Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலமும் தாயகமும்…………

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலமும் தாயகமும்…………

போர் நடந்த காலங்களில் புலம் பெயர் தேசங்களில் வாழும் எம்மவர் தாயகத்திற்குச் செய்த பொருளாதார உதவிகள் எம்மைப் பட்டினிச் சாவிலிருந்து தடுத்தது.

போர் முடிந்த பின்பு  எமது தாயக மண்ணின் புனர்வாழ்வு நடவடிக்கைகளில் புலம்பெயர் தேசங்களில் வாழும் உறவுகளின் பங்களிப்பு போற்றுதற்குரியது. அரசாங்கத்தை மட்டும் நம்பி இருந்தால் இவ்வளவு வேகமாக எம்மால் மீண்டெழுந்து இருக்க முடியாது.

அந்த வகையில் அவர்களின் உதவிகள் நன்றிக்குரியது. வணக்கத்துக்கும் உரியது.
தாயக மண்ணுக்கான உங்களது சேவைகள் செம்மையுறக் கவனிக்க வேண்டியவை எனச் சிலவற்றை முன் வைக்கிறேன். 

01. நீங்கள் தாயகம் வரும் போது பொது நிகழ்வு ஒன்றில் உதவித் திட்டமொன்றை அறிவிக்கிறீர்கள். தொடங்குகிறீர்கள். ஆனால் சில இடங்களில் அல்லது பல இடங்களில் அத்தகைய உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்படுவதில்லை.

இடையில் நின்று போக பாதிக்கப்படுவது உதவி தேவைப்படுவோர் தான். ஏனெனில் அவர்களுக்கு உதவி போகிறது தானே என நினைத்து ஏனையோர் உதவ மாட்டார்கள்.

குறிப்பாக அரச துறையின் செயல் திட்டங்களிலிருந்து விலக்கப்படுகின்றனர். ஆகவே திட்டங்களின் தொடர்ச்சித் தன்மையை உறுதி செய்யுங்கள். சிலரது கல்விப் பயணம், வாழ்வாதாரம் என்பவை இதனால் பாதிக்கப்படுகின்றது.

02. அமைப்பு ரீதியாகச் செயற்பட்டு வீட்டுத் திட்டங்கள் போன்றவற்றுக்குப் பயனாளிகளை உள்வாங்குகின்றீர்கள். 

சில இடங்களில் அத்தகைய திட்டங்கள் சொல்லளவில் இருக்கும் போது அரசாங்க, அரசசார்பற்ற நிறுவனங்களது உதவித் திட்டங்களில் அவர்கள் உள்வாங்கப்பட மாட்டார்கள்.

ஏனெனில் அரசாங்கத்தின் பிரதிநிதியாக கிராம மட்டத்தில் இயங்கும் கிராம அலுவலர் அல்லது அபிவிருத்தி அலுவலர் பயனாளிகள் தொடர்பான பட்டியலைத் தயாரிக்கும் போது இவருக்கு வெளிநாட்டிலுள்ள இன்னார் உதவி செய்வதாக அறிவித்தார்கள். ஆகவே எமது பட்டியலில் இவரை இடத் தேவையில்லையென நீக்கி விடுவார்கள்.

அதனால் வறிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

03. தாயகத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த. சாதாரணதரம் ஆகிய பரீட்சைகளில் திறமை காட்டுவோருக்கு மடிக்கணனி- லப்ரொப் வழங்குவதைத் தவிருங்கள். இவற்றைப் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு உபயோகித்து கல்வியைப் பண்புகளைத் தொலைத்தோர் பலர் உண்டு.

ஸ்மார்ட் தொடர்பாடல் சாதனங்களின்  யுகத்தைத் தெரியாத பெற்றோர் தான் நிறையப் பேர். அதனால் அவர்களுக்குப் பிள்ளைகளைக் கண்காணித்து வழி நடத்தத் தெரிவதில்லை.

04. வறிய மாணவர்களுக்குக் கல்விக்குரிய உதவித் தொகையை வழங்கும் போது மாதாந்தம் குறித்த ஒரு திகதியில் கிரமமாகக் கிடைப்பதற்குரிய பொறிமுறையை தாயகத்தில் உருவாக்கிக் கொள்ளுங்கள். ஒரே முறையில் பெரிய தொகைக் காசைக் கொடுக்கும் போது அது வேறு நோக்கத்திற்குத் தவறாகப் பயன்படுத்தப்படும் நிலை உள்ளது. 

