Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Sri Lanka FlagSri Lanka                                                     241
Afghanistan FlagAfghanistan           (45.2/50 ov, T:242) 242/3

Afghanistan won by 7 wickets (with 28 balls remaining)

  • Replies 546
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நியுசிலாந்த் எனும் சீரியல் கில்லர் அணி

நான் நியுசிலாந்தின் விசிறி அல்லன். ஆனால் நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவின் 388 இலக்கை விரட்டிப் போய் 383ஐ எட்டிய அவர்கள் ஆடிய ஆட்டத்தை வெகுவாக ரசித்தேன். இந்த உலகக்கோப்பையின் சிறந்த போட்டி அதுதான். அதுவும் 32வது ஓவரில் டாம் லேதம் அவுட் ஆகாமல் ரச்சின்னுக்கு துணை கொடுத்து 40வது ஓவர் வரை நின்றிருந்தால் கடைசி 10 ஓவர்களில் 80 ரன்கள் தேவை எனும் நிலை வந்திருக்கும். தேவையில்லாமல் ஒரு ரிவர்ஸ் ஸ்வீப்புக்கு அவர் போனதில் ஆட்டத்தின் நிலை மாறியது. ஆனாலும் நீஷம் ஒரு மரண இன்னிங்ஸ் அடித்தாரே அதற்கு ஈடே இல்லை. அந்த காலத்து குளூசினரை நினைவுபடுத்தினார்.

நியுசிலாந்தின் மட்டையாட்ட வரிசையில் உள்ள ஒரெ திறமையாளர் ரச்சின் ரவீந்திரா. (அவர் நேற்று அபாரமான சதத்தை அடித்தார்.) மிச்ச வீரர்கள் மூன்று நான்கு ஷாட்களுக்கு மேல் ஆடத் தெரியாதவர்கள். ஆனால் அவர்களுடைய சிறப்பு தனிச்சிறப்பு எவ்வளவு பெரிய இலக்கையும் விரட்டி கூலாக மட்டையாடுவார்கள் ஆடுவார்கள் என்பது. நேற்றைய போட்டியிலும் பெர்குஸனுக்கு காயம் ஏற்படாமல், இரண்டு கேட்சுகளையும் ரச்சினும் மிச்சலும் விடாமல் இருந்திருந்தால் ஆஸ்திரேலியாவை 340க்குள் கட்டுப்படுத்தியிருப்பார்கள். நிச்சயமாக ஜெயித்திருப்பார்கள். இவ்வளவு துரதிஷ்டம் இருந்தாலும் கவலைப்படாமல் ஆடிய ஆட்டம் No Country for Oldmen படத்தின் சீரியல் கில்லரான ஆண்டன் சிகரை நினைவுபடுத்தியது.

இந்த உலகக்கோப்பையின் சிறந்த அணி இந்தியாவுக்கு அடுத்த படியாக நியுசிலாந்துதான்; திறமையை விட நிதானமே பெரிது என நிரூபிக்கிறார்கள்!

ஆர். அபிலாஷ்

http://thiruttusavi.blogspot.com/2023/10/blog-post_32.html

Posted

சிங்கள அணியை வென்ற ஆப்கன் அணிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
36 minutes ago, நிழலி said:

சிங்கள அணியை வென்ற ஆப்கன் அணிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

மின்னாள் திற‌மையான‌ இங்லாந் வீர‌ர் தான் அப்கானிஸ்தான் அணி  கொச்

 

யோன‌த்த‌ன் டிரோட்டின் / வ‌ருகைக்கு பிற‌க்கு அப்கானிஸ்தான் அணிய‌ முற்றிலுமாய் மாற்றி அமைத்து விட்டார்

 

இப்ப‌ தான் நிதான‌ம‌ ச‌ரியான‌ முறையில் அப்கானிஸ்தான் வீர‌ர்க‌ள் விளையாடின‌ம் 

முத‌ல் ஓவ‌ரில் இன்று விக்கேட் போக‌ அடுத்து வ‌ந்த‌ வீர‌ர் சிறிது நேர‌ம் ப‌ந்தை க‌வ‌ணித்து விட்டு பிற‌க்கு அடித்து ஆட‌த் தொட‌ங்கினார்

பாதுகாப்பு க‌ருதி ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளை அப்கானிஸ்தானில் ந‌ட‌த்துவ‌தில்லை.............கால‌ப் போக்கில் சர்வ‌தேச‌ போட்டிக‌ள் அப்கானிஸ்தானில் ந‌ட‌ந்தால் இன்னும் சிற‌ப்பாய் இருக்கும்

உல‌க‌ கோப்பைக்கு தெரிவாகாத‌ திற‌மையான‌ வீர‌ர்க‌ள் அப்கானிஸ்தான் அணியில் இருக்கின‌ம்

வ‌லை போட்டு தேடினாலும் இல‌ங்கையில் திற‌மையான‌ வீர‌ர்க‌ள் இல்லை............அர‌சிய‌லால் நாடும் அழிந்து ந‌ல்ல‌ நிலையில் இருந்த‌ கிரிக்கேட்டும் இல‌ங்கையில் அழிந்து விட்ட‌து

Edited by பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆப்காகிஸ்தானுக்கு ஐந்தாம் இடம் கிடைக்கும்/கலாம். ஆனால் அரை இறுதிக்கு செல்லுமா என்பது சந்தேகம். ஏறக்குறைய இப்போது உள்ள முதல் நாலும்தான் அரை இறுதி விளையாடும் என நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, நியாயம் said:

ஆப்காகிஸ்தானுக்கு ஐந்தாம் இடம் கிடைக்கும்/கலாம். ஆனால் அரை இறுதிக்கு செல்லுமா என்பது சந்தேகம். ஏறக்குறைய இப்போது உள்ள முதல் நாலும்தான் அரை இறுதி விளையாடும் என நினைக்கிறேன். 

சிமி பின‌ல் போட்டி

இந்தியா
தென் ஆபிரிக்கா
அவுஸ்ரேலியா
நியுசிலாந்

இந்த‌ 4 நாடுக‌ளும் தான் 
மற்ற‌ அணிக‌ள் நாடு திரும்ப‌ ச‌ரி..........
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பையன்26 said:

@ஈழப்பிரியன்

ஹ‌லோ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவா

 

அண்ண‌ எப்ப‌ அப்கானிஸ்தான் சிறில‌ங்கா ம‌ச் தொட‌ங்குது லொல்😁

ஆகா சிறிலங்கா தோற்றது சந்தோசம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆகா சிறிலங்கா தோற்றது சந்தோசம்.

இல‌ங்கை அணிய‌ முற்றிலும் சித‌த்த‌து ம‌கிந்தாவின் அர‌சிய‌ல்
எப்ப‌டி இருந்த‌ அடி ம‌ட்ட‌த்துக்கு போய் விட்ட‌து...........விட்ட‌ த‌வ‌ற‌ தொட‌ர்ந்து விடுகின‌ம்...............

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சொறீலங்காவை சேசப் பண்ணி ஆப்கானிஸ்தான் தோற்கடித்தது மட்டுமன்றி.. ஆல் அவுட் செய்துள்ளது. இதை விட ஒரு கிரிக்கெட் கேவலம்.. சொறீலங்காவுக்கு அமையாது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புனே மைதானத்தில் இலங்கை அணி 280 குறைந்த பட்சம் எடுத்திருக்க வேண்டும் என கூறுகிறார்கள்.

அத்துடன் இரண்டாவதாக பந்து வீசும் போது மைதானத்தின் ஈரலிப்பு பந்து வீச்சாளருக்கு பாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது, நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் களத்தடுப்பை தேர்வு செய்த்து.

இலங்கை அணி 280 + 20 (மைதானத்தின் ஈரலிப்பு) என்பவற்றைனை கருத்தில் கொண்டு 300 ஓட்டங்கள் குவித்திருக்க வேண்டும்.

இலங்கை அணியின் மோசமான அணுகுமுறை பற்றி இங்கிலாந்து முன்னாள் ஆட்டகாரர் மைகல் வோகன்(என கருதுகிறேன்) குறிப்பிடும் போது, இலங்கை அணி ஆரம்பம் முதலேயே தடுப்பாட்டம் ஆடி எதிரணி பந்து வீச்சாளர்களை கட்டுப்படுத்த அனுமதித்திருந்தனர்.

இலங்கை அணியில் சுழல் பந்துவீச்சு சோபிக்கவில்லை என கூறுகிறார்.

ஆப்கானிஸ்தான் அணி ஒரு அனுபவம் மிக்க அணி போல மிக சிறப்பாக குறைந்த ஓட்ட இலக்கினை 10 ஓவர்கள் கொண்ட அலகுகளாக பிரித்து அந்த இலக்கினை எட்டியிருந்ததாக கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் மும்பாயில் அவுஸ்ரேலியாவினை எதிர்கொள்ளவுள்ளது அந்த மைதானம் சுழற்பந்துவீச்சிற்கு சென்னை மைதானம் போல சாதகம் இல்லை என கூறப்படுகிறது, இருப்பினும் ஏற்கனவே இங்கிலாந்து, பாகிஸ்தான் போன்ற அணிகளை வெற்றி கொண்ட போல் ஆப்கானிஸ்தானிற்கு அவுஸ்ரேலிய அணியினை வெல்ல முடியாது போனாலும், எதிர்காலத்தில் ஒரு மிக சிறந்த அணியாக மாறியுள்ளது. 

அவுஸ்ரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆப்கானிஸ்தான் அணிக்கு அளவு குறைந்த பந்தினை (Short) ஆயுதமாக பயன்படுத்துவார்கள், அதன் மூலம் பந்தினை தூக்கி அடிக்கவும், வெட்டி ஆடவும், கொக்கி(Hook) ஆட்டத்தினை ஆடவும் தூண்டுவர். 

இலங்கை அணியினர் போலில்லாமல் அவுஸ்ரேலிய ஆட்டக்காரர்கள் மைதானத்தில் இறங்கி பந்து வீச்சாளர்களின் அளவுகளை குழப்புவார்கள்.  

ஆப்கானிஸ்தான் அணி இதற்கு தயாராகவே வரும்.

அவுஸ்ரேலிய ஆப்கானிஸ்தான் ஆட்டம் விறு விறுப்பாக இருக்கும்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையை வீழ்த்தியபோது இந்திய ரசிகர்கள் பற்றி ஆப்கானிஸ்தான் கேப்டன் கூறியது என்ன?

இலங்கையை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முன்னேறிய ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

30 அக்டோபர் 2023
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் ஆகிய இரு சாம்பியன்களை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி, இன்று 3வதாக மூன்றாவது முன்னாள் சாம்பியனான இலங்கை அணியையும் சாய்த்துள்ளது.

புனேயில் இன்று நடந்த உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது ஆப்கானிஸ்தான் அணி.

முதலில் பேட் செய்த இலங்கை அணி 49.2 ஓவர்களில் 241ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 242 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் புறப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி 28 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 3 விக்கெட்டுகளை இழந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 6 போட்டிகளில் 3 வெற்றி, 3 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் இலங்கையை கீழே இறக்கி 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் அணி 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது.

 
இலங்கையை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முன்னேறிய ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆப்கானிஸ்தான் பெற்ற 3 வெற்றிகளுமே அசாத்தியமானவை, வீழ்த்திய அணிகளும் சாமானிய அணிகளும் அல்ல.

நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை பந்துவீச்சால் அடக்கியது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்கு எதிராக 280 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்து பேட்டிங் வலிமையை வெளிப்படுத்தி 8 விக்கெட்டில் வென்றது, இலங்கைக்கு எதிராக பேட்டிங்கில் ஒழுக்கத்தை கடைபிடித்து, பொறுமையாக ஆடிய வென்றது ஆப்கானிஸ்தான்.

ரஷித் கான் இன்று தனது 100-வது ஒருநாள் போட்டியில் பங்கேற்றார். அவருக்கு ஆப்கான்அணியினர் சேர்ந்து மிகப்பெரிய வெற்றியை பரிசாக அளித்துள்ளனர் என்று எடுத்துக் கொள்ளலாம்.

‘கத்துக்குட்டி’ அல்ல ‘கற்றுக்கொடுப்போர்’

ஆப்கானிஸ்தான் அணி கடந்த 2 ஆண்டுகளில் சர்வதேச அளவில் கிரிக்கெட்டில் பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தானில் நிலவும், அரசியல், பொருளாதார, சமூக சிக்கல்களையும் கடந்து அந்த அணியினர் ஒவ்வொரு ஆட்டத்திலும் ஆகச்சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறார்கள்.

ஆங்கிலத்தில் “மினோஸ்” என்று சிறிய அணிகளை அழைப்பார்கள். அவ்வாறு இனிமேல் ஆப்கானிஸ்தானை அழைக்க முடியாத அளவுக்கு அவர்களின் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் முதிர்ச்சி காணப்படுகிறது. தங்களின் திறமைக்கும் அதிகமான ஆட்டத்தை எதிரணியிடம் வெளிப்படுத்தி, திக்குமுக்காடச்செய்து ஆப்கானிஸ்தான் வெல்கிறது.

