Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க காங்கிரஸ் சபாநாயகர் தேர்தலில் குழப்பம்! சொந்த வேட்பாளருக்கு எதிராக குடியரசுக் கட்சியினர் வாக்களிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க காங்கிரஸ் சபாநாயகர் தேர்தலில் குழப்பம்! சொந்த வேட்பாளருக்கு எதிராக குடியரசுக் கட்சியினர் வாக்களிப்பு

By SETHU

04 JAN, 2023 | 12:54 PM
image

அமெரிக்கப் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களைக் கொண்ட குடியரசுக் கட்சியின் தலைவர் கெவின் மெக்கார்த்தி, சபாநாயகர் பதவிக்கான தேர்தலில் 3 சுற்று வாக்கெடுப்புகளின் பின்னரும் வெற்றியீட்டுவதற்குத் தவறினார்.

மெக்கார்த்தியன் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 20 எம்.பிகள் அவருக்கு எதிராக வாக்களித்தமை இதற்குக் காரணம். 

கடந்த வருடம் நடைபெற்ற அமெரிக்க இடைக்கால தேர்தல்களையடுத்து, கீழ்சபையான பிரதிநிதிகள் சபையின் பெரும்பான்மைப் பலத்தை குடியரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.  குடியரசுக் கட்சிக்கு 222 ஆசனங்களும் ஜனநாயகக் கட்சிக்கு 212 ஆசனங்களும் உள்ளன. 

434 ஆசனங்கள் கொண்ட பிரதிநிதிகள் சபையில், சபாநாயகராக தெரிவு செய்யப்படுவதற்கு 218 வாக்குகள் தேவை. 222 ஆசனங்களைக் கொண்டுள்ள குடியரசுக் கட்சியினால் இப்பதவிக்கு பிரேரிக்கப்படுபவர் இலகுவாக வெற்றி பெறுவது சாத்தியம்.

இந்நிலையில், புதிய சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Kevin-McCarthy---1200-AFP-photo.jpg

குடியரசுக் கட்சி வேட்பாளர்  கெவின் மெக்கார்தி (Photo: AFP)

இதன்போது குடியரசுக் கட்சியினால் பிரேரிக்கப்பட்ட வேட்பாளரான கெவின் மெக்கார்திக்கு எதிராக, அக்கட்சியைச் சேர்ந்த 19 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதனால் அவருக்கு 203 வாக்குகளே கிடைத்தன. 

அதன்பின் இரண்டாவது சுற்று வாக்களிப்பு நடைபெற்றது. இரண்டாவது சுற்றிலும் 19 குடியரசுக் கட்சி எம்பிகள் மெக்கர்த்திக்கு வாக்களிக்கவில்லை. 

அதையடுத்து 3 ஆவது சுற்று வாக்களிப்பு நடைபெற்றது. இம்முறை குடியரசுக் கட்சியின் 20 எம்.பிகள், மெக்கார்த்திக்கு எதிராக வாக்களித்தனர். இதனால் அவருக்கு 202 வாக்குகளே கிடைத்தன. 

இவ்வாக்களிப்புகளில் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதி தலைவர் ஹக்கீம் ஜெப்ரிக்கு 212 வாக்குகள் கிடைத்திருந்தன.

Hakeem-Jeffries---AFP-photo.jpg

ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹக்கீம் ஜெப்ரி - மத்தியில்) (AFP Photo)

எந்தவொரு வேட்பாளரும் போதிய வாக்குகளைப் பெறாத நிலையில், இத்தேர்தல் இன்று புதன்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 100 வருடங்களில் அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸின் சபாநாயகர்  முதல் சுற்று வாக்களிப்பில் தெரிவு செய்யப்படாதமை இதுவே முதல் தடவையாகும்.

இறுதியாக 1923 ஆம் ஆண்டு சபாநாயகர் பதவிக்கு  ஒன்றுக்கு மேற்பட்ட வாக்களிப்புகள் நடைபெற்றன. 

