளும். நன்னியின் பதிவுகளும் மிக முக்கிய காரணங்கள்.

நன்றி

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, நிழலி said:

ரகு,

Silent reader ஆக நானும் இருக்கின்றேன்.

நேரப் பிரச்சினைகளால் பல வாரங்கள் வாசிக்காமல் ஒரே நாளில் வாசித்து விருப்பும் தெரிவித்துவிட்டு சென்று விடுவேன்.

இன்னும் மிக முக்கியமான ஒரு விடயம்

யாழை பூட்டாமல் தொடர்ந்து கொண்டு செல்ல உங்களின் இந்தப் தொடர் மற்றும் உங்கள் பதிவுகளும். நன்னியின் பதிவுகளும் மிக முக்கிய காரணங்கள்.

நன்றி

மன்னிக்க வேண்டும் நிழலி,

நான் அப்படிக் குறிப்பிட்டிருக்கக் கூடாது. எனக்கு அவ்வப்போது கருத்தெழுதும் நண்பர்களைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டேன். அதற்காக ஏனையவர்களை வேண்டுமென்றே தவறவிடவில்லை. நிச்சயமாகப் பலர் வாசிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.

உங்களை எனது கருத்துப் பாதித்திருந்தால், உங்களிடமும், ஏனையவர்களிடமும் மீண்டுமொருமுறை மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

நட்புடன், ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சர்வஜன வாக்கெடுப்பு

JR-Jayewardene-and-Rohana-Wijeweera-.jpg?ssl=1

ஜெயாருடன் அமைச்சர்களும், ரோகண விஜேவீரவும்

குட்டிமணியை தனது கட்சியினூடாக பாராளுமன்ற உறுப்பினராக்குவதற்கு தாம் எடுத்த முயற்சி கடுமையான கணடங்களையும், பின்னடைவையும் சந்தித்திருந்த வேளையில், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு மேலும் சங்கடத்தை ஏற்படுத்தும் விதத்தில் இன்னுமொரு நடவடிக்கையினையும் ஜெயவர்த்தனா செய்தார். அதுதான் 1983 ஆம் ஆண்டின் மத்தியில் வரவிருந்த பாராளுமன்றத் தேரெதல்களுக்குப் பதிலாக சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றினை நடத்தப்போவதாக அவர் விடுத்த அறிவிப்பு. தனது இரண்டாவது ஜனாதிபதிக் காலத்திற்கான பதவியேற்பினை மாசி மாதம் 4 ஆம் திகதிவரை  தாமதப்படுத்தியதன் மூலம், ஜெயார் மேலும் மூன்றரை மாதங்கள் தனது முதலாவது ஜனாதிபதிக் காலத்தை நீட்டித்துக்கொண்டார். தனக்கு பாராளுமன்றத்தில் அன்றிருந்த ஐந்தில் நான்கு பெரும்பான்மையினை தனது இரண்டாவது ஜனாதிபதிப் பதவிக்காலம் முழுவதற்கும் அனுபவிக்க அவர் விரும்பினார்.

அநுராதபுரத்தில் ஜனாதிபதித் தேர்தல்ப் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவேளை ஜெயவர்த்தன, தனது திட்டம்பற்றி முதன்முதலாக சில தகவல்களை வெளியிட்டார்.

"இனிவரும் பத்தாண்டுகளுக்கான இலங்கையின் வாக்காளர் வரைபடத்தினை நான் வெளியிட விரும்புகிறேன்" என்று ஜெயார் கூறியபோது பலருக்கும் அது புரிந்திருக்கவில்லை. ஆனால், இப்படிக் கூறியதன் மூலம் தான் அனுபவித்துவந்த பாராளுமன்றம் ஊடான பலத்தினை அவர் இன்னும் ஆறு வருடங்களுக்கு நீட்டிக்க விரும்பியிருந்தார் என்பதை அவருடன் இருந்த வெகு சிலரே உணர்ந்திருந்தனர்.

தான் இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டு மூன்று நாட்களின் பின்னர் தனது திட்டத்தினை நடைமுறைப்படுத்தினார் ஜெயார். வழமைபோல தனக்கு விசுவாசமான அமைச்சர்களில் ஒருவரைக் கொண்டு இதனை அவர் ஆரம்பித்து வைத்தார். இம்முறை அவர் அனுப்பிய ஆள், பிரதமர் ரணசிங்க பிரேமதாசா ஆவார். ஜெயாரின் கட்டளைப்படி பாராளுமன்றத்தில் பேசிய பிரேமதாசா, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தேதி குறிப்பிடாத இராஜினாமாக் கடிதங்களை உடனடியாக ஜனாதிபதி ஜெயவர்த்தனவிடம் கையளிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதற்கு பாராளுமன்றத்தின் தொடர்ச்சியான ஆதரவு தமக்கு வேண்டும் என்பதால், நடைமுறையில் உள்ள பாராளுமன்றம் மேலும் ஆறு வருடங்களுக்கு நீட்டிக்கப்படுவதற்கு மக்கள் ஆணையொன்று கேட்கப்படும் என்றும் பிரேமதாசா அறிவித்தார்.

பிரேமதாசவின் ஆலோசனைகளை அன்று பின்னேரமே ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு முழுமனதாக ஏற்றுக்கொண்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழு பிரேமதாசாவின் கோரிக்கையினை முற்றாக ஏற்றுக்கொண்டு தமது திகதியிடப்படாத இராஜினாமக் கடிதங்களை கையளிக்க ஒத்துக்கொண்டதுடன், சர்வஜன வாக்கெடுப்பொன்றின்மூலம் நடப்புப் பாராளுமன்றத்தினை மேலும் ஆறு வருடங்களுக்கு நீட்டிப்பதையும் ஏற்றுக்கொண்டனர்.

பாராளுமன்றக் குழுவினருடன் பேசிய ஜெயார், திகதியிடப்படாத இராஜினாமாக் கடிதங்கள் தேவையேற்படும்போது பின்னொரு காலத்தில் பாவிக்கப்படும் என்று கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் திகதியிடப்படாத கடிதங்கள் பாதுகாப்பாக பெட்டகம் ஒன்றில் பூட்டி வைக்கப்பட்டதுடன், இவற்றின்மூலம் பாராளுமன்றத்தின் ஐந்தில் நான்கு பெரும்பான்மையினை மேலும் 6 வருடங்களுக்கு நீட்டிப்பதற்கான ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் பூரண ஆதரவினை உறுதிப்படுத்திக் கொண்டதுடன் , அவர்கள் மீதான முற்றான அதிகாரத்தையும் ஜெயார் நிலைநாட்டிக்கொண்டார்.

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொடருங்கள் ரகு

முழுமையாக  வாசிக்காவிட்டாலும்

தொடர்ந்து உங்களை  ஊக்குவிக்காவிட்டாலும்

நெஞ்சில்  என்றும் உங்களை நிறுத்தி இருக்கிறது  இத்தொடரும் அதற்கு  நீங்கள் தரும்  நேரமும்

வாழ்க  நலமுடன்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாராளுமன்றத்தை நீட்டிக்க ஜெயார் தீட்டிய சதி

Morgan%20Chua%201982.gif

அடுத்தபடியாக, தனது திட்டத்தை மக்களை ஏற்றுக்கொள்ளவைக்கும்  நடவடிக்கைகளை ஆரம்பித்தார் ஜெயார். அரச ஊடகங்களான லேக் ஹவுஸ் பத்திரிக்கைகள், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ரூபவாகினி தொலைக்காட்சி, சுயாதீன தொலைக்காட்சிச் சேவை ஆகியன ஜெயாரின் இத் திட்டத்திற்காக செயலில் இறக்கப்பட்டன. கார்த்திகை 2 ஆம் திகதி அவற்றிற்கு விடுக்கப்பட்ட அறிவுருத்தலின்படி மறுநாள் அரசால் வெளியிடப்படவிருக்கும் அறிவிப்புக்களுக்கு இவ்வூடகங்களின் நிகழ்ச்சி நிரலில் அதிமுக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்படவேண்டும் என்று கூறப்பட்டது. கூறப்பட்டதன்படி, கார்த்திகை 3 ஆம் திகதி இந்த ஊடகங்களில் அதிர்ச்சிதரும் செய்தியொன்று வெளியானது. அந்த அறிவித்தல் ஜனாதிபதி ஜெயாரின் கையொப்பத்தோடு வெளிவந்திருந்தது.

"1982 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 21 ஆம் திகதி எனக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களின்படி சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் தலைமை தாங்கியவர்களும், அக்கட்சியின் நிர்வாகக் குழுவின் உறுப்பினர்களுமான சிலர் என்னையும், அமைச்சர்கள் சிலரையும் மற்றும் திரு அநுர பண்டாரநாயக்க, பாதுகாப்புப் படைகளில் தலைமை நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளைப் படுகொலை செய்யவும், திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவை சிறைப்பிடிக்கவும் திட்டம் தீட்டியிருப்பது தெரியவந்திருக்கிறது. அதாவது, இவர்களின் திட்டம் வெற்றியளிக்கும் பட்சத்தில், இராணுவ ஆட்சியொன்றை நாட்டில் ஏற்படுத்தி, தமது தேர்தல் பிரச்சார மேடைகளில் கூறியவாறு அரசியலமைப்பை முற்றாக நிராகரித்துவிடவும் இவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள்".

"இந்தக் கயவர்களின் முயற்சி கைகூடுவதனை அனுமதிப்பதா அல்லது எனக்கு மக்கள் வழங்கியிருக்கும் ஜனாதிபதி எனும் அதிகாரத்துடன், பாராளுமன்றத்தைத் தொடர்ந்து நடத்திச்சென்று, மக்களுக்கான நற்திட்டங்களை தொடர்வதற்கான மக்கள் ஆணையினை பெற்றுக்கொள்வதா என்பதுபற்றி  தீர்மானம் எடுக்கவேண்டிய நிலையில் நான் இருக்கிறேன். இக்கயவர்களை நான் பாராளுமன்றத்தில் நுழைய அனுமதித்தால், நடைமுறையில் இருக்கும் ஜனநாயக விழுமியங்களை இவர்கள் அழித்துவிட முயல்வதோடு, எதிர்வரும் பொதுத் தேர்தலில் நக்சலைட்டுக்கள் பாணியிலான அரசாங்கத்தையும் இவர்கள் உருவாக்கி விடுவார்கள்".

"மேலும், ஜனநாயக வழிகளில் தொழிற்பட விரும்பும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் கட்சிக்குள் தமது அதிகாரத்தை மீளவும் நிலைநாட்டுவதற்கான கால அவகாசமும் அவர்களுக்கு வழங்கப்படவேண்டும் என்றும் நான் கருதுகிறேன்"

"ஆனால், நான் இன்று பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு பொதுத் தேர்தல் ஒன்றிற்குச் செல்லுமிடத்து, கடந்த ஐப்பசி 20 ஆம் திகதி நிலவரப்படி எனது கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி 196 ஆசனங்களில்  120 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும். சிறிலங்கா சுதந்திரக் கட்சி 68 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும். அது எனக்கு ஒரு பிரச்சினையல்ல. ஆனால், எதிர்க்கட்சி ஒரு ஜனநாயகவிரோத, வன்முறையினை விரும்பும் நக்சலைட் அமைப்பாக இருப்பதை நான்விரும்பவில்லை. ஆனால், ஐப்பசி 29 இல் இருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அவ்வாறான வன்முறைவிரும்பும் ஜனநாயக விரோத அமைப்பாகவே இருந்தது. ஆகவேதான், பொதுதேர்தல் ஒன்றினை நடத்தி, வன்முறையாளர்களை பாராளுமன்றத்திற்குள் அனுமதிப்பதைக் காட்டிலும், சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின்மூலம் நடப்புப் பாராளுமன்றத்தைத் தொடரலாம் என்கிற முடிவிற்கு நான் வந்திருக்கிறேன்என்று ஜெயாரின் அறிவிப்பு வெளியாகியிருந்தது.

நான் பணிபுரிந்த டெய்லி நியூஸ் பத்திரிக்கையும், ஏனைய லேக் ஹவுஸ் பத்திரிக்கைகளான தினமின, தினகரன் ஆகிய பத்திரிக்கைகளும் இந்த நக்சலைட் சதிபற்றி பிரச்சாரப்படுத்தி எழுதியதுடன், அச்செய்தினுள் சூட்சுமமான முறையில் சர்வஜன வாக்கெடுப்பிற்கான அவசியத்தையும் புகுத்தி செய்தி வெளியிட்டிருந்தன. டெய்லி நியூஸ் பத்திரிக்கை, "ஜனாதிபதியைக் கொல்லும் நக்சலைட் சதி முறியடிக்கப்பட்டது" என்று தலைப்பிட்டிருந்தது.

 

Hector Kobbekaduwa.jpg

ஹெக்டர் கொப்பேக்கடுவ 1982

குற்றவியல் விசாரணைத் திணைக்களம் இந்த நக்சலைட் சதிபற்றி விசாரிக்க அழைக்கப்பட்டது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்குத் தலைமை தாங்கியிருந்த பிரபல சிங்கள திரைப்பட நடிகரும், சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் கணவருமான  விஜய குமாரதுங்கவும் இன்னும் சிலரும் கைதுசெய்யப்பட்டனர். சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஹெக்டர் கொப்பேக்கடுவவும் விசாரணைக்கு உடபடுத்தப்பட்டார். 

image_c30d2f83f0.jpg

விஜய குமாரதுங்க

"கிழட்டு நரியொன்று தன்னையும் தனது கொலைகாரக் கூட்டத்தையும் தனது அரசியல் எதிரிகள் கொல்லத் திட்டமிடுவதாக தானே ஒரு சதியைத் திட்டமிட்டு அரங்கேற்றி வந்ததாம்" என்கிற வகையில் ஜெயாரின் பித்தலாட்டங்கள் குறித்து வதந்திகளும், நகைச்சுவைக் கதைகளும் கொழும்பின் அரசியல் வட்டாரங்களில் பரவி வந்தன. தனது சதிக் கோட்பாட்டை உண்மையென்று நிரூபிப்பதற்கு எதிர்க்கட்சியின் தலைமைப்பீடத்தின் சில பெயர்களையும் ஜெயார் வெளியிட்டார். மேலும், எதிர்கட்சியை வழிநடத்திய மேன்மைதங்கிய பெண்மணியும் கைதுசெய்யப்படவேண்டும் என்று அவர் கூறினார். தான் திட்டமிட்டபடியே சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் பாராளுமன்றத்தை இன்னும் 6 வருடங்களுக்கு நீட்டிப்பது உறுதிப்படுத்தப்படும்வரை எதிர்க்கட்சி மீதான கைதுகளையும், விசாரணைகளையும் ஜெயார் தொடர்ச்சியாக நடத்தி வந்தார்.

கொழும்பு அரசியலின் நகைச்சுவைகளுக்கு அப்பால், விஜய குமாரதுங்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்தும் ஜெயாரின் சூழ்ச்சியைத் தொடர்ச்சியாக எதிர்த்து வந்தார். ஆகவே அவரையும், அவர் சார்ந்தவர்களையும் கைதுசெய்து அடைத்துவைக்கவேண்டிய தேவை ஜெயாருக்கு இருந்தது. சுதந்திரக் கட்சியின் தலைமைச் செயலகம் கடுமையான தேடுதலுக்கு உட்படுத்தப்பட்டதுடன், அங்கிருந்த மாவட்ட மற்றும் தேர்தல் ஒருங்கிணைப்பாளர்களின் பெயர்ப் பட்டியலும் கைப்பற்றப்பட்டது. இவர்களும் கொலைச்சதி பற்றிக் கடுமையாக விசாரிக்கப்பட்டு வந்தனர். ஆனால், தேர்தல் நாள் கடந்து சென்றவுடன், இவர்கள் அனைவர் மீதிருந்த  விசாரணைகளையும் பொலீஸார் நிபந்தனையின்றி கைவிட்டுச் சென்றனர்.

  • Like 2
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பழிவாங்கும் குணம் கொண்ட கிழட்டு நரி ஜெயார்

Cartoon on JR Jayawardene Tamils Hindustan Times April 7, 1984

ஜனாதிபதிப் பதவியிலிருந்து விலகி பல வருடங்களுக்குப் பின்னர் 1995 ஆம் ஆண்டு சண்டே டைம்ஸ் பத்திரிக்கையாளர் ரொஷான் பீரீசுடன் பேசும்போது ஜெயார், "சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது" என்பதைக் காட்டவே விஜய குமாரதுங்க கைதுசெய்யப்பட்டதாகக் கூறினார். "எனது மகனை சிறிமாவோ பண்டாரநாயக்கா கைதுசெய்து, சிறையில் அடைத்து வைத்ததுபற்றி நான் ஒருபோதும் பேசியது கிடையாது" என்று கூறினார். அவரது மகன் ரவி ஜெயவர்த்தன மக்கள் விடுதலை முன்னணியினரின் 1971 ஆம் ஆண்டுக் கலகத்தின்போது சிறிமாவினால் கைதுசெய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

z_p02-Remembering.jpg

80 களில் தமிழருக்கெதிரான இனவழிப்பில் ஈடுபட்ட ஜெயாரின் ஒரே புத்திரன் - ரவி ஜெயவர்த்தன
 

ஆனால், ஜெயார் தனது மகனின் கைதுபற்றி அவ்வப்போது பேசியே வந்திருக்கிறார். சிறிமாவின் சிவில் உரிமைகளைப் பறித்து, அவரது அரசியல் எதிர்காலத்தை ஜெயார் அழித்திருந்த நிலையில், அவரைச் சந்திக்கச் சென்றிருந்த அமரபுர நிக்காய பீடத்தின் பெளத்த பிக்குகளின் தலைவரான கொஸ்கொட தர்மவன்சவிடமும் இன்னும் சில பெளத்த பிக்குகளிடமும் பேசிய ஜெயவர்த்தன தனது ஒரே மகனை 1971 ஆம் ஆண்டு கைதுசெய்து சிறையிலடைத்த சிறிமா, தகரக் கோப்பையில் உணவு போட்டார் என்று வன்மத்துடன் கூறியிருந்தார். அப்படியானால், உங்களின் மகனின் கைதுக்காகவா நீங்கள் இன்று சிறிமாவைப் பழிவாங்குகிறீர்கள் என்று பிக்குகள் அவரிடம் வினவியபோது, ஜெயார் பதிலளிக்க மறுத்துவிட்டார். மேலும், சிறிமாவின் மீதான கடும்போக்கைக் கைவிடுமாறு பிக்குகள் முன்வைத்த வேண்டுகோளினையும் ஜெயார் முற்றாக நிராகரித்து விட்டார்.

விஜய குமாரதுங்கவின் கைது கூட தனது மகனின் கைதிற்கான பழிவாங்கலாகவே ஜெயாரினால் செய்யப்பட்டது.

No photo description available.

சர்வஜன வாக்கெடுப்பினை நடத்துவதற்காக கார்த்திகை 2 ஆம் திகதி அரசியலமைப்பில் கொண்டுவரப்பட்ட நான்காவது திருத்தத்தினை பீலிக்ஸ் ஆர் பண்டாரநாயக்கவும், சி வி விவேகானந்தனும் உச்ச நீதிமன்றத்தில் அதன் நியாயத்தன்மை குறித்து கேள்வியெழுப்பியிருந்தனர். அரச தலைமை வழக்கறிஞர் இந்தத் திருத்தத்தை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் நிறைவேற்றுவதாகவும், சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதாகவும் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்தார். ஏழு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற குழு, 4 இற்கு 3 என்கிற ரீதியில் புதிய திருத்தம்பற்றியோ அல்லது சர்வஜன வாக்கெடுப்புப் பற்றியோ தீர்ப்பளிப்பதற்கு ஏதுமில்லை என்று கைவிரித்து விட்டது.

