Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெருக்களில் கூடிய லட்சக்கணக்கான மக்கள் - இஸ்ரேல் அரசு வரலாறு காணாத எதிர்ப்பை சந்திப்பது ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தெருக்களில் கூடிய லட்சக்கணக்கான மக்கள் - இஸ்ரேல் அரசு வரலாறு காணாத எதிர்ப்பை சந்திப்பது ஏன்?

இஸ்ரேல் அரசு வரலாறு காணாத எதிர்ப்பை சந்திப்பது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ஜார்ஜ் ரைட்
  • பதவி,பிபிசி நியூஸ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

நீதித்துறை அமைப்பை மாற்றியமைப்பதற்கான அரசாங்கத் திட்டங்களுக்கு எதிராக லட்சக்கணக்கான இஸ்ரேலியர்கள் அணி திரண்டுள்ளனர். இது அந்த நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய போராட்டம் என்று அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்த மாற்றங்கள், நீதிமன்றங்களின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் என்றும், அரசாங்கத்தின் கிளைகளுக்கு இடையே சமநிலையை மீட்டெடுக்கும் என்றும் கூறுகிறார். ஆனால் அது, ஜனநாயகத்தை அச்சுறுத்துவதாக எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.

சனிக்கிழமை நடைபெற்ற பேரணி ஒன்றில், எதிர்க்கட்சித் தலைவர் யேர் லேபிட் இது இஸ்ரேலின் "மிகப்பெரிய நெருக்கடி" என்று கூறினார்.

இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை மேற்குக் கரை நகரமான நப்லஸ் அருகே இஸ்ரேலிய துருப்புகள் மூன்று ஆயுதம் ஏந்திய பாலஸ்தீனியர்களை சுட்டுக் கொன்றதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

 

ஆயுததாரிகள் இஸ்ரேலிய ராணுவ தளவாடம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இஸ்ரேலிய ராணுவம் கூறியது. இந்தச் சம்பவம் குறித்து பாலஸ்தீன அதிகாரிகள் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

கடந்த சில மாதங்களாக பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.

சனிக்கிழமையன்று, 5,00,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் இஸ்ரேல் முழுவதும் தெருக்களில் இறங்கியதாக ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இதை ஹாரெட்ஸ் செய்தித்தாள் "நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம்" என்று அழைத்தது.

டெல் அவிவ் நகரில் சுமார் 2,00,000 பேர் திரண்டிருந்தனர், பலர் இஸ்ரேலின் தேசியக் கொடியை ஏந்தியிருந்தனர்.

நகர அணிவகுப்பில் பங்கேற்ற தமிர் கைட்சப்ரி, "இதுவொரு நீதித்துறை சீர்திருத்தம் அல்ல. இதுவொரு புரட்சி, இது இஸ்ரேலை முழு சர்வாதிகாரத்திற்குக் கொண்டு செல்கிறது. இஸ்ரேல் எனது குழந்தைகளுக்கான ஜனநாயகமாக இருக்க விரும்புகிறேன்," என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறினார்.

இஸ்ரேல் அரசு வரலாறு காணாத எதிர்ப்பை சந்திப்பது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

பேரணி வழியாகச் சென்ற காவல்துறைத் தலைவர் அமிச்சாய் எஷெட்டை எதிர்ப்பாளர்கள் கைதட்டிப் பாராட்டினர்.

பிதமர் நெதன்யாகுவின் அரசாங்கம் முன்னதாக மாவட்டத் தளபதியை நீக்க முயன்றது. ஆனால் அந்த நடவடிக்கை நாட்டின் அட்டர்னி ஜெனரலால் தடுக்கப்பட்டது.

சனிக்கிழமையன்று, 50,000 பேர் கொண்ட ஒரு கூட்டம், வடக்கு நகரமான ஹைஃபாவில் அணிவகுத்துச் சென்றது. இது அரசாங்கத் திட்டங்களுக்கு எதிரான நாடு தழுவிய போராட்டத்தின் 10வது வாரம்.