கெவின் மெக்கார்த்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எம்பிகள் குடியரசுக் கட்சி எம்பிகளில் தீவிர வலதுசாரி குழுவொன்றைச் சேர்ந்தவர்கள் ஆவர். பாராளுமன்ற அவை விதிகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என இக்குழுவினர் வலியுறுத்துகின்றனர்.

https://www.virakesari.lk/article/144941

  • கருத்துக்கள உறவுகள்

11 சுற்று வாக்களிப்புகளின் பின்னரும் அமெரிக்க சபாநாயகர் தெரிவு செய்யப்படவில்லை

By Sethu

06 Jan, 2023 | 11:41 AM
image

அமெரிக்கப் பாராளுமன்ற பிரதிநிதிகள் சபைக்கான சபாநாயகர் தெரிவுக்காக 11 சுற்று வாக்களிப்பு நடைபெற்ற போதிலும் புதிய சபாநாயகர் தெரிவு செய்யப்படவில்லை. 

பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை ஆசனங்களைக் கொண்ட குடியரசுக் கட்சியின் சார்பில் கெவின் மெக்கார்த்தி, சபாநாயகர் பதவிக்கு போட்டியிடுகிறார். 

சபாநாயகராக தெரிவு செய்யப்படுவதற்கு 218 ஆசனங்கள் தேவை.  222 ஆசனங்களைக் கொண்டுள்ள குடியரசுக் கட்சியினால் இப்பதவிக்கு பிரேரிக்கப்படுபவர் இலகுவாக வெற்றி பெறுவது சாத்தியம்.

ஆனால், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 20 இற்கும் அதிகமான உறுப்பினர்கள், கெவின் மெக்கார்திக்கு வாக்களிக்கவில்லை.

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் 3 சுற்று வாக்களிப்பில் அவர் போதிய வாக்குகளைப் பெறவில்லை. புதன்கிழமை மேலும் 3 சுற்று வாக்களிப்பு நடைபெற்ற பேததிலும் பலன்கிடைக்கவில்லை. 

இந்நிலையில் 3 ஆவது நாளாக நேற்று வியாழக்கிழமை மேலும் 5 சுற்று வாக்களிப்புகள் நடைபெற்றன. 

இதன்போது கெவின் மெக்கார்த்திக்கான வாக்குகள் மேலும் குறைவடைந்தன. 

11 ஆவது சுற்று வாக்களிப்பில் கெவின் மெக்கார்த்தி 200 வாக்குகளை மாத்திரமே பெற்றார். 

அதேவேளை ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 212 எம்பிகளும் அக்கட்சியைச் சேர்ந்த நியூயோர்க் எம்பியான ஹக்கீம் ஜெப்ரீஸுக்கு வாக்களித்தனர்.

எந்தவொரு வேட்பாளரும் போதிய வாக்குகளைப் பெறாத நிலையில், இத்தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 100 வருடங்களில் அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸின் சபாநாயகர்  முதல் சுற்று வாக்களிப்பில் தெரிவு செய்யப்படாதமை இதுவே முதல் தடவையாகும்.

இறுதியாக 1923 ஆம் ஆண்டு சபாநாயகர் பதவிக்கு  ஒன்றுக்கு மேற்பட்ட வாக்களிப்புகள் நடைபெற்றன. 

கெவின் மெக்கர்த்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எம்பிகள் குடியரசுக் கட்சி எம்பிகளில் தீவிர வலதுசாரி குழுவொன்றைச் சேர்ந்தவர்கள் ஆவர். பாராளுமன்ற அவை விதிகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என இக்குழுவினர் வலியுறுத்துகின்றனர்.
 
https://www.virakesari.lk/article/145115

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வழியாக 15 ம் சுற்றில் சபாநாயகராக தெரிவானார் மக்கார்த்தி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கப் பாராளுமன்ற சபாநாயகராக கெவின் மெக்கார்த்தி தெரிவானார்

By SETHU

07 JAN, 2023 | 04:17 PM
image

அமெரிக்கப் பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை சபாநாயகராக கெவின் மெக்கார்த்தி தெரிவாகியுள்ளார்.

பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சி 222 ஆசனங்களையும் ஜனநாயகக் கட்சி 212 ஆசனங்களையும் கொண்டுள்ளது.

குடியரசுக் கட்சி எம்.பியான கெவின் மெக்கார்த்தி சபாநாயகர் பதவிக்கு போட்டியிட்டார். எனினும், அக்கட்சியின் 20 எம்பிகள் மெக்கார்த்திக்கு எதிராக வாக்களித்து வந்ததால் 3 நாட்களில் 11 சுற்று வாக்களிப்புகள் நடைபெற்ற போதிலும், சபாநாயகர் தெரிவு இழுபறி நீடித்தது.

