Jump to content

ஐசிசி உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2023 உலகக்கிண்ண தொடருக்கான பரிசுத் தொகை அறிவிப்பு

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் 5 ஆம் திகதி 2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவில் ஆரம்பமாக உள்ளது.

இதில் பங்கேற்கும் 10 அணிகள் ஒன்றுடன் ஒன்று மோதி, முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

அதன்படி, இந்தப் போட்டியின் மொத்தப் பரிசுத் தொகை 10 மில்லியன் டொலர்கள் என ஐசிசி தெரிவித்துள்ளது.

சாம்பியன்ஷிப்பை வெல்லும் அணிக்கு 04 மில்லியன் டொலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ள நிலையில், இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் அணிக்கு 02 மில்லியன் டொலர்கள் வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/274208

Link to comment
Share on other sites

  • Replies 546
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாம் அறிவிப்பு

Published By: VISHNU

26 SEP, 2023 | 11:18 AM
image
 

ஐ.சி.சி.யின் ஒருநாள் உலகக் கிண்ண போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தசுன் சாணக்க அணியின் தலைவராக செயற்படவுள்ளதுடன் அணியின் உப தலைவராக குசல் மெண்டிஸ் உப தலைவராக செயற்படவுள்ளார்.

வனிந்து ஹசரங்க, மகேஷ் தீக்ஷன மற்றும் டில்ஷான் மதுசங்க ஆகியோர் உடற்தகுதியை நிரூபிக்கும் பட்சத்தில் அவர்கள் மூவரும் அணியில் இணைத்துக்கொள்ள வாய்ப்புள்ளது.

15 பேரடங்கிய இலங்கை கிரிக்கெட் குழாம் வருமாறு, 

தசுன் சாணக்க ( அணித் தலைவர்)

குசல் மெண்டிஸ்

பத்தும் நிஷங்க

குசல் ஜனித் பெரேரா

திமுத் கருணாரத்ன

சரித்த அசலங்க

தனஞ்சய டி சில்வா

சதீர சமரவிக்ரம

துனித் வெல்லலாகே

கசுன் ராஜித்த

மதீஷ பத்திரண

லகிரு குமார

வனிந்து ஹசரங்க ( உடற்தகுதியின்மை )

மகேஷ் தீக்ஷன ( உடற்தகுதியின்மை )

டில்ஷான் மதுசங்க ( உடற்தகுதியின்மை )

இதேவேளை, துஷான் ஹேமந்த மற்றும் சாமிக்க கருணாரத்தன ஆகியோரின் பெயர்கள் மேலதிக வீரர்களாக இணைக்கப்பட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/165456

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரவிச்சந்திரன் அஸ்வின்: தோனியைப் போல உலகக் கோப்பையை வெல்வதற்கு இவர் ஏன் அவசியம்?

ரவிச்சந்திரன் அஸ்வின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 29 செப்டெம்பர் 2023, 04:52 GMT

இந்தியாவில் இன்னும் சில நாள்களில் தொடங்கும் ஒருநாள் போட்டி உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் வலதுகை ‘ஆஃப் ஸ்பின்னரான’ ரவிச்சந்திர அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.

உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் இறுதிப் பட்டியல் நேற்று வெளியானது. அதில் அக்ஸர் படேலுக்கு ஏற்பட்ட காயம் முழுமையாக குணமடையாததால் அவருக்குப் பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில்தான் கடைசியாக அஸ்வின் விளையாடினார், அதிலும் இருபோட்டிகளில் மட்டுமே அஸ்வினுக்கு வாய்ப்புக் கிடைத்து.

அதன்பின் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் 18 மாதங்கள் கழித்து, சமீபத்தில் ஆஸ்திரேலியத் தொடரில் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டது பலருக்கும் வியப்பை அளித்தது. இரு போட்டிகளில் பங்கேற்றாலும் அஸ்வின், 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இன்னும் ஃபார்மில்தான் இருக்கிறேன் என்பதை நிரூபித்தார்.

 
ரவிச்சந்திரன் அஸ்வின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நிராகரிப்பும் எழுச்சியும்

கடந்த 2015ம் ஆண்டிலிருந்தே ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து அஸ்வின் அதிகமாகச் சேர்க்கப்படவில்லை என்றே கூற வேண்டும். ஏனென்றால் 2015ம் ஆண்டில் அதிகபட்சமாக 13 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியில் அஸ்வின் இடம் பெற்றார். அதன்பின் 2016ஆம் ஆண்டில் 2 போட்டிகளிலும், 2017ம் ஆண்டில் 9 போட்டிகளிலும் அஸ்வினுக்கு வாய்ப்புக் கிடைத்தது. விராட் கோலி கேப்டன் பொறுப்புக்கு வந்தபின், அஸ்வின் ஒருநாள் அணியிலிருந்து அதிகமாகச் சேர்க்கப்படவில்லை.

ஒருநாள் போட்டிக்கான அணியிலிருந்து 5 ஆண்டுகள் நிராகரிக்கப்பட்ட அஸ்வினுக்கு 2022ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்கத் தொடரில் மீண்டும் வாய்ப்புக் கிடைத்தது. அதன்பின் சமீபத்தில் ஆஸ்திரேலியத் தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றார்.

ஏறக்குறைய 2017ம் ஆண்டிலிருந்து விராட் கோலி, பயிற்சியாளராக ரவி சாஸ்திரி இருந்த காலத்தில் இருந்து, அஸ்வினுக்கு இந்திய ஒருநாள் அணியில் முறையான அங்கீகாரமும், இடமும் கிடைக்கவில்லை.

டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே சரியானவர், அஸ்வினின் பந்துவீச்சு டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே உகந்தது எனக் கருதப்பட்டது. ஏறக்குறைய கடந்த 6 ஆண்டுகளாக இந்திய அணியில் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அஸ்வின் விளையாட அழைக்கப்பட்டிருந்தார்.

 
ரவிச்சந்திரன் அஸ்வின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆனால், தன்னால் ஒருநாள் தொடரிலும், டி20 தொடரிலும் சிறப்பாக விளையாட முடியும் என்பதை அஸ்வின் தொடர்ந்து நிரூபித்து வந்தார்.

குறிப்பாக ஐபிஎல் டி20 லீக்கில் அஸ்வினின் பந்துவீச்சும், பேட்டிங்கும் பிசிசிஐ தேர்வாளர்களுக்கு பெரிய நெருக்கடியை அளித்தது. அஸ்வின் சிறப்பாகப் பந்துவீசியும் ஏன் இந்திய ஒருநாள் அணியில், டி20 அணியில் சேர்க்கப்படவில்லை என்ற கேள்வியும், நெருக்கடியும் தேர்வாளர்களுக்கு ஏற்பட்டது. இதையடுத்துதான் 5 ஆண்டுகள் இடைவெளியில் 2022ம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் அஸ்வின் இடம் பெற்றார்.

ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கு அவரின் பந்துவீச்சு சரிவராது என்று நிராகரிக்கப்பட்டு வந்தநிலையில் இப்போது மீண்டும் அஸ்வினுக்கு இடம் கிடைத்துள்ளது.

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டதையடுத்து, தொடர்ந்து 3 ஆண்டுகளாக ஐசிசி போட்டித் தொடர்களில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். ‘2021 ஐசிசி டி20 உலகக் கோப்பை’, ‘2022ஐசிசி டி20 உலகக் கோப்பை’, ‘2023 ஐசிசி உலகக் கோப்பை’யில் விளையாடி தன்னை நிராகரித்தது தவறு என அஸ்வின் தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.

ரவிச்சந்திரன் அஸ்வின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அஸ்வின் ஏன் உலகக் கோப்பை அணிக்குத் தேவை?

இந்திய அணியில் தற்போதுள்ள சுழற் பந்துவீச்சாளர்களிலேயே ஒருநாள் போட்டிகளிலும், உலகக் கோப்பைத் தொடர்களிலும் அதிக அனுபவம் கொண்டவர் அஸ்வின் மட்டும்தான்.

2011 உலகக் கோப்பை, 2015ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடர்களில் அஸ்வின் இடம் பெற்றுள்ளார். 2011ம் ஆண்டு உலகக் கோப்பையில் 2 போட்டிகளில் 4 விக்கெட்டுகளையும், 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் அஸ்வின் 8 போட்டிகளில் 13 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

விராட் கோலியும், அஸ்வினும் மட்டும்தான் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்று இந்த உலகக் கோப்பைக்கான அணியிலும் இடம் பெற்றுள்ளனர்.

2010ம் ஆண்டிலிருந்து 2023ம் ஆண்டிலிருந்து இந்திய அணிக்காக 115 ஒருநாள் போட்டிகளில் அஸ்வின் பங்கேற்றுள்ளார். அதில் 1040 ஓவர்கள் வீசி, 155 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் கவனிக்க வேண்டியது, அஸ்வினின் எக்கானமி ரேட் மட்டும்தான். அஸ்வினின் பந்துவீச்சு எக்கானமி ரேட் 4.94 மட்டுமே இருக்கிறது. இந்த அளவு குறைவாக ஒரு சுழற்பந்துவீச்சாளர் எக்கானி ரேட் வைத்திருப்பது இந்த உலகக் கோப்பைத் தொடரில் அஸ்வினாக மட்டும்தான் இருக்க முடியும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

 
ரவிச்சந்திரன் அஸ்வின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணிக்கு ஆஃப் ஸ்பின்னரின் அவசியம் என்ன?

அது மட்டுமல்லாமல் ஒரு அணிக்கு ஆஃப் ஸ்பின்னர் மிக, மிக முக்கியமாகும். அதிலும் வலது கை ஆஃ ஸ்பின்னர் மிக உத்தமம். ஆனால், உலகக் கோப்பைக்கான அஸ்வின் இல்லாத இந்திய அணியில் ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் என 3 பேருமே இடதுகை சுழற்பந்துவீச்சாளர்கள், ‘லெக் ஸ்பின்னர்கள்’. இதைத் திருத்தும் வகையில்தான் அஸ்வினைச் சேர்த்துள்ளனர்.

அஸ்வின் வெறும் ஆஃப் ஸ்பின்னர் என்ற வகையில் மட்டும் எடுத்துக்கொள்ள முடியாது. அவரின் பந்துவீச்சில் பல்வேறு வகைகளில் இருக்கும். குறிப்பாக ஓர் ஓவரில் 6 பந்துகளும் ஒரே மாதிரியாக அஸ்வின் வீசியது இல்லை. ஒரு பந்து ஆஃப் ஸ்பின்னாகவும், மற்றொரு பந்து ‘கூக்ளி’யாகவும், ‘கேரம் பாலா’கவும், ‘ஸ்லோ பாலா’கவும், டாஸ் செய்து வீசுவது, ‘லெக் ஸ்பின்னாக’ வீசுவது என்று தனது பந்துவீச்சில் பல்வேறு வகைகளை அஸ்வின் வெளிப்படுத்தக்கூடியவர் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

இதனால் அஸ்வினின் பந்துவீச்சை சமாளித்து ஆடுவது எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருக்கும். சில நேரங்களில் எதிரணியின் ரன்ரேட்டை கட்டுப்படுத்தவும், விக்கெட்டுகளை வீழ்த்தும் ஆபத்பாந்தவனாகவும் அஸ்வின் அணியில் அழைக்கப்படுவார் என்பதை கடந்த காலப் போட்டிகளில் காண முடிந்திருக்கிறது.

 
ரவிச்சந்திரன் அஸ்வின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய மைதானங்களில் அஸ்வினின் அனுபவம்

இந்தியாவில் உள்ள பெரும்பாலான மைதானங்களில் விளையாடிய அனுபவம் அஸ்வினுக்கு இருக்கிறது. கடந்த 2010ம் ஆண்டுமுதல் 2023 வரை இந்தியாவில் மட்டும் 44 போட்டிகளில் அஸ்வின் பங்கேற்றுள்ளார், அதில் 69 விக்கெட்டுகளையும் வீழ்த்தி பெரும் அனுபவத்தை வைத்துள்ளார்.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானவை. அந்த ஆடுகளங்களில் அஸ்வின் போன்ற அனுபவம் நிறைந்த சுழற்பந்துவீச்சாளர் அணியில் இருப்பது பெரிய பலமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

 
ரவிச்சந்திரன் அஸ்வின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இடது கை பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனம்

உலகக் கோப்பையில் பங்கேற்கும் பல்வேறு அணிகளில் இடதுகை பேட்ஸ்மேன்கள் அதிகமாகும். இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு அஸ்வினின் பந்துவீச்சு எப்போதுமே சிம்மசொப்னமாகவே இருக்கும் என்பது விமர்சகர்களின் கருத்து. இடதுகை பேட்டர்களுக்கு அஸ்வின் பந்தை ‘டாஸ்’ செய்யும் விதமும், லைன் லெங்த்தில் பந்தை ‘பிட்ச்’ செய்யும் விதமும் ஆடுவதற்கு கடும் சிரமத்தை அளிக்கும். இதனால், இடதுகை பேட்டர்கள் அஸ்வினின் பந்துவீச்சில் பொறுமையிழந்து அடிக்க முற்பட்டு விக்கெட்டை இழக்க நேரிடும்.

கிரிக்கெட்டின் 143 ஆண்டுகால வரலாற்றில் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக 200 விக்கெட்டுகளை முதன்முதலாக வீழ்த்தியது அஸ்வின் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், அலெக்ஸ் கேரே, டிராவிஸ் ஹெட், இங்கிலாந்து அணியில் டேவிட் மலான், சாம் கரன், மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, நியூசிலாந்தில் டாம் லாதம், டேவான் கான்வே, மார்க் சாப்மேன், சான்ட்னர், பாகிஸ்தானில் ஃபக்கர் ஜமான், இமாம் உல்ஹக், சகீல், முகமது நவாஸ், தென் ஆப்பிரிக்காவில் குயின்டன் டீ காக், டேவிட் மில்லர், பெகுல்க்வே ஆகியோர் முக்கிய இடதுகை பேட்ஸ்மேன்களாகும்.

இவர்களில் பெரும்பாலான பேட்டர்கள் அஸ்வினின் சுழற்பந்துவீச்சை சர்வதேச தளத்தில் எதிர்கொள்ளாதவர்கள் என்பதால், அஸ்வின் பந்துவீச்சு நிச்சயம் அவர்களுக்கு கடினமானதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

 
ரவிச்சந்திரன் அஸ்வின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பேட்டிங்கில் இன்ப அதிர்ச்சி கொடுக்கக் கூடியவர்

ஒருநாள் போட்டிகளில் அஸ்வினின் பேட்டிங் என்பது பெரிதாக குறிப்பிடும்படியாக இல்லை என்பது ஏற்புக்குடையதுதான். அஸ்வின் 115 போட்டிகளில் விளையாடி 707 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் ஒரு அரைசதம் மட்டுமே அடங்கும்.

ஏனென்றால், கடந்த 2015ம் ஆண்டுக்கு முன், இந்திய அணியில் அஸ்வின் களமிறங்குவது 9வது அல்லது 8-வது வரிசையில் வருவார். அதனால் அதிகமான ரன்கள் சேர்க்கவும் வாய்ப்பு இல்லை. அது மட்டுமல்லாமல் 2010 முதல் 2015வரை இந்திய அணியில் சச்சின், சேவாக், கம்பீர் போன்ற ஜாம்பவான்கள் இருந்ததால், அஸ்வினின் பேட்டிங்கிற்கே வேலையிருக்காது என்றே கருதலாம்.

ஆனால், 2015ம் ஆண்டுக்குப்பின்புதான் அஸ்வினின் பேட்டிங் திறமையை மெருகேறியது என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். 2015ம் ஆண்டுக்கு பிந்தைய காலக்கட்டங்களில் டெஸ்ட் போட்டிகளில் அதிக கவனம் செலுத்திய அஸ்வின் 5 சதங்களை விளாசியுள்ளார். பேட்டிங் திறமையில்லாத ஒரு வீரரால் நிச்சயம் சதம் அடிக்க முடியாது என்பதும் ஏற்புக்குடியதே. ஆதலால், அஸ்வினின் வருகை கடைசி வரிசையில் இந்திய அணியின் பேட்டிங்கை வலுப்படுத்தும்.

