Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகளிர் ஐபிஎல் 2023 செய்திகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரூ.3.4 கோடிக்கு ஏலம் போன கிரிக்கெட் வீராங்கனை மந்தனா!

 

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் பெண் வீராங்கனைகள் ஏலம் இன்று நடைபெற்றது.
அங்கு ஏலம் போன முதல் வீராங்கனை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் சிறந்த வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா ஆவார்.

manthana.png
ரூ.3.4 கோடிக்கு மந்தனாவை றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்கியது.

இந்த ஆண்டு உலகக் கிண்ண மகளிர் அணியில் இருக்கும் ஸ்மிருதி மந்தனா, அந்த மகிழ்ச்சியை நேரலையில் பார்த்துக் கொண்டாடினார்.

https://thinakkural.lk/article/239430

  • கருத்துக்கள உறவுகள்
On 25/2/2023 at 07:27, ஏராளன் said:

ரூ.3.4 கோடிக்கு ஏலம் போன கிரிக்கெட் வீராங்கனை மந்தனா!

 

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் பெண் வீராங்கனைகள் ஏலம் இன்று நடைபெற்றது.
அங்கு ஏலம் போன முதல் வீராங்கனை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் சிறந்த வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா ஆவார்.

manthana.png
ரூ.3.4 கோடிக்கு மந்தனாவை றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்கியது.

இந்த ஆண்டு உலகக் கிண்ண மகளிர் அணியில் இருக்கும் ஸ்மிருதி மந்தனா, அந்த மகிழ்ச்சியை நேரலையில் பார்த்துக் கொண்டாடினார்.

https://thinakkural.lk/article/239430

அதிர‌டியா ஆட‌க் கூடிய‌வா அடுத்த‌ இந்தியா ம‌க‌ளிர் அணியின் க‌ப்ட‌ன் இவா தான்.............❤️🙏

 

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் 5அணிக‌ள்..............கால‌ப் போக்கில் இன்னும் 3அணிக‌ள் புதிதா சேர்க்க‌ ப‌ட‌க் கூடும்................

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மகளிர் பிறீமியர் லீக் ஆரம்பப் போட்டியில் மும்பை - குஜராத் மோதுகின்றன

04 MAR, 2023 | 07:18 PM
image

 

(என்.வீ.ஏ.)


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அங்குரார்ப்பண மகளிர் பிறீமியர் லீக் (Women's Premier League) இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டி மும்பை, டி. வை. பட்டேல் மைதானத்தில் இன்று சனிக்கிழமை (04) இரவு நடைபெறவுள்ள மும்பை இண்டியன்ஸ் அணிக்கும் குஜராத் ஜயன்ட்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது.


இந்திய மற்றும் சர்வதேச கிரிக்கெட் வீராங்கனைகள் இப் போட்டியில் பங்குபற்றுவதால் இன்றைய போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கடந்த 4 அத்தியாயங்களாக மகளிர் இருபது 20 செலஞ் என்ற பெயரில் 3 அணிகளுக்கு இடையில் நடத்தப்பட்டு வந்த இப் போட்டி இந்த வருடத்திலிருந்து மகளிர் பிறீமியர் லீக் என்ற பெயரில் 5 தொழில்முறை அணிகளுக்கு இடையில் நடத்தப்படவுள்ளது.


ஆரம்பப் போட்டியில் மோதவுள்ள 2 அணிகளுடன் டெல்ஹி கெப்பிட்டல்ஸ், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர், உத்தர பிரதேஷ் (UP) வொரியர்ஸ் ஆகிய அணிகளும் மகளிர் பிறீமியர் லீக் போட்டியில் பங்குபற்றுகின்றன.
ஒவ்வொரு அணியும் ஒன்றையொன்று 2 சுற்றுகளில் எதிர்த்தாடும். அதற்கு அமைய மொத்தமாக 20 லீக் போட்டிகள் நடத்தப்படும்.
லீக் சுற்று முடிவில் அணிகள் நிலையில் முதல் 4 இடங்களைப் பெறும் அணிகள், ப்ளே ஓவ் சுற்றில் விளையாட தகுதிபெறும்.


மும்பை எதிர் ஜயன்ட்ஸ்
இன்றைய போட்டி இந்தியாவின் முன்னணி சகலதுறை வீராங்கனைகளுக்கும் அவுஸ்திரேலியாவின் நட்சத்திர வீராங்கனைகளுக்கும் இடையிலான போட்டியாக அமையவுள்ளது.


மும்பை இண்டியன்ஸ் அணிக்கு இந்திய அணித் தலைவி

ஹார்மன்ப்ரீத் கொர் தலைவியாகவும் குஜராத் ஜயன்ட்ஸ் அணிக்கு அவுஸ்திரேலிய  நட்சத்திர துடுப்பாட்ட வீராங்கனை பெத் மூனி தலைவியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் நிறைவடைந்த மகளிர் உலகக் கிண்ண இறுதி ஆட்ட நாயகியாக பெத் மூனி தெரிவாகியிருந்தார்.
மும்பை இண்டியன்ஸ் அணியில் ஹார்மன்ப்ரீத் கோருடன் நெட் சிவர் - ப்ரன்ட், அமேலியா கேர், க்ளோ ட்ரையொன், பூஜா வஸ்த்ரேக்கர், ஹேய்லி மெத்யூஸ், ஹீதர் க்றஹாம், யஸ்திக்கா பாட்டியா, இங்கிலாந்தின் இஸி வொங் ஆகியோர் பிரதான வீராங்கனைகளாக இடம்பெறுகின்றனர்.
குஜராத் ஜயன்ட்ஸ் அணியில் பெத் மூனியுடன் மகளிர் இருபது 20 உலகக் கிண்ண தொடர்நாயகி ஏஷ்லி கார்ட்னர், கிம் கார்த், அனாபெல் சதர்லண்ட், ஜோர்ஜியா வெயார்ஹாம் ஆகிய ஆஸி. வீராங்கனைகளும் இங்கிலாந்தின் சொஃபியா டன்லியும் முக்கிய வீராங்கனைகளாக இடம்பெறுகின்றனர் அத்துடன் ஹார்லீன் டியோல், ஸ்னேஹ் ரானா, சபினேனி மேகனா ஆகிய இந்திய வீராங்கனைகளும் குழாத்தில் இடம்பெறுகின்றனர்.
குஜராத் ஜயன்ட்ஸ் அணியில் பெயரிடப்பட்டிருந்த மேற்கிந்தியத் தீவுகளின் சகலதுறை வீராங்கனை டியேந்த்ரா டொட்டின், மருத்துவ காரணங்களுக்காக விலகிக்கொண்டுள்ளார். அவருக்கு பதிலாக கிம்பர்லி ஜெனிபர் கார்த் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/149731

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி ஏராளன்.......!  😁

  • கருத்துக்கள உறவுகள்

ரசிகர்களை கவர்ந்த மும்பை அணி வீராங்கனை.. WPL ல் ருசிகரம்..

post_image_fbfa2f9-scaled.jpg

மும்பை : மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை அணியில் இடம்பெற்ற வெளிநாட்டு வீராங்கனை அமீலா கேரை பார்த்து பல ரசிகர்களும் தங்களது இதயத்தை தொலைத்து விட்டார்கள்.

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே மகளிர் பிரீமியர் லீக் தொடர் நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மிஞ்சும் அளவுக்கு மும்பை அணி அதிரடியாக விளையாடியது.

முதல் லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 207 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி 64 ரன்களில் சுருண்டு படுதோல்வியை சந்தித்தது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி கேப்டனும், மும்பை அணிக்கு தலைமை தாங்கிய ஹர்மான்பிரீத் கவுரும் 30 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். ஆனால், ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து சென்றதோ நியூசிலாந்தை சேர்ந்த அமீலா கேர் தான்.

ரசிகர்களை கவர்ந்தார்

நேற்று பேட்டிங்கில் நடுவரிசையில் களமிறங்கிய அமீலா 24 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார்.இதில் 6 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். இதனையடுத்து தன்னுடைய அதிரடி ஆட்டம் குறித்து பேட்டி கொடுத்த போது ஹெல்மெட் இல்லாமல் இருந்த அமீலா கேரை பார்த்து பல ரசிகர்களும் அசந்து போய் விட்டார்கள்.

