Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

நியூஸிலாந்துடனான முதல் டெஸ்டில் சிறப்பான நிலையில் இலங்கை; திமுத், குசல் அரைச் சதங்கள் குவிப்பு

Published By: NANTHINI

09 MAR, 2023 | 01:42 PM
image

(நெவில் அன்தனி)

நியூஸிலாந்துக்கு எதிராக கிறைஸ்ட் சேர்ச், ஹெக்லி ஓவல் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (9) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை சிறப்பான நிலையில் இருக்கிறது.

முதலாம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சம் இன்மை காரணமாக நிறுத்தப்பட்டபோது இலங்கை அதன் முதலாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து, 305 ஓட்டங்களை பெற்றிருந்தது.

மதிய போசன இடைவேளைக்குப் பின்னர் மழை காரணமாக இரண்டு தடவைகள் தடைப்பட்ட ஆட்டத்தில் 75 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்டது.

அப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை, 7ஆவது ஓவரில் ஆரம்ப வீரர் ஓஷத பெர்னாண்டோவின் விக்கெட்டை இழந்தது. அவர் 13 ஓட்டங்களைப் பெற்றார். (14 - 1 விக்.) 

0903_dimuth_karunaratne.jpg

தொடர்ந்து அணித் தலைவர் திமுத் கருணாரட்னவும் குசல் மெண்டிஸும் திறமையாக துடுப்பெடுத்தாடி, அரைச் சதங்கள் குவித்ததுடன், 2ஆவது விக்கெட்டில் 137 பெறுமதிமிக்க ஓட்டங்களை பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர். ஆனால், மொத்த எண்ணிக்கை 151 ஓட்டங்களாக இருந்தபோது இருவரும் ஆட்டமிழந்தனர். 

திமுத் கருணாரட்ன மிகவும் பொறுப்புணர்வுடன் நிதானமாக துடுப்பெடுத்தாடிய அதேவேளை, குசல் மென்டிஸ் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடினார்.

83 பந்துகளை எதிர்கொண்ட குசல் மெண்டிஸ் 16 பவுண்டறிகளுடன் 87 ஓட்டங்களை பெற்றதுடன், திமுத் கருணாரட்ன 87 பந்துகளில் 7 பவுண்டறிகளுடன் 50 ஓட்டங்களைப் பெற்றார்.

0903_kusal_menidis_in_action.jpg

தொடர்ந்து முன்னாள் தலைவர்களான ஏஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால் ஆகிய இருவரும் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி, 4ஆவது விக்கெட்டில் 82 ஓட்டங்களை பகிர்ந்து அணிக்கு பலம் சேர்த்தனர்.  

இந்நிலையில் தினேஷ் சந்திமால் 6 பவுண்டறிகளுடன் 39 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். 

மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 27 ஓட்டங்கள் சேர்ந்தபோது திறமையாக  துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த ஏஞ்சலோ மெத்யூஸ் 47 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். (260 - 5 விக்.) அவர் 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸை விளாசியிருந்தார்.

0903_sri_lanka_team_line_up_for_national

துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினால் அடுத்த டெஸ்ட் வாய்ப்பை இழக்க நேரிடும் என்ற அழுத்தத்துக்கு மத்தியில் ஆடுகளம் புகுந்த நிரோஷன் திக்வெல்ல 7 ஓட்டங்களுடன் வெளியேறினார். (268 - 6 விக்.)

எனினும், தனஞ்சய டி சில்வாவும் கசுன் ராஜித்தவும் திறமையாக துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் 37 ஓட்டங்களை பகிர்ந்ததுடன் அணி 300 ஓட்டங்களை கடக்க உதவினர்.

தனஞ்சய டி சில்வா 39 ஓட்டங்களுடனும் கசுன் ராஜித்த 16 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

நியூஸிலாந்து பந்துவீச்சில் டிம் சௌதீ 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மெட் ஹென்றி 65 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மைக்கல் ப்றேஸ்வெல் 17 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

0903_new_zealand_team_line_up_for_their_

https://www.virakesari.lk/article/150068

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதல் நாளில் 3 சாதனைகளை தம்வசப்படுத்திய இலங்கை வீரர்கள்!

sp-sl.jpg

டெஸ்ட் உலக சம்பியன்ஷிப் தொடரையொட்டி நடைபெற்று வரும் இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்சில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவதற்குள் மூன்று கிரிக்கெட் சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

நியூசிலாந்தில் அதிவேகமாக டெஸ்ட் அரைசதத்தை பதிவுசெய்த வெளிநாட்டு துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையை குசல் மெண்டிஸ் இன்று தன்வசப்படுத்தினார்.

Kusal Mendis Profile - Cricket Player Sri Lanka | Stats, Records, Video

அதுமட்டுமின்றி, இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன 5980 ஓட்டங்களை பதிவு செய்து கிரிக்கெட் சாதனை புத்தகத்தில் நுழைந்தார்.

இது இதுவரை இலங்கை அணியின் டெஸ்ட் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஒருவரால் பெறப்பட்ட அதிகபட்ச மொத்த ஓட்டமாகும்.

Sri Lanka vs Bangladesh, 1st Test, Kandy - Dimuth Karunaratne thrives on  game of patience | ESPNcricinfo

இந்த இரண்டு சாதனைகளைத் தவிர, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 7000 ஓட்டங்களைக் கடந்தார்.

இதுவரை 101 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மெத்யூஸ், 7000 டெஸ்ட் ஓட்டங்களை கடந்த மூன்றாவது இலங்கை வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

Sri Lanka miss Angelo Mathews the bowler | CricketSoccer

இலங்கையின் இந்த சாதனைகளுக்கு மத்தியில், 39 ஓட்டங்களைப் பெற்றிருந்த தினேஷ் சந்திமாலின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் நியூசிலாந்துக்காக அதிக சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை டிம் சவுதி தன்வசப்படுத்தினார்.

https://thinakkural.lk/article/244047

Posted

இலங்கை அணி 355 ஓட்டங்கள்

இலங்கை அணி 355 ஓட்டங்கள்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 355 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதற்கமைய, தனது முதலாவது இன்னிங்ஸிற்காக களம் இறங்கிய இலங்கை அணி சார்பாக குசல் மெண்டிஸ் 87 ஓட்டங்களையும் திமுத் கருணாரத்ன 50 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்த போட்டியின் போது அஞ்சலோ மெத்யூஸ் 47 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்ததோடு, டெஸ்ட் போட்டிகளில் 7,000 ஓட்டங்களைக் கடந்த இலங்கையின் மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் அவர் தனதாக்கினார்.

போட்டியின் இரண்டாம் நாளான இன்று நியூசிலாந்து அணி தற்போது தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வருகிறது.
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நியுசிலாந் முத‌லாவ‌து இங்சில் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் கொடுத்தும் இடையில் சீக்கிர‌மே 5விக்கேட்ட‌ அவுட்...............

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மெத்யூஸின் ஆதங்கம்

Published By: VISHNU

10 MAR, 2023 | 12:27 PM
image

(நெவில் அன்தனி)

டெஸ்ட் கிரிக்கெட் அஸ்தமிக்கிறது என ஒவ்வொருவரும் கதைக்கின்றனர். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டுக்காக நாங்கள் நல்லதை செய்யவில்லை. ஏனேனில், நாங்கள் இந்த வருடம் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே விளையாடவுள்ளோம் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.

நியூஸிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

2021 - 2023 கிரிக்கெட் சுழற்சிக்கான டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணி மிகச் சிறப்பாக விளையாடி வந்துள்ளது. அத்துடன்  இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான எதிர்பாராத வாய்ப்பும் இலங்கைக்கு இருக்கவே செய்கிறது. அப்படி இருந்தும் இலங்கைக்கு போதுமான டெஸ்ட் போட்டிகள் வழங்கப்படாதது திருப்தி தருவதாக இல்லை என்ற பொதுவான அபிப்பிராயமும் கூடவே தெரிவிக்கப்பட்டு வருகிறது.