 
ரவிச்சந்திரன் அஸ்வின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

முக்கியமான அணிகளை மிரட்டியவர்

உலகக் கோப்பையில் பங்கேற்கும் முக்கிய அணிகளான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிராக அஸ்வின் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய அணியில் தற்போதுள்ள ஜடேஜா, குல்தீப்பை விட அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதும் அஸ்வின் மட்டும்தான்.

குறிப்பாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மட்டும் அஸ்வின் 17 போட்டிகளில் 20 விக்கெட்டுகளையும், இங்கிலாந்துக்கு எதிராக 23 போட்டிகளில் ஆடி, 35 விக்கெட்டுகளையும் அஸ்வின் வீழ்த்தியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக 12 விக்கெட்டுகளையும், பாகிஸ்தானுக்கு எதிராக 10 விக்கெட்டுகளையும், இலங்கைக்கு எதிராக 32 விக்கெட்டுகளையும் அஸ்வின் சாய்த்துள்ளார்.

ஆதலால், வலுவான வீரர்களுடன் களத்தில் இறங்கும் அணிகளுக்கு எதிராக அஸ்வின் தனி முத்திரை பதித்துள்ளார் என்பதால், அவரின் தேவை இந்திய அணி்க்கு அவசியமானதாகும்.

 
ரவிச்சந்திரன் அஸ்வின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பகலிரவு ஆட்டங்களில் பிரகாசிப்பவர்

உலகக் கோப்பையில் பெரும்பாலான போட்டிகள் பகலிரவு ஆட்டங்களாக நடக்க இருக்கின்றன. பகலிரவு ஆட்டங்கள், மின்னொளியில் நடக்கும் ஆட்டங்களில் எப்போதுமே அஸ்வின் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார் என்பதை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

2010 முதல் 2023 வரை 80 பகலிரவு போட்டிகளில் அஸ்வின் பங்கேற்று 113 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அஸ்வின் வீழ்த்திய 100க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் பகலிரவு ஆட்டத்தின் மூலம் எடுத்தவைதான்.

இந்திய அணியின் வெற்றிகளில் பங்களித்தவர்

அது மட்டுமல்லாமல் அஸ்வின் விளையாடிய 115 ஒருநாள் போட்டிகளில் இந்தியஅணி 67 போட்டிகளில் வென்றுள்ளது. வெற்றி பெற்ற போட்டிகளில் அஸ்வின் மட்டும் 111 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதாவது 67 போட்டிகளில் 111 விக்கெட்டுகளை அஸ்வின் கைப்பற்றியுள்ளார்.

அஸ்வின் இடம் பெற்று இந்தியஅணி தோல்வி அடைந்த 41 போட்டிகளில் அஸ்வின் 38 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியுள்ளார். ஆதலால் அஸ்வின் ஒரு மேட்ச் வின்னர் என்பதால்தான் அஸ்வினின் தேவை உலகக் கோப்பை நடைபெறும் தருணத்தில் இந்திய அணிக்கு அவசியமாகிறார்.

 
ரவிச்சந்திரன் அஸ்வின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அஸ்வினை நிராகரிக்க காரணம்என்ன?

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா, இந்திய அணியில் அஸ்வின் தேவை குறித்து சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் “இன்றுள்ள கிரிக்கெட்டில் தரமான சுழற்பந்துவீச்சாளர்களில் அஸ்வினும் ஒருவர், மிகச்சிறந்த விக்கெட் டேக்கர். ஒருநாள் போட்டியில் இடம் பெற வேண்டுமானால், 10 ஓவர்கள் பந்துவீச வேண்டும், 40 ஓவர்கள் களத்தில் பீல்டிங் செய்ய வேண்டும், தேவைப்பட்டால் பேட்டிங்கும் செய்ய வேண்டும். இந்த அனுபவம் அஸ்வினுக்கு அதிகம் இருக்கிறது.”

“அஸ்வினை தேர்வாளர்கள் நிராகரிக்கிறார்கள் என்றால், அது அவரின் வயது மற்றும் பீல்டிங் திறனுக்காக மட்டும்தான். மற்றவகையில் அஸ்வினை இந்திய ஒருநாள் அணியில் நிராகரிக்க முடியாது. இந்திய அணியில் ஏற்கெனவே இரு இடதுகை சுழற்பந்துவீச்சாளர்கள் இருக்கும்போது, வலது கை ஆஃப் ஸ்பின்னரான அஸ்வின் தேவை அவசியம்” எனத் தெரிவித்தார்.

அஸ்வின் இல்லாத அணிக்கு என்ன சிக்கல்?

இலங்கை முன்னாள் கேப்டன் ரணதுங்காவும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார். அவர் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் 2 ஸ்பெலிஸ்ட் சுழற்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆல்ரவுண்டர்கள் இருக்கிறார்கள் ஆனால், ஸ்பெலிஸ்ட் சுழற்பந்துவீச்சாளர்கல் இருக்கிறார்களா என தெரியாது” என்று கூறினார்.

“ஆசியக் கோப்பையில் குல்தீப் யாதவ் சிறப்பாகச் செயல்பட்டார். ஆனால், இந்திய மண்ணில் நடக்கும் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற வலிமையான அணிகளுக்கு எதிராக 3 சுழற்பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்க வேண்டும். மற்ற அணிகளில் எல்லாம் 2 முழுநேர சுழற்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இந்திய அணியில் அஸ்வின் போன்ற வீரர் இருக்கவேண்டும். என்னைப் பொறுத்தவரை இந்திய அணிக்கு அஸ்வின் தேவை, மேட்ச் வின்னராக இருப்பார்” எனத் தெரிவித்தார்.

 
ரவிச்சந்திரன் அஸ்வின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அஸ்வின் வருகை பலம் சேர்க்குமா?

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அஸ்வின் வருகை நிச்சயம் இந்திய அணிக்கு பெரிய வலுவாக அமையும். ஏனென்றால்,குல்தீப் யாதவ் பந்துவீச்சும், அஸ்வினின் நெருக்கடி தரும் பந்துவீச்சு எதிரணிக்கு மிகப்பெரிய சவாலாக மாறும்.

நடுப்பகுதி ஓவர்களில் அஸ்வின் பாரம்பரிய ஆஃப் ஸ்பின்னராகவும், ரிஸ்ட் ஸ்பின்னராகவும் செயல்படக்கூடிய திறமை படைத்தவர். நடுப்பகுதியில் எதிரணி பேட்டர்களை தனது பந்துவீச்சு நுணுக்கத்தாலும், வித்தியாசமான பந்துவீச்சாலும் திணறடித்து விக்கெட் வீழ்த்தும் திறமை கொண்டவர் அஸ்வின் என்பதை மறுப்பதற்கில்லை.

குறிப்பாக சென்னை, லக்னோ, அகமதாபாத், கொல்கத்தா, மும்பை போன்ற மைதானங்கள் சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கக் கூடியவை. இங்கு நடக்கும் போட்டிகளில் இந்திய அணியில் அஸ்வின் இருப்பது மிகப்பெரிய பலமாக அமையும் என்று கருதலாம்.

https://www.bbc.com/tamil/articles/c109ge90g5yo

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகக்கோப்பை: இந்தியாவுக்கு 1983 போல வலுவான வேகப் பந்துவீச்சு கோப்பையை வென்று தருமா?

4 மணி நேரங்களுக்கு முன்னர்
உலகக்கோப்பை கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

1983ல் இந்தியா முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றபோது, அணியில் இருந்த அனைத்து பந்துவீச்சாளர்களும் ஆல்ரவுண்டர்களாக இருந்தனர். அவர்களில் பலர் 'பிட்ஸ் அண்ட் பீஸ்' கிரிக்கெட் வீரர்கள் என்று அறியப்பட்டனர். அதாவது கொஞ்சம் பந்துவீசவும், கொஞ்சம் பேட்டிங் செய்யவும் கூடியவர்கள்.

ஆனால், கேப்டன் கபில்தேவ் மட்டும் இதற்கு விதிவிலக்காக இருந்தார்.

அணியில் மதன்லால், ரோஜர் பின்னி, சந்தீப் பாட்டீல், மொஹிந்தர் அமர்நாத் மற்றும் இரண்டு நடுத்தர வேக ஸ்பெஷலிஸ்ட் பந்துவீச்சாளர்கள் பல்விந்தர் சந்து, சுனில் வால்சன் ஆகியோர் இருந்தனர். அந்த அணியில் சுழற்பந்து வீச்சாளர் ரவி சாஸ்திரி மட்டுமே இறுதிப் போட்டியில் விளையாடவில்லை.

இந்தப் போட்டியில் இந்தியா 6 பந்துவீச்சாளர்களை களமிறக்கியது. பாட்டீல் கூட தேவைப்படவில்லை. மேலும் தொடக்க ஆட்டக்காரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்துக்கான தேவையும் இருக்கவில்லை. ஆனால் பின்னர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது பந்துவீச்சில் நியூசிலாந்துக்கு எதிராக ஒரே இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மதன் லால் அரையிறுதியிலும் இறுதிப் போட்டியிலும் தனது அசத்தலான மிதவேக பந்துவீச்சால் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

40 ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் கிரிக்கெட் சற்று வித்தியாசமானதாக இருந்தது. அப்போது விக்கெட் எடுப்பதில் யாரும் அதிக கவனம் செலுத்தவில்லை. ஆனால் காலப்போக்கில், ஒரு சில பேட்ஸ்மேன்களை அவுட் செய்வது முக்கியமானதாக மாறிப்போனது. அதனால்தான் ரன் கொடுக்காத பவுலர்களை விட விக்கெட் வீழ்த்துபவர்களின் தேவை அதிகரித்துள்ளது.

 
உலகக் கோப்பை கிரிக்கெட்

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு,

சிராஜ் ஆசிய கோப்பை போட்டியிலும் நன்றாகவே விளையாடினார்.

2011 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா வென்றது. சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், வீரேந்திர சேவாக், சுரேஷ் ரெய்னா என முன்னணி பேட்ஸ்மேன்கள் பந்துவீசுவதில் வல்லவர்களாகத் திகழ்ந்தனர். மற்றபடி இறுதிப் போட்டியில் கோலியுடன் சச்சினும், யுவராஜும் மட்டுமே பந்து வீசினர்.

இந்தப் போட்டியில் மொத்தம் 12 பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அவர்களில் ஏழு பேர் நடுத்தர வேகப்பந்து வீச்சாளர்களாக இருந்தனர். அந்த தொடரில், பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஷாகித் அப்ரிடியைப் போலவே இந்தியாவின் ஜாகீர் கான் 21 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்திய அணியில் ஜாகீர் கானைத் தவிர, எஸ்.ஸ்ரீசாந்த், முனாப் படேல், ஆஷிஷ் நெஹ்ரா, பிரவீன் குமார் போன்ற நடுத்தர வேகப்பந்து வீச்சாளர்களும், ஹர்பஜன் சிங், பியூஷ் சாவ்லா மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் போன்ற சுழற்பந்து வீச்சாளர்களும் இருந்தனர். இந்த ஆண்டைப் போலவே, அப்போதும் அவர்கள் வேகப்பந்துவீச்சில் கவனம் செலுத்தினர்.

1983 இன் 'பிட்ஸ் அண்ட் பீஸ்' கிரிக்கெட் வீரர்கள் ஒரு வகையில் 2023 இல் சிறப்பாக விளையாடுபவர்களுக்கு வழிகளை உருவாக்கியுள்ளர். இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் வரிசையில் முதல் பாதியில் ஒரு பந்துவீச்சாளர் கூட விளையாடவில்லை. ஆனால் பின் பாதியில் பந்துவீச்சாளர்கள் வருகிறார்கள். இந்நிலையில், அவர்களும் பேட்டிங் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது அவ்வளவு நல்லதாக இல்லை.

இது ஒருநாள் கிரிக்கெட்டின் இயல்புக்கு எதிரானது என்றே கூற வேண்டும். மற்றபடி எல்லா வீரர்களும் எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று எப்போதும் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

 
உலகக் கோப்பை கிரிக்கெட்

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு,

அனைத்து விதமான ஆடுகளங்களிலும் ஷமி சிறப்பாக விளையாண்டு வருகிறார்.

ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி, ஷர்துல் தாகூர், ஹர்திக் பாண்டியா ஆகியோரின் வரிசை இந்திய அணியின் வேக பந்துவீச்சை காட்டுகிறது. குறிப்பாக சிறப்பாக பந்து வீசும் பும்ரா, முதுகில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு வந்துள்ளதால், வேகப்பந்துவீச்சு பலம் அதிகரித்துள்ளது என்று கருதலாம். இந்த முறை பும்ரா அணியில் முக்கிய பங்கு வகிப்பார்.

மேலும் ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டியில் சிராஜ் தனது வீரதீர ஆட்டத்தால் அனைவரையும் முந்திச் சென்றார். மற்றபடி, மூன்றாவது நடுத்தர வேகப்பந்து வீச்சாளருக்காக ஷமி மற்றும் தாகூர் இடையே போட்டி நிலவுகிறது.

உலக கோப்பைக்கு (2011 போட்டி மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் நடைபெற்றது) எந்த வகையான விக்கெட்டுகளை தயார் செய்தாலும், முதன்மையாக வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று கருதுவது தவறு என்று சொல்ல முடியாது.

போட்டிகள் அடுத்தடுத்து நடக்கும் போது, ஆடுகளமும் அதற்கேற்றவாறு பங்களிக்கத் தொடங்குகிறது. இல்லை என்றால் இரண்டாவது முறை பந்து வீசும் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பனிப்பொழிவு தடையாகி விடும்.

போட்டிகள் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும். மாலையில் சூரிய ஒளி மறைவதற்குள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பந்தை ஸ்விங் செய்ய நேரம் கிடைக்கும். இருப்பினும், நிபந்தனைகளுக்கு ஏற்ப பந்து வீசுவது அவசியம். இந்திய அணிக்கு அந்த சக்தி உள்ளது.

 
உலகக் கோப்பை கிரிக்கெட்

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு,

தற்போது குல்தீப் யாதவ் ஒருநாள் போட்டிகளில் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக வலம் வருகிறார்.

தற்போது குல்தீப் யாதவ் ஒருநாள் போட்டிகளில் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக வலம் வருகிறார். காயமடைந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேலுக்கு பதிலாக அஷ்வின் சிறந்த சுழற்பந்து வீச்சைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இவர்களுடன் ரவீந்திர ஜடேஜாவும் இணைவதால், மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி தனது ஆட்டத்தை வெளிப்படுத்தவுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் மார்க் வுட், கிறிஸ் ஓக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, சாம் குர்ரன் ஆகியோருடன் சிறந்த வேகமான செயல்திறன் மிக்க குழுவும் உள்ளது.

ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசல்வுட், பாட் கம்மின்ஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், கேமரூன் கிரீன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நசீம் ஷா காயமடைந்துள்ள நிலையில், பாகிஸ்தான் அணியில் சில மாற்றங்கள் தெரிகின்றன. இருப்பினும், ஷாஹீன் அப்ரிடி, ஹரிஸ் ரவுஃப், ஹசன் அலி மற்றும் முகமது வாசிம் ஆகியோரைக் கொண்ட வேகப்பந்து வீச்சுக் கூட்டணி சுவாரஸ்யமாகத் தெரிகிறது.

உலகக்கோப்பை போட்டிகளை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இடையேயான சண்டையாக பார்ப்பது ரசிகர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும். இதைப் பார்க்கும்போது, முதல் முறையாக உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணியில் படிப்படியாக ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மிகவும் சுவாரஸ்யமான மாற்றங்களாக உள்ளன.

https://www.bbc.com/tamil/articles/cd15kp0lpy0o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகக் கோப்பை கிரிக்கெட்: பரிசுத் தொகை, சென்னையில் ஆடும் அணிகள் விவரம்

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,GETTY IMAGES

3 மணி நேரங்களுக்கு முன்னர்

13வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதற்கு முன்பே, 1987, 1996, 2011ஆம் ஆண்டுகளில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ஆட்டங்கள் இந்தியாவில் நடைபெற்றிருந்தாலும் பிற நாடுகளுடன் இணைந்தே அந்த தொடர்களை இந்தியா நடத்தியது. தற்போது முதன்முறையாக நடப்பு உலகக் கோப்பை தொடரின் அனைத்து ஆட்டங்களும் இந்தியாவிலேயே நடைபெறவுள்ளது.

