Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா அச்சம் ; மகனுடன் வீட்டுக்குள் முடங்கிய பெண் ; 3 ஆண்டுகளின் பின் மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா அச்சம் ; மகனுடன் வீட்டுக்குள் முடங்கிய பெண் ; 3 ஆண்டுகளின் பின் மீட்பு

Published By: T. SARANYA

24 FEB, 2023 | 02:42 PM
image

கொரோனா அச்சத்தால் கணவனை பிரிந்து மூன்று ஆண்டுகள் மகனுடன் வீட்டினுள் தனிமையில் இருந்த பெண் புதன்கிழமை (22) பொலிஸாரினால் மீட்கப்பட்ட சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

உலக நாடுகள் அனைத்தையும் கடந்த 2020 ஆம் ஆண்டு பரவிய கொரோனா தொற்று கடுமையாக பாதித்திருந்தது. இலட்சக்கணக்கான மக்கள் இதன் மூலம் கடும் அவதிப்பட்ட சூழலில், அடுத்தடுத்து இரண்டாம் கட்ட அலைகளும் உருவாகி  ஓரிரு ஆண்டுகள் உலக நாடுகளே ஸ்தம்பித்து போனது.

பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் உலக நாடுகளை பெரும்பாடு படுத்தியிருந்தது. தொடர்ந்து, தற்போது அனைத்து நாடுகளும் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கிறது. அப்படி இருக்கையில், இந்தியாவில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் செய்துள்ள செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம், குருகிராம் பகுதியில் சுஜன் மாஜி மற்றும் முன்முன் மாஜி தம்பதி ஒரு மகனுடன் வசித்துவந்துள்ளனர். இந்நிலையில்,  கொரோனா தொற்றின் போது தனிமனித இடைவெளி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை முன்முன் மாஜி மிக தீவிரமாக கடைபிடித்துள்ளார். அப்படி இருக்கையில் கொரோனா பரவல் முடிந்து இயல்புநிலை திரும்பி இருந்தாலும் முன்முன் மாஜி வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

கணவர் சுஜன் தன்னுடைய மனைவியிடம் பலமுறை கூறியும் பயனளிக்கவும் இல்லை. நாட்கள் செல்ல செல்ல அவர் சரியாகிவிடுவார் என்றும் சுஜன் கருதி வந்த சூழலில் அலுவலகம் சென்று வந்த சுஜனையும் முன்முன் வீட்டுக்குள் சேர்க்கவில்லை. வீட்டை பூட்டிக் கொண்டு தன்னுடைய மகனுடன் முன்முன் வாழ்ந்து வந்த சூழலில், அவரது வீட்டுக்கு அருகே வேறு வழியில்லாமல் வாடகை வீடு ஒன்றையும் எடுத்து தங்கி வந்துள்ளார் சுஜன்.

முன்முன் சமையல் எரிவாயு பயன்படுத்துவதையும் நிறுத்தி மின் அடுப்பை பயன்படுத்தி வந்துள்ளார். சுஜன் மனைவி மற்றும் மகனுக்காக காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்கி வீட்டு கதவருகே வைத்து விட்டு சென்றுள்ளார்.  மேலும்,  தன் மனைவி மற்றும் மகளுடன் வீடியோ கால் மூலமாகவும் அவர் பேசி வந்துள்ளார்.

இந்நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் தன்னால் முடியாமல் போக பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் சுஜன். பொலிஸார் மற்றும் குழந்தைகள் நலத்துறை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் வீட்டிற்கு வந்தும் முன்முன் மாஜி கதவைத் திறக்கவில்லை . தொடர்ந்து வேறு வழியின்றி பொலிஸார் கதவை உடைத்துச் சென்று அவர்களை மீட்டு வந்த சூழலில் கவுன்சிலிங் கொடுத்து வைத்தியசாலையில் அனுமதித்ததுள்ளார்கள்.

69.JPG

https://www.virakesari.lk/article/149067

  • கருத்துக்கள உறவுகள்

மகனுக்கு..  மூன்று வருட படிப்பும் போச்சு.
பெரியார்… ஹரியானாவில் பிறந்திருந்தால்,
முன் முன் மாஜி போன்றவர்களை…
மூளைச் சலவை செய்திருப்பார். 😂 🤣

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

3 ஆண்டுகள் மகனோடு வீட்டில் அடைபட்டு வாழ்ந்த தாய்: காரணம் என்ன? உளவியல் பாதிப்பு என்ன?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,சுசீலா சிங்
  • பதவி,பிபிசி செய்தியாளர்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்
பெண்ணின் வீட்டுக்கு வெளியே

பட மூலாதாரம்,ANI

 
படக்குறிப்பு,

பெண்ணின் வீட்டுக்கு வெளியே

இந்திய தலைநகர் டெல்லியை ஒட்டியுள்ள குருகிராமில் ஒரு வித்தியாசமான விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில் ஒரு தாய் தன் மகனுடன் மூன்று ஆண்டுகளாக வெளியிலேயே வராமல் வீட்டுக்குள்ளேயே இருந்துவந்துள்ளார். கணவர் வேறு வீடு எடுத்து தனியாக அருகே வசித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுபவை:

• இந்த பெண்ணின் மகனுக்கு 2015-2016 இல் ஆஸ்துமா ஏற்பட்டது.

