Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வைகாசி நிலவே! வைகாசி நிலவே!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழம் எல்லாம் தம்மை இளசு என சொல்லிட்டு திரியுற இக்களத்தில் நெடுக் அண்ணா மட்டும் தன்னை கிழம் என சொல்லிட்டு திரியுறாரே. ஏன் நெடுக் அண்ணா

உண்மையைச் சொல்லுறன் பிள்ளை. :lol:

  • Replies 67
  • Views 7.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

சிவனே என்றுதான் இருந்தாவா! :lol:

கதாநாயகன் அவளை தானாக தேடிப் போகவில்லையே? தற்செயலாகத் தானே அவுஸ்திரேலியாவில் அவளை மீண்டும் கண்டான்? இதைவிட கதாநாயகன் ஒரு வீக்கான கரக்டர் என்று நான் முன்னமே சொல்லி இருக்கிறன்..

இந்த படத்தில் முதலாவது கதாநாயகி ஒரு விசறி என்றால், இவன் ஒரு விசறன்! இதில் மாற்றுக் கருத்து இல்லை..

இங்கு நீங்கள் கவனிக்கவேண்டியது என்னவென்றால், முதலாவது கதாநாயகி அவுஸ்திரேலியாவில் எங்கு எங்கு எல்லாம் சறுக்குக்கின்றா என்பதை..

1. இவாவுக்கு ஏன் உந்த தேவையில்லாத வேலை? விமானத்தில் நண்பர்களான இரண்டாவது கதாநாயகியையும், கதாநாயகனையும் தொடர்புகொள்ள முடியாதவாறு ஏன் தடுக்கின்றா? (டக்சியில் செல்லும் காட்சி) இரண்டாவது கதாநாயகிக்கு கதாநாயகனைப் பற்றி ஏன் இல்லாத பொல்லாததையெல்லாம் சொல்ல வேண்டும்? உண்மையாக அவனை காதலித்ததாக கூறுகின்றீர்கள், ஆனால் தனது காதலனைப் பற்றி ஏன் ஒரு கூடாதவன் அவனுடன் சேராதே என்று தனது தோழிக்கு அறிவுரை கூறவேண்டும்? அவனது தனிப்பட்ட வாழ்க்கையில் இவா ஏன் போய் தலையைக் கொடுக்கின்றா?

2. இவள் தனது பக்கத்தை மட்டும் பார்க்கும், தனது சுகங்களை மட்டும் நேசிக்கும் ஒரு சுயநலவாதியாக காட்டப்படுகின்றாள். பல தடவைகளில் இந்த முதலாவது கதாநாயகி கதாநாயகனை கவர முயற்சி செய்து இருக்கின்றா. அந்த மேக் அப்புகள் போடுவது, வலிந்து சென்று அவனைக் காண, கவர முயற்சிப்பது போன்றவை. இவை எதை கூறுகின்றதென்றால், எனக்கு விருப்பமான நேரத்தில் நான் உன்னை அனுபவித்து மகிழ்வேன். ஆனால், உனக்கு விருப்பமான நேரங்களில் நீ என்னை அணுக முடியாது என்பதை!!

எனவே, இவள் சிவனே என்று இருந்தாள் என்று கூறமுடியாது. சனியனாக இருந்தாள் என்று கூறவேண்டும்! :lol:

3. இவாவும் தான் கதாநாயகனை மனதில் வைத்து துரத்தி இருக்கிறா. அப்புறம் எதுக்கு அவன் துரத்துவது மட்டும் அவாவுக்கு பிழையாக தெரிகின்றது? மனதில் வைத்து துரத்தினால் குற்றம் இல்லை, வெளிப்படையாக துரத்தினால்தான் குற்றமா? இதைத்தான் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுதல் என்று சொல்வார்கள்!

4. ரகர்.. ஏதோ விளையாட்டு பார்க்க கதாநாயகன், மற்றும் இரண்டாவது கதாநாயகியுடன் போனபோது இந்த முரட்டு பிடிவாதக்காரி நடந்துகொண்டவிதம் அவளது குரூர புத்தியையும், சந்தேக குணங்களையும், சுயநலத்தையும் காட்டி நிற்கின்றது. அவள் அங்கு கதாநாயகன் மீது உள்ள தனது ஆசைகளை மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பூர்த்தி செய்கின்றாள். இதைத்தான் இருந்த இடத்தில் கக்** இருந்துவிட்டு எழும்பி போவது என்று சொல்வார்கள். அதாவது தனது தேவை நிறைவேற வேண்டும். அது நிறைவேறியதும், நீ யாரோ, நான் யாரோ என்ற எண்ணம்!! சுயநல புத்தி!!

மற்றது இரண்டாவது கதாநாயகியை லூசு, சூடுசுரனை இல்லாதது என்றெல்லாம் கூறுவது அபத்தம்! :angry:

மென்மையான இதயம் கொண்ட, இரக்க குணம் மிகுந்த, வாழ்க்கையை சிம்பிளாக எடுக்கும் பக்குவம் மிகுந்த, வாழ்வில் சந்தோசமாக ஒவ்வொரு செக்கனையும் கழிக்க வேண்டும், யதார்த்தத்துடன், நிகழ்காலத்துடன் வாழவேண்டும் என்ற எண்ணம் கொண்ட, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல் வெளிப்படையாக எதையும் பேசும் வழக்கம் கொண்ட, மற்றவர்களிற்கு உதவவேண்டும் எனும் எண்ணம் நிறைந்த... இவ்வாறான ஒரு சூப்பர் கரெக்டரே எங்கள் இரண்டாவது கதாநாயகி! :lol:

ஆரம்பத்தில் முதலாவது காதலியையும், காதலனையும் சேர்த்துவைக்கவேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் அவர்களிற்கு உதவி செய்கின்றாள். முதலாவது காதலியின் மனதை காதலனின் பக்கம் திருப்பி அவளை அவனுடன் சேர்த்து வைப்பதற்காக சில குறும்புத்தனங்கள் செய்கின்றாள். ஆனால், இந்த முரட்டுப் பிடிவாதக்காரி, அழகிய பூ போன்ற காதலனின் வாழ்வை நசித்து நாசமாக்கப் போகின்றாள் என்பதை அறிந்ததும் எங்கள் சூப்பர் கதாநாயகி அவனை காதலித்து அவன் வாழ்க்கைக்கு ஒளி ஏற்றி வைக்கின்றாள்.

கதாநாயகன் ஒரு விபத்தில் காயப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது எங்கள் இரண்டாவது சூப்பர் கதாநாயகி எப்படி செயற்பட்டாள் என்பதை அவதானித்தீர்களா? அவள் துடிதுடித்துப் போனாள்! வைத்தியர்களை அழைத்து மருத்துவ சிகிச்சையை உடனடியாக அவனுக்கு கொடுத்து அவனுக்கு ஏதாவது ஆபத்து வரக்கூடாது என்பதில் குறியாக இருந்தாள். ஆனால், ஒன்றுக்கும் உதவாத முதலாவது கதாநாயகி ஒரு மரக்கட்டை போல், ஒரு அந்நியனுக்கு ஏதோ நடந்தது போல் அக்கறையின்றி நின்றாள். இப்படிப்பட்டவள் வைத்தியசாலைக்கு வந்ததன் நோக்கம்தான் என்ன? காதலன் இறந்துவிட்டானா என்பதை அறிந்துவிட்டு செல்ல வந்தாளா? :angry:

காதல் என்று இறங்கிவிட்டு பின் அதில் நொட்டைகள் பார்த்து காதலனில் அல்லது காதலியில் குறைபிடிப்பவர்கள் காதலிக்க கூடாது. இதில செமக்கடி, பகிடி என்னவென்றால் இவ்வளவெல்லாம் அக்கிரமம் காதலனுக்கு செய்துபோட்டு இறுதியில் அவனை தான் உண்மையாக காதலித்ததாக பேட்டியில் கூறுகின்றா. அப்படியானால், இதன் அர்த்தம் - காதலனை இவளால் அவுஸ்திரேலியாவுக்கு வந்தும் மறக்க முடியவில்லை. அவுஸ்திரேலியாவில் சிவனே என்று வாழவில்லை. காதலனை மனதினால் துரத்திக்கொண்டு ஒரு விசறியாகவே வாழ்ந்து உள்ளாள். வெளிப்படையாக இவளை துரத்திய கதாநாயகன் ஒரு விசறன் என்றால், மனதால் இவனைத் துரத்திய இவளும் ஒரு விசறியே!

