Jump to content

புடின் விரைவில் கொல்லப்படுவார் சிதறும் ரஷ்யா – அமெரிக்கா உளவுத்துறை..!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

U.S. statement: 'we don't advocate talks with LTTE'

[TamilNet, Wednesday, 07 January 2009, 14:25 GMT]
The United States, a member of the Co-Chairs for the Sri Lankan peace process following the February 2002 Ceasefire Agreement brokered by Norway, in a statement issued after the Sri Lanka Army occupation of Ki'inochchi town in Vanni, said it does not advocate the Government of Sri Lanka to negotiate with the LTTE. "The fall of Kilinochchi represents an important point in the 25-year war that has divided Sri Lanka," the U.S. statement said.

Full text of the statement issued by the U.S. Embassy in Colombo follows:

The fall of Kilinochchi represents an important point in the 25-year war that has divided Sri Lanka. We hope that this event will help hasten an end to the conflict. The U.S. believes that a lasting, sustainable peace can best be achieved if the Sri Lankan Government works now to reach a political solution that addresses the aspirations of all Sri Lankans, including Tamils, Muslims, and Sinhalese.

The United States does not advocate that the Government of Sri Lanka negotiate with the LTTE, a group designated by the United States since 1997 as a Foreign Terrorist Organization. However, we do believe that a broad range of other Tamil voices and opinions must be brought into a political process to reach a political solution that Tamils inside and outside of Sri Lanka see as legitimate. This will help assure Tamils that their rights are protected, that they have a say over important areas of their lives in geographical areas in which they predominate, and that they are an integral and respected part of an undivided Sri Lanka. At the same time, such as process would further delegitimize and erode the support of the LTTE in Sri Lanka and abroad.

Link to comment
Share on other sites

  • Replies 170
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Kapithan

சோவியத் யூனியனுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு நாட்டிற்கும் பல கருப்புப் பக்கங்கள் இருப்பதை வசதியாக மறந்துவிடுகிறோம்  லிஸ்ரை எடுத்து வெளியே விட்டால் உலகமே கருப்பு என்பது எல்லோருக்கும் புரியும். ஆனால் சனந

Maruthankerny

சோவியத் யூனியனாக பல நாடுகளின் கூட்டு இருந்தபோது அமைவிடம் நிலவளம் காரணமாக  ஒவ்வொரு நாட்டிலும் ஒன்றை பிரதேசம் சார்ந்து முன்னெடுத்தார்கள். விவசாயம் ... கால்நடை வளர்ப்பு ... கனிமவள சுரங்கங்கள் இப்படி. அ

Justin

இதைச் சொல்வதால் எனக்கு நாய் பேய் என ஏச்சு விழலாம், ஆனால் சுட்டிக் காட்ட வேண்டியது கடமை: சோவியத் ஒன்றிய காலத்தில் எல்லா இனக்குழுக்களும் வளமாக வாழ்ந்தன என்ற மாயையைத் தோற்றுவிக்கும் உங்கள் கருத்து ச

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ரஞ்சித் said:

வெளிப்படையாக செயற்பாட்டாளர்களைக் கைதுசெய்வதென்பது சாதாரணமாகச் செய்யக்கூடியதல்ல.

அமெரிக்காவில் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்க முயன்றதாகக்குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்ட இரு தமிழர்களும்  ஆயுதத் தரகர்கள் என்கிற போர்வையில் அவர்களுடன் தொடர்புகொண்ட உளவுத்துறையினராலேயே ஏமாற்றப்பட்டுக் கைதுசெய்யப்பட்டனர். ஆகவே, இந்த ஆயுத விற்பனை நாடகம் இவர்களைக் கைதுசெய்வதற்காகவே நடத்தப்பட்டிருக்கலாம் என்பது சாத்தியம் தானே? 

அவுஸ்த்திரேலியாவில் ஆர்ப்பாட்டங்களின்போது முன்னால் நின்று செயற்பட்டவர்களில் சிலர் கைதுசெய்யப்பட்டனர். ஆனால், ஆர்ப்பாட்டங்களின்போது சிங்களவர்களுடன் ஏற்பட்ட கைகலப்பிற்காகவே கைதுசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவ்வாறான ஒரு கைகலப்பில் சிங்கள மாணவர் ஒருவர் மீது திராவகம் ஒன்றை வீசினார் என்ற குற்றச்சாட்டில் இன்றுவரை ஒருவர் சிறையில் இருப்பதாகக் கேள்வி.  

இந்த போர்த்திட்டம் பற்றி நான் இப்போதுதான் கேள்விப்படுகிறேன். ஆனால், பல விடயங்கள் நடந்திருக்கின்றன. மூன்று வலயங்களாகப்  பிரிக்கப்பட்ட தமிழர் தாயகம். செறிவான வான்வழி மற்றும் பல்குழல்த் தாக்குதல். ஊடுருவல்த் தாக்குதல்கள். முற்றான இராணுவ முற்றுகை, கொடூரமான உணவு மற்றும் மருத்துவப் பொருட்களின் தடை. பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் கொலை. மனிதாபிமான அவலம். மூன்றுவருடத் திட்டம். இவையெல்லாமே நடந்திருக்கின்றன. அடுத்தது, இத்தட்டத்தினை இலங்கை அரசாங்கம் முன்வைத்திருக்காது என்று சொல்வதற்கு எம்மிடம் எந்த ஆதாரமும் இல்லை. 

இதனோடு தொடர்பற்றபோதும், இன்னொரு விடயத்தையும் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அமெரிக்கா இறுதிவரை புலிகள் மீதான போருக்கு ஆதரவாகவே இருந்தது. கிளிநொச்சி ராணுவ வசமாகும்போதுகூட, அரசாங்கத்தின் வெற்றியைப் பாராட்டிய அமெரிக்கா, பயங்கரவாதிகளான புலிகளுடன் பேச்சுவார்த்தைகளுக்கு இலங்கையரசாங்கம் போவதை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென்று கூறியிருந்தது. முற்றான இனக்கொலை நடந்தேறுவதற்கு வெறும் 4 மாதங்களுக்கு முன்னரான அமெரிக்காவின் நிலைப்பாடு இது. 

1982 இலிருந்து 2009 வரை ஈழத்தமிழரின் போராட்டம் தொடர்பான அமெரிக்காவின் கொள்கையென்பது மாறாமலேயே இருந்து வந்தது. யுத்தம் முடிவடைந்தபின்னர் அதன் கொள்கையில் ஏற்பட்ட ஒரே மாற்றம் தமிழர்களின் அவலங்களை வைத்து இலங்கையில் கால்ப்பதிப்பதுதான். 14 வருடங்களாகியும் , ஆதாரங்கள் அனைத்தும் இருந்தும், இன்றுவரை அமெரிக்கா தமிழர்களுக்கான நீதியைத் தர மறுப்பதன் காரணம் என்ன? இரட்டை முகம் கொண்ட கழுகு என்பது சரியாகப் பொருந்திப் போகிறது. 