தெற்கு நகரமான பேவர் ஷேவாவில் பேசிய எதிர்கட்சித்தலைவர் லபிட், நாடு முன்னோடியில்லாத நெருக்கடியை எதிர்கொள்கிறது என்று எச்சரித்தார்.

"பயங்கரவாத அலை நம்மைத் தாக்குகிறது, நமது பொருளாதாரம் வீழ்ச்சியடைகிறது, பணம் நாட்டைவிட்டு வெளியேறுகிறது. இரான் நேற்று சௌதி அரேபியாவுடன் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால் இந்த அரசாங்கம் இஸ்ரேலிய ஜனநாயகத்தை நசுக்குவதில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது," என்று அவர் கூறினார்.

புதிய சீர்திருத்தங்கள், நீதிபதிகளைத் தேர்ந்தெடுப்பதில் அரசாங்கத்திற்கு தீர்க்கமான செல்வாக்கைக் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. மேலும், நிர்வாகத்திற்கு எதிராக தீர்ப்பளிக்கும் அல்லது சட்டத்தை முறியடிக்கும் உச்ச நீதிமன்றத்தின் திறனைக் கட்டுப்படுத்துகின்றன.

இஸ்ரேல் அரசு வரலாறு காணாத எதிர்ப்பை சந்திப்பது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தப் பிரச்னை இஸ்ரேலிய சமுதாயத்தில் ஆழமான பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலிய ராணுவத்தின் முதுகெலும்பாகத் திகழும் ரிசர்வ் படையினர், தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாக, பணிக்குச் செல்வதைத் தவிர்க்க உள்ளதாக மிரட்டி வருகின்றனர்.

கடந்த திங்கட்கிழமை, எதிர்பாராத நடவடிக்கையாக ஓர் உயரடுக்கு இஸ்ரேலிய விமானப்படை பிரிவில் உள்ள டஜன் கணக்கான ரிசர்வ் போர் விமானிகள் தாங்கள் பயிற்சிக்கு வரப்போவதில்லை என்று கூறினர். பின்னர் அவர்கள் போக்கை மாற்றிக் கொண்டு தங்கள் தளபதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டனர்.

வியாழன் அன்று, சாலைகளை மறித்த எதிர்ப்பாளர்கள், நெதன்யாகு நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தடுக்க முயன்றனர். பின்னர் அவர் ரோம் புறப்பட்டார்.

அரசியல் எதிரிகளால் போராட்டங்கள் தூண்டிவிடப்படுவதாகக் கூறி, சலசலப்பை எதிர்கொள்வதில் இஸ்ரேலிய அரசாங்கம் உறுதியாக நிற்கிறது.

ஏற்கெனவே, நாடாளுமன்றம் வழியாகச் செல்லத் திட்டமிட்ட சீர்திருத்தங்கள் நீதித்துறையை அரசியலாக்கும் சர்வாதிகார அரசாங்கத்திற்கு வழிவகுக்கும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஆனால், நீதிமன்றங்கள் தங்கள் அதிகாரங்களை மீறுவதைத் தடுக்கும் வகையில் சீர்திருத்தங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் கடந்த தேர்தலில் அவை இஸ்ரேலிய மக்களால் வாக்களிக்கப்பட்டதாகவும் நெதன்யாகு கூறுகிறார்.

https://www.bbc.com/tamil/articles/cld1wnnppp3o

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலிய நீதித்துறை மறுசீரமைப்புக்கு எதிராக லட்சக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்: பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கம்

Published By: SETHU

27 MAR, 2023 | 11:06 AM
image

இஸ்ரேலில் சர்ச்சைக்குரிய நீதித்துறை மறுசீரமைப்புத் திட்டத்துக்கு எதிராக கரது;துத் தெரிவித்த பாதுகாப்பு அமைசச்ர் யொவாவ் கலன்ட்டை பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு பதவியிலிருந்து நீக்கியுள்ளார். 