இதயங்களை கொள்ளையடித்த அமீலா

IMG-20230305-114508.jpg

இனி எங்களுடைய Crush லிஸ்டில் அமிலா கெருக்கு தனி இடம் கிடைத்து விட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பலர் இனி அமிலா கேருக்காகவே மும்பை இந்தியன்ஸ் விளையாடும் போட்டியை காண உள்ளோம் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இதனால் நேற்று இரவு முதலில் இருந்தே அமீலா கேர் தான் சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங்கில் உள்ளார்.

அமீலாவின் சாதனை

அமீலா எந்த அளவிற்கு அழகாக இருக்கிறாரோ, அதை விட பல மடங்கு திறமைச்சாலி. 16 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அமீலா கேர் சர்வதேச ஒருநாள் போட்யில் இரட்டை சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். மேலும் பேட்டிங்கில் 2000 ரன்களுக்கு மேல் அடித்துள்ள அமீலா, பந்துவீச்சில் 135 விக்கெட்டுகளை சர்வதேச போட்டிகளில் வீழ்த்தியுள்ளார் .

https://tamil.mykhel.com/cricket/who-is-amelia-kerr-became-crush-for-cricket-fans-after-playing-in-wpl/articlecontent-pf138753-036745.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

WPL: குஜராத் ஜயன்ட்ஸை பந்தாடிய மும்பை இண்டியன்ஸ் 143 ஓட்டங்களால் அமோக வெற்றி

Published By: VISHNU

05 MAR, 2023 | 11:26 AM
image

(என்.வீ.ஏ.)

மும்பை டி வை பட்டில் விளையாடரங்கில் சனிக்கிழமை (04) ஆரம்பமான அங்குரார்ப்பண இந்திய மகளிர் பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் குஜராத் ஜயன்ட்ஸ் அணியை சகல துறைகளிலும் விஞ்சிய மும்பை இண்டியனஸ் 143 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது.

0403_amelia_kerr_mi_vs_gg.jpg

ஹேய்லி மெத்யூஸ், அணித் தலைவி ஹார்மன்ப்ரீத் கோர், அமேலியா கேர் ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டங்கள், நெட் சிவர்-ப்ரன்ட், சய்க்கா இஷாக் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள் என்பன மும்பை இண்டியன்ஸின் இலகுவான வெற்றிக்கு அடிகோலின.

0403_harmanpreet_kaur_mi_vs_gg.jpg

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 207 ஓட்டங்களைக் குவித்தது.

0403_saika_ishaque__mi_vs_gg.jpg

ஆரம்ப வீராங்கனை யஸ்டிக்கா பாட்டியா (1) 3ஆவது ஓவரில் ஆட்டமிழந்த போதிலும் அடுத்த துடுப்பாட்ட வீராங்கனைகள் அனைவரும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி மும்பை இண்டியன்ஸை பலப்படுத்தினர்.

0403_WPL_opening_ceremony___1_.jpg

ஹேய்லி மெத்யூஸ், நெர் சிவர்-ப்ரன்ட் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு பலம் சேர்த்தனர்.

0403_WPL_opening_ceremony___2_.jpg

மெத்யூஸ் 4 சிக்ஸ்கள், 3 பவுண்டறிகளுடன் 47 ஓட்டங்களையும் நெட் சிவர்-ப்ரன்ட் 23 ஓட்டங்களையும் பெற்றனர்.

0403_WPL_opening_ceremony___4_.jpg

அதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஹார்மன்ப்ரீத் கோர், அமேலியா கேர் ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் 42 பந்துகளில் 89 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

ஹார்மன்ப்ரீத் கோர் 30 பந்துகளில் 14 பவுண்டறிகளுடன் 65 ஓட்டங்களை விளாசினார்.

0403_WPL_opening_ceremony___3_.jpg

தொடர்ந்து பூஜா வஸ்த்ராக்கருடன் மேலும் 35 ஓட்டங்களை 5ஆவது விக்கெட்டில் பகிர்ந்த அமேலியா கேர், 24 பந்துகளில் 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 45 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். பூஜா வஸ்த்ராக்கர் 15 ஓட்டங்களைப் பெற்றார்.

குஜராத் ஜயன்ட்ஸ் பந்துவீச்சில் ஸ்னேஹ் ரானா 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

206 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய  குஜராத் ஜயன்ட்ஸ் 15.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 64 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.

மும்பை இண்டியன்ஸ் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட குஜராத் ஜயன்ட்ஸ் 8ஆவது ஓவரில் 7ஆவது விக்கெட்டை இழந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை வெறும் 23 ஒட்டங்களாக இருந்தது.

அணித் தலைவி பெத் மூனி துரதிர்ஷ்டவசமாக முதலாவது ஓவரிலேயே உபாதைக்குள்ளாகி தொடர்ந்து துடுப்பெடுத்தாட முடியாமல் ஓய்வு பெற்றார். அதன் பின்னர் விக்கெட்கள் அடுத்தடுத்த சரிந்தன.

மத்திய வரிசை வீராங்கனை தயாளன் ஹேமலதா மாத்திரமே திறமையாகத் துடுப்பெடுத்தாடி 29 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

அவர் 8ஆவது விக்கெட்டில் மன்சி ஜோஷியுடன் 26 ஓட்டங்களையும் 9ஆவது விக்கெட்டில் மொனிக்கா பட்டேலுடன் 15 ஓட்டங்களையும் பகிர்ந்தார். மன்சி 6 ஓட்டங்களையும் மொனிக்கா 10 ஓட்டங்களையும் பெற்றனர்.

பெத் மூனி உபாதையிலிருந்து மீளாததால் துடுப்பெடுத்தாடவில்லை. இதன் காரணமாக குஜராத் ஜயன்ட்ஸின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

மும்பை இண்டியன்ஸ் பந்துவீச்சில் சய்க்கா இஷாக் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 3.1 ஓவர்கள் வீசி 11 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் நெட் சிவர்-ப்ரன்ட் 5 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அமேலியா கேர் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: ஹார்மன்ப்ரீத் கோர்.

https://www.virakesari.lk/article/149735

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் & ஏராளன் நீங்கள் இருவரும் ரசிகன் சேர் ரசிகன்.......காலையில் வந்து கணணியை திறந்தால் கண்கவர் ஓவியங்களாய் கொட்டிக் கிடக்கு......இண்டைக்கு வெளியே போய் ஒரு லொத்தர் சீட்டு இழுக்கத்தான் இருக்கு.......!   😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

தோழர் & ஏராளன் நீங்கள் இருவரும் ரசிகன் சேர் ரசிகன்.......காலையில் வந்து கணணியை திறந்தால் கண்கவர் ஓவியங்களாய் கொட்டிக் கிடக்கு......இண்டைக்கு வெளியே போய் ஒரு லொத்தர் சீட்டு இழுக்கத்தான் இருக்கு.......!   😂

யான் மந்தனா ரசிகராக்கும்!

Indian batter Smriti Mandhana retains 3rd position in Women's T20I rankings  - Indian batter Smriti Mandhana retains 3rd position in Women's T20I  rankings -

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

தோழர் & ஏராளன் நீங்கள் இருவரும் ரசிகன் சேர் ரசிகன்.......காலையில் வந்து கணணியை திறந்தால் கண்கவர் ஓவியங்களாய் கொட்டிக் கிடக்கு......இண்டைக்கு வெளியே போய் ஒரு லொத்தர் சீட்டு இழுக்கத்தான் இருக்கு.......!   😂

அண்ணை நீங்கள் எலத்தில்.   எடுத்திருக்கலாம.....🤣😂 ....லொத்தர். ஞாயிறுக்கிழமையிலும். உண்டா  ???????

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kandiah57 said:

அண்ணை நீங்கள் எலத்தில்.   எடுத்திருக்கலாம.....🤣😂 ....லொத்தர். ஞாயிறுக்கிழமையிலும். உண்டா  ???????

கந்தையர்......ஒரு குஷியில , ஆர்வக்கோளாறுல சொல்லுற எல்லாத்தையும் சீரியஸாய் எடுக்கக் கூடாது......நான் பார்ல கபே (மதுபானங்கள் அல்ல) குடிக்கும் போது மிச்ச காசுக்கு நகத்தால் சுரண்டுற ஒரு ஈரோ ரிக்கட் எடுத்து குப்பையில் போட்டுட்டு போற ஆள் ......நீங்கள் வேற ......!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

WPL: பெங்களூரை 60 ஓட்டங்களால் வென்றது டெல்ஹி

Published By: DIGITAL DESK 5

06 MAR, 2023 | 10:23 AM
image

(என்.வீ.ஏ.)

