Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

யாழில் போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிப்பதற்கு நடவடிக்கை!

யாழில் போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிப்பதற்கு நடவடிக்கை!

வட பகுதியில் போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிப்பதற்கு யாழ் நகருக்கு அண்மையில் புனர்வாழ்வு நிலையம் அமைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி மணிவண்ணன் தெரிவித்தார்.

பப்ரல் அமைப்பின் மாற்றத்திற்கான பாதை கற்கை நெறியின் யாழ் மாவட்ட பெண்கள் குழு நடாத்தும் போதையினால் பாதை மாறும் இளையோரை நல்வழிப்படுத்தி நற்பிஜைகளாக உருவாக்வோம் எனும் தொனிப் பொருளிலான போதை ஒழிப்பு விழிப்புணர்வு செயற்பாட்டு நிகழ்வு திருநெல்வேலி முத்து தம்பி இந்து மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

குறித்த விழிப்புணர்வு செயற்பாட்டில் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய யாழ் மாநகர முதல்வர் மேற்கண்டவாறு தெரிவித்தார்,
எங்களுடைய பிரதேசமானமானது அச்சுறுத்தலையும் ஆபத்தினையும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றது.

அண்மையில் வெளிவரும் பத்திரிகை செய்திகள் அனைவரையும் கவலைக்கு உள்ளாக்குகின்ற கலக்கத்தை உண்டாக்குகின்ற பயங்கரமான செய்திகளை அண்மை காலங்களில் பத்திரைகளில் படித்துக் கொண்டிருக்கின்றோம்.

ஒவ்வொரு பெற்றோரும் தங்களுடைய பிள்ளைகள் எவ்வாறு பாதிக்கப்பட போகின்றார்கள் என்கின்ற அச்சத்தில் தங்களுடைய வாழ்நாளை கழிக்கின்ற ஒரு அவல நிலைமை தற்பொழுது ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சமூகத்தில் இருக்கக்கூடிய பெரியவர்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது அதாவது போதை பொருள் வர்த்தகர்களின் பிரதான இலக்காக பாதிக்கப்படுபவராக இருப்பவர்கள் பாடசாலை மாணவர்களாகத்தான் இருக்கின்றார்கள்
இந்த பாடசாலை மாணவ மாணவிகளை இலக்கு வைத்து இவ்வாறான போதைப் பொருள் விநியோகம் அண்மை காலங்களிலே அதிகரிக்கப்பட்டு வருகின்றது.

எதிர்கால சந்ததி என கருதப்படுகின்ற எங்களுடைய இளைஞர்கள் யுவதிகளை நோக்கி போதை பொருள் வர்த்தகம் மிக வேகமாக நடைபெற்று வருகின்றது அதற்குள்ளே அறிந்தும் அறியாமலும் அதனுடைய எதிர்கால விளைவுகளை பற்றி தெரியாது எமது இளைஞர்யுவதிகள் இந்த போதைப் பொருளுக்குள்ளே அடிமையாகி கொண்டிருக்கின்றமை இந்த மண்ணிலே நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.

இதனை தடுத்து நிறுத்த வேண்டிய பாரிய கடப்பாடு ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது அதிலும் விசேடமாக அரசியல் தலைமைகள் சமூகமட்ட பிரதிநிதிகள் அதோடு பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மற்றும் கல்வி சமூகம் அனைவரதும் கடமையாகும்.

எதிர்காலத்தில் இந்த போதைப்பொருள் பாவனைக்குள் உள்ளாகாதவாறு மாணவர்களை எவ்வாறு பாதுகாப்பது தொடர்பில் நாங்கள் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
யாழ் மாநகர முதல்வர் என்ற ரீதியில் எதிர்காலத்தில் எவ்வாறான செயற்பாட்டினை எவ்வாறு முன்னெடுப்பது தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் போதைப் பொருளுக்கு எதிரான செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கு அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து விசேட கூட்டம் ஒன்றிணைத்து விரைவில் அந்த செயற்பாட்டினை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளேன்.

