Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Spring Offensive: உக்ரேன் இரசியாவை விரட்டுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, இணையவன் said:

இந்தியாவோடு சேர்ந்து ஐநாவில் தமிழர்களுக்குக் கொஞ்சமேனும் ஆதரவாகக் கொண்டுவரும் ஒவ்வொரு தீர்மானத்தையும் வாதாடி முறியடிப்பது யார் ? 🤣

Carrot and stick / good cop bad cop  எல்லாமே உங்களைப் போன்ற ஆட்களுக்காக சொல்லப்பட்டவைதான். 

நாங்கள் யாருக்குச் சேவகம் செய்கிறோம் என்பதை அறியாமலே சேவகம் செய்ய வைத்திருப்பதுதான் மேற்கத்தேயப் பொருண்மிய, சமூக, அரசியற் கொள்கைகளின் திறமை. 

😏

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

Carrot and stick / good cop bad cop  எல்லாமே உங்களைப் போன்ற ஆட்களுக்காக சொல்லப்பட்டவைதான். 

நாங்கள் யாருக்குச் சேவகம் செய்கிறோம் என்பதை அறியாமலே சேவகம் செய்ய வைத்திருப்பதுதான் மேற்கத்தேயப் பொருண்மிய, சமூக, அரசியற் கொள்கைகளின் திறமை. 

😏

அதுக்கு கூட நமக்கு இடம் தந்தவன் என்ற ஒரு காரணமாவது இருக்கும் ஆனால் நீங்கள் தூங்காமல் செய்யும் வேலை உங்கள் பரம்பரைக்கே உலை வைக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விசுகு said:

அதுக்கு கூட நமக்கு இடம் தந்தவன் என்ற ஒரு காரணமாவது இருக்கும் ஆனால் நீங்கள் தூங்காமல் செய்யும் வேலை உங்கள் பரம்பரைக்கே உலை வைக்கும். 

சாபமிடுகிறீர்களா ?  அது உங்களுக்கு அழகல்ல. 

அதுசரி,  எதனை யார் செய்தார்கள் ? இலங்கைத் தமிழருக்கு எது உலை வைக்கிறது? 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

சாபமிடுகிறீர்களா ?  அது உங்களுக்கு அழகல்ல. 

அதுசரி,  எதனை யார் செய்தார்கள் ? இலங்கைத் தமிழருக்கு எது உலை வைக்கிறது? 

இது சாபமல்ல
குடியிருக்க விட்டவர்களுக்கு  நீங்கள் வைக்கும் உலை
உங்கள் பரம்பரையையே  காவு  கொடுக்கக்கூடியது 
மரத்தில் இருந்தபடியே  கிளையை வெட்டிக்கொண்டிருப்பதன்  பலனைஅனுபவிக்கத்தானே  வேண்டும்?

மாற்றுக்கருத்து இருப்பது  தவறல்ல
ஆனால் அதுவும் நமது மண்ணுக்கு  நமக்கு  வாழ்வளித்த மண்ணுக்கு  பகைவனுடன் 
கை  கோர்ப்பதாக  இருக்கக்கூடாது
 

இனி  இதில் எழுத எதுவுமில்லை

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

இது சாபமல்ல
குடியிருக்க விட்டவர்களுக்கு  நீங்கள் வைக்கும் உலை
உங்கள் பரம்பரையையே  காவு  கொடுக்கக்கூடியது 
மரத்தில் இருந்தபடியே  கிளையை வெட்டிக்கொண்டிருப்பதன்  பலனைஅனுபவிக்கத்தானே  வேண்டும்?

மாற்றுக்கருத்து இருப்பது  தவறல்ல
ஆனால் அதுவும் நமது மண்ணுக்கு  நமக்கு  வாழ்வளித்த மண்ணுக்கு  பகைவனுடன் 
கை  கோர்ப்பதாக  இருக்கக்கூடாது
 

இனி  இதில் எழுத எதுவுமில்லை

நன்றி

யார் பகைவனுடன் கைகோர்த்தது? எனது கருத்தைக் கூறினால் பகைவனுடன் கைகோர்த்ததாகிவிடுமா? 