ரஸ்ஸியா செய்வது ஆக்கிரமிப்பும், அழித்தொழிப்பும். இதில் மாற்றுகருத்தில்லை. இதேவகையான இனவழிப்பைச் சந்தித்த நாம் உக்ரேன் மக்களுக்காக இரங்கவேண்டும். 

ரஸ்ஸியாவும், அமெரிக்காவும் ஒரே வகையானவை. மனித அழிவுகள் அவற்றின் கண்களுக்குத் தெரிவதில்லை. பலமும், அதிகாரமும், பணமும் மட்டுமே அவற்றிற்குத் தேவையானவை. கொலைகாரர்கள், பிணந்திண்ணிப் பேய்கள். 

இக்கட்டுரை 2007 கார்த்திகையில் எழுதப்பட்டது அண்ணை. கதையில்லை. இதில் கூறப்படும் பல விடயங்கள் நடந்திருக்கின்றன. இவை எல்லாவற்றையும் ஒன்றாக்கி அதற்கு "ப்ரொஜெக்ட் பீக்கன்" என்று பெயர் வைத்திருக்கலாம். அல்லது உண்மையிலேயே அப்படியொரு பெயருடன் இத்திட்டத்தினை இலங்கையரசு முன்வைத்திருக்கலாம். 

வைக்கப்பட்ட பெயர், யார் வைத்தார்கள், யாரிடம் இத்திட்டத்தினை முன்வைத்தார்கள் என்கிற விடயங்களைத் தூக்கிவிட்டுப் பார்த்தால் எஞ்சியிருப்பது உண்மையாகவே நடந்த இனவழிப்புத்தான் என்பதை நீங்களும் மறுக்க மாட்டீர்கள். 

அமெரிக்காவோ அல்லது எந்தவொரு வெளிநாடுமோ ஈழத்தமிழருக்கு நீதியைத் தர வேண்டும், அப்படித் தராவிட்டால் அவர்கள் எங்களுக்கு எதிராக சதி செய்கிறார்கள் என்பதான கருத்தை நீங்கள் ஊக்குவிக்கவில்லையென நம்புகிறேன். ஏனெனில், நீதி, அறம் இவற்றை முழுமையான அடிப்படையாக வைத்து எந்த வெளிநாட்டின் வெளியுறவுக் கொள்கையும் இல்லை. எங்களுக்கு முன்னர் நடந்த ஆர்மேனியப் படுகொலையே சில ஆண்டுகள் முன்பு தான் அமெரிக்க செனட்டினால் துருக்கிக்கு நெருக்கடி கொடுக்கும் வழியாக ஏற்றுக் கொள்ளப் படும் முயற்சி நடந்தது. நாம் இன்னும் அந்த வாசல் படியையே நெருங்கவில்லை.

கைது விடயத்தில், அமெரிக்காவில் கைதானவர்கள் அமெரிக்க புலனாய்வின் undercover நடவடிக்கையால் மாட்டுப் பட்டோர். இது சதியல்ல, உண்மையாகவே அவர்கள் undercover agent ஐ நம்பி ஆயுதம் வாங்கச் சென்றோர் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ரஞ்சித் said:

வைக்கப்பட்ட பெயர், யார் வைத்தார்கள், யாரிடம் இத்திட்டத்தினை முன்வைத்தார்கள் என்கிற விடயங்களைத் தூக்கிவிட்டுப் பார்த்தால் எஞ்சியிருப்பது உண்மையாகவே நடந்த இனவழிப்புத்தான் என்பதை நீங்களும் மறுக்க மாட்டீர்கள். 

உண்மை 

முட்டையா? கோழியா?? என்பது தான் தெரியவில்லை 

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Justin said:

அமெரிக்காவோ அல்லது எந்தவொரு வெளிநாடுமோ ஈழத்தமிழருக்கு நீதியைத் தர வேண்டும், அப்படித் தராவிட்டால் அவர்கள் எங்களுக்கு எதிராக சதி செய்கிறார்கள் என்பதான கருத்தை நீங்கள் ஊக்குவிக்கவில்லையென நம்புகிறேன்.

இல்லை, நான் இதனைச் சதியென்று நம்பவில்லை. ஆனால், எங்களுக்காக உண்மையாக இவர்கள் செயற்படவில்லையென்பதை நம்புகிறேன். இன்றுவரை ஐ நா வில் எமக்காகக் குரல் கொடுப்பதுபோல இவர்கள் காட்டுவது பாசாங்கென்பதை நம்புகிறேன். 

11 minutes ago, Justin said:

கைது விடயத்தில், அமெரிக்காவில் கைதானவர்கள் அமெரிக்க புலனாய்வின் undercover நடவடிக்கையால் மாட்டுப் பட்டோர். இது சதியல்ல, உண்மையாகவே அவர்கள் undercover agent ஐ நம்பி ஆயுதம் வாங்கச் சென்றோர் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.

ஆயுத முகவர்களாக நாடகமாடியே இவர்களை கைதுசெய்தார்கள் என்று அறிந்திருந்தேன். புலிகளுக்காகவே இவர்கள் ஆயுதம் வாங்கச் சென்றார்கள் என்பதை மறுக்கவில்லை. இவர்கள் முன்னாலிருந்து செயற்பட்ட செயற்பாட்டாளர்களா? 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரஞ்சித் said:

இல்லை, நான் இதனைச் சதியென்று நம்பவில்லை. ஆனால், எங்களுக்காக உண்மையாக இவர்கள் செயற்படவில்லையென்பதை நம்புகிறேன். இன்றுவரை ஐ நா வில் எமக்காகக் குரல் கொடுப்பதுபோல இவர்கள் காட்டுவது பாசாங்கென்பதை நம்புகிறேன். 

ஆயுத முகவர்களாக நாடகமாடியே இவர்களை கைதுசெய்தார்கள் என்று அறிந்திருந்தேன். புலிகளுக்காகவே இவர்கள் ஆயுதம் வாங்கச் சென்றார்கள் என்பதை மறுக்கவில்லை. இவர்கள் முன்னாலிருந்து செயற்பட்ட செயற்பாட்டாளர்களா? 

