Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் பயங்கரம் : 130 பேர் பலி, 180 க்கும் மேற்பட்டோர் காயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் பயங்கரம் : 130 பேர் பலி, 180 க்கும் மேற்பட்டோர் காயம்

02 Oct, 2022 | 10:05 AM

image

இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் பயங்கரம் : 130 பேர் பலி, 180 க்கும் மேற்பட்டோர் காயம்

இந்தோனேஷியாவில் கால்பந்து போட்டியில் ஏற்பட்ட வன்முறையில் 130 பேர் உயிரிழந்துள்ளனர். 180 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் .

இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவாவில் மலாங் மாகாணத்தில் உள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் நேற்று கால்பந்து போட்டி நடந்தது. அதில் உள்ளூர் அணியான அரேமா மற்றும் பெர்செபயா சுரபயா களம் கண்டன.

இப்போட்டியின் போது வன்முறை வெடித்தது. இப்போட்டியில் அரேமா அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

சொந்த மண்ணில் தங்கள் அணி தோல்வியடைந்ததை தாங்கிக்கொள்ள முடியாத அரேமா அணியின் தீவிர ரசிகர்கள், கடும் கோபமடைந்துள்ளனர்.

கால்பந்து போட்டியில் தங்கள் அணி தோல்வியடைந்ததையடுத்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆடுகளத்திற்கு சென்றுள்ளனர். அப்போது களத்தில் இருந்த பல அரேமா வீரர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

இதை கட்டுப்படுத்த மக்கள் கூட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதை அடுத்து அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. கலவரம் மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் படுகாயமடைந்துள்ளனர். சுமார் 180 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களில் பலர் அதிக நெரிசல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவற்றால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் என்று நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 2 பேர் பொலிஸ் அதிகாரிகள். 34 பேர் மைதானத்திற்குள் உயிரிழந்துள்ளனர்.

மீதமுள்ளவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

FeB22KgUUAEIOb7.jpg

FeB22nzVsAAgahg.jpg

FeB227bUcAEIkJI.jpg

 

https://www.virakesari.lk/article/136817

 

  • கருத்துக்கள உறவுகள்

கால்பந்து விளையாட்டு வரலாற்றிலேயே… மிக அதிகமாக 130 மக்கள்
இந்த விளையாட்டில் தான் இறந்திருப்பார்கள் என நினைக்கின்றேன்.
விளையாட்டு என்பதற்க்கே… அர்த்தம், இல்லாமல் செய்து விட்டார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தோனீசிய கால்பந்து போட்டியில் கலவரம்: குறைந்தது 129 பேர் பலி

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

Indonesia: More than 120 dead in football stampede

பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES

இந்தோனீசியாவின் கிழக்கு ஜாவாவில் கால்பந்து போட்டி ஒன்றின் பின் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக குறைந்தது 129 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலகளவில் விளையாட்டு மைதானங்களில் நடந்த மிகவும் மோசமான உயிரிழப்புகளில் ஒன்றாக இது உள்ளது.

கஞ்சுருஹான் விளையாட்டு மைதானத்தில் கால்பந்து ரசிகர்களிடையே மூண்ட கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு பயன்படுத்தியதால் அதிலிருந்து ரசிகர்கள் தப்பியோட முயன்ற போது இந்த கூட்ட நெரிசல் உண்டானது.

அரேமா எப்.சி என்னும் அணியினர் அவர்களின் பரம எதிராளி அணியான பெர்சேபயா சுராபயா எனும் அணியிடம் தோல்வி அடைந்த பின்னர் உண்டான மோதலில் குறைந்தபட்ச 180 பேர் காயமடைந்தனர்.

 

கஞ்சுருஹான் விளையாட்டு மைதானத்தில் சுமார் 38,000 பார்வையாளர்கள் மட்டுமே அமர முடியும் என்ற நிலையில் அதைவிட அதிகமாக 42,000 பேர் அங்கு கூடியிருந்தனர் என்று இந்தோனீசியாவின் தலைமை பாதுகாப்பு அமைச்சர் மஹ்பூத் எம்டி தெரிவித்துள்ளார்.

 

சிவப்புக் கோடு

கால்பந்து போட்டி முடிந்த போது கடைசி விசில் ஊதப்பட்ட பின்னர் ரசிகர்கள் மைதானத்துக்குள் ஓடுவதை காணொளிகள் காட்டுகின்றன.

காவல்துறை கண்ணீர் புகை குண்டுகளை வீசியது. இதனால் கூட்ட நெரிசல் உண்டானது; அங்கு இருந்தவர்களுக்கு மூச்சுத்திணறிலும் ஏற்பட்டது என்று கிழக்கு ஜாவாவின் காவல்துறை தலைவர் நிக்கோ அஃபின்டா தெரிவித்துள்ளார்.

