Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டேய் மணியா......!  ✍

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

டேய் மணியா......!  ✍

$10,000: Bermuda Envelope For Sale On eBay – Repeating Islands

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிள்ளையார் துணை

~*~ ..Om shri Ganeshaya namah.. ~*~

டேய் மணியா....!
எப்பிடி இருக்கிறாய்? நான் தான் குமாரசாமி எழுதுறன்.
நான் நல்ல சுகமாய் இருக்கிறன். நீயும் சுகமாய் இருக்கிறாய் எண்டு கேள்விப்பட்டன்.
கன நாளைக்கு பிறகு நேரம் கிடைச்சது. அதாலை உனக்கு கடிதம் எழுதோணும் போல கிடந்துது.உடனை எழுதுறன்.

நீ முந்தி எழுதின கடிதத்துக்கு பதில் போடேல்லை எண்டு குறை நினைக்காதை. எல்லாம் நேர பற்றாக்குறைதான். மற்றும் படி ஒண்டுமில்லை.

இஞ்சத்தையான் வாழ்க்கை உனக்கு தெரியும் தானே. எல்லாம் கஷ்ரமான வாழ்க்கை. சாமான் விலையெல்லாம் கூடீட்டுது. பெற்றோல் டீசல் எல்லாம் நாய் பேய் விலை.உருளைக்கிழங்கு விலையும் உச்சிக்கு போட்டுது. கொப்பர் காத்திகேசுவை கந்தையாவின்ர பேத்தி  கலியாண வீட்டு சிடியிலை பார்த்தன்.நல்லாய் வயக்கெட்டு போனார்.........

இரண்டாம் பக்கம் பார்க்க......⇢ 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவொரு கடித தொடர். இதற்கு விரும்பினால் நீங்களும் பதில் கடிதம் எழுதிக்கொண்டே இருக்கலாம். உங்கள் பேச்சு நடையில் எழுதி பாருங்கள் இன்னும் சுவாரசியமாக இருக்கும். விக்கனமில்லா கிராமிய நகைச்சுவை இன்னும் பொழிப்பாக இருக்கும்.

நீங்கள் விரும்பினால் மணியின் இடத்திலிருந்து பதில் கடிதம் எழுதலாம். 😂

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

...நீங்கள் விரும்பினால் மணியின் இடத்திலிருந்து பதில் கடிதம் எழுதலாம். 😂

டேய் கு.சா,

எப்படியடா இருக்குறாய்..? நீ ஊரைவிட்டு ஓடிப்போய் ஒரு மாசமாச்சி..!

பொட்டுக்காலை துளை போட்டு கடலை போட்டது போதாதென கரணவாய் குளத்துப் பக்கம் தள்ளிக்கொண்டு போனாய்.. இப்போ ஒன் ஆளு 'ஒன்னை நெனச்சு நெனச்சு உருகிப்போறா மெழுகா..!'

நீ என்னடாயென்டால் கூட்டுவளோட சேர்ந்து தம்மடிச்சி, கள்ளடிச்சி மணியண்ணையின்ட கடையில கடன் வச்சுப்போட்டு நாட்டைவிட்டு ஓடிப்போயிட்டே.. நான்தானப்பு அவருக்கு காசை கொடுத்தனான்.

மருவாதையா காசை அனுப்பி வை..!

மங்களம் ச்சே.. பரிமளம் உண்டாகட்டும்..! அப்புறம் இருக்கு சேதி..!!😜

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

பரிமளத்தின் ஏக்கத்தை, குரலை பதிவிட்டு அனுப்புகிறேன் குமாரசாமி, பதில் போடவும்..! 🤗

- மணியன். 😉

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ராசவன்னியன் said:

எங்கே மணியனோட கூட்டாளி? 😜 🤔

ஆள்… இனி, பொங்கல் முடியத்தான் வருவார். 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 31/12/2022 at 05:07, ராசவன்னியன் said:

டேய் கு.சா,

வணக்கம் ராசா அண்ணை!
நான் இஞ்ச குமாரசாமி எழுதுறன். நான் உங்களுக்கு சொல்லாமல் கொள்ளாமல் விட்டுட்டு ஓடி வந்ததுக்கு குறை நினைக்காதேங்கோ. காரணத்தை நேரகாலம் வரேக்கை சொல்லுறன்.

