Jump to content

கண்டம் விட்டு கண்டம் பாஞ்சு - T. கோபிசங்கர்


Recommended Posts

கண்டம் விட்டு கண்டம் பாஞ்சு 

O /L எண்ட கண்டம் முடிஞ்சிது எண்ட முதல் அடுத்த கண்டம் தொடங்கீட்டுது. என்ன படிக்கிறதெண்டு தெரியாம A/L க்குப் போய் , ஆர் நல்ல மாஸ்ரர் எண்டு தெரியாம எல்லா கொட்டிலுக்கும் போய் , கடைசீல பிரண்டுக்காக , பாக்கிற சரக்குக்காக எண்டு ரியூசன் மாறி மாறிப் போய் ஒருமாதிரி இந்தக் கண்டத்தையும் முடிச்சிட்டு இருக்க தன்மானம் இருக்கிறவன் தரணி காக்கப் போக அம்மாக்குப் பயந்த நான் இனி என்ன செய்யிறது எண்ட கேள்வி திருப்பியும் வந்திச்சுது. A/L எடுத்தாப் பிறகு வெளிநாட்டுக்கு இல்லாட்டி கொழும்புக்கு ஏதாவது course படிக்கப் பாஸ் எடுத்தோ எடுக்காமலோ தப்பிப் போக வசதி இல்லாத ஆக்களுக்கு கம்பஸ் போறது தான் ஒரே வழி, இல்லாட்டி கடன் வாங்கி கடலால எண்டாலும் கனடா போகோணும். பத்தாம் வகுப்பில “நான் இயக்கத்துக்குப் போயிடுவன்” எண்டு சொல்லி வெருட்டேக்க வெருண்ட அம்மா பன்னிரெண்டுல சுதாரிச்சு “ அங்க போனாத் தெரியும் தானே உடுப்புத் தோயக்கிறதில இருந்து உன்டை வேலை எல்லாம் நீ தான் பாக்கோணும்” எண்டு வீக் பொயின்டில கை வைக்க இனி இந்தப் பருப்பு வேகாது எண்டு தெரிஞ்சுது. தப்ப வேற வழியில்லை எண்ட நிலமை வர படிக்கிறதை கொஞ்சம் கடுமையாக்க வேண்டி இருந்தது.

A/L bio படிக்கிற பிள்ளைகளை பெத்த அம்மாமார் எல்லாரும் மாதிரி என்டை அம்மாவும் இவன் டொக்டராகோணும் எண்டு கனவு காண, cut off எண்ட கண்டம் என்டை கழுத்தை சாடையா இறுக்கிற மாதிரி வந்து இல்லாமல் போக விசயம் பேப்பரில வர முதல் 

நாலு பேர் வீட்டை வந்து வாழ்த்துச் சொன்னாங்கள். வந்த நாலு பேரும் சும்மா வரேல்லை , இயக்கம் “வரட்டாம்” எண்டு கூப்பிடிறமாதிரி நாளைக்கு காலமை மருதம்மா baseக்கு வரட்டாம் எண்டு condition ஓட வந்தாங்கள். 

ஊரெல்லாம் “தம்பி medical faculty போறார்” எண்டு என்னோட சேந்து வீட்டுக்காரர் பீலா காட்ட, என்னோட கம்பஸ் வரப்போற ஒரு சித்தாண்டிப் பெடியனுக்கு இப்பவே சீதனம் குடுத்து புக் பண்ணிக் கொண்டிருந்திச்சினம். நாங்களும் கொஞ்சம் கொஞ்சமா சேட் , ரவுசர் , சப்பாத்து , புத்தகம் , பேனை, ஸரெதஸ்கோப் எண்டு எல்லாம் தேடி சேத்து வைக்கத் தொடங்கினம், கம்பஸ் போனாப்பிறகு தேவை எண்டு. 

அவனவனுக்கு இப்பவே கலியாணம் booking ஆகிக்கொண்ட இருக்க, at least சும்மா ஒண்டையாவது சுழற்றலாம் எண்டால் எதைப் பாக்கிறது எண்டும் தெரியேல்லை . எதைக் கேட்டாலும் அதை அவன் பாக்கிறான் இவன் பாக்கிறான் எண்டாங்கள். ஏற்கனவே எட்டாம் வகுப்பிலயே கலைக்கத்தொடங்கி , அதையே ஒரு வேலையாச் செய்து பத்தாம் வகுப்புக்குள்ள பாக்க நல்லா இருக்கிற பெட்டைகள் எல்லாம் book பண்ணீடுவாங்கள். இதையும் தாண்டி A/L க்கு வாறதுகளில நல்லா இருக்கிறதுகள் ஏன் கஸ்டப்படுவான் எப்பிடியும் ஒரு Doctor மாட்டுவான் எண்டு நம்பிக்கையோட arts , commerce எண்டு திரிய bio படிக்க வாறதுகள் கொஞ்சம் தான். இதுகள் எல்லாம் படிக்கிற காலத்தில பக்கத்தில இருக்கிற பெட்டையையே பாக்காத்துகள் , எங்களை எப்பிடித் தெரியவாறது. 

