Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலத்தில் ஈழத்தமிழர் வாழ்வதற்கு சிறந்த நாடு எது?

78 members have voted

  1. 1. புலத்தில் ஈழத்தமிழர் வாழ்வதற்கு சிறந்த நாடு எது?

    • ஒன்றும் இல்லை
      10
    • கனடா
      22
    • அமெரிக்கா
      1
    • அவுஸ்திரேலியா
      11
    • யூகே
      4
    • பிரான்ஸ்
      2
    • டென்மார்க்
      1
    • சுவிஸ்
      7
    • ஜேர்மனி
      4
    • நோர்வே
      4
    • சுவீடன்
      0
    • நெதர்லாந்து
      7
    • இத்தாலி
      0
    • நியூசிலாந்து
      1
    • சிங்கப்பூர், மலேசியா
      0
    • இந்தியா
      2
    • தென் அமெரிக்க நாடுகள்
      0
    • ஏனைய ஐரோப்பிய நாடுகள்
      0
    • ஏனைய ஆசிய நாடுகள்
      0
    • ஆபிரிக்க நாடுகள்
      2

Please sign in or register to vote in this poll.

Featured Replies

எனக்குப் பிடித்த நாடு பிரான்ஸ் தான். ஏனென்றால் இங்கே தான் எல்லோரையும் ஒரே மாதிரி மதிப்பார்கள்.மற்ற நாடுகள் போன்று வெளிநாட்டவர்கள் எல்லா விடயங்களீலும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்.சமத்துவம் என்ற அர்தத்துக்கு இந் நாடு அடிமைப்பட்டுள்ளது.

ஜேர்மனிஇ சுவிஸ் போன்ற நாடு வெளீ நாட்டவர்களூக்கு வேலைவாய்ப்பாக இருக்கட்டும்இ வேற விடயங்களாக இருக்கட்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள்.ஆனால் பிரான்ஸ்சில் அப்படி இல்லை.

  • Replies 124
  • Views 14.7k
  • Created
  • Last Reply

அடியேனின் தெரிவு என்றும் அழகான அமைதியான சுவிற்சலாந்து மண் தான் ம் (ஏனோ தெரியவில்லை 19 வருட சுவிற்சலாந்து வாழ்க்கை ) :P :P :P :P :P

Edited by sinnappu

நான் தெரிவு செய்தது நியூசிலாந்து, நல்ல வேளை யாரும் அதை தெரிவு செய்யல அதனால நான் நிம்மதியா இருக்கலாம் :D

எனக்குப் பிடித்த நாடு பிரான்ஸ் தான். ஏனென்றால் இங்கே தான் எல்லோரையும் ஒரே மாதிரி மதிப்பார்கள்.மற்ற நாடுகள் போன்று வெளிநாட்டவர்கள் எல்லா விடயங்களீலும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்.சமத்துவம் என்ற அர்தத்துக்கு இந் நாடு அடிமைப்பட்டுள்ளது.

ஜேர்மனிஇ சுவிஸ் போன்ற நாடு வெளீ நாட்டவர்களூக்கு வேலைவாய்ப்பாக இருக்கட்டும்இ வேற விடயங்களாக இருக்கட்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள்.ஆனால் பிரான்ஸ்சில் அப்படி இல்லை.

உது பிள்ளை 1989 1990 வாக்கில இப்ப நம்ம பெடி பெட்டையள் நல்ல வேலைகளுக்கு படிக்கினமே அதாவது பாடசாலையில் நன்றாக படித்ததால் அத்தோடு சுவிற்சாந்து நாட்டு பாடசாலைகளில் கணிதபாடத்தில் நம்ம பிள்ளைகள் படு கில்லாடிகள்......

நான் பார்த்தமட்டில் இப்ப இங்கு அதிகம் பிரஐாவுரிமை பெற்று தமிழன் கலக்கிறான்...

