Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இருக்கிற கடனையும், இனிப் பெறப்போகும் கடனையும் அடைக்கப் பத்து ஆண்டுகளுக்கு வடக்கில் அபிவிருத்தித் திட்டங்கள் - யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கிற கடனையும், இனிப் பெறப்போகும் கடனையும் அடைக்கப் பத்து ஆண்டுகளுக்கு வடக்கில் அபிவிருத்தித் திட்டங்கள் - யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Published By: T. Saranya

11 Feb, 2023 | 10:09 AM
image

வடக்கு மாகாணத்தில் அடுத்து வரும் பத்து ஆண்டுகளுக்கு விவசாயம், கடற்றொழில், சுற்றுலாத் துறைகளை மேம்படுத்துவதற்கும், நவீன தொழில் நுட்பத்தைப் பின்பற்றுவதற்கும் அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளது.  இன்று நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நிலையில் இருந்து நாங்கள் மீண்டெழ வேண்டுமென்றால் பத்து வருடத்துக்கான அபிவிருத்தித் திட்டம் அவசியமானதாகும் என்றும்,  நாங்கள் இது வரை பெற்ற கடன்களை மீளச் செலுத்த வேண்டியிருக்கிறது. இந்த வருடமும், இனி வரும் சில வருடங்களும் கடன்களைப் பெற வேண்டியும் இருக்கிறது. இருக்கிற கடனையும், இனிப் பெறப்போகும் கடனையும் அடைக்க வேண்டிய தேவை இருக்கிறது என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (10) மாலை இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி குறித்த கலந்துரையாடல் ஒன்று நேற்று பிற்பகல் யாழ்ப்பாணத்திலுள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நடைபெற்றது. 

அபிவிருத்தியின் பங்காளர்களான நிபுணர்கள், கல்வியியலாளர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், தொழில் முயற்சியாளர்கள் மற்றும் கமக்காரர்கள் அபிவிருத்தியில் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் ஜனாதிபதியின் நேரடிக் கவனத்துக்குக் கொண்டுவரும் வகையில் ஜனாதிபதி செயலகத்தினால் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தக் கலந்துரையாடலில் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் எக்கநாயக்க, வட மாகாண பிரதம செயலாளர் பந்துசேன,  ஜனாதிபதியின் வட மகாண இணைப்பாளரும், மேலதிக செயலாளருமான இ.இளங்கோவன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன், யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.பிரதீபன் உட்பட அரச அதிகாரிகளும், பொலிஸ், இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பின் போது உரையாற்றிய ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில்,

நாங்கள் குறுகிய காலத்துக்குள் முடிக்க வேண்டிய பிரச்சினைகள் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். அவை தொடர்பில் நிதிப்பற்றாக்குறை இருக்கிறது. எதிர்காலத்தில் அவை பற்றிப் பேசித் தீர்மானம் எடுப்போம்.  இன்று நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நிலையில் இருந்து நாங்கள் மீண்டெழ வேண்டுமென்றால் பத்து வருடத்துக்கான அபிவிருத்தித் திட்டம் அவசியமானதாகும். நாங்கள் இது வரை பெற்ற கடன்களை மீளச் செலுத்த வேண்டியிருக்கிறது. இந்த வருடமும், இனி வரும் சில வருடங்களும் கடன்களைப் பெற வேண்டியிருக்கிறது. இந்தக் கடனையும், இனிப் பெறப்போகும் கடனையும் அடைக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதேநேரத்தில் அந்நியச் செலவாணிக் கையிருப்பையும்பேண வேண்டிய அவசியம் இருக்கிறது.  

எனவே ஒரு ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை உருவாக்குவது பற்றி நாங்கள் சிந்திக்கிறோம். மிகவும் போட்டித் தன்மை மிக்க ஒரு பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை இருக்கிறது.  நாங்கள் இதற்கென சில மாகாணங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். அந்த மாகாணங்களில் வடக்கு மாகாணமும் ஒன்று. இந்த விடயங்களை நாம் முன்னெடுத்து வரும் போது வடக்கின் பொருளாதாரம் மிகவும் உயர்ந்த நிலையை அடையும். வடக்கு, வட மத்தி மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே நாங்கள் அபிவிருத்தி சார்ந்து மிக முக்கிய கவனம் செலுத்துகிறோம்.  விவசாயத்தை முன்னேற்றுவது எமது திட்டத்தின் முக்கிய அம்சமாகும். கிளிநொச்சியிலிருந்து குமண வரை நெல் உற்பத்தியைப் பெருக்குவதற்கான திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.  ஒரு ஏக்கரில் இருந்து ஏழு மெற்றிக் தொன் அறுவடையைப் பெற்றுக் கொள்வது எங்களுடைய இலக்காகும்.  இதற்காக நவீன தொழில்நுட்பத்தை உள்வாங்க வேண்டிய தேவை உள்ளது.  வடக்கில் நெல் உற்பத்தியை மேற்கொண்டால் ஏனைய பகுதிகளில் ஏற்றுமதி சார் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

