Jump to content

ஐசிசி உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோலி சாதனை சதம்: இந்தியா 326 ரன் - அதிரடியில் மிரட்டும் தென் ஆப்ரிக்காவை வெல்ல இது போதுமா?

இந்தியா vs தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. தென் ஆப்பிரிக்க அணியில் ஷம்ஸி சேர்க்கப்பட்டிருந்தார்.

சேவாக்கை நினைவூட்டிய ரோஹித்

ரோஹித் சர்மா, கில் ஆட்டத்தைத் தொடங்கினர். இங்கிடியின் முதல் ஓவரில் பெரிதாக ரன் சேர்க்கவில்லை. அதன்பின் ரோஹித் சர்மா வெளுத்து வாங்கினார். ரோஹித் சர்மாவின் அதிரடியான ஆட்டத்தைப் பார்த்தபோது, 15 ஆண்டுகளுக்கு முன் வீரேந்திர சேவாக்கின் ஆட்டத்தைப் பார்ப்பதைப் போல் இருந்தது.

விக்கெட்டை இழப்பை பற்றிக் கவலைப்படாமல், எதிரணி பந்துவீச்சாளர்களின் நம்பிக்கையை உடைக்கும் விதத்தில் சேவாக்கின் விளாசல் இருக்கும். சேவாக் களத்தில் இருந்தாலே பந்துவீச்சாளர்கள் எவ்வாறு பந்துவீசுவது எனத் திணறுவார்கள் அந்த உத்தியை இன்று ரோஹித் சர்மா கையாண்டார்.

யான்சென் வீசிய 2வது ஓவரில் சுப்மான் கில் 2 பவுண்டரி உள்ளிட்ட 17 ரன்கள் சேர்க்கப்பட்டது. இங்கிடி வீசிய 3வது ஓவரில் ரோஹித் சர்மா 2 பவுண்டரியும், கில் ஒரு பவுண்டரி என அதிரடியாக ஆடினர். யான்சென் வீசிய 4வது ஓவரிலும் ரோஹித் 2 பவுண்டரிகள் உள்பட 10 ரன்கள் சேர்த்தார்.

 

இங்கிடி வீசிய 5-வது ஓவரில் ரோஹித் சர்மா 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 16 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி 5 ஓவர்களில் 61 ரன்கள் குவித்தது. 6-வது ஓவரை வீச ரபாடா அழைக்கப்பட்டார். அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 24 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்து பவுமாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா ரன்னில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கும்.

இந்தியா vs தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

விக்கெட் இல்லாத யான்சென்

அடுத்துவந்த கோலி, கில்லுடன் இணைந்தார். யான்சென் வீசிய 7-வது ஓவரில் கில் ஒரு சிக்ஸர் விளாசினார். அதன்பின் கோலி, கில் இருவரும் ஓவருக்கு ஒரு பவுண்டரி விளாசி ரன்ரேட்டை ஏறுமுகத்திலேயே வைத்திருந்தனர். ரபாடா வீசிய 10-வது ஓவரில் கோலி தொடர்ந்து 2 பவுண்டரிகளை விளாசி, ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

இந்திய அணி பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் சேர்த்திருந்தது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் மார்கோ யான்சென் பவர்ப்ளேயில் விக்கெட் இன்றி இருந்ததில்லை. முதல்முறையாக இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில்தான் யான்சென் பவர் ப்ளேயில் விக்கெட் இன்றி இருந்தார்.

கில்லுக்கு படம் காட்டிய மகராஜ்

11-வது ஓவரை கேசவ் மகராஜ் வீச வந்தார், அவரை அழைத்தமைக்கு நல்ல பலன் கிடைத்து. மகராஜ் வீசிய 3வது பந்தை பிரன்ட்புட் செய்து கில் அடிக்க முயன்றார். மகராஜ் பந்தை நன்றாக டாஸ் செய்து தூக்கி வீசினார், அந்த பந்தை ஸ்ட்ரைக் செய்தபோது பந்து பீட்டன்ஆகி போல்டாகியது.

கில் 23 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் 52 ஆயிரம் ரசிகர்கள் இன்று வந்திருந்தனர். கில் ஆட்டமிழந்து சென்றபோது, மைதானமே மவுனமாக இருந்தது.

இந்தியா vs தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

நிதான ஆட்டம்

11-வது ஓவர்கள் முதல் 20வது ஓவர்கள் வரை இந்திய அணியின் ரன்ரேட்டை கட்டுப்படுத்தும் வகையில் மகராஜ், ரபாடா, இங்கிடி பந்துவீசினர். இதனால் இந்த 10 ஓவர்களில் இந்திய அணி 33 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. குறிப்பாக ஸ்ரேயாஸ் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்யாமல் மந்தமாக பேட் செய்தார். இதனால் 11வது ஓவருக்குப்பின் எந்த பவுண்டரியும் இந்திய அணிக்குக் கிடைக்கவில்லை. முதல் 10 ஓவர்களில் ரோஹித் சர்மா அமைத்துக்கொடுத்த ரன்ரேட்டை, கோலி, ஸ்ரேயாஸ் நழுவவிட்டனர். ரோஹித், கில் களத்தில் இருந்தபோது 14 பவுண்டரி, 3 சிக்ஸர் அடிக்கப்பட்டநிலையில் 10 முதல் 20 ஓவர்களில் ஒரு பவுண்டரி மட்டுமே அடிக்கப்பட்டது.

விராட் கோலி மட்டுமே ஓரளவுக்கு ரன்களை சேர்த்துவந்தார், ஆனால், ஸ்ரேயாஸ் மந்தமாக ஆடியதால், தேநீர் இடைவேளையின்போது, கேப்டன் ரோஹித், பயிற்சியாளர் திராவிட் ஆகியோர் இஷான் கிஷனிடம் ஏதோ அறிவுரை கூறிஅனுப்பினர். இதன்பின்பு ஸ்ரேயாஸ் அணுகுமுறையில் மாற்றம் தெரிந்தது.

இந்தியா vs தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிறந்தநாளில் கோலி அரைசதம்

மகராஜ் வீசிய 28-வது ஓவரில் ஸ்ரேயாஸ் ஒரு சிக்ஸர் விளாசி, 10 ரன்கள் சேர்த்தார். பொறுமையாக பேட் செய்த கோலி, தனது 35-வது பிறந்தநாளில் 55பந்துகளில் அரைசதத்தைநிறைவு செய்தார்.

30 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்தது. 20 முதல் 30 ஓவர்கள் இடைவெளியில் இந்திய அணி பேட்டர்கள் ரன்ரேட்டை உயர்த்தும் வகையில் பேட் செய்ததால், ஸ்கோர் வேகமெடுத்தது.

கியரை மாற்றிய ஸ்ரேயாஸ்

யான்சென் வீசிய 31-வது ஓவரில் ஸ்ரேயாஸ் 3 பவுண்டரிகள் உள்ளிட்ட14 ரன்கள் சேர்த்து ரன் சேர்க்கும் கியரை மாற்றினார். 64 பந்துகளில் ஸ்ரேயாஸ் அய்யர் அரைசதம் அடித்தார். ஒரு கட்டத்தில் ஸ்ரேயாஸ் 34 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார், அதன்பின் அடுத்த 34 பந்துகளில்48 ரன்களை விளாசியுள்ளார்.

மார்க்ரம் வீசிய 34-வது ஓவரில் ஸ்ரேயாஸ் ஒரு சிக்ஸரும், கோலி பவுண்டரியும் அடித்து 14 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி 34 ஓவர்களில் 200 ரன்களைக் கடந்தது.

இங்கிடி வீசிய 37-வது ஓவரில் முதல் பந்தில் பவுண்டரி அடித்த ஸ்ரேயாஸ் அய்யர் கடைசிப் பந்து ஸ்லோவர் பாலாக வந்ததை கவனிக்காமல் மார்க்ரத்திடம் கேட்ச் கொடுத்து ஸ்ரேயாஸ் 77 ரன்களில் ஆட்டமிழந்தார். 3வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ்-கோலி கூட்டணி 134 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

இந்தியா vs தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

மீண்டும் படுத்துக்கொண்ட ரன்ரேட்

அடுத்துவந்த கேஎல்.ராகுல், கோலியுடன் இணைந்தார். ராகுல் வந்தபின் இந்திய அணியின் ரன்சேர்க்கும் வேகம் படுத்துவிட்டது. ரபாடா, இங்கிடியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்த்து ஷாட்களை அடிக்க ராகுல் திணறினார், கோலியும் ஒரு பவுண்டரிக்கு மேல் அடிக்க முடியாமல் ஒரு ரன், 2 ரன்களாகவே அடித்தார். இதனால் 40 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் சேர்த்தது.

இந்தியா vs தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

40 ஓவர்களுக்குப் பின்பும் கோலியும், ராகுலும் ரன்சேர்க்க சிரமப்பட்டனர்.அதிலும் விராட் கோலியின் ஆட்டம் மிகவும் மந்தமாக இருந்தது. பிறந்தநாளில் சதம் அடிக்க வேண்டும், சச்சினின் 49-வது சதத்தை சமன் செய்ய வேண்டும் என்றநோக்கோடு கோலி பந்துகளை வீணடித்தார்.

யான்சென் வீசிய 43-வது ஓவரில் டூசெனிடம் கேட்ச் கொடுத்து, ராகுல் 8 ரன்னில் வெளியேறினார். 17 பந்துகளில் ராகுல் 8 ரன்கள் சேர்த்த ராகுல் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை.

அடுத்து களமிறங்கிய சூர்யகுமார், ஓவருக்கு ஓரு பவுண்டரி என படபடவென ரன்களைச் சேர்த்தார். ஆனால், விராட் கோலி 102 பந்துகளில் 78 ரன்கள் சேர்த்து ஆமை வேகத்தில் பேட் செய்தார். டெத் ஓவர்களில்தான் ரன் சேர்க்க முடியும், ஆனால், அந்த ஓவர்களை விராட் கோலி தேவையற்ற முறையில் வீணடித்து ரன்ரேட்டை உயரவிடாமல் இழுத்துப் பிடித்தார். டெத் ஓவரில் விராட் கோலி 150 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தும், 1486 ரன்களை சேர்த்திருந்தும் இன்று ரசிகர்களுக்கு எரிச்சலூட்டும் வகையில் பேட்டிங் அமைந்திருந்தது.

