Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் தமிழர் காணிகளை விழுங்க ‘ஜே’ வலயம் உருவாக்கம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 1 person and text that says 'Zulker Nayeem நான் ஏறாவரைச் சேர்ந்தவன் ஏறாவரை அண்மித்த குடியிருப்பு தமிழ்க் கிராமத்தை 75 வீதம் நல்ல விலை கொடுத்து வாங்கி விட்டோம். சவுக்கடி தமிழ்க்கிராமம் அதில் 80 வீதம் எங்களால் வாங்கப்பட்டு தளவாய் தமிழ்க் கிராமம் 70 % ஆன காணிகள் எங்களால் வாங்கப்பட்டு விட்டது நாலாம் குறிச்சி தமிழ்க் கிராமம் இரு கோயில்களையும் சில. வீடுகளையும் தவிர மற்ற அனைத்துக் காணிகளும் வாங்கப்பட்டு விட்டது தற்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பின்னாலுள்ள காணிகள் வாங்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் பத்து வருடங்களில் இந்தத் தமிழ்க்கீராமங்கள் அனைத்தும் முஸ்லிம் ஊர்களாக அபிவிருத்தி செய்யப் படும் உன்னால் முடிந்தால் தடுத்துப்பார்'

ஒரு பக்கம் சிங்களவர், மறு  பக்கம் முஸ்லீம் என்று... 
தமிழ் நிலம் பறி போய்க் கொண்டுள்ளது. 

எனக்கும் லண்டன் இல் உள்ள நண்பர் ஒருவர் அனுப்பி இருந்தார். இருந்தாலும் உண்மை நிலவரம் என்பது சரியாக தெரியவில்லை. அங்குள்ள நண்பர் விசாரித்துவிட்டு தகவல் தருவதாக கூறி இருக்கிறார். இருந்தாலும் இந்த கும்பலை நம்ப முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Cruso said:

எனக்கும் லண்டன் இல் உள்ள நண்பர் ஒருவர் அனுப்பி இருந்தார். இருந்தாலும் உண்மை நிலவரம் என்பது சரியாக தெரியவில்லை. அங்குள்ள நண்பர் விசாரித்துவிட்டு தகவல் தருவதாக கூறி இருக்கிறார். இருந்தாலும் இந்த கும்பலை நம்ப முடியாது. 

கிழக்கில்… மிக வேகமாக தமிழர் நிலங்கள், முஸ்லீம்களிடம் பறிபோய்க் கொண்டுள்ளது
ஏன்பதை… பலரும் சொல்கிறார்கள்.
எப்போ… அம்பாறையில் ஒரு சிங்களவரை தமிழர் சார்ப்பாக நிறுத்தியமையும்,
கிழக்கு மாகாணாண முதலமைச்சராக முஸ்லீமை நிறுத்தியமையும்…
அவர்களுக்கு அவல் கிடைத்தமாதிரி போய் விட்டது.
தமிழ் அரசியல்வாதிகளின் அறிவற்ற செயல்பாடுகள், அவர்களுக்கு பச்சை கொடி காட்டிய, மாதிரி போய் விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kapithan said:

புலம்பெயர்ஸ் களிடம் ஆத்திரம் இருக்கும் அளவுக்கு புத்தி இல்லை. 

தங்களையும் சேர்த்துத்தானே சொல்கிறீர்கள்? அப்படியென்றால்; சரியாகத்தான் இருக்கும்! 

1 hour ago, Cruso said:

இருந்தாலும் உண்மை நிலவரம் என்பது சரியாக தெரியவில்லை.

பாதி உண்மையாக இருக்கலாம். ஒரு முஸ்லீம் தமிழ் கலவரத்தை உருவாக்கி தமிழரை அந்தப்பிரதேசத்தில் இருந்து விரட்டியடிக்கும் உபாயமாகவும் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, satan said:

தங்களையும் சேர்த்துத்தானே சொல்கிறீர்கள்? அப்படியென்றால்; சரியாகத்தான் இருக்கும்! 

