Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

மூன்று மாடி வீட்டையே பண்ணையாக மாற்றி விவசாயம் - லட்சக்கணக்கில் வருமானம்

கொரோனா, வருமானம், விவசாயம்
கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ஷகீல் அக்தர்
  • பதவி,பிபிசி செய்தியாளர்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

முட்டைகோஸ், கத்தரிக்காய், பச்சை மிளகாய், வெந்தயம், பச்சை கொத்தமல்லி போன்ற காய்கறிகள் வயலில் விளைந்திருப்பதை நாம் ஆச்சரியமாக பார்க்க மாட்டோம். சிலர் வீட்டு தோட்டத்தில், தொட்டியில் இத்தகைய காய்கறிகளை சிறிய அளவில் வளர்ப்பதும் உண்டு.

ஆனால், உத்தரப் பிரதேசத்தின் பரேலி நகரத்தைச் சேர்ந்த ராம்வீர் சிங் தனது மூன்று மாடி வீட்டில் வித்தியாசமான முறையில் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை வளர்த்து வருகிறார்.

அவரது குடும்பத்தினர் இதன் மூலம் லட்சக்கணக்கான வருமானம் பெறுகின்றனர் என்பதை கேட்கும்போது உங்களுக்கு ஆச்சரியமாக கூட இருக்கக் கூடும். ஆனால், அதுதான் உண்மை.

வீட்டுக்குள் செய்யப்படும் இந்த விவசாய முறையில் மற்றொரு அச்சரியமும் உள்ளது. நீரை மட்டுமே சார்ந்து செய்யப்படும் இந்த விவசாயத்துக்கு மண் தேவையில்லை. ஹைட்ரோபோனிக் எனப்படும் இந்த விவசாய முறை இந்தியாவுக்கு புதியது.

 
கொரோனா, வருமானம், விவசாயம்

தூரத்தில் இருந்து பார்க்குபோது மற்ற வீடுகளை விட ராம்வீர் சிங்கின் வீடு பசுமை போர்த்தியது போன்று தனித்து காணப்படுகிறது.

வீட்டின் ஒவ்வொரு மாடியிலும் விதவிதமான காய்கறிகளின் கொடிகள் பிளாஸ்டிக் குழாய்களில் வளர்வது தெரிகிறது.

வீட்டின் ஒவ்வொரு தளத்திலும், வெளியிலும், பிற இடங்களிலும் தடிமனான பிளாஸ்டிக் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த குழாய்கள் வெளிப்புற சுவர்களுக்கு இணையாக வைக்கப்படுகின்றன, அவை எல்லா நேரங்களிலும் தண்ணீரால் நிரப்பப்படுகின்றன.

ஹைட்ரோபோனிக் முறையில் எப்படி காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன?

கொரோனா, வருமானம், விவசாயம்

காய்கறி விதைகள் பிளாஸ்டிக் வாளிகள் போன்ற சிறிய கூடைகளில் தேங்காய் பட்டை மற்றும் மலைகளில் இருந்து கொண்டு வரப்பட்ட ஒரு வகையான பாசியுடன் வைக்கப்படுகின்றன. இதற்குப் பிறகு, குழாயின் துளையில் வாளி வைக்கப்படுகிறது, அங்கு விதைகள் தண்ணீரில் மூழ்கிய பின் முளைக்கத் தொடங்கும்.

மூன்று நான்கு வாரங்களில் காய்கறிகள் கிடைக்க ஆரம்பிக்கும்.

ராம்வீர் சிங் ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். அதே நேரத்தில் வித்தியாசமாக எதாவது செய்ய வேண்டும் என்று அவர் விரும்பினார். துபாயில் விவசாய கண்காட்சி ஒன்றில் பங்கேற்க ராம்வீர் சிங்கிற்கு ஹைட்ரோபோனிக் குறித்து தெரியவந்தது.

தாய்லாந்துக்கு சென்று இது குறித்து மேலும் அறிந்துகொண்டதாக அவர் கூறுகிறார். இந்தியாவில் இதுபோன்ற முறையில் காய்கறி விளைவிக்கப்படுவது இல்லை. ஆனால், ஐரோப்பிய நாடுகளில் ஹைட்ரோபோனிக் முறை பிரபலமானது.

இந்த முறை குறித்து இணையத்திலும் பிற இடங்களிலும் அறிந்ததைகொண்டு சோதனை முயற்சியாக தனது வீட்டிலேயே சிறு பகுதியை ஒதுக்கி ஹைட்ரோபோனிக் விவசாயத்தை அவர் தொடங்கியிருக்கிறார்.

அதில் அவருக்கு வெற்றி கிடைத்ததும், மொத்த வீட்டையும் பண்ணையாக மாற்ற அவர் முடிவு செய்துள்ளார்.

கொரோனா, வருமானம், விவசாயம்

மண் தேவையில்லை, தண்ணீர் மட்டுமே போதும்

கத்தரிக்காய், முட்டைக்கோஸ், மிளகாய், கொத்தமல்லி, வெந்தயம், ப்ரோக்கோலி மற்றும் பல காய்கறிகள் ரன்பீரின் வீட்டில் வளர்க்கப்படுகின்றன. குழாய்க்குள் இருக்கும் தண்ணீரில் இவை வளர்கின்றன. இவற்றுக்கு மண் தேவையில்லை. இந்த வகை விவசாயத்தில், தண்ணீரும் மிகக் குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படுகிறது.

