Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புதிய பயங்கரவாத தடைச்சட்டம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகின்றது - சந்திரிகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
image

புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை தோற்கடிக்க அனைவரும் முன்வரவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதிய பயங்கரவாத தடைச்சட்டம்  மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகின்றது என  கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வேண்டுகோள் விடுத்துள்ள அவர் இந்த சட்டமூலத்தை தோற்கடிக்க மக்கள் ஐக்கியப்படவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாங்கள் எங்கள் அரசியல் வேறுபாடுகளை மறந்துவிட்டு இந்த இடத்தில் சமூக செயற்பாட்டாளர்கள் என எங்களை கருதுவோம் இந்த புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை தோற்கடிப்பதற்கு நாங்கள் ஒன்றிணையவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தவேகத்தில் நிலைமை சென்றால் நாங்கள் இன்று சுதந்திரமாக கருத்துதெரிவிப்பது பேசுவது போன்று   எதிர்காலத்தில் பேச முடியாத நிலையேற்படும், என தெரிவித்துள்ள முன்னாள்ஜனாதிபதி ஜனநாயகம் என்பதற்கு இடமிருக்காது நாங்கள்  அனைவரும் கைதுசெய்யப்படுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

அரகலய இலங்கைக்கு மிக முக்கியமான பாடமொன்றை கற்றுத்தந்தது, மக்கள் ஐக்கியப்பட்டு உறுதியாக மாற்றத்தை கோரினால் மாற்றம் சாத்தியமாகும் என்பதே அது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே அரகலய மூலமாகவோ அல்லது புரட்சி மூலமோ  எதனையாவது செய்யவேண்டும் எனவும் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

புதிய பயங்கரவாத தடைச்சட்டம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகின்றது - சந்திரிகா | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை தோற்கடிக்க ஒன்றுபடுங்கள் -சந்திரிக்கா

 

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் பயமுறுத்துவதாகவும், சட்டமூலத்தை தோற்கடிக்க அனைத்து பிரஜைகளும் ஒன்றிணைய வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், “எங்களுடைய அரசியல் விசுவாசங்களை ஒதுக்கிவிட்டு, இந்த இடத்தில் நாம் அனைவரும் சமூக ஆர்வலர்கள் என்பதை அங்கீகரிப்போம். இதை முறியடிக்க நாம் ஒன்றுபட வேண்டும்” என்றார்.

“இது ஒரு பயமுறுத்தும் சட்டமூலம் மற்றும் இந்த நாட்டின் அனைத்து குடிமக்களும் இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

“இந்த விதத்தில் இன்று நாங்கள் இங்கு பேசுவது போல் சுதந்திரமாக பேச முடியாது. ஜனநாயகத்திற்கு இடமில்லை, அவர்கள் நம் அனைவரையும் கைது செய்வார்கள்” என்றரர்.

அரகலய இலங்கைக்கு ஒரு பெறுமதியான பாடத்தை கற்பித்ததாகவும்,”மக்கள் ஒன்றிணைந்து ஒரு மாற்றத்தை வலுவாகக் கோரினால், மாற்றத்தை அடைய முடியும்.”

“அப்படியானால், அது அரகலய அல்லது புரட்சி மூலம், நாம் ஏதாவது செய்ய வேண்டும்”, எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/247163

  • கருத்துக்கள உறவுகள்
On 31/3/2023 at 04:23, பிழம்பு said:

புதிய பயங்கரவாத தடைச்சட்டம்  மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகின்றது 