நானும் பங்குதாரிதான். அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எனக்கு இருக்கிறது. 

ஆனால் கம்பு சுத்தும் புலம்பெயர்ஸ் எல்லோரும் அனேகமாக இப்போது இலங்கையின் இரட்டைக் குடியுரிமைக்கு விண்ணப்பித்திருபார்கள். 

எல்லோருக்கும் முதலில் சிங்களத்தின் காலில் விழுந்து கூழைக் கும்பிடு போடுவது இவர்களாகத்தான் இருப்பர். 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்+
8 minutes ago, satan said:

பாதி உண்மையாக இருக்கலாம். ஒரு முஸ்லீம் தமிழ் கலவரத்தை உருவாக்கி தமிழரை அந்தப்பிரதேசத்தில் இருந்து விரட்டியடிக்கும் உபாயமாகவும் இருக்கலாம்.

1990 ஆம் ஆண்டு சூனிலை இருந்து 1991 இறுதிவரை முசிலீம் காடையர் சிங்கள படைத்துறையோட சேர்ந்து செஞ்ச அநியாயங்கள் கொஞ்ச நஞ்சமில்லை. அப்பப்பப்பா!... தமிழரை ஏதோ மிருகங்களை வேட்டை ஆடுற மாதிரி கொன்டிருக்கிறாங்கள், வகைதொகையின்றி!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

ஆனால் கம்பு சுத்தும் புலம்பெயர்ஸ் எல்லோரும் அனேகமாக இப்போது இலங்கையின் இரட்டைக் குடியுரிமைக்கு விண்ணப்பித்திருபார்கள். 

எல்லோருக்கும் முதலில் சிங்களத்தின் காலில் விழுந்து கூழைக் கும்பிடு போடுவது இவர்களாகத்தான் இருப்பர். 

அப்படி என்ன நல்லது இலங்கையில் நடந்து விட்டது என்று இப்படி குதிக்கிறீர்கள்? அதெப்படி அவர்கள் ஊழைக்கும்பிடு போடுவார்கள் என்று உறுதியாக சொல்கிறீர்கள்? உப்பிடி எத்தனை சலசலப்பைக்கண்டவர்கள் தமிழர். தன்னைபோல்த்தான் மற்றவர்களும் என்று நினைத்து கருத்தெழுதக்கூடாது.

சுகந்திர தினத்துக்கு முதல் தீர்வு என்றார். இனிமேற்தானாம் சட்டம் வரையப்போறாராம். தீர்வுச்சட்டம் வரைந்தாயிற்று நடைமுறைப்படுத்துவதுதான் பாக்கி என்றார் ஒருவர், இனிமேற்தான் கூடி ஆராய்ந்து சட்டம் வரையப்போகிறேன் என்றதும் சத்தத்தை காணவில்லை. உப்பிடி எத்தனை ஒப்பந்தம், வாக்குறுதி, சர்வதேசத்துக்கே தண்ணி காட்டியவர்கள் அவர்கள், ரொம்ப குதிக்காதீங்கோ.

7 hours ago, நன்னிச் சோழன் said:

1990 ஆம் ஆண்டு சூனிலை இருந்து 1991 இறுதிவரை முசிலீம் காடையர் சிங்கள படைத்துறையோட சேர்ந்து செஞ்ச அநியாயங்கள் கொஞ்ச நஞ்சமில்லை. அப்பப்பப்பா!... தமிழரை ஏதோ மிருகங்களை வேட்டை ஆடுற மாதிரி கொன்டிருக்கிறாங்கள், வகைதொகையின்றி!