• கொரோனாவுக்குப் பிறகு பயம் காரணமாக கணவரை வீட்டுக்கு வர அனுமதிக்கவில்லை.

 

• இந்த பெண் ஒரு இல்லத்தரசி. அவரது கணவர் வேலை செய்கிறார்.

• கணவர் வீட்டுக்கு அருகில் வாடகைக்கு வீடு எடுத்து இருக்கிறார்.

• உணவு பொருட்களுக்கு கணவர்தான் ஏற்பாடு செய்துவந்தார்.

• கொரோனா காலம் முடிந்ததும், தேர்வெழுதுவதற்காக குழந்தையை பள்ளிக்கு அனுப்புமாறு கணவர் கேட்டுக் கொண்டார். ஆசிரியரிடம் கூறி தேர்வை ஆன்லைனில் நடத்த முயற்சிப்பதாக அப்போது அந்தப் பெண் கூறியுள்ளார்.

கிழக்கு குருகிராம் காவல்துறை உதவி ஆணையர் டாக்டர் கவிதா, குடும்பத்தின் தனியுரிமை மதிக்கப்பட வேண்டும் என்று பிபிசியிடம் கூறினார்.

இந்த நபர் இந்த விஷயத்தில் குழந்தைகள் நலக் குழுவின் (CWC) உதவியை நாடியதாக, குடும்பத்தின் எந்த உறுப்பினரின் பெயரையும் குறிப்பிடாமல் அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து அந்த குடும்பம், காவல்துறை மற்றும் குழந்தைகள் நலக்குழு உதவியுடன் மீட்கப்பட்டது.

முழு விவகாரம்

"மகனுக்கு ஆஸ்துமா இருப்பதால் கொரோனாவின் போது அவனை வெளியே அனுப்பினால் அவதிப்படுவான் அல்லது இறந்துவிடுவான் என்று இந்தப்பெண் பயந்தார். கொரோனா முடிந்ததும் அந்த பெண்ணுடைய கணவர் எல்லாவற்றையும் விளக்கினார். ஆனால் ஒருவேளை அவருக்கு புரியவில்லை என்று தோன்றுகிறது. அதன் பிறகு கணவர் உதவியை நாடினார்,” என்று மருத்துவர் கவிதா குறிப்பிட்டார்.

இந்த பெண்ணையும், அவரது மகனையும் மீட்ட போது ஓர் அறையில் குப்பைகள் குவிந்திருந்தன என்று போலீசார் தெரிவித்தனர்.

வீட்டை அவர் சுத்தம் செய்யவில்லை என்பது இதற்கு பொருள் அல்ல. துடைப்பதாலோ அல்லது பெருக்குவதாலோ தூசி காரணமாக மகனுக்கு ஆஸ்துமா அதிகமாகிவிடுமோ என்று அவர் பயந்திருக்கிறார்.

தமது குழுவினர் அந்தப்பெண்ணையும், குழந்தையையும் குழந்தைகள் நலக்குழு முன்னிலையில் ஆஜர்படுத்திய போது அந்தப் பெண், “எங்களிடம் வந்ததன்மூலம் நீங்கள் சிறப்பான வேலையை செய்துள்ளீர்கள். நான் மிகவும் பயந்துபோயிருந்தேன். இப்போது கொரோனா இல்லை” என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

அந்த பெண்ணுக்கும், குழந்தைக்கும் மருத்துவப் பரிசோதனை நடந்து வருகிறது. அப்பெண்ணுக்கும் குழந்தைக்கும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏதேனும் பாதிப்பு உள்ளதா என்பதை அறிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

குருகிராமில் நடந்துள்ள இதுபோன்ற சம்பவம் புதிதல்ல என்று உளவியலாளர்களும், மனநல மருத்துவர்களும் கூறுகின்றனர்.

டெல்லியை ஒட்டியுள்ள நொய்டாவில் இரண்டு சகோதரிகள் தொடர்புடைய விவகாரம் செய்திகளில் இடம்பெற்றிருந்தது. தங்கள் தந்தையின் மரணத்திற்குப் பிறகு இந்த இரண்டு சகோதரிகளும் சுமார் ஆறு மாதங்கள் வீட்டிலேயே அடைந்து கிடந்தனர்.

பெண்ணின் வீடு

பட மூலாதாரம்,ANI

மனம் மற்றும் உடல் மீதான விளைவுகள்

ஒரு நோய் வந்துவிடுமோ என்ற பயம் ஒருவருக்கு இருந்தால், அத்தகைய நிலை 'ஹைபோகாண்ட்ரியாசிஸ்' என்று அழைக்கப்படுகிறது என்று மருத்துவர்கள் கூருகின்றனர்.

