Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, ஏராளன் said:

தினேஷ் ஷாஃப்டரின் தாயாரின் மரபணு கோரப்பட்டுள்ளது

தினேஷ் ஷரஃப்டரின் உடலம் தொடர்பான விசாரணைகளுக்கு அவரது தாயாரின் மரபணு (DNA) கோரப்பட்டுள்ளது.

 

அவரது தாயாரின் மரபணுவுக்கும், அவரது மரணத்துக்கும் இடையிலான சம்பந்தம் என்னவென்று யாராவது விளக்க முடியுமா?

இப்படியே போனால் என்னென்ன கோரிக்கைகளை எல்லாம் இந்த வைத்தியர்களும் , போலீசாரும் கேட்கப்போகிறார்களோ தெரியவில்லை.

அந்த குடும்பத்துக்கு நெருக்கடி கொடுத்து தங்களது முடிவை ஏற்றுக்கொள்ள வைப்பதுதான் அவர்களது நோக்கம். இதுதான் இங்குள்ள தமிழனின் நிலைமை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, Cruso said:

அவரது தாயாரின் மரபணுவுக்கும், அவரது மரணத்துக்கும் இடையிலான சம்பந்தம் என்னவென்று யாராவது விளக்க முடியுமா?

எப்படி சிரிக்காமல், இலங்கையின் நீதித்துறையை வியக்காமல், சர்வசாதாரணமாக இந்தக்கேள்வியை உங்களால் கேட்க முடிந்தது? அதாவது இவரது சடலம் கைகள் கட்டப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது, தினேஷின் தாயாரின் மரபணுவை சோதித்து, தினேஷ் அவரின் பிள்ளைதானா என உறுதிப்படுத்தப்போகிறார்கள் என நினைக்கிறன். அவர் எப்படி இறந்தார் என்று ஏற்கெனவே உறுதிப்படுத்தி விட்டார்கள். யாரால்? ஏன்? என்பது கண்டுபிடிக்க முடியவில்லை, ஆகவே தினேஷ் அந்த தாயின் மகன் தான் என்று உறுதிப்படுத்த, இவ்வளவு காலம், ஆலாபனை. இப்படித்தான் விசாரணை திருப்பப்படுகிறது பொலிஸாருக்கு பாராட்டு வழங்க! இந்தக்கேள்வியை நீங்கள் மட்டுந்தான் கேட்டிருக்கிறீர்கள், நீதிபதிகூட கேட்கவில்லை, தலையை ஆட்டிவிட்டார். தமிழன் இறந்தாலும், மண்ணுக்குள்ளும் நிம்மதியாக உறங்க முடியாது. கிளறி எடுத்து நிஞாயம் கேடபார்கள். நீ யார், எப்படிப்பிறந்தாய், ஏன் பிறந்தாயென? இதுதான் இந்த நாட்டின் சட்டம், தமிழனின் விதி!                                   . 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, satan said:

எப்படி சிரிக்காமல், இலங்கையின் நீதித்துறையை வியக்காமல், சர்வசாதாரணமாக இந்தக்கேள்வியை உங்களால் கேட்க முடிந்தது? அதாவது இவரது சடலம் கைகள் கட்டப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது, தினேஷின் தாயாரின் மரபணுவை சோதித்து, தினேஷ் அவரின் பிள்ளைதானா என உறுதிப்படுத்தப்போகிறார்கள் என நினைக்கிறன். அவர் எப்படி இறந்தார் என்று ஏற்கெனவே உறுதிப்படுத்தி விட்டார்கள். யாரால்? ஏன்? என்பது கண்டுபிடிக்க முடியவில்லை, ஆகவே தினேஷ் அந்த தாயின் மகன் தான் என்று உறுதிப்படுத்த, இவ்வளவு காலம், ஆலாபனை. இப்படித்தான் விசாரணை திருப்பப்படுகிறது பொலிஸாருக்கு பாராட்டு வழங்க! இந்தக்கேள்வியை நீங்கள் மட்டுந்தான் கேட்டிருக்கிறீர்கள், நீதிபதிகூட கேட்கவில்லை, தலையை ஆட்டிவிட்டார். தமிழன் இறந்தாலும், மண்ணுக்குள்ளும் நிம்மதியாக உறங்க முடியாது. கிளறி எடுத்து நிஞாயம் கேடபார்கள். நீ யார், எப்படிப்பிறந்தாய், ஏன் பிறந்தாயென? இதுதான் இந்த நாட்டின் சட்டம், தமிழனின் விதி!                                   . 