செயல்பாட்டு மட்டத்தில் எவ்வளவு முன்னணியில் இருந்தார்களென அறியேன், ஆனால் உள்ளூர் ஈழத்தமிழர்களிடையே அறியப் பட்டவர்கள், சில அமைப்புகளில் இருந்திருக்கலாம்.

ஆனால், கைது செய்யப் பட்ட முறையில் எந்த வித்தியாசமும் ஏனைய கேஸ்களோடு ஓப்பிடுகையில் இல்லை.  Undercover FBI agents மூலம்  கிரிமினல்கள் கைது செய்யப் படுவது அமெரிக்காவில் சாதாரணம். ஒரு தகவலின் படி, இவர்களை அழைத்துச் சென்ற FBI ஏஜென்ற் முன்னிலையிலேயே இவர்கள் வன்னிக்குத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள், இதை விடப் பலமான ஆதாரம் குற்றத்தை நிரூபிக்க அரசுக்குத் தேவைப்படவில்லை!

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

இப்போது இவர்கள் எங்கே? விடுதலையாகி விட்டார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"These defendants allegedly sought to obtain, through a variety of means, weapons and materials to carry out a deadly campaign of violence. We will use every tool in our power to disrupt the activities of those who seek to harm others, both here and abroad," the US attorney general, Alberto Gonzales, said.

புலிகளுக்காக ஆயுதம் வாங்கியவர்களுக்குத் தீர்ப்பளித்த நீதிபதியின் கருத்து இது. அவருக்கே நிச்சயமாகத் தெரியும் இவ்வாயுதங்கள் அமெரிக்கர்களுக்கெதிராகவோ அல்லது அமெரிக்காவிலோ பாவிக்கப்படப்போவதில்லையென்று. மேலும், தமிழர்கள் தம்மைக் காத்துக்கொள்ளவே ஆயுதங்களை வாங்குகிறார்கள் என்பதும், சிங்களவர்களை அழித்து அவர்களின் நாட்டினைப் பிடிக்க அல்ல என்பதும் அமெரிக்கர்களுக்குத் தெரியாதது அல்ல. 

Leslie Wiser, the FBI special agent-in-charge in Newark, New Jersey, said: "This weekend's operation has severely impaired the Tamil Tigers' ability to acquire funding and weapons for their ongoing terror operations in Sri Lanka."

அவர்களைக் கைதுசெய்த எப் பி ஐ அதிகாரி, இது புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளை வெகுவாகப் பாதிக்கும், முடக்கிவிடும் என்று கூறுகிறார்.  தற்காப்பிற்காகப் போராடுவதற்கும், இன்னொருவனை அழித்து ஆக்கிரமிப்பதற்கும் இடையே இருக்கும் வேறுபாட்டினை இவர்கள் அறியவில்லையா? 

தமிழர்களின் விடுதலைப் போராட்டம் தொடர்பான அமெரிக்கர்களின் புரிதல் எவ்வகையானது எனும் கேள்வி எனக்கு ஏற்படுகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, ரஞ்சித் said:

கேஸ் முழு விபரமும் கீழே. இருவருக்கு நீண்ட காலத் தண்டனை, அவர்கள் கனேடியர்கள். சிலர் விடுதலையாகியுள்ளனர்.

https://www.justice.gov/archive/usao/nye/pr/2006/2006Aug21.html

அல்பேர்ட்டோ கொன்சலஸ் அந்த நேரம் சட்டமா அதிபர் - நீதிபதியல்ல.  சி.ஐ.ஏ யின் extraordinary rendition  சட்ட ரீதியானது என புஷ்சுக்கு ஆலோசனை கொடுத்த ஒருவர். அவர் மட்டுமல்ல, திணைக்களங்களில் இருக்கும் அமெரிக்கர்கள் சட்டத்தை அப்படியே நடைமுறைப்படுத்துவதை மட்டுமே செய்வர். கொள்கை மாற்றம் மெல்ல மெல்ல காங்கிரஸ், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மூலம் மட்டும் தான் நிகழும், அதிகாரிகள் கொள்கைகளைத் தீர்மானிப்பதில்லை.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமான குற்றவாளியாக கருத்தப்பட்ட சுரேஷ் ஸ்ரீஸ்கந்தராஜா இப்பொழுது ஒரு பல்துறை வழக்கறிஞர்.

https://suresh.law/#services

https://en.wikipedia.org/wiki/Suresh_Sriskandarajah

Suresh Sriskandarajah is a Canadian citizen who pleaded guilty to U.S. charges of conspiring to provide material support to the Tamil Tigers, a Sri Lankan terrorist organization. He was sentenced to two years in U.S. prison.[1][2]

Sriskandarajah was born in Sri Lanka. In 1989 his family fled to Montreal to avoid the violent civil war taking place in the northern part of the country.

In 2004 Sriskandarajah used Hotmail, a US company, to communicate regarding the Tamil Tigers.

Sriskandarajah was arrested in 2006 by Canadian authorities at the request of US authorities. He was released on bail pending his extradition challenges which was heard by the Supreme Court of Canada in 2012. Shortly after being extradited to USA, Sriskandarajah pleaded guilty and was sentenced to 2 years in prison.[3]

Both the Sri Lankan and Indian governments each sent a diplomatic note to ask U.S. to abandon the prosecution against Sriskandarajah “in light of his publicly recognized efforts to secure a lasting, peaceful reconciliation for the Tamil people” wrote Judge Raymond Dearie of the U.S. District Court. “Given the history of Sri Lanka’s prolonged and bitter conflict, the request is indeed an extraordinary initiative that evidences Suresh’s legitimate and admirable work to secure a lasting and just resolution of the tragic conflict. [4] The civil war in Sri Lanka came to a bloody end when the Tamil Tigers were defeated in 2009 along with a heavy civilian casualty.[5]

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Sasi_varnam said:

முக்கியமான குற்றவாளியாக கருத்தப்பட்ட சுரேஷ் ஸ்ரீஸ்கந்தராஜா இப்பொழுது ஒரு பல்துறை வழக்கறிஞர்.

இத்திரிக்கும் எனது  கேள்விக்கும் சம்பந்தமில்லாத  விட்டாலும்

தெரிந்த  கொள்வதற்காக  கேட்கிறேன்

குற்றவாளிகளாக நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு

சிறை இருந்து விடுதலையானோர்

இப்படியான பதவிகளுக்கு  மீண்டும் வரமுடியுமா???