பல்கலைக்கழக மாணவர்கள் கல்வி சமூகத்தினர் மற்றும் பொலிசார் ஆகிய அனைத்து தரப்பினரை ஒன்றிணைத்து எவ்வாறு இந்த போதைப் பொருட்களில் இருந்து எமது மாணவ சமூகத்தை காப்பாற்ற முடியும் என்ற விடயத்தினை அறிந்து அதனை செயல்படுத்துவதற்குரிய நடவடிக்கை விரைவில் முன்னெடுக்க உள்ளோம்.

அத்தோடு போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர் வாழ்வு அளிக்கக் கூடிய விசேட நிலையம் ஒன்றினை யாழ் நகருக்கு அண்மையில் அமைப்பதற்கு யோசித்து வருகின்றோம் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை சிறைச்சாலைக்கு அனுப்புவதன் மூலம் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள் ஆகவே போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை புனர் வாழ்வுக்கு அனுப்புவதன் மூலம் அவர்களை சமூகத்தோடு ஒருங்கிணைக்க முடியும்.

எனவே வடக்கில் யாழ் நகருக்கு அண்மையில் ஒரு இடத்தில் புனர் நிலையம் ஒன்றினை அமைப்பதற்கும் நாங்கள் தீர்மானித்திருக்கிறோம் அதற்குரிய முயற்சியை எடுத்து வருகின்றேன் அனைவரின் ஒத்துழைப்புடன் அந்த விடயம் விரைவில் கைகூடும் எனவும் தெரிவித்தார்

https://athavannews.com/2022/1305592

  • Replies 89
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

யாழில் 66 வயதான மூதாட்டியை வன்புணர்ந்தவர் தலைமறைவு!

யாழில் 66 வயதான மூதாட்டியை வன்புணர்ந்தவர் தலைமறைவு!

மன நலம் குன்றிய 66 வயதான மூதாட்டியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 40 வயதான நபர் ஒருவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

கடந்த 09ஆம் திகதி பாதிக்கப்பட்ட மூதாட்டியின் வீட்டிற்கு முன்பாக சென்ற நபர் , வாகன ஹார்னை அடித்து மூதாட்டியை அழைத்துள்ளார். மூதாட்டி வெளியே வந்ததும் அவரை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.

சத்தம் கேட்டு வெளியே வந்த மூதாட்டியின், சகோதரியான 70 வயதான மூதாட்டியையும் அடித்து காயமேற்படுத்தி விட்டு அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார்.

குறித்த சம்பவத்தில் பாதிப்படைந்த இரு மூதாட்டிகளும் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய நபர், சம்பவம் நடந்து 10 நாட்கள் கடந்த நிலையிலும் கைது செய்யப்படவில்லை. அவர் தலைமறைவாகி உள்ளார் எனவும் , அவரை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை தாம் முன்னெடுத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை , குறித்த நபர் கொலை மற்றும் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நீதிமன்ற உத்தரவில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

https://athavannews.com/2022/1305603

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழில் போதைக்கு அடிமையான இளைஞனால் மாணவி துஷ்பிரயோகம்!

யாழில் போதைக்கு அடிமையான இளைஞனால் மாணவி துஷ்பிரயோகம்!

போதைக்கு அடிமையான 25 வயதான இளைஞனால் 15 வயது பாடசாலை மாணவி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மாணவியின் உறவினர்களால் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட நிலையில் துஸ்பிரயோகம் செய்த இளைஞன் தலைமறைவாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பாதிக்கப்பட்ட மாணவியும் , இளைஞனும் காதல் தொடர்பினை கொண்டிருந்துள்ளனர். இளைஞன் போதைக்கு அடிமையானதால் , மாணவி காதல் தொடர்பினை துண்டித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பாதிக்கப்பட்ட மாணவியும் , அவரது சகோதரியும் தனியார் கல்வி நிலைய வகுப்புக்களை முடித்துக்கொண்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்த வேளை , குறித்த இளைஞன் ஆள் நடமாட்டம் அற்ற பகுதியில் மாணவியை வழிமறித்து அருகில் இருந்த கட்டத்திற்கு இழுத்து சென்றுள்ளார்.

அதன் போது அங்கிருந்து தப்பித்த மாணவியின் சகோதரி உறவினர்கள் , அயலவர்களை குறித்த பகுதிக்கு அழைத்து வந்துள்ளார். அதனை அவதானித்த குறித்த இளைஞன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மாணவியின் உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://athavannews.com/2022/1305598

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் வேலை செய்த கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை!

