Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படகு நேர்ச்சியில் உயிர்பிழைத்துக் கரைசேர்ந்த புலிகளைப் பிடித்து அடித்துக் காட்டிக்கொடுத்த முசிலீம்கள் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

சூன் 28, 1997 அன்று சாம வேளையில் தமிழர் தலைநகராம் திருமலையின் கடற்பரப்பில் இரு படகுகளில் போராளிகளின் பயணம் நடந்துகொண்டிருந்தது. அப்போது ஆறு போராளிகள் பயணித்துகொண்டிருந்த ஒரு படகு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த கடற்படையினரின் சூட்டிற்கு இலக்காகி உடைந்தது. கடலில் குதித்த போராளிகள் பல மைல்கள் நீந்திக் கரையை அடைந்தனர்.

இவ்வாறு ஆறு போராளிகளும் உயிர் தப்பிக் கரைமீண்ட இடம் திருமலையில் உள்ள இறக்கண்டி என்ற ஊராகும். இது முசிலீம்கள் வாழும் ஊராகும். ஆனால் கரைமீண்டோருக்கு இவ்விடையம் தெரியாது. அந்த விடுதலை வீரர்கள் அருகிலிருக்கும் தமிழரின் ஊரொன்று என எண்ணி இதில் மீண்டனரோ என்னவோ!

புலிவீரர்கள் அவ்வூர் மக்களான சோனகர்களிடம் உதவி கோரினர். அதன்போது, கேட்பது தமிழீழ விடுதலை வீரர்கள் என்பதை அறிந்தவுடன் இனவெறி முற்றிப் போராளிகளை மனிதநேயமற்ற முறையில் கடுமையாக அடித்துத் துன்புறுத்தியதுடன் அவர்களை சிங்களப் படையினரிடம் பிடித்துக்கொடுத்து காட்டிக்கொடுக்கவும் செய்தனர்.

கரைமீண்டவர்களிடம் படைக்கலன்களோ இல்லை புலிகளின் மரபுவழி தற்கொலை ஏந்தனமான குப்பியோ (பிடிபட்டதால் கழற்றப்பட்டு விட்டது) கூட கைவசம் இல்லாததால் சோனகர்களிடமிருந்து தப்பிக்க வழியேதுமின்றி சிங்களப் படையினரிடம் அம்பிட நேர்ந்தது.

கைதான புலிகளை சிங்களப் படையினர் தொடர்ந்து வதை உசாவல் செய்த போது தான் அவர்களில் ஒருவர் கடற்கரும்புலி என்பதும் அவருடைய பெயர் பாலன் என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து போராளிகள் அனைவரும் முறைமையான வதைக்கு உட்படுத்தப்பட்டனர். சித்திரவதை நாட்கணக்கில் நீண்டது. போராளிகளின் உயிர் இன்றோ நாளையோ என ஊசலாடியது. கைதானோரில் இருவர் பெண் போராளிகளுமாவர். பெண்களுக்குச் சிங்களவர் செய்யும் வேதனைகளை வாயால் விரித்திட முடியாது. சொல்ல வேண்டியதில்லை, நீங்களே அறிவீர்கள் அவற்றை. எனவே நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள், என்ன நடந்திருக்குமென!

இந்தச் சோனகர்களின் மனிதநேயமற்ற இச்செயல்களின் விளைவாக இவ்வூரைச் சேர்ந்த, புலிகளைத் தாக்கியதில் தொடர்புடைய, ஒரு இசுலாமிய மதகுருவும் 10 மாணவர்களும் உட்பட 39 முசிலீம்களைப் புலிகள் கைது செய்தனர். கைது செய்ப்பட்டோர் கண்கள் கட்டப்பட்ட நிலையில் கடலால் முல்லையில் உள்ளவொரு இடத்திலுள்ள வீட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கே தடுத்து வைக்கப்பட்டனர்.

சில நாட்கள் கழித்து, தடுப்பிலிருந்தோரில் மதகுருவும் 6 மாணாக்கரும் என எழுவர் சூலை 14, 1997 அன்று விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்டோரிடம் எஞ்சிய 32 பேரையும் விடுவிக்க வேண்டுமெனில் சோனகர்களின் காட்டிக்கொடுப்பால் சிறையில் வதைபட்டு உயிருக்குப் போராடும் தம் வீரர்கள் அறுவரையும் விடுவிக்க வேண்டுமெனப் புலிகள் நிபந்தனை சொல்லி அனுப்பிவிட்டனர். 

விடுவிக்கப்பட்டோர் தாம் நல்ல முறையில் புலிகளால் நடத்தப்பட்டதாக பன்னாட்டு மன்னிப்பு அவையிடம் தெரிவித்ததோடு புலிகளின் நிபந்தனை குறித்தும் அறியத்தந்தனர்.

