Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை! “மோடி சாதி..” சர்ச்சை கருத்து!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை! “மோடி சாதி..” சர்ச்சை கருத்து!

மோடி குறித்து சர்ச்சை கருத்து பற்றிய கிரிமினல் அவதூறு வழக்கில் நீதிமன்றம், இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைக் குற்றவாளியாக அறிவித்துள்ளது. இதன்படி ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது!

இந்த வழக்கின் முழு பின்னணியை பார்க்கலாம்.
ராகுல் காந்தி மீது சூரத் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த சூரத் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இதில் ராகுல் காந்தி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் பின்னணியை பார்க்கலாம்.

கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் சமயத்தில் ராகுல் காந்தி நாடு முழுக்க பிரசாரம் செய்தார். அந்த காலகட்டத்தில் ராகுல் காந்தி அகில இந்தியா காங்கிரஸ் தலைவராக இருந்த நிலையில், அவரது தலைமையில் காங்கிரஸ் தேர்தலை எதிர்கொண்டது. அந்த தேர்தலில் காங்கிரஸ் மிக மோசமாகத் தோல்வியடைந்து ஒரு பக்கம் இருந்தாலும், அப்போது பிரசார சமயத்தில் பல்வேறு சர்ச்சைகளும் இருந்தன.
ராகுல் காந்தி மக்களவை தேர்தலுக்காகக் கர்நாடக மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது மோடி என்ற பெயர் கொண்ட அனைவரும் ஒரே போல இருப்பதாகக் குறிப்பிட்ட ராகுல் காந்தி, அதன் பிறகு சர்ச்சைக்குரிய வார்த்தையைக் குறிப்பிட்டார். இது அப்போதே மிகப் பெரியளவில் சர்ச்சையானது. மோடி என்ற பெயர் வைத்துள்ள அனைவரையும் ராகுல் காந்தி அவமதித்து விட்டதாகப் புகார்கள் எழுந்தன.

கிரிமினல் அவதூறு வழக்கு
இந்த விவகாரத்தில் தான் அவர் மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடப்பட்டது. மோடி என்ற பெயர் கொண்ட அனைவர் குறித்தும் ராகுல் காந்தி அவதூறாகப் பேசியுள்ளதாகவும் ராகுல் காந்தி மோடி சமூகத்தையே இழிவுபடுத்திவிட்டதாகவும் குஜராத் பாஜக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான புர்னேஷ் மோடி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தீர்ப்பு
நான்கு ஆண்டுகளாக இந்த கிரிமினல் அவதூறு வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடைசியாக ராகுல் காந்தி கடந்த அக். 2021இல் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார். இந்த வழக்கில் கடந்த வாரம் தான் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. இந்த வழக்கில் தான் இன்று தீர்ப்பளிக்கப்படும் என்றும் தீர்ப்பு அளிக்கும் போது ராகுல் காந்தி நீதிமன்றத்தில் இருக்க வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டிருந்தார். அதன்படி ராகுல் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/245978

  • கருத்துக்கள உறவுகள்

இறைவன்  இருக்கின்றான் பாலகுமாரா

  • கருத்துக்கள உறவுகள்

மேல் முறையீடு செய்து தப்பி விடுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

நாலுநாள் என்றாலும் அவர் சிறையில் இருந்தால்தான் குற்றம் செய்யாமல் சிறையில் வருடக்கணக்கில் வாடுபவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் வேதனை அம்மையாருக்கு புரியும்......!  

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை! “மோடி சாதி..” சர்ச்சை கருத்து!

ராகுலுக்கு வாக்குவங்கி அதிகரிக்க போகுது.

இலங்கைத் தமிழரை அழித்ததோடு

இந்திய காங்கிரசும் அழிந்தது.

4 hours ago, ஏராளன் said:

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை! “மோடி சாதி..” சர்ச்சை கருத்து!