யாழில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் வேலை செய்த கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை!

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு முன்பாக உள்ள இரு ஆடை விற்பனையகத்தில் பணியாற்றும் நால்வர் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , குறித்த ஆடை விற்பனை நிலையங்கள் இரண்டினதும் வியாபர அனுமதியினை இரத்து செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் எடுத்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை யாழ்.போதனா வைத்திய சாலைக்கு முன்பாக உள்ள இரண்டு ஆடை விற்பனை நிலையங்களில் வேலை செய்யும் நான்கு பேர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விற்பனை நிலையத்திற்கு அண்மையாக வைத்து நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஆயிரம் போதை மாத்திரைகள் மற்றும் ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டன.

இந்நிலையில் வைத்திய சாலைக்கு முன்பாக போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதனை தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி யாழ்.மாநகர முதல்வருக்கு கடிதம் அனுப்பியதுடன் , அதன் பிரதி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கும் , யாழ்.வர்த்தக சங்கத்திற்கும் அனுப்பி இருந்தார்.

அந்த கடிதத்திற்கு, “பணிப்பாளர் அனுப்பிய கடிதம் கிடைத்தது. விரைவில் அந்த வர்த்தக நிலையங்களின் அனுமதி பாத்திரத்தை இரத்து செய்வதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும்” என பணிப்பாளருக்கு மாநகர முதல்வர் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

https://athavannews.com/2022/1305620

  • கருத்துக்கள உறவுகள்
Posted

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைத்திய பராமரிப்பு தேவையாயினும், நுளம்பை அழித்து பெருக்கத்தை தடுப்பதே நீண்டகால பலனளிக்கும், வைத்திய சாலையில் நோயாளியை பராமரித்து வீட்டுக்கு அனுப்பினால் மீண்டும் நுளம்பு கடித்து மீண்டும் பாதிப்புக்குள்ளாகி மீண்டும் மீண்டும் வைத்தியசாலையை நாடி வரவேண்டி இறுதியில் இறக்க நேரிடும். யாரும் திகைக்க வேண்டாம், இது உவமானம்.            

Posted

போதை மருந்தை வராமல் தடுத்தல்.
போதைக்கு அடிமையானவர்களை மருத்துவ ரீதியாக குணப்படுத்தல்,உளவியல் ரீதியாக குணப்படுத்தல் என மிக நீண்ட செயற்பாடுகள் உண்டு.
வற்புறுத்தி போதைக்கான அடிமையானவர்களை சிகிச்சை அளிக்க முடியாது.அளித்தாலும் வெற்றிகரமாக அமையாது.
இப்படியான வசதிகளை புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் அளிக்குமிடத்து புனர்வாழ்வு சாத்தியமானது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

போதைக்கு அடிமையானவர்களுக்கு யாழில் புனர்வாழ்வு நிலையம் அமைக்க முயற்சி - மாநகர முதல்வர்

By VISHNU

18 OCT, 2022 | 03:35 PM
image

வட பகுதியில் போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிப்பதற்கு யாழ் நகருக்கு அண்மையில் புனர்வாழ்வு  நிலையம் அமைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்

பப்ரல்  அமைப்பின் மாற்றத்திற்கான பாதை கற்கை நெறியின் யாழ் மாவட்ட பெண்கள் குழு நடாத்தும் போதையினால் பாதை மாறும் இளையோரை நல்வழிப்படுத்தி நற்பிஜைகளாக உருவாக்குவோம்  எனும் தொனிப் பொருளிலான போதை ஒழிப்பு விழிப்புணர்வு செயற்பாட்டு நிகழ்வு திருநெல்வேலி முத்து தம்பி இந்து மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

குறித்த விழிப்புணர்வு செயற்பாட்டில் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய யாழ் மாநகர  முதல்வர் மேற்கண்டவாறு தெரிவித்தார்,எங்களுடைய பிரதேசமானமானது  அச்சுறுத்தலையும் ஆபத்தினையும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றது.

அண்மையில் வெளிவரும் பத்திரிகை செய்திகள் அனைவரையும் கவலைக்கு உள்ளாக்குகின்ற கலக்கத்தை உண்டாக்குகின்ற பயங்கரமான செய்திகளை அண்மை காலங்களில் பத்திரிகைகளில் படித்துக் கொண்டிருக்கின்றோம்.

