Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உக்ரைனின் 4 பிராந்தியங்கள் உத்தியோகபூர்வமாக இன்று ரஷ்யாவுடன் இணைப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைனின் 4 பிராந்தியங்கள் உத்தியோகபூர்வமாக இன்று ரஷ்யாவுடன் இணைப்பு!

உக்ரைனின் 4 பிராந்தியங்கள் உத்தியோகபூர்வமாக இன்று ரஷ்யாவுடன் இணைப்பு!

ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள உக்ரைனின் 4 பிராந்தியங்கள், உத்தியோகபூர்வமாக இன்று (வெள்ளிக்கிழமை) ரஷ்யாவுடன் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன.

புனித ஜோர்ஜ் அரங்கத்தில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில், லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஸபோரிஸியா பகுதிகளில் தற்போது ஆட்சி செலுத்தி வரும் நிர்வாகத் தலைவர்கள், ரஷ்யாவுடன் அந்தப் பகுதிகளை இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவார்கள்.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக, பிராந்திய நிர்வாகத் தலைவர்கள் மாஸ்கோ வந்துள்ள நிலையில் இவ் இணைப்பு விழாவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினும் கலந்துக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், சர்ச்சைக்குரிய பொதுவாக்கெடுப்பு ஜோடிக்கப்பட்டது என கூறியுள்ள மேற்கத்திய நாடுகள், பொதுவாக்கெடுப்பின் முடிவுகளை அங்கீகரிக்க முடியாது என கூறியுள்ளன.

பொதுவாக்கெடுப்பில் ரஷ்யாவுடன் இணைய விருப்பம் தெரிவித்து 97 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1302022

  • கருத்துக்கள உறவுகள்

யுக்ரேனில் ஆக்கிரமித்த இடங்கள் ரஷ்யாவோடு இணைப்பு: விளாதிமிர் புதின்

3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

putin

பட மூலாதாரம்,REUTERS

யுக்ரேனில் ஆக்கிரமித்த இடங்களை ரஷ்யாவோடு இணைக்கும் நிகழ்வு ரஷ்யாவில் நடந்து வருகிறது.

யுக்ரேனின் கிழக்கிலுள்ள லுஹான்ஸ்க், டோனியெட்ஸ்க் மற்றும் தெற்கிலுள்ள ஸப்போரீஷியா, கெர்சோனில் மக்கள் கருத்தறிதல் என கூறப்படும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடத்தப்பட்ட வாக்கெடுப்புக்கு பின்பு இது வருகிறது.

இந்த வாக்கெடுப்பை கேலிக்கூத்து என்று யுக்ரேனும், சட்டவிரோதமானது என்று மேற்குலக நாடுகளும், சட்ட வல்லுநர்களும் நிராகரித்துள்ளனர.

இந்த நிகழ்ச்சியில் ஆற்றிய உரையின்போது ரஷ்ய அதிபர் விளாடிதிர் புதின், அந்தந்த பகுதி மக்களே, ரஷ்யாவோடு தங்களை இணைத்து கொள்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறினார்.

 

இந்த நிலத்தை பெற்றுகொள்ள பல தலைமுறைகளாக ரஷ்யர்கள் போராடியிருப்பதாக புதின் குறிப்பிட்டார்.

 

ரஷ்ய ஆக்கிரமிப்பு இடங்கள்

 

படக்குறிப்பு,

ரஷ்ய ஆக்கிரமிப்பு இடங்கள்

இந்த மோதல்களில் கொல்லப்பட்ட வீரமிக்க சிப்பாய்களை நினைவுகூரும் விதமாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்த அனைவரையும் புத்தின் கேட்டுக்கொண்டார். நமது நிலத்திற்காக போராடி அவர்கள் இறந்ததாக அவர் தெரிவித்தார்.

