Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழிபாடுகள் மீள ஆரம்பம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழிபாடுகள் மீள ஆரம்பம்!

வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நீண்ட காலத்திற்கு பிறகு பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகி உள்ளது.

வவுனியா வடக்கு ஒலுமடு கிராமசேவகர் பிரிவில் இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது.

இந்த ஆலயத்தில் வழிபாடு செய்வதற்கு இடையூறாக தொல்பொருள் திணைக்களம் மற்றும் பொலிஸார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில், நீண்ட காலமாக பூஜைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழிபாடுகள் மீள ஆரம்பம்! | Vedukunarimalai Adishivan Tamble Worships Start

பின்னர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆலயத்தில் இருந்த விக்கிரகங்கள் இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டிருந்தது.

மீண்டும் கடந்த 24ஆம் திகதி வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் அதிபர் சட்டத்தரணி M.A சுமந்திரன் ஆலயம் சார்பாக முன்னிலையாகியிருந்தார்.

இந்தநிலையில், அடியார்கள் வழிபாட்டுக்கு செல்வது மற்றும் ஆலய வழிபாடுகளை நடத்துவது என்பனவற்றுக்கு அரச உத்தியோகஸ்தர்கள் எவரும் தடைவிதிக்க முடியாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
 

https://thinakkural.lk/article/250924

  • கருத்துக்கள உறவுகள்

வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நீண்ட காலத்திற்கு பிறகு வழிபாடு ஆரம்பம்

வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நீண்ட காலத்திற்கு பிறகு வழிபாடு ஆரம்பம்

வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நீண்ட காலத்திற்கு பிறகு வழிபாடு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு ஒலுமடு கிராமசேவகர் பிரிவில் வரலாற்று சிறப்புமிக்க ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் தொல்பொருள் திணைக்களம், பொலிஸ் ஆகியோரினால் வழிபாட்டுக்கு இடையூறாக நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பூசைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆலயத்தில் அமைக்கப்பட்டிருந்த விக்கிரகங்களை இனம் தெரியாத நபரினால் உடைக்கப்பட்ட நிலையில் மீண்டும் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு முன்னெடுக்கப்பட்டு கடந்த 24 ஆம் திகதி ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் ஆலயம் சார்பில் ஆஜராகியிருந்தார்.

இதன்போது வவுனியா நீதவான் நீதீமன்றத்தினால் அடியார்கள் வழிபாட்டுக்கு செல்வதையும், ஆலய வழிபாட்டுக்கும் அரச உத்தியோகத்தரினால் தடைவிதிக்க முடியாது என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் நீதி மன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக நேற்றைய தினம் ஜேசுதகுருக்கல் தலைமையில் சுபவேளையில் பூசைகள் மற்றும் வழிபாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2023/1330931

 
  • கருத்துக்கள உறவுகள்

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரரின் உடைக்கப்பட்ட சிலைகள் நாளை பிரதிஷ்டை: நீதிமன்றம் அனுமதி

Published By: VISHNU

27 APR, 2023 | 02:57 PM
image

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்து வழிபாடு மேற்கொள்ள முடியுமென வவுனியா மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை (27) உத்தரவிட்டது.

அத்துடன், ஆதிலிங்கேஸ்வரர் சிலைகளை உடைத்தவர்கள் யார் என்பதை கண்டறிந்து உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டுமென்றும் பொலிசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆதிலிங்கேஸ்வர் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்ள முடியுமென கடந்த 24ஆம் திகதி உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை இன்று வரை ஒத்தி வைத்திருந்தது.

இன்று தொல்லியல் திணைக்களமும் நீதிமன்றில் முன்னிலையாகி, சிலைகள் மீள பிரதிஷ்டை செய்வதில் ஆட்சேபனையில்லையென அறிவித்தனர்.

