Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இறுதிப்போரில் புலிகள் சரணடையவில்லை என்கிறது இலங்கை இராணுவம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிப்போரில் புலிகள் சரணடையவில்லை என்கிறது இலங்கை இராணுவம்!

இறுதிப்போரில் புலிகள் சரணடையவில்லை என்கிறது இலங்கை இராணுவம்!

இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இலங்கை இராணுவத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் தகவலறியும் ஆணைக்குழு முன்பாக சாட்சியம் வழங்கியுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர் பா.நிரோஸ் தகவலரியும் ஆணைக் குழுவிடம் முன்வைத்திருந்த மேன்முறையீடு நேற்று (வியாழக்கிழமை) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இலங்கை இராணுவம் இவ்வாறு சாட்சியம் வழங்கியுள்ளது.

2019ஆம் ஆண்டும் “எங்களிடம் புலிகள் சரணடையவில்லை” என ஊடகவியலாளரின் தகவலறியும் விண்ணப்பத்தை இராணுவம் மறுத்திருந்ததது.

இது தொடர்பான மேன்முறையீடு மூன்று வருடங்களுக்குப் பின்னர் நேற்று பரிசீலிக்கப்பட்டது.

“யுத்த பகுதியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்தார்கள். அவர்கள் புலிகளா? பொதுமக்களா? என்பது எமக்கு தெரியாது. நாம் பொறுப்பேற்று கொண்டபோது பதிவுகள் எதனையும் மேற்கொள்ளவில்லை.

எம்மிடம் வந்தவர்களை பஸ்களில் ஏற்றி புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகத்தின் கட்டுப்பாடுகளில் இருந்த முகாம்களில் சேர்த்தோம்.

அதன் பின்னர் புனர்வாழ்வு பணியகமே அவர்கள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.” எனவும் இராணுவம் சாட்சியம் வழங்கியது.

ஆனால், ஊடகவியலாளர் நிரோஸ் சார்பாக ஆணைக்குழுவில் முன்னிலையான சட்டத்தரணி ஸ்வஸ்திக்கா இதனை மறுத்ததோடு இராணுவத்திடம் புலிகள் சரணடைந்தமைக்கான ஆதாரங்களை ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்தார்.

மேலும், புனர்வாழ்வு பணியகத்திடம் இராணுவத்தினம் கூறும் தகவல்கள் இல்லை என, புனர்வாழ்வு பணியகம் வழங்கியுள்ள தகவல்களையும் சட்டத்தரணி ஸ்வஸ்திக்கா ஆதாரபூர்வமாக சுட்டிக்காட்டினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட ஆணைக்குழு, “அரசாங்கமே இந்த விடயங்களை சர்வதேச அமைப்புகளுக்கு பல்வேறு முறை வழங்கி இருக்கிறது.

எனவே, 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் இப்போது மறைப்பதற்கு ஒன்றுமில்லை.” என இராணுவத்துக்கு அறிவித்தது.

புலிகள் இராணுவத்தினரிடம் சரணடைந்தமைக்கான எழுத்துமூல சமர்ப்பணங்களை 10 நாட்களுக்கு இராணுவத்துக்கு ஊடகவியலாளர் நிரோஸ் வழங்க வேண்டும்.

அதுபோல இராணுவமும் எழுத்துமூல சமர்ப்பணங்களை விண்ணப்பதாரருக்கு வழங்கவும் ஆணைக்குழு உத்தரவிட்டது.

ஜனவரி 4ஆம் திகதி மனு மீள ஆணைக்குழு முன்பாக விசாரிக்கப்பட விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

https://athavannews.com/2022/1308858

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

இறுதிப்போரில் புலிகள் சரணடையவில்லை என்கிறது இலங்கை இராணுவம்!

சம்சும் கோஷ்டியிட்ட சொல்லி இன்னும் கால அவகாசம் குடுக்கச்சொல்லுங்கோ....

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

சம்சும் கோஷ்டியிட்ட சொல்லி இன்னும் கால அவகாசம் குடுக்கச்சொல்லுங்கோ....