தற்போது நடைபெற்று வரும் இரண்டு தீர்மானம் மிக்க போட்டிகளின் முடிவுகளே அவுஸ்திரேலியாவுடன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ள அணியைத் தீர்மானிக்கவுள்ளன.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றால் அல்லது அந்த டெஸ்ட் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தால் இலங்கைக்கு இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான சிறு வாய்ப்பு உருவாகும். அதற்கு நியூஸிலாந்தை 2 - 0 என்ற ஆட்டக் கணக்கில் இலங்கை வெற்றி பெறுவது அவசியமாகும். ஆனால், தற்போது நடைபெற்றுவரும் இந்த நான்கு நாடுகள் சம்பந்தப்பட்ட டெஸ்ட் போட்டிகளின் தற்போதைய நிலையை வைத்து எதனையும் உறுதியாகக் கூறமுடியாது.

இந் நிலையில், டெஸ்ட் போட்டிகளுக்கான அட்டவணை சீராக அமையாவிட்டால் அதன் பெறுமதியை உலகம் எவ்வாறு கணிக்கும் என மெத்யூஸ் கேள்வி எழுப்புகிறார்.

'துரதிர்ஷ்டவசமாக நாங்கள் இந்த வருடம் நிறைய டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதாக இல்லை. மிகக் குறைந்த 5 போட்டிகளிலேயே நாங்கள் விளையாடவுள்ளோம்' என அவர் குறிப்பிட்டார்.

இதனைக் கூறிய அதே நாளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை சார்பாக அதிக ஓட்டங்களைப் பெற்ற வர்கள் வரிசையில் மெத்யூஸ் 3ஆவது இடத்திற்கு முன்னேறினார். குமார் சங்கக்கார (12400), மஹேல ஜயவர்தன (11814) ஆகியோருக்கு அடுத்ததாக மெத்யூஸ் 7000 ஓட்டங்களுடன் 3ஆம் இடத்தை அடைந்துள்ளார்.

'நாங்கள் மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறோம். நாங்கள் கடைசியாக 6 மாதங்களுக்கு முன்னர் டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தோம்' என்றார் அவர்.

இலங்கை கடைசியாக 2022 ஜூலை மாதம் டெஸ்ட் போட்டியில் (பாகிஸ்தானுக்கு எதிரானது) விளையாடி இருந்தது.

'டெஸ்ட் கிரிக்கெட் அஸ்தமிக்கிறது என ஒவ்வொருவரும் கதைக்கின்றனர். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டுக்காக நாங்கள் நல்லதை செய்யவில்லை. இந்த வருடம் நாங்கள் ஐந்து டெஸ்ட்களில் மாத்திரமே விளையாடவுள்ளோம். இந்த வருடம் இன்னும் அதிகமான போட்டிகள் கிடைக்கும் என நம்புகிறோம். ஐந்து போட்டிகள் போமானதல்ல என்றே உணரப்படுகிறது' என அவர் மேலும் கூறினார்.

https://www.virakesari.lk/article/150182

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கை வேகப்பந்துவீச்சாளர்கள் அபாரம் ; 193 ஓட்டங்கள் பின்னிலையில் நியூஸிலாந்து

Published By: VISHNU

10 MAR, 2023 | 02:20 PM
image

(நெவில் அன்தனி)

நியூஸிலாந்துக்கு எதிராக கிறைஸ்ட்சேர்ச், ஹெக்லி ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சின் உதவியுடன் இலங்கை வலுவான நிலையில் இருக்கிறது.

இலங்கை முதலாவது இன்னிங்ஸில் பெற்ற 355 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடிவரும் நியூஸிலாந்து போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதலாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 162 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இதற்கு அமைய 193 ஓட்டங்களால்   நியூஸிலாந்து  பின்னிலையில்  இருக்கிறது. இலங்கை வேகப்பந்துவீச்சாளர்கள் கசுன் ராஜித்த, லஹிரு குமார, அசித்த பெர்னாண்டோ ஆகியோர் திறமையாக பந்துவீசி வீழ்ந்த 5 விக்கெட்களையும் பகிர்ந்துகொண்டனர்.

போட்டியின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை (10) மதிய போசன இடைவேளைக்கு சற்று முன்னர் தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த நியூஸிலாந்து சார்பாக ஆரம்ப வீரர்கள் தன்னம்பிக்கையுடன் துடுப்பெடுத்தாடி சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், டெவன் கொன்வே ஆட்டம் இழந்ததும் இலங்கையின் வேகப் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் நியூஸிலாந்தின் ஏனைய வீரர்கள் சிரமத்தை எதிர்கொண்டனர்.

டொம் லெதம், டெவன் கொன்வே ஆகிய இருவரும் முதலாவது விக்கெட்டில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்து  சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

டெவன்  கொன்வே 30 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த சொற்ப நேரத்தில் நியூஸிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரம் கேன் வில்லியம்சன் (1), ஹென்றி நிக்கல்ஸ் (2) ஆகிய இருவரும் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆடுகளம்விட்டு வெளியேறினர்.

திறமையாகத் துடுப்பெடுத்தாடிய டொம் லெதம் 67 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். அவர் டெறில் மிச்செலுடன் 4ஆவது விக்கெட்டில் 58 ஓட்டங்களைப் பகர்ந்தார். லெதமைத் தொடர்ந்து டொம் ப்ளண்டெல் 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

ஆட்டநேர முடிவில் டெறில் மிச்செல் 40 ஓட்டங்களுடனும் மைக்கல் ப்றேஸ்வெல் 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைந்த இந்த ஆடுகளத்தில் இலங்கை வேகப்பந்துவீச்சாளர்கள் வீழ்ந்த நியூஸிலாந்தின் 5 விக்கெட்களையும் பகிர்ந்துகொண்டனர்.

லஹிரு குமார 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கசுன் ராஜித்த 38 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

முன்னதாக தனது முதலாவது இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 305 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை, எஞ்சிய 4 விக்கெட்களை 50 மேலதிக ஓட்டங்களுக்கு இழக்க அதன் மொத்த எண்ணிக்கை 355 ஓட்டங்களாக இருந்தது.

முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆட்டமிழக்காமல் இருந்த தனஞ்சய டி சில்வாவும் கசுன் ராஜித்தவும் 6ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் 46 ஓட்டங்களுடன் தனஞ்சய டி சில்வா ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து கசுன் ராஜித்த 22 ஓட்டங்களுடனும் பிரபாத் ஜயசூரிய 13 ஓட்டங்களுடனும் அசித்த பெர்னாண்டோ 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். லஹிரு குமார 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

நியூஸிலாந்து பந்துவீச்சில் டிம் சௌதீ 64 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் மெட் ஹென்றி 80 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதனிடையே நியூஸிலாந்து சார்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை வீழ்த்தியோர் வரிசையில் றிச்சர்ட் ஹெட்லிக்கு (431 விக்கெட்கள்) அடுத்ததாக 364 விக்கெட்களுடன் டிம் சௌதீ 2ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். 2ஆம் இடத்திலிருந்து 3ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்ட டெனியல் வெட்டோரி 361 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.

https://www.virakesari.lk/article/150192

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கைக்கு நெருக்கடியைக் கொடுத்த டெரில் மிச்செலின் சதம், டிக்னரின் 3 விக்கெட் குவியல்

Published By: DIGITAL DESK 5

11 MAR, 2023 | 03:34 PM
image

(நெவில் அன்தனி)

கிறைஸ்ட்சேர்ச், ஹெக்லி ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இலங்கைக்கு எதிரான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் முதலாவது போட்டியின் 3ஆம் நாளான இன்று சனிக்கிழமை (11) டெரில் மிச்செல் குவித்த சதம், ப்ளாயர் டிக்னர் கைப்பற்றிய 3 விக்கெட்கள் என்பன நியூஸிலாந்தை சற்று நல்ல நிலையில் இட்டுள்ளது.