அதுதான் சொல்லிவிட்டார்களே, சிங்களத்துக்கும் தங்களுக்கும் இடையில்  99% உடன்பாடுண்டாம், அவ்வப்போது  செய்தும் காட்டுகிறார்கள். அவர்களின் முறை வந்து வேண்டிக்கட்டுக்கேக்கை அமைதியாய் இருந்து பாப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, satan said:

அப்படி என்ன நல்லது இலங்கையில் நடந்து விட்டது என்று இப்படி குதிக்கிறீர்கள்? அதெப்படி அவர்கள் ஊழைக்கும்பிடு போடுவார்கள் என்று உறுதியாக சொல்கிறீர்கள்? உப்பிடி எத்தனை சலசலப்பைக்கண்டவர்கள் தமிழர். தன்னைபோல்த்தான் மற்றவர்களும் என்று நினைத்து கருத்தெழுதக்கூடாது.

சுகந்திர தினத்துக்கு முதல் தீர்வு என்றார். இனிமேற்தானாம் சட்டம் வரையப்போறாராம். தீர்வுச்சட்டம் வரைந்தாயிற்று நடைமுறைப்படுத்துவதுதான் பாக்கி என்றார் ஒருவர், இனிமேற்தான் கூடி ஆராய்ந்து சட்டம் வரையப்போகிறேன் என்றதும் சத்தத்தை காணவில்லை. உப்பிடி எத்தனை ஒப்பந்தம், வாக்குறுதி, சர்வதேசத்துக்கே தண்ணி காட்டியவர்கள் அவர்கள், ரொம்ப குதிக்காதீங்கோ.

அங்கே நன்மை நடப்பதாக எங்குமே நான் கூறவில்லை. 

இனப்பிரச்சனைக்கான அடிப்படையே  இல்லை எனும் நிலைக்கு சிங்களம் நாட்டை நகர்த்திக்கொண்டு செல்கிறது.  

ஆகக்கூடியது இன்னும் 10 வருடங்களில் நீங்களும் நானும் தமிழ்த் தேசியம்  பேசுவதற்கான தேவை அங்கே அங்கே இல்லாமல் செய்யப்பட்டிருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kapithan said:

ஆனால் கம்பு சுத்தும் புலம்பெயர்ஸ் எல்லோரும் அனேகமாக இப்போது இலங்கையின் இரட்டைக் குடியுரிமைக்கு விண்ணப்பித்திருபார்கள். 

எல்லோருக்கும் முதலில் சிங்களத்தின் காலில் விழுந்து கூழைக் கும்பிடு போடுவது இவர்களாகத்தான் இருப்பர்.

11 hours ago, Kapithan said:

அங்கே நன்மை நடப்பதாக எங்குமே நான் கூறவில்லை. 

இனப்பிரச்சனைக்கான அடிப்படையே  இல்லை எனும் நிலைக்கு சிங்களம் நாட்டை நகர்த்திக்கொண்டு செல்கிறது.  

ஆகக்கூடியது இன்னும் 10 வருடங்களில் நீங்களும் நானும் தமிழ்த் தேசியம்  பேசுவதற்கான தேவை அங்கே அங்கே இல்லாமல் செய்யப்பட்டிருக்கும். 

உங்களின் இந்த இரண்டு கருத்துகளுக்குமிடையில் எந்த தொடர்பும்  இருப்பதாக தெரியவில்லை. இலங்கையில்  தமிழரே இல்லாமல் போனால்தான் இனப்பிரச்சனை இல்லாமல் போகும். அப்படி ஒரு நிலை வரும்போது ஏன் தமிழர் இலங்கைக்கு  போக வேண்டும்? எதுக்கு  புலம்பெயர்ஸ், ஏன் ஊழைக்கும்பிடு போடவேண்டும்? நீங்கள் உங்களை யார்  என மறந்து எகத்தாளமாக கருத்தெழுதுகிறேன் என நினைக்கிறீர்கள். உப்பிடி பலபேர் எழுதி யதார்த்தத்தை உணர்ந்து தங்களை மாற்றிக்கொண்டுள்ளார்கள். ஆகவே இங்கு நீங்கள் எதற்காக கருத்தெழுதுகிறீர்கள், அதன் தேவையென்ன என்பதை உணர்ந்து எழுதுங்கள்! சும்மா சீண்டல் வித்தையெல்லாம் வேண்டாம். ஏதோ தமிழரை அடக்கிவிட்ட மிதப்பில் இருக்கும் இனவாதிகளின் மனநிலையில் இருப்பதுபோல் தெரிகிறது நீங்கள் இடும் கருத்துக்கள். அப்படியானால்;  இது உங்களுக்கு  தகுதியான களமல்ல என நான் நினைக்கிறன். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

1) உங்களின் இந்த இரண்டு கருத்துகளுக்குமிடையில் எந்த தொடர்பும்  இருப்பதாக தெரியவில்லை.