V N Navaratnam.jpg

வி என் நவரட்ணம்

 1982 ஆம் ஆண்டு கார்த்திகை 4 ஆம் திகதி கூடிய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு சர்வஜன வாக்கெடுப்பினை எதிர்ப்பதென்று முடிவெடுத்தது. சாவகச்சேரி பாராளுமன்ற உறுப்பினர் வி. என். நவரட்ணம் தலைமையிலான உறுப்பினர்கள் இந்த முடிவில் தீர்க்கமாக நின்றனர். தனது தொகுதி வாக்களர்களின் ஆதரவின் மூலம் பதவிக்கு வந்த தான், தனது 6 வருட பதவிக் காலம் முடிவுற்றதும் தனது பதவியினை இராஜினாமாச் செய்யப்போவதாக அறிவித்தார். "தொடர்ந்தும் கதிரையைப் பிடித்துக் கொண்டு தொங்குவது மக்களை ஏமாற்றும் செயலாகும்" என்று அவர் கூறினார். அக்குழுவில் இருந்த சிலர், முன்னணி, எதிர்க்கட்சியுடன் இணைந்து சர்வஜன வாக்கெடுப்பினை எதிர்க்கவேண்டும் என்று விரும்பினர். ஆனால், அமிர்தலிங்கம் ஜெயவர்த்தனவுடன் இதுகுறித்து ஏற்கனவே ஒரு இணக்கப்பட்டிற்கு வந்திருந்ததுடன், ஜனாதிபதித் தேர்தலில் ஜெயாருக்கு வழங்கிய வாக்குறுதியினை நிறைவேற்றுவதில்  உறுதியாக இருந்தார். ஆகவே, முன்னணியினரின் பாராளுமன்றக் குழு ஒரு சமரசத்திற்கு வந்தது. அதாவது, சர்வஜன வாக்கெடுப்பிற்கு தமது எதிர்ப்பினைத் தெரிவிக்கும் அதேவேளை, எதிர்க்கட்சியுடன் சேர்வதில்லை என்பதே அது. மேலும், 1983 ஆம் ஆண்டு ஆவணியில் முடிவிற்கு வரும் நடப்பு பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் பதவியிலிருந்து தாம் இராஜினாமாச் செய்வதாகவும் தீர்மானித்தார்கள். மேலும், தமது முடிவினை உறுதிப்படுத்தும் முகமாக அனைத்து முன்னணி உறுப்பினர்களும் தமது இராஜினாமாக் கடிதங்களை அமிர்தலிங்கத்திடம் கையளித்திருந்தனர். அதேவேளை, சர்வஜன வாக்கெடுப்பிற்க்நெதிராக முன்னணி கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபடாது எனும் உறுதியையும் அமிர்தலிங்கத்திடமிருந்து ஜெயார் பெற்றுக்கொண்டார். ஜெயாருக்கு தான் வழங்கிய வாக்குறுதியின்படி அமிர்தலிங்கமும் அவரது கட்சியும் நடந்துகொண்டனர். அதன் மூலம் வடக்குக் கிழக்கிற்கு வெளியே இருந்த தமிழர்களின் ஆதரவு ஜெயாருக்குக் கிடைக்க ஏதுவாகியது.

சர்வஜன வாக்கெடுப்பினை நடத்துவது தொடர்பாக பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் கலந்துகொண்ட அமிர்தலிங்கம், அதற்கெதிரான தமது கட்சியின் நிலைப்பாட்டினைத் தெரிவித்தார். ஆறு வருடங்களுக்கு மட்டுமே மக்கள் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 12 வருடங்களுக்குப் பதவியில் நீடிப்பது மனச்சாட்சிக்கு விரோதமானது என்று அவர் கூறினார். மேலும், தமது பாராளுமன்றக் குழுவின் தீர்மானத்தின்படி தனது கட்சியின் உறுப்பினர்கள் பாராளுமன்றத்தின் முதலாவது ஆயுட்காலம் முடிவடையும்போது ராஜினாமாச் செய்வார்கள் என்றும் அறிவித்தார். ஆனால், பாராளுமன்ற வாக்கெடுப்பின்போது அவரும், அவரது கட்சியினரும் பாராளுமன்றத்தில் சமூகமளித்திருக்கவில்லை.

பிரேமதாசவினால் கொண்டுவரப்பட்ட பாராளுமன்றத்தை நீட்டிக்கும் பிரேரணை 142 வாக்குகளுக்கு 4 வாக்குகள் என்கிற அடிப்படையில் பாராளுமன்றத்தால் 1982 ஆம் ஆண்டு, கார்த்திகை 5 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அநுரா பண்டாரநாயக்க, ஆனந்த திசாநாயக்க, லக்ஷ்மன் ஜயக்கொடி மற்றும் கம்மியூனிஸ்ட் கட்சியின் சரத் முத்துவெட்டுவே கம ஆகியோர் பிரேரணைக்கெதிராக வாக்களித்திருந்தனர்.

சர்வஜன வாக்கெடுப்பிற்கான திகதி மார்கழி 22 ஆம் நாளுக்குத் தீர்மானிக்கப்பட்டது. வாக்களர்களுக்கு முன்னால் வைக்கப்பட்ட கேள்விகளாவன : நடப்பிலிருக்கும் பாராளுமன்றத்தை இன்னும் ஆறுவருடங்களுக்கு, அதாவது 1989 ஆம் ஆண்டு ஆவணி 4 ஆம் திகதிவரை  நீட்டிக்கவும், அத்திகதிக்குப் பின்னர் பாராளுமன்றத்தைக் கலைத்துவிடவும் அனுமதி தருகிறீர்களா?

சர்வஜன வாக்கெடுப்பில் வாக்களிப்பதுகுறித்து வாக்காளர்களுக்கு அறிவுருத்தல் விடுக்கப்பட்டது. அதன்படி, பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை இன்னும் 6 வருடங்களுக்கு நீட்டிக்க விரும்புவோர் விளக்குச் சின்னத்திற்கும், விரும்பாதோர் பானை சின்னத்திற்கும் புள்ளடியிடுமாறு கோரப்பட்டனர்.

விளக்குச் சின்னத்திற்கு ஆதரவாக ஜெயவர்த்தன பிரச்சாரம் செய்த அதேவேளை, சிறிமா தலைமையிலான எதிர்க்கட்சியினர் பானைச் சின்னத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துவந்தனர்.

சர்வஜன வாக்கெடுப்பிற்கான தனது முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தினை கார்த்திகை மூன்றாம் வாரம் கொழும்பு, கொச்சிக்கடையில் ஆரம்பித்த ஜெயவர்த்தன, சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றும் புதிய விடயம் அல்ல என்றும், இது 1978 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பிலேயே குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் கூறினார். சிறிமாவோ மக்களின் விருப்பினை அறிந்துகொள்ளாமல், பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை 1975 ஆம் ஆண்டிலிருந்து 1977 ஆம் ஆண்டுவரை நிட்டித்தது போல அல்லாமல், தான் மக்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே பாராளுமன்றத்தை நீட்டிக்க விரும்புவதாக ஜெயார் கூறினார். தனது அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்பதற்காகவே தற்போதிருக்கும் பாராளுமன்றத்தை தொடர்ந்தும் பேண தான் விரும்புவதாக அவர் கூறினார்.

சிறிமா அரசியல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்பதால், அந்த வேட்பாளர்கள் தமது தகமையினை இழப்பார்கள் என்கிற தடை இருந்தபோதும், சிறிமாவோ இப்பிரச்சாரங்களில் எதிர்க்கட்சியின் பிரதம பிரச்சாரகராகப் பங்கெடுத்தார். ஏனென்றால், இந்த சர்வஜன வாக்கெடுப்பில் வேட்பாளர்கள் என்று எவருமே இருக்கவில்லை. தொலைக்காட்சிப் பேட்டியொன்றில் பேசிய சிறிமா, "உங்களின் சிவில் உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்கிற விருப்பமிருந்தால், நீங்கள் பானைச் சின்னத்திற்கே உங்களின் வாக்கினை வழங்க வேண்டும். எதிர்காலச் சந்ததியினரின் நல்வாழ்விற்காக நீங்கள் பானைச் சின்னத்திற்கே வக்களிக்க வேண்டும் என்று நான் கேட்கிறேன். 1931 ஆம் ஆண்டிலிருந்து நாம் பேணிவரும் நடைமுறையினை இதன் மூலம் மட்டுமே நாம் பேணைக்காக்க முடியும்" என்று கூறினார்.

"பானைக்கு வாக்களிப்பதென்பது எந்தவொரு அரசியற் கட்சிக்கும் ஆதரவாகவோ அல்லத் எதிராகவோ வாக்களிப்பது என்று அர்த்தமாகிவிடாது. பானைக்கு வக்களிப்பதன் மூலம் 1931 ஆம் ஆண்டிலிருந்து பாதுகாக்கப்பட்டு வரும் நடைமுறையான பாராளுமன்ற உறுப்பினர்களை மக்கள் தெரிவுசெய்யும் உரிமையினை காப்பாற்றிக்கொள்வதாகும்" என்றும் அவர் கூறினார்.

சர்வஜன வாக்கெடுப்பு நடப்பதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னதாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஆதரவாளர்களைக் கவரும் விதமான வதந்தியொன்று கொழும்பில் வேண்டுமென்றே அரசால் பரப்பப்பட்டது.

இனப்பிரச்சினைக்குத் தீர்வினை வழங்கும் முகமாக, அரசாங்கத்தில் மிக முக்கிய பொறுப்பில் அமிர்தலிங்கம் ஜெயவர்த்தனவினால் அமர்த்தப்படப் போகிறார் என்பதுதான் அந்த வதந்தி. நான் அமிர்தலிங்கத்திடம் இதுகுறித்து நேரடியாகக் கேட்டேன், "குப்பை" என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்த அமிர், அதனை முற்றாகவும் மறுக்க விரும்பவில்லை. "ஒரு வதந்தியை நான் எப்படி இல்லையென்று மறுக்க முடியும்?" என்று அவர் என்னைப்பார்த்துக் கேட்டார்.

நாடுபூராகவும் 5,768,662 வாக்காளர்கள் சர்வஜன வாக்கெடுப்பில் கலந்துகொண்டார்கள். பதிவுசெய்யப்பட்ட 8,145,015 வாக்களர்களில் இது 70.82 வீதமாகும். மொத்தமாக 3,141,223 வாக்குகள், 54.45 வீதத்தினர் பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை மேலும் 6 வருடங்களுக்கு நீட்டிக்க தமது விருப்பினைத் தெரிவித்திருந்தார்கள். 2,605,983 வாக்காளர்கள், 45.17 வீதத்தினர், பாராளுமன்ற ஆயுட்கால நீட்டிப்பிற்கு எதிராக வாக்களித்திருந்தார்கள். எதிர்க்கட்சியினர் மீதான குண்டர்களின் வன்முறைகள், அச்சுருத்தல்கள் என்பவற்றுடனும், தேர்தல் விதிமுறைகளுக்கு முரணாகவும் நடத்தப்பட்ட இந்த சர்வஜன வாக்கெடுப்பில் ஜெயவர்த்தன 535,240 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

1982 Sri Lankan national referendum - Wikipedia

கடந்த ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிடும்போது, நாடு தழுவிய ரீதியில் வக்களித்தவர்களின் எண்ணிக்கை 10 வீதத்தினால் குறைந்து காணப்பட்டது. ஆனால், யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் காட்டிய விருப்பைக் காட்டிலும் அதிக ஈடுபாட்டுடன் சர்வஜன வாக்கெடுப்பில் கலந்துகொண்டிருந்தனர். ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்திருந்த 228,613 தமிழர் வாக்களர்களுடன் ஒப்பிடும்பொழுது, சர்வஜன வாக்கெடுப்பில் 290,849 தமிழ் வாக்களர்கள் யாழ்ப்பாணத்தில் வாக்களித்திருந்தனர். இவர்களுள் 260,534 வாக்களர்கள் பாராளுமன்றத்தை நீட்டிப்பதற்கு எதிராகவே வாக்களித்தனர். 25,312 வாக்களர்கள் பாராளுமன்றம் நீட்டிக்கப்படுவதை ஆதரித்திருந்தனர். ஜனாதிபதித் தேர்தலில் ஜெயவர்த்தனவுக்கு ஆதரவாக வாக்களித்த 44,780 தமிழர்களில் 19,000 தமிழர்கள் அவருக்கெதிராக சர்வஜன வாக்கெடுப்பில் வாக்களித்திருந்தனர்.

இவ்வாறே, வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வசித்துவரும் பெரும்பாலான தமிழர்கள் பாராளுமன்றத்தை நீட்டிக்கும் ஜெயவர்த்தனவின் விருப்பிற்கு எதிராகவே வாக்களித்திருந்தனர். வன்னி மாவட்டத்தில் 48,968 வாக்களர்கள் இல்லையென்றும், 25986 வாக்களர்கள் ஆம் என்றும் வாக்களித்திருந்தனர். திருகோணமலை மாவட்டத்தில் 51,909 வாக்களர்கள் இல்லையென்றும், 39,429 வாக்களர்கள் ஆம் என்றும் வாக்களித்திருந்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 72,971 வாக்களர்கள் இல்லை என்றும், 47,482 வாக்களர்கள் ஆம் என்றும் வாக்களித்திருந்தனர். அம்பாறை மாவட்டத்தில் 91,129 வாக்களர்கள் ஆம் என்றும், 62,836 வாக்களர்கள் இல்லையென்றும் வாக்களித்திருந்தனர். தனது விருப்பிற்கெதிராக வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்று தெரிந்தபோது, இயல்பாகவே பழிவாங்கும் குணம் கொண்ட ஜெயார் தமிழர்களுக்கொரு பாடத்தைப் புகட்ட வேணடும் என்று தருணம் ஒன்றை எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்தார்.

Edited by ரஞ்சித்
  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, ரஞ்சித் said:

80 களில் தமிழருக்கெதிரான இனவழிப்பில் ஈடுபட்ட ஜெயாரின் ஒரே புத்திரன் - ரவி ஜெயவர்த்தன

முதன் முதலில் பொலிஸ் அதிரடிப்படையும் நடத்தியவனும் இவன் தான் என்று எண்ணுகின்றேன்.

11 hours ago, ரஞ்சித் said:

நான் இத்தொடரைத் தொடர்ந்தும் எழுத ஊக்குவித்துவரும் எனக்குத் தெரிந்த சிலரில் நீங்களும் ஒருவர். மற்றையவர்கள் ஈழப்பிரியன் அண்ணா, புங்கையூரான், இணையவன்..இப்படி ஒரு சிறிய வாசகர் வட்டம்.

இன்னும் நிறைய பேர் உங்கள் வாசகவட்டத்தில் இருக்கிறார்கள் ரஞ்சித் தொடர்ந்து எழுதுங்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, ஈழப்பிரியன் said:

முதன் முதலில் பொலிஸ் அதிரடிப்படையும் நடத்தியவனும் இவன் தான் என்று எண்ணுகின்றேன்.

சரியாகச் சொன்னீர்கள் அண்ணா,

இவனே தான். இங்கிலாந்து மற்றும் அமெரிக்க இராணுவ ஆலோசகர்களுடன் இணைந்து சாதாரண பொலீஸ் படையிலிருந்து காட்டுமிராண்டிகளைத் திரட்டி பயங்கரவாதத் தடுப்புப் படை என்கிற பொலீஸ் அதிரடிப்படை எனும் கொலைகாரக் கும்பலை உருவாக்கியவன் இவனே.

STF Founder Late Ravi Jayewardene attending a Passing Out Parade as the Chief Guest – 2002.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரபாகரனைச் சந்தித்த இந்திய உளவுத்துறை, ரோ

 பாண்டிபஜார் துப்பாக்கிச் சண்டை

 தன் கையில் கிடைக்கப்பெற்றிருந்த அபரிதமான அதிகார பலத்தினைக் கொண்டு தமிழ் ஆயுதப் போராட்ட அமைப்புக்களை எப்படியாவது அழித்துவிடவேண்டும் என்று ஜெயார் கங்கணம் கட்டியிருந்தார். ஆனால், இதைச் செய்த்வதற்கு அவர் பாவித்த கருவிகளான அரச பயங்கரவாதமும், மிதவாதிகளை ஓரங்கட்டும் செயற்பாடுகளும் அவரது நோக்கத்தை அடைவதில் தடைகளாக மாறியிருந்தன. பொலீஸாரும் ராணுவத்தினரும் தமிழர்மேல் மேற்கொண்டு வந்த அட்டூழியங்கள் அவர்களை அச்சப்படுத்துவதற்குப் பதிலாக தமிழர்களிடையே தைரியத்தையும், அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் மனோவலிமையினையும் ஏற்படுத்தியிருந்தன. இராணுவத்தினரினதும், பொலீஸாரினதும் செயற்பாடுகள் தமிழர்களை போராளி அமைப்புக்களை நோக்கித் தள்ளத் தொடங்கின. ஆரம்பத்தில் சிறிய உதவிகளைத் தமது போராளி அமைப்புக்களுக்குச் செய்வதில் ஆரம்பித்து, ஈற்றில் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் பாதுகாவலர்கள் எனும் நிலைக்கு  தமிழ் மக்கள் உயர்ந்தனர். 

மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு சட்டத்தின்படி வழங்கவேண்டிய அதிகாரங்களையும், நிதியையும் வழங்க மறுத்து, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரைப் பலவீனப்படுத்த ஜெயவர்தன எடுத்த முடிவும் தமிழ் மக்கள் போராளிகளை நோக்கிச் செல்வதை மேலும் ஊக்குவித்திருந்தது. மாவட்ட அபிவிருத்திச் சபைகளின் செயற்பாடுகளினூடாக  தனது அரசியல் எதிர்காலத்தைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்று எதிர்ப்பார்த்திருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு, அச்சபைகளின் செயற்பாட்டுத் தோல்வி பாரிய ஏமாற்றத்தைக் கொடுத்திருந்ததுடன், மக்களின் முன்னால் அவர்களின் நம்பகத்தன்மையினையும் கேள்விக்குள்ளாக்கியிருந்தது. அரசியலில் தமிழ் மக்கள் சார்பாக தாம் சாதித்தது எதுவுமே இல்லை எனும் கையறு நிலைக்கு முன்னணியை இச்சபைகளின் தோல்வி தள்ளிவிட்டிருந்தது. 

பொலீஸ் மற்றும் இராணுவத்தின் அழுத்தங்கள் புளொட் அமைப்பில் சில தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தது உண்மையே. அவ்வமைப்பின் மரியநாயகம், கணேசலிங்கம், ரொபேர்ட், ஞானசேகரம், அரங்கநாயகம், அரபாத் ஆகிய உறுப்பினர்கள் பொலீஸாரினால் அந்நாட்களில் கைதுசெய்யப்பட்டிருந்தனர். அன்று, புளொட் அமைப்பினைக் காட்டிலும் சிறிய அமைப்பாக விளங்கிய புலிகள், பெரும்பாலும் தமது போராளிகளைத் தக்கவைத்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.

 See the source image

தலைவருடன், யோகரத்திணம் யோகி மற்றும் பின்னாட்களில் இந்திய உளவாளியாக மாறிய மாத்தையா எனப்படும் மகேந்திரராஜா கோபாலசாமி

 தமிழ் மக்களின் கலாசாரப் பொக்கிஷமான யாழ் நூலகம் சிங்கள அரசால் எரிக்கப்பட்ட துயர நிகழ்வை, கலாசாரப் படுகொலையை  கண்ணுற்று, மிகுந்த வேதனையும், கூடவே வன்மமும் கொண்டு அங்கிருந்து இன்னும் 10 தோழர்களுடன் 1981 ஆம் ஆண்டு ஆனி 6 ஆம் திகதி தமிழ்நாடு நோக்கிப் பயணமானார் பிரபாகரன். தான் தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில் யாழ்க்குடா நாட்டில் புலிகளின் செயற்பாடுகளுக்குப் பொறுப்பாக மாத்தையா எனப்படும் மகேந்திரராஜா கோபாலசாமியை பிரபாகரன் அமர்த்திவிட்டுச் சென்றிருந்தார்.

 தனது வவுனியா முகாமில் தங்கியிருந்த உமா மகேஸ்வரன், கிளிநொச்சி வங்கிக்கொள்ளையின் பின்னர் 20 தங்க நகைகள் கொண்ட பைகளையும் எடுத்துக்கொண்டு, இன்னும் நான்கு தோழர்களுடன் 1982 ஆம் ஆண்டு மாசி மாதம் 25 ஆம் திகதி தமிழ்நாட்டிற்குத் தப்பிச் சென்றார். சென்னையில் தங்கிக்கொண்ட அவர் தமிழ்நாடு கம்மியூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய இயக்கங்களூடாக தனக்கான வலையமைப்பொன்றினையும் ஏற்படுத்திக்கொண்டார்.