எதுக்கு? ஆதாரத்தையளிப்பதற்கா? நாமே விசாரிக்கிறோம் என்றவர்களும் இவங்கதான், இராணுவத்திற்காய் நானே தூக்குக் கயிறு ஏறுவேன் என்று வீர வசனம் பேசியவர்களும் இவர்கள் தான், இராணுவத்தை காட்டிக்கொடுக்க மாட்டோம் என்று மார் தட்டியவர்களும் இவர்கள்தான், நாயைப்போல சுட்டுக்கொன்றோம் என்றவர்களும் இவர்கள்தான், காணாமற்போனோர் காரியாலயத்தை திறந்து அதற்கென அலுவலர்களை நியமித்ததும் இவர்கள்தான், நஷ்ட ஈடு தருகிறோம் என்றவர்களும் இவர்கள்தான், இப்ப என்ன இந்த ஆணைக்குழு புதுசாய் கதை சொல்லுது? அப்போ இராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாடுகள் தடை, வழக்கு  பிறப்பித்தபோது தைரியமாய் எதிர்கொள்ளாமல், கேள்வி கேட்காமல் ஏன் தப்பியோடி வந்தார்கள்? இது இந்த ஆணைக்குழுவுக்கு தெரியாதா? அல்லது மறந்து, மறைத்து பேசி மற்றவர்களையும் அறளை ஆக்கப்பாக்கிறார்களா? என்ன... கடைசியில இந்தச் சம்பவங்கள்  நடக்கும்போது இவர்கள் பதவியில் இருக்கவில்லை, அப்போ இருந்தவர்கள் இப்ப பதவியிலில்லை, உயிரோடு இல்லை, சாட்சியமளிக்கும் நிலையிலில்லை என்று தப்பிக்கலாம் என்று நினைத்து சுத்துது இந்த ஆணைக்குழு. நடந்தது தெரியாததெல்லாம் ஆணைகுழுவென்று சாட்சியமளிக்க வந்திட்டுது!    

  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்கா இராணுவம் சொல்வதை எல்லாம் நம்பி செய்தியாப் போட.. நாம அதைப் பகிர்ந்து கருத்துச் சொல்லுறம் பாருங்க.. அதில சிங்களவன் வென்றிட்டான்.

சொறீலங்கா இராணுவம் சொல்வதை ஏற்றுக் கொள்ளவே முடியாத காலம் போய்.. அது சொல்லுறதை நம்பி கருத்தாடுற காலமாப் போச்சு.

சொல்கைமை கூப்பிட்டு வைச்சுக் கொண்டு சொல்லுறதிலும் ஒரு உள்நோக்கம் இருக்கலாம்.. ஆனால்.. களத்தில் நின்ற ஐநா உள்ளிட்ட சர்வதேச செஞ்சிலுவை உட்பட்ட தன்னார்வ நிறுவனங்களும்.. செய்மதிக் கண்காணிப்புச் செய்தவைக்கும் உண்மைகள் தெரியும். சொல்கைமே சொல்லமாட்டார் உண்மையை.. இதில சொறீலங்கா இராணுவம் சொல்லிடுமாக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இறுதி யுத்தத்தில் 'புலிகள்' சரணடைந்தனரா? ஆணைக்குழுவிடம் இலங்கை ராணுவம் சொன்னது என்ன?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,யூ.எல். மப்றூக்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

கணவர் எழிலனுடன் அனந்தி

 

படக்குறிப்பு,

கணவர் எழிலனுடன் அனந்தி

லங்கையில் நடைபெற்ற உள்நாட்டு மோதல் முடிவுக்கு வந்தபோது, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த எவரும் ராணுவத்திடம் சரணடையவில்லை என்று தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிடம் இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் பாலகிருஷ்ணன் நிரோஸ் குமார் என்பவரின் தகவலறியும் உரிமை விண்ணப்பம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக மேற்படி ஆணைக்குழு கூடியபோது, அதன் முன்பாக காணொளி காட்சி மூலம் தோன்றி சாட்சியமளித்த இலங்கை ராணுவ பிரிகேடியர் என்.கே. நாகாவத்த இந்த தகவலை பதிவு செய்துள்ளார்.

இறுதி யுத்தத்தின் போது ராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் தொடர்பில் தகவல்களைக் கோரி, ஊடகவியலாளர் நிரோஸ் குமார் - தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ், இலங்கை ராணுவத்துக்கு விண்ணப்பம் செய்திருந்தார்.