ஒருநாள் போட்டியைப் பார்க்கிறோமா அல்லது டெஸ்ட் போட்டியை பார்க்கிறோமோ என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கோலியின் பேட்டிங் குறித்து மீம்ஸ்களையும், கிண்டல்களையும் உலவவிட்டனர்.

ஜான்சன் வீசிய 45-வது ஓவரில் சூர்யகுமார் 2 பவுண்டரிகள் உள்பட 16 ரன்கள் சேர்த்ததால் ஸ்கோர் வேகமெடுத்தது. ஷம்சி வீசிய 46வது ஓவரை வீணடிக்கும் வகையில் கோலி பேட்செய்து ஒரு ரன் சேர்த்தார், அதே ஓவரில் ஸ்ட்ரைக் சூர்யகுமாருக்கு கிடைத்தவுடன் பவுண்டரி அடித்த நிலையில் 22 ரன்களில் டீ காக்கிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். சூர்யகுமார் களத்தில் இருந்தவரை இந்திய அணி 340 ரன்கள்வரை எடுக்கும் வாய்ப்பு இருந்தது. அவர் ஆட்டமிழந்தபின், அந்த நம்பிக்கையும், கணிப்பும் குறைந்தது.

அடுத்துவந்த ஜடேஜா, கோலியுடன் இணைந்தார். ரபாடா வீசிய 47-வது ஓவரில் ஒரு பவுண்டரி உள்ளிட்ட 8 ரன்கள் மட்டுமே இந்திய அணி சேர்த்தது. 48 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 300 ரன்கள் சேர்த்தது.

சுயநலத்துடன் ஆடினாரா கோலி?

தனிப்பட்ட சாதனைக்காக பந்துகளை வீணடித்து பேட் செய்த விராட் கோலி, அதை நிறைவேற்றினார். ரபாடா வீசிய 49-வது ஓவரில் ஒரு ரன் சேர்த்து 119 பந்துகளில் தனது 35-வது பிறந்தநாளில், 39-வது சதத்தை நிறைவு செய்து சச்சினின் சாதனையை சமன் செய்தார். 49-வது ஓவர்கள் முடிவில் இந்திய அணி 309 ரன்கள் சேர்த்தது.

இங்கிடி வீசிய கடைசி ஓவரில் ஜடேஜா அதிரடியாக ஆடி 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 16 ரன்கள் விளாசினார். இதனால் இந்திய அணி 50 ஓவர்களில் 326 ரன்கள் குவித்தது.

விராட் கோலி 101 ரன்களிலும், ஜடேஜா 29 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்தியா vs தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

‘வைடு’களில் சாதனை

தென் ஆப்பிரிக்க அணி இந்த ஆட்டத்தில் மட்டும் 21 வைடு பந்துகளை வீசியது. யான்சென் தொடங்கிவைத்த வைடு பந்துகள், அடுத்தடுத்து பல பந்துவீச்சாளர்கள் என சுழற்பந்துவீச்சாளர்களும் வீசினர். ஏற்கெனவே வைடு பந்துகள் வீசியதில் பெரிய சாதனையை தென் ஆப்ரிக்கா செய்துள்ளது. 2000ம் ஆண்டில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 25 வைடுகளை தென் ஆப்ரிக்கா வீசியது. அதன்பின் 2008ம் ஆண்டில் கென்ய அணிக்கு எதிராக 21 வைடுகளை தென் ஆப்பிக்கா வீசியது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/articles/cn0pz7qn751o

Link to comment
Share on other sites

  • Replies 546
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

35 ஆவது பிறந்த நாளில் 49 ஆவது சதம் விளாசிய விராட் கோஹ்லி : 50 ஆவது ஒரு நாள் சதத்தை பெறப்போகும் முதல் வீரர்

05 NOV, 2023 | 07:40 PM
image

இந்திய கிரிக்கெட் அணியின் Run Machine என வர்ணிக்கப்படும் முன்னாள் அணித்தலைவரும் அதிரடி ஆட்ட வீரருமான விராட் கோஹ்லி தனது 35 ஆவது பிறந்த நாளை வாழ் நாளில் மறக்க மாட்டார். 

சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் தனது 49 ஆவது சதத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை 5 ஆம் திகதி பூர்த்தி செய்த அவர் தனது 35 ஆவது பிறந்த நாளன்று தனது மண்ணில் உலகக்கிண்ணத்தொடரில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இதன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் பெற்ற முன்னாள் அதிரடி வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் சமன் செய்துள்ளார். தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை 05/11/2023 அன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இடம்பெற்ற போது முதலில் இந்திய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. 

இதன் போது மூன்றாவது வீரராக களமிறங்கிய விராட் கோஹ்லி ஆரம்பத்தில் நிதானமாகவும் பின்பு அதிரடியாகவும் விளையாடி 119 பந்துகளை எதிர்கொண்டு சதம் பெற்றார். 

சர்வதேச ஒரு நாள் போட்டிகளைப் பொறுத்தவரை சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களைப்பெற 452 இன்னிங்ஸ்களில் விளையாடியிருந்தார். 

எனினும் விராட் கோஹ்லி வெறும் 277 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை சமன் செய்துள்ளார்.

 

‘இந்திய அணிக்கு ஆடுவதற்காக கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையுமே நான் முக்கியமானதாகத்தான் பார்க்கிறேன். இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டத்திற்கு மத்தியில் என்னுடைய பிறந்த தினத்தில் இப்படியொரு சதத்தை அடித்ததில் மகிழ்ச்சி என தனது இன்னிங்ஸ் குறித்து அவர் தெரிவித்திருக்கின்றார்.  

கொல்கத்தை ஈடன் கார்டன் மைதானத்தில் திரண்டிருந்த சுமார் 70 ஆயிரம் இரசிர்கள் விராட் கோஹ்லி சதத்தை நெருங்கம் தறுவாயில் தமது செல்லிடப்பேசி விளக்கை ஒளிர வைத்து அவருக்கு உற்சாகம் ஊட்டினர்.

இந்த உலகக்கிண்ணத் தொடரில் இரண்டு சதங்களையும் நான்கு அரைச்சதங்களையும் அடித்துள்ள கோஹ்லி தொடரில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இவர் மொத்தமாக 543 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். முதலிடத்தில் தென்னாபிரிக்க வீரர் குயின்டன் டி கொக் 550 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். 

இதே வேளை ஒரு நாள் சர்வதேச போட்டி வரலாற்றில் குறைந்த இன்னிங்ஸில் ஐம்பது சதங்களைப் பெறப்போகும் முதல் வீரர் என்ற பெருமையை விராட் பெறப்போகின்றார். இத்தொடரில் எந்த போட்டிகளிலுமே தோல்வியை சந்திக்காத அணியாக இந்தியா விளங்குகின்றது. ஆகவே நிச்சயமாக கோஹ்லி அந்த மைல்கல்லை அடைவார் என்று கூறலாம்.

இதற்கு முன்பதாக சச்சின் 452 இன்னிங்ஸ்களில் 49 சதங்களையும் ரோகித் சர்மா 251 இன்னிங்ஸ்களில் 31 சதங்களையும் ரிக்கி பொண்டிங் 365 இன்னிங்ஸ்களில் 30 சதங்களையும் சனத் ஜெயசூரிய 433 இன்னிங்ஸ்களில் 28 சதங்களையும் பெற்ற வீரர்களாவர்.

https://www.virakesari.lk/article/168600

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா விளையாடின‌ இர‌ண்டு ம‌ச் சீக்கிரமே முடிஞ்சு போச்சு

 

ஊட‌க‌த்துல் ஒவ்வொரு ஓவ‌ருக்கு ஒரு விள‌ம்ப‌ர‌ம் அல்ல‌து இர‌ண்டு விள‌ம்ப‌ர‌ம் போடுவின‌ம் இந்திய‌ன் தொலைக் காட்சியில்

 

இலங்கை 

தென் ஆபிரிக்கா

இந்த‌ இர‌ண்டு அணிக‌ளை குறைந்த‌ ஓவ‌ருக்கை எல்லாரையும் ஆட்ட‌ம் இழ‌க்க‌ செய்து விட்டார்க‌ள் இந்திய‌ன் வீர‌ர்கள்............

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் வெற்றி பற்றி வியந்து பேசிய முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள்

கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கையை 55 ரன்களில் சுருட்டிய இந்திய அணி, தென் ஆப்பிரிக்கா போன்ற பலம் வாய்ந்த அணியை 83 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து 2023 உலகக் கோப்பையில் தொடர்ந்து எட்டாவது வெற்றியுடன் தனது ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

உலகக் கோப்பையில் இந்திய அணி தொடர்ந்து 8 வெற்றிகளைப் பெறுவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, 2003-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில், இந்திய அணி தொடர்ந்து எட்டு வெற்றிகள் பெற்று இறுதிப் போட்டிக்கு வந்திருந்தது.

இருப்பினும், அந்த எட்டு வெற்றிகளும் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தோற்றபின் கிடைத்தன. அந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.

ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆட்டத்தில் (நவம்பர் 5) இந்தியா முதலில் பேட் செய்து 326 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணி 83 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 
இந்தியா, தென் ஆப்பிரிக்கா, கிரிக்கெட் உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிறந்தநாளில் சாதனை படைத்த கோலி

விராட் கோலியும், ரவீந்திர ஜடேஜாவும் இந்தியா அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். அதேசமயம் கேப்டன் ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் அய்யர், முகமது ஷமி உட்பட அனைத்து வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் ஆகிய மூன்றிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. இந்த உலகக் கோப்பையில் பல முறை 300 ரன்களுக்கு மேல் அடித்த தென் ஆப்பிரிக்கா அணியால் இதைச் சமாளிக்க முடியவில்லை.

இந்தப் போட்டியின் போது, தனது 35-ஆவது பிறந்தநாளை கொண்டாடிய விராட் கோலி சதம் அடித்தார். ஒருநாள் போட்டிகளில் இது அவரது 49வது சதம். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்துள்ளார் கோலி.