ஆமாம்! சர்வதேசமே விமர்சிக்கும் பயகரவாதச் சட்டம், தமிழரின் உரிமைகளுக்கெதிராக 1979 ம் ஆண்டில் உருவாக்கப்பட்டபோது அதை எதிர்த்து ஒன்றிணைய யாரும் அறைகூவல் விடுக்கவில்லை, எல்லோரும் அரசியல் பேதங்களை மறந்து ஒன்றிணைந்து கைதூக்கினீர்கள். அதை வலுப்படுத்தி, நீட்டித்து தமிழரை சங்காரம் செய்ய, அது உங்களுக்கு தேவைப்பட்டது. உங்களது அரசியல் காலத்திற்கூட அதை வலுவிழக்கச் செய்ய நீங்கள் முன்வரவில்லை, மாறாக எல்லோரின் ஆதரவைப்பெற்று வலுப்படுத்தி தமிழரை வதைத்து, அவர்களின் குரல்வளையை நசித்து  ரசித்தீர்கள். இப்போ அந்த சட்டத்தின் வலுக்குறைந்த சட்டத்தை தாங்க முடியாது கூடி ஒப்பாரி வைக்கிறீர்கள், அப்போ கூட, இதனால் பாதிக்கபட்ட தமிழருக்கு உங்கள் அனுதாபத்தை தெரிவிக்க மறுக்கிறீர்கள். எங்களுக்கு அநிஞாயம் இழைத்தீர்கள், வேடிக்கை பார்த்தீர்கள். அது இப்போ உங்களை பதம் பார்த்து விடுமோ என துடிக்கிறீர்கள். எதை விதைத்தீர்களோ, அது இப்போ உங்களுக்கெதிராய் திரும்பி நிற்கிறது, அறுவடை செய்யும் காலமிது. எங்கள் கடவுள்களை நீங்கள் உடைத்தெறியலாம், திருடிக்கொண்டு போகலாம், எங்கிருந்தாலும் அவர்கள் உங்களை தண்டித்தே தீருவார்கள். "பந்து எடுத்து விட்டெறிந்தால், சுவர்மேல் பட்டதுபோல் திரும்பி விடும்." "மண்வெட்டி கையிலெடுப்பார், சிலபேர் மற்றவர்க்கு குழி பறிப்பார், அது தன் பக்கம் பாத்திருக்கும் என்பதை தானறிய மறந்திருப்பார், இந்தத் தத்துவத்தை தானறிந்தால் பிறர்க்கு தீங்கு செய்ய எண்ணம் வருமோ?"                 

  • கருத்துக்கள உறவுகள்

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டமூலம் ஜனநாயகத்திற்கு எதிரானது - தேசிய மக்கள் சக்தி

Published By: VISHNU

02 APR, 2023 | 04:13 PM
image

 

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முகப்பு புத்தகத்தில் கருத்துக்கள் பதிவிடுவதும் பயங்கரவாத செயற்பாடாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறான செயற்பாடுகளுக்கு 20 வருட கால சிறை தண்டனை விதிக்கப்படலாம், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் பயங்கரவாதத்திற்கு எதிரானதல்ல, ஜனநாயகத்திற்கு எதிரானது, ஆகவே இதனை ஏற்பதா இல்லையா என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும் என சட்டத்தரணி ஹர்ஷ நாணயக்கார தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையின்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்;

நாட்டு மக்களின் ஜனநாயகம் மற்றும் அடிப்படை உரிமைகளை முழுமையாக இல்லாதொழிக்கும் வகையில் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் கடந்த மாதம் 17 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டது. 

சிவில் அமைப்பினர், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு இந்த சட்டம் பாரிய அச்சுறுத்தலாக அமையும்.

நாட்டில் யுத்தம் என்பதொன்று தற்போது இல்லை.இருப்பினும் கடுமையான விடயங்களை உள்ளடக்கிய வகையில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கொண்டு வர அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.

சாதாரண தண்டனை சட்டகோவையின் பிரகாரம் தண்டனை வழங்க கூடிய குற்றங்களை கூட இந்த சட்டத்தில் பயங்கரவாத செயற்பாடாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக எழும் மக்கள் போராட்டத்தை முடக்குவதற்காக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை உருவாக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது, அதனை விடுத்து பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிரான நோக்கம் ஏதும் கிடையாது. இந்த சட்டம் பயங்கரவாதத்திற்கு எதிரானதல்ல, ஜனநாயகத்திற்கு எதிரானது.

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை காட்டிலும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் பாரதூரமானது.'பயங்கரவாதம்' என்ற சொற்பதத்திற்கு நீண்ட வரைவிலக்கணம் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த வரைவிலக்கணம் ஒன்றுக்கொண்டு முரண்பட்டதாக உள்ளது.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் 3(2) உறுப்புரையில் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல்,சட்டவிரோதமான முறையில் ஒன்று கூடல், தனிப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்தல் மற்றும் குழுக்களில் இணைதல் என 13 விடயங்கள் பயங்கரவாத செயற்பாடாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த விடயங்கள் சிறந்தது தானே என ஒரு தரப்பினர் குறிப்பிட முடியும்.நடைமுறையில் உள்ள தண்டனை சட்டக்கோவையின் பிரகாரம் இவ்விடயங்களுக்கு தண்டனை வழங்க முடியும்,பயங்கரவாத செயற்பாடாக அடையாளப்படுத்த வேண்டிய தேவை இல்லை.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் கடந்த காலங்களில் சட்டமாக்கப்பட்டிருந்தால் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டிருப்பார்கள்,ஆகவே பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டம் என்பது விசம் கலந்த ஜஸ்கிறீம் என்று குறிப்பிட வேண்டும்.

