Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆபாசப்பட நடிகை தொடர்பான விவகாரத்தில் அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுகிறது.

இதற்கான குற்றப்பத்திரிகையில் குறைந்தது ஒரு டஜன் குற்றச்சாட்டுகள் இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆபாசப்பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக ட்ரம்ப் மீது 30க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக "வழக்கு குறித்து நன்கு அறிந்த" இரண்டு நபர்கள் தெரிவித்ததாக அமெரிக்கா செய்தி தொலைக்காட்சியான சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது.

நியூயார்க் டைம்ஸ் ட்ரம்ப் மீது இரண்டு டஜனுக்கும் அதிகமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக, மேலும் இரண்டு பெயரை குறிப்பிட விரும்பாத நபர்களை மேற்கோள் காட்டியுள்ளது.

ட்ரம்ப் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் இன்னும் பொதுவெளியில் வெளியாக நிலையில், மன்ஹாட்டன் மாவட்ட அரசு வழக்கறிஞர் ஆல்வின் பிராக் ட்ரம்ப் மீது என்ன குற்றச்சாட்டுகளை முன்வைக்கவுள்ளார் என்ற விவரம் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை.

ட்ரம்ப் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கபடுவதால், "தயார் நிலையில் இருக்க வேண்டும்" என்று நியூயார்க் காவல்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தன் மீதான புகார் குறித்து வெளியில் பேசாமல் இருப்பதற்காக முன்னாள் ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸூக்கு ட்ரம்ப் பணம் கொடுத்ததாக, ட்ரம்ப் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

மேலும் இந்த பணம் சட்டத்திற்கு புறம்பாக ட்ரம்பின் அதிபர் பிரச்சார கணக்கில் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

வரும் செவ்வாய்க்கிழமை அன்று ட்ரம்ப் மீது விசாரணை நடக்கும் என டிரம்பின் வழக்கறிஞர் உறுதிப்படுத்தினார்.

"செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெறும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று டிரம்பின் வழக்கறிஞர் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலில் கூறினார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் மீது கிரிமினல் குற்றம் சாட்டப்படுவது இதுவே முதல் முறையாகும்.

ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், அது குடியரசு கட்சிக்கு பின்னடைவாக அமைபும் என்று பிபிசியின் வாஷிங்டன் செய்தியாளர் காரி குறிப்பிடுகிறார்.

'நேர்மையாக விசாரணை நடக்காது'

ட்ரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நியூயார்க்கில் இந்த விசாரணை நேர்மையான முறையில் நடைபெறாது என ட்ரம்ப் தனது சொந்த சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

"அமெரிக்க மக்களுக்கு ஆதரவாக நான் நிற்கிறேன் என்பதற்காக மட்டுமே என் மீது போலியான ஊழல் மற்றும் தரக்குறைவான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. நியூயார்க்கில் நேர்மையான விசாரணை என்னால் நடத்த முடியாது என அவர்களுக்கு தெரியும்" என்று ட்ரூத் சோசியல் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

டிரம்பின் ஆதரவாளரும், குடியரசுக் கட்சியை சேர்ந்தவருமான மாட் கேட்ஸ், ட்ரம்ப் "உறுதியாகவும், தெளிவாகவும்" இருப்பதாக கூறினார்.

ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அமெரிக்க அதிபர் பைடன் இதுவரை எந்த பதிலும் அளிக்காத நிலையில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நான்சி டிவிட்டரில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.

அவரின் பதிவில், "சட்டத்திற்கு மேலே யாரும் இல்லை. நிரபராதி என்பதை நிரூபிக்க அனைவருக்கும் உரிமை உண்டு" என்று குறிப்பிட்டுள்ளார்.

குயின்னிபியாக் பல்கலைக்கழகம் நடத்திய கருத்துக் கணிப்பில், 57% பேர், ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டு அவர் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் என்று வாக்களித்துள்ளனர்.

ட்ரம்ப் மீதான இந்த குற்றச்சாட்டு அரசியல் நோக்கம் கொண்டது என்று 62% பேர் வாக்களித்து இருக்கின்றனர்.

"செவ்வாயன்று நீதிமன்றத்தின் முன்பு ட்ரம்ப் ஆஜராகவும், சரணடைவது குறித்தும் அவரின் வழக்கறிஞர்களுடன் பேசி வருகிறேன்" என்று அரசு வழக்கறிஞர் ஆல்வின் பிராக் தெரிவித்தார்.

டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவாக அமெரிக்காவின் சில பகுதிகளில் அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஃப்ளோரிடாவில் கூடிய அவரது ஆதரவாளர்கள், 2024 அதிபர் தேர்தலுக்கான ட்ரம்பின் பரப்புரை கொடியுடன் நெடுஞ்சாலையில் போராடினர்.

ட்ரம்ப் மீது ஏன் விசாரணை?

ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்காவைச் சேர்ந்த ஆபாசப்பட நடிகை ஸ்டார்மி டேனியல்சுடன் ட்ரம்ப் தொடர்பில் இருந்தார் என்பது சர்ச்சை. 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ட்ரம்ப், அந்த குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்தார்.

ஆனால், நடிகையுடனான தனது தொடர்பை மறைக்க தனது முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் மூலமாக ட்ரம்ப் ரூ.1.07 கோடி பணம் கொடுத்தார் என்பது குற்றச்சாட்டு. மைக்கேல் கோஹனுக்கு அந்த பணத்தை ட்ரம்ப் எவ்வாறு கொடுத்தார் என்பதும் தற்போது விசாரணைக்கு உள்ளாகியிருக்கிறது.

மைக்கேல் கோஹனுக்கு ட்ரம்ப் அளித்த பணம் 'வழக்கறிஞர் கட்டணம்' என்று ஆவணங்கள் கூறுகின்றன.

ஆனால், அரசு வழக்கறிஞர்களோ, ட்ரம்ப் தனது பணப்பரிவர்த்தனை ஆவணங்களில் பொய்யாக பதிவு செய்திருப்பதாக வாதிடக் கூடும். நியூயார்க்கைப் பொருத்தவரை இது ஒரு தவறான நடத்தைதான். ஆனாலும், தீவிரமான வழக்காக மாற வழிவகுக்கும் வகையில், இது ஒரு குற்றமாக மாற்றப்படலாம் என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஸ்டார்மி டேனியல்ஸ் யார்?

ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஸ்டார்மி டேனியல்ஸின் இயற்பெயர் ஸ்டெபானி கிளிஃபோர்ட்.

2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு தயாராகி வந்த டொனால்ட் ட்ரம்ப் மீது அவர் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். 2006-ம் ஆண்டு ஜூலையில் கோல்ப் காட்சிப் போட்டி ஒன்றில் டிரம்பை அவர் சந்தித்தாக ஊடக நேர்காணல்களில் அவர் கூறினார்.

கலிபோர்னியா - நெவேடா மாகாணங்களுககு இடையே லேக் டாஹோவில் உள்ள தனது ஓட்டல் அறையில் இருவரும் உடலுறவு கொண்டதாக அவர் கூறினார். அந்த வேளையில் அவரது குற்றச்சாட்டுகளை டிரம்பின் வழக்கறிஞர் திட்டவட்டமாக மறுத்தார்.

தனது குற்றச்சாட்டுகள் குறித்து மவுனம் காக்குமாறு ட்ரம்ப் கேட்டுக் கொண்டாரா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, "இதற்காக ட்ரம்ப் வருத்தப்படுவதாக தெரியவில்லை. அவர் கர்வமிக்கவர்" என்று ஸ்டார்மி டேனியல்ஸ் பதிலளித்தார்.

ட்ரம்ப் - ஸ்டார்மி டேனியல்ஸ் பாலுறவு நடந்ததாகக் கூறப்படும் கால கட்டத்தில் ட்ரம்பின் மனைவி மெலனியா ட்ரம்ப்-இன் குழந்தையை பெற்றெடுத்திருந்தார்.

இதுதவிர, இந்த குற்றச்சாட்டில் ட்ரம்ப் கைது செய்யப்பட்டதாக கடந்த வாரம் போலிப் புகைப்படங்கள் இணையத்தில் பரவின. அதில் போலீசாரிடம் இருந்து ட்ரம்ப் தப்பிச் செல்வது போலவும், அவரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்து அழைத்து செல்வது போன்ற படங்கள் இணையத்தில் பகிரப்பட்டன.

  • கருத்துக்கள உறவுகள்

ஆபாசப்பட நடிகையுடனான தொடர்பால் டிரம்ப் கைது செய்யப்பட்டதாக இணையத்தில் பரவிய 'போலி புகைப்படங்கள்'

ஆபாசப்பட நடிகையுடன் தொடர்பால் டிரம்ப் கைது என இணையத்தில் பரவிய 'போலி புகைப்படங்கள்'

பட மூலாதாரம்,TWITTER

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,கேலீன் டேவ்லின் மற்றும் ஜோஷூவா சீத்தம்
  • பதவி,பிபிசி நியூஸ்
  • 26 மார்ச் 2023

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கைதானதாக சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் கடந்த ஒரு வாரமாகப் பரவி வருகின்றன.

