Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் துப்பாக்கிச்சூடு - 9 பேர் உயிரிழப்பு

932440.jpg துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவரை ஆம்புலன்சில் ஏற்றும் காட்சி

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

கலிஃபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மான்டெரி பார்க் நகரில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ள இங்கு, ஆயிரக்கணக்கானோர் ஒன்றாகக்கூடி சீன புத்தாண்டை கொண்டாடிக்கொண்டிருந்தபோது அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை இரவு 10.22 மணி அளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

நடன அரங்கில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர் ஒரு ஆண் என்றும், கையில் வைத்திருந்த இயந்திர துப்பாக்கியைக் கொண்டு அவர் கண்மூடித்தனமாக சுட்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டை அடுத்து அங்கிருந்தவர்கள் அனைவரும் அலறி அடித்துக்கொண்டு பாதுகாப்பான இடம் நோக்கி ஓடியுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொண்டாட்டத்தில் இருந்தபோது எதிர்பாராத விதமாக இந்த துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும், அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் வெளிவர முடியவில்லை என்றும் 47 வயதாகும் எட்வின் சென் என்ற நபர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நடன அரங்குக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகர கட்டுப்பாட்டாளர் கென்னித் மெஜியா ஆழ்ந்த வேதனை தெரிவித்துள்ளார்.

 

https://www.hindutamil.in/news/world/932440-nine-people-killed-in-mass-shooting-at-monterey-park-in-california-s-los-angeles-area.html

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமெரிக்காவில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் துப்பாக்கிச் சூடு: 10 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் துப்பாக்கிச் சூடு

பட மூலாதாரம்,EPA

44 நிமிடங்களுக்கு முன்னர்

அமெரிக்காவின் மாண்ட்ரே பார்க் நகரில் நடைபெற்ற சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நிகழ்ந்த துப்பாச்சுச் சூடு சம்பவத்தில் 10 பலியாகி உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

உள்ளூர் நேரப்படி, சனிக்கிழமை இரவு 10.20 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

 

 

சந்திர  புத்தாண்டை கொண்டாடுவதற்காக கலிஃபோர்னியாவின் மாண்ட்ரே பார்க் பகுதியில் ஆயிரக்கணக்கான நபர்கள் கூடியிருந்தனர். அப்போது நபர் ஒருவர் கண்மூடித்தனமாக தூப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில் 10 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும், எத்தனை பேர் காயமடைந்துள்ளனர் என்றும் யாராவது கைது செய்யப்பட்டுள்ளனரா என்பது குறித்தும் போலீஸ் தரப்பில் இதுவரை எதுவும் தெரிவிக்கப்படவில்லை. 

துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் ஆண் என லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் துறை தெரிவித்துள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸுக்கு கிழக்கே சுமார் எட்டு மைல் (13 கிமீ) தொலைவில் அமைந்துள்ள நகரத்தில் ஏராளமான போலீசார் இருப்பதை சமூக ஊடகத்தில் உள்ள காணொளிகள் காட்டுகின்றன. 

மூன்று நபர்கள் தனது உணவகத்துக்குள் ஓடி வந்து கதவை பூட்டிக்கொள்ளும்படியும், இயந்திர துப்பாக்கியுடன் நபர் ஒருவர் சுற்றித்திரிவதாகவும் தன்னிடம் கூறியதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தி லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் ஊடகத்திடம் தெரிவித்தார். 

வருடாந்த சீன புத்தாண்டு விழா என்பது ஒரு வார இறுதி நிகழ்வாகும். கடந்த முறை ஒருலட்சத்திற்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

மாண்ட்ரே பார்க் பகுதியில் 60 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். ஆசிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகவும் இது உள்ளது. 

https://www.bbc.com/tamil/articles/c90k2x97wzdo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கலிபோர்னியாபடுகொலை – தாக்குதலை மேற்கொண்டவர் அடையாளம் காணப்பட்டார்

7-17.jpg

கலிபோர்னியாவின் மொன்டெரே பார்க்கில் துப்பாக்கிசூட்டை மேற்கொண்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். 72வயதான ஹியு கான் டிரான் என்பவரே பத்துபேர் கொல்லப்பட்ட இந்த துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து தப்பிச்செல்ல முயன்ற வானை பொலிஸார் துரத்திச்சென்றவேளை இந்த நபர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.வானிற்குள்ளிலிருந்து 72 வயதான டிரானின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

இந்த நபர் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்ற இடத்திற்கு நடன நிகழ்வு இடம்பெற்ற பகுதிக்கு அடிக்கடி சென்று வந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.சந்தேகநபர் தனது முன்னாள் மனைவியை அங்கு சந்தித்துள்ளார்.
 

 

https://akkinikkunchu.com/?p=236093

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமெரிக்கா எண்டால் ஒரு நாளைக்கு ஒரு டுமீல் ஆவது இருக்கோணும்.அப்பிடியெண்டால் தான் நாட்டுக்கு மரியாதை கண்டியளோ......

உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அநியாயமாக அப்பாவி மக்களை கொன்று தள்ளுறாங்கள்........!

ஆழ்ந்த இரங்கல்கள்......!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, கிருபன் said:

சந்தேக நபர் தனது முன்னாள் மனைவியை அங்கு சந்தித்துள்ளார்..

மனைவியைச்சந்தித்த மகிழ்ச்சியில் மனிசன் மற்ற மனிசாளைப் போட்டுத் தள்ளியிருக்கிறார்.வன்முறைதான் இப்போ வாழ்க்கை முறை ஆகிக்கொண்டு போகிறது.ஆழ்ந்த இரங்கல்கள்.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.