கடைசியாக நடைபெற்ற மூன்று 50 ஓவர்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் போட்டியை நடத்திய அணிகளே வெற்றி பெற்றுள்ளன. எனவே, இந்த முறை தொடரை நடத்தும் இந்திய அணி கோப்பையை வசமாக்குமா என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளன.

இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்கதேசம், நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக கலந்துகொள்ள தகுதி பெற்றன. இலங்கை, நெதர்லாந்து ஆகிய அணிகள் தகுதிச் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடித்து உலகக் கோப்பைக்கு தகுதிபெற்றன.

 
உலகக் கோப்பை கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரௌண்ட் ராபின் முறையில் நடைபெறும் ஆட்டங்கள்

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரை போலவே இந்த தொடரிலும் ரௌண்ட் ராபின் முறையில் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. அதன்படி, ஒவ்வொரு அணியும் மீதமுள்ள 9 அணிகளுடன் ஒருமுறையேனும் விளையாடும்.

9 ஆட்டங்களில் 7 ஆட்டங்களில் வெற்றி பெறுவதன் மூலம் ஒரு அணி அரையிறுதிக்கு முன்னேற முடியும். ரௌண்ட் ராபின் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

ரௌண்ட் ராபின் சுற்றில் முதல் இடத்தை பிடிக்கும் அணியும் 4வது இடத்தை பிடிக்கும் அணியும் முதல் அரையிறுதிச் சுற்றில் விளையாடும். 2வது, 3வது இடங்களை பிடிக்கும் அணிகள் 2வது அரையிறுதிப் போட்டியில் விளையாடும். அரையிறுதிப் போட்டிகளில் வெற்றிபெறும் அணிகள் நவம்பர் 19ஆம் தேதி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் விளையாடும்.

மழை காரணமாக அரையிறுதி, இறுதிப் போட்டிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக அவற்றுக்கு மட்டும் ரிசர்வ் டே உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 
உலகக் கோப்பை கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,GETTY IMAGES

உலகக் கோப்பை கிரிக்கெட் - பரிசுத் தொகை எவ்வளவு?

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான மொத்த பரிசுத் தொகை ரூ 83.06 கோடி ஆகும். சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு பரிசாக ரூ 33.22 கோடி வழங்கப்படும். இறுதிப் போட்டியில் தோல்வி அடையும் அணிக்கு ரூ 16.61 கோடி வழங்கப்படும். அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறும் இரு அணிகளுக்கும் தலா ரூ 6.64 கோடி வழங்கப்படும்.

இதுபோக, அரையிறுதிக்கு தகுதிபெறாமல் லீக் ஆட்டங்களின் முடிவில் வெளியேறும் 6 அணிகளுக்கும் தலா ரூ 83 லட்சம் வழங்கப்படும். லீக் சுற்றைப் பொருத்தவரை ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றிபெறும் அணிக்கு ரூ. 33 லட்சம் வழங்கப்படும்.

இந்தியாவில் 10 மைதானங்களில் மொத்தம் 48 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு மைதானங்களில் தலா ஐந்து ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் மட்டும் 3 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. எந்தெந்த மைதானங்களில் எந்த அணிகள் விளையாடும் போட்டிகள் நடைபெறுகின்றன என்பதை கீழ் பார்ப்போம்.

 
உலகக் கோப்பை கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,GETTY IMAGES

எம்.ஏ. சிதம்பரம் மைதானம், சென்னை

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இந்த முறை இந்திய அணி விளையாடும் ஒரு ஆட்டம் உட்பட 5 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

  • இந்தியா – ஆஸ்திரேலியா, அக்டோபர் 8ஆம் தேதி
  • நியூசிலாந்து – வங்கதேசம், அக்டோபர் 14ஆம் தேதி
  • நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான், அக்டோபர் 18ஆம் தேதி
  • பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான், அக்டோபர் 23ஆம் தேதி
  • பாகிஸ்தான்– தென் ஆப்ரிக்கா, அக்டோபர் 27ஆம் தேதி

நரேந்திர மோதி மைதானம், ஆமதாபாத்

  • இங்கிலாந்து - நியூசிலாந்து, அக்டோபர் 5ஆம் தேதி
  • இந்தியா - பாகிஸ்தான், அக்டோபர் 14ஆம் தேதி
  • இங்கிலாந்து - ஆஸ்திரேலியா, நவம்பர் 4ஆம் தேதி
  • தென் ஆப்ரிக்கா - ஆப்கானிஸ்தான், நவம்பர் 10ஆம் தேதி
  • இறுதிப் போட்டி, நவம்பர் 19ஆம் தேதி

சின்னசாமி மைதானம், பெங்களூரு

  • ஆஸ்திரேலியா - பாகிஸ்தான், அக்டோபர் 20ஆம் தேதி
  • இங்கிலாந்து - இலங்கை, அக்டோபர் 26ஆம் தேதி
  • நியூசிலாந்து - பாகிஸ்தான், நவம்பர் 4ஆம் தேதி
  • நியூசிலாந்து - இலங்கை, நவம்பர் 9ஆம் தேதி
  • இந்தியா - நெதர்லாந்து, நவம்பர் 12ஆம் தேதி
 
உலகக் கோப்பை கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,GETTY IMAGES

அருண் ஜேட்லி மைதானம், டெல்லி

  • தென் ஆப்ரிக்கா - இலங்கை, அக்டோபர் 7ஆம் தேதி
  • இந்தியா - ஆப்கானிஸ்தான், அக்டோபர் 11ஆம் தேதி
  • இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான், அக்டோபர் 15ஆம் தேதி
  • ஆஸ்திரேலியா - நெதர்லாந்து, அக்டோபர் 25ஆம் தேதி
  • வங்கதேசம் - இலங்கை, நவம்பர் 6ஆம் தேதி

ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானம், தர்மசாலா

  • வங்கதேசம் - ஆப்கானிஸ்தான், அக்டோபர் 7ஆம் தேதி
  • இங்கிலாந்து - வங்கதேசம், அக்டோபர் 10ஆம் தேதி
  • தென் ஆப்ரிக்கா - நெதர்லாந்து, அக்டோபர் 17ஆம் தேதி
  • இந்தியா - நியூசிலாந்து, அக்டோபர் 22ஆம் தேதி
  • ஆஸ்திரேலியா- நியூசிலாந்து, அக்டோபர் 28ஆம் தேதி

ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா

  • நெதர்லாந்து - வங்கதேசம் , அக்டோபர் 28ஆம் தேதி
  • பாகிஸ்தான் - வங்கதேசம் , அக்டோபர் 31ஆம் தேதி
  • இந்தியா - தென் ஆப்ரிக்கா, நவம்பர் 5ஆம் தேதி
  • இங்கிலாந்து - பாகிஸ்தான், நவம்பர் 11ஆம் தேதி
  • 2வது அரையிறுதி, நவம்பர் 16ஆம் தேதி

பாரத் ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாயி கிரிக்கெட் மைதானம், லக்னோ

  • ஆஸ்திரேலியா - தென் ஆப்ரிக்கா, அக்டோபர் 12ஆம் தேதி
  • ஆஸ்திரேலியா - இலங்கை, அக்டோபர் 16ஆம் தேதி
  • நெதர்லாந்து - இலங்கை, அக்டோபர் 21ஆம் தேதி
  • இந்தியா - இங்கிலாந்து, அக்டோபர் 29ஆம் தேதி
  • நெதர்லாந்து - ஆப்கானிஸ்தான், நவம்பர் 3 ஆம் தேதி
 
உலகக் கோப்பை கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,GETTY IMAGES

வான்கடே மைதானம், மும்பை

  • இங்கிலாந்து - தென் ஆப்ரிக்கா, அக்டோபர் 21ஆம் தேதி
  • தென் ஆப்ரிக்கா - வங்கதேசம், அக்டோபர் 24ஆம் தேதி
  • இந்தியா - இலங்கை, நவம்பர் 2ஆம் தேதி
  • ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான், நவம்பர் 7ஆம் தேதி
  • முதல் அரையிறுதி, நவம்பர் 15ஆம் தேதி

எம்.சி.ஏ. சர்வதேச மைதானம், புனே

  • இந்தியா - வங்கதேசம், அக்டோபர் 19ஆம் தேதி
  • ஆப்கானிஸ்தான் - இலங்கை, அக்டோபர் 30ஆம் தேதி
  • நியூசிலாந்து - தென் ஆப்ரிக்கா, நவம்பர் 1ஆம் தேதி
  • இங்கிலாந்து - நெதர்லாந்து, நவம்பர் 8ஆம் தேதி
  • ஆஸ்திரேலியா - வங்கதேசம், நவம்பர் 11ஆம் தேதி

ராஜீவ் காந்தி சர்வதேச மைதானம், ஹைதராபாத்

  • பாகிஸ்தான் - நெதர்லாந்து, அக்டோபர் 6ஆம் தேதி
  • நியூசிலாந்து - நெதர்லாந்து, அக்டோபர் 9 ஆம் தேதி
  • பாகிஸ்தான் - இலங்கை, அக்டோபர் 10ஆம் தேதி
 
உலகக் கோப்பை கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியா அணி விளையாடும் ஆட்டங்கள்

  • இந்தியா – ஆஸ்திரேலியா, அக்டோபர் 8ஆம் தேதி (சென்னை)
  • இந்தியா- ஆப்கானிஸ்தான், அக்டோபர் 11ஆம் தேதி (டெல்லி)
  • இந்தியா - பாகிஸ்தான், அக்டோபர் 15-ம் தேதி (ஆமதாபாத்)
  • இந்தியா - வங்கதேசம், அக்டோபர் 19ஆம் தேதி (புனே)
  • இந்தியா - நியூசிலாந்து, அக்டோபர் 22ஆம் தேதி (தர்மசாலா)
  • இந்தியா - இங்கிலாந்து, அக்டோபர் 29ஆம் தேதி (லௌக்னோ)
  • இந்தியா - இலங்கை, நவம்பர் 2ஆம் தேதி (மும்பை)
  • இந்தியா - தென் ஆப்ரிக்கா, நவம்பர் 5ஆம் தேதி (கொல்கத்தா)
  • இந்தியா- நெதர்லாந்து, நவம்பர் 12ஆம் தேதி (பெங்களூரு)

இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்

கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஆட்டமான இந்தியா - பாகிஸ்தான் இடையேயான லீக் ஆட்டம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் அக்டோபர் 15ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

50 ஓவர் உலகக் கோப்பையை பொருத்தவரை இந்தியாவை பாகிஸ்தான் அணி வென்றது இல்லை. 7-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இந்த சாதனையை தொடர இந்திய அணி முயற்சிக்கும்.

அதே நேரம் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி பேட்டிங், பந்துவீச்சு ஆகியவற்றில் வலுவாக இருப்பதால் 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக தனது முதல் வெற்றியை ருசிக்க அந்த அணி தீவிரமாக போராடும்.

 
உலகக் கோப்பை கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,GETTY IMAGES

அணிகளின் விவரம்

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, ரவிச்சந்திரன் அஸ்வின், இஷான் கிஷண், சூர்யகுமார் யாதவ்.

இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயீன் அலி, கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோ, ஹாரி புரூக், சாம் கரன், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மாலன், அடில் ரஷீத், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, மார்க் உட், கிறிஸ் வோக்ஸ்.

ஆஸ்திரேலியா: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஷான் அபாட், அலெக்ஸ் கேரி, கேம்ரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மார்னஸ் லபுஷேன், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஸாம்பா.

பாகிஸ்தான்: பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான், ஃபகார் ஜமான், இமாம் உல் ஹக், அப்துல்லா ஷபிக், முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, சல்மான் அலி ஆகா, முகமது நவாஸ், உசாமா மிர், ஹாரிஸ் ரவூப், ஹசன் அலி, ஷாஹீன் அப்ரிடி, முகமது வாசிம்.

நியூசிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிரென்ட் போல்ட், மார்க் சாப்மேன், டெவன் கான்வே, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்ச் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுத்தி, வில் யங்.

 
உலகக் கோப்பை கிரிக்கெட் 2023

பட மூலாதாரம்,GETTY IMAGES

வங்கத் தேசம்: ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்ஃபிகுர் ரஹீம், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ, தௌஹித் ஹிருதாய், மெஹதி ஹசன் மிராஸ், டஸ்கின் அஹமது, முஸ்தபிஸுர் ரஹ்மான், ஹசன் மஹ்முத், ஷோரிஃபுல் இஸ்லாம், நசும் அஹமது, மெஹதி ஹாசன், தன்ஸித் ஹசன், தன்ஸிம் ஹசன், மஹ்மதுல்லா.

இலங்கை: தசுன் ஷானகா (கேப்டன்), பதும் நிசங்கா, திமுத் கருணாரத்னே, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), குசால் பெரேரா, தனஞ்ஜெயா டி சில்வா, சரித் அசலங்கா, சதீரா சமரவிக்ரமா, துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்‌ஷனா, மதீஷா பதிரனா, கசுன் ரஜிதா, துஷான் ஹேமந்தா, லஹிரு குமாரா, தில்ஷன் மதுஷங்கா

ஆப்கானிஸ்தான்: ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஜத்ரான், ரியாஸ் ஹசன், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஜட்ரான், முகமது நபி, இக்ரம் அலிகில், அஸ்மத்துல்லா ஒமர்சாய், ரஷீத் கான், முஜீப் ரஹ்மான், நூர் அகமது, ஃபசல்ஹாக் பரூக்கி, அப்துல் ரஹ்மான், நவீன் உல் ஹக்.

தென் ஆப்ரிக்கா: டெம்பா பவுமா (கேப்டன்), ஜெரால்டு கூட்ஸி, குயிண்டன் டி காக், ரீஸா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ யான்சென், ஹென்ரிச் கிளாஸன், அன்டிலே பெஹ்லுவாயோ , கேஷவ் மஹாராஜ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, லிஸாட் வில்லியம்ஸ் , ககிசோ ரபாடா, ஷம்ஸி, வேன் டர் டுசென்

நெதர்லாந்து: ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), காலின் அக்கர்மென், ஷாரிஸ் அஹமது, வெஸ்லே பார்ரெசி, லோகன் வான் பீக், ஆர்யன் தத், சைபிரண்ட் ஏங்கல்பிரச், ரையன் கிளின், பாஸ் டி லீட், பால் வான் மீகிரண், ரோலாஃப் வேன் டர் மெர்வ், தேஜா நிடாமனுரு, மேக்ஸ் ஓ'டாவ்ட், விக்ரம் சிங், சகிப் ஜுல்ஃபிகர்

https://www.bbc.com/tamil/articles/cz7xn7gy2npo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி : ஆரம்ப விழா நிகழ்வுகள் திடீரென இரத்து

Published By: VISHNU

04 OCT, 2023 | 12:18 PM
image
 

(எம்.எம்.சில்வெஸ்டர்)

இந்தியாவில் வியாழக்கிழமை (5) ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு புதன்கிழமை (04) ஆரம்பிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆரம்ப விழா நிகழ்வுகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (பி.சி.சி.ஐ) இரத்து செய்திருந்தது.

இன்று இரவு 7 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவிருந்த ஆரம்ப விழா நடத்தப்படுவதற்கு 24 மணித்தியாலங்கள் கால அவகாசம் இருந்த நிலையிலேயே திடீரென இரத்து செய்ய பி.சி.சி.ஐ. தீர்மானித்துள்ளது.

இந்த திடீர் முடிவுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை, உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி வரலாற்றில் அதிகாரபூர்வ ஆரம்ப விழா நடைபெறாத முதல் சந்தர்ப்பமாக இது அமைகின்றது.

இந்தியாவின் முன்னணி கலைஞர்களாக ஆஷா போஸ்லே, சங்கர் மகாதேவன், ரன்வீர் சிங், அர்ஜித் சிங், ஸ்ரேயா கோஷல் உள்ளிட்ட கலைஞர்கள் பங்கேற்கவிருந்தனர்.

இந்நிலையில், பாரம்பரிய ஆரம்பவிழாவுக்கு பதிலாக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி அரங்கில் எதிர்வரும் 14 ஆம் திகதியன்று நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டிக்கு முன்னதாக சிறப்பு விழாவொன்றை நடத்த பி.சி.சி.ஐ. தயாராக இருப்பதாக  அதிகாரப்பூர்வமற்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இடம்பெறவுள்ள பல செயற்பாடுகள் தொடர்பில் எவ்வித முன் விளம்பரங்களும் இடம்பெறாதிருக்க ஏற்பாட்டாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/166052

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் இன்று ஆரம்பம்

Published By: SETHU

05 OCT, 2023 | 09:25 AM
image
 

(ஆர்.சேதுராமன்)

ஆண்களுக்கான 2023 ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டி இந்தியாவில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

 நவம்பர் 19  ஆம்  திகதிவரை  நடைபெறும் இச்சுற்றுப்போட்டியில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென் ஆபிரிக்கா, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்குபற்றுகின்றன.