“இந்த வகை விவசாயத்துக்கு தொடக்கத்தில் தண்ணீர் குழாய்கள் அமைப்பதற்கு செலவு ஆகும். அதன் பின்னர், காய்கறி விளைவிப்பதற்கான செலவு குறையும். ” என்று அவர் கூறுகிறார்.

காய்கறிகளை பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்க வீட்டின் கூரையில் பாலித்தின் கவர்களை பயன்படுத்துவதாகவும் காய்கறி, பழங்களை அணில், குரங்குகளிடம் இருந்து பாதுகாக்க வீட்டை சுற்றை வலை அமைத்துள்ளதாகவும் ராம்வீர் சிங் தெரிவித்தார்.

கொரோனா, வருமானம், விவசாயம்

பல மைல் தூரத்தில் இருந்து வந்து காய்கறிகளை வாங்கி செல்லும் மக்கள்

இந்த முறை விவசாயத்தில் காய்கறிகளை பராமறிக்க அதிக கவனம் தேவை என்பதால், நாம் பயன்படுத்தும் சாதாரண காய்கறிகளை விட இவற்றின் விலை அதிகம் என்கிறார் ராம்வீர் சிங்.

காய்கறிகள் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட வெப்பநிலையில் சுத்தமான நீரில் வளர்வதால் மிகவும் ஃபிரஷ்ஷாக இருப்பதோடு, மற்ற காய்கறிகளை விட இவற்றின் தரம் மிக அதிகம் என்றும் அவர் கூறுகிறார்.

உறுப்பினர் சேர்க்கை மூலம் இந்த காய்கறிகளை பரோலியில் அவர் விற்பனை செய்து வருகிறார். இந்த காய்கறிகளை வாங்க மக்கள் குறிப்பிட்ட நாளில் அவரது வீட்டிற்கு வருகிறார்கள்.

பெரிய ஹோட்டல்களில் கூட சில நேரங்களில் ராம்வீர் சிங்கின் வீட்டில் வளர்க்கப்படும் காய்கறிகள் விநியோகிக்கப்படுகின்றன.

கொரோனா, வருமானம், விவசாயம்

லட்சக்கணக்கில் வருமானம்

இந்த தனித்துவமான விவசாய முறை மூலம் ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் சம்பாதிப்பதாக கூறும் ராம்வீர் சிங், ஹைட்ரோபோனிக் முறையை பயன்படுத்தி பெரிய அளவில் விவசாயம் செய்யவும் திட்டமிட்டுள்ளார்.

ஹைட்ரோபோனிக் விவசாயம் மீது மக்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது என்றும் ராம்வீர் சிங் பிபிசியிடம் தெரிவித்தார்.

“ஆண்டு முழுவதும் வேளாண்மை அறிவியல் மாணவர்கள், விவசாயிகள் ஆகியோர் என் வீட்டுக்கு வந்த இந்த விவசாய முறை குறித்து கேட்டு அறிந்துகொள்கின்றனர். சமீபத்தில் இந்த விவசாய முறை தொடர்பாக பயிற்சி மையம் ஒன்றையும் தொடங்கியுள்ளேன் ” என்று அவர் குறிப்பிட்டார்.

இவரின் தனித்துவமிக்க விவசாயத்தின் புகழ் தற்போது எங்கும் பரவி வருகிறது. காய்கறிக் கொடிகள் சூழ்ந்திருக்கும் இவரின் வீட்டைக் காண ஊரின் வெகு தொலைவில் இருந்து மக்கள் வருகிறார்கள்.

https://www.bbc.com/tamil/articles/cv2980ryy71o

  • Like 2
Posted

இந்த விவசாய முறை இங்கும் பிரபலமாகி வருகிறது. குளிரிலும் பயிற்செய்கை பாதிப்படையாது. இத்துடன் இந்த நீரில் மீன்கள் வளர்ப்பதும்  பயிர்களைச் செழிப்பாக்கும் என்று கேள்விப்பட்டுள்ளேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, இணையவன் said:

இந்த விவசாய முறை இங்கும் பிரபலமாகி வருகிறது. குளிரிலும் பயிற்செய்கை பாதிப்படையாது. இத்துடன் இந்த நீரில் மீன்கள் வளர்ப்பதும்  பயிர்களைச் செழிப்பாக்கும் என்று கேள்விப்பட்டுள்ளேன்.

இதென்ன பிரமாதம்?

உங்க லண்டனில, வீட்டுக்குள்ள அருமையான விவசாயம் செய்த பலர் இருக்கினம்.