தனது நெருங்கிய சகாக்களில் பலர் தன்னை விட்டுப் பிரிந்து உமா மகேஸ்வரனின் புளொட் அமைப்பில் இணைந்துகொண்டதால், பிரபாகரன் அன்று டெலோ அமைப்பினரோடு சேர்ந்தே இயங்கிவந்தார். 16 வயதில் தனது வீட்டை விட்டு வெளியேறிய பிரபாகரன், தனது வாழ்க்கையை முழுமையாகவே தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்காக அர்ப்பணித்திருந்தார். 1984 ஆம் ஆண்டு அனீதா பிரதாப்புடனுனான அவரது செவ்வியில் தன்னை விட்டு விலகிச் செல்ல பலர் எடுத்த முடிவினை "துரோகம்" என்று அவர் வர்ணித்திருந்தார். 

கேள்வி : உங்கள் வாழ்க்கையில், உங்களை அதிகம் ஏமாற்றியிருந்த விடயம் எது?

 பிரபாகரன் : "அப்படியொரு தனியான விடயத்தை என்னால் துல்லியமாகக் கூறமுடியாது. ஆனால், மிகுந்த ஏமாற்றமளித்த விடயங்களில் ஒன்று, நான் நம்பியிருந்த, எனது இலட்சியத்தின்பால் பற்றுக்கொண்டவர்களாகக் காட்டிக்கொண்ட, எனது நெருங்கிய தோழர்களில் சிலர் என்னைவிட்டுப் பிரிந்து சென்றது. ஆனால், அவர்கள் ஈற்றில் சுயநலம் மிக்க சந்தர்ப்பவாதிகள் என்று தம்மை வெளிப்படுத்திக்கொண்டார்கள்".

 

Picture of Chennai, Tamil Nadu, India

மதுரைக்குச் சென்ற பிரபாகரன் அங்கு முகாம் ஒன்றில் தங்கியிருந்தார். சென்னையின் மேற்குப்புறப் பகுதியான வளசரவாக்கத்தில் வீடொன்றினை வாடகைக்கு ஒழுங்குசெய்யுமாறு கிட்டுவையும் பொன்னம்மானையும் பிரபாகரன் கேட்டுக்கொண்டார். சில நாட்களின் பின்னர் அவ்வீட்டிலேயே அவர்கள் தங்கிக்கொண்டனர். அடேலும் பாலசிங்கமும் இதே பகுதியில்த்தான் தாம் இரண்டாவது முறை தமிழ்நாட்டிற்கு 1981 ஆம் ஆண்டு வந்தபோது தங்கியிருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. "விடுதலை வேட்கை" எனும் தனது நூலில் எழுதும் அடேல் பாலசிங்கம், கிட்டுவின் இளமைத்தனமான குறும்புகள் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். "ஒருமுறை கிட்டு பிராமணரைப் போன்று வெண்ணிற மேலாடையும் கூடவே பூணுலும் அணிந்துகொண்டார். அதே ஆடையுடன் அசைவ உணவகம் ஒன்றிற்குச் சென்ற கிட்டு, அங்கே ஆட்டுக்கறியையும், பொறித்த கோழியையும் பலரும் பார்த்திருக்க ருசித்து உண்டார். அவரைப் பார்த்துக்கொண்டிருந்த உணவக ஊழியர்களினதும், உரிமையாளரினதும் முகங்கள் அதிர்ச்சியில் உறைந்திருந்தன" என்று எழுதுகிறார்.

trying%20(10)_112712023345.jpg

புலிகளின் புகழ்பூத்த யாழ்மாவட்டத் தளபதி - கிட்டு எனப்படும் சதாசிவம் கிருஷ்ணகுமார்

புலிகளின் வளசரவாக்கம் வீட்டில் தங்கியிருந்த போராளிகள் பற்றிய பல சுவாரசியமான விடயங்களை அடேல் எழுதியிருந்தார். 1976 ஆம் ஆண்டு, பிரபாகரன் புலிகள் அமைப்பை உருவாக்கிய காலத்தில் அவருடன் இணைந்துகொண்டவர், இன்று வன்னியில் கல்விக்குப் பொறுப்பாக இருக்கும் பேபி சுப்பிரமணியம். மிகவும் மென்மையானவராகவும், மற்றையவர்களைப் பற்றி புரணி கூறும் தன்மையற்றவராகவும், அதிகாரப் போட்டியில் நாட்டமில்லாதவருமாக விளங்கிய பேபி சுப்பிரமணியம், மிகுந்த அறிவாற்றலைக் கொண்டிருந்தார். புலிகளின் விடுதலைப் போராட்டம் பற்றியும் ஏனைய போராட்டங்கள் பற்றியும் பல தகவல்களை தன்னிடம் கொண்டிருந்த அவரை நடமாடும் தகவற் களஞ்சியம் என்றே எல்லோரும் அழைத்து வந்தனர்.ஒரு பழைய துணிப்பையினை தன்னோடு எப்போதும் காவித்திரியும் அவர், அதற்குள் பத்திரிக்கைகள் புத்தகங்கள் என்று போராட்ட விடயங்கள் தொடர்பான தகவல்களைக் கொண்டு திரிந்தார். சைவ உணவுகளை மட்டுமே உண்டுவந்த அவர், சிலவேளைகளில் சோற்றுடன் ஐந்து அல்லது ஆறு மோர் மிளகாய்களைக் கடித்துக்கொண்டே தனது உணவை முடித்துக்கொள்வார் என்று அடேல் எழுதுகிறார். 

பிரபாகரனின் மிகவும் நெருக்கத்திற்குரியவராக இருந்த இன்னொருவர் நேசன் எனப்படும் ரவீந்திரன் ரவிதாஸ். தனது மருத்துவக் கல்வியைக் கைவிட்டு விட்டு பிரபாகரனுடன் இணைந்துகொண்டவர் அவர். ஆனால், பிற்காலத்தில் இயக்கத்திலிருந்து விலகிச் சென்று தற்போது வெளிநாடொன்றில் வசித்து வருகிறார். திடகாத்திரமான உடலைக் கொண்ட அவர், தினமும் உடற்பயிற்சிக்காக அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து ஒவ்வொரு நாள் காலையுலும் ஓடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். 

பிரபாகரனின் பாதுகாப்பிற்குப் பொறுப்பாகவிருந்த ரகுவிற்கு ஷங்கர் உதவிவந்தார். ரகுவே பிரபாகரனின் தலைமை மெய்ப்பாதுகாப்பாளராக பல்லாண்டுகள் செயலாற்றி வந்தார். ஆனால், இயக்க விதிகளை மீறியதற்காக பின்னர் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

 வளசரவாக்கம் வீட்டில் தங்கியிருந்த புலிகளின் உறுப்பினர்களில் பண்டிதரும் ஒருவர். கடுமையான ஆஸ்த்த்மா நோயினால் பாதிக்கப்பட்டபோதிலும், தனது அரசியல் நடவடிக்கைகளில் அவரது உடல்நிலை தாக்கம் செலுத்துவதை அவர் ஒருபோதும் அனுமதித்ததில்லை. புலிகளின் அச்சுவேலி முகாமை இராணுவம் 1985 ஆம் ஆண்டு தை மாதம் சுற்றிவளைத்தபோது, இராணுவத்துடனான மோதலில் பண்டிதர் வீரச்சாவடைந்தார்.

Cap-Pandithar.jpg

 

பின்னாட்களில் டெலோ இயக்கத்தின் தலைவராக வந்த சிறி சபாரட்ணமும் இதே வளசரவாக்கம் வீட்டிலேயே தங்கியிருந்தார். புலிகளுக்கும் டெலோ அமைப்பிற்கும் இடையே அன்று ஏற்பட்டிருந்த இணக்கப்பட்டிற்கு அமைய சிறி அங்கு தங்கினார். 

இவ்வீட்டிற்கு பிரபாகரன் அடிக்கடி வந்துசெல்வார். தமிழ்நாடு காமராஜர் காங்கிரஸ் என்கிற அரசியற் கட்சியின் தலைவரான நெடுமாறனின் இரு சட்டசபை உறுப்பினர்களுக்கென்று அரசால் ஒதுக்கப்பட்ட விடுதிகளில் ஒன்றிலேயே பிரபாகரன் தங்கியிருந்தார்.

Untitled-design-2023-02-13T175111.831.png

 

 

 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

டெலோ அமைப்பிடமிருந்து விலகி தனித்து இயங்கத் தீர்மானித்த பிரபாகரன்

main-qimg-ec3d68a6483e0a532b28aead6083e9bd-lq

கருனாநிதியுடன் கலந்துரையாடும் சிறி, பாலகுமார் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் குழுவினர்

புலிகளையும் டெலோ அமைப்பையும் இணைத்து ஒரு இயக்கத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் அப்போது நடந்துகொண்டிருந்தன. தங்கத்துரையும், குட்டிமணியும் கைதுசெய்யப்பட்டதன் பின்னர் டெலோ அமைப்பின் தலைவராக வந்திருந்த சிறி சபாரட்ணம், இந்த ஒன்றாக்கும் விடயத்தில் அதிக அக்கறை காட்டினார். இரு அமைப்புக்களினதும் வளங்களையும், திறமைகளையும் சேர்ப்பதன் மூலம் விடுதலைப் போராட்டத்தினை மேலும் பலப்படுத்தவும் விரிவாக்கவும் முடியும் என்று அவர் கூறினார். ஆனால், புலிகளின் மூத்த உறுப்பினர்களால் இரு விடயங்கள் முன்வைக்கப்பட்டன. முதலாவது, புலிகள் இயக்கத்தின் வரலாற்றை அவர்கள் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. இரண்டாவது, புலிகள் இயக்கம் தனதே என்று ஒருமுறை உரிமை கோரிய உமா மகேஸ்வரன் இந்த ஒருங்கிணைப்பு விடயம் தெரியவருமிடத்து, மீண்டும் தனது உரிமை கோரலை கொண்டுவரலாம் என்று அவர்கள் கூறினர்.

புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினர்களின் ஆட்சேபணைகள் சிறி சபாரட்ணத்தை எரிச்சலடைய வைத்திருந்தன. ஆனாலும், அமைப்புக்கள் இரண்டையும் இணைக்கும் தனது விருப்பத்தை அபோதைக்குத் தள்ளிப்போட அவர் இணங்கினார். ஆனால், அந்த இணைக்கும் செயற்பாடு இறுதிவரை நடைபெறாமலேயே போய்விட்டது. ஏனென்றால், 1982 ஆம் ஆண்டி நடுப்பகுதியில் டெலோ அமைப்புடன் சேர்ந்து இயங்கும் தனது நடைமுறையைக் கைவிட்ட பிரபாகரன் தனித்து இயங்க முடிவுசெய்தார்.

பிரபாகரனின் இந்த முடிவிற்கான காரணங்களை பேபி சுப்பிரமணியம் பின்வருமாறு விளக்கியிருந்தார். ஒவ்வொரு விடயம் தொடர்பாகவும் தொடர்ச்சியான விதண்டாவாதங்களை நடத்துவோர் குறித்து போதிய அனுபவங்களைப் பிரபாகரன் கொண்டிருந்தார். செயலில் மட்டுமே நம்பிக்கை கொண்டிருந்த பிரபாகரன் விதண்டாவாதம் நடத்துவோரால் செயல்கள் தாமதிக்கப்படுவதோடு சிலவேளைகளில் அவற்றுக்கான சாத்தியங்களே இல்லாமலாக்கப்பட்டுவிடுவதாக உணர்ந்தார். ஆகவேதான் ஒரு அமைப்பிற்கு ஒருவரே தலைவராக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். பல விடுதலைப் போராட்டங்களை கற்று உணர்ந்துகொண்ட அவருக்கு அதுவே சரியான முடிவாகவும் தெரிந்தது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் வெற்றிபெறவேண்டும் என்பதே அவரது இலட்சியமாக இருந்தது. ஆகவே, இந்த இலட்சியத்தை அடைவதற்கு தனது தலைமையின் கீழ் விசுவாசமான விடுதலைப் போராட்ட அமைப்பொன்று இருக்கவேண்டும் என்று அவர் விரும்பினார்.

ஒவ்வொரு நாள் அதிகாலையிலும் எழுந்து உடற்பயிற்சிகளில் ஈடுபடவேண்டும் என்று தனது போராளிகளைப் பயிற்றுவித்திருந்தார் பிரபாகரன். அவர்களுக்கான காலையுணவு காலை 8 மணிக்கு வழங்கப்பட்டது. பெரும்பாலும் ரொட்டி மற்றும் தோசையே உணவாகப் பரிமாறப்பட்டது. அவ்வபோது இடியப்பமும் வழங்கப்பட்டது. தேங்காய்ச் சம்பல் அல்லது பருப்புக் கறியுடன் அவர்கள் தமது காலையுணவை உட்கொண்டார்கள். காலை 9 மணியளவில் போராளிகளுடன் பயிற்சிகளில் ஈடுபட்டுவிட்டு பாலசிங்கமும், அடேலும், பண்டிதரும் இன்னும் சிலரும் பிரதான வீதியில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருந்த பஸ் தரிப்பிடத்திற்குச் சென்றுவிடுவார்கள். அங்குவரும் அரச பேரூந்துகளில் ஏறி போரூர் சந்தைக்குச் சென்று, அன்றைக்குத் தேவையான உணவுப்பொருட்கள், மரக்கறி வகைகள், மீன் ஆகியவற்றை வாங்குவது அவர்களுக்கிருந்த பணி. பேரம்பேசலில் ஆர்வம் கொண்ட பாலசிங்கமே பொருட்களை விலை பேசுவார். அவர் எப்போதும் நல்ல மீன்களை மலிவான விலைக்கு வாங்கிவிடுவதாக அடேல் குறிப்பிடுகிறார்.

பின்னர், அவர்களுக்கான சோறும் கறிகளும் சமைக்கப்படும். அனைவரும் சமைக்கவேண்டும் என்பது பிரபாகரனின் கட்டளை. ஆகவே எல்லோருமே சமைக்கத் தொடங்கினார்கள். ஆனால், பண்டிதரே சமையலில் கெட்டிக்காரராகத் திகழ்ந்தார். ஆகவே, அவரையே பிரதான சமையல்க் காரராக அவர்கள் நியமித்தார்கள். பாலா மிகவும் சிக்கலான மீன்களைக் கழுவி வெட்டும் பணியை எடுத்துக்கொள்வார். அவரது வேலை முடிந்தவுடன், சமையலறையில் ஓரத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அரசிமூட்டைகளின் மேல் அமர்ந்துகொண்டு நகைச்சுவையாகப் பேசுவது அவரது வாடிக்கை. அடேலுக்கு அன்று தமிழ் பெரியளவில் தெரிந்திருக்காவிட்டாலும் கூட, அவர்கள் அனைவரும் சிரித்த விதத்தைப் பார்க்கும்போது நிச்சயமாக அது வயதுவந்தவர்களுக்கான நகைச்சுவையாகவே இருக்கும் என்பதை ஊகித்துக்கொள்வார். அடேல் சிறிய வெங்காயங்களை வெட்டிக் கொடுப்பார். பண்டிதரின் விருப்பத்திற்கு ஏற்ப ரகு மரக்கறிகளை வெட்டிக் கொடுப்பார். ரகுவின் பணிகளுக்கு சங்கர் ஒத்தாசை புரிவார். நேசன் தரையில் இருந்து தேங்காய்களைத் திருவிக் கொடுப்பார். சிறி இறைச்சிக்கறியைச் சமைப்பார். ஒவ்வொரு தடவையும் கோழி இறைச்சி சமைக்கப்படும்போது பிரபாகரனும் சமையலில் இறங்கிவிடுவார், ஏனென்றால் கோழிக்கறி அவருக்கு மிகவும் பிடித்த உணவுவகைகளில் ஒன்று.

சமையல் முடிந்தவுடன், அவர்கள் அனைவரும் குளித்துவிட்டு தரையில் விரிக்கப்பட்டிருந்த பாய்களில் அமர்ந்துகொண்டு உணவை உட்கொள்வார்கள். பண்டிதரோ அன்றைய செலவுகளைக் கணக்குப் பார்த்துக்கொண்டிருப்பார். மாலை வேளைகளில் சினிமாவுக்கோ அல்லது கடற்கரைக்கோ போவது வழக்கம். பிரபாகரனுக்கு ஆங்கிலப் படங்களைப் பார்ப்பது பிடித்திருந்தது, குறிப்பாக போர் சம்பந்தப்பட்ட படங்களை அவர் விரும்பிப் பார்த்தார். வெளியில் செல்லாத மாலை நேரங்களில் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து இலங்கையிலும், இந்தியாவிலும் நடக்கும் அரசியல் மாற்றங்களைப்பற்றிப் பேசுவதுடன், தமது போராட்டத்தை நடத்தவேண்டிய முறைகள் பற்றியும் சிந்திப்பார்கள். அவ்வப்போது வெடித்துக் கிளம்பும் சிரிப்பொலிகளை வைத்து பாலா மீண்டும் தனது இரட்டை அர்த்தம் கொண்ட நகைச்சுவைகளை அள்ளிவிடுகிறார் என்பதை அடேல் புரிந்துகொள்வார்.

பிரபாகரனுக்கு சீட்டு விளையாட்டென்பது பிடிக்காத ஒரு விடயம். அமைப்பில் போராளிகள் சீட்டாட்டத்தில் ஈடுபடுவதை அவர் தடைசெய்திருந்தார். ஆனால், பிரபாகரன் வீட்டில் இல்லாத வேளைகளில் போராளிகள் சீட்டாடுவார்கள். ஆனால், அவர் திரும்பிவரும்போது போராளிகள் சீட்டாடுவதைக் கண்டவுடன் பாலாவைத் திட்டுவார். உங்களால் அவர்கள் தவறாக நடத்தப்படுகிறார்கள் அண்ணை என்று அவர் கடிந்துகொள்வார். புகைத்தலும், மது அருந்துதலும் பிரபாகரனால் முற்றாகத் தடைசெய்யப்பட்டிருந்தது.

செலவுகளை எப்போதும் குறைத்துக்கொள்ளவேண்டும் என்று கூறும் அதேவேளை, தனது போராளிகள் நிறைவாக உண்டு பசியாற வேண்டும் என்று பிரபாகரன் விரும்பினார். "அவர்கள் தமது தாய் தந்தையரைத் திறந்து, வாழ்வின் சுகபோகங்களைத் திறந்து, மக்களின் விடிவிற்காகக் போராட வந்திருக்கிறார்கள். அவர்களுக்குச் சிறந்த உணவும் குறைந்தளவிலாவது வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும்" என்று பிரபாகரன் அடிக்கடி கூறுவார். எவையுமே விணாக்கப்படுவதை அவர் அனுமதிப்பதிப்பதில்லை. ஒவ்வொரு போராளிக்குமான ஒருநாள்ச் செலவு பத்து இந்திய ரூபாய்கள் என்று வரையறுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு போராளிக்கும் இரு சோடி ஆடைகள் வழங்கப்பட்டிருந்தன. அவர்கள் அவற்றை ஒவ்வொரு நாளும் கழுவி, தூய்மையாக அணியவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டார்கள். தமிழ்ப் புத்தாண்டிற்கும், தீபாவளிக்கும் போராளிகளுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன. அவர்களின் தலைமுடி நேர்த்தியாக வெட்டப்பட்டிருந்ததுடன், தினமும் சவரசம் செய்துகொண்டார்கள். தனது போராளிகள் இழிவான நிலையில் இருப்பதை பிரபாகரன் ஒருபோதும் விரும்பியதில்லை. சினிமாவுக்கான கைப்பணம் போராளிகளுக்கு வாரம் தோறும் வழங்கப்பட்டு வந்தது.

main-qimg-265314089cb61351de1edca3e1751349

ராகவன்

பிரபாகரன், ரகு, ராகவன். பண்டிதர், சங்கர் மற்றும் பேபி சுப்பிரமணியம் ஆகியோர் கைத்துப்பாக்கிகளைத் தம்முடம் எப்போதும் வைத்திருந்தனர். அவர்களிடம் வேறு பெரிய துப்பாக்கிகளும் இருந்தன. புலிகள் அமைப்பில் முதன் முதலாக துப்பாக்கியொன்றைக் கொண்டு திரிந்தவர் அடேல் பாலசிங்கம் தான். அவரது கைத்துப்பாக்கி எப்போதும் அவரின் கைப்பையில் இருக்கும். அடேலையும், பாலாவையும் பாதுகாக்க கைத்துப்பாக்கியை வைத்திருக்குமாறு அடேல் பிரபாகரனால் கேட்கப்பட்டார். ஆனால், பாலா ஒருபோதுமே ஆயுதங்களைக் கொண்டு திரிந்ததில்லை.