அல்லது காசைப் பொறுப்பாக வைத்திருப்போர் துஸ்பிரயோகம் செய்யும் நிலை உருவாகின்றது.
கொடுக்கின்ற பணமானது தாயகத்தின் வாழ்க்கைச் செலவு தொடர்பான புரிதலைக் கொண்ட தொகையாக இருப்பதை உறுதி செய்யுங்கள். 

மிகச் சிறிய தொகையை வழங்குதல் திட்டத்தின் பயனாளியைச் சரியான முறையில் உயர்த்தாது.

05. தாயகத்திலுள்ள வறிய சமூகப் பிரிவினருக்கு காசு கொடுப்பதற்குப் பொறுப்பாக ஒருவரை நியமித்தால் அவர் சரியாக அப் பணியை ஆற்றுகின்றாரா? பயனாளிகள் சரியாக அதனைப் பயன்படுத்தி முன்னேறுகின்றனரா?

என்பவற்றை உங்களுக்கு மிகவும் நம்பிக்கையான நேர்மையான வேறு தரப்பினர் மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள். எந்த ஒரு திட்டத்திலும் தொடர் நடவடிக்கைகள் கிரமமாக நடைபெறுகின்றதா எனப் பார்வையிடுங்கள்.

சில இடங்களில் நிதித் துஸ்பிரயோகங்கள் இடம் பெறுகிறது.

06. பாடசாலைகளின் அபிவிருத்திக்கு நிதி வழங்குவதைப் பரவலாகச் செய்கின்றீர்கள். இதனால் நிறையப் பாடசாலைகளின் பௌதீக வளங்கள் உயர்வடைந்துள்ளது. கல்வி வளர்ச்சி உயர்வடைந்துள்ளது.

 ஆனால் பணம் கொடுத்தோம், வளங்கள் பெற்றுக் கொடுத்தோமென பாடசாலையின் நிர்வாகத்தில் தலையீடு செய்பவர்களும் உள்ளனர். இது மாணவர்களின் கல்வி அபிவிருத்தியைப் பாதிக்கிறது. 

பணம் கொடுத்தவர்கள் இஸ்டப்படி எல்லாம் நடக்க வேண்டுமென்ற பிடிவாதம் காரணமாக உள்ளுரில் நல்ல திட்டங்கள் சில இடங்களில் விரயமாகின்றது.

07. ஒரு கிராமத்தில் கட்டிடம் ஒன்றை அமைத்துக் கொடுக்கும் போது ஏற்கனவே உள்ள கட்டிடங்களது பாவனை தொடர்பாக ஒரு மீளாய்வைச் செய்யுங்கள்.

போட்டிக்குக் கட்டிடங்கள் பல அமைக்கப்பட்டுப் பாவனையின்றி விரயமாக இருக்கும் நிலையும் உள்ளது.

பிரமாண்டமான கட்டிடங்கள் பல எந்தவித சமூகப் பயனையும் தராது குருட்டு முதலீடுகளாக முடங்கி உள்ளன.

08. கல்வி சார்ந்த முதலீடுகளில் கூடிய கவனம் செலுத்துங்கள். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 03 பீடங்கள் கிளிநொச்சியில் உள்ளன. ஓரிரு ஆயிரம் மாணவர்கள் கற்கின்றனர்.
அது போல சித்த மருத்துவ பீடம் கைதடியில் உள்ளது. வணிக முகாமைத்துவ பீடம் இராசபாதையில் உள்ளது.

இங்கு கல்வி கற்கும் மாணவர்கள் தரமான தங்குமிட வசதிகள் இல்லாமல் தூர இடங்களிலிருந்து நாளாந்தம் பயணம் செய்கின்றனர். ஆகவே இவர்களுக்கான விடுதிகளைக் கட்டி நியாயபூர்வமான வாடகைக்கு வழங்கும் முதலீட்டுத் திட்டங்களைச் செய்யுங்கள்.

