Jump to content

Recommended Posts

Posted

ம்... ஏன் உலகமே திரண்டு ஈழத்தமிழருக்கு எதிராக கங்கணம் கட்டி நிற்கிறது ? நடப்பது எல்லாமே எங்களுக்கு மட்டும் ஏன் பாதகமாகவே உள்ளது ?  😜

நல்ல வேளை, எங்களுக்குச் சிரித்து மகிழ உக்ரெய்ன் என்ற கோமாளி நாடும் அதற்கு முண்டு கொடுக்கும் மேற்கையும் திட்டித் தீர்க்க யாழ்களமும் உள்ளதால் ஓரளவாவது மனநிம்மதி அடைவோம். 😎

  • Like 1
  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, கிருபன் said:

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தாத சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகள் - ஹரி ஆனந்தசங்கரி

Published By: T. Saranya

22 Mar, 2023 | 03:31 PM
image

(நா.தனுஜா)

இலங்கைக்கான நிதியுதவிச்செயற்திட்டத்துக்கு அனுமதியளித்திருக்கும் சர்வதேச நாணய நிதியம், அதனை முன்னிறுத்தி நிறைவேற்றப்படவேண்டிய நிபந்தனைகளில் இலங்கையில் இடம்பெற்ற மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தாமை தமக்கு மிகுந்த அதிருப்தியளிப்பதாக கனேடியப் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டத்தின்கீழ் எதிர்வரும் 48 மாதகாலத்தில் இலங்கைக்கு சுமார் 3 பில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை கடந்த திங்கட்கிழமை (20) அனுமதியளித்துள்ளது.

அதனையடுத்து சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் தமிழ்மக்கள் சார்ந்து கவனத்திற்கொள்ளப்படவேண்டிய விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டும் நோக்கில் செவ்வாய்கிழமை (21) கனடாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே ஹரி ஆனந்தசங்கரி மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையானது அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் ஸ்திரமற்ற, வங்குரோத்து நிலையிலுள்ள நாடாக மாறியிருக்கின்றது.

சுமார் ஒருவருடகாலத்திற்கு முன்னர் உணவு, எரிபொருள் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களுக்கான தட்டுப்பாட்டுடன் இலங்கையின் பொருளாதாரம் மிகமோசமடைந்தது. அது நாடளாவிய ரீதியில் பாரிய மக்கள் எதிர்ப்புப்போராட்டங்களுக்கு வழிகோலியதுடன், அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் பதவி விலகவேண்டிய நிலையைத் தோற்றுவித்தது. அதனைத்தொடர்ந்து ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்டார்.

இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த ஆண்டு செப்டம்பர் முதலாம் திகதி சர்வதேச நாணயத்துடன் உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்ட நிலையில், இலங்கைக்கான உதவிச்செயற்திட்டத்துக்குக் கடந்த திங்கட்கிழமை சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்சபை அனுமதியளித்துள்ளது.

அதன்படி இவ்வுதவிச்செயற்திட்ட இணக்கப்பாடு தொடர்வதற்கு இலங்கை பல்வேறு நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யவேண்டியுள்ளது.

ஆனால் சர்வதேச நாணய நிதியத்தினால் முன்மொழியப்பட்டுள்ள நிபந்தனைகளில் இலங்கையில் இடம்பெற்ற மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படாமை எம்மத்தியில் கடும் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது.

குறிப்பாக இலங்கையில் நீண்டகாலமாக நிலவும் அரசியல் பிரச்சினைக்கு உரியவாறான தீர்வு வழங்கப்படுவதுடன், வடக்கு - கிழக்கு மக்களின் சுயநிர்ணய உரிமையும், பொருளாதாரத்துடன் தொடர்புடைய விவகாரங்களைத் தீர்மானிப்பதற்கான அதிகாரமும் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதேவேளை இச்சந்திப்பில் கருத்துவெளியிட்ட இலங்கையில் சமத்துவம் மற்றும் விடுதலைக்கான மக்கள் அமைப்பின் (பேர்ள்) பிரதிநிதி, வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தொடரும் மனித உரிமை மீறல்கள், அதிகரித்த இராணுவமயமாக்கம், காணி அபகரிப்பு, தொல்பொருள் திணைக்களத்தின் முறையற்ற செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டியதுடன் அவை முடிவுக்குக்கொண்டுவரப்படவேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார். 

 

https://www.virakesari.lk/article/151155

புலம்பெயர் தமிழர்கள் Gary யின் கீழ் ஒரு அமைப்பாக திரெண்டால் என்ன?

நமக்கு நாமே தேர்தல் வைக்கும் கோமாளித்தனத்தை எல்லாம் நம்பமாட்டார்கள்.

ஆனால் மேற்கு நாட்டு முறைகளில் தேர்வாகிவருபவர்களுக்கு ஒரு கனம் இருக்கும்.

குறைந்தபட்சம்,

உலகளாவிய தமிழின மரபு வழி, தேர்வு செய்யப்பட்ட அதிகாரிகள் அமைப்பு (Elected Officials of Tamil Origin, from across the globe) ஒன்றைவாது ஸ்தாபித்து முன் நகரலாம்.