இன்னுமொரு சந்தேகம். இவரது மகனா என்பதட்கு தந்தையின் மரபணுவைதானே சோதிக்க வேண்டும். இரண்டுக்கும் மேட்படட பெண்கள் ஒரு பிள்ளையை உரிமை கோரும்போதுதான் தாயின் மரபணுவை சோதிக்க வேண்டும். இங்கு நிலைமை அப்படி இல்லையே. புத்தம் சரணம் கச்சாமி.
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையில் சட்டம் அப்படித்தான்! கேள்வியெல்லாம் கேக்கப்டாது. பாதிரியார் ஜிம் பிறவுண் காணாமல் ஆக்கப்பட்டபோதும், பல போராட்டங்களின் பின் ஒரு சடலம் கடலில் கல்லோடு கட்டப்பட நிலையில் கண்டெடுக்கப்பட்டது, அப்போ அந்தச்சடலம் பாதிரியாருடையதுதானா என்று உறுதிப்படுத்துவதற்காக  அவரின் தாயாரை கொழுப்புக்கு அழைத்து பரிசோதனை செய்ததாக அறிந்தேன். அதாவது இழப்பில் வாடுவோரை, இழுத்து அலைக்கழித்து தங்களது திறமையின்மையை கொடூரங்களை மறைப்பதற்காக.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உள்வீட்டு அலுவல் எண்டு முடிக்கச் சொல்லி வந்திருக்கோ தெரியவில்லை ..
அது தான் உள்வீட்டு ஆக்களின்ர DNA எடுத்து , பின் பொருத்தி , பின் முடித்து விடலாம் .. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தினேஷ் ஷாப்டரின் சடலம் மீதான முதற்கட்ட பரிசோதனை நிறைவு!

தினேஷ் ஷாப்டரின் சடலம் மீதான முதற்கட்ட பரிசோதனை நிறைவு!

மர்மமான முறையில் உயிரிழந்த பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் சடலம் மீதான முதற்கட்ட பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ரொஹான் டி.ருவன்புர தெரிவித்துள்ளார்.

மர்மமான முறையில் உயிரிழந்த பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் உடல் கடந்தவாரம், நீதிமன்ற உத்தரவின்பேரில் தோண்டியெடுக்கப்பட்ட நிலையில், சடலம் மீது தடயவியல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், முதற்கட்ட பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளதாகவும் சடலம் தொடர்பான மேலதிக பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ரொஹான் டி.ருவன்புர தெரிவித்துள்ளார்.

பிரேத பரிசோதனை குறித்த முழுமையான அறிக்கையை வெளியிடுவதற்கு இன்னும் 2 மாதங்கள் செல்லும் எனவும் இந்த அறிக்கை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் உயிரிழப்பு தொடர்பாக தடயவியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய விசேட சட்ட மருத்துவ அதிகாரிகளால், நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய ஷாப்டரின் சடலம் கடந்த 25 ஆம் திகதி தோண்டி எடுக்கப்பட்டது.

பொரளை பொது மயானத்தில் தனது காரில் கை கட்டப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி தினேஷ் ஷாப்டர் மீட்கப்பட்டார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட தினேஷ் ஷாப்டர் அன்றைய தினம் இரவு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1333020

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, தமிழ் சிறி said:

பொரளை பொது மயானத்தில் தனது காரில் கை கட்டப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி தினேஷ் ஷாப்டர் மீட்கப்பட்டார்.

மரபணுப்பரிசோதனையில் வேறு விதமாக இறந்தார், யார் செய்தார், என்று காட்டுமோ? அவரே அன்ரனா வயரை கொண்டு தன்னைத்தானே இறுக்கி தற்கொலை செய்தார் என்று கண்டுபிடித்தார்கள். இனி நடத்தப்படும் சோதனை யாரை குறிவைத்தோ?

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் சிம் அட்டையை வழங்க முடியாது – நீதிமன்றம் அறிவிப்பு

Dinesh.jpg
தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், அவர் பயன்படுத்திய தொலைபேசி இலக்கம் அடங்கிய சிம் அட்டையை அவரது மனைவியிடம் வழங்குவதற்கு உத்தரவிட முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தினேஷ் ஷாப்டர் பயன்படுத்திய தொலைபேசி இலக்கம் அடங்கிய சிம் அட்டையை தமக்கு வழங்க உத்தரவிடுமாறு அவரது மனைவி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.

