Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரித்தானியாவில் குளிர்கால வானிலை எச்சரிக்கை இன்றும் நீடிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

பிரித்தானியாவில் குளிர்கால வானிலை எச்சரிக்கை இன்றும் நீடிப்பு!

பிரித்தானியாவில் குளிர்கால வானிலை எச்சரிக்கை இன்றும் நீடிப்பு!

பிரித்தானியா முழுவதும் வீதி, ரயில் மற்றும் விமானப் பயணத் தடையை ஏற்படுத்திய குளிர்கால வானிலை இன்றும் (செவ்வாய்கிழமையும்) தொடரும் என முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்காலிக வானிலை அலுவலக புள்ளிவிபரங்கள், டிசம்பர் 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரித்தானியாவில் திங்கள்கிழமை மிகவும் குளிரான நாள் என்று காட்டுகின்றன,

அபெர்டீன்ஷையரின் பிரேமரில் -9.3 செல்சியஸ் (15F) காணப்பட்டது.

வடக்கு ஸ்கொட்லாந்து, ஓர்க்னி, ஷெட்லேண்ட் மற்றும் வடகிழக்கு இங்கிலாந்தில் பனி மற்றும் பனிக்கட்டிக்கான மஞ்சள் எச்சரிக்கைகள் உள்ளன. தென்கிழக்கு இங்கிலாந்தில் பனிப்பொழிவுக்கான மஞ்சள் எச்சரிக்கையும் உள்ளது.

வெஸ்ட் மிட்லாண்ட்ஸில் மூன்று சிறுவர்கள் இறந்ததையடுத்து, குளிர்ச்சியான பனிப்பொழிவு தொடர்வதால், உறைந்த ஏரிகளுக்கு அருகில் விளையாடுவதால் ஏற்படும் ஆபத்துகளைப் பற்றி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குச் அறிவுறுத்துமாறு எச்சரிக்கப்படுகிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை கிங்ஷர்ஸ்டில் உள்ள பாப்ஸ் மில் பூங்காவில் உள்ள ஏரியில் விழுந்து 8, 10 மற்றும் 11 வயதுடைய சிறுவர்கள் இறந்தனர். ஆறு வயதுடைய நான்காவது சிறுவன் தண்ணீரில் இருந்து இழுக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளார்.

பிரிட்டனின் சில பகுதிகளில் செவ்வாய்கிழமை மீண்டும் கடுமையான பனிப்பொழிவு இருக்கும் என்றும், உயரமான நிலங்களில் 15-20cms (6-8ins) வரை குவியும் என்றும் வானிலை அலுவலக செய்தித் தொடர்பாளர் ஒலி கிளேடன் தெரிவித்தார்.

https://athavannews.com/2022/1315213

@goshan_che

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, தமிழ் சிறி said:

பிரித்தானியாவில் குளிர்கால வானிலை எச்சரிக்கை இன்றும் நீடிப்பு!

பிரித்தானியாவில் குளிர்கால வானிலை எச்சரிக்கை இன்றும் நீடிப்பு!

பிரித்தானியா முழுவதும் வீதி, ரயில் மற்றும் விமானப் பயணத் தடையை ஏற்படுத்திய குளிர்கால வானிலை இன்றும் (செவ்வாய்கிழமையும்) தொடரும் என முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்காலிக வானிலை அலுவலக புள்ளிவிபரங்கள், டிசம்பர் 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரித்தானியாவில் திங்கள்கிழமை மிகவும் குளிரான நாள் என்று காட்டுகின்றன,

அபெர்டீன்ஷையரின் பிரேமரில் -9.3 செல்சியஸ் (15F) காணப்பட்டது.

வடக்கு ஸ்கொட்லாந்து, ஓர்க்னி, ஷெட்லேண்ட் மற்றும் வடகிழக்கு இங்கிலாந்தில் பனி மற்றும் பனிக்கட்டிக்கான மஞ்சள் எச்சரிக்கைகள் உள்ளன. தென்கிழக்கு இங்கிலாந்தில் பனிப்பொழிவுக்கான மஞ்சள் எச்சரிக்கையும் உள்ளது.

வெஸ்ட் மிட்லாண்ட்ஸில் மூன்று சிறுவர்கள் இறந்ததையடுத்து, குளிர்ச்சியான பனிப்பொழிவு தொடர்வதால், உறைந்த ஏரிகளுக்கு அருகில் விளையாடுவதால் ஏற்படும் ஆபத்துகளைப் பற்றி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குச் அறிவுறுத்துமாறு எச்சரிக்கப்படுகிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை கிங்ஷர்ஸ்டில் உள்ள பாப்ஸ் மில் பூங்காவில் உள்ள ஏரியில் விழுந்து 8, 10 மற்றும் 11 வயதுடைய சிறுவர்கள் இறந்தனர். ஆறு வயதுடைய நான்காவது சிறுவன் தண்ணீரில் இருந்து இழுக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளார்.