 
இலங்கையை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முன்னேறிய ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

உலக அணிகளுக்கு சவால்விடும் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு, பொறுமையான, நேர்த்தியான, ஒழுக்கமான பேட்டிங், தேவைப்படும் நேரத்தில் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஆட்டக்காரர்கள் என தரமான விளையாட்டை சர்வதேச தளத்தில் வெளிப்படுத்துகிறது.

பல உலகக் கோப்பைகளாக நெதர்லாந்து, வங்கதேசம், அயர்லாந்து அணிகள் பங்கேற்றாலும், பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ஆனால், இந்த உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியின் ஆட்டம் உலக ரசிகர்களை ஈர்த்துள்ளது, குறிப்பாக இந்திய மக்களிடையே பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியுள்ளதை சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது.

 

ஆப்கானிஸ்தான் அணியின் உத்தி என்ன?

இலங்கையை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முன்னேறிய ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆப்கானிஸ்தான் அணியின் மிகப்பெரிய பலமே சுழற்பந்துவீச்சுதான். அதை ஒவ்வொரு ஆட்டத்திலும் மிகச்சரியாக கையாண்டு, எதிரணியை திணறடித்து வருகிறார்கள். இந்த ஆட்டத்திலும் அதை செய்யாமல் இல்லை. முஜிபுர் ரஹ்மான், முகமது நபி, ரஷித் கான் ஆகியோரின் நடுப்பகுதி ஓவர்கள் இலங்கை பேட்டர்களை திணறடித்தது. வேகப்பந்துவீச்சாளர் பரூக்கி 10ஓவர்கள் வீசிய ஒரு மெய்டன் 34 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆட்டநாயகன்விருதை வென்றார்.

ஆப்கானிஸ்தானின் கட்டுக்கோப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இலங்கை பேட்டர்கள் 147 டாட் பந்துகளை ஏறக்குறைய 24 ஓவர்களில் ரன் சேர்க்காமல் வீணாக்கினர்.

பேட்டிங்கிலும் ஆப்கானிஸ்தான் பேட்டர்கள் பட்டையைக் கிளப்பினர். ஜாத்ரன் ஆட்டமிழந்தாலும், விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்ற கவனத்துடன் பேட் செய்தனர். பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், ஷாட்களில் இருந்த நேர்த்திதான் வெற்றிக்கு அழைத்துச் சென்றது.

ஒருநாள் போட்டிகளில் மிக முக்கியமானது ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வதாகும். இந்த விஷயத்தை ஆப்கன் வீரர்கள் அருமையாகச் செய்தனர். ஒவ்வொரு வீரரும் அவசரப்பட்டு பெரிய ஷாட்டுக்கு முயற்சிக்காமல் ஒரு ரன், 2 ரன்களாகச் சேர்த்து ஸ்கோரை உயர்த்தினர். இலங்கை பந்துவீச்சாளர்கள் தவறான பந்துகளை வீசியபோதுகூட தேவையற்ற ஷாட்களை ஆப்கன் பேட்டர்கள் ஆடவில்லை.

 
இலங்கையை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முன்னேறிய ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்புதான் கடைசிவரை விக்கெட்டுகளை பெரிதாக இழக்காமல் வெற்றிக்கு அழைத்துவந்தது. ஒருநாள் போட்டியில் சேஸிங்கை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதற்கு உதாரணமாக ஆப்கன் பேட்டர்கள் செயல்பட்டனர்.

அதிலும் ஆப்கானிஸ்தானின் ஹர்திக் பாண்டியா என்று வர்ணிக்கப்படும் அசமத்துல்லா ஓமர்ஜாய் பேட்டிங் அற்புதமாக இருந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான சேஸிங்கிலும், இந்த ஆட்டத்தில் சேஸிங்கிலும் ரஹ்மத் ஷா, கேப்டன் ஷாகிதி ஆகியோர் அடுத்தடுத்து அரைசதம் அடித்து அணியை உயரத்துக்கு கொண்டு சென்றனர்.

சுவாரஸ்ய கருணாரத்னே

இலங்கை அணி பேட்டர்கள் நிசங்கா, கருணா ரத்னே ஆட்டத்தைத் தொடங்கினர். இதில் திமுத் கருணாரத்னேயின் ஒருநாள் வருகை மிகவும் வேடிக்கையானது.

கடந்த 2015ம் ஆண்டு கடைசியாக கருணா ரத்னே ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்தார், அவர் அதன்பின் விளையாடவில்லை. அவருக்கு 2019ம் ஆண்டு கேப்டன்ஷிப் வாய்ப்பு வழங்கப்பட்டது. 2020 முதல் 2021ம் ஆண்டில் 3 ஒருநாள் போட்டியில் மட்டுமே கருணாரத்னே விளையாடியிருந்தார்.

ஆனாலும் அவரை அணியில் தேர்ந்தெடுத்து நிசாங்காவுடன் சேர்ந்து தொடக்க வீரராக களமிறக்க இலங்கை அணி முடிவு செய்துள்ளது. கடந்த உலகக் கோப்பைத் தொடரிலிருந்து 17 விதமான ஜோடிகளை உருவாக்கி தொடக்க ஆட்டக்காரர்களுக்கு பரிசோதித்துள்ளது இலங்கை அணி. இதில் கருணாரத்னே, நிசாங்கா ஜோடி 14வது முறையாக களமிறங்குகிறது.

 

விக்கெட் சரிவு

இலங்கையை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முன்னேறிய ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆப்கானிஸ்தான் தொடக்கத்திலேயே பரூக்கியையும், சுழற்பந்துவீச்சாளர் முஜிபுர் ரஹ்மானையும் களமிறக்கி பந்துவீசச்செய்தது. இலங்கை பேட்டர்கள் ரன் சேர்க்க கடும் சிரமப்பட்டனர். பருக்கி வீசிய 6-வது ஓவரில் கருணாரத்னே 15 ரன்னில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார்.

10 ஓவர்கள் பவர்ப்ளே முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் சேர்த்திருந்தது. இதில் இலங்கை அணி 4 பவுண்டரிகள் மட்டுமே சேர்த்திருந்தது. குஷால் மென்டிஸ், நிசாங்கா இருவரும் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை எதிர்கொண்டு ரன் சேர்க்க மிகவும் சிரமப்பட்டதால் ரன்ரேட் மந்தமாக இருந்தது.

அசமத்துல்லா ஓமர்ஜாய் வீசிய 19-வது ஓவரில் நிசாங்கா 46 ரன்கள் சேர்த்த நிலையில் குர்பாஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 62 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் சேர்த்தது.

இலங்கையின் மந்தமான பேட்டிங்

3வது விக்கெட்டுக்கு சமரவிக்ரமா வந்து மென்டிஸுடன் சேர்ந்தார். சமரவிக்ரமா வந்தபின் ரன்களை வேகமாகச் சேர்த்தார். 22-வது ஓவரில்தான் இலங்கை அணி 100 ரன்களை எட்டியது.

ரஷித் கான், முகமது நபி, ஓமர்ஜாய் என மாறி மாறி நெருக்கடியாகப்பந்துவீசி இலங்கை பேட்டர்களை திணறவிட்டனர். விக்கெட்டுகளை இழந்துவிடக்கூடாது என்ற நோக்கில் இலங்கை பேட்டர்கள் நிதானமாக பேட் செய்ததால் ரன் ரேட் மிகவும் மந்தமாகவே உயர்ந்தது.

 
இலங்கையை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முன்னேறிய ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆமை வேகத்தில் பேட் செய்த மென்டிஸ் 50 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்து முஜிபுர் ரஹ்மான் வீசிய 27-வது ஓவரில் விக்கெட்டை இழந்தார். 3வது விக்கெட்டுக்கு மென்டிஸ், சமரவிக்ரமா ஜோடி 50 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

முஜிபுர் வீசிய 29-வது ஓவரில் மற்றொரு விக்கெட்டும் வீழ்ந்தது. சமரவிக்ரமா 36 ரன்களுடன் பேட் செய்தநிலையில் முஜிபுர் ரஹ்மான் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி பெவிலியின் திரும்பினார். இலங்கை அணி மிகப்பெரிய விக்கெட்டை இழந்து தடுமாறியது.

30 ஓவர்களில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் சேர்த்தது. 134 ரன்களில் மென்டிஸ் விக்கெட்டையும், 139 ரன்களில் சமரவிக்ரமா விக்கெட்டையும் 5 ரன்கள் இடைவெளியில் இலங்கை இழந்தது.

அடுத்தடுத்து விக்கெட் இழப்பு

அசலங்கா, டி சில்வா ஜோடி 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடியும் நிலைக்கவில்லை. 35-வது ஓவரில், ரஷித் கான் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி டி சில்வா14 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவர்களில் அசலங்கா 22 ரன்னில் பரூக்கி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

அடுத்து களமிறங்கிய சமீரா ஒரு ரன் சேர்த்தநிலையில் ஜாத்ரனால் ரன்அவுட் செய்யப்பட்டார். 40ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 185 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 30 ஓவர்கள் முதல் 40 ஓவர்கள் வரை இலங்கை அணி, 41 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

இலங்கை அணி இந்த உலகக் கோப்பைத் தொடரில் கடைசி 15 ஓவரில் அதன் ரன்ரேட் 5.78 என வைத்திருக்கிறது. இது எந்த அணிகளையையும் விட மிகக் குறைவாகும்.

ரஷித் கானுக்கு 100வது போட்டி

இலங்கையை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முன்னேறிய ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரஷித் கான் இன்று தனது 100-வது ஒருநாள் ஆட்டத்தில் விளையாடுகிறார். டி20 போட்டிகளில் சிறந்த பந்துவீச்சாளராகக் கருதப்படும் ரஷித் கான் ஒருநாள் போட்டிகளில் 20ரன்களுக்கும் மேல் சராசரி வைத்துள்ளார். இவர் எடுத்த பெரும்பாலான விக்கெட்டுகள் ஜிம்பாப்வே, நெதர்லாந்துக்கு அணிகளுக்கு எதிராகத்தான்.

இந்த உலகக் கோப்பைத் தொடரில்கூட இங்கிலாந்துக்கு எதிராக ரஷித் கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், அதில் 2 விக்கெட்டுகள் டெய்லெண்டர்களை வீழ்த்திக் கிடைத்தது. 2023ம் ஆண்டில் ரஷித் கான் பந்துவீச்சு சராசரி 37 முதல் 47 ஆக மோசமாக இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில்கூட இலங்கையின் ரன் சராசரி 4.5 ஆக இருக்கும்போது, ரஷித் கான் ஓவரில் ரன் சராசரி 5.5 ஆக இருக்கிறது.

மாத்யூஸ் 23 ரன்களும், தீக்சனா 29 ரன்களும் கடைசி நேரத்தில் சேர்த்ததால் இலங்கை ஸ்கோர் ஓரளவுக்கு கவுரமான எண்ணிக்கையை எட்டியது இல்லாவிட்டால் 200 ரன்களைக் கூட கடந்திருக்காது. 49.3 ஓவர்களில் இலங்கை அணி 241 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தொடக்கமே அதிர்ச்சி

242 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. மதுசங்கா வீசிய முதல் ஓவரின் 4வது வந்தில், தொடக்க ஆட்டக்காரரும், அதிரடி பேட்டருமான குர்பாஸ் க்ளீன் போல்டாகி டக்அவுட்டில் வெளியேறினார்.

அதன்பின் வந்த ரஹ்மத் ஷா, இப்ராஹிம் ஜாத்ரனுடன் சேர்ந்து நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். பவர்ப்ளே ஓவரான முதல் 10ஓவர்களில் ஆப்கானிஸ்தான் ஒரு விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் சேர்த்தது.

இலங்கையை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முன்னேறிய ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பேட்டிங்கில் ஒழுக்கம்

ஆப்கானிஸ்தான் பேட்டர்கள் ஜாத்ரன், ரஹ்மத் ஷா இருவரும் மிகுந்த ஒழுக்கத்துடன் ஷாட்களை ஆடினர். எந்த தவறான ஷாட்களையும் ஆடி விக்கெட்டை இழக்க விரும்பாததால், இலங்கை பந்துவீச்சாளர்கள் நொந்துபோயினர்.

ஒருநாள் போட்டிக்கு ஏற்றார்போல் விக்கெட்டை ரொட்டேட் செய்தும், ஒருரன், இரு ரன்களாகச் சேர்த்தும் ஜாத்ரன், ரஹ்மத் இருவரும் ஆடி, ஸ்கோரை உயர்த்தினர். 10வது ஓவருக்குப்பின் 6 ஓவர்களாக பவுண்டரி ஏதும் அடிக்காமல் இருவரும் ரன்களைச் சேர்த்தனர்.