09. புலம்பெயர் தேசங்களில் மரங்கள், செடி கொடிகளை நினைத்த மாத்திரத்தில் அழிக்க முடியாது. முறையான சட்ட திட்டங்கள் உள்ளன. ஆனால் தாயகத்தில் காணிகளை வாங்குவதும் மரம் செடி கொடி ,வேலிகளை அழிப்பதும் நிகழ்கின்றது. 

எமது இயற்கையை நாம் நேசிக்க வேண்டும். மரங்களை அழிப்பதன் விளைவை நாம் தான் அனுபவிக்கின்றோம்.

10. காணிகளை வாங்கிக் குவிப்பதில் பலர் ஈடுபடுகின்றீர்கள். தாயகத்தில் உழைத்துக் காணிகள் வாங்குவதை யாருமே நினைத்துப் பார்க்க முடியாத நிலையேற்பட்டுள்ளது. 

தாயகத்தில் வாழாத நீங்கள் காணிகளை வாங்கிக் குவிக்கத் தாயகத்தில் வாழ்வோர் காணியற்றவர்களாக உள்ளனர்.

11. வருடாந்தம் யூன், யூலை விடுமுறைக் காலங்களில் தாயகம் வரும் போது பகட்டுக்காகச் செலவிடும் பல இலட்ச ரூபாக்கள் உள்ளுர் உழைப்பாளிகளது தன்னம்பிக்கையை இழக்கச் செய்கின்றது.

நாமும் புலம் பெயர்ந்தால் வசதியாக வாழலாமெனத் தாயகத்தை விட்டு ஓடுவோர் தொகை இன்றும் நீள்கிறது.

நீங்கள் இங்கு பிறந்து வளர்ந்த போது வாழ்ந்த எளிமையை மறந்து போவது நன்றல்ல. உற்பத்தித் திறன் தராத ஊதாரிச் செலவுகளைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

எமது தாயகம் பாரியதொரு பொருளாதாரச் சிக்கலுக்குள் இருந்து மீளப் போராடி வருகிறது. அதற்கு உறுதுணையாக உங்களது பணிகள் இருப்பதை வரவேற்கின்றோம்.

ஆக்கம் - வேதநாயகம் தபேந்திரன்
தமிழர்தகவல் 2023 மே.

  • கருத்துக்கள உறவுகள்

04. இது பற்றி எனக்குத் தெரிந்ததை கூறுகிறேன். மாணவர்களின் கல்வி உதவித் தொகை எனில் அருகில் உள்ள தபாற்கந்தோரில்(இலகுவானது, அருகில் இருப்பது) சேமிப்புக் கணக்கை 250ரூபா வைப்பிட்டு ஆரம்பிக்க சொல்லலாம். தேசிய சேமிப்பு வங்கியில் கொடையாளர் வங்கிக் கணக்கை வைத்துக் கொண்டு அதிலிருந்து தபாலக சேமிப்பு கணக்கிற்கு மாதாந்தம் பணம் செல்லுமாறு நிலையியற் கட்டளையை 6 மாதங்களுக்கோ 1 வருடத்திற்கோ போடலாம். இடையிடையே பயனாளியிடம் பணம் கிடைத்தது சம்பந்தமாக கேட்டு உறுதிப்படுத்தலாம். நேரடியாக கைகளில் வழங்குவது தவறு, ஆவணப்படுத்தலுக்கு தபாலத்திற்கோ வங்கிக்கோ பணத்தை வைப்புச் செய்வது நன்று.

11 விடயங்களும் சிந்திக்கத் தக்கதே.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சிந்திக்கத் தக்கவை, ஆனால்  தொடர்ந்து பாடசாலைகளுக்கு பௌதீக வளங்களுக்காக பணம் கொடுப்பது பல துஷ்பிரயோகங்களின் தோற்றுவாய் என்பது என் அனுபவத்தில் விளங்கிக் கொண்டது.