பிரிட்டனின் சில பகுதிகளில் செவ்வாய்கிழமை மீண்டும் கடுமையான பனிப்பொழிவு இருக்கும் என்றும், உயரமான நிலங்களில் 15-20cms (6-8ins) வரை குவியும் என்றும் வானிலை அலுவலக செய்தித் தொடர்பாளர் ஒலி கிளேடன் தெரிவித்தார்.

https://athavannews.com/2022/1315213

@goshan_che

 

மகனை பள்ளியில் விட்டு வர - ஆதி முதல் அந்தம் வரை விறைத்து விட்டது 🤣.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கு நான் இருக்கும் இடத்தில் காலை 6 மணியளவில் வெளியே சென்ற போது பல வருடங்களுக்கு பின் மைனஸ் 21ல் குளிர் இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, goshan_che said:

மகனை பள்ளியில் விட்டு வர - ஆதி முதல் அந்தம் வரை விறைத்து விட்டது 🤣.

இன்று இங்கு.... -8 பாகை.

Just now, குமாரசாமி said:

இங்கு நான் இருக்கும் இடத்தில் காலை 6 மணியளவில் வெளியே சென்ற போது பல வருடங்களுக்கு பின் மைனஸ் 21ல் குளிர் இருந்தது.

ஓ....  உங்களுக்கு -28 பாகையா?
நான் அறிந்தவரையில்... இங்கு -15´ஐ தாண்டிப் போனதில்லை.
இந்த வருடம் அதிக குளிரை எதிர் பார்க்கும் படி கூறி உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, தமிழ் சிறி said:

இன்று இங்கு.... -8 பாகை.

ஓ....  உங்களுக்கு -28 பாகையா?
நான் அறிந்தவரையில்... இங்கு -15´ஐ தாண்டிப் போனதில்லை.
இந்த வருடம் அதிக குளிரை எதிர் பார்க்கும் படி கூறி உள்ளார்கள்.

நான் இருக்கிற இடம் மலையும் மலை சார்ந்த இடமெல்லோ...
சினோ முதல் கொட்டி கடைசியாய் கரையிற இடம்.

- 21 பாகை 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, குமாரசாமி said:

நான் இருக்கிற இடம் மலையும் மலை சார்ந்த இடமெல்லோ...
சினோ முதல் கொட்டி கடைசியாய் கரையிற இடம்.

- 21 பாகை 

அது எந்த இடம்? “கைலாயமா?” 🤭😜

ஏனெனில் பல திரைப்படக்களில் பனிமலைகள் நடுவே சிவனும், பார்வதியும் குந்தியிருப்பது போல காட்டுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, ராசவன்னியன் said:

அது எந்த இடம்? “கைலாயமா?” 🤭😜

ஏனெனில் பல திரைப்படக்களில் பனிமலைகள் நடுவே சிவனும், பார்வதியும் குந்தியிருப்பது போல காட்டுவார்கள்.

ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு கடைசியில எங்கை வாறியள் எண்டு விளங்குது......😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, ராசவன்னியன் said:

அது எந்த இடம்? “கைலாயமா?” 🤭😜

ஏனெனில் பல திரைப்படக்களில் பனிமலைகள் நடுவே சிவனும், பார்வதியும் குந்தியிருப்பது போல காட்டுவார்கள்.

 

1 minute ago, குமாரசாமி said:

ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு கடைசியில எங்கை வாறியள் எண்டு விளங்குது......😁

Thread by @Itishree001: Mount Kailash,the Kingdom of Lord Shiva is the  Abode of Shiva-Parvati with their Sons & Daughter. The Vedas have mention  Mount Kailash a…

ஜேர்மனியில்... கைலாயம் இல்லை என்று தெரிந்தும்,
வன்னியர்... நூல் விட்டுப் பார்க்கிறார். 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
41 minutes ago, தமிழ் சிறி said:

 

Thread by @Itishree001: Mount Kailash,the Kingdom of Lord Shiva is the  Abode of Shiva-Parvati with their Sons & Daughter. The Vedas have mention  Mount Kailash a…

ஜேர்மனியில்... கைலாயம் இல்லை என்று தெரிந்தும்,
வன்னியர்... நூல் விட்டுப் பார்க்கிறார். 😂

Nithyananda PFP - Nithyananda Profile Pics

ராசவன்னியருக்கு  என்ரை வழித்தோன்றல் தான் நித்தியானந்தம் எண்டது எப்பதான் விளங்கப்போகுதோ தெரியேல்ல 😁

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
58 minutes ago, குமாரசாமி said:

ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு கடைசியில எங்கை வாறியள் எண்டு விளங்குது......😁

இடத்தை தெரிந்து நான் என்ன செய்யபோறேன் சாமி..?