முதல் இன்னிங்ஸ் நிறைவில்  நியூஸிலாந்தைவிட 18 ஓட்டங்களால் பின்னிலையில் இருந்த இலங்கை, 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 2ஆவது இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 83 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதற்கு அமைய 2ஆவது இன்னிங்ஸில் 7 விக்கெட்கள் மீதம் இருக்க நியூஸிலாந்தை விட 65 ஓட்டங்களால் இலங்கை முன்னிலையில் இருக்கிறது. இதன் காரணமாக போட்டியின் 4ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை (12) இலங்கை பெரும் அழுத்தத்தை எதிர்கொள்ளவுள்ளது.

356067.webp

ஏஞ்சலோ மெத்யூஸ் 20 ஓட்டங்களுடனும் இராக்காப்பாளன் ப்ரபாத் ஜயசூரிய 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல்   உள்ளனர்.

ஓஷத பெர்னாண்டோ (28), திமுத் கருணாரட்ன (17), குசல் மெண்டிஸ் (14) ஆகியோர் 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றபோதிலும் முதலாவது இன்னிங்ஸிலும் பார்க்க இரண்டாவது இன்னிங்ஸில் அளவுக்கு அதிகமாக தடுத்தாடும் உத்தியைக் கையாண்டதால் விக்கெட்களைப் பறிகொடுத்தனர்.

இந்த மூவரின் விக்கெட்களையும் 28 ஓட்டங்களக்கு ப்ளயார் டிக்னர் கைப்பற்றினார்.

முன்னதாக தனது முதலாவது இன்னிங்ஸை 5 விக்கெட் இழப்புக்கு 162 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த நியூஸிலாந்து 373 ஓட்டங்களைப் பெற்றது.

356054.webp

டெரில் மிச்செல் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 102 ஓட்டங்களைப் பெற்றார். இது அவர் குவித்த 5ஆவது டெஸ்ட் சதமாகும்.

மெட் ஹென்றியும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 72 ஓட்டங்களைப் பெற்றார்.

இன்றைய தினம் முதலாவதாக ஆட்டம் இழந்த மைக்கல் ப்றேஸ்வெல் 25 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து   7ஆவது விக்கெட்டில் அணித் தலைவர் டிம் சௌதீயுடன் 47 ஓட்டங்களைப் பகிர்ந்த டெரில் மிச்செல் 8ஆவது விக்கெட்டில் மெட் ஹென்றியுடன் மேலும் 56 ஓட்டங்களைப் பகிர்ந்தார். டிம் சௌதீ 25 ஓட்டங்களைப் பெற்றார்.

356055.webp

அதன் பின்னர் மெட் ஹென்றியும் நீல் வெக்னரும் 9ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து பெறுமதிமிக்க 69 ஓட்டங்களைப் பகிர்ந்து தமது அணியை முன்னிலையில் இட்டனர். நீல் வெக்னர் 27 ஓட்டங்களைப் பெற்றார்.

இலங்கை பந்துவிச்சில் அசித்த பெர்னாண்டோ 85 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் லஹிரு குமார 76 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கசுன் ராஜித்த 104 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் 355 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

https://www.virakesari.lk/article/150263

  • கருத்துக்கள உறவுகள்
Posted

10 ஓவ‌ருக்கை இல‌ங்கை அணியின்  5விக்கேட் அவுட்
நாளை ம‌ழை பெய்ய‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு ம‌ழை பெய்தால் முத‌லாவ‌து விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடிய‌க் கூடும்.....................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மெத்யூஸின் சதம் இலங்கைக்கு சிறு நம்பிக்கை ; ஆனால் போட்டியில் எதுவும் நிகழ வாய்ப்புள்ளது

Published By: VISHNU

12 MAR, 2023 | 03:33 PM
image

(நெவில் அன்தனி)

நியூஸிலாந்துக்கு எதிராக கிறைஸ்ட்சேர்ச், ஹெக்லி ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் முதலாவது போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் ஏஞ்சலோ மெத்யூஸ் அபார சதம் குவித்து இலங்கைக்கு சிறு நம்பிக்கையைக் கொடுத்துள்ளார்.

இலங்கை அதன் இரண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 302 ஓட்டங்களைப் பெற்றதை அடுத்து 285 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுபெடுத்தாடும் நியூஸிலாந்து 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 28 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

Daryl Mitchell gestures after bringing up his century, New Zealand vs Sri Lanka, 1st Test, Christchurch, 3rd day, March 11, 2023

இதன் காரணமாக போட்டியின் கடைசி நாளான திங்கட்கிழமை (13) எதுவும் நிகழலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

டொம் லெதம் 11 ஓட்டங்களுடனும் முன்னாள் அணித் தலைவர் கேன் வில்லியம்சன் 7 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.

5 ஓட்டங்களுடன் டெவன் கொன்வேயை கசுன் ராஜித்த ஆட்டமிழக்கச் செய்தார்.

போட்டியின் 4ஆம் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை (12) காலை தனது 2ஆவது இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 83 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை, கடைசி 6 விக்கெட்களை 102 ஓட்டங்களுக்கு இழந்தது.

மொத்த எண்ணிக்கை 95 ஓட்டங்களாக இருந்தபோது இராக்காப்பாளன் ப்ரபாத் ஜயசூரிய 6 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

இதனைத் தொடர்ந்து மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய முன்னாள் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ், 5ஆவது விக்கெட்டில் தினேஷ் சந்திமாலுடன் 105 ஓட்டங்களையும் 6ஆவது விக்கெட்டில் தனஞ்சய டி சில்வாவுடன் 60 ஓட்டங்களையும் பகிர்ந்து அணியைப் பலப்படுத்த முயற்சித்தார்.

தினேஷ் சந்திமால் 42 ஓட்டங்களைப் பெற்றதுடன் ஏஞ்சலோ மெத்யூஸ் 235 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகளுடன் 115 ஓட்டங்களைப் பெற்று களம்விட்டு வெளியேறினார்.

தனது 101ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஏஞ்சலோ மெத்யூஸ் குவித்த 14ஆவது சதம் இதுவாகும்.

அவர் ஆட்டமிழந்த சொற்ப நேரத்தில் நிரோஷன் திக்வெல்ல ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். பின்வரிசையில் கசுன் ராஜித்த 11 ஓட்டங்களைப் பெற்றார். தனஞ்சய டி சில்வா நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 47 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

நியூஸிலாந்து பந்துவீச்சில் ப்ளயார் டிக்னர் 100 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மெட் ஹென்றி 71 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் டிம் சௌதீ 57 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இது இவ்வாறிருக்க, இந்தப் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிய நிரோஷன் திக்வெல்ல அடுத்த டெஸ்ட் போட்டியில் நீக்கப்படுவார் என கருதப்படுகிறது.

உள்ளூர் போட்டிகளில் துடுப்பாட்டத்தில் திறமையான ஆற்றல்களை வெளிப்படுத்தியவரும் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகளில் தொடர்ச்சியாக 3 சதங்கள் குவித்தவருமான நிஷான் மதுஷ்க 2ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட அழைக்கப்படுவார் என நம்பப்படுகிறது.  அதில் ஒரு இரட்டைச் சதமும் அடங்குகிறது.

முதல் இன்னிங்ஸில் இலங்கை 355 ஓட்டங்களையும் நியூஸிலாந்து 373 ஓட்டங்களையும் பெற்றன.

https://www.virakesari.lk/article/150317

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜ‌ந்தாவ‌து நாள் மைதான‌த்தில் அதிக‌ ம‌ழை.............இன்னும் கூடுத‌ல் ம‌ழை பெய்தால் விளையாட்டு ச‌ம‌ நிலை................