கோலி தனது சதத்தின் மூலம் இந்த உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக 500 ரன்களுக்கு மேல் அடித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

 
இந்தியா, தென் ஆப்பிரிக்கா, கிரிக்கெட் உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

'டெண்டுல்கரை ஒருபோதும் சமன் செய்ய முடியாது. என்ன நடந்தாலும் அவர் எப்போதும் என் ஹீரோவாக இருப்பார்,' என்றார் கோலி

வாழ்த்து தெரிவித்த டெண்டுல்கர்

சதம் அடித்த கோலி ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

போட்டிக்குப் பிறகு அவர் கூறுகையில், இது போட்டியின் கடினமான அணி, என்றார். “நான் நன்றாக விளையாட விரும்பினேன், இது எனது பிறந்தநாள், அதனால் எனக்கு இது சிறப்பான தருணம். எனது வேலையைச் என்னால் செய்ய முடிந்தது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் சாதனைகளை மட்டும் தேடவில்லை. ரன் குவிக்க வேண்டும். பல ஆண்டுகளாக செய்து வந்ததை மீண்டும் செய்ய முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார்.

மேலும் பேசிய கோலி, "எனது ஹீரோவின் சாதனையை சமன் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது. மக்கள் என்னை அவருடன் ஒப்பிடுகிறார்கள், ஆனால் என்னால் அவரை ஒருபோதும் சமன் செய்ய முடியாது. என்ன நடந்தாலும் அவர் எப்போதும் என் ஹீரோவாக இருப்பார்," என்று கூறினார்.

சச்சின் டெண்டுல்கர் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்த ஒரு ட்வீட்டில், கோலியை வாழ்த்தியிருந்தார். "விராட், நீங்கள் நன்றாக விளையாடினீர்கள். 49லிருந்து 50 ஆக மாற எனக்கு ஒரு வருடம் பிடித்தது. ஆனால் அடுத்த சில நாட்களில் நீங்கள் 49 முதல் 50 வயதை எட்டுவீர்கள், எனது சாதனையை முறியடிப்பீர்கள் என்று நம்புகிறேன்," என்று அந்தப் பதிவில் தெரிவித்திருந்தார்.

விராட் கோலி இந்த உலகக் கோப்பையில் இரண்டு சதங்கள் மற்றும் நான்கு அரை சதங்கள் உட்பட 108.60 என்ற சராசரியுடன் 543 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களில் 550 ரன்கள் எடுத்த தென் ஆப்பிரீக்க வீரரான குயின்டன் டி காக்கிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளார்.

விராட் கோலி தனது 289வது ஒருநாள் போட்டியில் 49வது சதம் அடித்திருக்கிறார். ஆனால் சச்சின் டெண்டுல்கர் தனது 462வது ஒருநாள் போட்டியில் 49வது சதத்தை அடித்தார்.

 
இந்தியா, தென் ஆப்பிரிக்கா, கிரிக்கெட் உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

விராட் கோலி, நவீன கிரிக்கெட்டில் தான் உயர்ந்த இடத்தைப் பிடித்திருப்பதை நிரூபித்து விட்டார் என்று அக்ரம் கூறினார்

வாசிம் அக்ரம், சோயப் அக்தர் என்ன சொன்னார்கள்?

ஒரு விளையாட்டு சேனலின் நிகழ்ச்சியில் பேசிய பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம், "சச்சின் டெண்டுல்கர் 451 இன்னிங்ஸ்களில் ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களை அடித்தார், ஆனால் கோலி இந்த மைல்கல்லை 277 இன்னிங்ஸ்களில் மட்டுமே எட்டியுள்ளார். “இது நம்பமுடியாத அளவுக்குச் சிறப்பாக உள்ளது,” என்றார்.

விராட் கோலி, நவீன கிரிக்கெட்டில் தான் உயர்ந்த இடத்தைப் பிடித்திருப்பதை நிரூபித்து விட்டார் என்று அக்ரம் கூறினார்.

அதே நிகழ்ச்சியில், ஷோயப் அக்தர், "ஒரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், விராட் 49 சதங்கள் அடித்து, அந்தச் சதங்களுடன் பெரும்பாலான போட்டிகளில் வென்றுள்ளார், இது மிகவும் முக்கியமானது. என்னைப் பொறுத்தவரை, சதம் அடிப்பது பெரிய விஷயம்தான், ஆனால் அதோடு சேர்த்து போட்டிகளில் வெற்றி பெறுவது, மேலும் சிறப்பானது,” என்றார்.

மேலும் பேசிய அவர், "கோலி சூழ்நிலைகளை நன்றாக மதிப்பிடுகிறார். அவர் ஒரு முனையில் பொறுப்பேற்று அங்கிருந்து ஓடுகிறார். அவர் இப்படி பேட்டிங் செய்வதை நீண்ட காலமாகப் பார்த்து வருகிறோம். அவரது உடற்தகுதி மிகச் சிறப்பாக உள்ளது. இன்று அவர் தனது 35வது பிறந்தநாளை கொண்டாடினார் ஆனால் இரண்டு ரன்களுக்கு ஓடும்போது 25 வயது சிறுவன் ஓடுவது போல் உள்ளது. 50 ஓவர்கள் பேட்டிங் செய்து முடித்துவிட்டு ஃபீல்டிங் செய்ய வரும்போதும் அவரது ஃபிட்னெஸ் எந்த மாற்றமும் இன்றி அப்படியே இருக்கிறது. ஃபீல்டிங்கிலும், அவர் ஹாட் ஸ்பாட்களில் மட்டுமே நிற்கிறார்,” என்றார்.

 
இந்தியா, தென் ஆப்பிரிக்கா, கிரிக்கெட் உலகக் கோப்பை

பட மூலாதாரம்,@SHOAIBAKHTAR100MPH

படக்குறிப்பு,

கோலி சூழ்நிலைகளை நன்றாக மதிப்பிடுகிறார். அவர் ஒரு முனையில் பொறுப்பேற்று அங்கிருந்து ஓடுகிறார், என்று ஷோயப் அக்தர் கூறினார்

ரோஹித் பற்றி அக்தர் என்ன சொன்னார்?

இந்தப் போட்டியில் ரோஹித் ஷர்மா 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கும்போது இந்திய அணி ஓவருக்கு 10 ரன்கள் வீதம் அடித்துக் கொண்டிருந்தது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் சோயப் அக்தர் மற்றும் வாசிம் அக்ரம் ஆகியோர் ரோகித் சர்மாவைப் பாராட்டிப் பேசினர்.

ரோகித் சர்மாவின் பேட்டிங்கைப் பாராட்டிய சோயப் அக்தர், "ரோகித் 22 அல்லது 25 ஓவர்கள் தங்கியிருந்தால் இந்திய அணி 430 ரன்கள் எடுத்திருக்கும். ஆனால் அவர் ஏன் அவசரப்படுகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் தங்கியிருந்தால் அவருக்கு முன் ஒரு ஸ்பின்னர் என்ன செய்வார் என்பதைப் பார்த்திருப்போம்,” என்றார்.

மேலும், கோலிக்குக் களம் அமைத்துக் கொடுத்தது ரோகித் தான் என்று சோயப் கூறினார்.

“ரோஹித் ஸ்டெப் அவுட் செய்வார், ஸ்வீப் செய்வார், இன்சைட் அவுட் அடிப்பார், ஆனால் அதிக நேரம் ஆட மாட்டார். அவர் கேப்டன், வேகமாக விளையாடுவார். விராட் கோலிக்குக் களம் அமைத்துக் கொடுத்தார். ரோகித் ஆடுகளத்தில் இன்னும் சிறிது நேரம் தங்கினால், வரும் போட்டிகளில் அவர் சதம் அடிக்க முடியும்,” என்று வாசிம் அக்ரம் கூறினார்.

அதேசமயம், இந்த ஆடுகளம் எளிதானது அல்ல என்றும் அவர் கூறினார்.

 

பும்ராவைப் புகழ்ந்த 'ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்'

‘ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’ என்று பிரபலமாக அறியப்படும் சோயிப் அக்தர், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவைப் புகழ்ந்து, மற்ற பந்துவீச்சாளர்களுக்கு விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கான தளத்தை அவர் அமைத்துக் கொடுக்கிறார் என்று கூறினார்.

"பும்ரா மிகவும் அற்புதமாகப் பந்துவீசுகிறார். எந்த பேட்ஸ்மேனாலும் அவரது பந்துவீச்சைப் புரிந்து கொள்ள முடியாது. பந்து உள்ளே வந்து பவுன்ஸ் அளவுக்கு அவர் அதை மிக அழகாக வீசினார். அதே போல் நல்ல அவுட்ஸ்விங்கும் செய்கிறார். அவர் வேகமான பவுன்சர்களையும் வீசுவார், மெதுவாகவும் வீசுவார். அவர் மிக நல்ல ஃபாஸ்ட் யார்க்கர்களையும் வீசுவார். இதை விட முழுமையான வேகப்பந்து வீச்சாளரைப் பார்ப்பது கடினம்,” என்றார்.

பும்ரா, ஷமி மற்றும் சிராஜுக்கு அவர் களம் அமைத்துக்கொடுக்கிறார் என்று அக்தர் கூறினார்.

இதை ஷமியும், சிராஜும் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வதால் இருவரும் வீழ்த்திய விக்கெட்டுகளின் எண்ணிக்கை முறையே 16 மற்றும் 10 ஆக உயர்ந்துள்ளது.

போட்டிக்கு பிறகு முகமது ஷமி கூறுகையில், நாங்கள் பந்து வீசும் விதத்தை பார்க்க நன்றாக இருக்கிறது. யார் பந்து கொடுத்தாலும் விக்கெட்டுகளை வீழ்த்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது, என்றார்.

ஷமி மேலும் கூறுகையில், "இந்திய அணி எட்டு போட்டிகளில் அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது. 15 வீரர்களில் யாரிடமும் எந்த ஒரு குறையும் இல்லை, என்றார்.

 
இந்தியா, தென் ஆப்பிரிக்கா, கிரிக்கெட் உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ரோகித் வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக விளையாடியதாகக் கூறினார்

கேப்டன் ரோகித் என்ன சொன்னார்?