ஆபாசப் பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்ததாகக் கூறப்படும் புகாரில் அவர் கைதானதாக பலரும் இந்த புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தனர். ஆனால், உண்மையில் அவர் மீது இன்னும் எந்தக் குற்றச்சாட்டுகளும் எதுவும் பதிவாகவில்லை.

போலி படங்களை இனம் காண்பது எப்படி?

பட மூலாதாரம்,TRUTH SOCIAL

அந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்த பலரும், அவை போலியானவை என்பதை குறிப்பிட்டுள்ளனர். மற்றவர்களை அவர்கள் முட்டாள்களாக்க நினைப்பது போல் தோன்றவில்லை. ஆனாலும், சிலர் ஏமாற்றப்பட்டதாகத் தெரிகிறது.

கடந்த வியாழனன்று, டிரம்பே கூட தனது ட்ரூத் சமூக ஊடகப் பக்கத்தில், இதுபோன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலி புகைப்படங்களைப் பகிர்ந்தார். அவர் முட்டி போட்டு பிரார்த்தனை செய்வது போல் அந்தப் புகைப்படம் சித்தரித்திருந்தது.

 

இப்படியாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் படங்களை அடையாளம் காண்பதற்கான அறிகுறிகள் என்ன? போலி மற்றும் உண்மையான புகைப்படங்களை எவ்வாறு வேறுபடுத்தலாம்?

ஏதேனும் விசித்திரமாகத் தோன்றுகிறதா?

போலிகளை இனங்காண்பது எப்படி?

பட மூலாதாரம்,TWITTER

ஆன்லைனில் பரவும் படங்கள் பலவும் மேலே உள்ளதைப் போலவே, மிக யதார்த்தமாகத் தெரிகின்றன. இவை நடந்த நிகழ்வுகளைப் பதிவு செய்த புகைப்படங்களைக் காட்டிலும் அரங்கேற்றப்பட்ட கலைக் காட்சிகளைப் போன்றவை.

உன்னிப்பாகக் கவனித்தால், ஏதோ சரியாக இல்லை என்பது தெரிய வருகிறது.

படத்தின் மையத்தைப் பாருங்கள். டிரம்பின் கை மிகவும் குட்டையாக உள்ளது. இடதுபுறத்தில் உள்ள போலீஸ் அதிகாரி மனித கையைவிட நகத்தை ஒத்த ஒன்றைப் பிடித்திருப்பதைப் போலத் தோன்றுகிறது.

இதேபோல், நீங்கள் டிரம்பின் கழுத்தை உற்று நோக்கினால், அவரது தலை படத்தின் மேல் பொருத்தப்பட்டது போல் இருப்பதை நீங்கள் கவனிப்பீர்கள்.

செயற்கை நுண்ணறிவு நிபுணரும், பிபிசி வானொலி தொடரான 'The Future Will be Synthesised' -இன் தொகுப்பாளருமான ஹென்றி அஜ்டர், தற்போதைய தொழில்நுட்பம் சில உடல் பாகங்களை, குறிப்பாக கைகளைச் சித்தரிப்பதில் சிறப்பாக இல்லை என்கிறார்.

"படங்களைப் பெரிதாக்கினால், விரல்களின் எண்ணிக்கை போன்ற விஷயங்களில் முரண்பாடுகளை நீங்கள் அடிக்கடி காணலாம்," என்று அவர் கூறுகிறார்.

மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்?

ஒரு சில செய்தித் தளங்களைச் சரிபார்ப்பதே, டிரம்ப் கைது செய்யப்படவில்லை அல்லது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்வதற்கான வழி. இதுவரை அது நடக்கவில்லை.

டிரம்ப் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டால், அவரது கைது உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாக மாறும். காவல்துறையினரிடம் இருந்து முன்னாள் அதிபர் ஒருவர் தப்பிச் சென்றால் ஊடகங்கள் எவ்வளவு தூரம் அலைமோதும் என்பதை நீங்கள் கற்பனை செய்யலாம்.

மற்றொரு நல்ல யோசனை என்னவென்றால், ஒரு படம் பகிரப்படும் சூழலைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.

அதை யார் பகிர்கிறார்கள்? அவர்களின் நோக்கங்கள் என்ன?

புகைப்படங்கள் உண்மையானவையா என்பதைச் சரிபார்க்காவிட்டாலும், மக்கள் தங்கள் பரந்துபட்ட அரசியல் பார்வையை விரிவாக்கவே படங்களைப் பெரும்பாலும் பகிர்ந்து கொள்வதாக அஜ்தர் கூறுகிறார்.