நான் படித்த  பாடசாலையில் ஒவ்வொரு புது நிர்வாகம் வரும் போதும் புதிய பிரின்ரர், புதிய கணணி "தேவையானவை" பட்டியலில் வருகின்றன. "இதை முன்னர் தந்தோமே?" என்று கேட்டால், அதற்கு "நீங்கள் பராமரிப்புச் செலவு தரவில்லை, அதனால் திருத்த முடியாமல் பழுதாகி விட்டது" என்பார்கள். ஒருவன் ஒரு பொருளை அன்பளிப்பாகக் கொடுத்தால், அதற்கான பராமரிப்பையாவது உள்ளூரில் மலிவாக அல்லது இன்னொரு தானமாகத் தேட முடியாத சோம்பேறித்தனத்தை என்னவென்பது?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Justin said:

வருடாந்தம் கேட்கிறார்கள் எனில் எங்கோ லீக் ஆகுது! 3/4 ஆண்டுகள் எனில் தேய்மானமும் பழுதும் சாத்தியமே. இன்னொன்று சிலர் தனிப்பட்ட தேவைகளுக்கும் பயன்படுத்துவார்கள்.
உங்கள் பாடசாலையில் பழைய மாணவர் சங்கம் இல்லையா? அவர்களை சென்று இடையிடையே கண்காணிக்க சொல்லலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 13/5/2023 at 02:15, ஏராளன் said:

வருடாந்தம் கேட்கிறார்கள் எனில் எங்கோ லீக் ஆகுது! 3/4 ஆண்டுகள் எனில் தேய்மானமும் பழுதும் சாத்தியமே. இன்னொன்று சிலர் தனிப்பட்ட தேவைகளுக்கும் பயன்படுத்துவார்கள்.
உங்கள் பாடசாலையில் பழைய மாணவர் சங்கம் இல்லையா? அவர்களை சென்று இடையிடையே கண்காணிக்க சொல்லலாம்.

லீக் அல்ல, உண்மையில் வான்கதவு, நன்கு கட்டிய வாய்க்கால் வழியான பாய்ச்சல் என்று சொல்லலாம்😂! யாழ், கொழும்பு இரு நகரங்களிலும் ப.மா.ச உண்டு, ஆனால் வெளிநாட்டு ப.மா.சங்கங்கள் காசைக் காட்டினால் மட்டும் தான் இந்த இரு சங்கத்தினரும்  தொலைபேசி அழைப்பையே எடுப்பார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

ஆனாலும் அர்ப்பணிப்போடு கடமையாற்றும் அதிபர் ஆசிரியர்களும் இருக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/5/2023 at 18:57, nunavilan said:

புலமும் தாயகமும்…………

போர் நடந்த காலங்களில் புலம் பெயர் தேசங்களில் வாழும் எம்மவர் தாயகத்திற்குச் செய்த பொருளாதார உதவிகள் எம்மைப் பட்டினிச் சாவிலிருந்து தடுத்தது.

போர் முடிந்த பின்பு  எமது தாயக மண்ணின் புனர்வாழ்வு நடவடிக்கைகளில் புலம்பெயர் தேசங்களில் வாழும் உறவுகளின் பங்களிப்பு போற்றுதற்குரியது. அரசாங்கத்தை மட்டும் நம்பி இருந்தால் இவ்வளவு வேகமாக எம்மால் மீண்டெழுந்து இருக்க முடியாது.

அந்த வகையில் அவர்களின் உதவிகள் நன்றிக்குரியது. வணக்கத்துக்கும் உரியது.
தாயக மண்ணுக்கான உங்களது சேவைகள் செம்மையுறக் கவனிக்க வேண்டியவை எனச் சிலவற்றை முன் வைக்கிறேன். 

01. நீங்கள் தாயகம் வரும் போது பொது நிகழ்வு ஒன்றில் உதவித் திட்டமொன்றை அறிவிக்கிறீர்கள். தொடங்குகிறீர்கள். ஆனால் சில இடங்களில் அல்லது பல இடங்களில் அத்தகைய உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்படுவதில்லை.

இடையில் நின்று போக பாதிக்கப்படுவது உதவி தேவைப்படுவோர் தான். ஏனெனில் அவர்களுக்கு உதவி போகிறது தானே என நினைத்து ஏனையோர் உதவ மாட்டார்கள்.

குறிப்பாக அரச துறையின் செயல் திட்டங்களிலிருந்து விலக்கப்படுகின்றனர். ஆகவே திட்டங்களின் தொடர்ச்சித் தன்மையை உறுதி செய்யுங்கள். சிலரது கல்விப் பயணம், வாழ்வாதாரம் என்பவை இதனால் பாதிக்கப்படுகின்றது.

02. அமைப்பு ரீதியாகச் செயற்பட்டு வீட்டுத் திட்டங்கள் போன்றவற்றுக்குப் பயனாளிகளை உள்வாங்குகின்றீர்கள். 