றோயல் செலஷ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான இந்திய மகளிர் பிறீமியர் லீக் (WPL) இருபது 20 கிரிக்கெட் போட்டியில் அணித் தலைவி மெக் லெனிங், ஷஃபாலி வர்மா ஆகியோரின் சாதனைமிகு ஆரம்ப இணைப்பாட்டமும் அமெரிக்க வீராங்கனை தாரா நொரிஸின் துல்லியமான பந்துவீச்சும் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணிக்கு 60 ஓட்ட வெற்றியை ஈட்டிக்கொடுத்தன.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 20 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 223 ஓட்டங்களைக் குவித்தது.

மெக் லெனிங், ஷஃபாலி வர்மா ஆகிய இருவரும் அதிரடி வேகத்தில் துடுப்பெடுத்தாடி 87 பந்துகளில் சாதனை மிகு 162 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஆனால், இருவரும் ஹீதர் நைட்டின் ஒரே ஓவரில் ஆட்டமிழந்தனர்.

முதலில் ஆட்டம் இழந்த மெக் லெனிங் 43 பந்துகளை எதிர்கொண்டு 14 பவுண்டறிகளுடன் 72 ஓட்டங்களையும் அடுத்து ஆட்டம் இழ்ந்த ஷஃபாலி வர்மா 45 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 84 ஓட்டங்களையும் விளாசினர்.

அவர்களுக்கு பின்னர்   மாரிஸ்ஆன் கெப் 17 பந்துகளில் 3 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 39 ஓட்டங்களுடனும் ஜெமிமா ரொட்றிகஸ் 15 பந்துகளில் 3 பவுண்டறிகள் அடங்கலாக 22 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்தவீச்சில் ஹீதர் நைட் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

355606.webp

224 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றது.

அணித் தலைவி ஸ்ம்ரித்தி மந்தனா (35), ஹீதர் நைட்(34), எலிஸ் பெரி (31) ஆகிய மூவரே திறமையாகத் துடுப்பெடுத்தாடி 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பந்துவீச்சில் தாரா நொரிஸ் 29 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் அலிஸ் கெப்சி 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/149776

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

WPL: பரபரப்பான போட்டியில் குஜராத்தை ஒரு பந்து மீதமிருக்க UP வொரியர்ஸ் வென்றது

Published By: DIGITAL DESK 5

06 MAR, 2023 | 11:23 AM
image

(என்.வீ.ஏ.)

குஜராத் ஜயன்ட்ஸ் அணிக்கு எதிராக மும்பை, டி. வை. பட்டில் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (05) இரவு மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய மகளிர் பிறிமீயர் லீக் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் UP வொரியர்ஸ் (உத்தர பிரதேஷ்) ஒரு பந்து மீதமிருக்க ஒரு விக்கெட்டால் வெற்றியீட்டியது.

குஜராத் ஜயன்ட்ஸ் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 170 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய UP வொரியர்ஸ் அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

போட்டியின் கடைசி ஓவரில் UP வொரியர்ஸின் வெற்றிக்கு மேலும் 19 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் 2 வைட்களுடன் க்றேஸ் ஹெரிஸ் 2 சிக்ஸ்கள் அடங்கலாக 18 ஓட்டங்களைக் குவித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். 

UP வொரியர்ஸ் அணி 16ஆவது ஓவரில் 7ஆவது விக்கெட்டை இழந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை 105 ஓட்டங்களாக இருந்தது. அப்போது குஜராத் ஜயன்ட்ஸ் சிறப்பான நிலையில் இருந்ததால் அவ்வணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது.

ஆனால், க்றேஸ் ஹெரிஸ், சொஃபி எக்லஸ்டோன் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் 25 பந்துகளில் 68 ஓட்டங்களைப் பகிர்ந்து UP வொரியர்ஸ் அணிக்கு பரபரப்பான வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர்.

க்றேஸ் ஹெரிஸ் 26 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 59 ஓட்டங்களுடனும் சொஃபி எக்லஸ்டோன் 12 பந்துகளில் 21 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

அவர்களை விட கிரான் நவ்கிர் 5 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 53 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் கிம் காத் 36 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த குஜராத் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது.

சபிமெனி மெகனா (24), சொஃபியா டன்க்லி (13) ஆகிய இருவரும் 3.5 ஓவர்களில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், 4 விக்கெட்கள் சீரான இடைவெளியில் விழ குஜராத் ஜயன்ட்ஸ் தடுமாற்றம் அடைந்தது.

இந் நிலையில் ஹாலின் டியொலும் ஏஷ்லி கார்ட்னரும் 29 பந்துகளில்  44 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர்.

355622.webp

ஹாலீன் டியொல் 7 பவுண்டறிகளுடன் 46 ஓட்டங்களையும் ஏஷ்லி கார்ட்னர் 25 ஓட்டங்களையும் பெற்றனர். தொடர்ந்து தயாலன் ஹேமலதா ஆட்டம் இழக்காமல் 21 ஓட்டங்களைப் பெற்று அணியின் மொத்த எண்ணிக்கைக்கு வலு சேர்த்துக்கொடுத்திருந்தார்.

பந்துவீச்சில் சொஃபி எக்லஸ்டோன் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தீப்தி ஷர்மா 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

மும்பை இண்டியன்ஸ் அணிக்கும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் இடையிலான போட்டி மும்பை, ப்றேபோன் விளையாட்டரங்கில் இன்று (06) இரவு நடைபெறவுள்ளது.

https://www.virakesari.lk/article/149792

  • கருத்துக்கள உறவுகள்

ம‌க‌ளிர் ஜ‌பிஎல்ல‌ கூட‌ அவுஸ்ரேலியா பெண்க‌ள் த‌ங்க‌ளின் திற‌மைக‌ளை ந‌ல்லா வெளிக் காட்டின‌ம்..............அதிக‌ ஏல‌த்தில் எடுத்த‌ Smriti Mandhana அணி தொட‌ர்து இர‌ண்டு தோல்வி

இந்த‌ அழ‌கி ந‌ல்லா விளையாடினாலும் 🥰😍🤩 மிடில் வ‌ருகிற‌வ‌ நிலைத்து நின்று விளையாடின‌ம் இல்லை................. 

On 5/3/2023 at 12:08, ஏராளன் said:

யான் மந்தனா ரசிகராக்கும்!

Indian batter Smriti Mandhana retains 3rd position in Women's T20I rankings  - Indian batter Smriti Mandhana retains 3rd position in Women's T20I  rankings -

அடியே செல்ல‌ம் இனி வ‌ரும் விளையாட்டில் அணிய‌ ச‌ரியா வ‌ழி ந‌ட‌த்தி வெல்ல‌ பார‌டி 😂😁🤣...................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

WPL: ஹெய்லி மெத்யூஸ் சகலதுறைகளிலும் அபாரம்; மும்பை இண்டியன்ஸுக்கு 2ஆவது நேரடி வெற்றி

Published By: DIGITAL DESK 5

07 MAR, 2023 | 12:01 PM
image

(என்.வீ.ஏ.)

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையினால் நடத்தப்பட்டுவரும் அங்குரார்ப்பண மகளிர் பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் தனது 2ஆவது நேரடி வெற்றியை ஈட்டி அணிகள் நிலையில் முதலாம் இடத்தில் இருக்கிறது.

மும்பை ப்றேபோன் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (06) இரவு நடைபெற்ற றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் ஹெய்லி மெத்யூஸ் ஆரம்ப பந்துவீச்சாளராகவும் ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனையாகவும் வெளிப்படுத்திய அற்புதமான சகலதுறை ஆட்டத்தின் மூலம் மும்பை இண்டியன்ஸ் 9 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றது.

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 156 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 14.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 159 ஓட்டங்களைக் குவித்து வெற்றியீட்டியது.

355705.webp

ஹெய்லி மெத்யூஸ், யஸ்திகா பாட்டியா ஆகிய இருவரும் 5 ஓவர்களில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

யஸ்திகா பாட்டியாக 23 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்த பின்னர் ஹெய்லி  மெத்யூஸ், நெட் சிவர் - ப்றன்ட் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 56 பந்துகளில் 114 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை இலகுவாக்கினர்.

ஹெய்லி மெத்யூஸ் 38 பந்துகளை எதிர்கொண்டு 13 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 77 ஓட்டங்களுடனும் நெட் சிவர் - ப்றன்ட் 29 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 55 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

அப் போட்டியில் முன்னதாகத் துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் 18.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றது.