போலீஸ் வந்தாப்பிறகு தெரிஞ்சது, அது கஞ்சா செடி விவசாயம் எண்டு 😁🤣

  • Haha 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சூடு சுரணை உள்ளவர்களுக்கு நிச்சயம் வரும். அதிகாலையில் அடுத்த வீட்டில் மூக்கை நுழைத்து குற்றம் கண்டு சுகம் காணும் வியாதிகளுக்கு சுரணை சுட்டுப் போட்டாலும் வராது. 
    • பழமையும் புதுமையும்  ·  Rejoindre   Shanmugam Apn  · otspoSenrdm8mtu5i553642hi4058h7 mt17i5m70clai96hf9hlf1f0flil  ·  இஞ்சினீயரிங் படிச்சிட்டு ரொம்ப வருசமா வேலை கிடைக்காத ஒருத்தர், டாக்டர் ஆகிடலாம் என்று கிளினிக் ஒன்றைத் திறந்தார்.. வாசலில் ஒரு போர்டு எழுதி வைத்தார். "எந்த வியாதியாக இருந்தாலும் 500 ரூபாயில் குணப்படுத்தப்படும். உங்கள் வியாதி குணமாகவில்லையெனில், 1000 ரூபாயாகத் திருப்பித் தரப்படும் " இதைக் கவனித்த, கிளினிக் வைக்க வசதியும், வேலையும் இல்லாத மருத்துவர் ஒருவர், நம்ம போலி இஞ்சினீயர் டாக்டரிடம் இருந்து ஆயிரம் ரூபாயைப் பறிக்க உள்ளே சென்றார். "டாக்டர், என் நாக்குல எந்த சுவையும் உணர முடியல .." நர்ஸ் அந்த 8 ம் நம்பர் பாட்டிலில் இருக்குற மருந்தை, இவர் வாயில மூனு சொட்டு விடுங்க " என்றார் இஞ்சினீயர் டாக்டர். நர்ஸ் அவர் வாயில் மருந்தை விட்ட பிறகு, " அய்யோ டாக்டர், இது மாட்டு மூத்திரம் ஆச்சே" என்று அலறினார் இவர். "Very Good, இப்ப உங்க Taste Buds நல்லா வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு.. உங்களுக்கு எல்லா சுவையையும் உணர முடிகிறது... 500 ரூபாய் ஃபீசை எடுங்கள் " உண்மையான டாக்டர் வேறு வழி இல்லாமல், 500 ரூபாயைத் தந்து விட்டு வெளியேறினார். ஆனாலும், ஆயிரம் ரூபாயை பெறும் முயற்சியைக் கைவிட வில்லை.. சில நாட்கள் கழித்து, மீண்டும் அந்த கிளினிக்கிற்கு சென்றார். " டாக்டர்,எனக்கு ஞாபகமறதி ரொம்ப ஜாஸ்தியாயிருக்கு குணப்படுத்துங்க "என்றார். " நர்ஸ் அந்த 8 ம் நம்பர் பாட்டிலைத் திறந்து இவர் வாயில் மூன்று சொட்டுக்கள் விடுங்க " என்றார் இஞ்சினீயர் டாக்டர். " அய்யோ டாக்டர், அது மாட்டு மூத்திரம் ஆச்சே " என்று அலறினார் இவர்.. "Very Good,உங்க Memory Power (மெமரி பவர்) நல்லாய்டுச்சு.. 500 ரூபா எடுங்க" இந்த முறையும் ஏமாந்து போன மருத்துவர், சில நாட்கள் கழித்து மீண்டும் வந்தார்.. " எனக்கு கண் பார்வை சரி இல்லை . மருந்து தாங்க டாக்டர்", என்றார். " Sorry.. இதுக்கு என்கிட்ட மருந்து இல்லை.. இந்தாங்க ஆயிரம் ரூபாய் " என்று, ரூபாய் நோட்டை நீட்டினார் இஞ்சினீயர் டாக்டர் "இது 500 ரூபாய் நோட்டாச்சே! " என்று பதறினார் இவர். " Very Good.. உங்க பார்வையும் நல்லாய்டுச்சு.. எடுங்க 500 ரூபாய் " பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்... படிப்பாவது.. கிடிப்பாவது? மூனாங்கிளாஸ் படிச்ச ஆளே, மந்திரியா இருக்கும் நாடு இது........!  😂
    • எண்ணத்தை சொல்லுறது . .......!  😢
    • இரண்டு பார்ட் டைம் வேலை செய்யும் போது.... இரண்டிலிலும் எங்கை விட்டது, எங்கை தொட்டது... என்பதில்,  வலு  அவதானமாக இருக்க வேண்டும்.    ஒன்றில் சறுக்கினால்... மற்றது, சொதப்பி விட்டு விடும். 😂  அத்துடன்... எல்லாத்தையும், வலு  உன்னிப்பாக அவதானித்துக் கொண்டு இருந்து...  சவுண்டு குடுக்கிற நேரத்தையும், சரியாக கணித்து  பக்காவாக செய்யும் போது தான்...  எதிராளி சமாளிக்க முடியாமல், சித்தம்  கலங்கி.. தலை தெறிக்க ஓடுவான்.  🤣   எல்லா நேரமும், "சவுண்டு" கொடுத்துக் கொண்டு இருந்தால்...   சொல்லும் விஷயம் சப்பெண்டு போயிடும். 😂 இது... தான், தொழில் ரகசியம். 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.