சில இடங்களில் அத்தகைய திட்டங்கள் சொல்லளவில் இருக்கும் போது அரசாங்க, அரசசார்பற்ற நிறுவனங்களது உதவித் திட்டங்களில் அவர்கள் உள்வாங்கப்பட மாட்டார்கள்.

ஏனெனில் அரசாங்கத்தின் பிரதிநிதியாக கிராம மட்டத்தில் இயங்கும் கிராம அலுவலர் அல்லது அபிவிருத்தி அலுவலர் பயனாளிகள் தொடர்பான பட்டியலைத் தயாரிக்கும் போது இவருக்கு வெளிநாட்டிலுள்ள இன்னார் உதவி செய்வதாக அறிவித்தார்கள். ஆகவே எமது பட்டியலில் இவரை இடத் தேவையில்லையென நீக்கி விடுவார்கள்.

அதனால் வறிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

03. தாயகத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த. சாதாரணதரம் ஆகிய பரீட்சைகளில் திறமை காட்டுவோருக்கு மடிக்கணனி- லப்ரொப் வழங்குவதைத் தவிருங்கள். இவற்றைப் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு உபயோகித்து கல்வியைப் பண்புகளைத் தொலைத்தோர் பலர் உண்டு.

ஸ்மார்ட் தொடர்பாடல் சாதனங்களின்  யுகத்தைத் தெரியாத பெற்றோர் தான் நிறையப் பேர். அதனால் அவர்களுக்குப் பிள்ளைகளைக் கண்காணித்து வழி நடத்தத் தெரிவதில்லை.

04. வறிய மாணவர்களுக்குக் கல்விக்குரிய உதவித் தொகையை வழங்கும் போது மாதாந்தம் குறித்த ஒரு திகதியில் கிரமமாகக் கிடைப்பதற்குரிய பொறிமுறையை தாயகத்தில் உருவாக்கிக் கொள்ளுங்கள். ஒரே முறையில் பெரிய தொகைக் காசைக் கொடுக்கும் போது அது வேறு நோக்கத்திற்குத் தவறாகப் பயன்படுத்தப்படும் நிலை உள்ளது. 

அல்லது காசைப் பொறுப்பாக வைத்திருப்போர் துஸ்பிரயோகம் செய்யும் நிலை உருவாகின்றது.
கொடுக்கின்ற பணமானது தாயகத்தின் வாழ்க்கைச் செலவு தொடர்பான புரிதலைக் கொண்ட தொகையாக இருப்பதை உறுதி செய்யுங்கள். 

மிகச் சிறிய தொகையை வழங்குதல் திட்டத்தின் பயனாளியைச் சரியான முறையில் உயர்த்தாது.

05. தாயகத்திலுள்ள வறிய சமூகப் பிரிவினருக்கு காசு கொடுப்பதற்குப் பொறுப்பாக ஒருவரை நியமித்தால் அவர் சரியாக அப் பணியை ஆற்றுகின்றாரா? பயனாளிகள் சரியாக அதனைப் பயன்படுத்தி முன்னேறுகின்றனரா?

என்பவற்றை உங்களுக்கு மிகவும் நம்பிக்கையான நேர்மையான வேறு தரப்பினர் மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள். எந்த ஒரு திட்டத்திலும் தொடர் நடவடிக்கைகள் கிரமமாக நடைபெறுகின்றதா எனப் பார்வையிடுங்கள்.

சில இடங்களில் நிதித் துஸ்பிரயோகங்கள் இடம் பெறுகிறது.

06. பாடசாலைகளின் அபிவிருத்திக்கு நிதி வழங்குவதைப் பரவலாகச் செய்கின்றீர்கள். இதனால் நிறையப் பாடசாலைகளின் பௌதீக வளங்கள் உயர்வடைந்துள்ளது. கல்வி வளர்ச்சி உயர்வடைந்துள்ளது.

 ஆனால் பணம் கொடுத்தோம், வளங்கள் பெற்றுக் கொடுத்தோமென பாடசாலையின் நிர்வாகத்தில் தலையீடு செய்பவர்களும் உள்ளனர். இது மாணவர்களின் கல்வி அபிவிருத்தியைப் பாதிக்கிறது. 