2) இலங்கையில்  தமிழரே இல்லாமல் போனால்தான் இனப்பிரச்சனை இல்லாமல் போகும். அப்படி ஒரு நிலை வரும்போது ஏன் தமிழர் இலங்கைக்கு  போக வேண்டும்? எதுக்கு  புலம்பெயர்ஸ், ஏன் ஊழைக்கும்பிடு போடவேண்டும்? நீங்கள் உங்களை யார்  என மறந்து எகத்தாளமாக கருத்தெழுதுகிறேன் என நினைக்கிறீர்கள். உப்பிடி பலபேர் எழுதி யதார்த்தத்தை உணர்ந்து தங்களை மாற்றிக்கொண்டுள்ளார்கள். ஆகவே இங்கு நீங்கள் எதற்காக கருத்தெழுதுகிறீர்கள், அதன் தேவையென்ன என்பதை உணர்ந்து எழுதுங்கள்! சும்மா சீண்டல் வித்தையெல்லாம் வேண்டாம். ஏதோ தமிழரை அடக்கிவிட்ட மிதப்பில் இருக்கும் இனவாதிகளின் மனநிலையில் இருப்பதுபோல் தெரிகிறது நீங்கள் இடும் கருத்துக்கள். அப்படியானால்;  இது உங்களுக்கு  தகுதியான களமல்ல என நான் நினைக்கிறன். 

1) இன்றைய இலங்கையின் யதார்த்த நிலையைப் புரிந்துகொள்ளாமல் சகட்டு மேனிக்கு எழுதப்படும் கருத்துக்களை வாசிக்கும்போது ஏற்படும் கோபத்தின் வெளிப்பாடுதான் புலம்பெயர்ஸ் போலித் தேசியவாதிகள்  நோக்கிய  எனது  கேலிகள். 

2) ""இலங்கையில் தமிழரே இல்லாமல் போனால்தான் அங்கே இனப்பிரச்சனை என்பது இல்லாமல் போகும்"" எனும் தங்களின் கூற்று பிழையானது.

குடிப்பரம்பல்தான் (நிலம்-தாயகம்+மொழி) ஒரு இனத்தின் தேசியத்திற்கான அடிப்படை. அதற்கான தேவையை இல்லாமல் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது.

இலங்கைக்கு அண்மையில் போய் வந்த கொஞ்சம் ஆளமாகச் சிந்திக்கக் கூடிய ஆட்களுடன் கதைத்துப் பாருங்கள் அங்கே ஏற்பட்டுவரும் மாற்றங்களைப் புரிந்துகொள்வீர்கள். 

பெளத்த சமயக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அந்த மாற்றங்களை எல்லோரும் உணரலாம். 

முன்னர், இலங்கையில் போய் இயிருப்பதாக உணர்ந்தவர்கள் தற்போது, சிங்கள, பெளத்த நாடொன்றுக்கு போயிருப்பதாக உணர்கிறார்கள். 

செயற்பாடற்ற எமது  வெற்றுக் கூச்சல்கள் எந்தப் பலனையும் எமக்குப் பெற்றுத் தரா. 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தமிழ் சிறி said:

கிழக்கில்… மிக வேகமாக தமிழர் நிலங்கள், முஸ்லீம்களிடம் பறிபோய்க் கொண்டுள்ளது
ஏன்பதை… பலரும் சொல்கிறார்கள்.
எப்போ… அம்பாறையில் ஒரு சிங்களவரை தமிழர் சார்ப்பாக நிறுத்தியமையும்,
கிழக்கு மாகாணாண முதலமைச்சராக முஸ்லீமை நிறுத்தியமையும்…
அவர்களுக்கு அவல் கிடைத்தமாதிரி போய் விட்டது.
தமிழ் அரசியல்வாதிகளின் அறிவற்ற செயல்பாடுகள், அவர்களுக்கு பச்சை கொடி காட்டிய, மாதிரி போய் விட்டது.

