Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் தீர்வுடன் கூடிய சுய கௌரவத்துடன் வாழ வேண்டும் என வலியுறுத்தி கிளிநொச்சியில் போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் தீர்வுடன் கூடிய சுய கௌரவத்துடன் வாழ வேண்டும் என வலியுறுத்தி கிளிநொச்சியில் போராட்டம்

By VISHNU

06 NOV, 2022 | 04:48 PM
image

மக்கள் அரசியல் தீர்வுடன் கூடிய சுய கௌரவத்துடன் வாழ வேண்டும் என வலியுறுத்தி கிளிநொச்சியில் கல்மடு நகர் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

IMG_20221106_102143.jpg

வடக்கு கிழக்கு மக்கள் அரசியல் தீர்வுடன் கூடிய சுய கௌரவத்துடன் வாழ வேண்டும் என வலியுறுத்தி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு 100 நாள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகிறது.  

IMG_20221106_101831.jpg

நில அபகரிப்பு ,தொல்லியல் என்ற பெயரில் வனஇலா காணிகளை சுவீகரிப்பு போன்ற விடயங்களை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி 100 நாள் போராட்டத்தை வலியுறுத்தி  98வது நாளான இன்று 06.11.2022 கிளிநொச்சி கல்மடுநகர் கிராம அலுவளர் பிரிவுக்குற்ப்பட்ட ரங்கன் குடியிருப்பு பகுதியல் நடைபெற்றது  இவ் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

IMG_20221106_102018.jpg

IMG_20221106_101700.jpg

https://www.virakesari.lk/article/139299

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடகிழக்கு மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வுகோரி 100 நாள் செயல் முனைவின் இறுதி நாள் 8 மாவட்டங்களில் முன்னெடுப்பு

By VISHNU

07 NOV, 2022 | 03:49 PM
image

ஹஸ்பர்

வடகிழக்கு மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வு வேண்டும் என 100 நாள் செயல் முனைவின் மக்கள் குரல் பிரகடனத்தின் 100 ம் நாள் பிரகடன ஒன்று கூடலானது 08 ஆம் திகதி காலை 10.00மணிக்கு வடகிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களில் இடம் பெறவுள்ளது.

இதனடிப்படையில் யாழ்ப்பாணத்தில் நல்லூர் சங்கிலியன் பூங்காவிலும், அம்பாறையில் காரைதீவு பிரதேச சபை பூங்காவிலும், கிளிநொச்சியில் இளைஞர் மட்ட விளையாட்டு மைதானம் பரந்தன் சந்தியிலும், மட்டக்களப்பு புனித சூசையப்பர் விளையாட்டு மைதானத்திலும், வவுனியாவில் நகர சபை மைதானத்திலும், திருகோணமலையில் முத்தவெளி வெளியரங்கிலும், முல்லைத் தீவில் கரைதுறைபற்று பிரதேச மைதானத்திலும் மன்னாரில் மன்னார் பொது விளையாட்டு மைதானதாதிலும் இடம் பெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

"புரையோடிக் கிடக்கின்ற தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான சமஷ்டி அரசியல் தீர்வு " வேண்டிய மக்கள் பிரகடமாக இது இடம் பெறவுள்ளது

வடகிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் இடம் பெறவுள்ள இதில் சகல மக்களையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றனர்.

https://www.virakesari.lk/article/139364

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் இடம்பெற்ற கௌரவமான அரசியல் தீர்வு கோரிய 100 ஆவது நாள் செயல் முனைவு போராட்டம்

By DIGITAL DESK 5

08 NOV, 2022 | 02:07 PM
image

வடக்கு - கிழக்கு மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வு  கோரிய 100 ஆவது நாள் செயல் முனைவின் மக்கள் குரல் பிரகடனத்தின் 100 ஆம் நாள் பிரகடன ஒன்று கூடலானது இன்று செவ்வாய்க்கிழமை (08)  காலை 11 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

DSC_2229.JPG

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் கடந்த 99 நாட்கள் சுழற்சி முறையில் மக்கள் போராட்டங்கள் இடம் பெற்று வந்தது.