"அது ஒரு மோசமான செய்கை. இதனால் பெரிய அளவில் யாரும் முட்டாளாக்கப்படவில்லை என்றாலும் பலரும் அதை நம்ப விரும்பினர்," என்று அவர் கூறினார்.

போலி புகைப்படங்களும் உண்மையும்

புகைப்படங்களை உன்னிப்பாகப் பார்த்தால், சந்தேகத்திற்குரிய மேலும் பல விவரங்கள் வெளிப்படும்.

இயற்கைக்கு மாறான தோல் நிறங்கள் மற்றும் மெழுகு அல்லது மங்கலான அம்சங்களைக் கொண்ட முகங்கள் ஆகியவை இந்தப் படம் போலியானது என்பதைக் காட்டும் வலுவான அறிகுறிகள்.

போலிகளை இனம் காண்பது எப்படி?

பட மூலாதாரம்,ELIOT HIGGINS

மேலே உள்ள படத்தில், மத்திய-வலதுபுறத்தில் மங்கலான முகத்துடன் ஒரு நபர் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. டிரம்பின் முகத்தை மையப்படுத்திய புகைப்படத்தில் அவரது தலைமுடி மங்கலாகத் தெரிகிறது.

கண்களைத் துல்லியமாகச் சித்தரிக்கும் அளவுக்கு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் இன்னும் வளரவில்லை.

போலி படங்களை இனம் காண்பது எப்படி?

பட மூலாதாரம்,ELIOT HIGGINS

மேலே உள்ள படத்தில், அதிகாரிகள் டிரம்பை துரத்துவது போல் தெரிகிறது. ஆனால் அவர்களது பார்வை முற்றிலும் மாறுபட்ட திசையில் இருக்கிறது.

போலிகளை இனம் காண்பது எதிர்காலத்தில் இன்னும் கடினமாகலாம்?

போலி புகைப்படங்கள் பரப்பப்படுவது புதிதல்ல என்றாலும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அதிவேகமான வளர்ச்சியும் அது தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியங்களும் கவலை தருவதாக பிபிசியிடம் பேசிய அந்தத் துறையின் நிபுணர்கள் கூறுகின்றனர்.

"செயற்கையான புகைப்படங்கள், தகவல்கள் அதிவேகமாக உருவாகின்றன. உண்மையான மற்றும் போலி புகைப்படங்களுக்கு இடையிலான இடைவெளியைப் புரிந்துகொள்வது மிகவும் கடினமாகி வருகிறது," என்கிறார் டிஜிட்டல் தகவல் பகுப்பாய்வு நிறுவனமான Truepic-இல் பணிபுரியும் மௌனிர் இம்ராகிம்.

டிரம்ப் அடைந்துள்ள புகழ், இதுபோன்ற போலிகளை எளிதாகக் கண்டறிய உதவுகிறது என்பதை நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் தெரியாத நபர்களின் புகைப்டங்கள் பணியை மிகவும் கடினமாக்கலாம். தொழில்நுட்பம் இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பானதாக மாறி வருகிறது.

https://www.bbc.com/tamil/articles/c724nn7d828o

  • கருத்துக்கள உறவுகள்

ஆபாச நடிகை வழக்கில் ட்ரம்ப் கைது: 34 குற்றச்சாட்டுகளுக்கும் மறுப்பு - நாட்டிற்கே பெரும் அவமானம் என்று விமர்சனம்

trump

பட மூலாதாரம்,GETTY IMAGES

4 ஏப்ரல் 2023
புதுப்பிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர்

ஆபாசப்பட நடிகை வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் அதிபர்கள், முன்னாள் அதிபர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் ரகசிய காவல் படை புடை சூழ, நியூயார்க் நேரப்படி, நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு நீதிமன்றத்திற்கு டிரம்ப் வருகை தந்தார்.

கூடியிருந்தவர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு, ரகசிய வழியில் நீதிமன்றத்திற்குள் சென்றார். அரசியல் அரங்கில் பகட்டான, வெகு ஆர்ப்பாட்டமான அரசியல்வாதி என்று பெயரெடுத்த ட்ரம்ப், நீதிமன்றத்திற்குள் நீதிபதி முன்னிலையில் மிகவும் அமைதியாக காணப்பட்டார்.