தனக்கு வழங்கப்பட்ட ஆயுதப் பயிற்சி குறித்து தனது புத்தகத்தில் எழுதும் அடேல், தன்னை அவர்கள் சென்னையின் கரையோரப் பகுதி ஒன்றிற்கு அழைத்துச் சென்றதாகக் கூறியிருந்தார். கடற்கரையோரத்தில் இருந்த சவுக்குக் காட்டுப் பகுதியில் இலக்குகள் அமைக்கப்பட்டு சூட்டுப் பயிற்சிகள் நடத்தப்பட்டன. ரகுவும் பண்டிதரும் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஆயுதங்களைக் கொண்டுவருவார்கள். அவர்களின் ஆயுதங்கள் புதினத் தாள்களால் சுற்றப்பட்டு உருமறைப்புச் செய்யப்பட்டிருக்கும். அவை தானியங்கித் துப்பாக்கிகள்.

Adele_balasingham.jpg

அடேல் முதலில் கைத்துப்பாக்கியை பயன்படுத்தப் பயிற்றப்பட்டார்.அவருக்கு துப்பாக்கிச் சுடுதலைக் கற்றுக்கொடுத்தவர் பிரபாகரனே. "முதலில் அவர் ஒருமுறை துப்பாக்கியை இயக்கிக் காட்டுவார். பிறகு அதனை என்னிடம் தருவார். எனக்கு அதனைச் சரியாகக் கையாள்வதில் பிரச்சினை இருந்தது. நான் இலக்கு நோக்கிச் சுட்ட ஆறு ரவைகளில் ஒன்று மட்டுமே இலக்கை அடைந்தது. பின்னர் தானியங்கித் துப்பாக்கிகளைச் சுட்டுப் பழகினோம். அது ஒரு அற்புதமான அனுபவம். தானியங்கித் துப்பாக்கியின் பின்னுதைப்பு நான் துப்பாக்கியைக் கைநழுவி விடுமளவிற்குப் பலமாக இருந்தது" என்று அடேல் கூறுகிறார்.

பிரபாகரனும் அவரது போராளிகளும் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சிகளின் பொழுது மிகவும் அவதானமாக இருப்பார்கள். துப்பாக்கிகளுக்கான ரவைகள் மிகவும் விலைமதிப்பானவை என்பதுடன், அவற்றினைப் பெற்றுக்கொள்வதும் கடிணமாக இருந்தது. ஒவ்வொரு ரவையும் இந்திய மதிப்பில் 25 ரூபாய்களாக இருந்ததுடன், ஒவ்வொரு போராளிக்கும் ஒரு வாரத்திற்கே இரு ரவைகளே பயிற்சிக்காக வழங்கப்பட்டன. இது போராளிகளை மிகவும் கவனமாகவும், துல்லியமாகவும் தமது துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள ஊக்குவித்திருந்தது. இதிலிருந்தே பிரபாகரனின் ஆயுதங்கள் தொடர்பான கொள்கை பிறந்தது. எதிரியிடமிருந்து ஆயுதங்களைப் பறித்தல் என்பதே அது. இதனை ஒரு மந்திரமாகவே தனது போராளிகளிடம் அடிக்கடி பிரபாகரன் கூறிவந்தார். "எதிரியிடமிருந்து ஆயுதங்களைப் பறித்தெடுங்கள். ஒருபோதும் எதிரியிடம் உங்களின் ஆயுதத்தைப் பறிகொடுக்காதீர்கள். ஒரு சிறிய கைத்துப்பாக்கியைக் கூட எதிரியிடமிருந்து கைப்பற்றுவது மகிழ்ச்சியான விடயமே" என்று அவர் கூறுவார்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 18/4/2023 at 23:13, ரஞ்சித் said:

நான் பணிபுரிந்த டெய்லி நியூஸ் பத்திரிக்கையும், ஏனைய லேக் ஹவுஸ் பத்திரிக்கைகளான தினமின, தினகரன் ஆகிய பத்திரிக்கைகளும் இந்த நக்சலைட் சதிபற்றி பிரச்சாரப்படுத்தி எழுதியதுடன், அச்செய்தினுள் சூட்சுமமான முறையில் சர்வஜன வாக்கெடுப்பிற்கான அவசியத்தையும் புகுத்தி செய்தி வெளியிட்டிருந்தன. டெய்லி நியூஸ் பத்திரிக்கை, "ஜனாதிபதியைக் கொல்லும் நக்சலைட் சதி முறியடிக்கப்பட்டது" என்று தலைப்பிட்டிருந்தது.

பொதுவாக மேலைநாடுகளில் வலதுசாரி ஆட்சிக்கு முண்டு கொடுக்கும் ஊடகங்கள் போலவே இலங்கையிலும் இருந்துள்ளது ஊடகங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
46 minutes ago, vasee said:

பொதுவாக மேலைநாடுகளில் வலதுசாரி ஆட்சிக்கு முண்டு கொடுக்கும் ஊடகங்கள் போலவே இலங்கையிலும் இருந்துள்ளது ஊடகங்கள்.

பெரும்பாலான அரச ஊடகங்கள் அப்படித்தான் வசி!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரபா என்று கிசுகிசுத்த கண்ணன் -  பாண்டிபஜார் துப்பாக்கிச் சூடு

Pondy Bazaar, Chennai (Madras), India

பாண்டி பஜார்

பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் தோசை மிகவும் பிடித்திருந்தது. அதிலும் மசாலாத் தோசை என்றால் சொல்லத் தேவையில்லை. பாண்டி பஜார் ரயில்வே நிலையத்திற்கு அருகில் இருந்த உணவகத்தில் அருமையான மசாலாத் தோசைகளைத் தயாரிப்பார்கள், அந்த உணவகத்திற்கு பிரபாவும் உமாவும் அடிக்கடி செல்வதுண்டு. வைகாசி 19 ஆம் திகதி அந்த உணவகத்திற்கு உமா மகேஸ்வரனும், கண்ணனும் வந்திருந்தார்கள். உணவருந்திய பின் பாவலர் பெருஞ்சித்திரனார் வீட்டிற்குச் செல்வதுதான் திட்டம். மாசி 25 ஆம் திகதி தமிழ்நாட்டிற்கு வந்ததிலிருந்து உமாவும் அவரின் சகாக்களும் அங்கேயே தங்கியிருந்தனர். அதே நாள் மாலை, ஆங்கிலப் படம் ஒன்றினைப் பார்த்துவிட்டு பிரபாகரனும் ராகவனும் அந்த உணவகத்திற்கு உணவருந்த வந்தார்கள். உமாவும் கண்ணனும் கிளம்புவதற்கு ஆயத்தமானார்கள். உமா தாம் வந்திருந்த மோட்டார் சைக்கிளின் இயந்திரத்தை முடுக்கிவிடுவதில் கவனத்தைச் செலுத்தியிருக்க, கண்ணன் அவரின் பின்னால் ஏற ஆயத்தமானார். அப்போது பிரபாகரனை கண்ணன் கண்டுகொண்டார். 

"பிரபா" என்று உமாவின் காதுகளில் இரகசியமாகக் கூறினார் கண்ணன். 

உடனடியாக தனது காற்சட்டைப் பயிலிருந்து கைத்துப்பாக்கியை எடுக்க உமா முயன்றார். 

உமாவைக் கண்ட பிரபாகரனும் தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியை வெளியே எடுத்தார். 

சமயோசிதமாகவும், சுறுசுறுப்பாகவும் செயற்பட்ட பிரபாகரன், முதலில் உமாவை நோக்கிச் சுட்டார். ஆனால், குனிந்து தப்பித்துக்கொண்ட உமா, அங்கிருந்து தப்பிச்ச் சென்றுவிட்டார். பிரபாகரனின் துப்பாக்கியிலிருந்து பாய்ந்துவந்த 6 தோட்டாக்களில் நான்கு தோட்டாக்கள் கண்ணனின் கால்களைத் துளைத்துக் கொண்டு சென்றன. சூட்டுக் காயங்களிலிருந்து இரத்தம் பீறிட கண்ணன் நிலத்தில் விழுந்தார். சுற்றியிருந்த மக்கள் அதிர்ச்சியில் ஸ்த்தம்பித்து நிற்க சில இளைஞர்கள் பிரபாகரனையும் ராகவனையும் துரத்தத் தொடங்கினர். அவர்கள் இருவரும் ரயில் நிலையம் இருந்த திசை நோக்கி ஓடத் தொடங்கினர். ஆனால், தாம் ஓடிக்கொண்டிருப்பது பாண்டி பஜார் பொலீஸ் நிலையத்தை நோக்கியே என்று தெரிந்தவுடன், தம்மைத் துரத்திவந்து கொண்டிருந்த மக்களை நோக்கி அவர்கள் திரும்பி ஓடினர். துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டவுடன் நடப்பதை உணர்ந்துகொண்ட பொலீஸ் பரிசோதகர் நந்தகுமாரும், அவரது பொலீஸாரும் அப்போது வீதிக்கு வந்திருந்தனர். மக்களால் பிடிக்கப்பட்ட பிரபாகரனும், ராகவனும் பொலீஸாரிடம் கையளிக்கப்பட்டனர். 

See the source image

விரைவாகச் செயற்பட்ட பொலீஸார் பிரபாகரனையும் ராகவனையும் கடுமையாகத் தாக்கிக்கொண்டே பொலீஸ் நிலையம் நோக்கி இழுத்துச் சென்றனர். காயப்பட்ட கண்ணனை ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்தனர். 

பாண்டி பஜார் பொலீஸாரைப் பொறுத்தவரை கைத்துப்பாக்கியொன்றினை ஒருவர் பாவிப்பதென்பது மிகவும் அசாதாரண நிகழ்வாகத் தெரிந்தது. அப்பகுதியில் நடக்கும் பாதாள உலகக் குழுக்களுக்கிடையேயான சண்டைகளில் பெரும்பாலும் கத்திகளும்,இரும்புக் கம்பிகளும், சைக்கிள் சங்கிலிகளுமே உபயோகிக்கப்பட்டு வந்தன. எவருமே துப்பாக்கிகளைப் பாவித்தது கிடையாது. நந்தகுமார் மிகவும் உறுதியாக நின்றார். சுமார் ஒரு வாரத்திற்குப் பின்னர், ரயிலுக்காகக் காத்திருந்த உமா மகேஸ்வரனை பொலீஸார் கைதுசெய்தனர். ரயில்வே நிலையத்தில் நின்றிருந்த உமாவின் அருகில் சென்ற பொலீஸ் கொன்ஸ்டபிள் ஒருவர் அவரது அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு கேட்டார். அடையாள அட்டையினை காண்பிக்க மறுத்த உமா, பொலீஸ் கொன்ஸ்டபிளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கினார்.

வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உமாவை கொன்ஸ்டபிள் கைதுசெய்ய எத்தனிக்கவே, உமா அதனை எதிர்த்ததுடன் பொலீஸ்காரரைத் தாக்குவதற்கு தனது கைத்துப்பாக்கியை உருவினார். அது தற்செயலாக வெடித்தது. ஆனால், உமாவை தாக்கிய கொன்ஸ்டபிள், அவரை கீழே வீழ்த்திக் கைதுசெய்தார். 

பிரபாகரன், ராகவன், உமா ஆகிய மூவரையும் தனித்தனி சிறைகளில் பாஸையூர் பொலீஸ் நிலையத்தில் சாதாரண கிரிமினல் குற்றவாளிகளைப் போல பொலீஸார் அடைத்து வைத்தனர். 

பிரபாகரன் தனது இயக்கப் பெயரான கரிகாலன் என்பதை பொலீஸாரிடம் தனது இயற் பெயராகத் தெரிவிக்க, உமா அமைப்பினுள் பாவிக்கும் தனது பெயரான முகுந்தனை தனது இயற்பெயர் என்று பொலீஸாரிடம் கூறினார். சாதாரணக் கிரிமினல்க் குற்றவாளிகளைப்போல் அவர்களை நடத்திய பொலீஸார், அவர்கள் மீது கொலை முயற்சி மற்றும் இந்திய வெடிபொருள் சட்டத்தின் கீழான குற்றங்கள் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவுசெய்தனர். அவர்களின் உண்மையான பெயர்கள் வெளித்தெரிந்தபோது, தமிழ்நாடு பொலீஸார் அதிர்ச்சியில் உறைந்துபோக, இலங்கை அரசுக்கு அதுவரை தேடப்பட்டு வந்த முக்கிய தமிழ் ஆயுத அமைப்புக்களின் தலைவர்கள் பிடிபட்டார்கள் என்கிற மகிழ்ச்சி ஏற்பட்டது. அவர்கள் இருவரினதும் உண்மையான விபரங்களை அறிந்துகொண்டதும், அவர்களை கண்ணியமாகவும், கெளரவத்துடனும் பொலீஸார் நடத்தத் தொடங்கினர். கொழும்பிலோ அரசும், பாதுகாப்புத்துறையும் மகிழ்ச்சியிலும், உற்சாகத்திலும் திளைத்திருந்தனர். பிரபாகரனும், உமாமகேஸ்வரனும் தமிழ்நாட்டில் கைதுசெய்யப்பட்ட விபரம் உதவிப் பாதுகாப்பு அமைச்சர் வீரப்பிட்டியவுக்கும் ஜனாதிபதி ஜெயவர்த்தனவுக்கும் தெரியப்படுத்தப் பட்டது. உடனடியாக பாதுகாப்புச் சபையைக் கூட்டிய பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் வீரப்பிட்டிய, பாதுகாப்புச் சபை உறுப்பினர்களுடன் சேர்ந்து மூன்று முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றினர். முதலாவது, பிரபாகரனையும், உமா மகேஸ்வரனையும் உடனடியாக இலங்கைக்கு நாடு கடத்துமாறு இந்தியாவிடம் உத்தியோகபூர்வாமகாக் கோரிக்கை முன்வைப்பது. இரண்டாவதாக பொலீஸ் மா அதிபர் ருத்ரா ராஜசிங்கம் தலைமையிலான பொலீஸ் குழுவொன்றினை தமிழ்நாட்டிற்கு அனுப்பி அவர்கள் இருவரையும் நாடுகடத்தும் ஒழுங்குகளை தமிழ்நாட்டு பொலீஸாருடன் சேர்ந்து செய்வது. மூன்றாவது, அவர்கள் இருவரையும் கைதுசெய்ய உதவியவர்களுக்கு பத்து லட்சம் இலங்கை ரூபாய்களை சன்மானமாக வழங்குவது.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரபாகரனும் உமா மகேஸ்வரனும் சென்னையில் கைதுசெய்யப்பட்டதையடுத்து பிரச்சினை முடிந்துவிட்டதாக எண்ணிக் குதூகலித்த சிங்கள தேசம்

 

தேசிய பாதுகாப்புச் சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அதி முக்கியத்துவம் வழங்கி செய்திகளை வெளியிடவேண்டும் என்று லேக் ஹவுஸ் பத்திரிக்கைகள் அரசால் பணிக்கப்பட்டன. டெயிலி நியூஸ், தினமின மற்றும் தினகரன் ஆகிய லேக் ஹவுஸ் பத்திரிக்கைகள் பிரபாகரனும், உமாவும் கைதுசெய்யப்பட்ட செய்தியை மிகவும் பரபரப்பான முறையில் தலையங்கம் இட்டு வெளிப்படுத்தின. மேலும், பெயர் குறிப்பிட விரும்பாத உயர் பொலீஸ் அதிகாரி, "பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இக்கைதுகள் இரண்டும் மிகவும் முக்கியமானவை, அண்மைய வருடங்களில் நடைபெற்ற மிகவும் முக்கியமான நிகழ்வு இது" என்று கூறியதாக டெயிலி நியூஸ் தலைப்புச் செய்தி வெளியிட்டது.

போராளித் தலைவர்கள் கைதுசெய்யப்பட்ட செய்தியினை பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் டெயிலி நியூஸ் பத்திரிக்கைக் காரியாலயத்திற்கு தொலைபேசி மூலம் அறியத் தந்தபோது நான் அங்கிருந்தேன். செய்திப்பிரிவில் இருந்த அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்கள். பின்னர் இந்த மகிழ்ச்சி ஆசிரியர் அலுவலகத்திற்கும், ஒட்டுமொத்த லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கும் பற்றிக்கொண்டது. நிறுவனத்தின் ஏனைய பகுதிகளில் வேலைசெய்வோர் இச்செய்திபற்றி மேலதிகத் தகவல்களை அறிந்துகொள்வதற்கு செய்திச் சேவைக்குப் படையெடுத்துக்கொண்டிருந்தனர். நிறுவனத்தின் வாகன ஓட்டுநர்களின் ஒருவரான ஆரியரட்ண பெருமுச்சுடன், "எல்லாப் பிரச்சினையும் முடிந்தது" என்று கூறினார்.

இக்கைதுபற்றிய செய்திகளைத் தொடர்ச்சியாகப் பிரசுரிக்குமாறு டெயிலி நியூஸ் கேட்கப்பட்டதுடன், கைதுசெய்யப்பட்ட மூன்று போராளிகளையும் நாடுகடத்துவதன் விபரங்களைத் தொடர்ச்சியாக மக்களுக்கு விளங்கப்படுத்துமாறும் கோரப்பட்டது. இந்தப் பிரச்சாரத்திற்குத் தேவையான தலையங்கத்தை பாதுகாப்பு அமைச்சே தந்தது. "பிரபாகரனும், உமா மகேஸ்வரனும் தமது குற்றங்களுக்காக சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியோடிக்கொண்டிருந்த தேடப்படும் குற்றவாளிகள்" என்பதே அந்தத் தலைப்பு. பிரபாகரன் 18 கொலைகளுக்காகவும், இரண்டு வங்கிக் கொள்ளைகளுக்காகவும் தேடப்பட்டு வந்த அதேவேளை உமா மகேஸ்வரன் 9 கொலைகளுக்காகவும் ஒரு வங்கிக்கொள்ளகைக்காகவும் இலங்கையில் தேடப்பட்டு வந்தார். இரு போராளித் தலைவர்களையும் கைதுசெய்தமைக்காக தமிழ்நாடு பொலீஸாருக்கு பத்து லட்சம் சன்மாணமாக வழங்கப்படுவதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் வீரப்பிட்டிய உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

B-Force

இலங்கை அரசால் தமிழ்நாட்டு பொலீஸாருக்கு சன்மானம் வழங்கப்படுவதாக வந்த அறிவிப்பினையடுத்து மூன்று இந்திய ஊடகங்கள் அதனைச் செய்தியாக வெளியிட்டிருந்தன. தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்த எம்.ஜி. ராமச்சந்திரனுக்கு இது தொடர்பாக உடனடியாக அறிவிக்கப்பட்டது. உடனடியாக தமிழ்நாட்டு பொலீஸ் மா திபரான கே.மோகந்தாஸை தன்னை வந்து பார்க்கும்படி கட்டளையிட்ட எம்.ஜி.ஆர், பிரபாகரனையும் உமா மகேஸ்வரனையும் பொலீஸார் கண்ணியமாக நடத்துவதை உறுதிப்படுத்துமாறு பணித்தார். "பைய்யங்க விஷயத்துல கொஞ்சம் பாத்துப் போப்பா" என்று மோகந்தாசிடம் எம்.ஜி.ஆர் கூறினார். அதற்குப் பதிலளித்த மோகந்தாஸ், தாம் இலங்கையரசு தருவதாக அறிவித்த சன்மானத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று முடிவெடுத்திருப்பதாகத் தெரிவித்தார். "நாங்கள் சட்டம் ஒழுங்கைப் பற்றி மட்டுமே கவலை கொள்கிறோம். சென்னையும் இன்னொரு சிக்காக்கோவைப்போன்று ஆகிவிடக்கூடாது என்பதற்காகவே நான் செயற்படுகிறோம்" என்றும் அவர் எம்.ஜி. ஆர் ஐப் பார்த்துக் கூறினார். 

