Jump to content

தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக பிகாரைச் சேர்ந்த 12 பேர் தூக்கிலிடப்பட்டதாக பரவும் வதந்தி - உண்மை என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக பிகாரைச் சேர்ந்த 12 பேர் தூக்கிலிடப்பட்டதாக பரவும் வதந்தி - உண்மை என்ன?

சித்தரிக்கும் படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

சித்தரிக்கும் படம்

3 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 15 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அதில் 12 பேர் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டதாக வட இந்தியாவிலிருந்து வெளியாகும் பிரதான செய்தி நிறுவனங்களே போலிச் செய்திகளை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பிகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் நேற்று பிற்பகலில் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

அந்த ட்வீட்டில், "தமிழ்நாட்டில் உள்ள பிகார் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து செய்தித்தாள்கள் மூலம் அறிந்துகொண்டேன். பிகார் மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் பேசும்படி தலைமை செயலரையும் டிஜிபியையும் கேட்டுக்கொண்டுள்ளேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

தமிழ்நாட்டில் ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்துகொண்டிருந்த நிலையில், நிதிஷ்குமாரின் இந்த ட்வீட் அரசின் பல மட்டங்களிலும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இதற்கு சற்று முன்பாக தமிழ்நாடு காவல்துறையின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு செய்தி பதிவாகியிருந்தது.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

அதில், "தமிழ்நாட்டில் இந்தி பேசுவோரும் வட இந்தியரும் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களிலும் பிற ஊடகங்களிலும் வதந்திகள் பரப்பப்படுகின்றன. அதிலிருக்கும் தகவல்கள் உறுதிப்படுத்தப்படாமல் பதிவிடப்படுகின்றன. இம்மாதிரி வதந்திகளை நம்பவோ, பரபப்பவோ செய்யாதீர்கள்."

"இவ்வாறு பரப்பப்படும் ஒரு வீடியோவில் காட்டப்படும் மோதலானது, தமிழ்நாட்டில் பிகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடையிலானது. மற்றொன்று, கோயம்புத்தூரில் உள்ளூர் மக்களுக்கு இடையில் நடந்த மோதல் தொடர்பானது."

"தமிழ்நாடு மிகவும் அமைதியான, பாதுகாப்பான மாநிலம். இங்குள்ள ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் பொது ஒழுங்கு பராமரிக்கப்படுகிறது. இந்த ட்வீட்டில் காணப்படும் தகவல்கள், பொய்யானவை. தவறான கருத்தைத் தருபவை. இம்மாதிரியான போலியான தகவல்களை பரப்ப வேண்டாம். பரப்பினால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழ்நாடு காவல்துறை தலைவர்" எனப் பதிவிடப்பட்டிருந்தது.

முகமது தன்வீர் என்பவரது ட்வீட்டை மேற்கோள்காட்டி இந்தப் பதிவை தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டிருந்தது. தற்போது முகமது தன்வீர் அந்த ட்வீட்டை நீக்கிவிட்டார்.

ஆனால், வீடியோவுடன் கூடிய மற்றொரு ட்வீட்டை வெளியிட்டிருக்கும் முகமது தன்வீர், இந்த வீடியோவுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள் எனக் கேட்டிருக்கிறார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 3
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 3

அவர் அந்த ட்வீட்டோடு இணைத்திருக்கும் வீடியோவில், சில இளைஞர்கள் தாங்கள் இந்தி பேசியதற்காக தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

அந்த வீடியோவோடு அவர் எழுதியிருக்கும் பதிவில், "தமிழ்நாடு காவல்துறையே, இவர்கள் பொய் சொல்கிறார்களா? பிகாரைச் சேர்ந்தவர்களும் இந்தி பேசுபவர்களும் தமிழ்நாட்டில் ஒடுக்கப்படுகிறார்கள். என் மீது எஃப்ஐஆர் போடுவதாக பயமுறுத்துவதற்கு முன்பாக, பிகாரிகளை ஒடுக்கும் உங்கள் குண்டர்களை தடுத்து நிறுத்துங்கள். பிகார் காவல்துறையே, உங்களுக்கு இந்தி தெரியுமா? இதைக் கேளுங்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் ஒரு தொலைபேசி உரையாடலையும் அவர் வெளியிட்டிருக்கிறார். "இந்த வலியைக் கேளுங்கள். அர்மான் தமிழ்நாட்டில் கூலித் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். தமிழர்கள் எப்படி இந்தி பேசும் மக்களை ஒடுக்குகிறார்கள் என்பதை அவர் சொல்கிறார். பிகார் அரசும் பிகார் காவல்துறையும் தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்பாளர்களைப் போலச் செயல்படக்கூடாது. பிகாரிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள்" என்று கூறியிருக்கிறார்.

இன்னொரு வீடியோவை வெளியிட்டு, அதில் "தமிழ்நாட்டில் இருந்து உயிர் பிழைத்து ஓடிவந்திருக்கும் தொழிலாளர்கள் கூறுவதைக் கேளுங்கள்" என்று கூறியிருக்கிறார். அதற்கடுத்த பதிவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர், "தமிழக வேலை தமிழருக்கே, வட இந்தியரை வெளியேற்று" என்று கூறும் போஸ்டரைப் பகிர்ந்து இதற்கு என்ன சொல்கிறீர்கள்? என்று கேள்வியெழுப்பியிருக்கிறார். இந்த முகமது தன்வீர் தன்னை ஒரு சுயாதீன பத்திரிகையாளர் என குறிப்பிட்டுள்ளார்.

இதற்குப் பிறகே, பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ட்வீட் வெளியானது.

இதையடுத்து தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு ஒரு வீடியோவை வெளியிட்டு, இதுபோன்ற சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லையென்றும் பரப்பப்படும் வீடியோக்கள் போலியானவை என்றும் விளக்கமளித்தார்.

இதற்குப் பிறகு பா.ஜ.கவைச் சேர்ந்த பலரும் இதுபோன்ற தகவல்களைப் பரப்பத் தொடங்கினர். ஹரி மாஞ்சி என்ற பா.ஜ.கவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், "தமிழ்நாட்டில் பிகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுகின்றனர். ஆனால், லாலுவின் மகனும் பிகாரின் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுடன் கேக் சாப்பிடுகிறார். வெட்கக்கேடு" என்று கூறியிருந்தார். அத்துடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவில் தேஜஸ்வி யாதவ் பங்கேற்றிருந்த படத்தையும் இணைத்திருந்தார்.

எம்.டி சிக்கந்தர் என்பவர், சாலையில் ஒருவர் கொடூரமாக தாக்கப்படும் வீடியோவை இணைத்து, ஒரு ட்வீட்டை வெளியிட்டிருந்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 4
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 4

அந்த ட்வீட்டில் "தமிழ்நாட்டில் இந்தி பேசுபவர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த நாட்டில் சட்டம் என்பது இல்லையா? இந்த பயங்கரவாதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்? என்று கூறியிருந்தார். ஆனால், அந்த வீடியோவில் இருந்த சம்பவம் ஹைதராபாதில் நடைபெற்றது. அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களும் கைதுசெய்யப்பட்டுவிட்டனர்.

யுவராஜ் சிங் ராஜ்புத் என்பவர் பதிவிட்டிருந்த ட்வீட்டில் மிக மோசமான ஒரு படுகொலை சம்பவத்தின் வீடியோவைப் பதிவிட்டு, "தமிழ்நாட்டில் பிஹார் தொழிலாளர்கள் கொடூரமாகக் கொலைசெய்யப்படும் நிலையில், நிதிஷ் அரசு வாய்மூடி இருக்கிறது" என்று கூறியிருந்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 5
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 5

ஆனால், அந்த வீடியோவில் இருந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டில் நடந்த ஒரு படுகொலை சம்பவம்.

ஆனால், இதையெல்லாம்விட மோசமாக, இந்தியில் வெளிவரும் பிரபல பத்திரிகைகளான தைனிக் பாஸ்கர், ஹிந்துஸ்தான் ஆகியவை இந்த ட்வீட்களை நம்பி, தமிழ்நாட்டில் 12 பிகாரிகள் கொல்லப்பட்டதாக செய்திகளை வெளியிட்டன.

இந்தத் தகவல்கள் தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு பலரால் கொண்டுசெல்லப்பட்ட நிலையில், பிகார் அரசைத் தொடர்புகொண்டு தமிழக அரசின் சார்பில் உண்மை நிலைமை தெளிவுபடுத்தப்பட்டது.

இருந்தபோதும் தைனிக் பாஸ்கரில் வெளியிடப்பட்ட ட்வீட் இரவு வரை நீக்கப்படாத நிலையில், காவல்துறை உயர் அதிகாரிகள் அந்த நாளிதழைத் தொடர்புகொண்டு பேசினர். பிறகு அந்த ட்வீட் ஒரு வழியாக நீக்கப்பட்டது.

பொய்ச் செய்திகளை அம்பலப்படுத்தும் ஆல்ட் நியூஸ் இணையதளத்தின் நிறுவனர்களில் ஒருவரான முகமது ஜுபைர், இந்தப் பொய்ச் செய்திகளை அம்பலப்படுத்தி ஒரு நீண்ட ட்வீட் தொகுப்பை தற்போது வெளியிட்டிருக்கிறார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 6
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 6

பாரம்பரியமான ஊடகங்களே இதுபோன்ற செய்திகளை வெளியிட்ட நிலையில், காவல்துறையின் தலையீட்டில் அந்தச் செய்திகள் தற்போது நீக்கப்பட்டுவிட்டாலும், தனிநபர்கள் வெளியிட்ட பொய்ச் செய்திகள் தொடர்ந்து பரவிக்கொண்டுதான் இருக்கின்றன.

திடீரென தமிழ்நாடு குறித்து இதுபோன்ற போலித் தகவல்கள் ஏன் பரப்பப்படுகின்றன என்பதில் இதுவரை தெளிவு ஏதும் ஏற்படவில்லை.

https://www.bbc.com/tamil/articles/c84024dxe5lo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வதந்தி பரப்பியோரை கைது செய்ய தனிப்படை: தமிழ்நாடு போலீஸ்

வட மாநிலத்தவர் தாக்கப்படுவதாக வதந்தி

பட மூலாதாரம்,GETTY IMAGES

55 நிமிடங்களுக்கு முன்னர்

“வெளிமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புபவர்கள், இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிப்பவர்கள். சமூக ஊடகங்களில் இப்படி கீழ்த்தரமாகச் சிலர் அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது,” என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், “புலம்பெயர்ந்த வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக உண்மைக்குப் புறம்பான, பொய்யான தகவல் இணையதளத்தில், சமூக ஊடகங்களில் சிலரால் பரப்பப்பட்டுள்ளது. அப்படிப் பொய் செய்தி பரப்பியவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு வருகிறார்கள்,” என்று தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 15 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அதில் 12 பேர் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டதாக வட இந்தியாவிலிருந்து வெளியாகும் பிரதான செய்தி நிறுவனங்களே போலிச் செய்திகளை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டில் ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்துகொண்டிருந்த நேரத்தில் இது பரவியது, அரசின் பல மட்டங்களிலும் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது. பின்னர் அந்தச் செய்திகள் போலியானவை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்தது.