17-வது ஓவரில் மதுசங்கா பந்துவீச்சில் ஜாத்ரன் 39 ரன்களில் கருணாரத்னேவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்துவந்த ஹஸ்மத்துல்லா ஷாஹிதி, ரஹ்மத் ஷாவுடன் சேர்ந்தார்.

வெற்றி மட்டுமே நோக்கம்

ஆப்கானிஸ்தான் பேட்டர்கள் வெற்றி மட்டுமே நோக்கமாகக் கருதி பேட் செய்ததால், தவறான எந்த ஷாட்களையும் ஆடவில்லை, அவசரப்பட்டு பெரிய ஷாட்களையும் ஆடாமல் ரன்களைச் சேர்த்தனர். இவர்களின் ஆட்டம் இலங்கை வீரர்களின் பொறுமையை கடுமையாகச் சோதித்தது. 20ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் 2 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் சேர்த்தது, 22 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது.

மிகுந்த பொறுப்புடன் பேட் செய்த ரஹ்மத் ஷா 61 பந்துகளில் தனது 25-வது ஒருநாள் அரைசதத்தை நிறைவு செய்தார். ரஹ்மத் ஷா விக்கெட்டை வீழ்த்த இலங்கை பந்துவீச்சாளர்களும் பல்வேறு உத்திகளை கையாண்டு பந்துவீசியும் பலனில்லை.

இலங்கை பந்துவீச்சாளர்கள் திணறல்

இலங்கையை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முன்னேறிய ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பவுன்ஸர்களாக வீசுவதற்கு ரஜிதா அழைக்கப்பட்டார். ரஜிதாவின் பவுன்ஸரில் சற்று திணறிய ரஹ்மத்ஷாவின் பலவீனத்தை தெரிந்து கொண்டனர். ரஜிதா வீசிய 28-வது ஓவரில், ரஹ்மத் ஷா 62 ரன்கள் சேர்த்தநிலையில் கருணாரத்னேயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு இருவரும் 58 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

4-வது விக்கெட்டுக்கு அஸ்மத்துல்லா ஓமர்ஜாய் வந்து, ஷாகிதியுடன் இணைந்தார். இருவரும் இலங்கை பந்துவீச்சாளர்களின் பொறுமையைச் சோதிக்கும் விதத்தில் மிகுந்த ஒழுக்கத்துடன் ஷாட்களை ஆடி, விக்கெட் இழப்புக்கு வாய்பில்லாமல் பேட் செய்தனர். ஒரு ரன், 2ரன்கள் மட்டுமே சேர்த்து அற்புதமான பேட்டிங்கை ஆப்கான் வீரர்கள் வெளிப்படுத்தி, அணியை வெற்றி நோக்கி நகர்த்தினர். 40ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் சேர்த்து வெற்றியை நோக்கி நகர்ந்தது.

40ஓவர்களுக்குப்பின் டெத் ஓவரில் ஆப்கன் பேட்டர் ரன் சேர்க்கத் தொடங்கினர். இலங்கை பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சில் ஓவருக்கு ஒரு பவுண்டரி வீதம், ஷாகிதி, ஓமர்ஜாய் அடித்து ரன்ரேட்டை உயர்த்தினர்.

ஹஸ்மத்துல்லா ஷாகிதி மதுசங்கா வீசிய 42-வது ஓவரில் பவுண்டரி அடித்து தனது அரைசதத்தை நிறைவு செய்தார். இதைத் தொடர்ந்து, ஓமர்ஜாயும், 50 பந்துகளில் அரைசதம் அடித்து அணியை வெற்றி நோக்கி செலுத்தினர்.

இலங்கை தரப்பில் 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியும் ஆப்கானிஸ்தான் பேட்டர்களின் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. ஆப்கன் பேட்டர்களின் பொறுமையான நிதானமான பேட்டிங்கால் இலங்கை பந்துவீச்சில் ஒரு விதமான சோர்வு வரத் தொடங்கியது.

ஷாகிதி, ஓமர்ஜாய் ஹீரோக்கள்

42பந்துகளில் ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. ஆப்கன் பேட்டர்கள் ரன் சேர்க்கும் கியரை மாற்றினர். சமீரா வீசிய 44-வது ஓவரில் 2 பவுண்டரிகளை அசமத்துல்லா விளாசினார். அதன்பின் இருவரும் அணியை வெற்றி நோக்கி நகர்த்தினர். 45.2 ஓவர்களில் வெற்றிக்குத் தேவையான 242 ரன்களைச் சேர்த்து ஆப்கானிஸ்தான் அணி வென்றது.

கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாகிதி 58 ரன்களிலும், ஓமர்ஜாய் 73 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இலங்கை தரப்பில் மதுசங்கா 2 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

இந்திய ரசிகர்கள் பற்றிக் கூறியது என்ன?

போட்டிக்குப் பிறகு பேசிய ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாகிதி, "விளையாட்டை வெற்றிகரமாக முடித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். வரவிருக்கும் ஆட்டங்களில் அதைத் தொடர முயற்சிப்பேன். ரஷீத் கான் சிறந்த வீரர். அவர் மிகவும் சுறுசுறுப்பானவர். அவரைச் சுற்றி ஆற்றல் நிறைந்துள்ளது. எங்கள் நாட்டுக்கு நான் வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன். எங்களை ஆதரித்து மைதானங்களுக்கு வரும் இந்திய மக்களுக்கு நன்றி." என்று கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/cekml7pxgmmo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

டெம்பா பவுமா: மிரட்டும் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் கேலிக்குள்ளாவது ஏன்?

டெம்பா பவுமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஓம்கார் தான்கே
  • பதவி, பிபிசி மராத்திக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

“இன்றிலிருந்து 15 வருடங்களில் எம்பெக்கியுடன் (அப்போதைய தென்னாப்பிரிக்கா அதிபர் ) நான் கை குலுக்குவேன். அவரும் வருங்கால தென்னாப்பிரிக்க அணியை கட்டமைப்பதற்கு எனக்கு வாழ்த்து தெரிவிப்பார்.”

இதை டெம்பா பவுமா ஆறாவது படிக்கும்பொழுது எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

இன்னும் சில வருடங்களில் நீங்கள் என்ன சாதிக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்வி பள்ளிகளில் நடக்கும் கட்டுரைப் போட்டிகளிலும் வேலைக்கான நேர்காணல்களிலும் அடிக்கடி கேட்கப்படும் ஒன்று. ஆனான் சிலரால் மட்டும்தான் இந்தக் கேள்விக்கு அவர்கள் சொல்லும் பதிலை நிஜத்தில் நிகழ்த்திக் காட்டுவார்கள். அந்த சிலரில் ஒருவர்தான் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் டெம்பா பவுமா.

டெம்பா பவுமா தென்னாப்பிரிக்க அணியின் முழுநேர கேப்டனாக இருக்கிறார். அவர் தலைமையில் நடப்பு உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்க அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இதுவரை ஒருமுறை கூட உலகக்கோப்பை வெல்லாத தென்னாப்பிரிக்க அணி, இந்த உலகக்கோப்பையில் முன்னாள் சாம்பியன்களான இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தியுள்ளது.

 
டெம்பா பவுமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

டெம்பா பவுமா தென்னாப்பிரிக்க அணியின் முழுநேர கேப்டனாக இருக்கிறார்

மிரட்டும் அணி, கேலி செய்யப்படும் கேப்டன்

உலகக்கோப்பை ஆரம்பிப்பதற்கு முன்பு, ‘கேப்டன்ஸ் டே’ எனப்படும் உலகக்கோப்பையில் விளையாடும் பத்து அணிகளின் கேப்டன்களும் பங்கேற்கும் செய்தியாளர் சந்திப்பு ஒன்று நடந்தது. இந்த செய்தியாளர் சந்திப்பில் டெம்பா பவுமா தூங்குவது போலிருந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகின.

தான் தூங்கவில்லை என்றும் அந்த கேமரா கோணத்தினால்தான் அப்படி தெரிந்ததாகவும் டெம்பா பவுமா விளக்கமளித்தார். இந்த விளக்கத்தை அவர் தருவதற்கு முன்பே பவுமா பற்றி பல மீம்கள் வைரலாகின.

 
டெம்பா பவுமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இணையத்தில் தொடர்ந்து கேலி செய்யப்படும் பவுமா

அதன்பிறகு, நெதர்லாந்துக்கு எதிரான போட்டியின் போது டிரஸ்ஸிங் ரூமில் வெள்ளை டவல் போர்த்தி பவுமா அமர்ந்திருந்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலானது. தென்னாப்பிரிக்க அணி மும்பையில் நடந்த இரண்டு போட்டிகளிலும் டெம்பா பவுமா விளையாடவில்லை. இருந்தாலும் அவரின் பெயர் செய்திகளில் இருந்துகொண்டே இருந்தது.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வென்ற பிறகு, அவரது கொண்டாட்டத்தின் வீடியோவும் தொடர்ந்து எல்லாராலும் பகிரப்படுகிறது.

ஒரு வீரராக பவுமாவின் சுமாரான ஆட்டமும் அவர் ட்ரோல் செய்யப்படுவதற்கு முக்கியக் காரணமாக உள்ளது.

உண்மையில் கேப்டன்தான் அணியின் முகம். போட்டிக்கு முன் இறுதி 11 பேர் தேர்வு செய்யப்படும்போது, கேப்டனின் பெயர்தான் முதலில் குறிப்பிடப்படும்.

அணியில் முதல் நபராக கேப்டன் எவ்வாறு செயல்படுகிறார் என்பது ரசிகர்கள், ஊடகங்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் சக வீரர்கள் ஆகியோரின் கவனத்தைப் பெறுகிறது.

அணி ஜெயிக்கிறது என்றால் கேப்டனின் தனிப்பட்ட ஆட்டத்தை யாரும் பேசுவதில்லை. ஆனால் அதே அணி தொடர்ந்து தோற்கிறது என்றால் கேப்டனின் தனிப்பட்ட ஆட்டம் குறித்து எல்லாரும் பேசத் தொடங்குவார்கள்.

பவுமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

பவுமாவின் ஆட்டம் எப்படி உள்ளது?

இந்த உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்பு வரை பவுமா 56 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் அவரது சராசரி 35.35 ஆக உள்ளது.

2016ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் அடித்த சதத்தின் மூலம் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்காக சதமடித்த முதல் கருப்பினத்தவர் என்ற பெருமையை பெற்றார். அதன் பின்பு, ஏழு வருடங்கள் கழித்து, கடந்த மார்ச் மாதம் தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை பவுமா அடித்தார்.

சர்வதேச டி20 போட்டியை பொறுத்தவரை ஒரே ஒரு அரை சதத்தைதான் அடித்திருக்கிறார். டி20யில் அவரது பேட்டிங் சராசரியும் 21.61 ஆகத்தான் உள்ளது.

ஆனால், டெஸ்ட் மற்றும் டி20யோடு ஒப்பிடும்போது ஒரு நாள் போட்டிகளில் பவுமாவின் ஆட்டம் நன்றாகவே உள்ளது. 34 ஒருநாள் போட்டிகளில் 50க்கும் அதிகமாக சராசரி வைத்துள்ளார் பவுமா. மேலும், 4 சதங்களும் 5 அரை சதங்களும் அவர் அடித்துள்ளார்.

 
டெம்பா பவுமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்காக சதமடித்த முதல் கருப்பினத்தவர் பவுமாதான்

பவுமா கேப்டன் ஆனதின் பின்னணி என்ன?

பவுமா தென்னாப்பிரிககாவின் கேப்டன் ஆனதற்கு அவர் கருப்பினத்தவர் என்பதுதான் காரணமென தொடர்ந்து விமர்சிக்கப்பட்டது. ஆனால், இது குறித்து கருத்து கூறுவதற்கு முன்பு அவர் எந்த சூழலில் தென்னாப்பிரிக்காவின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

2000ம் ஆண்டு முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் கோல்பாக் ஒப்பந்தத்தினால் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் பெரும் பாதிப்பை சந்தித்தது. ஐரோப்பிய ஒன்றியத்தோடு ஒப்பந்தத்தில் உள்ள நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் எந்தவொரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாட்டிலும் சென்று அந்த நாட்டு வீரராகவே கிரிக்கெட் விளையாடலாம் என்பதுதான் கோல்பாக் ஒப்பந்தம். அதன்படி தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பல வீரர்கள் இங்கிலாந்து அணியில் சேருவதற்காக சென்றனர்.

இந்த சிக்கலில் இருந்து தென்னாப்பிரிக்க அணி மீள்வதற்குள் அடுத்த சர்ச்சையில் சிக்கியது.

2021 டி20 உலகக்கோப்பையின் போது இனவாதத்திற்கு எதிரான 'Black Lives Matter' முன்னெடுப்பின் ஒரு பகுதியாக கிரிக்கெட் வீரர்கள் போட்டி தொடங்கும் முன் முட்டியிட்டு ஆதரவு தெரிவிப்பார்கள்.

பவுமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆனால், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் இந்த செயலை அதன் அணி வீரர்களுக்கு கட்டாயமாக்கியது.

ஆனால், அப்போதைய தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டி காக் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

அதனைத் தொடர்ந்துதான் பவுமா டி20 அணியின் கேப்டனாக்கப்பட்டார்.

இந்த சர்ச்சையை பவுமா மிகவும் நிதானத்தோடு அணுகினார். அவரது தலைமைப்பண்பு இந்த விஷயத்தில் சோதனை செய்யப்பட்டது. அந்த சோதனையில் பவுமா வெற்றி பெற்றார்.

இந்தப் பிரச்னை தீர்த்துவைக்கப்பட்டு டி காக் மீண்டும் அணிக்குத் திரும்பினார். டி காக் அதன்பின்பு பவுமா குறித்து பாராட்டியே பேசினார்.

டி காக் கூறுகையில், “பவுமா ஒரு மிகச்சிறந்த கேப்டன். மற்றவர்கள் இதை புரிந்துகொள்ளாமல் இருக்கலாம்” எனத் தெரிவித்தார்.

அதன்பின்பு பவுமாவிற்கு ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியும் வழங்கப்பட்டது. அதிலிருந்து, பவுமா தென்னாப்பிரிக்கா அணியின் முழுநேர கேப்டனாக செயல்பட்டு அணியை ஒரு நிலைக்கு கொண்டுவந்திருக்கிறார். மேலும் அணியை பல சிக்கல்களில் இருந்தும் வெளியே கொண்டுவந்திருக்கிறார்.

 
டெம்பா பவுமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

2021ம் ஆண்டு நடந்த வெ.இக்கு எதிரான போட்டியில் முட்டியிட்டு நிறவெறிக்கு எதிர்ப்பு தெரிவித்த பவுமா

குறிவைக்கப்படுகிறாரா டெம்பா பவுமா?

முன்னதாக உலகக் கோப்பையில் கெப்லர் வெசல்ஸ், ஹான்சி குரோனியே, ஷான் பொல்லாக், கிரேம் ஸ்மித், ஏபி டி வில்லியர்ஸ், ஃபாஃப் டு பிளெசிஸ் ஆகியோர் தென் ஆப்பிரிக்காவை வழிநடத்தியுள்ளனர்.

இந்த வீரர்கள் அனைவருக்கும் வெற்றிகரமான வீரர்கள் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இவர்கள் தென்னாப்பிரிக்காவை வழிநடத்திய போதுதான் தென்னாப்பிரிக்காவிற்கு 'சோக்கர்ஸ்' என்ற பட்டமும் கிடைத்தது. 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா அணி அரையிறுதிக்கு கூட முன்னேறவில்லை.

கடந்த உலகக்கோப்பைக்கு பிறகு தென்னாப்பிரிக்கா அணி பெரிய மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது.

 
டெம்பா பவுமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

குறிவைக்கப்படுகிறாரா டெம்பா பவுமா?

கோல்பேக் ஒப்பந்தம் காரணமாக பல வீரர்கள் இங்கிலாந்து அணிக்கு விளையாடும் வாய்ப்பிற்காக காத்திருந்தனர். எனவே, புதிய ஒரு அணியை உருவாக்கும் சவால் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் மற்றும் அணியின் கேப்டன் ஆகியோர் முன்பு இருந்தது.

இப்போது சிறப்பாக செயல்படும் இந்த அணியை கட்டமைத்ததில் கேப்டனாக பவுமாவின் பங்களிப்பு அதிகம். புதிய தென்னாப்பிரிக்க அணியை உருவாக்கி, உலகப் பட்டத்திற்கான வலுவான போட்டியாளராக மாற்றியதில் பெரும் பங்கு வகித்துள்ளார் பவுமா.

இந்திய ஆடுகளத்தில் சிறப்பாக ஆடக்கூடிய ஆக்ரோஷமான பேட்ஸ்மேன்கள் தென்னாப்பிரிக்காவிடம் உள்ளனர். குயின்டன் டி காக் ரன்களை குவித்து வருகிறார். பந்து வீச்சாளர்களும் அவருக்கு சமமாக ஆதரவு அளித்து வருகின்றனர்.

அதனால்தான் நெதர்லாந்திடம் தோற்ற தென்னாப்பிரிக்கா அடுத்த போட்டியில் இங்கிலாந்தை எளிதாக வீழ்த்தியது . பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது.

அதற்கு முன், இலங்கைக்கு எதிரான போட்டியில் ரன் மழை பொழிந்து இமாலய வெற்றியை பதிவு செய்தது.

இருப்பினும், பவுமா அவரது சராசரி பேட்டிங்கிற்காகவும் அணி தேர்வில் உள்ள ஒதுக்கீட்டு முறைக்காகவும் அவரது உடல் உயரம் போன்ற பல்வேறு காரணங்களுக்காகவும் அடிக்கடி ட்ரோல் செய்யப்படுகிறார்.

தென்னாப்பிரிக்க அணி எனும் மூழ்கும் கப்பலை நிலை நிறுத்திய பவுமா, தனது அணியை உலக பட்டத்தை நோக்கி அழைத்துச் செல்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

https://www.bbc.com/tamil/articles/c03edjz7ezno

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, vasee said:

புனே மைதானத்தில் இலங்கை அணி 280 குறைந்த பட்சம் எடுத்திருக்க வேண்டும் என கூறுகிறார்கள்.

அத்துடன் இரண்டாவதாக பந்து வீசும் போது மைதானத்தின் ஈரலிப்பு பந்து வீச்சாளருக்கு பாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது, நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் களத்தடுப்பை தேர்வு செய்த்து.

இலங்கை அணி 280 + 20 (மைதானத்தின் ஈரலிப்பு) என்பவற்றைனை கருத்தில் கொண்டு 300 ஓட்டங்கள் குவித்திருக்க வேண்டும்.

இலங்கை அணியின் மோசமான அணுகுமுறை பற்றி இங்கிலாந்து முன்னாள் ஆட்டகாரர் மைகல் வோகன்(என கருதுகிறேன்) குறிப்பிடும் போது, இலங்கை அணி ஆரம்பம் முதலேயே தடுப்பாட்டம் ஆடி எதிரணி பந்து வீச்சாளர்களை கட்டுப்படுத்த அனுமதித்திருந்தனர்.

இலங்கை அணியில் சுழல் பந்துவீச்சு சோபிக்கவில்லை என கூறுகிறார்.

ஆப்கானிஸ்தான் அணி ஒரு அனுபவம் மிக்க அணி போல மிக சிறப்பாக குறைந்த ஓட்ட இலக்கினை 10 ஓவர்கள் கொண்ட அலகுகளாக பிரித்து அந்த இலக்கினை எட்டியிருந்ததாக கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் மும்பாயில் அவுஸ்ரேலியாவினை எதிர்கொள்ளவுள்ளது அந்த மைதானம் சுழற்பந்துவீச்சிற்கு சென்னை மைதானம் போல சாதகம் இல்லை என கூறப்படுகிறது, இருப்பினும் ஏற்கனவே இங்கிலாந்து, பாகிஸ்தான் போன்ற அணிகளை வெற்றி கொண்ட போல் ஆப்கானிஸ்தானிற்கு அவுஸ்ரேலிய அணியினை வெல்ல முடியாது போனாலும், எதிர்காலத்தில் ஒரு மிக சிறந்த அணியாக மாறியுள்ளது. 

அவுஸ்ரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆப்கானிஸ்தான் அணிக்கு அளவு குறைந்த பந்தினை (Short) ஆயுதமாக பயன்படுத்துவார்கள், அதன் மூலம் பந்தினை தூக்கி அடிக்கவும், வெட்டி ஆடவும், கொக்கி(Hook) ஆட்டத்தினை ஆடவும் தூண்டுவர். 

இலங்கை அணியினர் போலில்லாமல் அவுஸ்ரேலிய ஆட்டக்காரர்கள் மைதானத்தில் இறங்கி பந்து வீச்சாளர்களின் அளவுகளை குழப்புவார்கள்.  

ஆப்கானிஸ்தான் அணி இதற்கு தயாராகவே வரும்.

அவுஸ்ரேலிய ஆப்கானிஸ்தான் ஆட்டம் விறு விறுப்பாக இருக்கும்.

இல‌ங்கை வீர‌ர்க‌ள் விட்ட‌ பிழைய‌ தொட‌ர்ந்து ப‌ல‌ ம‌ச்சில் விடுகின‌ம்

அவுஸ்ரேலியா கூட‌ முத‌லாவ‌து விக்கேட்டுக்கு 100ர‌ன்ஸ்சுக்கு மேல் அடிச்சின‌ம் சிறு நேர‌ம் கழித்து 220ர‌ன்ச்சுக்கை எல்லாரும் அவுட்

நேற்று கூடுத‌ல் ர‌ன்ஸ் அடிச்சு இருக்க‌னும் ஆனால் அப்கானிஸ்தான் ப‌ந்து வீச்சு மிக‌ சிற‌ப்பு அது தான் 241ர‌ன்ஸ்சுக்கை இல‌ங்கை வீர‌ர்க‌ள் எல்லாரும் அவுட் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, பையன்26 said:

சிமி பின‌ல் போட்டி

இந்தியா
தென் ஆபிரிக்கா
அவுஸ்ரேலியா
நியுசிலாந்

இந்த‌ 4 நாடுக‌ளும் தான் 
மற்ற‌ அணிக‌ள் நாடு திரும்ப‌ ச‌ரி.....

பையா அடுத்தடுத்த போட்டிகளில் அவுஸ் தோற்றால் என்ன நடக்கும்?

அவுஸ் அரை இறுதிக்கு வர முடியாதில்ல.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
43 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா அடுத்தடுத்த போட்டிகளில் அவுஸ் தோற்றால் என்ன நடக்கும்?

அவுஸ் அரை இறுதிக்கு வர முடியாதில்ல.

அவுஸ் தொட‌ர்ந்து தோத்து
பாக்கிஸ்தான் தொட‌ர்ந்து வென்றால் அவுஸ்ரேலியா வெளிய‌ பாக்கிஸ்தான் சிமி பின‌லுக்கு போகும் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா

ஆனால் 
இந்தியா
அவுஸ்ரேலியா
நியுசிலாந்
தென் ஆபிரிக்கா

இந்த‌ 4அணிக‌ளும்  சிமி பின‌லுக்கு போக‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு.............

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலகக்கோப்பை: திரிசங்கு நிலையில் பாகிஸ்தான் - வங்கதேசத்தை வீழ்த்தியும் வருந்துவது ஏன்?

பாகிஸ்தான் vs வங்கதேசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஆட்ட நாயகன் ஃபக்கர் ஜமான்

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 31 அக்டோபர் 2023, 15:42 GMT
    புதுப்பிக்கப்பட்டது 9 நிமிடங்களுக்கு முன்னர்

உலகக்கோப்பையில் இன்று நடைபெற்ற முக்கிய ஆட்டத்தில் வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்கடித்தது. இதன் மூலம் 4 தோல்விகளுக்குப் பிறகு பாகிஸ்தான் அணி வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது.

பாகிஸ்தானுக்கு இந்த ஆட்டத்தில் கிடைத்துள்ள வெற்றி, அதன் அரையிறுதி வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. அதேசமயம், நாக்அவுட் சுற்று வாய்ப்புக் கதவு மூடப்பட்ட நிலையில் வங்கதேசம் மீண்டும் ஒரு தோல்வியை சந்தித்துள்ளது.

வலுவான பேட்டிங், நெருக்கடியான பந்துவீச்சு ஆகியவற்றை வெளிப்படுத்தி வங்கதேசத்தை எளிதாக வீழ்த்தியபோதும், பாகிஸ்தானின் மனக்குறை தீரவில்லை.

வெற்றி கட்டாயம்

டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. வங்கதேச அணியில் மெஹதி ஹசனுக்குப் பதிலாக, தவ்ஹித் ஹிர்தாய் சேர்க்கப்பட்டிருந்தார். பாகிஸ்தான் அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன, அதில், இமாம் உல் ஹக்கிற்குப் பதிலாக பக்கர் ஜமான் அழைக்கப்பட்டிருந்தார், முகமது நவாஸுக்குப் பதிலாக அகா சல்மானும், சதாப் கானுக்குப் பதிலாக உசாமா மிர்ரும் சேர்க்கப்பட்டிருந்தனர்.