B) B) B) B)

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் சொல்லுங்கோ east or west Aussie is Best கோடிக்கனக்கான இயற்கை வளம் கொட்டி இருக்கு பல நூறு ஆண்டுகளுக்கு வித்து தள்ளலாம் படிப்புக்கு ஏற்ற நல்ல சம்பளமும் கிடைக்கும் ஒரு மணித்தியாளத்துக்கு குறைஞ்சது 10 டாலர்க்கு மேல கொடுக்கணும்னு சட்ட திட்டம் வேற அரசாங்கம் பட்ஜெட் போடடும் மேலதிகமா நிறைய காசு வைச்சிருக்கு இத விட வேற என்ன வேணும்..

சுண்டல் அண்ணா அப்படி போடுங்கோ நம்ம நாடு தான் பெஸ்ட் சுண்டு அண்ணா..........வளங்கள் செரிந்து கிடக்கு தேவையான அளவு தான் அதை உபயோகிக்கிறார்கள் அதை மிகவும் பேணி வருகிறார்கள் நீங்கள் சொல்வது போல எத்தனையோ ஆண்டுகளுக்கு தேவையான இயற்கை கனிமங்கள் மற்றும் வளங்களை கொண்டு இருக்கிறார்கள் அத்துடன் குறைந்தது $10 கொடுக்க வேண்டியது பாடசாலைக்கு போகும் மாணவர்களுக்கு மட்டுமே மற்றும் படி 18 வயசுக்கு மேற்பட்டவர்களுக்கு நிர்ணயிக்கபட்ட சம்பளம் மணித்தியாலதிற்கு $ 18.42 (வரி உட்பட) ஆனாள் இது சாதாரண தொழில் ஏனைய தொழில்களிற்கு வேறுபடும்.....இதன் காரணமாக தான் மக்டோனால்ஸ் போன்ற நிறுவனங்கள் பாடசாலைக்கு போகும் மாணவர்களை வேலைக்கு அமர்த்துவார்கள் ஏனெனில் குறைந்த சம்பளம் அதாவது $ 10 கொடுத்து முடிக்கலாம் என்று 18 வயசிற்கு மேற்பட்டவர்களை எடுக்க பின் நிற்பார்கள் இவர்கள்.........ஆனா எல்லா தொழில் துறையிலும் இதே அளவில் கொடுப்பார்கள் என்று இல்லை குறைவாகவும் கொடுபார்கள் காரணம் இந்தியர்கள் வந்து சீப்பா வேலை பார்க்க தொடங்கினது ஒரு காரணம்....... :D

அத்துடன் நீங்கள் குறிபிட்டது போல பட்ஜெட் அவுஸ்ரெலியாவில் மட்டும் தான் (surplus) பட்ஜேட் வேறொரு நாடுகளிளும் இல்லை என்று நினைக்கிறேன் யாரும் தெரிந்தவர்கள் சொல்லலாம்...........இப்படி ஒரு நாட்டை விட வேறேந்த நாடு சிறந்தது!!!

*The 2007‑08 Budget provides for an underlying cash surplus of $10.6 billion, the Government's tenth surplus.

Edited by Jamuna

சொர்க்கமே என்றாலும் அது நம் நாட்டைப் போலாகுமா?

சொர்க்கமே என்றாலும் அது நம் நாட்டைப் போலாகுமா?

சொர்கமே என்றாலும் அவுஸ்ரெலியா போல வருமா என் நாடு என்றாலும் நம் அவுஸ்ரெலியாவிற்கு ஈடாகுமா........... :P :P

  • கருத்துக்கள உறவுகள்

ஆகவே ல சம்பளம் குறைவென்று சொல்லுறத ஏத்துக்கவே முடியாது அளவுக்கு மீறின சம்பளம் இங்க குறிப்பாக நீங்க ஒரு சிறந்த கணக்காளனாக இருந்தால் 40 டொலர்சுக்கு மேல உழைக்கலாம் ஒரு மணித்தியாலத்துக்கு

  • கருத்துக்கள உறவுகள்

உது பிள்ளை 1989 1990 வாக்கில இப்ப நம்ம பெடி பெட்டையள் நல்ல வேலைகளுக்கு படிக்கினமே அதாவது பாடசாலையில் நன்றாக படித்ததால் அத்தோடு சுவிற்சாந்து நாட்டு பாடசாலைகளில் கணிதபாடத்தில் நம்ம பிள்ளைகள் படு கில்லாடிகள்......