அதற்கு திருப்திகரமான பதில் வரவில்லை என்று கூறி அவர் - இது விடயமாக தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

 

இதற்கிணங்க கடந்த 3ஆம் தேதி விசாரணைக்காக ஆணைக்குழு கூடியபோது காணொளி வழியாக ஆஜரான பிரிகேடியர் நாகாவத்த, ”யுத்தத்தின் இறுதி கட்டத்தில் இலங்கை ராணுவத்திடம் புலிகள் இயக்க உறுப்பினர் எவரும் சரணடையவில்லை” என தெரிவித்தார

இதன்போது ஊடவியலாளர் நிரோஸ் சார்பாக சட்டத்தரணி ஸ்வஸ்திகா அருலிங்கம் மற்றும் ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்த்தன ஆகியோர் ஆணைக்குழுவில் ஆஜராகி - வாதங்களை முன்வைத்தனர்.

ஊடகவியலாளர் கோரிய தகவல்கள்

 

நரோஸ் குமார்

 

படக்குறிப்பு,

நிரோஸ் குமார்

ஊடகவியலாளர் நிரோஸ் குமார், இலங்கை ராணுவத்திடம் சில விவரங்களைக் கோரி, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி, இலங்கை ராணுவத்தின் தகவல் அறியும் அதிகாரிக்கு விண்ணப்பமொன்றை அனுப்பி வைத்தார். 

'இறுதி யுத்த காலப்பகுதியில் இலங்கை ராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் தொடர்பான தகவல்கள்' எனத் தலைப்பிடப்பட்டிருந்த அந்த விண்ணப்பத்தில் 6 கேள்விகளுக்கான தகவல்களை நிரோஸ் கோரியிருந்தார்.

விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த எத்தனை பேர் ராணவத்தினரிடம் சரணடைந்தனர் (ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் எத்தனை பேர்)?

புலி உறுப்பினர்கள் எந்தெந்தப் பகுதியில் வைத்து ராணுவத்தினரிடம் சரணடைந்தனர். அது தொடர்பான தகவல்கள் வழங்கப்படல் வேண்டும்;

விடுதலைப் புலி உறுப்பினர்கள் சரணடையும் போது, அவர்களைப் பொறுப்பேற்ற ராணுவ அதிகாரிகள், ராணுவப் படைப்பிரிவு போன்றவற்றின் தகவல்கள் வழங்கப்பட வேண்டும்;

சரணடைந்த புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன? அவர்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யயப்பட்டிருந்தால் அது தொடர்பான தகவல்கள் வழங்கப்பட வேண்டும்;

புலிகள் அமைப்பைச் சேர்ந்த தளபதிகள் அல்லது உயர் பதவிகளில் இருந்தோர் எத்தனைபேர் ராணுவத்திடம் சரணடைந்தனர். அவர்கள் சரணடைந்த ராணுவத் தளபதி, ராணுவப் படைப் பிரிவு போன்ற தகவல்கள் வழங்கப்பட வேண்டும். புலிகள் அமைப்பின் சரணடைந்த முக்கிய உறுப்பினர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன?

சரணடைந்தவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தால் அல்லது அவர்கள் சிறைத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்தால் அவை தொடர்பான தகவல்கள் வழங்கப்பட வேண்டும் என்று நிரோஸ் குமார் தனது விண்ணப்பத்தில் கேட்டிருந்தார்.

புலிகள் சரண் அடைந்தது யாரிடம்?

 

இலங்கை போர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

2019 ஜூன் 25ஆம் தேதி இதற்கு - எழுத்து மூலம் பதிலளித்த இலங்கை ராணுவத்தின் தகவல் அதிகாரி, புலிகள் இயக்க உறுப்பினர்கள் எவரும் இலங்கை ராணுவத்திடம் சரணடையவில்லை என்றும், அவர்கள் இலங்கை அரசிடமே சரணடைந்தார்கள் எனவும் தெரிவித்திருந்தார்.

அது தொடர்பான விவரங்களை புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகத்திடம் பெற்றுக் கொளள்ள முடியுமெனவும், அந்தப் பதிலில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் திருப்தியடையாத ஊடகவியலாளர் நிரோஸ் குமார், தனது விண்ணப்பம் தொடர்பில் - இலங்கை ராணுவத்துக்கு மேன்முறையீடு செய்தார்.

அப்போதும், முன்னைய பதில்தான் ராணுவத்திடமிருந்து கிடைத்தது. இந்த நடவடிக்கைகளின் போது, தனது விண்ணப்பத்தினை தமிழில் சமர்ப்பித்திருந்ததாகவும் ஆனால், தனக்கு வழங்கப்பட்ட எழுத்து மூல பதில்கள் அனைத்தும், சிங்கள மொழியிலேயே கிடைத்ததாகவும் நிரோஸ் குமார் கூறுகின்றார்.