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முகப்பு புத்தகத்தில் கருத்துக்கள் பதிவிடுவதும் பயங்கரவாத செயற்பாடாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. 

அவ்வாறான செயற்பாடுகளுக்கு 20 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்,ஆகவே ஜனநாயகத்திற்கு எதிரான பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டத்தை ஏற்பதா இல்லையா என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/151947

  • கருத்துக்கள உறவுகள்

அத்தனையும் அரசாங்கத்துக்குள்ள பயத்தை காட்டுகிறது, மக்களை அடிமைகளாக கையாளப்போகிறார்கள் என்பது புரிகிறது, நாடு முன்னேறப்போவதில்லை சர்வாதிகாரப்போக்கு தொடரப்போகிறது எனத்தெரிகிறது. இதில் விதைத்தவர்களும் வீழ்த்தப்படப்போகின்றனர் என்பதே குரலெழுப்புபவர்களின் பயம். அதை அன்றே தடுத்திருந்தால் இன்று இப்படி புலம்ப வேண்டிய தேவையிருந்திருக்காது. "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்."

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

அத்தனையும் அரசாங்கத்துக்குள்ள பயத்தை காட்டுகிறது, மக்களை அடிமைகளாக கையாளப்போகிறார்கள் என்பது புரிகிறது, நாடு முன்னேறப்போவதில்லை சர்வாதிகாரப்போக்கு தொடரப்போகிறது எனத்தெரிகிறது. இதில் விதைத்தவர்களும் வீழ்த்தப்படப்போகின்றனர் என்பதே குரலெழுப்புபவர்களின் பயம். அதை அன்றே தடுத்திருந்தால் இன்று இப்படி புலம்ப வேண்டிய தேவையிருந்திருக்காது. "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்."

அதே.

  • கருத்துக்கள உறவுகள்

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் - அரசமருத்துவஅதிகாரிகள் சங்கமும் எதிர்ப்பு

Published By: RAJEEBAN

03 APR, 2023 | 03:43 PM
image

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து தொழிற்சங்கங்கள் இன்று ஆராயவுள்ளன.

சிவில் சமூகத்தினர் தொழிற்சங்கங்கள் உட்பட பல அமைப்புகள் உத்தேச பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து கரிசனை வெளியிட்டுள்ள நிலையிலேயே தொழிற்சங்கங்கள்  பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து இன்று ஆராயவுள்ளன.

இலங்கை அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த கலந்துரையாடலில் கலந்துகொள்ளும் என அதன் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

உத்தேச பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து ஆராய்வதற்காக அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் மூவர் கொண்ட குழுவை நியமித்துள்ளதாக தெரிவித்துள்ள  அதன் பேச்சாளர் அந்த குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாக வைத்து உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய சட்டமூலம் மற்றும் அதன் நியாயபூர்வ தன்மை குறித்து ஆராய்வதற்காக மூவர் கொண்ட குழுவை நியமித்துள்ளோம் என தெரிவித்துள்ள அவர் உத்தேச சட்டமூலம் குறித்த எங்கள் அதிருப்தியை சுட்டிக்காட்டி  ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/152048

  • கருத்துக்கள உறவுகள்

பொதுமக்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவதற்கு உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பயன்படும் - பேராசிரியர் ஜயதேவ உயாங்கொட

Published By: RAJEEBAN

06 APR, 2023 | 11:48 AM
image

பொதுமக்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவதற்கு உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பயன்படுத்தப்படலாம் என பேராசிரியர் ஜயதேவ உயாங்கொட தெரிவித்துள்ளார்.

நாட்டின் நெருக்கடி நிலைக்கு தீர்வை காண்பதற்காக சர்வதேசநாணயநிதியத்தின் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அரசாங்கம் சுமைகளை மக்கள்  நலிந்தவர்கள் உழைக்கும் மக்கள் தொழிலாளர்கள் மீது சுமத்துகின்றது என பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நாட்டில் பாரதூரமான சமூக நெருக்கடிகள் உருவாகும் என தெரிவித்துள்ள பேராசிரியர் ஜயதேவ உயாங்கொட ஆளும் உயர்குழாம் இதனால் நாட்டில் நெருக்கடி நிலையேற்படும் என்பதை அறிந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

அவர்கள் தற்போது அதற்காக தயாராகின்றனர் அதில் ஒன்றுதான் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என அவர்  குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் தரப்பு தற்போது மக்களால் முன்னெடுக்கப்படும்  ஆர்ப்பாட்டங்களை ஒடுக்க விரும்புகின்றது என தெரிவித்துள்ள அவர் அதிருப்தியாளர்களை ஒடுக்குவதற்காக அரசாங்கம்  பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை பயன்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பொதுமக்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவதற்கு வழிவகுக்கும் எனவும் ஜயதேவ உயாங்கொட தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/152241