“எவ்வித அச்சமும் அடைய வேண்டாம்”

இந்நிலையில், இன்று தமிழ்நாடு காவல்துறை, “புலம்பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாகப் பொய்யான தகவலை பரப்பியவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு வருகிறார்கள்” என்று தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு இது. இதை நம்மைவிட வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து வாழும் மக்களே அழுத்தமாகச் சொல்கிறாகள்.

வர்த்தகத்திற்காக, தொழிலுக்காக, மருத்துவத்திற்காக, கல்விக்காக, வேலைக்காக எனப் பல்வேறு மாநில மக்கள் தமிழ்நாட்டிற்கு வருவது காலம்காலமாகத் தொடர்ந்து வருகிறது. அவர்கள் தாங்களும் உயர்ந்து, தமிழ்நாட்டையும் உயர்த்தியுள்ளார்கள்,” என்று தெரிவித்துள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

மேலும், “இங்கு நிலவும் அமைதியான சூழ்நிலையைக் காணப் பொறுக்காத சிலர் அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில், தமிழ் மக்களின் பண்பாட்டை அவமதிக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு சில குறுமதியாளர்கள் முயற்சி செய்கிறார்கள். அவர்களது எண்ணம் ஈடேறாது,” என்று கூறியுள்ளார்.

வேறு மாநிலங்களில் நடைபெற்ற சில சம்பவங்களின் வீடியோக்களையும் படங்களையும் தமிழ்நாட்டில் நடைபெற்றதாக வேண்டுமென்றே வதந்தி பரப்பி, அச்சத்தையும் பீதியையும் பரப்புபவர்கள் மீது சட்டரீதியாக, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தனது அறிக்கையில் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

அதோடு, வட மாநில தொழிலாளர்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், “அப்படி யாராவது அச்சுறுத்தினால், அறிவிக்கப்பட்டுள்ள காவல் துறை உதவி எண்கள் வாயிலாக தகவல் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

“வதந்தி பரப்பியவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்”

புலம்பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக உண்மைக்குப் புறம்பாக பொய்யான தகவலைப் பரப்புபவர்கள் கைது செய்யப்படுவதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

“இதுதொடர்பாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் தைய்னிக் பாஸ்கர் இணைய இதழ் ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தன்வீர் போஸ்ட் என்ற பத்திரிகையின் உரிமையாளர் முகமது தன்வீர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, தூத்துக்குடி மாவட்டம் சென்ட்ரல் காவல் நிலையத்தில் பிரசாந்த் உமராவ் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள இவர்களைக் கைது செய்ய தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநருடைய உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது,” என்று தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

மேலும், “தமிழ்நாட்டில் வாழும் புலம்பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் எவ்வித அச்சமும் இன்றி அமைதியாக வசித்து வருகிறார்கள்.

அந்த அமைதியைச் சீர்குலைத்து பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பொய்ச் செய்திகளைப் பரப்புவோர் பற்றிய விவரங்கள் காவல்துறையால் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவர்கள்மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும்,” என்றும் போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c51pd9pp8xdo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றுமே நடாக்காத போது ஓவரா வட இந்திய ஊடகங்கள் கூப்பாடு போடுகின்றன அதே போல் டுவிட்டர் மூல்ம் இன்னும் மோசமாக தமிழர்களை சித்தரிக்கிறார்கள் .

கிந்தி இராணுவ  முகாம்கள் தமிழகத்தில் அமைக்கும் திட்டம் போல் உள்ளது .

தமிழகத்தில் இந்தி பேசும் மக்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று ரோஹித் குமார் கூறினார்.

தமிழகத்தில் இந்தி பேசும் மக்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று ரோஹித் குமார் கூறினார்.

https://www.bhaskar.com/local/bihar/jamui/news/claim-of-death-of-more-than-12-appealed-to-the-prime-minister-and-the-chief-minister-by-releasing-the-video-130991821.html?_branch_match_id=1092732837640302628&utm_campaign=130991821&utm_medium=sharing&_branch_referrer=H4sIAAAAAAAAA8soKSkottLXT0nMzMvM1k3Sy8zTTzfOdfbLznYLqEgCAPon%2BDEfAAAA

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bihar government to send a four-member team to Tamil Nadu to probe reports of attacks on Bihari migrantsபீஹாரி புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல்கள் குறித்த புகார்களை விசாரிக்க நான்கு பேர் கொண்ட குழுவை பீகார் அரசு தமிழகத்திற்கு அனுப்ப உள்ளது.https://www.opindia.com/2023/03/nitish-kumar-bihari-workers-tamil-nadu-team/

கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படும் போது தமிழக அரசால் இப்படி ஒரு குழுவை அனுப்ப முடியுமா ?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படும் போது தமிழக அரசால் இப்படி ஒரு குழுவை அனுப்ப முடியுமா ?

வட மாநிலங்களில் உள்ள தமிழர்களை வெட்டி கொல்லும் போது...
டாஸ்மார்க்  திராவிட அரசு மௌனமாக பார்த்துக் கொண்டு இருக்கும்.
தமிழகத்தில், யாரை ஆட்சி பீடத்தில் அமர்த்த வேண்டும் என்று அப்போ தெரியும்.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, தமிழ் சிறி said:

வட மாநிலங்களில் உள்ள தமிழர்களை வெட்டி கொல்லும் போது...
டாஸ்மார்க்  திராவிட அரசு மௌனமாக பார்த்துக் கொண்டு இருக்கும்.
தமிழகத்தில், யாரை ஆச்சி பீடத்தில் அமர்த்த வேண்டும் என்று அப்போ தெரியும்.

ஆந்திராவில் 20 தமிழ்த் தொழிலாளர்களை அடித்தே கொன்ற போது ஒரு கண்டனம் கூட தெரிவிக்க வக்கற்ற திராவிடத் திருவாளர்களின் மானங்கெட்ட ஆட்சிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்திலிருந்து உயிரைக் காப்பாற்றி திரும்பிய தொழிலாளர்களின் நில அறிக்கை வலி: தெருக்களில் அடி, மிரட்டல்; குடும்ப உறுப்பினர்கள் வெளிப்படையாகப் பேச முடியாத அளவுக்கு பீதி நிலவுகிறது

 

தமிழகத்தில் இருந்து பீகார் திரும்பிய தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக புகார் எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு பாஜக ட்வீட் செய்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. குறைந்த பணத்தில் வேலை செய்வதால், அங்கிருந்து விரட்டப்படுவதாக கூறப்பட்டது.

இதற்கிடையில், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ட்வீட், தமிழகத்தில் பீகார் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து நாளிதழ்கள் மூலம் தகவல் கிடைத்துள்ளது. விசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். விசாரணை நடத்த 4 பேர் கொண்ட குழுவும் சனிக்கிழமை தமிழகம் சென்றுள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த விஷயத்தின் உண்மை நிலையை அறிய, பாட்னாவில் இருந்து 170 கி.மீ., தொலைவில் உள்ள ஜமுய்யின் சிக்கந்திரா பிளாக்கை டைனிக் பாஸ்கர் குழுவினர் அடைந்தனர். பீகார் மாநிலத்தில்தான் தமிழகத்தில் இருந்து அதிக மக்கள் வெளியேறியுள்ளனர்.

அவநம்பிக்கையான தாய், என் இளம் மகன் போய்விட்டான், யாரைக் குறை சொல்வது

 
18 வயதான மோனுவின் தாய் விபத்திற்குப் பிறகு ஆறுதல் அடையவில்லை.  மொத்தக் குடும்பமும் முழு விஷயத்திலும் எதுவும் பேசாமல் தவிக்கின்றனர்.
18 வயதான மோனுவின் தாய் விபத்திற்குப் பிறகு ஆறுதல் அடையவில்லை. மொத்தக் குடும்பமும் முழு விஷயத்திலும் எதுவும் பேசாமல் தவிக்கின்றனர்.

மதியம் மூன்று மணி. ஜமுய், சிக்கந்த்ராவின் வார்டு எண்-12ல் அமைந்துள்ள கிருஷ்ணா ரவிதாஸின் வீட்டை அடைந்தோம். அவரது 18 வயது மகன் மோனு கடந்த 8 நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் சந்தேகத்திற்கிடமான நிலையில் உயிரிழந்தார். வாடகை அறையில் வசித்து வந்தார். அதே அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டதாக அவரது சகோதரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வீட்டிற்கு வெளியே அமர்ந்திருக்கும் தாய் சோமாதேவி மனநிலை சரியில்லாமல் இருக்கிறார். அங்கு வரும் அனைத்து மக்களிடமும் தன் மகனை உயிருடன் அழைத்து வருமாறு கெஞ்சுகிறாள். அவர் தனது இளம் மகன் சென்றுவிட்டார் என்று கூறினார். ஒரு மகன் அதிர்ச்சியில் இருக்கிறான், மற்றொரு மகன் அங்கே சடங்குகள் செய்கிறான். யாரை குற்றம் சொல்வது

பலமுறை கேள்விகள் கேட்டாலும் இதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை. இதற்குக் காரணம், ஒரு மகன் தமிழ்நாட்டில்தான் இருப்பது தெரிய வந்தது, இப்படிப்பட்ட சூழ்நிலையில், அறிக்கை கொடுத்தால், தனக்கும் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டுவிடுமோ என்ற பயம்.

என் கண்ணெதிரே பீஹாரிகள் அடிக்கப்படுவதைப் பார்த்தேன், உதவக்கூட முடியவில்லை.அதன்
பிறகு சிக்கந்த்ராவிலிருந்து 12 கிமீ தொலைவில் உள்ள தாதோர் கிராமத்தை அடைந்தோம். இங்கு நிதிஷ் பாஸ்வானையும் பிக்குவையும் சந்தித்தோம். அவர்களும் பயந்தனர். ஒரு நாள் முன்னதாகவே ஓடிப்போய் இங்கே வந்துவிட்டான்.