அதையடுத்து, லட்சக்கணக்கான மக்கள் இம்மறுசீரமைப்புத் திட்டத்துக்கு எதிராக டெல்அவிவ் நகரில்  ஆர்ப்பாங்களில் ஈடுபட்டனர்.

இம்மறுசீரமைப்புத் திட்டம் பிரிவினைகளை ஏற்படுத்துவதாhல் அத்திட்டத்தை ஒரு மாதத்துக்கு நிறுத்திவைக்க வேண்டும் என கலன்ட் கூறினார். 

அதையடுத்தே பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து அவர் நேற்று நீக்கப்பட்டுள்ளார். பிரதமர் நெத்தன்யாஹுவின் நெருக்கிய சகாவாக கலன்ட் விளங்கியமை குறிப்பிடத்தக்கது.

உத்தேச மறுசீரமைப்புத் திட்டடமானது நீதித்துறை செயற்பாடுகளில் உச்சநீதிமன்றத்தின் அதிகாரத்தை குறைத்து, அரசியல்வாதிகளுக்கு அதிக கட்டுப்பாட்டு அதிகாரத்தை வழங்குகிறது. இஸ்ரேலின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா உட்பட இது குறித்து கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்கத்கது.

https://www.virakesari.lk/article/151474

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

உத்தேச மறுசீரமைப்புத் திட்டடமானது நீதித்துறை செயற்பாடுகளில் உச்சநீதிமன்றத்தின் அதிகாரத்தை குறைத்து, அரசியல்வாதிகளுக்கு அதிக கட்டுப்பாட்டு அதிகாரத்தை வழங்குகிறது

நெத்தன்யாகு இன்னுமொரு யே.ஆர் ஆகவர முயற்சிக்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nochchi said:

நெத்தன்யாகு இன்னுமொரு யே.ஆர் ஆகவர முயற்சிக்கின்றார்.

என்ன இப்பிடிச் சொல்லிப் போட்டீங்கள்? வலதுசாரி நெரன்யாஹுவுக்கு விசிறிகள் மன்றம் அமைக்க எங்கள் ஆட்கள் கிளம்பி விடப் போகிறார்கள்!😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரதமருக்கு எதிராக வீதிகளில் திரளும் மக்கள் - வரலாறு காணாத நெருக்கடியில் இஸ்ரேல் சிக்க என்ன காரணம்?

இஸ்ரேல், போராட்டம்

பட மூலாதாரம்,REUTERS

27 மார்ச் 2023

வரலாறு காணாத வகையில் மிகப்பெரும் உள்நாட்டு நெருக்கடிகளின் பிடியில் தற்போது சிக்கித் தவித்து வருகிறது இஸ்ரேல்.

தன் நாட்டின் நீதி அமைப்புகள் செயல்படும் திட்ட வடிவமைப்புகளில் இஸ்ரேல் அரசாங்கம் மேற்கொண்ட சில மாற்றங்களே, நாட்டில் இத்தகைய சலசலப்புகள் அதிகரிப்பதற்குக் காரணமாய் அமைந்தன.

இஸ்ரேலில் என்னதான் நடக்கிறது, வரலாறு காணாத உள்நாட்டு நெருக்கடி நிலவ என்ன காரணம் என்பதைத் தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவலாம்.

இஸ்ரேலில் என்ன நடக்கிறது?

இந்த ஆண்டு துவக்கத்திலிருந்தே, அடுத்தடுத்த வாரங்களில் அரசாங்கத்தின் மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து மக்களால் போராட்டம் நடத்தப்பட்டு வந்தது.

 

இஸ்ரேலின் முக்கியப் பகுதியான டெல் அவிவ் தெருக்களில், நூற்றுக்கணக்கான மக்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தபோது, பிரச்னை பூதாகரமானது. வணிகரீதியாக இது இஸ்ரேலின் முக்கியப் பகுதியாகக் கருதப்படுகிறது. பிற நகரங்களும் மற்ற சிறுநகரப் பகுதிகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படுவதற்கும் இதுவே மையப்புள்ளியாக இருந்து செயல்படுகிறது.