டோன்பாஸ் பிராந்தியத்திலுள்ளவர்கள் ரஷ்யாவின் குடிமக்களாக என்றென்றும் இருப்பர் என்று யுக்ரேன் மற்றும் மேற்குலக நாடுகளில் உள்ள அனைவரும் கேட்க வேண்டுமென்று விரும்புவதாக அதிபர் புதின் பேசினார்.

மக்களின் இந்த தெரிவை யுக்ரேனிய அதிகாரிகள் மிகுந்த மரியாதையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

ரஷ்யா புதின்

 

படக்குறிப்பு,

ஆவணங்களில் கையெழுத்திடும் ரஷ்ய அதிபர் புதின்

தங்கள் மக்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை வழங்கும் வகையில் இயன்ற எல்லாவற்றையும் பயன்படுத்தி நிலத்தை ரஷ்யா பாதுகாக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த நகரங்கள் மற்றும் கிராமங்களின் உள்கட்டமைப்பு வசதிகளையும், சுகாதார பராமரிப்பு மற்றும் கல்வி மேம்பாட்டையும் ரஷ்யா மீண்டும் கட்டியெழுப்பும் என்று அவர் தெரிவித்தார்.

யுக்ரேனின் இந்த நான்கு பகுதிகளும் ரஷ்யாவோடு இப்போது இணைக்கப்பட்டுள்ளதால், இந்த பகுதிகளை மீட்க யுக்ரேன் மேற்கொள்ளும் முயற்சிகள், ரஷ்ய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நேரடி தாக்குதலாக கருதப்படும். இதனால், யுக்ரேன் மீதான போர் மேலும் சிக்கலாக மாறும் என்று எதிா்பார்க்கப்படுகிறது.

https://www.bbc.com/tamil/global-63092243

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க சொன்னது போலவே உக்ரைனை புட்டின் பிளவு படுத்திட்டார். எனி இராணுவ ரீதியில் அந்த நிலங்களை முழுமையாக மீட்பதும் காத்து வைப்பதும் புட்டினின் இராணுவ வல்லமையின் தன்மையில் இருக்குது.

ஐரோப்பாவில்.. நேட்டோ ஒரு இன்சி நிலத்தையும் விட்டுக்கொடுக்க மாட்டினமாம்.. ஆனால்.. ஈழத்தில் தமிழர்களின் நிலத்தை சிங்களவர்களிடம் தாரை வார்ப்பதை அமெரிக்கா முன்னின்று செயற்படுத்துமாம். 

  • கருத்துக்கள உறவுகள்

அவர் இணைச்சு ஒரு நாள் கூட ஆகவில்லை லைமன் நகரை கைப்பற்றி இருக்கிறது உக்கிரேன் இராணுவம். 

இது ரஷ்ய நகரை கைப்பற்றுவது போல ஆகாதா. 🤣

 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, முதல்வன் said:

அவர் இணைச்சு ஒரு நாள் கூட ஆகவில்லை லைமன் நகரை கைப்பற்றி இருக்கிறது உக்கிரேன் இராணுவம். 

இது ரஷ்ய நகரை கைப்பற்றுவது போல ஆகாதா. 🤣

 

லைமன் ரஷ்ய நகர் இல்லை என்று சொன்னால் பூட்டினின் பிரச்சினை தீரும்😁

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, முதல்வன் said:

அவர் இணைச்சு ஒரு நாள் கூட ஆகவில்லை லைமன் நகரை கைப்பற்றி இருக்கிறது உக்கிரேன் இராணுவம். 

இது ரஷ்ய நகரை கைப்பற்றுவது போல ஆகாதா. 🤣

 

உந்த நகரை விட்டு உக்ரைன் படைகள் ஓடிய போது மேற்குலக ஊடகங்கள் மூச்சே விடவில்லை. அப்படி ஒரு நகரம் வீழ்ந்ததை கூட சொல்லவில்லை. கிராமமாக்கி விட்டிருந்தார்கள். இப்ப ரஷ்சியப் படைகள் அல்ல ரஷ்சிய ஆதரவு துணைப்படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த நகரமே உக்ரைன் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருக்குது. 