இந்த வெற்றி குறித்து கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், கடந்த 3 போட்டிகளில் இந்திய அணி சூழ்நிலைக்கு ஏற்றவாறு சிறப்பாக விளையாடியதாகக் கூறினார்.

“இங்கிலாந்து எங்களுக்கு அழுத்தம் கொடுத்தது. கடந்த போட்டியிலும் முதல் ஓவரிலேயே விக்கெட்டுகளை இழந்தோம், ஆனால் நன்றாக அடித்தோம். எங்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக ஆடினர்," என்றார்.

"இன்று ஆடுகளம் எளிதாக இல்லை, சூழ்நிலைக்கு ஏற்ப பேட் செய்யும் கோலி போன்ற ஒரு பேட்ஸ்மேன் தேவை. ஸ்ரேயாஸ் ரன்களை அடிக்கவில்லை, ஆனால் கடந்த இரண்டு போட்டிகளில் அவர் தனது ‘கிளாஸை’க் காட்டினார். ஜடேஜா ஒரு பெரிய மேட்ச் வின்னர். அவர் தனது பணியை தொடர்ந்து செய்து வருகிறார், இன்றைய போட்டியில் அவர் தன்னால் என்ன செய்ய முடியும் என்பதைக் காட்டினார்," என்றார்.

 
Play video, "கோலி: சச்சின் கணிப்பை உண்மையாக்கிய கிரிக்கெட் உலகின் சாதனை நாயகன்", கால அளவு 6,18
06:18p0gqw4tv.jpg
காணொளிக் குறிப்பு,

கோலி: சச்சின் கணிப்பை உண்மையாக்கிய கிரிக்கெட் உலகின் சாதனை நாயகன்

ரவீந்திர ஜடேஜாவின் அற்புதமான ஆட்டம்

கடந்த மூன்று போட்டிகளில் ஷமி, பும்ரா, ஜடேஜா, குல்தீப் மற்றும் சிராஜ் ஆகிய ஐந்து பந்துவீச்சாளர்களை இந்தியா களமிறக்கியுள்ளது.

இந்தப் பந்துவீச்சாளர்கள், இதுவரை விளையாடிய எட்டு போட்டிகளில் மொத்தம் 67 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.

ஷமி இரண்டு முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நிலையில், ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்தப் போட்டியில் ஜடேஜா ‘பிளேயர் ஆஃப் தி மேட்ச்’ விருதுக்கு தகுதியானவர் என்று சோயிப் அக்தர் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ஆகியோர் கூறுகின்றனர்.

“ஜடேஜா ரன் குவித்து, ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய விதத்திற்காக, 'பிளேயர் ஆஃப் தி மேட்ச்' ஆக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்,'' என்று அக்தர் கூறினார்.

முதலில் பேட்டிங் செய்த ஜடேஜா அற்புதமாக ஆடினா. தனது கடைசி ஓவர்களில் 15 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். பின்னர் பந்துவீச்சில் அசத்தினார்.

இந்தப் போட்டிக்குப் பிறகு, இந்த உலகக் கோப்பையில் அவரது விக்கெட்டுகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது மேலும் ஷமி (16), பும்ரா (15) ஆகியோருக்குப் பிறகு அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் ஜடேஜா தான்.

 
இந்தியா, தென் ஆப்பிரிக்கா, கிரிக்கெட் உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தென் ஆப்பிரிக்க அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இதுவே முதல் முறை

ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய தோல்வி

இந்தியா 243 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால், இது ரன் வித்தியாசத்தில், ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நான்காவது பெரிய வெற்றியாக அமைந்தது.

முன்னர், இந்த ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி, இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி சாதனை படைத்தது. ரன் வித்தியாசத்தில் எந்த ஒரு அணியும் பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.

நான்கு நாட்களுக்கு முன்பு, உலகக் கோப்பையில் 302 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை இந்தியா படைத்தது. இந்த வெற்றியும் இலங்கைக்கு எதிரானது தான்.

மறுபுறம், ஞாயிற்றுக்கிழமை தென் ஆப்பிரிக்கா 243 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது ஒருநாள் போட்டிகளில் அவர்களின் மிகப்பெரிய தோல்வியாகும்.

ஜிம்பாப்வேயை 272 ரன்கள் வித்தியாசத்திலும், இலங்கையை 258 ரன்கள் வித்தியாசத்திலும், வெஸ்ட் இண்டீஸை 257 ரன்கள் வித்தியாசத்திலும் தென் ஆப்பிரிக்கா தோற்கடித்துள்ளது.

ஆனால் தென் ஆப்பிரிக்க அணியே 243 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இதுவே முதல் முறை. முன்னதாக, 2002-இல் தென் ஆப்பிரிக்கா அணி 182 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோற்றதே ஒருநாள் போட்டியில் அவர்களது மிகப்பெரிய தோல்வியாக இருந்தது.

 

தென் ஆப்பிரிக்காவின் இரண்டாவது குறைந்த ஸ்கோர்

இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணி 83 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதுவே ஒருநாள் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணியின் இரண்டாவது குறைந்த ஸ்கோர் ஆகும்.

தென் ஆப்பிரிக்கா 1993-இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தனது குறைந்த ஸ்கோரை எடுத்தது. பென்சன் & ஹெட்ஜஸ் உலக கோப்பை தொடரின் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுக்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது.

கெப்லர் வெசல்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 28 ஓவர்களில் 69 ரன்கள் மட்டுமே எடுத்து ஒட்டுமொத்த ஆப்பிரிக்க அணியும் ஆட்டமிழந்தது.

தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக ஹான்சி குரோனியே 20 ரன்கள் எடுத்தார், நான்கு பேட்ஸ்மேன்கள் தங்கள் கணக்கைக் கூட திறக்க முடியவில்லை.

https://www.bbc.com/tamil/articles/c9xry99nj7jo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டைம்டு அவுட்: இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அவுட்டானது எப்படி? களத்தில் என்ன நடந்தது?

ஏஞ்சலோ மேத்யூஸ் டைம் அவுட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முறையாக புதுமையான முறையில் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். உலகக்கோப்பையில் வங்கதேசத்திற்கு எதிரான லீக் ஆட்டத்தில் அவர் டைம்டு அவுட் எனும் முறையில் விக்கெட் பறிகொடுத்தார்.

ஏஞ்சலோ மேத்யூசை தொடக்க போட்டிகளில் களமிறக்காததால் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு ரசிகர்களே விமர்சித்து வந்த நிலையில் புதுமையான முறையில் அவர் அவுட்டாகியுள்ளார். இது இலங்கை ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ஏஞ்சலோ மேத்யூஸ் டைம்டு அவுட்

உலகக்கோப்பையில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் வங்கதேசம் - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, இலங்கை அணி முதல் பேட்டிங் ஆடி வருகிறது.

நான்காவது விக்கெட்டாக சமரவிக்ரம அவுட்டானதும் இலங்கை அணியின் மூத்த வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் உள்ளே வந்தார். ஆனால், குறிப்பிட்ட 2 நிமிடங்களுக்குள் அவர் பேட்டிங் செய்ய தயாராகாததால் டைம்டு அவுட் முறையில் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

 
ஏஞ்சலோ மேத்யூஸ் டைம் அவுட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஐ.சி.சி. விதிகள் கூறுவது என்ன?

ஐசிசி விதிகளின்படி, கிரீஸில் இருக்கும் வீரர் அவுட் ஆனதும், அவருக்குப் பதிலாக வரும் வீரர் அதிகபட்சமாக மூன்று நிமிடங்களுக்குள் பந்துவீச்சை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

ஆனால், நடப்பு உலகக்கோப்பையை பொருத்தவரை அந்த கால அவகாசம் 2 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

அந்த 2 நிமிடங்களுக்குள்ளாக களத்திற்குள் வந்துவிட்டாலும் ஹெல்மெட்டில் உள்ள பட்டைகள் (ஸ்டிராப்ஸ்) சரிவர வேலை செய்யாததால் அவரால் உடனே பேட்டிங்கிற்கு தயாராக முடியவில்லை. இதையடுத்து, வங்கதேச அணி அவுட் கேட்டு முறையிட்டதால் ஐ.சி.சி. விதிகளின் படி நடுவர் அவுட் கொடுத்துவிட்டார்.

ஹெல்மெட்டில் உள்ள பிரச்னை குறித்தும், அதனால்தான் தன்னால் சரியான நேரத்திற்குள் பேட்டிங் செய்ய தயாராக முடியவில்லை என்றும் கூறி, முறையீட்டை திரும்பப் பெறுமாறு வங்கதேச அணி கேப்டன் ஷகிப்பிடம் ஏஞ்சலோ மேத்யூஸ் பேசினார். ஆனால், அவர் தனது அப்பீலை திரும்பப் பெற முன்வரவில்லை.

இதனால் விரக்தியடைந்த ஏஞ்சலோ மேத்யூஸ் ஹெல்மெட்டை கீழே தூக்கி எறிந்தார். பின்னர் வேறு வழியின்றி பெவிலியனை நோக்கி அவர் நடக்கத் தொடங்கினார்.

ஆண், பெண் இரு பாலரிலும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் இதுபோன்று எந்தவொரு வீரரும் இதுவரை அவுட் ஆனதே இல்லை. முதல் முறையாக அதுவும் மிகவும் முக்கியமான உலகக்கோப்பையில் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அவுட்டாகியுள்ளார்.

பந்துவீச்சு முனையில் உள்ள பேட்ஸ்மேன் கிரீசை விட்டு வெளியேறினால், அவரை அவுட்டாக்கும் மன்கட் முறையைப் போலேவே இந்த டைம்டு அவுட் முறையும் கிரிக்கெட் விளையாட்டின் உத்வேகத்திற்கு எதிரானது என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

 
ஏஞ்சலோ மேத்யூஸ் டைம் அவுட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஐ.சி.சி. இணையதளத்தில் விளக்கம்

ஏஞ்சலோ மேத்யூஸ் அவுட்டான விதம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் விளக்கம் அளித்துள்ளது. ஐ.சி.சி. இணையதளத்தில் பின்வரும் செய்தி பகிரப்பட்டுள்ளது.