யாழ்ப்பாணத்தைப் பொறுத்த மட்டில் அடுத்து வரும் பத்தாண்டுகளுக்குள்.  உயர் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயத்தையும், கடற்றொழிலையும் மேம்படுத்துவதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம் . இந்திய மீனவர்களால் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் இழுவை மடிப் படகுப் பிரச்சினைக்கும் அமைச்சர்களுடன் கலந்துரையாடி  விரைவில் தீர்வைப் பெற்றுத் தர இருக்கிறோம். வடக்கு மாகாணத்துக்கான நீர் விநியோகம் தொடர்பில் மல்வத்து ஓயாவில் இருந்து நீரைக் கொண்டு வருவதற்கான திட்டமொன்றையும் நாங்கள் வைத்திருக்கிறோம். அத்துடன் ஆனையிறவு களப்புப் பகுதியில் உவர் நீரில்லாமல் நன்னீரைத் தேக்கி வைப்பதற்கான திட்டம் ஒன்றும், பூநகரி குளத்தையும் அபிவிருத்தி செய்யவுள்ளோம்.

மேலும், திருகோணமலையில் இருந்து மன்னார் வரை சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வதற்கும்,  வடக்கிலுள்ள இந்து ஆலயங்களுக்கு இந்தியாவிலிருந்தும், மலேசியாவிலிருந்தும் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதற்கும், புதிய ஹோட்டல்களை அமைப்பதற்கும் திட்டமிட்டுள்ளோம். மாற்று வலு மின் உற்பத்தித் திட்டங்களும் இருக்கின்றன. அத்துடன் கடற்பகுதியில் காற்றாலை மின்னுற்பத்தி மற்றும் உயிர்வாயு உற்பத்தி பற்றியும் ஆராய்ந்து வருகிறோம். இதன் மூலம் நாட்டிலுள்ள பசுமை சக்தி உற்பத்தித் தேவைக்கு வடக்கு மாகாணம் பங்களிக்கும் என்றார்.

விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் உரத் தட்டுப்பாடு தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்த போது,  "விவசாயத்தைப் பொறுத்தமட்டில் ஒரு விடயத்தைக் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். இம்முறை உரத்துக்கான மானியத்தில் நெற்செய்கைக்காக மட்டுமே வழங்கியிருக்கிறோம். அரசாங்கத்துக்கு அது ஒரு உதவித்திட்டத்தின் கீழ் கிடைத்தது. அதனால் ஏனைய பயிர்களுக்கான உர மானியம் பற்றி - அதனை எங்கிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்பது பற்றி ஆராய்ந்து வருகிறோம்" என்று குறிப்பிட்டார்.

புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு வருகின்ற போது, அதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்வதில் மிக நீண்ட கால தாமதம் ஏற்படுகிறது. இந்தத் தாமதம் நீக்கப்பட வேண்டும். முதலீட்டாளர்களைப் பொறுத்த வரை குறுகிய காலத்துக்குள் நடைமுறைப்படுத்துவதையே விரும்புகிறோம் என்று முதலீட்டாளர் ஒருவர் குறிப்பிட்டதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, இலங்கையில் முதலீடு செய்யவிரும்பும் வெளிநாட்டில் வதியும் இலங்கையர்களுக்கென நாங்கள் புலம்பெயர்ந்தோருக்கான முதலீட்டு அலுவலகங்களைத் திறந்துள்ளோம்.  அவ் அலுவலகங்கள் முதலீட்டாளர்களுக்கான சகல தேவைப்பாடுகளையும் மூன்று மாத காலத்துக்குள் பூர்த்தி செய்து தரும். அரச அலுவலகங்களில் இருக்கும் நடைமுறைத் தாமதங்கள் பற்றி நீங்கள் அறிவீர்கள். இவற்றை விரைவுபடுத்த அரசாங்கம் முயற்சி செய்யும் என்றார்.