குஜராத்தி மோடியிடம் சொன்னால் ஒருவேளை “சிவலிங்கம்” அங்கே இடத்துக்கு பொருத்தமாக வைக்கலாம்..!

ஏனெனில் சுவிஸ் இண்டர்லாகனில் ஒரு பார்க்கில் இந்தி இயக்குனர் ஒருவரின் (some ‘Chopra’ name)சிலை நிறுவப்பட்டு இருந்ததை சென்ற வருடம் பார்த்தேன்.

அந்தாளு பேரு “யாஷ் சோப்ரா”.

சிலைக்கு அருகில் நின்று போட்டோ எடுத்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ராசவன்னியன் said:

இடத்தை தெரிந்து நான் என்ன செய்யபோறேன் சாமி..?

குஜராத்தி மோடியிடம் சொன்னால் ஒருவேளை “சிவலிங்கம்” அங்கே இடத்துக்கு பொருத்தமாக வைக்கலாம்..!

ஏனெனில் சுவிஸ் இண்டர்லாகனில் ஒரு பார்க்கில் இந்தி இயக்குனர் ஒருவரின் (some ‘Chopra’ name)சிலை நிறுவப்பட்டு இருந்ததை சென்ற வருடம் பார்த்தேன்.

அந்தாளு பேரு “யாஷ் சோப்ரா”.

சிலைக்கு அருகில் நின்று போட்டோ எடுத்தேன்.

லண்டனில் திருவள்ளுவர் சிலை படும் பாடு .

May be an image of 3 people and outdoors

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதே மாதிரி ஒரு பெரிய சர்சுக்கு முன்னர் உள்ள பூங்காவில் காந்தி சிலையை கூட பார்த்த ஞாபகம் உள்ளது. அங்கிருந்து பிங் பென் கட்டிடம் நடை தூரம்தான்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 14/12/2022 at 01:54, ராசவன்னியன் said:

இதே மாதிரி ஒரு பெரிய சர்சுக்கு முன்னர் உள்ள பூங்காவில் காந்தி சிலையை கூட பார்த்த ஞாபகம் உள்ளது. அங்கிருந்து பிங் பென் கட்டிடம் நடை தூரம்தான்.

ஓம் பார்லிமெண்ட் சதுக்கத்தில் உள்ளது. அருகே மண்டேலாவும், சற்று பின்னே, வீதிக்கு மறுபுறம், உச்ச நீதிமன்ற வாயிலருகில் லிங்கனும் உள்ளார்கள்.