அழுவதற்கும் ஒரு அளவு வேண்டுமில்லையா? 

😏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, விசுகு said:

இது சாபமல்ல
குடியிருக்க விட்டவர்களுக்கு  நீங்கள் வைக்கும் உலை
உங்கள் பரம்பரையையே  காவு  கொடுக்கக்கூடியது 
மரத்தில் இருந்தபடியே  கிளையை வெட்டிக்கொண்டிருப்பதன்  பலனைஅனுபவிக்கத்தானே  வேண்டும்?

மாற்றுக்கருத்து இருப்பது  தவறல்ல
ஆனால் அதுவும் நமது மண்ணுக்கு  நமக்கு  வாழ்வளித்த மண்ணுக்கு  பகைவனுடன் 
கை  கோர்ப்பதாக  இருக்கக்கூடாது
 

இனி  இதில் எழுத எதுவுமில்லை

நன்றி

பெற்ற தாயாகினும் தவறை சுட்டிக்காட்டவேண்டும் விசுகர்.யாருடமாகினும் நன்றிக்கடன் பட்டாலும் நீதி நியாத்தை சுட்டிக்காட்டனும் விசுகர்.நன்றி எனும் பெயரில்  அதர்மங்களை கண்டும் காணாமல் இருக்கக்கூடாது விசுகர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, nedukkalapoovan said:

உக்ரைன் மேற்கொண்ட டான்பாஸ் பிராந்திய ரஷ்சிய மொழி பேசும்.. மக்கள் மீதான இனப்படுகொலையினை அடுத்துத்தான்.. இந்த யுத்தமே.. 2014 இல் ஆரம்பமானது. அதன் நீட்சிதான் ரஷ்சியாவின் 2022 நேரடித் தலையீடு. அதாவது ரஷ்சியாவின் விசேட இராணுவ நடவடிக்கை. இதனை ரஷ்சியா யுத்தம் என்று கூடச் சொல்லவில்லை. மேலும் இது உக்ரைனை அழிப்பதற்கானதோ.. ஆக்கிரமிப்பதற்கானதோ அல்ல..

The young Zelensky before he was bought by the cabal: "In the East [Donbas] & Crimea, people want to speak Russian.. leave them alone.. Russia and Ukraine are brotherly people. We are one colour, one blood... I know many millions of people who live in Russia who are wonderful.."

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 12/5/2023 at 20:46, ஏராளன் said:


இரசியாவிற்கு அதிச்சிக்கு மேல் அதிர்ச்சி

உக்ரேனின் இளவேனிற்கால தாக்குதல் (Spring Offensive) ஐ தடுப்பதற்காக 2023 மே மாதம் 6-ம் திகதி உக்ரேனின் பல்வேறு நகரங்கள் மீது இரசியா பல ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. அவற்றில் ஒரு மீயுயர்வேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணை ஒன்றை உக்ரேன் அமெரிக்காவின் patriotic என்னும் வான்பாதுகாப்பு முறைமை மூலம் சுட்டு வீழ்த்தியதாக உக்ரேன் அறிவித்து உலகப் படைத்துறையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மீயுயர்வேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணையை இடைமறித்து அழிக்கும் வலிமை எந்த நாட்டிடமும் இல்லை என பரவலாக நம்பப்பட்டது. மீயுயர்வேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணைகளை உருவாக்குவதில் இரசியாவும் சீனாவும் அமெரிக்காவிலும் பார்க்க ஒரு படி மேல் உள்ளன எனவும் நம்பப்பட்டது. அந்த அதிச்சியைத் தொடர்ந்து அமெரிக்கா $1.2 பில்லியன் உதவியை உக்ரேனுக்கு வழங்கவுள்ளது என்ற செய்தி 2023 மே 9-ம் திகதி வெளிவந்தது. இது உக்ரேனின் நீண்ட கால வான் பாதுகாப்புக்கானது எனவும் அமெரிக்கா சொன்னது. அமெரிக்காவும் மற்ற நேட்டோ நாடுகளும் தொடர்ச்சியாக உக்ரேனுக்கு படைக்கலன்களை வழங்கிக் கொண்டிருக்க முடியாது என நம்பிய புட்டீன் இதை எப்படி எதிர் கொள்ளப்போகின்றார்? அமெரிக்கா தனது புதிய படைக்கலன்களை உக்ரேன் போர்க்களத்தின் இரசியாவின் புதிய படைக்கலன்களுக்கு எதிராக பாவித்து தேர்வுக்கு உள்ளாக்குகின்றதா என்பது இரசியாவிற்கு இன்னும் ஒரு அதிர்ச்சி. இரசியாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை அமெரிக்க patriotic சுட்டு வீழ்த்திய செய்தி மே  6ம் திகதி வெளிவந்தது.