2 தடவைகள் சம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் இம்முறை முதல் தடவையாக உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றவில்லை.

இந்தியாவின் 10 நகரங்களில் மொத்தமாக 48 போட்டிகள் நடைபெறவுள்ளன.

 இங்கிலாந்து -  நியூஸிலாந்து மோதல்

இன்று நடைபெறவுள்ள முதல் போட்டியில் நடப்புச் சம்பியனான இங்கிலாந்தும், கடந்த தடவை இறுதிப்போட்டியில் பங்குபற்றிய நியூஸிலாந்தும் மோதவுள்ளன. 

அஹமதாபாத் நரேந்திர மோடி அரங்கில் பிற்பகல் 2 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும்.

ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் உலகக் கிண்ணப் போட்டிகளிலும்  இவ்விரு அணிகளும் ஏறத்தாழ சம எண்ணிக்கையான வெற்றிகளைப் பெற்றுள்ளன.

England_-_NewZealnd_2023_world_cup_crick

13 ஆவது தடவையாக உலகக்கிண்ண சுற்றுப்போட்டி நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் 4 ஆவது தடவையாக இச்சுற்றுப்போட்டி நடைபெறுகிறது.

எனினும், இந்தியாவில் மாத்திரம் ஆண்கள் உலகக்கிண்ண சுற்றுப்போட்டி நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும்.

பரிசுகள்

இச்சுற்றுப்போட்டியில் மொத்தமாக 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (325 கோடி ரூபா) பணப் பரிசுகளாக வழங்கப்படவுள்ளன.

சம்பியனாகும் அணிக்கு 4 மில்லியன் டொலர்கள் (சுமார் 130 கோடி ரூபா) வழங்கப்படும். 2 ஆம் இடம் பெறும் அணிக்கு 2 மில்லியன் டொலர்களும் வழங்கப்படும். அரை இறுதி வரை முன்னேறும் ஏனைய 2 அணிகளுக்கும் தலா 8 இலட்சம் டொலர்கள் வழங்கப்படும். ஒவ்வொரு லீக் போட்டியிலும் வெற்றி பெறும் அணிக்கு தலா 40,000 டொலர்கள் வழங்கப்படவுள்ளன. அத்துடன் லீக் சுற்றுடன் வெளியேறும் 6 அணிகளுக்கும் மேலும் தலா ஒரு இலட்சம் டொலர்கள் வழங்கப்படும்.

https://www.virakesari.lk/article/166115

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகக் கோப்பை கிரிக்கெட் - ENG vs NZ: முதல் போட்டியில் இங்கிலாந்து பேட்டிங்

இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

5 அக்டோபர் 2023, 08:01 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

2023 உலகக் கோப்பை போட்டியின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் முதலாவதாக பேட்டிங் செய்கிறது இங்கிலாந்து.

டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் லாதம் பந்துவீச்சை தேர்வு செய்தார். போட்டியின் தொடக்க நிகழ்வில் இந்தியாவின் மூத்த நட்சத்திரங்களுள் ஒருவரான டெண்டுல்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

13வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதற்கு முன்பே, 1987, 1996, 2011ஆம் ஆண்டுகளில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ஆட்டங்கள் இந்தியாவில் நடைபெற்றிருந்தாலும் பிற நாடுகளுடன் இணைந்தே அந்த தொடர்களை இந்தியா நடத்தியது. தற்போது முதன்முறையாக நடப்பு உலகக் கோப்பை தொடரின் அனைத்து ஆட்டங்களும் இந்தியாவிலேயே நடைபெறவுள்ளது.

 

கடைசியாக நடைபெற்ற மூன்று 50 ஓவர்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் போட்டியை நடத்திய அணிகளே வெற்றி பெற்றுள்ளன. எனவே, இந்த முறை தொடரை நடத்தும் இந்திய அணி கோப்பையை வசமாக்குமா என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளன.

இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்கதேசம், நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக கலந்துகொள்ள தகுதி பெற்றன. இலங்கை, நெதர்லாந்து ஆகிய அணிகள் தகுதிச் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடித்து உலகக் கோப்பைக்கு தகுதிபெற்றன.

மைதானம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆமதாபாத் மைதான இருக்கைகள் காலியாக இருப்பது ஏன்?

உலகக் கோப்பை தொடரின் உற்சாகம் ரசிகர்கள் மத்தியில் இருந்தாலும், ஆமதாபாத் நரேந்திர மோதி அரங்கின் இருக்கைகள் பெரும்பாலும் காலியாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் பதிவிட்டு வருகின்றனர்.

வார நாளில் போட்டி வந்ததும், இந்தியா போட்டியில் ஆடாததும், ஒரு நாள் போட்டிக்கான ஆதரவு குறைந்திருப்பதும் காரணமாக இருக்கலாம் என பலரும் கூறி வருகின்றனர்.

2019 இறுதிப் போட்டியில் என்ன நடந்தது?

2019-ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் நாள் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த அனல் பறந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று கிரிக்கெட் உலகக் கோப்பையை முதல் முறையாக வென்றது இங்கிலாந்து அணி.

ஐம்பது ஓவர்கள் முடிவில் டையில் முடிந்த போட்டி, சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரும் டையில் முடிந்ததால், விதிமுறைகளின்படி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இன்று 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தும் நியூசிலாந்தும் மோதுகின்றன. இப்போது எல்லோரது கண்முன்னாலும் வந்து போவது அந்த சூப்பர் ஓவர்தான்.

இறுதிப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து 8 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணிக்கு கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டன.

முதல் இரண்டு பந்துகளில் ரன் ஏதும் கிடைக்கவில்லை. மூன்றாவது பந்தில் ஆறு ரன்கள் கிடைத்தது.

அடுத்த பந்தில் இரண்டு ரன்கள் ஓடிய நிலையில் ஓவர்த்ரோ மூலம் அந்த பந்து பவுண்டரி சென்றதால் இங்கிலாந்துக்கு அந்த பந்தில் மொத்தம் ஆறு ரன்கள் கிடைத்தது. அடுத்த பந்தில் ஒரு ரன் ஓடிய நிலையில் இரண்டாவது ரன் ஓடிய ரஷீத் ரன் அவுட் செய்யப்பட்டார்.

கடைசி பந்தில் இங்கிலாந்துக்கு இரண்டு ரன் தேவைப்பட்டது. கையில் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. அந்நிலையில் ஒரு ரன் எடுத்த இங்கிலாந்து, இரண்டாவது ரன்னுக்கு முயன்றபோது வுட்ஸ் ரன் அவுட் செய்யப்பட்டார். எனவே இங்கிலாந்து கடைசியில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் எடுத்து ஸ்கோரை சமன் செய்தது.

இங்கிலாந்து, நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

சூப்பர் ஓவரில் என்ன நடந்தது?

ஆட்டம் சமனில் முடிந்ததால் சூப்பர் ஓவர் முடிவு செய்யப்பட்டது. சூப்பர் ஓவரில் இங்கிலாந்து அணி முதலில் களம் இறங்கியது. அந்த அணியின் சார்பாக களமிறங்கிய ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் இரண்டு பவுண்டரிகளை சேர்த்து 15 ரன்களை எடுத்தனர். நியூசிலாந்து அணியின் போல்ட் பந்து வீசினார்.

அடுத்து நியூசிலாந்து அணியின் சார்பாக கப்தில் மற்றும் நீஷம் களமிறங்கினர். இங்கிலாந்தின் சார்பாக ஆர்ச்சர் பந்து வீசினார். சூப்பர் ஓவரின் முடிவில் நியூசிலாந்து அணியும் 15 ரன்களை எடுத்திருந்தது. எனவே சூப்பர் ஓவரும் டையில் முடிந்தது.

இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

டையில் முடிந்த சூப்பர் ஓவர்

சூப்பர் ஓவர் டையில் முடிந்தால் தங்களது இன்னிங்ஸிலும், சூப்பர் ஓவரிலும் அதிக பவுண்டரிகளை எடுத்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

அதன்படி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இங்கிலாந்து அணி 24 பவுண்டரிகளையும், நியூசிலாந்து அணி 16 பவுண்டரிகளையும் அடித்திருந்தன. இதன் மூலம் முதன்முறையாக உலகக் கோப்பையை வென்றது இங்கிலாந்து அணி.

2023 உலகக் கோப்பை

13வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதற்கு முன்பே, 1987, 1996, 2011ஆம் ஆண்டுகளில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ஆட்டங்கள் இந்தியாவில் நடைபெற்றிருந்தாலும் பிற நாடுகளுடன் இணைந்தே அந்த தொடர்களை இந்தியா நடத்தியது. தற்போது முதன்முறையாக நடப்பு உலகக் கோப்பை தொடரின் அனைத்து ஆட்டங்களும் இந்தியாவிலேயே நடைபெறவுள்ளது.

கடைசியாக நடைபெற்ற மூன்று 50 ஓவர்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் போட்டியை நடத்திய அணிகளே வெற்றி பெற்றுள்ளன. எனவே, இந்த முறை தொடரை நடத்தும் இந்திய அணி கோப்பையை வசமாக்குமா என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளன.

இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்கதேசம், நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக கலந்துகொள்ள தகுதி பெற்றன. இலங்கை, நெதர்லாந்து ஆகிய அணிகள் தகுதிச் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடித்து உலகக் கோப்பைக்கு தகுதிபெற்றன.

https://www.bbc.com/tamil/articles/cje97dy2r1vo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
England FlagEngland          (31/50 ov) 171/4

New Zealand chose to field.

Current RR: 5.51
 • Last 5 ov (RR): 32/0 (6.40)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
England FlagEngland.            282/9
New Zealand FlagNew Zealand.    (6.6/50 ov, T:283) 54/1

New Zealand need 229 runs from 43 overs.

Current RR: 7.71

 • Required RR: 5.32

 • Last 5 ov (RR): 44/0 (8.80)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

England vs New Zealand World Cup 2023 1st Match Highlights 2023 | ENG vs NZ Full Highlights

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
England FlagEngland.               282/9
New Zealand FlagNew Zealand.         (15.6/50 ov, T:283) 130/1

New Zealand need 153 runs from 34 overs.

Current RR: 8.12

• Required RR: 4.50

 • Last 5 ov (RR): 38/0 (7.60)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
England FlagEngland              282/9
New Zealand FlagNew Zealand.    (25/50 ov, T:283) 187/1

New Zealand need 96 runs from 25 overs.

Current RR: 7.48

• Required RR: 3.84

 • Last 5 ov (RR): 33/0 (6.60)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
RESULT
1st Match (D/N), Ahmedabad, October 05, 2023, ICC Cricket World Cup
 
282/9
(36.2/50 ov, T:283) 283/1

New Zealand won by 9 wickets (with 82 balls remaining)

இம்முறை toss யார் வென்று chase பண்ணுகிறார்களோ அவர்கள்தான் வெல்வார்கள் போலுள்ளது. ஆடுகளம்  ஒரு சதத்திற்கு உதவாத batting pitch!

விளையாட்டில் சுவாரஷ்யமே இல்லை!!

Edited by Eppothum Thamizhan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகக் கோப்பை கிரிக்கெட் - ENG vs NZ: விராட் கோலிக்கு அடுத்த இடத்தில் ரச்சின் ரவீந்திரா சாதனை

ரச்சின் ரவீந்திரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

5 அக்டோபர் 2023, 08:01 GMT
புதுப்பிக்கப்பட்டது 45 நிமிடங்களுக்கு முன்னர்

உலகக்கோப்பை 2023 போட்டித்தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை நியூசிலாந்து வீழ்த்தியது.

டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் லாதம் பந்துவீச்சை தேர்வு செய்தார். போட்டியின் தொடக்க நிகழ்வில் இந்தியாவின் மூத்த நட்சத்திரங்களுள் ஒருவரான டெண்டுல்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வெற்றியோடு தொடங்கிய நியூசிலாந்து

உலகக்கோப்பைப் போட்டியில் ஆகமதாபாத்தில் இன்று நடந்த முதல் ஆட்டத்தில், இங்கிலாந்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வென்றது.

கடந்த உலகக்கோப்பைத் தொடரின் இறுதி ஆட்டத்தில் சூப்பர் ஓவர் முறையில் நியூசிலாந்தை வென்று கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் விரட்டி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டது நியூசிலாந்து.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் சேர்த்தது. 283 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்னும் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 36.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 283 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டேவான் கான்வே 152 ரன்களிலும்(121 பந்துகள், 3 சிக்ஸர், 19பவுண்டரிகள்), ரச்சின் ரவீந்திரா 123 ரன்களிலும்(96பந்துகள், 5சிக்ஸர்,11 பவுண்டரிகள்) ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

 

விராட் கோலிக்கு அடுத்த இடத்தில் ரவீந்திரா சாதனை

ரச்சின் ரவீந்திரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

உலகக் கோப்பைத் தொடரில் 2வது விக்கெட்டுக்கு அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற பெருமையை கான்வே, ரவீந்திரா கூட்டணி பெற்றது. இருவரும் சேர்ந்து 112 ரன்கள் சேர்த்துள்ளனர். கடந்த 1996ம் ஆண்டு லீ ஜெர்மன், கிறிஸ் ஹாரிஸ் ஜோடி சேர்த்த ஸ்கோரைவிட அதிகபட்சமாக சேர்த்து கான்வே, ரவீந்திரா ஜோடி ஆடி வருகிறது.

இங்கிலாந்து அணியின் 283 ரன்கள் இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு கான்வே, ரவீந்திரா ஜோடி பிரமாதமான பார்ட்னர்ஷிப்பை வழங்கியுள்ளனர். 23 வயது இளம் பேட்டரான ரவீந்திரா உலகக் கோப்பைத் தொடரில் அறிமுகமாகியுள்ளார்.

தனது அறிமுகப் போட்டியிலேயே ரவீந்திரா 82 பந்துகளில் அதிவேக சதம் அடித்துள்ளார். உலகக்கோப்பைப் போட்டியில் நியூசிலாந்து பேட்ஸ்மேன் அடிக்கும் அதிவேக சதம் இது.

கான்வே 83 பந்துகளில் சதம் அடித்தநிலையில் ரவிந்திரா 82 பந்துகளில் சதம் அடித்துள்ளார். உலகக்கோப்பைத் தொடரில் அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்த இரண்ட்வது பேட்ஸ்மேன் என்ற பெருமையை ரவீந்திரா பெற்றுள்ளார். முதலிடத்தில் விராட் கோலி உள்ளார்.

36 பந்துகளில் அரைசதம் அடித்த ரச்சின் ரவிந்திரா

ரச்சின் ரவீந்திரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

283 ரன்களை சேஸிங் செய்யத் தொடங்கிய நியூசிலாந்து அணி அற்புதமான தொடக்கத்தை அளித்தது. ஒன்டவுனில் இறங்கிய இளம் பேட்டர் ரச்சின் ரவிந்திரா, இங்கிலாந்து வேகப்பந்துவீச்சை வெளுத்துவாங்கி, சிக்ஸர், பவுண்டரிகளாகப் பறக்கவிட்டார்.

மொயின் அலி ஓவரில் சிக்ஸர் அடித்து, ரவிந்திரா 36 பந்துகளில் அரைசதம் அடித்து அசரவைத்தார். ரவிந்திராவின் அரைசதத்தில் 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும்.

இங்கிலாந்துக்கு எதிராக 283 ரன்களை சேஸிங் செய்யத் தொடங்கிய நியூசிலாந்து அணி அற்புதமான தொடக்கத்தை அளித்தது. முதல்பவர்ப்ளேவான 10 ஓவர்களில் நியூசிலாந்து அணி, ஒரு விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் சேர்த்தது.