வள்ளுவர் சிலை படம் தெரியவில்லை.யூனிவர்சிட்டி ஒவ்  லண்டனின் SoAOS வளாகத்தில் உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறீலங்கா தான் பட்ட கடனை அடைப்பதிலிருந்து தப்பிக்க முயல்கிறதா??  இவ்வளவு அவசரமாக அதுவும் புட்டினுடன் கை கோர்ப்பு எதுக்காக???
    • இரணைமடு தான் தீர்வென்றால் மேற்படி வரட்சியின்போது நீருக்கு யாழ்ப்பாணம் எங்கே போக முடியும்?   (இனமொன்றின் குரல்) -----------------------------------------------------------------   இரணைமடு குளத்துக்கு கீழ் விவசாயம் செய்யக் கூடிய 42 ஆயிரம் ஏக்கர் வயல் நிலம் உள்ளது   ஆனால் இதில் 20 ஆயிரம் ஏக்கர் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச கூடிய நிலை தான் இரணைமடுவில் உள்ளது    அதிலும் 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் மட்டும் தான் சிறுபோகம் செய்ய கூடியதாக உள்ளது    இது போதாதென்று பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் பல பகுதிகளில் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை    கல்லாறு போன்ற பகுதிகளிலும் கூட குடிநீர் நெருக்கடி தலைவிரித்தாடுகின்றது    அதாவது கிளிநொச்சியில் குடிக்க, விவசாயம் செய்ய போதிதண்ணீர் இல்லாத நிலையில் யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டு போக போவதாக பல ஆண்டுகளாக அரசியல் செய்கின்றார்கள்    யாழ்ப்பாணத்தில் நிலக்கீழ் சுண்ணக் கற்பாறைகளில் தேங்கியிருக்கின்ற நீரையே கிணறுகள் வாயிலாகப் பெற்று பயன்படுத்தி வருகின்றனர்.    இங்கு எந்தப் பகுதியில் கிணறுகள் அமையப் பெற்றிருப்பினும் அப் பகுதிகள் கடலிலிருந்து ஏறக்குறைய 10 Km to 15 Km களை தாண்டிய தூரங்களில் இல்லை.   அந்த வகையில் 40 வீதத்திற்கு அதிக யாழ்ப்பாண கிணறுகளில் உவர் நீர் கலந்து காணப்படுகின்றன.    சுண்ணாம்புத் தட்டுகள் கரைந்து கடலுக்குள் செல்வதால் குடிநீருடன் கடல் நீர் கலக்கப்படுவதாகவும் மக்கள் நிலத்தடி நீரினைப் பயன்படுத்துகின்ற அளவுக்கு சமமான அளவு கடல் நீர் நன்னீருடன் கலக்குகிறது என்றும் சொல்லுகிறார்கள்.    இது தொடர்ந்தால் யாழ் குடாநாட்டு மக்கள் குடிநீருக்குப் பதிலாக கடல் நீரையே குடிக்க நேரிடும் என்றும் சில சந்தர்ப்பங்களில்குடாநாடு கடலில் மூழ்கக்கூடிய அபாயம் இருப்பதாகவும் அந்த அபபாயத்திற்கான ஆரம்பம் தற்போது ஆரம்பித்துள்ளதாகவும் துறை சார்ந்தவர்கள் எச்சரிக்கிறார்கள்   ஆகவே நன்னீர் தேவைகளை பூர்த்தி செய்ய முன்னேற்பாடுகள் செய்ய வேண்டியது அவசியமானது    ஆனால் இதற்கு இரணைமடு நீர் வேண்டும் என யாரும் கேட்கவில்லை    இங்கே நிலாவரைக் கிணறு, குரும்பசிட்டி கிணறு, புன்னாலைக்கட்டுவன் கிணறு, கீரிமலை கேணி, அல்வாய் குளம், கரவெட்டி குளக் கிணறு, ஊறணிப் பகுதி கிணறுகள், யமுனா ஏரி ஆகிய நீர் நிலைகள் ஊடக குடி நீர் தேவையை பூர்த்தி செய்ய முடியுமா என்பது தொடர்பில் கண்டறிய வேண்டும்   அதே போல நன்னீர் நிலைகளைப் பாதுகாக்கும் நோக்கில் போதிய உவர் நீர்த் தடுப்பு அணைகள் ஏற்படுத்த பட வேண்டும்.    நிலக்கீழ் நீரைக் கடலில் சேர்க்கும் குகை வழிகளை அடையாளம் கண்டு நிலக்கீழ் அணைகள் அமைக்கப்பட் டு தடுக்கின்ற ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.    