தமிழகத்தின் திருப்பூரில் கடந்த 8 ஆண்டுகளாக ஆடைத் தொழிற்சாலை நடத்தி வரும் நிதீஷ் கூறுகையில், ' பிஹாரி சகோதரர்கள் சாலையில் அடிபடுவதை எங்கள் கண்களால் பார்த்தோம், ஆனால் உதவக்கூட முடியவில்லை. நான் உதவியிருந்தால் நானும் கொல்லப்பட்டிருப்பேன். அவர் ஹிந்தி பேசுவதைக் கண்டு மக்கள் அவரை அடித்தனர். அங்கிருந்த பெண்களும் எங்களை மிரட்டினார்கள்.

 
நிதிஷ் பாஸ்வான் 10 ஆண்டுகளாக தமிழகத்தில் பணியாற்றி வருகிறார்.  பீஹாரிகளை மக்கள் தன் கண் முன்னாலேயே அடிப்பார்கள் என்று கூறினார்.
நிதிஷ் பாஸ்வான் 10 ஆண்டுகளாக தமிழகத்தில் பணியாற்றி வருகிறார். பீஹாரிகளை மக்கள் தன் கண் முன்னாலேயே அடிப்பார்கள் என்று கூறினார்.

பீஹாரிஸ் 20 வயது பிக்குவை தடுக்கும் முயற்சியில் தொழிற்சாலை உரிமையாளர்கள்,
தமிழகத்தில் உள்ள சேலை தொழிற்சாலையில் 4 ஆண்டுகளாக பணிபுரிந்து வருவதாக தெரிவித்தார். கொஞ்ச நாட்களாக அங்கிருந்தவர்கள் வந்து, நீ கிளம்பு, அப்புறம் எங்களுக்கு வேலை கிடைக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். நீங்கள் தங்கினால் பிரச்சனை வரும். தொழிற்சாலை உரிமையாளர்கள் எங்களை தடுத்தாலும், எந்தவித பாதுகாப்பும் வழங்கவில்லை.

நிர்வாக அதிகாரிகளும் பீஹாரிகளை தமிழகத்தை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.தாதோருக்கு
பிறகு அங்கிருந்து 15 கிலோமீட்டர் பயணம் செய்து பாசாபுட்டி கிராமத்தை அடைந்தோம். இங்குள்ள சுமார் 50 இளைஞர்கள் இரண்டு நாட்களுக்கு முன் தமிழகத்தில் இருந்து திரும்பியுள்ளனர். இங்கு ஷம்பு ராம், பங்கஜ், கார்த்திக் மற்றும் அமித் ஆகியோரை சந்தித்தோம். அப்போது வரவில்லையென்றால் உயிரையே பறிகொடுத்திருக்கலாம் என்று கூறினார்.

அவரை தமிழகத்தை விட்டு வெளியேறுமாறு அப்பகுதி மக்கள் தினமும் வந்து கொண்டிருந்தனர். நிர்வாக அதிகாரிகள் கூட தங்கள் பகுதிக்கு வந்து சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது, விட்டுவிடுங்கள், இல்லையெனில் அவர்களுக்கு உதவ முடியாது என்று கூறினர்.

திருப்பூர் பகுதியில் அதிகபட்ச வன்முறை நடக்கிறது என்று பங்கஜ் கூறினார். எங்களால் வேலை கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

 
தமிழகத்தில் இன்னும் பல இளைஞர்கள் சிக்கியிருப்பதாக பங்கஜ் கூறினார்.
தமிழகத்தில் இன்னும் பல இளைஞர்கள் சிக்கியிருப்பதாக பங்கஜ் கூறினார்.

என் மகன் ஒரு வாரமாக அறையில் அடைக்கப்பட்டிருந்தான், அவனை வெளியே கொண்டு வா
பாஸ்புட்டி கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட ஜீனாதேவி, தன் மகன் ராஜீவ் குமார் திருப்பூரில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் ஒரு வருடமாக வேலை செய்கிறான் என்று கூறினார். அங்கு நடக்கும் வன்முறை சம்பவங்களால் அவர் மிகவும் பயந்துள்ளார். அறையில் ஒரு வாரம் சிறை வைக்கப்பட்டுள்ளார். அங்கிருந்து திரும்ப விரும்பினாலும், தைரியத்தை திரட்ட முடியவில்லை. அந்த பெண் தன் மகனை மீட்டுத் தருமாறு அரசிடம் மன்றாடுகிறார்.

சர்ச்சைக்கு முக்கிய காரணம் என்ன என்பதை இப்போது புரிந்து கொள்ளுங்கள்.தமிழகத்தில்
இருந்து திரும்பிய 50க்கும் மேற்பட்டவர்களிடம் பேசினோம். தகராறுக்கு வேலை மட்டுமே காரணம் என அனைவரும் கூறினர். உண்மையில், பீஹாரி தொழிலாளர்கள் 10-12 மணி நேரம் 600-800 ரூபாய்க்கு வேலை செய்கிறார்கள். உள்ளூர் தொழிலாளர்கள் ரூ.1000-1200க்கு 6-8 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய விரும்புகிறார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் பீஹாரிகளையும் அவ்வாறே செய்யுமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.

பீஹாரி தொழிலாளர்களுக்கு எதிராக தமிழகத்தில் ஆண்களும் பெண்களும் நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர். அரசாங்கத்திடம் வேலை கேட்டு வருகின்றனர். பீஹாரிகளால் தமிழ் மக்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள். பல மாதங்களாக நடந்து வந்த இவர்களின் போராட்டம் தற்போது வன்முறையாக மாறியுள்ளது.

 
பாசாபுட்டி கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தமிழகத்தில் இருந்து கிராமத்துக்குத் திரும்பியுள்ளனர்.
பாசாபுட்டி கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தமிழகத்தில் இருந்து கிராமத்துக்குத் திரும்பியுள்ளனர்.

1 லட்சத்துக்கும் மேற்பட்ட பீகாரிகள் இருப்பதாக கூறி ஒப்பந்ததாரர்கள் பீகாரில் இருந்து ஆட்களை தமிழகத்திற்கு அழைத்து செல்கின்றனர்.இதுகுறித்து
தொழிலாளர்கள் கூறியதாவது: பீகார் மக்களுக்கு தமிழகத்தில் அதிக தேவை உள்ளது. நிறுவன ஆபரேட்டர்கள், இங்கிருந்து மக்களை அங்கு அழைத்துச் செல்ல புரோக்கர்களை நாடுகின்றனர். பலர் ஜனரஞ்சக வாக்குறுதிகளை வழங்குகிறார்கள். செல்வதற்கு, தங்குவதற்கு எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிலர் ஒரு கிராமத்திலிருந்து வெளியேறினால், மெதுவாக மற்றவர்களும் வெளியேறத் தொடங்குகிறார்கள்.

பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் முக்கியமாக தமிழகத்தில் உள்ள ஜவுளி மற்றும் நூல் தொழிற்சாலைகளில் பல்வேறு வேலைகளை செய்வதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். இது தவிர, மார்பிள் மெக்கானிக்காகவும் பணிபுரிகிறார். பீகாரின் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் மக்கள் அங்கு செல்கின்றனர். பீகாரில் இருந்து ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து தலைமைச் செயலாளர் கூறியதாவது -
பீகார் தலைமைச் செயலாளர் அமீர் சுபானியிடம், டைனிக் பாஸ்கர் விஷயத்தைப் புரிந்துகொள்ள முயன்றார். இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளரிடம் பேசியதாகக் கூறினார். இது தொடர்பான விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. மேலும் பீகார் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பீகார் டிஜிபி, தமிழக டிஜிபியிடம் பேசி முழு விஷயத்தையும் கேட்டுள்ளதாக சுபானி கூறினார்.

இங்கு, தமிழக டி.ஜி.பி., இந்த விவகாரம் முழுவதும் தவறான, வதந்தி, பொய் என கூறியுள்ளார். தமிழக காவல்துறையின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், வைரலான வீடியோ தவறானது என அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. பீஹாரிகள் இங்கு முற்றிலும் பாதுகாப்பாக உள்ளனர்.

இது தொடர்பான இந்த செய்திகளையும் படியுங்கள்...

தமிழகத்தில் பீஹாரிகள் மீதான தாக்குதல்….. 4 பேர் கொண்ட புலனாய்வுக் குழு வெளியேறுகிறது: முதல்வர் கூறியதாவது – குழு செல்கிறது, ஒவ்வொரு விஷயத்தையும் கவனிக்கும்; அணியில் 2 தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்

 
comp-1-49_1677921973.gif
 

தமிழகத்தில் பீஹாரிகள் மீதான தாக்குதலின் படங்கள் மற்றும் வீடியோக்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்க பீகார் அரசின் சிறப்புக் குழு இன்று புறப்பட்டது. 4 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது. இந்த நான்கு அதிகாரிகளில் 2 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் வெளியேறுவதால், அங்கு மொழிப் பிரச்சனை இருக்காது, விஷயங்களை நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். முழு செய்தியையும் படிக்க கிளிக் செய்யவும்

https://www.bhaskar.com/local/bihar/news/being-chased-and-beaten-on-the-streets-women-are-threatening-leave-our-state-131000700.html

மேல் உள்ள செய்தியை தமிழாக்கம் செய்தவர் கூகிள் ஒன்றுக்கு இருமுறை சரிபார்த்து இங்கு இணைத்தேன் பிழையெனில் அழித்து விடுங்க .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிந்தி படிக்க தேவையில்லை கூகிளே அழகாக மொழி பெயர்க்கிறார் அது சரி தமிழக ஆட்சி யாளர்களும்  ஆங்கில மீடியாக்களும் பொய்செய்தி என்கினம் ஆனால் கிந்தி ஊடகங்கள் அனைத்தும் தென்னிந்திய தமிழர்களை வன்முறையாளர்கள் போல் சித்தரிக்கினம் .

தமிழகம் பற்றி பொய் செய்தி பரப்புவோரை தனிப்படை அமைத்து கைது செய்வோம் என்கிறார் ஸ்ராலின் கிந்தி ஊடகங்கள் அனைத்தும் தென்னிந்திய தமிழர்களுக்கு எதிராகவே எழுதுகின்ற விடயம் ஸ்டாலினுக்கு தெரியாதா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வட மாநில தொழிலாளர்கள் சர்ச்சை: திமுக தேசிய அரசியலில் செல்வாக்கு செலுத்த முட்டுக்கட்டை போடுமா?

  • விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி
  • பிபிசி தமிழ்
3 மணி நேரங்களுக்கு முன்னர்
புலம்பெயர்ந்த தொழிலாளிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

புலம்பெயர் தொழிலாளிகள் - சித்தரிப்புப் படம்

தமிழ்நாட்டில் உள்ள இந்தி பேசும் பிகார் மாநில தொழிலாளர்கள், தமிழ்நாடு மக்களால் தாக்கப்படுவதாகவும் கொல்லப்படுவதாகவும் பரவிய போலிச் செய்தியியை குறிப்பிட்டு பிகார் மாநில முதலமைச்சாரன நிதிஷ்குமார் கவலை தெரிவித்து இருந்தார்.

இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டில் பல்வேறு மட்டங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், வடமாநிலத் தொழிலாளர்கள் தொடர்பான பிரச்னை அரசியல் களத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பிகார் சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டது.

கூடிவந்த எதிர்க்கட்சிகள்

கடந்த மார்ச் 1ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், இந்தியாவின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி ஆகிய முக்கிய எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். காஷ்மீர், பிகார், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் முக்கியத் தாக்கம் செலுத்தக்கூடிய சாத்தியம் உள்ள தலைவர்கள் இவர்கள்.

ஸ்டாலின் பிறந்த நாள் விழா
 
படக்குறிப்பு,

ஸ்டாலின் பிறந்த நாள் விழா மேடையில் வட இந்தியத் தலைவர்கள்

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த, அனைத்து எதிர்க்கட்சிகளும் கூட்டணி அமைக்க வேண்டும் என்று மேடையில் பேசிய அனைவரும் தெரிவித்திருந்தனர். இந்தக் கூட்டத்தில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பீகார் மாநில துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவும் பங்கேற்றிருந்தார்.

தேஜஸ்வி இந்த கூட்டத்தில் பங்கேற்றதை பிகார் சட்டப்பேரவையில் எதிர்கட்சியான பாஜக விவாதத்திற்குள்ளாக்கியது. சட்டப்பேரவையில் பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜய் குமார் சின்ஹா, "தமிழ்நாட்டில் பிகார் தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள். ஆனால் இந்த நேரத்தில் பிகார் துணை முதல்வர், தமிழ்நாடு முதல்வரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று பிகாரிகளுக்கு அவமரியாதையை சேர்த்துள்ளார்," என்று பேசினார்.

மேலும் பாஜக உறுப்பினர்கள் விளக்கம் கேட்டு சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு விளக்கம் அளித்து வெளியிட்ட வீடியோவை குறிப்பிட்டு சட்டப்பேரவையில் பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய போது, "பாஜகவிற்கும், உண்மைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்களின் பொய்கள் மீண்டும் அம்பலப்பட்டுள்ளன. பொய், குழப்பம், வெறுப்பு, வன்முறை ஆகியவற்றை பரப்புவதே பாஜகவின் தொழில்" என பாஜகவை சாடியிருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்வீட்டைப் பார்க்க இங்கே சொடுக்கவும்.

ஹோட்டல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தமிழ்நாட்டில் எதிர்வினை

"அனைத்து தொழிலாளர்களும் எங்கள் தொழிலாளர்கள், அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது" என பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

"இங்கு நிலவும் அமைதியான சூழ்நிலையைக் காணப் பொறுக்காமல் அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கிலும், தமிழ் மக்களின் பண்பாட்டை அவமதிக்க வேண்டுமென்ற எண்ணத்தோடும் சில குறுமதியாளர்கள் முயற்சி செய்கிறார்கள். அவர்களது எண்ணம் ஈடேறாது," என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

வடமாநில தொழிலாளர் விவகாரம் அரசியலாக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, "பிகார் தொழிலாளர்களின் விவகாரம் சமூக - பொருளாதார பிரச்னை. இந்த பிரச்னையால் அரசியல் ரீதியாக யாருக்கும் லாபம் கிடைக்காது என்று தெரிவித்தார்."

"தமிழ்நாட்டில் உள்ள பிகார் தொழிலாளர்கள் அனைவரும் ஒரே கட்சிக்கான வாக்காளர்கள் கிடையாது. அவர்கள் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி என பல்வேறு கட்சிகளின் வாக்காளர்கள். அதனால் இந்த பிரச்னையை வைத்துக் கொண்டு பாஜகவோ பிற கட்சிகளோ வாக்குகளை அறுவடை செய்ய முடியாது" என்று தெரிவித்தார் ரவிந்திரன் துரைசாமி.

பணியாளர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

'பொறாமைதான் காரணம்'

பிகார் மாநில தொழிலாளர் விவகாரம் தொடர்பாக பேசிய திமுக அமைச்சர் மா.சுப்பிரமணியன், "முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் வட இந்திய அரசியல் தலைவர்கள் பங்கேற்றதால் சிலருக்கு பொறாமை. அந்த பொறாமையின் காரணமாக, வட இந்திய தொழிலாளர்கள் மீது தமிழ்நாட்டில் தாக்குதல் நடத்தப்படுவதாக வதந்தி பரப்புகின்றனர்," என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக பேசிய ரவீந்திரன் துரைசாமி, "இந்த விவகாரத்தை தமிழ்நாடு சிறப்பாக கையாண்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறை வேகமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த செயல்பாடுகளால் நாடாளுமன்ற தேர்தலுக்கு தேசிய அரசியலில் தாக்கம் செலுத்த நினைக்கும் திமுகவின் திட்டத்தில் எந்த தொய்வும் ஏற்படாது," என்றார்.

பிகாரில் என்ன நிலைமை?

"வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தை நிதிஷ்குமார் அரசுக்கு எதிராக ஆயுதமாக பயன்படுத்த பாஜக முயற்சி செய்தது. ஆனால் தொழிலாளர்கள் நலனை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையால் எதிர்பார்த்த பலன் பாஜகவுக்கு கிடைக்கவில்லை.

பிகாரில் அரசுக்கு எதிராக பெரிய அளவில் எந்த தாக்கத்தையும் அவர்களால் உருவாக்க முடியவில்லை. இந்த பிரச்னை மூன்று அல்லது நான்கு நாட்களில் முடிவுக்கு" வரும் என பட்னாவில் இருந்து பிபிசியிடம் பேசிய செய்தியாளர் மணிகாந்த் தாக்கூர் தெரிவித்தார்.

இது தொடர்பாக பேசிய மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், "பிகார் தொழிலாளர்கள் மகாராஷ்டிராவில் விரட்டியடிக்கப்பட்ட போது, அதை வைத்து பாஜக அரசியல் ஆதாயம் தேடியது. இதேபோல் தமிழ்நாட்டிலும் பாஜக செய்ய நினைக்கிறது. ஆனால் அது எடுபடவில்லை."

"அதே போல நிதீஷ் குமார் அரசுக்கும் பெரிய அழுத்தம் ஏற்படாது. ஏனென்றால் தமிழ்நாட்டில் உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலையும் பிகார் தொழிலாளர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று கூறுகிறார். எனவே இந்த பிரச்னை ஓரிரு நாளில் அடங்கி விடும்," என்று ஷ்யாம் தெரிவித்தார்.

கட்டுமானப் பணியாளார்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாஜக என்ன சொல்கிறது?

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் மூலமாக தமிழ்நாட்டில் பாஜக ஓட்டு வாங்க திட்டமிட்டுள்ளது என்று கூறுவது முட்டாள்தனம் என பாஜக தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிகார் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய பிரசாந்த் உமாராவை கைது செய்ய டெல்லிக்கு விரைந்துள்ளது தமிழ்நாடு காவல்துறை. இவர் பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருக்கிறார்.

இந்நிலையில், "புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராக வதந்தி பரப்பும் நபர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்" என்று பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

மேலும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக நிர்வாகிகளான எம்.பி. தயாநிதி மாறன், அமைச்சர்கள் பொன்முடி, மூர்த்தி ஆகியோர் வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் கடந்த காலங்களில் பேசியுள்ளனர்.

திமுகவின் கூட்டணி கட்சித் தலைவர்கள் சிலர், "வட மாநில தொழிலாளர்களை வெளியேற்று" என்று போஸ்டர் ஒட்டி போராட்டம் நடத்தியுள்ளனர்.

இதனால் வடமாநில மக்கள் பரவி வரும் போலி வீடியோவை பார்த்து உண்மை என நம்பி அச்சப்படுகின்றனர்.

அதனால் தமிழ்நாடு முதலமைச்சர் வடமாநில தொழிலாளர்கள் மீது வெறுப்பு பிரச்சாரத்தை முன்வைப்பதை அனுமதிக்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொய் பிரச்சாரங்களை தடுக்க பாஜக உறுதுணையாக நிற்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/india-64848295

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

'பொறாமைதான் காரணம்'

பிகார் மாநில தொழிலாளர் விவகாரம் தொடர்பாக பேசிய திமுக அமைச்சர் மா.சுப்பிரமணியன், "முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் வட இந்திய அரசியல் தலைவர்கள் பங்கேற்றதால் சிலருக்கு பொறாமை. அந்த பொறாமையின் காரணமாக, வட இந்திய தொழிலாளர்கள் மீது தமிழ்நாட்டில் தாக்குதல் நடத்தப்படுவதாக வதந்தி பரப்புகின்றனர்," என்று தெரிவித்தார்.

தி.மு.க.வினர்,  ஈரோடு தேர்தலில்... நாம் தமிழர் கட்சியினரை 
பிரச்சாரம் செய்ய விடாமல் தடுத்து மண்டையை உடைத்தமைக்கும் 
பொறாமை தானே  காரணம்.
சொந்த இடத்தில்... ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியாதவர்களுக்கு,
இந்திய அரசியல் ஒரு கேடு. அதிலும்... பிரதமராகும் நினைப்பும் இருக்கு.