சரி இப்பதான் enter பண்ணீட்டம் தானே ஏதையாவது பாக்கலாம் எண்டு பாத்தா , அரை குறையா வளந்திருந்த தாடி மீசையை அடியொட்ட வழிச்சு, மொட்டை அடிச்சு ,ரீசேட் , Jeans போடவிடாமப் பண்ணி , பெல்டை் கட்டவிடாமப் பண்ணி, செருப்பு மட்டும் போடப்பண்ணி் சேது சீயான் விக்ரம் மாதிரி மாத்தி விட்டிடுவாங்கள். ஊரெல்லாம் கோமாளி வேலை செய்துகொண்டு ,seniors க்கு அடிமையா ஓடித்திரியிறதால எங்களோட enter பண்ணிறதுகளும் எங்களைக் கவனிக்காது, ரோட்டில போறதும் கவனிக்காது .அதிலேம் எங்களோட கம்பஸ் வாறது எல்லாம் சீனியரை மட்டும் பாத்து சிரிச்சிட்டு நாங்கள் பாத்தா தெரியாத மாதிரியே திரியுங்கள் .

சீனியரான எல்லா அலாவுதீனுக்கும் faculty எண்ட அற்புத விளக்கில ஒவ்வொரு வருசமும் கிடைக்கிற பூதங்கள் தான் juniors . பூதங்கள் நாங்கள் தலைகீழா நிண்டாவது அவங்கள் சொல்லிறதை செய்யோணும். ஆனாலும் உள்ள வந்து ஒரு மாசத்தில நாங்களும் அலாவுதீன் ஆகீடுவம் எண்ட நினைப்பிலயே எல்லா வேலையும் சொல்ல முதலே செய்திடுவம். 

ஆனாலும் அலுப்புத் தந்தவன் தன்டை புத்தகம், பேப்பர் எல்லாம் கூப்பிட்டுத் தருவான், ஆக்களைப் பத்தி அறிமுகம் தருவான், பொருளாதார நிலமை அறிஞ்சு புத்தகம் மலிவா வாங்கித் தருவான், எங்கேயோ பொறுக்கின உடைஞ்ச மண்டையோடும் இன்னும் கொஞ்ச எலும்பும் தருவான் , வேற ஆரும் ஓவரா அலுப்படிச்சாக் காப்பாத்தியும் விடுவான்.

போட்டோ கொப்பி மெசின் toner தேயிற அளவு கைவிடாம நோட்ஸ் எழுதிக் களைச்சுப்போய், உரும்பிராயிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ஓடிக் களைச்சுப்போய், சாமத்தில நடு ground இல கிரிக்கட் pitch இல பிரதட்டை பண்ணிக் களைச்சுப் போய் , நடு ரோட்டில நாவூத்துக்கு எரிச்ச நெருப்பில பத்த வைச்ச சுருட்டை இழுத்து இழுத்துக் களைச்சுப் போய் , நாச்சிமார் கோவில் தேரடி மேடையில சத்தமே இல்லாம ஒரு சங்கீதக் கச்சேரி செய்து களைச்சுப் போய், நல்லூரானுக்கு நாலு பேர் 2nd MB சோதனை பாஸ் ஆகிறதுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலமை ஐஞ்சு மணி பூசைக்கு போய் அரிச்சனை செய்து களைச்சுப்போய், பொம்பிளை புரோக்கராய் போய் இடம் வலம் விசாரிச்சுக் களைச்சுப் போய் , ஐஞ்சு கடைக்குப் போய் அரிசி, பருப்பு, மிளகாய் , சீனி , கோதம்ப மா கிலோ விலை , மூட்டை விலை எண்டு தனித்தனியக் கேட்டு அப்பிடியே மறக்காம விலை வாசி எல்லாம் ஞாபகம் வைச்சு அதை சரியாப் போய்ச் சொல்லிக் களைச்சுப் போய் , வாடைக்கு அறை பாக்கிற வேலை செய்து களைச்சுப் போய் கம்பஸ் எப்ப தொடங்கும் எண்டு wait பண்ணிக் களைச்சே போட்டம்.