அத்துடன் அமைய அடிப்படையில் பணியாற்றும் சிற்றூழியர்களுக்கான நிரந்தர நியமனம்,  திக்கம் வடிசாலைப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், வீதி புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு தரப்பினரும் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.

 

 

https://www.virakesari.lk/article/147934

  • கருத்துக்கள உறவுகள்

“தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பை வழங்கக்கூடிய வகையில் வடக்கு மாகாணம் அபிவிருத்தி செய்யப்படும்”

வடக்கை யுத்தத்திற்கு முன்னரான நிலைக்கு கொண்டுவரப்போகின்றேன் – ஜனாதிபதி

நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பை வழங்கக்கூடிய வகையில் வடக்கு மாகாணம் அபிவிருத்தி செய்யப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

யுத்தத்திற்கு முன்னர் வடக்கு மாகாணம் தேசிய பொருளாதாரத்திற்கு பரந்தளவிலான பங்களிப்பை வழங்கியது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த பலமான பொருளாதாரத்தை மீட்டெடுக்க தேவையான அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கத்தின் ஊடாக மாத்திரம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும், பொருளாதார அபிவிருத்தியம் அவசியம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் பொருளாதார அபிவிருத்தியின் வேகம் மக்களின் மனப்பான்மை மற்றும் அர்ப்பணிப்பில் தங்கியுள்ளது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2023/1323872

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

வடக்கை யுத்தத்திற்கு முன்னரான நிலைக்கு கொண்டுவரப்போகின்றேன் – ஜனாதிபதி

அப்பாவி கோவிந்தன்::: வடக்கில், யுத்தத்ததை ஆரம்பித்தது யார்? 
ரணில்:::  அதுகும், நாங்க தாங்க. 

அப்பாவி கோவிந்தன்::: தேர் நின்ற இடத்திலேயே... நின்றிருக்கலாமில்லை. 
அதை ஏன்...  இழுத்து, நடுத் தெருவில் விட்டீங்க.  

ரணில்::: 🙃

😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

வடக்கு மாகாணத்துக்கான நீர் விநியோகம் தொடர்பில் மல்வத்து ஓயாவில் இருந்து நீரைக் கொண்டு வருவதற்கான திட்டமொன்றையும் நாங்கள் வைத்திருக்கிறோம்.

தமிழரிடம் இருக்கிற மிச்சம் மீதி நிலத்தையும் எப்பிடி பறிக்கிறதென்று திட்டம் தீட்டுங்கோ! நீண்ட திட்டம் கைவசம் இருக்கும். மகாவலித்திட்டம், வனவள பாதுகாப்பு,  தொல்பொருளியல், புதிதாக மல்வத்துஒயா நீர்திட்டம் இன்னும் என்னென திட்டங்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

மொட்டயள், எதிர்போ?

அதெல்லாம் சும்மா.

மாமா சொக்கிலேற்றை வாங்கி தர போறன்.... கீ...கி...கீ 😁

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

மொட்டயள், எதிர்போ?

அதெல்லாம் சும்மா.

மாமா சொக்கிலேற்றை வாங்கி தர போறன்.... கீ...கி...கீ 😁

இதே மொட்டையல் சைனா காரனுக்கு நாட்டை கூறுபோட்டு விற்கையில் எங்கு போய் ஒளித்து இருந்தவங்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

இதே மொட்டையல் சைனா காரனுக்கு நாட்டை கூறுபோட்டு விற்கையில் எங்கு போய் ஒளித்து இருந்தவங்கள் ?

தமக்கு மூக்கு போனாலும்,  தமிழனுக்கு ஒரு நன்மையும் 
கிடைக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

"கோத்தா கோ ஹோம்" போராட்டத்தை  உடனே அடக்கியவர்கள்..
பிக்குகள் அரசியலமைப்பு சட்டத்தை  எரித்து போராட்டம் செய்யும் போது, 
ஏன்... ஒன்றும் செய்யாமல் இருந்தவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையும் கிள்ளி, தொட்டிலயும் ஆட்டும் வேலை எத்தனை நாளுக்கு?