ஆரம்பமே அதிர்ச்சி

வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ், தான்சித் ஹசன் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். ஷாகின் அப்ரிடி தனது முதல் ஓவரின் 5-வது பந்தில் ஹசனை கால்காப்பில் வாங்கவைத்து வெளியேற்றினார். அடுத்துவந்த ஷான்டோவும் 4ரன்கள் சேர்த்த நிலையில், அப்ரிடி வீசிய 4-வது ஓவரில் ஸ்குயர் லெக் திசையில் இருந்த உசாமா மிர்ரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஹாரிஸ் ராஃப் வீசிய 6-வது ஓவரில் முஸ்பிகுர் ரஹிம் 5 ரன்னில் ரிஸ்வானிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவதற்குள் வங்கதேச அணி 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

மெஹமத்துல்லா, லிட்டன் தாஸ் கூட்டணி விக்கெட் சரியாமல் தடுத்து நிதானமாக பேட் செய்தனர். 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் மட்டுமே வங்கதேசம் சேர்த்தது.

பாகிஸ்தான் vs வங்கதேசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மந்தமான ரன் சேர்ப்பு

10 ஓவர்கள் முதல் 20 ஓவர்கள் வரை லிட்டன் தாஸ், மெஹமத்துல்லா பவுண்டரிகள் அடித்தும், சிக்ஸர்கள் விளாசியும் வேகமாக ரன்களைச் சேர்த்தனர். 20 ஓவர்கள் முடிவில் வங்கேதச அணி 100 ரன்களை எட்டியது. அரைசதத்தை நெருங்கிய லிட்டன் தாஸ் 45 ரன்னில், இப்திகார் அகமது வீசிய 21-வது ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்துவெளியேறினார். 4வது விக்கெட்டுக்கு இருவரும் 79 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்துவந்த தவ்ஹித் ஹிர்தாய், மெஹமத்துல்லாவுடன் சேர்ந்தார். 58 பந்துகளில் அரைசதம் அடித்த மெஹமத்துல்லா நீண்டநேரம் நிலைக்கவில்லை.

20 ஓவர்கள் முதல் 30வது ஓவர்கள் வரை நடுப்பகுதியில் பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர்கள், வேகப்பந்துவீச்சாளர்கள் வங்கதேச பேட்டர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்ததால், ரன் சேர்க்க திணறினர். இதனால் இந்த 10 ஓவர்களில் 30 ரன்கள் மட்டுமே வங்கதேசம் சேர்த்தது.

மெஹமத்துல்லா 56 ரன்கள் சேர்த்தநிலையில், அப்ரிடி வீசிய 30வது ஓவரில் கிளீன் போல்டாகி வெளியேறினார். அடுத்த ஓவரில் ஹிர்தாய் 7 ரன்னில் உசாமா மிர் பந்துவீச்சில் இப்திகார் அகமதுவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் சென்றார்.

பாகிஸ்தான் vs வங்கதேசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நம்பிக்கையளித்த ஜோடி

7-வது விக்கெட்டுக்கு மெஹதி ஹசன், சஹிபுல் ஹசன் இருவரும் ஓரளவு நிலைத்து நின்று ரன்களைச் சேர்த்தனர். அனுபவ வீரர் சஹிபுல் ஹசன் 43 ரன்கள் சேர்த்தபோது, ஹாரிஸ் ராஃப் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

இதன்பின் வங்கதேச சரிவு தொடங்கியது. 185 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்த வங்கதேசம் அடுத்த 19 ரன்களில் மீதமிருந்த 3 விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. மெஹதி ஹசன் 25 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். டெய்லென்டர்கள் தஸ்கின் அகமது(6), முஸ்தபிசுர்(3) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். 45.1 ஓவர்களில் வங்கதேச அணி 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பாகிஸ்தான் vs வங்கதேசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

74 ரன்களுக்கு 7 விக்கெட்

வங்கதேச அணியைப் பொறுத்தவரை 130 ரன்கள் வரை 3 விக்கெட்டுகளை இழந்து ஓரளவுக்கு ஆடி வந்தது. ஆனால், அடுத்த 74 ரன்களுக்குள் மீதமிருந்த 7 விக்கெட்டுகளையும் இழந்தது.

வங்கதேச அணி பவர்ப்ளே ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை இழந்தது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஏமாற்றியதால், சுமை முழுவதும் நடுவரிசை பேட்டர்கள் மீது விழுந்ததால், ஸ்கோரை கட்டி எழுப்புவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.

அதிலும் 10 முதல் 20 ஓவர்கள் வரை வேகமாக ரன்கள் சேர்க்கப்பட்டால், அந்த வேகம் அடுத்தடுத்த ஓவர்களுக்கு தொடராவதால் ரன்ரேட் மந்தமாகியது.

அப்ரிடி அதிவேக 100 விக்கெட்

பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷாகீன் அப்பிரிடி முதல் விக்கெட்டை வீழ்த்தியபோது, ஒருநாள் போட்டியில் வேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார்.

பாகிஸ்தான் தரப்பில் அப்ரிடி, முகமது வாசிம் தலா 3 விக்கெட்டுகளைச் சாய்த்தனர், ஹாரிஸ் ராஃப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பாகிஸ்தான் vs வங்கதேசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

4 பேர் மட்டுமே இரட்டை இலக்கம்

நடுவரிசையில் சஹிப்புல் ஹசன், மெஹமத்துல்லா, மட்டும் தாக்குப்பிடித்து விளையாடாமல் இருந்தால், வங்கதேசம் ஸ்கோர் 150 ரன்களுக்குள் சுருண்டிருக்கும். வங்கதேச அணியில் லிட்டன் தாஸ்(45), மெஹமத்துல்லா(56), சஹிப்புல் ஹசன்(43) ,மிராஜ்(25) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன்கள் சேர்த்தனர், மற்ற அனைத்து பேட்டர்களும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து, வங்கதேசத்தில் புதைகுழியில் தள்ளினர்.

இவுங்க மட்டும்தான் இதைச் செய்யல..!

இந்த உலகக் கோப்பைத் தொடரில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்காத ஒரே அணி வங்கதேசம்தான். ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகூட 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துவிட்டனர். இந்த போட்டியி்ல் வங்கதேச அணி மட்டும் 24 ஓவர்களில் டாட் பந்துகளை விட்டுள்ளது. அதாவது 148 பந்துகளில் ரன் ஏதும் சேர்க்கவில்லை.

பாடம் எடுத்த ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் அணி நேற்றைய ஆட்டத்தில் ஒருநாள் போட்டி எப்படி விளையாட வேண்டும் என்று பாடம் நடத்துவதுபோல் விளையாடி அசத்தினர். ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து, ஒரு ரன், 2 ரன்கள் சேர்த்து, மோசமான பந்துகளை மட்டும் பவுண்டரி அடித்து, ஒருநாள் ஆட்டத்தை விளையாடுவதற்கான இலக்கணப்படி ஆடினர். ஆனால் ஆப்கானிஸ்தான் அணிக்கு முன்பே சர்வதேச அறிமுகத்தைப் பெற்ற வங்கதேசத்தின் ஆட்டம் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.

உலகக் கோப்பைத் தொடரில் பவர்ப்ளே ஓவர்களில் குறைந்தபட்சம் 2 விக்கெட்டுகளை எப்படியாவது வங்கதேசம் இழந்துவிடுகிறது. இவையெல்லாம் வங்கதேச அணியின் செயல்பாட்டை மேலும் மோசமாக்குகிறது.

வலுவான தொடக்கம்

205 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. பக்கர் ஜமான், அப்துல்லா ஷபீக் இருவரும் அருமையான தொடக்கத்தை அளித்தனர். வங்கதேச பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்துவீசி 3 ஓவர்கள்வரை நெருக்கடி அளித்தனர். அதன்பின் பக்கர் ஜமான், ஷபீர் இருவரும் வழக்கமான ஆட்டத்தைக் கையாண்டு பவுண்டரி, சிக்ஸர்கள் அடித்து ரன்களைச் சேர்த்தனர்.

பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி, 52 ரன்கள் சேர்த்து வலுவாக இருந்தது. முஸ்தபிசுர் ரஹ்மான் வீசிய 13-வது ஓவரில் அப்துல்லா ஷபீக் 3 பவுண்டரிகள் என 12 ரன்கள் சேர்த்தார்.

பாகிஸ்தான் vs வங்கதேசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அரைசதம் அடித்த ஜோடி

18-வது ஓவர்கள் முடிவில் பக்கர் ஜமான், ஷபீக் இருவரும் அரைசதம் அடித்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினர். 20ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 124 ரன்கள் சேர்த்திருந்தது. ஓவருக்கு சராசரியாக 6 ரன்ரேட்டில் பாகிஸ்தான் பயணித்தது.

மெஹதி ஹசன் வீசிய 21-வது ஓவரில் அப்துல்லா ஷகீப் கால்காப்பில் வாங்கி 68 ரன்னில் பெவிலியன் திரும்பினார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 128 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்துவந்த கேப்டன் பாபர் ஆசம், பக்கர் ஜமானுடன் சேர்ந்தார். பாபர் ஆசம் நிதானமாக பேட் செய்த பக்கர் ஜமான் அதிரடியாக ஆடி சிக்ஸர், பவுண்டரிகளை விளாசினார்.

வலுசேர்த்த பக்கர் ஜமான் வருகை

மெஹதி ஹசன் வீசிய 25-வது ஓவரில், பாபர் ஆசம் 9 ரன்னில் மெஹமுதுல்லாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சதத்தை நோக்கி நகர்ந்த பக்கர் ஜமான் 81 ரன்களில்(74 பந்துகள்,7சிக்ஸர், 3பவுண்டரி) மெஹதி ஹசன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். காயத்திலிருந்து மீண்டுவந்த பக்கர் ஜமான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஃபார்முக்கு வந்திருப்பது அந்த அணிக்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.

ரிஸ்வான், இப்திகார் அகமது ஜோடி அணியை வெற்றி நோக்கி நகர்த்தினர். முஸ்தபிசுர் வீசிய 29-து ஓவரில் ரிஸ்வான் 3 பவுண்டரிகள் அடித்து ரன்ரேட்டை வேகப்படுத்தினார். 30ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் சேர்த்தது.

பாகிஸ்தான் vs வங்கதேசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

4வது முறையாக 100 பந்துகள் எஞ்சியிருக்கும் நிலையில் வெற்றி

பாகிஸ்தான் அணி 31.2 ஓவர்களில் 200 ரன்களை எட்டி, பாகிஸ்தான் எளிதாக வெற்றி பெற்றது. ரிஸ்வான் 26 ரன்களிலும், இப்திகார் 17 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 32.3 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

பாகிஸ்தான் அணி உலகக் கோப்பை தொடரில் 4வது முறையாக 100 பந்துகள் மீதமிருக்கையில் வெற்றியைச் சுவைத்துள்ளது. பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சிறப்பாகச் செயல்பட்டு பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.

திரிசங்கு நிலையில் பாகிஸ்தான்

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 6 போட்டிகளில் 3 வெற்றி, 3 தோல்வி என 6 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கிறது. இருப்பினும் பாகிஸ்தான் அணியின் நிகர ரன்ரேட் இன்னும் மைனசில்தான்(-0.024) இருக்கிறது. அடுத்துவரும் இரு போட்டிகளையும் அதிக ரன்கள், அல்லது விக்கெட் வித்தியாசத்தில் வென்றால்தான் பாகிஸ்தான் ரன்ரேட் உயரும், நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான கடைசி இடத்தையாவது பிடிக்க முடியும். இப்போதுள்ள சூழலில் பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பு திரிசங்கு நிலையில்தான் இருக்கிறது.

நாளை நடக்கும் நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டத்தில் கிடைக்கும் முடிவின் மூலம் பல ஊகங்களுக்கு பதில் கிடைக்கும். நாக்அவுட் சுற்றில் எந்தெந்த அணிகளுக்கு வாய்ப்புக் கிடைக்கலாம் என்ற ப்ளூபிரின்ட் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. இந்த ஆட்டத்தில் கிடைக்கும் முடிவும் ஒரு வகையில் பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பையும் முடிவு செய்யும் என்பதால், அந்த அணி பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கிறது.

பாகிஸ்தான் vs வங்கதேசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதேநேரம், வங்கதேச அணி 7 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, 6 தோல்விளை அடைந்தும் இன்னும் 9-வது இடத்தில்தான் இருக்கிறது. ஆனால், இங்கிலாந்து அணி 6 போட்டிகளில் 5 தோல்விகள் அடைந்தும், கடைசி இடத்துக்கு சரிந்துவிட்டது. வங்கதேச அணியின் நாக்அவுட் சுற்றுக் கனவு ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது இனிமேல் மீதமுள்ள 2 ஆட்டங்களும் ஒரு முறைக்காகவே விளையாடும்.

காயத்திலிருந்து மீண்டுவந்து 81 ரன்கள் சேர்த்த பாகிஸ்தான் பேட்டர் பக்கர் ஜமானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

https://www.bbc.com/tamil/articles/cneve1yg7nlo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த‌ உல‌க‌ கோப்பையில் ப‌டு கேவ‌ல‌மாய் விளையாடின‌ அணி எது என்றால் அது வ‌ங்கிளாதேஸ் அணி

 

ப‌ழைய‌ அனுப‌வ வீர‌ர்க‌ள் இருந்தும் ப‌டு சுத‌ப்ப‌ல் விளையாட்டு.......