கூடியிருந்து கள்ளடிச்சு கும்மாளமடிச்சுப்போட்டு இப்ப கரணவாய் குளத்தடியிலை இழுபறிப்பட்டத விக்கிபீடியா ரேஞ்சிலை விக்கி விக்கி உள் விசயத்த வெளியிலை விடுறது அவ்வளவு நல்லாய் இல்லை கண்டியளோ.....பிறகு நீங்கள் பருத்தித்துறை சந்தையிலை மீன் வித்த லேடீஸ் ஆக்களோட விட்ட மன்மத அம்பு விசயத்தையும் நான் விக்கிலீக்ஸ் ரேஞ்சிலை சொல்ல வேண்டி வரும். 

கொஞ்சம் நிற்க

ராசாண்ணை! மணியனுக்கு ஏன் காசு குடுத்தனீங்கள்? அவனுக்கு நான் தேங்காய் வித்த காசு இன்னும் தரேல்லை. அதெல்லாம் கிடக்கட்டும்.  நீங்களும் நானும் லச்சுமி தியேட்டரிலை ஆயிரத்தில் ஒருவன் படம்  கலரியிலை இருந்து பாத்த ஞாபகம் இருக்கோ? அந்த ரிக்கற் காசு பிறகு இன்ரெவலுக்கு ஒரு தம் வாங்கித்தந்த காசு அங்காலை நடராசாவின்ர தேத்தண்ணிக்கடையிலை வடை தேத்தண்ணிக்காசு எல்லாத்தையும்  வட்டியோட சேர்த்து வெட்டவும்.

 கள்ளன் மணியனை சுகம் கேட்டதாய் சொல்லவும் 😎

  • கருத்துக்கள உறவுகள்

நாள் கழிச்சி வந்தாலும், எப்படியோ சமாளிச்சு போட்டியள் கு.சா..!

நல்ல சுழியன் தான்..! 🤝

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா,

அம்பை (அன்பை) மணியன் மேல் எறிவதற்கு பதில் எம்மேல்  எறிந்துவிட்டீர்களோ? என்ற ஐயப்பாடு உள்ளது.

எனக்கு யாழ்ப்பாணம், பருத்திதுறை, லச்சுமி தியேட்டர் போன்றவை எங்கே இருக்கிறதென்றே தெரியாது. முடிந்தளவு திரியை வரம்புக்குள் கலகலப்பாக வைத்திருக்கலாம்.😜

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

கு.சா,

அம்பை (அன்பை) மணியன் மேல் எறிவதற்கு பதில் எம்மேல்  எறிந்துவிட்டீர்களோ? என்ற ஐயப்பாடு உள்ளது.

எனக்கு யாழ்ப்பாணம், பருத்திதுறை, லச்சுமி தியேட்டர் போன்றவை எங்கே இருக்கிறதென்றே தெரியாது. முடிந்தளவு திரியை வரம்புக்குள் கலகலப்பாக வைத்திருக்கலாம்.😜

கூகிள் மப்பை  கிண்டுங்க கொட்டுப்படும் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
37 minutes ago, பெருமாள் said:

கூகிள் மப்பை  கிண்டுங்க கொட்டுப்படும் .

ஆர்வ மிகுதியாலை  இனி வன்னியர் வடமராட்சி குச்சொழுங்கை எல்லாம் தடக்குப்படப்போறார்.... 😁

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி கு.சா உருளைக்கிழங்கு உச்சிக்கு போட்டுது என்று கவலைப்படுவதாகத் தெரியுது.......போகாமல் என்ன செய்யும் .......!