இந்நிலையில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற 15 ஆவது சுற்று வாக்களிப்பில் மெக்கார்த்தி வெற்றியீட்டினார். 

அளிக்கப்பட்ட 428 வாக்குகளில் 216 வாக்குகளைப் பெற்று கெவின் மெக்கார்த்தி வென்றார். 

ஜனநாயகக்கட்சியின் 212 எம்.பிகளும் தமது கட்சியின் பிரதிநிதியான ஹக்கீம் ஜெப்ரீஸுக்கு வாக்களித்தனர்.

https://www.virakesari.lk/article/145187

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

11 சுற்று வாக்களிப்புகளின் பின்னரும் அமெரிக்க சபாநாயகர் தெரிவு செய்யப்படவில்லை

Vijaykanth GIF - Vijaykanth GIFs

அமெரிக்காவை பாத்து உலகமே சிரிக்குது...😃

  • கருத்துக்கள உறவுகள்

இதேபோல் நிலைமை இலங்கையிலோ இந்தியாவிலோ அல்லது நம்ம தமிழ்நாட்டிலோ வந்தால் மிகச் சுலபமாக பெட்டிகள் கைமாறி பிரச்சினைகள் முடிக்கப்பட்டிருக்கும். அது நம்ம ஜனநாயகம். இது வளர்ச்சி அடைந்த உலகின் ஜனநாயகம். 👍

Edited by விசுகு
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

Vijaykanth GIF - Vijaykanth GIFs

அமெரிக்காவை பாத்து உலகமே சிரிக்குது...😃

ரஸ்யாவில் என்றால் ஒருவர் யன்னலால் தவறி விழுந்திருப்பார் - உடனே சபாநாயகர் ஏகமனதாக தேர்வாகி இருப்பார்.

பிகு

அமேரிக்காவை விடுங்கோ குப்பை நாடு.

பூலோக சொர்க்கமாம் ஜேர்மனி (அப்படித்தானே?) யில் அண்மைய எலக்சனுக்கு பிறகு, சபாநாயகர் அல்ல - அரச்சாங்கம் அமைய எத்தனை மாதம் எடுத்தது?

2 hours ago, விசுகு said:

இதேபோல் நிலைமை இலங்கையிலோ இந்தியாவிலோ அல்லது நம்ம தமிழ்நாட்டிலோ வந்தால் மிகச் சுலபமாக பெட்டிகள் கைமாறி பிரச்சினைகள் முடிக்கப்பட்டிருக்கும். அது நம்ம ஜனநாயகம். இது வளர்ச்சி அடைந்த உலகின் ஜனநாயகம். 👍

எனக்கு எழுதும் நேரம் மிச்சம்👍🏿

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

பூலோக சொர்க்கமாம் ஜேர்மனி (அப்படித்தானே?) யில் அண்மைய எலக்சனுக்கு பிறகு, சபாநாயகர் அல்ல - அரச்சாங்கம் அமைய எத்தனை மாதம் எடுத்தது

இதை ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விதமாக பார்ப்போம்

ஆனால் என் அனுபவத்தில் வாக்காளர்கள் அதிலும் தமது வாக்களிப்பின் அருமை தெரியாமல் வாக்களிப்பதில் இருந்து ஒதுங்கி இருக்கும் வாக்காளர்களுக்கான எச்சரிக்கை இது. 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, விசுகு said:

இதை ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விதமாக பார்ப்போம்

ஆனால் என் அனுபவத்தில் வாக்காளர்கள் அதிலும் தமது வாக்களிப்பின் அருமை தெரியாமல் வாக்களிப்பதில் இருந்து ஒதுங்கி இருக்கும் வாக்காளர்களுக்கான எச்சரிக்கை இது. 

எனது பார்வையில் இது ஒரு முதிர் ஜனநாயகமாக ஜேர்மனி இருக்கிறது என்பதையே காட்டி நிற்கிறது.

பிரெக்சிற்றை தொடர்ந்து யூகே பாராளுமன்றில் நடந்தவையும் அப்படியே (செங்கோலை ஒரு எம்பி தூக்கிய நிகழ்வை தவிர).

அதேபோல்தான் சொந்த கட்சியினர் 20 பேர் முரண்டுபிடித்ததால் (டிரம்ப் உட்பட்ட கட்சி தலைவர்கள் கேட்டும் இந்த 20 பேர் மசியவில்லை) மக்கார்த்தி சபாநாயகர் ஆவது தள்ளிப்போனதும்.