தமிழன் மூப்பனார் ஒரு கட்டத்தில் இந்தியப் பிரதமாராக வர சந்தர்ப்பம் நெருங்கிய வேளை 
கருணாநிதியும், மாறனும்... அதனை டெல்லி வரை சென்று தடுத்த பொறாமை பிடித்த கூட்டம் இது.
இப்ப.. மற்றவன் தங்களை பார்த்து, பொறாமைப் படுகிறார்கள் என்று சொல்ல வெட்கமாயில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வட மாநில தொழிலாளர்கள் விவகாரம்: “24 மணிநேரம் அவகாசம் தருகிறேன், முடிந்தால் கைது செய்யவும்” – வழக்குப்பதிவு குறித்து அண்ணாமலை

5 மார்ச் 2023, 08:12 GMT
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்
அண்ணாமலை

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் தவறான தகவல்களுடன் அறிக்கை வெளியிட்டதாகக் கூறி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், "வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்புப் பிரசாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன். அதற்காக என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன்," என்று அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், "திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னைக் கைது செய்யவும். பொய் வழக்குகளைப் போட்டு ஜனநாயகக் குரல்வளையை நசுக்கிவிடலாம் என்று எண்ணுகிறீர்கள்.

ஒரு சாமானிய மனிதனாகச் சொல்கிறேன். 24 மணி நேரம் கால அவகாசம் அளிக்கிறேன். முடிந்தால் என் மீது கை வையுங்கள்," என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Twitter பதிவின் முடிவு, 1

தமிழ்நாட்டில் இந்தி பேசக்கூடிய வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் சமூக ஊடகங்களில் தவறான செய்தி பகிரப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இரு மாநில முதல்வர்கள், காவல்துறையினர் இடையே ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தொழிலாளர்கள் அச்சத்தில் இருப்பதால் அவர்கள் சொந்த ஊர் திரும்ப முயல்வதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டு தொழில் பாதிக்கப்படும் என்று ஜவுளி, உற்பத்தித் துறைகளைச் சேர்ந்த தொழில்முனைவோர் தங்கள் கவலைகளைத் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமைக்கு ஆளும் திமுக அரசு தான் பொறுப்பு என்று நேற்று அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். மேலும் அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், "திமுக ஆரம்பித்த இந்தி எதிர்ப்பு என்னும் பிழைப்புவாத நடவடிக்கைகளில் தொடங்கிய இந்த வெறுப்புப் பிரசாரம், தற்போது ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படும் அளவுக்கு வந்துள்ளது," என்று குறிப்பிட்டிருந்தார்.

அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் வட இந்திய தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக சமூக ஊடகங்களில் பொய்யான செய்திகள் பரப்பப்படுவது வருத்தமளிக்கிறது. தமிழகத்தின் உள்கட்டமைப்பு மேம்பாடு, உற்பத்தித் தொழில், சேவைத்துறை மற்றும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளில் வட மாநில தொழிலாளர்களின் பெரும் பங்கை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம்.

வட இந்திய நண்பர்களுக்கு எதிரான பிரிவினைவாதத்தையும் வெறுப்புப் பிரசாரத்தையும் தமிழர்களாகிய நாங்கள் ஆதரிக்கவில்லை. வட இந்திய சகோதர, சகோதரிகள் தாக்கப்படுவதாக பொய்ச் செய்திகள் பரப்பப்படுவதை, தமிழக பாஜக கடுமையாக எதிர்க்கிறது. இதுபோன்ற பொய்ச் செய்திகளைப் பரப்புவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்," எனத் தெரிவித்திருந்தார்.

அந்த அறிக்கையில், "இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் வட மாநில மக்களை ஏளனமாகப் பேசுவதும் அவர்கள் செய்யும் தொழில்களை அவமானப்படுத்துவதுமான திமுக கலாசாரத்தின் விளைவுதான் இன்றைய நிலைக்குக் காரணம்.

திமுக ஆரம்பித்த காலத்தில் இருந்து, தற்போது வரை ஏதோவொரு சமூகத்தின் மீது வெறுப்பை விதைத்துக்கொண்டே இருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்த கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக எம்பிக்கள், அமைச்சர்கள் பேசிய ஏளனப் பேச்சுகள் எத்தனை?" என்று தனது அறிக்கையில் கூறியிருந்தார்.

அண்ணாமலை

பட மூலாதாரம்,@ANNAMALAI_K TWITTER

அதோடு, "திமுக இத்தனை ஆண்டுகளாக, வட மாநில மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து செய்து வரும் வெறுப்புப் பிரசாரத்தின் காரணமாகத் தற்போது பரவி வரும் போலியான காணொளிகளைக்கூட உண்மையாக இருக்குமோ என்று எண்ணும் அளவுக்கு வட மாநிலங்களில் வசிக்கும் சகோதரர்கள் அச்சத்தில் உள்ளனர். வட மாநில சகோதரர்கள் மேல் தொடர்ந்து நடக்கும் இந்த வெறுப்புப் பிரசாரத்தைக் கடுமையான நடவடிக்கைகள் மூலம் தடுத்து நிறுத்தி, இந்த அச்சத்தைக் களைவது திமுகவின் பொறுப்பு," என்று தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து தற்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது, வட மாநில தொழிலாளர்கள் குறித்து தவறான தகவல்களுடன் அறிக்கை வெளியிட்டதாகக் கூறி, 153, 153A(1)(a), 505(1)(b) IPC, 505(1)(c) IPC ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்குப் பதிவு குறித்து ட்வீட் செய்துள்ள அண்ணாமலை, நான் அறிக்கையில் கூறிய விஷயங்களை காணொளியாகவும் வெளியிடுகிறேன் என்று கூறி வட இந்தியர்கள் குறித்து மு.க.ஸ்டாலின், தயாநிதி மாறன், கே.என்.நேரு ஆகியோர் பேசிய ஒரு காணொளியையும் பகிர்ந்துள்ளார்.

https://www.bbc.com/tamil/india-64853253

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடமாநிலத் தொழிலாளர்கள் திருப்பூரில் அடித்துக் கொல்லப்படுகின்றார்கள்?

 

 வாசிக்கத் துவங்கும் முன்

1300 வார்த்தைகள். முக்கியமான வட மாநிலத் தொழிலாளர்கள் குறித்து உண்மை நிலவரங்கள்.
வேறு வேலை இருந்தால் பொறுமையாக நேரம் இருக்கும் போது வந்து வாசிக்கவும். நன்றி.
1975bf96-91c7-464f-bdec-aaf18314df77.jpg
 
 
()()()
 
நான் எழுதத் தொடங்கிய நாள் தொடங்கி நேற்று வரை நெருங்கிய நண்பர்கள் தனிப்பட்ட முறையில் அழைத்துக் கேட்கும் ஒரே கேள்வி?
ஏன் இவற்றை எல்லாம் எழுதுகின்றாய்? உன் பாதுகாப்பு முக்கியமல்லவா?
ஆனால் இதுவரையிலும் எதுவும் அசம்பாவிதங்கள் எதுவும் நடந்தது இல்லை. வாசிப்பவர்களுக்குக் கொஞ்சம் கருணை இருந்திருக்கக்கூடும் என்றே நினைக்கின்றேன். இவனாவது இதைப் பற்றி வெளிப்படையாக எழுதுகின்றானே என்று யாரோ சிலர் நினைத்து இருக்கக்கூடும்.
அப்படித்தான் இப்போது பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டு இருக்கும் வடமாநிலத் தொழிலாளர்கள் திருப்பூரில் அடித்துக் கொல்லப்படுகின்றார்கள்? விரட்டியடிக்கப்படுகின்றார்கள்? அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை? என்பது பல கேள்விகளை ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக எழுதுகின்றார்கள். அது குறித்து சில தகவல்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். நீங்கள் இதனைப் பலருக்கும் கொண்டு சேர்க்கும் போது நிச்சயம் வட மாநிலங்களில் வாழக்கூடிய தமிழர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வாய்ப்புண்டு. காரணம் உண்மை தெரிந்தால் எவரும் அமைதியாகிவிடுவார்கள்.
நான் எழுதுவதைக் கட்சி மற்றும் நிறுவனங்கள் சார்ந்த முதலாளிகள் எழுத முடியாது. காரணம் வாசித்து முடிக்கும் போது உங்களுக்கே புரியும்.
()()()
திருப்பூரில் குடிப்பழக்கம் என்பது எப்போதும் இருக்கக்கூடியது தான். ஆனால் அது தனி மனிதர்களின் கடமையைப் பாதித்தது இல்லை. அவனின் பொருளாதாரத்தை அதள பாதாளத்தில் தள்ளியதுமில்லை. ஆனால் சந்துக்குச் சந்து சாராயம் என்று ஒரு தனி நிறுவனத்திற்காக யார் ஆட்சியில் இருந்த போது கொண்டு வந்தார்கள்? அன்று தான் இன்றைய பிரச்சனையின் முதல் அடி எடுத்து வைக்கப்பட்டது. அதுவே படிப்படியாக இன்று 24 மணிநேரம் 365 நாட்களும் மது கிடைக்கும் என்கிற பரிணாம வளர்ச்சிக்கு வந்து நின்றுள்ளது.
மதுப்பழக்கம் பெரிய அளவில் இங்கே பரவுவதற்கு முன் ஒவ்வொரு 5 வருடங்களும் இங்கே தொழிலாளர்கள் உலகில் பெரிய மாறுதல் நடக்கும். பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் இந்தத் தொழிலிலிருந்து வெளியேறி வேறு ஊர் அல்லது வேறு தொழிலுக்குச் சென்று விடுவர். காரணம் 365 நாளும் 24 மணிநேர வேலை என்பதால் எப்போது ஓய்வு? எப்போது பணி? என்ற பாரபட்சமே இல்லாமல் முதலாளிகளும் தொழிலாளர்களும் இரட்டை மாட்டு வண்டி போல ஒருவர் தங்கள் முதலீட்டைப் பெருக்க ஓடிக் கொண்டு இருப்பார். மற்றொரு பக்கம் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த மனைவி மகள் மகனுடன் நிறுவனங்களில் இரவு பகலாக உழைத்துக் கொண்டு இருப்பார்கள். இதன் காரணமாகவே பத்து வருடங்களில் உழைக்க வேண்டிய உழைப்பு என்பது ஐந்து வருடங்களுக்குள் உழைத்த காரணத்தால் உடலும் மனமும் சோர்ந்து போய் பிழைக்க வந்த ஊரை விட்டு சொந்த ஊருக்குச் சென்று விடுவர். (டாலர் நகரத்தில் இதனைப் பற்றி எழுதியுள்ளேன்)
நிறுவனங்களுக்குக் கவலையில்லை. அடுத்தடுத்து ஆட்கள் வந்து கொண்டேயிருப்பார்கள். ஒரு வாரம் பயிற்சி எடுத்தால் அவர் அந்தத் துறைக்குத் தயாராகி விடுவார். இது போன்ற சூழல் தான் திருப்பூர் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு உதவியாக இருந்தது.
இதன் காரணமாக இங்குள்ள அனைத்துத் துணைத் தொழில்களும் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டது. ஒரு துறை பத்து துறைகளை வளர்க்கும். ஒரு முதலாளி ஆயிரம் குடும்பங்களுக்கு அன்னம் அளிப்பார்.
65546a36-e6a5-45d5-9f30-de10ea5f256a.jpg
 