கிழக்கு உக்ரைனில் இப்ப சில காட்சி மாற்றங்கள் உக்ரைன் மேற்கிடம் பிச்சை வாங்க அவசியமாகும். அது தான் நடந்தேறிக்கிட்டு இருக்குது. இது போருக்கான முடிவாக அமையப் போவதில்லை. போரின் நீட்சியாகவே அமையும்.

ஏனெனில் புட்டினின் நேற்றைய பேச்சுக்கான அழைப்பை மீண்டும் உக்ரைன் கோமாளி சனாதிபதி மேற்குலகின் பேச்சைக் கேட்டு நிராகரித்திருக்கிறார்.

செச்சின் போராளிகள்.. எனியும் தாமதிக்காமல் மட்டுப்படுத்திய அணு ஆயுதங்களை பாவிப்பது பற்றி யோசிக்க கேட்டுள்ளார்கள். 

மேலும்.. இத்தாலிக்கும் காஸ் கட்டாகிவிட்டது. நோர்வே யும் தான் எவ்வளவை தள்ளப் போகுதோ..??! குளிர்காலம் நெருங்க நெருங்க.. மேற்கின் நெருக்குவாரத்துக்கு போரை முன்னெடுத்துப் பேரழிவை உக்ரைன் சந்திக்க வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உக்ரைன் 200 வீரர்களை இழந்திருக்குது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் ஒரு கிராமத்தில் 5000 ரஷ்ய வீரர்கள் சுற்றிவளைக்கப்பட செச்சனிய முன்னாள் போராளிகளுக்கு/இரசிய கூலிப்படைகளுக்கு கோபம் வர காரணம் இருக்கு.

போலந்து முற்றுமுழுதாக ரஷ்ய எரிவாயு வழங்கலில் இருந்து விடுபட்டதை அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டது.

போர் முடிவுக்குவரவேணும், துருக்கிய பேச்சுவார்த்தைகளுக்கு வராமல் நாள் குறிக்காமல் ஓடிப்போனவர்கள், வாக்கெடுப்பில் நாட்டை இணைச்சுவிட்டு பேச்சுவார்த்தைக்கு கூப்பிடுவது நகைச்சுவை.

இந்திய இராணுவம் வடகிழக்கில்  நிலைகொண்ட நேரம் தேர்தல் வைத்து இந்தியாவுடன் இணைத்தால் சரியா .? அதன் பிறகு பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்டால் சரியா.

மேற்கு செய்வதை எந்த இடத்திலும் நான் நியாயப்படுத்த விரும்பவில்லை. போர் முடிவுக்கு வரவேண்டும். அது ரஷ்யாவின் கைகளில் தங்கியுள்ளது. தன்னிலை ஆணவத்தில் இருந்து புட்டின் வெளிவரவேண்டும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, முதல்வன் said:

உண்மைதான் ஒரு கிராமத்தில் 5000 ரஷ்ய வீரர்கள் சுற்றிவளைக்கப்பட செச்சனிய முன்னாள் போராளிகளுக்கு/இரசிய கூலிப்படைகளுக்கு கோபம் வர காரணம் இருக்கு.

போலந்து முற்றுமுழுதாக ரஷ்ய எரிவாயு வழங்கலில் இருந்து விடுபட்டதை அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டது.

போர் முடிவுக்குவரவேணும், துருக்கிய பேச்சுவார்த்தைகளுக்கு வராமல் நாள் குறிக்காமல் ஓடிப்போனவர்கள், வாக்கெடுப்பில் நாட்டை இணைச்சுவிட்டு பேச்சுவார்த்தைக்கு கூப்பிடுவது நகைச்சுவை.

இந்திய இராணுவம் வடகிழக்கில்  நிலைகொண்ட நேரம் தேர்தல் வைத்து இந்தியாவுடன் இணைத்தால் சரியா .? அதன் பிறகு பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்டால் சரியா.