எது அவமானகரமானது?

1. ஜனவரி 6 இல் டிரம்ப்பால் நடத்தி வைக்க முயலபட்ட கலகம்

2. பிரெக்சிற் நேரம் பச்சை பொய்யை சொல்லி விட்டு - இப்போ அவை பொய் என்று தெரிந்த பின்னும், பொய்யர்கள் தொடர்ந்தும் பொது வாழ்வில் இருப்பது

3. ஷ்ரோடர் போன்றவர்கள் காசுக்காக, ஜேர்மனியின் பொருளாதாரத்தை ரஸ்ய எரிவாயு சப்ளையில் அடமானம் வைத்த போது, அதை மேக்கல் சரியே கையாளாமல் - ஜேர்மனியை கடும் நெருக்கடியில் தள்ளி இருக்க கூடிய ஆபத்தை ஏற்படுத்தியது. இது பற்றி ஷ்ரோடர், மேர்க்கல் போன்றோர் மீது ஒரு வெளிப்படையான விசாரணை நடக்காமல் இருப்பது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, goshan_che said:

அமேரிக்காவை விடுங்கோ குப்பை நாடு.

பூலோக சொர்க்கமாம் ஜேர்மனி (அப்படித்தானே?) யில் அண்மைய எலக்சனுக்கு பிறகு, சபாநாயகர் அல்ல - அரச்சாங்கம் அமைய எத்தனை மாதம் எடுத்தது?

நீங்கள் குறிப்பிடும் நாடுகளில் ஆட்சி அமைப்பிற்காக  பேரம் பேசுதலும் விட்டுக்கொடுப்புகளும் இருக்கவே இருக்காது என்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் குறிப்பிடும் நாடுகளில் ஆட்சி அமைப்பிற்காக  பேரம் பேசுதலும் விட்டுக்கொடுப்புகளும் இருக்கவே இருக்காது என்கிறீர்களா?

இருக்கும். ஆனால் பெரும்பாலும் அந்த பேரம் பேசல்கள் நேரடியாக தனிப்பட்டு ஒருவருக்கு ஒரு நலன் என அமையாது. 

இப்போ மகார்த்தி இந்த 20 பேருக்கு சில விட்டுகொடுப்புகளை செய்தே அவர்கள் வாக்கை பெற்றுள்ளார். 

ஆனால் இவர்களை வண்டியில் ஏற்றி, வர்ஜினியாவில் ஒரு ஹொட்டலில் அடைத்து வைத்து, பெட்டிகளை பரிமாறவில்லை.

பேரம் பேசலுக்கும், குதிரை பேரரத்துக்கும் வித்தியாசம் இருக்கு.

————

ஊழல், லஞ்சம் இல்லாத மனித சமூகம் இல்லை. பிரார்தனையை வைத்து விட்டு, மெழுகுதிரி கொளுத்துவதில், தேங்காய் உடைப்பதில் லஞ்சம் தொடங்குகிறது.

ஆகவே நான் கைக்கொள்ளும் வியாக்கியானம் இது👇

ஒரு நாட்டில்/சமூகத்தில்

1. சட்டத்தை மீற லஞ்சம் கொடுக்கிறீர்களா (விதிக்கு புறம்பாக வீடு கட்ட அனுமதி)

அல்லது

2.விதியை மீற லஞ்சம் கொடுப்பதோடு,  விதிக்கு அமைய நடக்கவே லஞ்சம் கொடுக்க வேண்டுமா (பிறப்பு சான்றிதழ் பெறல்)

பொதுவாக 1க்குள் வரும் நாடுகளை ஊழல் குறைந்த நாடுகள் எனவும் 2க்குள் வரும் நாடுகளை ஊழல் மிகுந்த நாடுகள் எனவும் கருதுவேன்.

இந்த நாடுகளின் அரசியல் உட்பட அத்தனை மட்டத்திலும் இது பிரதிபலிக்கும்

ஊழல் இல்லாத நாடு என்று எங்கும், எதுவும் இல்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

எனக்கு எழுதும் நேரம் மிச்சம்👍🏿

திரிக்கு திரி உங்க மடியில அவர் சாய🤣
அவர் மடியில நீங்க சாய எண்டுறமாதிரி😂
மாறி மாறி இரண்டு பேரும் நேரத்தை மிச்சம் பிடிக்கிறதில விண்ணர்கள்😁

5 minutes ago, goshan_che said:

ஊழல் இல்லாத நாடு என்று எங்கும், எதுவும் இல்லை.