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 30/10/2023 at 17:16, nedukkalapoovan said:

சொறீலங்காவை சேசப் பண்ணி ஆப்கானிஸ்தான் தோற்கடித்தது மட்டுமன்றி.. ஆல் அவுட் செய்துள்ளது. இதை விட ஒரு கிரிக்கெட் கேவலம்.. சொறீலங்காவுக்கு அமையாது. 

 

இங்கிலாந்து இலங்கையை விட மோசமாக விளையாடி உள்ளதே. 

பிறந்து வளர்ந்த நாட்டின் மீது இவ்வளவு வெறுப்பு ஆகாது. 

பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே!

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, நியாயம் said:

இங்கிலாந்து இலங்கையை விட மோசமாக விளையாடி உள்ளதே. 

பிறந்து வளர்ந்த நாட்டின் மீது இவ்வளவு வெறுப்பு ஆகாது. 

பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே!

பெற்ற தாயோடு..  சொறீலங்காவை ஒப்பிடுவது மகா தவறு. சொந்த நாட்டுக்குள் வாழ்ந்த சகோதர மொழி பேசி சகோதர்கள் போல் வாழ்ந்த மக்களையே கலவரங்களாலும்.. இராணுவத்தை ஏவியும்...குண்டு வீசியும்... கொன்றொழித்த... கொலைகார நாட்டை தாயுடன் ஒப்பிடக் கூடாது. 

இங்கிலாந்தை விட மோசமான தோல்வி சொறீலங்காவினது. 

Edited by nedukkalapoovan
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, பையன்26 said:

இல‌ங்கை வீர‌ர்க‌ள் விட்ட‌ பிழைய‌ தொட‌ர்ந்து ப‌ல‌ ம‌ச்சில் விடுகின‌ம்

அவுஸ்ரேலியா கூட‌ முத‌லாவ‌து விக்கேட்டுக்கு 100ர‌ன்ஸ்சுக்கு மேல் அடிச்சின‌ம் சிறு நேர‌ம் கழித்து 220ர‌ன்ச்சுக்கை எல்லாரும் அவுட்

நேற்று கூடுத‌ல் ர‌ன்ஸ் அடிச்சு இருக்க‌னும் ஆனால் அப்கானிஸ்தான் ப‌ந்து வீச்சு மிக‌ சிற‌ப்பு அது தான் 241ர‌ன்ஸ்சுக்கை இல‌ங்கை வீர‌ர்க‌ள் எல்லாரும் அவுட் 

இன்று தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து போட்டி இலங்கை ஆப்கானிஸ்தான் விளையாடிய புனே மைதானத்தில் நடைபெற உள்ளது, இந்த மைதானம் அதிக ஓட்டங்களை குவிக்க கூடிய மைதானம் என கூறப்படுகிறது, பந்து அதிகமாக மேலெழுந்து வரக்கூடிய மைதானமாக இருந்தாலும் குறைந்த பட்சம் 300 ஓட்டங்களையாவது அணிகள் குவிக்கலாம்.

மைதானத்தில் ஈரலிப்பு பெரிதாக இருக்காது என கூறப்படுவதால் நாணய சுழற்சி முக்கியம் இல்லை என கூறப்பட்டாலும் தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடவே விரும்பும் என்பதால் தென்னாபிரிக்க அணிக்கு நாணய சுழற்சி முக்கியம்.

இலங்கை அணி ஆரம்பத்தில் விக்கெட் இழப்பில்லாமல் ஆட முயற்சிப்பதால் பந்து உறுதியாக இருக்கும் போது மட்டையை நோக்கி வரும் பந்துகளை பெரிதாக பயன்படுத்தாமல் விட்டு விட்டார்களோ என எண்ண தோன்றுகிறது.

டிமுத் கருணாரட்னே மிகவும் தற்காபு ஆட்டகாரர் இவர் தற்போது தறிகெட்டு (out of form) ஆடிவரும் குசால் பெரேராவிற்கு மாற்றீடாக வரவழைக்கப்பட்டவர் ஆரம்ப பவர் பிளே ஓவர்களில் இவரால் அதிகமான அளுத்தத்தினை சொந்த அணிக்கு உருவாக்குவதுடன் எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு இவரது ஆட்டம் புத்துணர்ச்சியினை ஏற்படுத்தலாம்.

அடுத்து இலங்கை இந்திய அணியுடன் மும்பாயில் மோத உள்ளது அதிக ஓட்டங்களை குவிக்கக்கூடிய மைதானம் என கூறப்படுகிறது, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சிறிதளவு ஒத்துழைக்கும் மைதானம், இந்த மைதானத்தில் இலங்கை வீரர் சனத் ஜெயசூரியா அதிகளவான ஓட்டங்களை குவித்தவர்.

சிறிய மைதானம், இலங்கை பந்து வீச்சாளர்களுக்கு சோதனைமிக்க போட்டியாக இருக்கலாம் இந்த போட்டி.

இலஙகை அணியில் பல இடது கை ஆட்டக்காரர்கள் என்பதே இந்திய அணிக்கெதிரான ஒரு சிறிய சாதகம் (இந்திய அணியில் வலது கை ஓப் ஸ்பின்னர்கள் தற்போது இல்லை என கருதுகிறேன்).

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, vasee said:

இன்று தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து போட்டி இலங்கை ஆப்கானிஸ்தான் விளையாடிய புனே மைதானத்தில் நடைபெற உள்ளது, இந்த மைதானம் அதிக ஓட்டங்களை குவிக்க கூடிய மைதானம் என கூறப்படுகிறது, பந்து அதிகமாக மேலெழுந்து வரக்கூடிய மைதானமாக இருந்தாலும் குறைந்த பட்சம் 300 ஓட்டங்களையாவது அணிகள் குவிக்கலாம்.

மைதானத்தில் ஈரலிப்பு பெரிதாக இருக்காது என கூறப்படுவதால் நாணய சுழற்சி முக்கியம் இல்லை என கூறப்பட்டாலும் தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடவே விரும்பும் என்பதால் தென்னாபிரிக்க அணிக்கு நாணய சுழற்சி முக்கியம்.

இலங்கை அணி ஆரம்பத்தில் விக்கெட் இழப்பில்லாமல் ஆட முயற்சிப்பதால் பந்து உறுதியாக இருக்கும் போது மட்டையை நோக்கி வரும் பந்துகளை பெரிதாக பயன்படுத்தாமல் விட்டு விட்டார்களோ என எண்ண தோன்றுகிறது.

டிமுத் கருணாரட்னே மிகவும் தற்காபு ஆட்டகாரர் இவர் தற்போது தறிகெட்டு (out of form) ஆடிவரும் குசால் பெரேராவிற்கு மாற்றீடாக வரவழைக்கப்பட்டவர் ஆரம்ப பவர் பிளே ஓவர்களில் இவரால் அதிகமான அளுத்தத்தினை சொந்த அணிக்கு உருவாக்குவதுடன் எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு இவரது ஆட்டம் புத்துணர்ச்சியினை ஏற்படுத்தலாம்.

அடுத்து இலங்கை இந்திய அணியுடன் மும்பாயில் மோத உள்ளது அதிக ஓட்டங்களை குவிக்கக்கூடிய மைதானம் என கூறப்படுகிறது, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சிறிதளவு ஒத்துழைக்கும் மைதானம், இந்த மைதானத்தில் இலங்கை வீரர் சனத் ஜெயசூரியா அதிகளவான ஓட்டங்களை குவித்தவர்.

சிறிய மைதானம், இலங்கை பந்து வீச்சாளர்களுக்கு சோதனைமிக்க போட்டியாக இருக்கலாம் இந்த போட்டி.

இலஙகை அணியில் பல இடது கை ஆட்டக்காரர்கள் என்பதே இந்திய அணிக்கெதிரான ஒரு சிறிய சாதகம் (இந்திய அணியில் வலது கை ஓப் ஸ்பின்னர்கள் தற்போது இல்லை என கருதுகிறேன்).

இப்ப‌ இருக்கும் இல‌ங்கை அணி வீர‌ர்க‌ள் பாட‌சாலை மாண‌வ‌ர்க‌ள் போல்
20 . அல்ல‌து 17 வ‌ருட‌த்தை முன்னேக்கி பார்த்தால் இல‌ங்கை வீர‌ர்க‌ளின் உய‌ர‌ம் திற‌மையால் தான் ம‌ற்ற‌ அணிக‌ளை மிர‌ட்டும் அள‌வுக்கு விளையாடினார்க‌ள்

உண்மைய‌ சொல்ல‌னும் என்றால் இப்போது இல‌ங்கை அணியில் ந‌ம்பிக்கை ந‌ச்ச‌த்திர‌ம் என்று யாரையும் சொல்ல‌ முடியாது

13வ‌ருட‌த்துக்கு முத‌ல் ச‌ர்வ‌தேச‌ கிரிக்கேட்டில் அறிமுக‌மான‌ அப்கானிஸ்தான் அணி எந்த‌ நிலையில் நிக்குது

இல‌ங்கை கிரிக்கேட்டை முற்றிலுமாய் அழித்த‌து அர‌சிய‌ல்

பூனே மைதானம் 2010க‌ளில் க‌ட்ட‌ ப‌ட்ட‌ மைதான‌ம் அப்போது ஜ‌பிஎல்ல‌ பூனே அணியும் இருந்த‌து இர‌ண்டு வ‌ருட‌ம் க‌ழித்து அந்த‌ அணி தாங்க‌ள் ஜ‌பிஎல்ல‌ இருக்க‌ விரும்ப‌ வில்லை என்று அணிய‌ க‌லைத்தார்க‌ள்

ஆர‌ம்ப‌த்தில் 20ஓவ‌ர்க‌ளில் உந்த‌ மைதான‌த்தில் 150ர‌ன்ஸ் அடிப்ப‌து சிர‌ம‌ம்

பின்னைய‌ கால‌ங்க‌ளில் உந்த‌ மைதான‌த்தில் த‌னிய‌ ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ள் ந‌ட‌த்தின‌ம்

இந்தியாவில் அழ‌கான‌ கிரிக்கேட் மைதான‌ம் என்றால் உந்த‌ பூனே மைதான‌ம் தான்

இப்ப‌ உந்த‌ மைதான‌த்தில் பெரிய‌ ஸ்கோர் அடிக்க‌லாம்
350. 400 ஓட்ட‌ங்கள் எடுக்க‌லாம்

ஆனால் வெத‌ர் மாற மாற‌ பிச்சின் த‌ன்மையும் மாறும்

இந்தியா அணியால் உந்த‌ மைதான‌த்தில் 350ர‌ன்ஸ் அடிக்க‌ முடியும் எந்த‌ அணியா இருந்தாலும்

சில‌து முன்ன‌னி விக்கேட் போனால் பெரிய ஸ்கோர‌ எதிர் பார்க்க‌ ஏலாது

நாளையான் விளையாட்டு விறுவிறுப்பாய் இருக்கும்............ 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 31/10/2023 at 15:42, ஈழப்பிரியன் said:

பையா அடுத்தடுத்த போட்டிகளில் அவுஸ் தோற்றால் என்ன நடக்கும்?

அவுஸ் அரை இறுதிக்கு வர முடியாதில்ல.

நியுசிலாந் தொட‌ர்ந்து மூன்று தோல்வி

 

நான‌ய‌த்தில் வென்று ப‌ந்து வீச்சை தெரிவு செய்து அதிக‌ ஓட்ட‌த்தை விட்டு கொடுத்து விட்டு

 

தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் இது ஏதோ ஜ‌ந்து நாள் ரெஸ் விளையாட்டு போல் விளையாடினார்க‌ள்🙈

 

மீத‌ம் உள்ள‌ ம‌ச் நியுசிலாந் தோத்தா பாக்கி சிமி பின‌லுக்கு போக‌ கூடும் 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

'பேஸ்பால்' உத்தியால் நியூசிலாந்தை சாய்த்து இந்தியாவை முந்திய தென் ஆப்ரிக்கா

தென் ஆப்ரிக்கா vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

1 நவம்பர் 2023, 15:42 GMT
புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர்

உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முக்கியமான லீக் ஆட்டம் புனேயில் நடந்து வருகிறது.

தெ.ஆ. கேப்டன் பவுமா ஏமாற்றம்

டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். தென் ஆப்ரிக்கா சார்பில் குயின்டன் டீ காக், பவுமா ஆட்டத்தைத் தொடங்கினர். கேப்டன் பவுமா காயத்திலிருந்து மீண்டு வந்தாலும், இந்த போட்டியிலும் ஏமாற்றம் அளித்தார். பவுமா 24 ரன்கள் சேர்த்த நிலையில் டிரன்ட் போல்ட் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். பவர்ப்ளே முடிவில் தென் ஆப்ரிக்கா ஒரு விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் சேர்த்தது.