பணம் கொடுத்தவர்கள் இஸ்டப்படி எல்லாம் நடக்க வேண்டுமென்ற பிடிவாதம் காரணமாக உள்ளுரில் நல்ல திட்டங்கள் சில இடங்களில் விரயமாகின்றது.

07. ஒரு கிராமத்தில் கட்டிடம் ஒன்றை அமைத்துக் கொடுக்கும் போது ஏற்கனவே உள்ள கட்டிடங்களது பாவனை தொடர்பாக ஒரு மீளாய்வைச் செய்யுங்கள்.

போட்டிக்குக் கட்டிடங்கள் பல அமைக்கப்பட்டுப் பாவனையின்றி விரயமாக இருக்கும் நிலையும் உள்ளது.

பிரமாண்டமான கட்டிடங்கள் பல எந்தவித சமூகப் பயனையும் தராது குருட்டு முதலீடுகளாக முடங்கி உள்ளன.

08. கல்வி சார்ந்த முதலீடுகளில் கூடிய கவனம் செலுத்துங்கள். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 03 பீடங்கள் கிளிநொச்சியில் உள்ளன. ஓரிரு ஆயிரம் மாணவர்கள் கற்கின்றனர்.
அது போல சித்த மருத்துவ பீடம் கைதடியில் உள்ளது. வணிக முகாமைத்துவ பீடம் இராசபாதையில் உள்ளது.

இங்கு கல்வி கற்கும் மாணவர்கள் தரமான தங்குமிட வசதிகள் இல்லாமல் தூர இடங்களிலிருந்து நாளாந்தம் பயணம் செய்கின்றனர். ஆகவே இவர்களுக்கான விடுதிகளைக் கட்டி நியாயபூர்வமான வாடகைக்கு வழங்கும் முதலீட்டுத் திட்டங்களைச் செய்யுங்கள்.

09. புலம்பெயர் தேசங்களில் மரங்கள், செடி கொடிகளை நினைத்த மாத்திரத்தில் அழிக்க முடியாது. முறையான சட்ட திட்டங்கள் உள்ளன. ஆனால் தாயகத்தில் காணிகளை வாங்குவதும் மரம் செடி கொடி ,வேலிகளை அழிப்பதும் நிகழ்கின்றது. 

எமது இயற்கையை நாம் நேசிக்க வேண்டும். மரங்களை அழிப்பதன் விளைவை நாம் தான் அனுபவிக்கின்றோம்.

10. காணிகளை வாங்கிக் குவிப்பதில் பலர் ஈடுபடுகின்றீர்கள். தாயகத்தில் உழைத்துக் காணிகள் வாங்குவதை யாருமே நினைத்துப் பார்க்க முடியாத நிலையேற்பட்டுள்ளது. 

தாயகத்தில் வாழாத நீங்கள் காணிகளை வாங்கிக் குவிக்கத் தாயகத்தில் வாழ்வோர் காணியற்றவர்களாக உள்ளனர்.

11. வருடாந்தம் யூன், யூலை விடுமுறைக் காலங்களில் தாயகம் வரும் போது பகட்டுக்காகச் செலவிடும் பல இலட்ச ரூபாக்கள் உள்ளுர் உழைப்பாளிகளது தன்னம்பிக்கையை இழக்கச் செய்கின்றது.

நாமும் புலம் பெயர்ந்தால் வசதியாக வாழலாமெனத் தாயகத்தை விட்டு ஓடுவோர் தொகை இன்றும் நீள்கிறது.

நீங்கள் இங்கு பிறந்து வளர்ந்த போது வாழ்ந்த எளிமையை மறந்து போவது நன்றல்ல. உற்பத்தித் திறன் தராத ஊதாரிச் செலவுகளைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

எமது தாயகம் பாரியதொரு பொருளாதாரச் சிக்கலுக்குள் இருந்து மீளப் போராடி வருகிறது. அதற்கு உறுதுணையாக உங்களது பணிகள் இருப்பதை வரவேற்கின்றோம்.

ஆக்கம் - வேதநாயகம் தபேந்திரன்
தமிழர்தகவல் 2023 மே.

பல பக்கத்தாலும், சிந்தித்து… எழுதப்பட்ட அருமையான கட்டுரை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டுரை ஆயிரம் விடயங்களை சொல்லி நிற்கின்றது.