மேற்கு செய்வதை எந்த இடத்திலும் நான் நியாயப்படுத்த விரும்பவில்லை. போர் முடிவுக்கு வரவேண்டும். அது ரஷ்யாவின் கைகளில் தங்கியுள்ளது. தன்னிலை ஆணவத்தில் இருந்து புட்டின் வெளிவரவேண்டும்.

 

நகர் கைப்பற்றியாச்சு. 5000 ரஷ்சிய படைகளை புடிச்சு கொற கொறன்னு கிவ்வுக்கு கொண்டு போகிறார்கள் என்று சொன்னாலும் சொல்லுவாங்க போல இருக்கு.

ஆனால் சிலுங்கி சிணுங்கி இருக்கிறார்.. போர் இன்னும் நடக்குது என்று. 

Although the blue and yellow colours were flying in Lyman again, fighting was "still going on" there, President Volodymyr Zelensky said in his evening video address.

However, he gave no further details.

நோர்வேயிடம் இருந்து காஸ் வாங்கும் திட்டம் 12 வருடங்களுக்கு முன்னரே போலந்தால் போடப்பட்டிருந்தாலும்.. அதனை செயற்படுத்த முடியவில்லை. காரணம்..விலை மற்றும் வழங்கல் தொடர்ச்சிப் பிரச்சனை. இப்ப மட்டும்.. அது எப்படி தீர்ந்ததே.. போலந்து மீண்டும் மேற்கு ஐரோப்பாவிற்கு குடிமக்களை அனுப்பி பிச்சை எடுக்கும் நிலை வராமல் இருந்தால்.. நிம்மதி.

பேச்சுக்கு மேடைக்கு வரச் சொல்லி தான் கீவ் மற்றும் பிற பகுதிகளில் இருந்து படைகளை ரஷ்சியா உள்வாங்கிக் கொண்டது. ஆனால் சிலுங்கி மேற்குலகின் அழுத்தத்தின் பெயரில் அதில் இருந்து விலகி ரஷ்சியாவையும் துருக்கியையும் ஏமாற்றினார். அதன் விளைவு தான் சவுதி ஊடான போர் கைதி பரிமாற்றம். இறுதியில் ரஷ்சிய படை விலகலை உக்ரைன் படைகளால் விரட்டி அடிப்பு என்று காட்டி சுயமகிழ்ந்து கொண்டது மேற்குலகம்.

ரஷ்சியாவின் தேவை ஆரம்பம் தொட்டு இப்ப வரை கிழக்கில் உக்ரைனின் கொடுமைக்கு உள்ளான ரஷ்சிய மொழி பேசும் சிறுபான்மை மக்களை காப்பதாகவே இருந்தது. இப்போ இணைப்பும் அதையே தான் செய்திருக்குது. புட்டின் சொன்னதை செய்திருக்கிறார். எனி நிலங்களை தக்க வைச்சுக் கொள்வது அந்த மக்களினது கடமை. ரஷ்சியா அதற்கு உதவும். 

ஹிந்திய இராணுவம் ஈழம் எடுத்து தர வரவில்லை. ஈழம் கேட்டவர்களை அழிக்க வந்தது. ரஷ்சியப் படைகள் அப்படி அல்ல. எந்த சிறுபான்மை மக்கள் ரஷ்சியாவை நம்பி நின்றார்களோ.. இறுதி வரை அந்த மக்களுக்கு நம்பிக்கைக்குரியதாக இருக்கிறது. இதில் ஹிந்திய இராணுவத்தின் வரவும் ஒப்பீடும் மிகத்தவறானது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சரி நெடுக்ஸ் விடுதலைப்புலிகளால் 90 களின் ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட சஞ்சிகைகளில், அறிவியல் நூல்களில் எழுதப்பட்ட டுடயேவ் தலைமையிலான செச்சினிய விடுதலைப்போராட்டத்தை அழித்ததில் தெரிந்தது ரஷ்யப்படைகளின் சிறுபான்மை மக்கள் மீதான அக்கறை. அங்கே நேட்டோவும் இல்லை மேற்கும் இல்லை.