டூசென், டி காக் நிதான ஆட்டம்

2வது விக்கெட்டுக்கு வேன்டர் டூ சென், டி காக்குடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாவே பேட் செய்தனர், 11 ஓவர்கள் முதல் 15-வது ஓவர்கள் வரை தென் ஆப்ரிக்க அணியிடம் இருந்து ஒரு பவுண்டரிகூட வரவில்லை.

டிம் சவுதி வீசிய 16-வது ஓவரில் டி காக் ஒரு சிக்ஸர், பவுண்டரி என 12 ரன்கள் விளாசி ரன்ரேட்டை உயர்த்தினார். 20 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு தென் ஆப்ரிக்கா 94 ரன்கள் சேர்த்தது.

முதல் பேட்டர் டி காக்

குயின்டன் டி காக் களத்தில் நங்கூரமிடுவது எப்போதும் எதிரணிக்கு ஆபத்தாக முடியும் என்பதை நியூசிலாந்து உணரவில்லை. ஏனென்றால், தொடக்கத்தில் 39 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்த டி காக், தனது ரன் சேர்க்கும் கியரை மாற்றி, அடுத்த 23 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்து 62 பந்துகளில் அரைசதம் அடித்தார். தென் ஆப்ரிக்க அணியும் 21-வது ஓவர்களில் 100ரன்களை எட்டியது. டூ சென்னும் 61 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

குயின்டன் டி காக் அரைசதம் அடித்தபோது, உலகக் கோப்பைத் தொடரில் 500 ரன்களை எட்டிய முதல் தென் ஆப்பிரிக்க பேட்டர் என்ற பெருமையைப் பெற்றார். இதற்கு முன் எந்த தென் ஆப்பிரி்க்க பேட்டரும் ஒரு உலகக் கோப்பைத் தொடரில் 500 ரன்களை எட்டியதும், கடந்ததும் இல்லை. தென் ஆப்ரிக்க அணி 30 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் சேர்த்தது.

தென் ஆப்ரிக்கா vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

கேட்சுகளை தவறவிட்ட நியூசிலாந்து

டி காக், டூசென் இருவரும் அரைசதம் அடித்து களத்தில் நங்கூரமிட்டனர். 30 ஓவர்களுக்குப்பின் இருவரும் ரன் சேர்க்கும் வேகத்தை அதிகப்படுத்தி, ஓவருக்கு சராசரியாக 5 ரன்கள் வீதம் குறிப்பாக ஓவருக்கு ஒரு பவுண்டரி விளாசினர்.

டூசென் 68 ரன்கள் சேர்த்திருந்தபோது, நீசம் பந்துவீச்சில் டூசென் தூக்கி அடித்தார். ஆனால், அந்தப் பந்தை கேட்ச் பிடிக்காமல் நீசம் தவறவிட்டார். இது மட்டுமல்லாமல், டிரன்ட் போல்டும் டூசெனுக்கு ஒரு கேட்சை தவறவிட்டார். நீசம் வீசிய 36-வது ஓவரில் மட்டும் டூசெனுக்கு இரு கேட்ச் வாய்ப்புகளை நியூசிலாந்து வீர்ரகள் தவறவிட்டனர். இதற்கு தண்டனையும் கடைசியில் கிடைத்தது.

புதிய சாதனை படைத்த டி காக்

சதத்தை நெருங்கிய டி காக், லாங்-ஆன் திசையில் சிக்ஸர் விளாசி உலகக் கோப்பைத் தொடரில் 4வது சதத்தை பதிவு செய்தார். இதுவரை உலகக் கோப்பையில் 4 சதங்களை ரோஹித் சர்மா, குமாரா சங்கக்கரா இருவர் மட்டுமே அடித்துள்ளனர், அவர்களுடன் தற்போது டீ காக்கும் இணைந்தார். ஒரு உலகக் கோப்பையில் 4வது சதம் அடித்த முதல் தென் ஆப்ரிக்க பேட்டரும் டி காக் மட்டுமே.

37-வது ஓவர்கள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி 200ரன்களைக் கடந்தது. சவுதி வீசிய 40-வது ஓவரில் டி காக் 114 ரன்களில்(116 பந்து, 10பவுண்டரி, 3சிக்ஸர்) பிலிப்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு டூசென், டி காக் இருவரும் சேர்ந்து, 200 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

 
தென் ஆப்ரிக்கா vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கையுடன் இணைந்த தெ.ஆப்ரிக்கா

40 ஓவர்கள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி 2 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் சேர்த்து வலுவாக இருந்தது. 3வது விக்கெட்டுக்கு கிளாசன் களமிறங்கி, டூசெனுடன் சேர்ந்தார். சதத்தை நெருங்கிய டூசென் நீசம் ஓவரில் பவுண்டரி அடித்து, 101 பந்துகளில் உலகக் கோப்பைத் தொடரில் 2வது சதத்தை பதிவு செய்தார்.

ஒரு உலகக் கோப்பைத் தொடரில் அதிகமான சதங்களை அடித்த அணி என்ற வகையில் இலங்கை அணி 8 (2015)சதங்களுடன் முதலிடத்தில் இருந்தது. தற்போது, தென் ஆப்ரிக்காவும் இணைந்துவிட்டது. அதன்பின் மில்லர், டூசென் இருவரும் நியூசிலாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கினர்.

நீஷம் வீசிய 44வது ஓவரில் டூசென் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 20 ரன்கள் சேர்த்தார். பிலிப்ஸ் வீசிய 46-வது ஓவரில் மில்லர் 2 சிக்ஸர் உள்ளிட்ட 18 ரன்கள் சேர்ததார். அதிரடியாக ஆடிய டூசென் 117 பந்துகளில் 134 ரன்கள் சேர்த்த நிலையில்(5 சிக்ஸர், 9பவுண்டரி) சவுதி பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். மில்லர், டூசென் கூட்டணி 3-வது விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

தென் ஆப்ரிக்கா vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

மில்லர் “தி கில்லர்”

ஆனால், மில்லர் தனது அதிரடி ஆட்டத்தை குறைக்கவில்லை. போல்ட் வீசிய 49-வது ஓவரில் ஒரு சிக்ஸர், பவுண்டரி என 14 ரன்கள் சேர்த்தார். நீசம் வீசிய கடைசி ஓவரில் மில்லர் ஒரு பவுண்டரி, சிக்ஸர் விளாசி 29 பந்துகளில் அரைசதம் அடித்து 53 ரன்களில்(4சிஸ்கர், 2பவுண்டரி) ஆட்டமிழந்தார். ஒரு பந்தைச் சந்தித்த மார்க்ரம் கடைசிப் பந்தில் சிக்ஸர் விளாசினார்.

50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் சேர்த்தது. கிளாசன் 15 ரன்களிலும், மார்க்ரம் 6 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

 
தென் ஆப்ரிக்கா vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

டி காக், டூசென் ஆதிக்கம்

தென் ஆப்பிரிக்க ஆட்டத்தின் பெரும்பங்கை டூசென், டிகாக் எடுத்துக்கொண்டு பெரிய ஸ்கோருக்கு அடித்தளமிட்டு ஆதிக்கம் செலுத்தினர். கடைசி நேரத்தில் மில்லர் அடித்த அதிரடி அரைசதம் 300ரன்களுக்கு மேல் செல்ல உதவியது. கடைசி 5 ஓவர்களில் மட்டும் தென் ஆப்ரிக்க அணி 67 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் நீசம் 18 ரன்களை வழங்கி தென் ஆப்ரிக்கா 350 ரன்களைக் கடக்க உதவினார்.

இப்படியா பீல்டிங் செய்வது?

நியூசிலாந்து அணியின் பீல்டிங் இன்று கொடூரமாக இருந்தது. முக்கியமான கேட்சுகளை தவறவிட்டனர். போல்ட், நீசம் இருவரும் தலா ஒரு கேட்சை டூசெனுக்கு தவறவிட்டதற்கான பலனை அனுபவித்தனர். இந்த உலகக் கோப்பையில் மட்டும் 37 கேட்சுகளை நியூசிலாந்து பிடிக்க முற்பட்டு அதில் 17 கேட்சுகளை பிடிக்காமல் கோட்டைவிட்டுள்ளனர்.

புள்ளிப்பட்டியலில் உயர்ந்த இடத்தில் இருக்கும் நியூசிலாந்து பீல்டிங், தெருவில் விளையாடும் சிறுவர்கள் போன்று பீல்டிங் செய்து, கோட்டைவிடுவது அரையிறுதிக்கு செல்வதிலேயே ஆபத்தே ஏற்படுத்தும். பீல்டிங்கில் உயர்ந்த தரம், கட்டுக்கோப்பு, கேட்ச் பிடிப்பதில் கவனம் ஆகியவை நியூசிலாந்திடம் குறைவாக இருக்கிறது.

200 ரன்களை வழங்கிய 3 வள்ளல்கள்

நியூசிலாந்து அணியின் பந்துவீச்சும் இன்று பெரிய அளவுக்கு தென் ஆப்ரிக்க பேட்டர்களுக்கு தொந்தரவு கொடுக்கம் வகையில் இல்லை. சராசரிக்கும் குறைவான தரத்துடனே பந்துவீச்சு இருந்தது என்று கிரிக்கெட் வர்ணனையாளர்கள் தெரிவித்தனர். டிம் சவுதி, நீஷம், சான்ட்னர், பிலிப்ஸ் ஆகியோரின் பந்துவீச்சு பல் இல்லாததாக இருந்தது.

ஹென்றி காயத்தால் பாதியிலேயே வெளியேறியது நியூசிலாந்துக்கு பின்னடைவாக இருந்தது. சவுதி, நீஷம், பிலிப்ஸ், ரன்களை வாரி வழங்கினர், இந்த 3 பந்துவீச்சாளர்கள் சேர்ந்து 200 ரன்களை வழங்கியுள்ளனர் என்றால் பந்துவீச்சு எப்படி என்பது தெரிந்துவிட்டது.

தென் ஆப்ரிக்கா vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

நியூசிலாந்துக்கு தொடக்கமே அதிர்ச்சி

358 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இமாலய இலக்குடன் நியூசிலாந்து அணி சேஸிங்கில் களமிறங்கியது. கான்வே, யங் ஆட்டத்தைத் தொடங்கினர்.

மிகப்பெரிய ஸ்கோர் அடித்த துணிச்சல், தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சில் தெரிந்தது. துல்லியமாக, லைன் லென்த்தில் யான்செனும், இங்கிடியும் வீசி நியூசிலாந்து பேட்டர்களை திணறவிட்டனர்.

யான்சென் வீசிய 3வது ஓவரில் 2வது ஸ்லிப்பில் நின்றிருந்த மார்க்கிரத்திடம் கேட்ச் கொடுத்து, கான்வே 2 ரன்னில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு களமிறங்கி ரச்சின் ரவீந்திராவும், யான்சென் வேகப்பந்துவீச்சுக்கு திணறினார், பல பந்துகல் பீட்டன் ஆகின. இங்கிடியும் தனது பங்கிற்கு லைன் லென்த்தில் நெருக்கடியாக வீசவே நியூசிலாந்து பேட்டர்கள் ரன் சேர்க்கமுடியாமல் தடுமாறினர்.

இங்கிடி வீசிய 8-வது ஓவரில் யங் 2 பவுண்டரிகள் விளாசி 10 ரன்களைச் சேர்த்து நெருக்கடியில் இருந்து தப்பிக்க முயன்றார். ஆனால், யான்சென் வீசி 9-வது ஓவரின் கடைசிப் பந்தில் ஃபைன் லெக் திசையில் நின்றிருந்த கோட்ஸியிடம் கேட்ச் கொடுத்து, ரவீந்திரா 9 ரன்னில் பெவிலியின் திரும்பினார்.

பவர்ப்ளேயின் 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு நியூசிலாந்து அணி 51 ரன்கள் சேர்த்து தடுமாறியது.

தென் ஆப்ரிக்கா vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

100 ரன்களில் 6 விக்கெட் இழந்து தத்தளிப்பு

கோட்ஸி தனது முதல் ஓவராக 11வது ஓவரை வீச வந்தார். 2வது பந்தில் பவுண்டரி அடித்த யங், 3வது பந்தில், விக்கெட் கீப்பர் டீ காக்கிடம் கேட்ச கொடுத்து 33 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ரபாடா தனது முதல் ஓவரை மெய்டனாக வீசி நியூசிலாந்துக்கு மேலும் தொந்தரவு கொடுத்தார். டேரல் மிட்ஷெல், டாம் லாதம் இருவரும் பொறுமையாக பேட் செய்தனர். ரபாடா தான் வீசிய 2வது ஓவரிலும் கட்டுக்கோப்பாக பந்துவீசி ஒரு ரன் மட்டுமே கொடுத்து நியூசிலாந்து பேட்டர்களை தண்ணி குடிக்க வைத்தார், கோட்ஸியும் தன்னுடைய ஓவர்களில் லைன் லென்த்தில் வீசியதால் நியூசிலாந்து பேட்டர்கள் நினைத்தவாறு ரன்கள் கிடைக்கவில்லை.