அமெரிக்க தயாரிப்பு பட்ரியட் ஏவுகணையை தாக்கி அழித்தது ரஸ்யா?

16 MAY, 2023 | 04:29 PM
image

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட உக்ரைனின் பட்ரியட் ஏவுகணை பாதுகாப்பு பொறிமுறையை  அழித்துள்ளதாக ரஸ்யா அறிவித்துள்ளது.

உக்ரைனின் மீது மேற்கொள்ளப்பட்ட கின்ஜால் ஹைப்பர்சோனிக் ஏவுகணை தாக்குதல் மூலம் பட்ரியட் ஏவுகணை பொறிமுறையை அழித்துள்ளதாக ரஸ்யா தெரிவித்துள்ளது.

மோதலில் ஈடுபட்டுள்ள ரஸ்ய படையினர் மற்றும் உக்ரைனின் வெடிபொருள் சேமிப்பகங்களை இலக்குவைத்து இந்த தாக்குதல்களை மேற்கொண்டதாக ரஸ்யா தெரிவித்துள்ளது.

18 ஏவுகணைகளை அழித்துள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/155430

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யா ஏவிய 29 ஏவுகணைகளை தான் வீழ்த்தியதாக உக்ரேன் தெரிவிப்பு

Published By: SETHU

18 MAY, 2023 | 06:19 PM
image

உக்ரேன் மீது ரஷ்யா நேற்றிரவு ஏவிய 30 ஏவுகணைகளில் 29 ஏவுகணைகளை தான் வீழ்த்தியதாக உக்ரேன் கூறியுள்ளது. எனினும், திட்டமிடப்பட்ட அனைத்து இலக்குகளும் அழிக்கப்பட்டதாக ரஷ்யா கூறியுள்ளது.

ரஷ்யா முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் எண்ணிக்கையான ஏவுகணைகளை கியீவ் நகரம்மீது நேற்றரவு ஏவியது என உக்ரேன் கூறியுள்ளது. 

தரை, கடல், வானிலிருந்து 30 சீர்வேக ஏவுகணைகளை ரஷ்யா ஏவியதகாவும், இதனால் ஒருவர் உயிரிழந்ததாகவும் உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சு  தெரிவித்தள்ளது. 

இவற்றில் 29 ஏவுகணைகளை உக்ரேனிய வான் பாதுகாப்பு படைப்பிரிவினால் அiழிக்கப்பட்டதாகவும் அவ்வமைக்சு தெரிவித்துள்ளது. 

எனினும், நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதல்களில், அனைத்து இலக்குகளும் அழிக்கப்பட்டன என ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரேனியப் படையினரின் ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் இத்தாக்குதல்களில் அழிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. (AFP Photo)

https://www.virakesari.lk/article/155638

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.