கம்பஸ் enter பண்ணீட்டம் ஆனாலும் course தொடங்கேல்லை எண்ட நிலமை வருசக் கணக்கா ஓடிக்கொண்டிருந்தச்சுது. கலியாணம் கட்டினவையைப் பாத்து “ என்ன இன்னும் பிள்ளை வரேல்லையோ “ எண்டு கேக்கிற மாதிரி ஊரில “என்ன தம்பி இன்னும் படிப்புத் தொடங்கேல்லையோ“ எண்டு கேக்கத் தொடங்க சீனியேர்ஸ் மாதிரி இவைக்கும் ஒளிச்சுத் திரிய வேண்டி இருந்திச்சுது. ஆத்தாக் கொடுமைக்கு Cut off வரப் party கேட்டவன் சிலர் ஒரு வருசம் bank இல வேலை தொடங்கி எண்டு உழைக்கும் வர்க்கமாகி கூப்பிட்டு party வேற வைச்சான். 

இப்பிடியெல்லாம் தவண்டு எழும்பி தப்பிப்பிழைச்சு இருக்க கடைசீல கம்பஸ் போற நாளும் வந்துச்சுது. தெம்பு , திமிர், தலைக்கனம் எல்லாம் இறங்கி கடைசீல கம்பஸ்ஸுக்குள்ள காலடி எடுத்த வைக்க யோகர் சுவாமி சொன்ன “யார் நீ ?” எண்ட கேள்வி வந்திச்சுது. 

பத்தாம் மாசம் பத்தாம் திகதி காலமை ஆறு மணிக்கு அம்மா எழுப்பி விட்டா. சீனியேர்ஸ் சொன்னாங்கள் எண்டதால ஏழுமணிக்குப் போய் ஆடியபாதம் வீதி வெள்ளை மாளிகையை நிமிந்து பாத்து , மெய்ப்பட்ட கனவுச் சந்தோசத்தோட காலடி எடுத்து வைக்க, “இது கோயில் மாதிரி விழுந்து கும்பிட்டிட்டு செருப்பைக் கழற்றி கையில எடுத்துக் கொண்டு போ” எண்டு நித்திரை கொள்ளாமல் படிச்சிட்டு அப்பிடியே விடிய எழும்பி நாங்க போக முதலே வந்து நிண்ட சீனியேர்ஸ் சொன்னதையும் செய்தம். உள்ள போனா பிந்திப்பிள்ளைப் பெத்த வீடுகளில மூத்த பிள்ளைக்கும் கடைசிப்பிள்ளைக்கும் உள்ள பத்து வயசு வித்தியாசத்தில இருக்கிற மாதிரி கனபேர் ஊசலாடிற இளமையோட நிண்டிச்சினம். இது வரை காலம் இலவு காத்து இந்த batch சிலயாவது ஏதும் தேறாதா எண்டு சில பாலை வன ராஜாக்கள் கொண்டு வராத ரோஜாக்களோட நிண்டச்சினம். “தம்பி நாங்கள் AL எடுத்துப் பத்து வருசம், பயப்பிடாத உனக்கும் அப்பிடித்தான்” எண்டு ஆசீர் வதிக்கேக்க தான் விளங்கிச்சுது எங்க , ஏன் இளமை துலைஞ்சதெண்டு. சரி இவரின்டை பேரை சொல் எண்டு ஒராள் கேக்க , “சுப்பர் , சுப்பர்” எண்டு தொடங்கி வாய் சூம்பிப் போக , மேசைக்கு மேல ஜூடியும் செல்வவேலும் தலமை தாங்கின ராவணன் படை இல்லாத எதிரியோட முன்னேறித் தாக்க, வராத அழுகையை மூக்கால உறிஞ்சி சமாளிச்ச படி நிண்ட சுதர்சினியையும், வாசுகியையும் சுத்தி நிண்ட பெடியள் விலகிப் போக, சொந்த இடம் கலம்பா இல்லைக் கொழும்பா எண்டு தெரியாம சாருவும் துசியும் நிக்க , திருக்குறள் வகுப்பெடுத்த அகிலனும் பரிமேலழகரின் பொழிப்பைச் சொன்ன பரதனும் முடிக்காமல் பாதியில் விட, ஐயர் உமாசங்கர் அடிச்ச மணிக்கு கன நேரமா குட்டிக் கும்பிட்டுக் கொண்டிருந்த தாமுவும் தர்மியும் சந்தனம் வீபூதி எல்லாருக்கும் குடுக்க, விதானையார் மாதிரி குடும்ப விபரம் கேட்ட குறூப்புக்கு தான் கலியாணம் கட்டப் போறதை சொல்லலாமா எண்டு நவஜீவனும் , ரொகானும் முழிக்க, batch பொம்பிளைப் பிள்ளைகளுக்கு நல்ல தமிழ் படிப்பிச்ச பிரதாபனும் பிரதீபனும் கிளாசை நிப்பாட்டாமல் தொடர , கன கச்சிதமா நடுவரா பட்டிமண்டபத்தில இருந்த அனுவின்டை தீர்பை எதிர்த்து சஞ்சீவனும் சியாமளனும் மேல் முறையீடு செய்ய , கொரிடோரின் நீளம் என்ன எண்டதை குந்திக்கொண்டே அளந்து கொண்டிருந்த தெய்வம் குப்பிற விழ, அடக்கமா குந்தில இருந்து கேள்வி கேட்டுக் கொண்டிருந்த அக்காமாருக்கு முன்னால கட்டின கையோட அப்பாவியா நடிச்சபடி கட்சின்சன் நிக்க , ஏற்கனவே இருந்த சங்கங்களுக்கு உறுப்பினரை சேத்துக் கொண்டு உமாசங்கர் , முகுந்தனோட கொஞ்சப் பேர் திரிய , அதிலேம் ஸ்பெசலா அடுத்த பாராளுமன்றதுக்கு ஆரை உறுப்பினராக்கலாம் எண்டு ஏற்கனவே இருக்கிற உறுப்பினர் கலந்து ஆலோசிக்க, ஒருத்தருமே போடாத ball க்கு தானே கொமன்ரி சொல்லிக் கொண்டு வரதன் தும்புத் தடியால விதம் விதமா shots அடிச்சுக்கொண்டிருக்க, புரோக்கரை வைச்சு சில seniors லவ் proposal செய்ய, “டேய் Dean எடா” எண்ட கத்தல் எல்லா சலசலப்பையும் மொத்தமா நிசப்தமாகியது . எங்களுக்கு அடுத்த கண்டம் தொடங்கிச்சுது. 