"சதீர சமரவிக்ரமவின் விக்கெட் வீழ்ந்த போது, மெத்யூஸ் 6வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்தார். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு வித்தியாசமான சூழல் அப்போது எழுந்தது. அவர் முதல் ஒரு பந்தை எதிர்கொள்ளும் முன்பாகவே பின்வாங்க வேண்டியிருந்தது.

இலங்கையின் மூத்த ஆல்ரவுண்டரான ஏஞ்சலோ மேத்யூஸ், தனது ஹெல்மெட்டில் இருந்த சிக்கலைத் தீர்க்க நேரம் எடுத்த போது வங்கதேசம் அவுட் கேட்டு முறையிட்டதால் குழப்பமடைந்தார்.

இந்த சம்பவம் இலங்கை இன்னிங்ஸின் 25வது ஓவரில் நடந்தேறியது.

மேத்யூஸ் உள்ளே நடக்க நேரம் எடுத்துக்கொண்டார், பின்னர் அவர் ஹெல்மெட்டில் இருந்த சிக்கலை தீர்க்கவும் நேரமானது. அப்போது ஷாகிப் அல் ஹசன் உள்ளிட்ட வங்கதேச அணி "டைம்டு அவுட்" வெளியேற்றத்திற்கு அப்பீல் செய்தது. அதனை நடுவர்கள் ஏற்றுக் கொண்டது மேத்யூஸை திகைக்க வைத்தது.

அதன் பிறகு ஏஞ்சலோ மேத்யூஸ், வங்கதேச கேப்டன் ஷாகிப் மற்றும் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைக் காண முடிந்தது. ஆனால், ஷாகிப் தனது அப்பீலை திரும்பப் பெற மறுத்துவிட்டார், இதனால், மேத்யூஸ் தனது உடைந்த ஹெல்மெட் பட்டையுடன் பெவிலியன் திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது.

 
ஏஞ்சலோ மேத்யூஸ் டைம் அவுட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கிரிக்கெட் உலகக் கோப்பை 2023-ல் "டைம்டு அவுட்" தொடர்பான விளையாட்டு விதிகமுறைகள் பின்வருமாறு:

40.1.1 ஒரு விக்கெட் விழுந்த பிறகு அல்லது ஒரு பேட்டரின் ஓய்வுக்குப் பிறகு, உள்ளே வரும் பேட்டர் இரண்டே நிமிடங்களுக்குள் பந்தைப் பெறத் தயாராக இருக்க வேண்டும் அல்லது மறுமுனையில் உள்ள பேட்டர் அந்த பந்தை 2 நிமிடங்களுக்குள் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உள்ளே வரும் பேட்டர் டைம்டு அவுட் முறையில் ஆட்டமிழந்ததாக கருதப்படுவார்.

மேத்யூஸ் தனது முதல் பந்தை எதிர்கொள்ள மூன்று நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டதால், வங்கதேச அணி முறையீட்டைத் தொடர்ந்து பெவிலியனுக்குத் திரும்ப அனுப்பப்பட்டார்.

சர்வதேச கிரிக்கெட்டில், ஆடவர் அல்லது பெண்கள், ஒரு பேட்டர் "டைம்டு அவுட்" விதிப்படி வெளியேற்றப்படுவது இதுவே முதல் முறை."

இவ்வாறு ஐ.சி.சி. இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cw52l06g5pwo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மெத்யூஸின் விசித்திரமான ஆட்டம் இழப்புக்கு மத்தியில் அசத்திய அசலன்க; இலங்கை 279

06 NOV, 2023 | 07:25 PM
image

(இந்தியாவிலிருந்து நெவில் அன்தனி)

டெல்லி, அருண் ஜய்ட்லி விளையாட்டங்கில் இன்று திங்கட்கிழமை (06) நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷினால் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 49.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 279 ஓட்டங்களைப் பெற்றது.

மெத்யூஸின் விசித்திரமான ஆட்டம் இழப்புக்கு மத்தியில்   சரித் அசலன்க மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி சதம் குவித்து இலங்கை அணியின் மொத்த எண்ணிக்கைக்கு உரமூட்டினார். உலகக் கிண்ணப் போட்டியில் சரித் அசலன்க குவித்த முதலாவது சதம் இதுவாகும்.  சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் பெற்ற இரண்டாவது சதமாகும்.

ஏஞ்சலோ மெத்யூஸின் விசித்திரமான ஆட்டம் இழப்பைத் தொடர்ந்து இலங்கை அணி அழுத்தத்தை எதிர்கொண்ட போதிலும் சரித் அசலன்க நிதானத்துடனும் வேகத்துடனும் துடுப்பெடுத்தாடி அணியைப் பலப்படுத்தினார்.

105 பந்துகளை எதிர்கொண்ட அசலன்க 6 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 108 ஓட்டங்களைப் பெற்று 8ஆவதாக ஆட்டம் இழந்தார்.

இன்றைய போட்டியை இரண்டு மாற்றங்களுடன் இலங்கை எதிர்கொண்டது.

ஆரம்ப வீரர் திமுத் கருணாரட்னவுக்குப் பதிலாக குசல் பெரேராவும் சுழல்பந்துவீச்சாளர் துஷான் ஹேமன்தவுக்குப் பதிலாக தனஞ்சய டி சில்வாவும் அணியில் இடம்பெற்றனர்.

எவ்வாறாயினும் குசல் பெரேரா மீண்டும் பிரகாசிக்கத் தவறினார்.

தனது துடுப்பாட்டத்தை பவுண்டறியுடன் ஆரம்பித்த குசல் பெரேரா முதலாவது ஓவரிலேயே 4 ஓட்டங்களுடன் முஷ்பிக்குர் ரஹிமிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார்.

முஷ்பிக்குர் ரஹிம் சுமார் ஒரு மீற்றர் தூரம் இடதுபுறத்தில் உயர்வாகத் தாவி இடது கையால் எடுத்த பிடி இந்த வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மிகச் சிறந்த பிடியாக கருதப்படுகிறது.

எவ்வாறாயினும் பெத்தும் நிஸ்ஸன்கவும் அணித் தலைவர் குசல் மெண்டிஸும் 2ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறிய அளவில் தெம்பூட்டினர்.

குசல் மெண்டிஸ் 19 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது அநாவசியமாக பந்தை விசுக்கி அடிக்க முயற்சித்து ஆட்டம் இழந்தார். (66 - 2 விக்.)

மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த பெத்தும் நிஸ்ஸன்க 41 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது துரதிர்ஷ்டவசமாக 'இன்சைட் எஜ்' மூலம் போல்ட் ஆனார். (72 - 2 விக்.)

இந் நிலையில் சதீர சமரவிக்ரமவும் சரித் அசலன்கவும் 4ஆவது விக்கெட்டில் 63 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஷக்கிப் அல் ஹசன் வீசிய பந்தை முன்னால் பாய்ந்து சிக்ஸாக்க முயற்சித்து சதீர சமரவிக்ரம 41 ஓட்டங்களுடன் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார்.

 

மெத்யூஸ் விசித்திரமான முறையில் ஆட்டம் இழந்தார்

சதீர சமர ஆட்டம் இழந்த பின்னர் களம் புகுந்த ஏஞ்சலோ மெத்யூஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னரே நேரத்தை வீணடித்தார் என்பதற்காக Timed out முறையில் ஆட்டம் இழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றில் வீரர் ஒருவர் விசித்திரமான முறையில் மத்தியஸ்தரினால் ஆட்டம் இழந்தாக அறிவிக்கப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.

சதீர சமரவிக்ரம ஆட்டம் இழந்த பின்னர் களம் புகுந்த ஏஞ்சலோ மெத்யூஸ் துடுப்பெடுத்தாடத் தயாரானபோது அவரது தலைக்கவச பட்டி அறுந்துவிட்டது.

அதனை மத்தியஸ்தரிடம் காட்டிய மெத்யூஸ் வேறு ஒரு தலைக்கவசத்தைக் கொண்டு வருமாறு தனது அணியின் மாற்று வீரருக்கு சமிக்ஞை கொடுத்தார்.

இதனிடையே மெத்யூஸ் நேரத்தை வீணடிக்கிறார் எனத் தெரிவித்து மத்தியஸ்தரிடம் ஷக்கிப் அல் ஹசன் கேள்வி எழுப்பினார். அதனைத் அடுத்து மெத்யூஸ் ஆட்டம் இழந்ததாக மத்தியஸ்தர் மராய்ஸ் இரேஸ்மஸ் தீர்ப்பு வழங்கினார்.

தலைக்கவச பட்டி அறுந்துபோனதை திரும்பத் திரும்ப காண்பித்து தனக்கு வாய்ப்பு அளிக்குமாறு மத்தியஸ்தரிடம் மெத்யூஸ் கோரினார். பங்களாதேஷ் அணித் தலைவர் ஷக்கிப் அல் ஹசனிடமும் துடுப்பெடுத்தாட வாய்ப்பு அளிக்குமாறு மெத்யூஸ் கோரினார். ஆனால், தன்னால் எதுவும் செய்ய முடியாது எனவும் மத்தியஸ்தர்தான் தீர்மானிக்கவேண்டும் எனவும் கூறி ஷக்கிப் அல் ஹசன் நழுவிவிட்டார்.

இதனை அடுத்து ஏஞ்சலோ மெத்யூஸ் பெரும் ஏமாற்றத்துடன் களம் விட்டு வெளியேறினார். பவுண்டறி எல்லையை அண்மித்துபோது தலைக்கவசத்தை உயர்த்தி அறுந்துபோன பட்டியைக் காட்டிவிட்டு பவுண்டறி எல்லைக்கு வெளியே எறிந்துவிட்டு தங்குமறைக்கு சென்றார்.

துடுப்பாட்ட வீரர் ஒருவர் ஆட்டம் இழந்த பின்னர் அல்லது ஓய்வுபெற்ற பின்னர்  அடுத்து களம் புகும் வீரர் 3 நிமிடங்களுக்குள் துடுப்பாட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பது எம்சிசி கிரிக்கெட் விதிகளில் ஒன்றாகும். ஆனால் விளையாட்டு நிலைமைகள் (Playing Conditions) 2 நிமிடங்களுக்குள் துடுப்பெடுத்தாட வேண்டும் எனக் கூறுகிறது. ஆனால், மெத்யூஸ் குறிப்பிட்ட நேரத்திற்குள் துடுப்பாட்டத்தை ஆரம்பிக்கவில்லை என்பதற்காக அவர் Timed out முறையில் ஆட்டம் இழந்ததாக மத்தியஸ்தர் தீர்ப்பளித்தார்.