DSC_2214.JPG

குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தின் போது வடக்கு கிழக்கு  மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்' , நாங்கள் நாட்டை துண்டாட வோ தனியரசு கேட்கவில்லை.இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வையே கேட்கிறோம் '

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் என்பது ஒரு    ஜனநாயக உரிமையாகும் 13வது திருத்தச் சட்டமானது அரசியலமைப்பு ரீதியாக அதிகாரப் பரவலாக்கதுக்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது.

WhatsApp_Image_2022-11-08_at_1.06.44_PM.

பெண்களுக்கு எதிரான  வன்முறைகளை இல்லாதொழிப்போம்' எங்கள் நிலம் எமக்கு வேண்டும்,நடமாடுவது எங்கள் உரிமை,பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை,ஒன்று கூடுவது எங்கள் உரிமை,மத வழிபாடு  எங்கள் சுதந்திரம், எமது மத தளங்களின் புனிதத்தை  கொச்சைப்படுத்தாதே,இந்து மத ஆலயங்களின் இடங்களை திட்டமிட்டு அபகரிக்காதே என பல கோரிக்கைகளை முன் வைத்தனர்.

WhatsApp_Image_2022-11-08_at_1.06.43_PM.

குறித்த நூறு நாள் மக்கள் செயவ்முனைவின் இறுதி நாள் மக்கள் பிரகடனம் மன்னார் மாவட்டத்தில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில்  வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் வடமாகாண இணைப்பாளரும் மன்னார் மாவட்ட மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளருமான ஜே.யாட்சன் பிகிராடோ தலைமையில்   இடம்பெற்றது.

WhatsApp_Image_2022-11-08_at_1.06.42_PM.

குறித்த நிகழ்வில் மத தலைவர்கள்,மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணியாளர்கள்,மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணைய பிரதிநிதிகள்,உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்,பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

DSC_2207.JPG

 இதன்  போது 'புரையோடிக் கிடக்கும் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான சமஷ்டி அரசியல் தீர்வு ' வேண்டிய மக்கள் பிரகடனம் இடம் பெற்றது.

https://www.virakesari.lk/article/139434

பாதிக்கப்பட்ட மக்களோடு உறுதுணையாய் நிற்க வேண்டிய தமிழ் அரசியல்வாதிகள் எங்கே?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

பாதிக்கப்பட்ட மக்களோடு உறுதுணையாய் நிற்க வேண்டிய தமிழ் அரசியல்வாதிகள் எங்கே?

அவர்கள்... சிங்களவனுக்கும், சோனகனுக்கும் சேவை செய்ய போய் விட்டார்கள். 

தேர்தல் நேரம் நெருங்க... புது பொய்களுடன், தமிழ் மக்களை சந்திக்க வருவார்கள்.

👇  அரசியல் தலைவர்கள் உதவி செய்யாததால் இவர்கள், பிக்குவை சந்தித்து இருக்கிறார்கள்.  👇

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

அவர்கள்... சிங்களவனுக்கும், சோனகனுக்கும் சேவை செய்ய போய் விட்டார்கள். 

தேர்தல் நேரம் நெருங்க... புது பொய்களுடன், தமிழ் மக்களை சந்திக்க வருவார்கள்.

சாதாரணமாக மாணவர்களுக்குத்தான் பிரம்புடன் ஒரு சட்டாம்பியார் தேவை என்பார்கள்.
ஆனால் எமது தமிழ் அரசியல்வாதிகளுக்குத்தான் துவரம் கேட்டியுடன்  கொதி பிடிச்ச சட்டாம்பியார் தேவை.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, இணையவன் said:

பாதிக்கப்பட்ட மக்களோடு உறுதுணையாய் நிற்க வேண்டிய தமிழ் அரசியல்வாதிகள் எங்கே?

அவர்களை ஏனிப்போது தேடுகிறீர்கள்? அவர்கள் தங்க விருது வாங்க போய்விட்டார்கள், தாங்கள் கேள்விப்படவில்லையோ? மக்களை அவர்கள் கொன்று குவிக்கும்போதும் இவர்கள் மக்களுடன் இருக்கவில்லை, என்றுமே இருந்ததில்லை,இருக்கப்போவதுமில்லை.  அவர்களிருக்குமிடம் வேறு!  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.