குறித்தக் கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய இந்த உத்தரவை பிறப்பித்தார்.

அத்துடன், தினேஷ் ஷாப்டர் பயன்படுத்திய கையடக்க தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புடைய சிம் அட்டையை அவரது மனைவியிடம் வழங்க முடியுமா என்பது தொடர்பில் அடுத்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்திற்கு அறியப்படுத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணை நாளை மறுதினம் வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 8 ஆம் திகதி தினேஷ் ஷாப்டரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டதுடன் இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக சடலம் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/258221

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மருத்துவ நிபுணர் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் மரணம் குறித்த காரணம் வெளியாகும்

Dinesh.jpg

தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள மருத்துவ நிபுணர் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் மரணத்திற்கான காரணங்கள் தொடர்பான முடிவை அறிவிக்கவுள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய இன்று (08) திறந்த நீதிமன்றத்தில் அறிவித்தார்

குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான் இதனைத் தெரிவித்தார்.

மீண்டுமொரு சுற்று கலந்துரையாடலை நடத்துவது அவசியம் என சம்பந்தப்பட்ட மருத்துவ நிபுணர் குழு தமக்கு அறிவித்துள்ளதாகவும் நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, விசாரணை தொடர்பான மரபணு அறிக்கை எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்தார். இதன்படி, அறிக்கையை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதவான் அறிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

https://thinakkural.lk/article/267428

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தினேஷ் ஷாப்டர் மரணம் : நீதவான் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கிய உத்தரவு!

Dinesh-Shafter.jpg

அரசாங்க இராசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் அணிந்திருந்த ஆடைகளை மீட்டு அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய வைத்திய நிபுணர் குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய முன்னிலையில், குறித்த வழக்கு நேற்று அழைக்கப்பட்டது.

இதன்போது, அங்கு முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அத்துடன் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் வர்த்தகர் இறந்த இடத்திலும்  அவரது வாகனத்திலிருந்து மீட்கப்பட்ட பொருட்களை விசாரணைக்காக ஐவரடங்கிய வைத்திய நிபுணர் குழுவிடம் ஒப்படைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்தநிலையில், குறித்த வழக்கு மீதான விசாரணை அடுத்த மாதம் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

https://thinakkural.lk/article/269814

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தினேஷ் ஷாஃப்டர் வழக்கு: தோண்டியெடுக்கப்பட்ட உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு

தோண்டியெடுக்கப்பட்ட மறைந்த வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) உத்தரவிடப்பட்டுள்ளது.

மரணம் தொடர்பான பிரேதப் பரிசோதனை முடிவடைந்ததன் அடிப்படையில் கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மறைந்த வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் பூதவுடல், மரணம் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய விசேட தடயவியல் நிபுணர் குழுவின் கோரிக்கையின் அடிப்படையில் மே மாதம் பொரளை பொது மயானத்தில் தோண்டி எடுக்கப்பட்டது.

மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்த ஷாஃப்டரின் சடலத்தை தோண்டி எடுக்க வேண்டியது அவசியம் என குழு, கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரியவிடம் முன்னைய விசாரணையின் போது தெரிவித்திருந்த நிலையில், சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

52 வயதான தினேஷ் ஷாஃப்டர் 2022 டிசம்பர் 15 ஆம் திகதி பொரளை மயானத்தில் தனது காரின் சாரதி ஆசனத்தில் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மறுநாள் உயிரிழந்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவு ஷாஃப்டரின் மரணம் தொடர்பாக பொரளை பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

https://thinakkural.lk/article/274477

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தினேஷ் ஷாப்டரின் உடலை தகனம் செய்ய அனுமதிக்குமாறு கோரிக்கை !

10 OCT, 2023 | 11:23 AM
image
 

உயிரிழந்த தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் உடலை தகனம் செய்ய அனுமதிக்குமாறு அவரது  குடும்பத்தினர் நேற்று திங்கட்கிழமை (09) நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதனையடுத்து கொழும்பு மேலதிக நீதிவான் ராஜீந்திர ஜயசூரிய இந்தக் கோரிக்கையை பரிசீலித்தார்.