இதேவேளை, கிரிக்கெட் மகத்துவத்துவத்தையும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் ஷக்கிப் அல் ஹசன் பின்பற்றத் தவறிவிட்டதாக கிரிக்கெட் வர்ணனையாளர் வக்கார் யூனிஸ் குறிப்பிட்டார்.

அதன் பின்னர் களம் நுழைந்த தனஞ்சய டி சில்வா, 6ஆவது விக்கெட்டில் சரித் அசலன்கவுடன் 78 ஓட்டங்களைப் பகிர்ந்து அநாவசியமாக தனது விக்கெட்டைத் தாரைவார்த்தார்.

மெஹ்தி ஹசன் மிராஸின் பந்தை நோக்கி 3 அடிகள் முன்னால் பாய்ந்து அடிக்க முயற்சித்த தனஞ்சய டி சில்வா பந்தை தவறவிட, முஷ்பிக்குர் ரஹிம் இரண்டாவது முயற்சியில் ஸ்டம்ப் செய்து அவரை ஆட்டம் இழக்கச் செய்தார்.

தனஞ்சய டி சில்வா 34 ஓட்டங்களைப் பெற்றார்.

அடுத்து ஆடுகளம் புகுந்த மஹீஷ் தீக்ஷன 21 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது அநாவசியமாக பந்தை விசுக்கி அடித்து பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார்.

அசலன்கவும் தீக்ஷனவும் 7ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

தீக்ஷனவைத் தொடர்ந்து அசலன்க உட்பட கடைசி 3 விக்கெட்கள் ஒரு ஓட்டத்திற்கு சரிந்தன.

பந்துவீச்சில் தன்ஸிம் ஹசன் சக்கிப் 80 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷொரிபுல் இஸ்லாம் 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஷக்கிப் அல் ஹசன் 57 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/168689

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஏராளன் said:

மெத்யூஸின் விசித்திரமான ஆட்டம் இழப்புக்கு மத்தியில் அசத்திய அசலன்க; இலங்கை 279

279 அடித்தும் பிரயோசனமில்லை.
 

Bye Bye Sri Lanka.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

279 அடித்தும் பிரயோசனமில்லை.
 

Bye Bye Sri Lanka.

இந்த‌ உல‌க‌ கோப்பை முன்பை விட‌ விறுவிறுப்பு இல்லாம‌ மைதான‌த்திலும் அதிக‌ ர‌சிக‌ர்க‌ள் இல்லாம‌ ஏனோ தானோ என்று ந‌ட‌க்குது.........1999க‌ளில் இங்லாந்தில் ந‌ட‌ந்த‌ உல‌க‌ கோப்பையில்  ஜ‌சிசி இணைய‌த‌ள‌த்தை தான் அதிக‌ர‌ ர‌சிக‌ர்க‌ள் பார்வையிட்ட‌வை அப்போது...........அதிக‌ ம‌க்க‌ள் பார்வையிட்ட‌ இணைய‌த‌ள‌ம் என்று வ‌ர‌லாறு ப‌டைச்ச‌து


இப்ப‌ அதிக‌ அள‌விலான‌ போட்டிக‌ள் உள்ளூர் கில‌ப் போட்டிக‌ள் அதோடு மூன்று வித‌ கிரிக்கேட் ஜ‌ந்து நாள் விளையாட்டால் கிரிக்கேட் ஒரு போதும் வ‌ள‌ராது

உல‌க‌ கோப்பை என்றால் குறைந்த‌து 18நாடுக‌ள் விளையாட‌னும் இது வெரும் 10அணிக‌ள்

ஒரு கால‌த்தில் 50ஓவ‌ர் கிரிக்கேட்டுக்கு அதிக‌ வ‌ர‌வேற்ப்பு இருந்த‌து இப்போது 20 ஓவ‌ர் கிரிக்கேட்டை தான் ர‌சிக‌ர்க‌ள் அதிக‌ம் விரும்பி பார்க்கின‌ம்............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டைம்டு அவுட் சர்ச்சையை தாண்டி இலங்கையை வீழ்த்தியது வங்கதேசம் - இங்கிலாந்துக்கு புது சிக்கல்

இலங்கை vs வங்கதேசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

6 நவம்பர் 2023

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக எழுந்த டைம்டு அவுட் சர்ச்சையைத் தாண்டி இலங்கையை வங்கதேச அணி வீழ்த்தியுள்ளது. இலங்கை நிர்ணயித்த 280 ரன் இலக்கை வங்கதேச அணி எளிதில் எட்டியது. அந்த அணியில் கேப்டன் ஷகிப் அல் ஹசன், ஷான்டோ ஆகிய இருவரும் அசத்தலாக ஆடினர். இலங்கை சார்பில் சாரித் அசலங்கா அடித்த சதம் வீணாய் போனது.

இந்தப் போட்டியின் முடிவைக் காட்டிலும் இலங்கை பேட்டிங் செய்த போது 25வது ஓவரில் நடந்த சம்பவமே பெருமளவில் பேசுபடு பொருளாக மாறியுள்ளது. இணையத்தில் எங்கு பார்த்தாலும் அதுகுறித்த விவாதமாகவே தென்படுகிறது. அப்போது என்ன நடந்தது? டைம்டு அவுட் என்றால் என்ன? ஐ.சி.சி. என்ன சொல்கிறது?

உலகக்கோப்பையைப் பொருத்தவரை, தற்போதைய நிலையில் இரு அணிகளுமே அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டன. ஆனாலும், வங்கதேசத்தின் வெற்றியால் இங்கிலாந்து அணிக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. அது என்ன?

இலங்கை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி

டெல்லியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தல் வங்கதேச அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது. இலங்கை அணிக்கு குசால் பெரேரா - பதும் நிசாங்கா ஜோடி தொடக்க வீரர்களாக களம் கண்டது. முதல் ஓவரின் கடைசிப் பந்திலேயே குசால் பெரேரா ஒரு பவுண்டரி மட்டும் அடித்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

அடுத்து வந்த இலங்கை அணி கேப்டன் குசால் மெண்டிசை 19 ரன்களில் வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் வெளியேற்றினார். இலங்கையின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் குசால் மெண்டிசின் அவுட் இலங்கை ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தது. அடுத்த சிறிது நேரத்திலேயே, மறுமுனையில் அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த மற்றொரு தொடக்க வீரர் நிசாங்காவும் ஆட்டமிழந்தார். அவர் 36 பந்துகளில் 41 ரன் எடுத்தார்.

சமரவிக்ரம - அசலங்கா நிதான ஆட்டம்

72 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்ததால் விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தும் முயற்சியில் சமரவிக்ரமவும் அடுத்து வந்த அசலங்காவும் இறங்கினர். நிதானம் காட்டிய இருவரும் சற்று நேரம் நிலைத்து ஆடினர்.

12 ஓவர்களுக்கு மேலாக பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிய இருவரும் 63 ரன்கள் சேர்த்தனர். சமரவீரா 41 ரன் எடுத்திருந்த போது 25-வது ஓவரின் இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பிறகுதான் இன்று பெருமளவில் பேசுபடு பொருளாக மாறியுள்ள அந்த சம்பவம் நடந்தேறியது.

ஏஞ்சலோ மேத்யூஸ் டைம்டு அவுட்

நான்காவது விக்கெட்டாக சமரவிக்ரம அவுட்டானதும் இலங்கை அணியின் மூத்த வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் உள்ளே வந்தார். ஆனால், குறிப்பிட்ட 2 நிமிடங்களுக்குள் அவர் பேட்டிங் செய்ய தயாராகாததால் டைம்டு அவுட் முறையில் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

2 நிமிடங்களுக்குள்ளாக களத்திற்குள் வந்துவிட்டாலும் ஹெல்மெட்டில் உள்ள பட்டைகள் (ஸ்டிராப்ஸ்) சரிவர வேலை செய்யாததால் அவரால் உடனே பேட்டிங்கிற்கு தயாராக முடியவில்லை. இதையடுத்து, வங்கதேச அணி அவுட் கேட்டு முறையிட்டதால் ஐ.சி.சி. விதிகளின் படி நடுவர் அவுட் கொடுத்துவிட்டார்.

ஹெல்மெட்டில் உள்ள பிரச்னை குறித்தும், அதனால்தான் தன்னால் சரியான நேரத்திற்குள் பேட்டிங் செய்ய தயாராக முடியவில்லை என்றும் கூறி, முறையீட்டை திரும்பப் பெறுமாறு வங்கதேச அணி கேப்டன் ஷகிப்பிடம் ஏஞ்சலோ மேத்யூஸ் பேசினார். ஆனால், அவர் தனது அப்பீலை திரும்பப் பெற முன்வரவில்லை.

இதனால் விரக்தியடைந்த ஏஞ்சலோ மேத்யூஸ் ஹெல்மெட்டை கீழே தூக்கி எறிந்தார். பின்னர் வேறு வழியின்றி பெவிலியனை நோக்கி அவர் நடக்கத் தொடங்கினார்.

ஐ.சி.சி. விதிகள் கூறுவது என்ன?

ஐசிசி விதிகளின்படி, கிரீஸில் இருக்கும் வீரர் அவுட் ஆனதும், அவருக்குப் பதிலாக வரும் வீரர் அதிகபட்சமாக மூன்று நிமிடங்களுக்குள் பந்துவீச்சை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

ஆனால், நடப்பு உலகக்கோப்பையை பொருத்தவரை அந்த கால அவகாசம் 2 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. ஆண், பெண் இரு பாலரிலும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் இதுபோன்று எந்தவொரு வீரரும் இதுவரை அவுட் ஆனதே இல்லை. முதல் முறையாக அதுவும் மிகவும் முக்கியமான உலகக்கோப்பையில் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அவுட்டாகியுள்ளார்.