355704.webp

அவ்வணியின் துடுப்பாட்டம் சிறப்பாக அமைந்தது எனக் கூறமுடியாது. ஆரம்ப விக்கெட்டில் அணித் தலைவி ஸ்ம்ரித்தி மந்தனா (23), சொஃபி டிவைன் (16) ஆகிய இருவரும் பகிர்ந்த 39 ஓட்டங்களே அணியின் அதிசிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது.

மத்திய வரிசை துடுப்பாட்ட வீராங்கனைகள் ரிச்சா கோஷ் (28), கனிக்கா அஹுஜா (22), ஸ்ரீயங்கா பட்டில் (23), மெகான் ஷூட் (20) ஆகியோர் பொறுப்புடன் துடுப்பெடுத்தாடியதன் பலனாக றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 150 ஓட்டங்களைக் கடந்தது.

பந்துவீச்சில் ஹெய்லி மெத்யூஸ் 4 ஓவர்களில் 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சய்க்கா இஷாக் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அமெலியா கேர் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

355701.webp

ஆட்டநாயகி: ஹெய்லி மெத்யூஸ்.

https://www.virakesari.lk/article/149881

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

WPL: தாஹ்லியாவின் தனி ஆற்றலை விஞ்சியது ஜெசிக்காவின் சகலதுறை ஆட்டம், டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 2ஆவது வெற்றி

Published By: DIGITAL DESK 5

08 MAR, 2023 | 10:29 AM
image

(நெவில் அன்தனி)

இந்தியாவில் நடைபெற்றுவரும் அங்குரார்ப்பண மகளிர் பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் தனிநபருக்கான அதிகபட்ச ஓட்டங்களை UP வொரியர்ஸ் அணி வீராங்கனை தாஹ்லியா மெக்ரா குவித்த போதிலும் அவரது அணி டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியிடம் தோல்வியுறுவதை அவரால் தடுக்க முடியாமல் போனது.

மும்பை டி. வை. பட்டில் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற அப் போட்டியில் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணி 42 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

மும்பை இண்டியன்ஸ் அணியைப் போன்று டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியும் தனது 2ஆவது நேரடி வெற்றியை ஈட்டியபோதிலும் அணிகள் நிலையில் மிகப் பெரிய நிகர ஓட்ட வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸ் (4 புள்ளிகள்) தொடர்ந்தும் முதலிடத்தில் இருக்கிறது.

355741.webp

அணித் தலைவி மெக் லெனிங் குவித்த அரைச் சதம், ஜெமிமா ரொட்றிகஸின் சிறப்பான துடுப்பாட்டம், ஜெஸ்  (ஜெசிக்கா)  ஜோனசனின் திறமையான சகலதுறை ஆட்டம் என்பன டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியின் வெற்றியில் பிரதான பங்காற்றி இருந்தன.

இந்த சுற்றுப் போட்டியில் இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக 200 ஓட்டங்களுக்கு மேல் குவித்த டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 212 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய UP வொரியர்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 169 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.

355754.webp

அவுஸ்திரேலிய சகலதுறை வீராங்கனை தாஹ்லியா மெக்ரா, தனி ஒருவராக அற்புதமாகவும் அதிரடியாகவும் துடுப்பெடுத்தாடி 50 பந்துகளில் 11 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 90 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

ஒருபுறத்தில் விக்கெட்கள் சீரான இடைவெளியில் சரிந்த போதிலும் தாஹ்லியா மெக்ரா, தனக்கே உரிய பாணியில் மைதானத்தின் எல்லாப் பக்கங்களுக்கும் பந்தை விசுக்கி அடித்து, அங்குரார்பண மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் தனிநபருக்கான அதிகபட்ச எண்ணிக்கையைப் பெற்றார்.

திப்தி ஷர்மாவுடன் 4ஆவது விக்கெட்டில் 40 ஓட்டங்களையும் தேவிகா வைத்யாவுடன் 5ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களையும் சிம்ரன் ஷய்க்குடன் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் மேலும் 49 ஓட்டங்களையும் தாஹ்லியா மெக்ரா பகிர்ந்ததால் UP (உத்தர பிரதேஸ்) வொரியர்ஸ் கௌரவமான தோல்வியைத் தழுவியது.

இந்த 3 இணைப்பாட்டங்களில் பங்காற்றிய தீப்தி ஷர்மா 12 ஓட்டங்களையும் தேவிகா வைத்யா 23 ஓட்டங்களையும் சிம்ரன் ஷய்க் ஆட்டமிழக்காமல் 6 ஓட்டங்களையும் பெற்றனர்.

355751.webp

முன்னதாக ஆரம்ப வீராங்கனை அணித் தலைவி அலிசா ஹீலி 24 ஓட்டங்களைப் பெற்றார்.

டெல்ஹி பந்துவீச்சில் ஜெஸ் ஜோனாசன் 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 211 ஓட்டங்களைக் குவித்தது.

355755.webp

தனது ஆரம்பப் போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் பந்துவீச்சாளர்களை நையப்புடைத்து 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 223 ஓட்டங்களைக் குவித்த டெல்ஹி கெப்பிட்டல்ஸ் இந்த சுற்றுப் போட்டியில் அதிகூடிய மொத்த எண்ணிக்கையைக் குவித்து சாதனை படைத்திருந்தது.

செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற போட்டியில் மெக் லெனிங், ஷஃபாலி வர்மா ஆகிய இருவரும் 37 பந்துகளில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். இதில் ஷஃபாலி வர்மாவின் பங்களிப்பு வெறும் 17 ஓட்டங்களாகும்.

மெக் லெனிங் 42 பந்துகளில் 10 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 70 ஓட்டங்களைப் பெற்று 3ஆவதாக ஆட்டமிழந்தார்.

355752.webp

எவ்வாறாயினும் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியில் அதிசிறந்த இணைப்பாட்டத்தை ஜெமிமா ரொட்றிகஸ், ஜெஸ் ஜோனாசன் ஆகிய இருவரும் ஏற்படுத்திக்கொடுத்து அணியைப் பலப்படுத்தினர்.

அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 34 பந்துகளில் 67  ஓட்டங்களைப்    பகிர்ந்தனர்.

ஜெஸ் ஜோனாசன் 20 பந்துகளை எதிர்கொண்டு 43 ஓட்டங்களுடனும் ஜெமிமா ரொட்றிகஸ் 22 பந்துகளை எதிர்கொண்டு 34 ஒட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இதனிடையே அலிஸ் கெப்சி 21 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் ஷப்னம் இஸ்மாயில் மாத்திரம் சிறப்பாக செயற்பட்டு 4 ஓவர்களில் 29 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்கடைக் கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/149951

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குஜராத்துக்கு முதலாவது வெற்றி : பெங்களூரின் தோல்வி தொடர்கிறது

Published By: DIGITAL DESK 5

09 MAR, 2023 | 04:32 PM
image

(என்.வீ.ஏ.)

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையினால் நடத்தப்படும் அங்குரார்ப்பண மகளிர் பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் குஜராத் ஜயன்ட்ஸ் முதலாவது வெற்றியை ஈட்டியதுடன் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தோல்வி தொடர்ந்த வண்ணம் உள்ளது.

தத்தமது முதலாவது வெற்றியைக் குறிவைத்து குஜராத் ஜயன்ட்ஸ் அணியும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை, ப்றேபோர்ன் விளையாட்டரங்கில் புதன்கிழமை (08) இரவு மோதிய போட்டியில் குஜராத் ஜயன்ட்ஸ் அணி 11 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இந்தப் போட்டியில் இரண்டு அணிகளிலும் வெளிநாட்டு வீராங்கனைகள் துடுப்பாட்டத்தில் அசத்தியமை விசேட அம்சமாகும்.

355816.webp

சொஃபியா டன்க்லி, ஹார்லீன் டியோல் ஆகியோர் குவித்த அரைச் சதங்களும் ஏஷ்லி கார்ட்னரின் துல்லியமான பந்துவீச்சும் குஜராத் ஜயன்ட்ஸ் அணியின் முதலாவது வெற்றிக்கு வழிவகுத்தன.

குஜராத்தை வீழ்த்த சொஃபி  டிவைன், எலிஸ் பெரி, ஹீதர் நைட் ஆகியோர் எடுத்த முயற்சிகள் இறுதியில் பலன் தராமல் போயின.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த குஜராத் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றது.