அதில் சாதாரண ஹரோ நகரசபை உறுப்பினர் முதல், கனேடிய பெடரல் பாராளுமன்ற உறுப்பினர் வரை சேர்ந்து கொண்டு ஒரு பொது வேலைத்திட்டத்தை முன்னெடுக்கலாம்.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
31 minutes ago, இணையவன் said:

ம்... ஏன் உலகமே திரண்டு ஈழத்தமிழருக்கு எதிராக கங்கணம் கட்டி நிற்கிறது ? நடப்பது எல்லாமே எங்களுக்கு மட்டும் ஏன் பாதகமாகவே உள்ளது ?  😜

நல்ல வேளை, எங்களுக்குச் சிரித்து மகிழ உக்ரெய்ன் என்ற கோமாளி நாடும் அதற்கு முண்டு கொடுக்கும் மேற்கையும் திட்டித் தீர்க்க யாழ்களமும் உள்ளதால் ஓரளவாவது மனநிம்மதி அடைவோம். 😎

உக்ரேன் போருக்கு முதல் யாழ்களத்தில் யாராவது மேற்குலகை திட்டி தீர்த்துக்கொண்டிருந்தார்களா?
அப்படியேதும் எழுதியிருந்தால் இங்கே இணைத்து விடுங்கள்.

மற்றவர்களை பார்த்து திரும்பத் திரும்ப ஒன்றையே சொல்கிறீர்கள் என குற்றம் சாட்டும் நீங்களும் அதையே செய்கின்றீர்கள்.
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
47 minutes ago, குமாரசாமி said:

உக்ரேன் போருக்கு முதல் யாழ்களத்தில் யாராவது மேற்குலகை திட்டி தீர்த்துக்கொண்டிருந்தார்களா?
அப்படியேதும் எழுதியிருந்தால் இங்கே இணைத்து விடுங்கள்.

மற்றவர்களை பார்த்து திரும்பத் திரும்ப ஒன்றையே சொல்கிறீர்கள் என குற்றம் சாட்டும் நீங்களும் அதையே செய்கின்றீர்கள்.
 

அவருக்கு எட்டியது அவ்வளவுதான்🤔

1 hour ago, இணையவன் said:

உக்ரெய்ன் என்ற கோமாளி நாடும் அதற்கு முண்டு கொடுக்கும் மேற்கையும் திட்டித் தீர்க்க யாழ்களமும் உள்ளதால் ஓரளவாவது மனநிம்மதி அடைவோம். 😎

ஆகா பொன்னான வார்த்தைகள், கோமாளி என்ற உக்ரைனும் அதனை முட்டுக்கொடுக்கும் மேற்குலகும், இப்படி வெளிப்பட்டையாக ஒரு மட்டுத்தினரே ஒப்பு கொள்ளும் போது, நம் பதிந்தால் மட்டும் நீக்குவது ஏனோ மட்டுறுத்தினரே, எனக்கு தெரியிம் இதையும் நீக்கி விடுவீர்களென்று😎😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, இணையவன் said:

யாழ்களமும் உள்ளதால் ஓரளவாவது மனநிம்மதி அடைவோம்

இது 100% உண்மை யாழ்களமிருப்பதால் எனக்கு நிம்மதி🙏🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, goshan_che said:

நான் தயார். 

என்னை ஒரு உதாரணமாகத்தான் சொன்னேன். இதே கேள்விக்கு அனைவரின் பதிலும் தயார் என்றே இருக்கும் என நினைக்கிறேன்.

பார்த்தீர்களா 

சிரித்து விட்டு போகிறார்கள்

அப்புறம் ஆயுதயுத்தம் இனி இல்லை அறிவு யுத்தம் என்கிறார்கள்

சொல்லுக்கும் செயலுக்குமான வித்தியாசத்தை யாழ் களம் அறியணும் என்பதற்காகவே இதை எழுதினேன். உங்கள் பெயரை களங்கப்படுத்தி இருந்தால் மன்னித்தருள்க.🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, விசுகு said:

பார்த்தீர்களா 

சிரித்து விட்டு போகிறார்கள்

அப்புறம் ஆயுதயுத்தம் இனி இல்லை அறிவு யுத்தம் என்கிறார்கள்

சொல்லுக்கும் செயலுக்குமான வித்தியாசத்தை யாழ் களம் அறியணும் என்பதற்காகவே இதை எழுதினேன். உங்கள் பெயரை களங்கப்படுத்தி இருந்தால் மன்னித்தருள்க.🙏

நிச்சயமாக இல்லை.

70, 80 ஆண்டின் பதின்ம வயதினர் ஒற்றுமை படாமையால் வந்த அழிவை விமர்சிக்கும் 90களின் பதின்ம வயதினாகிய நான்….

ஒரு கருத்துகளத்தில் கூட ஈகோ, சில்லறை சண்டையை விட்டு கொடுக்க முடியாதவனாக இருப்பின்…

அவர்களை பற்றி கதைக்கும் அருகதையை முற்றாக இழந்தவனாவேன்.