பள்ளிக்கூடத்திலேம் கம்பஸிலேம் ஏனோ படிச்சது சோதினையோட மறந்து போக இதுகள் மட்டும் இண்டைக்கும் ஞாபகத்தில். 

பி.கு இது கம்பஸில வாழ்க்கையை அனுபவித்தவர்களுக்கு மட்டும்.

 

Dr. T. கோபிசங்கர்

யாழப்பாணம்

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நடந்த ராக்கிங் அராலி இளசுடனும் சாவக்கச்சேரி பெரிசுடனும் கள்ளு அடித்ததுதான்😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, நிழலி said:

இப்பிடியெல்லாம் தவண்டு எழும்பி தப்பிப்பிழைச்சு இருக்க கடைசீல கம்பஸ் போற நாளும் வந்துச்சுது. தெம்பு , திமிர், தலைக்கனம் எல்லாம் இறங்கி கடைசீல கம்பஸ்ஸுக்குள்ள காலடி எடுத்த வைக்க யோகர் சுவாமி சொன்ன “யார் நீ ?” எண்ட கேள்வி வந்திச்சுது. 

சதாசிவத்தை ஆழமான கண்களால் ஊடுருவி, "யாரடா நீ ?" என்று கேட்டு, "ஒரு பொல்லாப்பும் இல்லை!" என்ற வார்த்தைகளை செல்லப்பா சுவாமிகள் உதிர்த்த கணம், சதாசிவத்தின் மனம் லௌகிக வாழ்க்கையை உதறியதாகச் சொல்லப்படுகின்றது.[2] பின் ஐந்து ஆண்டுகள் அவரிடம் சீடனாக வாழ்ந்த சதாசிவம், செல்லப்பரால் சன்னியாச தீட்சை அளிக்கப்பட்டு அனுப்பப்பட, கொழும்புத்துறையில் ஒரு இலுப்பை மரத்தடியில் அவர் யோகசாதனைகளில் திளைத்ததாகச் சொல்லப்படுகின்றது. செல்லப்பா சுவாமிகள் சமாதியடையச் சில நாள் முன்வரை, யோகர் சுவாமிகள் அவரை மீண்டும் சந்திக்கவில்லை.

https://ta.wikipedia.org/wiki/சிவயோக_சுவாமி

அது யோகர் சுவாமி இல்லை, செல்லப்பர் யோகரை கேட்டது.
டொக்ரருக்கு வாங்கின ராக்கிங்கில இது மறந்திருக்கும் தானே?!

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.