சொஃபியா டன்க்லி, ஹார்லீன் டியோல் ஆகிய இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைச் சதங்கள் குவித்ததுடன் 2ஆவது விக்கெட்டில் 24 பந்துகளில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

28 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்ட சொஃபியா டன்க்லி 11 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 65 ஓட்டங்களை விளாசினார்.

355809.webp

ஹார்லீன் டியோல் 45 பந்துகளில் 9 புவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 67 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர்களை விட ஏஷ்லி கார்ட்னர் (19), தயாளன் ஹேமலதா (16), அனாபெல் சதர்லண்ட் (14) ஆகியோர் தங்களாலான அதிகப்பட்ச துடுப்பாட்ட பங்களிப்பை வழங்கினர்.

பந்துவீச்சில் ஹீதர் நைட் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஷ்ரேயன்கா பட்டில் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

202 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 190 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

355817.webp

குஜராத் அணியில் போன்றே பெங்களூர் அணியிலும் வெளிநாட்டு வீராங்கனைகளே துடுப்பாட்டத்தில் பிரகாசித்தனர்.

ஆரம்ப விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் அணித் தலைவி ஸ்ம்ரித்தி மந்தனா 18 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

தொடர்ந்து 2ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த சொஃபி டிவைன், எலிஸ் பெரி ஆகிய இருவரும் 43 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினர்.

எலிஸ் பெரி 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த பின்னர் ரிச்சா கோஷ் (10) விரைவாக ஆட்டமிழந்தார்.

இந் நிலையில் சொஃபி டிவைனும் ஹீதர் நைட்டும் அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லும் முயற்சியில் இறங்கினர்.

ஆனால், சொஃபி டிவைன் 17ஆவது ஓவரின் முதல் பந்தில் அடித்த சிக்ஸ் போன்று அடுத்த பந்திலும் சிக்ஸ் அடிக்க முயற்சித்து 66 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தடுமாற்றம் அடைந்தது. டிவைன் 45 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களை அடித்திருந்தார்.

தொடர்ந்து கனிக்கா அஹூஜா (10), ஷ்ரேயன்கா பட்டில் (11 ஆ.இ.) ஆகியோர் எடுத்து முயற்சிகளும் கைகூடாமல் போனது.

355819.webp

ஹீதர் டைந் 11 பந்துகளில் 5 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் அடங்கலாக 30 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

பந்துவீச்சில் ஏஷ்லி கார்ட்னர் 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அனாபெல் சதர்லண்ட் 56 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

மும்பை - டெல்ஹி மோதல் இன்று

மகளிர் பிறீமியர் லிக் இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் இதுவரை தோல்வி அடையாமல் அணிகள் நிலையில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும்  மும்பை இண்டியன்ஸ் அணியும் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியும் ஒன்றையொன்று இன்று வியாழக்கிழமை (09) இரவு எதிர்த்தாடவுள்ளன.

சகலதுறைகளிலும் பலம்வாய்ந்த இந்த இரண்டு அணிகளில் ஒன்று இன்றைய போட்டியுடன் தோல்வி அடையாத அணி என்ற பட்டியிலில் இருந்து நீக்கப்படவுள்ளது.

இரண்டு அணிகளிலும் அதிசிறந்த சர்வதேச வீராங்கனைகள் இடம்பெறுவதால் இந்தப் போட்டி கடைசிவரை மிகவும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

355802.webp

https://www.virakesari.lk/article/150108

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டெல்ஹியை வீழ்த்தி 3 ஆவது நேரடி வெற்றியை ஈட்டியது மும்பை

Published By: DIGITAL DESK 5

10 MAR, 2023 | 09:26 AM
image

(நெவில் அன்தனி)

டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக மும்பை, டி.வை. பட்டில் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (09) இரவு நடைபெற்ற மகளிர் பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் 8 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றது.

இதுவரை மொத்தமாக நடந்து முடிந்துள்ள 7 போட்டிகளில் மும்பை இண்டியன்ஸ் 3ஆவது வெற்றியை ஈட்டியுள்ளதுடன் 5 அணிகள் பங்குபற்றும் மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் தோல்வி அடையாத ஒரே ஒரு அணியாகத் திகழக்கிறது.

இந்தப் போட்டிக்கு முன்னர் தோல்வி அடையாமல் இருந்த மற்றைய அணியான டெல்ஹி கெப்பிட்டல்ஸுக்கு இன்று பலத்த ஏமாற்றம் கிடைத்தது.

355925.webp

தனது முன்னைய இரண்டு போட்டிகளிலும் 200க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்த டெல்ஹி கெப்பிட்டல்ஸ், வியாழக்கிழமை நடைபெற்ற மும்பை இண்டியன்ஸுக்கு எதிரான போட்டியில் 18 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 105 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

முன்வரிசை வீராங்கனைகளான ஷஃபாலி வர்மா (2), அலிஸ் கெப்சி (6), மாரிஸ்ஆன் கெப் (2) ஆகிய மூவரும் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தமை டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.

355930.webp

மெக் லெனிங், ஜெமிமா ரொட்றிக்ஸ் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 50 ஓட்டங்கள் பகிர்ந்திராவிட்டால் அவ்வணி மேலும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும்.

ஜெமிமா ரொட்றிக்ஸ் 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த சொற்ப நேரத்தில் மெக் லெனிங் 43 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார். அவர்கள் இருவரை விட ராதா யாதவ் மாத்திரமே 10 ஓட்டங்களை எட்டினார்.

அதன் பின்னர் ஆடுகளம் நுழைந்த வீராங்கனைகள் நீண்டநேரம் தாக்கு பிடிக்காமல் ஆட்டம் இழந்து சென்றனர்.

355933.webp

பந்துவீச்சில் இஸி வொங் 4 ஓவர்களில் 10 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சய்க்கா இஷாக் 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஹெய்லி மெத்யூஸ் 4 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

106 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 15 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 109 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.

யஸ்திக்கா பாட்டியா, ஹெய்லி மெத்யூஸ் ஆகிய இருவரும் 53 பந்துகளில் 65 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். யஸ்டிக்கா பாட்டியா 42 ஓட்டங்களையும் ஹெய்லி மெத்யூஸ் 32 ஓட்டங்களையும் பெற்று 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.

தொடர்ந்து நெட் சிவர் - ப்றன்ட் (21 ஆ.இ.), அணித் தலைவி ஹார்மன்ப்ரீத் கோர் (11 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 32 ஓட்டங்களைப் பகிர்ந்து மும்பையின் வெற்றியை உறுதிசெய்தனர்.

பந்துவீச்சில்  தாரா நொரிஸ் 4 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/150146

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

றோயல் செலஞ்சர்ஸுக்கு தொடரும் ஏமாற்றம் ; U P வொரியர்ஸிடமும் தோல்வி அடைந்தது

Published By: DIGITAL DESK 5

11 MAR, 2023 | 12:19 PM
image

(நெவில் அன்தனி)

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையினால் நடத்தப்பட்டுவரும் அங்குரார்ப்பண மகளிர் பறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் ஸ்ம்ரித்தி மந்தனா தலைமையிலான றோயல் செலஞ்சர்ஸ் பெங்கசூர் அணிக்கு ஏமாற்றம் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

மும்பை, ப்றேபோர்ன் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (10) நடைபெற்ற U P வொரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட்களால் தோல்வி அடைந்த றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனது 4ஆவது தொடர்சியான தோல்வியைத் தழுவியது.

இதன் மூலம் 5 அணிகள் பங்குபற்றும் மகளிர் ப்றீமியர் லீக் போட்டியில் முதல் சுற்றில் வெற்றி பெறாத ஒரே ஒரு அணியாக றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி திகழ்கிறது.

356017.webp

சொஃபி எக்லஸ்டோன், தீப்தி ஷர்மா ஆகியோரின் சிறப்பான சுழல்பந்து பந்துவீச்சுகளும் அலிசா ஹீலியின் அதிரடி துடுப்பாட்டமும் UP வொரியர்ஸ் அணியின் வெற்றியை சுலபமாக்கின.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற அப் போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 139 ஓட்டங்கள் என்ற சுமாரான மொத்த எண்ணிக்கையை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய U P வொரியர்ஸ் அணி 13 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 139 ஓட்டங்ககளைப்  பெற்று வெற்றியீட்டியது.

356020.webp

ஆரம்ப வீராங்கனைகளான அலிசா ஹீலி, தேவிகா வைத்யா ஆகிய இருவரும் பிரிக்கப்படாத முதலாவது விக்கெட்டில் 139 ஓட்டங்களைப் பகிர்ந்து மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட்டுக்கான அதிகூடிய இணைப்பாட்ட சாதனையை ஏற்படுத்தி அணியின் வெற்றியை உறுதிப் படுத்தினர்.