  • கருத்துக்கள உறவுகள்

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை எதிர்த்தால் தற்போதைய பயங்கரவாத தடைச்சட்டமே தொடர்ந்து நீடிக்கும் நிலையேற்படும் - நீதியமைச்சர்

Published By: T. SARANYA

08 APR, 2023 | 04:49 PM
image

(நா.தனுஜா)

பயங்கரவாதத்தடைச்சட்டத்துக்குப் பதிலாகவே பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தைக் கொண்டுவருகின்றோம். அவ்வாறிருக்கையில் இப்புதிய சட்டம் வேண்டாம் என்றுகூறி எதிர்ப்பு வெளியிட்டால், ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயங்கரவாதத்தடைச்சட்டம் தொடர்ந்து அமுலில் இருக்கும் நிலையேற்படும் என்று நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் அண்மையில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தின் உள்ளடக்கம் தொடர்பில் பாரிய எதிர்ப்பலை தோற்றம்பெற்றுள்ள நிலையில், அச்சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதைத் தாமதிக்கப்போவதாகக் கடந்த வாரம் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில், பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தில் அவசியமான திருத்தங்களை மேற்கொள்வதற்குத் தயாராக இருக்கின்றீர்களா? என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் குறிப்பிட்ட அவர், 'பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் தொடர்பில் குறைகூறுகின்ற அனைவரும் அதன் ஒருசில கூறுகளை மாத்திரமே சுட்டிக்காட்டிப்பேசுகின்றனர். மாறாக அந்த சரத்துக்களின் முழுமையான அர்த்தத்தைப் புரிந்துகொண்டதன் பின்னர், அதில் என்ன குறைபாடு இருக்கின்றது என்பது பற்றி யாரும் கூறவில்லை' என்று விசனம் வெளியிட்டார்.

அதுமாத்திரமன்றி பயங்கரவாதத்தடைச்சட்டத்துக்குப் பதிலாகவே பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தைக் கொண்டுவருகின்றோம். அவ்வாறிருக்கையில் இப்புதிய சட்டம் வேண்டாம் என்றுகூறி எதிர்ப்பு வெளியிட்டால், ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயங்கரவாதத்தடைச்சட்டம் தொடர்ந்து அமுலில் இருக்கும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் 'இப்புதிய சட்டமூலத்தை எதிர்ப்பவர்கள் நீதிமன்றத்தை நாடலாம். அதனைத்தொடர்ந்து அவசியமான திருத்தங்களை மேற்கொள்வதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். எனவே நாம் எதனையும் அரசியலமைப்புக்கு முரணானவகையில் செய்யமாட்டோம்' எனவும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ உறுதியளித்தார். 

https://www.virakesari.lk/article/152439

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஏராளன் said:

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை எதிர்த்தால் தற்போதைய பயங்கரவாத தடைச்சட்டமே தொடர்ந்து நீடிக்கும் நிலையேற்படும் - நீதியமைச்சர்

ஆரம்பமே அச்சுறுத்தலாக உள்ளது. அதுவும் அமைச்சரின் கூற்று.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கு வைத்த இருபக்க கூர்வாளை இப்போ தன் மக்களிடம் 
 அறிமுகப்படுத்துது சிங்களம்,  பாப்போம் ..... எப்படி கையாளுகிறார்கள் என்று. அடங்கிப்போகிறார்களா எதிர்த்து கிளம்புகிறார்களா என.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஆதரவாக செயற்படும் ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை – நீதி அமைச்சர்

Published By: VISHNU

18 APR, 2023 | 10:29 PM
image

 

(எம்.மனோசித்ரா)

உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தொடர்பில் சமூகத்தின் மத்தியில் வீண் அச்சம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்ட மூலத்தின் ஊடாக ஆர்ப்பாட்டங்கள் , ஊடகங்கள் ஒருபோதும் முடக்கப்பட மாட்டாது. 

எனினும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஆதரவாக செயற்படும் ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதி , சிறைச்சாலை அலுவல்கள் , அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்த சட்ட மூலம் குறித்த ஆட்சேபனைகளை நீதிமன்றத்தில் முன்வைக்க முடியும். நீதிமன்றத்தின் வழிகாட்டலுக்கமைய தேவையான திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (18) செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் பயங்கரவாத செயற்பாடுகள் ஆரம்பமாகத் தொடங்கிய சந்தர்ப்பத்தில் 1979இல் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் தற்காலிக ஏற்பாடாக பயங்கரவாத தடைச் சட்டம் அறிமுக்கப்படுத்தப்பட்டது. 