பிரான்சில் முடியவே  முடியாது

ஒரு நாள்  சிறையில்  இருந்தாலே போற இடமெல்லாம்  சிவப்பில் வந்து நிற்கும்

இத  அடுத்த  தலைமுறையைக்கூட  தொடரும் பாதிக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Sasi_varnam said:

முக்கியமான குற்றவாளியாக கருத்தப்பட்ட சுரேஷ் ஸ்ரீஸ்கந்தராஜா இப்பொழுது ஒரு பல்துறை வழக்கறிஞர்.

https://suresh.law/#services

https://en.wikipedia.org/wiki/Suresh_Sriskandarajah

Suresh Sriskandarajah is a Canadian citizen who pleaded guilty to U.S. charges of conspiring to provide material support to the Tamil Tigers, a Sri Lankan terrorist organization. He was sentenced to two years in U.S. prison.[1][2]

Sriskandarajah was born in Sri Lanka. In 1989 his family fled to Montreal to avoid the violent civil war taking place in the northern part of the country.

In 2004 Sriskandarajah used Hotmail, a US company, to communicate regarding the Tamil Tigers.

Sriskandarajah was arrested in 2006 by Canadian authorities at the request of US authorities. He was released on bail pending his extradition challenges which was heard by the Supreme Court of Canada in 2012. Shortly after being extradited to USA, Sriskandarajah pleaded guilty and was sentenced to 2 years in prison.[3]

Both the Sri Lankan and Indian governments each sent a diplomatic note to ask U.S. to abandon the prosecution against Sriskandarajah “in light of his publicly recognized efforts to secure a lasting, peaceful reconciliation for the Tamil people” wrote Judge Raymond Dearie of the U.S. District Court. “Given the history of Sri Lanka’s prolonged and bitter conflict, the request is indeed an extraordinary initiative that evidences Suresh’s legitimate and admirable work to secure a lasting and just resolution of the tragic conflict. [4] The civil war in Sri Lanka came to a bloody end when the Tamil Tigers were defeated in 2009 along with a heavy civilian casualty.[5]

இவர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர் அல்ல என நினைக்கிறேன். இவர் கனேடிய அரசினால் 2006 இல் கைது செய்யப் பட்டு, 2012 வரை அமெரிக்காவிற்கு நாடு கடத்தலை எதிர்த்துப் போராடியவர், இதற்காக உரிய சட்ட உதவிகள் கனடாவில் கிடைத்தன. இறுதியில் 2 வருடங்கள் சிறை கிடைத்தது, plea deal ஆக இருக்கலாம்.

நான் மேலே தந்த இணைப்பில் இருக்கும் கேஸ் வேறு: நால்வருக்கு 15 முதல் 25 வருடங்கள் வரையான சிறை, அவர்களது துன்பம் இன்றும் தொடர்கிறது.

  • Thanks 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Justin said:

ஆச்சரியமாக இருக்கிறது ஜஸ்டின். 
சுரேஸ் ஸ்ரீஸ்காந்தா  கூட இது சார்ந்த குற்ற வழக்கில் தான் (புலிகளுக்கு ஆயுத கொள்வனவு செய்வது) தொடர்பாக கைது செய்யப்பட்டு சில வருடங்கள் சிறையில் இருந்தார். நாங்கள் எல்லாரும் கூட அவரின் விடுதலைக்காக நிறைய செயல்பாடுகளை செய்திருந்தோம்.

The 32-year-old, who earned university degrees in Waterloo, Ont., was arrested in 2006 along with Piratheepan Nadarajah, of Brampton, Ont., and freed on bail three years later before his extradition to the U.S. in 2012.

While in Canada, Sriskandarajah helped research and acquire aviation equipment, submarine and warship design software, night vision equipment and communications technology for the Tamil Tigers.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Sasi_varnam said:

மூன்று வெவ்வேறு கேஸ்கள் 2004 முதல் 2012 வரை புலிகள் விடயத்தில் நடந்திருக்கின்றன (வேறு சிறு கேஸ்கள் இருக்கின்றனவா என அறியேன்). சுரேசினுடையது மிகவும் வீக்கான, தொழில் நுட்ப உதவி வழங்க முயன்ற கேஸ்.

இரண்டாவது நான் மேலே குறிப்பிட்டது: இது சாட்சி ரீதியாக மிகவும் பலமானது.

மூன்றாவது ஒரு கேஸ் சிங்கப்பூர், மலேசிய, இந்தோனேசிய பிரஜைகள் சிலர் அமெரிக்க பிரதேசமான குவாம் (Guam) தீவில் - அதுவும் ஒரு undercover sting operation இல் சிக்கிய கேஸ். அதிலும் பலர் சிறை சென்று பின்னர் நாடுக் கடத்தப் பட்டனர். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Justin said:

மூன்று வெவ்வேறு கேஸ்கள் 2004 முதல் 2012 வரை புலிகள் விடயத்தில் நடந்திருக்கின்றன (வேறு சிறு கேஸ்கள் இருக்கின்றனவா என அறியேன்). சுரேசினுடையது மிகவும் வீக்கான, தொழில் நுட்ப உதவி வழங்க முயன்ற கேஸ்.

ஆம்

இந்த தொழில் நுட்ப  உதவியில் எனது  உறவு ஒன்றும் இருந்தது

சுரேஸ் கடைசிவரை  அவர்களை  காட்டிக்கொடுக்கவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

ஆம்

இந்த தொழில் நுட்ப  உதவியில் எனது  உறவு ஒன்றும் இருந்தது

சுரேஸ் கடைசிவரை  அவர்களை  காட்டிக்கொடுக்கவில்லை

இவர் வன்னியில்.   சென்று   கணினி சம்பந்தப்பட்ட கற்கைநெறிகளை.  படிப்பித்தவாரா???  மேலும் சிறைகாலத்தில்.  சட்டம் பயின்று   தனக்காக. வாதடியவார. ??? கனடாவில் குற்றவாளிகள்   சமூகத்தில் இணைய   பரீட்சை எழுத வேண்டுமா   ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kandiah57 said:

இவர் வன்னியில்.   சென்று   கணினி சம்பந்தப்பட்ட கற்கைநெறிகளை.  படிப்பித்தவாரா???  மேலும் சிறைகாலத்தில்.  சட்டம் பயின்று   தனக்காக. வாதடியவார. ??? கனடாவில் குற்றவாளிகள்   சமூகத்தில் இணைய   பரீட்சை எழுத வேண்டுமா   ???