நீதிபதியின் கேள்விகளுக்கு ஓரிரு வார்த்தைகளிலேயே அவர் பதிலளித்தார். அவர் மீதான 34 குற்றச்சாட்டுகளையும் நீதிபதி வாசித்த போது, நான் குற்றவாளி இல்லை என்று மட்டுமே அவர் பதிலளித்தார்.

 

உடல் மொழியிலோ, முக பாவனைகளிலோ அவர் எந்தவொரு உணர்ச்சிகளையும் வெளிக்காட்டவில்லை.

சுமார் 57 நிமிடங்கள் நீதிமன்றத்தில் இருந்த ட்ரம்ப், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

நீதிமன்றத்தில் இருந்து நேரடியாக, புளோரிடாவில் உள்ள தனது எஸ்டேட்டிற்கு விரைந்த ட்ரம்ப், அங்கே தனது ஆதரவாளர்களிடையே பேசினார். அப்போது, இந்த வழக்கு நாட்டிற்கே பெரும் அவமானம் என்று அவர் விமர்சித்தார்.

 

கடந்த சில வாரங்களாக, இந்த விவகாரம் குறித்து நடுவர் மன்றம் தீவிரமான விசாரணை மேற்கொண்டு வருகிறது. தன்னுடன் தொடர்பு இருந்தது குறித்து, வெளியே சொல்லக்கூடாது என ஸ்டார்மி டேனியல்ஸ் என்னும் அபாச பட நடிகைக்கு ட்ரம்ப் பணம் கொடுத்தாரா என்பது தொடர்பாக பல ஆதாரங்களை அவர்கள் விசாரித்து வருகின்றனர்.

2016ஆம் ஆண்டு தேர்தலின்போது ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராக அதிபர் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார் ட்ரம்ப். அப்போது அவருக்கு வயது 76. அந்த தேர்தல் நடப்பதற்கு சில காலத்திற்கு முன்னர்தான் ட்ரம்ப் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டார் என கூறப்படுகிறது.

நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

நியூயார்க்கில் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் அமெரிக்க நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு ட்ரம்ப் வந்து சேர்ந்தார்.

அமெரிக்க அதிபர்கள், முன்னாள் அதிபர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் ரகசியக் காவல் படையினர் புடைசூழ நீதிமன்றத்திற்கு வந்த ட்ரம்ப், வழக்கமான நீலநிற கோட்டும், சிவப்பு நிற டையும் அணிந்திருந்தார்.

நீதிமன்றத்திற்குள் நுழையும் போதே சற்று மந்தமாக காணப்பட்ட ட்ரம்ப், தனக்காக காத்துக் கொண்டிருந்த வழக்கறிஞர்களை நோக்கி மெதுவாக நடந்து சென்றார்.

அங்கே, ட்ரம்ப் செய்தியாளர்களை சந்திக்கவே இல்லை. அவரது உடல் மொழி மற்றும் முக பாவனைகள் பெரிய அளவில் எதையும் வெளிப்படுத்துவதாக இல்லை.

நீதிபதி ஜூவான் மெர்ச்சான் வந்ததும் ட்ரம்ப் உள்பட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர். நீதிமன்றத்திற்கு வெளியே அரசியல் மற்றும் ஊடக வெளியில் மிகவும் பரபரப்பாக இந்த வழக்கு பேசப்பட்டாலும், வழக்கைக் கையாறும் நீதிபதி மெர்ச்சான் ஒருபோதும் குரலை உயர்த்தவே இல்லை. வெகு நிதானமாக வழக்கை கையாண்டார்.

ட்ரம்ப் மீதான 34 குற்றச்சாட்டுகளை நீதிபதி வாசிக்கையில் ட்ரம்ப், "நான் குற்றம் செய்யவில்லை" என்று மட்டுமே பதிலளித்தார்.

ஒரு கட்டத்தில் நீதிபதி மெர்ச்சான், வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளின் போதும் நீங்கள் நேரில் வர அனுமதி உண்டு என்பதை டிரம்பிடம் நினைவூட்டினார். நீங்கள் இதை புரிந்து கொண்டீர்களா என்று நீதிபதி கேட்க, ட்ரம்ப் "ஆம்" என்று ஒரே வார்த்தையில் பதிலுரைத்தார்.

ட்ரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நீதிமன்றத்திற்குள் கட்டுக்கடங்காமல் அல்லது விசாரணையை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டால், விசாரணையில் ஆஜராவதற்கான உரிமையை இழக்க நேரிடும் என்று நீதிபதி குறிப்பிட்டார்.

