Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

செயற்கை கருப்பை மூலம் 'ஆண்டுக்கு 30,000 குழந்தைகள் சாத்தியம்'

என்று சொல்லும் நிறுவனம்!

914789.jpg

பெர்லின்: 'பெண்களின் கருவறை போலவே செயற்கையாக உருவாக்கப்படும் கருப்பை வசதி மூலம் வருடத்திற்கு 30,000 குழந்தைகள் வரை பிறக்கவைக்க முடியும்' என்று எக்டோ லைப் (EctoLife) என்ற தனியார் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இதுதான் உலகில் செயற்கையாக உருவாக்கப்பட்ட முதல் கருவறை நிறுவனம் என்றும் கூறப்படுகிறது.

எக்டோலைப் (Ecto Life) நிறுவனம் பெர்லினை தலைமையகமாகக் கொண்ட உயிரி தொழில்நுட்பவியல் நிறுவனம். இந்த நிறுவனம்தான் உலகின் முதல் செயற்கை கருப்பை முறையில் குழந்தையை உருவாக்கும் முறையை அறிமுகப்படுத்துகிறது.

பெண்களின் கருப்பை போலவே செயற்கையாக உருவாக்கப்படும் கருப்பை பெட்டிகள் மூலம் வருடத்திற்கு 30,000 குழந்தைகளை உருவாக்க முடியும் என்று இந்த நிறுவனம் கூறுகிறது. இதில் உள்ள ஒவ்வொரு செயற்கை கருப்பை பெட்டிகளும் குழந்தையின் இதயத் துடிப்பு, வெப்பநிலை, ரத்த அழுத்தம், சுவாசம் உள்ளிட்ட முக்கிய உயிர்காக்கும் அம்சங்களை கண்காணிக்கும் சென்சார்களை கொண்டுள்ளன. இது தொடர்பான வீடியோவையும் எக்டோலைப் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து கொண்டிருக்கும் ஜப்பான், பல்கேரியா மற்றும் தென் கொரியா நாடுகளுக்கு இது பெரிதும் உதவும் என்றும், புற்றுநோய் மற்றும் பிற உடல் சிக்கல்களால் கருப்பையை இழக்கும் பெண்களுக்கு செயற்கை முறையில் குழந்தை உருவாக்கும் முறை ஒரு தீர்வாக அமையும் என்றும் எக்டோ லைப் தெரிவிக்கிறது.

வாடகைத் தாய், செயற்கை கருவூட்டல் தற்போது வியாபார மயமாகியுள்ள சூழலில் எக்டோ லைப்பின் இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இது எதிர்காலத்தில் நிச்சயம் சாத்தியமாகும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

தமிழ் இந்து

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நானும் எனது சந்ததிகளும் ஓரளவிற்கு இயற்கையோடு ஒட்டி வாழ்ந்து விட்டோம். எதிர்கால சந்ததியை நினைக்கும் போதுதான் கவலையாக உள்ளது.
இணைப்பிற்கு நன்றி ராசவன்னியர் .

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்னும் விரிவான அம்சங்களுடன் இக்காணொளி..

என்னப்பா இது சமையல் மெனு மாதிரி குழந்தைகளை நம் விருப்பபடி தயாரித்து பெற முடியுமாமே..?

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கென்னமோ எதிர்கால மனிதர்களின் சந்ததி உருவாக்கும் திறன் இல்லாமல் போகப்போகுது போலப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெண்ணின் கருப்பைக்கு மாற்றாக செயற்கை கருப்பை கருவி; விஞ்ஞானிகள் சொல்வது என்ன? | Artificial Womb

பெண்களுக்கு பதில், ஒரு சிறிய கருவி கருவுற்று குழந்தையைப் பெற்றெடுத்தால் எப்படி இருக்கும்? என்ன... அறிவியல் புனைகதையைப் போல் இருக்கிறதா? உலகெங்கிலும் ஆய்வுக்கூடங்களில், மனித கருப்பையை ஒத்திருக்கும், அதைப் போலவே செயல்படும் கருவிகளை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டிருக்கிறார்கள்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.