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

க‌ட‌சி ப‌ந்தில்  நியுசிலாந் திரில் வெற்றி 

நியுசிலாந் அணிக்கு வாழ்த்துக்க‌ள்................................

Edited by பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையின் உலகக் கிண்ண இறுதிப் போட்டி கனவைத் தகர்த்தது நியூஸிலாந்து; இறுதியில் இந்தியா

Published By: DIGITAL DESK 5

13 MAR, 2023 | 01:07 PM
image

(நெவில் அன்தனி)

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் இலங்கையின் கனவு நியூஸிலாந்தினால் தகர்க்கப்பட்டதுடன் அவுஸ்திரேலியாவை இறுதிப் போட்டியில் எதிர்த்தாடும் தகுதியை இந்தியா உறுதி செய்துக்கொண்டது.

கிறைஸ்ட்சேர்ச், ஹெக்லி ஓவல் விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை (13) நிறைவுக்கு வந்த முதலாவது டெஸ்ட் போட்டியின்  கடைசிப் பந்தில் நியூஸிலாந்து 2 விக்கெட்களால் மிகவும் பரபரப்பான வெற்றியை ஈட்டியதால் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு இலங்கைக்கு இருந்த சொற்ப வாய்ப்பு அற்றுப் போனது.

மழை காரணமாக கடைசி நாளான 5ஆம் நாள் ஆட்டம் சரியாக 5 மணித்தியால தாமதத்தின் பின்னர் பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமானது. அப்போது நியூஸிலாந்தின் வெற்றிக்கு 42 ஓவர்களில் மேலும் 257 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

1303_kane_williamson_nz_bt_sl__1st_test_

முன்னாள் அணித் தலைவர் கேன் வில்லியம்சன் குவித்த ஆட்டமிழக்காத அபார சதமும் டெரில் மிச்செல் பெற்ற அரைச் சதமும் நியூஸிலாந்தின் வெற்றிக்கு வழிவகுத்தன. ஆனால், அந்த வெற்றி இலகுவாக வந்துவிடவில்லை. கடைசிவரை போராடி இலங்கை கடைசிப் பந்தில் தோல்வி அடைந்தது.

கேன் வில்லியம்சன் 33 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது கொடுத்த சற்று கடினமான பிடியை விக்கெட் காப்பாளர் நிரோஷன் திக்வெல்ல தவற விட்டமையும் சுழல்பந்துவீச்சாளர் அநாவசியமாக கொடுத்த 4 வைட்களும் இலங்கையின் தோல்விக்கு பிரதான காரணமாக இருந்ததாக கருதப்படுகிறது.

மேலும் ஹெக்லி ஓவல் மைதானத்தில் மிகப் பெரிய வெற்றி இலக்கை நியூஸிலாந்து அடைந்து வெற்றியீடடி மைல்கல் சாதனையை நிலைநாட்டியது.  

போட்டியின் கடைசி நாளான இன்றைய தினம் ஒரு விக்கெட் இழப்புக்கு 28 ஓட்டங்கள் என்ற நிலையிலிருந்து தனது 2ஆவது இன்னிங்ஸைத் தொடர்ந்த நியூஸிலாந்து மேலும் 2 விக்கெட்களை இழந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை 90 ஓட்டங்களாக இருந்தது.

இந் நிலையில் முன்னாள் தலைவர் கேன் வில்லியம்சன், டெரில் மிச்செல் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 142 ஓட்டங்களைப் பகிர்ந்து நியூஸிலாந்துக்கு நம்பிக்கை ஊட்டினர்.

1303_darryl_mitchell_nz_vs_sl.jpg

மொத்த எண்ணிக்கை 232 ஓட்டங்களாக இருந்தபோது டெரில் மிச்செல் 81 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

அதனைத் தொடர்ந்து மேலும் 4 விக்கெட்கள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. (280 - 8 விக்.)

ஆனால், கேன் வில்லியம்சன் கடைசி ஓவரில் அடித்த பவுண்டறியும் கடைசிப் பந்தில் பெற்ற லெக் பை ஓட்டமும் நியூஸிலாந்துக்கு பரபரப்பான வெற்றியை ஈட்டிக்கொடுத்தது.

356182.webp

கேன் வில்லியம்சன் 121 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

கேன் வில்லியம்சன் நேற்றைய தினம் ஒரு ஓட்டம் பெற்றிருந்தபோது கொடுத்த சற்று கடினமான பிடியை விக்கெட் காப்பாளர் நிரோஷன் திக்வெல்ல தவற விட்டமையும் சுழல்பந்துவீச்சாளர் அநாவசியமாக கொடுத்த 4 வைட்களும் இலங்கையின் தோல்விக்கு பிரதான காரணமாக இருந்ததாக கருதப்படுகிறது.

மேலும் ஹெக்லி ஓவல் மைதானத்தில் மிகப் பெரிய வெற்றி இலக்கை நியூஸிலாந்து அடைந்து வெற்றியீடடி மைல்கல் சாதனையை நிலைநாட்டியது.

எண்ணிக்கை சுருக்கம்

356041.webp

இலங்கை 1ஆவது இன்: 355 (குசல் மெண்டிஸ் 87, திமுத் கருணாரட்ன 50, ஏஞ்சலோ மெத்யூஸ் 47, தனஞ்சய டி சில்வா 46, டிம் சௌதீ 64 - 5 விக், மெட் ஹென்றி 80 - 4 விக்.),

356055.webp

நியூஸிலாந்து 1ஆவது இன்: 373 (டெரில் மிச்செல் 102, மெட் ஹென்றி 72, டொம் லெதம் 67, அசித்த பெர்னாண்டோ 85 - 4 விக்., லஹிரு குமார 76 - 3 விக்.)

இலங்கை 2ஆவது இன்: 302 (ஏஞ்சலோ மெத்யூஸ் 115, தனஞ்சய டி சில்வா 47 ஆ.இ., தினேஷ் சந்திமால் 42, ப்ளயார் டிக்னர் 100 - 4 விக்., மெட் ஹென்றி 71 - 3 விக்., டிம் சௌதீ 57 - 2 விக்.)

1303_williamson_hugged_by_his_team_mate_

நியூஸிலாந்து (வெற்றி இலக்கு 285) 2ஆவது இன்: 285 - 8 விக். (கேன் வில்லியம்சன் 121 ஆ.இ., டெரில் மிச்செல் 81, அசித்த பெர்னாண்டோ 63 - 3 விக்., ப்ரபாத் ஜயசூரிய 92 - 2 விக்.)

https://www.virakesari.lk/article/150399

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரே ஓவரில் ப்ரபாத்தின் 3 பந்துகள் வைட் என அழைக்கப்பட்டமை எவ்வகையில் நியாயம் - திமுத் கேள்வி

Published By: VISHNU

13 MAR, 2023 | 06:44 PM
image

(நெவில் அன்தனி)

நியூஸிலாந்துக்கு எதிராக கிறைஸ்ட்சேர்ச், ஹெக்லி ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் கடைசி இன்னிங்ஸில் ப்ரபாத் ஜயசூரியவின் 3 பந்துகளை மத்தியஸ்தர் க்ரபானி வைட் என அழைத்தது எந்த வகையில் நியாயம் என இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரட்ன கேள்வி எழுப்பினார்.

போட்டி முடிவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த திமுத் கருணாரட்ன, இடதுபக்கமாக சற்று அப்பால் பந்துவீசும்போது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஒரு விதமாகவும் சுழல்பந்துவீச்சாளர்களுக்கு வேறு விதமாகவும் கள மத்தியஸ்தர் தீர்ப்பு வழங்குவது சரியா என பதில் கேள்வி தொடுத்தார்.