உங்கள் கேள்வி மிக நியாமானதும், காலத்தின் தேவை கருதி அவசியமானதும் ஆகும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, goshan_che said:

நிச்சயமாக இல்லை.

70, 80 ஆண்டின் பதின்ம வயதினர் ஒற்றுமை படாமையால் வந்த அழிவை விமர்சிக்கும் 90களின் பதின்ம வயதினாகிய நான்….

ஒரு கருத்துகளத்தில் கூட ஈகோ, சில்லறை சண்டையை விட்டு கொடுக்க முடியாதவனாக இருப்பின்…

அவர்களை பற்றி கதைக்கும் அருகதையை முற்றாக இழந்தவனாவேன்.

உங்கள் கேள்வி மிக நியாமானதும், காலத்தின் தேவை கருதி அவசியமானதும் ஆகும்.

அதே

நன்றி தம்பி. 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் மக்களுக்கு அவசியமான ஆதரவினை இந்தியா வழங்கவேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை! சமஷ்டி அரசியலமைப்பைக் கோருவதற்குத் தமிழ் மக்களுக்கு அவசியமான ஆதரவினை இந்தியா வழங்கவேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரியுள்ளது.  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்றைய தினம் இந்தியா செல்லவுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.  75 வருட காலமாகப் பின்பற்றப்பட்டுவந்த கொள்கை மற்றும் தீர்வு காணப்படாத இனப்பிரச்சினை என்பன பொருளாதார ரீதியில் மாத்திரமன்றி, அரசியல் ரீதியிலும் வங்குரோத்து நிலைக்கு இலங்கையைக் கொண்டுவந்துள்ளன.  எனவே, நாட்டின் எதிர்காலம் சிறப்பாக இருக்கவேண்டுமாயின், எதிர்காலத்தை முன்னிறுத்திய கொள்கைகளும் முன்னரைக் காட்டிலும் மாறுபட்டவையாக இருக்கவேண்டும்.  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட ஆணையானது 'முழுமையான கட்டமைப்பு மாற்றத்தைக் கோருவதாக அமைந்திருப்பதுடன், இதுவரை காலமும் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறைகள் இனிமேல் பொருந்தாது என்பதையும் காண்பித்திருக்கிறது.  இந்நிலையில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சி அரச கட்டமைப்பு பிரதான காரணமாகும்.  13 ஆவது திருத்தத்தை ஏற்பதன் மூலம் தமிழர்கள் ஒற்றையாட்சி அரசியலமைப்பை அங்கீகரித்திருப்பதனால் இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை என்ற நிலைப்பாட்டுக்கு இலங்கை அரசு வரக்கூடும்.  ஆகையினாலேயே 13 ஆம் திருத்தத்தை ஏற்க மறுப்பதுடன், ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்கு அப்பால் செல்வதன் ஊடாகவே தீர்வை அடைந்துகொள்ளமுடியும் என்ற விடயத்தைப் பெரும்பான்மை தலைமைகள் மக்களிடம் கூற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.  தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது 2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவின் இடைக்கால முன்மொழிவுகளை பூரணப்படுத்துவதாக வாக்குறுதியளித்திருக்கிறது.  இருப்பினும் இந்த முன்மொழிவுகள் பொதுவில் 'ஏக்கிய இராச்சிய' முன்மொழிவு என அடையாளப்படுத்தப்படுவதுடன், அது ஒற்றையாட்சி அரசைக் குறிக்கிறது.  இவ்வாறானதொரு பின்னணியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவிடம் ஒருமித்த இலங்கைக்குள் சிங்கள மற்றும் தமிழ்த் தேசியத்தை அங்கீகரிக்கக் கூடியவாறான சமஷ்டி கட்டமைப்பு தொடர்பான எமது முன்மொழிவுகளை சமர்ப்பித்தோம்.  இலங்கை நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த வேளையில் உதவிக்கரம் தீட்டியதன் ஊடாக பெரும்பான்மையான சிங்கள மக்கள் மத்தியில் இந்தியா நன்மதிப்பைப் பெற்றிருக்கிறது.  எனவே இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்கு உட்பட்ட முன்மொழிவுகளை நிராகரிப்பதற்கும், அதற்குப் பதிலாகத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கூடியவாறான சமஷ்டி அரசியலமைப்பைக் கோருவதற்கும் தமிழ் மக்களுக்கு அவசியமான ஆதரவினை இந்தியா வழங்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது.   https://www.hirunews.lk/tamil/390819/தமிழ்-மக்களுக்கு-அவசியமான-ஆதரவினை-இந்தியா-வழங்கவேண்டுமெனக்-கோரிக்கை  
    • உண்மைதான்... தெலுங்கர்களை நம்ப முடியாது. செத்த மாதிரி நடித்து, அனுதாபம் தேடக்கூடிய ஆட்கள். செந்தமிழன் சீமானுக்கும் அந்தச் சந்தேகம் வந்ததில் வியப்பு இல்லை. 😂 🤣
    • செத்தது உண்மையிலையே இளங்கோவன் தானா என செக்பண்ணி பார்க்க போயிருக்கலாம் எண்டது என்ரை கருத்து.... 
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.