அத்துடன் 47 பந்துகளில் 18 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட ஆட்டமிழக்காமல் 96 ஓட்டங்களைப் பெற்ற அலிசா ஹீலி, இந்த சுற்றுப் போட்டியில் தனிநபருக்கான அதிகூடிய எண்ணிக்கைக்கான சாதனையை ஏற்படுத்தினார்.

மறுபக்கத்தில் தேவிகா வைத்யா 31 பந்துகளில் 5 பவுண்டறிகள் உட்பட 36 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 19.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 138 ஓட்டங்களைப் பெற்றது.

முன்வரிசையில் சொஃபி டிவைன் 36 ஓட்டங்களையும் எலிஸ் பெரி 52 ஓட்டங்களையும் பெற்று துடுப்பாட்டத்தில் பிரகாசித்தனர். அவர்கள் இருவரும் 2ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 44 ஓட்டங்களே அணியின் சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது.

356023.webp

அவர்களைவிட மத்திய வரிசையில் ஷ்ரேயன்கா பட்டில் 15 ஓட்டங்களையும் எரின் பேர்ன்ஸ் 12 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் சொஃபி எக்லஸ்டோன் 13 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் தீப்தி ஷர்மா 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/150227

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகளிர் பிறீமியர் லீக்கில் மாரிஸ்ஆன், ஷஃபாலி சாதனை ; டெல்ஹிக்கு இலகுவான வெற்றி!

Published By: NANTHINI

12 MAR, 2023 | 12:22 PM
image

(நெவில் அன்தனி)

குஜராத் ஜயன்ட்ஸ் அணிக்கு எதிராக மும்பை டி. வை. பட்டில் பயிற்சியக விளையாட்டரங்கில் சனிக்கிழமை (11) நடைபெற்ற மகளிர் பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் மாரிஸ்ஆன் கெப் பதிவு செய்த சாதனைமிகு 5 விக்கெட் குவியலும், ஷஃபாலி வர்மா குவித்த சாதனைமிகு அரைச் சதமும் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணிக்கு 10 விக்கெட் வெற்றியை ஈட்டிக்கொடுத்தன. 

அவர்கள் இருவரும் மகளிர் பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட்டுக்கான புதிய மைல்கல் சாதனைகளை நிலைநாட்டினர்.

மும்பை இண்டியன்ஸுக்கு எதிரான போட்டியில் அடைந்த தோல்விக்குப் பின்னர் இந்த வெற்றி டெல்ஹி கெப்பிட்டல்ஸுக்கு நிம்மதியைக் கொடுத்துள்ளது.

அப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த குஜராத் ஜயன்ட்ஸ் அணியினர் மாரிஸ்ஆன் கெப், ஷிக்கா பாண்டி ஆகியோரின் பந்துவீச்சுக்களில் விக்கெட்களை பறிகொடுத்து 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து, 105 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர்.

கிம் கார்த் (32 ஆ.இ.), ஜோர்ஜியா வெயாஹாம் (22), ஹார்லீன் டியோல் (20) ஆகிய வெளிநாட்டு வீராங்கனைகள் மூவரே 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களை பெற்றனர்.

பந்துவீச்சில் மாரிஸ்ஆன் கெப் 4 ஓவர்களில் 15 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 5 விக்கெட்களையும், ஷிக்கா பாண்டி 4 ஓவர்களில் 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும், ராதா யாதவ் 4 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட்டில் மாரிஸ்ஆன் கெப் அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுமதியைப் பதிவுசெய்து புதிய மைல்கல் சாதனையை ஏற்படுத்தினார்.

106 ஓட்டங்கள் என்ற சுமாரான மொத்த எண்ணிக்கையை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணி 7.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி, 107 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

0.jpg

ஷஃபாலி வர்மா 28 பந்துகளில் 10 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் ஆட்டம் இழக்காமல் 76 ஓட்டங்களைக் குவித்தார். இதனிடையே 19 பந்துகளில் 50 ஓட்டங்களைக் குவித்ததன் மூலம் மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட்டில் அதிவேக அரைச் சதத்தை பூர்த்திசெய்து ஷஃபாலி வர்மா புதிய சாதனை படைத்தார்.

18ஆவது பந்தில் அவர் அரைச் சதத்தைப் பூர்த்தி செய்திருந்தால், மகளிர் சர்வதேச இருபது 20 கிரிக்கெட்டில் நியூஸிலாந்து வீராங்கனை சொஃபி டிவைனின் சாதனையை சமப்படுத்தியிருப்பார். ஆனால், 18ஆவது பந்தில் அவரால் ஒரு ஓட்டமே பெறமுடிந்ததால் அந்த சாதனையை அவரால் சமப்படுத்த முடியாமல் போனது.

அவருடன் ஆரம்ப ஜோடியாக துடுப்பெடுத்தாடிய அணித் தலைவி மெக் லெனிங் 15 பந்துகளில் 3 பவுண்டறிகளுடன் ஆட்டம் இழக்காமல் 21 ஓட்டங்களைப் பெற்றார்.

இதுவரை நடைபெற்றுள்ள 9 போட்டி முடிவுகளின் அடிப்படையில் மும்பை இண்டியன்ஸ் தனது 3 போட்டிகளிலும் வெற்றிபெற்று, 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. 

டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 4 போட்டிகளில் 3 வெற்றிகள், ஒரு தோல்வி என்ற பெறுபேறுகளுடன் 6 புள்ளிகளை பெற்று, நிகர ஓட்ட வேக வித்தியாச அடிப்படையில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

ரு P வொரியர்ஸ் 4 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தையும், குஜராத் ஜயன்ட்ஸ் 2 புள்ளிகளுடன் 4ஆம் இடத்தையும் வகிக்கின்றன. றோயல் செலஞ்சர்ஸ் தனது 4 போட்டிகளிலும் தோல்வியடைந்து கடைசி இடத்தில் இருக்கிறது.

https://www.virakesari.lk/article/150300

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசித்திரமான சம்பவங்களுடன் U P வொரியர்ஸை 8 விக்கெட்களால் வென்றது மும்பை இண்டியன்ஸ்

Published By: DIGITAL DESK 5

13 MAR, 2023 | 10:10 AM
image

(நெவில் அன்தனி)

UP வொரியர்ஸ் அணிக்கு எதிராக மும்பை, ப்றேபோர்ன் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (12) இரவு 2 விசித்திரமான சம்பவங்கள் இடம்பெற்ற மகளிர் பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்களால் மும்பை இண்டியன்ஸ் அபார வெற்றியீட்டியது.

அங்குரார்ப்பண மகளிர் பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் ஈட்டிய 4ஆவது தொடர்ச்சியான வெற்றி இதுவாகும. இந்த வெற்றியுடன் முதல் சுற்றில் 100 வீத வெற்றியை ஈட்டிய மும்பை இண்டியன்ஸ் அணிகள் நிலையில் 8 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் இருக்கிறது.

U P வொரியர்ஸ் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 160 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 164 ஓட்டங்களைக் குவித்து வெற்றியீட்டியது.

356157.webp

சய்க்கா இஷாக்கின் திறமையான பந்துவீச்சு, யஸ்திகா பாட்டியா, ஹார்மன்ப்ரீத் கோர், நெட் சிவர் - ப்றன்ட் ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டங்கள் என்பன மும்பை இண்டியன்ஸின் வெற்றியை இலகுவாக்கின.

அதேவேளை, U P வொரியர்ஸ் அணி சார்பாக அலிசா ஹீலி, தஹ்லியா மெக்ரா ஆகியோர் குவித்த அரைச் சதங்கள் வீண்போயின.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய யஸ்திகா பாட்டியாவும் நிதானத்தைக் கடைப்பிடித்த ஹெய்லி மெத்யூஸும் 41 பந்துகளில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்து மும்பை இண்டியன்ஸுக்கு சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால் இருவரும் அதே மொத்த எண்ணிக்கையில் 4 பந்துகள் இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.

யஸ்திகா பாட்டியா 27 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 42 ஓட்டங்களை விளாசினார்.

ஹெய்லி மெத்யூஸ் 12 ஓட்டங்களைப் பெற்றார்.