அதே டுட்யேவுடன் களத்தில் நின்றவர்தான் இப்போ ரஷ்யாவுக்கு வக்காலத்து வாங்கும் செச்சினிய கூலிப்படையின் தலைவரின் தந்தை. சொந்த இனத்தை காட்டிக்கொடுத்து வாங்கிய பதவி.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, முதல்வன் said:

சரி நெடுக்ஸ் விடுதலைப்புலிகளால் 90 களின் ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட சஞ்சிகைகளில், அறிவியல் நூல்களில் எழுதப்பட்ட டுடயேவ் தலைமையிலான செச்சினிய விடுதலைப்போராட்டத்தை அழித்ததில் தெரிந்தது ரஷ்யப்படைகளின் சிறுபான்மை மக்கள் மீதான அக்கறை. அங்கே நேட்டோவும் இல்லை மேற்கும் இல்லை.

அதே டுட்யேவுடன் களத்தில் நின்றவர்தான் இப்போ ரஷ்யாவுக்கு வக்காலத்து வாங்கும் செச்சினிய கூலிப்படையின் தலைவரின் தந்தை. சொந்த இனத்தை காட்டிக்கொடுத்து வாங்கிய பதவி.

 

 

செச்சின் பிரச்சனையை மதரீதியான பிரச்சனையாக்கி ரஷ்சியாவை முஸ்லிம்களுக்கு எதிரான நாடு என்பதாக்கிக் காட்ட அமெரிக்காவும் மேற்குலகும் தூண்டி நடந்த யுத்தமே செச்சின் பிரிவினைப் போர்.

குறிப்பாக மத்திய கிழக்கில்.. சோமாலியாவில் தாம் முஸ்லிம்களுக்கு எதிராக செய்த யுத்தத்திற்கு ஈடாக.. ரஷ்சியா மீதும் முஸ்லிம் வெறுப்பை வளர்க்க தூண்டப்பட்ட யுத்தமே செச்சின் யுத்தம். அதுமட்டுமல்ல.. கொசவாவோ பிரச்சனையில் ரஷ்சியா சேர்பியாவை ஆதரித்து நின்றாலும் கொசவாவோ விடுதலையை தடுக்க நினைக்கவில்லை. மற்றும்படி செச்சின்.. மதரீதியான தேசமாக அடையாளப்படுத்தப்பட்டு ரஷ்சியாவுக்கு எதிராக தூண்டிவிடப்பட்டதே அன்றி.. அங்கு ரஷ்சிய அடக்குமுறை என்பது இயல்பாக இருந்ததில்லை என்பதற்கு இன்று செச்சின் ரஷ்சியாவுக்கு வழங்கி நிற்கும் ஆதரவு சாட்சி. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரஷ்யா எங்கு தோற்றாலும் உக்ரேன் விடயத்தில் தோல்வியடையும் என   யாராவது நினைத்தால் அது அவர்களின் அறியாமை.😎

இன்று மேற்குலகையே தெறிக்க விட்டுக்கொண்டிருக்கும் ஒருவன் என்றால் அது மாண்புமிகு புட்டின் மட்டுமே.

குளிருக்கு குலைநடுக்கம் நடுங்க ஐரோப்பாவின் கொட்டம் அடங்கும்.😂

Krise in Deutschland: Polizei in NRW bereitet sich auf Blackout vor

  • கருத்துக்கள உறவுகள்

யுக்ரேன்: ரஷ்யாவை முடக்கும் அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைகள் - விளாடிமிர் புதின் என்ன செய்வார்?

