Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

125 நவீன ரக பொலிஸ் ஜீப்களை இலங்கைக்கு வழங்கியது இந்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

125 நவீன ரக பொலிஸ் ஜீப்களை இலங்கைக்கு வழங்கியது இந்தியா

By DIGITAL DESK 2

23 DEC, 2022 | 04:36 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு இந்தியாவினால் 125 நவீன ரக பொலிஸ் ஜீப்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவிடமிருந்து பாதுகாப்பு படைகளுக்கு தேவையான 500 வாகனங்களைப் பெற்றுக் கொள்ளும் 100 மில்லியன் டொலர் கடன் திட்டத்தின் கீழ் முதற்தொகுதியாக இவை கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால் , பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன உள்ளிட்டோரிடம் குறித்த ஜீப் வாகனங்கள் வியாழக்கிழமை (டிச. 22) கையளிக்கப்பட்டன.

WhatsApp_Image_2022-12-23_at_8.08.51_AM.

WhatsApp_Image_2022-12-23_at_8.08.22_AM.

'அயல்நாட்டுக்கு முதலிடம்' கொள்கைக்கு அமைய இந்திய அரசாங்கம் இலங்கை மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கிவருகிறது.

அதற்கமைய தற்போது வரை புகையிரத திணைக்களம், உட்கட்டமைப்பு, பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி, பெற்றோலியம், உரம் வழங்கல் போன்ற பல்வேறு துறைகளில் சுமார் 3.2 பில்லியன்  டொலர் பெறுமதியான கடன்கள் இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவற்றுக்கு மேலதிகமாக கடந்த மார்ச்சில் உணவு, மருந்துகள், எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக 1 பில்லியன் டொலர் சலுகைக் கடன் வசதியை நீட்டித்தமை குறிப்பிடத்தக்கது என இந்திய உயர் ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/143942

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, ஏராளன் said:

நாட்டில்… அத்தியாவசிய மருந்து தட்டுப்பாடு நேரத்தில்..
100 மில்லியன் டொலர் கடனுக்கு, அதி நவீன சொகுசு வாகனங்கள் படைகளுக்கு தேவையா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

நாட்டில்… அத்தியாவசிய மருந்து தட்டுப்பாடு நேரத்தில்..
100 மில்லியன் டொலர் கடனுக்கு, அதி நவீன சொகுசு வாகனங்கள் படைகளுக்கு தேவையா?

அண்ணை பஞ்சம் வரப்போகுது, அப்ப களவு கூடப் போகுது. கள்ளரைப் பிடிக்க ஜீப் வேணும்தானே!🤔 என்ன ஒரு தொலைநோக்குப் பார்வை🤭

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

இந்தியாவிடமிருந்து பாதுகாப்பு படைகளுக்கு தேவையான 500 வாகனங்களைப் பெற்றுக் கொள்ளும் 100 மில்லியன் டொலர் கடன் திட்டத்தின் கீழ் முதற்தொகுதியாக இவை கையளிக்கப்பட்டுள்ளது.

எதுக்கு சீனாவை பின்தொடரவோ?

இலங்கை இராணுவப்படை குறைப்பு என்று சொல்லி போலீஸ் படையை பலப்படுத்துகிறது. கொழுக்கட்டை கடையை மூடி மோதகக்கடை திறக்கிறது. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி அதற்கு பதிலாக இன்னொரு சட்டத்தை உருவாக்க திட்டம், ஆக்கிரமித்திருக்கும்  நிலங்களை விடுவித்து இந்து ஆலயங்களை இடித்து விகாரைகள் அமைக்கும் திட்டம் ஆலோசனையில். நாட்டில் எது நடந்தாலும், நாடே அழிந்தாலும் தமிழருக்கு சகுனப்பிழையாக அமைய வேண்டுமென்று உழைக்கும் சிங்களம், அதுக்கு உதவி வழங்கும் இந்தியா கடைசியில் அடையப்போகும் இலாபம் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் கடனில் செல்வது கவலைக்குரிய விடயம்.  ஆனால் இலங்கை காவல்துறைக்கு அலுவல்களை செய்ய போதிய வாகன வசதி இல்லை என்பதே உண்மை.

காவல்துறைக்கு முறைப்பாடு செய்ய, அலுவலாக வருபவர்கள் தமது வாகனங்களில் ஏற்றி செல்லவேண்டிய தருணங்களும் உள்ளன. அல்லது ஆட்டோ பிடித்து பயணிக்க வேண்டிய தேவை.

குறிப்பாக நகர் புறம் தள்ளியுள்ள ஊர் வாசிகளுக்கு காவல்துறையின் ஏதாவது உதவி தேவைப்பட்டால் வாகன பிரச்சனை உள்ளது.

திருட்டு, கொலை, கொள்ளை குற்றச்செயல்கள் மட்டுமே காவல்துறையுடன் சம்மந்தப்பட்ட கடமைகள் இல்லை. ஊர்வாசிகளுக்க்கு பலவித தேவைகள் உள்ளன அரச நிர்வாக பணிகளின் நிமித்தம்.

வெளிநாடுகளில் காவல்துறை தமது பணிகளை செய்வதற்கு பலவித வசதிகள் கொடுக்கப்பட்டு உள்ளன. இலங்கையில் அப்படி இல்லை. இதனால் பாதிப்பு சாதாரண குடிமக்களுக்கே.

காவல்துறையிடம் வாகனம் இல்லை எனும் விடயம் தெரிவதே பல குற்றச்செயல்கள் இலகுவாக நடைபெற செய்யும்.

  • கருத்துக்கள உறவுகள்

"அண்ணை பேரிச்சை சாப்பிட்டு ரொம்ப நாளாச்சுண்னே.." 

memees.php?w=240&img=Z291bmRhbWFuaS9nb3V

ஸ்காரப்பியோ S10  மாதிரி தெரியுது..வண்டிய நல்லா பரிசோதனை பண்ணுங்கப்பா..😊

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.