நாங்கள் உவர் ஜிங் சக் சாங்கின்ற (சீன உர ஏற்றுமதி அதிகாரி)  காலடியில் மண்டியிட்டு அவற்ர சப்பை மூக்கை தடவி ஒரு கப்பல் உரத்தை வாங்கி கோயில் தேர்முட்டிக்குள்ள வச்சால் நீங்கள் யாரோ துபாய் ஷேக்குடன் சேர்ந்து சோமபானம் அருந்தி குட்டி புட்டிகளில் திளைத்து எல்லா மூட்டைகளையும் ஷேக்குடன் துபாய்க்கு அனுப்பி போட்டியள்........ரெண்டு குட்டிகளும் மிஸ்சிங் ....... இப்ப இங்கு உரத்தட்டுப்பாடு,கிழங்குகள் விளையேல்ல, சனம்  விதை கிழங்குகளையே அவித்து சாப்பிடுதுகள்......ஆனால் துபாயில் கிழங்கு அமோக விளைச்சல்...அந்த சேக்கு பத்தமடைப் பாயில கிழங்குகளை பரப்பி வைத்திருக்கிறார்......இது நியாயமாரே........!

Potato kitten chilling in his potato bed • Cat GIF Website

அன்புடன்

மணியனின் அண்ணன் பெனியன்.........!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டேய் மச்சான்!
கனகாலத்துக்குப்பிறகு  உன்ரை கடிதம் வாசிச்சன்.சந்தோசம். எண்டாலும் நான் உன்னை காசு இரண்டாயிரம் கேட்டபடியால தானே இவ்வளவுகாலமும் நீ கடிதம் போடேல்லை.உனக்கு  நல்ல குணமடா. மற்றவனுக்கு உதவி செய்யிற குணம் உனக்கு துண்டற இல்லையெண்டு எனக்கு நல்லாத்தெரியும். இருந்தாலும் ஏலாக்கட்டத்திலை தான் நான் உன்னட்டை கேட்டனான். எண்டாலும் பரவாயில்லை இப்ப நான் நல்லாய் இருக்கிறன். இரண்டு பெரிய மூண்டு தட்டு வீடு கட்டியிருக்கிறன். என்ரை மூத்தவங்கள் இரண்டு பேரும் கனடாவில அந்தமாதிரி இருக்கிறாங்கள். நல்ல வேலையில இருக்கிறாங்கள். நான் இப்ப பொழுது போக்குக்கு ஒரு பெட்டிக்கடை வைச்சு நடத்துறன். 
வாற மாசம் சிவராத்திரி வருது. உனக்கு பழைய ஞாபகம் எல்லாம் இருக்கோ?நடுச்சாமத்திலை பரமசிவத்தின்ரை படலையை புடுங்கிக்கொண்டுபோய்  குளத்தடி பனைமரத்திலை சாத்திப்போட்டு ஒரு வசனம் எழுதி வைச்சனி எல்லே....அந்த  புள்ளை குட்டிக்காரன்ரை சாபம் உன்னை விடாதடா....பாவம் அந்த மனிசன் ஐஞ்சு பொம்புளைப்புள்ளையளையும் கஸ்ரப்பட்டு கரைசேர்த்துப்போட்டுது. அவள் கடைக்குட்டி சாரதா உங்கை ஜேர்மனியிலை தான் இருக்கிறாளாம். டேய் நீ அவளின்ரை கண்ணிலை சந்திச்சாய் யமனை சந்திச்சதுக்கு சமம். எதுக்கும் கவனமாய் இரு அப்பு.

அது சரி இப்ப நீ என்னத்துக்கு கடிதம் எழுதினனீ? நீ சும்மா  அலுவல் இல்லாமல் எழுதமாட்டாய். ஏதும் காணிப்பிரச்சனையே? என்னெண்டாலும் சொல்லு நான் சரி பண்ணித்தல்லாம். உன்ரை பழைய ஆள் சுகமாய் இருக்கிறா.வயது போனாலும் இன்னும் கட்டுக்குலையேல்லையடா.எதுக்கும் ஊருக்கு ஒருக்கால் வாடாப்பா. கன புதினங்களை பாக்கலாம். இஞ்சையும் கன ஆக்கள் உன்னை சுகம் விசாரிச்சவை.என்ரை அண்ணை பெனியனும் உன்னை சுகம் விசாரிச்சதாய் சொல்லச்சொன்னவர்.

இனியாவது பதில் கடிதம் எழுதடா.
மணியாபரணம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.