சிலவேளை இவரை மோடி மன்னித்து 

இவரது தண்டனையை ரத்துச் செய்தால்

மோடியின் வாக்குவங்கி மேலும் அதிகரிக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'மோடி' பெயர் குறித்த விமர்சனம்: ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம் - முழு விவரம்

ராகுல் காந்திக்கு சிறை தண்டனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

7 மணி நேரங்களுக்கு முன்னர்

4 ஆண்டுகள் முன்பு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு 30 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று மனுதாரரின் வழக்கறிஞர் கோரியிருந்தார்.

இந்த வழக்கு, 2019ஆம் ஆண்டில் மோடி குடும்பப் பெயர் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துகளுடன் தொடர்புடையது. "எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப்பெயர் இருப்பது எப்படி" என்று ராகுல் காந்தி பேசியிருந்தார்.

வியாழனன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நேரில் ஆஜராகி இருந்தார். விசாரணையின்போது, எந்த சமூகத்தையும் தனது பேச்சு மூலம் புண்படுத்த விரும்பவில்லை என்று ராகுல் காந்தி கூறியதாக பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரது வழக்கறிஞர்கள் குழு தெரிவித்தது.

 
ராகுல் காந்திக்கு சிறை தண்டனை

பட மூலாதாரம்,ANI

ராகுல் காந்தியின் ட்வீட்

தண்டனை அறிவிக்கப்பட்டதும், "என் மதம் சத்தியம் மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது, சத்தியம் என் கடவுள், அகிம்சை அதை அடைவதற்கான வழிமுறை." என்ற மகாத்மா காந்தியின் கருத்தை ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

ராகுல் காந்தி என்ன பேசினார்? இந்த வழக்கில் பின்னணி?

2019ம் ஆண்டு  பொதுத்தேர்தல் சமயத்தில் ஏப்ரல் மாதம், கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடந்த  பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்ற ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோதியை கடுமையாக விமர்சித்துப் பேசினார். விவசாயிகள், வியாபாரிகள் உள்ளிட்ட எளிய மக்களின் பணத்தை திருடி நீரவ் மோதி, லலித் மோதி, முகுல் ஷோக்சி, விஜய் மல்லையாவுக்கு நரேந்திர மோதி வழங்குவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியதாக தி இந்து செய்தி வெளியிட்டது. 

"எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. அதெப்படி அனைத்து திருடர்களுக்கும் மோதி என்ற துணைப் பெயர் இருக்கிறது எனத் தெரியவில்லை," என ராகுல் காந்தி பேசியதாக செய்திகள் வெளிவந்தன. 

 இந்த விவகாரத்தில் அப்போதே ராகுல் காந்திக்கு பாஜக தரப்பில் இருந்து கண்டங்களும் எழுந்தன

ராகுல் பேசிய கருத்துகளுக்காக குஜராத் முன்னாள் அமைச்சரும் பாஜக எம்.எல்.ஏவுமான புர்னேஷ் மோதி வழக்கு தொடுத்தார். தனது வாதத்தை பதிவு செய்வதற்காக 2021 அக்டோபர் மாதம் சூரத் நீதிமன்றத்தில் ராகுல் ஆஜரானார். 

இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த  சூரத் மாவட்ட நீதிமன்றத்தின்  தலைமை நீதிபதி ஹெ.ஹெ. வர்மா  மார்ச் 23-ம் தேதி தீர்ப்பளிப்பதாக கடந்த வாரம் தெரிவித்தார். இதை ராகுல் காந்தி வழக்கறிஞர் பிடிஐ செய்தி முகமையிடம் உறுதிப்படுத்தியிருந்தார். 

இந்த நிலையில், சூரத்தில் நீதிமன்ற தீர்ப்புக்காக  இன்று ராகுல்காந்தி நேரில் ஆஜராஜானர். 

நான்கு ஆண்டுகளாக நீடித்து வந்த கிரிமினல் அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். மேலும், 

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 499 மற்றும்  500-ன் படி ராகுல் காந்தி அதிகபட்ச தண்டனையான  2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 15,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்

அதே சமயம் அவருக்கு உடனடியாக  பிணை  வழங்கப்பட்டது.   