பந்துவீச்சு முனையில் உள்ள பேட்ஸ்மேன் கிரீசை விட்டு வெளியேறினால், அவரை அவுட்டாக்கும் மன்கட் முறையைப் போலேவே இந்த டைம்டு அவுட் முறையும் கிரிக்கெட் விளையாட்டின் உத்வேகத்திற்கு எதிரானது என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

அசலங்கா சதம் - இலங்கை 279 ரன்

இலங்கை அணிக்கு ஒரு புறம் விக்கெட்டுகள் வீழ்ந்தபடி இருந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய அசலங்கா அவ்வப்போது அதிரடியும் காட்டினார். அவருக்கு ஓரளவு ஒத்துழைப்பு கொடுத்த தனஞ்ஜெய டி சில்வா 34 ரன்களும், தீக்ஷனா 21 ரன்களும் எடுத்தனர்.

அபாரமாக ஆடிய அசலங்கா சதம் அடித்து அசத்தினார். 5 சிக்சர்கள், 6 பவுண்டரிகளுடன் அவர் 108 ரன்கள் சேர்த்தார். கடைசியில் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை அணி 50-வது ஓவரில் 279 ரன்களில் ஆல் அவுட்டானது. அசலங்காவின் சதத்தால் இலங்கை அணி சவாலான இலக்கை வங்கதேசத்திற்கு நிர்ணயித்தது.

வங்கதேசத்திற்கு ஷான்டோ - ஷாகிப் அபார ஆட்டம்

வங்க தேச அணிக்கும் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அந்த அணி 41 ரன்களிலேயே தொடக்க வீரர்களை இழந்துவிட்டது. ஹாசன் 9 ரன்களிலும், லிட்டன் தாஜம் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் ஜோடி சேர்ந்த ஹூசைன் ஷான்டோவும் கேப்டன் ஷாகிப் அல் ஹசனும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். களத்தில் நிலைத்து நின்ற இருவரும் அதிரடியிலும் மிரட்டினர். இதனால், வங்கதேச அணியின் ரன் ரேட் 6 ரன்களுக்கும் மேலாகவே தொடர்ந்து இருந்தது. இருவருமே அரைசதம் அடித்து சதத்தை நெருங்கினர்

வங்கதேச அணியின் வெற்றியை கிட்டத்தட்ட உறுதிப்படுத்திய பிறகே அந்த ஜோடி பிரிந்தது. சதமடிப்பார்கள் என்று கருதப்பட்ட இருவருமே அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஷான்டோ 90 ரன்களும், ஷாகிப் 65 பந்துகளில் 82 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் வந்த வீரர்கள் சற்று தடுமாறினாலும் அணியின் வெற்றிக்கு குறைந்த ரன்களே தேவைப்பட்டதால் சிரமம் ஏற்படவில்லை. 42-வது ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வங்கதேச அணி வெற்றி இலக்கை எட்டியது. 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் அதிரடியாக 82 ரன்களையும் குவித்து ஆல்ரவுண்டராக மிரட்டிய வங்கதேச அணி கேப்டன் ஷாகிப் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இங்கிலாந்து அணிக்கு புதிய சிக்கல்

இலங்கையை வென்றதன் மூலம் வங்கதேச அணி 4 புள்ளிகளுடன் 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இலங்கை அணி அதே நான்கு புள்ளிகளைப் பெற்றிருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் 8-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. கடைசி இரு இடங்களில் நெதர்லாந்தும், இங்கிலாந்தும் உள்ளன.

வங்கதேச அணியின் வெற்றியால் இங்கிலாந்து அணிக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. என்னவெனில், உலகக்கோப்பையில் முதல் 7 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்து வரும் சாம்பியன்ஸ் டிராபிக்கு நேரடியாக தகுதி பெறும். அந்த வகையில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து இன்னும் 2 போட்டிகள் உள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதி பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது.

நான்காவது நடுவர் விளக்கம்

போட்டியின் நான்காவது நடுவர் அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக், "ஏஞ்சலோ மேத்யூஸ் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீச்சை எதிர்கொள்ள தயாராக இல்லாததால், விதிகளின்படி அவுட் செய்யப்பட்டார்" என்று அறிக்கை மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.

விக்கெட் விழும்போது, டிவி நடுவர் இரண்டு நிமிடங்கள் கண்காணித்து, அதன் பிறகு, கள நடுவர்களுக்கு தகவல் அளிப்பார் என்று அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, பீல்டிங் அணியின் கேப்டன் நடுவரிடம் டைம் அவுட் கேட்டு முறையிடலாம் என்றும், இந்தச் சம்பவத்திலும் அதுதான் நடந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

களத்துக்குள் நுழையும் முன் அவரது விளையாட்டு உபரகணங்களை சரிபார்ப்பது பேட்ஸ்மேனின் பொறுப்பு என்றும் நான்காவது நடுவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cd1p48qd1zmo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீடியோ ஆதாரங்களை வெளியிட்டார் மத்தியூஸ்; தனது ஆட்டமிழப்பு தவறானது என வாதம்

Published By: RAJEEBAN    07 NOV, 2023 | 11:11 AM

image

பங்களாதேஷிற்கு எதிரான போட்டியில் ஆடுகளத்திற்குள் நுழைந்த அஞ்சலோ மத்தியூஸ் உரிய நேரத்திற்குள் துடுப்பெடுத்தாட ஆரம்பிக்காததால் ஆட்டமிழந்தார் என அறிவிக்கப்பட்டமை கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மத்தியுஸ் இதனை நிராகரித்து வீடியோ ஆதாரத்தை வெளியிட்டுள்ளார்.

மத்தியூஸ் தான் துடுப்பெடுத்தாடுவதற்கு தயார் நிலையில் உள்ளதை காண்பிக்கும் வீடியோ ஆதாரங்களை வெளியிட்டுள்ளதுடன் தான் ஐந்து நிமிடங்கள் இருக்கும் நிலையிலேயே துடுப்பெடுத்தாட தயாராகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

நான் எதிர்கொண்ட சம்பவம் குறித்து விதிமுறைகள் தெளிவாக தெரிவிக்கின்றன- நான் இரண்டு நிமிடங்களிற்குள் அங்கு சென்றுவிட்டேன் எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன நாங்கள் விரைவில் அறிக்கை வெளியிடுவோம் எங்களிடம் வீடியோ ஆதாரங்கள் உள்ளன நாங்கள் அனைத்தையும் ஆராய்ந்துள்ளோம் நாங்கள்  எதனையும் ஆராயாமல் இங்கு வந்து சொல்லவில்லை நான் ஆதாரத்துடன் பேசுகின்றேன்  எனவும் மத்தியூஸ் தெரிவித்துள்ளார்.

சதீரசமரவிக்கிரமவின் கட்ச் பிடிக்கப்பட்ட தருணத்திலிருந்து எங்களிடம் வீடியோக்கள் உள்ளன நான் கிறீசிற்குள் சென்றதன் பின்னர் எனது ஹெல்மெட் உடைந்ததன் பின்னரும் எனக்கு ஐந்து நிமிடங்கள் இருந்தன நீங்கள் வீரர்களின் பாதுகாப்பு குறித்து தெரிவிக்கின்றீர்கள்! ஹெல்மெட் இல்லாமல் நீங்கள் என்னை ஆட ஆரம்பிக்க சொல்கின்றீர்களா எனவும் மத்தியுஸ் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/168710

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

இங்கிலாந்து அணிக்கு புதிய சிக்கல்

வீட்டுக்கு போறதில என்ன சிக்கல்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
LIVE
39th Match (D/N), Wankhede, November 07, 2023, ICC Cricket World Cup
Afghanistan FlagAfghanistan                        291/5
Australia FlagAustralia               (8.2/50 ov, T:292) 49/4

Australia need 243 runs from 41.4 overs.

 

Current RR: 5.88  • Required RR: 5.83  • Last 5 ov (RR): 32/3 (6.40)
Win Probability:AUS 15.76%  AFG 84.24%
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
AFG FlagAFG
291/5
AUS FlagAUS
(8.2/50 ov, T:292) 49/4

என்ன நடந்தது அவுசுக்கு?

படு தோல்வியை சந்திக்கப் போகினமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

வீட்டுக்கு போறதில என்ன சிக்கல்?

 

7 hours ago, ஏராளன் said:

உலகக்கோப்பையில் முதல் 7 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்து வரும் சாம்பியன்ஸ் டிராபிக்கு நேரடியாக தகுதி பெறும். அந்த வகையில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து இன்னும் 2 போட்டிகள் உள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதி பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது.

அண்ணை முதல் 7 அணிகள் தானாம் நேரடியாக போட்டிகளுக்கு போவினமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:
 
AFG FlagAFG
291/5
AUS FlagAUS
(8.2/50 ov, T:292) 49/4

என்ன நடந்தது அவுசுக்கு?

படு தோல்வியை சந்திக்கப் போகினமோ?

அப்கானிஸ்தானிட‌ம் அவுஸ்ரேலியாவும் தோல்வி அடைய‌ போகுது 🙈

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஏராளன் said:

 

அண்ணை முதல் 7 அணிகள் தானாம் நேரடியாக போட்டிகளுக்கு போவினமாம்.

ஓ அப்ப பின்னால் இருக்கிறவர்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கா?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகக்கோப்பை தொடரில் இருந்து ஷகிப் அல் ஹசன் காயத்தால் விலகல்

SL vs BAN Timed Out Controversy: Shakib Al Hasan faces backlash after  'disgraceful' appeal - myKhel

டெல்லியில் நேற்று நடந்த உலக கோப்பை லீக் தொடரில் பங்களாதேஷ், இலங்கை அணிகள் மோதின.

இதில் முதலில் ஆடிய இலங்கை 279 ரன்களில் சகல விக்கெட்டுக்களை இழந்தது.

அடுத்து ஆடிய பங்களாதேஷ் 41.1 ஓவரில் 282 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியின்போது ஷகிப் அல் ஹசனுக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, அவர் 3 முதல் 4 வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என வைத்தியர் அறிவுறுத்தி உள்ளனர்.

இதையடுத்து, உலக கோப்பை 2023 தொடரில் இருந்து ஷகிப் அல் ஹசன் விலகியுள்ளார்.