டெயிலி நியூஸ் பிரபாகரனையும், உமா மகேஸ்வரனையும் இந்தியா உடனடியாக நாடுகடத்த வேண்டும் என்கிற தொனியில் அரசியல்த் தலையங்கங்களைத் தீட்டி செய்தி வெளியிட்டு வந்தது. இந்தியா எனும் பெரியண்ணன், எப்படி சிறிலங்கா எனும் சிறிய அயல்நாடு தொடர்பாக செயற்பட வேண்டும் என்று உபதேசம் செய்யும் வகையில் இச்செய்திகள் வெளிவந்துகொண்டிருந்தன. 1973 ஆம் ஆண்டு கடத்தலுக்காகக் கைதுசெய்யப்பட்ட குட்டிமணியை அப்போது முதலமைச்சராக இருந்த கருநாநிதி எப்படி இலங்கைக்கு நாடுகடத்தில் இலங்கையரசிற்கு உதவியிருந்தாரோ அதே போன்று எம்.ஜி.ஆர் உம் செயற்படவேண்டும் என்று வெளிப்படையாகக் கோரிக்கை முன்வைத்தது டெயிலி நியூஸ். 1973 ஆம் ஆண்டு கருநாநிதியின் ஒப்புதலுடன் நாடுகடத்தப்பட்ட குட்டிமணியை இலங்கையிலிருந்து சென்ற பொலீஸார் கையில் விலங்கிட்டு இலங்கைக்கு இழுத்து வந்திருந்தனர்.

Rudra Rajasingham.jpg 

ருத்ரா ராஜசிங்கம்

 இலங்கை அரசாங்கம் ருத்ரா ராஜசிங்கம் தலைமையில் பொலீஸ் குழுவொன்றினை தமிழ்நாட்டிற்கும் இந்தியத் தலைநகர் தில்லிக்கும் அனுப்பி பிரபாகரனையும், உமா மகேஸ்வரனையும் இலங்கைக்கு நாடுகடத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்தியிருந்தது. அவர் சென்னையில் தங்கி மோகந்தாஸுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இரு போராளித் தலைவர்களையும் சந்திக்கவேண்டும் என்ற ருத்ரா ராஜசிங்கத்தின் கோரிக்கைக்கு மோகந்தாஸும் உடன்பட்டார். அதன்படி, கொழும்பிலிருந்து வந்திருந்த பொலீஸ் தூதுக்குழுவினரை பிரபாகரனும், உமாமகேஸ்வரனும் அடைத்துவைக்கப்பட்டிருந்த உயர் பாதுகாப்புச் சிறைக்கு அழைத்துச் சென்றார் மோகந்தாஸ். ருத்ரா கொழும்பு திரும்பி பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தபோது, பிரபாகரனும் உமா மகேஸ்வரனும் சாதாரண கிரிமினல்களைப் போல அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கூறினார். ஆனால், இலங்கையின் பொலீஸ் மா அதிபர் அறிந்திராத அல்லது பார்க்கத் தவறிய ஒரு விடயம் தான் இரு போராளித் தலைவர்களும் தமிழ்நாட்டுப் பொலீஸாரால் கண்ணியமாகவும் கெளரவத்துடனும் நடத்தப்பட்டுக்கொண்டிருந்தார்கள் என்பது.

See the source image

தலைவர் பிரபாகரன், அவரது தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை, தாயார் பார்வதி, மனைவி மதிவதனி மற்றும் மகன் சார்ள்ஸ் அன்டனி

 பிரபாகரன் கைதுசெய்யப்பட்டு விட்டார் என்கிற செய்தி யாழ்ப்பாணத்தில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. பிரபாகரனின் நலன் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு சட்டத்தரணியும், தந்தை செல்வாவின் மகனுமான சந்திரகாசனை அமர்த்தினார் பிரபாகரனின் தந்தையான வேலுப்பிள்ளை. இதனையடுத்து உடனடியாக தமிழ்நாடு சென்ற சந்திரகாசன் அன்று ஆட்சியில் இல்லாத திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருநாநிதியைச் சந்தித்தார். ஆனால், கருநாநிதி இந்திரா காங்கிரஸுடனான தேர்தல் கூட்டணியில் தொடர்ந்து நிலைத்திருந்தார். ஆகவே, மத்திய அமைச்சரவையில் இருந்த தனது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக இந்திராகாந்திக்கு செய்தியொன்றினை அனுப்பினார் கருநாநிதி. போராளிகள் இலங்கையரசாங்கத்திடம் கையளிக்கப்படும் பட்சத்தில் அவர்களின் பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்படும் என்பதே அந்தச் செய்தி. "அவர்கள் கொல்லப்பட்டு விடுவார்கள்" என்று இந்திரா காந்தியை அவர் எச்சரித்திருந்தார்.

See the source image

 சந்திரகாசன்

 கிட்டு, பொன்னமான், புலேந்திரன் ஆகியோர் பிரபாகரனின் கைது குறித்து அறிந்துகொண்டதுடன் தாம் தங்கியிருந்த மதுரை முகாமிலிருந்து சென்னைக்கு விரைந்தார்கள். சென்னையில் அப்போது தங்கியிருந்த பண்டிதர் மற்றும் ஏனையோருடன் அவர்கள் இரகசிய கூட்டமொன்றினை நடத்தினார்கள். பிரபாகரன் பொலீஸாரால் விடுவிக்கப்படாது விட்டால், சென்னையில் மிகவும் உயரமான எல்..சி கட்டிடத்தின் கூரையில் ஏறிக் குதித்துவிடப்போவதாக எச்சரிக்கலாம் என்று முடிவெடுத்தார்கள்.

LIC building, (inset) M Ct. M Chidambaram Chettiar

எல்..சி கட்டிடம் - சென்னை

அங்கிருந்த போராளிகளில் வயதில் கூடியவரும், ஓரளவிற்கு உலக விடயங்களை அறிந்திருந்தவருமான பேபி சுப்பிரமணியம் அவர்களின் திட்டம் பற்றிக் கேள்விப்பட்டதும் மிகுந்த ஆத்திரத்துடன் அவர்களை நோக்கிக் கத்தினார். "உங்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? அதை என்னிடம் விட்டு விடுங்கள். நான் அதைப் பார்த்துக்கொள்கிறேன். அவர்களை நான் எப்படியாவது வெளியில் எடுத்துவிடுகிறேன்" என்று கூறினார். தான் சிறுகச் சிறுக சேர்த்துவந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான தமிழ்நாட்டு ஆதரவாளர்களின் வலையமைப்பை இதற்குப் பாவிக்கலாம் என்று அவர் முடிவெடுத்தார். மிகவும் அடக்கமானவராகத் தெரியும் பேபி சுப்பிரமணியம் பொதுமக்கள் தொடர்பாடலில் மிகவும் கெட்டிக்காரராக விளங்கினார். தமிழ்நாட்டில் அவர் தங்கியிருந்த காலத்தில் பல அரசியல்வாதிகள், கல்விமான்கள், தமிழ்ச் செயற்பாட்டாளர்கள், முன்னணி வணிகர்கள், பரோபகாரர்கள் என்று பலரையும் சந்தித்து இலங்கையில் தமிழர்களின் அவல நிலை பற்றியும், அவர்களது போராட்டம் பற்றியும் தெளிவுபடுத்தி வந்ததோடு, ஈழத்தமிழரின் போராட்டத்தின்பால் கரிசணையினை ஏற்படுத்தியிருந்தார். இவர்களுள் மிகவும் முக்கியமானவர் தமிழ்நாடு காமராஜர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த பழ நெடுமாறன் அவர்கள். மெலிந்த, உயரமான நெடுமாறன் ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்ததோடு, அக்கட்சி இரண்டாக உடைந்தபோது இந்திரா காங்கிரஸில் தன்னை இணைத்துக்கொண்டவர். பின்னர், காமராஜர் காங்கிரஸ் எனும் புதிய கட்சியைத் தொடங்கியவர். ஆகவே, நெடுமாறனைச் சந்தித்த பேபி சுப்பிரமணியம், பிரபாகரனை விடுதலை செய்ய அவர் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 பிரபாகரனை விடுவிக்க சர்வகட்சி கூட்டத்தினை கூட்டிய நெடுமாறனும், சிறையில் பிரபாகரனுடன் திருகோணமலை குறித்துப் பேசிய ரோவும்

See the source image

பழ நெடுமாறன்

பிரபாகரனின் துணிகரமான செயற்பாடுகள் மற்றும் போராட்ட இலட்சியம் மீதான அவரது அர்ப்பணிப்பு ஆகியவை பற்றி அறிந்திருந்த நெடுமாறன் அந்த செயல்த்திறன் மிக்க போராளியை எப்படியாவது சந்தித்துவிடவேண்டும் என்று விரும்பியிருந்தார். பிரபாகரனைச் சந்திக்க ஆவண செய்யுமாறு அவர் பேபி சுப்பிரமணியத்தை முன்னர் பல தடவைகள்  கேட்டிருந்தார். ஆனால், பேபியோ "பிரபாகரன் யாழ்ப்பாணத்திற்குச் சென்றுவிட்டார்" என்று அடிக்கடி கூறிவந்தார். ஆனால், இன்றோ நிலைமை வேறு. ஆகவே, பிரபாகரனைச் சந்திக்க நெடுமாறனை பாசையூர் உயர்பாதுகாப்புச் சிறைக்கு அழைத்துச் சென்றார் பேபி. அங்கு பிரபாகரனைக் கண்டதும் நெடுமாறன் வியந்துபோனார். இதற்கு முன்னரும் பிரபாகரனை தனது பாராளுமன்ற உறுப்பினர் விடுதியில் அவர் பார்த்திருக்கிறார், ஆனால், அவர்தான் பிரபாகரன் என்று நெடுமாறனுக்குத் தெரியாது.  

முகத்தில் வியப்பினை வெளிப்படுத்திய நெடுமாறனைப் பார்த்து, "மன்னிக்க வேண்டும், நான் யாரென்பதை நான் ஒருபோது உங்களிடம் முன்னர் சொன்னதில்லை" என்று பிரபாகரன் நெடுமாறனை நோக்கிக் கூறினார். 1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்தபோது நெடுமாறன் பிரபாகரனை ஒரு முறை சந்தித்திருந்தார். ஆகவே, அன்று சிறைச்சாலையில் பிரபாகரனை சற்று நேரம் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு பேசத் தொடங்கிய நெடுமாறன், "நான் கடந்த வருடம் யாழ்ப்பாணம் வந்திருந்தபோது, என்னைப்பார்க்க வந்திருந்த சில இளைஞர்களோடு நீங்களும் வந்தீர்களா?" என்று கேட்டார்.

 பிரபாகரன், "ஆம்" என்று பதிலளித்தார்.

 "ஏன் எனக்கு உங்களின் பெயரைச் சொல்லவில்லை" என்று நெடுமாறன் கேட்டார்.

அதற்குப் பதிலளித்த பிரபாகரன், தன்னை இராணுவத்தினரும், பொலீஸாரும் அப்போது தேடி வந்ததாகவும், நெடுமாறனைச் சந்திக்கச் சென்றிருந்த இளைஞர்கள் குழுவில் பொலீஸ் உளவாளிகளும் இருந்ததாகவும், ஆகவே தான் தன்னை அங்கு அடையாளப்படுத்தியிருந்தால், அவ்விடத்திலேயே தான் கைதுசெய்யப்பட்டிருக்கும் அபாயம் இருந்ததனால் தன்னை யாரென்று அடையாளம் காட்ட விரும்பவில்லை என்றும் கூறினார். 

நெடுமாறன் கோபப்படவில்லை. தனது பாதுகாப்புக் குறித்து பிரபாகரன் எவ்வளவு அவதானமாக இருந்தார் என்பதை அவர் புரிந்துகொண்டார். பிரபாகரன் பற்றிய அவரது மதிப்பு இன்னும் அதிகரித்துச் சென்றது. பிரபாகரன் கைதுசெய்யப்பட்டது தொடர்பான தனது வருத்தத்தை அவரிடம் தெரிவித்த நெடுமாறன், அவரைக் கவலைப்பட வேண்டாம், நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறினார். அவரை பிணையில் விடுவிப்பதற்கான தன்னாலான அனைத்து முயற்சிகளையும் தான் எடுக்கப்போவதாக அவர் உறுதியளித்தார்.  மேலும், வெளிநாடொன்றில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் ஈடுபடுவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்றும் அவர் பிரபாகரனுக்கு அறிவுரை கூறினார். 

"ஏன் உங்களுக்குள் சண்டைபிடிக்கிறீர்கள்?" என்று நெடுமாறன் கேட்டார். "உங்களால் ஏன் ஒன்றாகச் செயற்பட முடியவில்லை? உங்களின் சண்டைகளால் உங்களின் போராட்டத்திற்கான உதவியினை ஒருங்கிணைக்க நாம் இங்கு சிரமப்படுகிறோம்" என்று கூறிய நெடுமாறன், உமாவுடனான கருத்துவேறுபாட்டைச் சரிசெய்து விட்டு அவருடன் சேர்ந்து இயங்கவேண்டும் என்று பிரபாகரனைக் கேட்டார்.

தான் உறுதியளித்ததன்படி நடந்துகொண்டார் நெடுமாறன். ஆனி 1 ஆம் திகதி காமராஜர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டமொன்றைக் கூட்டினார். பிரபாகரனை விடுவிக்கத் தேவையான அனைத்தையும் தான் செய்துவிட்டபடியினால், தான் அக்கூட்டத்தில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று கருநாநிதி நெடுமாறனிடம் அறிவித்தார். எம்.ஜி.அர் தன் சார்பாக பிரதிநிதியொருவரை கூட்டத்திற்கு அனுப்பி வைத்தார். தமிழ்நாட்டின் முக்கிய அரசியல்க் கட்சிகளும் அனைத்தும் அக்கூட்டத்தில் கலந்துகொண்டன. பேபி சுப்பிரமணியம் பார்வையாளராகக் அக்கூட்டத்தில் கலந்துகொண்டார். கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முதலாவது தீர்மானம் போராளித் தலைவர்களை நாடுகடத்தும் விடயத்திற்கு தமிழ்நாடு அரசாங்கம் ஒத்துக்கொள்ளக் கூடாது எனும் கோரிக்கை. 

இரண்டாவது, இலங்கையால் விடுக்கப்பட்ட போராளித் தலைவர்களை நாடுகடத்தும் கோரிக்கையினை மத்திய அரசாங்கம் நிராகரிக்க வேண்டும் என்பது.

மூன்றாவது, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவான பிரச்சாரத்தினை தமிழ்நாட்டில் முன்னெடுப்பது. 

இந்திரா காந்தி அப்போது இது தொடர்பாக திட்டமொன்றினை ஏற்கனவே வகுத்திருந்தார். இலங்கைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா எந்த வகையில் தலையிடலாம் என்கிற பரிந்துரைகள் அடங்கிய ஆவணம் ஒன்றினைத் தயாரிக்குமாறு தான் 1980 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடனேயே தனது ஆலோசகர்களை அவர் கேட்டிருந்தார். 1977 ஆம் ஆண்டு இந்திரா தோற்கடிக்கப்பட்டு, மூன்று வருடங்களின் பின்னர் 1980 தை மாதம் ஆட்சிக்கு மீண்டும் வந்தவுடன் அவர் செய்த விடயங்களில் இந்த பரிந்துரை அறிக்கையும் ஒன்று. அவருக்கு வழங்கப்பட்ட பரிந்துரைகளில் மிகவும் முக்கியமானது ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி, அவரது அரசாங்கத்தை நிலைகுலைய வைப்பதற்கு தமிழ்ப் போராளிக்குழுக்களை ஒரு கருவியாகப் பாவிக்க வேண்டும் என்பது.

Indian Prime Minister Indira Gandhi with Sirimavo Bandaranaike, the...  Fotografía de noticias - Getty Images

தோழிகள் - சிறிமாவும் இந்திராவும்

பனிப்போர் நிலவிவந்த அக்காலத்தில் இந்திரா காந்தி சோவியத் அணி நாடுகளின் பக்கம் நோக்கியே செயற்பட்டு வந்தார். ஜெயாரின் அமெரிக்கச் சார்பு நிலைப்பாடும், இஸ்ரேல் - பாக்கிஸ்த்தான் - சீனா ஆகிய நாடுகள் நோக்கிய ஜெயாரின் பயணமும் இந்திராவை எரிச்சலடைய வைத்திருந்தது. 1983 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் சிறிமா பண்டாரநாயக்க வெற்றிபெற்றால், இலங்கை அமெரிக்காவின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு வெளியே வரும் என்று இந்திரா எதிர்பார்த்திருந்தார். ஆனால், தேர்தல்களில் சிறிமா பங்கெடுக்க முடியாதபடி அவரது சிவில் உரிமைகளை ஜெயவர்த்தனா பறித்துப் போட்டபோது இந்திராவின் எதிர்ப்பார்ப்பும் முற்றாகக் கலைந்துபோனது. ஆகவே, இந்திராவின் முன்னால் இருந்த ஒரே தெரிவு, வளர்ந்துவரும் தமிழ் ஆயுதக் குழுக்களைப் பயன்படுத்து ஜெயவர்த்தனவின் அரசாங்கத்தை நிலைகுலையச் செய்வதுதான்.

Image

ஈரோஸ் அமைப்பின் அருளர் எனப்படும் அருளப்பு ரிச்சர்ட் அருட்பிரகாசம் 

அக்காலத்தில் சென்னையில் தங்கியிருந்த ஈரோஸ் அமைப்பின் முக்கியஸ்த்தர் அருளர், இந்தியாவுக்கான சோவியத் ஒன்றியத்தின் தூதுவருடன் தான் நடத்திய இரகசியச் சந்திப்புக் குறித்து என்னிடம் கூறியிருந்தார். சோவியத் தூதுவரிடம் பேசிய அருளர், போராளித் தலைவர்களை நாடுகடத்த வேண்டாம் என்று இந்திராவிடம் கூறுங்கள் என்று தான் கூறியதாகக் கூறினார். அதற்கு சோவியத் தூதர் பின்வருமாறு பதிலளித்தார், "கவலைப்பட வேண்டாம். இந்தியாவுடன் இணைந்திருங்கள். இந்திரா காந்தி உங்களை பார்த்துக்கொள்ளுவார்" என்பதுதான். 

அவர் கூறியது போலவே இந்திரா காந்தி பிரபாகரனையும் உமா மகேஸ்வரனையும் பார்த்துக்கொண்டார். ஆனி மாதம் நடுப்பகுதியில், இந்தியாவின் புலநாய்வுத்துறையான ரோவை சேர்ந்த இரு அதிகாரிகள் பிரபாகரனும் உமா மகேஸ்வரனும் தடுத்து வைக்கப்பட்டிருந்த  உயர் பாதுகாப்புச் சிறைக்கு அவர்களைச் சந்திக்க வந்திருந்தனர். தம்மை இந்திய அரசாங்கத்தின் அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திய அவர்கள், பிரபாகரன் குறித்தும், அவரது இயக்கத்தின் செயற்பாடுகள் குறித்தும் கேட்டு அறிந்துகொண்டனர்.  

இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கிவந்த அவலங்கள் குறித்து கரிசணையுடன் பேசிய அந்த அதிகாரிகள், தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு உதவும் நிலையில் இந்தியா இருப்பதாகக் கூறினர். பின்னர், பிரபாகரன் இந்தியாவுக்கு உதவக் கூடிய நிலைப்பாட்டில் இருக்கிறாரா என்று அவரைப் பார்த்துக் கேட்டனர். அவர்கள் அவரிடம் கேட்ட கேள்விகளுக்குள் திருகோணமலைத் துறைமுகமும் அடிக்கடி இடம்பெறலாயிற்று. அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே இந்தியாவின் உள்நோக்கம் என்னவாக இருக்கும் என்பதை பிரபாகரன் ஓரளவிற்கு ஊகித்துக் கொண்டார். 

அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நாளான ஆவணி 6 ஆம் திகதிக்கு சிலநாட்கள் முன்னரும் அவரை சந்திப்பதற்கு இரண்டாவது தடவையாகவும் ரோ அதிகாரிகள் வந்திருந்தனர். ஆனால், இந்தியாவிலும், இலங்கையிலும் இடம்பெற்றுவரும் அரசியல் மாற்றங்களை உன்னிப்பாகக் கவனித்து வந்த பிரபாகரன், இந்த அரசியல் மாற்றங்களும், நகர்வுகளும் தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் எவ்வகையான முட்டுக்கட்டைகளை போடப்போகின்றன என்பதையும், அவற்றினைத் தாண்டி போராட்டம் எப்படி வழிநடத்தப்படவேண்டும் என்பதையும் புரிந்து வைத்திருந்தார்.