இவ்வளவு சிமார்ட் ஆன பொம்பிளைக்கு கேவலம், ஒரு ஆணை ஏன் தனது மனதில் இருந்து அகற்றமுடியவில்லை? ஏன் அவனை மறக்கமுடியவில்லை? அப்படியாயின் தான் செய்த தவறை ஏற்றுக்கொள்ள இந்த பிடிவாதக்காரியால் முடியவில்லை. தான் செய்தது தவறு என்று மற்றவர்களிற்கு காட்டிக்கொள்ள விருப்பம் இல்லை. வரட்டு கெளரவம் இவளது மனதினுல் புரையோடிப்போய் உள்ளது!!

இரண்டாவது கதாநாயகி எங்கையடா ஒருத்தன் கிடைக்காதா என்று ஒரு போதும் அலையவில்லை. நீங்கள் வேறு ஏதோ படக்கதையை இதுக்க கொண்டுவந்து மிக்ஸ் பண்ணுறீங்கள் போல இருக்கு.. :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது கதாநாயகி எங்கையடா ஒருத்தன் கிடைக்காதா என்று ஒரு போதும் அலையவில்லை. நீங்கள் வேறு ஏதோ படக்கதையை இதுக்க கொண்டுவந்து மிக்ஸ் பண்ணுறீங்கள் போல இருக்கு..

அடப்பாவிகளா.. அந்த லூசு.. எப்படி விமானத்தில அறிமுகமாகி.. அவன் பின்னாடியே அலையோ அலையென்று அலைஞ்சு திரிஞ்சுது..!

முதலாமவள்.. மனதுக்க நிறைந்த அன்போடுதான் இருந்தாள். ஆனால் அவனின்ர சில செயற்பாடுகளால அவள் தன்ர அன்பை சரியா வெளிப்படுத்த சந்தர்ப்பம் அமையல்ல. அதற்கு அவள் மட்டும் காரணமல்ல. ஏட்டிக்குப் போட்டியா அவள் கூட நடந்த நாயகனும் தான் காரணம். கொஞ்சும் விட்டுக் கொடுத்துப் போயிருந்தா.. அவளின்ர அன்பைப் பெற்றிருக்கலாம். நம்பிக்கையைப் பெற்றிருக்கலாம். செய்தானா...??!

அவன் முதலாவதை உண்மையாவே அர்ப்பணிப்போட காதலிச்சிருந்தா .. இரண்டாவதோட தொத்தி இரான். அவனுக்கு உண்மையான காதல் இருக்கல்ல. நீங்க பெண் உண்மையா இருக்கனும் என்று எதிர்பார்க்கிற அளவுக்கு அவன் இருந்திருக்கானா என்று பார்க்கல்ல. இரண்டாவதுக்கு அவன் எவளைக் காதலிச்சா என்ன.. எவளோ திரிஞ்சால் என்ன.. பட்டில உள்ள ஆடு மாதிரி.. 10 போட 11 ஒன்றா இதுவும் இருக்கும்.. அப்படி ஒரு மானங்கெட்ட மன நிலை அதுக்கு. அதைப் போய் நீங்கள் வெளிப்படை..சோசியல் மூவ்.. என்று விளக்கம் கொடுத்துப் பார்ப்பீங்கள் என்றால்.. றோட்டில போற விபச்சாரியும்.. அதே வகைதான்..!

அவளைப் பொறுத்தவரை.. அவன் எப்படிப் போனாத்தான் என்ன.. தான் வாழ்ந்தால் சரி. ஒருவருக்கு ஆபத்து என்றால் யார்தான் உதவமாட்டார்கள்.

ஆனால் இன்னொருத்தியின் காதலனை பிடிங்கிட்டுப் போறது.. எவ்வளவு கேவலமானது. அது அலையாத தன்மையா.. சரியான லூசு.. உங்கட சூப்பர் நாயகி. பேக்கு மாதிரி இருந்து காரியத்தை சாதிச்சிடும். அவளெல்லாம் வாழ்க்கைக்கு ஒளியென்ன சூரியனே கொடுப்பாளுவள்..! :lol::lol:

Edited by nedukkalapoovan

தாத்தா அந்த லூசு விமானத்தில் ஏறி அலைந்து திரிந்துச்சு சரி அது வெளிபடையாக காட்டிவிட்டது ஆனா அரைவாசி பேர் உள்ளுகுள்ள நடித்து கொண்டு இருக்கீனம் அப்படி தாம் முதலாவது ஆளும் தாத்தா........... B)

தாத்தா அவன் விட்டுபிடிக்கவில்லை என்று சொல்லுறீங்க அவா ஏன் விட்டு போயிருக்கலாமே அவன் எத்தனை தரம் பிறகு விட்டு கொடுக்க தயாராகும் சந்தர்பத்தில் எல்லாம் அவனை புறகணித்தது ஏனோ??ஆனா இரண்டாவது காதலி விட்டு கொடுத்து சென்றா இதை நீங்க ஏற்கவேண்டும்..............முதலாவது காதலி எனக்கு மட்டும் தான் என்று ஒரு கொள்கையுடையவளாக இருந்தால் இந்த உலகத்தில அப்படி இருக்க ஏலாது தாத்தா அப்படி இருக்கிற ஒருவாவோடு குடும்பம் நடத்திறது ஏலாத காரியம் நம்ம பொறுத்தவரை தாத்தா............. :P :lol:

தாத்தா இரண்டாவது காதலி வீதியில இருகிற விபாசாரிக்கு சமன் என்றா காதலித்து பிறகு வேண்டாம் என்று விட்டு போட்டு போன அவா யாருக்கு சமன் தாத்தா அவாவும் இதற்கு தான் சமன் என்பார்வையில.............இரண்டாவது ஆள் முதலாவது ஆளுக்கு இவனை பிடிகாது என்று போன பிறகு தான் காதலிகிறா என்பதை நீங்கள் இதில் பார்க்க வேண்டும்.......... :lol:

இன்னொருத்தியின் காதலி என்று சொல்ல முடியாது தாத்தா இவாவை ஏன் என்றா அவள் இவனை காதலனாகவே நடத்தவில்லை பிறகு எப்படி காதலன் என்ற பார்வையில் பார்பது.........பேக்கு வந்து முதலாவது காதலி ஒன்றையும் வெளிபடையாக சொல்லாம ஊமையாக சாதிக்க வேண்டும் என்று நினைகிறது.............இவள் அப்படி இல்லை பிடித்ததை நேராக சொன்னா வெற்றி கண்டா என்றே சொல்லாம்.......... :lol:

Edited by Jamuna

நல்ல காலம் இப்படத்தை எடுத்த இயக்குநர் ஜீவா தற்போது உயிரோடை இல்லை.

ஏன் நிலா அக்கா அப்படி சொல்லுறீங்க..................?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல காலம் இப்படத்தை எடுத்த இயக்குநர் ஜீவா தற்போது உயிரோடை இல்லை.

<<

ஏன் வெண்ணிலா, இப்படி ஓர் பதில்; புரியவில்லையே!