இதையடுத்து, நாளை வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வர் ஆலயத்தில் சிலைகள் மீள பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்,

IMG_20230427_104717.jpg

வெடுக்குநாரி மலையில் வழிபாடுகளை மேற்கொள்ள ஏற்கனவே நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், வியாழக்கிழமை (27) அங்கு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

IMG_20230427_104133.jpg

எனினும், விக்கிரகங்கள் இன்றி அங்கு வழிபாடுகள் நடத்தப்பட்டமை தொடர்பிலும், வெடுக்குநாரி மலையிலிருந்த திருவுருவ சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் ஆகியன பொலிஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த சமர்பணங்களை ஆராய்ந்த வவுனியா நீதவான்,  வெடுக்குநாரி மலையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட விக்ரகங்களை அதே இடத்தில் மீண்டும் பிரதிஸ்டை செய்யுமாறும், பூஜை பொருட்களை சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

தொல்லியல் திணைக்களத்தின் மேற்பார்வையுடன் திருவுருவச் சிலைகள் மீள பிரதிஸ்டை செய்யப்பட வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பூஜை வழிபாடுகளுக்கு எவ்வித இடையூறுகளையும் விளைவிக்காதிருப்பதற்கும், அங்கு பாதுகாப்பு மேற்பார்வைகளை மாத்திரம் மேற்கொள்வதற்கும் பொலிஸாருக்கு  நீதிமன்றத்தால் கட்டளையிடப்பட்டுள்ளது.

அத்துடன், வெடுக்குநாரி மலையிலிருந்த விக்கிரகங்கள் சேதப்படுத்தியமையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதை துரிதப்படுத்துவதற்கும் பொலிஸாருக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/153909

  • கருத்துக்கள உறவுகள்

வெடுக்குநாறி மலையில் மீண்டும் விக்கிரகங்கள் பிரதிஷ்டை !

 

வவுனியா வெடுக்குநாறி மலையிலிருந்து அகற்றப்பட்ட ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் இன்று மீள்பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடுக்குநாறி மலையிலிருந்து அகற்றப்பட்ட விக்கிரகங்களை மீண்டும் அங்கு பிரதிஷ்டை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

வவுனியா நீதவான் தேவராசா சுபாஜினி முன்னிலையில் இந்த வழக்கு நேற்று(27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மதகுருமார்கள், அரசியல் பிரதிநிதிகள், பொதுமக்களின் பங்கேற்புடன் ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் மீள் பிரதிஷ்டை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

04-13-1024x493.jpg

02-20-1024x418.jpg

03-18-1024x418.jpg

00-1-1024x418.jpg

05-8-1024x418.jpg

06-7-1024x418.jpg

https://thinakkural.lk/article/251194

  • கருத்துக்கள உறவுகள்

வெடுக்குநாறிமலையில் விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்யப்பட்டது.

வெடுக்குநாறிமலையில் விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்யப்பட்டது.

 

நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் இறை விக்கிரகங்கள் இன்றையதினம் பிரதிஸ்டைசெய்யப்பட்டது.

வவுனியா வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த இறை விக்கிரகங்கள் கடந்த மாதம் இனம் தெரியாத நபர்களால் உடைத்து அழிக்கப்பட்டதுடன் சிலைகளும் களவாடப்பட்டிருந்தது.

இதனையடுத்து ஆலயத்தில் மீண்டும் விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்யும் ஏற்பாடுகள் பல தரப்புக்களாலும் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் நீதிமன்ற வழக்கினை காரணம் காட்டி தொல்பொருள் திணைக்களம் மற்றும் பொலிசார் அதற்கு தடைகளை ஏற்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு வவுனியா நீதிமன்றில் கடந்த இரு தினங்களிற்கு முன்னர் இடம்பெற்றிருந்ததுடன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு நீதின்றம் அனுமதி வழங்கியது. உடைக்கப்பட்ட விக்கிரகங்களை அதே இடத்தில் மீண்டும் வைப்பதற்கும் நீதிமன்றம் உத்தரவு வழங்கியிருந்தது.

இதனையடுத்து இன்றைய தினம் காலை சுபநேரத்தில் உடைக்கப்பட்ட விக்கிரகங்கள் அனைத்தும் மீண்டும் வைக்கப்பட்டது.

பல சிரமங்களுக்கு மத்தியில் புதிய விக்கிரகங்கள் மலையின் உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு பிரதிஸ்டை செய்யப்பட்டது.

குறித்த நிகழ்வில் ஆலயத்தின் நிர்வாகத்தினர், பூசாரியார், சமூக ஆர்வலர்கள், வேலன் சுவாமிகள், அகஸ்தியர் சுவாமிகள், அரசியல் தரப்பினர் இளைஞர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
 

-வவுனியா தீபன்-

https://tamil.adaderana.lk/news.php?nid=172984

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே ஒராளை காணவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, satan said:

எங்கே ஒராளை காணவில்லை.