 

 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியாவின் நலன்கள்

திருகோணமலைப் பிரச்சினை

See the source image

 

திருகோணமலை துறைமுகம்பற்றி இந்திய ரோ அதிகாரிகள் காட்டிய அதீத ஈடுபாடு, அவர்களின் நோக்கம் என்னவென்பதை பிரபாகரனுக்குத் தெளிவாக உணர்த்தியிருந்தது. இந்தியா தனது பாதுகாப்புப் பற்றி அச்சம் கொண்டிருப்பதையும், இப்பிராந்தியத்தின் பலம் மிக்க நாடாக தன்னை உருவாக்கிக்கொள்ள அது விரும்புவதையும் பிரபாகரன் அறிந்தே இருந்தார். ஆகவே, இலங்கையின் தமிழர்களின் பிரச்சினை தொடர்பான இந்தியாவின் கரிசணை என்பது, அதன் ஒட்டுமொத்த நலன்களுடன்  சம்பந்தப்பட்டது என்பதை அவர் அறியாமல் இல்லை.

 ஜெயவர்த்தன,  திருகோணமலைத் துறைமுகத்தின் கட்டுமாணங்களை அமெரிக்காவின் கடற்படையின் பாவனைக்காகக்  கொடுக்கப்போகிறார் என்கிற வதந்தி 1981 ஆம் ஆண்டளவில் பரவியபோது இந்தியா உண்மையாகவே கலக்கமடைந்தது. அதேயாண்டு,  சுமார் 9 ஆண்டுகளாக இருந்த தடையான திருகோணமலைத் துறைமுகத்தை வெளிநாட்டுக் கடற்படைகளுக்கு பாவனைக்குக் கொடுப்பதில்லை என்கிற தடையினையும் ஜெயவர்த்தன நீக்கியிருந்தார். இதனையடுத்து அமெரிக்கா பல கடற்படைக் கப்பல்களை திருகோணமலைத் துறைமுகத்திற்கு அனுப்பி வந்தது. திருகோணமலைத் துறைமுகத்தை தனது இந்துசமுத்திரத் தளமாகப் பாவிப்பது குறித்து அமெரிக்கா தீவிரமாகச் சிந்தித்து வருகிறது என்று அமெரிக்காவின் கூட்டுப்படைகளின் அதிகாரிகளின் தலைவர் ஜெனரல் டேவிட் ஜோன்ஸ் கூறியபோது இந்தியப் பத்திரிக்கைகள் அலறியடித்துக்கொண்டு இதுபற்றி பரவலாகச் செய்திகளை வெளியிட்டிருந்தன.

மேலும் வோஷிங்க்டன் போஸ்ட் பத்திரிக்கையில் வெளிவந்த செய்தியான அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமைச் செயலகமான பென்டகனின் 1980-81 ஆம் ஆண்டு அறிக்கையில், திருகோணமலைத் துறைமுகத்தை இந்துசமுத்திரத்தில் பயணிக்கும் அமெரிக்காவின் கடற்படைக் கப்பல்களுக்கு தரித்துச் செல்லும் இடமாக பாவிக்க உத்தேசித்திருப்பதாக வந்த தகவலையும் இந்தியப் பத்திரிக்கைகள் கவலையுடன் வெளிக்கொணர்ந்திருந்தன. மேலும், அமெரிக்க ராஜாங்கச் செயலகத்தின் ஆதரவுடன் செயற்பட்டு வந்த அமெரிக்க செனட்டர் ஒருவர் அமெரிக்காவுக்கான இலங்கையின் தூதுவருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில் வெளியிட்ட கருத்தான, "இந்து சமுத்திரத்தினூடாகப் பயணிக்கும் அமெரிக்காவின் கடற்படைக்கப்பல்களின் வீரர்கள் திருகோணமலைத் துறைமுகத்தில் தங்கி ஓய்வெடுக்கவும், களியாட்டங்களில் ஈடுபடவும் தேவையான வசதிகளை அமெரிக்கா செய்ய விரும்புகிறது" என்கிற தகவலையும் இந்தியப் பத்திரிக்கைகள் முக்கிய செய்தியாக வெளியிட்டிருந்தன.

இது இந்தியாவுக்குக் கடுமையான சந்தேகத்தைனை ஏற்படுத்தியிருந்ததுடன், இந்திய உபகண்டப் பிராந்தியத்தில் இந்தியாவுக்கெதிரான அணியொன்றினை அமெரிக்கா உருவாக்க ஜெயவர்த்தனா துணைபோவதாகவும் இந்தியா கருதத் தொடங்கியது. பனிப்போர் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த அந்தக் காலப்பகுதியில், இந்தியாவைச் சுற்றிவளைத்து, சிறு துண்டுகளாக உடைத்துப் பலவீனப்படுத்துவதே இந்தியா தொடர்பான அமெரிக்காவின் கொள்கையாக அன்று இருந்தது. இஸ்ரேல் - பாக்கிஸ்த்தான் - சீனா ஆகிய நாடுகள் அடங்கிய தென் மண்டல  அரைவட்டத்திற்குள் இலங்கையும் வந்துவிட்டால் அவ்வட்டம் பூரணப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தியாவினுள் அக்காலத்தில் நடைபெற்று வந்த தனிநாட்டிற்கான பல கிளர்ச்சிகளை ஊக்குவித்து வந்த அமெரிக்கா, ஒன்றையொன்று எதிர்க்கும் நிலைகொண்ட தனியான சிறிய தேசங்களை இந்தியாவினுள் உருவாக்கிவிட்டால் இந்தியாவை முற்றாகப் பலவீனப்படுத்திவிடலாம் என்றும்  எதிர்பார்த்தது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜெயாரின் திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகளுக்கான குத்தகை நாடகம்

1981 ஆம் ஆண்டு ஜெயவர்த்தனவின் அரசாங்கம் எடுத்த இரு தீர்மானங்கள் இந்தியா கொண்டிருந்த அச்சத்தினை உறுதிப்படுத்தியிருந்தது. முதலாவது தீர்மானம், இரண்டாம் உலக யுத்தத்தில் பிரிட்டிஷாரினால் திருகோணமலைத் துறைமுகத்தில் நிர்மாணிக்கப்பட்டு பின்னர் பராமரிப்பின்றி கைவிடப்பட்டிருந்த 101 பாரிய எண்ணைத் தாங்கிகளை புணரமைப்பது. இந்தத் தாங்கிகளை புணரமைப்பதற்கு எந்த வெளிநாடு அதிக பணத்தினைத் தருகிறதோ, அந்த நாட்டிற்கே அந்த எண்ணெய்த் தாங்கிகளை குத்தகைக்கு விடுவதாக ஜெயவர்த்தன அறிவித்ததோடு, 1981 ஆம் ஆண்டு சர்வதேச நாடுகள் அனைத்திற்கும் டென்டர்கள் இலங்கை அரசால் அனுப்பப்பட்டன.

See the source image

இரண்டாம் உலக யுத்த காலத்தில் பிரிட்டிஷாரினால் கட்டப்பட்ட திருகோணமலை எண்ணெய்த் தாங்கியொன்று

அன்று கைத்தொழில் அமைச்சராக இருந்த சிறில் மத்தியூ டென்டர்களை பற்றி அறிவிப்பதற்கு பத்திரிக்கையாளர் மாநாடு ஒன்றினைக் கூட்டியிருந்தார். டெயிலி நியூஸ் பத்திரிக்கைக்காகச் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நானும் அக்கூட்டத்திற்குச் சமூகமளித்திருந்தேன். இந்தியா இதுகுறித்து கொண்டிருக்கும் கரிசணையினை நீங்கள் டென்டர்களை அறிவிக்குமுன் கவனத்தில் எடுத்தீர்களா என்று நான் மத்தியூவிடம் வினவினேன். இதைக் கேட்டதும் மிகுந்த சீற்றத்துடன் அவர் பின்வருமாறு கூறினார், "எண்ணெய்த் தாங்கிகள் எமது பிரதேசத்திலேயே இருக்கின்றன. நாம் அவற்றை எமக்கு அதிக பணம் தரும் நிறுவனத்திற்கோ அல்லது நாட்டிற்கோ கொடுக்க முடியும். நாம் இந்தியாவிடம் இதுபற்றி கேட்கவேண்டிய தேவை என்ன இருக்கிறது?" என்னிடம் கேட்டார்.

பாராளுமன்றத்தில் இந்த விடயம் தொடர்பாக விவாதிக்கப்பட்டபோது அமைச்சர் தொண்டைமானும் இந்தியாவின் கரிசணை குறித்துச் சபையில் கேள்வியெழுப்பியிருந்தார். ஆனால், அதனை உடனடியாக மறுத்துப் பேசிய ஜெயவர்த்தன, இந்தியா குறித்து நா அநாவசியமாகக் கவலைப்படத் தேவையில்லை என்று கூறினார். இந்தியப் பத்திரிக்கையாளர் ஒருவருக்கு தான் வழங்கிய செவ்வியில் ஜெயவர்த்தன பின்வருமாறு கூறினார், "எமக்கு விருப்பமானவர்களுக்கு நாம் அவற்றினைக் கொடுப்போம். இந்த உலகில் எமக்கு பல நண்பர்கள் வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்தக் கூற்றிற்கு இந்தியா உடனடியாகப் பதிலளித்தது. தனது கடுமையான நிலைப்பாட்டினை செய்தி ஆய்வாளர் எம்.ஜி. குப்தாவின் கட்டுரைமூலம் இந்தியா வெளிப்படுத்தியது.  "திருகோணமலைத் துறைமுகம் தொடர்பாக இலங்கை ஜனாதிபதி மிகவும் தவறான கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. திருகோணமலைத் துறைமுகம் இந்தியாவின் எதிரிகளின் கைகளில்ப் போவதை எந்த இந்திய அரசாங்கமும் அனுமதிக்கப்போவதில்லை. பொறுப்பற்ற அரசாங்கம் ஒன்று நடந்துவரும் இலங்கையில், அந்த நாடு மேற்கொள்ளும் தவறான நடவடிக்கைகள் மூலம் இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து இந்தியா இந்தியா அக்கறை கொண்டுள்ளது. ஆகவே, இவ்வாறான  விபரீதமான நகர்வுகளை இலங்கை அரசு மேற்கொள்ளுவதை இந்தியா அனைத்து வழிகளிலும் தடுத்தே தீரும்" என்று அக்கட்டுரை கூறியிருந்தது.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் எண்ணெய் நிறுவமான "தி கோஸ்ட்டல் கோபரேஷன்", தனது பேர்முடா கிளையூடாக திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகளை இலங்கையரசிடமிருந்து 29 வருடங்களுக்குக் குத்தகைக்கு எடுத்துக்கொள்ளும் ஒப்பந்தம் நிறைவேறும் தறுவாயில் இருந்தபோது, இந்திய அரசாங்கம் அதனைத் தடுத்துவிட்டது. இந்தக் குத்தகை ஒப்பந்தப்படி எண்ணெய்த் தாங்கிகளை  பாவிப்பதற்கு முதற்கட்டணமாக 35,000 அமெரிக்க டொலர்களை அறவிடுவதென்றும், பின்னர் வருடாந்த குத்தகையாக 30,000 டொலர்களை அறவிடுவதென்றும், ஒவ்வொரு வருட முடிவிலும் குத்தகைப் பணம் பத்து வீதத்தினால் அதிகரிக்கப்படும் என்றும் ஒத்துக்கொள்ளப்பட்டது. மேலும், இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் அமெரிக்க நிறுவனம் இக்கிணறுகளை  தான் பாவிக்கலாம் அல்லது மூன்றாம் தரப்பொன்றிற்கு குத்தகைக்கு வழங்கலாம் என்கிற அனுமதியும் இருந்தது. மாநாட்டில் பேசிய மத்தியூ, எண்ணெய்த் தாங்கிகள் குத்தகைக்கு விடப்பட்டாலும் கூட, துறைமுகத்தை வெளிநாட்டுக் கடற்படைக் கப்பல்கள் பாவிக்கமுடியாது எனும் இலங்கையரசின் தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று கூறினார். ஆனால், அமைச்சரின் கூற்றினை கேள்விகேட்டிருந்த லண்டனிலிருந்து வெளிவரும் சண்டே டைம்ஸ் பத்திரிக்கை, குத்தகை ஒப்பந்தத்தின்படி இத்தடை செல்லுபடியாகாது என்று வாதிட்டிருந்தது. ஆனால், இந்தியாவின் கடுமையான அழுத்தங்களுக்குப் பின்னர் இந்த ஒப்பந்தத்தை இலங்கையரசு கைவிட்டது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியாவின் அழுத்தத்தைச் சமாளிக்க அமெரிக்கா நோக்கிச் சாய்ந்த  ஜெயவர்த்தன

Cartoon on JR Jayawardene Tamils April 1, 1984

ஆனால், 1983 ஆம் ஆண்டு தமிழர்கள் மேல் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளைத் தொடர்ந்து, இந்தியாவினால் இலங்கை மீது தொடர்ச்சியாகச் செலுத்தப்பட்டு வந்த அழுத்தத்தினையடுத்து, அமெரிக்காவினதும் இங்கிலாந்தினதும் உதவியை நாட விரும்பிய ஜெயவர்த்தன மீண்டும் திருகோணமலை எண்ணெய்த் தாங்கி விவகாரத்தைக் கையிலெடுத்தார். அதன்படி, 1983 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மூலம் இத்தாங்கிகளைக் குத்தகைக்கு விடும் புதிய டென்டர்களை இலங்கை அரசு அறிவித்தது. 1984 ஆம் ஆண்டு மாசி மாதம் 23 ஆம் திகதி, இத்தாங்கிகளை மூன்று சர்வதேசக் கம்பெனிகள் கூட்டாகக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டன. சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரோலியம் நிறுவனம், மேற்கு ஜேர்மனியின் எண்ணெய்த் தாங்கி நிறுவனம் மற்றும் டிரேடின் அப்ட் எனும் சுவிட்ஸர்லாந்தின் நிறுவனம் ஆகிய மூன்றுமே அவையாகும். மேலும், சுவிட்ஸர்லாந்தின் நிறுவனம் பாக்கிஸ்த்தானின் வர்த்தக மைய்யத்தில் பெருமளவு பங்குகளைத் தனதாகக் கொண்டிருந்தது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கேட்போர் கூடத்தில் எண்ணெய்த் தாங்கிகளை குத்தகைக்கு விடுத்த நிகழ்வுபற்றிப் பேசுவதற்கு பத்திரிக்கையாளர் மாநாடொன்றினை மத்தியூ கூட்டியிருந்தார். கொழும்பில் இருந்த இந்தியத் தூதரகத்தின் ஆலோசனைகளின் பெயரில் அக்கூட்டத்தில் கலந்துகொண்ட இந்தியப் பத்திரிக்கையாளர் ஒருவர், இலங்கைக்கு பலனளிக்கும் விதத்தில் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட டென்டரை இலங்கையரசு எதற்காக நிராகரித்தது என்று கேட்டார். அதற்கான பழியினை டென்டர்களை ஆராய்ந்த தொழிநுட்ப அதிகாரிகளின் மீது போட்ட மத்தியூ, இந்திய நிறுவனத்திற்கு எண்ணெய்த் தாங்கிகளைப் பராமரிக்கும் தகைமை கிடையாது என்று தனக்குத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார். அனால், விடாப்பிடியாக மத்தியூவிடம் கேள்விகளை முன்வைத்த இந்தியப் பத்திரிக்கையாளர், எண்ணெய்த் தாங்கிகளை குத்தகைக்கு எடுத்துக்கொண்டுள்ள மூன்று நிறுவனங்களும் 1982 ஆம் ஆன்டில், திருகோணமலைத் துறைமுகத்தின் எண்ணெய்த் தாங்கிகளை குத்தகைக்கு எடுக்கும் ஒரே நோக்கத்துடன் தான் உருவாக்கப்பட்டவை என்றும் குற்றஞ்சாட்டினார்.

Anura Bandaranaike portrait.jpg

அநுர பண்டாரநாயக்க

அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அநுர பண்டாரநாயக்கவும் இவ்விவகாரத்தைப் பாராளுமன்றத்தில் எழுப்பியிருந்தார். இந்தியா, இங்கிலாந்து, ரஸ்ஸியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த முன்னணி எண்ணெய் நிறுவனங்கள் உட்பட 8 நிறுவனங்கள் டென்டர்களை அனுப்பியபோதும் கூட, அவற்றை உதாசீனம் செய்துவிட்டே இலங்கையரசு புதிய நிறுவனத்திற்குக் கொடுத்திருக்கிறது என்று குற்றஞ்சாட்டினார். மேலும் இந்தியாவின் நிறுவனத்தினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் இலங்கைக்கு மிகவும் அனூகூலமானதாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அமைச்சர் மத்தியூவும், அரசாங்கமும் இணைந்தே இந்த சதியை நடத்தியிருப்பதாக அவர் கூறினார். உலகின் மிகச் சிறந்த இயற்கைத் துறைமுகமான திருகோணமலையினை அமெரிக்கர்களுக்குக் கொடுக்கும் முதற்படியே இந்தப் புதிய நிறுவனத்திற்கு இலங்கையரசால் வழங்கப்பட்ட குத்தகை என்றும் அவர் வாதிட்டார்.

1987 ஆம் ஆண்டு, தை மாதம் 8 ஆம் திகதி பாராளு மன்றத்தில் பேசிய அநுர , மீண்டும் இந்த குத்தகை விடயத்தை நினைவுகூர்ந்தார்.

"1983 ஆம் ஆண்டு, எண்ணெய்த் தாங்கிகளை குத்தகைக்கு விடும் டென்டர் நிகழ்வில் இந்தியாவும் தனது டென்டரை முன்வைத்திருந்தது. இலங்கைக்கு அனுகூலமானது என்று நான் அன்று கூறியதால் என்னை இந்தியாவின் கைக்கூலி என்று இச்சபையில் கேலி செய்தார்கள். மற்றைய எல்லாரையும் விட, இந்தியாவே அதிகளவு லாபம் தரும் திட்டத்தை முன்வைத்திருந்தது. அனால், நாம் என்ன செய்தோம்? இந்தியாவின் திட்டத்தை உதறித்தள்ளிவிட்டு, அனுபவம் அற்ற, செயற்திறனற்ற, குறைவான தரத்தினைக் கொண்டிருந்த சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றிற்குக் கையளித்தோம். அந்த நிறுவனத்தின் தலைவர் ஒரு வெளிநாட்டுக்காரர். அவரது மனைவியே அதன் உப தலைவர். நிறுவனத்தின் கடை நிலை ஊழியரும் நிர்வாகக் குழுவில் தீர்மானம் எடுப்பவராக பணிபுரிகிறார். இந்தியாவின் கைகளுக்கு எண்ணெய்த் தாங்கிகள் போவதைத் தடுக்கவே அவசர அவசரமாக புதிதாக அமைக்கப்பட்ட இந்த நிறுவனத்திற்கு நீங்கள் தாங்கிகளைக் கொடுத்தீர்கள்" என்று அவர் கூறினார்.

தனது எண்ணெய் நிறுவனத்தின் திட்டத்தை நிராகரித்து, இன்னொரு வெளிநாட்டு நிறுவனத்திற்கு எண்ணெய்த் தாங்கிகளை இலங்கையரசு கையளித்தது தொடர்பாக இந்தியா சீற்றமடைந்திருந்தது. திருகோணமலைத் துறைமுகத்தினையும் அதனோடு இணைந்த எண்ணெய்த் தாங்கிகளையும் எப்படியாவது அமெரிக்காவுக்குக் கொடுத்துவிடவேண்டும் என்கிற நோக்கத்திலேயே ஜெயவர்த்தனா சிங்கப்பூர் நிறுவனத்திற்குக் கொடுத்தார் என்று இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் திடமாக நம்பினர். மேலும், அமெரிக்காவிற்கு திருகோணமலைத் துறைமுகத்தைக் குத்தகைக்குக் கொடுப்பதன் ஊடாக அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றினைச் செய்துகொள்ளவும் ஜெயவர்த்தன முயல்கிறார் என்றும் அவர்கள் நம்பினார்கள். ஆகவே, இந்தியா மீண்டும் ஜெயவர்த்தன மீது கடுமையான அழுத்தங்களைப் பிரயோகித்து, இரண்டாவது முறையாகவும் குத்தகைத் திட்டத்தை இரத்துச் செய்யப் பண்ணியது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தனது பிராந்திய நலனிற்காகவும், பாதுகாப்பிற்காகவும் தமிழரைப் பாவித்த இந்தியா

Book Review: Jairam Ramesh's Interwined Lives: PH Haksar and Indira Gandhi  | The Financial Express

இலங்கை மீது இராஜதந்திர ரீதியிலான அழுத்தங்களைப் போடுவதன் மூலம் மட்டுமே அதனை தனது வழிக்குக் கொண்டுவரலாம் என்பதை இந்தியா நம்பவில்லை. கொழும்பு அரசாங்கத்தை எப்படியாவது சீர்குலைத்துவிடவேண்டும் என்று எண்ணிய இந்தியா, தேவையேற்படின் இராணுவ நடவடிக்கை ஒன்றினையும் மேற்கொள்ள ஆயத்தமாகியது. இந்த நோக்கத்தை அடைந்துகொள்வதற்காக தமிழர் மேல் இலங்கையரசால் நடத்தப்பட்ட அக்கிரமங்களையும், தனிநாட்டிற்கான தமிழரின் கோரிக்கையினையும் பாவித்தது.