இந்நிலையில்,  தினேஷ் ஷாப்டரின் உடலை தகனம் செய்ய முடியுமா என்பதை நீதிமன்றத்துக்கு தெரிவிக்குமாறு, தினேஷ் ஷாப்டரின்  மரணத்துக்கான காரணத்தை கண்டறியும் பேராசிரியை அசேல மெண்டிஸ் தலைமையிலான ஐவர் அடங்கிய நிபுணர் குழுவுக்கு  நீதிவான் உத்தரவிட்டார் 

இந்தச்  சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று (09) விசாரணைக்கு வந்தபோது    உயிரிழந்த தினேஷ் ஷாப்டரின் குடும்பத்தின்  சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, உண்மைகளை முன்வைத்து, இறந்தவரின் உடலை தகனம் செய்வதே தனது  தரப்பினரின்  விருப்பமாக உள்ளதாகவும்  அதற்காக  நீதிமன்றத்தின் அனுமதியையும் கோரினார்.

https://www.virakesari.lk/article/166529

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தினேஷ் ஷாப்டரின் உடலை அடக்கம் செய்ய நீதிமன்றம் அனுமதி

விசாரணைகளின் போது தோண்டியெடுக்கப்பட்ட வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலத்தை அடக்கம் செய்ய அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (16) அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, கொழும்பு ஜாவத்தை மயானத்தில் அவரது சடலத்தை அடக்கம் செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.

தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய நிபுணர் மருத்துவக் குழு தகனம் செய்வது பொருத்தமற்றது என முன்வைத்த பரிந்துரைகளை ஆராய்ந்த மாஜிஸ்திரேட் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.

https://thinakkural.lk/article/277180

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தினேஷ் ஷாப்டரின் பிரேதப் பரிசோதனையின் முடிவுகள் அறிவிப்பு!

தினேஷ் ஷாப்டரின் பிரேதப் பரிசோதனையின் முடிவுகள் அறிவிப்பு!

பிரபல வர்த்தகர் தினேஷ் ஷப்டரின் மரணத்திற்கான காரணம் நாளை (புதன்கிழமை) அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்காக ஐவரடங்கிய நிபுணர் குமு நியமிக்கப்பட்டிருந்து.

இந்நிலையில் அந்த குழுவின் இறுதி அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்பட்ட போதே கொழும்பு மேலதிக நீதவான் இதனைத் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1356460

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தினேஷ் ஷாஃப்டரின் மரணம் ஒரு கொலை : நீதிமன்று அறிவிப்பு.

வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் கழுத்து மற்றும் முகத்தில் விடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே ஏற்பட்டதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இதன்படி, இந்தச் சம்பவத்தின் மூலம் குற்றச் செயல் இடம்பெற்றுள்ளதாகத் தீர்ப்பளித்த நீதவான், சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டுள்ளது.

மரண விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் மற்றும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய நிபுணர் குழுவின் அறிக்கைகளை பரிசீலித்த நீதவான் இதனை அறிவித்தார்.

கழுத்து மற்றும் முகத்தில் கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே அவரது மரணம் பதிவாகியுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினேஷ் ஷாஃப்டரின் மரணம் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட 5 பேர் கொண்ட நிபுணர் குழு குறித்த அறிக்கையை நீதிமன்றில் சமர்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1356661

@goshan_che, @satan

  • கருத்துக்கள உறவுகள்
Posted
35 minutes ago, தமிழ் சிறி said:

தினேஷ் ஷாஃப்டரின் மரணம் ஒரு கொலை : நீதிமன்று அறிவிப்பு.

வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் கழுத்து மற்றும் முகத்தில் விடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே ஏற்பட்டதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இதன்படி, இந்தச் சம்பவத்தின் மூலம் குற்றச் செயல் இடம்பெற்றுள்ளதாகத் தீர்ப்பளித்த நீதவான், சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டுள்ளது.

மரண விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் மற்றும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய நிபுணர் குழுவின் அறிக்கைகளை பரிசீலித்த நீதவான் இதனை அறிவித்தார்.

கழுத்து மற்றும் முகத்தில் கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே அவரது மரணம் பதிவாகியுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினேஷ் ஷாஃப்டரின் மரணம் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட 5 பேர் கொண்ட நிபுணர் குழு குறித்த அறிக்கையை நீதிமன்றில் சமர்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1356661

@goshan_che, @satan

ஒருவழியாக மரண விசாரண கொலை என தீர்ப்பாகியுள்ளது.

இனி கொலைகாரை ஈசியா பிடிச்சிடும் பொலிஸ்🤣.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

ஒருவழியாக மரண விசாரண கொலை என தீர்ப்பாகியுள்ளது.

இனி கொலைகாரை ஈசியா பிடிச்சிடும் பொலிஸ்🤣.