அவரை விலத்தி எவ்வளவோ விடையங்கள் இளைஞர்களால் நடைபெறுகிறது

  • கருத்துக்கள உறவுகள்

அவர் இல்லாமல் நடந்தேறுவது பாராட்டப்படவேண்டியது. படங்காட்ட வேட்டியை மடிச்சுக்கட்டிக்கொண்டு வருவார், பிறகு நீதிமன்றத்திலே நிலுவை என்று வெறும் சப்பை கட்டுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

பொதுமக்கள் சுதந்திரமாக வந்துசெல்ல வேண்டும் – நீதிமன்ற கட்டளை அதுவே – சுமந்திரன்!

பொதுமக்கள் சுதந்திரமாக வந்துசெல்ல வேண்டும் – நீதிமன்ற கட்டளை அதுவே – சுமந்திரன்!

நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் வெடுக்குநாறி மலைக்கு பொதுமக்கள் சுதந்திரமாக வந்துசெல்ல வேண்டும் அதனை மதித்து அரச உத்தியோகத்தர்கள் செயற்படவேண்டும் என நாடாமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வெடுக்குநாறி மலைக்கு இன்றைய தினம்(சனிக்கிழமை) விஜயம் செய்த அவர் ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயத்தினை பார்வையிட்டார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “வெடுக்குநாறிமலையில் விக்கிரகங்கள் உடைக்கப்பட்ட பின்னர்.கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் பிரதிஸ்டை செய்யப்பட்டிருக்கின்றது.

இந்த ஆலயம் தொடர்பாக நீதிமன்றில் இரு கட்டளைகள் வழங்கப்பட்டதற்கினங்க அந்த விக்கிரகங்கள் மீளவும் பிரதிஸ்டை செய்யும் செயற்பாடு இடம்பெற்றிருக்கின்றது.

குறித்த விடயம் தொடர்பான வழக்கு எதிர்வரும் 17ஆம் திகதி மீண்டும்எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

எனவே நீதிமன்றில் தவறான கருத்துக்கள் எதும் சொல்லப்பட்டால் அதற்கு பதில் அளிக்கும் விதமாக இன்றைய தினம் நேரிலே ஆலயத்திற்கு சென்று விடயங்களை அவதானித்துள்ளோம். இது ஒரு மகிழ்ச்சியான விடயம்.

இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை ஆலயத்திற்கு வருகைதந்த பக்தர்களின் அடையாள அட்டைகள் பதிவுசெய்யப்பட்டமை தேவையற்ற ஒரு விடயம்.

இன்றையதினம் அவ்வாறான நடவடிக்கை இடம்பெறவில்லை.  பொதுமக்கள் சுதந்திரமாக வந்துசெல்வதற்கு இடமளிக்கவேண்டும் என்பதே நீதிமன்றின் கட்டளையாக இருக்கின்றது.

அதனை மதித்து அனைத்து அரச உத்தியோகதர்களும் செயற்ப்படவேண்டும். செயற்படுவார்கள் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.“ எனத் தெரிவித்துள்ளார்.

IMG_20230430_084644.jpg

IMG_20230430_092225.jpg

IMG_20230430_075316.jpg

IMG_20230430_075743.jpg

IMG_20230430_082519.jpg

IMG_20230430_092800.jpg

IMG_20230430_083211.jpg

IMG_20230430_082724.jpg

IMG_20230430_084841.jpg

IMG_20230430_084936.jpg

https://athavannews.com/2023/1331112

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே சச்சியர்? கிறிஸ்தவர்களுக்குகெதிரான சுவரொட்டியோடு எங்கே அலைகிறாரோ?

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்திற்கு சட்டத்தரணிகள் குழு விஜயம்

Published By: VISHNU

30 APR, 2023 | 05:27 PM
image

வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்திற்கு சட்டத்தரணிகள் குழு ஞாயிற்றுக்கிழமை (30) விஜயம் செய்தனர்.