ஹிஸ்புல்லா அப்பவே சொன்னான் நான் ஏறாவூரில் இந்து கோவிலையே உடைத்து அங்கு கடை தொகுதியை உருவாக்கினேன் என்று. எனவே அவர்கள் பகிரங்கமாகவே இதை செய்கிறார்கள். 

மாகாண சபையில் தமிழர் அவர்களுடன் இணைந்திருக்காவிடடாள், முஸ்லிம்கள் சிங்களவர்களுடன் இணைந்து முதலமைச்சர் பதவியை பெற்று இன்னும் அதிகமான கேடடை தமிழர்களுக்கு இளைத்திருப்பார்கள்.

முஸ்லீம் அரசியல் வாதிகள் தமிழர் தீர்வை தடுப்பதும், சிங்களவனுக்கு தமிழனுக்கும் பிரச்சினை தொடர்வதையும் விரும்புவது மேட்க்கூறிய காரணங்களுக்காகவும்தான். அந்த இனத்திட்கு பல காரணப்பெயர்கள் கொடுக்கப்பட்ட்தும் இதனால்தான். 

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Cruso said:

Classic 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

"இலங்கையில் தமிழரே இல்லாமல் போனால்தான் அங்கே இனப்பிரச்சனை என்பது இல்லாமல் போகும்""

நீங்கள்  கூறும் காரணங்களெல்லாம் தமிழர் விரும்பி ஏற்றுக்கொள்வதல்ல. அதிகாரத்தினாலும் பலவந்தத்தினாலும் ஏற்படுத்தப்படுபவை. இது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இதற்கு புலம்பெயர்ஸ்  ஊழைக்கும்பிடு போடவும் தேவையில்லை, இரட்டைக்குடியுரிமைக்கு விண்ணப்பிக்க போவதுமில்லை.  இதை வெறுத்தே அவர்கள் புலம் பெயர்ந்தார்கள். அவர்கள் இப்போ  இருக்குமிடத்தை விட  இலங்கை சொர்க்க பூமியாகப்போவதுமில்லை. அவர்கள் எதை செய்தாலும், எல்லாம்  பொய் கூறி, பிச்சைப்பாத்திரமேந்தி சாதிப்பவை. இதற்காக ஒருநாள் நாம் இப்போ அடைந்த நிலையை அவர்கள் அடைய மாட்டார்கள் என்று கூறவும் முடியாது. கட்ட ஒரு காலமென்றால் இடிக்கவும் ஒரு காலம் வரும். இத்தனை வசதி படைத்த நாட்டை விட்டு நாள்தோறும் சிங்களவர்கள் வெளிப்படையாகவும் மோசடியாகவும் வெளியேறிக்கொண்டிருக்கிறார்களே, அது ஏன்?

1 hour ago, Kapithan said:

இன்றைய இலங்கையின் யதார்த்த நிலையைப் புரிந்துகொள்ளாமல் சகட்டு மேனிக்கு எழுதப்படும் கருத்துக்களை வாசிக்கும்போது ஏற்படும் கோபத்தின் வெளிப்பாடுதான் புலம்பெயர்ஸ் போலித் தேசியவாதிகள்  நோக்கிய  எனது  கேலிகள். 

இங்கு எல்லோரும் தங்களது இயலாமையையும் ஆதரவற்ற நிலையையும் அங்கலாய்ப்புகளையுமே எழுதுகிறோம். அவை உங்களுக்கு  கோபத்தை ஏற்படுத்துகிறதென்றால் வாசிக்காதீர்கள், அல்லது உங்களால் என்ன முடியும் என்று செய்து காட்டுங்கள். உங்களின் இந்தசீண்டல்கள் படுத்துக்கொண்டிருந்து அண்ணாந்து எச்சி உமிழ்வதற்கு ஒப்பானது என்பதை மறந்துவிடுகிறீர்கள் பலதடவை.