3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

புதின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

யுக்ரேன் பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தங்களில் அதிபர் புதின் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

போருக்கு செலவழிக்கும் ரஷ்யாவின் திறனைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் பொருளாதாரத் தடைகள் விதிப்பது குறித்துப் பரிசீலித்து வருகின்றன.

யுக்ரேனின் கிழக்கிலுள்ள லுஹான்ஸ்க், டோனியெட்ஸ்க் மற்றும் தெற்கிலுள்ள ஸப்போரீஷியா, கெர்சோன் ஆகிய பகுதிகளை தங்களுடன் இணைத்துக்கொண்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

என்ன பொருளாதாரத் தடைகள்?

ஒரு நாடு, அத்துமீறி செயல்படுவதைத் தடுக்கவோ அல்லது சர்வதேச சட்டத்தை மீறுவதைத் தடுக்கவோ, மற்ற நாடுகளால் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளே பொருளாதாரத் தடைகள்.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

போருக்குச் செல்வது போக, உலக நாடுகள் எடுக்கக்கூடிய கடுமையான நடவடிக்கைகளில் இவையும் அடங்கும்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சமீபத்திய நடவடிக்கைகள் என்ன?

யுக்ரேனின் நான்கு பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைக்கும் வகையில் சுய பாணியிலான வாக்கெடுப்பை நடத்தியதற்காக ரஷ்யாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 278 பேர் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. மேலும் அதன் பாதுகாப்புத் துறையோடு தொடர்புடைய 14 பேரையும் குறி வைத்துள்ளது.

 

பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இரு நாடுகளும் எல்லையில் படைகளைக் குவித்து வருகின்றன

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இரு நாடுகளும் எல்லையில் படைகளைக் குவித்து வருகின்றன

ரஷ்யாவிற்கு வெளியிலும் அதன் ராணுவத்தையோ அல்லது யுக்ரேனிய பிரதேசங்களை அதனுடன் இணைத்துக் கொள்வதையோ ஆதரிக்கும் அமைப்புகளையும் குறி வைப்பதாக அமெரிக்கா கூறுகிறது.

ஐரோப்பிய ஆணையம் உருவாக்கப்பட்ட புதிய சுற்று தடைகள், உயர் தொழில்நுட்ப பொருட்கள் உட்பட அதிகமான பொருட்களை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்வதிலிருந்து தடை செய்யவும் ரஷ்ய இறக்குமதிகளுக்கு மேலும் தடை விதிக்கவும் முன்மொழிகிறது.

ரஷ்யா மீது என்ன தடைகள் விதிக்கப்பட்டுள்ளன?

நிதி நடவடிக்கைகள்

  • மேற்கத்திய நாடுகள் ரஷ்யா வெளிநாடுகளில் வைத்திருக்கும் பணத்தைக் கையாளுவதைக் கட்டுப்படுத்த முயல்கின்றன.
  • அமெரிக்க வங்கிகளில் உள்ள வெளிநாட்டு நாணயத்தைப் பயன்படுத்தி ரஷ்யா கடனைச் செலுத்த அமெரிக்கா தடை விதித்துள்ளது.
  • சர்வதேச நிதிச் செய்தியிடல் கட்டமைப்பான ஸ்விஃப்டில் (SWIFT) இருந்து முதன்மையான ரஷ்ய வங்கிகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால், ரஷ்யா எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிக்கான பணத்தைச் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
  • பிரிட்டன் நிதி அமைப்பிலிருந்து முதன்மை ரஷ்ய வங்கிகளை பிரிட்டன் விலக்கியுள்ளது. அனைத்து ரஷ்ய வங்கிகளின் சொத்துகளையும் முடக்கியது, ரஷ்ய நிறுவனங்கள் கடன் வாங்குவதைத் தடை செய்துள்ளது மற்றும் பிரிட்டன் வங்கிகளில் ரஷ்யர்கள் செய்யக்கூடிய வைப்புகளுக்கு வரம்புகளை விதித்துள்ளது.
 