PHOTO-2023-04-30-10-36-31.jpg

வவுனியா வடக்கு, ஓலுமடு ஆதி சிவன் ஆலயத்தில் உடைக்கப்பட்ட விக்கிரகங்களை மீள பிரதிஸ்டை செய்ய வவுனியா நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை அனுமதி வழங்கியிருந்தது.

PHOTO-2023-04-30-10-36-28.jpg

இதனையடுத்து வெள்ளிக்கிழமை ஆலயத்தில் விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்யப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன.

PHOTO-2023-04-30-10-36-30.jpg

இந்நிலையில், விக்கிரங்கள் வைப்பு செய்யப்பட்டமை மற்றும் ஆலயத்தின் தற்போதைய நிலமை தொடர்பில் பார்வையிடுவதற்காக குறித்த வழக்கில் ஆலயம் சார்பிலும், பாதிக்கப்பட்ட தரப்புக்கள் சார்பிலும் மன்றில் ஆஜராகி வாதப் பிரதி வாதங்களை முன்வைத்த சட்டத்தரணிகள் குழு விஜயம் செய்திருந்தனர்.

PHOTO-2023-04-30-10-36-26_1.jpg

இதில், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், வவுனியாவின் சிரேஸ்ட சட்டத்தரணி தி.திருஅருள், சட்டத்தரணிகளான திலீப் காந்தன், கீர்த்தனன், இளஞ்செழியன், திபின்சன் உள்ளிட்ட சட்டரத்தரணி  குழுவினர் சென்றிருந்தனர். 

PHOTO-2023-04-30-10-36-27.jpg

இவர்களுடன் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான சீ.வீ.கே.சிவஞானம், ஜி.ரி.லிங்கநாதன், சுகிர்தன், கேசவன் சயந்தன், ரவிகரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலரும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

PHOTO-2023-04-30-10-36-26.jpg

PHOTO-2023-04-30-10-36-25.jpg

https://www.virakesari.lk/article/154160

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி வரும் காலங்களில் இனவாத அரசின் நடவடிக்கைகள் எப்படி இருக்குமோ தெரியாது?
இதற்காக வாதாடிய சுமந்திரனுக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இனி வரும் காலங்களில் இனவாத அரசின் நடவடிக்கைகள் எப்படி இருக்குமோ தெரியாது?
இதற்காக வாதாடிய சுமந்திரனுக்கு நன்றிகள்.

இனவாதிகள் இந்த இடத்தில ஒரு விகாரை அமைக்க தீர்மானித்துவிடடார்கள்.  நீதி மன்ற தீர்ப்புக்கள் எல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. எனவே காலம்தான் தீர்மானிக்கும்.
இருந்தாலும் சுமந்திரன் இந்த வழக்கில் வாதாடியதை சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, Cruso said:

இனவாதிகள் இந்த இடத்தில ஒரு விகாரை அமைக்க தீர்மானித்துவிடடார்கள்.  நீதி மன்ற தீர்ப்புக்கள் எல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. எனவே காலம்தான் தீர்மானிக்கும்.
இருந்தாலும் சுமந்திரன் இந்த வழக்கில் வாதாடியதை சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

எதிரியாக இருந்தாலும் அல்லது  வேறு யாராக இருந்தாலும் நன்றி  சொல்ல வேண்டிய இடத்தில் நன்றி சொல்வது நன்று.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் 108 கும்ப சங்காபிஷேகம்

Published By: VISHNU

10 MAY, 2023 | 08:46 PM
image

வவுனியா 

வவுனியா வடக்கு வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் 108 கும்ப சங்காபிசேகம் புதன்கிழமை (10) சிறப்பாக இடம்பெற்றது.

IMG_20230510_154157.jpg

வவுனியா வடக்கு, ஓலுமடு, வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் கடந்த பங்குனி மாதம் இறுதிப் பகுதியில் இனந்தெரியாத நபர்களினால் இடித்து அழிக்கப்பட்டிருந்தது.

IMG_20230510_154208.jpg

அதன் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றின் கட்டளைக்கு அமைவாக கடந்த மாதம் 28 ஆம் திகதி மீளவும் தெய்வ திருவுருவங்கள் எழுந்தருளச் செய்யப்பட்டு, தொடர்ச்சியாகப் பன்னிரெண்டு நாட்கள் பூசை வழிபாடுகள் இடம்பெற்று வந்தன.