ராணுவப் பகுதிக்கு வந்தோரில் புலிகள் இருந்தார்களா எனத் தெரியாது ராணுவம் வழங்கிய பதில்களில் திருப்தியடைதாக நிரோஸ் குமார், 2019ஆம் ஆண்டு 10ஆம் மாதம் தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவுக்கு நேரடியாகச் சென்று, தனது விண்ணப்பம் தொடர்பில் முறையீடு செய்ததாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இதன் பின்னர், நீண்ட இழுத்தடிப்புகளுக்குப் பின்னர் 3 வருடங்கள் கடந்த நிலையில் இம்மாதம் 3ஆம் தேதி, நிரோஸ் வழங்கிய முறைப்பாட்டை, தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

அப்போது காணொளி மூலம் தோன்றி சாட்சியமளித்த ராணுவ பிரிகேடியர் என்.கே. நாகாவத்த”யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் புலிகள் எவரும் ராணுவத்திடம் சரணடையவில்லை. அப்போது மக்கள் இடம்பெயர்ந்து ராணுவப் பகுதிக்கு வந்தார்கள்.

அவர்களில் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இருந்தார்களா என எமக்குத் தெரியாது. எம்மிடம் வந்தவர்கள் தொடர்பில் நாங்கள் எந்தப் பதிவுகளையும் செய்யவில்லை.

அவர்களை பஸ்களில் ஏற்றி - உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் தங்க வைக்கப்படும் முகாம்களுக்கு அனுப்பி வைத்தோம். அந்த முகாம்கள் புனர்வாழ்வு ஆணையாளர் நாயக பணியகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன.

அங்கு சென்றவர்கள் தொடர்பான நடவடிக்கைகளை அந்தப் பணியகம்தான் மேற்கொண்டது. அவ்வாறான தகவல்களை புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகத்திடம்தான் பெற்றுக் கொள்ள முடியும்" என்று கூறியதாக ஊடகவியலாளர் நிரோஸ் குமார் தெரிவித்தார்.

 

ஆணையம் பிறப்பித்த உத்தரவு

 

இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

நான்கு பேரைக் கொண்ட தகவலறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழுவின் முன்னிலையில், இந்த விடயங்களை இலங்கை ராணுவத்தின் குறித்தளிக்கப்பட்ட அதிகாரி கூறியிருந்தார். இதன்போது ராணுவத்தின் கூற்றை மறுத்த ஊடகவியலாளர் நிரோஸ் குமார் தரப்பு சட்டத்தரணி ஸ்வஸ்திகா, ராணுவத்தினரிடம் புலிகள் இயக்க உறுப்பினர்கள் சரணடைந்தமை தொடர்பான சில ஆவணங்களை ஆணைக்குழுவிடம் ஒப்படைத்தார்.

ராணுவத்திடம் புலிகள் சரணடைந்ததாக அப்போது அரசாங்கத்தில் அங்கம் வகித்த அமைச்சர்கள், அப்போதைய ராணுவப் பேச்சாளர் உள்ளிட்டோர் ஊடகங்கள் முன்னிலையில் தெரிவித்த செய்திகள் இந்த ஆவணங்களில் உள்ளடங்கியிருந்தன.

இரு தரப்பினரின் வாதங்களையும் கவனத்திற் கொண்ட ஆணைக்குழு, ஊடகவியலாளர் நிரோஸ் மற்றும் ராணுவம் ஆகிய தரப்பினர் தத்தமது நிலைப்பாடுகள் தொடர்பான எழுத்து மூல சமர்ப்பணங்களை 10 நாட்களுக்குள் வழங்குமாறு உத்தரவிட்டது.

மேலும் இது தொடர்பான அடுத்த கட்ட விசாரணையை எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் தேதி விசாரிப்பதற்கும் நாட்குறித்தது.

எனது கணவர் சரணடைந்ததை நேரில் கண்டேன்: எழிலன் மனைவி அனந்தி

இறுதி யுத்தத்தில் தம்மிடம் புலிகள் எவரும் சரணடையவில்லை என்று இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளமை தொடர்பில், புலிகள் இயக்கத்தின் முன்னாளர் தளபதி எழிலனின் மனைவியும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான அனந்தி சசிதரனை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியது.