3518101e-d95d-497b-90ea-c96c0810bd85.jpg
 
7424755c-50e5-4894-91f0-e80065869eb7.jpg
 
e6e31bba-cf6c-4dcd-a32f-74eefe429a6a.jpg
 
e240a079-7359-41f2-959c-a80d3dd215d2.jpg
 
f7378e12-6419-4dc3-b2cb-51fd7c9bc4d7.jpg
 
fabaec3b-14e2-4a97-a2ed-0dfc9b5b0d64.jpg
 
 
பத்தாண்டுகளுக்கு முன் தொழிலாளர்களின் பெரும்பான்மையினர் எல்லாத் துறைகளிலும் கேரளாவிலிருந்து வந்த ஆண்கள் பெண்கள் ஆதிக்கம் செலுத்தினர். ஆனால் அதில் பல்வேறு சிக்கல்கள் உருவாகத் தொடங்கின. பிறகு பெண்கள் திருப்பூர் பக்கம் அங்குள்ளவர்கள் அனுமதிப்பதில்லை. இப்போது கேரள மக்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. அந்தச் சமயத்தில் தான் வட மாநிலங்களிலிருந்து படிப்படியாகத் தொழிலாளர்கள்
வரவழைக்கப்பட்டனர்.
அழைத்து வரப்பட்டனர்.
கொண்டு வரப்பட்டனர்.
எழுதியுள்ள வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள உண்மையான அர்த்தத்தையும் நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
()()()
ஒரு பக்கம் போட்டி போட்டு மதுக்கடைகள் திருப்பூர் முழுக்க பரவத் தொடங்கிய கால கட்டத்தில் இங்குள்ள எவரும் அதனை எதிர்க்கத் துணிவில்லாமல் அல்லது அதற்கு மாற்று ஏற்பாடு என்ன? என்பதனை யோசிக்காமல் தத்தமது சொந்த அபிலாஷைகள் அடிப்படையில் அமைதி காத்தனர். பூங்கா இல்லை. தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ மருத்துவமனை இல்லை என்று பட்டியலிட்டுச் சொல்லக்கூடிய பல இல்லைகள் உள்ள ஊர் என்பதால் வந்த வட மாநிலத் தொழிலாளர்களுக்கு இவை அனைத்தும் குறையாகத் தெரியவில்லை. அவர்களுக்குத் தங்கள் ஊருக்கு அனுப்பும் அந்தத் தொகை தான் பெரிதாகத் தெரிந்தது. அந்தத் தொகை நம்மவர்களுக்குச் சிறிய தொகையாகத் தெரிந்தது.
ஞாயிறு உள்பட ஏழு நாட்களும் வேலை செய்யக்கூடிய நிறுவனங்களும், ஞாயிறு தவிர மற்ற ஆறு நாட்களும் வேலை செய்யக்கூடிய நிறுவனங்கள் என்பது சந்து சந்து சாராயம் என்று மாறிய கலாச்சாரத்தால் வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்த தொழிலாளர்கள் தற்போது மூன்று நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்கின்றார்கள். இது இப்படியே கடந்து வந்து பாதி நாட்கள் வேலை. பாதி நாட்கள் குடி என்பதாக மாறி விடும் சூழலை நோக்கி சமூகம் சென்று கொண்டிருப்பது கவலையளிப்பதாகவே உள்ளது. ஆனால் கடந்த ஒரு வருடமாக எல்லா இடங்களிலும் மது. எப்போதும் மது. எந்நேரமும் மது என்பதாக மாறியுள்ள சூழலில் தொழிலாளர்களின் வேலைத்திறன் குறைந்து விட்டது. உடலில் உள்ள வலிமையும் மாறி விட்டது.
இது போன்ற சமயங்களில் சர்வதேச சமூகத்துடன் போராடிக் கொண்டு இருக்கும் உற்பத்தி நிறுவனங்கள் கடந்த இரண்டு வருடங்களாகத் தொழிலாளர்களுடன் போராட வேண்டிய சூழல் 24 மணி நேர மதுக்கடைகள் உருவாக்கியுள்ளது. எப்போது வருவார்கள்? எந்த நாள் வருவார்கள்? என்பதனை யூகிக்க முடியாத உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி நின்று போனால் உருவாக்கும் இழப்புகளைத் தவிர்க்க வட மாநில தொழிலாளர்களைக் கொண்டு வந்து இறக்கத் தொடங்கினர்.
()()()
ஒரு முதலாளி வட மாநிலத்தில் உள்ள குறிப்பிட்ட ஊரில் பலரையும் ஒன்று சேர்த்து தன் நிறுவன செலவில் விமானத்தில் அழைத்து வந்தது போல பல நம்ப முடியாத ஆச்சரியமான சம்பவங்கள் இங்கே நடந்து கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் யாரும் வெளியே பகிர்ந்து கொள்வதில்லை. வடகிழக்கு மாநிலங்கள் தொடங்கி பிமாரு மாநிலங்கள் வரைக்கும் ஆட்களை அனுப்பி, தரகர்களுக்குப் பணம் கொடுத்து, வேலை தெரிகின்றதோ தெரியவில்லையோ, அழைத்து வந்து , தங்க இடம் கொடுத்து , அவர்கள் மொழியைப் புரிந்து கொள்ள அதற்கு ஆட்களை நியமித்து , அவர்களின் கலாச்சார வித்தியாச செயல்பாடுகளைப் பொறுமையாகக் கையாண்டு , படிப்படியாகத் தொழில் கற்றுக் கொடுத்து , கற்றுக் கொடுக்கும் மாதங்களில் குறிப்பிட்ட தொகை கொடுத்து , படிப்படியாக நாகரிகம் முதல் முறைப்படியான தொழில் நுட்பம் வரைக்கும் கற்றுக் கொடுத்து , எந்திரங்களில் அமர வைக்கும் போது அழைத்து வந்த தரகர் பெரிய தொகைக்கு ஆசைப்பட்டு வேறு பக்கம் நகர்த்தி விடாத அளவுக்கு , அணைக்கட்டு ஏற்பாடு செய்து வசதியான விடுதி கட்டி ...........…..
வாசிக்கும் போது மூச்சு விட முடிந்ததா? இப்படித்தான் பல நூறு கோடிகளைப் போட்டவர்கள் இங்கே அவஸ்தைப் பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.
ஆனால் கேடிகள் மது அருந்தி, முன்பணம் கொடுத்தால் தான் நாளை வருவேன் என்று சொல்லி வாங்கி, வராமல் இருந்தால் எப்படியிருக்கும்? அவன் என்ன வேலை செய்தான் என்பதனை அடுத்தவனை வைத்துக் கண்டுபிடிக்கவே அரை ஷிப்ட் ஆகும். எல்லாத் தமிழக தொழிலாளர்களும் இப்படித்தானா? என்றால் இல்லை. பத்தில் ஐந்து பேர்கள் இப்படி உள்ளனர். அடுத்த ஐந்து பேர்கள் விரைவில் குழிக்கு விழுந்து விடுவார்கள் என்று அச்சப்பட வேண்டியதாக உள்ளது.
அதிகாரப்பூர்வ கணக்குப்படி நம் டாஸ்மாக் மூலம் தினமும் குடித்துக் கொண்டு இருப்பவர்களின் எண்ணிக்கை தொண்ணூறு லட்சம். அதாவது ஒரு கோடி. எட்டு கோடி மக்கள் தொகை என்றால் எட்டு பேர்களில் ஒரு பேர் நிரந்தர குடிகாரர் என்பதனை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். இதில் தான் உங்கள் எதிர்கால மருமகன் இருக்கின்றான். உங்களுக்குத் திருமணம் செய்து தர வேண்டிய தகப்பன் இருக்கின்றான். உங்களைப் படிக்க வைக்க வேண்டிய ஒவ்வொரு ஆணும் இதில் இருக்கின்றார்கள் என்பதனை எப்போதும் நினைவில் வைத்திருங்கள். மற்றொரு பிரச்சனை சினிமா. பொழுது போக்கு என்பது தமிழகத்தில் உயிர்மூச்சு போல மாற்றி வைத்த பெருமை யாருக்கெல்லாம் சேர வேண்டுமா? அவர்களுக்குத் தமிழகத்தில் தினமும் ஆட்கள் பற்றாக்குறையால் கருகிக் கொண்டு இருக்கும் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் நன்றி சொல்ல வேண்டும். காரணம் அந்த மாபியா வை எவராலும் எதிர்க்க முடியாது. கடைசி முக்கியமான காரணம் அலைபேசி. கடந்த இருபது வருட இளைய சமூகத்தின் மொத்த மனோபாவமும் அலைபேசி தான் தீர்மானிக்கின்றது.
()()()
இவை எல்லாம் மேலைநாடுகளில் இல்லையா? அங்கே இது போன்ற புலம்பல் இல்லையே? என்று குறுக்குக் கேள்வி கேட்கத் தோன்றும். அங்கே அதிகாலையில் இரண்டு மடங்கு காசு கொடுத்து வாய் கழுவாமல், பல் விளக்காமல் விஷ சாராயத்தை வாங்கும் கலாச்சாரம் இல்லையே? வெறித் தனமான குடி. விளங்கிக் கொள்ளவே முடியாத குடி.
வெளியே வந்தால் வா வா என்று கடை அழைக்க வாங்கி காசை வீட்டுக்குக் கொண்டு போய் சேர்ப்பதில் மிகப் பெரிய சவால் ஒவ்வொருவருக்கும் உள்ளது.
()()()
இது போன்ற சூழலில் ஒவ்வொரு நிறுவனமும் தத்தமது உள்நாட்டு வெளிநாட்டுக்கு அனுப்பக்கூடிய ஆடைகள் சார்ந்த உற்பத்தி என்பதனை இரண்டு விதமாகப் பிரித்து வைத்து இருக்கின்றார்கள்.
ஒன்று பீஸ் ரேட். மற்றொன்று ஷிப்ட் ரேட். ஷிப்ட் ரேட் என்பது எட்டு மணி நேர வேலை. அதில் வேலை வாங்குவது நிறுவனங்களின் பொறுப்பு. பீஸ் ரேட் என்பது ஒப்பந்தக்காரர்களிடம் பொறுப்பைக் கொடுத்து எனக்கு இத்தனை ஆடைகள் இத்தனை நாளுக்குள் வேண்டும் என்றால் அவர் எத்தனை ஆட்கள் வேண்டுமோ அத்தனை பேர்களை வரவழைத்து முழு உருவ ஆடைகளாகத் தயாரித்துக் கொடுத்து முதலாளிகளில் பேசிய படி பணத்தை வாங்கிக் கொள்வார். அவர் தன்னிடம் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு அவரவர் என்னன்ன வேலைகள் எத்தனை ஆடைகள் தைத்தார்களோ அதற்குக் கணக்கு போட்டுக் கொடுத்து விடுவார்கள்.
ஷிப்ட் ரேட் என்பது பெண்களுக்கு எளிதானது. இயல்பான வேகத்தில் தைக்க முடியும். பீஸ் ரேட் என்பது அதிகம் சம்பாதிக்க வேண்டும். தினமும் 1000 முதல் 1500 வரை சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய ஆண்களுக்கு உரியது. பெண்கள் இதில் இருந்தாலும் எண்ணிக்கை மிகவும் குறைவு.
இந்த பீஸ் ரேட் விசயத்தில் தான் முதல் முறை சில மாதங்களுக்கு முன்பு வட இந்தியத் தொழிலாளர்களுக்கும் நம் தமிழகத் தொழிலாளர்களுக்கும் தகராறு உருவானது. அந்த காணொளியும் கட் செய்து மார்பிங் செய்து வெவ்வேறு விதமாகப் பரப்பினார்கள்.
ஆனால் உண்மையில் நடந்தது என்ன?
()()()
நிறுவன முதலாளி என்பவர் அவர் லாபத்திற்காகத்தான் நிறுவனம் வைத்துள்ளார். பல கோடிகளைக் கொட்டி தினமும் தூக்கமின்றித் தவிப்பவர் தமிழர், வட இந்தியர் என்று பார்க்க முடியாது. அவருக்குப் பெட்டி போக வேண்டும். தொடர்ந்து ஏற்றுமதியாக வேண்டும். வங்கி நிறுவனத்திற்கு வந்து விடக்கூடாது என்ற பதற்றம் குளிர்சாதன அறையில் இருந்தாலும் வரத்தான் செய்யும்.
இதன் காரணமாக ஷிப்ட் ரேட்டில் வட மாநிலத் தொழிலாளர்களை வைத்து அவர் வேலை வாங்கிக் கொண்டிருந்ததை ஏற்கனவே அங்கே பீஸ் ரேட்டில் பணி புரிந்து கொண்டு இருந்த நம்மவர்கள் எதிர்க்கத் தொடங்கினர். அடிதடி உருவானது. நிலவரம் வேறு மாதிரியாக மாறத் தொடங்கியது. ஒரு வழியாக அடக்கப்பட்டது.
இதில் நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விசயம் என்னவெனில் பீஸ் ரேட் தைப்பதில் நம்மவர்கள் இருப்பது போல வட இந்தியத் தொழிலாளர்களும் அதிக அளவில் இருக்கின்றார்கள். அவர்கள் கடமையே கண்ணாக " வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்" போல உழைப்பு உழைப்பு/ உடனே பணம் பணம் என்பதாக கொடுத்த வேலையை வேகமாக முடித்துக் கொடுத்து விடுகின்றார்கள்.
ஆனால் நம்மவர்கள் அதிலும் பிரச்சனைகளை உருவாக்குவதால் நிறுவனங்கள் மொத்த வேலைகளை வட இந்திய தொழிலாளர்கள் வசமே கொடுக்க விரும்புகின்றார்கள். இது தான் இங்கே இப்போது நடந்து கொண்டு இருக்கும் நிதர்சனம். எதார்த்தம்.
இது ஒவ்வொரு நிறுவனங்களிலும் இப்படியே பரவத் தொடங்கியது. பிரச்சனையின் மூலம் என்னவென்றால் எவராக இருந்தாலும் ஆறு நாட்களும் வேலைக்குத் தொடர்ந்து வருவதில்லை. வந்தால் திடீரென்று கிளம்பிச் சென்று விடுவதால் பல பிரச்சனைகள். இது போல வெளிப்படையாக எழுத முடியாத பல விசயங்கள் நடந்து கொண்டு இருந்த காரணத்தால் ஒவ்வொரு நிறுவனங்களும் வட மாநிலத் தொழிலாளர்கள் போதும் என்கிற அளவிற்கு மாறத் தொடங்கினர். இதனையே வட மாநிலத் தொழிலாளர்களும் தங்களுக்குச் சாதமாக மாற்றிக் கொள்ளத் தொடங்கினர்.
பல இடங்களில் பிரச்சனைகள் வந்த அவர்களும் கூட்டமாக எதிர்க்கத் துவங்கினர்.
ஆனாலும் நம்மவர்களால் பொறுக்க முடியவில்லை. வாரத்தில் இரண்டு நாட்கள் பீஸ் ரேட்டில் மூவாயிரம் சம்பாதித்து நான்கு நாட்கள் வேலைக்குச் செல்லாமல் இருந்த பழக்கத்தில் மீண்டு வர முடியவில்லை.
பதிலாக வன்மம், பொறாமை, ஆத்திரம், கோபம் என்று தங்கள் வக்கிரத்தை வெவ்வேறு வழிகளில் காட்டிக் கொண்டு இருந்தாலும் நிறுவனங்கள் அசைந்து கொடுக்கத் தயாராக இல்லை. அதே சமயத்தில் அவர்களால் இவர்களின் அயோக்கியத் தனத்தை மேலோட்டமாக பட்டும் படாமல் மிக நாகரிகமாகப் பேச முடிகின்றதே தவிர வேறு எதையும் செய்ய முடியவில்லை.
அரசாங்க ஆதரவு துளியும் இல்லை.
வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து பக்கம் போட்டியின் காரணமாக ஒவ்வொரு ஒப்பந்தங்களும் சென்று கொண்டே இருப்பதால் இங்கே ஆறு நாட்களும் வேலையில்லை என்பது ஒரு பக்கம். அரசியலில் தங்களை நிலை நிறுத்திக் கொள்வதற்காக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் தொழில் குறித்து அறியாதவர்கள் உருவாக்கும் ஆயிரத்தெட்டு அக்கப் போர்களைக் கடந்து வந்து பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்க்கையளித்த நிறுவனங்கள் இப்போது யாரையும் எதிர்த்துக் கொள்ளவும் முடியாமல் எவருக்கு பதில் அளித்து புரியவைப்பது என்பதும் புரியாமல் தடுமாறி நிற்கின்றார்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, பெருமாள் said:

கிந்தி படிக்க தேவையில்லை கூகிளே அழகாக மொழி பெயர்க்கிறார் அது சரி தமிழக ஆட்சி யாளர்களும்  ஆங்கில மீடியாக்களும் பொய்செய்தி என்கினம் ஆனால் கிந்தி ஊடகங்கள் அனைத்தும் தென்னிந்திய தமிழர்களை வன்முறையாளர்கள் போல் சித்தரிக்கினம் .

தமிழகம் பற்றி பொய் செய்தி பரப்புவோரை தனிப்படை அமைத்து கைது செய்வோம் என்கிறார் ஸ்ராலின் கிந்தி ஊடகங்கள் அனைத்தும் தென்னிந்திய தமிழர்களுக்கு எதிராகவே எழுதுகின்ற விடயம் ஸ்டாலினுக்கு தெரியாதா ?

ம‌ன்மோக‌ன் சிங் போல் ஸ்டாலினும் ஒரு பொம்மை 
அங்கு முடிவுக‌ள் எடுப்ப‌து 
உதாவாதியும் ஸ்டானின் ம‌ரும‌க‌னும் பாலாஜி போன்ற‌ க‌ட்சி மாறும் கொள்கை இல்லா சில்ல‌ரைக‌ளும்

இவ‌ர்க‌ள் எழுதி கொடுப்ப‌தை ஸ்டானில் வாசிச்சு அறிக்கை விடுவ‌து காணொளி மூல‌ம்

அப்ப‌டி இருந்தும் தேர்த‌ல் ஈரேடு தேர்த‌ல் நேர‌ம் ஆதிமுக்கா ஆளும் க‌ட்சி என்று சொன்ன‌வ‌ர் தான் ஸ்டானின்...................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி: பாஜக பிரமுகருக்கு முன்ஜாமீன் - இரு இளைஞர்களை கைது செய்த ஜமூயி, திருப்பூர் போலீஸ்

வட மாநில தொழிலாளர்கள்
3 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டில் பிகாரை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய பிரசாந்த் உம்ரோ என்பவருக்கு 14 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வதந்தி தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.

தமிழ்நாட்டில் பிகாரை சேர்ந்த தொழிலாளர்கள் இந்தி மொழியைப் பேசுவதற்காகத் தாக்கப்படுவதாக கடந்த வார மத்தியில் இருந்து வதந்திகள் பரப்பப்பட்டன. சமூக வலைதளங்களில் மட்டுமல்லாமல், தைனிக் பாஸ்கர், ஹிந்துஸ்தான் போன்ற பிரதான நாளிதழ்களே இது தொடர்பான உண்மைத் தகவல்களை சரிபார்க்காமல் அதை செய்தியாக வெளியிட்டன.

இது, தமிழ்நாடு - பிகார் ஆகிய இரு மாநிலங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் பணியாற்றிவரும் ஆயிரக்கணக்கான வட இந்திய தொழிலாளர்கள் மத்தியில் பரவவிடப்பட்ட இந்த வீடியோக்களின் காரணமாக இங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்கள் மத்தியில் அச்சம் பரவியது. பலர் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப விரும்பினர்.

இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் ட்வீட் ஒன்றை வெளியிட்டார். இதற்குப் பிறகு, தமிழ்நாடு காவல்துறை விரிவான விளக்கங்களை தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிட்டது.