இந்த விவகாரத்தில் தனக்கு எந்தவித உள்நோக்கமும் இல்லை என்ற தனது தரப்பு விளக்கத்தின்போது ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

தண்டனை விவரம் அறிவிக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மனுதாரர் பூர்ணேஷ் மோடி, ` இந்த முடிவை மனதார வரவேற்கிறோம். இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறீர்களா என்பது கேள்வியல்ல. இது சமூக இயக்கம் சார்ந்த விவகாரம். மேலும் சமூகம், சாதி போன்றவற்றுக்கு எதிராக எந்த கருத்தையும் கூறக் கூடாது. வேறு எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.

ரூ.10000 பிணையில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. எம்பியாக இருப்பதாக தற்போதைய சூழலில் ராகுல் காந்திக்கு எவ்வித சிக்கலும் இல்லை. தீர்ப்பை எதிர்ப்பு மேல்முறையீடு செய்ய அவர்களுக்கு 30 நாட்கள் அவகாசம் உள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cp0jv5nl226o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மோதியை விமர்சித்த ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனையால் பறிபோன எம்பி பதவி - அடுத்து என்ன?

ராகுல் காந்தி, காங்கிரஸ், வயநாடு, மோதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

24 மார்ச் 2023, 09:13 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

2019ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது, ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகளுக்கு எதிராக அவர் மீது சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் நேற்று அளிக்கப்பட்ட தீர்ப்பில், ராகுல் காந்தி குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு 30 நாட்கள் அவகாசமும் உடனடியாக கைது செய்யப்படுவதைத் தவிர்க்கும் வகையில் அவருக்கு ஜாமீனும் வழங்கியது சூரத் நீதிமன்றம்.

இதைத் தொடர்ந்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

நீதிமன்ற தீர்ப்பையடுத்து, வயநாடு மக்களவை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ராகுல் காந்தியைத் தகுதிநீக்கம் செய்து மக்களவை சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாகவும் அடுத்த கட்டமாக ராகுல் காந்தி என்ன செய்ய முடியும் என சட்ட வல்லுநர்கள் சில விளக்கங்களை அளித்துள்ளனர்.

எப்படி தகுதிநீக்கம் செய்யலாம்?

ராகுல் காந்தி, காங்கிரஸ், வயநாடு, மோதி

பட மூலாதாரம்,SRINIVASIYC

எம்.பி. எம்.எல்.ஏ-க்களின் பதவி பொதுவாக மூன்று முறைகளில் பறிக்கப்படும்.

முதலாவதாக, பதவியில் உள்ள ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளில் இருப்பது, மனநிலை சரியில்லாமல் இருப்பது, இந்திய குடியுரிமை இல்லாமல் இருப்பது போன்ற ஏதேனும் ஒரு காரணத்திற்காக தகுதிநீக்கம் செய்யப்படுவார்.

இரண்டாவது முறை: கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் மூலம், பிற கட்சிகளுக்கு மாறும் மக்கள் பிரதிநிதிகள் மீது தகுதிநீக்கம் கொண்டு வருவது.

மூன்றாவது முறை: மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மூலமாக தகுதி நீக்கம் செய்யப்படுவது.

இந்தச் சட்டத்தில் உள்ள உட்பிரிவுகள், எதற்காக, எப்படி தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951(Representation of the People Act) பிரிவு 8-இன் கீழ், பதவியில் இருக்கும் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள்(MPs), சட்டப்பேரவை உறுப்பினர்(MLA), சட்டமேலவை உறுப்பினர்(MLC) ஆகியோர் மீது கிரிமினல் வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து, 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்துக்கு தண்டிக்கப்பட்டால் அவர்களின் பதவி தகுதிநீக்கம் செய்யப்படும் என குறிப்பிடுகிறது.

பிரிவு 9இன் கீழ், ஊழல், அரசாங்க ஒப்பந்தங்களில் தலையிடுவது போன்ற காரணங்களுக்காக தகுதிநீக்கம் செய்யப்படுவது.

பிரிவு 10, தேர்தல் செலவுக் கணக்கைத் தாக்கல் செய்யத் தவறினால் தகுதி நீக்கம் செய்வது பற்றிக் கூறுகிறது.

பிரிவு 11, ஊழல் நடைமுறைகளுக்கான தகுதி நீக்கம் பற்றி கையாள்கிறது.