ஆசை... தோசை... அப்பளம்... வடை. 😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:

தினேஷ் ஷாஃப்டரின் மரணம் ஒரு கொலை : நீதிமன்று அறிவிப்பு.

ஏஏஏஏஏ

ஓரு மாதிரி நீதி கிடைத்து விட்டது

நீதி கிடைத்து விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
59 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏஏஏஏஏ

ஓரு மாதிரி நீதி கிடைத்து விட்டது

நீதி கிடைத்து விட்டது.

அதுகும்... தமிழ் கோடீஸ்வரரின் கொலைக்கு கிடைத்த நீதி.
இப்ப யார், கொலையாளி என்பதையும் கண்டு பிடிக்க வேண்டும்.
அது... பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவராக இருந்தால்...
நீதி தேவதை... மீண்டும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விடுவார். 

ஆக மொத்தத்தில், இப்ப பாதிக் கிணறுதான் தாண்டியுள்ளார்கள்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, ஈழப்பிரியன் said:

ஏஏஏஏஏ

ஓரு மாதிரி நீதி கிடைத்து விட்டது

நீதி கிடைத்து விட்டது.

குறைந்தது கொலையா, தாட்கொலையா என்பதாயாவது கண்டு பிடித்து உண்மையை தெரிவித்து விடடார்கள். அப்படி என்றால் சயனைட் உட்க்கொண்டுள்ளார் என கூறிய வைத்தியரின் அறிக்கைக்கும், அவருக்கும் என்ன நடக்கும். இப்படியான ஊழல் வாதிகளான வைத்தியர்களுக்கு (?) முதலில் சயனைட் கொடுக்க வேண்டும். அனால். இலங்கையில்தான் தண்டனை என்பதே வழங்குவதில்லையே.

இனியாவது சாட்டு போக்கு சொல்லாமல் அரசாங்கம் உண்மையான கொளியாலையை கண்டு பிடிக்க வேண்டும். என்னை பொறுத்த வரைக்கும், இவர்களுக்கு யார் கொலையாளி என்று தெரியும். அவர் ஒரு முக்கியமான பணம் படைத்த நபராக இருக்க வேண்டும். அதனால்தான் பல்வேறு புலுடா கதைகளை விட்டு கொண்டு இவ்வளவு நாளும் இழுத்தடித்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Unthgr.png?resize=750,375&ssl=1

தினேஷ் ஷாப்டரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு.

சுமார் 06 மாதங்களாக பொலிஸ் பாதுகாப்பில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம் இன்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பின் பிரகாரம் குறித்த சடலம் கையளிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தின் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பொரளை பொது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த ஷாப்டரின் சடலம் கடந்த மே மாதம் 25 ஆம் திகதி நீதிமன்ற உத்தரவின் பேரில் ஐந்து நிபுணர்கள் அடங்கிய சட்ட வைத்திய அதிகாரிகள் குழு முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.

பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி நிபுணர் தடயவியல் மருந்து வாரியம் முன்பாக மீண்டும் சடலம் தொடர்பான பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது.

வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் கழுத்து மற்றும் முகத்தில் அழுத்தமேற்பட்டதன் காரணமாக மரணித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதன்படி, இந்தச் சம்பவத்தின் மூலம் குற்றச் செயல் இடம்பெற்றுள்ளதாகத் தீர்ப்பளித்த நீதவான் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளரிடம் உத்தரவிட்டுள்ளார்.

அதன் பின்னர், தினேஷ் ஷப்டரின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம் இன்று அவரது உறவினர்களிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1357201

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நவம்பர் முதலாம் திகதி கௌரவத்திற்குரிய நீதிபதி தினேஸ்சாப்டரின் மரணவிசாரணை குறித்து இடம்பெற்ற நீதிமன்ற நடவடிக்கைகளில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தீர்ப்பளித்தார்.

நீண்டகால வலிமிகுந்த காத்திருப்பு முடிவிற்கு வந்தமை குறித்து தினேசின் குடும்பத்தவர்களாகிய நாங்கள் நிம்மதியடைகின்றோம்.அந்த விசாரணைகளில் இறுதியாக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது.

கடந்த பல மாதங்களாக தினேஸ் சாப்டர் தற்கொலை செய்துகொண்டார் என்ற பிழையான கதையாடல்களால் இழைக்கப்பட்ட அநீதியை தவிர்ப்பதற்கு நாங்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டோம்.