ரன் நெருக்கடி அதிகரித்ததால், நியூசிலாந்து பேட்டர்கள் பொறுமையிழந்தனர். ரபாடா வீசிய 16-வது ஓவரில் மகாராஜிடம் கேட்ச் கொடுத்து லாதம் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். 15 பந்துகளைச் சந்தித்த லாதம் 4 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

கோட்ஸீ வீசிய 18-வது ஓவரில் மிட்ஷெல் 2 பவுண்டரிகளை விளாசினாலும், அதன்பின் நீண்டநேரம் நிலைக்கவில்லை. கேசவ் மகராஜ் முதல் ஓவரை வீச வந்தார். அவர் வீசிய 3வது பந்தில் மில்லரிடம் கேட்ச் கொடுத்து மிட்ஷெல் 24 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இ ழப்புக்கு 91 ரனஅகள் சேர்த்து தோல்வியின் பிடியில் இருந்தது. 10ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நியூசிலாந்து அடுத்த 10 ஓவர்களில் மேலும் 3 விக்கெட்டுகளை 40 ரன்களுக்குள் இழந்து மோசமாகியது.

பிலிப்ஸ், சான்ட்னர் அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கேசவ் மகாராஜ் வீசிய 22-வது ஓவரில் க்ளீன் போல்டாகி சான்ட்னர் 7 ரன்னில் வெளியேறினார். அடுத்துவந்த சவுதி, பிலிப்ஸுடன் இணைந்தார்.

சவுதியும் நீண்டநேரம் நிலைக்கவில்லை. யான்சென் வீசிய 26-வது ஓவரில் கால்காப்பில் வாங்கி, சவுதி 7 ரன்னில் ஆட்டமிழந்தார். யான்சென் மெய்டன் விக்கெட்டை வீழ்த்தினார். 109 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து தோல்வியின் பிடியில் இருந்தது.

தென் ஆப்ரிக்கா vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

நியூசிலாந்து வீரர்கள் போராட்டம்

8-வது விக்கெட்டுக்கு வந்த ஜிம்மி நீஷம் 8 பந்துகளைச் சந்தித்தும் ரன் ஏதும் சேர்க்காமல் மகாராஜ் ஓவரில் கிளீன் போல்டாகினார். 56 ரன்கள் வரை 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்திருந்த நியூசிலாந்து, அடுத்த 66 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அதிலும் 90 ரன்களில் இருந்து 112 ரன்களுக்குள் மட்டும் 22 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து அணி.

நியூசிலாந்து அணி மிகப்பெரிய தோல்வியிலிருந்து தப்பிக்க போராடி வந்தது. ஒருவேளை மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் தோற்கும்பட்சத்தில், நிகர ரன்ரேட் கடுமையாகப் பாதிக்கும். அடுத்துவரும் பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிரான ஆட்டங்கள் சவாலானதாக மாறிவிடும். இதனால் நியூசிலாந்து குறைந்த ரன்களில் ஆட்டமிழப்பதைத் தடுக்க போராடியது.

 
தென் ஆப்ரிக்கா vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு தரப்பாக முடிந்த ஆட்டம்

9-வது விக்கெட்டுக்கு டிரன்ட் போல்ட், பிலிப்ஸ் கூட்டணி ரன் சேர்க்கப் போராடியது. பிலிப்ஸ் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்தாலும், நியூசிலாந்தின் ரன் பசிக்கு அவை போதவில்லை. மகராஜ் வீசிய 31வது ஓவரில் மில்லரிடம் கேட்ச் கொடுத்து 9 ரன்னில் போல்ட் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி தோல்வியின் விளிம்புக்குத் தள்ளப்பட்டது.

பிலிப்ஸ் மட்டும் தனிஒருவனாக நின்று போராடினார். மகராஜ் வீசிய 35-வது ஓவரில் இரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசி 46 பந்துகளில் அரைசதம் அடித்தார். கோட்ஸி வீசிய 36-வது ஓவரிலும் சிக்ஸர் விளாசிய பிலிப்ஸ் அடுத்த பந்தில் ரபாடாவிடம் கேட்ச் கொடுத்து 60 ரன்னில் ஆட்டமிழந்தார்.

நியூசிலாந்து அணி 35.3 ஓவர்களில் 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென் ஆப்ரிக்க அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

தென் ஆப்ரிக்கத் தரப்பில் கேசவ் மகராஜ் 4 விக்கெட்டுகளையும், யான்சென் 3 விக்கெட்டுகளையும், கோட்ஸி 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

நியூசிலாந்து அணியின் பேட்டர்கள் யாரும் பெரிதாக எந்த பார்ட்னர்ஷிப்பும் அமைத்து விளையாடதது தோல்விக்கு முக்கியக் காரணமாகும். எந்த வீரர்களும் 50 ரன்கள்கூட பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை. அதிகபட்ச பார்ட்னர்ஷிப் 37 ரன்கள்தான். 100 ரன்களில் இருந்து 67 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை நியூசிலாந்து இழந்தது.

மிகப்பெரிய ஸ்கோர், தென் ஆப்ரிக்காவின் நெருக்கடி தரும் பந்துவீச்சு, கட்டுக்கோப்பான பீல்டிங், ரன்ரேட் நெருக்கடி, வீரர்கள் காயம் ஆகியவை நியூசிலாந்து அணியை தோல்வி குழியில் தள்ளியது.

தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து ஆகிய இரு அணிகளும் சமவலிமை வாய்ந்தவை, இரு அணிகளுக்கும் இடையிலான ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்படி ஒருதரப்பாக ஆட்டம் மாறும் என ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை.

ஏன் முதலில் பந்துவீச்சு?

டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். புனே ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமானது, பெரிய ஸ்கோரை அடித்து தென் ஆப்ரிக்காவுக்கு நெருக்கடி அளிக்கும் முடிவை தவிர்த்துவிட்டு, பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது வியப்பாக இருந்தது.

உலகக் கோப்பைத் தொடரில் தென் ஆப்ரிக்க அணி “பேஸ் பால்” உத்தியைக் கையில் எடுத்து, முதலில் பேட் செய்தாலே எதிரணியை நிலைகுலையச் செய்யும் ஸ்கோரை எடுத்து வெற்றியை ஏறக்குறைய உறுதி செய்யும் பாணியை பின்பற்றுகிறது. இதைத் தெரிந்தும், நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது, தெரிந்தே புதைக்குழிக்குள் விழுவது போன்றுதான்.

ஏனென்றால், இரவு 8 மணிக்கு மேல், பனிப்பொழிவு இருக்கும், 16 டிகிரியாக குளிர் இருக்கும் என்று கூறப்படுகிறது. பனிப்பொழிவு இருக்கும்போது, ஆடுகளத்தின் தன்மை நிச்சயம் மாறக்கூடும், பந்துவீச்சுக்கு சாதகமாக மாறி, ஸ்விங் ஆகும்.

இந்தியாவை முந்தி தென் ஆப்ரிக்கா முதலிடம்

இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்ரிக்க அணி 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதே 12 புள்ளிகள் பெற்றிருந்தாலும் ரன் ரேட்டில் சற்று பின்தங்கியிருப்பதால் இந்திய அணி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. மூன்றாவது, நான்காவது இடங்களில் முறையே ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் இருக்கின்றன.

நிகர ரன்ரேட் செம அடி - நியூசிலாந்துக்கு சிக்கல்

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக நியூசிலாந்து அணி 190 ரன்களில் தோற்றதால், தொடர்ந்து 3வது தோல்வியை அந்த அணிச் சந்தித்தது. அது மட்டுமல்லாமல், நிகர ரன்ரேட்டும் 0.484 ஆகக் குறைந்தது. இதனால் அடுத்துவரும் பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் கட்டாயம் வெல்ல வேண்டிய நிலைக்கு நியூசிலாந்து தள்ளப்பட்டுள்ளது. அடுத்துவரும் இரு ஆட்டங்களில் வென்றால்தான் 12 புள்ளிகளோடு நிகர ரன்ரேட்டையும் உயர்த்தி அரையிறுதிக்குள் செல்ல முடியும்.

இதில் ஏதாவது ஒரு போட்டியில் தோற்றால்கூட 10 புள்ளிகளோடு கடைசி இடத்துக்காக மல்லுக்கட்ட வேண்டியதிருக்கும். ஆதலால், இரு வெற்றிகளோடு பயணித்தால், அரையிறுதிக்குள் சொகுசாக நுழையலாம் நியூசிலாந்து. இந்தத் தோல்வியால் நியூசிலாந்து அணியின் அரையிறுதி வாய்ப்பு என்பது தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக மாறிவிட்டது.

https://www.bbc.com/tamil/articles/cn0d00gzdq0o

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, பையன்26 said:

இப்ப‌ இருக்கும் இல‌ங்கை அணி வீர‌ர்க‌ள் பாட‌சாலை மாண‌வ‌ர்க‌ள் போல்
20 . அல்ல‌து 17 வ‌ருட‌த்தை முன்னேக்கி பார்த்தால் இல‌ங்கை வீர‌ர்க‌ளின் உய‌ர‌ம் திற‌மையால் தான் ம‌ற்ற‌ அணிக‌ளை மிர‌ட்டும் அள‌வுக்கு விளையாடினார்க‌ள்

உண்மைய‌ சொல்ல‌னும் என்றால் இப்போது இல‌ங்கை அணியில் ந‌ம்பிக்கை ந‌ச்ச‌த்திர‌ம் என்று யாரையும் சொல்ல‌ முடியாது

13வ‌ருட‌த்துக்கு முத‌ல் ச‌ர்வ‌தேச‌ கிரிக்கேட்டில் அறிமுக‌மான‌ அப்கானிஸ்தான் அணி எந்த‌ நிலையில் நிக்குது

இல‌ங்கை கிரிக்கேட்டை முற்றிலுமாய் அழித்த‌து அர‌சிய‌ல்

பூனே மைதானம் 2010க‌ளில் க‌ட்ட‌ ப‌ட்ட‌ மைதான‌ம் அப்போது ஜ‌பிஎல்ல‌ பூனே அணியும் இருந்த‌து இர‌ண்டு வ‌ருட‌ம் க‌ழித்து அந்த‌ அணி தாங்க‌ள் ஜ‌பிஎல்ல‌ இருக்க‌ விரும்ப‌ வில்லை என்று அணிய‌ க‌லைத்தார்க‌ள்

ஆர‌ம்ப‌த்தில் 20ஓவ‌ர்க‌ளில் உந்த‌ மைதான‌த்தில் 150ர‌ன்ஸ் அடிப்ப‌து சிர‌ம‌ம்

பின்னைய‌ கால‌ங்க‌ளில் உந்த‌ மைதான‌த்தில் த‌னிய‌ ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ள் ந‌ட‌த்தின‌ம்

இந்தியாவில் அழ‌கான‌ கிரிக்கேட் மைதான‌ம் என்றால் உந்த‌ பூனே மைதான‌ம் தான்

இப்ப‌ உந்த‌ மைதான‌த்தில் பெரிய‌ ஸ்கோர் அடிக்க‌லாம்
350. 400 ஓட்ட‌ங்கள் எடுக்க‌லாம்

ஆனால் வெத‌ர் மாற மாற‌ பிச்சின் த‌ன்மையும் மாறும்

இந்தியா அணியால் உந்த‌ மைதான‌த்தில் 350ர‌ன்ஸ் அடிக்க‌ முடியும் எந்த‌ அணியா இருந்தாலும்

சில‌து முன்ன‌னி விக்கேட் போனால் பெரிய ஸ்கோர‌ எதிர் பார்க்க‌ ஏலாது

நாளையான் விளையாட்டு விறுவிறுப்பாய் இருக்கும்............ 

இன்று இலங்கை, இந்திய போட்டி மும்பாயில் நடைபெறுவதால், மைதான ஈரலிப்பு இருக்காது என கருதுகிறேன்.

இலங்கை இடது கை வேகப்பந்துவீச்சாளர் மதுசங்க இந்திய வலது கை நட்சத்திர ஆட்டக்காரர்களுக்கு சவால் ஏற்படுத்தலாம், பொதுவாக இந்திய அணியின் ரோகித், கோலி போன்ற நட்சத்திர ஆட்டக்காரர்கள் விக்கெட்டிற்கு மேலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீசும் போது அவர்கள் உருவாக்கும் கோணங்களினால் மிகுந்த சிரமத்தினை புதிய பந்துகளில் எதிர்கொள்வார்கள், இலங்கை அணி தாக்குதல் பாணியிலான களத்தடுப்பினையும் அதற்கு பயன்படுத்த வேண்டும்(2 slip fielders).




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.