இடதுபக்கமாக சற்று அப்பால் பந்துவீசப்படும்போது வேகப்பந்துவீச்சாளருக்கும் சுழல்பந்துவீச்சாளருக்கும் ஒரே நியதி இருக்கவேண்டும். அது மாறுபடக்கூடாது என சுட்டிக்காட்டிய திமுத் கருணாரட்ன இவ் விடயத்தில் என்ன அளவுகோல்கள் இருக்கின்றன அல்லது விதிகள் மாறுபடுகின்றனவா என்பதை அறிய விரும்புகிறோம் என்றார்.

285 ஓட்டங்களை வெற்றி இலக்காக் கொண்டு நியூஸிலாந்து 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடியபோது இடது பக்கமாக சற்று அப்பால் பந்துவீசிய ப்ரபாத் ஜயசூரிய, கள மத்தியஸ்தர் கிறிஸ் க்ரஃபானியினால் எச்சரிக்கப்பட்டதுடன் அந்த ஓவரில் அவரது 3 பந்துகளை வைட் என அறிவித்தார்.

அந்த ஓவர் முடிவில், இலங்கை அணியினர் பெரும் குழப்பம் அடைந்ததுடன் முன்னாள் அணித் தலைவரும் சிரேஷ்ட வீரருமான ஏஞ்சலலோ மெத்யூஸ், போட்டி முழுவதும் வேகப்ந்துவீச்சாளர்கள் இடதுபக்கமாக சற்று அப்பால் பந்துவீசியதை ஏன் வைட் ஆக அறிவிக்கவில்லை என மத்தியஸ்தர் க்ரஃபானியிடம் கேள்வி எழுப்பினார்.

'பின்னர் கலந்துரையாடுவோம்' என கூறிய மெத்யூஸ், 'வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் சுழல்பந்துவீச்சாளர்களுக்கும் ஒரே விதமான நியாயம் இருக்கவேண்டும் என நான் நினைக்கிறேன்' எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முதலாவது டெஸ்ட் போட்டி இரண்டு தரப்பினருக்கும் 50 - 50 என சமமாக இருந்ததாக ஊடக சந்தப்பில் திமுத் கருணாரட்ன குறிப்பிட்டார்.

'இந்தப் போட்டியின் கடைசிக் கட்ட ஆட்டம் 50 ஓவர் கிரிக்கெட் போட்டியை ஒத்ததாக இருந்தது. யாரும் வெல்லலாம் என்ற நிலை காணப்பட்டதால் போட்டி இரு தரப்பினருக்கும் 50 - 50 ஆக இருந்தது. 

மழை காரணமாக மைதானத்தின் எல்லைப் பகுதிகள் ஈரலிப்பாக இருந்ததால் களத்தப்பில் ஈடுபடுவது சிரமமாக இருந்தது. ஆனால், இயற்கையை எம்மால் மாற்ற முடியாது. அதனை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.

'மேலும் கேன் வில்லியம்சனின் பிடியை எடுத்திருந்தால் அது எங்களுக்கு சாதகமான  திருப்பு முனையாக அமைந்திருக்கும். நாங்கள் களத்தடுப்பில் சில தவறுகளை இழைத்தோம். அவ்வாறான தவறுகளை குறைப்பது அவசியம். 

எவ்வாறாயினும் ஒட்டுமொதத்தில் எமது ஆற்றல் சிறப்பாக இருந்தது எனலாம். இதற்கு முன்னர் நாங்கள் நியூஸிலாந்து வருகை தந்தபோது எங்களால் சிறப்பாக செயற்பட முடியாமல் போனது.

சௌதீ, வெக்னர் போன்றவர்களை எதிர்கொள்வது இலகுவல்ல. நாங்கள் தோல்வி அடைந்தது கவலை அளிக்கிறது. ஆனால், எமது அணியினர் திறமையாக விளையாடினர் என்பது குறித்து அணித் தலைவர் என்ற வகையில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்' என திமுத் கருணாரட்ன குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/150433

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, ஏராளன் said:

ஒரே ஓவரில் ப்ரபாத்தின் 3 பந்துகள் வைட் என அழைக்கப்பட்டமை எவ்வகையில் நியாயம் - திமுத் கேள்வி

Published By: VISHNU

13 MAR, 2023 | 06:44 PM
image

(நெவில் அன்தனி)

நியூஸிலாந்துக்கு எதிராக கிறைஸ்ட்சேர்ச், ஹெக்லி ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் கடைசி இன்னிங்ஸில் ப்ரபாத் ஜயசூரியவின் 3 பந்துகளை மத்தியஸ்தர் க்ரபானி வைட் என அழைத்தது எந்த வகையில் நியாயம் என இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரட்ன கேள்வி எழுப்பினார்.

போட்டி முடிவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த திமுத் கருணாரட்ன, இடதுபக்கமாக சற்று அப்பால் பந்துவீசும்போது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஒரு விதமாகவும் சுழல்பந்துவீச்சாளர்களுக்கு வேறு விதமாகவும் கள மத்தியஸ்தர் தீர்ப்பு வழங்குவது சரியா என பதில் கேள்வி தொடுத்தார்.

இடதுபக்கமாக சற்று அப்பால் பந்துவீசப்படும்போது வேகப்பந்துவீச்சாளருக்கும் சுழல்பந்துவீச்சாளருக்கும் ஒரே நியதி இருக்கவேண்டும். அது மாறுபடக்கூடாது என சுட்டிக்காட்டிய திமுத் கருணாரட்ன இவ் விடயத்தில் என்ன அளவுகோல்கள் இருக்கின்றன அல்லது விதிகள் மாறுபடுகின்றனவா என்பதை அறிய விரும்புகிறோம் என்றார்.

285 ஓட்டங்களை வெற்றி இலக்காக் கொண்டு நியூஸிலாந்து 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடியபோது இடது பக்கமாக சற்று அப்பால் பந்துவீசிய ப்ரபாத் ஜயசூரிய, கள மத்தியஸ்தர் கிறிஸ் க்ரஃபானியினால் எச்சரிக்கப்பட்டதுடன் அந்த ஓவரில் அவரது 3 பந்துகளை வைட் என அறிவித்தார்.

அந்த ஓவர் முடிவில், இலங்கை அணியினர் பெரும் குழப்பம் அடைந்ததுடன் முன்னாள் அணித் தலைவரும் சிரேஷ்ட வீரருமான ஏஞ்சலலோ மெத்யூஸ், போட்டி முழுவதும் வேகப்ந்துவீச்சாளர்கள் இடதுபக்கமாக சற்று அப்பால் பந்துவீசியதை ஏன் வைட் ஆக அறிவிக்கவில்லை என மத்தியஸ்தர் க்ரஃபானியிடம் கேள்வி எழுப்பினார்.

'பின்னர் கலந்துரையாடுவோம்' என கூறிய மெத்யூஸ், 'வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் சுழல்பந்துவீச்சாளர்களுக்கும் ஒரே விதமான நியாயம் இருக்கவேண்டும் என நான் நினைக்கிறேன்' எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முதலாவது டெஸ்ட் போட்டி இரண்டு தரப்பினருக்கும் 50 - 50 என சமமாக இருந்ததாக ஊடக சந்தப்பில் திமுத் கருணாரட்ன குறிப்பிட்டார்.

'இந்தப் போட்டியின் கடைசிக் கட்ட ஆட்டம் 50 ஓவர் கிரிக்கெட் போட்டியை ஒத்ததாக இருந்தது. யாரும் வெல்லலாம் என்ற நிலை காணப்பட்டதால் போட்டி இரு தரப்பினருக்கும் 50 - 50 ஆக இருந்தது. 