ட்ரம்ப் மிரட்டல் விடுக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவிட்டார் என்று குற்றம்சாட்டிய அரசு தரப்பு வழக்கறிஞர், "என் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டால் உயிரிழப்பும் மற்றும் பேரழிவுமே மிஞ்சும்" என்று குறிப்பிட்டு அவர் பதிவிட்ட ஒரு சமூக ஊடகப் பதிவை சுட்டிக்காட்டினார்.

தன் மீதான குற்றச்சாட்டுகள் ஒரு மிகப்பெரிய அநீதி என்று நம்பும் ட்ரம்ப், மனம் நொந்துபோய் அவ்வாறு நடந்து கொண்டிருக்கலாம் என்று ட்ரம்ப் தரப்பு வழக்கறிஞர்கள் பதிலளித்தனர்.

மிகவும் மோசமான சொல்லாடல்களையும், வார்த்தை பிரயோகங்களையும் விரக்தியில் செய்துவிட்டார் என்று நியாயப்படுத்தும் உங்களை வாதங்களை ஏற்க முடியாது என்று நீதிபதி மெர்ச்சான் கூறினார்.

அவதூறு பேச்சு கூடாது என்ற எனது முந்தைய எச்சரிக்கை ஒரு வேண்டுகோள்தான், உத்தரவு இல்லை என்று குறிப்பிட்ட நீதிபதி, இந்த விவகாரம் மீண்டும் எழுந்தால் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படும் என்று எச்சரித்தார்.

ட்ரம்ப் மீதான வழக்கின் நீதிமன்ற நடைமுறைகள் சுமார் ஒரு மணி நேரம் நீடித்தன.

ஸ்டோர்மி தொடர்ந்த மற்றொரு வழக்கில் ட்ரம்புக்கு சாதகமாக தீர்ப்பு

ஸ்டோர்மி டேனியல்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஸ்டோர்மி டேனியல்ஸ்

அமெரிக்க முன்னாள் அதிபரும், மீண்டும் அதிபராகும் முனைப்பில் இருப்பவருமான ட்ரம்பை சிக்கலில் சிக்க வைத்த ஆபாசப்பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ், ட்ரம்புக்கு எதிரான மற்றொரு வழக்கில் பின்னடைவைச் சந்தித்திருக்கிறார்.

ட்ரம்பை விட்டு விலகிவிடுமாறு தன்னையும், தன் குழந்தைகளையும் ஒருவர் மிரட்டியதாக ஊடகங்களிடம் ஸ்டோர்மி டேனியல்ஸ் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அவை அனைத்தும் பொய்யான கற்பனை, புனைவுக் கதை என்று குற்றம்சாட்டிய ட்ரம்பை எதிர்த்து ஸ்டோர்மி டேனியல்ஸ் அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தன்னுடைய அனுமதி இல்லாமல் தனது வழக்கறிஞர் மிக்கேல் அவெனாட்டியால் தொடரப்பட்டது என்று அவர் வாதிட்டார். சர்ச்சைக்குரிய அவரது வழக்கறிஞர மிக்கேல் அவெனாட்டி தனது கட்சிக்காரர்களிடம் திருடிய குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருக்கிறார்.

அந்த அவதூறு வழக்கில்தான் ஸ்டோர்மி டேனியல்சுக்கு எதிராக தீர்ப்பு வந்திருக்கிறது. அதுவும், ஸ்டோர்மி டேனியல்ஸ் உடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ட்ரம்ப் கைது செய்யப்பட்ட சில மணி நேரத்தில் இந்த தீர்ப்பு வெளிவந்திருக்கிறது.

இந்த அவதூறு வழக்கில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தவறிய ஸ்டோர்மி டேனியல்ஸ், வழக்குச் செலவிற்காக ட்ரம்புக்கு இந்திய மதிப்பில் சுமார் 10 கோடி ரூபாயை அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பு வெளியானதும் ட்ரம்பின் இரு மகன்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். "என்னுடைய டி-சர்ட் விற்பனை அதிகரித்திருக்கிறது, நீதிமன்ற உத்தரவுப்படி ட்ரம்புக்கு பணம் செலுத்தும் அளவுக்கு அது போதுமானதாக இருக்கிறது என்று சொல்ல அவர் வெளியே இருப்பது மகிழ்ச்சி" என்று டோனால்ட் ட்ரம்ப் ஜூனியர் கிண்டலாக குறிப்பிட்டார்.

ட்ரம்ப் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு என்ன?

2006ஆம் ஆண்டில் தனக்கும், ட்ரம்புக்கும் இடையே தொடர்பு இருந்ததாக கூறுகிறார் ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ். ஆனால் இதனை ட்ரம்ப் எப்போதுமே மறுத்து வந்திருக்கிறார்.