ஒவ்வொரு பெற்றோரும் தங்களுடைய பிள்ளைகள் எவ்வாறு பாதிக்கப்பட போகின்றார்கள் என்கின்ற அச்சத்தில் தங்களுடைய வாழ்நாளை கழிக்கின்ற ஒரு அவல நிலைமை தற்பொழுது ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சமூகத்தில் இருக்கக்கூடிய பெரியவர்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது அதாவது போதை பொருள் வர்த்தகர்களின் பிரதான இலக்காக  பாதிக்கப்படுபவராக இருப்பவர்கள் பாடசாலை மாணவர்களாகத்தான் இருக்கின்றார்கள்.

இந்த பாடசாலை மாணவ மாணவிகளை இலக்கு வைத்து இவ்வாறான போதைப் பொருள்  விநியோகம் அண்மை காலங்களிலே அதிகரிக்கப்பட்டு வருகின்றது.

எதிர்கால சந்ததி என கருதப்படுகின்ற எங்களுடைய இளைஞர்கள் யுவதிகளை நோக்கி போதை பொருள் வர்த்தகம் மிக வேகமாக நடைபெற்று வருகின்றது அதற்குள்ளே அறிந்தும் அறியாமலும் அதனுடைய எதிர்கால விளைவுகளை பற்றி தெரியாது எமது இளைஞர்யுவதிகள் இந்த போதைப் பொருளுக்குள்ளே அடிமையாகி கொண்டிருக்கின்றமை  இந்த மண்ணிலே நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.

இதனை தடுத்து நிறுத்த வேண்டிய பாரிய கடப்பாடு ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது அதிலும் விசேடமாக அரசியல் தலைமைகள் சமூகமட்ட பிரதிநிதிகள் அதோடு பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மற்றும் கல்வி சமூகம் அனைவரதும் கடமையாகும்.

எதிர்காலத்தில் இந்த போதைப்பொருள் பாவனைக்குள் உள்ளாகாதவாறு மாணவர்களை எவ்வாறு பாதுகாப்பது தொடர்பில் நாங்கள் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

யாழ் மாநகர முதல்வர் என்ற ரீதியில்  எதிர்காலத்தில் எவ்வாறான செயற்பாட்டினை எவ்வாறு முன்னெடுப்பது தொடர்பில் அனைத்து தரப்பினருடனும்  போதைப் பொருளுக்கு எதிரான செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கு அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து விசேட கூட்டம் ஒன்றிணைத்து விரைவில் அந்த செயற்பாட்டினை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளேன்  பல்கலைக்கழக மாணவர்கள் கல்வி சமூகத்தினர் மற்றும் பொலிசார் ஆகிய அனைத்து தரப்பினரை ஒன்றிணைத்து எவ்வாறு இந்த போதைப் பொருட்களில் இருந்து எமது மாணவ சமூகத்தை காப்பாற்ற முடியும் என்ற விடயத்தினை அறிந்து அதனை செயல்படுத்துவதற்குரிய நடவடிக்கை விரைவில் முன்னெடுக்க உள்ளோம்

அத்தோடு போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கக் கூடிய விசேட நிலையம் ஒன்றினை  யாழ் நகருக்கு அண்மையில் அமைப்பதற்கு யோசித்து வருகின்றோம் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை சிறைச்சாலைக்கு அனுப்புவதன் மூலம் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள் ஆகவே போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வுக்கு அனுப்புவதன் மூலம் அவர்களை சமூகத்தோடு ஒருங்கிணைக்க முடியும்

எனவே வடக்கில் யாழ் நகருக்கு அண்மையில் ஒரு இடத்தில்  புனர்வாழ்வு நிலையம் ஒன்றினை அமைப்பதற்கும் நாங்கள் தீர்மானித்திருக்கிறோம் அதற்குரிய முயற்சியை  எடுத்து வருகின்றேன் அனைவரின் ஒத்துழைப்புடன் அந்த விடயம் விரைவில் கைகூடும் எனவும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/137909

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஆவரங்காலில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

ஆவரங்காலில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை 22 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமானப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களின் அடிப்படையில் ஆவரங்கால் கிழக்கு, புத்தூரை சேர்ந்த 43 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரையும், அவரிடமிருந்து மீட்கப்பட்ட போதை மாத்திரைகளையும் மேலதிக நடவடிக்கைக்காக புலனாய்வு பிரிவினர் அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்

https://athavannews.com/2022/1305685

 

###############   ##############   ################

முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர் கசிப்புடன் கைது!