மழை காரணமாக மைதானத்தின் எல்லைப் பகுதிகள் ஈரலிப்பாக இருந்ததால் களத்தப்பில் ஈடுபடுவது சிரமமாக இருந்தது. ஆனால், இயற்கையை எம்மால் மாற்ற முடியாது. அதனை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.

'மேலும் கேன் வில்லியம்சனின் பிடியை எடுத்திருந்தால் அது எங்களுக்கு சாதகமான  திருப்பு முனையாக அமைந்திருக்கும். நாங்கள் களத்தடுப்பில் சில தவறுகளை இழைத்தோம். அவ்வாறான தவறுகளை குறைப்பது அவசியம். 

எவ்வாறாயினும் ஒட்டுமொதத்தில் எமது ஆற்றல் சிறப்பாக இருந்தது எனலாம். இதற்கு முன்னர் நாங்கள் நியூஸிலாந்து வருகை தந்தபோது எங்களால் சிறப்பாக செயற்பட முடியாமல் போனது.

சௌதீ, வெக்னர் போன்றவர்களை எதிர்கொள்வது இலகுவல்ல. நாங்கள் தோல்வி அடைந்தது கவலை அளிக்கிறது. ஆனால், எமது அணியினர் திறமையாக விளையாடினர் என்பது குறித்து அணித் தலைவர் என்ற வகையில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்' என திமுத் கருணாரட்ன குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/150433

நீங்க‌ள் இந்த‌ செய்திக்கு மேல‌ இணைந்த‌ செய்தியில் த‌வறாக‌ எழுதி விட்டின‌ம் ம‌ழை கார‌ன‌மாய் 257 ஓட்ட‌த்தை 53 ஓவ‌ர் கொடுத்த‌வை............அந்த‌ செய்தியில் 42 என்று போட்டு இருக்கின‌ம் அது முற்றிலும் பிழை


இல‌ங்கையின் இந்த‌ தோல்விக்கு முத‌ல் கார‌ன‌ம் விக்கேட் கீப்ப‌ர் டிக்வெல்லா.............இர‌ண்டு இனிங்ஸ்சிலும் அவ‌ர் அடிச்ச‌ ர‌ன்ஸ் வெறும் 7

இல‌ங்கையின் இர‌ண்டாவ‌து இனிங்ஸ்சில் 10ஓவ‌ருக்கை 5 விக்கேட் அவுட்..................இர‌ண்டாவ‌து இனிங்ஸ்சில் இல‌ங்கை கூடுத‌லா ப‌த்து ஓவ‌ர் நின்று பிடிச்சு கூடுத‌ல் ர‌ன்ஸ்ச‌ எடுத்து இருந்தா விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடிந்து இருக்கும்.................

ரெஸ் விளையாட்டுக்கு பொறுமை தேவை ப‌ந்து எந்த‌ திசைய‌ நோக்கி வ‌ருது என்ப‌த‌ க‌வ‌னித்த‌ பிற‌க்கு தான் அடிச்சு ஆட‌னும்.......................இல‌ங்கையின் பின்ன‌னி ப‌ந்து விச்சாள‌ர்க‌ளுக்கு மைதான‌த்தில் நிலைத்து நின்று ஆட‌த் தெரியாது...................

ப‌ழைய‌ இல‌ங்கை ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் ப‌ந்தும் வீசுவார்க‌ள்  நிலைத்து நின்றும் ஆடுவார்க‌ள்..........................

Edited by பையன்26
  • Like 2
Posted

முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி 580 ஓட்டங்கள்

முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி 580 ஓட்டங்கள்

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெலிங்டன் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.

அதனடிப்டையில் முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்களை இழந்து 580 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் போட்டியை இடைநிறுத்தியது.

நியூசிலாந்து அணி சார்ப்பில் கேன் வில்லியம்ஸன் 215 ஓட்டங்களையும் ஹென்ட்ரி நிக்கலஸ் ஆட்டமிழக்காமல் 200 ஓட்டங்களையும் டெவோன் கான்வே 78 ஓட்டங்களையும் எடுத்திருந்தனர்.

பந்துவீச்சில் கசுன் ராஜித 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கேன்வில்லியம்ஸின் சிரித்த முகத்துக்குத்தான் காசு.வாழ்த்துக்கள் தல.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வில்லியம்சன், நிக்கல்ஸ் இரட்டைச் சதங்கள் குவித்து அசத்தல், நியூஸிலாந்து 540 - 2 விக். டிக்ளயார்ட்

Published By: DIGITAL DESK 5

18 MAR, 2023 | 03:12 PM
image

(நெவில் அன்தனி)

வெலிங்டன், பேசின் ரிசேர்வ் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவதும் கடைசியுமான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டியில் கேன் வில்லியம்சன், ஹென்றி நிக்கல்ஸ் ஆகியோர் குவித்த இரட்டைச் சதங்களுடன் நியூஸிலாந்து 500க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்தது.

போட்டியின் 2ஆம் நாளான இன்று சனிக்கிழமை (18) தனது முதல் இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 155 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த நியூஸிலாந்து 4 விக்கெட்களை இழந்து 580 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது. அதேவேளை ஹென்றி நிக்கல்ஸ் இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்திருந்தார்.

முன்னாள் அணித் தலைவர் கேன் வில்லியம்சன் 26 ஓட்டங்களிலிருந்தும் ஹென்றி  நிக்கல்ஸ்   18 ஓட்டங்களிலிருந்தும் தமது துடுப்பாட்டங்களைத் தொடர்ந்தனர்.

இலங்கை பந்துவீச்சாளர்களை மிக இலகுவாக எதிர்கொண்ட இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி சரமாறியாக ஓட்டங்களைக் குவித்த வண்ணம் இருந்தனர். அவர்கள் இருவரும் 3ஆவது விக்கெட்டில் 363 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

மதிய போசன இடைவேளைக்கு முன்னர் தனது சதத்தைப் பூர்த்திசெய்த கேன் வில்லியம்சன், தேநீர் இடைவேளைக்கு சற்று பின்னர் இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்து ஆட்டமிழந்தார். 296 பந்துகளை எதிர்கொண்ட  வில்லியம்சன்  23 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 215 ஓட்டங்களைக் குவித்தார்.

ஹென்றி நிக்கல்ஸ் 240 பந்துகளில் 15 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 200 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

வில்லிம்சன் 6ஆவது இரட்டைச் சதத்தையும் நிக்கல்ஸ் முதலாவது இரட்டைச் சதத்தையும் குவித்தனர். 

டெரில் மிச்செல் 17 ஓட்டங்களையும் டொம் ப்ளண்டெல் ஆட்டம் இழக்காமல் 17 ஓட்டங்களையும் பெற்றனர்.

சீரற்ற காலநிலையினால் 3 மணித்தியாலங்கள் தாமதித்து ஆரம்பித்த முதலாம் நாள் ஆட்டத்தில் டொம் லெதம் 21 ஓட்டங்களுடனும் டெவன் கொன்வே 78 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்திருந்தனர்.

இலங்கை பந்துவீச்சில் கசுன் ராஜித்த 126 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தனஞ்சய டி சில்வா 75 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் ப்ரபாத் ஜயசூரிய 86 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்களை இழந்து 26 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

ஓஷத பெர்னாண்டோ 6 ஓட்டங்களுடனும் குசல் மெண்டிஸ் ஓட்டம் பெறாமலும் ஆட்டம் இழந்தனர்.

திமுத் கருணாரட்ன 16 ஓட்டங்களுடனும் 2ஆவது தொடர்ச்சியான டெஸ்டில் இராக்காப்பாளனாக களம் நுழைந்த ப்ரபாத் ஜயசூரிய 4 ஒட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.