356166.webp

ஹெய்லி மெத்யூஸ் 10 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது விசித்திரமான சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

சொஃபி எக்லஸ்டோனின் பந்துவீச்சில் ஹெய்லி மெத்யூஸ் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டம் இழக்கவில்லை என கள மத்திஸ்தர் தீர்ப்பு வழங்கினார். ஆனால்,  U P வொரியர்ஸ் அணித் தலைவி அலிசா ஹீலி, மத்தியஸ்தரின் தீர்ப்பை மீளாய்வுக்கு உட்படுத்தினார். இதனை அடுத்து தொலைக்காட்சியில் சலன அசைவுகளை ஆராய்ந்த மூன்றாவது மத்திஸ்தர், ஹெய்லி மெத்யூஸ் ஆட்டம் இழந்ததாக அறிவித்தார். ஆனால், மூன்றாவது மத்தியஸ்தரின் தீர்ப்பு தவறானது என கள மத்தியஸ்தரிடமும் சொஃபி எக்லஸ்டோனிடமும் ஹெய்லி மெத்யூஸ் தெளிவுபடுத்தினார்.

மீண்டும் சலன அசைவுகளை கூர்மையாக ஆராய்ந்த தொலைக்காட்சி மத்தியஸ்தர் ஹெய்லி மெத்யூஸ் ஆட்டம் இழக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.

முதலாவதாக காண்பிக்கப்பட்ட சலன அசைவுகள் ரீவேர்ஸில் காட்டப்பட்டதால் பந்து முதலில் ஹெய்லியின் பாதணியில் பட்டதாகத் தெரிந்தது. பின்னர் காண்பிக்கப்பட்ட சரியான சலன அசைவுகளில் பந்து முதலில் துடுப்பில் படுவது உறுதிப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக 3ஆவது  மத்தியஸ்தரின் தீர்ப்பு திருத்தப்பட்டு கள மத்தியஸ்தரின் முதலாவது தீர்ப்பு நிலைநிறுத்தப்பட்டது.

அத்தோடு நின்று விடாமல் மற்றொரு சந்தர்ப்பத்தில் இன்னுமொரு விசித்திரம் இடம்பெற்றது. இம்முறை அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோருக்கு அஞ்சலி சர்வாணி வீசிய பந்து விக்கெட்டை உராய்ந்து செல்ல பெய்ல்ஸ் மேலெழும்பி ஒளி பிரகாசித்தது. ஆனால் என்ன ஆச்சரியம்! பெய்ல்ஸ் கீழே விழாமல் மிண்டும் ஸ்டம்ப்களிலேயே நிலைத்திருந்ததால் ஹார்மன்ப்ரீத் கோர் ஆட்டமிழக்காமல் தப்பிக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஹார்மன்ப்ரீத் கோரும் நெட் சிவர் - ப்றன்டும் அபாராமாகத் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 106 ஓட்டங்களைப் பகிர்ந்து மும்பை இண்டியன்ஸின் வெற்றியை உறுதிசெய்தனர்.

356172.webp

ஹார்மன்ப்ரீத் கோர்  33 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களையும் நெட் சிவர் - ப்றன்ட் 31 பந்துகளில் 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் ஆட்டமிழக்காமல் 45 ஓட்டங்களையும் பெற்றனர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த U P  வொரியர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது.

மும்பை இண்டியன்ஸ் அணியினால் எதிரணி ஒன்றை முழுமையாக ஆட்டமிழக்கச் செய்யமுடியாமல் போனது இந்த சுற்றுப் போட்டியில் இதுவே முதல் தடவையாகும்.

ஆரம்ப வீராங்கனை தேவிகா வைத்யா 6 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் ஹீலியும் கிரான் நவ்கிரேயும் 50 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர்.

நவ்கிரே 17 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் அவுஸ்திரேலிய வீராங்கனைகளான அலிசா ஹீலி (அணித் தலைவி), தஹ்லியா மெக்ரா ஆகிய இருவரும் நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்கள் குவித்தது மட்டுமல்லாமல் 3ஆவது விக்கெட்டில் 59 பந்துகளில் 82 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

இந்த இரண்டு இணைப்பாட்டங்களைத் தவிர வேறு சிறப்பான இணைப்பாட்டங்கள் இடம்பெறாதது U P வொரியர்ஸ் அணிக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது.

356156.webp

அலிசா ஹீலி, தஹ்லியா மெக்ரா ஆகிய இருவரையும் ஒரே ஓவரில் சய்க்கா இஷாக் ஆட்டமிழக்கச் செய்த பின்னர் U P வொரியர்ஸ் அணியினால் பெரியளவில் ஓட்டங்களைப் பெறமுடியாமல் போனது.

அலிசா ஹீலி 46 பந்துகளில் 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 58  ஓட்டங்களையும்    தஹ்லியா மெக்ரா 37 பந்துகளில் 9 பவுண்டறிகளுடன் 50 ஓட்டங்களையும் பெற்றனர்.

17ஆவது ஓவரில் 2 விக்கெட்களை இழந்து 140 ஓட்டங்களைப் பெற்றிருந்த U P வொரியர்ஸ் அணி கடைசி 22 பந்துகளில் 4 விக்கெட்களை இழந்து 19 ஓட்டங்களையே பெற்றது.

பந்துவீச்சில் சய்க்கா இஷாக் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அமேலியா கெர் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹெய்லி மெத்யூஸ் 27 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/150349

  • கருத்துக்கள உறவுகள்

ஏராள‌ன் அண்ணா என்ர‌ செல்ல‌ம் Smriti Mandhana இந்த‌ தொட‌ர் முழுவ‌தும் ச‌ரியா விளையாடுகிறா இல்லை

 

ஜ‌க்க‌ம்மாவுக்கு தூது அனுப்புவோமா செல்ல‌த்துக்கு க‌ருனை காட்ட‌ சொல்லி லொல் 🤣😁😂.....................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாரிஸ்ஆன், ஜொனாசன் ஆகியோரின் சாமர்த்தியத்தால் கடைசி ஓவரில் டெல்ஹி வெற்றி

Published By: VISHNU

14 MAR, 2023 | 12:53 PM
image

(நெவில் அன்தனி)

மும்பை, டி. வை. பட்டில் பயிற்சியக விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (13) இரவு கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்திய மகளிர் பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் மாரிஸ்ஆன் கெப், ஜெஸ் ஜொனாசன் ஆகிய இருவரும் பொறுமையைக் கடைப்பிடித்து சாமர்த்தியமாக துடுப்பெடுத்தாடி 2 பந்துகள் மீதிமிருக்கையில் டெல்ஹி கெப்பிட்டல்ஸின் வெற்றியை உறுதி செய்ய, றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தோல்வி தொடர்ந்த வண்ணம் உள்ளது.

marizanne.jpg

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட சற்று கடினமான 151 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 19.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 154 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

alice_capsey.jpg

அப் போட்டியல் முதலில் துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது.

elysse_perry.jpg

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, 12ஆவது ஓவர்வரை மிக நிதானத்துடனேயே துடுப்பெடுத்தாடியது.

அதிரடிக்கு பெயர்பெற்ற அணித் தலைவி ஸ்ம்ரித்தி மந்தனா மீண்டும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறி 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். 5 போட்டிகளில் அவர் 88 ஓட்டங்களையே மொத்தமாக பெற்றுள்ளார். ஒருவேளை அவரிடமிருந்து அணித் தலைமைப் பொறுப்பு நீக்கப்பட்டால் அவர் துடுப்பாட்டத்தில் பிரகாசிப்பார் என்பது இரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனால், அணி முகாமைத்துவம்தான் அது குறித்து தீர்மானிக்கவேண்டும்.

சொஃபி டிவைன் (21), ஹீதர் நைட் (11) ஆகிய இருவரும் ஆட்டம் இழந்த பின்னர் (63 - 3 விக்.) எலிஸ் பெரியும் ரிச்சா கோஷும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி ஓவருக்கு 5 ஓட்டங்களாக இருந்த ஓட்ட வேகத்தை 7ஆக உயர்த்தினர்.

அவர்கள் இருவரும் 4ஆவது விக்கெட்டில் 34 பந்துகளில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினர்.

எலிஸ் பெரி 4 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் அடங்கலாக 67 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கால் இருந்தார். ரிச்சா கோஷ் 16 பந்துகளில் 3 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 37 ஓட்டங்களைக் குவித்தார்.