பௌத்த சமயக்கொடி இன்று நேற்றல்ல விடுதலைப்போராட்டம் முறியடிக்கப்பட்ட காலத்திலிருந்து தமிழர் தாயகமெங்கும் பறக்கிறது. அது அவர்களின் வெற்றிகொடிகளிலொன்று. அதை தாங்கள் இப்போதான் அவதானித்திருப்பீர்கள் போலுள்ளது. நன்றி வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, satan said:

நீங்கள்  கூறும் காரணங்களெல்லாம் தமிழர் விரும்பி ஏற்றுக்கொள்வதல்ல. அதிகாரத்தினாலும் பலவந்தத்தினாலும் ஏற்படுத்தப்படுபவை. இது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இதற்கு புலம்பெயர்ஸ்  ஊழைக்கும்பிடு போடவும் தேவையில்லை, இரட்டைக்குடியுரிமைக்கு விண்ணப்பிக்க போவதுமில்லை.  இதை வெறுத்தே அவர்கள் புலம் பெயர்ந்தார்கள். அவர்கள் இப்போ  இருக்குமிடத்தை விட  இலங்கை சொர்க்க பூமியாகப்போவதுமில்லை. அவர்கள் எதை செய்தாலும், எல்லாம்  பொய் கூறி, பிச்சைப்பாத்திரமேந்தி சாதிப்பவை. இதற்காக ஒருநாள் நாம் இப்போ அடைந்த நிலையை அவர்கள் அடைய மாட்டார்கள் என்று கூறவும் முடியாது. கட்ட ஒரு காலமென்றால் இடிக்கவும் ஒரு காலம் வரும். இத்தனை வசதி படைத்த நாட்டை விட்டு நாள்தோறும் சிங்களவர்கள் வெளிப்படையாகவும் மோசடியாகவும் வெளியேறிக்கொண்டிருக்கிறார்களே, அது ஏன்?

இங்கு எல்லோரும் தங்களது இயலாமையையும் ஆதரவற்ற நிலையையும் அங்கலாய்ப்புகளையுமே எழுதுகிறோம். அவை உங்களுக்கு  கோபத்தை ஏற்படுத்துகிறதென்றால் வாசிக்காதீர்கள், அல்லது உங்களால் என்ன முடியும் என்று செய்து காட்டுங்கள். உங்களின் இந்தசீண்டல்கள் படுத்துக்கொண்டிருந்து அண்ணாந்து எச்சி உமிழ்வதற்கு ஒப்பானது என்பதை மறந்துவிடுகிறீர்கள் பலதடவை.

பௌத்த சமயக்கொடி இன்று நேற்றல்ல விடுதலைப்போராட்டம் முறியடிக்கப்பட்ட காலத்திலிருந்து தமிழர் தாயகமெங்கும் பறக்கிறது. அது அவர்களின் வெற்றிகொடிகளிலொன்று. அதை தாங்கள் இப்போதான் அவதானித்திருப்பீர்கள் போலுள்ளது. நன்றி வணக்கம்.

நாட்டில் என்ன நடைபெறுகிறது என்பதை அறியாமல், புலம்பெயர்ஸ் போலித் தமிழ்த் தேசியவாதிகள் போடும் வெற்றுக் கூச்சலுக்குக் காது கொடுத்துவிட்டு கோபப்படாமல் எப்படி இருக்க முடியும். 

இலங்கையில் என்ன நடைபெறுகிறது என்பதை அறியாது, எதைக் கூறினாலும் அது வெற்றுக் கூச்சல்தான். 

இலங்கையில் என்ன நடைபெறுகிறது என்பதை அறிந்துகொண்டு அதன்பின்னர் கருத்தெழுதுங்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.