இந்த சட்டத்தின் ஊடாகவே பாரிய பயங்கரவாத செயற்பாடுகளைக் கூட நிறைவுக்கு கொண்டு வர முடிந்தது.

எவ்வாறிருப்பினும் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் இந்த சட்டம் அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்தப்படுவதாக உள்ளக ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் பரவலாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. 

அத்தோடு எதிர்க்கட்சிகளால் இந்த சட்டம் மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக முன்வைக்கப்பட்ட போதிலும், அவை ஆளுங்கட்சியானதன் பின்னர் அதற்கான எந்தவொரு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

எனினும் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பாதையில் இதில் மாற்றங்களை ஏற்படுத்துவது பொறுத்தமானது என்பது இணங்காணப்பட்டது. 

அத்தோடு ஐக்கிய நாடுகள் சபையிலும் இலங்கை தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் , ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையையும் இழக்க நேரிட்டது. யுத்தத்தை நிறைவுக் கொண்டு வருவதில் முன்னின்று செயற்பட்ட முப்படையினருக்கும் சர்வதேச ரீதியில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டன.

இவை அனைத்தையும் கருத்திற் கொண்டு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கமைய 2016இல் மீண்டும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. 

பயங்கரவாத செயற்பாடுகளை ஒழிக்கும் அதே வேளை, நாட்டின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் மக்களின் உரிமைகளை மீறாத வகையில் புதிய பயங்கரவாத ஒழிப்பு சட்ட மூலத்தை தயாரிக்கும் பணிகள் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்டது.

ஜனாதிபதி சட்டத்தரணிகள் 16 பேர் அடங்கிய மதிப்பாய்வு குழுவொன்று நியமிக்கப்பட்டு, அக்குழுவினால் இந்த சட்ட மூலம் குறித்து 36 பக்க அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

2019 ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் வரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை. எனினும் இந்த தாக்குதல்களின் பின்னர் இந்த சட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

அதற்கமைய தற்போது தயாரிக்கப்பட்டுள்ள சட்ட மூலத்தில் தடுப்புக்காவலில் வைப்பதற்கு பாதுகாப்பு அமைச்சருக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டிருந்த அதிகாரம் நீதவான் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்ட மூலத்தில் ஊடகங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்டவை குறித்த ஏற்பாடுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஆர்ப்பாட்டங்களையும் , ஊடகங்களையும் முடக்குவதற்காக இந்த சட்ட மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சமூகத்தின் மத்தியில் வீண் அச்சம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவை உண்மைக்கு புறம்பானவையாகும். 

நடைமுறையிலுள்ள பயங்கரவாத ஒழிப்பு சட்டத்தின் ஊடாக இவற்றை செய்ய முடியும். எனினும் புதிய சட்ட மூலத்தில் நாம் அவ்வாறான ஏற்பாடுகளை நீக்கியுள்ளோம். மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே இந்த புதிய சட்ட மூலத்தை தயாரித்துள்ளோம். மாறாக அரசாங்கத்தின் பாதுகாப்பிற்காக அல்ல.

பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஆதரவாக ஊடகங்கள் செயற்படுமானால் அதற்குரிய நடவடிக்கைகள் சட்ட மூலத்தில் இணைக்கப்பட்டுள்ளன. 

எவ்வாறிருப்பினும் ஊடகவியலாளர்கள் இதன் ஊடாக பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படவோ, இதன் கீழ் கைது செய்யப்படவோ மாட்டார்கள். இன்னும் கால அவகாசம் உள்ளது. இந்த சட்ட மூலம் குறித்த ஆட்சேபனைகளை நீதிமன்றத்தில் முன்வைக்க முடியும். அதற்கமைய நீதிமன்றத்தின் வழிகாட்டலுக்கமைய வேண்டிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/153159

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஏராளன் said:

மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே இந்த புதிய சட்ட மூலத்தை தயாரித்துள்ளோம்.

ஓ... ஓ.... அதுதான் சந்திரிகா அம்மையார் அலறுகிறாரோ? தான் அரசாட்சியில் இருக்கும்போது இந்தச் சட்டத்தை பயன்படுத்தி தனக்கு வேண்டியவைகளை எப்படி சாதித்தார் என்பதையும் அதன் கொடுமையையும் அவர் நன்கு அறிவார்.  அவரது அச்சத்திலும் ஒரு நிஞாயமிருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.