பிரிவு 8-இன் கீழ் தகுதிநீக்கம் செய்யப்படும் நபர்கள், தண்டனைக் காலம் நீங்கலாக 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.

'குற்றவாளி' என தீர்ப்பு : அடுத்தது என்ன?

ராகுல் காந்தியின் வழக்கு தொடர்ப்பான தீர்ப்பு தொடர்பாக பிபிசியிடம் பேசிய முன்னாள் நீதிபதி சந்துரு, சூரத் நீதிமன்ற தீர்ப்பில் ராகுல் காந்தி குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அதனால் மேல்முறையீட்டு நீதிமன்றம் 'குற்றவாளி' என்ற தீர்ப்பை நிறுத்தி வைக்கும் வரை அவரைத் தகுதி நீக்கம் செய்ய முடியும் என நீதிபதி சந்துரு தெரிவித்தார்.

ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் பேசும் போது, சட்டப்படி தீர்ப்பு வெளியான அடுத்த நிமிடத்தில் இருந்து அவரின் தகுதிநீக்கம் அமலுக்கு வருகிறது எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், 2013ஆம் ஆண்டு லில்லி தாமஸ் வழக்கில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8(4) அரசியல் சாசனத்திற்கு விரோதமாக இருக்கிறது என உச்ச நீதிமன்றம் கூறியது.

இந்தத் தீர்ப்பின் மூலமாக இயல்பிலேயே அவரின் தகுதிநீக்கம் உறுதியாகிறது. தீர்ப்பின் நகலைப் பெற்றதன் அடிப்படையில், மக்களவை சபாநாயகர் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறார்.

ராகுல் காந்தி இதை எதிர்த்து மேல் முறையீட்டு நீதிமன்றம் செல்வதுதான் அவருக்கான வாய்ப்பு. மேல்முறையீட்டில் தண்டனையையும், 'குற்றவாளி' என்ற தீர்ப்பையும் நிறுத்தி வைக்க முறையீடு செய்ய வேண்டும்.

இதுபோன்ற வழக்குகளில், பொதுவாக நீதிமன்றம் குற்றவாளி என்று அளித்த தீர்ப்பை நிறுத்தி வைக்காது, மாறாக தண்டனை மீது இடைக்காலத் தடையை விதித்துள்ளது என்று குறிப்பிட்டார்.

என்ன சட்ட சிக்கல்?

ராகுல் காந்தி, காங்கிரஸ், வயநாடு, மோதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 8(4), தகுதிநீக்கம் செய்யப்படும் நபர் தீர்ப்பு வெளியான நாளில் இருந்து 3 மாதங்களுக்குள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வரை தகுதிநீக்கம் செய்யக்கூடாது எனக் குறிப்பிடுகிறது.

ஆனால் லில்லி தாமஸ் vs யூனியன் ஆஃப் இந்தியா வழக்கில், 2013ஆம் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 8(4) அரசியல் சாசனத்திற்கு எதிரானது என தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பின் அடிப்படையில் 3 மாத காலம் வரை ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்படாது என்ற உத்தரவாதம் கிடையாது.

சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை 'விநோதமானது' என மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் குறிப்பிட்டார். நீதிமன்றம் தண்டனையை மட்டும் நிறுத்தி வைத்தால் அது போதுமானதாக இருக்காது. குற்றவாளி என அளித்த தீர்ப்பையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்றார்.

உச்ச நீதிமன்றம் லில்லி தாமஸ், லோக் பிரகாரி வழக்குகளில் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தண்டனை அறிவிக்கப்பட்ட உடனே தகுதி நீக்க காலம் தொடங்குகிறது. ஆனால் தீர்ப்பின் அடிப்படையில் தானாக தகுதி நீக்கம் செய்யப்பட மாட்டார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8(3)-இல் தகுதிநீக்கம் செய்யப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது, மாறாக தகுதியற்றவர் என குறிப்பிடப்படவில்லை.