குழந்தைக்கு கோவிட் வந்துவிடுமோ என்று இந்தப் பெண் பயந்ததாகவும், அதன் காரணமாக மூன்று ஆண்டுகள் மகனையும் தன்னையும் வீட்டில் பூட்டிக் கொண்டதாகவும் உளவியல் நிபுணர் மருத்துவர் நிஷா கன்னா கூறுகிறார். அவர் குழந்தையைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார் என்பதையும் அந்தப்பெண் மன அளவில் நிலையற்றவராக இருந்தார் என்பதையும் இது காட்டுகிறது.

அதே சமயம், இதை ஒருவித ஃபோபியா அல்லது பயம் என்று சொல்லலாம் என்றும் கொரோனா காலத்தில் இதை பலரிடம் தாம் பார்த்ததாகவும் மனநல மருத்துவர் சௌம்யா முத்கல் கூறுகிறார்.

"அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் இது ஒரு மனநலப் பிரச்னையாக இருக்கலாம். அதே சமயம் இந்தப் பெண் குழந்தையை பாதுகாப்பாக வைத்திருக்கும்பொருட்டு இயல்பு வாழ்க்கை வாழ்வதை தடுத்துள்ளார்.”

ஒரு குழந்தை சமூக வாழ்க்கையிலிருந்து துண்டிக்கப்பட்டால், அது என்ன வகையான விளைவை ஏற்படுத்தும்?

”இந்த குழந்தைக்கு 10 வயது என்று கூறப்படுகிறது. இந்த வயதில் குழந்தைகள் வெளியில் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்வார்கள். இது குழந்தையின் மீது சுமத்தப்பட்டதா அல்லது குழந்தை தனது சொந்த விருப்பத்தின் பேரில் அதைச் செய்ததா என்பதை புரிந்துகொள்வது அவசியம். அது எப்படி இருந்தாலும் குழந்தை வீட்டுக்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்தது. இது குழந்தையின் மன ஆரோக்கியத்தை பாதித்திருக்கக்கூடும்,” என்று மருத்துவர் சௌம்யா முத்கல் குறிப்பிட்டார்.

அத்தகைய சூழ்நிலையில் குழந்தையின் மீது பல விளைவுகள் ஏற்படலாம் என்று இரண்டு மருத்துவர்களும் கூறுகிறார்கள்.

ஒரு குழந்தை நீண்ட காலம் சமூகத்தில் இருந்து துண்டிக்கப்பட்டால். அதன் ஆளுமையும் பாதிக்கப்படும் என்பது நிரூபணமாகியுள்ளது.

• குழந்தை இண்ட்ரோவெர்ட் அதாவது அதிகம் மனம் விட்டுப்பேசாத ஆளாக மாறலாம்

• சமூகத்துடன் உறவாடுவதில் சிரமம் ஏற்படலாம்.

• குழந்தை கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் வாழ்ந்திருந்தால், யாரோ ஒருவர் தன் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடும் என்ற அச்சம் இருக்கலாம்.

• பய உணர்வு

• நோய் வந்துவிடுமோ என்ற பயம்

• தூய்மையில் சிக்கல்

• படிப்பில் தாக்கம்

பெண்ணின் வீடு

பட மூலாதாரம்,ANI

“குழந்தை குடும்பத்தின் மீது நம்பிக்கையை இழக்கலாம். ஏனென்றால் குழந்தையின் பாதுகாப்புக்காக மூன்று ஆண்டுகள் இந்த நிலையில் அது வைக்கப்பட்டிருந்தது. ஆனால், தன்னைவிட மிகவும் முன்னேறியவர்களாக இருக்கும் வெளியில் உள்ள குழந்தைகளுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அதற்கு அதிர்ச்சியும் ஏற்படும்.”

இந்த சூழலில் பிரமை ஏற்படக்கூடும் என்றும், அந்தப்பாதுகாப்பின்மை உணர்வை குழந்தை மீது செலுத்தி அதைக் கட்டுப்படுத்தத் தொடங்கிவிடுவீர்கள் என்றும் கூறுகிறார் மருத்துவர் நிஷா கன்னா.

வெளியே செல்ல அனுமதிப்பதில்லை. அப்படி அனுமதித்தாலும் அவர் எங்கிருக்கிறார் என்று திரும்பத் திரும்ப கேட்டு தெரிந்து கொள்ளும் போக்கும் பலரிடம் காணப்படுகிறது.

அந்தப்பெண்ணுக்கு இவ்வளவு பிரச்னைகள் இருக்கும்போது, கணவர் ஏன் இந்த நடவடிக்கையை முன்னதாகவே எடுக்கவில்லை என்றும் நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்தப் பெண்ணும், குழந்தையும் முழுமையாக பரிசோதிக்கப்பட்டு, அவர்கள் ஏதேனும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்பதைப் பார்த்து, அதன் அடிப்படையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/c72xnw1rydzo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.