தனது பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அதிகாரிகளிடம் பேசிய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, இந்தியாவின் முன்னால் உள்ள தெரிவுகள் குறித்து அறிக்கையொன்றினைத் தயாரிக்குமாறு கோரியிருந்தார். இரண்டுவகையான தெரிவுகள் இந்திராவிடம் கையளிக்கப்பட்டன. ஒன்று கடுமையானது மற்றையது மென்மையானது. கடுமையான தெரிவு வங்கதேசத்தில் இந்தியா நடத்திய போருக்கு ஒப்பானது. தமிழ் ஆயுதக் குழுக்கள் முன்னின்று சண்டையினை ஆரம்பிக்க, இந்திய ராணுவம் இறுதியில் போரினை முடித்துவைப்பது என்பதே அத்திட்டம்.

மென்மையான தெரிவு என்னவெனில், இராஜதந்திர அழுத்தங்களைத் தொடர்ச்சியாக இலங்கை மீது செலுத்தி அதனை அடிபணிய வைப்பது.

ஆனால், வங்கதேச விடுதலை பாணியிலான கடுமையான தெரிவினை நிராகரித்த இந்திரா, மென்மையான தெரிவான ராஜதந்திர அழுத்தத்தின் மூலம் இலங்கையைப் பணியவைக்கலாம் என்று எண்ணினார். ஆனால், ரோ அதிகாரிகள் முன்வைத்த தமிழ்ப் போராளிகளுக்கு உதவுவதன் மூலமும், ராஜதந்திர அழுத்தங்கள் மூலமும் ஜெயாரை வழிக்குக் கொண்டுவரலாம் என்கிற ஆலோசனையினை இந்திரா ஏற்றுக்கொண்டார்.

தமிழ்ப் போராளிகளிப் பயிற்றுவிக்க அமர்த்தப்பட்ட இந்திய ராணுவ அதிகாரிகள் போராளிகளுடன் பேசும்போது, இலங்கை மீது ஆக்கிரமிப்பொன்றை மேற்கொள்ளும் திட்டம் இந்தியாவிற்கு இருப்பதாகவும், அப்படியான ஆக்கிரமிப்பு யுத்தம் ஒன்றில் போராளிகள் இந்திய ராணுவத்தின் துணைப்படைகளாக இயங்கவேண்டி வரும் என்றும் கூறியிருக்கிறார்கள்.  "நீங்கள் எங்களுக்கு வழியைக் காட்டுங்கள், மீதியை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்" என்று இந்திய உயர் ராணுவ அதிகாரியொருவர் தன்னிடம் தெரிவித்ததாக ஈரோஸ் அமைப்பின் முக்கியஸ்த்தர் சங்கர் ராஜி கூறினார். அதேவேளை, லெபனானில் கெரில்லா பாணியிலான ஆயுதப் பயிற்சிக்குச் சென்றிருந்த .பி.டி.பி யின் டக்கிளஸ் தேவானந்தா கூறும்போது, இந்தியாவில் தமக்கு வழங்கப்பட்ட பயிற்சி மரபுவழிப் போர்முறையிலானது என்று கூறியிருக்கிறார். தமக்கு இந்தியாவினால் வழங்கப்பட்ட ஆயுதங்கள் மிகவும் பழமையானவையாகக் காணப்பட்டதுடன், நடைமுறைச் சாத்தியமற்றவை என்பதையும் பிரபாகரன் உணர்ந்துகொண்டார். தமக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களைப் பார்த்துப் பதற்றமடைந்த பிரபாகரன், "பாருங்கள், அவர்கள் எங்களுக்கு பழைய ஆயுதங்களைத் தந்திருக்கிறார்கள். எங்களை மடையர்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள் போலுள்ளது" என்று பிரபாகரன் விசனத்துடன் கூறியிருக்கிறார்.

undefined

இந்தியாவின் குறிக்கோள்களை அடையும் வகையிலேயே போராளிகளுக்கான பயிற்சிகளை இந்திய அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். வரைபடங்களை வாசித்து அறிந்துகொள்ளுதல், வீதியில் அமைக்கப்பட்டிருக்கும் பாலங்களை வரைந்துகொள்ளுதல், ரயில்ப்பாதைகள் மற்றும் முக்கிய கட்டடங்களின் அமைவிடங்களைத் துல்லியமாக கணித்தல், முக்கிய இடங்களின் அமைவிடங்களை புகைப்படம் எடுத்தல், உலங்குவானூர்திகள் தரையிறங்கக் கூடிய பரந்த வெளிகளை அடையாளம் காணுதல், எதிரியின் கடற்படையின் நடமாட்டங்களைக் கண்காணித்தல் ஆகிய நடவடிக்கைகளையே இந்திய அதிகாரிகள் போராளிகளுக்குக் கற்றுத் தந்தனர். டெலோ அமைப்பின் இரு விசேட குழுக்கள் திருகோணமலைத் துறைமுகம் தொடர்பான விடயங்களை சேகரிப்பதற்காக மட்டுமே பயிற்றப்பட்டனர்.

பெரும்பான்மையான போராளிகுழுத் தலைவர்கள் இந்தியாவின் திட்டத்தை நன்கு அறிந்துகொண்டனர். "இந்தியா தனது வெளியுறவுக் கொள்கைக்காகவும், மூலோபாய இலக்குகளை அடைந்துகொள்வதற்காகவும் எம்மைப் பாவிக்கிறது" என்று சங்கர் ராஜி கூறினார்.

ஆனால், தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கு வேறு தெரிவுகள் இல்லாமையினால், இந்தியாவின் திட்டத்தின்படியே நடக்க இணங்கினார்கள். நடப்பது என்னவென்பதை பிரபாகரன் உடனடியாகவே கண்டுகொண்டார். இந்தியாவின் நலன்கள் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு நேர் எதிரானது என்பதை அவர் உணர்ந்தார். ஆகவே, தமிழர்களின் அபிலாஷையான  தனிநாட்டினை அடையவேண்டுமென்றால்,  இந்தியாவை எதிர்ப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதையும் அவர் உணர்ந்துகொண்டார்.

See the source image

சஞ்சேயுடன் இந்திரா காந்தி

தமிழ்மக்களின் நலன்களுக்கும், இந்தியாவின் நலன்களுக்கும் இடையிலான மோதல், 1987 ஆம் ஆண்டு ஆடி மாதம் , ராஜீவ் காந்தி இந்திய - இலங்கை ஒப்பந்தத்தைச் செய்த் தீர்மானித்தபோது வெளிச்சத்திற்கு வந்தது. தமிழரின் அவலங்கள் தொடர்பான விடயங்களில் அளவுக்கதிகமான விட்டுக்கொடுப்புக்களைச் செய்வதற்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இந்திய அதிகாரிகள் தயாராக இருந்தார்கள். அவர்களின் கவனமெல்லாம் இந்தியாவின் நலன்களை ஒப்பந்தத்தில் எப்படியாவது சேர்த்துக்கொள்வதிலேயே இருந்தது. இதனை அவர்கள் எதுவித விட்டுக்கொடுப்பிற்கும் இடமின்றிச் செய்தார்கள். இந்தியாவின் நலன்களாக ஒப்பந்தத்தில் பின்வருவன இந்திய அதிகாரிகளால் புகுத்தப்பட்டன :

1. இலங்கையில் வெளிநாடுகளின் ராணுவத்தினரோ, புலநாய்வு அமைப்புக்களோ செயற்பட முடியாது.

2. திருகோணமலை துறைமுகத்தையோ அல்லது இலங்கையில் இருக்கும் வேறு எந்தவொரு துறைமுகத்தையோ  வேறு எந்தவொரு நாட்டினதும் இராணுவம் பாவிக்க இலங்கை அனுமதியளிக்க முடியாது.

3. திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகளை இந்திய - இலங்கை நிறுவனங்களின் ஒருங்கமைப்பே பராமரிக்க முடியும்.

4. இலங்கையில் செயற்பட்டு வரும் வெளிநாடுகளின் ஒலிபரப்பு நிலையங்கள் அவற்றினை ராணுவ நோக்கங்களுக்காகவோ அல்லது புலநாய்வுச் செயற்பாடுகளுக்காகவோ பயன்படுத்துவதை இலங்கை அனுமதிக்க முடியாது.

இவற்றுள் இறுதியாக இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனை, வொயிஸ் ஒப் அமெரிக்கா எனும் ஒலிபரப்புச் சேவை பற்றியது.

VOA-sri-lanka-e1584885806867.jpg

வொயிஸ் ஒப் அமெரிக்கா - புத்தளம்

1982 ஆம் ஆண்டு, இந்திரா காந்தி ஜெயார் மீது செலுத்திய அழுத்தங்களில், அமெரிக்க ஒலிபரப்புச் சேவை ஒரு விடயமாக இருக்கவில்லை. ஆனால், 1977 ஆம் ஆண்டின் தேர்தல் பிரச்சாரங்களின் போது இந்திராவையும் சஞ்சே காந்தியையும் "பசுவும் கன்றும்" என்று ஜெயார் இழிவாகப் பேசியது, மொராஜி தேசாய் மற்றும் சஞ்சீவ ரெட்டி ஆகியோருடன்  ஜெயார் கொண்டிருந்த நெருங்கிய நட்பும், தனது தோழியான சிறிமா பண்டாரநாயக்காவின் சிவில் உரிமைகளை ஜெயார் பறித்துப் போட்டதும் இலங்கை தொடர்பாக இந்திரா செயற்படுத்திவந்த வெளியுறவுக்கொள்கையில் கணிசமான தாக்கத்தினைச் செலுத்தியிருந்தன. ஆகவேதான், பாண்டிபஜார் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த பிரபாகரனையும், உமா மகேஸ்வரனையும் நாடு கடத்துமாறு இலங்கை விடுத்த வேண்டுகோளினை இந்திரா நிராகரித்திருந்தார்.

 

 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியாவைப் பற்றி எழுத மனிசருக்கு ரத்தகொதிப்பு வரப் போகுது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, ரஞ்சித் said:

வொயிஸ் ஒப் அமெரிக்கா

வேறு ஒரு திரியில் இதனை பற்றி குறிப்பிடும்போது இது மன்னாரில் என தவறாக குறிப்பிட்டுள்ளேன், இந்த கட்டுரையில் புத்தளத்தில் என்பதனை பார்க்கும் போது தவறினை உணருகிறேன்.