 

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தினேஷ் ஷாப்டரின் தொலைபேசி சிம் அட்டையை மனைவியிடம் ஒப்படைப்பது தொடர்பில் நீதிவானின் தீர்மானம்!

Published By: DIGITAL DESK 3   23 JAN, 2024 | 10:30 AM

image

கொலை செய்யப்பட்ட வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கையடக்க தொலைபேசியின்  சிம் அட்டையை அவரது மனைவியிடம் ஒப்படைப்பது தொடர்பான கோரிக்கை அரசாங்க இராசாயன பகுப்பாய்வு  பிரிவினரின் அறிக்கை கிடைத்த பின்னர் பரிசீலிக்கப்படும் என கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷண கெக்குணுவெல தெரிவித்துள்ளார்.

தனது கணவர் கொல்லப்படுவதற்கு முன்னர் பயன்படுத்திய தொலைபேசி இலக்கத்தைக் காட்டும் புதிய சிம்கார்டைப் பெற்றுக் கொள்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு தினேஷ் ஷாப்டரின் மனைவி விடுத்த கோரிக்கை தொடர்பிலேயே நீதிவான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 தினேஷ் ஷாஃப்டரின் கொலை தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும் எனவே, அவரது மனைவிக்கு புதிய சிம் கார்டை வழங்கும் கோரிக்கையை நிராகரிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கையை  பரிசீலித்தபோதே நீதிவான் இந்த அறிவிப்பை விடுத்தார்.

https://www.virakesari.lk/article/174582

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தினேஷ் ஷாப்டரின் கையடக்கத் தொலைபேசி, கணினி தரவுகள் தொடர்பான அறிக்கையைக் கோரும் நீதிமன்றம்!

20 MAR, 2024 | 02:15 PM
image

கொலை செய்யப்பட்ட வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கையடக்கத் தொலைபேசி மற்றும் கணினி தரவுகள் தொடர்பான நிபுணர் அறிக்கையை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெக்குனுவெல இன்று (20) அரசாங்க பகுப்பாய்வாளருக்கு  நினைவூட்டல் கடிதம் ஒன்றை  அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்.

உயிரிழந்தவர் பயன்படுத்திய இலத்திரனியல் சாதனங்கள் தொடர்பில்  அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை என முன்வைக்கப்பட்ட கருத்துக்களைப் பரிசீலித்த நீதிவான், இது தொடர்பான நினைவூட்டல் கடிதத்தை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை இது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக அறிக்கையை சமர்ப்பித்ததுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் காண மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/179225

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தினேஷ் சாப்டர் வழக்கின் அடுத்த நகர்வு

பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் சாஃப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை, 2024 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கின் விசாரணை இன்று காலை கொழும்பு மேலதிக நீதவான் ஹர்சன கெகுனாவெல முன்னிலையில் இடம்பெற்றது

இதன்போது, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்பில் இடம்பெற்று வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்தனர்.

தினேஷ் சாப்டர் வழக்கின் அடுத்த நகர்வு | Dinesh Schaffter S Family Appeals To Court

 

இதேவேளை, பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ள கைத்தொலைபேசிகளில் உயிரிழந்தவரின் மனைவி மற்றும் பிள்ளைகளின் படங்கள் போன்ற இரகசிய தகவல்கள் உள்ளன.

எனவே குறித்த கையடக்கத் தொலைபேசிகளை மீட்டெடுக்க அவரின் குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப்படவேண்டும் என்று பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கை

இது தொடர்பான தகவல்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கேட்டறிந்த மேலதிக நீதவான், குறித்த கையடக்கத் தொலைபேசிகள் தொடர்பான அரச பகுப்பாய்வாளரின் அறிக்கையைப் பெற்றுக் கொண்டதன் பின்னர், பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கையை பரிசீலிப்பதாக அறிவித்தார்.

தினேஷ் சாப்டர் வழக்கின் அடுத்த நகர்வு | Dinesh Schaffter S Family Appeals To Court

இந்தநிலையில் வழக்கு விசாரணை 2024 ஜூலை 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜனசக்தி பிஎல்சி குழுமத்தின் முன்னாள் பணிப்பாளர் தினேஷ் சாஃப்டர், 2022 டிசம்பர் 15 அன்று பொரளை பொது மயானத்தில், அவரது காரில் கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டார்.

பின்னர், கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒருநாளில் உயிரிழந்தார்.

https://tamilwin.com/article/dinesh-schaffter-s-family-appeals-to-court-1715683616




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.