நான் பார்த்தமட்டில் இப்ப இங்கு அதிகம் பிரஐாவுரிமை பெற்று தமிழன் கலக்கிறான்...

B) B) B) B)

இப்போ அந்த நாட்டில பிரசாவுரிமை எடுக்கிறதுக்கு காத்திருக்க வேண்டியிருக்காமே . உண்மையா?

இப்போ அந்த நாட்டில பிரசாவுரிமை எடுக்கிறதுக்கு காத்திருக்க வேண்டியிருக்காமே . உண்மையா?

இல்லை கறுப்பி

12 வருடங்கள் இங்கு இருந்த ஒருவரால்

பிரஜா உரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.

ஏகப்பட்ட தமிழர்கள் பிரஜா உரிமை பெற்றுள்ளார்கள்.

15 வருடமாக சுவிஸிலிருக்கும்

சூரிச்சிலிருந்து

லுசர்ண் என்ற நகருக்கு

கார் ஓட்டத் தெரியாது என்று சொன்ன

ஒரு நண்பருக்கே

சுவிஸ் பிரஜா உரிமை கிடைத்திருக்கிறது என்றால் பாருங்களேன்? :P

ஆனால்

கிரிமினல் குற்றவாளிகளாக இல்லாமல் இருத்தல் வேண்டும்

ஜேர்மன் மொழி கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும்

தேர்வாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரிய வேண்டும்.

அதற்கு கூட பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.

இப்படி சில விடயங்கள் மட்டுமே!

சுவிஸ்

உலகில் மிகச் சிறிய நாடு

மக்கள் தொகை கூட சிறிதுதான்.

தமது நாட்டின் குடியுரிமை பெறுவோர்

தமது நாட்டை துஸ்பிரயோகம் செய்யக் கூடாது

என்று அவர்கள் நினைப்பதில் தவறேதுமில்லையே?

இலங்கையின் பொருளாதாரத்தை நிலை நிறுத்த

ரத்தம் சிந்திய மலையக மக்கள்

நிலை குறித்து யோசியுங்கள்?

எவ்வளவு கொடுமை அது என்பது புரியும்.

புலம் பெயர்ந்தவர்கள் தேவை என்ன?

பணமா?

நிம்மதியா?

ஒரு நேர வேலை

பேராசை இல்லாவிடில் அமைதியான வாழ்கை

தொந்தரவே இல்லாத மக்கள்

அதிக ஆசையில்லாத மனிதனால்

அழகாக இங்கு வாழ முடியும்.

அந்த

நிம்மதியான வாழ்வு சுவிஸில் நிச்சயம் உண்டு.

பறப்பதை விட

இருப்பதே மேல்

என்ற மனம் இருந்தால்

எங்கு வாழ்ந்தாலும் நிம்மதிதான். :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பறப்பதை விட

இருப்பதே மேல்

என்ற மனம் இருந்தால்

எங்கு வாழ்ந்தாலும் நிம்மதிதான். :D

இருபைத்தைந்து வருடங்களாக என் அடிமனதில் உறைந்திருக்கும் வாக்கியம் இதுதான்

Edited by குமாரசாமி

பறப்பதை விட

இருப்பதே மேல்

என்ற மனம் இருந்தால்

எங்கு வாழ்ந்தாலும் நிம்மதிதான். :D

இருபைத்தைந்து வருடங்களாக என் அடிமனதில் உறைந்திருக்கும் வாக்கியம் இதுதான்

அதனாலே மகிழ்சியாய் இருப்போம் இல்லையா குமாரசாமி.

வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை கறுப்பி

12 வருடங்கள் இங்கு இருந்த ஒருவரால்

பிரஜா உரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.

ஏகப்பட்ட தமிழர்கள் பிரஜா உரிமை பெற்றுள்ளார்கள்.