இந்நிலையில் சூலை 16, 1997 அன்று புலிகள் திறந்த செய்தியாக இவர்கள் கைது செய்யப்பட்டதை அறிவித்ததோடு தம் நிபந்தனையையும் பறைந்தனர், புலிகளின் குரல் வானொலி ஊடாக. அவர்கள் மேலும் தெரிவித்ததாவது, 

"நாம் தடுத்து வைத்துள்ள முஸ்லீம்களை விடுதலை செய்ய வேண்டி பல முஸ்லீம் அரசியல்வாதிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். தமிழ்-முஸ்லீம் "இனங்கள்" இடையே நல்லுறவைப் பேணுமாறு கோருகின்றனர்.

"நாம் முஸ்லீம் மக்களை எமது உடன்பிறப்புகளாக மதிப்பதோடு அவர்களுக்கு எந்த வகையிலும் துன்பம் விளைவிப்பது எமது நோக்கமுமல்ல. இறக்கண்டி நிகழ்வு எமக்கு ஆழ்ந்த கவலையையும் வேதனையையும் அளிக்கிறது.

"விடுதலை என்ற உன்னத இலட்சியத்திற்காக உயிரைக் கொடுத்துப் போராடும் எமது விடுதலை வீரர்களை தாக்கித் துன்புறுத்தியது போதாதென்று பகைவரிடம் காட்டிக் கொடுத்த செயல் கண்டிக்கத்தக்கது.

"இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேலும் நடக்காதவாறு பார்த்துக்கொள்ளும்படி நாம் முஸ்லீம் மக்களை அன்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.

"இராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்ட எமது போராளிகள் விடுவிக்கப்பட்டால் எம்மால் தடுத்து வைக்கப்பட்டுள்ள முஸ்லீம் மக்களை உடனடியாக விடுதலை செய்ய நாம் தயாராகவிருக்கின்றோம்.

"இதற்கு ஆவன செய்யுமாறு முஸ்லீம் அரசியல்வாதிகளைக் கேட்டுக்கொள்கின்றோம்.

"முஸ்லீம் சமூகத்துடன் நல்லுறவு பேண வேண்டுமென்ற நல்லெண்ண நோக்கிலேயே எமது தேசியத் தலைவர், தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு முஸ்லீம் மத குருவையும் ஆறு முஸ்லீம் மாணவர்களையும் விடுதலை செய்தார்."

எவ்வாறெயினும் இறுதிவரை எமது உன்னதமான விடுதலை வீரர்கள் சிங்களச் சிறைகளிலிருந்து விடுதலை செய்யப்படவில்லை. இந்த முசிலீம்களுக்கும் என்ன நடந்ததென்று என்னாலும் அறியமுடியவில்லை.

ஆனால் நாட்கள் செல்லச் செல்ல சிறையில் வதைபட்டுக்கொண்டிருந்த எமது தமிழீழ விடுதலை வீரர்களான புலிவீரர்களின் உயிர்கள் தாம் நேசித்த மக்களையும் தாய் மண்ணையும் விட்டுப் பிரிந்து சென்றன. 

அப்படிப் பிரிந்த உயிரொன்று இனவெறிச் சிங்கள அதிகாரிகளையே தம் தொப்பிகளை கழட்டி படைய மரியாதை செலுத்துமளவிற்கு ஒரு உன்னத தியாகத்தை செய்தது. ஆம், அந்த உயிர் எமது உயிராயுதங்களான கடற்கரும்புலிகளில் ஒருவனினதே. கரும்புலி பாலனே பகைவரும் விழி கசிய தன்னுயிரை மாய்த்தான்!

முசிலீம்களால் பிடிக்கப்பட்டு கையளிக்கப்பட்ட பின்னர் சிங்களவர் கையிற்கும் காலிற்கும் விலங்கிட்டு அவரை சிறையில் படுக்கப்போட்டிருந்த போது நாக்கை வாயிலிருந்து நீட்டி பற்களால் கடித்தபடி வாயை மூடி தரையோடு சேர்ந்து அடித்தார்; நாக்கு தறிபட்டது! இயக்கக் கமுக்கங்களைக் காக்க வேண்டும் என்ற உறுதிமொழியை நிறைவேற்ற வேறு வழியின்றி இதைச் செய்தான், அந்தப் புலி மறவன். இந்தச் செயலின் உணர்வுகளை சொற்களால் விரிக்கவோ எடைபோடவோ இயலாது. இதைச் செய்வதற்கோ ஒரு மன வலிமை வேண்டும். பாறையின் பெயர்கொண்ட ஊரில் பிறந்ததால் தான் என்னமோ, அது இவனிடம் நிறைந்தே காணப்பட்டது எனலாம். 