கலைஞா, நெடுக்ஸ் அண்ணை, உங்கள் இருவரின் பார்வையும் இந்தப் படத்திற்கு வித்தியாசமான ஒரு கண்ணோட்டத்தைக் கொடுத்திருக்கின்றது!. இது யதார்த்தவாழ்வில் நிகழ்வது உண்டு. ஆகவேதான் இந்தப்படம் வெற்றி பெற்றது என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று!.

ஒவ்வொரு நிமிடமும் தானும் தன்னைச் சார்ந்தவர்களூம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்கின்ற ஒரு நல்ல பெண் ஒவ்வொருவனுக்கும் மனைவியாகக் கிடைத்துவிட்டால் அங்கே பூமியே சொர்க்கமாகின்றது.

காதலித்தோம் என்பதற்காக ஒருவனை/ஒருத்தியைக் கட்டிக்கொண்டு காலம் முழுதும்ம் நரக வேதனையில் வீழ்வதை விட தன்னை நேசிக்கும், புரிந்து கொள்ளும் உறவோடு தன் காலத்தை தன்னை பகிர்ந்து கொள்வதே புத்திசாலித்தனம். முதலாவது காதலே அல்ல...அவன் தனக்குள்ளேயே இருக்க வேண்டும் தன்னை மட்டுமே நேசிக்க வேண்டும் தன்னிடம் மட்டுமே யாசிக்க வேண்டும் எந்நேரமும் தன்னையே யோசிக்க வேண்டுமென்கின்ற ஒரு பிடிவாதம் நிறைந்த கொடிய குணம். அது சரிவருமா? இந்தக்காலத்தில்?!!

சுயம் இழக்காமல் சுதந்திரமாக இருமனமும் புரிந்துணர்ந்து வாழும் போது வாழ்க்கை பூந்தோட்டமாகின்றது.

எனக்கான நீ இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதும் எனக்காக நீ மாறியே ஆகவேண்டும் என்பதும் நிச்சயமாக அடிமைப்படுத்தும் தனமே அன்றி அங்கு காதலே அல்ல!

காதலைப் புரிந்துகொண்டால் தன்னாலேயே இவனுக்காக/இவளுக்காக அவர்கள் இசைவாக்கப்படுவார்கள். அங்கு இயல்பாகவே அவன்/அவளுக்குப் பிடித்தமாதிரியே இருவரும் தங்களை இயல்பாக்கிக்கொள்வார்கள்.

அதுதான் காதல்!!

பலருக்கு 'காதல்" என்னவென்றே புரியவில்லை அதனால் தான் தோல்விகளும், தற்கொலைகளும், கொலைகளும்! மிகவும் அதிகமாகிப்போச்சு..

கலைஞா,

எதற்காக இத்தனை உணர்ச்சிவசப்படுகின்றீர்கள்..

.. ;) !

  • கருத்துக்கள உறவுகள்

காதலித்தோம் என்பதற்காக ஒருவனை/ஒருத்தியைக் கட்டிக்கொண்டு காலம் முழுதும் நரக வேதனையில் வீழ்வதை விட தன்னை நேசிக்கும், புரிந்து கொள்ளும் உறவோடு தன் காலத்தை தன்னை பகிர்ந்து கொள்வதே புத்திசாலித்தனம். முதலாவது காதலே அல்ல...அவன் தனக்குள்ளேயே இருக்க வேண்டும் தன்னை மட்டுமே நேசிக்க வேண்டும் தன்னிடம் மட்டுமே யாசிக்க வேண்டும் எந்நேரமும் தன்னையே யோசிக்க வேண்டுமென்கின்ற ஒரு பிடிவாதம் நிறைந்த கொடிய குணம். அது சரிவருமா? இந்தக்காலத்தில்?!!

தன்னையே காதலிக்கனும்.. தன்னோடையே இருக்கனும்.. தன்னையே பகிர்ந்துக்கனும் என்று ஒரு காதலி எதிர்பார்க்கிறது.. எந்த வகையில வாழ்க்கையை நரகத்துக்க தள்ளும். விளங்கேல்லையே தமிழ்தங்கை.

ஒரு பேச்சுக்கு சொல்வோம். உங்கள் அம்மா உங்களை விட ஒரு அடப் பண்ணின பிள்ளைக்கு அதிகம் அன்பு காட்ட விளைந்து உங்களைப் புறக்கணித்தால்.. நீங்கள் உங்கள் அம்மா மீது மிகுந்த அன்பு செலுத்துவீர்களா.. இல்ல குறைந்த அன்பு செய்வீர்களா..இல்ல.. இவா என்ன அம்மா என்று வேற அம்மா வேணும் என்று தேடுவீர்களா..??!

ஒரு நல்ல நிரந்தர வேலை.. என்று தேடுகிறீர்கள். உங்களுக்கு அவ்வேலை கிடைக்கும் என்ற நிலையில்.. உங்களின் உற்ற நண்பி ஒருத்தி பெரும் திண்டாட்டத்தில் இருக்கும் நிலையில் அவளுக்கும் அந்த வேலைக்குத் தகுதி இருக்கிறது என்ற நிலை இருக்கும் போது.. அந்த வேலையை உங்கள் நண்பிக்கு விட்டுக் கொடுப்பீர்களா..??! :P

முதலாவது பெண்ணின் அன்பை யாருமே புரிஞ்சுக்கல்ல. அவளிடன் உள்ள அதிக அன்பும் எதிர்பார்ப்பும் தான் அவள் அவனை தனது சொத்து என்ற நிலையில் வைத்துப் பார்க்கச் செய்கிறது. அந்தப் பெண்ணின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து அவளின் நம்பிக்கைக்குரியவனாக அவன் மாறும் போது அவளும் இயல்பாகவே தன்னை மாற்றிக் கொண்டிருப்பாள். ஆனால் அவன் அதைப் புரிஞ்சுக்கவே முயலேல்ல. மாறாக தான் செய்வது நியாயம் என்ற தோறனையில் அவளை அணுகுவது.. மேலாதிக்கத்தின் வெளிப்பாடு.

படத்திலேயே காட்டினார்கள். அவள் வெறுக்கும் வகையில் பல செயற்பாடுகளை அவன் செய்த போதும்.. அவன் தேடி வரும் போதெல்லாம் அவள் அவனை சந்திக்கப் பிரியப்படுவதை. ஆக அவள் அவனைக் காதலிக்கிறாள்.. ஆனால் அவனின் சில செயற்பாடுகளை அவள் மனதால் ஏற்றுக் கொள்ள முடியல்ல. அவள் கொஞ்சம் வரையறைக்குள் வாழ விரும்புகிறாள்.. அதில் என்ன தவறு.

ஒரு மனிதன் கொஞ்சம் சுயநலத்தோடு வரையறைக்குள் வாழ நினைப்பது தவறென்றால்.. அது வாழ்க்கையை நரகத்தில் தள்ளிடும் என்றால்.. உலகில் ஒவ்வொரு மனிதனும் நரகத்தில் தான் வாழ்கிறான் என்று தான் கொள்ள வேண்டும்.

ஒரு ஆணோ பெண்ணோ.. காதலோ.. வாழ்க்கையோ.. ஒருவர் மற்றவரின் விருப்பத்துக்கு மதிப்பளிக்கும் போது இயல்பாக அவரின் மீது கரிசணை பிறக்கும். பெண்கள் பொதுவாகவே தங்கள் விருப்பத்திற்கு கரிசணை காட்டும் ஆண்கள் மீது நம்பிக்கை வைப்பது அதிகம். அதேபோல் தான் ஆண்களும். ஏன் மனிதர் மட்டுமல்ல.. விலங்குகள் கூட. ஒரு நாய்க்கு தினமும் கல்லால் அடியுங்கள்.. அது உங்களைக் கண்டாலே ஓடும். அதேநேரம் அதற்கு தினமும் ஒரு பிஸ்கட் போடுங்கள்.. உங்கள் பின்னால நிற்கும்.. எப்போதும் உணவை எதிர்பார்த்தல்ல.. நீங்கள் அதன் மீது காட்டும் கருசணை தான் அதற்குக் காரணம்.