15 வருடமாக சுவிஸிலிருக்கும்

சூரிச்சிலிருந்து

லுசர்ண் என்ற நகருக்கு

கார் ஓட்டத் தெரியாது என்று சொன்ன

ஒரு நண்பருக்கே

சுவிஸ் பிரஜா உரிமை கிடைத்திருக்கிறது என்றால் பாருங்களேன்? :P

ஆனால்

கிரிமினல் குற்றவாளிகளாக இல்லாமல் இருத்தல் வேண்டும்

ஜேர்மன் மொழி கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும்

தேர்வாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரிய வேண்டும்.

அதற்கு கூட பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.

இப்படி சில விடயங்கள் மட்டுமே!

சுவிஸ்

உலகில் மிகச் சிறிய நாடு

மக்கள் தொகை கூட சிறிதுதான்.

தமது நாட்டின் குடியுரிமை பெறுவோர்

தமது நாட்டை துஸ்பிரயோகம் செய்யக் கூடாது

என்று அவர்கள் நினைப்பதில் தவறேதுமில்லையே?

இலங்கையின் பொருளாதாரத்தை நிலை நிறுத்த

ரத்தம் சிந்திய மலையக மக்கள்

நிலை குறித்து யோசியுங்கள்?

எவ்வளவு கொடுமை அது என்பது புரியும்.

புலம் பெயர்ந்தவர்கள் தேவை என்ன?

பணமா?

நிம்மதியா?

ஒரு நேர வேலை

பேராசை இல்லாவிடில் அமைதியான வாழ்கை

தொந்தரவே இல்லாத மக்கள்

அதிக ஆசையில்லாத மனிதனால்

அழகாக இங்கு வாழ முடியும்.

அந்த

நிம்மதியான வாழ்வு சுவிஸில் நிச்சயம் உண்டு.

பறப்பதை விட

இருப்பதே மேல்

என்ற மனம் இருந்தால்

எங்கு வாழ்ந்தாலும் நிம்மதிதான். :D

கார் ஓட்டதலுக்கும் பிரசாவுரிமைக்கும் சம்பந்தம் இல்லைத்தானே?

மொழி - அவசியம்

கார் - ஆடம்பரம்

மலையக மக்கள் அன்றிலிருந்து இன்றுவரை ஒரே நிலைமையில் தான் இருக்கின்றார்கள். கவலைக்குரியது.

பறப்பதை விட

இருப்பதே மேல்

என்ற மனம் இருந்தால்

எங்கு வாழ்ந்தாலும் நிம்மதிதான்

அழகான வசனம்

15 வருடமாக சுவிஸிலிருக்கும்

சூரிச்சிலிருந்து

லுசர்ண் என்ற நகருக்கு

கார் ஓட்டத் தெரியாது என்று சொன்ன

ஒரு நண்பருக்கே

சுவிஸ் பிரஜா உரிமை கிடைத்திருக்கிறது என்றால் பாருங்களேன்?

AJeevan

:D:(

அண்ணா உது STADT க்க சரி வரும் ஆணால் Gemeinde களில் சரி வராது Gemeinderat மார் பின்னி எடுத்துடுவாங்கள் ம் என்ன இருந்தாலும் எல்லாருக்கும் கிடைக்கவேணும் ம்

B) B

ஜமுனா அவுஸ்ரேலியா சொர்க்கமா அல்லது நரகமான்னு அங்கே வந்து பார்த்தா தானே சொல்லமுடியும்.எதுக்கும் வந்து பார்த பின் சொல்லுறேன் :P :P :P :Pஜமுனா அவுஸ்ரேலியா சொர்க்கமா அல்லது நரகமான்னு அங்கே வந்து பார்த்தா தானே சொல்லமுடியும்.எதுக்கும் வந்து பார்த பின் சொல்லுறேன் :P :P :P :P