2016ஆம் அண்டு, தனக்கும் ட்ரம்புக்கும் இடையே இருந்த உறவு குறித்து, ஊடகங்களிடம் தெரிவிக்கப்போவதாக கூறியிருக்கிறார் ஸ்டார்மி டேனியல்ஸ்.

அப்போது ட்ரம்பின் வழக்கறிஞர் மைக்கேல் கோச்சன் என்பவர், ஸ்டார்மி டேனியல்ஸுக்கு சுமார் 1,30,000 அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் 1.07 கோடி ரூபாய்) வழங்கி, இதுகுறித்து வெளியே பேசக்கூடாது என சமரசம் செய்துள்ளார். இப்படி அளிக்கப்படும் பணத்தை ஹஷ் மணி( hush money) என குறிப்பிடுகின்றனர்.

இதுபோன்று பணம் வழங்கப்படுவது சட்டத்திற்கு புறம்பானது அல்ல. ஆனால் சிக்கல் எங்கே ஆரம்பித்தது என்றால், ஸ்டார்மி டேனியல்ஸுக்கு வழங்கப்பட்ட பணம் குறித்து, ட்ரம்ப்பின் வழக்கறிஞர் மைக்கேல் கோச்சனின் ’செலவுகளுக்கான பணத்தை திருப்பி செலுத்துதல் கணக்கில்’ பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

சட்டக் கட்டணங்களுக்காக பணம் செலுத்துவதாகக் கூறி தனது வணிகப் பதிவுகளை பொய்யாக்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அப்போது தேர்தல் நடைபெறுவதற்கு சற்று முந்தைய காலகட்டத்தில் இந்த விவகாரங்கள் நடைபெற்றுள்ளன. எனவே தேர்தலின் போது பின்பற்ற வேண்டிய பண பரிமாற்றத்தில் விதிகள் மீறப்பட்டதாகவும் இந்த விவகாரம் கையாளப்படலாம்.

ஸ்டோர்மி டேனியல்ஸ் யார்?

ட்ரம்ப் கைது - நடந்தது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஸ்டோர்மி டேனியல்ஸின் இயற் பெயர் ஸ்டெபானி கிளிஃபோர்ட்.

2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு தயாராகி வந்த டொனால்ட் ட்ரம்ப் மீது அவர் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். 2006-ம் ஆண்டு ஜூலையில் கோல்ப் காட்சிப் போட்டி ஒன்றில் ட்ரம்பை அவர் சந்தித்தாக ஊடக நேர்காணல்களில் அவர் கூறினார்.

கலிபோர்னியா - நெவேடா மாகாணங்களுககு இடையே லேக் டாஹோவில் உள்ள தனது ஓட்டல் அறையில் இருவரும் உடலுறவு கொண்டதாக அவர் கூறினார். அந்த வேளையில் அவரது குற்றச்சாட்டுகளை ட்ரம்பின் வழக்கறிஞர் திட்டவட்டமாக மறுத்தார்.

தனது குற்றச்சாட்டுகள் குறித்து மவுனம் காக்குமாறு ட்ரம்ப் கேட்டுக் கொண்டாரா என்று செய்தியாளர்கள் கேட்ட போது, "இதற்காக ட்ரம்ப் வருத்தப்படுவதாக தெரியவில்லை. அவர் கர்வமிக்கவர்" என்று ஸ்டோர்மி டேனியல்ஸ் பதிலளித்தார்.

ட்ரம்ப் - ஸ்டோர்மி டேனியல்ஸ் பாலுறவு நடந்ததாகக் கூறப்படும் கால கட்டத்தில் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் குழந்தையை பெற்றெடுத்திருந்தார்.

2024 அதிபர் தேர்தலில் போட்டியிடலாமா?

தற்போதைய குற்றச்சாட்டுகள் மட்டுமல்ல, தண்டனையே விதிக்கப்பட்டாலும், அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை அவர் தொடர்வதைத் தடுக்க முடியாது.

என்ன நடந்தாலும், தான் பின் வாங்கப்போவதில்ல என்பதற்கான சமிக்ஞைகளை ட்ரம்பே கொடுத்துள்ளார். எனவே, அவர் தொடர்ந்து பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உண்மையில், அமெரிக்க சட்டத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு வேட்பாளரை பிரசாரம் செய்வதில் இருந்தும், அதிபராகப் பணியாற்றுவதில் இருந்தும், ஏன் கைதாவதில் இருந்தும் கூட தடுக்க முடியாது.