வேலிகள் மீது ஏறி அந்த கூட்டத்திலிருந்து ரசிகர்கள் தப்பிக்க முயல்வதை சமூக ஊடங்களில் வெளியாகி உள்ள காணொளிகள் காட்டுகின்றன. வேறு சில காணொளிகளில் உயிரிழந்த உடல்கள் தரையில் கிடப்பதையும் பார்க்க முடிகிறது.

 

indonesia football death

பட மூலாதாரம்,EPA

பாதுகாவலர்கள் அல்லது காவல் துறையினர் ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் புகைக் குண்டு பிரயோகம் மேற்கொள்ளப்படக் கூடாது என்று சர்வதேச கால்பந்து கட்டுப்பாட்டு அமைப்பான பிஃபா கூறுகிறது.

இந்த உயிரிழப்புகளுக்கு காரணமான கலவரம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ள இந்தோனீசிய கால்பந்து அமைப்பு, இந்த நிகழ்வு இந்தோனீசியா கால்பந்து பிம்பத்துக்கு களங்கம் விளைவித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

விசாரணை முடியும்வரை இந்தோனீசியாவில் கால்பந்து லீக் போட்டிகள் அனைத்தையும் நிறுத்தி வைக்க அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ உத்தரவிட்டுள்ளார்.

கால்பந்து போட்டிகளின் போது இந்தோனீசியாவில் வன்முறை சம்பவங்கள் நடப்பது புதிதல்ல. அரேமா எஃப்.சி மற்றும் பெர்சேபயா சுராபயா ஆகிய அணிகள் மிகவும் நீண்ட நாள் பகையாளிகள்.

 

Damaged police vehicles lay on the pitch inside Kanjuruhan stadium

பட மூலாதாரம்,EPA

மோசமான மோதல் நடைபெறும் என்ற அச்சத்தின் காரணமாக பெர்சேபயா சுராபயா ரசிகர்கள் இந்த போட்டியை காண்பதற்கான டிக்கெட்டுகள் வாங்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

1964இல் பெரு மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையே நடந்த ஒலிம்பிக் தகுதிச்சுற்று ஆட்டத்தின் பின் உண்டான கூட்ட நெரிசலில் 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்; 320 பேர் உயிரிழந்தனர்.

1989இல் பிரிட்டனின் ஹில்ஸ்போரோ மைதானத்தில், அதிக கூட்டம் இருந்த மைதானத்தின் தடுப்பு சரிந்து விழுந்ததில் லிவர்பூல் அணியின் கால்பந்து ரசிகர்கள் 96 பேர் உடல் நசுங்கி இறந்தனர்.

https://www.bbc.com/tamil/global-63106572

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச்  செய்தியில்... 170 பேருக்கு மேல் கொல்லப் பட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள். 

 

Indonesia police say more than 170 people killed after stampede at football match | ABC News

  • கருத்துக்கள உறவுகள்

இது காட்டுமிராண்டித்தனம்........வீடியோ மூலம் குழப்பவாதிகளை கண்டுபிடித்து தகுந்த தண்டனை குடுக்க வேண்டும்......!  

இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.....! 

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் புகை அடித்த, போலீஸ் முட்டாள்தனம் போல் தெரிகிறது. 🥴

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, Nathamuni said:

கண்ணீர் புகை அடித்த, போலீஸ் முட்டாள்தனம் போல் தெரிகிறது. 🥴

உதைபந்தாட்டம் பார்க்க செல்பவர்கள் ஒரு வித வெறியுடன் தான் இருப்பார்கள். அங்கே அவர்களது வெறித்தன கோபம் எல்லாவற்றையும் மறைத்து விடும். உதைபந்தாட்டம் விளையாடுபவர்களே தங்களுக்குள் சண்டை பிடிக்கும் போது ரசிகர்கள் எப்படி இருப்பார்கள்? 😀

Zidane und Enrique: Jetzt treffen sie sich im Clásico als Trainer wieder!  (mit Video) - Sportbuzzer.de

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

விளையாட்டு என்பதற்க்கே… அர்த்தம், இல்லாமல் செய்து விட்டார்கள். 

உண்மை, ஆர்வலர்களல்ல, வெறியர்கள். காவல் துறையினது நிதானமற்ற நடவடிக்கையும் இழப்பகளுக்கு வழிவகுத்திருக்கலாம். விளையாட்டின் அடிப்படைக் கோட்பாட்டையே அடித்துத் துவைத்துவிட்டார்கள். இரு அணிகளையும் குறிப்பிட்ட காலத்துக்குத் தடை செய்யது வைக்க வேண்டும்.
நன்றி    

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.