என்ன தான் சொல்லுங்கோ east or west Aussie is Best கோடிக்கனக்கான இயற்கை வளம் கொட்டி இருக்கு பல நூறு ஆண்டுகளுக்கு வித்து தள்ளலாம் படிப்புக்கு ஏற்ற நல்ல சம்பளமும் கிடைக்கும் ஒரு மணித்தியாளத்துக்கு குறைஞ்சது 10 டாலர்க்கு மேல கொடுக்கணும்னு சட்ட திட்டம் வேற அரசாங்கம் பட்ஜெட் போடடும் மேலதிகமா நிறைய காசு வைச்சிருக்கு இத விட வேற என்ன வேணும்..
அது சரி எல்லாம் இருந்தாலும் தான் மட்டும் படுக்காமல் மற்றவன் படுக்கிறதுக்கும் இடம் வேணும் எண்டு மனசில நினைச்சு தள்ளியும் அல்லோ படுக்கவேணும் அது தானப்பு பல நூறு ஆண்டுக்கு வித்து தள்ளுற காசு இருக்கு அது நீங்கள் வசிக்கும் நாட்டில் மட்டுமல்ல நான் வசிக்கும் சுவிற்சலாந்து நாட்டில் பணக்கிடங்கும் பவுண் கிடங்கும் இருக்கு ஆணால் இல்லாதவனுக்கு குடுக்கிற மனம் மட்டும் இல்லை ஓய்ய் :angry:
ஜமுனா அவுஸ்ரேலியா சொர்க்கமா அல்லது நரகமான்னு அங்கே வந்து பார்த்தா தானே சொல்லமுடியும்.எதுக்கும் வந்து பார்த பின் சொல்லுறேன் :P :P :P :Pஜமுனா அவுஸ்ரேலியா சொர்க்கமா அல்லது நரகமான்னு அங்கே வந்து பார்த்தா தானே சொல்லமுடியும்.எதுக்கும் வந்து பார்த பின் சொல்லுறேன் :P :P :P :P
ஓய் ளொள்ளா யம்மு தம்பீ இருக்கிற இடம் சொர்க்கமா ளொள்ளா பிச்சுப்போடுவன் பிச்சு :D
  • தொடங்கியவர்

சின்னப்பு சுவிசில 19 வருசமா இருக்கொறீங்களோ? உங்களூக்கு சூரிச்சிலிருந்து

லுசர்ண் என்ற நகருக்கு கார் ஓடத்தெரியும் தானே? ;)

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இருந்தாலும் கலிவோர்ணியாவுக்கு நிகர் கலிவோர்ணியாதான்.வாழ்வாரை வாழவைக்கும் பூமி.

  • கருத்துக்கள உறவுகள்

அதெண்டா உண்மை தான் சின்னப்ஸ் அவுஸ்திரேலியா கொடுக்கிறதுல கொன்ஞம் குறைவுதான் பட் இங்க உதவி பணம் என்ற பேர்ல வேலைக்கு போகாத சனத்துக்கு அள்ளி அள்ளி கொடுக்கிறானே பட் வேலை எடுக்கும் மட்டும் விட்டு கலைப்பாங்க..அதே நேரம் தாய் மார் குழந்தைகள் மாணவர்கள் என்று நிறைய உதவி தொனை கொடுக்கிறாங்களே.

சுண்டல் அண்ணா அப்படி போடுங்கோ நம்ம நாடு தான் பெஸ்ட் சுண்டு அண்ணா..........

சொர்கமே என்றாலும் அவுஸ்ரெலியா போல வருமா என் நாடு என்றாலும் நம் அவுஸ்ரெலியாவிற்கு ஈடாகுமா........... :P :P

தங்களிற்கே "நம் நாடு" அதுவாகிப் போன பின்,

தங்கள் சந்ததிக்கு?

---------------------------------------------------------------------------------------------------------------------------

அனைவரது கருத்துக்களும் அவரவரது நிலையில் சிறந்ததாகவே காணப்படுகிறது.

இங்கு தலைப்பு "புலத்தில் ஈழத்தமிழர் வாழ்வதற்கு சிறந்த நாடு எது"

நாம் விளக்கி, விவாதித்துக் கொண்டிருக்கும் நாடுகள் எல்லாம் ஈழத்தமிழருக்கு மட்டுமல்ல, ஏதோ ஒரு நிர்ப்பந்தத்தின் நிமித்தம் செல்லும் பெரும்பாண்மையோருக்கு(வேறு நாட்டைச் சேர்ந்தவர்களுக்கும்) பொருத்தமானதாகவே இருக்கும்.