இக்கதையில் முதலாவது காதலி.. அவனின் கருசணை தான் சார்ந்து இருக்கனும் என்று எதிர்பார்ப்பது தவறன்று. ஆனால் நாயகன் அவர் உலகத்தில உள்ள பெண்களை எல்லாம் ரசிக்கனும் என்று நினைக்கிற ரகம். அதை நீங்க நியாயப்படுத்துறீங்க. அது சுதந்திரம் அதை அனுமதிக்கனும் என்றீங்க. நீங்க திருமணமான பின்னர்.. உங்கள் கணவரோடு சந்தோசமா வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் போது உங்கள் கணவரை விட உங்கள் மீது அன்பு காட்ட ஒரு ஆண் வருவான் என்றால்.. உங்கள் கணவரைப் பிரிந்துவிட்டு.. அந்த ஆணின் மீது காதல் கொண்டு... புதிய வாழ்க்கையை ஆரம்பிப்பீர்களா..??! இதற்கு நீங்கள் ஆம் என்று பதில் அளித்தால்.. நீங்கள் சுதந்திரவாதியல்ல. சுத்தச் சுயநலவாதி.

சுதந்திரம் என்பதற்கும் ஒரு எல்லைக்கோடு உண்டு. பூமிக்கு ஒரு எல்லை உண்டு. நாம் வானத்தின் நீளம் முடிவிலி என்று வரையறுத்தாலும் அங்கு பல எல்லைகள் கண்ணுக்குப் புலப்படாமல் உண்டு. சுதந்திரத்தையும் ஒரு எல்லைக்குள் அனுபவிக்கும் போதுதான் அது இன்பம். அந்த எல்லை தாண்டினால்.. அது துன்பம்.

முதலாவது காதலிக்கு அந்த எல்லை குறுகியதாக இருக்கலாம். ஆனால் அது அநியாயமல்ல. இரண்டாவது காதலியைப் பொறுத்தவரை.. அவள் உதவி செய்ய ஆரம்பிக்கும் போதே.. முதலாவது காதலி எதை வெறுத்தாளோ அதையேதான் செய்ய ஆரம்பிக்கிறாள். ஒரு பெண்ணோ.. ஆணோ.. தனக்குரியவன்/ள் தனக்கே சொந்தமாகனும் என்று நினைக்கிறது தப்பா...????! அது அவர்களின் மீதுள்ள அன்பின் வெளிப்பாடு. ரோட்டில போற எவனாவது / இல்ல எவளாவது உங்கள் மீது அன்பு வைக்கனும் என்று எதிர்பார்க்கிறீங்களா கிடையாது..??! அப்படி எதிர்பார்க்கவும் முடியாது..! அவள் தனக்குரியவன் மீது சில எதிர்பார்ப்புக்களை வளர்க்கிறது தவறல்ல. அதைப் புரிஞ்சுக்க முனையாத அந்த ஆணோட வாழ்வது என்பதுதான் சிரமமானது. அவள் அவனுடைய செயற்பாடுகளில் இதுஇது பிடிக்கல்ல என்று சொன்ன பின்னும் அதை அவர் நியாயப்படுத்த விளைவதும் செய்யத் தொடர்வதும் அவளைப் புறக்கணித்து..அவளுக்கு கண்ணெதிர ஒரு மாதிரியும்.. கண்ணுக்குப் புலப்படாத போது இன்னொரு மாதிரியும் நடக்கிறது.. எந்த வகையில இவையெல்லாம் நம்பிக்கையை வளர்க்கும்...??!

சாதாரணமா சிந்திச்சுப் பாருங்க. வாதத்துக்காக சிந்திக்காதேங்க.

நிச்சயமா எந்த மனிதனும் தனக்கென்று ஒரு கொள்கை.. எல்லை வரையறுத்திருப்பான். சிலதுக்கு அப்படி எதுவும் இல்ல.. அதுகளை மனிதர்கள் என்று சொல்லேலுமோ தெரியாது. அந்த வகைதான் இரண்டாவது நாயகி.. உண்மைல அவள் ஒரு நண்பியா இருந்திருந்தா.. முதலாவது காதலியின் எதிர்பார்ப்பைப் புரிஞ்சு கொண்டு கடைசி வரை அதை அவனுக்குப் புரிய வைக்கிறவளா இருந்திருக்கனும். முயற்சியின் ஆரம்பத்திலேயே சலனப்பட்டவள் இரண்டாவது காதலி. அது விமானத்தில் பறக்கும் போதே ஆரம்பமாகிட்டுது. ஆனால் மாறாக சந்தர்ப்பம் கிடைச்சா.. ஏன் இவனை நான் காதலிக்கக் கூடாது.. என்று திண்டாட்டத்தில் இருந்தவனை தட்டிப் பறிச்சு.. தன் பக்கம்.. இழுத்து.. அதற்கு அவனிடம் இருந்த பெண்கள் சார்ந்த பலவீனத்தைப் பயன்படுத்தினதை.. நீங்கள் சுதந்திரம், தூய காதல் என்று கருதுவீர்கள் என்றால்...???! உங்களின் பார்வையில்.. அதுதான் காதல்.

பிடிவாதங்கள்.. எதிர்பார்ப்புக்கள்.. மனிதருக்க சகஜம். ஆனால் அவையே.. நெருங்கி வரும் ஒரு மனதை தூர விலக்கி வைக்கச் செய்யும் என்றால்.. அந்தப் பிடிவாதங்கள்.. எதிர்பார்ப்புக்களால் பயனில்லை. என்பதைத்தான் முதலாவது காதலி மூலம் சொல்லினம். இரண்டாவது காதலி... எதற்கும் தயார்.. என்னவும் செய்.. என் கூடவும் வாழ்ந்தால் சரி என்ற பேர்வழி. இப்படி வாழ்பவர்களும் உண்டு. இப்படி வாழ்பவர்களில் பலர் முன்னர் தாங்கள் செய்த தவறுகளின் விளைவுகளால் கூட இருக்கலாம். தான் செய்த தவறைத்தான் அவனும் செய்கிறான் என்ற அளவில் நெருக்கம் ஏற்படும். தவறு செய்யாதவன் கொஞ்சம் உசாரா தன்னிலையை முன்னிறுத்தத்தான் செய்வான். அதுதான் முதலாவது காதலி. அவள் தானும் தவறு செய்யல்ல.. இன்னொருக்கா தவறு செய்யவும் முனையல்ல. அங்க தான் அவள் முதன்மை பெறுகிறாள்.

நாங்க வாழ்க்கையில நினைச்சா பலரைக் காதலிக்கலாம்.. ஏன் பணத்தைக் காட்டியும் பல பெண்களை ஆண்களை அணுகலாம்.. ஆனால் அந்த வாழ்க்கையின்ர அர்த்தம் என்ன..??! உண்மையான வாழ்க்கை என்பதைப் புரிஞ்சுக்கனும் என்றால் தான் தன்ர குடும்பம் என்ற எல்லைக்குள்ள ஏன் நிற்கனும் என்று வலியுறுத்தினம். சுதந்திரம் என்பதை ஏன் குடும்பம் என்ற எல்லைக்குள்ள அடைக்கிறம்.. ஏன் கண்டவன் கூட இல்ல கண்டவள் கூட போக நினைக்கிறமில்ல.. அது எங்க மனநிலை. ஆனா தினமொரு பெண்களோடு கூத்தடிக்கும் ஆண்களும் உண்டு.. தினமொரு ஆணுடன் கூத்தடிக்கும் பெண்களும் உண்டு.. அப்ப நீங்கள் சொல்வீர்களா அவர்கள் தான் சொர்க்கத்தில் வாழ்கிறார்கள்.. என்று. முடியாது.