யாழ்.தாவடியில் பலசரக்கு கடையில் போதை கலந்த பாக்குகள் மீட்பு- உரிமையாளர் கைது!

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் உள்ள பலசரக்கு கடை ஒன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 390 கிராம் போதைப்பாக்கினை பொலிஸார் மீட்டதுடன் கடை உரிமையாளரையும் கைது செய்துள்ளனர்.

யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , குறித்த கடைக்கு விரைந்த பொலிஸார் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த போதை கலந்த 390 கிராம் பாக்கினை கைப்பற்றியதுடன் , உரிமையாளரான 30 வயதுடைய இளைஞனையும் கைது செய்துள்ளனர்.
Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நானறிந்தவரையில் குடு என்று கொழும்பில் இருந்து வருவோர் கதைத்ததை கேட்டுள்ளேன், வடக்கில் பாக்கு வெற்றிலை, புகையிலை, பீடி, சிகறெற், கள்ளு, சாராயம், இவற்றைத்தவிர வேறு எதையும் கண்டிலர் நம்மவர். இன்று போதைப்பொருள் மலிந்த நிலமாக மாறி கண்டதும் பாடம் எடுக்கும் நிலைக்கு கொண்டுவந்து விட்டிருக்குதுகள். வாள்வெட்டுக்குழு, போதைப்பொருள் பாவனை, சிறுவர் துஷ்பிரயோகம், நம்ம இளைய தலைமுறை தலையால அழிந்தே போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
59 minutes ago, satan said:

நானறிந்தவரையில் குடு என்று கொழும்பில் இருந்து வருவோர் கதைத்ததை கேட்டுள்ளேன், வடக்கில் பாக்கு வெற்றிலை, புகையிலை, பீடி, சிகறெற், கள்ளு, சாராயம், இவற்றைத்தவிர வேறு எதையும் கண்டிலர் நம்மவர். இன்று போதைப்பொருள் மலிந்த நிலமாக மாறி கண்டதும் பாடம் எடுக்கும் நிலைக்கு கொண்டுவந்து விட்டிருக்குதுகள். வாள்வெட்டுக்குழு, போதைப்பொருள் பாவனை, சிறுவர் துஷ்பிரயோகம், நம்ம இளைய தலைமுறை தலையால அழிந்தே போகிறது.

இனி கடைகளில் புகையிலை, சிகரெட், பான்பராக் விற்க மாட்டோம் உரிமையாளர்களிடம்  எழுதி வாங்கும் போலீசார் | Dinamalar Tamil News

ஊரிலை, இளையவர்கள்... பாக்கு வெத்திலை போட்டாலே, பயங்கர பேச்சு  விழும். 
இப்ப அதற்குள் போதையையும் கலந்து விற்பதை என்ன சொல்ல.

பாக்கில்... போதைப் பொருள் கலந்து பாவிப்பது  வட இந்தியாவில் சாதாரணம்.
தமிழ்நாட்டில்... அது தடை. 

அதனைப் பாவிப்பவர்களின்.. பல் எல்லாம், சிலகாலத்தின் விழுந்து விடுமாம்.
அத்துடன்... புற்று நோய் உறுதி. 

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

17 வயதுடைய மகனை திருத்து தருமாறு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த தாய்!

17 வயதுடைய மகனை திருத்து தருமாறு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த தாய்!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடும்பிராய் மேற்கு பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் ஒருவரை அவருடைய தாயார் தனது மகனை திருத்தித் தருமாறு கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் இன்று (புதன்கிழமை) காலை ஒப்படைத்துள்ளார்.