கடந்த 2016ஆம் ஆண்டுக்குப்பின் ஒருநாள் போட்டிகளில், நியூசிலாந்து அணி முதல்10 ஓவர்களில் சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 2016ஆம் ஆண்டில் பிப்ரவரி 8ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 84 ரன்கள் சேர்த்ததுதான் நியூசிலாந்தின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

இங்கிலாந்து அணியில் 11 வீரர்களும் இரட்டை இலக்க ரன்கள்

இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் சேர்த்துள்ளது. இதில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றிலேயே முதல்முறையாக, இங்கிலாந்து அணியின் 11 வீரர்களும் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்துள்ளனர்.

இந்தப் போட்டியில் 10வது விக்கெட்டுக்கு அதில் ரஷித் மற்றும் மார்க் வுட் கூட்டணி 30 ரன்கள் சேர்த்ததுதான் 2016ஆம் ஆண்டுக்குப் பின் அதிகபட்ச ஸ்கோர்.

இங்கிலாந்து அணி முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளை இழந்ததால்தான் 300 ரன்களுக்கு மேல் ஸ்கோர் செய்ய முடியவில்லை. இங்கிலாந்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது ஜோ ரூட் ஆட்டம்தான். 86 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பட்லருடன் சேர்ந்து 5-வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

மைதானம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இருவரும் ஆடிய வேகத்தைப் பார்த்தபோது, 350 ரன்களை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பேர்ஸ்டோ, ப்ரூக், மொயின் அலி ஆகியோர் அடித்த தவறான ஷாட்களால் விக்கெட்டை இழந்தது போன்ற தவறுகளால் ரன்சேர்க்க முடியவில்லை.

நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மாட் ஹென்ரி அற்புதமான பந்துவீச்சை தொடக்கத்தில் இருந்து கடைசி வரை வெளிப்படுத்தி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சான்ட்னர், பிலிப்ஸ் தலா 2விக்கெட்டுகளை சாய்த்தனர்.

நியூசிலாந்து அணியில் இந்திய வம்சாவளி வீரர்: யார் இந்த ரச்சின் ரவீந்திரா?

நியூசிலாந்து அணியில் இடம் பெற்றுள்ள இடதுகை சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான ரச்சின் ரவீந்திரா இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

ரவீந்திராவின் பெயருக்கு முன்னால் இருக்கும் ரச்சின் என்ற பெயர் சமூக ஊடகத்தில் டிரண்டானது. அதாவது, ராகுல் திராவிட்டின் பெயரில் வரும் “ரா”, சச்சின் டெண்டுல்கரின் “சின்” ஆகிய எழுத்துகளை ஒன்றினைத்து ரச்சின் என்று ரவீந்திரா தன் பெயருக்கு முன்பாக சூட்டியுள்ளார். கிரிக்கெட்டின் மீதான தீராக் காதல், இந்திய ஜாம்பவான்களான சச்சின், திராவிட் ஆகியோர் மீதான அபிமானம் ஆகியவற்றால் இந்தப் பெயரை வைத்துக் கொண்டுள்ளார்.

ரச்சின் ரவீந்திரா கடந்த 1999ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி வெல்லிங்டனில் பிறந்தார். இவரின் தந்தை ரவி கிருஷ்ணமூர்த்தி. பெங்களூருவில் மென்பொருள் துறை வல்லுநராக இருந்த ரவி கிருஷ்ணமூர்த்தி, கடந்த 1990களில் நியூசிலாந்துக்கு இடம் பெயர்ந்தார்.

ரவி கிருஷ்ணமூர்த்தி தனது இளமைக் காலத்தில் பெங்களூருவில் ஏராளமான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். நியூசிலாந்தில் “ஹட் ஹாக்ஸ்” என்ற கிரிக்கெட் கிளப்பை உருவாக்கியவர் ரவி கிருஷ்ணமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.

ரவீந்திராவின் தந்தை கிருஷ்ணமூர்த்தி, ஐசிசி நடுவராக இருக்கும், முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜவஹல் ஸ்ரீநாத்துடன் கிரிக்கெட் விளையாடியவர். ஸ்ரீநாத்தை செல்லமாக “ஸ்ரீமாமா” என்றுதான் ரவீந்திரா அழைப்பார்.

ரச்சின் ரவீந்திரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த 2021ஆம் ஆண்டு நியூசிலாந்து அணியின் சீனியர் பிரிவில் ரச்சின் ரவீந்திரா அறிமுகமானார். வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் நியூசிலாந்து அணியில் ஆடிய ரவீந்திராவுக்கு முதல் ஆட்டமே டக்-அவுட்டில் முடிந்தது, விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.

ஆனால், இரண்டாவது போட்டியில் ரவீந்திரா 4 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நியூசிலாந்து அணிக்காக இதுவரை 6 டி20 போட்டிகளில் ரவீந்திரா விளையாடியுள்ளார். 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளை ரவீந்திரா கைப்பற்றியுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cje97dy2r1vo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமதாபாத் மைதானத்தைப் 'பற்ற வைத்த' ரச்சின் - கான்வே: மூத்த வீரர்கள் இல்லாமலேயே ‘பழைய கணக்கைத்’ தீர்த்த நியூசிலாந்து

ஐ.சி.சி கிரிக்கெட் உலகக்கோப்பை, இங்கிலாந்து, நியூசிலாந்து, ரச்சின், கான்வே

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கான்வே, ரவீந்திரா இருவரும் சேர்ந்து 30 பவுண்டரிகளையும், 8 சிக்ஸர்களை விளாசினர்

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த 2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டமும், சூப்பர் ஓவரும் டையில் முடிந்து, பவுண்டரி அடித்த கணக்கில் இங்கிலாந்திடம் கோப்பையை பறிகொடுத்தது நியூசிலாந்து.

அந்தத் தோல்விக்கு பதில்சொல்லும் வகையில் இந்த ஐ.சி.சி உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்திலேயே, இங்கிலாந்து அணிக்கு எதிராகத் தனது இரு பேட்டர்களான டேவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் பெற்றுத்தந்த வெற்றியால் ஆசுவாசமடைந்திருக்கிறது.

ஆமதாபாத்தில் நேற்று நடந்த உலகக் கோப்பைப் போட்டியின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் சேர்த்தது. 283 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பயணித்த நியூசிலாந்து அணி 36.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

 
ஐ.சி.சி கிரிக்கெட் உலகக்கோப்பை, இங்கிலாந்து, நியூசிலாந்து, ரச்சின், கான்வே

பட மூலாதாரம்,GETTY IMAGES

‘யாரும் வேண்டாம், நாங்க போதும்’

அணியில் வில்லியம்சன் இல்லை, டிம் சவூதி இல்லை, பெர்குஷன் இல்லை, பிரேஸ்வெல் கிடையாது… இருப்பினும் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தைத் தோற்கடித்திருக்கிறது நியூசிலாந்து.

நியூசிலாந்து அணியின் இளம் பேட்டர்களான டேவன் கான்வே 152 ரன்களுடனும் (19 பவுண்டரி, 3 சிக்ஸர்கள்), ரச்சின் ரவீந்திரா 123 ரன்களுடனும்(11 பவுண்டரி, 5 சிக்ஸர்கள்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தனர்.

பந்துவீச்சில் ஒரு விக்கெட்டை எடுத்து, உலகக் கோப்பை அறிமுக ஆட்டத்திலேயே குறைந்த பந்துகளில் சதமும் அடித்த ரச்சின் ரவீந்திராவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

காயத்திலிருந்து வில்லியம்ஸன், பெர்குஷன் திரும்ப வந்தாலும், தன்னுடைய இருப்பை ஆழமாகப் பதித்துவிட்டார் இளம் வீரர் ரவீந்திரா. இந்தத் தொடரில் அவர் அடித்த முதல் சதம், நியூசிலாந்து அணியில் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்துவிட்டார்.

 
ஐ.சி.சி கிரிக்கெட் உலகக்கோப்பை, இங்கிலாந்து, நியூசிலாந்து, ரச்சின், கான்வே

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

வெலிங்டன் உள்ளூர் அணியைச் சேர்ந்த நண்பர்களான டேவன் கான்வே, ரவீந்திரா இருவரும் 2வது விக்கெட்டுக்கு, 273 ரன்கள் சேர்த்தனர்

சதம் அடிக்க உதவிய கான்வே

ஆட்டநாயகன் விருது வென்ற ரவீந்திரா பேசுகையில், “சில நேரங்களில் நம்பமுடியாத தருணங்கள் நடக்கும். ஆனால், எனக்கு இது மிகவும் ஆகச் சிறந்தநாள். எங்கள் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது, டேவனுடன் அதிகமான போட்டிகளில் விளையாடியுள்ளேன். நாங்கள் நெருங்கிய நண்பர்கள். டேவனுடன் நான் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடியது நான் சதம் அடிக்க இன்னும் கூடுதலான வசதி செய்தது,” என்றார்.

மேலும், “இன்னும் 4 முதல் 5 ஆண்டுகளில் டேவன் எத்தகைய பேட்டராக மாறப்போகிறார் என்பது எங்களுக்கு நன்கு தெரியும். ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்றதாக இருந்தது. பேட்டிங் செய்ய அருமையாக இருந்தது. ஹைதராபாத் ஆடுகளத்தைப்போன்றே இருந்தது,” எனத் தெரிவித்தார்.

சதம் அடிப்பதில் சாதனை

உலகக் கோப்பையில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை (88 பந்துகள்) இதுவரை மார்டின் கப்தில் வைத்திருந்தார். அந்தச் சாதனையை நேற்றைய ஆட்டத்தில் ரச்சின் ரவீந்திரா, கான்வே இருவரும் முறியடித்தனர்.

கான்வே 83 பந்துகளில் சதம் அடிக்க, ரவீந்திரா அதினினும் ஒரு பந்து குறைவாக 82 பந்துகளில் சதம் கண்டு வரலாற்றில் முத்திரை பதித்தார்.

அது மட்டுமல்லாமல் 23 வயதிலேயே நியூசிலாந்து அணிக்காக உலகக் கோப்பைப் போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையும் ரச்சின் ரவீந்திராவுக்கு கிடைத்திருக்கிறது.

வெலிங்டன் உள்ளூர் அணியைச் சேர்ந்த நண்பர்களான டேவன் கான்வே, ரவீந்திரா இருவரும் 2வது விக்கெட்டுக்கு, 273 ரன்கள் சேர்த்தனர். இதுதான் உலகக் கோப்பை வரலாற்றில் நியூசிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக சேர்க்கப்பட்ட பார்ட்னர்ஷிப்பாகும்.

உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணி 250 ரன்களுக்கு மேல் உள்ள இலக்கை அதிகவேகமாக இந்தப் போட்டியில்தான் சேஸிங் செய்துள்ளது.

 

பவுண்டரி மழை

இந்த ஆட்டத்தில் மட்டும் நியூசிலாந்து அணியின் கான்வே, ரவீந்திரா இருவரும் சேர்ந்து 30 பவுண்டரிகளையும், 8 சிக்ஸர்களை விளாசினர்.

இங்கிலாந்து அணி 21 பவுண்டரிகளையும், 5 சிக்ஸர்களும் அடித்தது.

நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 283 ரன்கள் எனும் இலக்கை 36 ஓவர்களிலேயே நியூசிலாந்து அடைந்து, இந்தத் தொடரில் உள்ள மற்ற அணிகளுக்கு ஒரு சவாலை விடுத்துள்ளது.

ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாத சான்ட்னர்

நியூசிலாந்து அணியின் பந்துவீச்சும் சிறப்பாக இருந்தது. மாட் ஹென்றி 48 ரன்கள் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளையும், மிட்ஷெல் சான்ட்னர் 37 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

அதில் சான்ட்னர் நேற்றைய ஆட்டத்தில் 10 ஓவர்கள் வீசியும், இங்கிலாந்து பேட்டர்களை ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு, ஜூலை மாதத்தில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய சினாமென் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் இதேபோன்று பவுண்டரி அடிக்கவிடாமல் பந்துவீசினார். அதன்பின் 5 ஆண்டுகளுக்குப்பின் சான்ட்னர் அதை நிகழ்த்திக்காட்டியுள்ளார்.

 
ஐ.சி.சி கிரிக்கெட் உலகக்கோப்பை, இங்கிலாந்து, நியூசிலாந்து, ரச்சின், கான்வே

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

டேவன் கான்வே ஒருநாள் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 5 சதங்கள் அடித்திருக்கிறார்

கான்வே இந்த ஆண்டில் அடித்த 4-வது சதம்

டேவன் கான்வே நேற்றைய ஆட்டத்தில் அடித்த சதம், இந்த ஆண்டில் அவர் அடிக்கும் 4-வது சதமாகும். இது ஒருநாள் போட்டிகளில் அவர் ஒட்டுமொத்தமாக அடித்த 5வது சதமும் ஆகும். உலகக் கோப்பைப் போட்டியில் கான்வே அடிக்கும் முதல் சதமாகும்.

அதேபோல ரச்சின் ரவீந்திரா 12 போட்டிகளில் அடித்த முதல் சதம் மற்றும் உலகக் கோப்பைத் தொடரில் அடித்த முதல் சதமும் இதுவாகும்.

நியூசிலாந்து அணியின் வழக்கமான கேப்டனான கேன் வில்லியம்ஸன் காயத்திலிருந்து முழுமையாக குணமடையாத நிலையில், அவருக்குப் பதிலாக அவரின் இடத்தில் ரவீந்திரா களமிறக்கப்பட்டார்.

பந்துவீச்சில் ரவீந்திரா 10 ஓவர்களில் 76 ரன்களை வாரி வழங்கினாலும், பேட்டிங்கில் தான்பந்துவீச்சில் வழங்கிய 76 ரன்களை 60 பந்துகளில் சேர்த்து ஈடு செய்துவிட்டார்.

வலுவான ரச்சின்-கான்வே கூட்டணி

நியூசிலாந்து அணி தனது சேஸிங்கைத் துவங்கியவுடன் வோக்ஸ் வீசிய முதல் பந்திலும், 5வது பந்திலும் பவுண்டரி அடித்தார் கான்வே.

ஆனால், சாம் கரன் தனது முதலாவது ஓவரின் முதல் பந்தில் வில்யங்கை டக்-அவுட்டில் வெளியேற்றினார்.

3-வது வீரராக ரவீந்திரா களமிறங்கி, கான்வேயுடன் சேர்ந்தார். இருவர் மட்டுமே ஆட்டத்தை முடித்துவைக்கப் போகிறார்கள் என்று அப்போது இங்கிலாந்து அணிக்குத் தெரியவில்லை. சாம் கரன் 2 மெய்டன் ஓவர்களை வீசி, கட்டுக்கோப்பாக பந்துவீசினாலும் சாம் கரன் வீசிய 35-வது ஓவரில் கான்வே 20 ரன்களைச் சேர்த்தார்.

 
ஐ.சி.சி கிரிக்கெட் உலகக்கோப்பை, இங்கிலாந்து, நியூசிலாந்து, ரச்சின், கான்வே

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சர்வதேசப் போட்டிகளில் குறைந்த அனுபவம் கொண்டராக இருந்தாலும், ரவீந்திராவின் பேட்டிங் அனுபவம் முதிர்ந்த பேட்ஸ்மனைப் போல இருந்தது

ரவீந்திராவின் அபார சிக்ஸர்

ரவீந்திராவின் பேட்டிங் எந்த பந்து வீச்சாளரையும் சட்டை செய்யாத வகையில் இருந்தது.

அதிலும் 148 கி.மீ. வேகத்தில் மார்க் வுட் வீசிய பந்தை ஸ்குயர்லெக் திசையில் பிளாட் சிக்ஸர் அடித்து ரவீந்திரா அசாத்திய ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சர்வதேசப் போட்டிகளில் குறைந்த அனுபவம் கொண்டராக இருந்தாலும், ரவீந்திராவின் பேட்டிங் அனுபவம் முதிர்ந்த பேட்ஸ்மனைப் போல இருந்தது.

கான்வே-ரவீந்திரா ஜோடி சேர்ந்ததும், நியூசிலாந்து ரன்ரேட் பறந்தது. 6.5 ஓவர்களில் நியூசிலாந்து அணி 50 ரன்களை எட்டியது. அதிலும் மார்க்வுட் ஓவரில் இருவரும் அபாரமாக ஆடினர்.

வுட் வீசிய முதல் 3 ஓவர்களில் 38 ரன்களை வாரி வழங்கினார். 100 ரன்களை நியூசிலாந்து அணி 12.1 ஓவர்களிலும், 200 ரன்களை 26.5 ஓவர்களிலும் நியூசிலாந்து எட்டியது. 34.1 ஓவர்களில் 250 ரன்களை எட்டி இங்கிலாந்து வீரர்களை வாய்பிளக்க வைத்தது நியூசிலாந்து.