இவர் கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் பிரிகேடியர் சூசையோடு பல காலம் நின்றதனால் கடற்புலிகளின் பல கமுக்கங்களையும் நகர்வுகளையும் நன்கு அறிந்திருந்ததால், தான் சிங்களத்திற்கு நல்ல வேட்டை என்பதை நன்கறிந்து தன்னிடமிருந்த எந்தவொரு தகவலையும் சிங்களவர் பெற்றிக்கூடாது என்பதில் குறியாக இருந்ததன் விளைவாக யாரும் செய்யத் துணியாத இந்தத் தியாகத்தை செய்து நிறைவேற்றினார். இதனால் மயக்கமுற்றான். உடனே சிங்களவர் ஒரு படைய மருத்துவமனையில் இவரைச் சேர்ப்பித்தனர். அங்கே என்ன மாதிரியான பண்டுவம் இவருக்கு அளிக்கப்பட்டது என்பது தெரியவரவில்லை.

சில நாட்கள் கழித்து அவர் கண்விழித்த போது தன்னைச் சுற்றிச் சிங்களப் புலனாய்வு அதிகாரிகள் நிற்பதை எண்ணித் திகைத்தார். தன்னிடமிருந்து தகவலை கறக்க அந்த இனவெறியர் ஆவலோடு இருப்பதை எண்ணி செய்வதறியாது ஒரு கணம் திகைத்தார். கையில் விலங்கிட்டு கட்டிலோடு சேர்த்திடப்பட்டிருந்ததால் தப்பியும் ஓட இயலாத நிலை. இருந்தபோதிலும் உடனே ஒரு முடிவெடுக்கிறான், அந்த உன்னத வீரன். கணப் பொழுதில் தன் தலையை கட்டில் சட்டத்தோடு அடித்து உடைத்து தற்கொலை செய்துகொள்கிறார். சிங்கள அதிகாரிகளே விழி பிதுங்கி திகைத்தனர். குழுமி நின்றோர் தம் தலையில் அணிந்திருந்த படையத் தொப்பிகளைக் கழட்டி இவரின் தியாகத்திற்கு இறுதிப் படைய மரியாதை செய்தனராம். 

"கடல் நடுவே படகுடைய கரையேகினான்,
கரையினிலே கொடியவரால் கைதாகினான்,

திடனோடு தன் நாவை தானே தறித்தான்,
தீயவருக்கும் விழி கலங்க தன்னை அழித்தான்!"

--> கடற்கரும்புலிகள் பாகம்-4 இறுவெட்டிலிருந்த "பாலன் பிறந்த நிலம்" என்ற பாடலிலிருந்து

இவ் உட்தகவலை 2005 ஆம் ஆண்டில் புலிகளின் இருபக்க உளவாளிகளால் கொழும்பிலிருந்து கடத்தப்பட்ட தமிழ் காவல்துறை அதிகாரியே (பெயர் மறந்துவிட்டேன்) தெரிவித்திருந்தார்.

எனவே தொடக்கத்தில் இவருக்கு, அதாவது படகு நேர்ச்சிக்கு கொஞ்ச நாட்களின் பின், புலிகள் வழங்கியிருந்த கப்டன் தரைநிலையிலிருந்து உயர்த்தப்பட்டு "மேஜர்" தரநிலை வழங்கி மதிப்பளிக்கப்பட்டார், இவரது உன்னத தியாகத்திற்காக.

இவரோடு அற்றை நாளில் பிடிபட்டு வதைபட்டு வீரச்சாவடைந்த கப்டன் தும்பன், கப்டன் மேனகன், லெப். உத்தமன், 2ம் லெப். சுந்தரவதனி மற்றும் 2ம் லெப். ஆபனா ஆகியோருக்கு இந்நாளில் வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்வோம்.

இதே பாலன் பிறந்த மண்ணான அம்பாறை மாவட்டத்தில் தாக்குதலிற்குச் சென்ற இரு போராளிகளை இது போன்று பிடித்துக்கொடுத்த நிகழ்வு 2008 ஆம் ஆண்டும் ஒருமுறை நிகழ்ந்திருந்தது, நானறிந்த வரை. இவ்வாறாக இந்த முசிலீம்களின் செயல்களால் தென் தமிழீழத்தின் நடைபெற்ற காட்டிக்கொடுப்புகள் ஏராளம். அவற்றால் நாமிழந்த உயிர்களோ எண்ணிலடங்காதவை. இந்தக் காட்டிக்கொடுப்புகள் ஈழப்போர் முடியும்வரை தொடர் கதையாகின. 

 


உசாத்துணை:

ஆக்கம் & வெளியீடு:
நன்னிச் சோழன்
 

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கும் செய்திக்கும் நன்றி நன்னிச் சோழன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
45 minutes ago, குமாரசாமி said:

தகவலுக்கும் செய்திக்கும் நன்றி நன்னிச் சோழன்.

மகிழ்ச்சி

  • நன்னிச் சோழன் changed the title to படகு நேர்ச்சியில் உயிர்பிழைத்துக் கரைசேர்ந்த புலிகளைப் பிடித்து அடித்துக் காட்டிக்கொடுத்த முசிலீம்கள் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.