ஒப்படைக்கப்பட்ட இளைஞன் க. பொ. த சாதாரண பரீட்சைக்கு தோற்றிய பின் வீட்டில் இருப்பதாகவும்
கடந்த 2 வருடங்களுக்கு மேலாக போதை பொருள் பாவனையில் ஈடுபட்டு வருவதன் காரணமாக நேரத்துக்கு ஒழுங்காக சாப்பிடுவதில்லை இரவில் தூக்கமின்மை போன்ற பல இடர்பாடுகளுக்கு முகம் கொடுத்து வருவதாக தாய் தெரிவித்துள்ளார்.

தனது மகனின் எதிர்காலம் தொடர்பில் சிந்தித்த தாய் தனது மகனை இன்றைய தினம் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் திருத்தி தருமாறு ஒப்படைத்துள்ளார்.

பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட குறித்த இளைஞன் நாளைய தினம் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட உள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2022/1305850

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ்ப்பாணம் அரசடி பகுதியில் ஊசி மூலம் போதைப்பொருள் எடுத்த நால்வர் கைது!

யாழ்ப்பாணம் அரசடி பகுதியில் ஊசி மூலம் போதைப்பொருள் எடுத்த நால்வர் கைது!

யாழ்ப்பாணம் அரசடி பகுதியில் ஊசி மூலம் ஹெரோரோயின் போதை மருந்து எடுத்துக் கொண்டிருந்த நால்வர் 2 கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் கைது.

யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான அணியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களில் இருவருக்கு ஏற்கனவே நீதிமன்ற பிடி விறாந்து ஐந்து காணப்படுவதாகவும் கைது செய்யப்பட்ட நபர்கள் தாங்கள் எழுது மட்டும் வாழ் பகுதியில் போதைப் பொருளை பெற்றுக் கொள்வதாகவும் பளைப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் குறித்த போதை பொருளை பெற்றுக் கொள்வதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவித்துள்ளார்கள்.

கை செய்யப்பட்ட நபர்கள் விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் உட்படுத்தப்படவுள்ளார்கள்.

https://athavannews.com/2022/1305423

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹெரோயின் போதைபொருள் உடைமையில் வைத்திருந்தவர் கோப்பாய் பொலிசாரினால் கைது!

ஹெரோயின் போதைபொருள் உடைமையில் வைத்திருந்தவர் கோப்பாய் பொலிசாரினால் கைது!

20 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் உடைமையில் வைத்திருந்தவர் கோப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

20 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த ஒருவர் செல்வபுரத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவர் கோப்பாய் பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது நண்பர்களிடமிருந்தஏ தனக்கு போதை பொருள் கிடைப்பதாகவும் அதேபோல் தனது கிராமத்திலும் இலகுவாக போதைப் பொருளை பெற்றுக்கொள்ள முடிவதாகவும் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக போதைப் பொருள் தான் பாவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் விசாரணைகளின் பின் நாளைய தினம் நீதி மன்றத்தின்முற்படுத்தப்படவுள்ளார்

https://athavannews.com/2022/1305857

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, தமிழ் சிறி said:

தனது மகனின் எதிர்காலம் தொடர்பில் சிந்தித்த தாய் தனது மகனை இன்றைய தினம் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் திருத்தி தருமாறு ஒப்படைத்துள்ளார்.

 

எமது மக்கள் இன்னும் எதிரியை அடையாளம் காணவில்லை. அந்தத் தாய் ரொம்ப அப்பாவியாய் இருக்கிறா, மகனை கொண்டுபோய் ஓநாய்களிடம் ஒப்படைக்கிறா. நாளைக்கு இவனையே போதைப்பொருள் விற்பனைக்கு வாளோடு அனுப்பி வைக்கும் போலீஸ்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, தமிழ் சிறி said:

ஊரிலை, இளையவர்கள்... பாக்கு வெத்திலை போட்டாலே, பயங்கர பேச்சு  விழும். 

நீண்டு நிலைக்க, திட்டமிட்டு கலாச்சார சீரழிவை இளையவர்களிடம்  ஏற்படுத்துகிறார்கள். 

12 hours ago, தமிழ் சிறி said:

அதனைப் பாவிப்பவர்களின்.. பல் எல்லாம், சிலகாலத்தின் விழுந்து விடுமாம்.
அத்துடன்... புற்று நோய் உறுதி. 