சும்மா நீட்டி முழக்காமல் சுருக்கமாக நான் சொல்ல வந்தது இதைத்தான். ஊழலுக்கும்,கையூட்டுக்கும் காசுதான் பரிமாற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை..😂 பதவிகளும் பரிமாறலாம். அதுதான் ஜேர்மனியிலும் நடந்தது. அமெரிக்காவிலும் நடக்கின்றது.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் குறிப்பிடும் நாடுகளில் ஆட்சி அமைப்பிற்காக  பேரம் பேசுதலும் விட்டுக்கொடுப்புகளும் இருக்கவே இருக்காது என்கிறீர்களா?

இது போல் நடக்காது அல்லது நடக்கவில்லை என்று இல்லை

அதை நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும்.

அரசு வேறு நீதிமன்றம் வேறு. இதுவே வளர்ச்சி 

பிரான்ஸின் முன்னைநாள் ஜனாதிபதிகள் சிறிய தவறுகளுக்காகவே பதவி இறங்கியதும் நீதிமன்றங்களுக்கு செல்வதை பார்க்கலாம்.பதில் சொல்லணும் 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

திரிக்கு திரி உங்க மடியில அவர் சாய🤣
அவர் மடியில நீங்க சாய எண்டுறமாதிரி😂
மாறி மாறி இரண்டு பேரும் நேரத்தை மிச்சம் பிடிக்கிறதில விண்ணர்கள்😁

உங்கட பெரியவர்-சின்னவர் கூட்டணிக்கு கிட்டயும் வருவமா நாங்கள் 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, விசுகு said:

இது போல் நடக்காது அல்லது நடக்கவில்லை என்று இல்லை

அதை நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும்.

அரசு வேறு நீதிமன்றம் வேறு. இதுவே வளர்ச்சி 

பிரான்ஸின் முன்னைநாள் ஜனாதிபதிகள் சிறிய தவறுகளுக்காகவே பதவி இறங்கியதும் நீதிமன்றங்களுக்கு செல்வதை பார்க்கலாம்.பதில் சொல்லணும் 

தெரிந்தால் மட்டுமே நீதிமன்றம்.தெரியாவிட்டால் மாட மாளிகை வாழ்க்கை.எனவே பிரான்ஸ்சில்  நீதிமன்றம் செல்கிறார்கள் என்றால் ஊழல்கள் தாராளமயமாக நடக்கின்றது என்று தானே அர்த்தம்???????

3 minutes ago, goshan_che said:

உங்கட பெரியவர்-சின்னவர் கூட்டணிக்கு கிட்டயும் வருவமா நாங்கள் 🤣

நான் கூறியது நேர மிச்சப்பிடிப்பை மட்டும்....ஆட்டுக்குள் மாட்டை திணிப்பதில் தாங்கள் வல்லவர் என்பது உலகிற்கே தெரிந்த விடயம். 😁

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

இது போல் நடக்காது அல்லது நடக்கவில்லை என்று இல்லை

அதை நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும்.

அரசு வேறு நீதிமன்றம் வேறு. இதுவே வளர்ச்சி 

பிரான்ஸின் முன்னைநாள் ஜனாதிபதிகள் சிறிய தவறுகளுக்காகவே பதவி இறங்கியதும் நீதிமன்றங்களுக்கு செல்வதை பார்க்கலாம்.பதில் சொல்லணும் 

இது ஒரு முக்கியமான பொயிண்ட்.

ஒரு தவறு வெளிவரும் போது அது எப்படி கையாளப்படுகிறது அந்த சமூகத்தால், அதன் கட்டமைபுக்களால் என்பது முக்கியம்.

ஆங்கிலத்தில் impunity என்பார்கள். சில நாடுகளில் அரசியல்வாதி தவறு செய்தால் - so what ? அதுதான் அரசியல் என சமூகம் சகித்து கொள்ளும். அங்கே ஊழல் என்பது அரசியல் கலாச்சாரத்தின் அங்கமாகிவிட்டது.

ஆனால் இது தனியே மேற்கு-கிழக்கு வேறுபாடு அல்ல.