1803_henry_nicholls_nz_vs_sl.jpg

1803_kane_williamson_nz_vs_sl.jpg

1803_henry_nicholls_nz_vs_sl_..jpg

https://www.virakesari.lk/article/150858

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இல‌ங்கை அணி ப‌டு சுத‌ப்ப‌ல் விளையாட்டு.................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இக்கட்டான நிலையில் இலங்கை, 2018இல் போன்று சாதிப்பார்களா மெத்யூஸ், மெண்டிஸ்?

Published By: VISHNU

19 MAR, 2023 | 09:14 PM
image

(நெவில் அன்தனி)

நியூஸிலாந்துக்கு எதிராக வெலிங்டன், பேசின் ரிசேர்வ் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2ஆவதும் கடைசியுமான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது.

3_1903_kusal_mendis_sl_vs_nz.jpg

போட்டியின் மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை (19) முதல் இன்னிங்ஸில் 164 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற இலங்கை, பஃலோ ஒன் முறையில் 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாட நிர்ப்பந்திக்கப்பட்டு 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்களை இழந்து 113 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

1_sl_vs_nz_2018_mathews_and_mendi.png

நியூஸிலாந்து முதலாவது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 580 ஓட்டங்களைக் குவித்திருந்தபோது டிக்ளயார் செய்தது.

இதற்கு அமைய போட்டியில்  இன்னும் இரண்டு நாட்கள் மீதமிருக்க இலங்கை 303 ஓட்டங்களால் பின்னிலையில் இருக்கிறது.

போட்டியின் 4ஆம் நாளான திங்கட்கிழமை குசல் மெண்டிஸும் ஏஞ்சலோ மெத்யூஸும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி இலங்கையை தோல்வியிலிருந்து மீட்க கடுமையாக முயற்சிக்க வெண்டிவரும்.

இலங்கை கடைசியாக 2018இல் நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் செய்திருந்தபோது இதே மைதானத்தில் மழையினால் கடைசி நாள் ஆட்டம் முழுமையாகத் தடைப்பட்ட 1ஆவது டெஸ்ட் போட்டியில் மெத்யூஸ் (141 ஆ.இ.), குசல் மெண்டிஸ் (120 ஆ.இ.) ஆகிய இருவரும் ஒரு நாளுக்கும் மேல் துடுப்பெடுத்தாடி போட்டியை 4ஆம் நாளன்று வெற்றி தோல்வியின்றி முடிக்க உதவினர். அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 239 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

அதேபோன்ற ஒரு சவாலை அவர்கள் இருவரும் இம்முறையும் சமாளிப்பார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

போட்டியின் 3ஆம் நாளான இன்று காலை தனது முதலாவது இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 26 ஓட்டங்கள் என்ற நிலையில் இருந்து தொடர்ந்து இலங்கை, மிக மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி சகல விக்கெட்களையும் இழந்து 164 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இலங்கையின் மேலும் 2 விக்கெட்கள் இன்று காலை வீழ்ந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை வெறும் 34 ஓட்டங்களாக இருந்தது. இராக்காப்பாளன் ப்ரபாத் ஜயசூரிய (4), ஏஞ்சலோ மெத்யூஸ் (1) ஆகிய இருவரும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்காமல் ஆட்டமிந்தனர்.

அதனைத் தொடர்ந்து அணித் தலைவர் திமுத் கருணாரட்னவும் முன்னாள் தலைவர் தினேஷ் சந்திமாலும் 5ஆவது விக்கெட்டில் 80 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறிய அளவில்  உற்சாகத்தைக் கொடுத்தனர்.

தினேஷ் சந்திமால் 37 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, தனஞ்சய டி சில்வா (0) வந்த வேகத்திலேயே ஆடுகளம் விட்டகன்றார்.

அறிமுக வீரர் நிஷான் மதுஷ்க நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 16 ஓட்டஙகளைப் பெற்றதுடன் 7ஆவது விக்கெட்டில் திமுத் கருணாரட்னவுடன் 40 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

மறுபக்கத்தில் தனி ஒருவராகத் திறமையை வெளிப்படுத்திய திமுத் கருணாரட்ன 188 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகளுடன் 89 ஓட்டங்களைப் பெற்றார்.

நியூஸிலாந்து பந்துவீச்சில் மெட் ஹென்றி 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மைக்கல் ப்றேஸ்வெல் 50 ஓட்டங்களுக்கு 3 விக்கெடகளையும் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து ஃபலோ ஒன் முறையில் 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை, 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்களை இழந்து 113 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

ஆரம்ப வீரர் ஓஷத பெர்னாண்டோ 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். (26 - 1 விக்.)

இதனைத் தொடர்ந்து திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 2ஆவது விக்கெட்டில் 71 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது திமுத் கருணாரட்ன 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

குசல் மெண்டிஸ் 50 ஓட்டங்களுடனும் ஏஞ்சலோ மெத்யூஸ ஒரு ஓட்டத்துடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் டிம் சௌதீ 9 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் டக் ப்றேஸ்வெல் ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்களையும் வீழ்த்தினர்.

https://www.virakesari.lk/article/150896

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இர‌ண்டாவ‌து ரெஸ் விளையாட்டில் ப‌டு தோல்வி.............நியுசிலாந் தொட‌ர‌ 2-0 வென்று விட்ட‌து...................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

19 minutes ago, பையன்26 said:

இர‌ண்டாவ‌து ரெஸ் விளையாட்டில் ப‌டு தோல்வி.............நியுசிலாந் தொட‌ர‌ 2-0 வென்று விட்ட‌து...................

தற்போதுதான் இந்த காணொளியினை இனைப்பதற்கு முன்னர் பார்த்தேன், நியுசிலாந்து வீரர்கள் சிறப்பாக பந்து வீசுகிறார்கள், பந்தும் நன்றாக மேலெழுந்து வருகிறது, இலங்கை ஆட்டக்காரர்கள் பெரும்பாலும் உடலுக்கு நெருக்கமாகவே விளையாடுகிறார்கள், அத்துடன் எகிறும் பந்துகளை Soft hand இல் விளையாடுகிறார்கள், ஆனாலும் சில மோசமான விளையாட்டினையும் விளையாடுகிறார்கள்.

இந்த ஆடுகலம் நாலாவது நாள் ஆடுகளம், முதல் இனிங்க்ஸில் இலங்கை மோசமாக விளையாடியிருக்கலாம். 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, vasee said:

 

தற்போதுதான் இந்த காணொளியினை இனைப்பதற்கு முன்னர் பார்த்தேன், நியுசிலாந்து வீரர்கள் சிறப்பாக பந்து வீசுகிறார்கள், பந்தும் நன்றாக மேலெழுந்து வருகிறது, இலங்கை ஆட்டக்காரர்கள் பெரும்பாலும் உடலுக்கு நெருக்கமாகவே விளையாடுகிறார்கள், அத்துடன் எகிறும் பந்துகளை Soft hand இல் விளையாடுகிறார்கள், ஆனாலும் சில மோசமான விளையாட்டினையும் விளையாடுகிறார்கள்.

இந்த ஆடுகலம் நாலாவது நாள் ஆடுகளம், முதல் இனிங்க்ஸில் இலங்கை மோசமாக விளையாடியிருக்கலாம். 