அரசாங்கத்தின் இந்த மறுசீரமைப்பு மசோதா அகற்றப்பட வேண்டுமெனவும் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக வேண்டுமெனவும் அவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசியல் மறுசீரமைப்பு மசோதாக்கள், மக்களிடையே மிகப் பெரும் எதிர்ப்புகளைச் சந்தித்து வரும் சூழலில், அவரது அரசியல் எதிரிகளும் இதை ஆயுதமாகப் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.

இது அனைத்தையும்விட, மிகப் பெரும் எண்ணிக்கையில் வளர்ந்து வரும் இஸ்ரேலின் ராணுவம் அந்நாட்டின் பெரும் பலமாகவும் முதுகெலும்பாகவும் கருதப்படுகிறது. இந்த நிலையில், இஸ்ரேல் ராணுவத்தினரும் பணியில் சேர மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது அந்நாட்டின் பாதுகாப்பிற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

இஸ்ரேல், போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மக்களின் எதிர்ப்பிற்கு காரணம் என்ன?

நெதன்யாகுவின் இந்த மறுசீரமைப்பு மசோதா நாட்டின் ஜனநாயகத்தை பாதிக்கிறது என அவரது எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.

“அவரது இந்த மறுசீரமைப்பு மசோதாக்கள், நீதித்துறையை நலிவடையச் செய்கிறது. வரலாற்றுரீதியாகப் பார்க்கும்போது, அரசாங்கம் தனது அதிகாரத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில் செயல்பட்டு வருவதாகவே நாம் இதைப் பார்க்கவேண்டும்,” என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதன் காரணமாகவே மக்கள் கடுமையான எதிர்ப்புகளை தற்போது பதிவு செய்து வருகின்றனர். இஸ்ரேலில் ஆட்சியிலிருந்த அரசாங்கங்களுக்கு எதிராக இதுவரை நடத்தப்பட்ட எதிர்ப்புகளிலேயே, தற்போது நிகழ்ந்து வரும் போராட்டங்கள்தான் கடுமையானதாகப் பார்க்கப்படுகிறது. பிரதமர் நெதன்யாகுவும் தன்னுடைய அரசியல் வாழ்வில் இதுவரை சந்தித்திராத மோசமான எதிர்வினைகளை எதிர்கொண்டு வருகிறார்.

"தற்போது அவர் சீரமைத்திருக்கும் மசோதாக்கள், அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தன்னைத் தானே அவர் காத்துக்கொள்வதற்கு உதவியாக இருக்கும். அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளை நெதன்யாகு மறுத்து வரும் நிலையில், இஸ்ரேலில் சில குறிப்பிட்ட மறுசீரமைப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன,” என்று அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

மறுசீரமைக்கப்பட்ட மசோதாக்கள் என்னென்ன?

இஸ்ரேல், போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மறுசீரமைக்கப்பட்ட மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாக அரசாங்கம் தரப்பில் கூறப்பட்டு வந்தாலும், உண்மையில் இந்த மறுசீரமைப்புத் திட்டங்கள் புழக்கத்திற்கு வரும் எல்லைகளைத் தொட்டுவிட்டதாகவே கூறப்படுகிறது.

குறிப்பாக இஸ்ரேல் அரசாங்கத்தின் அதிகாரங்களை அந்நாட்டின் நீதித்துறையின் அதிகாரங்களுக்கு நிகராக மாற்றியமைக்கும் முயற்சியில் அந்நாட்டு அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.