"புலத்தில் (ஈழத்தமிழர்) வாழ்வதற்கு சிறந்த நாடு எது"

  • கருத்துக்கள உறவுகள்

கண்டிப்பாக தமிழினி அந்த நாட்டினுடைய பிரஜா உரிமையை வைத்துக்கொண்டு நாங்கள் இந்த நாட்டுக்காரன் இல்லை என்று சொல்வது இருக்கின்ற இந்த நாட்டுக்கு நீங்கள் செய்யும துரோகம் பிரஜா உரிமை எடுக்கும் போது சத்தியபிரமானம் செய்து தான் எடுக்கின்றோhம் அந்த வகையில் இதை நம் நாடு என்று சொல்வதில் தவறே இல்லை...

ஜம்ஸ் டோன்ட் வொரி நாட்டான்மை தீர்ப சொல்லியாச்சு........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'புலம்' என்ற சொற்பிரயோகம் இங்கு தவறான கருத்தில் பதிவுற்றிருக்கிறது. ஏனெனில் 'புலம் பெயர்வு' என்ற சொற்பதம் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது?

ஆக, இங்கு புலம்பெயர்வில் ஈழத்தமிழர் வாழ்வதற்கு சிறந்த நாடு எது? என்பதுவே பொருத்தமானதாக இருக்கும்.

இந்தக் கோடைவிடுமுறைக்கு காரில் எனது குடும்பத்துடன் ஜேர்மனி சென்றிருந்தோம். திரும்பி வரும்போது எனது பிள்ளைகள் இருவம் பிரான்சு எல்லையைத் தொட்டதும் "கண்ணாடியைத் திறவுங்கோ.. நம்முடைய காற்றைச் சுவாசிக்க வேண்டும்..." என்று துடித்தார்கள். அதையே செய்தார்கள்!! அவர்களது துடிப்பின் இயல்பை இரசித்தேன். மானிடப் பிறப்பின் கள்ளமில்லாத இருப்பின் ஆழங்கள் புரிந்தன. ஏனோ மன்னார் வழியாக கப்பலேற்றி கதறக்கதற அனுப்பப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்களது நினைவு வந்தது.

எனது துணைவி ஏனோ எனது முகத்தை ஏக்கத்துடன் பார்த்தார். நானும்தான்! பெருமூச்சே வெளிப்பட்டது........

சின்னப்பு சுவிசில 19 வருசமா இருக்கொறீங்களோ? உங்களூக்கு சூரிச்சிலிருந்து லுசர்ண் என்ற நகருக்கு கார் ஓடத்தெரியும் தானே? ;)
ஓய் கலைஞா ளொள்ளா நான் பி...வை கையில பிடிச்சுக்கொண்டு சுவிசுக்கு பறந்து வந்தனான் நீர் என்னென்டா கேக்கிறீர் ஒரு கேள்வி அதுவும் என்னைப்பாத்து உது எப்பிடி இருக்கு தெரியுமோ கரகாட்டக்காறன் படத்தில கவுண்டமணியைப் பாத்து செந்தில் கேள்வி கேட்டது போல இருக்கு :o :ph34r:
'புலம்' என்ற சொற்பிரயோகம் இங்கு தவறான கருத்தில் பதிவுற்றிருக்கிறது. ஏனெனில் 'புலம் பெயர்வு' என்ற சொற்பதம் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது?ஆக, இங்கு புலம்பெயர்வில் ஈழத்தமிழர் வாழ்வதற்கு சிறந்த நாடு எது? என்பதுவே பொருத்தமானதாக இருக்கும்.இந்தக் கோடைவிடுமுறைக்கு காரில் எனது குடும்பத்துடன் ஜேர்மனி சென்றிருந்தோம். திரும்பி வரும்போது எனது பிள்ளைகள் இருவம் பிரான்சு எல்லையைத் தொட்டதும் "கண்ணாடியைத் திறவுங்கோ.. நம்முடைய காற்றைச் சுவாசிக்க வேண்டும்..." என்று துடித்தார்கள். அதையே செய்தார்கள்!! அவர்களது துடிப்பின் இயல்பை இரசித்தேன். மானிடப் பிறப்பின் கள்ளமில்லாத இருப்பின் ஆழங்கள் புரிந்தன. ஏனோ மன்னார் வழியாக கப்பலேற்றி கதறக்கதற அனுப்பப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்களது நினைவு வந்தது.எனது துணைவி ஏனோ எனது முகத்தை ஏக்கத்துடன் பார்த்தார். நானும்தான்! பெருமூச்சே வெளிப்பட்டது........
அப்பு சுழி உதே பிரச்சனை தானப்பா நமக்கும் எங்கு போனாலும் சுவிசுக்கு எப்படா திரும்புவம் எண்டு இருக்கும் ஏனென்டால் இந்த நாடு எனக்கு எவ்வளவோ உதவி செய்துவிட்டது அத்தோடு இவ்வளவு காலம் வாழ்ந்த நாடு ........வாழ்வின் அரைவாசி இந்த நாட்டில் ஆணாலும் எந்தநாடு என்றாலும் நான் பிறந்த யாழ்மண்ணைப்போல வருமா...அது ஒரு தனிசுகம் ராசா வேற என்னப்பு வீட்டில எல்லாரும் சுகம் தானே நான் வாறன்... :rolleyes::o