அதனால் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய முடியும். ஆனால் மேல்முறையீட்டு நீதிமன்றம், தண்டனையை நிறுத்தி வைத்தால், தகுதி நீக்கமும் நிறுத்தப்படும் என்று மக்களவை முன்னாள் செயலாளரும், அரசியல் சட்ட நிபுணருமான பி.டி.டி. ஆச்சாரி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு தெரிவித்துள்ளார்.

தகுதிநீக்கம் செய்யப்பட்டால் அடுத்து என்ன?

ராகுல் காந்தி, காங்கிரஸ், வயநாடு, மோதி

பட மூலாதாரம்,ANI

ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக அவர் மக்களவை உறுப்பினராக இருந்த வயநாடு தொகுதிக்கு மீண்டும் தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வியும் எழுகிறது.

இது தொடர்பாக பேசிய முன்னாள் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமி, ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் உடனடியாக தேர்தல் நடக்காது, அதற்கு சில மாதங்கள் ஆகும் என்றார்.

தற்போது ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தீர்ப்பில் இரண்டு முக்கிய அம்சங்களை நாம் பார்க்க வேண்டும். ஒன்று அவருக்கு வழங்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் தண்டனை, மற்றொன்று அவர் 'குற்றவாளி' என நீதிமன்றம் உறுதி செய்து இருக்கிறது. குற்றவாளி என ராகுல் காந்தி உறுதி செய்யப்பட்டு 2 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதனால் அவரை நேரடியாக தகுதிநீக்கம் செய்ய முடியும். ஆனால் இடைக்கால நிவாரணமாக மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு சென்று இந்த தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரலாம்.

அதனால் இந்த விவகாரத்தில் உடனடியாக தேர்தல் ஆணையத்திற்கு வேலை எதுவும் இருக்காது. சபாநாயகர் எப்போது ராகுல் காந்தியின் தொகுதி காலியானதாக அறிவிக்கிறாரோ, அதுவரை மறுதேர்தல் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளிவராது என கோபால்சாமி தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c3g5d8zwqx1o

  • கருத்துக்கள உறவுகள்
On 23/3/2023 at 11:26, ஈழப்பிரியன் said:

ராகுலுக்கு வாக்குவங்கி அதிகரிக்க போகுது.

இலங்கைத் தமிழரை அழித்ததோடு

இந்திய காங்கிரசும் அழிந்தது.

சிலவேளை இவரை மோடி மன்னித்து 

இவரது தண்டனையை ரத்துச் செய்தால்

மோடியின் வாக்குவங்கி மேலும் அதிகரிக்கலாம்.

 

உண்மைதான். கிந்தியாவில் எல்லாமே அரசியல் பித்தலாட்டம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் இல்லை, மோதியின் கண்களில் அச்சம் தெரிகிறது" - ராகுல் காந்தி

ராகுல் காந்தி

பட மூலாதாரம்,INDIAN NATIONAL CONGRESS

6 மணி நேரங்களுக்கு முன்னர்

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் வியாழனன்று தீர்ப்பளித்த நிலையில், அடுத்த நாளே அவரை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் உத்தரவிட்டது.

எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், சனிக்கிழமையன்று ராகுல் காந்தி டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலோட், சத்திஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகெல், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் ஜெய்ராம் ரமேஷ், அபிஷேக் மனு சிங்வி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, “சில வாரங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் பிரதமரிடம் சில கேள்விகளை எழுப்பியிருந்தேன்.

 

அதானி குழுமத்தில் போலி நிறுவனங்கள் மூலம் 20,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதானி குழுமம் கட்டமைப்பு துறையில் பணியாற்றுவதால் அவர்களால் இவ்வளவு பெரிய தொகையைதிரட்டியிருக்க முடியாது.

பின்னர் எங்கிருந்து இந்தப் பணம் வந்தது. யாருடைய பணம் இது? இந்த நிறுவனங்கள் பாதுகாப்புத் துறையில் பணியாற்றுகின்றன. இந்த விவகாரத்தில் சீன நாட்டவருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. யார் அந்த சீன நபர் என்று ஏன் யாரும் கேள்வி எழுப்பவில்லை என்று கேள்வி எழுப்பினேன்.