நாம எங்கள் எதிர்பார்ப்பு என்று கட்டிட்டுக் கிடந்தா மட்டும் போதாது. மற்றவர்களின்.. அன்புக்குரியவரின் எதிர்ப்பார்ப்பையும் புரிஞ்சுக்கனும்..அங்க ஆண் பெண்.. யார் முதலில விட்டுக்கொடுக்கிறது என்ற போட்டி இருக்காது என்றால்.. நிச்சயம் முதலாவது காதலியுடன் காதலன் சேர்ந்திருப்பான். எதிர்பார்ப்பே இல்லாத எப்படியும் நீ வாழலாம் என்று நினைக்கிற ஒருத்தியை காதலிக்கிறது கலியாணம் முடிக்கிறது..ஒன்றும் பெரிய விடயமே அல்ல. அது ஆரம்பத்தில இனிக்கும் பிற்பாடு கசக்கும்

முன்னையவள்.. கரும்பை நுனியில இருந்து அடிவரை கரும்பு சாப்பிடுவது போல.. பின்னையவள்.. அடியில இருந்து நுனிவரை சாப்பிடுவது போல.

ஒரு மனிதன் இளமையா இருக்கும் போது.. கசப்பை தாங்கிக்கலாம். ஆனா முதுமை அடையும் போது கசந்தால்.. அது வாழ்ந்த மொத்த வாழ்க்கையே கசக்கப்பண்ணிடும். கரும்பு நல்லா முத்தினதா இருந்தா அடி நுனி இரண்டிலும் இனிக்கும். அப்படி ஒரு காதலை இப்படத்தில காட்டல்ல. அப்படி அமைவதற்கு வாழ்க்கையில அதிஸ்டமும் வேணும்.

எத்தனையோ பேர் காதலை வெறும் உச்சரிப்பில தான் செய்யினம். அதற்குப் பிறகு தங்கட சுயநலத்துக்காக அடுத்தவர் மனங்களை வருத்திப் போட்டு ஓடி ஒழிச்சிடினம். காதலிக்க ஆரம்பிக்கும் போது தேடாத காரணங்களை பின்னர் தேடினம். கோவிக்கினம்.. காதலே இல்லை என்று சிம்பிளா சொல்லிடினம். அடுத்தவர் கூட திடீர் என்று இன்னொரு காதல் பூக்க.. பின்னால போகினம். முன்னையவர்கள் கூடத் திரியும் போது இருந்த உணர்வைக் கூட இழந்திடினம். அப்படி இல்லாமல் காதலிச்சவனுக்காக அவனுக்கு தான் பொருத்தமில்ல என்று அறிஞ்சு விட்டுக் கொடுத்ததும் இல்லாம.. அவனை நினைச்சிட்டு வாழத் துணிந்த பெண் எங்க.. அட அவள் போனாப் போறாள் நீ வா.. நாங்க பிள்ளை பெத்துக்குவம் என்து வாழ்ந்த அவனும் அவனுடைய பின்னைய காதலியும் எங்க..??!

ஒரு மனிதனுக்கு வழங்கப்படும் சந்தர்ப்பதுக்கான கால அளவில தான் அவன் / அவள் தீர்மானங்களை எடுக்க முடியும். அவனுக்கும் அவள் பல சந்தர்ப்பங்களை அளிச்சிருக்கிறாள். அவனை பல தடவைகள் மன்னிச்சிருக்கிறாள். ஆனால் அவனோ.. பெண்கள் என்றா.. உரசிப்பார்க்கும் ரகமாக இருக்கிறதை.. அங்கீகரிக்க அவளால முடியல்ல. மற்றவள் தானும் ஆண்களை உரசிப்பார்க்கிற ரகம் என்பதால இவனை ஏற்றுக்கொள்கிறால். ஆக தவறு செய்யுற இரண்டு பேரும் இணையுறது.. ஒத்துப் போறது.. சகஜம். அதுதான் அங்க காதலா காட்டப்படுகுதே தவிர.. அதுதான் காதல் அல்ல...! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்ஸ் அண்ணை,

வாதத்துக்காக மட்டுமே நான் கருத்துக்களை முன் வைப்பதில்லை!. நானும் அந்த வழியில் நடக்கின்றேன் அதே பாதையில் பயணிக்கின்றேன் என்பதன் வெளிப்பாடே என் கருத்துக்களும்.

அண்ணை, காதலையும் வேலையும் ஒப்பீடு செய்யாதீங்கோ! இந்த ஒப்பீடு நமக்கு எந்த வகையிலும் பிடிக்காது. ஒப்பீடு ஒருபோதும் விவாதங்களுக்கு முடிவாகாது அது கருத்தும் ஆகாது தலைப்பினை திசை திருப்பும். ஆகவே தங்கள் ஒப்பீடுகளைத் தள்ளி வைத்து விட்டு என் கருத்தைச் சொல்கின்றேன். 'சதா" அதுதான் முதலாவது காதலியின் எண்ணம் தப்பென்று வாதாடவில்லை அவர் அதை வெளிக்காட்டிய விதம் தவறு. அவனும் கூட அவளுக்காக தன்னை பெருமளவில் மாற்றிக்கொள்கின்றான், இல்லை முற்படுகின்றார், சூழ்நிலைகளும் சந்தர்ப்பங்களும் அவனை குற்றவாளியாகவே அவள் முன் நிலை நிறுத்துகின்றது. அந்த விளக்கங்களைக்கூட கேட்க விருப்பம் இல்லாதவள் போல் இருந்தால். யோசிச்சுப்பாருங்கள். இரண்டு நாள் தாங்குமா? வாழ்க்கை நரகமாகிவிடாதா?

'காதலித்தோம் என்றே கைப்பிடித்த பலர் பிறகு இந்த அதிகூடிய சுயநலம் அது பொறாமையாகி, பிடிவாதமாகி, பிறகு ஒருபக்கவாதமாகி!......விவாகரத்தில் வந்து நிற்கும் எத்தனையோ கதைகள் நீங்கள் கேள்விப்பட்டதில்லையா அண்ணை?!.

இரண்டாவது நாயகி தன்னை நேசிக்கின்றாள் என்று தெரிந்தும் அவன் அவளாகவே நெருங்கிவந்த போதும் விலகியே செல்கின்றான். 'சந்தேகம்' நம்பிக்கையின்மை" இந்த இரண்டுமே கொண்டு ஒரு 'காதல்" அது எப்படிக்காதல்?

சொல்லுங்கள்? காதல் என்றால் அது வாழவைக்க வேண்டும்!. இப்படி நொடிக்கு நொடி சாகடிக்கக் கூடாது அண்ணை.

'அவனை விட்டுக்கொடுக்கவும் மனம் இல்லை; தான் விட்டுக்கொடுத்து நடக்கவும் தயார் இல்லை. தன்னில் பிழை என்று புரிந்து கொண்ட பின்புதானே...அவளாகவே அவனை விலகிச் செல்கின்றார்?!!..

இரண்டாவது நாயகியில் தப்புச் சொல்ல முடியாதே; அவளுக்கு முதலே நாயகனைப் பிடித்துவிடுகின்றது பிறகுதான் இவர் 'சதா"வை நேசித்த விடயமே தெரியவருகின்றது. இல்லையா?!

எல்லோருடனுமே கலகலப்பாக பழகும் பெண் என்பதால் அவள் 'களங்கப்பட்டவள்' என்று சொல்ல முடியுமா? தப்பில்லையா அது?! எத்தனையோ பேருடன் பழகும் அவள் ஒருவனைத்தானே நேசிக்கின்றாள். '

அது எவ்விதத்தில் தவறு? எந்த விதத்தில் தப்பு?!