அழகான அமைதியான சுவிற்சலாந்தைப்பற்றி மேலும் விபரமறிய

Swiss

Edited by sinnappu

கார் ஓட்டதலுக்கும் பிரசாவுரிமைக்கும் சம்பந்தம் இல்லைத்தானே?

மொழி - அவசியம்

கார் - ஆடம்பரம்

மலையக மக்கள் அன்றிலிருந்து இன்றுவரை ஒரே நிலைமையில் தான் இருக்கின்றார்கள். கவலைக்குரியது.

பறப்பதை விட

இருப்பதே மேல்

என்ற மனம் இருந்தால்

எங்கு வாழ்ந்தாலும் நிம்மதிதான்

அழகான வசனம்

கார் ஓட்டுவதல்ல பிரச்சனை.

பல வருடங்களாக

அதாவது 15 வருடங்களுக்கு மேல்

சுவிஸிலிருந்து

அடுத்து இருக்கும் முக்கிய நகருக்கு போவதற்கு

தெரியாத ஒருவருக்கு கூட பிரஜா உரிமை

கிடைத்திருக்கிறது என்பதையே குறிப்பிட்டேன்.

மற்றப்படி

அது ஆடம்பரம் என்றால்

வெளிநாட்டில் எல்லாமே ஆடம்பரம்தானே கறுப்பி? :P

காரில்லாத தமிழர்கள்

இங்கு 1000ல் 1வராகத்தான் இருக்கும்?

ஆனால் அவர்

கனடா : அமெரிக்கா : இங்கிலாந்து : ஐரோப்பிய நாடுகள்

இந்தியா : சிங்கப்பூர் எல்லாம் போய் வந்தவர்?

சவிஸ் பற்றி தெரியாத ஏகப்பட்டவர்கள்

சுவிஸ் பிரஜா உரிமை பெற்றுள்ளார்கள் என்பதற்காகவே

அதைச் சொன்னேன்?

இவர்கள் தாங்கள் இலங்கையர் என்று செசால்லிக் கொள்வதில்லை.

நாங்கள் சுவிஸ் என்றுதான் சொல்லிக் கொள்கிறார்கள்?

இதை விட சிரிப்பான விடயம்!

முன்னர் சுவிஸ் பிரஜா ஊரிமை பெற்றவர்கள்

புதிதாக சுவிஸ் பிரஜா ஊரிமை பெற்றவர்களை

பற்றி அறிந்ததும்

தொலைபேசியில் அழைத்து

"உங்களையும் எங்கள் நாட்டுக்கு ஒரு பிரஜையாக வரவேற்கிறோம்"

என்கிறார்களாம்!

எங்க போய் முட்டுறது? B)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.