IMG_20230510_154235.jpg

அதன் தொடர்ச்சியாக புதன்கிழமை (10) 108 கும்ப சங்காபிசேகம் சிறப்பாக இடம்பெற்றது. இதில் வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வருகை தந்த பக்த அடியார்கள் பலரும் கலந்து கொண்டனர். 

IMG_20230510_154312.jpg

https://www.virakesari.lk/article/154995

  • கருத்துக்கள உறவுகள்

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரி உட்பட இருவர் கைது!

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரி உட்பட இருவர் கைது!

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரி மற்றும் ஆலயநிர்வாக உறுப்பினர் ஒருவர் நெடுங்கேணி பொலிசாரால் இன்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்,

விசாரணை ஒன்றிற்காக ஆலயநிர்வாகத்தினரை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு நெடுங்கேணி பொலிசாரால் நேற்றயதினம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து ஆலயத்தின் பூசாரி மற்றும் நிர்வாக உறுப்பினர் உட்பட இருவர் இன்றை யதினம் காலை நெடுங்கேணி பொலிஸ்நிலையத்திற்கு சென்றனர், அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் அவர்களை கைது செய்தனர்.

அதன்படி கைதுசெய்யப்பட்டவர்கள் இன்று வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது;

இதேவேளை ஆலயத்தில் பூஜை நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்ததுடன் நேற்றய தினம் சங்காபிஷேக நிகழ்வு இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1331672

  • கருத்துக்கள உறவுகள்

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பூசாரி மற்றும் ஆலய நிர்வாக உறுப்பினர் ஆகியோர் விடுதலை 

Published By: VISHNU

11 MAY, 2023 | 09:57 PM
image

பொலிசாரால் கைது செய்யப்பட்ட வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரியார் மற்றும் ஆலயநிர்வாக உறுப்பினர் ஆகியோர் வவுனியா நீதிமன்றால் இன்று விடுவிக்கப்பட்டனர். 

IMG_20230511_15442927.jpg

வவுனியா வெடுக்குநாறி மலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த இறை விக்கிரகங்கள் அண்மையில் உடைத்து அழிக்கப்பட்ட நிலையில் வவுனியா நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் மீண்டும் விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்தது.

IMG_20230511_15442188.jpg

எனினும் விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்யப்பட்ட போது நீதிமன்ற உத்தரவு கருத்தில்கொள்ளப்படாமல் தொல்பொருட்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாக தெரிவித்து நெடுங்கேணி பொலிசாரால் ஆலய பூசாரியும், நிர்வாக உறுப்பினர் ஒருவரும் இன்று கைது செய்யப்பட்டனர்.  

கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா

நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர். எனினும் குறித்த வழக்கின் முறைப்பாட்டாளர்களாக ஆலய நிர்வாகமும், பூசாரியும் இருப்பதனால் அதேவழக்கில் அவர்களை சந்தேக நபர்களாக பெயரிடுவது வழக்கிற்கு முரணாக அமையும் என்பதை சுட்டிக்காட்டிய நீதவான் வழக்கிலிருந்து அவர்களை விடுவித்திருந்தார்.

அத்துடன் ஆலயத்தில் கட்டுமானங்களையோ, மாற்றங்களையோ ஏற்படுத்தக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், பூஜை வழிபாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது. இதேவேளை இறை விக்கிரகங்களை உடைத்தவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினை விரைந்து எடுக்குமாறும் பொலிசாருக்கு பணிக்கப்பட்டது. 

குறித்த வழக்கில் ஆலயநிர்வாகம் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி தி.திருவருள் தலைமையிலான வவுனியா சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/155089

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஏராளன் said:

இறை விக்கிரகங்களை உடைத்தவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினை விரைந்து எடுக்குமாறும் பொலிசாருக்கு பணிக்கப்பட்டது. 

 

16 hours ago, ஏராளன் said:

விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்யப்பட்ட போது நீதிமன்ற உத்தரவு கருத்தில்கொள்ளப்படாமல் தொல்பொருட்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாக தெரிவித்து நெடுங்கேணி பொலிசாரால் ஆலய பூசாரியும், நிர்வாக உறுப்பினர் ஒருவரும் இன்று கைது செய்யப்பட்டனர்.