இங்கிலாந்தின் ஆட்டம் எப்படி இருந்தது?

இங்கிலாந்து அணி பேட்டிங்கில் சுமாராகவே இருந்தது, பந்துவீச்சில் படுமோசமாக இருந்து.

300 ரன்களுக்கு மேல் அடிக்கக்கூடிய மைதானத்தில் 282 ரன்கள் சேர்த்ததே பாதுகாப்பில்லாத ஸ்கோர்தான். பந்துவீச்சிலாவது நெருக்கடியளிப்பார்கள் என்று எதிர்பார்த்தால், நியூசிலாந்து அணிக்கு பேட்டிங் பயிற்சி அளித்ததுபோன்றுதான் இங்கிலாந்து பந்துவீச்சு இருந்தது.

இங்கிலாந்து அணியில் 11 பேட்டர்களும் நேற்றைய ஆட்டத்தில் இரட்டை இலக்க ரன்களை எட்டி சாதனை படைத்தனர். உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு அணியில் உள்ள 11 வீரர்களும் இரட்டை இலக்க ரன்களை முதல்முறையாக எட்டினர். இங்கிலாந்து அணிக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கேப்டன் பட்லர், ஜோ ரூட் 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

இருவரும் களத்தில் இருந்தவரை, இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 350 ரன்களை எட்டும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், இருவரின் விக்கெட் வீழ்ந்தவுடன் ரன்ரேட்டும் சரிந்துவிட்டது.

 
ஐ.சி.சி கிரிக்கெட் உலகக்கோப்பை, இங்கிலாந்து, நியூசிலாந்து, ரச்சின், கான்வே

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இங்கிலாந்து அணியின் மார்க் வுட், அதில் ரஷித் இருவரும் 10வது விக்கெட்டுக்கு நேற்று 30 ரன்கள் சேர்த்தனர்

ஏமாற்றமளித்த இங்கிலாந்து பேட்டர்கள்

பேர்ஸ்டோ முதல் ஓவரிலேயே பவுண்டரி, சிக்ஸர் அடித்து அதிரடி காட்டினாலும், ஹென்றியின் ஓவரில் டேவிட் மாலன் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். ஆனால் பேர்ஸ்டோ (33) அதிரடியாக பேட் செய்த நிலையில் அவரின் விக்கெட்டை சான்ட்னர் எடுத்து வெளியேற்றினார்.

சான்ட்னரின் பந்துவீச்சு இங்கிலாந்து பேட்டர்களின் ரன்குவிப்பைத் தடுத்து, ரன்ரேட் உயரவிடாமல் பார்த்துக்கொண்டது. சான்ட்னர் 10 ஓவர்கள் வீசி 37 ரன்கள் கொடுத்தாலும் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடவில்லை.

ரவீந்திரா 10 ஓவர்கள் வீசி 76 ரன்களை வாரி வழங்கினாலும் ப்ரூக் (25) விக்கெட்டை வீழத்தி ஆறுதலளித்தார். கவுண்டி கிரிக்கெட்டில் நல்ல ரெக்கார்டை ப்ரூக் வைத்திருந்தும், முதல் ஆட்டத்திலேயே குறைந்த ஸ்கோரில் ஏமாற்றினார்.

இங்கிலாந்து அணியில் திடீரென 5வது பேட்டராக மொயின் அலி களமிறக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டார். ஐ.பி.எல் தொடரில் அதிரடி காட்டிய மொயின் அலி, உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் ஏமாற்றினார். பிலிப்ஸ் ஓவரில் க்ளீன் போல்டாகி 11 ரன்னில் மொயின் அலி வெளியேறினார்.

நியூசிலாந்தின் போனஸ்

அது மட்டுமல்ல நியூசிலாந்து அணியின் பகுதிநேர சுழற்பந்துவீச்சாளரான பிலிப்ஸ் கிடைத்திருப்பது அந்த அணிக்கு போனஸ்தான். ஏனென்றால் நேற்றைய ஆட்டத்தில் ஜோ ரூட், மொயின் அலி ஆகிய இரு முக்கிய விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

ஆறுதலான ரூட் ஆட்டம்

இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோதும், ஜோ ரூட் தடுமாறாமல் விளையாடி, 57 பந்துகளில் அரைசதம் எட்டினார்.

அதிலும் போல்ட் ஓவரில் ரூட் அடித்த ஸ்கூப் ஷாட் சிக்ஸர் அனைவராலும் பேசப்பட்டது. கேப்டன் பட்லர் 43 ரன்களில் ஹென்றி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இருவரும் ஆட்டமிழந்து சென்றபின் இங்கிலாந்து பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டு, கடைசி 31 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.

அதிலும் இங்கிலாந்து அணியின் மார்க் வுட், அதில் ரஷித் இருவரும் 10வது விக்கெட்டுக்கு நேற்று 30 ரன்கள் சேர்த்தனர். இதுதான் கடந்த 7 ஆண்டுகளில் இங்கிலாந்து அணியின் 10வது விக்கெட்டுக்கு அதிகபட்ச ஸ்கோராகும்.

 
ஐ.சி.சி கிரிக்கெட் உலகக்கோப்பை, இங்கிலாந்து, நியூசிலாந்து, ரச்சின், கான்வே

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் தாங்கள் சேர்த்த ஸ்கோர் பாதுகாப்பில்லாதது என்றும், 330 ரன்களுக்கு மேல் ஸ்கோரை எதிர்பார்த்ததாகவும் தெரிவித்தார்

பென் ஸ்டோக்ஸின் நிலை என்ன?

இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் பேசுகையில் “எங்களுக்கு இது வேதனையான நாள். நியூசிலாந்து எங்களை வென்றதை ஜீரணிக்க முடியவில்லை. இந்தத் தொடரில் இது முதல் தோல்விதான். எங்கள் அணியில் உள்ள ஏராளமான வீரர்கள் நன்கு விளையாடினர்,” என்றார்.

மேலும், “இருப்பினும் நாங்கள் சேர்த்த ஸ்கோர் பாதுகாப்பில்லாதது. 330 ரன்களுக்கு மேல் ஸ்கோரை எதிர்பார்த்தோம். மின்ஒளியில் மைதானம் சிறப்பாக பேட்டர்களுக்கு ஒத்துழைத்தது. நியூசிலாந்து பேட்டர்கள் ஆட்டம் சிறப்பாக இருந்தது. கான்வே ஷாட்களை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ரச்சின், கான்வே இருவரும் அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பென் ஸ்டோக்ஸ் விரைவில் குணமடைந்துவிடுவார், போட்டியில் பங்கேற்பார்,” எனத் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c6pjxw20xego

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெதர்லாந்திடம் 2 தடவைகள் தடுமாறிய பாகிஸ்தான் இறுதியில் இலகுவாக வெற்றிபெற்றது

06 OCT, 2023 | 10:18 PM
image

(நெவில் அன்தனி)

நெதர்லாந்துக்கு எதிராக ஹைதாராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் மிகவும் இலகுவாக 81 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

மொஹமத் ரிஸ்வான், சாத் ஷக்கீல் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள், மொஹமத் நவாஸ், ஷதாப் கான் ஆகியோர் 7ஆவது விக்கெட்டில் பகிர்ந்த பெறுமதிமிக்க 64 ஓட்டங்கள் என்பன 1992 உலக சம்பியன் பாகிஸ்தானின் வெற்றிக்கு அடிகோலின.

போட்டி முடிவில் கருத்து வெளியிட்ட பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அஸாம்,

'ஹைதராபத்தில் எங்களுக்கு கிடைத்த ஆதரவையிட்டு நாங்கள் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். அவர்களது உபசரிப்புகளை நாங்கள் இன்முகத்துடன் அனுபவித்தோம். இப் போட்டி முடிவையிட்டு திருப்தி அடைகிறேன்' என்றார்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 49 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 289 ஓட்டங்களைப் பெற்றது.

ஆனால், போட்டியின் ஆரம்பத்திலும் பின்னர் மத்திய பகுதியிலும் இரண்டு தடவைகள் நெதர்லாந்தின் பந்துவீச்சில்  பாகிஸ்தான் தடுமாற்றம் அடைந்தது. இந்த இரண்டு தடவைகளும் அடுத்டுத்து தலா 3 விக்கெட்களை பாகிஸ்தான் இழந்தது.

இந்த வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடும் ஒரே ஒரு இணை அங்கத்துவ நடானா நெதர்லாந்தின் பந்துவீச்சில்

பாகிஸ்தானின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

அதிரடிக்கு பெயர் பெற்ற பக்கார் ஸமான் (12), இமாம் அல் ஹக் (13), அணித் தலைவர் பாபர் அஸாம் (5) ஆகிய மூவரும் முதல் 10 ஓவர்களுக்குள் ஆடுகளம் விட்டு வெளியேறினர். (38 - 3 விக்.)

ஆனால், மொஹமத் ரிஸ்வான், சவூத் ஷக்கீல் ஆகிய இருவரும் நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்கள் குவித்ததுடன் 4ஆவது விக்கெட்டில் 114 பந்துகளில் பெறுமதிமிக்க 120 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தான் அணியை வீழ்ச்சியிலிருந்து மீட்டனர்.

அவர்கள் இருவரும் தலா 68 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தனர்.

கணிசமான ஓட்டங்கள் குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட இப்திகார் அஹ்மத் 9 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க மீண்டும் பாகிஸ்தான் தடுமாற்றம் அடைந்தது. (188 - 6 விக்.)

இந் நிலையில் மொஹமத் நவாஸ் (39), ஷதாப் கான் (32) ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்து 250 ஓட்டங்களைக் கடக்க பாகிஸ்தானுக்கு உதவினர்.

கடைநிலை வீரர்களான ஷஹீன் ஷா அப்ரிடி (13 ஆ.இ.), ஹரிஸ் ரவூப் (16) ஆகியோரும் தங்களாலான அதிகப்பட்ச பங்களிப்பை வழங்கினர்.

பந்துவீச்சில் பாஸ் டி லீட் 62 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கொலின் அக்கமன் 39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

சற்று கடினமான 287 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து 41 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 205 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

நெதர்லாந்து அணியில் இருவர்  அரைச் சதங்கள் பெற்றபோதிலும் ஏனையவர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர்.

ஆரம்ப வீரர் மெக்ஸ் ஓ'தௌத் (5) ஆட்டம் இழந்தபோது மொத்த எண்ணிக்கை 28 ஓட்டங்களாக இருந்தது. மேலும் 22 ஓட்டங்கள் மொத்த எண்ணிக்கைக்கு சேர்ந்த போது கொலின் அக்கமன் (17) களம் விட்டகன்றார். (50 - 2   விக்.)

இந் நிலையில் விக்ரம்ஜித் சிங் (52), பாஸ் டி லீட் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து 70 ஓட்டங்களைப் பகிர்ந்து தமது அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர்.

விக்ரம்ஜித் ஆட்டம் இழந்ததும் டேஜா நிதாமனுரு (5), அணித் தலைவர் ஸ்கொட் எட்வேர்ட்ஸ் (0), சக்கிப் ஸுல்பிகார் (10) ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர்.

மறுபக்கத்தில் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த பாஸ் டி லீன் 67 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தனது விக்கெட்டை இழந்தார்.

பின்வரிசையில் லோகன் வென் பீக் 28 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் ஹரிஸ் ரவூப் 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஹசன் அலி 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: சவூத் ஷக்கீல்

https://www.virakesari.lk/article/166286

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானின் குறைந்த மொத்த எண்ணிக்கையை இலகுவாக கடந்து வெற்றியீட்டியது பங்களாதேஷ்

07 OCT, 2023 | 08:06 PM
image

(நெவில் அன்தனி)

தரம்சாலா, ஹிமாச்சல் ப்ரதேஷ் கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை (10) நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் 6 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

அப் போட்டியில் ஆப்கானிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 157 ஓட்டங்கள் என்ற குறைந்த வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 34.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

மெஹிதி ஹசன் மிராஸின் சகலதுறை ஆட்டம், நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ குவித்த அரைச் சதம், ஷக்கிப் அல் ஹசனின் சிறப்பான பந்துவீச்சு என்பன பங்களாதேஷின் வெற்றியை இலகுவாக்கின.

பங்களாதேஷ் பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது ஆரம்ப வீரர்களான தன்ஸித் ஹசன் (5), லிட்டன் தாஸ் (13) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தனர். (27 - 2 விக்.)

ஆனால், மெஹிதி ஹசன் மிராஸ், நஜ்முல் ஹொசெயன் ஷன்டோ ஆகிய இருவரும் அரைச் சதங்களைக் குவித்து 2ஆவது விக்கெட்டில் 97 ஓட்டங்களைப் பகிர்ந்து பங்களாதேஷ் இலகுவாக வெற்றிபெறுவதற்கு வழிவகுத்தனர்.

மெஹிதி ஹசன் மிராஸ் 57 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

அணித் தலைவர் ஷக்கிப் அல் ஹசன் 14  ஓட்டங்களை  மாத்திரம் பெற்றார். (146 - 4 விக்.)

எனினும், ஷன்டோவும் முஷ்பிக்குர் ரஹீமும் தொடர்ந்து துடுப்பெடுத்தாடி பங்களாதேஷின் வெற்றியை உறுதிசெய்தனர்.

ஷன்டோ 59 ஓட்டங்களுடனும் ரஹிம் 2 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் 37.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 156 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

ஆப்கானிஸ்தான் துடுப்பாட்டத்தில் ஐவர் மாத்திரமே 15க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர்.

ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான் ஆகிய இருவரும் 47 ஓட்டங்களைப் பகிர்ந்து ஒரளவு நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஆனால், அதன் பின்னர் ஸ்திரமான இணைப்பாட்டங்கள் பெறப்படாதது ஆப்கானிஸ்தானின் வீழ்ச்சிக்கு காரணமானது.

25ஆவது ஓவரில் ஆப்கானிஸ்தான் 2 விக்கெட்களை இழந்து 112 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

ஆனால், அதன் பின்னர் 44 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்கள் சரிய ஆப்கானிஸ்தானினால் 156 ஓட்டங்களையே மொத்தமாக பெறமுடிந்தது.

குர்பாஸ் அதிகப்பட்சமாக 47 ஓட்டங்களைப் பெற்றார்.

இதனிடையே 42 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது குர்பாஸ் 1000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்தார். அதன் மூலம் ஆப்கானிஸ்தான் சார்பாக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் 1000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த வீரர் என்ற மைல்கல் சாதனைக்கு அவர் சொந்தக்காரரானார். அவருக்கு 1000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்ய 27 இன்னிங்ஸ்களே தேவைப்பட்டது.

குர்பாஸுக்கு முன்னதாக ரஹ்மத் ஷா 31 இன்னிங்ஸ்களில் 1000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்திருந்தார்.

குர்பாஸைவிட ஆப்கானிஸ்தான் இன்னிங்ஸில் இப்ராஹிம் ஸத்ரான், அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் ஆகிய இருவரும் தலா 22 ஓட்டங்களையும் ரஹ்மத் ஷா, அணித் தலைவர் ஹஷ்மதுல்லா ஷஹிடி ஆகிய இருவரும் தலா 18 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மெஹிதி ஹசன் மிராஸ் 3 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 9 ஓவர்களில் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷக்கிப் அல் ஹசன் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷொரிபுல் இஸ்லாம் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: மெஹ்தி ஹசன் மிராஸ்.

https://www.virakesari.lk/article/166340

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகக் கிண்ண போட்டியில் தென் ஆபிரிக்கா சாதனை மழை இலங்கைக்கு மிகக் கடினமான 429 ஓட்ட வெற்றி இலக்கு

07 OCT, 2023 | 06:39 PM
image

(நெவில் அன்தனி)

குவின்டன் டி கொக், ரெசி வென் டேர் டுசென் ஆகிய இருவரும் குவித்த உலகக் கிண்ண கன்னி சதங்களும் அவர்களிடையே 2ஆவது விக்கெட்டில் பகிரப்பட்ட இரட்டைச் சத இணைப்பாட்டமும் ஏய்டன் மார்க் ராம் குவித்த அதிவேக உலகக் கிண்ண சதமும் இலங்கைக்கு எதிரான உலகக் கிண்ணப் போட்டியில் தென் ஆபிரிக்காவை பலமான நிலையில் இட்டுள்ளன.

