Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழில் புதிய திட்டங்களுடன் கால் பதிக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்..!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

யாழில் புதிய திட்டங்களுடன் கால் பதிக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்..!! குவியும் வாழ்த்துக்கள்.!

 

புதிய திட்டங்களுடன் தாயகத்தில் கால்பதிக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்.யாழ். நீர்வேலிப்பகுதியில் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் 1500 வரையான மாமரங்களை உருவாக்கி, உள்ளூர் விவசாயிகள் பலருக்கு புதிய வேலைவாய்ப்புக்களை வழங்கியிருக்கிறார் வெளிநாட்டு முதலீட்டாளர் ஒருவர்.
322114903_877057783613973_36658225407203
கவனிப்பார் அற்றுக்கிடக்கும் நிலங்களைக் கொள்வனவு செய்து ( அல்லது குத்தகைக்கு எடுத்து ) , துப்புரவாக்கி, அதில் பயன்தரும் மரம்செடிகளை நட்டு, 50 வரையான விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கியிருக்கும் இந்த முதலீட்டாளரின் பெய ஜஸ்டின் குமார். தாயகத்தைச் சேர்ந்தவர். புலம்பெயர்ந்து வெளிநாடொன்றில் வசிக்கிறார்.

இவரின் மற்றொரு புதிய முயற்சியாக மஞ்சளைப் பயிரிட்டு அதிலும் வெற்றி கண்டிருக்கிறார். மஞ்சளை ஏற்றுமதி செய்வதன்மூலம் அதிகலாபம் கிடைக்கிறது என்கிறார் அவர். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிகம் கிராக்கியுள்ள பயிரினங்களை பயிரிட்டு, தாயக விவசாயத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவது இவரின் நோக்கம்.
322119654_571761691073473_75050901274792
வெளிநாடுகளில் அதிகம் பிரபலமான TomEJC எனும் மாம்பழங்களே இவரது தோட்டங்களில் பயிரிடப்படுகின்றன. ஒவ்வொரு பழமும் 500g, 600g வரையான எடையைக் கொண்டவை. மாம்பழ ஜூஸ் தயாரிப்பதற்கு அதிகம் பயன்படுத்தப்படுவதும் இந்தவகையான மாம்பழங்கள்தான்.
உள்ளூரில் இருக்கும் ஏனைய விவசாயிகளை ஒன்றிணைத்து ஒரு கூட்டுமுயற்சியாக ( Cluster Farming ) செயல்படுவது இவரின் இன்னொரு நோக்கம். அதன்படி இவரிடமிருந்து மாமரச் செடிகளையோ, மஞ்சளையோ நீங்கள் கொள்வனவு செய்து பயிரிடமுடியும். மேலும் வெளிநாடுகளில் கடைப்பிடிக்கப்படும் சிறந்த விவசாயப் பயிற்சிகளையும் இவர்கள் வழங்குகிறார்கள்.
322390225_535233848562356_25395558989522

யாழ்ப்பாணத்தில் எத்தனையோ ஏக்கர் காணிகள் கவனிப்பார் இல்லாமல் காடும் மேடுமாக காட்சியளிக்கின்றன. அதேவேளை ஜஸ்டின் குமார் போன்ற முதலீட்டாளர்கள் விவசாயத்துக்கு காணிகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவரோடு தொடர்புகொண்டு உங்கள் காணிகளைக் குத்தகைக்கு விடமுடியும்.
நிலங்களையும் வைத்துக்கொண்டு,
322507780_1199364117673840_6643807265255
அதில் ஒரு முயற்சிகூட செய்யாமல், ‘நாங்கள் வறுமையில் வாடுகிறோம்’ என்று சொன்னால், அது நகைப்புக்கு இடமானது. புதிய புதிய சிந்தனைகளும் முயற்சியுமே எம்மை உயர்த்தும். Jaffna Horticulture Private Ltd எனும் பெயரில் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு, அதில் முதல்கட்ட வெற்றியும் கண்டிருக்கும் ஜஸ்டின் குமார் அவர்களுக்கும் அவரது பணியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.

https://www.tamilvbc.com/?p=60790&fbclid=IwAR2USRvtCQQbCdqd6WBjTd-ZXd2HwSg7unhi-TyoQoM6yleA3cxIjyHdISE

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா அரசியல்வாதிகளின் பின்னாலும் வெளிநாட்டுக்கனவிலும் வாள்வெட்டுச்சண்டையிலும் போதையிலும் அலையும் இழைஞர்கள் இந்த முயற்சியில் இணையலாம். சும்மா இருப்பவர்களைத்தான் இவ்வாறான நோய்கள் பற்றிக்கொள்ளும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி வீடியோ பதிவாகவும் யாழில் இணைக்கப்பட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.