அதிலும் இதில் சொல்லப்பட்ட விடயம் இன்னும் விசேசமானது.

On 12/5/2023 at 18:57, nunavilan said:

10. காணிகளை வாங்கிக் குவிப்பதில் பலர் ஈடுபடுகின்றீர்கள். தாயகத்தில் உழைத்துக் காணிகள் வாங்குவதை யாருமே நினைத்துப் பார்க்க முடியாத நிலையேற்பட்டுள்ளது. 

தாயகத்தில் வாழாத நீங்கள் காணிகளை வாங்கிக் குவிக்கத் தாயகத்தில் வாழ்வோர் காணியற்றவர்களாக உள்ளனர்.

On 12/5/2023 at 18:57, nunavilan said:

11. வருடாந்தம் யூன், யூலை விடுமுறைக் காலங்களில் தாயகம் வரும் போது பகட்டுக்காகச் செலவிடும் பல இலட்ச ரூபாக்கள் உள்ளுர் உழைப்பாளிகளது தன்னம்பிக்கையை இழக்கச் செய்கின்றது.

நாமும் புலம் பெயர்ந்தால் வசதியாக வாழலாமெனத் தாயகத்தை விட்டு ஓடுவோர் தொகை இன்றும் நீள்கிறது.

இணைப்பிற்கு நன்றி நுணாவில்.

  • கருத்துக்கள உறவுகள்
On 13/5/2023 at 02:57, nunavilan said:

07. ஒரு கிராமத்தில் கட்டிடம் ஒன்றை அமைத்துக் கொடுக்கும் போது ஏற்கனவே உள்ள கட்டிடங்களது பாவனை தொடர்பாக ஒரு மீளாய்வைச் செய்யுங்கள்.

போட்டிக்குக் கட்டிடங்கள் பல அமைக்கப்பட்டுப் பாவனையின்றி விரயமாக இருக்கும் நிலையும் உள்ளது.

பிரமாண்டமான கட்டிடங்கள் பல எந்தவித சமூகப் பயனையும் தராது குருட்டு முதலீடுகளாக முடங்கி உள்ளன.

08. கல்வி சார்ந்த முதலீடுகளில் கூடிய கவனம் செலுத்துங்கள்.

09. புலம்பெயர் தேசங்களில் மரங்கள், செடி கொடிகளை நினைத்த மாத்திரத்தில் அழிக்க முடியாது. முறையான சட்ட திட்டங்கள் உள்ளன. ஆனால் தாயகத்தில் காணிகளை வாங்குவதும் மரம் செடி கொடி ,வேலிகளை அழிப்பதும் நிகழ்கின்றது. 

எமது இயற்கையை நாம் நேசிக்க வேண்டும். மரங்களை அழிப்பதன் விளைவை நாம் தான் அனுபவிக்கின்றோம்.

10. காணிகளை வாங்கிக் குவிப்பதில் பலர் ஈடுபடுகின்றீர்கள். தாயகத்தில் உழைத்துக் காணிகள் வாங்குவதை யாருமே நினைத்துப் பார்க்க முடியாத நிலையேற்பட்டுள்ளது. 

தாயகத்தில் வாழாத நீங்கள் காணிகளை வாங்கிக் குவிக்கத் தாயகத்தில் வாழ்வோர் காணியற்றவர்களாக உள்ளனர்.

உண்மையில் நகரப்புற பாடசாலைகளின் ப.மா சங்கங்கள் வடக்கு கிழக்கில் மிகவும் பின்தங்கிய பாடசாலைகளுக்குத் தான் உதவ வேண்டும். ஆசிரியர் பற்றாக்குறை, போதிய இடவசதி இல்லாமை, வறிய மாணவர்களை பாடசாலைக்கு வரவழைக்க தேவையான வசதிகள் என தேவையறிந்து செய்ய வேண்டும். ஆனால் அப்படி நடைபெறுவது மிகவும் குறைவு. 

மேலும் தேவைக்கு அதிகமாக  கட்டப்பட்ட கட்டிடங்களும் ஆடம்பர வீடுகளும் போதிய பாராமரிப்பு இன்றி இருப்பதும் உண்மை. 

ஒழுங்கான திட்டமிடலும் இல்லை, தலைமையும் இல்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.