'பெண்களிடமே கேட்டுப்பாருங்கள், யாருக்கு இதில் 'ஓட்டுப்போடுவார்கள் என்று" :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணை,

சொல்லுங்கள்? காதல் என்றால் அது வாழவைக்க வேண்டும்!. இப்படி நொடிக்கு நொடி சாகடிக்கக் கூடாது அண்ணை.

'அவனை விட்டுக்கொடுக்கவும் மனம் இல்லை; தான் விட்டுக்கொடுத்து நடக்கவும் தயார் இல்லை. தன்னில் பிழை என்று புரிந்து கொண்ட பின்புதானே...அவளாகவே அவனை விலகிச் செல்கின்றார்?!!..

இரண்டாவது நாயகியில் தப்புச் சொல்ல முடியாதே; அவளுக்கு முதலே நாயகனைப் பிடித்துவிடுகின்றது பிறகுதான் இவர் 'சதா"வை நேசித்த விடயமே தெரியவருகின்றது. இல்லையா?!

எல்லோருடனுமே கலகலப்பாக பழகும் பெண் என்பதால் அவள் 'களங்கப்பட்டவள்' என்று சொல்ல முடியுமா? தப்பில்லையா அது?! எத்தனையோ பேருடன் பழகும் அவள் ஒருவனைத்தானே நேசிக்கின்றாள். '

அது எவ்விதத்தில் தவறு? எந்த விதத்தில் தப்பு?!

'பெண்களிடமே கேட்டுப்பாருங்கள், யாருக்கு இதில் 'ஓட்டுப்போடுவார்கள் என்று" :D

கல கலப்புத்தான் பின் சல சலப்பில முடியுறது. பெண்கள் வம்பளந்தால் கல கலப்பு. அதையே ஆண்கள் செய்தால் வழிகிறான்.

சதா அதுதான் முதலாவது நாயகி.. பல சந்தர்ப்பங்களில் மன்னிக்கிறாளே. பல தடவை விலகிப் போயும் மீண்டும் அவன் அழைக்க வருகிறாள் தானே. அப்பவாவது அவன் தான் அவள் விரும்பாத சந்தர்ப்பங்களை தவிர்த்திருக்கலாம் தானே.

இரண்டாவது நாயகி.. அவனை மட்டுமல்ல.. அது பேக்கு மாதிரி கல கலத்தே காரியத்தை சாதிக்கிற ரைப். அதால தான் இன்னொருத்தியின் காதலன் என்று தெரிஞ்தும் அவர்களுக்கிடையே இருந்த வேறுபாட்டை தனக்கு சாதமாக்கி.. அதில் அவள் தனது சுயலாபத்தைத் தேடிக்கொண்டாள். நீங்கள் ஏன் அவளை அந்தக் கோணத்தில் அணுகவில்லை. அவள் உதவி செய்ய வந்தும்.. அவர்களுக்கிடையேயான பிரச்சனையை தனக்கு சாதமாக்கிக் கொண்டதுதான் உண்மை. எரியிற வீட்டில.. கொள்ளி புடுங்கின கணக்கு.

உங்களுக்கு இப்படி ஒரு நண்பி வந்து.. (இப்ப நண்பிகள் எல்லாம்.. அட்வைஸ் கொடுத்தே.. மனங்களை கொன்றிடுவார்கள்.. தங்களைப் போல மற்றவர்களையும் ஆக்கிடுவார்கள்.. அது வேற கதை..) இப்படி வாய்த்து.. உங்கள் காதலனை சுருட்டிக் கொண்டு போனால்.. நீங்க என்ன செய்வீர்கள்..! போடி போ.. போடா போ என்றிட்டு.. அடுத்தவனை கண்டு கல கலப்பா பேசி.. காதல் வளர்ப்பீங்களா..??! உங்களுக்க ஒரு குற்ற உணர்வே இருக்காதே. அப்படி இருக்காதுன்னா.. நீங்க மனிசரே இல்ல..! :P :lol:

டேற்றிங் என்று நாளுக்கு ஒன்றோட சுத்திற பெண்களட்ட வாக்குப் போடச் சொல்லிக்கேட்டா... அவை கல கலப்புக்குத்தான் வாக்குப் போடுவினம். டேற்றிங் போய் ரேஸ்ட் பண்ணுற ஆண்களும் அதுக்குத்தான் போடுவினம். அதற்காக அதுதான் வாழ்க்கை என்றாகிடாது. அதாலதான் இப்ப மேற்கே திண்டாடுது.

இன்று கூட சிறுவர் வன்முறைக்கு முக்கிய காரணம்.. திருமணமாகாமல் கூடி வாழுதலால் தோன்றும் பிள்ளைகளும்.. பெற்றோரின் பிரிவால் தனிமைப்படும் பிள்ளைகளும் தான். அதால பிரித்தானியாவில எனி கூடி வாழுறவையும் திருமணமானவர்கள் என்ற சட்டக் கணிப்புக்குள்ள வரப் போகினம். எனி டேற்றிங் போய் கூத்தடிக்கிறவை பாடும்.. திண்டாட்டம் தான். :P :lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

நெடுக்காலபோவான்,

எண்ட ஆளை பற்றி பேக்கு, போக்கு என்று சொன்னால் எனக்கு சரியான கோவம் வரும். வேணுமென்றால் நீங்கள் முதலாவது கதாநாயகி போன்ற ஒருத்தியை காதலித்து திருமணம் செய்யுங்கள் (இன்னும் திருமணம் செய்யவில்லை தானே?). நான் நீங்கள் சொன்ன இரண்டாவது கதாநாயகி - பேக்கு மாதிரி ஒன்றை காதலித்து திருமணம் செய்கின்றேன். இதன் பிறகு யார் சந்தோசமாக, நிம்மதியாக வாழ்கின்றோம் என்று பார்க்கலாம்... ;) உங்கள் வசதி எப்படி? :lol::lol::D

இதன் பின் யாழ் களத்திற்கு சுமார் பத்து வருடங்களின் பின் வந்து இந்த வாதத்தை மீண்டும் தொடர்வோம்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான்,

எண்ட ஆளை பற்றி பேக்கு, போக்கு என்று சொன்னால் எனக்கு சரியான கோவம் வரும். வேணுமென்றால் நீங்கள் முதலாவது கதாநாயகி போன்ற ஒருத்தியை காதலித்து திருமணம் செய்யுங்கள் (இன்னும் திருமணம் செய்யவில்லை தானே?). நான் நீங்கள் சொன்ன இரண்டாவது கதாநாயகி - பேக்கு மாதிரி ஒன்றை காதலித்து திருமணம் செய்கின்றேன். இதன் பிறகு யார் சந்தோசமாக, நிம்மதியாக வாழ்கின்றோம் என்று பார்க்கலாம்... ;) உங்கள் வசதி எப்படி? :lol::lol::D

இதன் பின் யாழ் களத்திற்கு சுமார் பத்து வருடங்களின் பின் வந்து இந்த வாதத்தை மீண்டும் தொடர்வோம்.. :D

பேக்கும் வேணாம் போக்கும் வேணாம்..நம்மள நம்ம வழில நிம்மதியா வாழ விட்டாலே போதும். அடுத்தவையை நம்பி நம்ப வாழ்க்கை தீர்மானிக்கிறது எப்பவும் ஆபத்தானது. பட்டு சுட்டுக் கொண்டு.. தவிக்கிறதிலும் தவிர்க்கிறது நல்லமப்பா..! வருமுன் காப்போம் வந்தபின் வருந்துதல் இழுக்கு. :D:lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்கு இப்படி ஒரு நண்பி வந்து.. (இப்ப நண்பிகள் எல்லாம்.. அட்வைஸ் கொடுத்தே.. மனங்களை கொன்றிடுவார்கள்.. தங்களைப் போல மற்றவர்களையும் ஆக்கிடுவார்கள்.. அது வேற கதை..) இப்படி வாய்த்து.. உங்கள் காதலனை சுருட்டிக் கொண்டு போனால்.. நீங்க என்ன செய்வீர்கள்..! போடி போ.. போடா போ என்றிட்டு.. அடுத்தவனை கண்டு கல கலப்பா பேசி.. காதல் வளர்ப்பீங்களா..??! உங்களுக்க ஒரு குற்ற உணர்வே இருக்காதே. அப்படி இருக்காதுன்னா.. நீங்க மனிசரே இல்ல..! :P :lol:

நெடுக்ஸ் அண்ணை உங்கட கதையைக் கேட்கச் சிரிப்பா இருக்கு. எனக்காகவே உருகும் என் பார்வைக்காகவே ஏங்கும் என்னோடு கதைக்கத் தவிக்கும் ஒருவனை அதாவது காதலனை நான் எப்படித் தவிர்ப்பேன்?! :D நான் முதலாவது கதாநாயகி போல் முறுக்கவும் மாட்டேன், முறுகவும் மாட்டேன். பிறகு எனக்கென்ன பிரச்சனை வரப்போகுது?! இரண்டாம் நாயகியை முதலே சந்தித்திருந்தால் முதலாம் நாயகியை அவனுக்கு பிடித்திருக்க வாய்ப்பே இல்லை!. எல்லாவற்றிற்கும் முகத்தை எட்டுத்திக்கும் திருப்பும் ஒருத்தியோட என்னண்டப்பா மனுசர் வாழுறது?!.

"பழகிப்பார்த்து பிறகு கட்டுவம் என்கின்ற மேலைப்பண்பாட்டில் எனக்கு உடன்பாடு இல்லை; விட்டுக்கொடுத்து விட்டுப்பிடித்து வாழ்வதுதான் வாழ்க்கை. எல்லாவற்றிற்கும் அளவாக இருக்கும் என்றால் எனக்கேற்ற ஒரு பொம்மையையோடுதான் குடும்பம் நடத்த வேணும். :lol: 'காதல் என்பது நம்பிக்கையின் அடிப்படை; இந்தக்காலத்தில் பல ஆண்கள்/பெண்களோடு பழக வேண்டிய சூழலில் தான் வாழ்கின்றோம். எல்லாத்துக்கும் சந்தேகக் கண்கொண்டு பார்த்தால் குடும்பம் உருப்படுமோ?! என்ற மனுசனைப்பற்றி எனக்குத் தெரியுமப்பா, மனுஷன் என்னை மட்டும்தான் நேசிக்குதெண்டு!! அதை நிரூபிக்க வேண்டும் என்றால் ஒரு பொம்பிளையோடையும் கதையாதை" என்று சட்டம் போட்டால்!! இது நியாயமோ?~~

:lol:)~~ :D

Edited by Thamilthangai

  • தொடங்கியவர்

எனக்காகவே உருகும் என் பார்வைக்காகவே ஏங்கும் என்னோடு கதைக்கத் தவிக்கும் ஒருவனை அதாவது காதலனை நான் எப்படித் தவிர்ப்பேன்?!

இது நியாயமான கேள்விதான்... ;)

உங்களுக்காக ஏங்கும், உங்கள் பார்வைக்காக ஏங்கும், உங்களுடன் கதைக்க துடிக்கும் ஒருவனை நீங்கள் ஒதுக்கு கின்றீர்களென்றால் நிச்சயம் நீங்கள் அவனை காதல் செய்யவில்லை.. இங்கு சிலர் இதற்கு ஸ்கூலில் தவறு செய்தால் டீச்சர் பணிஷ்மண்ட் குடுப்பது போல் காதலனுக்கு காதலி தண்டனை குடுக்கிறா என்று வியாக்கியானம் சொல்லுவீனம்.. :lol::lol::D

வைகாசி நிலவிற்கு என்ன விசேடம். தெரிந்தவர்கள் கூறலாம்.

ஏன் நிலா அக்கா அப்படி சொல்லுறீங்க..................?

இங்கே நடக்கும் வாதத்தைப் பார்த்து அவர் கதிகலங்கி இருப்பார் என சொல்ல வந்தேன் பா :lol:

வைகாசி நிலவிற்கு என்ன விசேடம். தெரிந்தவர்கள் கூறலாம்.

:lol: வைகாசி ல வெண்ணிலா அவதரித்ததால் விசேஷமோ? :D:D அடுத்த வைகாசி வரட்டும் பார்த்துட்டு சொல்லுறேன் என்ன விசேசம் னு :P

Edited by வெண்ணிலா

  • தொடங்கியவர்

இப்படி மொட்டையா சொன்னா என்ன மாதிரி? ஏன் உங்களுக்கு என்ன விசேடம் எண்டு தெரியாதோ?

நெடுக்காலபோவான்,

எண்ட ஆளை பற்றி பேக்கு, போக்கு என்று சொன்னால் எனக்கு சரியான கோவம் வரும். வேணுமென்றால் நீங்கள் முதலாவது கதாநாயகி போன்ற ஒருத்தியை காதலித்து திருமணம் செய்யுங்கள் (இன்னும் திருமணம் செய்யவில்லை தானே?). நான் நீங்கள் சொன்ன இரண்டாவது கதாநாயகி - பேக்கு மாதிரி ஒன்றை காதலித்து திருமணம் செய்கின்றேன். இதன் பிறகு யார் சந்தோசமாக, நிம்மதியாக வாழ்கின்றோம் என்று பார்க்கலாம்... ;) உங்கள் வசதி எப்படி? :D:D:lol:

இதன் பின் யாழ் களத்திற்கு சுமார் பத்து வருடங்களின் பின் வந்து இந்த வாதத்தை மீண்டும் தொடர்வோம்.. :D

வணக்கம் குருவே

அப்போ உங்கள் கருத்தின் படி முதலாவது நாயகி போல ஒருத்தியை திருமணம் செய்தால் அவன் நிம்மதியற்று சந்தோசமின்றி தான் வாழ முடியுமென சொல்லுறீங்களா? :lol:

நீங்கள் சொல்வது போல இரண்டாவது நாயகி அதுதானுங்க உங்க பாஷை ல பேக்கு அவளாஇப் போல ஒருத்தியை திருமணம் செய்யின் அவள் இன்னொரு ஆடவனோடு பேசிப் பழகி அவனை அவளுக்கு பிடிச்சு போயின் (அதுதான் அவள் பேக்கு ஆச்சுதே) அவள் அவனைக் காதலிக்க மாட்டாள் என்பது நிச்சயமா? :lol:

முதலாவது நாயகி தன் காதலனின் பொய் , அவனின் நடத்தைகள் பிடிக்காமையால் அவனை ஒதுக்கி நடந்தாலும் அவனோ அவளை துரத்திய வண்ணம் தானே இருந்தான். இறுதியில் அவள் காணாமல் போனதால் தான் அவன் அவளை விட்டான். அதுவரையில் அவனுக்கு உங்களை கவர்ந்த பேக்கு மேல் காதல் வந்ததே இல்லை. :lol::lol:

இல்லை கலைஞன். வைகாசி நிலவே வைகாசி நிலவே என்று கவிஞர் எழுதியிருக்கின்றார். ஏதோ ஓரு விசேடம் இருப்பதனால்தானே அப்படி எழுதியிருக்கின்றார். அதுதான் என்ன விசேடம் அந்த நிலாவிற்கு என்று கேட்டேன்

  • தொடங்கியவர்

இரண்டாவது கதாநாயகியை பேக்கு என்று நான் சொல்லவில்லை. நெடுக்காலபோவான் தான் அப்படி கிண்டல் அடித்தார். :angry: நெடுக்காலபோவானை குசிப் படுத்துவதற்காகவே நானும் அந்த பேக்கு என்ற பதத்தை பயன்படுத்தினேன். ;)

ஆனால், உண்மையில் இரண்டாவது கதாநாயகியை பேக்கு, கண்டவன் பின்னாலும் சுத்துபவள் என்று எல்லாம் சொல்ல முடியாது. அவள் திருமணம் செய்து குழந்தையும் பெற்று படத்தில் சந்தோசமாக வாழ்வதாக தானே காட்டப்படுகிறது? அவள் கதாநாயகனை திருமணம் செய்த பின் அவனை விட்டு ஓடிவிட்டதாக காட்டப்படவில்லையே??