யாழ்ப்பாணத்தின் 1,050 குளங்களும் ஆழமாக்கப்பட்டு புனரமைப்புகளுக்கு உட்படுத்த பட வேண்டும்   ஆனால் குளங்களைத் தரைக்கீழ் நீர்ப் பீடம் வெளித்தெரியக் கூடியளவிற்கு ஆழமாக்க அனுமதிக்க கூடாது    ஆனையிறவு கடல் நீரேரி, தொண்டைமானாறு கடல் நீரேரி, உப்பாறுஉட்பட்ட நீரேரிகளை நன்னீராக்குகின்ற செயற்திட்டங்கள் மூலம் யாழ்ப்பாணத்தின் நிலக்கீழ் நீர்வள சேமிப்பை அதிகரிக்க முடியும் .    அதே போல மண்டதீவையும் வேலணையையும் பிரிக்கின்ற கடல் நீரேரியை இலகுவாகவே நன்னீர் ஏரியாக்க முடியும்.    பண்ணைத் தாம்போதியையும் அராலித் தாம்போதியையும் முற்றாக மூடுவதன் மூலமாக நகரத்தின் தென் மேற்குப் பகுதியில் விசாலமானதொரு நன்னீர்த் தேக்கத்தை உருவாக்க முடியும்.   உப்பாறு மற்றும் வடமராட்சி நீரேரிகளை இணைத்து மேம்படுத்துவதன் ஊடாக ஆணையிறவு முதற்கொண்டு அரியாலை வரையிலான சுமார் 170 சதுர கிலோ மீற்றர் கொண்ட மிகப் பாரிய நன்னீர் ஏரியினை உருவாக்க முடியும்.   அதே போல வழுக்கியாறு வடிநிலத்திலும் கல்லுண்டாய் வெளியிலும் தீவகப் பகுதிகளிலும் பல நீர் சேமிப்புத் திட்டங்களை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்   அதே போல யாழ்ப்பாணம் வருடம் ஒன்றுக்கு 1000 மி.மீ முதல் 2000 மி.மீ வரை மழை வீழ்ச்சி பெறுகின்றது    இந்த மழை வீழ்ச்சியால் கிடைக்கும் நீரை கடலை சென்றடைய விடாது தடுத்து அவற்றைத் தரைக்கீழ் நீராகச் சேமிப்பதற்கு சகல வழிகளிலும் முயல வேண்டும்   குறிப்பாக நிலாவரை கிணற்றில் 10 மணித்தியாலங்களில் 30,000 – 40,000 கலன் நீர் தோட்டப் பாசனத்திற்காக அக் கிணற்றில் இருந்து எடுக்கக்கூடிய தன்மை இருப்பதாக சொல்லுகிறார்கள்.    ஆகவே மழைக்காலங்களில் பெருமளவு நீரைத் திட்டமிட்ட அடிப்படையில் தரைக்கீழ்நீர் மீள் நிரப்பியாக உட் செலுத்துவதற்கும் பயன்படுத்த முடியும் . இதன் மூலம் தரைக்கீழ் நீர்வளத்தை பெரிதும் அதிகரிக்க்கூடியதாக இருக்கும் .   இது மாத்திரமின்றி யாழ்ப்பாணத்தில் காணப்படும் பாசன முறைமைகளிலும் கவனம் செலுத்த வேண்டும்    மேற்படி விடயங்களை தவிர்த்து விட்டு இரணைமடுவில் தொங்கி கொண்டு இருக்க வேண்டியதில்லை    இது போதாதென்று இரணைமடுக்குளம் சராசரியாக 7ஆண்டுகளுக்கு ஒரு முறை வற்றுகிறது.    இரணைமடு தான் தீர்வென்றால் மேற்படி வரட்சியின்போது நீருக்கு யாழ்ப்பாணம் எங்கே போக முடியும்   யாழ்ப்பாண குடிநீரின் அளவு 50,000 கனமீற்றர்/நாள் என சொல்லப்படுகின்றது    இது எதிர்வரும் காலங்களில் எதிர்பார்க்கப்படும் சனத்தொகை வளர்ச்சிக்கேற்ப அதிகரிக்கக்கூடும்.   இந்நிலையில் நீண்டகாலத்திற்கான தேவையை நிறைவு செய்வதனையும் நிலைத்திருக்கக் கூடியதான நீர் முறைமை திட்டங்களை உருவாக்க வேண்டும்    நீர் தேவையை முகமூடியாக வைத்து கொண்டு NGO களுக்காக அரசியல் செய்ய வேண்டியதில்லை . ஒரு முகநூல் பதிவு: https://www.facebook.com/share/1B9T1RHr9B/