பந்துவீச்சில் ஷிக்கா பாண்டி 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

டெல்ஹி கெப்பிட்டல்ஸ் பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது அதிரடிக்குப் பெயர் பெற்ற 19 வயதான ஷஃபாலி வர்மா (0) 2ஆவது பந்தில் ஆட்டமிழக்க அவ்வணி தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

அதன் பின்னர் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய மெக் லெனிங், அலிஸ் கெப்சி ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 44 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறிய அளவில் உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால், அவர்கள் இருவர் உட்பட 3 விக்கெட்கள் சீரான இடைவெளியில் விழ டெல்ஹி கெப்பிட்டல்ஸ் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

அலிஸ் கெப்சி 8  பவுண்டறிகளுடன்   38 ஓட்டங்களையும் மெக் லெனிங் 15 ஓட்டங்களையும் ஜெமிமா ரொட்றிக்ஸ் 3 பவுண்டறிகளுடன் 32 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்கள் மூவரும் ஓட்ட வேகத்தை அதிகரிக்க முயற்சித்து தவறான அடி தெரிவுகளால் பிடி கொடுத்து ஆட்டமிழந்தனர். (109 - 4 விக்).

இந் நிலையில் ஜோடி சேர்ந்த மாரிஸ்ஆன் கெப், ஜெஸ் ஜொனாசன் ஆகிய இருவரும் ஆரம்பத்தில் நிதானமாகவும் கடைசியில் அதிரடியாகவும் துடுப்பெடுத்தாடி 2 பந்துகள் மீதமிருக்க தமது அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.

மாரிஸ்ஆன் கெப் 3 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் அடங்கலாக 32 ஓட்டங்களுடனும் ஜெஸ் ஜொனாசன் 4 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் அடங்கலாக 29 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

பந்துவீச்சில் சோபனா ஆஷா 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

மும்பை முன்னிலை

மகளிர் பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட்டில் திங்கட்கிழமைவரை நடந்துமுடிந்துள்ள 11 போட்டி முடிவுகளின் அடிப்படையில் மும்பை இண்டியன்ஸ் தொடர்ந்தும் தோல்வி அடையாத அணியாக முதலிடத்தில் இருக்கிறது.

மும்பை இண்டியன்ஸ் அணி முதல் சுற்றில் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றிபெற்று அணிகள் நிலையில் 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.

ப்ளே ஓவ் சுற்றுக்கு முன்னேற மும்பை இண்டியன்ஸ் அணிக்கு இன்னும் ஒரே ஒரு வெற்றிதான் தேவைப்படுகிறது. இந் நிலையில் குஜராத் ஜயன்ட்ஸ் அணியை ப்றேபோர்ன் மைதானத்தில் மும்பை இண்டியன்ஸ் அணி இன்று இரவு சந்திக்கவுள்ளது.

டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணி தனது 5 போட்டிகளில் 4 வெற்றிகள், ஒரு தோல்வி என்ற பெறுபேறுகளுடன் 8 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

U P வொரியர்ஸ் 4 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளைப் பெற்று 3ஆம் இடத்திலும் குஜராத் ஜயன்ட்ஸ் 4 போட்டிகளில் ஒரு வெற்றியுடன் 2  புள்ளிகளைப் பெற்று 4ஆம் இடத்திலும்   இருக்கின்றன.

றோயல் செலஞ்சர்ஸ் அணி நேற்றைய போட்டியுடன் தனது 5ஆவது நேரடித் தோல்வியைத் தழுவி அணிகள் நிலையில் புள்ளிகள் எதுவும் இன்றி கடைசி இடத்தில் இருக்கிறது. றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ப்ளே ஓவ் சுற்றுக்கு தகுதிபெறுவதாக இருந்தால் எஞ்சிய 3 போட்டிகளிலும் வெற்றிபெற்றாக வேண்டும். 

https://www.virakesari.lk/article/150486

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 5/3/2023 at 16:38, ஏராளன் said:

யான் மந்தனா ரசிகராக்கும்!

Indian batter Smriti Mandhana retains 3rd position in Women's T20I rankings  - Indian batter Smriti Mandhana retains 3rd position in Women's T20I  rankings -

 

15 hours ago, பையன்26 said:

ஏராள‌ன் அண்ணா என்ர‌ செல்ல‌ம் Smriti Mandhana இந்த‌ தொட‌ர் முழுவ‌தும் ச‌ரியா விளையாடுகிறா இல்லை

 

ஜ‌க்க‌ம்மாவுக்கு தூது அனுப்புவோமா செல்ல‌த்துக்கு க‌ருனை காட்ட‌ சொல்லி லொல் 🤣😁😂.....................

தம்பி இது சரியில்லை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குஜராத்தை வீழ்த்தி ப்ளே - ஓவ் சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்தது மும்பை

Published By: VISHNU

15 MAR, 2023 | 04:26 PM
image

(நெவில் அன்தனி)

குஜராத் ஜயன்ட்ஸ் அணிக்கு எதிராக மும்பை, ப்றேபோர்ன் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (14) இரவு நடைபெற்ற போட்டியில் 55 ஓட்டங்களால் வெற்றிபெற்ற மும்பை இண்டியன்ஸ் அணி, அங்குரார்ப்பண மகளிர் பிறீமியர் லீக் இருபது 20 சுற்றப் போட்டியின் ப்ளே-ஓவ் சுற்றில் விளையாட முதலாவது அணியாகத் தகுதிபெற்றது.

இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும் மும்பை இண்டியன்ஸ் தொல்வி அடையாத அணியாக 10 புள்ளிகளைப் பெற்றுள்ளது. 5ஆம் இடத்தில் இருக்கும் றொயல் செலஞ்சர்ஸ் அணியினால் அதிகபட்சமாக 8 புள்ளிகளையே பெறக்கூடியதாக இருக்கும் என்பதால் மும்பை இண்டியன்ஸ் ப்ளே-ஓவ் வாய்ப்பை உறுதிசெய்துக்கொண்டது.

குஜராத் ஜயன்ட்ஸ் அணியுடனான போட்டியில் ஹார்மன்ப்ரீத் கோர் குவித்த அபார அரைச் சதம், யஸ்திகா பாட்டியாவின் திறமையான துடுப்பாட்டம், நெட் சிவர் - ப்றன்ட், ஹெய்லி மெத்யூஸ் ஆகியோரின் துல்லியமான பந்துவிச்சுகள் என்பன மும்பை இண்டியன்ஸ் அணியின் வெற்றியை இலகுவாக்கின.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மும்பை இண்டியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது.

முதலாவது ஓவரில் ஹெய்லி மெத்யூஸ் (0) ஆட்டமிழந்த பின்னர் யஸ்திகா பாட்டியாவும் நெட் சிவர்-ப்றன்டும் 2ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்து  அணியை சிறந்த நிலையில் இட்டனர். (75 - 1 விக்.)

ஆனால் அவர்கள் இருவரும் 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்தனர்.

நெட் சிவர் - ப்றன்ட் 36 ஓட்டங்களையும் யஸ்திகா பாட்டியா 44 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந் நிலையில் 4ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த அணித் தலைவி ஹார்மன்ப்ரீத் கோரும் அமேலியா கேரும் பெறுமதிமிக்க 51 ஓட்டங்களைப் பகிர்ந்து  அணியை பலப்படுத்தினர்.

அமேலியா கேர் 19 ஓட்டங்களுடன் வெளியேறினார். அதன் பின்னர் ஒரு பக்கத்தில் சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிய மறுபக்கத்தில் ஹார்மன்ப்ரீத் கோர் 30 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 51 ஓட்டங்களைக் குவித்தார்.

பந்துவீச்சில் ஏஷ்லி கார்ட்னர் 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

163 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 107 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

முதலாவது பந்திலேயே சொஃபியா டன்க்லியின் விக்கெட்டை இழந்த குஜராத் ஜயன்ட்ஸ் அதன் பின்னர் மீளவில்லை. துடுப்பாட்டத்தில் 4 வீராங்கனைகளே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். ஏனையவர்கள் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளுடன் வெளியேறினர்.

திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஹார்லீன் டியோல் 22 ஓட்டங்களை அதிகப்பட்சமாக பெற்றார். அவரை விட அணித் தலைவி ஸ்நேஹ் ராணா 20 ஓட்டங்களையும் சுஷ்மா வர்மா 18 ஓட்டங்களையும சபினெனி மேகனா 16 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் நெட் சிவர் - ப்றன்ட் 4 ஓவர்களில் 21 ஒட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஹெய்லி மெத்யூஸ் 4 ஓவர்களில் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அமேலியா கெர் 4 ஓவர்களில் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/150602

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.