1920இல் யூஜின் டெப்ஸ் என்பவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் சிறையில் இருந்தபடியே போட்டியிட்டு 9 லட்சம் வாக்குகளையும் பெற்றிருந்தார். எனவே சிறை தண்டனை பெற்றாலும் அவர் போட்டியிட முடியும்.

எனினும், டிரம்ப் கைது செய்யப்பட்டால், அதிபர் தேர்தலுக்கான அவரது பிரசாரத்தில் அது சிக்கலை ஏற்படுத்தும். மேலும், அமெரிக்க அரசியல் அமைப்பிற்குள் ஏற்கெனவே உள்ள அப்பட்டமான பிளவுகளை இது ஆழமாக்கும்.

https://www.bbc.com/tamil/articles/c6pzwk4kl09o

  • கருத்துக்கள உறவுகள்

2016 தேர்தலில் தனது வெற்றிவாய்ப்புகளை அதிகரிப்பதற்காக தன்னை பற்றி இரகசியங்கள் வெளிவராமலிருப்பதற்காக பணம் வழங்கினார் – டிரம்பிற்கு எதிராக நீதிமன்றம் குற்றச்சாட்டு

Published By: Rajeeban

05 Apr, 2023 | 08:05 AM
image

2016 தேர்தலில் தனது வெற்றிவாய்ப்புகளை அதிகரிப்பதற்காக தன்னை பற்றி இரகசியங்கள் வெளிவராமலிருப்பதற்காக பணம் வழங்கினார் என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.

17514883121256420608.jpg

ஆபாசப்பட நடிகை ஸ்டோர்மி டானியல்ஸ் மொடல் கரென் மக்டவ்கல் தொடர்புபட்ட வழக்கில் 76 வயதான டிரம்ப் வணிக பதிவுகளை பொய்யாக்கினார் என 34 குற்றச்சாட்டுகளை நீதிமன்றம்  சுமத்தியுள்ளது.

எனினும் டிரம்ப் தான் குற்றமிழக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சில மணிநேரங்களின் பின்னர் கருத்து தெரிவித்த  டொனால்ட் டிரம்ப்  அமெரிக்காவில் இது போன்ற எதுவும் இடம்பெறும் என நான் கருதவில்லை என குறிப்பிட்டுள்ளார்.நான் ஒருபோதும் நினைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனது நாட்டை அழிக்க முயன்றவர்களிடமிருந்து அதனை காப்பாற்ற முயன்றதே நான் செய்த ஒரே ஒரு குற்றம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியொருவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்ட்ட நிலையில் நேற்றைய தினம் அமெரிக்க வரலாற்றில் முக்கியமானதொரு நாளாக பதிவாகியுள்ளது.

இதன் மூலம் முன்னாள் ஜனாதிபதிகளை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்திய நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா இணைந்துகொண்டுள்ளது.

நீலநிற சூட் மற்றும் சிவப்பு டை அணிந்து இறுகிய முகத்துடன் தனது சட்டத்தரணிகளுடன் டிரம்ப் நீதிமன்றத்திற்குள் நுழைந்தார்.

குற்றச்சாட்டுகளை எப்படி ஏற்றுக்கொள்கின்றீர்கள் என கேட்டவேளை நான் குற்றமிழைக்கவில்லை என டிரம்ப் தெரிவித்தார்.

2016 ஜனாதிபதி தேர்தலின் நேர்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்காக டொனால்ட் டிரம்ப் சட்டவிரோத சதி முயற்சியை மறைக்க முயன்றார் அதற்காக நியுயோர்க் வணிக பதிவுகளை பொய்யாக்கினார் என வழக்கறிஞர் கிறிஸ் கான்ராய் மன்றில் தெரிவித்தார்.

579864eb-1a9f-4378-8e27-fb837584b8fc.jpg

நியுயோர்க்கில் வணிகபதிவுகளை பொய்யாக்குவது ஒரு வருடத்திற்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றமாகும்.ஆனால் மற்றுமொரு குற்றத்தை மறைப்பதற்காக இந்த குற்றத்தையிழைத்தால் நான்கு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கலாம்.

நியுயோர்க் சட்டத்தின் கீழ் மோசடி மற்றும் மற்றும் மற்றொரு குற்றத்தை மறைக்கும் நோக்குடன் வணிக பதிவுகளை பொய்யாக்குவது குற்றமாகும் என சட்டமா அதிபர் அல்வின் ப்ராக் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு இது தொடர்பானது என அவர் குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/152149

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரோனி டானிடல்ஸ் $12200 ட்ரம்பின் வழக்கு செலவுக்கு கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.