 

அனந்தி

 

படக்குறிப்பு,

அனந்தி

2009ஆம் ஆண்டு இறுதி யுததம் முடிவுக்கு வந்தபோது, ராணுவத்திடம் எழிலன் சரணடைந்ததாகவும் அதனை தான் நேரில் கண்டதாகவும் அனந்தி சசிதரன் நீண்ட காலமாக கூறி வருகின்றார்.

இவ்விடயம் தொடர்பாக பேசிய அனந்தி, "ராணுவத்திடம் புலிகள் இயக்க உறுப்பினர்கள் எவரும் சரணடையவில்லை எனக் கூறப்படுவது பொய்" என்கிறார். 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி - அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசஃப் உடன் சென்ற எழிலன், ராணுவத்திடம் சரணடைந்ததை தான் நேரில் கண்டதாகத் கூறினார்.   

”முள்ளிவாய்க்காலில் இருந்து ராணுவம் அழைத்த இடத்துக்கு மக்களுடன் சேர்ந்து நானும் எனது மூன்று பிள்ளைகளும் வரிசையில் சென்றோம். அப்போது அரச உத்தியோகத்தருக்கான எனது அடையாள அட்டையை ராணுவத்தினரிடம் காட்டினேன்.

ராணுவ அதிகாரியொருவர் வந்து எனது அடையாள அட்டையைப் பார்த்து விட்டு, நீ இந்த வரிசையில் வரவேண்டாம், உனக்கான வரிசை அங்கேயுள்ளது என கொச்சைத் தமிழில் கூறி, நான் நின்ற வரிசையிலிருந்து என்னையும் பிள்ளைகளையும் நீக்கி விட்டார்”.

”அப்போது பிரான்சிஸ் ஜோசஃப் உடன் சென்று - ராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் சற்று தூரத்தில் நின்றிருந்த எழிலன், என்னைப் பார்த்து, 'நீ போ' என்பது போல் தலையசைத்தார்.

முட்கம்பிகளுக்கு இந்தப் பக்கம் நாங்களும் அந்தப் பக்கம் அவர்களுமான இருந்தோம். அப்போது அங்கு நின்ற பஸ்களை நோக்கி எழிலன் உள்ளிட்டவர்களை ராணுவத்தினர் அழைத்துக் கொண்டு செல்வதை நான் பார்த்தேன்” என, அனந்தி கூறினார்.

எழிலனை அழைத்துச் சென்றவர்கள் ராணுவ சிப்பாய்கள் இல்லை என்றும், ராணுவ உயர் அதிகாரிகளே அழைத்துச் சென்றனர் எனவும் அனந்தி தெரிவித்தார்.

 

இலங்கை போர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"எழிலனுக்கு அருகாமையில் நாங்கள் நின்றிருந்த ஒரு சமயத்தில் 'மாவிலாறு' 'எழிலன்' எனும் வார்த்தைகளைக் கூறிக் கொண்டே எழிலனை ராணுவத்தினர் அழைத்துச் சென்றனர்" எனவும் பிபிசி தமிழிடம் அனந்தி குறிப்பிட்டார்.

"அந்த இடத்திலிருந்து பொதுமக்களை பஸ்கள் ஏற்றிக் கொண்டு சென்றன. அதில் நானும் பிள்ளைகளும் சென்றோம். ஓமந்தையில் ஓரிடத்தில் பஸ் தரித்து நின்றது.

அப்போது மற்றைய பஸ்ஸில் வந்த ஒருவர் என்னிடம் ஓடிவந்து, 'அனந்தி அக்கா, நல்லவேளை நீங்கள் வந்து விட்டீர்கள். அங்கு ஆர்மி உங்களைத் தேடுகிறார்கள்' என்றார்.

புலிகள் இயக்க முக்கியஸ்தர்களோடு அவர்களின் குடும்பத்தினரையும் ராணுவத்தினர் அழைத்துச் சென்றிருந்தனர் என்பது, அப்போதுதான் எனக்கு தெரிய வந்தது" எனவும் அனந்தி கூறினார்.