அரசாங்கத்தின் தற்போதைய திட்ட வடிவங்களின் படி

  • உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை மறுபரிசீலனை செய்வதற்கோ அல்லது அதை நீக்குவதற்கோ, அரசாங்கம் நெசட்டில் (பாராளுமன்றத்தில்) வாக்கெடுப்பு நடத்துவதன் மூலம் அதை எளிதாகச் சாத்தியப்படுத்த முடிகிறது.
  • யார் நீதிபதிகளாக உருவாக வேண்டும் என்பதை முடிவெடுக்கும் குழுவில், அரசு தன்னுடைய பிரதிநிதிகளை அதிகப்படுத்துகிறது. இதன் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம்கூட மறைமுகமாக அரசாங்கத்தின் கைகளுக்கு செல்கிறது.
  • அட்டர்னி ஜெனரலின் (அரசு தலைமை வழக்கறிஞர்) கீழ் செயல்பட்டு வரும், சட்ட ஆலோசகர்கள் வழங்கும் ஆலோசனையை அமைச்சர்கள் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் விதிகளின்படி அவர்கள் சட்ட ஆலோசகர்களின் ஆலோசனையைக் கேட்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே இதில் ஒரு மறுசீரமைப்பு மசோதா, சட்டமாக அமலுக்கு வந்துவிட்டது. பிரதமரையே தகுதி நீக்கம் செய்யும் அதிகாரமுடைய அட்டர்னி ஜெனரலின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு விட்டன.

தன்நிலையிலிருந்து அரசாங்கம் பின்வாங்குமா?

இஸ்ரேல், போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நாட்டில் நடந்து வரும் போராட்டங்களுக்கு நெதன்யாகு தன்னுடைய எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகிறார். போராட்டங்களை வழிநடத்தி வரும் போராட்டக்குழு தலைவர்களை, ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு சதி செய்து வரும் சதிகாரர்களாகச் சித்தரித்து குற்றம் சுமத்தி வருகிறார்.

அதேநேரம் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் மறுசீரமைப்புத் திட்டங்களில் மாற்றம் செய்வதற்கு, அரசாங்கத்தின் சார்பில் முன்மொழியப்பட்ட விவகாரங்களை எதிர்கட்சிகள் நிராகரித்துள்ளன.

பேச்சுவார்த்தைக்குள் நுழைவதற்கு முன்பாகவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அவர்கள் கூறி வருகின்றனர். முன்னதாக சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்த குடியரசுத் தலைவரின் அழைப்பை அரசாங்கம் நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நீதித்துறை சீர்திருத்தங்களை வாக்குறுதிகளின் அடிப்படையில் வாக்காளர்களே தேர்ந்தெடுத்ததாகவும், தற்போது அவர்களே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது ஜனநாயகத்திற்கு விரோதமானது எனவும் இஸ்ரேல் அரசாங்கம் கூறி வருகிறது.

அதேபோல் நீதித்துறை இதுவரை மிகவும் தாராளமான அளவிற்கு சுதந்திரமாகச் செயல்பட்டு வந்தது எனவும், பிரதிநிதிகளின் முக்கியத்துவம் இல்லாமல் நீதிபதிகள் நியமிக்கப்பட்டு வந்தனர் எனவும் அரசாங்கம் வாதிடுகிறது.

இத்தகைய நிலையில், இஸ்ரேல் அரசாங்கத்தின் மீதான அழுத்தம் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக நெதன்யாகுவின் சொந்த பாதுகாப்புத்துறை அமைச்சரே, தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் மறுசீரமைப்பு மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

இதுபோன்ற செயல்கள், இஸ்ரேலின் குடியரசு தலைவர் அவரைத் தகுதி நீக்கம் செய்வதற்கான முடிவை எடுப்பதற்குத் தூண்டுதலாக அமைந்து வருவதாகக் கூறப்படுகிறது.

https://www.bbc.com/tamil/articles/cv2j40wekk9o

  • கருத்துக்கள உறவுகள்

நீதித்துறை மறுசீரமைப்பு திட்டத்தை நிறுத்துமாறு இஸ்ரேலிய ஜனாதிபதி அரசாங்கத்திற்கு அழைப்பு !

நீதித்துறை மறுசீரமைப்பு திட்டத்தை நிறுத்துமாறு இஸ்ரேலிய ஜனாதிபதி அரசாங்கத்திற்கு அழைப்பு !