ஹி..... ஹி..... போலீசார்! வடக்கில் தமிழருக்கெதிரான அடாவடிகளுக்கு பாதுகாப்புப்படையை பயன்படுத்திக்கொண்டு, தெற்கில் நீதி, அமைதியை நிலைநாட்ட பயன்படுத்துகிறார்களாம். ஒரு நாடு ஒரு சட்டமாம். இரட்டை வேடம்!

  • கருத்துக்கள உறவுகள்

வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய பூசாரியிடம் நெடுங்கேணி பொலிஸார் விசாரணை முன்னெடுப்பு! 

Published By: NANTHINI

14 MAY, 2023 | 10:50 AM
image

வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரியிடம் நெடுங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வெடுக்குநாறி மலை ஆலயத்தின் பூசாரி மற்றும் நிர்வாக உறுப்பினர் ஒருவர் நெடுங்கேணி  பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் வவுனியா நீதிமன்றத்தால் வெள்ளிக்கிழமை (12) விடுவிக்கப்பட்டனர்.

இதனையடுத்து நேற்று சனிக்கிழமை (13)  விசாரணையொன்றுக்காக பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு ஆலயத்தின் பூசாரி மற்றும் அவரது மனைவியை நெடுங்கேணி பொலிஸார் அழைத்துள்ளனர்.  

பொலிஸ் நிலையத்துக்கு சென்ற அவ்விருவரிடமும் பொலிஸார் சில கேள்விகளை வினவினர். 

2019ஆம் ஆண்டு மலையில் ஏணிப்படி வைத்தது யார், அதற்கு நிதி வழங்கியது யார் போன்ற விடயங்களை பற்றி கேட்டு மூன்று மணிநேரத்துக்கு மேல் விசாரணை நடத்தியுள்ளனர்.  

அதனையடுத்து, இன்று (14) ஆலய பரிபாலன சபையின் போசகர் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

மேலும், சிவபூமி அறக்கட்டளையின் ஸ்தாபகர் ஆறு திருமுருகனிடம் யாழில் வைத்து நெடுங்கேணி பொலிஸார் நேற்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

இதன்போது புதிதாக வழங்கப்பட்ட விக்கிரகங்கள் தொடர்பிலும் விசாரிக்கப்பட்டது. 

இந்நிலையில், "எங்கள் மீதான விசாரணைகளே தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், ஆலய விக்கிரகங்கள் உடைத்தழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எந்த சந்தேக நபரையும் நெடுங்கேணி பொலிஸார் கைதுசெய்யவில்லை. யாரும் விசாரிக்கப்படவும் இல்லை" என்று ஆலய நிர்வாகத்தினர் இவ்விடயம் குறித்து ஆதங்கப்படுகின்றனர். 

https://www.virakesari.lk/article/155221

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, ஏராளன் said:

"எங்கள் மீதான விசாரணைகளே தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், ஆலய விக்கிரகங்கள் உடைத்தழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எந்த சந்தேக நபரையும் நெடுங்கேணி பொலிஸார் கைதுசெய்யவில்லை. யாரும் விசாரிக்கப்படவும் இல்லை" என்று ஆலய நிர்வாகத்தினர் இவ்விடயம் குறித்து ஆதங்கப்படுகின்றனர். 

நீங்கள்,  விக்கிரகங்களை உடைத்தவர் யாரென கேள்வி எழுப்புவதை நிறுத்தும்வரை உங்களை விசாரணை செய்வது தொடரும்.  சிங்களம் ஏற்கெனவே தெரிவித்து விட்டது அவர்களே விக்கிரகங்களை உடைத்தவர்கள், தங்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர் என. அப்போ.... ஏற்கென யார் உடைத்தவர் என்று கேள்வி எழுப்பியபோது தெரியாது என்று ஏன் சொன்னார்கள்? இதை கண்டுபிடிக்க, தடுக்க முடியாதவர்கள் எதற்காக இங்கு நிலை கொண்டுள்ளனர்? மக்களை அச்சுறுத்துவதற்கும் தங்கள் அடாவடிகளை மக்கள் மேல் சுமத்துவதற்குமே. வற்புறுத்தி வாக்குமூலம் பெற்று கைது செய்து பழக்கப்பட்டு விட்டது அவர்களுக்கு.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.