 

இதற்குப் பிறகு இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் துவங்கின. இந்த செய்திகளை வெளியிட்ட தைனிக் பாஸ்கர் நாளிதழின் ஆசிரியர், தன்வீர் போஸ்ட் பத்திரிகையை நடத்திவந்த முகமது தன்வீர் ஆகியோர் மீது திருப்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

டெல்லியை சேர்ந்த பாஜக பிரமுகர் மனு

வட மாநில தொழிலாளர்கள்

இதே போன்ற போலிச் செய்தியைப் பரப்பிய பா.ஜ.கவின் உத்தர பிரதேச செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உமராவ் என்பவர் மீது தூத்துக்குடி மாவட்டம் சென்ட்ரல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர்களைப் பிடிக்க பத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த நிலையில், பா.ஜ.கவைச் சேர்ந்த பிரசாந்த் உம்ராவ் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஜஸ்மீத் சிங் முன்பாக விசாரணைக்கு வந்தது. தன் மீது தமிழ்நாட்டில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருப்பதால் 12 வாரங்களுக்கு முன் ஜாமீன் வழங்கும்படி பிரசாந்த் சார்பில் கோரப்பட்டது.

அவ்வளவு நாட்கள் வழங்க முடியாது என நீதிபதி தெரிவித்ததும் 4-6 வாரங்களுக்காவது முன் ஜாமீன் வழங்கும்படி கோரப்பட்டது. முன் ஜாமீனை ஒரு வசதியாகப் பயன்படுத்த முடியாது என்றும் நாளையோ, நாளை மறுநாளோ சென்னை சென்று தகுந்த நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெறும்படி நீதிபதி தெரிவித்தார்.

வேண்டுமானால் ஒரு வாரம் முன் ஜாமீன் தருவதாக நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து, "அவர் ஒரு இளம் வழக்கறிஞர். 6 வருடங்களாகத்தான் வழக்கறிஞராக இருக்கிறார். அவருக்கு 3-4 வாரங்களாகவது முன் ஜாமீன் தர வேண்டுமென" அவர் தரப்பு வழக்கறிஞர் கோரினார்.

தமிழ்நாடு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உம்ராவ் தனது ட்வீட்டை டெலீட் செய்து விட்டாலும், தெரிவித்த கருத்தைத் திரும்பப் பெறவில்லை என்றும் மன்னிப்புக்கோரவில்லை என்றும் அவருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி, தான் தமிழ்நாட்டிற்குச் சென்றால் கைது செய்யப்படலாம் என பிரசாந்த் உம்ராவ் கருதுவதால், அவருக்கு 14 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கப்படுவதாகவும் அதற்குள் தகுந்த நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் பெற வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

YouTube பதிவின் முடிவு

பாயும் வழக்குகள், தொடரும் கைதுகள்

இதற்கிடையில், opindia என்ற இணைய தளம் இதுபோன்ற போலிச் செய்திகளைப் பரப்புவதாக திருநின்றவூரைச் சேர்ந்த சூர்யபிரகாஷ் என்பவர் கொடுத்த வழக்கில் காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.

இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக பிகார் காவல்துறையும் வழக்குப் பதிவு செய்தது.

அமன்குமார் ரவிதாஸ் என்ற தனி நபர், பிரயாஸ் நியூஸ், சச்தக் நியூஸ் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில், அமன்குமார் ரவிதாஸை பிகார் காவல்துறை கைது செய்துள்ளது. யுவராஜ் சிங் ராஜ்புத் உள்ளிட்ட பலரை தேடி வருவதாகவும் அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

தெலங்கானாவில் பிகார் இளைஞரை பிடித்த திருப்பூர் போலீஸ்

இந்த நிலையில், சிபிஎல் மீடியா என்ற கணக்கில் ரூபேஷ்குமார் என்பவர் போலியான காணொளியை பதிவேற்றி வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வதந்தியை பரப்பியதை அந்நகர காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவினக் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அவர் மீது மார்ச் 5ஆம் தேதி வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து தேடினர். இதைத்தொடர்ந்து தெலங்கானா மாநிலத்தின் சின்னகுண்டபள்ளி கிராமத்தில் வைத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

விசாரணையில் அவர், பிகார் மாநிலம் கிழக்கு சம்பாரனில் உள்ள பன்கட்டி பகுதியைச் சேர்ந்தவர் என தெரிய வந்து. அவரை உரிய விசாரணைக்கு பிறகு திருப்பூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்னிலையில் போலீஸார் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

Twitter பதிவை கடந்து செல்ல
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

பிகார் முதல்வரை சந்தித்த டி.ஆர். பாலு

திமுக
 
படக்குறிப்பு,

பிகார் தலைநகர் பாட்னாவில் பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரை சந்தித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனுப்பிய கடிதத்தை வழங்கும் நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர். பாலு.

இன்று பிகாரில் அம்மாநில முதல்வர் நிதீஷ் குமாரைச் சந்தித்த நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர். பாலு, பிகார் மாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கினார்.

தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திருநெல்வேலி காவல்கிணறு பகுதியில் உள்ள ஒரு லேட்டக்ஸ் தொழிற்சாலைக்குச் சென்று அங்கு பணியாற்றிவரும் 150க்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்களிடம் உரையாடி அவர்களது பாதுகாப்பு குறித்து உறுதியளித்தார்.

https://www.bbc.com/tamil/articles/cjkl4l5xy7xo

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஏன் யாழ்பாணத்தானான உங்களுக்கு தெரியாது என சொன்னால் -  உங்கள் பிரதேசவாதம் அப்பட்டமாக தெரிந்து விடும் என்பதால் யூகேயை இழுக்கிறீர்களாக்கும்.🤣 இங்கே முன்பே எழுதியதுதான் வடக்கு கிழக்கின் எந்த ஊரும் என் சொந்த ஊரே. எனக்கே நான் எந்த ஊரவன் என்ற பிரக்ஞை இல்லாத போது உங்களுக்கும் அது தேவையில்லை🤣.  தகவல்கள் பிழை என்றால் சுட்டலாம். பொத்தாம் பொதுவில் நான்-கிழக்குமாகாணத்தான்,  non-கிழக்குமாகாணத்தான் என்ற பிரதேசவாத கதைகளை விட்டு விட்டு.
    • உண்மை....புலம்பெய்ர்ந்த சகல இனத்தவர்களும் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர் ,,மிகவும் குறைந்த சதவீததினரே இப்படியான வேலைகளை செய்கின்றனர்....  
    • விளையாட்டை விளையாட்டாக பாருங்கோ ...இனமத பேதமின்றி ரசியுங்கோ...இப்படிக்கு புலம்பெயர்ஸ் இதற்கு முக்கிய காரணம் ..புலம்பெயர்  இஸ்ரெல் வால்களும் ,பலஸ்தீன வால்களும்..... இந்த வால்கள் இப்படி மோதுவதால் பலஸ்தீனர்களை இஸ்ரேல் தொடர்ந்து அழிக்க போகின்றனர்  
    • கூட்டமைப்பு பிழை விட்டது என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இதை பிரதேசவாதத்தால் வந்த பிழை - என வேண்டும் என்றே தப்பாக வர்ணித்து அதன் மூலம் வடக்குகிழக்கு தமிழ் மக்கள் மனதில் மேலும் மேலும் பிரிவினையை தூண்டி, ஒற்றுமையை குலைத்து, அவர்கள் பலத்தை மேலும் சிதைக்க உதவியது அதைவிட பெரிய வரலாற்று பிழை. அதில் உங்களுக்கும் ஒரு பங்கு உண்டு. கருணாவுக்குத்தான் வாக்கு போட்டேன் என்கிறீர்கள் - நீங்கள் அம்பாறை வாக்காளர் எனில் பிள்ளையானுக்கு எப்படியிம் போட்டிருக்க முடியாதே🤣. கள்ள வாக்கு போட்டால்தான் உண்டு. ஆனால் அந்த தேர்தலில் அம்பாறையில் பிள்ளையான் கட்சி விலகி கொள்ள அங்கே கருணா கேட்டார். இருவரும் ஒரு துப்பாக்கியின் இரு குழல்கள்தான். நீங்கள் கூட யாழ்களத்தில் கருணாவுக்கு ஆதரவு, பிள்ளையானுக்கு இல்லை என்றெல்லாம் எழுதவில்லை. மட்டு அம்பாறையில் எந்த தமிழ் தேசிய கட்சிக்கும் ஆதரவில்லை. பிள்ளையான், கருணாவுக்கு ஆதரவு என்பதே உங்கள் நிலைப்பாடாக இருந்தது. அதாவது ஸ்டாலின், கோபாலகிரிஸ்ணன் ஆகியோரால் முன் தள்ளபட்ட “கிழக்கு மைய அரசியல்”. அதைத்தான் நீங்கள் ஆதரித்தீர்கள்.  இப்போ கிழக்கு மைய அரசியல் மையவாடிக்கு போனதும் கருணா அச்சா, பிள்ளையான் கக்கா என புதுக்கரடி விடுகிறீர்கள்🤣. கருணாவும், பிள்ளையானும் கோக்கும் பெப்சியும் போலதான். அடுத்து, கருணா வெல்லவில்லை ஆகவே நானும் அவரும் பொறுப்பல்ல என மெல்ல நழுவ பார்கிறீர்கள் (இதைதான் தமிழகத்தில் நீங்கள் பாவித்த அநாகரீக சொல்லான மொள்ளமாரி என்பார்கள்).  நீங்கள் கருணாவுக்கு வாக்கு சேகரிக்கும் முன்பே அவர் எம்பி, பிரதி அமைச்சர், சுதந்திர கட்சி பிரதித்தலைவர். அப்போதும் காணி பிரச்சனை, உங்கள் ஆன்மாவிற்கு நெருங்கிய கல்முனை விடயம் எல்லாமும் இருந்தது? ஒரு கல்லைத்தன்னும் தூக்கிப்போட்டாரா? இல்லை. அப்போ அடுத்த முறை தனியே எம்பியாகி அதுவும் சிங்கள கட்சி எதுவும் சீட் கூட கொடாமல் திரத்தி விட்ட பின், இவர் ஆணி புடுங்குவார் என எப்படி நினைத்தீர்கள். டகால்டி வேலை தானே👇    
    • ஆனால் சகோ. நீங்கள் ஒன்றை கவனித்தீர்களோ தெரியவில்லை புலம்பெயர் தேசங்களில். அகதிகளாக புலம்பெயர்ந்து வந்த பல இனங்களின் புலம்பெயர் வாழ்வு இந்த மலிவான இன்பம் கொடுப்பதிலும் சிக்கி இருக்கிறது. உதாரணமாக வியட்நாம் பெண்களை சொல்லலாம். ஆனால் இந்த விடயத்திலும் தமிழர்கள் முன்னுதாரணமாக உழைப்பு மற்றும் நேர்மையால் மட்டுமே உயர்ந்தார்கள். வீதியில் எவரும் நின்றதில்லை. 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.