தனது நீதித்துறை மறுசீரமைப்பு திட்டத்தை சவால் செய்ததற்காக அவரது பாதுகாப்பு அமைச்சரை, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திடீரென பதவி நீக்கம் செய்துள்ளார்.

இதற்கு எதிராக பல்லாயிரக்கணக்கான போராட்டக்கார்கள் இஸ்ரேல் முழுவதும் உள்ள நகரங்களில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெதன்யாகுவின் வீட்டிற்கு அருகே ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் மற்றும் இராணுவ வீரர்கள் நீர் தரைப் பிரயோகத்தையும் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இஸ்ரேல் மக்களின் ஒற்றுமைக்காக சீர்திருத்த நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலின் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் வலியுறுத்தியுள்ளார்.

நீதித்துறை மறுசீரமைப்பை இடைநிறுத்த முடிவு செய்தால் கட்சி அவருக்கு ஆதரவளிக்கும் என கலாச்சார அமைச்சர் மிக்கி சோஹர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நெதன்யாகுவின் கூட்டணியில் உள்ள தலைவர்கள் இன்று திங்கட்கிழமை காலை சந்திக்க உள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேநேரம் அபிவிருத்திகள் குறித்து ஆழ்ந்த கவலையடைவதாகவும், சமரசத்திற்கு அழைப்பு விடுத்ததாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.

https://athavannews.com/2023/1328665

  • 3 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலின் சர்ச்சைக்குரிய நீதித்துறை மறுசீரமைப்பு சட்டமூலத்துக்கு பாராளுமன்றம் அங்கீகாரம்

Published By: SETHU

25 JUL, 2023 | 09:46 AM
image
 

இஸ்ரேலில் சர்ச்சைக்குரிய, நீதித்துறை மறுசீரமைப்பு சட்டமூலத்துக்கு  அந்நாட்டுப் பாராளுமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது.

இஸ்ரேலிய அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கு எதிராக உத்தரவிடும் உச்சநீதிமன்றத்தின் அதிகாரங்களைக் இச்சட்டம் கட்டுப்படுத்துகிறது.

இந்த சட்டத்துக்கு எதிராக இஸ்ரேலில் பல மாதங்களாக பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருவதுடன் அமெரிக்கா, ஜேர்மனி முதலான நாடுகளும் கவலை தெரிவித்துள்ளன.

நீதிமன்றத்தின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் மேற்கொள்ளப்படவுள்ள பல சட்டமறுசீரமைப்பு நடவடிக்கைகளில் முதலாவதாக இது இச்சட்டமூலம் அமைந்துள்ளது.

பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவும் அவரின் கூட்டணி அரசாங்கமும் பாராளுமன்றத்தில் நேற்று இச்சட்டமூலத்துக்கு அங்கீகாரம் அளித்தனர். அதேவேளை, எதிர்க்கட்சிகள் வாக்கெடுப்பை பகிஷ்கரித்தனர். எம்.பிகளில் சிலர் வெட்கம், வெட்கம் என கோஷமிட்டனர். 

120 எம்.பிகளைக் கொண்ட இஸ்ரேலிய பராளுமன்றத்தில் இச்சட்டமூலத்துக்கு ஆதரவாக 64 பேர் வாக்களித்தனர்.

இச்சட்டமானது எதேச்சதிகார அரசாங்கத்தை உருவாக்குவதற்கு வழிவகுக்கும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஆனால், நீதித்துறைக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான சமநிலையை ஏற்படுத்துவதற்கு இச்சட்டம் அவசியம் என இஸ்ரேலிய அரசாங்கம் கூறுகிறது.

இச்சட்ட மறுசீரமைப்பானது இஸ்ரேலிய ஜனநாயகத்தின் தோல்வியாகும் என எதிர்க்கட்சித் தலைவர் யாயிர் லபிட், பாராளுமன்றத்தில் நேற்று விமர்சித்தார்.

https://www.virakesari.lk/article/160844

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.