மறைவில்  தடுக்கப்பட்டதை பாவிப்பதென்றால், அதன் பலாபலன் கொடியதே!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

arresr-720x375.jpg

போதைப் பொருளுடன் மல்லாகத்தில் மூன்று இளைஞர்கள் கைது!

யாழ்ப்பாணம் – மல்லாகம் பகுதியில் மூன்று இளைஞர்கள் நேற்றைய தினம் (புதன்கிழமை) போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நல்லூர் மற்றும் கொக்குவில் பகுதிகளை சேர்ந்த 32, 23 மற்றும் 25 வயதுடைய மூவரும் 50, 60 மற்றும் 65 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

https://athavannews.com/2022/1305993

  • கருத்துக்கள உறவுகள்
Posted

arresr-720x375.jpg

யாழில் ஹெரோயினுடன் யுவதி கைது

யாழ்ப்பாணம் – அச்செழு பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டில் 23 வயதான யுவதியொருவர் நேற்று(புதன்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.

அச்செழு பகுதியில் யுவதியொருவர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸ் குழுவினர் குறித்த பெண்ணை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 200 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளையும் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணையும், அவரிடம் இருந்து மீட்கப்பட்ட போதை பொருளும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கோப்பாய் பொலிசாரிடம் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் ஒப்படைத்துள்ளனர்.

https://athavannews.com/2022/1305978

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

 

கோப்பாய் செல்வபுரத்தில் சமையலறையில் கசிப்பு தயாரித்தவர் கைது!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செல்வபுரம் பிரதேசத்தில் வீட்டின் உள்ளே சமையல் அறையில் சட்ட விரோத கசிப்பு தயாரித்த 34 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் இருந்து 15 லீற்றர் மதுசாரம் மற்றும் கசிப்பு தயாரிக்க பயன்படுத்திய உபகர்ணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன சந்தேக நபரை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளார்.
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மல்லாகம் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் போதைப்பொருளுடன் கைது!

மல்லாகம் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் போதைப்பொருளுடன் கைது!

யாழ்ப்பாணம் மல்லாகம் நீதவான் நீதிமன்றை அவமதித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் நீதிமன்றினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 25 வயதுடைய நபர் ஒருவர் 80 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இன்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2021 ஆம் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் , நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டு உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் நீதிமன்றினால் குறித்த நபருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

குறித்த நபரை கைது செய்வதற்கு பொலிஸார் நீண்ட காலமாக தேடி வந்த நிலையில் , குறித்த நபர் யாழ்ப்பாணம் குருநகர் ஐந்து மாடி கட்டட பகுதியில் பதுங்கி இருப்பதாக மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸ் குழு குறித்த நபரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 80 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக தெரிவித்த பொலிஸார் அந்நபரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://athavannews.com/2022/1306132

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழில் போதைப்பொருளுடன் மூவர் கைது – ஒருவர் தப்பியோட்டம்!

யாழில் போதைப்பொருளுடன் மூவர் கைது – ஒருவர் தப்பியோட்டம்!

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை போதைப்பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றுமொரு நபர் பொலிசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பி சென்றுள்ளார்.

சிறுப்பிட்டி கலையொளி பகுதியில் 99 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் 1500 மில்லி கிராம் கஞ்சா ஆகிய போதைப்பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை யாழ்.நகரில் இருந்து தீவக பகுதிக்கு போதைப்பொருட்களை கடத்துபவர்கள் குறித்து ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் , மண்கும்பான் பகுதியில் 20 வயதான இளைஞனை கைது செய்த பொலிஸார் அவரிடம் இருந்து 36 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டனர்.

குறித்த நபருடன் வருகை தந்திருந்த மற்றுமொரு இளைஞன் பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.

தப்பியோடிய நபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து உள்ளதுடன் , கைது செய்யப்பட்டுள்ள நபரே யாழ்.நகர் பகுதியில் இருந்து தீவக பகுதிகளுக்கு போதைப்பொருளை கடத்தி வந்து விற்பனை செய்பவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

https://athavannews.com/2022/1306245

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, தமிழ் சிறி said:

குறித்த நபருடன் வருகை தந்திருந்த மற்றுமொரு இளைஞன் பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.