    • "தீர்ப்பு"     இந்தியப் பெருங்கடலின் நீலமான அலைகள் மற்றும் இலங்கையின் செழிப்பான பசுமைக்கு மத்தியில் அமைந்திருக்கும் அழகிய கடற்கரை நகரமான காலியில், பிரகாசமான கண்களை தன்னகத்தே கொண்ட லோசனி என்ற இளம் பெண்ணும் மற்றும் இரக்கமும் அழகுமுடைய அன்பழகன் என்ற வாலிபனும் ஆழமாக ஒருவரை ஒருவர் காதலித்து வாழ்ந்து வந்தனர். அவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ஆயினும், அவர்களின் காதல் குளிரான கடற்கரை காற்றில், நிலாவின் மங்கலான ஒளியில், பண்டைய காலி கோட்டையின் எதிரொலிக்கும் சுவர்களுக்குள் மலர்ந்தது.   லோசனி ஒரு சிங்கள பெண், அவளது சிரிப்பு பாறைக் கரையில் மோதும் அலைகளைப் போல இனிமையாக இருக்கும். அதில் சிலைத்து சிதைந்து விழுந்தவன் தான் தமிழ் வாலிபன் அன்பழகன். அவளது மழலை பேச்சும், வெண்ணிற வானில் கருநிற நிலவாய் எட்டு திசையும் அசைந்து கவரும் அவளது மையிட்ட கண்களும், பட்டம்பூச்சியின் சிறகுகள் போல கண்ணிமைகள் படபடத்து அவனை அழைக்க, அவனது நெஞ்சம் தன்னை அவளிடம் பறிகொடுத்தது ஒன்றும் புதுமை இல்லை. அமைதியான அவனின் இதயத்தில் இதமான தேவதையாக அவள் குடியேறினாள். பல மாதங்களாக, அவர்களின் காதல் இன எல்லைகளைத் தாண்டி, வளமாக வளர்ந்து வந்தது.   ஆனால், சூரியன் மேற்கில் மறைவது போல, நீண்ட நிழல்களை வீசுவது போல, அவர்களின் வாழ்க்கையின் மீது இருண்ட நிழலைப் போடும் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களுக்கிடையில் ஆழமான இன வெறியை கக்கும் பதட்டங்களைத் தூண்டியது. திடீரென்று, அவர்களின் காதல் கதை அரசியல் முரண்பாடு மற்றும் சமூக அமைதியின்மையின் சூறாவளியில் சிக்கியது.   உண்மையில் பக்க சார்பு அற்று தீர்வைத் தருவது - தீர்ப்பு! பொதுவாக ஒரு பிரச்சினை, சிக்கல் முதலியவற்றை தீர்க்கும் வகையில் அதனை ஆராய்ந்து - முடிவு காணும் வகையில் அமையும் நீதியான வழிமுறை - தீர்ப்பு!! என்றாலும் "யாழ்ப்பாண (தமிழ்) மக்களின் கருத்தைப் பற்றி நான் இப்போது கவலைப்படவில்லை. வடக்கில் எந்தளவுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதோ அந்தளவுக்கு சிங்கள மக்கள் இங்கு மகிழ்ச்சியடைவார்கள்... உண்மையில் நான் தமிழர்களை பட்டினி போட்டால் சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்" என்ற 1983 இலங்கை ஜனாதிபதி ஜெயவர்தனாவின் தீர்ப்பு அதற்கு முரணாக ஏற்கனவே எரியும் நிலக்கரியில், இரும்பு காலணிகள் கொண்டு வரப்பட்டு, அவற்றை இடுக்கிகளால் பிடித்து, சிவப்பு-சூடான காலணிகளை தமிழருக்கு முன்னால் வைக்கப்பட்டது போல அது மாறி விட்டது. உயர் வல்லமையான ஜனாதிபதியின் இந்த தீர்ப்பு இப்படி இருக்கும் பட்சத்தில், மற்ற அரச இயந்திரங்களின் செயல்கள், தீர்ப்புக்கள் எப்படி இருந்து இருக்கும் என்று நாம் சொல்லத் தேவையில்லை.   ஒரு காலத்தில் துடிப்பான நகரம் இப்போது ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல பிரிக்கப்பட்டுள்ளது. சிங்களக் கலாச்சாரத்தில் வேரூன்றிய லோசனியின் குடும்பம், அன்பழகனுடனான தங்கள் மகளின் உறவைப் பற்றி எச்சரிக்கையாக இருந்தார்கள். அன்பழகனின் குடும்பமும் அதே போல தங்கள் மகனின் பாதுகாப்புக்கு பயந்து, லோசனியிடமிருந்து தூர விலக்குமாறு வற்புறுத்தினார்கள். கொந்தளிப்புகளுக்கு மத்தியிலும், காதலர்கள் இருவரும் ஒருவரையொருவர் ஒட்டிக்கொண்டனர், எந்த குழப்பமும் தங்கள் காதலை வரையறுக்க விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.   "சுனைவாய்ச் சிறுநீரை யெய்தாதென் றெண்ணிப் பிணைமா னினிதுண்ண வேண்டிக் - கலைமாத்தன் கள்ளத்தி னூச்சுஞ் சுரமென்பர் காதல ருள்ளம் படர்ந்த நெறி. "   பாலை நிலத்தில் காதல் மிகுந்த ஆண் மானும்,பெண்மானும் ஓடிக்களைத்து தாகம் தீர்க்க நீர்வேண்டி, அங்குமிங்கும் அலைகின்றன. ஒரு சுனையில் ஒரு மான் அருந்துவதற்கு மட்டுமே சிறிதளவு நீர் உள்ளது. இந்நிலையில், பெண்மான் நீர் அருந்தட்டும் என்ற உயரிய நோக்கோடு ஆண்மான், தான் நீரைப்பருகுவது போல் பாவனை செய்தது. அதே போல் பெண்மானும் நீரைப் பருகாமல் ஆண் மான் அருந்தட்டும் என்று நீர் அருந்துவது போல் பாவனை செய்தது. சுனையின் நீர் தீரவே இல்லை. இப்படித்தான் அவர்களின் அன்பு இருந்தது. அங்கு நாம் மனிதர், நாம் இலங்கையர் என்ற ஒரு எண்ணமே ஓங்கி இருந்தது.   ஆனால் இனங்களுக்கு இடையான பிரிவுகள் ஆழமாக வளர, கஷ்டங்களும் அதிகரித்தன. நண்பர்கள் எதிரிகளாகவும், சந்தைகள் போர்க் களங்களாகவும் மாறத் தொடங்கின. இதனால் அவர்களின் காதல் கூட இலக்காக மாறியது. இந்த சுழலில் சிக்கிய, லோசனியும் அன்பழகனும் ஒருவருக்கொருவர் என்ன செய்வது என்று, ஆளுக்கு ஆள் ஆறுதல் வார்த்தைகளை கூறிக்கொண்டாலும், அது அவர்களின் கையில் இருந்து விலகுவதை உணராமலும் இருக்கவில்லை. எனினும் தங்கள் காதல் பிளவுகளைக் குறைக்கக்கூடிய ஒரு எதிர்காலத்தை அவர்கள் கனவு கண்டார்கள், அங்கே தங்கள் குழந்தைகள் ஒரு ஐக்கிய நாட்டில் வளரும் என்று நம்பினார்கள்.   எது என்னவாகியினும் ஒரு இனவாத அரசியல் தலைவரின் தலைமையில் பொய் வதந்திகளால் உந்தப்பட்டு, அதனால் கோபத்தாலும் தப்பெண்ணத்தாலும் ஒரு கும்பல் அன்பழகனின் குடும்பத்தாரின் வீட்டைத் தாக்கிய ஒரு மோசமான நிகழ்வு ஒருநாள் வந்தது. அவர்களின் வீட்டைச் சூழ்ந்த தீப்பிழம்புகள் அவர்களின் கனவுகளை எரித்த நெருப்பாகியது. அன்பழகன் தன் உயிருடன், ஆனால் எரிகாயங்களுடன் தப்பித்துக்கொண்டான், லோசனி உடைந்து போனாள், அன்பழகனின் மீதான காதலுக்கும் அவள் குடும்பத்தின் மீதான பொறுப்புக்கும் இடையே அவளது இதயம் துண்டு துண்டாக கிழிந்தது.   1956 ஆம் ஆண்டில் சாலமன் பண்டாரநாயக்கா சிங்கள மொழியை நாட்டின் ஒரே ஆட்சிமொழியாக, அரசின் தீர்ப்பாக கொண்டுவந்து ஆரம்பித்த அரசியல் நாடகம், இன்று பல அரசியல் தீர்ப்புக்களை கடந்தும், உண்மையான இலங்கை மக்களுக்கு முடிவு இன்றி , தீர்ப்பு இன்றி தொடர்ந்து கொண்டு இருக்கிறது. ஒரு காலத்தில் சிரிப்பால் எதிரொலித்த தெருக்கள் இப்போது வலி மற்றும் அநீதியின் அழுகையால் எதிரொலிக்கின்றன. பிரிவினைகள் மிகவும் ஆழமாக வளர்கின்றன, மிக அழகான பிணைப்புகள் கூட இன்று உடைகின்றன. அதில் லோசனி, அன்பழகனின் காதல் படகு, காகித படகாக மாறும் நிலைக்கு புறசூழல்கள் அதிகரிக்கக் தொடங்கின.   அழிவின் மத்தியில், லோசனியும் அன்பழகனும் ஒரு சந்தியில் எந்தப்பக்கம் போவது என்று தெரியாமல் தவித்தனர். ஒரு காலத்தில் அவர்களின் பலமாக இருந்த காதல் இப்போது ஒரு இனம் சார்ந்த மாயையில் அகப்படுவதை கண்டனர். கனத்த இதயத்துடன், தங்களைச் சுற்றியுள்ள உலகம் இன்று மிகவும் மாறிவிட்டது என்பதை உணர்ந்தார்கள், பல இனவாத உயர் தலைமைகளால் தீர்ப்பு வழங்கி, இன்று உடைந்த ஐக்கியத்தை, அவர்களின் அன்பால் மட்டுமே சரிசெய்ய முடியாது என்னும் உண்மையை அறிந்து, அவர்கள் பிரிந்து செல்வதற்கான வேதனையான முடிவை எடுத்தார்கள். அது அவர்களின் காதல் பலவீனமடைந்ததால் அல்ல, மாறாக வெறுப்பு மற்றும் தப்பெண்ணத்தின் சக்திகள் வலுவாக பல பல அரசியல் உயர் தலைவர்களின் தீர்ப்புக்களால் வளர்ந்ததால்! அவர்கள் ஒருவரையொருவர் கடைசியாகப் பார்த்தபோது, இன்றைய வெறுப்பு அரசியலின் மீது காதல் வெற்றி பெறும் எதிர்காலம் விரைவில் வரும் என இருவரும் கிசுகிசுத்தனர். லோசனியும் அன்பழகனும் தங்கள் காதலின் நினைவுகளையும், கடந்த கால பாடங்களையும் சுமந்து கொண்டு தங்கள் வாழ்க்கையை காலியிலும் யாழ்ப்பாணத்திலும் இன்று நகர்த்திக் கொண்டு இருக்கின்றனர்.   