Jump to content

பிரச்சினையை கிளப்பிய தீபிகா படுகோனின் பிகினி உடை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சினையை கிளப்பிய தீபிகா படுகோனின் பிகினி உடை!

JegadeeshDec 14, 2022 18:28PM
WhatsApp-Image-2022-12-14-at-18.19.35-1.

பதான் படத்தில் நடிகை தீபிகா படுகோன் இடம்பெற்ற பாடலுக்கு மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படத்தில் தீபிகா படுகோன் நடித்த பேஷ்ரம் ரங் என்ற பாடல் டிசம்பர் 12 ஆம் தேதி வெளியானது.

இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இந்த நிலையில் மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ராவும் நடிகை தீபிகா படுகோனின் பதான் படத்தின் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் இன்று (டிசம்பர் 14 )பேசிய அவர், பாடலில் காணப்பட்ட பிகினி உடை மிகவும் ஆட்சேபனைக்குரியது. மேலும் இந்த பாடல் அசுத்தமான மனநிலையில் படமாக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. 

Deepika Padukone in Bikini MP Minister condemned

காட்சிகள் மற்றும் அவரது உடைகளை சரிசெய்ய வேண்டும். இல்லையெனில் இந்த படத்தை மத்திய பிரதேசத்தில் அனுமதிக்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து பரிசீலிக்கப்பட வேண்டிய சூழல் ஏற்படும் என்று கூறியுள்ளார்.

மேலும், இந்து மகா சபை தலைவர் சக்ரபாணி மகராஜ் இந்த படத்திற்கு தடை விதிக்கிறோம் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “ஷாருக்கானின் பதான் படத்தில் காவி மற்றும் இந்து சமஸ்கிருத அவமதிப்பு உள்ளது. திரைப்பட தணிக்கை வாரியம் ஏன் தூங்குகிறது? தடை விதிக்கிறோம்! இந்து மகாசபா எதிர்க்கும்” என்று கூறியுள்ளார்.

 

 

https://minnambalam.com/cinema/deepika-padukone-in-bikini-mp-minister-condemned/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிகினி உடை என்றால்.... சின்ன துண்டாகத்தானே இருக்கும். 😜
பிகினி உடையை.... சீலை மாதிரி, ஆறு  முழத்தில் கட்டி குளிக்கக் சொல்கிறார்களா? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

பிகினி உடை என்றால்.... சின்ன துண்டாகத்தானே இருக்கும். 😜
பிகினி உடையை.... சீலை மாதிரி, ஆறு  முழத்தில் கட்டி குளிக்கக் சொல்கிறார்களா? 🤣

Bild

ஆள் சரியான வருத்தக்காரி. அப்பிடியிருந்தும் காலை தூக்கி இப்பிடி வைச்சிருக்காவு.....😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

Bild

ஆள் சரியான வருத்தக்காரி. அப்பிடியிருந்தும் காலை தூக்கி இப்பிடி வைச்சிருக்காவு.....😍

குமாரசாமி அண்ணே,  அவவுக்கு... கால்லை வருத்தம் இல்லாட்டி,
காலை எப்பிடி வேணும்  எண்டாலும் தூக்கலாம் தானே... 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/12/2022 at 06:45, தமிழ் சிறி said:

பிகினி உடை என்றால்.... சின்ன துண்டாகத்தானே இருக்கும். 😜
பிகினி உடையை.... சீலை மாதிரி, ஆறு  முழத்தில் கட்டி குளிக்கக் சொல்கிறார்களா? 🤣

அவ பிகினி உடை போட்டது அவர்களுக்கு பிரச்சனை இல்லை ..அது காவி கலரில் இருப்பது தான் பிரச்சனை ..அது அவர்களுடைய கட்சியின் கலராம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

அவ பிகினி உடை போட்டது அவர்களுக்கு பிரச்சனை இல்லை ..அது காவி கலரில் இருப்பது தான் பிரச்சனை ..அது அவர்களுடைய கட்சியின் கலராம் 

ச்சாய்... இதிலையும், நிறம் பார்த்துத்தான் பிரச்சினையை கிளப்புகிறார்கள்.
காவி நிறத்தை... இவர்கள் குத்தகைக்கு எடுத்த மாதிரி நினைப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்திப்படத்துல இதெல்லாம் சகஜம் தானே

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.