இந்த சாதனைகளுடன் உலகக் கிண்ணப் போட்டிக்கான மொத்த எண்ணிக்கையிலும் தென் ஆபிரிக்கா சாதனை படைந்தது.

டெல்லி அருண் ஜய்ட்லி விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்று வரும் 13ஆவது ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தின் 4ஆவது லீக் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தென் ஆபிரிக்கா 50 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 428 ஓட்டங்களைக் குவித்தது.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அணி ஒன்றினால் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 2015 உலகக் கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலியா 6 விக்கெட்களை இழந்து பெற்ற 417 ஓட்டங்களே இதற்கு முன்னைய அதிகூடிய உலகக் கிண்ண மொத்த எண்ணிக்கையாக இருந்தது.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அணி ஒன்றினால் இந்த மைதானத்தில் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகவும் இது அமைந்தது.

நெதர்லாந்துக்கு எதிராக 2011 உலகக் கிண்ணப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 8 விக்கெட்களை இழந்து பெற்ற 330 ஓட்டங்களே இதற்கு முன்னைய அருண் ஜய்ட்லி மைதான சாதனையாக இருந்தது.

மொத்த எண்ணிக்கை 10 ஓட்டங்களாக இருந்தபோது டில்ஷான் மதுஷன்கவின் பந்துவீச்சில் தென் ஆபிரிக்க அணித் தலைவரும் ஆரம்ப வீரருமான டெம்பா பவுமா (8) எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டம் இழந்தார்.

இந்த ஆட்டம் இழப்பு இலங்கைக்கு தற்காலிக மகிழ்ச்சியையே கொடுத்தது.

இந் நிலையில் மற்றைய ஆரம்ப வீரர் குவின்டன் டி கொக், 3ஆம் இலக்க வீரர் ரசென் வென் டேர் டுசென் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து இலங்கை பந்துவிச்சாளர்களை சிதறடித்து சரமாரியாக ஓட்டங்களைக் குவித்தனர்.

குவின்டன் டி கொக் 83 பந்துகளில் 12 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 100 ஓட்டங்களைப் பெற்று உலகக் கிண்ணப் போட்டியில் தனது முதலாவது சதத்தைப் பூர்த்தி செய்தார்.

எனினும் அடுத்த பந்திலேயே அவர் ஆட்டம் இழந்தார்.

குவின்டன் டி கொக்கும் ரெசி வென் டேர் டுசேயும் 2ஆவது விக்கெட்டில் 174 பந்துகளில் 204 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

டி கொக்கைத் தொடர்ந்து ரெசி வென் டேர் டுசே 101 பந்துகளில் 100 ஓட்டங்களைப் பூர்த்தி செய்தார். அவரும் உலகக் கிண்ணப் போட்டியில் குவித்த முதலாவது சதம் இதுவாகும்.

மொத்த எண்ணிக்கை 264 ஓட்டங்களாக இருந்தபோது துனித் வெல்லாலகேயின் பந்துவீச்சில் சதீர சமரவிக்ரமிடம் பிடிகொடுத்த வென் டேர் டுசென் 108 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

110 பந்துகளை எதிர்கொண்ட அவர் 13 பவுண்டறிகளையும் 2 சிக்ஸ்களையும் விளாசியிருந்தார்.

அவர் ஏய்டன் மார்க் ராமுடன் 3ஆவது விக்கெட்டில் 39 பந்துகளில் 50 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

அதிரடியாக ஓட்டங்களை விளாசிய ஏய்டன் மார்க்ராம் 49 பந்துகளில் சதத்தைப் பூர்த்திசெய்து உலகக் கிண்ணப் போட்டியில் அதிவேக சதத்திற்கான புதிய சாதனையை நிலைநாட்டினார்.

இங்கிலாந்துக்கு எதிராக 2011 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கெவின் ஓ'ப்றயன் 50 பந்துகளில் குவித்த 100 ஓட்டங்களே இதற்கு முன்னைய அதிவேக உலகக் கிண்ண சதமாக பதிவாகியிருந்தது.

மார்க்ராம் 54 பந்துகளில் 14 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 106 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மதுஷன்கவின் பந்துவீச்சில் கசுன் ராஜித்தவிடம் பிடி கொடுத்து ஆட்டம் இழந்தார்.

அவர்களைவிட ஹென்றிச் க்ளாசென் 20 பந்துகளில் 3 சிக்ஸ்கள், ஒரு பவுண்டறியுடன் 32 ஓட்டங்களை விளாசினார்.

டேவிட் மில்லர் 21 பந்துகளில் 3 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் அடங்கலாக 39 ஓட்டங்களுடனும் மார்க்கோ ஜென்சென் 12 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தார்.

இலங்கை பந்துவீச்சில் மதீஷ பத்திரண (95), கசுன் ராஜித்த (90), டில்ஷான் மதுஷன்க (86), துனித் வெல்லாலகே (81) ஆகிய நால்வரும் 80க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் கொடுத்தனர்.

https://www.virakesari.lk/article/166339

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது இலகுவாக 350 ஓட்டங்கள் அடிக்கின்றார்கள். ஒரு காலத்தில் 300 அடித்தாலே ஆவென்று வாயை பிளந்தோம். 

இப்போது சிக்ஸ் மழை பொழிகின்றார்கள். அதிக ஓட்டங்கள் குவிக்கின்றார்கள். ஆனால் என் போன்றவர்களுக்கு கிரிக்கெட் மீது உள்ள ஆர்வம் குன்றிவிட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய சொறீலங்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு சாதனைகளை தென்னாபிரிக்கா நிகழ்த்தியுள்ளது.

ஒன்று.. 50 ஓவர்கள் போட்டியில் உலகக் கிண்ண அளவில் அதிகூடிய ஓட்டம் (429) பெற்ற அணியாக தென்னாபிரிக்கா விளங்கப் போகிறது.

இரண்டு.. அதிவேக 100 ஓட்டங்களை உலகக் கிண்ண தொடரில் வெறும் 49 பந்துகளில் பெற்றமை. 

சொறீலங்காவில் ஒரு பந்துவீச்சாளர் பந்தை எறிவது போலவே வீசுகிறார்..?! இன்னொரு முரளி.. மலிங்கவோ..??!

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஆட்டம் தொலைக்காட்சியில் பார்க்கவில்லை. இலங்கை கிரிக்கெட் அணி மோசமான நிலையில் தற்போது உள்ளது. முன்னாள் முன்னணி நட்சத்திரங்கள் தமது சொந்த வேலைகளில் கவனம் செலுத்துகின்றார்கள் போல.  அவர்கள் நினைத்திருந்தால் இப்படியான ஒரு நிலைக்கு இலங்கை கிரிக்கெட் அணி வந்திராது. அவர்களும் அழுத்தங்கள், அழுக்கு அரசியல் காரணமாக இதுகளில் தலையை கொடுக்காமல் ஒதுங்கினார்களோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்த்தெழுந்த தென் ஆப்பிரிக்கா: உலகக்கோப்பை அணிகளுக்கு 'மிரட்டல்' விடுத்த அபார வெற்றி

உலகக்கோப்பை 2023: உயிர்த்தெழுந்த தென்னாப்பிரிக்கா - வெற்றி சாத்தியமானது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

அன்று 2019, ஜூலை 6ஆம் தேதி. இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரிலிருந்து தென் ஆப்பிரிக்கா அணியினர் தாயகத்துக்கு சோகத்துடன் புறப்பட்டுக் கொண்டிருந்தனர்.

உலகக் கோப்பைத் தொடரிலிருந்து லீக் சுற்றிலேயே வெளியேறிய பெருத்த அவமானத்துடன் வீரர்கள் இறுகிய முகத்துடன் காணப்பட்டனர்.

தென் ஆப்பிரிக்க அணியில் பல முன்னணி வீரர்களுக்குத் தொடர்ந்து நாம் விளையாடலாமா என்ற கேள்வி எழுந்தது. தென் ஆப்பிரிக்க அணியின் எதிர்காலமே கேள்விப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டப்பட்டது.

கதை முடிந்ததா?

அந்த ஆண்டில்தான் இந்தியாவிடம் சொந்த நாட்டிலேயே டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி தோல்வி அடைந்தது. இந்தியாவுக்கு பயணம் செய்து, ஒருநாள் தொடரையும் இழந்தது.

இந்தத் தோல்விகளைப் பார்த்த ரசிகர்கள், தென் ஆப்பிரிக்க அணி “அவ்வளவுதான் கதை முடிந்தது” என்று முடிவுரை எழுதாத குறையாக விமர்சித்தனர்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டின் எதிர்காலத்தைச் சுற்றி ஒருவிதமான இருள் சூழ்ந்திருந்தது. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டின் சமூகப் பொருளாதாரம் அவர்கள் திறமையைத் தக்கவைத்துக் கொள்வதை கடினமாக்கியது.

எச்சரிக்கை மணி

ஆனால், 4 ஆண்டுகளுக்குப் பின் 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடருக்கு புதிய எழுச்சியுடன் தென் ஆப்பிரிக்க அணி களம் கண்டு, அனைத்து அணிகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை அணிக்கு எதிராக நேற்று நடந்த உலகக்கோப்பைத் தொடரின் லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் இழப்புக்கு 428 ரன்களை தென் ஆப்பிரிக்க அணி குவித்ததே அதன் மீள் உருவாக்கத்தின் சாட்சி.

தென்னாப்பிரிக்காவின் பொருளாதாரம் மற்றும் கிரிக்கெட் உண்மை நிலை எதுவாக இருந்தாலும், மன உறுதியுடன் நாங்கள் மீள் உருவாக்கம் பெற்றுள்ளோம் என்று முதல் போட்டியிலேயே தென் ஆப்பிரிக்கா உலகக் கோப்பை அணிகளுக்குப் பறைசாற்றியிருக்கிறது.

 

மாற்றமில்லை, ஆனால் மாறியிருக்கிறது

உலகக்கோப்பை 2023: உயிர்த்தெழுந்த தென்னாப்பிரிக்கா - வெற்றி சாத்தியமானது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியில் இருந்த வீரர்களுக்கும், இப்போதைய அணியில் இருக்கும் வீரர்களுக்கும் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. ஆனால், அவர்களின் அணுகுமுறை, மனநிலை, போட்டியை எதிர்கொள்ளும் முறை, தந்திரம், திட்டமிடல் மாறியுள்ளது.

2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியில் மார்க்ரம், வான் டெர் டூசென், டீ காக் ஆகியோர் இருந்தனர். ரபாடா, கேசவ் மகராஜ், ஷாம்சி ஆகியோர் மட்டுமே இந்த இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில் சிறப்பாகச் செயல்பட்டனர்.

டேவிட் மில்லர் டி20 போட்டிகளிலும், ஒருநாள் போட்டிகளிலும் விஸ்வரூபம் எடுத்துள்ளார். மற்ற வகையில் பெரிதாக எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.

நடுப்பகுதி ஓவர்களில் மார்க்ரம், கிளாசன் இருவர்தான் சுழற்பந்துவீச்சை அதிகம் எதிர்கொள்ளக்கூடிய பேட்டர்களாக இருந்தனர். அணியைச் சரிவிலிருந்து பெரும்பகுதியான போட்டிகளில் மீட்கும் பேட்டர்களாகவும் இருந்தனர். ஆனால், நேற்று நடந்த கதையே வேறு. கிளாசனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை, மார்க்கிரமுக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டது. அவ்வளவுதான்.

ஹோம் ஓர்க்

இந்த உலகக்கோப்பைத் தொடரில் நாம் முன்னெப்போதும் பார்த்திராத வேறுபட்ட தென் ஆப்பிரிக்க அணியைப் பார்த்துள்ளோம்.

குறிப்பாக சுழற்பந்துவீச்சாளர்களை சமாளிக்கக் கடுமையான “ஹோம் ஓர்க்” செய்து வந்திருக்கிறார்கள். 2022ஆம் ஆண்டிலிருந்து சுழற்பந்துவீச்சுக்கு எதிராக நடுப்பகுதி ஓவர்களில் 42 ரன்கள் சராசரி வைத்துள்ளனர்.

இந்த உலகக்கோப்பைத் தொடரின் முதல் ஆட்டத்திலேயே தென் ஆப்பிரிக்கா மற்ற அணிகளுக்கு மிக அபாயகரமான எச்சரிக்கை அளித்து தங்கள் அடியைப் பலமாக வைத்துள்ளது.

வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் விளையாடப் பழகிய எங்களால், இந்திய ஆடுகளங்களிலும் ஆட முடியும் என்பதை நேற்றைய ஆட்டத்தில் வெளிப்படுத்தினர்.

 

சாதனையின் மூலம் மிரட்டல்

உலகக்கோப்பை 2023: உயிர்த்தெழுந்த தென்னாப்பிரிக்கா - வெற்றி சாத்தியமானது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கை அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணி சேர்த்த 428 ரன்கள் மற்ற அணிகளுக்கு மிரட்டலாக இறங்கியுள்ளது. உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்கா நேற்று சேர்த்த ரன்கள்தான் ஓர் அணியின் அதிகபட்ச ஸ்கோர்.

இதற்கு முன் 2015இல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா 417 ரன்கள் சேர்த்திருந்த சாதனையை தென் ஆப்பிரிக்கா முறியடித்தது. உலகக்கோப்பைத் தொடரில் மட்டும் தென் ஆப்பிரிக்கா 3 முறை 400 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது.

அது மட்டுமல்லாமல் உலகக்கோப்பைத் தொடரில் ஓர் அணியில் 3 பேட்டர்கள் சதம் அடித்ததும் இதுதான் வரலாற்றில் முதல்முறை. இந்த ஒரு சாதனையே, உலகம் எழுந்து அமர்ந்து, தென் ஆப்பிரிக்க அணியை நிமர்ந்து பார்க்கப் போதுமானது.

இதில் மார்க்ரம் 49 பந்துகளில் சதம் அடித்து, உலகக்கோப்பைத் தொடரில் அதிவேக சதம் அடித்த வீரராகத் தன்னை வரலாற்றில் பதிவு செய்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணியின் உறுதியான, அவசரப்படாத அணுகுமுறைதான் மற்ற அணிகளைக் கவலையடையச் செய்துள்ளது.

'டாப் கியரு'க்கு மாறிய ஆட்டம்

இலங்கைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் ஆட்டம் நிதானமாக உயர்ந்து, ரன் ரேட்டை உயர்த்தியது. 11 முதல் 20 ஓவர்கள் வரை ஓவருக்கு 7 என்ற ரன்ரேட்டில் தென் ஆப்பிரிக்கா விளையாடியது.

பின்னர் 21 முதல் 30 ஓவர்களில் 88 ரன்களையும், அடுத்த 10 ஓவர்களில் 85 ரன்களையும், கடைசி 10 ஓவர்களில் 137 ரன்களையும் சேர்த்து ரன்ரேட்டை டாப்-கியருக்கு மாற்றியது.

இதுபோன்ற தென் ஆப்பிரிக்காவின் கட்டுக்குலையாத கவனம், நிதானம் இனி வரும் போட்டிகளில் எதிரணிகளுக்கு பெரிய அச்சுறுத்தலாக அமையும்.

 

டீ காக் அணுகுமுறையில் மாற்றம்

உலகக்கோப்பை 2023: உயிர்த்தெழுந்த தென்னாப்பிரிக்கா - வெற்றி சாத்தியமானது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதில் நேற்று சதம் கண்டவர்களில் மார்க்ரம், வேண்ட் டூசென் ஆகிய இருவரைத் தவிர டீ காக் முக்கியமானவர். இதுவரை ரன்மெஷினாக மட்டுமே பார்க்கப்பட்ட டீ காக், அடுத்த உலகக்கோப்பைத் தொடரில் விளையாடுவாரா என்பது கேள்விக்குறிதான். ஆனால், இதுவரை பல உலகக்கோப்பையில் விளையாடிய டீ காக், ஒரு சதம்கூட அடிக்கவில்லை.