தீர்ப்பின் நிழல்கள் அவர்களின் வாழ்க்கையில் ஒரு நீண்ட மற்றும் இருண்ட காலத்தை ஏற்படுத்தியது, ஆனால் அவர்கள் துன்பங்களை எதிர்கொள்வதில் அன்பின் சக்திக்கு ஒரு சான்றாக இருந்தனர். காலப்போக்கில், ஒரு புதிய தலைமுறை தோன்றும், தங்கள் தேசத்தின் கதையை மீண்டும் எழுதும், பிளவுகளை சரிசெய்யும் , கடந்த காலத்தின் கடுமையான தீர்ப்புகளால் காதல் இனி ஒருபோதும் கெட்டுவிடாது என்பதை உறுதிப்படுத்தும் என்பதில் இருவரும் இன்னும் மனம் தளரவில்லை, உறுதியாக இருக்கின்றனர்.   "நம்பினார் கெடுவதில்லை, நான்கு மறை தீர்ப்பு"   இதில்தான் - லோசனியும் அன்பழகனும் தெற்கிலும் வடக்கிலும் இப்பொழுது இருந்தாலும் - இன்னும் உறுதியாக இருக்கிறார்கள். எவனொருவன், ஒன்றில் வெற்றி பெற்றே தீருவேன் என, நம்பிக்கையுடன் செயல்படுகிறானோ அவனது கழுத்தில், வெற்றி மாலை விழுந்தே தீரும். அதனால் அதற்கான சாதாரண மக்கள் மட்டத்தில் அதற்கான ஆரம்ப வேலைகளை தொடங்கிவிட்டார்கள்.   சொல்லின் நடை தெரிந்து ஒருவர் சொல்லவேண்டும் என்று திருக்குறள் தனது பாடல் 712 இல் ஒரு தீர்ப்பு கூறுகிறது   "இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின் நடைதெரிந்த நன்மை யவர்"   சொற்களின் வழிமுறையறிந்த நல்லறிவாளர்கள் அவையின் நேரத்தையும், நிலைமையையும் உணர்ந்து உரையாற்ற வேண்டும் என்று வள்ளுவர் தீர்ப்பு கூறுகிறார். ஆனால், அவையை பொறுப்படுத்தாமல், கூறிய ஜனாதிபதியின் கூற்றுதான் கொந்தளிப்புக்கும் வன்முறைக்கும் முக்கிய காரணம் ஆயிற்று!   வள்ளுவரின் தீர்ப்பை உணர்ந்து இருந்தால் இன்று இலங்கை ஒரு சிங்கப்பூர்! லோசனி- அன்பழகன் ஒரு குடும்பம்!!   நன்றி   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "சிந்தை சிதறுதடி"     "சிந்தை சிதறுதடி மயானம் அழைக்குதடி உந்தன் காலடி வணங்கத் துடிக்குதடி! நிந்தை பேசா உன்னையும் கெடுத்தானே விந்தை உலகமடா கொடியவன் பூமியடா கந்தைத் துணியுடன் வீசிச் சென்றானே!"   "தீந்தை விழியால் என்னை மயக்கியவள் சாந்தை பூசி பெட்டிக்குள் போறாளே! வேந்தையும் ஏழையும் ஒன்றே என்றவள் சுந்தரத் தமிழில் கொஞ்சிக் குலாவியவள் சந்திர ஒளியில் தீபமாய் ஒளிர்கிறாளே!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • "நெஞ்சம் பாடும்  வீரவணக்கம்" "நெஞ்சம் பாடும்  வீரவணக்கம் இன்றோ  வஞ்சம் செய்து மாண்டவர்கள் இவர்களோ கொஞ்சும் மழலையின் தலையும் சிதறியது  கெஞ்சும் மங்கையின் கற்பும் பறந்தது தஞ்சம் புகுந்த அப்பாவிகள் எங்கேயோ?" "மஞ்சம் தேடிய போராட்டம் இதுவல்ல   குஞ்சும் குழந்தைகளின் எதிர்காலம் நோக்கி  விஞ்சும் அடக்குமுறையைத் தட்டிக் கேட்க மிஞ்சும் அநீதி கண்டு கொதித்தெழுந்த  நெஞ்சு நிமிர்த்திய தியாகிகள் தெய்வங்களே!"                  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.