இல்லை அண்ணா

இது வேறு

முழுமையாக இங்கே எழுதுவது?? சிலரின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இல்லை அண்ணா

இது வேறு

முழுமையாக இங்கே எழுதுவது?? சிலரின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது 

ஒகே. விசுகு  தங்கள் நேரத்திற்கும்   பதிலுக்கும்.   மிக்க நன்றிகள் 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/5/2023 at 10:39, Justin said:

மன்னிக்க வேண்டும். டொக்ரர் சதாசிவம் அல்ல, டொக்ரர் C.P தியாகராஜா. 2016 இல் கீழே இருக்கும் ஈழம் மறவர்  கட்டுரையில் "it was alleged that.." என்ற வாக்கியத்துடன் நீங்கள் மேலே குறிப்பிட்ட எல்லாம் இருக்கின்றன. இதனை வைத்து பரணி கிருஷ்ணரஜனி எழுதிய கட்டுரை யாழில் சில ஆண்டுகள் முன்பு பார்த்தேன்.

https://eelamaravar.wordpress.com/2016/04/02/project-beacon-divided-ltte-administered/

இந்த இணையத்தளத்திலிருந்த தகவலையே கருத்தாக பதிந்திருந்தேன், நான் கேட்ட கட்டுரை நீங்கள் குறிப்பிட்ட பரணிகிருஸ்ணரஜனி கட்டுரை.

On 8/5/2023 at 18:26, விசுகு said:

உண்மையில் நீங்கள் எங்கள் எழுத்துக்களை தான் புரிந்து கொள்வதில்லை என்று நினைத்தேன் ஆனால் நீங்கள் உங்கள் எழுத்துக்களையே புரிந்து கொள்வதில்லை என்று தற்போது புரிகிறது. நன்றி 

உங்களது கருத்துகள் எமது கருத்தாடலுக்குள் இடையூறாக உள்ளது என்பதனை பூடகமாக கூறினேன், குறையாக கூறவில்லை ஆனால் சில வேளை சம்பந்தப்பட்ட இரு தரப்பும் அதனை இரசிக்க மாட்டார்கள்(பொதுவாக கூறுகிறேன்).

Link to comment
Share on other sites

On 8/5/2023 at 11:55, ரஞ்சித் said:

இப்போது இவர்கள் எங்கே? விடுதலையாகி விட்டார்களா?

திரு என்பவர் ( வோட்டலூ மாண்வன்) விடுதலை ஆகி விட்டார். அத்தருணம் மைக்ரோசொவ்றில் வேலை செய்தவர். வேலையால் நீக்கப்பட்டார். தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, vasee said:

இந்த இணையத்தளத்திலிருந்த தகவலையே கருத்தாக பதிந்திருந்தேன், நான் கேட்ட கட்டுரை நீங்கள் குறிப்பிட்ட பரணிகிருஸ்ணரஜனி கட்டுரை.

உங்களது கருத்துகள் எமது கருத்தாடலுக்குள் இடையூறாக உள்ளது என்பதனை பூடகமாக கூறினேன், குறையாக கூறவில்லை ஆனால் சில வேளை சம்பந்தப்பட்ட இரு தரப்பும் அதனை இரசிக்க மாட்டார்கள்(பொதுவாக கூறுகிறேன்).

இது கருத்துக்களம்

இரண்டு பேரும் பேசுவதென்றால் வேறு வசதிகள் வாய்ப்புகள் உள்ளன. நன்றி 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

இது கருத்துக்களம்

இரண்டு பேரும் பேசுவதென்றால் வேறு வசதிகள் வாய்ப்புகள் உள்ளன. நன்றி 

நன்றி, நீங்கள் எனது கருத்தினை தனிப்பட்ட முறையில் எடுத்து கொண்டுவிடுவீர்களோ என கவலைப்பட்டேன் ஆனால் நீங்கள் சாதாரணமாக எடுத்து கொண்டது மகிழ்ச்சி.