ஹா....ஹா..... பொலிஸாரின் ஆற்றலை என்ன சொல்வது? ஓடிய இளைஞன் பொலிஸாருக்கு தண்ணி காட்டினானா, மணி காட்டினானா? அப்பாவிகள் என்றால் போலீசாரிடம் இருந்து தப்பிக்க, போலீசாரை தாக்க முயற்சித்த வேளை சுட்டுக்கொல்லப்பட்டார் என சுடச் சுடச் செய்தி வந்திருக்கும் இன்று.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

 

யாழ் .கோப்பாயில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

யாழ் .கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு பொக்கணைப் பகுதியில் நீண்டகாலமாக இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையமொன்று இன்று (ஞாயிற்க்கிழமை) யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் முற்றுகையிடப்பட்டது.

புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை குறித்த கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டது.

மேலும் அங்கிருந்து கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட்டதாக கருதப்படும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் 200 லீற்றர் கோடா, 60லீற்றர் ஸ்பிரிட் மற்றும் கசிப்பு தயாரிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

இதேவேளை கசிப்பு உற்பத்திப் பொருட்கள், கசிப்பு தயாரிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பன கோப்பாய் பொலிஸார் கைபற்றியதுடன் சந்தேக நபர்களை நீதிமன்றில் முற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1306561

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

 

வீட்டில் உள்ள பொருட்களை விற்று போதைப்பொருள் வாங்கிய இளைஞன் யாழில் கைது

யாழ். அச்சுவேலி பகுதியில் 40 மில்லி கிராம் ஹெரோயின் மருந்து ஏற்றும் ஊசி தேசிக்காய் என்பவற்றுடன் பொலிஸாரால் இளைஞன் ஒருவர் கைது .

அச்சுவேலி பத்தமேனி பகுதியை சேர்ந்த 30 வயதுடைய குறித்த இளைஞன் போதைக்கு அடிமையான நிலையில் வீட்டில் இருக்கும் பொருட்களை திருடி விற்று போதைப்பொருட்களை வாங்குவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த இளைஞனை மேலதிக விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

https://athavannews.com/2022/1306598

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழில் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த இரு இளைஞர்களும் போதைப்பொருள் பாவித்தது உறுதி!

யாழில் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த இரு இளைஞர்களும் போதைப்பொருள் பாவித்தது உறுதி!

தோட்டக் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்று உடற்கூற்று பரிசோதனையின் பின் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இருவரது சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகளை பரிசோதனைக்கு உள்படுத்திய போதும் மதுசாரம் மற்றும் போதைப்பொருளை பாவித்தமை கண்டறியப்பட்டுள்ளது.

பருத்தித்துறை புலோலி சிங்கநகர் பகுதியில் திங்கட்கிழமை இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
பருத்தித்துறை பன்னங்கட்டு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டனர்.

இந்துக்களின் பண்டிகையான தீபாவளி பெருநாளான நேற்று இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மந்திகை ஆதார மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரி சட்ட மருத்துவ வல்லுநர் க.வாசுதேவா முன்னிலையில் இருவரது சடலமும் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது.

https://athavannews.com/2022/1306992

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழில். போதைப்பொருட்களுடன் மூன்று மாணவர்கள் கைது!

யாழில். போதைப்பொருட்களுடன் மூன்று மாணவர்கள் கைது!

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி ஆகியவற்றின் மாணவர்கள் மூவர் நேற்று (வியாழக்கிழமை) போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவர்கள் மூவரில் ஒருவர் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர் எனவும் மற்றைய இருவரும் சகோதரர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த மாணவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாண பல்கலைக்கழகம் , யாழ்ப்பாண தொழிநுட்ப கல்லூரி , திறந்த பல்கலைக்கழகம் – யாழ்ப்பாணம் , யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி ஆகியவைக்கு அண்மையில் உள்ள கலட்டி சந்திக்கு அருகில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக, யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸ் குழுவினர் நடாத்திய சோதனை நடவடிக்கையில், ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் மூன்று மாணவர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்களில் இருவர் சகோதரர்கள் எனவும் , அவர்கள் இருவரும் நல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் , மற்றையவர் பதுளையை சேர்ந்த பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த மாணவர்களுக்கு போதை பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த 22 மற்றும் 26 வயதுடைய இரு இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஐவரிடமும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

https://athavannews.com/2022/1307506




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.