அரசுக்கு சொந்தமான ஸ்பெர் வங்கி ரஷ்யாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்று

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

அரசுக்கு சொந்தமான ஸ்பெர் வங்கி ரஷ்யாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்று

எண்ணெய் மற்றும் எரிவாயு

  • ஐரோப்பிய ஒன்றியம் டிசம்பர் மாதம் முதல் கடல் வழியாகக் கொண்டுவரப்படும் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைத் தடை செய்யும்.
  • பிப்ரவரி 2023இல் ரஷ்யாவிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்ப் பொருட்களின் அனைத்து இறக்குமதிகளையும் ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்யும்.
  • ரஷ்யாவின் அனைத்து எண்ணெய், எரிவாயு இறக்குமதிகளையும் அமெரிக்கா தடை செய்கிறது.
  • பிரிட்டன் 2022ஆம் ஆண்டின் இறுதிக்குள் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை நிறுத்தும். இனி ரஷ்ய எரிவாயுவை இறக்குமதி செய்யாது.
  • ரஷ்யாவில் இருந்து நார்ட்ஸ்ட்ரீம்-2 எரிவாயு குழாய் திறப்பதற்கான திட்டங்களை ஜெர்மனி முடக்கியுள்ளது.
  • ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய நிலக்கரியை இறக்குமதி செய்வதை நிறுத்தியுள்ளது.
  • டிசம்பரில் இருந்து, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜி7 ஆகிய கூட்டமைப்புகள் ரஷ்ய எண்ணெய்க்காக நாடுகள் செலுத்தும் விலையைக் கட்டுப்படுத்த விரும்புகின்றன.
  • மேற்கத்திய காப்பீட்டு நிறுவனங்கள் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியாளர்களிடம் வரம்புக்கு மேல் செலுத்தினால் எண்ணெய் ஏற்றுமதியை ஈடு செய்யாது எனத் தெரிவித்துள்ளது.
  • ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய எரிவாயு மீது தடைகளை விதிக்கவில்லை. ஏனெனில், அது அதன் 40% எரிவாயு தேவைகளுக்கு ரஷ்ய எரிவாயுவை நம்பியுள்ளது.
 

ரோமன் அப்ரமோவிச்

பட மூலாதாரம்,REUTERS

 

படக்குறிப்பு,

செல்சீ கால்பந்து கிளப்பின் முன்னாள் உரிமையாளர் ரோமன் அப்ரமோவிச்

தனிநபர்களைக் குறிவைக்கும் தடைகள்

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் மற்று பிற நாடுகள், தன்னலக் குழுக்கள் என்று அழைக்கப்படுபவை உட்பட 1,000க்கும் மேற்பட்ட ரஷ்ய தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு தடைகளை விதித்துள்ளன.

  • இவர்கள் ரஷ்ய அதிபர் மாளிகைக்கு நெருக்கமானவர்கள் என்று கருதப்படும் செல்வந்த வணிகத் தலைவர்கள், செல்சீ கால்பந்து கிளப்பின் முன்னாள் உரிமையாளர் ரோமன் அப்ரமோவிச் போன்றவர்கள்.
  • அதிபர் புதின், வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோஃப் ஆகியோருக்குச் சொந்தமான சொத்துகள் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் மற்றும் கனடாவில் முடக்கப்பட்டுள்ளன.
  • தடை விதிப்புகளுக்கு உள்ளான ரஷ்யர்களோடு தொடர்புடைய சூப்பர் யாட்ச்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
  • நியூயார்க்கில், ரஷ்ய அலுமினிய உற்பத்தியாளர் ஒலெக் டெரிபாஸ்கா, அமெரிக்கா விதித்த தடைகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
  • "கோல்டன் விசாக்கள்" விநியோகிப்பதை பிரிட்டன் நிறுத்தியுள்ளது. இந்த விசாக்கள் பணக்கார ரஷ்யர்கள் பிரிட்டிஷ் வாழ் உரிமைகளைப் பெற அனுமதித்தது.
 