இந்த விடயத்தில் ஜேர்மனி-இத்தாலி க்கு இடையான வேறுபாட்டை நாம் எல்லோரும் அறிவோம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, விசுகு said:

பிரான்ஸின் முன்னைநாள் ஜனாதிபதிகள் சிறிய தவறுகளுக்காகவே பதவி இறங்கியதும் நீதிமன்றங்களுக்கு செல்வதை பார்க்கலாம்.பதில் சொல்லணும் 

தமிழ்நாட்டில் ஊழல் பிரச்சனையால் ஜே சிறை சென்றுள்ளார். சட்டம் எங்கும் உண்டு. 😎

  • கருத்துக்கள உறவுகள்

அதே போல் ஒரு கலகத்தில் ஒருவர் உயிரிழந்தார் என பிரதமர் பதவி விலகிய அரசியல் கலாச்சாரம் இலங்கையில் இருந்துள்ளது - ஒரு காலத்தில்.

1 minute ago, குமாரசாமி said:

தமிழ்நாட்டில் ஊழல் பிரச்சனையால் ஜே சிறை சென்றுள்ளார். சட்டம் எங்கும் உண்டு. 😎

லேடியா, மோடியா என சவால் விடாமல் 39 லோக்சபா இடங்களில் 10 பிஜேபிக்கு கொடுத்து கூட்டணியில் சேர்ந்திருந்தால் போயிருப்பாரா?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

தெரிந்தால் மட்டுமே நீதிமன்றம்.தெரியாவிட்டால் மாட மாளிகை வாழ்க்கை.எனவே பிரான்ஸ்சில்  நீதிமன்றம் செல்கிறார்கள் என்றால் ஊழல்கள் தாராளமயமாக நடக்கின்றது என்று தானே அர்த்தம்???????

தற்போது முன்னைநாள் ஜனாதிபதி சந்தித்து வரும் வழக்கு அவரது நண்பரால் அவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட கோட்சூட் பற்றியது. 

இது வளர்ச்சி அடைந்த நாடுகளில் மட்டுமே சாத்தியம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, goshan_che said:

லேடியா, மோடியா என சவால் விடாமல் 39 லோக்சபா இடங்களில் 10 பிஜேபிக்கு கொடுத்து கூட்டணியில் சேர்ந்திருந்தால் போயிருப்பாரா?

அப்ப எல்லாத்தையும் வெட்டி ஆடின வீரன் எண்டால் ஒரே ஒரு ஆள் தான் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

அப்ப எல்லாத்தையும் வெட்டி ஆடின வீரன் எண்டால் ஒரே ஒரு ஆள் தான் 🤣

அது🤣

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

தமிழ்நாட்டில் ஊழல் பிரச்சனையால் ஜே சிறை சென்றுள்ளார். சட்டம் எங்கும் உண்டு. 😎

இங்கே தான் அண்ணா நமது இருவர் பார்வையும் மாறுகிறது

நான் ஒரு கோட்சூட் பற்றி பேசுகிறேன் 

நீங்கள் ஆயிரம் சாறிகள் செருப்புகள் வந்த பின்பும் ஆட்சியில் இருந்து அரசியல் பழிவாங்கலுக்காக மட்டும் (நீதிமன்றத்தால் அல்ல) சிறை சென்றதை உதாரணமாக சொல்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, விசுகு said:

இங்கே தான் அண்ணா நமது இருவர் பார்வையும் மாறுகிறது

நான் ஒரு கோட்சூட் பற்றி பேசுகிறேன் 

நீங்கள் ஆயிரம் சாறிகள் செருப்புகள் வந்த பின்பும் ஆட்சியில் இருந்து அரசியல் பழிவாங்கலுக்காக மட்டும் (நீதிமன்றத்தால் அல்ல) சிறை சென்றதை உதாரணமாக சொல்கிறீர்கள்.

நாடு ஊழல்களின் விதம் வேறுபடும். சில இடங்களில் உடம்பையே ஊழலாக கேட்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

நாடு ஊழல்களின் விதம் வேறுபடும். சில இடங்களில் உடம்பையே ஊழலாக கேட்பார்கள்.

நன்றி அண்ணா 👍

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

நாடு ஊழல்களின் விதம் வேறுபடும். சில இடங்களில் உடம்பையே ஊழலாக கேட்பார்கள்.

எங்கேயும் “உங்கள்” உடலை கேட்க வாய்ப்பில்லை 🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.