நவம்பர் 11ஆம் திகதி அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஷகிப் அல் ஹசன் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/280484

Link to comment
Share on other sites

On 3/11/2023 at 09:17, ஈழப்பிரியன் said:

வழமையில் கிரிக்கட் திரி பக்கமே எட்டிப் பார்க்காத நிழலி இந்த போட்டிகளை உன்னிப்பாக கவனிப்பதும் கருத்தெழுதுவதும் சந்தோசமாக உள்ளது.

ஒருவேளை @கிருபன் போட்டியை வைத்திருந்தால் போட்டியில் கலந்து கொண்டிருப்பார் என எண்ணுகிறேன்.

நான் மழைக்கு கூட மைதானத்தில் இறங்காதவர் கூட்டத்தின் முக்கிய மூத்த உறுப்பினர். கிடைக்கும் நேரம் எல்லாம் லைப்பரறியில் புகுந்து கொள்கின்றவன். எனக்கும் விளையாட்டுக்கும் இடையில் 1000 கிலோ மீற்றர் தூரம்.

ஆனாலும், 90 களில் கடும் ஈடுபாட்டோடு கிரிக்கெட் மட்ச் கள் பார்த்துக்க் கொண்டு இருந்தேன். பின்பு, அங்கும் நிறைய களவுகளும்,  ளும் வந்தபின் ஆர்வம் முற்றிலுமாக குறைந்து விட்டது.

இந்த முறை, கன காலத்துக்கு பிறகும் வெறும் ஸ்கோர் மட்டும் பார்த்துக் கொண்டு இருக்கின்றேன் -இந்தியா வெல்லக் கூடாது என்ற கனவுடன். ஆனாலும் அவர்கள் தான் வெல்வார்கள் போல இருக்கு.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Afghanistan FlagAfghanistan                            291/5
Australia FlagAustralia                      (14.3/50 ov, T:292) 72/5

Australia need 220 runs from 35.3 overs.

Current RR: 4.96  • Required RR: 6.19  • Last 5 ov (RR): 21/1 (4.20)

Win Probability:AUS 11.22%  AFG 88.78%

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Afghanistan FlagAfghanistan                       291/5
Australia FlagAustralia         (16.4/50 ov, T:292) 87/6

Australia need 205 runs from 33.2 overs.

Current RR: 5.22  • Required RR: 6.15 • Last 5 ov (RR): 29/2 (5.80)

Win Probability:AUS 6.04%  AFG 93.96%

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்கானிஸ்தான் இந்த‌ உல‌க‌ கோப்பையில் க‌வுர‌வ‌மான‌ ப‌ல‌ வெற்றிக‌ளை பெற்று இருக்கு

 

இர‌ண்டுத‌ட‌வை 50ஓவ‌ர் உல‌க‌ கோப்பை தூக்கின‌ வெஸ்சின்டீ 

அணி ம‌ற்றும் தேர்வுக்குழுவின‌ர் வெக்கி த‌லை குனிய‌னும்

 

அப்கானிஸ்தான் வீர‌ர்க‌ள் 50ஓவ‌ரில் எப்ப‌டி விளையாட‌னும் என்று க‌ற்று விட்டார்க‌ள்

 

கிரிக்கேட்டில் அப்கானிஸ்தான் வீர‌ர்க‌ளும் ஜ‌ம்ப‌வான்க‌ள் தான்

 

வாழ்த்துக்க‌ள் அப்கானிஸ்தான் அணிக்கு

 

அடுத்த‌ ம‌ச்சையும் வென்றால் சிமி பின‌ல் உறுதி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Afghanistan FlagAfghanistan                    291/5
Australia FlagAustralia                   (39/50 ov, T:292) 223/7

Australia need 69 runs in 66 balls.

Current RR: 5.71  • Required RR: 6.27  • Last 5 ov (RR): 28/0 (5.60)

Win Probability:AUS 14.03%  AFG 85.97%

மக்ஸ்வெல் வெற்றியை நோக்கி அணியை நகர்த்திச் செல்கிறார்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இரெண்டு வருடத்தில் இனி போட்டி இல்லை என சொல்லி இருந்தால், கவின் நீயூசம் அல்லது இன்னுமொரு வெள்ளை ஆண் போட்டியிட முடிந்திருக்கும். அவரால் டிரம்பை வெல்லவும் முடிந்திருக்க கூடும். ஒரு அதிபராக டிரம்ப் எப்படி தகவல்களை ரஸ்ய உளவாளிகளுக்கு அவரின் கோல்ப் ரிசார்ட்டில் வைத்து கொடுத்தார் என்பதை இதை விட கடுமையான ஆதாரங்களை பைடன் அறிந்திருப்பார். இருந்தும் கமலா போல சோப்பிளாங்கியை அதுவும் அமெரிக்கர்கள் ஹிலரி போன்ற இயலுமை மிக்க பெண்ணையே நிராகரித்த பின், வேறு தெரிவின்றி வேட்பாளர் ஆக்கும் வரைக்கும் காலம் தாழ்த்திய பதவி வெறியர் பைடன். டிரம்பை விட மோசமான சுயநலமி பைடன். ஓபாமா கூப்பிட்டு சொல்லி இராவிட்டால், அந்த மொக்கேனப்பட்ட டிபேட்டுக்கு பின்னும் போட்டியில் இருந்து விலகி இருக்க மாட்டார். அமெரிக்காவின் மைத்திரிபால சிறிசேனதான் பைடன். அநேகமாக மகனை பொது மன்னிப்பில் விடுவார் என்றே நான் நினைக்கிறேன்.
    • தேர்தல் நேரம் பல காரணங்களை சொல்லி பிரிவதும். தேர்தல் முடிய. அதே கட்சிகள்  இரண்டு மூன்று  மாதங்கள் பேச்சுவார்த்தை வைத்து ஆட்சி அமைப்பதும். வழமையான ஒரு நிகழ்வு  தொழில்சாலைகள் மூடப்பட்டுள்ளது என்கிறீர்கள்  ஆனால்  வேலைவாய்ப்புக்கு ஆள்கள். வேண்டும் என்கிறார்கள்    வேலையில். சேர்ந்தால்.  500. .....1000,.......2000. யூரோக்கள்.  நன்கொடை. தரலாம். என்கிறார்கள்    இந்த தொழிலாளர்கள் ஏன்??   ஆரமப சம்பளம்  15 யூரோ   நான் வேலை செய்த காலத்தில் இப்படி இல்லை   சும்மா  9,....10,.யூரோக்கு    உடம்மை  முறித்துக்கொண்டது தான்   கண்ட பலன். வேலை எடுப்பது கூட கடினம்    இப்போது மிகச் சுலபம்    🙏
    • இதுதான் நடக்கும் என நினைக்கிறேன். மின்ஸ்க் II உடன்படிக்கைக்கு திரும்புவதாக ஒரு நாடகம் ஆடப்படும். ரஸ்யா ஒப்புக்கு கிரைமியா தவிர் ஏனைய பகுதிகளை கொடுப்பது போல் ஒரு நாடகம் அரங்கேறும். ஆனால் அங்கே மறைமுக ரஸ்ய அரசு நடக்கும். உக்ரேன் மிகுதி பகுதிகளை தக்க வைக்கும். ஆனால் இனிமேல் எதிர்க்க முடியாதளவுக்கு உக்ரேனின் ஆயுத பலம் முதுகெலும்பு உடைக்கப்படும். மறைமுக ரஸ்ய ஆட்சி நடக்காத பகுதிகளில் - ஒவ்வொரு நாளும் அரசியலில் ரஸ்யா தலையிடும்.  முடிவில் செலன்ஸ்கி மட்டும் அல்ல, நேட்டோ, மேற்கு, ஈயு நோக்கி நகர ஆசைபட்ட அத்தனை பேரும் ஒன்றில் கொல்ல அல்லது நாட்டை விட்டு வெளியேற அல்லது அபிலாசைகளை கைவிட வேண்டி ஏற்படும். டிரம்ப் ஆட்சி முடிய, நாலு வருடத்தில் உக்ரேன் பெலரூஸ் போல காயடிக்கப்பட்ட ரஸ்ய காலனி ஆகி விடும். யூகே, ஜேர்மனி, பிரான்ஸ் கையை பிசைந்தபடி நடப்பதை பார்ப்பார்கள்.  இல்லை என்றால் அமெரிக்கா நேட்டோவில் இருந்தே வெளியேறும் என இவர்கள் மிரட்டப்படுவார்கள். வேறு எந்த அமெரிக்க ஜனாதிபதியும் இப்படி ஒரு சொந்த செலவில் தன் நாட்டு நலனுக்கு சூனியம் வைக்கும் நடவடிக்கையை நினைத்துக்கூட பார்க்க மாட்டார். ஆனால் டிரம்ப் செய்வார். அவருக்கு நாட்டு நலன் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. தான் (புட்டின் வைத்துள்ள பாரதூரமான ஆதாரங்களில் இருந்து) தப்ப வேண்டும்.  அவ்வளவுதான்.     நிச்சயம் அமைதி வரும். உக்ரேனுக்கு, அது 2009 இல் மகிந்த எமது தேசத்துக்கு தந்த அவமானகரமான அமைதியை ஒத்து இருக்கும். அங்கு போலவே இங்கும் புறா பறக்கும், அது புறா இல்லை ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய அபிலாசைகளை தின்று கொழுத்த பருந்து என்பதை அந்த இன மக்கள் மட்டும் மெளன சாட்சிகளா குறிப்பில் வைப்பார்கள்.
    • நன்றி சென்று வாருங்கள். உங்களுக்கு துணையாக இவர்களும்.....🤣
    • நான் இதை உக்ரேன் போர் ஆரம்பித்த காலங்களிலிருந்தே சொல்லிக்கொண்டு வருகின்றேன். அப்போது என் மீது கோபப்பட்டவர்கள் தான் அதிகம். அண்மையில் ஜேர்மனியும் மற்றும் ஒரு சில நாடுகளும் உக்ரேனுக்கான பண உதவியை நிறுத்தியிருந்தனர். இன்னும் ஒரு சில மாதங்கள் பொறுத்திருங்கள். உக்ரேனைப்பற்றிய நல்ல செய்திகள் வரும். 😂
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.