ஆரம்பத்தில் கருத்தினை பதியாமல் விடவே முயன்றேன், கருத்தினை பதிந்தபின் அதற்காக வருந்தினேன், அதனை தவிர்த்திருக்கலாம் என, நல்ல வேளையாக நீங்கள் அதனை பெரிதாக எடுக்கவில்லை நீங்கள் உண்மையில் பெரிய மனிதர்தான்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • “சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய் Minnambalam Login1Nov 08, 2024 11:58AM நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தவெக தலைவர் விஜய் இன்று (நவம்பர் 😎 பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடந்த தவெக மாநாட்டிற்கு முன்பு வரை விஜய்யை ஆதரித்து சீமான் பேசி வந்தார். மாநாட்டின் போது திராவிடமும் தமிழ் தேசியமும் எனது இரண்டு கண்கள் என்று விஜய் பேசியதற்கு சீமான் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு விஜய் தரப்பில் இருந்து “சீமான் அவரது இதயத்திலிருந்து பேசவில்லை என்பதால் அதை தங்களது மூளைக்குள் கொண்டுபோக விரும்பவில்லை” என தவெக நிர்வாகி சம்பத் குமார் பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில் தான் தவெக தலைவர் விஜய் “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் சீமானுக்கு  இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த ஒரு வாரமாக சீமான் மற்றும் விஜய் ஆதரவாளர்கள் இணையத்தில் காரசாரமான கருத்து மோதலில் ஈடுபட்டு வந்த நிலையில், சீமானுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.   https://minnambalam.com/political-news/tvk-vijay-wishes-seeman-on-his-birthday/
    • அஞ்சு வயசுப் பொடியள் மாதிரி மைக்கைப் பிடிச்சுக்கொண்டு சுத்துறவையை வாயைப் பிளந்துகொண்டு பார்க்கும் கூட்டத்தைப் பார்க்கும்போதுதான் எனக்கு எரிச்சல்வரும்😆
    • சுமந்திரன் கண்ட பகல் கனவு! November 7, 2024   — அழகு குணசீலன் — பொதுத்தேர்தல் களநிலவரங்களின்படி ஜனாதிபதி திசாநாயக்கவுக்கு பாராளுமன்றத்தில் எதிரணியின் ஆதரவு தேவைப்படும் என்பது வெளிச்சமாகிறது. இதற்கு சிங்கள, சோனக தரப்பில் இருந்து ஆதரவைப்பெறுவதற்கு அவர்  முன்னுரிமை வழங்கவில்லை. மாறாக தமிழ்தரப்பின் தமிழ்த்தேசிய, இணக்க அரசியல் பலவீனத்தை பயன்படுத்தி ஆதரவைப் பெறுவது இலகுவானது என்று கருதி இருக்கக்கூடும். அதேவேளை ஒரு தரப்பில் மட்டும் தங்கியிருக்காமல் இரண்டு தரப்புக்களுக்கும் நம்பிக்கையை கொடுத்து வீடு இல்லையென்றால் வீணை என்ற நிலையில் தான் அநுரவின் நகர்வுகள் அமைந்திருக்கின்றன.     தன்னை வந்து சந்தித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மதியாபரணம் சுமந்திரனுடனும், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடனும் ஜனாதிபதி என்ன பேசினார் என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம். ஆனால் தெற்கில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் தான் வடக்கு தமிழ்தலைவர்களுடன் பேசுகிறேன், தொடர்பில் இருக்கிறேன் என்று ஜனாதிபதி அநுரகுமார பேசியிருந்தார். அவரின் இந்த பேச்சை அல்லது ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து படம் எடுத்துக்கொண்ட போது இடம்பெற்ற கருத்துப் பரிமாற்றத்தை தமிழ் அரசியல் வாதிகள் அரைகுறையாக விளங்கிக்கொண்டு அல்லது தங்கள் விருப்பத்திற்கு அதற்கு அர்த்தம் கற்பித்து பூனையை ஆனையாக்கி  தங்களை அமைச்சராக கனவு கண்டிருக்கிறார்கள் என்றே கொள்ளவேண்டி உள்ளது.  அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கிறோம் என்று இவர்கள் சொன்னதன் அர்த்தம் அநுரவுக்கு இப்போதுதான் புரிந்திருக்கிறது.  இதுவும் ஆதரவுக்கு சாராயத்தவறணை கேட்டதுபோல் அமைச்சர் பதவி கேட்டல்.  இது ஊழலா? இல்லையா? என்.பி.பி.யிடம் தான் கேட்கவேண்டும். சுமந்திரன், டக்ளஸை அநுர நம்புவதற்கு வெறுமனே பாராளுமன்ற இடைவேளை இலைக்கஞ்சி  மற்றும் தனிப்பட்ட சந்திப்பும் -உரையாடலும் மட்டும் காரணமல்ல. அதற்கும் மேலாக காரணங்கள் உண்டு. என்.பி.பி.யின் அல்லது ஜே.வி.பி.யின் ஈழப்போர் குறித்த நிலைப்பாட்டிற்கும்,  இவர்கள் இருவரின் நிலைப்பாட்டிற்கும், அநுரகுமார திசாநாயக்கவின் நிலைப்பாட்டிற்கும் முக்கிய அம்சங்களில் வேறுபாடு இல்லை. விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தை சுமந்திரனும், டக்ளசும் பயங்கரவாதப்போராட்டம் என்பவர்கள். புலிகள் பயங்கரவாதிகள் என்பவர்கள். இறுதியுத்தத்தில் நடந்தது இனவழிப்பு அல்ல என்பவர்கள். சர்வதேச போர்க்குற்ற விசாரணை தேவையற்றது அல்லது அதை சர்வதேச நீதிமன்றத்தில் நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்பவர்கள். இதன் மூலம் மறைமுகமாக இராணுவம் தண்டிக்கப்படாத உள்ளக பொறிமுறைக்கு ஆதரவு வழங்குபவர்கள். ஒட்டு மொத்தத்தில் அநுரகுமாரவின் கடந்த காலத்தை  மறைக்க அவர் இனவாதியல்ல என்றும் வெள்ளையடிப்பவர்கள்.  மறு பக்கத்தில் அமைச்சரவையில் ஒரு தமிழரையாவது வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் பிராந்திய, சர்வதேச பூகோள அரசியலில் ஜனாதிபதிக்கு உள்ளது. அண்மைக்காலமாக தேர்தல் பிரச்சார கூட்டங்களில் சுமந்திரன் அமைச்சர் பதவி பற்றி வெளிப்படையாக பிரஸ்தாபிக்கிறார். அமைச்சர் பதவியையிட்டு பரிசீலிக்க தயாராக இருப்பதாக பல தடவைகள் அறிவித்துள்ளார். அது பற்றி ஊடகவியலாளர்கள் கேட்கும் போது புளகாங்கிதம் அடைகிறார். ஜே.வி.பி. யாழ்.மாவட்ட அமைப்பாளர் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரை அழைத்து வந்து யாழில் ஊடகச்சந்திப்பு நடாத்தி  இவர்களின் பிரச்சார யுக்தியை மறுத்திருந்தபோதும் சுமந்திரன் அமைச்சர் பதவி குறித்து தொடர்ந்தும் பேசி வந்தார். சிலவேளை அது தனக்கல்ல டக்ளஸ்க்கு என்று நினைத்தார் போலும். இதனால் தான் அமைச்சராவதை நியாயப்படுத்தும் வகையில் சில நகர்வுகளை  தொடர்ந்தும் மேற்கொண்டு வந்தார். தேர்தலின் பின்னர் இது குறித்து மக்கள் அறிந்திருந்தார்கள் என்றும் தமிழரசுக்குக்கிடைத்த தேர்தல் வெற்றி அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கான தமிழ்மக்களின் அங்கீகாரம் என்றும் சுமந்திரன் அறிவிக்கக்காத்திருந்தார். இதே பாணியில் தான் சுமந்திரன் சம்பந்தரை பதவி விலக கோரியபோதும்  திருகோணமலை மக்கள் எனது முதுமையை அறிந்துதான் தனக்கு வாக்களித்ததாகவும் அது மக்களின் அங்கீகாரம் என்றும் கூறி சம்பந்தர் பதவிவிலக மறுத்திருந்தார்.  