தனது கணவர் எழிலன் ராணுவத்தினரிடம் சரணடைந்தமையை தான் நேரில் கண்டதை, நீதிமன்றத்தில் வழங்கிய சாட்சியங்களின் போதும், தான் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ராணுவத்தினரிடம் சரணடைவதற்காக எழிலன் உள்ளிட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களை அழைத்துச் சென்ற அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசஃப் கூட அதற்குப் பிறகு திரும்பவில்லை என்றும் அனந்தி சசிதரன் மேலும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்பிய எம்பி

 

இலங்கை போர்

பட மூலாதாரம்,@MASUMANTHIRAN

 

படக்குறிப்பு,

சுமந்திரன், எம்.பி

இந்த நிலையில் இவ்விடயம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியும் மூத்த சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் நேற்று (நவம்பர் 😎 நாடாளுமன்றில் உரையாற்றியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. ”தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பமொன்றுக்கு அண்மையில் ராணுவம் பதிலளிக்கும் போது, தம்மிடம் யாரும் சரணடையவில்லை என்று கூறியிருந்தது. ஆனால், தாய்மாரும் மனைவியர்களும் ராணுவத்திடம் தங்கள் உறவுகளை தாங்களே கையளித்ததாக புகார் கூறுகின்றனர். இப்படியிருக்கும் போது, தங்கள் கண்கள் முன்பாகவே ராணுவத்திடம் பலர் சரணடைந்தமையை மக்கள் பார்த்துள்ள நிலையில், ராணுவத்திடமிருந்து இப்படியொரு அறிக்கை வெளிவருவதால், மக்கள் உடனடியாவே நம்பிக்கை இழந்து விடுகின்றனர்" என சுமந்திரன் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/cmm53y4m536o

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

ராணுவப் பகுதிக்கு வந்தோரில் புலிகள் இருந்தார்களா எனத் தெரியாது ராணுவம் வழங்கிய பதில்களில்

 

6 hours ago, ஏராளன் said:

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் புலிகள் எவரும் ராணுவத்திடம் சரணடையவில்லை. அப்போது மக்கள் இடம்பெயர்ந்து ராணுவப் பகுதிக்கு வந்தார்கள்.

சரி....! உங்களிடம் வந்த மக்களின் விபரங்களையும், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை சொல்லுங்கள்!

6 hours ago, ஏராளன் said:

எழுத்து மூலம் பதிலளித்த இலங்கை ராணுவத்தின் தகவல் அதிகாரி, புலிகள் இயக்க உறுப்பினர்கள் எவரும் இலங்கை ராணுவத்திடம் சரணடையவில்லை என்றும், அவர்கள் இலங்கை அரசிடமே சரணடைந்தார்கள் எனவும் தெரிவித்திருந்தார்.

இலங்கை அரசாங்கத்தின்மீதும் அதன் இராணுவத்தின்மீதும் குற்றஞ்சுமத்தப்படுள்ளது. அதற்கான ஆதாரங்களுமுண்டு, கண்ணாற்கண்ட சாட்சிகளுமுண்டு. குற்றவாளிகளே நாங்கள் குற்றமற்றவர்கள் என்று சொன்னால் அந்த வாதம் ஏற்றுக்கொள்ளப்படுமா? அவர்கள் குற்றமற்றவர்கள் என நிரூபிக்க என்ன ஆதாரமுண்டு? இவர்கள் எந்த நாட்டு அரசாங்கத்தின் கட்டளைகளுக்கு அமைய போரிட்டனர்? அரசாங்கம் என்றால் யார்? போரிட்டவர்கள் வேறு, பொறுப்பேற்றவர்கள் வேறா?  

அவர்களை பஸ்களில் ஏற்றி - உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் தங்க வைக்கப்படும் முகாம்களுக்கு அனுப்பி வைத்தோம்.

6 hours ago, ஏராளன் said:

அவர்களில் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இருந்தார்களா என எமக்குத் தெரியாது. எம்மிடம் வந்தவர்கள் தொடர்பில் நாங்கள் எந்தப் பதிவுகளையும் செய்யவில்லை.

பதிவு எதுவும் செய்யாதவர்களுக்கு சரணடைந்தவர்கள் புலிகள் யாரும் இல்லை என்பது எப்படித் தெரியும்? ஏன் பொறுப்பேற்றவர்களை பதிவு செய்யவில்லை? அவர்களை கொல்வது என்றே முடிவு செய்தே பொறுப்பெடுத்தார்களா? அப்படியாயின் காணாமற்போனோர் வெளிநாட்டில் உள்ளனர் என்று எதை அடிப்படையாக  வைத்து  சொல்கின்றனர்? ஏதோ தாம் வெளிநாட்டு இராணுவப்போல் கதையளக்கிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.