  • Like 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் - இப்படிக்கு  BBC  🤣 The Guardian  பத்திரிகைச் செய்தி - 2012 ல்  Syrian rebels accused of war crimes Human Rights Watch says it has documented more than a dozen summary executions of prisoners Ian Black, Middle East editor Mon 17 Sep 2012 13.22 BST Opposition groups in Syria have been accused of committing war crimes including torture and the summary execution of prisoners, and the UN has been warned of a growing number of human rights violations and the presence of foreign Islamist fighters ranged against the regime of Bashar al-Assad. Human Rights Watch said it had documented more than a dozen executions by rebels in the northern provinces of Idlib and Aleppo and the coastal region of Latakia. Three opposition leaders who were confronted with evidence of extrajudicial killings said the victims had deserved to die, HRW reported. https://amp.theguardian.com/world/2012/sep/17/syrian-rebels-accused-war-crimes
    • 15 DEC, 2024 | 11:12 AM   யாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  கரவெட்டி - தில்லையம்பலம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.   காய்ச்சல் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்த இளைஞர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று சனிக்கிழமை (14) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  இளைஞனுக்கு எலிக்காய்ச்சலுக்குரிய அறிகுறிகள் காணப்பட்டதாகவும், இளைஞனின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும், பரிசோதனை முடிவிலேயே எலிக்காய்ச்சலா என்பதனை உறுதிப்படுத்த முடியும் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.  கடந்த சில தினங்களில் காய்ச்சல் காரணமாக மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் முல்லைத்தீவை சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட ஏழு பேர் உயிரிழந்துள்ள நிலையில், நேற்று உயிரிழந்த இளைஞனுடன் உயிரிழப்பு 8ஆக அதிகரித்துள்ளது.  இதுவரை உயிரிழந்த மூவருக்கு எலிக்காய்ச்சல் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  அதேவேளை யாழில் சுமார் 70 பேர் எலிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/201311
    • 15 DEC, 2024 | 09:41 AM (லியோ நிரோஷ தர்ஷன்) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயறபாடுகளை விரிவுப்படுத்துவது குறித்து சீனா ஆர்வம் செலுத்தியுள்ளது. குறிப்பாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மித்த பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கான இணக்கப்பாட்டை கடந்த அரசாங்கத்துடன் எட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது ஹம்பாந்தோட்டையில் இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை பாரிய முதலீட்டில் நிர்மாணிக்க சீனா நடவடிக்கை எடுத்துள்ளது.  தெற்காசிய பிராந்தியத்தில் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையத்தை ஹம்பாந்தோட்டையில் உருவாக்கி இந்த பிராந்தியத்தில் எண்ணெய் ஆதிக்கத்தை மாற்றுவதற்கான   திட்டமாகவே இது உள்ளது. மேலும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின் போது  துறைமுக நகர் குறித்தும் ஆலோசிக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. குறிப்பாக துறைமுக நகர் அபிவிருத்தி நடவடிக்கைகளை விரைவாக துரிதப்படுத்த சீனா  தீர்மானித்துள்ளது. மேலும் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் மூலோபாய ஒத்துழைப்புகளை முன்னிலைப்படுத்தி சீனக் கப்பல்கள் இலங்கைக்கு வருவதற்கான விசேட ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதன் பிரகாரம் பல சீன கப்பல்கள் இலங்கைக்கு வந்தன. இருப்பினும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சி காலத்தில் ஏற்பட்ட இராஜதந்திர  நெருக்கடியால் சீனக் கப்பல்கள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைவது ஒரு வருட காலத்திற்கு நிறுத்தப்பட்டது. அந்த  கால எல்லை எதிர்வரும் ஜனவரி  மாதம் 15 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. இதன்படி ஜனவரி 15 ஆம் திகதிக்கு பின்னர் சீன கப்பல்கள் இலங்கைக்கு விஜயம் செய்ய முடியும். ஆனால் சீன கப்பல்களுக்கு எத்தகைய அனுமதியை அரசாங்கம் கொடுக்கும் குறித்து உறுதியான நிலைப்பாடு இதுவரையில் வெளிப்படுத்தப்படவில்லை. மறுபுறம் இலங்கையை மையப்படுத்திய இந்திய - சீன இராஜதந்திர அழுத்தங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து அரசாங்கத்தின் விசேட குழு ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/201301
    • மஹிந்தவின் பாதுகாப்புக்காக மாத்திரம் 326 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாக தகவல்! 14 DEC, 2024 | 05:37 PM (எம்.வை.எம்.சியாம்) முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக வருடமொன்றுக்கு 1,100 மில்லியன் ரூபாவும் அதில் 326 மில்லியன் ரூபா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக மாத்திரம் செலவிடப்படுவதாகவும் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் செலவினத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களில் 116 பேர் பொலிஸ் கடமைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.  மேலும் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 60ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை எதிர்காலத்தில் அதிகரிப்பதா அல்லது குறைப்பதா என்பது தொடர்பில் மீள ஆராயப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்தார். தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்துக்கு அமைய முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்கள் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய அரசாங்கத்தினால் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.  இந்த குழுவினால் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்காக இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு ஒதுக்கப்படும் நிதி தொடர்பில் ஆராயப்பட்டது.  இதன்போது முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வருடமொன்றுக்கு 1100 மில்லியன் ரூபா நிதி செலவிடப்படுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மாத்திரம் அதில் வருடமொன்றுக்கு 326 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செலவினத்தை கட்டுப்படுத்தும் நிலையில், மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 60ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள  ஆயுதம் ஏந்திய படை தொடர்ந்தும் கடமையில் இருக்கும் எனவும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை எதிர்காலத்தில் அதிகரிப்பதா அல்லது குறைப்பதா என்பது தொடர்பில் மீள ஆராயப்படும் எனவும்  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்தார். மேலும் பொலிஸ் சேவையில் 24 ஆயிரம் பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் இதற்கு முன்னர் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு மற்றும் பிரதமர் பாதுகாப்பு பிரிவுகளில் கடமையாற்றிய 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட உத்தியோகத்தர்கள் பொலிஸ் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். அத்துடன் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களது பாதுகாப்பு நிமித்தம் கடமைகளில் ஈடுபட்டிருந்தவர்கள் மீள பெறப்படவில்லை எனவும் அதனையும் பரிசீலனை செய்து குறைப்பதன் ஊடாக குற்றத்தடுப்பு பிரிவு உள்ளிட்ட இதர பொலிஸ் கடமைகளுக்காக அவர்களை  ஈடுபடுத்த முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/201275
    • பட மூலாதாரம்,DCP, WHITEFIELD படக்குறிப்பு, ஹரியாணா மாநிலம் குருகிராமில் அதுல் சுபாஷின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார் கட்டுரை தகவல் எழுதியவர், பல்லா சதீஷ் பதவி, பிபிசி செய்தியாளர் எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில விஷயங்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். பெங்களூருவில் பொறியாளர் அதுல் சுபாஷின் தற்கொலை வழக்கில் அவரது மனைவி நிகிதா சிங்கானியாவை பெங்களூரு காவல்துறை கைது செய்துள்ளனர். மேலும் நிகிதாவின் தாய் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரையும் காவல்துறை கைது செய்துள்ளது. "ஹரியானா மாநிலம் குருகிராமில் நிகிதா கைது செய்யப்பட்டுள்ளார். அவரது தாயும் சகோதரரும் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பெங்களூருவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்", என்று பெங்களூரு ஒயிட்ஃபீல்டு துணை போலீஸ் கமிஷனர் சிவகுமார் பிபிசி ஹிந்தியிடம் கூறியுள்ளார். "அவர்கள் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். மூவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்", என்றும் அவர் கூறினார். அதுல் சுபாஷ் இறப்பதற்கு முன், 24 பக்க தற்கொலை கடிதத்தை எழுதி வைத்துள்ளார். மேலும் சுமார் ஒரு மணி நேர வீடியோ பதிவையும் செய்துள்ளார். அதில், தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் தனக்கு தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டியிருந்தார். என்ன நடந்தது? "வழக்கு முடியும் வரை எனது சாம்பலைக் கரைக்க வேண்டாம். எனக்கு நீதி கிடைக்காவிட்டால், எனது சாம்பலை நீதிமன்றத்திற்கு அருகே உள்ள குப்பைக் கிடங்கில் எறிந்துவிடுங்கள்.'' பெங்களூருவை சேர்ந்த ஐடி ஊழியர் அதுல் சுபாஷ் தனது தற்கொலை கடிதத்தில் எழுதிய வரிகள் இவை. மனைவி, மனைவியின் குடும்பத்தினர் மற்றும் மாஜிஸ்திரேட் ஆகியோரின் தொல்லையாலேயே, தான் தற்கொலை செய்து கொள்வதாக அதுல் எழுதிய கடிதம் தற்போது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுல் சுபாஷ் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்தியாவில் ஆண்கள் மீதான சட்டப்பூர்வ படுகொலை நடைபெறுகிறது" என்று குறிப்பிட்டு ஒரு மணிநேரம் 20 நிமிடம் நீளம் கொண்ட ஒரு வீடியோவையும், "இந்த ஏடிஎம் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது" என்று தலைப்பு வைக்கப்பட்ட 24 பக்க தற்கொலை கடிதத்தையும் வெளியிட்டு, தற்கொலை செய்துகொண்டார். பட மூலாதாரம்,ATULSUBASH/X படக்குறிப்பு, தனது தற்கொலைக்கு முன்பாக, அதுல் சுபாஷ் ஒரு மணிநேரம் 20 நிமிட நீளம் கொண்ட வீடியோ ஒன்றைப் பதிவு செய்துள்ளார். நகரின் மையப்பகுதியின் அடித்தளத்தில் சிறை, கண்ணி வெடிகள் - சிரியா உளவு அமைப்பின் ரகசிய இடம் எப்படி இருக்கும்?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சாவர்க்கர், ஏகலைவன் பற்றி ராகுல் காந்தி பேசியது என்ன? நேரு, இந்திராவை குறிப்பிட்டு மோதி விமர்சனம்14 டிசம்பர் 2024 'நீதி கிடைக்க வேண்டும் (Justice is Due)' என்று ஆங்கிலத்தில் எழுதிவிட்டு அதுல் தற்கொலை செய்துகொண்டார். அதற்கு அடுத்ததாக இறக்கும் முன் செய்ய வேண்டிய காரியங்களின் சரிபார்ப்புப் பட்டியலை அலமாரியில் ஒட்டி, அனைத்தையும் செய்ததைப் போல் டிக் செய்துள்ளார். அதுலின் சகோதரர் விகாஸ் குமார் அளித்த புகாரின் அடிப்படையில் பெங்களூரு மாரத்தஹள்ளி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்ற எண் 0682இன் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், அதுலின் மனைவி நிகிதா சிங்கானியா, அத்தை நிஷா சிங்கானியா, மைத்துனர் அனுராக் சிங்கானியா, மாமா சுஷில் சிங்கானியா ஆகியோரின் பேரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் உள்ள ஜான்பூர் முதன்மை குடும்பநல நீதிமன்ற மாஜிஸ்திரேட்டின் பெயரை தனது தற்கொலைக் கடிதத்தில் அதுல் குறிப்பிட்டு இருந்தாலும், விகாஸ் அந்த மாஜிஸ்திரேட்டின் பெயரை புகாரிலோ அல்லது முதல் தகவல் அறிக்கையிலோ குறிப்பிடவில்லை. அந்தப் புகாரில், டிசம்பர் 9ஆம் தேதி அதிகாலையில் அவர் தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்ததாக அதுலின் சகோதரர் எழுதியுள்ளார். கடிதத்தில் என்ன இருக்கிறது? அதுல் எழுதிய 24 பக்க கடிதத்தில் சில தகவல்கள், கடந்த கால வழக்குகளின் விவரங்கள், வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளின் ஸ்க்ரீன்ஷாட்கள் மற்றும் வேறு சில புகைப்படங்கள் உள்ளன. ஒவ்வொரு பக்கத்திலும் 'நீதி கிடைக்க வேண்டும்' என்ற பெரிய தலைப்பு உள்ளது. தனது பணத்தை எடுத்துக்கொண்டு அதே பணத்தில் தனது குடும்பத்தினருக்கு எதிராக போராட அனுமதிக்க மாட்டேன் என்றும், நீதிமன்றத்தில் லஞ்சம் கேட்டதாகவும், ஆனால் ஊழல் செய்ய விரும்பவில்லை என்றும் கடிதத்தில் எழுதியுள்ளார். தனது குழந்தையை ஆயுதமாகப் பயன்படுத்தி, பராமரிப்புப் பணம் என்ற பெயரில் பணம் திருடுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தென் மாவட்டங்களில் வெள்ளம்: எத்தனை நாட்களுக்கு மழை தொடரும்?13 டிசம்பர் 2024 சர்வதேச அரங்கில் ஜொலிக்கும் தமிழக வீரர்கள்: இந்தியாவின் செஸ் மையமாக தமிழ்நாடு உருவானது எப்படி?14 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் அதிகரித்து வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதுல் கடிதத்தில் கூறியுள்ள மற்ற விஷயங்கள் என்ன? அதுல் மீது அவரது மனைவி தாக்கல் செய்த 6 வழக்குகளின் விவரம், விரைவு விசாரணைக்காக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்கள், கூடுதல் பணத்திற்காக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு மனு என மொத்தம் 9 மனுக்கள். இந்தக் கடிதத்தில் அவரது மனைவி இரண்டு முறை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியதாக சில உரையாடல்கள் உள்ளன. அவர்களின் உரையாடல்கள் அனைத்தும் இந்தியில் விரிவாக எழுதப்பட்டுள்ளன. பணம் கேட்டதாக நீதிமன்ற ஊழியர்கள் மீது குற்றச்சாட்டுகள் இருப்பதாகத் தெரிகிறது. ஆவணத்தில் அவர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் கோரியதாகக் கூறப்படும் குறிப்பிட்ட தொகைகள் உள்ளன. ஜான்பூர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த கேள்விகள், தீர்ப்பில் உள்ள சில அம்சங்கள் மீதான தனது ஆட்சேபனைகளை விரிவாக எழுதியுள்ளார். இந்தப் பிரிவில் மொத்தம் 17 விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. உச்சநீதிமன்ற தீர்ப்புகள் பின்பற்றப்படவில்லை, பராமரிப்புத் தொகையை முறையாக நிர்ணயம் செய்யவில்லை, நீதிபதி ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டார் எனப் பல குற்றச்சாட்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இருப்பினும், பிபிசியால் இந்த விஷயங்களை சுயாதீனமாகச் சரிபார்க்க இயலவில்லை. அமேசானின் 'கொதிக்கும் நதி': மனித குலத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு வழியாக ஆய்வாளர்கள் கருதுவது ஏன்?14 டிசம்பர் 2024 அமெரிக்காவில் ரூ.237 கோடிக்கு ஏலம் போன ஒரு ஜோடி காலணி - அதில் என்ன சிறப்பு?9 டிசம்பர் 2024 அதுலின் கோரிக்கைகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சட்டங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அவரது வழக்குகளின் விசாரணை பொதுவெளியில் (நேரலையில்) நடத்தப்பட வேண்டும். அவரது தற்கொலை கடிதம் மற்றும் வீடியோக்களை அவரது இறப்புச் சான்றிதழாக எடுக்க வேண்டும். உத்தர பிரதேச நீதிமன்றங்களைவிட பெங்களூரு நீதிமன்றங்கள் சிறந்தவை. அவரது வழக்கை இங்கு மாற்ற வேண்டும். அவரது குழந்தையை, அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும். அவரது மனைவி மற்றும் மனைவியின் உறவினர்களை அவரது சடலத்தின் அருகில் அனுமதிக்கப்படக் கூடாது. நீதிமன்ற வழக்கில் தீர்ப்பு வரும் வரை அவரது சாம்பலை நதிகளில் கரைக்க வேண்டாம். அவருடைய மனைவியும், ஊழல் செய்த நீதிபதியும் தண்டிக்கப்படாவிட்டால், "என் சாம்பலை நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள குப்பையில் போடுங்கள்" என்றும் அவர் தெரிவித்துள்ளார். தன்னைத் துன்புறுத்தியவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் தனது குடும்பத்தைத் துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும் எனவும் எழுதியுள்ளார். அவரது மனைவி பொய் வழக்குகள் போட்டதாக ஒப்புக்கொள்ளும் வரை, அவர்களுடன் சமரசம் செய்து கொள்ளாமல், வழக்குகளை வாபஸ் பெற அனுமதிக்காதீர்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடிதத்தில், சட்டங்கள் பெண்களுக்குச் சாதகமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இவற்றை எழுதியதோடு, அதுல் ஒவ்வொரு பக்கத்திலும் கையெழுத்திட்டுள்ளார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு நிகிதாவோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களோ பதிலளிக்கவில்லை. அவர்கள் பதிலளித்தால் அது இங்கு இணைக்கப்படும். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, பலர் நிகிதாவின் லிங்க்ட்-இன் தளத்தில் இருந்த அவரது சுயவிவரத்தில் உள்ள தகவல்களையும் புகைப்படங்களையும் சேகரித்து இணையத்தில் வெளியிட்டனர். அவரைப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி அவர் பணிபுரியும் நிறுவனத்தை டேக் செய்து குறிப்பிட்டனர். தற்போது, நிகிதா தனது அனைத்து சமூக ஊடக கணக்குகளையும் மறைத்து வைத்துள்ளார் அல்லது முடக்கியுள்ளார். ஆனால் இறுதியாக ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பு அவரது தரப்பு வாதத்தைக் கேட்க வேண்டும் என்று இணையதளத்தில் சிலர் கூறுவதைக் காண முடிந்தது. காட்ஸிலா: 70 ஆண்டுகளாக மிரட்டும் மான்ஸ்டர் - ஜப்பானால் மட்டுமே உருவாக்க முடிந்தது ஏன்?7 டிசம்பர் 2024 நீலகிரியில் 'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடி - 8 நாட்களாக வீட்டில் முடக்கப்பட்ட இளம்பெண்!12 டிசம்பர் 2024 இந்தியாவில் ஆண்களின் தற்கொலைகள் அதிகரிக்கிறதா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, திருமண முரண்பாடு காரணமாகத் தற்கொலை செய்துகொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை பெண்களைவிட இரு மடங்கு அதிகம் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதுலின் தற்கொலை நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சமூக ஊடகங்களில் இந்தியாவில் ஆண்களின் உரிமைகள் குறித்துப் பெரிய விவாதம் நடந்து வருகிறது. குறிப்பாக இந்திய சமூகத்தில் துன்புறுத்தல் மற்றும் அடக்குமுறைகளில் இருந்து பெண்களைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட சட்டங்கள், "காலப்போக்கில் சாபமாக மாறிவிட்டது" என்று வாதிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தச் சட்டங்களை எதிர்த்துப் போராடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் பல தன்னார்வ நிறுவனங்கள் போராடி வருகின்றன. நாட்டில் ஆண்களுக்கு எதிரான சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு அதுலின் தற்கொலை வழக்கு ஒரு முக்கிய உதாரணம் என்று அத்தகைய அமைப்புகள் அனைத்தும் இப்போது சுட்டிக்காட்டுகின்றன. ஆண், பெண் பாகுபாடு இல்லாத சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்றும், சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏகம் அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களின் துன்புறுத்தல்களால் ஏற்பட்ட ஆண்களின் இறப்பு சம்பவங்கள் கணிசமான அளவு அதிகரித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கைப்படி, 2023ஆம் ஆண்டில் மனைவியால் கொலை செய்யப்பட்ட கணவர் தொடர்பான 306 வழக்குகளில், 213இல் திருமணத்திற்கு வெளியிலான உறவுகள் சார்ந்த விவகாரங்கள் காரணமாகவும், 55இல் குடும்பத் தகராறு காரணமாகவும், மீதமுள்ளவை பிற காரணங்களுக்காகவும் நிகழ்ந்துள்ளன. அதே ஆண்டில் அவர்கள் ஆய்வு செய்யப்பட்ட 517 தற்கொலை வழக்குகளில், 235 ஆண்கள் மன உளைச்சலால் இறந்துள்ளனர். அதோடு, 22 பேர் குடும்ப வன்முறையால், 47 பேர் திருமணத்திற்கு வெளியிலான உறவு விவகாரங்களால், 45 பேர் பொய் வழக்குகளால் மற்றும் 168 பேர் பிற காரணங்களால் இறந்துள்ளனர் என்று அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இந்த உளவியல் ரீதியான துன்புறுத்தல்களில் பெரும்பாலானவை பொய் வழக்குகள், குற்றச்சாட்டுகள் மற்றும் மனைவி அல்லது அவரது பிரதிநிதியால் சிறைவைக்கப்படுவதாக அச்சுறுத்தப்படுவது ஆகியவை அடங்குவதாக அந்த அறிக்கை கூறுகிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத் தரவுகளின்படி, 2022இல் இந்தியாவில் 1,70,924 பேர் தற்கொலை செய்துள்ளனர். அவர்களில் 31.7 சதவீத ஆண்களும், பெண்களும் குடும்பப் பிரச்னைகளாலும், 4.8 சதவீதம் பேர் திருமணம் தொடர்பான பிரச்னைகளாலும், 4.5 சதவீதம் பேர் காதல் விவகாரங்களாலும் உயிரிழந்துள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டின் தரவுகளும் கிட்டத்தட்ட இதே சதவீதத்தில் உள்ளது. அதாவது பெண்களைவிட ஆண்கள் அதிகமாகத் தற்கொலை செய்து கொள்வதாக இந்தத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதே சூழலில், வரதட்சணை கொடுமை, குழந்தை இல்லாமை உள்ளிட்ட திருமணம் தொடர்பான பிரச்னைகளால் இறக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத் தரவு கூறுகிறது. குகேஷ் தொம்மராஜு: மகனின் சதுரங்க கனவுக்காக மருத்துவப் பணியைக் கைவிட்ட தந்தை13 டிசம்பர் 2024 இஸ்ரேல் சிரியாவை தாக்குவது ஏன்? கோலன் குன்றுகளில் என்ன நடக்கிறது?12 டிசம்பர் 2024 ஆண்களுக்கும் சட்டங்கள் தேவை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆண், பெண் பாகுபாடு இல்லாத சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்றும், சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுல் போன்றவர்கள் இன்று உயிரிழக்கக் காரணம், பாலின பாகுபாட்டுடன் உருவாக்கப்பட்ட சட்டங்களே என்றும், இதனால் ஆண்கள் மிகவும் அவதிப்படுவதாகவும் ஏகம் நியாய அறக்கட்டளையின் நிறுவனர் தீபிகா நாராயண பரத்வாஜ் தெரிவித்துள்ளார். "தற்போது இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பிற்காக ஆறுக்கும் மேற்பட்ட சட்டங்கள் உள்ளன. ஆனால் ஆண்களுக்கு எதுவும் இல்லை. இந்த நாட்டில் ஆண்களுக்கு எதிராகவும் குடும்ப வன்முறைகள் நடக்கின்றன. தங்கள் கணவரைத் துன்புறுத்தும் மனைவிகளும் உள்ளனர். ஆனால் அவர்களுக்காக சட்டம் இல்லை. இதுபோன்ற வழக்குகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், அதற்காக சட்டங்கள் இயற்றக்கூடாதா?" என்று தீபிகா நாராயண் பரத்வாஜ் கேள்வி எழுப்புகிறார். "ஒன்றல்ல இரண்டல்ல... அதுலின் மனைவி ஒரே நேரத்தில் 9 வழக்குகளைப் பதிவு செய்துள்ளார். கணவர் மீது மட்டுமின்றி கணவர் குடும்பத்தினர் மீதும் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இதுபோன்ற பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். அதனால்தான் அதுலின் வழக்குக்கு இவ்வளவு ஆதரவு கிடைத்தது," என்று தீபிகா பரத்வாஜ் பிபிசியிடம் கூறினார். இதெல்லாம் பெண்களுக்கு எதிராகச் செய்யப்படவில்லை என்றும், ஆண்களுக்கும் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகவே தான் கூறுவதாகவும் அவர் தெளிவுபடுத்தினார். 60 வயது பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததாக 50 பேர் மீது புகார் - கணவரின் உத்தரவின் பேரில் செய்ததாக வாக்குமூலம்13 டிசம்பர் 2024 டியாகோ கார்சியா: ரகசிய ராணுவத் தீவில் சிக்கித் தவித்த இலங்கை தமிழ் பெண் - குழந்தைகளுடன் உயிர் பிழைத்தது எப்படி?9 டிசம்பர் 2024 உச்சநீதிமன்றம் பலமுறை தெரிவித்துள்ளது பட மூலாதாரம்,GETTY IMAGES பெண்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக உச்சநீதிமன்றம் கூறியிருந்தாலும், புதிய சட்டங்களையோ திருத்தங்களையோ அரசு கொண்டு வந்த நிகழ்வுகள் இல்லை என்று மூத்த வழக்கறிஞர் லட்சுமிநாராயணா கருத்து தெரிவித்தார். "சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்துவதற்கான பிரச்னை அனைத்து வகையான சட்டங்களிலும் உள்ளது. ஆனால், பெண்கள் தொடர்பான வழக்குகளில், இது சமீபகாலமாக அதிகரித்து வருவதாகத் தெரிகிறது,'' என்றார் லட்சுமி நாராயணா. இதைத் தான் சொல்லவில்லை என்றும், உச்சநீதிமன்றமே பலமுறை கூறியுள்ளதாகவும், இதற்கு உச்சநீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். " விசாரணையின்போது, அவர்களைக் கைது செய்வதற்குப் பதிலாக, காவல்துறையினர் முதலில் 41ஏ நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியது. உண்மையில் வரதட்சணை கொடுமை சார்ந்த வழக்குகள்தான் அந்த விதிக்குக் காரணம்," என விளக்கமளித்தார். "அர்னேஷ் குமார், பிகார் அரசு இடையிலான வழக்கில், இந்தப் புகாரின் அடிப்படையில் யாரேனும் சிக்கிக் கொள்ளும் போதெல்லாம் கைது செய்யப்படுவதைத் தடுக்க உச்சநீதிமன்றம் 41A சட்டப்பிரிவை வழங்கியது. இந்த வழக்கு பெண்கள் சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தியதன் உச்சகட்டம்" என்று லட்சுமிநாராயணன் பிபிசியிடம் தெரிவித்தார். புஷ்பா 2: சேஷாசல செம்மரங்களுக்கு சீனா, ரஷ்யாவில் அதிக தேவை இருப்பது ஏன்? எப்படி கடத்தப்படுகிறது?5 டிசம்பர் 2024 நீலகிரி வரையாடு: ரேடியோ காலர் பொருத்தும் முயற்சியில் இறந்த கர்ப்பிணி வரையாடு - முழு பின்னணி11 டிசம்பர் 2024 'பல்வேறு சட்டங்கள் மூலம் ஆண்கள் நீதிமன்றத்திற்கு செல்லலாம்' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பெண்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக உச்சநீதிமன்றம் கூறியிருந்தாலும், புதிய சட்டங்களையோ திருத்தங்களையோ அரசு கொண்டு வந்த நிகழ்வுகள் இல்லை என்று மூத்த வழக்கறிஞர் லட்சுமிநாராயணா கருத்து தெரிவித்தார். அதுல் சுபாஷ் வழக்கில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் ஒரு வழக்கின் அடிப்படையில் அனைத்து 498A வழக்குகளையும் பொய் வழக்குகள் என்று சொல்வது சரியல்ல என்று பெண் உரிமை ஆர்வலர் தேவி கூறினார். "நாங்கள் பெண்களுக்கான சங்கமாக இருந்தாலும், பல ஆண்கள் பாதிக்கப்பட்டவர்களாக எங்களிடம் வருகிறார்கள். அவர்களுக்குத் துணையாக நின்று உதவுவோம்," என்றும் அவர் குறிப்பிட்டார். மேற்கொண்டு பேசியவர், "எந்தவொரு வழக்கும் அதன் உண்மைகள் மற்றும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும். சட்டங்கள் பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றால், நூற்றுக்கணக்கான வழக்குகளுக்கு என்னால் உதாரணம் கொடுக்க முடியும். இப்படி அராஜகமான முறையில் பெண்கள் துன்புறுத்தப்பட்டு கடைசியில் நீதி கிடைக்காமல் போன நூற்றுக்கணக்கான உதாரணங்கள் என்னிடம் உள்ளன. கணவர் அடித்தாலும், ரத்தம் வந்தாலும் வழக்குகள் பதிவு செய்யப்படாத நிலை உள்ளது. " என்று பிபிசியிடம் தேவி கூறினார். "தேசிய குடும்ப கணக்கெடுப்பின்படி, ஒரு கணவர் தனது மனைவியை அடிப்பது தவறு இல்லை என்று 30% சதவீதம் பெண்கள் நினைப்பதாகக் கூறுகிறது. அத்தகைய சமூகமாகத்தான் நாம் இருக்கிறோம். பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆண்கள் உண்மையில் ஏதேனும் சட்டங்களால் பாதிக்கப்படுகிறார்கள் என்றால், அவர்கள் மற்ற சட்டங்கள் மூலம் வழக்குகளைத் தாக்கல் செய்யலாம் மற்றும் நீதிமன்றங்களுக்குச் செல்லலாம்," என்று தேவி கூறினார். முக்கியத் தகவல் மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம். சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்) மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019 - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) https://www.bbc.com/tamil/articles/cn4xwe28lp2o
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.