அண்மையில்  ஒரு கூட்டத்தில் செல்லையா குமாரசூரியர், கதிர்காமர் ஆகியோருடன் மு.திருச்செல்வத்தை ஒப்பிட்டு சுமந்திரன் பேசியிருந்ததும் மற்றொரு காய்நகர்வு. இதன் மூலம் மக்களால் தெரிவு செய்யப்படாத, நியமிக்கப்பட்ட கடந்தகால தமிழ் அமைச்சர்கள் போன்று தான் செயற்பட மாட்டேன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட திருச்செல்வம் போல் செயற்படுவேன் என்பதாகும். தேவை ஏற்பட்டால் அமைச்சர் பதவியை திருச்செல்வம் போன்று இராஜினாமாச் செய்வேன் என்பதையும் சொல்லாமல் சொல்லியிருந்தார். நல்லையா, கே.டபிள்யு.தேவநாயகம், செ.இராசதுரை ஆகியோரை சுமந்திரன் பெயர் குறிப்பிடாதற்கும், ஏன்? டக்ளஸ் தேவானந்தாவை பெயர் குறிப்பிடாததற்கும் அவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்று தனது நிலைப்பாட்டிற்கு நியாயம் கற்பிக்க முயற்சித்ததே காரணம். 1965 இல் இருந்த அரசியல் சூழ்நிலை வேறு இன்றைய அரசியல் சூழ்நிலை வேறு. அன்றைய பாராளுமன்ற ஜனநாயகத்திலே தமிழரசுக்கட்சி தொடர்ச்சியாக கொழும்பு அரசியலில் தோல்வியடைந்து வந்துள்ளது. அந்த  தோல்வியின் இடத்திற்கு தமிழரசை கொண்டு வந்து சேர்த்திருப்பவர் சுமந்திரன். இன்றைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சியில் நிலைமை இன்னும் மோசமானது. திருகோணமலையை புனிதநகராக பிரகடனம் செய்வதிலும், திருகோணமலையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பதிலும்  திருச்செல்வம் தோற்றுப் போனார்.  திருகோணமலையில் தமிழ் பல்கலைக்கழகம் அல்ல இந்து பல்கலைக்கழகம் அமையவேண்டும் என்ற ஜீ.ஜீ. பொன்னம்பலத்திடம் தமிழரசு தோற்றுப்போனது.  கிழக்கு மாகாணத்தில் முதல் பல்கலைக்கழகம் அமைந்துவிடும் என்பதை தடுக்க மேற்கொள்ளப்பட்ட வைக்கோற்பட்டறை நாய் அரசியல் இது.  அது மட்டுமா ? மன்னம்பிட்டி பாலம்வரை இருந்த மட்டக்களப்பு மாவட்ட எல்லையை தீர்க்கதரிசனமற்ற அரசியலால் பொலனறுவை மாவட்டத்திற்கு பிரித்துக் கொடுத்தவர்  அன்றைய  உள்ளூராட்சி அமைச்சராக இருந்த  சுமந்திரன் முன் உதாரணம் காட்டும் இந்த திருச்செல்வம். இந்த நிலையில் சுமந்திரனின் அமைச்சர்பதவி “ஆதரவு” கருத்துக்கு எதிராக தமிழரசுக்கட்சியின் தீவிர தமிழ்த்தேசிய பிரிவினரிடம் இருந்து எதிர்ப்பு குரல் எழும்பியது. சுமந்திரனின் சகா சாணக்கியனும் அமைச்சர் பதவி பற்றி மட்டக்களப்பு சந்திப்புக்களில் பேசி வந்தார். இந்த நிலையில் சிறிதரன் தரப்பும், மட்டக்களப்பில் சிறிநேசன், அரியநேத்திரன் ஆகியோரும் அமைச்சர் பதவி “பரிசீலிப்புக்கு” எதிராக கடும் கண்டனங்களை வெளியிட்டனர்.  “அமைச்சர் பதவிக்காக தமிழரசுக்கட்சியை தந்தை செல்வா உருவாக்கவில்லை. அமைச்சு பதவிக்காக எனில் தமிழரசுக்கு எவரும் வாக்களிக்கத் தேவையில்லை” என்று சுமந்திரன், சாணக்கியன் தலையில் ஒரு குண்டை தூக்கிப்போட்டார் ஜனாதிபதி பொதுவேட்பாளர் அரியம்.   மறுபக்கத்தில் முல்லைத்தீவு பிரச்சார கூட்டத்தில் பிரதமர் ஹரிணி அபயசேகரவும் அரசாங்கத்தின் திட்டவட்டமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.”  வேறு எந்த கட்சியில் இருந்தும் அமைச்சர்களை நியமிக்க மாட்டோம். இருபத்தைந்து அமைச்சர்களும் என்.பி.பி. உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று  அறிவித்தார். அப்போது தான் சுமந்திரன்”ஞானம்” பெற்றவராக பரிசீலிப்பது என்றுதான் கூறினேன் என்றும், அது அமைச்சர் பதவியை ஏற்பதாகாது, அதைக்கட்சியே தீர்மானிக்கும் என்றும்   வழமையான சுத்துமாத்து அப்புக்காத்துதன வாதத்தை முன் வைத்து மறுதலித்துள்ளார். கட்சியே தானாக இருக்கையில் கட்சி எப்படி தீர்மானிப்பது. சுமந்திரனின் கருத்துக்கள் தொடர்பாக யாழ், கொழும்பு ஊடகங்கள் பலவும் செய்திகளை வெளியிட்டு இருந்தன. வாரத்திற்கு இருமுறை முன்னாள் அமைச்சர் உதய கம்பவெல  சுமந்திரனுக்கு வெளிநாட்டு அல்லது நிதி அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும், அதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், சமஷ்டி தீர்வு வழங்கப்படபோகிறது என்றெல்லாம் இனவாத தொனியில் கருத்துக்களை வெளியிட்டுவந்தார். அவற்றை எல்லாம் கேட்டும், படித்தும் வந்த சுமந்திரன் கடந்த ஒரு மாதகாலமாக எந்த மறுப்பையும் தெரிவிக்கவில்லை. அல்லது “பரிசீலனை” க்கு வியாக்கியானமும் கொடுக்கவில்லை. அவர் கனவுலகில் அமைச்சராகவே பவனிவந்தார்.  பிரதமர் ஹரிணி அபயசேகர வடக்கு தமிழ்மக்களை ஏமாற்று பேர்வழிகளில் இருந்து காப்பாற்றியிருக்கிறார். அதற்கு யாழ்ப்பாண மக்கள் ஒரு எம்.பி.யை என்.பி.பி.க்கு வழங்கி நன்றி செலுத்தினாலும் தகும். இல்லாவிட்டாலும் என்.பி.பி.யின் தேசிய பட்டியல் ஊடாக இராமலிங்கம் சந்திரசேகர் புதிய அமைச்சரவையில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அமைச்சர் கனவு என்றால் …..,  பாராளுமன்றத்தில் பெரும்பான்மை  குறித்த இரகசியம் ஒன்றும் வெளியாகி இருக்கிறது. உண்மையில் அநுரகுமார திசாநாயக்க ஆட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை விரும்பவில்லை என்று புகலிட ஜே.வி.பி.வட்டாரங்களில் கசிகிறது.  அதற்காகத்தான் பிரச்சாரங்களின்போது 113 அல்லது 120  பற்றி அவர்கள் பேசுகிகிறார்களாம். இந்த இலக்கில் தமிழரசு,ஈ.பி.டி.பி. போன்ற பலவீனமான கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை கொண்டு நடாத்த முடியும் என்று நம்புவதாக தெரிகிறது.  மூன்றில் இரண்டு பெரும்பான்மையான 150 ஆசனங்களை பெற்றால் இனப்பிரச்சினைக்கான தீர்வு, அதிகார பகிர்வு, புதிய அரசியலமைப்பு போன்றவற்றை தட்டிக்கழிப்பது கஷ்டம் என்று உள்ளுக்குள் கதையடிபடுகிறது.  