ஓம்! நிச்சயமாக! முதலாவது நாயகி போல ஒருத்தியை திருமணம் செய்தால் அவன் - கதாநாயகன் மாத்திரம் அல்ல, எந்த ஒரு ஆணுமே நிம்மதியற்று சந்தோசமின்றி, நரக வாழ்க்கையே வாழ முடியும் எண்டு நான் சொல்லிறன். :lol: அவள் - முதலாவது கதாநாயகி ஒரு பொல்லாதவள், சரியான சந்தேகக்காரி மாத்திரம் அல்ல, அவள் ஒரு பிடிவாதக்காரி, மற்றும் குரூர புத்தி உடைய ஒரு மரமண்டை! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"ஓம்! நிச்சயமாக! முதலாவது நாயகி போல ஒருத்தியை திருமணம் செய்தால் அவன் - கதாநாயகன் மாத்திரம் அல்ல, எந்த ஒரு ஆணுமே நிம்மதியற்று சந்தோசமின்றி, நரக வாழ்க்கையே வாழ முடியும் எண்டு நான் சொல்லிறன். :lol: அவள் - முதலாவது கதாநாயகி ஒரு பொல்லாதவள், சரியான சந்தேகக்காரி மாத்திரம் அல்ல, அவள் ஒரு பிடிவாதக்காரி, மற்றும் குரூர புத்தி உடைய ஒரு மரமண்டை! :lol:

அவன் ஒரு பொய்க்காரன் என்று அவள் நினைப்பதாலும் அவன் தனக்கு மட்டுமே உரித்தானவானக இருக்கணும் என்ற அதீத அன்பினால் அவள் அப்பாடி பிடிவாதம் பிடித்திருக்கலாம் அல்லவா?

ஆனாலும் தற்போதைய ஆண்களுக்கு முதலாவது நாயகி போன்றவள் அமைந்தால் தான் நல்லது.

ம்ம் இரண்டாவது நாயகி சந்தோசமாக தான் வாழ்வதாக குழந்தையோடு சித்தரிக்கப்படிருந்திச்சு. அப்போது முதலாவது நாயகி கேட்பாளே அவன் இப்பவும் மாறவில்லையா என அதற்கு இரண்டாவது நாயகி ஆம் என சொல்லுவாள்.

இது உன்னாலே உன்னாலே படம்

ஆஅனால் நீங்கள் எல்லோரும் ஆண் பெண் நட்பை தப்பென நினைத்து ஒரு காலத்தில் வாதாடியவர்கள் அல்லவா?

நடைமுறையில் அதாவது இரண்டாவது நாயகி போல ஒருத்தி கிடைக்கும் பட்சத்தில் அப்படத்தின் நாயகன் போல உங்களாவன் எல்லோருக்கும் அதாவது பெண்களுக்கு உதவி செய்யப்போக நீங்கள் உடன்படுவீர்களாஅ? எங்கோ ஒரு மூலையிலாவது உங்களுக்கு அவனை வோர்ச் பண்ணனும் என தோணாதா?

சரி நாயகி பற்ரியே பேசுறீங்களே. அந்த நாயகன் பிற்ந்தநாளின் போது திரையரங்கில் படம் பார்த்த போது முதலாவது நாயகி போன் பண்ணி பேசுறப்போ பொய் சொல்லுவானே அப்படி நடைமுறையில் ஒரு பெண்ணின் காதலன் அப்படி செய்தால் பார்த்துட்டு இருப்பீங்களா?

முதலாவது நாயகி தன் புருசன் தனக்கு மட்டுமே என பிடிவாதம் பிடிப்பதில் என்ன தப்புங்க?

தமிழ் கலாச்சாரம் தமிழ் கலாச்சாரம் என அடிபடுறியளே முதலாவது நாயகியில் அக்கலாச்சாரம் தான் மேலோங்கி இருக்கு என்பதை மறுக்காதீங்க.

நீங்கள் தமிழ்க்கலாச்சாரத்தை வெளிப்படையாக கதைச்சு மேலைக்கலாச்சாரத்தை விரும்புபவர்களாக இருப்பின் நாயகி தெரிவு சாத்தியமே.

  • தொடங்கியவர்

ஆனாலும் தற்போதைய ஆண்களுக்கு முதலாவது நாயகி போன்றவள் அமைந்தால் தான் நல்லது என்று சொல்லுறீங்களோ? ஏன் நாம நிம்மதியா சந்தோசமா வாழுறது ஒங்களுக்கு பிடிக்கலையோ? :lol:

ஆனா முதலாவது கதாநாயகி குழந்தையுடன் உள்ள இரண்டாவது கதாநாயகியை சந்திக்கும்போது கதாநாயகன் ஒரு வெள்ளை பொண்ணுக்கு உதவி செய்து கொண்டு இருந்ததாக காட்டப்பட்டதே ஒழிய அவன் பெண்கள் பின்னால் வழிந்து கொண்டு திரிவதாக காட்டப்படவில்லையே?? திருமணம் செய்ததும் அவன் திருந்தி இருக்கலாம் அல்லவா?

உங்கள் மிச்ச கேள்விகளிற்கு தமிழ்தங்கை பதில் சொல்லுவா.. ;)

நான் அபப்டி சொல்ல இல்லைங்க. ஆண்கள் நிம்மதில்லாமல் சந்தோஷமில்லாமல் வாழணும் னு

கோவம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என சொல்லுவார்கள் அல்லவா. முதலாவது நாயகியிடமும் நல்ல குணம் இருக்கும் என நினைச்சேன். அவளை அவன் திருமணம் செய்திருப்பின் அவனும் நல்லவனாக வாழ்ந்திருப்பான். என சொல்ல வந்தேன். பியர் குடிச்சு பொய் சொல்லி பெண்களோடு வழிஞ்சு................. இப்படி எல்லாம் செய்திருக்கமாட்டான் என்பதை விட குறைச்சிருப்பான் என நம்புறேன்.

சரி இங்கு நிறைய உறவினர்கள் திருமணமானவர்கள் தானே. அவர்களின் மனைவியர் எப்படியான ரகம் என சொல்ல முடியுமா? நீங்கள் சந்தோசமாக வாழுறியளா என சொல்லுங்க பார்ப்பம்

  • தொடங்கியவர்

நான் சந்தோசமாக வாழ்கின்றேனா என்பதையும், எனது மனைவி எப்படிப்பட்டவள் என்பதையும் நான் திருமணம் செய்தபின் (செய்தால்), மற்றும் யாழுக்கு அந்த நேரத்தில் வந்தால் நிச்சயம் சொல்கின்றேன்.. :lol:

எனது உறவினர்களின் மனவியரைப் பற்றி, அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று எனக்கு தெரியவில்லை. தற்செயலாக அவர்கள் நான் இங்கு எழுதுபவற்றை வாசித்தால், என்னை யார் என்றும் தெரிந்து இருந்தால் வீண் வம்பு தானே? :lol:

கோவம் இருக்கிற இடத்தில குணம் இருக்குமா? அப்ப சிறீ லங்கா ஆமிக்காரங்கள், சிங்கிள காடையங்கள் எல்லாம் நல்ல குணவான்களோ? ;)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.