ரஷ்யாவில் இருந்து நார்ட்ஸ்ட்ரீம் 2 எரிவாயு குழாய் திறப்பதற்கான திட்டங்களை ஜெர்மனி முடக்கியுள்ளது

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ரஷ்யாவில் இருந்து நார்ட்ஸ்ட்ரீம் 2 எரிவாயு குழாய் திறப்பதற்கான திட்டங்களை ஜெர்மனி முடக்கியுள்ளது

பொருட்கள் மற்றும் சேவைகள் மீது வேறு என்ன தடைகள் விதிக்கப்பட்டுள்ளன?

  • பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா போன்றவற்றின் இருமுறை உபயோகப் பொருட்களான வாகன பாகங்கள் போன்ற குடிமை மற்றும் ராணுவ நோக்கம் கொண்ட பொருட்களை ஏற்றுமதி செய்வதற்குத் தடை.
  • அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடிய வான்வெளியில் பறக்க அனைத்து ரஷ்ய விமானங்களுக்கும் தடை.
  • ரஷ்ய தங்கம் இறக்குமதி செய்யத் தடை.
  • ரஷ்யாவிற்கு ஆடம்பர பொருட்களை ஏற்றுமதி செய்யத் தடை.
  • வோட்கா உட்பட சிலவற்றின் இறக்குமதிகளுக்கு பிரிட்டன் 35% வரி விதித்துள்ளது.

பல சர்வதேச நிறுவனங்கள் ரஷ்யாவில் வர்த்தகத்தை நிறுத்திவிட்டன.

பொருளாதாரத் தடைகள் ரஷ்யாவை பாதிக்கிறதா?

போருக்குச் செலவழிக்கும் ரஷ்யாவின் திறன் அதிக எண்ணெய், எரிவாயு விலைகளைச் சார்ந்திருந்தது.

ஆராய்ச்சி நிறுவனமான ஆர்கஸ் மீடியாவின் தலைமைப் பொருளாதார நிபுணர் டேவிட் ஃபைஃபை, அதன் கச்சா எண்ணெய் வருவாய் கடந்த ஆண்டில் 41% உயர்ந்துள்ளதாகக் கூறுகிறார்.

 

ரஷ்ய அதிபர் புதின்

பட மூலாதாரம்,REUTERS

"ரஷ்யாவின் மொத்த ஏற்றுமதியில் எண்ணெய் விற்பனை 40%. எனவே அவை போருக்கு நிதியளிக்கப் பெரிதும் உதவுகின்றன. இருப்பினும், குறிப்பாக ராணுவத் துறைக்குத் தேவையான உயர் தொழில்நுட்ப கூறுகளுக்கான அணுகலைத் தடுப்பதன் மூலம், பொருளாதாரத் தடைகள் ரஷ்யாவை வேறு வழிகளில் பலவீனப்படுத்துகின்றன.

ரஷ்யாவின் எதிர்வினை என்ன?

தொலைத்தொடர்பு, மருத்துவம், வாகனம், வேளாண்மை, மின் உபகரணங்கள் மற்றும் மரப் பொருட்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட பொருட்களின் ஏற்றுமதியை ரஷ்யா தடை செய்துள்ளது.

இது வெளிநாட்டு அரசாங்க பத்திரங்களை வைத்திருப்பவர்களுக்கு வட்டி செலுத்துவதைத் தடுக்கிறது. மேலும் ரஷ்ய நிறுவனங்கள் வெளிநாட்டு பங்குதாரர்களுக்குப் பணம் செலுத்துவதைத் தடை செய்கிறது.

பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள ரஷ்ய முதலீடுகளை வைத்திருக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அந்தப் பங்குகளை விற்பதை நிறுத்தியுள்ளது.

https://www.bbc.com/tamil/global-63099945

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.