அதானி விவகாரத்தில் பிரதமரை பாதுகாக்க நாடகம்

இரண்டாவதாக, பிரதமர் மோதிக்கும் அதானிக்கும் உள்ள தொடர்பு குறித்துக் கேள்வி எழுப்பினேன். உடனடியாக பாஜகவினர் அவர்களின் வேலையைச் செய்யத் தொடங்கிவிட்டனர்.

எனது நாடாளுமன்ற பேச்சு நீக்கப்பட்டது. இது தொடர்பாக என் பேச்சுக்கான ஆதாரம் குறித்து சபாநாயகருக்கு விரிவாக விளக்கமளித்து கடிதம் எழுதினேன்.

நேரில் சந்தித்தும் விளக்கம் கேட்டேன். ஆனால், எதுவும் நடக்கவில்லை, எனது பேச்சு நாடாளுமன்ற குறிப்புகளில் சேர்க்கப்படவில்லை. கார்கேவுக்கும் இதுவே நடந்தது.

என்னை குறித்து நாடாளுமன்றத்தில் பாஜக அமைச்சர்கள் பொய் கூறினர். அதானி நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட 20,000 கோடி ரூபாய் யாருடையது என்ற என்னுடைய கேள்வியை திசைத் திருப்புகின்றனர்.

பிரதமரின் கண்ணில் அச்சத்தைப் பார்த்தேன்

அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ள 20,000 கோடி பணம் யாருடையது என்ற கேள்வியில் இருந்து பிரதமரைப் பாதுகாக்க இத்தகைய நாடகங்கள் நடத்தப்படுகின்றன.

நாட்டின் ஜனநாயகத் தன்மையைப் பாதுகாப்பதே எனது பணி. அதாவது நாட்டின் நிறுவனங்களைப் பாதுகாப்பது, நாட்டின் ஏழை மக்களின் குரலைப் பாதுகாப்பதும் பிரதமருடனான உறவைப் பயன்படுத்திக் கொள்ளும் அதானி போன்றவர்களைப் பற்றிய உண்மையை மக்களுக்குச் சொல்வதும் தான் என் பணி," என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, "என் அடுத்த பேச்சு குறித்து பிரதமர் மோதி அச்சம் கொள்கிறார். அதனால்தான் நான் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளேன்.

அதானி குறித்து அடுத்த என்ன பேச்சு வரும் என்று அவர் அஞ்சுகிறார். அவர் கண்ணில் நான் அச்சத்தை பார்த்தேன். அதானி குறித்த அடுத்த பேச்சு நாடாளுமன்றத்தில் இருக்கக் கூடாது என்று அவர் எண்ணுகிறார்.

அதனால் முதலில் திசைத் திருப்பினார்கள், தற்போது தகுதி நீக்கம் செய்துள்ளார்கள். அதானிக்கும் மோதிக்கும் இடையே ஆழமான உறவு உள்ளது," என்று குறிப்பிட்டார்.

என் பெயர் காந்தி; சாவர்க்கர் அல்ல

"என்னை நிரந்தரமாகத் தகுதி நீக்கம் செய்தாலும், என் பணியைச் செய்துகொண்டே இருப்பேன். நான் நாடாளுமன்றத்திற்குள் இருக்கிறேனா இல்லையா என்பது முக்கியமில்லை. நாட்டுக்காகத் தொடர்ந்து போராடுவேன்.

ஒருவர் குற்றம் செய்தால், அதை திசை திருப்பவே விரும்புவார். நீங்கள் ஒரு திருடனைப் பிடித்தால், முதலில் நான் திருடவில்லை என்று கூறுவார். பின்னர், அங்கே பாருங்கள் என்று கூறி திசை திருப்புவார். அதைத்தான் பாஜக செய்கிறது," என்றும் ராகுல் காந்தி விமர்சித்தார்.

வெளிநாட்டில் பேசிய பேச்சு தொடர்பாக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜகவினர் கூறி வருவது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், "என் பெயர் ராகுல் காந்தி, சாவர்க்கர் அல்ல. காந்தி எப்போதும் மன்னிப்புக் கேட்க மாட்டார்," என்று தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/cyjreklxjjlo

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி ராகுல் என்பது உங்கள் பெயர்

காந்தி என்பது????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.