இவருக்கு யாரு கடன் தரப்போகினம். கடன் வாங்கி யாழ்பாணத்தை அபிவிருத்தி செய்யப்போறாராம்.

நேற்று ஜஎம்எப் தெளிவாக சொல்லி விட்டது, கடன் தர முதல், நாட்டில் உள்ளக மறுசீரமைப்பு வரவேண்டும் என.

நாட்டில், அரசியல் உறுதிப்பாடு இல்லாமல் யார் கடன் தருவார்?

சிங்களவர் எதிர்ப்பு, தமிழரின் சுஜநிர்ணய உரிமையை உறுதி செய்யும். புலிகள் போராட்ட நியாயத்தை உறுதி செய்யும்.

அதேவேளை இந்தியா வடக்கு, கிழக்கையும், சீனா தெற்கையும் தமது ஆளுகைக்குள் கொண்டு செல்லப் போகினம்.

  • கருத்துக்கள உறவுகள்

நரியின் திட்டம்; இந்த மொட்டை முட்டாள்களை தூண்டி ஆர்ப்பாட்டம் பண்ணினால், சர்வதேசம் பயந்து தமிழர் சுயநிர்ணயத்தைவற்புறுத்துவதை  கைவிடும், அதோடு அதுக்கு முழுக்கு போட்டுவிடலாமென்று நினைத்து தூண்டலாம். ஆனால் தான் ஒரு நாட்டையாள வக்கத்த தலைவன், இந்த மொட்டையள மீறி நாட்டில் ஒன்றும் செய்ய முடியாது என மைத்திரி ஒப்புக்கொண்டுள்ளார், இவர் கையாலாகாத்தனமாய் பாத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் அது உண்மையில்லை, கோத்தாவுக்கு எதிராக அமைதியாக போராடிய கலகக்காரரை சாட்டி வன்முறையை தூண்டிய பாராளுமன்ற  அமைச்சர்களையும், கலகக்காரரை பயங்கரவாத சட்டத்தை பிரயோகித்து கைது செய்ததையும் சர்வதேசம் கண்கூடாக பார்த்து தன் எதிர்ப்பையும் காட்டியிருக்கு. ஆகவே இவர் நாட்டை முன்னேற்றுவாரென்றோ, நீதியை நிலைநாட்டுவாரென்றோ, வாங்கும் கடனை திருப்பித்தருவாரென்றோ நிரூபிக்க தவறிவிட்டார். எடுத்துக்காட்டு; உற்ற நண்பன் சீனாவே தன் கடனை விட்டுக்கொடுக்க மறுக்கிறது. காரணம்; சும்மா இருந்து நாட்டை எரிக்கும் இவர்களுக்கு யார் கடன் கொடுத்து, தங்கள் பணத்தையும் எரித்துவிட்டு, மீண்டும் கைநீட்டுபவர்களுக்கு கடன் கொடுக்க இந்தியாவுக்கு மட்டுமே அந்த தேவை இருக்கிறது. நாட்டில் உள்ள பழைய பஸ், ரெயின் குப்பைகளை அன்பளிப்பு என  தள்ளி விட்டு, தன் கட்டுப்பாடுக்குள் வைத்திருக்கிறேன் என்றொரு கனவு காணும் நாடு அது!

15 hours ago, கிருபன் said:

நாங்கள் இது வரை பெற்ற கடன்களை மீளச் செலுத்த வேண்டியிருக்கிறது. இந்த வருடமும், இனி வரும் சில வருடங்களும் கடன்களைப் பெற வேண்டியும் இருக்கிறது. இருக்கிற கடனையும், இனிப் பெறப்போகும் கடனையும் அடைக்க வேண்டிய தேவை இருக்கிறது

அடப்பாவிகளா! எதிர்காலத்திலும்  கடன் வாங்குவதென்று வெட்கமில்லாமல், நாக்கூசாமல், இதுதான் தங்கள் தொழிலென்று சொல்லுறார்கள். எத்தனைபேர் மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும் இந்த நிலையிலிருந்து இவர்கள் மாறபோவதில்லை. யார் சர்வதேசத்தை ஏமாற்றி, தமிழரை நசுக்கி பணம் சேர்ப்பதில் வல்லவர்கள் என்கிற போட்டிதான் இவர்களுக்குள் இருக்கும்போல். நாட்டை சுயகவுரவமாய் நிர்வகிக்க யாருக்கும் திறனில்லை.       

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.