இந்தப் போட்டியில் அந்தச் சாதனையைச் செய்யவேண்டிய முனைப்பில், மெதுவாகவே ஆட்டத்தைத் தொடங்கி, நிதானமாக நகர்ந்தார். இலங்கை அணி சுழற்பந்துவீச்சை அறிமுகம் செய்தபோது, டீ காக் 21 பந்துகளில் 28 ரன்கள் என்று நிதானமாக ஆடி வந்தார். தனஞ்செயா டி சில்வா பந்தில் ஸ்வீப்ஷாட் அடித்து சுழற்பந்துவீச்சுக்கு அச்சப்படவில்லை என்று பிரகடனம் செய்தார்.

மெல்ல தனது ரன் சேர்க்கும் கியரை மாற்றிய டீ காக், செட்டில் ஆன பின், நடுப்பகுதி ஓவர்களை நன்கு பயன்படுத்தினார். நடுப்பகுதி ஓவர்களில் மட்டும் ஒரு சிக்ஸர் உள்பட 56 பந்துகளில் 87 ரன்களை டீ காக் குவித்தார். டீ காக்கிற்கு துணையாக ஆடிய வேன் டெர் டூசெனும் பெரிதாக ரிஸ்க் எடுக்கும் ஷாட்களை ஆடாமல் நிதானாக ஆடினார்.

ப்ரீமியம் பேட்டராக அடையாளம்

மார்க்ரம்-மை பொருத்தவரை, பாரம்பரிய ஒருநாள் கிரிக்கெட்டுக்கு தன்னை ஒரு ப்ரீமியம் பேட்டராக அடையாளப்படுத்தி இருக்கிறார். 2019 மற்றும் 2023 உலகக்கோப்பைகளுக்கு இடைப்பட்ட ஆண்டுகளில் மார்க்ரமின் பேட்டிங் திறமை மெருகேறியிருக்கிறது.

நடுப்பகுதி ஓவர்களில் மார்க்ரம் சராசரி 64 ரன்கள்தான். ஆனால், நேற்று 107 ரன்களை குவித்தார். தான் பயணிக்க ஏதுவான தளம் இருந்தால் என்ன செய்ய முடியும் என்பதையும், டெத் ஓவர் வரை தனது இன்னிங்ஸை எடுத்துச் செல்ல முடியும் என்பதையும் வெளிப்படுத்தினார்.

இந்த ஆட்டத்தில் முத்தாய்ப்பாக அமைந்தது மார்க்ரம் அடித்த சதம்தான். உலகக்கோப்பை வரலாற்றில் அதிவேகமாக 49 பந்துகளில் சதம் அடித்து புதிய வரலாறு படைத்தார். நிதானமாக ஆடத் தொடங்கிய மார்க்ரம், 34 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார்.

ஆனால், அடுத்த 15 பந்துகளில் அடுத்த 50 ரன்களை எட்டி 49 பந்துகளில் சதம் அடித்து மார்க்ரம் வரலாறு படைத்தார். பதிரணா வீசிய ஒவரில் மட்டும் 26 ரன்களை மார்க்ரம் சேர்த்ததுதான் திருப்புமுனை.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மான்செஸ்டரில் நடந்த அந்த இருண்ட, கசப்பான இரவைக் கடந்து வெகுதூரம் வந்துவிட்டோம் என்பதை தென் ஆப்பிரிக்க அணியினர் நேற்று வெளிப்படுத்திவிட்டனர்.

 

பந்துவீச்சாளர்கள் நிராயுதபாணிகளா?

உலகக்கோப்பை 2023: உயிர்த்தெழுந்த தென்னாப்பிரிக்கா - வெற்றி சாத்தியமானது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்கு அம்சத்துக்காகவே டி20 கிரிக்கெட் கொண்டு வரப்பட்டது. ஆனால், ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரையும் அதேபோன்று மாற்றப் பார்க்கும் ஐசிசியின் செயல், கிரிக்கெட்டின் தாத்பரியத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது.

ஃபீல்டிங் முறையில் பல்வேறு கட்டுப்பாடுகள், முதல் 10 ஓவர்கள் பவர்ப்ளேவில் 30 யார்ட் வட்டத்துக்கு வெளியே இரு ஃபீல்டர்கள் மட்டும்தான், அதன்பின் 4 பீல்டர்கள்தான் என்ற புதிய கட்டுப்பாடுகளையும் ஐசிசி விதித்து பேட்டர்களுக்கு சாதகமாகவே செயல்படுகிறது. முன்பு 5 ஃபீல்டர்கள் வரை வெளியே நிறுத்தலாம் என்ற விதிமுறை திருத்தப்பட்டு, ரன்மழை பொழிய ஏதுவாகியிருக்கிறது.

பத்து ஓவர்களுக்கு மேல் 4 ஃபீல்டர்களை வெளியே நிறுத்தும்போது, எப்படியாவது ஏதாவது ஒரு திசையில் அது மிட்ஆன், ஸ்குயர் லெக், லாங் ஆன், தேர்ட் மேன், கவர் என ஏதாவது ஒரு திசையில் ஆள் இல்லாத சூழல் இருக்கும். அந்தப் பகுதியை நோக்கி பேட்டர்கள் ஷாட்களை ஆடும்போது ஓவருக்கு 8 முதல் 10 ரன்கள் எளிதாகக் கிடைத்துவிடும்.

இந்த விதிமுறை மாற்றம் பந்துவீச்சாளர்களை நிராயுதபாணியாக்கி, பேட்டர்கள் அவர்களை வதம் செய்ய கதவை திறந்துவிட்டதுபோல் இருக்கிறது.

கிரிக்கெட் போட்டி என்பது, பந்துவீச்சாளர்களுக்கும், பேட்டர்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கும் களமாக இருந்தால்தான் மோதல் என்பது சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால், முதலில் பேட் செய்யும் அணி, பந்துவீசும் அணியை நையப்புடைத்து எட்டமுடியாதா வகையில் 400 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயித்துவிடும்.

அந்த இலக்கை துரத்தும் போக்கில் சென்று எதிரணி தோல்வி அடையும். எதிரணி இதுபோன்ற பெரிய ஸ்கோரை துரத்தும்போதே தோற்கப் போகிறது என்பது ரசிகர்களுக்கே தெரிந்துவிடும். அப்படி இருக்கையில் போட்டியில் சுவாரஸ்யம் குறைந்துவிடுகிறது.

அது மட்டுமல்லாமல் எதிரணி பேட்டர்கள்கூட, இதுபோன்ற மாபெரும் இலக்கை எவ்வாறு துரத்துவது என்ற எண்ணத்துடன் களமிறங்கும்போது, அவர்களை அழுத்தம், நெருக்கடி பற்றிக்கொண்டு எளிதாக பெவிலியன் திரும்பவும் வழி ஏற்பட்டுவிடுகிறது.

இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி மட்டும் 45 பவுண்டரிகள் அடித்தது, அதாவது 180 ரன்களை பவுண்டரி மூலமே சேர்த்தது. 14 சிக்ஸர்கள் மூலம் மட்டுமே 84 ரன்களை சேர்ததது. ஏறக்குறைய 45+14=59 பந்துகள் ஏறக்குறைய 10 ஓவர்களில் மட்டும் தென் ஆப்பிரிக்க அணி 264 ரன்களை சேர்த்திருக்கிறது.

ஏறக்குறைய 120 பந்துகளை டாட் பந்துகளாக தென் ஆப்பிரிக்க பேட்டர்கள் விட்டுள்ளனர். அதாவது பவுண்டரி, சிக்ஸர் மூலமே ரன்களை சேர்த்தால் போதும் என்ற மனநிலையோடு இருந்தனர். இதுபோன்று பேட்டர்களுக்கு சாதகமாக ஆடுகளத்தையும், விதிமுறையையும் மாற்றினால், போட்டி என்பது ஒருதரப்பாகவே இருக்கும்.

 

ஐசிசி ஆடுகளங்களா, இந்திய மைதானங்களா?

உலகக்கோப்பை 2023: உயிர்த்தெழுந்த தென்னாப்பிரிக்கா - வெற்றி சாத்தியமானது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஐசிசி நடத்தும் ஆடுகளங்கள் பந்துவீச்சாளர்களுக்கும், பேட்டர்களுக்கும் சமவாய்ப்பு அளிக்கும் களமாக இருக்க வேண்டும். ஆனால், டெல்லியில் நேற்று ஆட்டம் நடந்த மைதானம், ஆமதாபாத் மைதானம் போன்றவை பேட்டர்களுக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள மைதானங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தன்மை இருக்கிறது. அந்தத் தன்மையை மாற்றாமல் ஐசிசி ஆடுகளங்களை அமைக்க வேண்டுமே தவிர, பொழுதுபோக்கு அம்சத்துக்காக ஆடுகளத்தின் மண்ணை இறுகச் செய்து(compaction) ஆடுகளத்தை உயிரற்றதாக மாற்றக்கூடாது.

ஆடுகளத்தின் மண்ணை இறுகச் செய்து பிட்ச் அமைக்கும்போது, அந்த ஆடுகளம் முழுக்க முழுக்க பேட்டர்களுக்கே சாதகமாக இருக்கும். பந்துவீச்சாளர் என்னதான் உயிரைக் கொடுத்து பந்துவீசினாலும், பேட்டை நோக்கித்தான் பந்து சீராக வரும், அடித்து ஆடுவதற்கு பேட்டர்கள் பெரிதாக ரிஸ்க் எடுக்கத் தேவையில்லை.

ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்க ஆடுகளம் இறுகாமல், மண் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்க வேண்டும். வேகப்பந்துவீச்சுக்கும் அவ்வாறு இருக்க வேண்டும். அப்போதுதான் சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும், வேகப்பந்துவீச்சாளர்களும் ஸ்விங் செய்ய முடியும்.

இதுபோன்று ஆடுகளத்தை இறுகச் செய்து, பொழுதுபோக்கு நோக்கத்துடன் பிட்ச் அமைக்கும்போது, பேட்டர்கள் கையில் ஆயுதத்தை வழங்கி, நிராயுதபாணிகளாக பந்துவீச்சாளர்களை நிறுத்தி போர் செய்வதுபோல் இருக்கும்.

ஆடுகளத்தைப் புகழ்ந்த தென் ஆப்பிரிக்க கேப்டன்

வெற்றிக்குப் பின் தென் ஆப்பிரிக்கக் கேப்டன் பவுமா ஆடுகளம் குறித்துக் கூறுகையில் “இந்த வெற்றிதான் நாங்கள் எதிர்பார்த்தது, மகிழ்ச்சியாக இருக்கிறது. எந்த பேட்டரிடமும் தவறைப் பார்க்கவில்லை. பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்பட்டோம். தனிப்பட்ட பேட்டர்களாகவும் சிறப்பாகவே செயல்பட்டனர்.

பேட்டரை நோக்கி பந்து அருமையாக வந்ததால்தான் பெரிய ஸ்கோர் அடிக்க முடிந்தது. தொடக்கத்தில் சூழலுக்கு ஏற்ப நகர்வது கடினமாக இருந்தது, பின்னர் சரி செய்துவிட்டோம். சுழற்பந்துவீச்சை இனிவரும் போட்டிகளில் அதிகம் பயன்படுத்துவோம்,” எனத் தெரிவித்தார்.

 

சீரான வலிமையில் பேட்டர்கள் இருக்கிறார்களா?

உலகக்கோப்பை 2023 கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கை அணிக்கும் இந்த ஆடுகளங்கள் சாதகமாக இருந்ததுதானே, அந்த அணியிலும் 3 பேட்டர்கள் அரைசதம் அடித்தார்களே என்று கேட்கலாம். ஆனால், தென் ஆப்பிரிக்க அணியில் இருப்பது போல் கீழ்வரிசை வரை பிஞ்ச்ஹிட்டர்கள், அதிரடி ஆட்டக்காரர்கள் இருக்கிறார்களா என்றால் இல்லை.

அனைத்து அணிகளிலும் ஒரே மாதிரியான பேட்டர்கள் இருக்கிறார்களா என்றால் இல்லை. எந்த அணியில் வலிமையான பேட்டர்கள் இருக்கிறார்களோ அந்த அணிதான் இதுபோன்ற ஆடுகளில் ஆதிக்கம் செய்யும் என்பதே நிதர்சனம்.

இலங்கை அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சு மோசமாக அமைந்ததா அல்லது ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமாக இருந்ததா என்பது கேள்விக் குறிதான். ஏனென்றால், இலங்கை அணித் தரப்பில் 4 பந்துவீச்சாளர்களின் பந்துகளும் வெளுத்து எறியப்பட்டன.

பதிரணா 10 ஓவர்களில் 95 ரன்கள், ரஜிதா 90 ரன்கள், மதுசங்கா 85, வெல்லாலகே 81 ரன்களை வாரி வழங்கினர். ஒருநாள் போட்டியில் ஒரு அணியில் 4 பந்துவீச்சாளர்கள் சராசரியாக 80 ரன்களுக்கு மேல் வாரிக் கொடுப்பது இது 2வது முறை.

இதில் வெல்லாலகே சிறந்த இடது கை சுழற்பந்துவீச்சாளர். ஆசியக் கோப்பைத் தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றோரின் விக்கெட்டுகளை வீழ்த்தியவர். அவரது நிலைமை நேற்று பரிதாபம்.

ஸ்டெயினின் விளக்கம்

ஆனால், தென்ஆப்பிரிக்க முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் நேற்று இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “இலங்கை அணியினர் மோசமாகப் பந்து வீசினார்கள். அதன் விளைவுதான் இவ்வளவு பெரிய ஸ்கோர்,” என்று விளக்கம் அளித்தார்.

தவறு செய்துவிட்டோம்

இலங்கை அணியின் கேப்டன் ஷனகா கூறுகையில், “ மிகப்பெரிய ஸ்கோர் செய்யும் போட்டியாக நான் எதிர்பார்த்தேன். நாங்கள் லென்தை தவறவிட்டோம், செயல்திட்டம் சிறப்பாக இல்லை. அடுத்து வரும் போட்டியில் நாங்கள் இதை மாற்ற வேண்டியது அவசியம்.

சுமார் 350 ரன்கள் வரை எடுக்க முயன்றோம். அசலங்கா, மென்டிஸ் சிறப்பாக ஆடினர். 3 முக்கிய பந்துவீச்சாளர்களை நாங்கள் இழந்தது பெரிய பலவீனம். தோல்வி அடைந்தாலும், பேட்டிங் செய்த விதம் ஆறுதலாக இருக்கிறது. அடுத்த போட்டியில் இன்னும் வேகத்துடன் இருப்போம்,” எனத் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c6pj8070g7wo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய பந்துவீச்சில் தடுமாறிய அவுஸ்திரேலியா 199 ஓட்டங்களுக்கு சுருண்டது

08 OCT, 2023 | 06:40 PM
image

(நெவில் அன்தனி)

இந்தியாவுக்கு எதிராக சென்னை, செப்பாக்கம், எம். சிதம்பரம் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா பெரும் தடுமாற்றத்திற்கு மத்தியில் 49.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 199 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த அவுஸ்திரேலியாவின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

போட்டியின் 3ஆவது ஓவரில் மிச்செல் மார்ஷ் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார்.

எவ்வாறாயினும் அனுபவசாலிகளும் கடைசி உலகக் கிண்ண அத்தியாயத்தில் விளையாடுபவர்களுமான டேவிட் வோர்னர், ஸ்டீவன் ஸ்மித் ஆகிய இருவரும் பொறுமையாகத் துடுப்பெடுத்தாடி 2ஆவது விக்கெட்டில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

டேவிட் வோர்னர் 41 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டம் இழந்தார்.

மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களாக இருந்தபோது ஸ்டீவன் ஸ்மித் 46 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த மானுஸ் லபுஷேனும் (27)  அவரைத் தொடர்ந்து அலெக்ஸ் கேரியும் (0) ஒரே ஓவரில் களம் விட்டகன்றனர். (119 - 5)

தொடர்ந்து மொத்த எண்ணிக்கை 140 ஓட்டங்களாக இருந்தபோது க்ளென் மெக்ஸ்வெல் (15), கெமரன் க்றீன் (8) ஆகிய இருவரும் 3 பந்துகள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.

மத்திய வரிசையில் அணித் தலைவர் பெட் கனமின்ஸ் 15 ஓட்டங்களையும் பின்வரிசையில் மிச்செல் ஸ்டார்க் 28 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ரவிந்த்ர ஜடேஜா 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜஸ்ப்ரிட் பும்ரா 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் குல்தீப் யாதவ் 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

200 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இந்தியா துடுப்பெடுத்தாடும்.

https://www.virakesari.lk/article/166411

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.