இன்னொரு புறத்தில் வாக்குறுதியளித்தபடி  நிறைவேற்று அதிகார முறையை. ஒழிக்கவும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. இவற்றை தவிர்ப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமல் இருப்பதே மேல் என்றும், இதன் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த பிராந்திய, சர்வதேச அழுத்தத்தை எதிர்க்கட்சிகளின் தலையில் கட்டிவிடலாம் என்ற வியூகம் வகுக்கப்படுகிறது என்று அந்த வட்டாரங்களில் இருந்து அறியக் கிடைக்கிறது. இந்த அரசியல் வியுகத்திலேயே தென்னிலங்கையில் பலமான எதிர்த்தரப்பை தவிர்த்து பலவீனமான, நிபந்தனைகளை விதிக்க முடியாத அல்லது  அழுத்தம் தரும் சக்தியற்ற சிறுபான்மை கட்சிகளின் குறைந்த அளவான உறுப்பினர்களின் ஆதரவுடன் சாதாரண பெரும்பான்மையுடன் ஆட்சியை நகர்த்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்த அரசியலுக்கு  ஆதரவளிக்க வடக்கில் நான் முந்தி நீ முந்தி என்று போட்டி நடக்கிறது. சந்தர்ப்பத்திற்கு  ஏற்ப தந்திரோபாயங்களை வகுத்து பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிக்கொள்வதும்  ஒரு மாற்றம் தானே….? இதுதான் சுமந்திரனின்  தேர்தல் விளம்பரம் சொல்லும் அடையாளம்மாறாத மாற்றம்……! ஆனால் போகிறபோக்கில்  தமிழின அடையாளமே  அழியப்போகிறது….!   https://arangamnews.com/?p=11415
    • ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்குள் லாங்கேட் எம்எல்ஏ குர்ஷித் அகமது சேக், சட்டப்பிரிவு 370-ஐ திரும்பக் கொண்டு வர வேண்டும் என்று பதாகை காட்டியதால் வியாழக்கிழமை பேரவையில் பரபரப்பும் கைகலப்பும் ஏற்பட்டது. குர்ஷித் பாராமுல்லா மக்களவை உறுப்பினரும், சிறையில் இருக்கும் பொறியாளர் ரஷித்தின் தம்பியுமாவார். அவாமி இட்டேஹக் கட்சியைச் சேர்ந்த குர்ஷித் காட்டிய பதாகையில்,‘சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏவை மீட்டெடுக்க வேண்டும், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்’ என்று எழுதப்பட்டிருந்தது. சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக எம்எல்ஏவுமான சுனில் சர்மா இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அதனைப் பொருட்படுத்தாத குர்ஷித் பேரவையின் மையப்பகுதிக்குள் வந்தார். சபாநாயகரும் குர்ஷித்தை அவரது இருக்கையில் சென்று அமர அறிவுறுத்தினார். என்றாலும் தொடர்ந்து அவர் அவையின் மையத்தில் பதாகையுடன் நின்றார். இதனால் சில பாஜகவினர் அவரது கையில் இருந்து பதாகையை பறிக்க முயன்றனர். இதனால் கைகலப்பு ஏற்பட்டது. அப்போது பிடிபி கட்சியைச் சேர்ந்த புல்வாமா எம்எல்ஏ வகீத் பாரா, குர்ஷித்தை காப்பாற்ற முயன்றார். இதனிடையே, மக்கள் மாநாடு கட்சியின் சஜத் லோன் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏகள் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றினர். அந்தத் தீர்மானத்தில், "மத்திய அரசு, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019-ஐ இயற்றியதையும், அரசியலமைப்புக்கு விரோதமாக ஒருதலைபட்சமாக சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ ரத்துசெய்யப்பட்டதையும் இந்த அவை வன்மையாக கண்டிக்கிறது. இந்த நடவடிக்கைகள் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தையும், மாநில அந்தஸ்தினையும் பறித்தது. இந்திய அரசியலமைப்பு ஜம்மு காஷ்மீருக்கும் அதன் மக்களுக்கும் வழங்கிய அடிப்படை உத்தரவாதம் மற்றும் பாதுகாப்பினை குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது. இந்த பேரவை, சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ பிரிவுகளை அதன் அசல் தன்மையுடன் எந்த விதமான மாற்றமுமின்றி உடனடியாக மீட்டெடுக்க வேண்டும். மேலும் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019-ன் படி ஏற்படுத்தப்பட்ட மாறுதல்களை திரும்பப்பெறவும் கோருகிறது. ஜம்மு காஷ்மீரின் தனித்துவமான அடையாளம், கலாச்சாரம், அரசியல் சுயாட்சியைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் அனைத்து சிறப்பு வசதிகள் மற்றும் உத்தரவாதங்களை மீட்டெடுப்பதன் மூலம், ஜம்மு காஷ்மீரின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக புனிதத்தை மதிக்குமாறு மத்திய அரசினை நாங்கள் வலியுறுத்துகிறோம்."என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/198117
    • பதிவு செய்யப்படாத ஆடம்பர காரினை 2020 முதல் லொகான் ரத்வத்தை பயன்படுத்தியுள்ளார் - விசாரணைகளின் மூலம் உண்மை வெளியானது முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான்ரத்வத்தை சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட பதிவுசெய்யப்படாத இலகத்தகடுகள் அற்ற ஆடம்பரகாரினை 2020 ம் ஆண்டிலிருந்து பயன்படுத்தி வந்துள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. லொகான் ரத்வத்தையின் மனைவியின் மிரிஹான வீட்டில் மீட்கப்பட்ட கார் குறித்தே இந்த விபரங்கள் தெரியவந்துள்ளன. கண்டியில் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட தனது செயலாளரே அந்த காரை கொண்டு வந்தார் என தெரிவித்ததன் மூலம் லொகான் ரத்வத்தை விசாரணையை குழப்ப முயன்றார் என பொலிஸ் சட்டப்பிரிவின் தலைவர் பிரதிபொலிஸ்மாஅதிபர்  ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். எனினும் விசாரணைகளின் போது மீட்கப்பட்ட பல வீடியோக்கள் ஆவணங்கள் ரத்வத்தை அந்த காரை 2020 ம் ஆண்டிலிருந்து பயன்படுத்துவதை வெளிப்படுத்தியுள்ளன. மேலும் அந்த விசாரணையின் போது போலியான செசி இலக்கத்தினை பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை மிரிஹானவில் உள்ள அவரது மனைவியின் வீட்டில் பதிவுசெய்யப்படாத  வாகனம் காணப்பட்டதை தொடர்ந்து கைதுசெய்யப்ட்டார். https://www.virakesari.lk/article/198166
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.