 

நீங்க‌ள் சொல்லுவ‌து ச‌ரி அண்ணா
இல‌ங்கை வீர‌ர்க‌ள் பாட‌சாலை மாண‌வ‌ர்க‌ள் போல் 

ப‌ழைய‌ இல‌ங்கை வீர‌ர்க‌ள் ந‌ல்ல‌ உய‌ர‌ம் ப‌ந்தை ச‌ரியா க‌னித்து அடிச்சு ஆட‌க் கூடிய‌ வீர‌ர்க‌ள்................இப்ப‌ இருக்கும் வீர‌ர்க‌ள் தேவை இல்லா ப‌ந்துக்கு எல்லாம் ப‌ட்ட‌ கொடுத்து சீக்கிர‌மே அவுட் ஆகின‌ம்..................இர‌ண்டாவ‌து தோல்விக்கு இல‌ங்கையின் முத‌ல் இனிங்சில் அவ‌ர்க‌ள் 200 ஓட்ட‌த்தை கூட‌ தாண்ட‌ வில்லை அண்ணா......................ச‌ண்டிமால் அஞ்ச‌லோ ம‌த்தியூஸ் இவ‌ர்க‌ளின் ஓய்வோடு இல‌ங்கை ரெஸ் அணி ச‌ரி..................தூர‌ நோக்கு பார்வையில் பார்த்தா இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் இல‌ங்கை ரெஸ் அணியில் ந‌ல்ல‌ வீர‌ர்க‌ள் இல்லை என்ப‌து வெளிச்ச‌ம் போட்டு காட்டுது...................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையை இன்னிங்ஸால் வீழ்த்திய நியூஸிலாந்து டெஸ்ட் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது

Published By: DIGITAL DESK 5

20 MAR, 2023 | 12:09 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் வெலிங்டன், பேசின் ரிசேர்வ் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மற்றும் இருதரப்பு தொடர்களின் 2ஆவதும் கடைசியுமான போட்டியில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 58 ஓட்டங்களால் நியூஸிலாந்து வெற்றிபெற்றது.

இந்த வெற்றியுடன் 2 போட்டிகள் கொண்ட தொடரை நியூஸிலாந்து 2 - 0 என முழமையாகக் கைப்பற்றியது.

மேலும் இந்தப் போட்டியுடன் 2021 - 2023 சுழற்சி காலத்துக்கான ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் லீக் சுற்று நிறைவுக்கு வந்தது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாளான இன்று திங்கட்கிழமை (20) காலை தனது 2ஆவது இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 113 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை, கடைசி விக்கெட்டை இழந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை 358 ஓட்டங்களாக இருந்தது.

3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 50 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்த குசல் மெண்டிஸும் ஒரு ஓட்டத்துடன் ஆட்டம் இழக்காமல் இருந்த ஏஞ்சலோ மெத்யூஸும் இன்று காலை துடுப்பாட்டத்தைத் தொடர்ந்தபோது அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

குசல் மெண்டிஸ் அதே எண்ணிக்கையில் ஆட்டம் இழந்ததுடன் ஏஞ்சலோ மெத்யூஸ் மேலும் ஒரு ஓட்டத்தை எடுத்து 2 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் இதே விளையாட்டரங்கில் நடைபெற்ற இரண்டு அணிகளுக்கும் இடையிலான 1ஆவது டெஸ்டின் 4ஆம் நாளன்று ஆட்டம் இழக்காமல் சதங்கள் குவித்து இலங்கையை தோல்வியிலிருந்து மீட்ட ஏஞ்சலோ மெத்யூஸும் குசல் மெண்டிஸும் இந்தப் போட்டியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததும் இலங்கையின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியாயிற்று.

356554.webp

அடுத்து ஜோடி சேர்ந்த தினேஷ் சந்திமாலும் தனஞ்சய டி சில்வாவும் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 126 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

தினேஷ் சந்திமால் 62 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

356553.webp

தொடர்ந்து தனஞ்சய டி சில்வாவும் நிஷான் மதுஷ்கவும் 6ஆவது விக்கெட்டில் 76 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஒரே மொத்த எண்ணிக்கையில் (318) இருவரும் ஆட்டம் இழந்தனர்.

நிஷான் மதுஷ்க 39 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 98 ஓட்டங்களையும் பெற்றனர்.

கசுன் ராஜித்த 2 மணித்தியாலங்களுக்கு மேல் துடுப்பெடுத்தாடி நியூஸிலாந்தின் வெற்றியைத் தாமதித்த வண்ணம் இருந்தார். 3ஆம் நாள் ஆட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்கள் நிறைவசெய்யப்பட்டிருந்தபோதிலும் இலங்கையின் கடைசி ஜோடி துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்ததால் போட்டியில் ஒரு முடிவை காணும்பொருட்டு மேலதிக நேரம் வழங்கப்பட்டது.

அதற்கு அமைய வீசப்பட்ட முதலாவது ஓவரின் கடைசிப் பந்தில் கசுன் ராஜித்த 20 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க நியூஸிலாந்து அபார வெற்றியீட்டியது.

எண்ணிக்கை சுருக்கம்

356570.webp

நியூஸிலாந்து 1ஆவது இன்: 580 - 4 விக். டிக்ளாயார்ட் (கேன் வில்லிம்சன் 215, டெவன் கொன்வே 78, ஹென்றி நிக்கல்ஸ் 200 ஆ.இ., கசுன் ராஜித்த 126 - 2 விக்.)

இலங்கை 1ஆவது இன்: 164 (திமுத் கருணாரட்ன 89, தினேஷ் சந்திமால் 37, மெட் ஹென்றி 44 - 3 விக்., மைக்கல் ப்றேஸ்வெல் 50 - 3 விக்.)

இலங்கை (ஃபலோ ஒன்) 2ஆவது இன்: 358 (தனஞ்சய டி சில்வா 98, தினேஷ் சந்திமால் 62, திமுத் கருணாரட்ன 51, குசல் மெண்டிஸ் 50, நிஷான் மதுஷ்க 39, கசுன் ராஜித்த 20, டிம் சௌதீ 51 - 3 விக்., ப்ளயார் டிக்னர் 84 - 3 விக்., மைக்கல் ப்றேஸ்வெல் 100 - 2 விக்.)

GettyImages-1290633561-1-.webp

ஆட்டநாயகன்: ஹென்றி நிக்கல்ஸ்.

Kane-Williamson.webp

தொடர்நாயகன்: கேன் வில்லியம்சன்.

download.jpg

https://www.virakesari.lk/article/150947

  • கருத்துக்கள உறவுகள்
Posted

டெஸ்ட் அணியின் தலைமை பொறுப்பிலிருந்து விலகுகின்றார் திமுத்

Published By: RAJEEBAN

20 MAR, 2023 | 01:29 PM
image

இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகவுள்ளதாக திமுத் கருணாரட்ண தெரிவித்துள்ளார்.

அயர்லாந்து அணியுடனான டெஸ்ட் தொடரின் பின்னர் தலைமைபொறுப்பிலிருந்து விலகவுள்ளதாக திமுத் தெரிவுக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/150961

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு நாள் தொட‌ரில் இல‌ங்கை தேர்வுக்குழு ந‌ல்ல‌ வீர‌ர்க‌ளை தெரிவு செய்து இருக்கின‌ம்................



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையின் கடல் எல்லைக்குள் வந்து எமது மீன்வளத்தைச் சூறையாடிவிட்டு, நேவி துரத்துகிறது என்று இந்தியக் கடல் எல்லைக்குள் ஓடி ஒளிந்துவிட்டு மீண்டும் நேவி அகன்றவுடன் இலங்கை எல்லைக்குள் வந்து மீண்டும் சூறையாடலில் ஈடுபடுவார்களாம். இவர்கள் பண முதலைகள். அரசியல் செல்வாக்குள்ளவர்கள். இவர்களுக்கும் சாதாரண தமிழ் நாட்டு மீனவர்களுக்கும் தொடர்பில்லை. இதனை தடுப்பதைத்தவிர வேறு வழியில்லை. இவர்களின் கடற்கலங்கள் அழிக்கப்பட்டால் ஒழிய இவர்கள் நிற்கப்போவதில்லை.  இதற்கு இனச்சாயம் பூசத்தேவையில்லை. கடற்கொள்ளை கடற்கொள்ளைதான். 
    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
    • யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!     யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://jaffnazone.com/news/47018#:~:text=யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட,5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&text=இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.